(ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் அருணாச்சல பிரதேசம் – சிறார்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளன, அவை 12 வயதுக்குட்பட்டவையென வரையறுக்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கான மரண தண்டனையை வழங்கச் சட்ட திருத்தும் செய்துள்ளது.)
(பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களை சிறப்பாகப் பாதுகாக்க தமிழ்நாடு மாநிலத்திற்கான 13 அம்ச செயல் திட்டத்தை 2010 இல் முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா அறிவித்தார். ஓரளவு செயல்படுத்தப்பட்ட விதிகள் அரசு செலுத்தும் மருத்துவ செலவுகள், பெண் விசாரணை அதிகாரிகள் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளுக்கான விரைவான நீதிமன்றங்கள் ஆகிய சில சரத்துகள் மட்டுமே நடைமுறைக்கு வந்தன.)
(பாலியல் வன்முறை என்பது பாலியல் பலாத்காரம், பாலியல் துஷ்பிரயோகம் , வன்கொடுமை, துன்புறுத்தல், கட்டாய திருமணம், மரியாதை அடிப்படையிலான வன்முறை/HONOR KILLINGS, பெண் பிறப்புறுப்பு சிதைவு (எஃப்ஜிஎம்), கடத்தல்,சுரண்டல் ஆகும். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த இடம் அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும், ஜீரோ எஃப்.ஐ.ஆர் செய்யப்படலாம்,.பாதிக்கப்பட்டவரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், ஒரு குற்றவாளி ஸ்காட்-ஃப்ரீயிலிருந்து தப்பிப்பதைத் தடுக்கவும் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது.)
கெளதம் தன் பிளான் ஒன்றை சொல்ல அதைக் கேட்டவர்கள் திகைத்துப் போனவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
என்ன பேசுவது, எப்படி ரியாக்ட் ஆவது என்று கூட அவர்களுக்குப் புரியவில்லை.
“இது சரி வருமா கெளதம்? ஏதாவது பிரச்சனை ஆகிட போகுது.” என்றான் கதிர்.
“இதை விட்டா வேறு வழி இருக்கா சொல்லுங்கோ. எது வந்தாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் கெளதம்.
“நீ நடத்து கெளதம். எங்க சப்போர்ட் என்றும் உனக்குத் தான்.” என்றது ஒரு குரல் வாயிலிருந்து.
அங்கே கெளதம் அப்பா முரளி, அம்மா ரேணுகா, அஞ்சலி அப்பா பாண்டியன், அம்மா ஹேமாவதி நின்றிருந்தனர்.
ராகேஷ் குடும்பம் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்க, அதற்குள் ரகு சென்று தன் வீட்டு பெரியவர்களிடம் நடந்ததை சொல்லி அவர்களையும் காயத்ரி அறைக்கு அழைத்து வந்தான்.
இவர்களைக் கண்டதும் கையெடுத்து கும்பிட்ட ஹேமாவதி,
“அம்மா…ரொம்ப நன்றிம்மா. என் மகளைப் பத்திரமாய் பார்த்துக் கொண்டதற்கு. எங்கே எந்த ஆபத்துல போய் மாட்டி இருக்காளோ என்று தினம் தினம் துடிச்சிட்டு இருந்தோம். பெத்த ஒண்ணு தான் எதுக்கும் உதவாத சதை பிண்டமாய் போச்சு.
இந்தப் பொண்ணும் எங்கேயாவது அப்படி ஒருத்தன் கிட்டேயே மாட்டி இருக்காளோ என்று… அய்யோ ஆறு வருட நரகம்” என்று கதறி அழுதார் ஹேமா.
“தாயீ!… ஹேமா! வேண்டாமா மா ஏதோ கெட்ட காலம். இவ்வளவு கஷ்டப்பட்டுடீங்க. நல்லவர்களை, அந்தச் சாமி என்றும் கைவிடாது. இனி நடப்பது எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்றார் சௌபாக்கியம்.
“நீங்க எங்களையும் மன்னிக்கணும். அஞ்சலி பொண்ணு ஏதோ பிரச்சனையில் இருக்குதே, அந்த ஆபத்து அவளை நெருங்க விடக் கூடாது என்று அதைப் பற்றி மட்டும் யோசித்தோம். அவ குடும்பத்தினர் அவளைக் காணாமல் என்ன பாடு படுவாங்க என்பதை யோசிக்க தவறி விட்டேன்…நான் எல்லாம் என்ன பெரிய மனுஷன்.”என்று ரத்தினம் அய்யா கலங்கி நின்றார்.
வீட்டின் பெரியவராய் வயசு பிள்ளையின் குடும்பத்திற்கு இத்தனை வருடமாய் யார் என்று தெரிந்து தகவல் கொடுக்காத தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டார்.
“அய்யா!….நான் அஞ்சலி அப்பா பாண்டியன்…. நீங்கப் பெரியவங்க….இப்படி எல்லாம் பேசி எங்களைச் சங்கட பட வைக்காதீங்க….நீங்கச் செய்ததும் ஒரு விதத்தில் நல்லது தான்.
நீங்க எங்களைத் தொடர்பு கொண்டு இருப்பது மட்டும் அஞ்சலிக்குத் தெரிந்து இருந்தால், அவ இன்னேரம் இங்கிருந்து இந்தப் பாதுகாப்பை விட்டு, பாசமான இந்த வீட்டை விட்டு எங்காவது கிளம்பி போய் மாட்டி இருந்திருப்பா…..
நாங்க தான் உங்களுக்குக் கடமை பட்டு இருக்கிறோம்.எங்க உயிரைக் கொடுத்தால் கூட நீங்கச் செய்ததற்க்கு ஈடு ஆகாது அய்யா.
வீட்டு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, மனதின் கணம் தாங்க முடியாதவனாய் தோட்டத்திற்கு வந்து நின்றான் கெளதம்.
ஒருமுறை தான்…ஒருமுறை தான்
மனிதனின் வாழ்க்கை ஒருமுறை தான்.
ஒருமுறை தான் ஒருமுறை தான்.
வாழ்க்கையில் திருமணம் ஒருமுறை தான்.
உடைந்த உறவு வருமா?’
இழந்த மானம் வருமா ?
இனியும் வசந்தம் வருமா?
காலம் திருப்பித் தருமா?
வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே.
ஒருமுறை தான் ஒருமுறை தான்
ஒருசில தவறுகள் ஒருமுறை தான்
ஒருமுறை தவறியதால் அடைகின்ற
வேதனை பலமுறை தான்.-
என்ற பாடல் காதில் ஒலிக்க, தவித்துக் கொண்டிருந்தது இரு உள்ளங்கள் தங்களின் இன்னொரு பாதியை நினைத்து உருகி கொண்டிருந்தன.
இவர்களின் தங்கையும், அண்ணனும் செய்த தவறுக்கு அண்ணனாய் கௌதமும், தங்கையாய் அஞ்சலியும் அல்லவா சிலுவை சுமக்கிறார்கள்.
காதல் என்ற அமிழ்தத்தில், காமம் என்ற ஒற்றை துளி ஆலகாலம் கலந்து விட ரெண்டு குடும்பங்களும் இன்று நிலை குலைந்து நிற்கின்றன.
