சமர்ப்பணம் 11

“ஹாய் ஏன்ஜெல் !…” என்ற குரலைக் கேட்டுத் தூக்கிவாரி போட்டு அஞ்சலி நிமிர, அவனோ ப்ளூ டூத் செட்டை காதல் வைத்திருந்தான்.

‘இவன் என் கிட்டே பேசறானா, இல்லை மொபைலில் யாரிடமாவது பேசிக் கொண்டு இருக்கிறானா!…

சும்மா இவன் விளையாடிப் பார்ப்பதை எல்லாம் நாம தான் தவறாய் புரிந்து கொள்கிறோமா!’ என்று நினைத்தவள் மீண்டும் இலை மீது கான்செண்ட்ரட் செய்ய முயன்றாள்.

“ஹாய் கர்ஜியஸ்!…உன் வாய்ஸ் டிவைன்…பை தி பை ஐயம் கெளதம் பிரபாகர். எம்.டி ஆப் ஜி.பி இன்கார்ப். வாட்ஸ் யுவர் நேம் ஏஞ்சல்?” என்றான் கெளதம்.

அவன் யார் என்று தெரிந்ததும் முகம் வெளுத்துப் போனது அஞ்சலிக்கு.

மல்டி மில்லியனர், பல்துறை வல்லுனன், தொழில் உலக ஜாம்பவான் வைரவேலின் பேரன். கோடி கோடியாய் அந்நிய செலவாணி ஈடுபவன்.

அவனின் செல்வ பலம், ஆள் பலம் அஞ்சலியை மிரட்டியது.

ஏணி மட்டும் இல்லை, எஸ்கேலேட்டர், லிப்ட், ராக்கெட்டே வைத்தால் கூட இவளும் அவனும் சமமாக முடியாது.

இவன் முகம் பழகியது போல் தோன்ற காரணம், போன வாரம் தானே ராம் ஒரு மகேஸின்னில் இவன் போட்டோவையும், பேட்டியையும் காட்டி, ‘எனக்கு ரொம்ப வேண்டிய பெண்ணின் அண்ணன். எப்படி இருக்கான் இல்லை.?’ என்று கேட்டான்.

‘இவன் கூட ஏதோ இவர்களின் புரொடக்ட் லான்ச் என்று மும்பை மாடல் டயானா என்ற பெண்ணின் இடுப்பை அப்படி வளைத்துப் பிடித்து நின்றான் இல்லை?’ என்று அஞ்சலி மனம் மிரண்டது.

கெளதம் என்னவோ தன் மனம் கவர்ந்த பெண் தன்னை, ‘ரோடு சைட் ரோமியோ’ என்று நினைத்து விடக் கூடாதே என்று தான் தன்னை அடையாள படுத்தி கூறினான்.

இவர்கள் சந்திப்பே வெகு எக்ஸ்ட்ரீமாய் அல்லவா இருந்தது!

முழு கண்ட்ரோல் இழந்த நிலையில் அல்லவா இருந்தான்.

தன்னை தவறாக நினைத்து விடக் கூடாதே என்று தான், ’தான் இன்னார்,இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்று தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டான். அந்தப் பெண் அவனை நம்பலாம் என்று உணர்த்த.

ஆனால் ஏற்கனவே காதலுக்கு, ‘இன்பாக்ச்சுவேஷன், ஹார்மோன்’ என்று அரிதாரம் பூசி இருந்தால் அஞ்சலி, அவனிடம் தன் வசம் இழந்த குன்றல், நடந்ததை மேடை போட்டுப் பாடி ஊருக்கே அதைத் தெரிவித்து விட்ட குற்ற உணர்வு, குடும்பத்தினரின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து விட்டதாகத் தவிப்பு, என்று தன் உணர்வுகளையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்தவளிடம் தான் கெளதம் தன் பின்புலத்தை சொல்லி இருந்தான்.

சாதாரண விளக்கினையே நெருங்க முடியாத விட்டில் பூச்சி, சூரியனை சொந்தம் கொண்டாட நினைத்தால் ஆகுமா!

‘ஜஸ்ட் லைக் தட், கம்பெனி கொடுக்க, டைம் பாஸ், பத்தோடு தான் பதினொன்று’ என்று மட்டுமே அவ்வளவு பெரிய கோடீஸ்வரனால் தன்னை நினைக்க முடியும் என்று நம்பியது அந்தப் பெண்மனம்.

அவனைப் போன்ற பணக்காரனுக்கு ‘அன்றைய பொம்மை, பொழுதுபோக்கு, அந்தப்புர ஆரணங்கு’ அன்று தான் போலிருக்கு என்றே முடிவுக்கு வந்திருந்தாள்.

“ஏய்! பேபி!…உன் பெயரைத் தான் கேட்டேன்…இந்திய ராணுவ ரகசியங்களை அல்ல.வாட் ஹப்பெண்ட்…! இந்த அத்தை பையனைக் கிட்டே பார்த்தவுடன் எல்லாம் மறந்து போச்சா?” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திருக்க, அவள் பேசாமல் இருக்கவும்,

“லுக் பேபி!…எனக்கு என்னவோ ஆகி போச்சு…ஐயம் லூஸிங் மைக்கண்ட்ரோல் பிபோர் யு(i am loosing my control before you)…திஸ் இஸ் நியூ டு மீ(this is totally new to me). நைட் ஐ வெயிட் பார் யு. ஐயம் இன் எக்சிகியூடீவ் சூட்(i am in executive suit)…ரூம் நம்பர் 507. சிக்ஸ்த் பிளோர். ஐ வெயிட் பார் யு தேர்…கம் பேபி.” என்றான் கெளதம்.

அவன் என்னவோ எந்தத் தடங்கலும் இல்லாமல் பேசிப் புரிந்து கொள்ள தான் தன் அறைக்கு அழைத்தது.

அவன் அழைத்த நேரம் இரவு என்பதையோ, தான் வரச் சொன்னது ஒரு குடும்ப பெண்ணை என்பதையோ, தன் தங்கையை ஒருவன் இப்படி அழைத்தால் தான் எப்படி உணர்வோம் என்பதையோ, இதைக் கேட்கும் எந்தப் பெண்ணும் எவ்வாறு உணர்வார்கள் என்று யோசிக்க தவறி இருந்தான்.

பேச வேண்டும் என்று ஒரு ஆண் வந்து நின்றவுடன்,”ஒஹ் உங்க அறைக்கா!…அதுவும் ஹோட்டல் ரூமுக்கா!…அதுவும் இரவு வேலையில்லா!…பேஷ்! பேஷ்!…அதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது….இதோ வரேன்…”என்று எந்தப் பெண்ணும் கிளம்புவதில்லை. அதுவும் ஒரு குடும்ப பெண்.

பேசக் காலை வேளையில் காபி ஷாப், கோயில், பார்க் என்றாலே அஞ்சலி திகைத்து இருப்பாள். போகலாமா வேண்டாமா என்று ஆயிரம், லட்சம் பட்டி மன்றம் மனதில் நடந்து இருக்கும்.

இதில் கெளதம் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவன். ஒரு தங்கைக்கு அண்ணன் என்ற எண்ணம் எல்லாம் அஞ்சலியைத் தன் அறைக்கு அழைத்த அவனுக்குச் சுத்தமாய் நினைவிலேயே இல்லை.

‘அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும்.தன்னை இந்த அளவிற்கு பாதித்த அந்தப் பெண்ணைப் பற்றி அறிய வேண்டும்.அவளுடன் பழக வேண்டும்.பேசித் தங்களை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.தங்கள் மனதில் உதித்து இருக்கும் அந்த அழகான உணர்விற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும்….வேண்டும் …வேண்டும்’ என்று காற்று வெளியில் மனக்கோட்டை கட்டி கொண்டு போனான் புதிதாய் காதலில் விழுந்திருந்த அந்தக் காதலன்.

‘தன்னை பற்றிச் சொல்லியாகி விட்டது. இன்னார் குடும்பம் என்று சொல்லியாகி விட்டது.அந்த நம்பிக்கை போதும்’ என்று தான் அவன் நினைத்தது.

ஆனால் அஞ்சலிக்கு மனதால் நெருங்கி இருந்தாலும், இன்னும் அவன் அந்நியனே என்பதை அந்தத் தொழிலதிபன் உணர தவறி இருந்தான்.

அந்த நொடி அவன், ‘அந்தப் பெண்ணின் காதலன்’ என்ற நிலையில் தான் இருந்தான்.

ஒரு பெண்ணை நள்ளிரவு வேளையில் தன் அறைக்கு அழைப்பது, அழைத்தவுடன் போவது எல்லாம் அஞ்சலி போன்ற பெண்ணால் செய்ய இயலாது என்பதை கவனிக்க தவறியது அவன் அறிவு.

அதற்கு மேல் அவன் அருகே அமர்ந்திருக்க அஞ்சலிக்கு என்ன பைத்தியமா!

அவன் பேச அழைத்ததை தவறாய் அர்த்தம் எடுத்துக் கொண்டு, பின்னங்கால் பிடரியில் படும் படி அங்கிருந்து ஓடினாள்.

அரண்டு போனவளாய், திருமண மண்டப வாயிலுக்குச் சாப்பிட்ட கையைக் கூடக் கழுவாமல் வந்த மகளைச் சரியாய் எதிர் கொண்டார் ஹேமா.

தன் அம்மாவை பார்த்த உடன் தான் அஞ்சலிக்கு உயிரே திரும்பி வந்தது போல் இருந்தது.

கையை கூட கழுவாமல் ஓடி வந்த மகளையோ, அவள் முகத்தில் இருந்த பதட்டம், பயம், ஏதோ சிக்க கூடாத ஒன்றில் சிக்கியிருக்கும் குழப்பத்துடன் இருந்த மகள் தன்னை அணைத்து மௌன கண்ணீர் விடுவதையோ ஹேமா கவனிக்கும் நிலையில் இல்லை.

“அழுவாதே, அஞ்சு!….நீ பயப்படும் படி எதுவும் இல்லை….எல்லாம் சரியாகிடும்…” என்று மகளை திருமண மண்டப வாசலில் அணைத்தவாறு ஆறுதல் சொன்னார்.

“இல்லை… எனக்கு எதுவும் தெரியாது மா… நான் குழந்தைங்க கூட விளையாடும் போது … எனக்கு தெரியலை அம்மா…. எப்படி இப்படி….நான் …”என்று மகள் கண்ணீர் விட,

“அஞ்சு மா…எது நடக்கணும் என்று விதி இருக்கோ அது தான் நடக்கும்… தவறு செய்யாதவன் என்று இந்த உலகில் ஒருத்தரை காட்டு பார்ப்போம்… எந்த சூழ்நிலை வந்தாலும் அதை நாம எப்படி ஹாண்டில் செய்யறோம் என்பது தான் முக்கியம்…

இங்கே பார் சும்மா அழுது ஸீன் கிரியேட் செய்யாதே…இது யாருக்கும் தெரியாது… தெரியாதது தெரியாமல் அப்படியே இருக்கட்டும்….நீ பத்திரமாய் இரு…”என்றார் ஹேமா.