ஒரு கணம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும் மனிதர்கள் செய்யும் தவறில் ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் அதிக துன்பம், துயரம், மரணவலி எல்லாமே!
காதல் என்ற பெயரால் ஒரு கணம் நிலை தடுமாறும் காதலர்களால் எல்லாம் மாறிப் போவது என்னவோ அவர்களுக்கு மட்டும் இல்லை அவர்களோடு தொடர்பு கொண்ட அனைவருக்குமே தான்.
கெளதம் கடந்த காலத்தை நினைத்து அதன் பாரம் தாங்க முடியாதவனாய் கண்களில் கண்ணீர் வழிய நின்றான்.
அதே சமயம் தன் அறையில் கெளதம் போலவே கடந்த காலத்தை நினைத்து வாழ்க்கை எப்படி எல்லாம் தடம் மாறிப் போனது என்று நினைத்துத் துடித்து கொண்டு இருந்தாள் அஞ்சலி.
‘தான் செய்வது சரி தானா?’ இத்தனை வருடத்தில் அஞ்சலி தன்னையே கேட்டு விடை தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தாள்.
‘தன் நெஞ்சறிய பொய்யற்க’ என்பதற்கு ஏற்பக் கௌதமை தவிர வேறு யாரையும் இவளால் மணக்க முடியாது. அவனும் விடமாட்டான்.
யார் மீது தவறு அவளா, கௌதமா, தனுவா, ராம்சந்தர்ரா இல்லை, இவை எல்லாம் சேர்ந்தேவா!
காயத்ரியின் அறையில் கெளதம் தன்னைப்பார்த்து பாடும் பாடலை கேட்டபிறகு, தன் அறைக்குள் வந்த அஞ்சலியால் கடந்த கால எண்ணங்களைத் தடை செய்ய முடியவில்லை.
‘கெளதம்…கெளதம்…பிரபு…என் பிரபு.” என்று அவளின் முணுமுணுப்பும் கண்களில் கண்ணீரும் நிற்கவேயில்லை.
ஆறு வருடங்களுக்கு முன்பு…
(நுங்கம்பாக்கத்தில் அந்த அரக்கன் ஹோட்டலில் மூன்று பெண்களுக்குக் குறி வைப்பதற்கு முன்பு, எல்லோர் வாழ்வையும் தடம் புரள வைத்த, ‘அவன்’ திட்டம் போட ஆரம்பித்ததற்கு எல்லாம் முன்பு ….)
சென்னையில் புகழ் பெற்ற அந்தத் திருமண மண்டபமே திணறிப் போனது பத்து பேரால்.
எல்லாமே பத்து வயதிற்குள் இருந்த ‘ஸ்வீட் போகோ, சின்சான்’ பட்டாளம். அவர்களின் தலைவி காவ்யாஞ்சலி.
இவர்கள் அடித்த லூட்டியில் மண்டபத்தில் இருந்த அனைவரும் ‘துண்டைக் காணோம் துணியைக் காணோம் ‘என்று ஓடாதது ஒன்று தான் குறை.
இதை எல்லாம் பார்த்து எரிமலையாகக் குமுறி கொண்டிருந்தாள் ஹேமா.
அது பாண்டியனின் சகோதரி சங்கீதாவின் மகள், ஹர்ஷினி திருமணம். சங்கீதாவிற்கு உடல் நலம் சற்று குறைந்து இருப்பதால் அவர் கணவன் ரங்கநாதன் மனைவியுடனே இருக்க வேண்டிய நிலை.
உடல் நலம் இல்லாத தங்கைக்கு, எந்தக் கஷ்டமும் வந்து விடக் கூடாது என்று எல்லா வேலைகளையும், பல மாதமாய் இழுத்து போட்டுச் செய்து கொண்டு இருந்தது பாண்டியனும், ஹேமாவும்.
வந்தவர்களுக்கு ஒரு குறையும் வந்து விடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து கொண்டு இருந்தார்கள் இவர்கள்.
ஒரு திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்றால் அதில் ஆயிரத்தை பார்க்க வேண்டி இருக்கும்.
ஆனால் அஞ்சலி என்ற அருந்த வால் ஒன்றை மகளாய் பெற்று இருக்கும் ஹேமா, அந்தத் திருமணத்தில் ஆயிரத்து ஒண்ணாவதாகத் தங்கள் மகளின் வால் தனத்தை எப்படி அடக்குவது என்று புரியாமல், பாண்டியனை குதறி எடுத்துக் கொண்டு இருந்தார்.
“ஏங்க….சொல்லிட்டேன் ….எனக்கு நல்லா வந்துரும் வாயில…”என்றார் ஹேமா.
“எது மா….வாந்தியா?அடீ கள்ளி…சொல்லவே இல்லை…ஏதோ கடவுள் புண்ணியத்தில் இத்தனை வருடத்திற்க்கு பிறகு, மூன்று பசங்களுக்கு பிறகு நாலாவதாய் ஒன்று என்று கேக்கவே எவ்ளவோ சந்தோசமாய் இருக்கு.”என்ற பாண்டியன், மனைவி புரியாமல் அவரைக் குழப்பத்துடன் பார்க்க, நமுட்டு சிரிப்புடன் நின்றார்.
கணவன் சொன்னது புரிய, அவர் முகம் நாணத்தால் சிவந்து போனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவராய், “என்னது …”என்று ஹேமா காளி அவதாரம் எடுத்தார்.
“என்னை முறைக்காதே ஹேமு…நீ திடீர்ன்னு வாந்தி வருதுன்னு சொன்னா நான் என்னத்தை என்று நினைப்பேன் என்று சொல்லு…”என்றார் பாண்டியன் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
பல்லை கடித்த ஹேமா, “நீங்க எதையும் நனைக்க வேண்டாம்…நான் சொன்னது வாந்தியை இல்லை.” என்றார் கடுப்புடன்.
“வாயில் இருந்து வரும் என்றால் ஒன்று வாந்தி.அது இல்லை என்றால் இருமல்?… அதுவும் இல்லையா, அப்போ கொட்டாவியா?”என்று ஹேமாவை கடித்து வைக்க, அஞ்சலியின் வால் தனம் எங்கிருந்து வந்திருக்கும் என்று சொல்லிய தெரிய வேண்டும்.
“அய்யோ! ராமா! ஒன்றுக்கு ரெண்டு நட்டு போல்ட் கழண்ட கீழ்ப்பாக்கம் மெண்டல் கேஸ் கூட எல்லாம் எதுக்கு என்னைச் சேர்த்து வைக்கிறே?”என்று ஹேமா புலம்ப,
“சொல்லவே இல்லை…உங்க அப்பாவும் அம்மாவும் கீழ்ப்பாக்கத்திலா இருந்தாங்க… அதான் அதன் எபெக்ட் உன் கிட்டேயும் தெரியுது.”என்று அமைதியாய் அவர் ரோஸ் மில்க் குடிக்க ஹேமா இருந்த இடத்தைக் கருத்தில் கொண்டு கண்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உஷ்ணத்துடன் மதுரையை கண்ணகி எரித்தது போலெ பாண்டியனை எரித்தார்.
“பேபி!….மை டார்லிங்!…இப்படியெல்லாம் மாமனை லூக்ஸ் விட்டே பிறகு நீ உண்மையிலேயே வாந்தி எடுக்க வேண்டி வரும் டியர்.”என்ற கணவனை என்ன செய்வது என்று புரியாமல் ஹேமா விழித்தவாறு அமர்ந்திருந்தார்.
“பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினான் என்ற கதையால இருக்கு. அய்யா சாமி.நமக்கு ஒன்றுக்கு மூன்று பிள்ளைங்க இருக்குங்க…. அதில் ஒண்ணு என்ன செய்துட்டு இருக்குன்னு கொஞ்சம் பாருங்க… என்னை அப்புறம் காணாததை கண்டது போல் பிறகு பார்க்கலாம்.”என்றார் ஹேமா கடுப்புடன்.
“சரி ஜொள்ளு… சரி சரி முறைக்காதே….சொல்லு.”என்றார் பாண்டியன்.
“பார்த்தீங்களா, உங்க ஆசை மக, செல்ல மக செய்யும் வேலையை! வாலு ஒன்று தான் இல்லை. என் மானம் போகுது. மேடையில் நிற்கும் பெண்களின் சாரீயை இன்னொரு பெண்ணின் புடவையோடு சேர்த்து பின் அடிச்சு வைத்து இருக்குங்க இந்தக் குரங்குங்க. சந்தன கிண்ணத்தில் சாம்பாரை கொட்டி வச்சி இருக்குங்க.“ என்றார் ஹேமா கடுப்புடன்
“என்னது ரெண்டு பேர் புடவையைச் சேர்த்து வைத்து ஸ்டாப்ளேர் அடிச்சிட்டாங்களா? சந்தனத்திற்கு பதில் சாம்பரா? புதுசாலே இருக்கு.” என்று விழித்தார் பாண்டியன்.
“ஒழுங்கா அவளைக் கூப்பிட்டு அமைதியாய் உட்கார சொல்லுங்க. மானம் போகுது பெண்ணா இது? இவளைப் பெத்துட்டு வயற்றில் நெருப்பை கட்டிட்டு இருக்கேன்.” என்று அடிக்குரலில் சீறினார் ஹேமா.
அவர் டென்ஷனாய் பேசி முடிக்கவும்,
” மானம் கப்பல் ஏறிப் போயாச்சு,
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நாங்க ஆட்டம் எல்லாம் போட்டாச்சு…
இதற்கு டென்ஷன் வொய் பொன்னமா…?”
என்று பத்து குரல் பெருங்குரலில் பாட அதிர்ந்து திரும்பியது ஒட்டுமொத்த மண்டபமும்.
“ஏய் போயம்(POEM),”ஏய் போயம்(POEM)” என்றது ஒரு வாண்டு.
“நிறுத்துங்க…அது என்னடா poem….?”என்றார் பாண்டியன் அதி முக்கியமான விஷயம் அது தான் என்பது போல்.
“எங்க தலை பேரு காவ்யா….அதைச் சுருக்கி கவி…கவி என்றால் poem…கவிதையே தெரியுமா….உன் கனவு நானடி….சோ poem.” என்றான் அவர்களில் பெரியவனாய் இருந்த ஒரு வாண்டு.
“சரி ….சரி நடத்துங்க…”என்றார் பாண்டியன்.
“ஏய் போயம்(POEM)…உன் மம்மிக்கு பயர் ஆபிஸ் பயர்மேன் வேண்டுமாமே” என்றது ஒரு வாண்டு.
டேய் ஏற்கனவே இந்த அம்மாவுக்கு என் பாண்டி அப்பா இருக்கார். ஹேமாவுக்கு எல்லாம் இவரே அதிகம். பாண்டி அப்பாவுக்கு அந்த மனுஷி சில்லார், தீபிகா படுகோன் பார்க்கலாம்டா.” என்றாள் அஞ்சலி ஐஸ் கிரீமை சுவைத்தவாறு.
“ஏய் போயம்…உங்க அம்மா வயத்தில் நெருப்பை கட்டிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்களே, அதை அணைக்க பயர் சர்விஸ் ஆளை கூப்பிடுன்னா அவங்களுக்கு செகண்ட் மராஜுக்கே ஏற்பாடு செய்யரே?” என்றது இன்னொன்று.
“என்ன பண்றது நட்பூஸ், என் பாண்டி டியர் வாய் இல்லாத பூச்சி. இந்த ஹேமா ‘குழாய் அடி பொன்னம்மா’ மாதிரி வாயை திறந்தா மூடவே மூடாது. நான் மட்டும் இருந்திருந்தா என் பாண்டி டார்லிங்கை இப்படி ஒரு காஞ்சனா, சந்திரமுகி கிட்டேயா மாட்டி விட்டுருப்பேன்?” என்று அஞ்சலி வராத கண்ணீரை துடையோ துடை என்று துடைக்க, ஹேமாவதி பற்களை நறநறவென கடிக்க எல்லாம் ஜம்ப் ஆகினார்கள் தோட்டத்திற்கு.
திருமண மண்டபத்துடன் இருந்த அந்த பூங்கா மண்டபத்தையும், அதன் அருகே இருந்த ஹோட்டல் போலவே மிக பெரிதாய் இருந்தது.
சிறுவர்கள் விளையாட என்று ஊஞ்சல், சறுக்கு மரம், சீ சா, மங்கி பார், என்று நிறைய விளையாட்டு அமைப்புகள் நிறுவ பட்டு இருக்க, அதில் எல்லாவற்றிலும் ஆடி களைத்து போயினர் அந்த குழந்தைகள்.
‘வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி’
என்று வெயிலில் காய்ந்து, கருவடாகி போன, அந்த தலைமுறைக்கு சூரியன் இரவு மாலை வீட்டுக்கு சென்ற பின்னும் கூட தெரு புழுதியில் வியர்வை பெருக்கெடுக்க விளையாட எனெர்ஜி இருந்தது.
இந்த கால பிள்ளைகள் நாலு அடி நடந்ததும், புஸ் என்று பியூஸ் இறங்கி விடுகிறது.
கையில் செல் போன் விளையாட்டில் தன்னை மூழ்கி தன்னை தொலைத்த இந்த ஜெனெரேஷன் எங்கு அறிய போகிறது, அந்த கால கூடி விளையாடும் விளையாட்டுக்களின் மேன்மையை.
“என்னப்பா அதற்குள் எல்லாம் புஸுன்னு ஆகிட்டிங்க? கம் ஆன்.” என்றாள் அஞ்சலி.
“சரி என்ன விளையாடலாம்?” என்றது இன்னொரு வாண்டு.
“கண்ணாமூச்சி விளையாடலாம். போயம் நீ தான் கேட்சர். கண்ணை திறந்து பார்த்து ஏமாற்ற கூடாது” என்று அஞ்சலியின் கண்ணை கட்டி சுழற்றி விட்டு, பேசி வைத்து கொண்டு எல்லாம் மண்டபத்திற்குள் சாப்பிட ஓடி விட்டது.
“ஏய் இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடலாமேடா…”என்றது ஒரு வாண்டு.
“அட போடா…பப்ஜி, டிக் டாக் பார்க்கலாம் டா…இந்த அக்காவுக்கு தான் வேற வேலை இல்லை… சோட்டா பீம் உலகத்தை காக்க ஏதோ செய்ய போறாராம்… அப்பா போன் இப்போ கேட்டா தான் டா திட்டாம கொடுப்பாங்க.”என்றது இன்னொன்று.