“அம்மா உங்களுக்கு எப்படி தெரியும் அம்மா…”என்றாள் மகள் கண்களில் கண்ணீர் வழிய,

“கடவுள் புண்ணியம் தான் அஞ்சு….நான் கூடவே இருந்தேன்….இல்லையென்றால் தலை டேபிள் மேல் மோதி உடைந்து இருக்கும்…சரி சரி …அப்பா கூப்பிடறார்…நான் கிளம்பறேன்…”என்று ஹேமா நகர, அப்பொழுது தான் அவர் அது வரை வேறு எதை பற்றியோ பேசிட்டு இருக்கார் என்பதே அஞ்சலிக்கு உரைத்தது.

நகர்ந்த அவர் கையை பிடித்து கொண்டு, “என்னமா சொல்றீங்க…” என்றாள் அஞ்சலி ஒன்றும் புரியாதவளாய்.

“எத்தனையோ தடவை உன் அத்தைக்கு சொல்லி விட்டோம்…. கேட்டால் தானே!…. இந்த திருமணம் நல்ல படியாக நடக்கும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த பிறகும், ஓவர் டென்ஷன், ஸ்ட்ரெஸ், சரியா சாப்பிடமா, தூங்காம புலம்பிட்டே இருந்தாங்க….இதுல ஒரு பொறுக்கி வேற….சரி சரி…அத்தைக்கு ஒன்றும் இல்லை பயப்படாதே. நானும் அப்பாவும் கூட தான் போறோம்.

தர்சினி தூங்கிட்டா, அவ கிட்டே சொல்ல வேண்டாம். காலைக்குள் எல்லாம் நார்மல் ஆகிடும். பிபி தான் அதிகமாகி மயங்கிட்டாங்க…நீ ரூமுக்கு போ.” என்றவர் மணப்பெண் அம்மாவை பற்றிய கவலையில், அஞ்சலி இருக்கும் நிலையை கவனிக்க தவறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் சொல்ல வந்ததை முழுதாய் சொல்லவில்லை.இதையெல்லாம் மகள் ஏன் அறிய வேண்டும் என்று நினைத்தாரா…இல்லை தலைக்கு வந்தது தலைப்பாகை உடன் சங்கீதா குடும்பத்திற்கு போனதே என்று சொல்லாமல் விட்டாரா கடவுளுக்கே வெளிச்சம்.

சில சமயம் நாம் எடுக்கும் முடிவு பலரை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது இது தான்.

அப்பொழுதே முளையில் கிள்ளி இருக்க வேண்டிய விஷ செடி ஒன்றை, இவர்கள் விட்டதன் பலன் தன் குடும்பத்தின் மேலேயே விடிய போகிறது என்று அந்த தாய் அந்த கணம் உணரவில்லை.

மயங்கிய சகோதரி சங்கீதாவை தூக்கி கொண்டு பாண்டியனும்,  சங்கீதாவின் கணவன் ரங்கநாதனும் பின் வாசலில் காத்து இருந்த காரில் அந்த திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் அறியாமல் ஏற்ற, ஹேமா ஏறி கொள்ள அந்த கார் சங்கீதாவை சுமந்து கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது.

வெகு சிலரை தவிர வேறு யாருக்கும் இந்த செய்தி சொல்லப்படவில்லை. சகுனம் பார்க்கும் தர்சினி  வருங்கால மாமியார் குடும்பம்,  இதை அபசகுனமாக எடுத்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விட கூடாதே என்று வெகு கவனமாய் அந்த சூழலை கையாண்டனர் பாண்டியன், ஹேமா.

மற்ற பெற்றோராய் இருந்தால் ஹோட்டல் அறை வரை வந்து ஆயிரம் பத்திரம் சொல்லி, ‘யாரையாவது துணைக்கு படுக்க வைத்து கொள்’ என்று சொல்லிட்டு சென்று இருப்பார்கள்.

ஆனால் தன் பெண், ‘ப்ருஸ் லீ பேத்தி, ஜாக்கி சான் தங்கச்சி, பெரிய ராட்சசி, பேய், ரத்த காட்டேரி’ என்று அறிந்ததால் மகளை எதுவும் செய்து விட யாராலும் முடியாது என்று வாசலோடு மகளை விட்டு ஹாஸ்பிடல் கிளம்பி விட்டனர்.

தவிர ஹோட்டல் அறையும் மண்டபத்தோடு இணைந்து இருக்கிறது என்னும் போது திருமண மண்டபத்திலும், ஹோட்டலிலும் தங்கி இருப்பவர்கள் சொந்தம், பந்தம், உறவு என்னும் போது எதற்கு கவலை பட வேண்டும் என்ற எண்ணமாய் கூட இருக்கலாம்.

அந்த கார் மறையும் வரை அங்கேயே நின்ற அஞ்சலி மௌனமாய் கடவுளிடம் தன் அத்தை கூட துணை இருக்கும் படி வேண்டியவள், சற்று தேறி இருந்தாள்.

அங்கிருந்த செயற்கை நீரூற்றில் தன் கைகளை அலம்பியவள், அவனை பற்றிய நினைவுகளையும் கெட்ட கனவாய் நினைத்து கை கழுவினாள்.

தாயை பார்த்த தைரியத்தில், அவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையில், நடந்ததை கெட்ட கனவாய் நினைக்க முயன்றாள்.