“ஆமா டா…இல்லைன்னா இவங்களே பேஸ்புக், டிக் டாக்ன்னு அதை பார்த்து லூசு மாதிரி சிரிச்சிட்டு, முறைச்சிட்டு இருப்பாங்க….வா வா போய் போன் ஆட்டைய போடலாம்.”என்றது இன்னொன்று.
அந்த வாண்டூஸ் வைத்த ஆப்பு தெரியாமல் ரொம்ப, ‘சின்சியர் கண்ணாத்தாவாய்’ அவர்களை பார்க்கில் தேடி கொண்டிருந்தாள் அஞ்சலி.
தேடி கொண்டே வந்தவள் ஒரு மேடு மாதிரியான இடத்தில் ஏறி, மெல்ல நடந்து, கைகளை நீட்டி துழாவியவாறு வந்த அஞ்சலி கையில் சிக்கினான் கெளதம்.
போனில் யாருடனோ பேசி கொண்டு அந்த மேடு ஏறியவனின் சட்டையை பிடித்து கொண்டு, “ஐ அவுட் அவுட்…உன்னை பிடிச்சுட்டேன்…நீ தப்பவே முடியாது.” என்று கத்தியவாறே கண் கட்டை அவிழ்த்த அஞ்சலி, குழந்தைக்கு பதில் ஒரு ஆண் இருப்பதை கண்டு ஜெர்க் ஆக, கால் ஸ்லிப் ஆனதில் அவன் மேலேயே சென்று விழுந்தாள் அஞ்சலி.
கௌதமும் சரிவின் ஆரம்பத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றுருந்தவன் மேல் அஞ்சலி வந்து மோத அவளை அணைத்தவாறே பின்னால் சரிந்தான்.
எட்டு பத்து தடவை அந்த சரிவில் உருண்ட பிறகு புல்வெளியில் வந்து விழுந்தார்கள். அஞ்சலி புல்லின் மேல் கிடக்க, அவள் மேல் முழுவதுமாய் படர்ந்த நிலையில் இருந்தான் கெளதம்.
பயத்தில் கண்ணை அழுந்த மூடி, உதடு கடித்து, எங்கேயோ போய் இடிக்க போகிறோம் என்ற பயத்தில் இருந்த அஞ்சலி அப்படி எதுவும் நடக்காததால் ஒரு கண்ணை மெல்ல திறந்து பார்த்தாள்.
முகத்திற்கு அருகே சென்டிமீட்டர் இடைவெளியில் தன் முகத்திற்கு நேராக ஒரு அழகான ஆண் முகத்தை கண்டதும் மிரண்டாள்.
மிரண்ட மானின் விழி, துடித்த இதழ், தவிப்பு, பயம், அதிர்ச்சி என்று வர்ணம் காட்டிய முகம், தன்கைகளில் இருந்த பெண்மையின் மென்மை, எழில் வளைவுகளை கெளதம் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டேயிருந்தான்.
லட்சம் வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்த நிலையில் இருந்தான் கெளதம்.
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலைஓரம்
வருவது என்ன மாயம் மாயம்?
என்று பின்னால் திருமண மண்டபத்தில் இருந்து வந்த பாடல் அவன் மனதை அப்படியே படம் பிடித்து காட்டியது.
“கார்ஜியஸ்…” என்று முணுமுணுத்தவன், அவனே அறியாமல் அவள் இதழுடன், தன் இதழை இணைத்து, தன் அறிமுகத்தை ஆரம்பித்து இருந்தான்.
கெளதம் கையில் இருந்த அந்த மலருடல் சிலிர்த்தது
இப்படி ஒரு அறிமுகத்தை எதிர்பாராத அஞ்சலியின் தொண்டை குழியிலிருந்து, ‘ஆங்’ என்ற சத்தம் எழும்ப, என்ன நடக்கிறது என்று என்று புரியாமல் மூளை ஸ்தம்பித்து விட, அவன் கைகளில் குழைந்து கொண்டிருந்தாள் அஞ்சலி.
அந்த இதழ் ஒற்றல் மெல்லிய நீரோட்டமாக ஆரம்பித்து, காட்டாற்று வெள்ளமாய் உருமாறி, எல்லா கரைகளையும் உடைத்து கொண்டு இருந்தது. அவன் விரல்கள் அந்த பூந்தோட்டத்தில் எதையோ தேடும் ஆராய்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது.
‘என்ன நடக்கிறது!” என்று முதலில் சுதாரித்தவள் அஞ்சலி தான்.
பெண்மைக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு விழித்து கொள்ள தன்னை சுற்றி இருந்த மாய வலையிலிருந்து தன்னை மீட்டு கொண்டாள் அஞ்சலி.
தன் பலங்கொண்ட மட்டும் அவனை பிடித்து தள்ளியவள், அவன் சுதாரிப்பதற்குள் ஓட்டம் எடுத்திருந்தாள். அவர்கள் விழுந்திருந்த இடம் அந்த பூந்தோட்டத்தின் மறைவான இடம் என்பதாலும், அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
திருமண மண்டபத்துடன் இணைந்து ஹோட்டல் ஒன்றும் அதே வளாகத்தில் இருக்க, அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் எப்படியோ வந்து சேர்ந்த அஞ்சலி, சாற்றிய கதவின் மேல் சாய்ந்து நின்றாள்.
நடந்ததை நினைத்து பார்க்க பார்க்க அஞ்சலிக்கு தலை சுற்றியது.
கீழே விழுந்து உருண்டு, எங்கே போய் தலை மோத போகிறது என்று பயந்து, அப்படி அதுவும் நடக்காமல் போக,கண்ணை திறந்து பார்த்த அவள் கண்களில் அழகான ஒரு முகம் ஒன்று தெரிந்ததை, கண்டது மட்டும் தான் அவள் நினைவில் இருந்தது.
அழகான, கலையான, ஆண்மை ததும்பிய, செதுக்கி வைத்த முகம். கண்களா அவை கூர் வாட்கள். ஆயிரம் அணுகுண்டுகளை அவளிடம் வெடிக்க வைத்து கொண்டிருந்தது.
‘நானா!…நானா!… இப்படி…ஒரு பொது இடத்தில் இப்படி நடந்தேன்? எப்படி எதிர்க்காமல் போனேன்! அறைய கூட இல்லையே! அத்தனை மனபலம் இல்லாதவளா நான்!… அய்யோ! கடவுளே!… எப்படி உணர்ச்சிகளின் பிடியில் சிக்கினேன்?’ என்று தன்னையே சுய அலசல் செய்து கொண்டிருந்தாள்.
‘திருமண மண்டபங்களில் தான் அதிகளவு காதல் பிறக்குமாம்’ என்று தோழியர்கள் சொல்லும் போதெல்லம் சிரித்திருக்கிறாள் அஞ்சலி.
இன்று அவளே திருமண மண்டபத்தில் ஒருவனை கண்டதும் முழு கண்ட்ரோல் இழந்து இருக்கிறாள் என்பதை அஞ்சலியாலேயே நம்ப முடியவில்லை.
ஏதோ திகில் திரைப்படத்தை ரீ ரன் பார்ப்பதை போல, அவள் மூளை வேறு நடந்ததை ஆயிரம் லட்சம் முறை ரிப்பிலே செய்து காமிக்க அஞ்சலிக்கு மூச்சு விடவும் மறந்து தான் போனது.
அஞ்சலி குறும்புக்கார பெண். அழகி, பழகுவதற்கு எளியவள். ஆனால் அதே சமயம் இரும்பு மனுஷி என்று கூட சொல்லலாம்.
‘அஞ்சலியா, அவ எரிமலைடா…பிரச்சனை வேண்டாம் அவளோடு.” என்று விலகி சென்றவர்கள் அநேகம்.
தப்பு என்று பட்டால் பொங்கி எழும் நவீன ஜான்சி ராணி. பாண்டியனும் மகளை மகன்களுக்கு சமமாய் தான் வளர்த்தார்.
பாரதியார், பாரதிதாசன் வரிகளை தாய்ப்பாலோடு ஊட்டி வளர்த்திருந்தார்.
ஆனால் அந்த எரிமலை பெயர் அறியா ஒருவனால் குளிர்ந்திருந்தது.
அவனை தடுக்க அவளால் முடியவில்லை. ஏன்!
அவன் கண்களில் இருந்தது என்ன!
முன் பின் பார்த்திராதா ஒருவன். ஆனால் பல ஜென்மம் பழகியது போல் அந்த சில கணங்களில் எப்படி தோன்றியது! விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அதுவா! பூர்வ ஜென்ம ஆத்ம பந்தமா!
அஞ்சலி மட்டுமல்ல அதே ஹோட்டலில் தன் அறையில் இருந்த கௌதமும் இதே கேள்வியை தான் கேட்டு கொண்டிருந்தான்.
‘நானா, அப்படி ஒரு பெண்ணிடம் பொது இடம் என்று கூட பாராமல் அப்படி நடந்து கொண்டது!’
கெளதம் பட்ட பெயரே, ‘விஷ்வாமித்ரன்’ தான்.
தொழில் துறையில், நட்பு வட்டத்தில், வெளியிடங்களில் பல பெண்களை கடந்து வந்திருக்கிறான். மேல் விழுந்து, எந்த எல்லைக்கும் தயார் என்று வந்த பெண்களும் உண்டு. பணத்திற்காக அவனை சுற்றிய அழகிகளும் உண்டு.
அவர்கள் யாராலும் அவனை சலனப்படுத்தவே முடியவில்லை.
தன் மனதை கவர்ந்து தனக்கு மனைவியாக போகிற ஒருத்திக்கு மட்டுமே தன் காதல், தன் உணர்வுகள், ஒட்டுமொத்த தான் என்று ஸ்ரீ ராமனாய் தன் சீதைக்கு காத்து நிற்பவன் அவன்.
ஆனால் ஐந்து வினாடிகளுக்கு குறைவாய் பார்த்த, பெயர் அறியா பெண்ணிடம், சில நொடிகளில் தன்வசம் இழந்து இருக்கிறான் என்ற உண்மையே அவனை அதிர தான் செய்தது.
அவன் கெளதம் பிரபாகர், இரும்பு மனிதன், தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட், அவன் எப்படி தடுமாறினான்!
சில நொடிகள் என்றாலும் அவனை தள்ளி விட்டு ஓடிய அந்த பூ முகத்தில் தென்பட்ட குன்றல், பயம், குற்றவுணர்ச்சி இவனை கூறு போட்டது.
“ச்சே!” என்று தன் முன் இருந்த மேஜையின் மீது ஓங்கி குத்தினான்.
அவன் கைப்பட்டு பறந்த ரிமோட் பட்டன் அழுத்த பட்டு டிவி ஆன் ஆனது.
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்!
இப்படி என் மனம் துடித்ததில்லை,
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு,
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ! இல்லை மறைவாயோ!
என்று அஜித் மனுவைப் பார்த்து, பாடலில் உருகி கொண்டிருக்க, கெளதம் இதழில் புன்முறுவல் படர்ந்தது.
‘ஹோ காட்!… ஐயம் கோயிங் கிரேஸி…’ என்றவன் மனம் மீண்டும் அந்த தேவதையை பார்த்தே ஆக வேண்டும் என்று பேயாட்டம் போட, இந்த புது விதமான உணர்வு அவனுக்கு பிடித்தே இருந்தது.
அறையை பூட்டி கொண்டு மீண்டும் திருமண மண்டபத்திற்குள் ஓடினான் அவளை தேடி.
திருமண மண்டபமும், அதனோடு இணைந்த அந்த ஹோட்டலும் கௌதமிற்கு சொந்தமானது. நடப்பதும் அவன் நண்பன் ஒருவனின் திருமணம். எனவே பெயர் தெரியா அவளை தேடி போவது அவனுக்கு பெரிய விஷயமாயில்லை.
ஆனால் ‘எதற்காக இப்படி பைத்தியம் போல் ஓடி கொண்டு இருக்கிறான்?’ என்ற கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
அவளை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற பேராவல் ஆழிப்பெரும் அலையாய் அவனை அலைக்கழித்தது என்பது மட்டும் உண்மை.
என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், அந்த முகத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதை தடுக்க முடியாதவளாய் தவித்து கொண்டிருந்த அஞ்சலியின் மொபைல் ஒலித்தது.
“அ…அப்பா!…” என்று தந்தி அடித்தாள் அஞ்சலி.
“குட்டிம்மா!…எங்கேடா இருக்கே? கிட்ஸ் கூட விளையாடியது போதும் கண்ணா. நலங்கு வைக்கணுமாம். அம்மா வர சொல்றாங்க சீக்கிரம் வாடா.” என்றார் பாண்டியன்.
“ச…சரிப்பா…” என்றவள் பாத்ரூம் சென்று முகத்தை அலம்பி, மண் பட்டு கரையாய் இருந்த அந்த உடையை மாற்றி, பேபி பிங்க் நிற பாவாடை சட்டை அணிந்து, அதன் மேல் மஞ்சள் நிற தாவணியில், கழுத்தை ஒட்டி முத்துக்களால் செய்த அட்டிகை போல் அணிந்து அறையை பூட்டி கொண்டு, தன் பெற்றோரிடம் வந்து நின்றாள் அஞ்சலி.
“நல்லவேளை… நானே சொல்லணும் என்று நினைத்தேன். நீயே உடை மாற்றி விட்டே. உனக்கு எடுப்பா இருக்கு, இந்த பாவாடை தாவணி…வா வா அத்தை கூப்பிடுறாங்க பாரு.” என்று அவள் கையை பிடித்து இழுக்காத குறையாய் அவளை மேடைக்கு அழைத்து சென்றார் ஹேமா.
அத்தை மகளுக்கு நலங்கு வைத்த விட்டு, மணமகள் அவளை தன் பக்கத்திலேயே நிறுத்தி கொள்ள, அவளுடன் சிரித்து பேசி கொண்டு இருந்த அஞ்சலிக்கு யாரோ தன்னை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட, சுற்றி கண்களை சுழல விட்டவளின் கண்கள் விரிந்தது.
நலங்கு மேடைக்கு அருகிலேயே ஆர்கெஸ்ட்ரா மேடை அமைக்கப்பட்டு அங்கு லைட் மியூசிக் பாடல்களை ஒரு குழு பாடி கொண்டிருந்தது.
அங்கு நின்றிருந்தான் ‘அவன்’ மணமகனோடு.