‘நல்லவேளை இப்பொழுதே அவன் புத்தி தெரிந்ததே…அவன் பின் வருவது காதலால் இல்லை, காமத்தை தீர்த்து கொள்ள வருகிறான் என்று முன்பே தெரிந்து விட்ட பிறகு அவன் அருகே செல்ல அவளுக்கு என்ன தலையெழுத்தா?’

தன் எண்ணத்தில் நடந்து கொண்டு இருந்தவளை அழைத்து கொண்டே அவள் அருகில் ஓடி வந்து நின்றாள் உமா.

“அடியேய்!… எத்தனை தடவை கூப்பிடறது…. என் காது கேக்காதுன்னு எந்த கோட்டையை பிடிக்க இப்படி யோசனை செய்துட்டு நடந்து போய்ட்டு இருக்கே நீ…” என்று மூச்சு வாங்க வந்து நின்றாள்.

“தர்சி!…”என்றாள் அஞ்சலி கவலையுடன்.

“அவ தூங்கிட்டு இருக்கா…அவளுக்கு விஷயம் தெரியாது. அவங்க அம்மாவுக்கு இப்படி என்று சொன்னால் அழுது ஊரை கூட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்…. நான் உடனே போகணும்… கதவை சாத்தி லாக் செய்துட்டு வந்தேன்…” என்றாள் உமா.

“அதான் எல்லா வேலையும் அம்மாவும் அப்பாவும் தானே பார்த்துக்கறாங்க!…தேவை இல்லாமல் அத்தை தானும் டென்ஷன் ஆகி, மத்தவங்களையும் காபாரா செய்வதே வேலை… சரியான டென்ஷன் பார்ட்டி.

நம்மால் சரி செய்ய முடியாத பிரச்சனைக்கு டென்ஷன் ஆகி, அழுது புரண்டால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா என்ன!… அடுத்து என்ன என்று யோசித்து கடப்பதை விட்டு இப்படி உடம்புக்கு இழுத்து வச்சிட்டு இருக்காங்க….” என்றாள் அஞ்சலி கடுப்புடன்.

“அவங்க ஒழுங்கா தான் இருந்தாங்க… எல்லாம் அந்த நாயால் வந்தது…” என்ற உமா அந்த திருமண மண்டபத்தில் நடந்த ஒன்றை பற்றி சொல்ல அஞ்சலி திகைத்தாள்.

“என்னடி சொல்றே!…”என்றாள் அஞ்சலி திகைப்புடன்.

“ஆமா அதனால் எதனாவது பிரச்சனை வந்து திருமணம் நின்று விடுமோ என்று தான் அத்தை டென்ஷன் ஆகி மயங்கிட்டாங்க…” என்றாள் உமா.

“இந்த விஷயம்… அவன் தான் அப்படி செய்தது என்று வேறு யாருக்காவது….”என்றாள் அஞ்சலி.

“இல்லை…. அவனை பார்த்தது நானும் அந்த பெண்ணும் மட்டும் தான்…. வேற யாருக்கும், ஏன் துரத்தி போன அந்த பெண்னின் கணவனை கூட முகத்தை பார்க்கவேயில்லை தான்…

நானும் யார் கிட்டேயும் சொல்லலை…உன் கிட்டே தான் சொன்னேன்… உன்னை அவன் பார்க்கும் பார்வையே சரியில்லை… அவன் மண்டபத்திற்கு வந்ததில் இருந்து உன்னை தான் துகில் உறிஞ்சிட்டு இருக்கான்…

பார்த்து தனியாக அவன் கிட்டே சிக்கிடாதே… பத்திரம்…அதை சொல்ல தான் வந்தேன். சரி டீ அங்கே தர்சி எழுந்துக்க போறா… நான் கிளம்பறேன்…” என்றவள் சென்று மறைய திகைப்புடன் அங்கேயே நின்றாள் அஞ்சலி.

தன் அம்மா கூட, ‘எல்லாம் அந்த பொறுக்கியால்…’ என்று ஆரம்பித்து சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினார்களே!…

இவ்வளவு நடந்து இருக்கா… முதலில் இந்த ராம் பிசாசு நடு மண்டையில் கட்டையால் ஒன்று ஓங்கி போடணும்… அவன் கூட சேராதே என்று சொன்னால் கேட்டால் தானே!….

பின்னாடி பெருசாய் எதையாவது இழுத்து வைக்க போகிறான்… அப்போ தான் இந்த ராம் லூசுக்கு புரிய போகிறது.’ என்று மனதிற்குள் தன் அண்ணன் ராம்மிற்கு அர்ச்சனை செய்து கொண்டே ,ஹோட்டல் நோக்கி நடந்து கொண்டு இருந்தாள்.

அஞ்சலி அந்த கணம் நினைத்து தான் எதிர்காலத்தில் நடக்க போகிறது என்று அந்த கணம் அவளுக்கு அறியும் திறன் இருந்து இருக்கலாம்.

‘முதல்வன்’ படத்தில் அர்ஜுன் சொல்வது போல் ரீவைண்ட் பட்டன் மட்டும் அல்ல சில சமயம் வாழ்வில் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கூட முன்னரே அறியும் பட்டன் இருந்தால், பலர் வாழ்வு நாசம் ஆகி யருக்காது தான்.

விதி அப்பொழுது சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

மறுநாள் காலை தானே, ‘அவனிடம்… அந்தப் பொறுக்கியிடம்’  வகையாக சிக்க போவது அஞ்சலிக்கு தெரிந்து இருக்கலாம். அதற்கு தன் தாயே காரணம் ஆவார் என்பதை பற்றியும் தான்.