பார்ப்பவர்களுக்கு மணமகனும் அவன் தோழனும் ஸ்டேஜ் ஏறி பாடுவதை போல் தான் தோன்றும். ஆனால் அவன் பார்வை சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தது அவன் மேடையேறி இருப்பது அவளுக்காக என்று.
வயிற்றில் பல ரேஸ் குதிரைகள் ஒரே சமயத்தில் ஓடி, பல பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க, இதயம் நூறு மடங்கு அடித்து கொள்ள, அந்த அவஸ்தையான உணர்வு அஞ்சலிக்கு புதியது.
‘ஹார்ட் அட்டாக் போல் இருக்கே’ என்று தன் நெஞ்சத்தில் கை வைத்து தன்னை தானே கேட்டு கொண்டவள் கண்கள் இன்னொரு கண்ணோடு இணைந்தது.
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே
ஏ காதல் நெஞ்சே யாரோடு சொல்வேன்?
வந்து போன தேவதை
நெஞ்சை அள்ளிப் போனதே
நெஞ்சை அள்ளிப் போனதே
ஓ பேபி பேபி, என் தேவ தேவி
ஓ பேபி பேபி, என் காதல் ஜோதி
ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததெங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்.
பார்வை விழுந்ததும் உயிர்வழி தேகம் நனைந்தது
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை
ஹோ இருதயம் இருபக்கம் துடிக்குதே
அலைவந்து அலைவந்து அடிக்குதே
எனக்குள்ளே தான்.
ஜீவன் மலர்ந்ததும் புது சுகம் எங்கும் வளர்ந்தது
தேவன் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது/
ஊரைக் கேட்கவில்லை, பேரும் தேவையில்லை
காலம் தேசம் எல்லாம் காதல் வானில் இல்லை
ஹோ தேவதை தரிசனம் கிடைத்ததே
ஆலய மணி இங்கு ஒலித்ததே.
என்னைத் தந்தேன்.” என்று அவன் இவளை பார்த்து கொண்டே பாடி வைக்க அஞ்சலிக்கு தான் என்னென்னவோ செய்தது.
அவன் பாட ஆரம்பிக்கும் போதே தாயுடன் கீழ் இறங்கி விட்டாள் அஞ்சலி.
தந்தை பக்கத்தில் அமர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்ப்பதும், தலை குனிவதும், எங்கோ பார்ப்பதும் என்று இருந்தாள். ஆனால் அவன் கண்கள் ஒரு நொடி கூட அவள் முகத்தை விட்டு விலகவேயில்லை.
கெளதம் பாடி முடித்ததும் எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது.
மீண்டும் அஞ்சலி தலை நிமிர்ந்த போது மேடையில் இருந்தவனை காணவில்லை என்றதும், தாயை தேடும் பிள்ளையாக அஞ்சலி முகத்தில் ஒருவித பதட்டம் வந்தது.
அவள் தேடலை ஒரு தூணின் மறைவில் நின்று ரசித்து கொண்டு இருந்த அவன் விழிகள், அவள் தவிப்பது தனக்காக என்று புரிந்ததும் அவன் கண்களில் புது மின்னல் வந்தது.
அவளை கொஞ்ச நேரம் தவிக்க விட்டு புன்னகையுடன் வெளி வந்து தூணின் மேல் அவன் சாய்ந்து நின்று புருவத்தை இவளை பார்த்து ஏற்றி இறக்க தன்னை அவன் கண்டு கொண்டதை உணர்ந்த அஞ்சலி இதழ் கடித்து தலை குனிந்தாள்.
தனக்கு என்ன நடக்கிறது என்று அவளுக்கு விளங்கவேயில்லை. ஆனால் மனதின் அந்த பரிதவிப்பு, துடிப்பு, புதிதாய் அப்பொழுது தான் பிறந்தது போன்ற அந்த உணர்வு அவளுக்கு பிடித்தே இருந்தது.
மற்றவர்களை பார்வையாலேயே தள்ளி நிறுத்தியவளால் அவனுடன் அப்படி இருக்க முடியாத மர்மம் அவளுக்கு விளங்கவேயில்லை. நொடிக்கொரு முறை அவனை பார்ப்பதும், மறுநொடி பார்க்கவே கூடாது என்றும் மனதோடு போராடி கொண்டிருந்தாள்.
‘காதல் வந்தால் கள்ளமும் வந்து விடுகிறது இல்லையா?’ என்று உரைத்த மனதின் மொழி கேட்டு திடுக்கிட்டு நிமிர்த்து அவனை பார்த்தாள்.
‘எனக்கு அவன் மேல் காதலா? பார்த்தா ஒரே நொடியிலா? பார்த்து கொண்டே இருப்பதாலா?’ என்று என்று அவள் மிடறு விழுங்க, ’லவ் அட் பர்ஸ்டூ சைட் என்பார்களே, ‘கம்பனும் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று சொல்வாரே அந்த காதல் தானா இது? எனக்குள்ளும் காதலா?’ என்று தன்னையே கேட்டு கொண்டாள் அஞ்சலி.
‘ஆமா நீ பெரிய இவ…உன் கிட்டே அப்பாய்ன்மெண்ட் எல்லாம் வாங்கிட்டு தான் லவ் வருமாக்கும்? அவன் ‘உனக்கானவன்’ என்று உன் மனம் உணர்ந்த பிறகு தானே அவன் தொடுகையை விலக்க முடியாமல் அவன் கைகளில் நெகிழ்ந்தாய்?
உன் ஒவ்வொரு அணுவிலும் கலந்து விட்டான் இந்த கள்வன்… பாரு எப்படி பார்க்கிறான் பாரு…விட்டா ஆளையே அந்த காந்த கண்களால் முழுங்கி விடுவது போல் பார்த்து வைக்கிறான்.’ என்றது அவன் மேல் காதல் கொண்டு விட்ட மனம்.
அஞ்சலி தனக்குள்ளேயே பட்டி மன்றம் நடத்தி கொண்டிருக்க அவளை உலுக்கி கொண்டிருந்தனர் அவள் தோழிகளும், அவள் அம்மா ஹேமாவும்.
“அடியேய்!… கண்ணை திறந்திட்டே தூங்கிட்டு இருக்கியா? உமா அப்போ இருந்து கூப்பிடுறா பாரு.” என்று ஹேமா நங்கென்று அவள் தலையில் கொட்டு ஒன்றை வைக்க, பேய் விழி விழித்தாள் அஞ்சலி.
“சோ கியூட் பேபி…” என்று முணுமுணுத்தான் கெளதம்.
“ஆங் என்னடீ உமா? என்ன சொன்னே?” என்றாள் அஞ்சலி.
“ஹ்ம்ம் முட்டைக்கு வெங்காயம் பத்தலைன்னு சொன்னேன்…அங்கே தர்ஷினி உன்னை கூப்பிட்டுட்டே இருக்கா பாரு…அங்கே நம்ம மானமே கப்பல் ஏறிட்டு இருக்குடீ…
மாப்பிள்ளை சைடில் அவங்க பிரென்ட் ரொம்ப சூப்பராய் பாடிட்டாராம்…. மணப்பெண் சைடில் இருந்து பாட ஒருத்தரும் இல்லையான்னு அவர் பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் செய்துட்டு இருக்காங்கடீ.
வா…தர்சினி உன்னை கூப்பிடுறா…நீ தான் கிளாசிக்கல் மியூசிக், பரதம் என்று ஆல் ரவுண்டர் ஆச்சே…தர்சினிக்கும் உன் பாட்டுனா ரொம்ப பிடிக்கும் எழுந்து வா டீ” என்று அஞ்சலி கையை பிடித்து உமா இழுத்து செல்ல இந்த ‘நாரதர் கலகம்’ யார் ஆரம்பித்து வைத்தது என்று அஞ்சலிக்கு புரிந்து போனது.
செய்வதை எல்லாம் செய்து விட்டு, எதுவுமே தெரியாத சின்ன பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டிருப்பவனை என்ன செய்வது என்று அஞ்சலிக்கு புரியவில்லை. அவனை முறைத்து கொண்டே அஞ்சலி மேடையேற, ஹேமாவிற்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது.
“ஏங்க இந்த தர்சினிக்கு இந்த கொலைவெறி? இவளை போய் மேடையேற்றி இருக்கா அங்கே போய் ‘ஆளுமா டோலுமா, லுங்கி டான்ஸ்’ என்று உங்க மக பாடி வச்சா, இப்பவே சொல்றேன் நான் எழுந்து போயிட்டே இருப்பேன்.” என்று பொரிந்தார் ஹேமா.
ஏற்கனவே இன்னொரு திருமணத்தில் இவள் நன்றாக படுவாளே என்று மேடை ஏற்றி அங்கே தன் குரங்குத்தனத்தை காட்டி இருந்தாள் அஞ்சலி. அதன் விளைவு தான் மகள் மீண்டும் மேடையேறியதும் அஞ்சலிக்கு இதயம் வலிக்க ஆரம்பித்தது.
“ச்சே!…ச்சே!… அப்படி எல்லாம் இல்லை ஹேமா. நீ தான் சொல்லிட்டே இல்லை…அது மாதிரி எல்லாம் இனி செய்ய மாட்டா…” என்று மனைவியை ஆறுதல் படுத்தினாலும், பாண்டியனுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்து கொண்டு இருந்தது.
தர்சனி மாமியார் குடும்பம் வேறு பழமை பார்ப்பவர்கள். அஞ்சலியை வேறு மாப்பிள்ளை பக்கம் கேட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் மகள் அவர்கள் முன்னால் குத்தாட்டம் போட்டு வைத்தால் என்ன செய்வது?’ என்ற எண்ணமே பாண்டியனை மிரள வைத்தது.
ஊரில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு இருந்தனர் அந்த பெற்றோர்.
ஆனால் அவர்கள் அறியாதது அஞ்சலியிடம் வந்திருந்த மாற்றம். காதல் எதையும் மாற்றும் சக்தி கொண்டது. அஞ்சலியையும் அது மாற்றி இருந்தது.
அந்த நொடி மேடை ஏறிய பெண், அவர்கள் மகளாக இல்லை என்பதை அந்த பெற்றோர் அறியவில்லை.
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே
முத்தாரம் சரிய வைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாக இளைக்க வைத்தானே
பாலாக வெளுக்க வைத்தானே…..ஹோ….
தன்னாலே பேச வைத்தானே
தண்ணீரைக் குடிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானே….ஹோ
என்று தன் நிலையை மட்டும் இல்லை காதலில் இருக்கும் பெண்களின் நிலையை அழகாய் படம் பிடித்து காட்டினாள் அஞ்சலி.
அவள் குரலா, பாட்டில் அவள் சொன்ன செய்தியா, உன்னால் எப்படி மாறி போனேன் என்று அவள் கேட்ட நியாயமா ஏதோவொன்று, கெளதம் கண்களை விபரீதமாக மின்ன வைத்தது.
பாடி விட்டு கீழே, ‘அமைதிக்கு மறுபெயர்’ தான் மட்டும் தான் என்று வந்து அமர்ந்த மகளை கண்டு விழித்தனர் பெற்றோர் இருவரும்.
“ஏங்க! இது அவ தானா! இல்லை இவளுக்கு ஏதாவது பேய் பிடிச்சி இருக்கா என்ன?” என்றார் ஹேமா, அவர் மகளாவது ஒரு இடத்தில் அடங்கி, ஒடுங்கி அமர்வதாவது.
“நீங்க வேறமா இவளே ஒரு பேய், பூதம், பிசாசு, வேதாளம்…இதை தான் இன்னொரு பேய் வந்து பிடிக்க போகுதா என்ன? ஆனா இந்த கோட்டான் ரொம்ப அடக்கி வாசிக்குதே…என்ன ஆச்சு?” என்றான் அப்பொழுது தான் விஷ்ணு உடன் உள்ளே வந்திருந்த ராம்சந்தர்.
ராம்சந்தர் ஐந்தடி ஏழு அங்குலத்தில் பாதம் நிறத்தில் ரேமண்ட் மாடல் போல், சட்டென்று பார்க்க நடிகர் ‘ஷ்யாம்’ போல் இருந்தான்.
“டேய்!…ராம்!… நீ இப்படி பேசுவது மட்டும் அவள் காதில் விழுந்தது உன்னை வச்சி செய்வாடா…உடம்பு பத்திரம் மவனே.” என்றான் விஷ்ணு.
ஆனால் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் தான் அஞ்சலி இல்லையே. இந்த பிரபஞ்சத்தில் காதலால் தனக்கு என்று ஒரு உலகம் உருவாக்கி சஞ்சரித்து கொண்டிருந்தாள்.
காதலலென்னும் உலகம். நான்கு கண்கள் அங்கே போரிட்டு கொண்டிருக்க இதயங்கள் அங்கு பிடிபட்டு கொண்டிருந்தன.
‘என்ன இவன் இப்படி பார்க்கிறான்..?’ என்று அஞ்சலி தவித்து கொண்டிருக்க, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை போல் கால் மேல் கால் போட்டு இவளை மட்டுமே ரசித்து கொண்டிருந்தான் அந்த கள்வன்.
சட்டென்று அவன் கண்ணடித்து விட, இவள் தான் திணறி போனாள்.
அவள் முகத்தை பார்க்க, பார்க்க கௌதமிற்கு என்னென்னவோ செய்ய தோன்றியது.
‘நான் செய்வது சரி தானா? இது என்ன சினிமாவா இல்லை ரொமான்டிக் நாவல்லா? யார் என்றே தெரியாதவன் மேல் எல்லாம் காதல் இன்ஸ்டண்டாய் வருவதற்கு? ஆனால் வந்து விட்டதே…
இத்தனை பலவீனமானவளா நான்? முதல் பார்வையில் காதலா? இப்படி என்று அப்பா அம்மா அண்ணன்களுக்கு தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? எந்த தைரியத்தில் மேடை ஏறி அந்த பாடலை இவனை பார்த்து பாடி வைத்தேன்?’ என்று மனசாட்சி போர் கொடி உயர்த்த அதற்கு மேல் தலை நிமிரவோ அவனை பார்க்கவோ இல்லை அஞ்சலி.
மிக சின்சியராக ஆங்கிரி பேர்ட் விளையாடுவது போல் தலையை குனிந்து கொண்டு போனை நோண்ட ஆரம்பித்தாள். அங்கு கெளதம் பிபி ஏற ஆரம்பித்தது.