ஒரு பெண்ணை அடைய யாரும் இல்லாத அறை தான் வேண்டும் என்பதில்லை.பொது இடம் என்று கூட பார்க்காத, மக்கள் இருக்கும் கூட்டத்தில்  ஈனத்தனமாய் நடந்து கொள்ளும்  வேலை எல்லாம் செய்ய சிலர் தயங்குவதே  இல்லை என்பதை அஞ்சலி உணரும் போது காலம் கடந்து இருக்குமா!

இல்லை அஞ்சலி காப்பாற்ற படுவாளா!

அத்தை பற்றிய கவலையில் தன் பிரச்னையை மறந்து இருந்தாலும் மனதிற்குள் வலி எழுவதை அஞ்சலியால் விளக்க முடியவில்லை.

‘அத்தைக்கு ஒன்றும் ஆகாது.’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவளின் மனம், மீண்டும் தன் மனதை தட்டி இருந்தவனிடம், ‘தாயை கண்ட கன்று குட்டி’ போல் ஓடியது.

‘அகம் தொட்ட அவன்’ இதய கதவை மட்டும் தட்டியிருக்கவில்லை, தன் இதயத்தின் அரசனாய் அமர்ந்து விட்டான் என்பதை அந்த கணம் அஞ்சலி உணரவில்லை.

மனம் வலித்தாலும், ஒரு நிமிர்வோடு ஹோட்டல் லாபிக்குள் நுழைந்தாள் அஞ்சலி. அதுவரை எல்லாமே ஒழுங்காய் தான் நடந்தது. ஹோட்டல் லாபியில் லிப்ட்வர காத்திருந்த வரை கூட எல்லாம் சரியாக தான் இருந்தது.

மேலே போகும் லிப்ட் கதவு திறந்தவுடன், இவள் கையை பற்றி இழுத்தவாறு கௌதம், “கம் பேபி… மை ரூம் இஸ் இன் சிக்ஸ்த் பிளோர்.” என்றவாறு அவளை இழுத்து கொண்டு உள்ளே நுழைந்த உடன், தான் கதையே மாறி போனது.

என்ன நடந்தது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து போய் சிலையாய் நின்ற அஞ்சலிக்கு உயிர் வர, கெளதம் லிப்ட் பட்டனை அழுத்த அவள் கையை விட, லிப்ட் கதவு சாத்தும் கடைசி நொடியில் வெளியே பாய்ந்தாள் அஞ்சலி.

“ஏய் பேபி!…வாட் ஹாட்பேண்ட்?” என்ற அவன் குரல் இவள் காதை எட்டும் முன் லிப்ட் கதவு மூடி கொண்டது.

“ஷிட் வாட் தி ஹெல்!…” என்று டென்ஷன் ஆன கௌதமால் லிப்ட் மேல் தளத்தை அடைவதை தடுக்க முடியவில்லை. அது அவனின் ஆறாம் தளம் நோக்கி சென்ற பிறகே நின்றது.

மொத்தம் ஆறு லிப்ட் கௌதமின் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில்.

மூன்று மேலே போக, மூன்று கீழே வர. அதில் ரெண்டு மட்டும் ஸ்டீல் டோர் லிப்ட், மீதம் உள்ள நான்கு முழு கண்ணாடி லிப்ட்.

லிப்ட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலி, அருகே இருந்த படியில் ஏறி ஓட ஆரம்பித்தாள் தன் அறையை நோக்கி.

ஒன்று அவள் ஹோட்டலை விட்டு வெளியேறி மணமகள் அறைக்குள் சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் பெற்றோரையாவது, அண்ணன்களையாவது அழைத்து இருக்க வேண்டும்.

இல்லை கத்தி கூப்பாடு போட்டு ஹோட்டல் செக்யூரிட்டியையாவது வர வைத்திருக்க வேண்டும்.

இதில் எதையும் அஞ்சலி செய்யாமல், ‘எதற்கு மூச்சு வாங்க படியேறி ஓடினாள்’ என்ற கேள்விக்கு இதுவரை அஞ்சலியிடம் பதில் இல்லை.

அந்த நேரத்தில் அவளுக்கு தோன்றியது, ‘நான்காவது தளத்தில் உள்ள தன் அறைக்குள் நுழைந்து விட்டால் எந்த பிரச்சனையும் வராது’ என்பதாய் மட்டுமே இருந்தது.

அது என்ன விதமான லாஜிக், ஏன் அவ்வாறு சிந்தனை ஓடியது என்பது புதிரே!

ரெண்டு மாடி படிகளை ஏறி மூச்சு வாங்க நின்றவள், மேலிருந்து யாரோ, ‘தபதப’ என்று ஓடி வரும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அப்படி ஓடி வருவது கெளதம் தான் என்பதை உணர்ந்தவள், அடுத்த நொடி அருகில் திறந்திருந்த லிப்ட் ஒன்றில் நுழைந்து மேல் போகும் பட்டனை அழுத்தினாள்.

லிப்ட் மேல் நோக்கி நகரவும், கெளதம் அதன் முன் வந்து நிற்பதற்கும் நேரம் மிக சரியாய் இருந்தது. கெளதம் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.

“காட்!…” பிரஸ்ட்ட்ரேசன்னால் அவன் தரையை ஓங்கி மிதித்தான்.

அதை கண்ட அஞ்சலி மேலும் மிரண்டாள்.

லிப்ட் எங்கும் நிற்காமல் ஐந்தாம் மாடியில் வந்து நிற்க, சட்டென்று கீழே போகும் லிப்ட் திறக்க, அதில் நுழைந்தாள் அஞ்சலி.

லிப்ட் கீழே இறங்கும் சமயம் கோபத்தோடு அதன் முன் வந்து நின்றான் கெளதம்.

அவன் என்னவோ வேட்டையாட வரும் சிங்கம் போலவும், இவள் என்னவோ பயந்து ஓடும் மானை போலவும் மிக பெரிய, ‘கேட் அண்ட் மௌஸ்’ கேம் படிகளையும், அந்த ஆறு லிப்ட்களையும் வைத்து அந்த இருவர் ஆடி கொண்டிருந்தனர்.

ஏறக்குறைய லிப்ட் வைத்து ஹைட், ‘அண்ட் சீக்/hide and seek, கேட்ச் மீ இப் யு கேன்/catch me if you can’

மீண்டும் லாபியில் லிப்ட் நிற்க வெளி வந்த அஞ்சலியை அந்த ஹோட்டலின் மானேஜர் மனோஜ் எதிர்கொண்டான்.

“ஹலோ மேடம்..ஐ ஆம் மனோஜ். இந்த ஹோட்டல் மானேஜர். நீங்க எதையாவது மிஸ் செய்துடீங்களா..?

செக்யூரிட்டி அழைத்து இப்போ தான் சொன்னாங்க…நீங்க லிப்ட்டில் ஏறி ஏறி இறங்கி கொண்டிருப்பதை…எனி ப்ரோப்ளம் மேடம்?” என்றான் மனோஜ்.

என்னவென்று அவனிடம் சொல் முடியும் அஞ்சலியால்!

‘ஒருத்தன் என் மனதில் நுழைந்து விட்டான்…அவனை கண்டு என் உள்ளம் தடுமாறுகிறது. அவனோ என்னை தன் அறைக்கு அழைக்கிறான்… நான் காதலுடன் அவனை பார்த்தால், அவன் காமத்துடன் என்னை துரத்துகிறான்…

எனக்கு அவனை கண்ட உடன் கை கால் எல்லாம் நடுங்குகிறது…அவனை பார்த்தால் மூச்சு விடவும் மறக்கிறேன்… இதய துடிப்பின் தாளம் மாறி போகிறது.அவன் என்னருகே இருந்தால் சிந்திக்கும் திறனே போய் விடுகிறது.அவன் அருகே நான் நானாய் இல்லாமல் போகிறேன்…’ என்றா ஹோட்டல் மானஜரிடம் சொல்ல முடியும்.

எதையும் சொல்லாமல் எதற்காக தான் லிப்ட், படிகளை வைத்து அவனுடன் ஓடி பிடித்து விளையாடி கொண்டு இருக்கிறோம் என்று புரியாமல், கேள்வி கேட்கும் மானஜருக்கு பதிலும் சொல்ல முடியாமல் குழப்பத்துடன் விழித்து கொண்டு லோபிபியில் நின்றாள் அஞ்சலி.

“சொல்லுங்க மேடம்… எனி ப்ரோப்லேம்… என்ன உதவி வேண்டும்?”என்றான் மானேஜர் மீண்டும் தன்மையாக.

அவன் கண்கள் மட்டும் அவளை மேலும் கீழும் அளவிட்டு கொண்டு இருந்தது.அவன் பார்வை காம பார்வையாக இல்லாமல் ஆராய்ச்சி பார்வையாக, குழப்ப பார்வையாக மட்டுமே இருந்தது.எதோ ஒன்று அவனை திகைக்க வைத்து கொண்டு இருந்தது என்பது மட்டும் நிஜம்.

“சார்…எனக்கு போர்த் பிளோர் போகணும்.காரிடாரில் தனியாய் போக பயமாய் இருக்கு.மிட் நைட் வேற…ப்ளீஸ் பிரதர் என் கூட துணைக்கு வர முடியுமா?” என்றாள் அஞ்சலி.

“கம் மேடம்…ஐ ஹெல்ப் யு.” என்றவன் அவளோடு மேலே போகும் ஸ்டீல் டூர் லிபிட்டிற்குள் நுழைந்தான்.

அதுவரை பிடித்து இருந்த பெருமூச்சை வெளியிட்ட அஞ்சலி லிப்ட்டின் உள் புறம் சாய்ந்து நின்று கண்ணை மூடி தன்னை சமாளித்து கொண்டாள்.

நான்காம் தளத்திற்கான பட்டனை அழுத்திய மனோஜ் லிப்ட் கதவு மூடும் கடைசி நேரத்தில் லிஃப்டை விட்டு வெளியேறினான்.

“சார்!…சார்!…சார்!..எங்கே போறீங்க?” என்று மூடிய ஸ்டீல் டோரை பார்த்து கத்தினாள் அஞ்சலி.

லிப்ட் மேல் ஏறி மூன்றாம் மாடிக்கும், நான்காம் மாடிக்கும் இடைப்பட்ட இடத்தில் நடுவே ஜெர்க் ஆகி அப்படியே நின்றது.

எமெர்ஜென்சி போன், எமெர்ஜென்சி பட்டன் வேலை செய்யவில்லை.

“காட்! வாட் ஹாப்பெண்ட்!…யாராவது இருக்கீங்களா? இங்கே லிப்ட்டில் நான் மாட்டி இருக்கேன்…ப்ளீஸ் ஓபன் தி டோர்.” என்று லிப்ட் கதவை பலம்கொண்ட மட்டும் தட்டி,தொண்டை கிழிய கத்தினாள் அஞ்சலி.

“நோ ஒன் வில் கம் பேபி…” என்ற குரல் பின்னால் இருந்து கேட்க, துள்ளி குதித்து பயந்து திரும்பினாள்.