‘என்ன ஆச்சு இவளுக்கு? இவ்வளவு நேரம் ஒழுங்காய் தானே பார்த்து கொண்டிருந்தாள். பார்க்கிறாளா பாரு…ராட்சசி…மேடை ஏறி மனுஷனை உசுப்பி விடுவது போல் பாட வேண்டியது…இப்போ போனிற்குள் புதையலை தேடிட்டு இருக்கா பாரு…மவளே நீ தனியா வா அப்போ இருக்கு உனக்கு. நிமிர்த்து பாரு பாருடீ’ என்று மனதிற்குள் ஜபித்து கொண்டிருந்தான் கெளதம்.
ராம் சந்தர் அவன் நண்பன் ரூபேஷ்ஷோடு எங்கோ சென்று விட, மருத்துவமனை எமெர்ஜென்சி என்று விஷ்ணுவிற்கு அழைப்பு வர அவர்கள் இருவரும் சென்று விட்டு இருந்தார்கள்.
மணப்பெண்ணின் அம்மாவுக்கு சற்று உடல் நிலை சரியில்லாததால் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தனர் அஞ்சலி பெற்றோர்.
அஞ்சலியை சாப்பிட வரும் படி சைகை காட்டி விட்டு, தர்சினி அன்னையுடன் அஞ்சலி பெற்றோர் சென்று விட்டனர்.
மணமகள், மணமகன், சம்மந்திகளோடு பாண்டியனும், ஹேமாவும் ஒரு பந்தி வரிசையில் அமர்ந்து விட,அஞ்சலி தனியாக அமர வேண்டிய நிலை.
இலையில் கவனமாய் இருந்தாள் அஞ்சலி.
‘ நிமிர்வானேன் அவன் எங்காவது நிற்பதை பார்த்து விட்டு மனதிற்குள் ரயில் எல்லாம் ஓட வைப்பானேன்? இது வெறும் இன்பாக்ச்சுவேஷன், ஹார்மோன் பிரச்சனை செய்யுது. நடந்தது ஒரு விபத்து…. அதற்கு எல்லாம் காதல் என்ற வர்ணம் பூசுவது தவறு. கண்ணில் படாததது கருத்தில் நில்லாது.
இன்றைக்கு பிறகு இனி அவனை என்றுமே பார்க்க போவதில்லை என்னும் போது எதற்கு மனதை அலை பயா விட வேண்டும்.?’ என்று மூளை கட்டளையிட்டது.
ஆனால் அதனிடம் யார் சொல்வது?
‘பெண்ணாக மாற்றி விட்டானே’ என்று புலம்ப வைத்தவன் ஒரே நொடியில் காதல் என்னும் விதையை அவள் இதயத்தில் விதைத்து விட்டான். அதுவும் ஆலமரமாய் சில மணி நேரங்களில் வளர்ந்து இருந்தது என்பதை.
தனக்குள் பேசி சமாதானம் ஆனவள் அப்பொழுது தான் கவனித்தாள்.அவள் இலையில் எல்லாம் ரெண்டிரெண்டாக இருப்பதை. அடுத்து ஸ்வீட் வைத்தவரும் ரெண்டாய் வைக்க,
“அண்ணே!…என்ன இது? எனக்கு மட்டும் எல்லாம் ரெண்டாய் வைத்துட்டு இருக்காங்க?” என்றாள் அஞ்சலி குழப்பத்துடன்.
“உன் அத்தை பையன் தான் தங்கச்சி அப்படி வைக்க சொன்னார்.உன் மேல அம்புட்டு அக்கறை..” என்றவர் நகர,
‘யோவ் மாமா இருந்தாலும் அத்தைக்கு இப்படி துரோகம் செய்யலாமா?’ என்று தர்சினி அப்பாவை மனதிற்குள் வறுத்து எடுத்தாள்.
அவளுக்கு இருக்கும் ஒரே அத்தை தர்சினி அம்மா தான். அவங்களுக்கு இருப்பதே ரெண்டு பொண்ணுங்க. இதில் புதுசாய் அத்தை பையன் என்றால் ‘மாமா செகண்ட் லைன் ஓட்டிட்டு இருக்கார் போலிருக்கே’ என்று தான் அஞ்சலியால் நினைக்க தோன்றியது.
‘அத்தே காலம் கடந்த வயசில் உனக்கு சக்களத்தி சண்டை எல்லாம் போட வருமா? உனக்கு நாங்க இருக்கோம் அத்தை.’ என்று மனதிற்குள் அத்தை மேல் இரக்கம் வந்தது அஞ்சலிக்கு.
‘ஊருக்கே தெரிந்து இருக்கு நம்ம மாமா செகண்ட் லைன் ஓட்டும் விஷயம். நமக்கு தான் தெரியலை…இங்கே பரிமாறுபவர்களுக்கு கூட தெரிந்து இருக்கு. அத்தை நீ பாவம்.’என்று நினைத்த அஞ்சலி,ஸ்வீட் பரிமாறி அவங்க வீட்டு செகண்ட் லைன் விஷயத்தை சொன்ன அண்ணா மீண்டும் பரிமாற வர,
“அண்ணா உங்க கிட்டே இதை யாரு அண்ணா சொன்னது?” என்றாள்
“இதோ உங்க பக்கத்திலேயே இருக்காரே உங்க அத்தை பையன் அவர் தான் தங்கச்சி.” என்றவர் நகர, ‘எவனவன் என் சொத்தை பையன்?’ என்று கோபத்துடன் அவனை ஒருகை பார்க்க திரும்பிய அஞ்சலி, புன்னைகையுடன் அவள் அருகே இருந்த அத்தை பையனை கண்டு மிடறு விழுங்கினாள்.
அங்கு அத்தை பையனாய் இருந்தவன் ‘அவன்’.
அவனை கண்டு அனைத்தும் குழம்பி போய், ஹெட்லைட் வெளிச்சத்தில் மாட்டி கொண்ட மானாய், திருவிழாவில் தொலைந்து போன குழந்தை கணக்காய் பேந்த பேந்த விழித்தாள் அஞ்சலி.
‘அடேய்!… நீயா என் அத்தை பையன்? லொள்ளு தாண்டா உனக்கு. உன்னாலே பாவம் தர்சினி அப்பாவை வேற தப்பாய் நினைச்சுட்டேனே…டேய் வேண்டாம் அப்படி பார்க்காதே…அயோ சிரித்தே கொல்றானே.’ என்று மனதிற்குள் புலம்பியவள், தன் இலையை பார்த்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ட்ரை செய்ய மட்டும் தான் அவளால் முடிந்தது. கை கால் உதற, இதயம் மீண்டும் மத்தளம் வாசிக்க,மூச்சு விடுவதே சிரமமாய் இருக்க, ‘எழுந்து ஓடி விடலாமா?’ என்று தனக்குள் பட்டிமன்றமே நடத்தி கொண்டிருந்தாள்.
‘கட் பீலிங்’ என்பார்களே அது அவளை ஓட சொல்லி கொண்டிருந்தது. ‘இவனால் தன் வாழ்வு அடியோடு மாற போகிறது,இனி தான் தானாய் இருக்க முடிய போவதில்லை’ என்று உள்ளுணர்வு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
இதயம் சமர்ப்பிக்கப்படும்.
”