அவளும் மனோஜூம் உள்ளே வரும் போது ரெயின்கோட், தொப்பி, கண்களுக்கு கூலர்ஸ் அணிந்து இவர்களுக்கு முதுகு காட்டி நின்றவன் தான் அணிந்து இருந்த தொப்பி, கண்ணாடி, ரெயின் கோட் கழற்றினான்.

“நீ…நீ..நீங்களா!” என்று கௌதமை பார்த்து கையை பிசைந்து கொண்டு நின்றாள் அஞ்சலி.

கால்களை அகற்றி, இரு கைகளை பேண்ட் பாக்கெட்டிருக்குள் நுழைத்து, உதட்டை கடித்து வந்த சிரிப்பை அடக்கியபடி, கண்கள் மின்ன கெளதம் நின்ற தோரணையே அலாதியாய் இருக்க, மீண்டும் அஞ்சலி இதயம் வெகு வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.

முதலில் நீ என்னை கேட்ச் பிடிச்ச. இப்போ ஐ காட் யு( i got you). டூ யு திங்க் தட் யு கேன் அவுட் ரன் மீ பேபி(do you think you can out run me?)” என்றான் தோளை குலுக்கி படு ஸ்டைலாக.

“என்னை விட்டு ஓடி போக முடியுமா

இனி முடியுமா!

 நாம் இருவர் இல்லை

ஒருவர் என்று தெரியுமா?” என்று வேறு பாடி வைத்தான்.

(பாலியல் வன்முறைக்கான 100% பொறுப்பு அதன் குற்றவாளி (கள்) மீது உள்ளது. பாலியல் வன்முறைக்கு எந்தவிதமான காரணமும் இல்லை; அதை ஒருபோதும் நியாயப்படுத்தவோ, விளக்கவோ முடியாது)

“என்ன மிஸ்டர்!… தனியாய் இருக்கும் பெண்ணிடம் என்ன இது!.. என் பெற்றோர்களுக்கும், அண்ணன்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது உங்க தலை கழுத்தில் இருக்காது.

நடந்தது ஆக்சிடென்ட்… லீவு இட் ஆஸ் சச்/leave it as such . இப்படி பேச முயலுவது, பின்னால் வருவது எல்லாம் வேண்டாம்.” என்று பொரிந்தாள் அஞ்சலி.

அஞ்சலி வெகு சீரியஸ்சாய் பேசி கொண்டிருக்க, அதை கேட்ட கெளதம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஹா ஹா ஹா… யுவர் டாட் டெரர்… டேன்ஜர்ஸ் மேன்… சும்மா காமெடி செய்யாதே பேபி. அவர் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கே உன் வீட்டில் நடப்பது, ‘மதுரை ஆட்சி’ என்று.

உன் பிரதர் ரெண்டில் ஒன்று அமுல் பேபி, இன்னொன்று பச்சை மண்ணு…எதற்கு இந்த ஓவர் பில்ட் அப்?” என்றான் கெளதம்.

‘பச்சை மண்ணு’ என்று கிண்டலாக கௌதமால் அழைக்கப்பட்ட ராம்சந்தரின் நிஜ உருவத்தை காலம் கௌதமிற்கு வெளி காட்டியது.

‘முகத்தை பார்த்து ஒருவரை எடை போட கூடாது’ என்பது இதற்கு தான்.

மண்டபத்தில் இருந்து தன் நண்பன் ரூபேஷ் உடன் கிளம்பிய ராம்சந்தர் சந்திக்க சென்றது தன் தங்கையை, அதுவும் ஒரு தனி மாளிகையில் என்பதை மட்டும் கெளதம் அந்த நேரம்  அறிந்திருந்தால் துடித்து போய் இருப்பான்.

ஆம், அஞ்சலியின் ரெண்டாவது அண்ணன் ராம்சந்தர் தன் காதலியான கெளதம் தங்கை தனுஸ்ரீயை, தன் பிறந்த நாளான அன்று, ‘ஸ்பெஷல் பார்ட்டி’ என்று ஒரு மாளிகையில் அன்று சந்தித்து கொண்டு இருந்தான்.

ராம்சந்தர், தனுஸ்ரீ என இருவர் மட்டுமே கலந்து கொண்ட பிறந்த நாள் விழா அது.

அதை மட்டும் அவன் அறிந்திருந்தால், பிற்காலத்தில் நடக்க போகும் பல விபரீதங்களை தடுத்து இருக்கலாமோ!

அஞ்சலியை வெறுப்பேற்ற தான், ‘என்னை விட்டு ஓடி போக முடியுமா?’ என்று கெளதம் பாடியது.

ஆனால், ‘பச்சை மண்ணு’ என்று தான் அழைத்த ராம் சந்தர் மூலமாகவே, தன் காதல் வெளிப்படுவதற்கு முன்பே கருக போகிறது என்பதை கெளதம் அறியவில்லை.

‘ஓட முடியுமா?’ என்று பாடியவனுக்கு பதிலாய் காலம் முழுக்க அவனை காணாமல் இருக்க, அஞ்சலி ஓடி கொண்டே இருக்க போகிறாள் என்பதை அவனிடம் யார் சொல்வது!

இது தான் விதியா!

தென்றலாய், தெளிந்த நீரோடையாய், அமைதியான ஆழ் கடலாய் இருக்கும் தன்னை  ராமச்சந்தர், ‘சூறாவளியாய், ஆழி பேரலையாய், காற்றட்டு வெள்ளமாய்’ மாற்ற போவதை அறியும் சக்தி கௌதமிற்கு இருந்திருக்கலாம்.

இங்கே கெளதம் காதலோடு அஞ்சலியிடம் நெருங்க நினைக்க, அங்கே ராமச்சந்தர் அந்நேரம் தனுவை காமத்துடன் நெருங்கி இருந்தான்.

“லுக் மிஸ்டர்…ஒரு போன் கால் போட்டேன்…என் மொத்த பாமிலி வந்துடும். உங்களை உண்டு இல்லையென்று செய்துடுவாங்க.” என்றாள் அஞ்சலி.

“இசிட்…?எப்படி நடக்கும் பேபி? யு டோன்ட் ஹாவ் யுவர் மொபைல் வித் யு. இதோ டின்னெர் சாப்பிடும் இடத்திலேயே மறந்து வச்சிட்டு ஓடி வந்துட்டே…” என்றவன் அதை தன் சட்டைக்குள் போட்டு கொள்ள அஞ்சலி விழித்தாள்.

‘எப்படி போனாலும் கார்னெர் செய்யறானே!’ என்று தான் அஞ்சலியால் நினைக்க முடிந்தது.

“இப்போ உங்களுக்கு என்ன வேண்டும் மிஸ்டர் கெளதம்?” என்றாள் அஞ்சலி கடுப்பாக.

“யுவர் நேம் பேபி.” என்றான் கெளதம்.

“ஹ்ம்ம் சொர்ணமுகி.” என்றாள் அஞ்சலி.

“ஏன் சந்திரமுகின்னு வைக்கலையா பேபி!  ப்ப்பா… முறைக்காதே டார்லிங்! ஜோ, சோபனா கூட உன் முறைப்புக்கு முன் ஸிரோ டியர்.வாசு மட்டும் உன்னை பார்த்திருந்தார் உன்னை தான் நடிக்க வைத்திருப்பார்.

என்ன கண்ணுடீ உனக்கு! அப்படியே நெஞ்சை என்னவோ செய்யுது… ஏய் அப்படி கண்ணை விரித்து பார்க்காதேடீ… உன் நேம் சொல்லு பேபி…நீ சொல்லும் வரை லிப்ட் கதவு திறக்காது.” என்றான் கெளதம்.

“என் பெயர் அனாமிகா.” என்றாள் அஞ்சலி .

“நாட்டி கேர்ள்… நேம்லெஸ்…யு வாண்ட் டு பி நேம் லெஸ் வித் மீ? சரி நீயாய் பேர் சொல்லும் வரை உனக்கு நான் ஒரு பெயர் வைக்கிறேன். உனக்கு என்ன பெயர் வைக்கலாம்?ஹ்ம்ம்!” என்றவன் அஞ்சலியை மேல் இருந்து கீழ்,கீழ் இருந்து மேலாக அணு அணுவாய் ரசனையாய் பார்த்து வைக்க, அஞ்சலிக்கு அவன் தொடாமலே மூச்சடைத்தது.

அவன் பார்வையின் தீவிரத்தில் குப்பென்று வியர்க்க, சிவந்து போனாள் அஞ்சலி.

“மான், மீன், மின்னல், காந்தம் எல்லாம் கலந்த கண்கள்.

சேரன் வில்லலை தோற்கடிக்கும் புருவம்,

கோவை பழம், ஸ்ட்ராபெர்ரி, தேன், ரோஜா இதழ்கள் கலந்த கலவையாய் உதடுகள்.

வழவழப்பான வெண்ணையில், சந்தனம், தங்கம் கலந்து செய்த யக்ஷிணி சிலையாய் ஜொலிக்கும் உடல்.

தந்தமாய் கை,

தாமரை போல் சிவந்திருக்கும் பாதம்,

கார்மேக கூட்டமாய் கூந்தல்,

பிரமனின் அதி ஸ்பெஷல் படைப்பாய் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்னும் சில,

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு

நடக்கும் பொது துடித்தது எனது நெஞ்சு.

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்

நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்.

தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே

ஆடை என்ன வேண்டுமா!

நாணம் என்ன! வா வா

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்,

முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்,

தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை,

வந்து ஆடச் சொல்லுமே சிந்து மல்லிகை,

உன்னை செய்த பிரம்மனே

உன்னைப் பார்த்து ஏங்குவான்

காதல் பிச்சை வாங்குவான்

இன்னும் என்ன சொல்ல!

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உத்சவம் இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்

இதோ நான் உயிரினில் உன்னை சேர்த்தேன் வா.”

என்று லிப்ட் சுவரில் சாய்ந்தவாறு, ஒரு காலை லிப்ட் சுவரில் வைத்து கெளதம் பாட அவன் குரல் வளத்தில் மெய் மறந்து நின்றாள் அஞ்சலி.

https://www.youtube.com/watch?v=uB76kB4S8ps

“யு நோ இந்த பாட்டை கேக்கும் போதெல்லாம், ‘இப்படி ஒரு பெண்ணை புலமைபித்தன் சார் எங்கு பார்த்திருப்பார்’ என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

ஒருவேளை எழுத்தாளரின் கற்பனையோ என்று கூட நினைத்திருக்கிறேன். அது கற்பனை அல்ல, நிஜம் என்று இதோ உன்னை பார்த்த உடன் தான் புரியுது.” என்றான் கெளதம்.

காதல் கொண்ட மனம் துள்ளினாலும், எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்து கொண்டே இருந்தது அஞ்சலிக்கு.

‘இதுவும் ஒரு பொழுதுபோக்கு, ட்ரிக்…. பெண்களை இப்படி எல்லாம் வர்ணித்தால் அப்படியே விழுந்து விடுவாங்க என்று லூசுத்தனமாய் சொல்லி கொடுக்க தான் சினிமா, தொடர், கதைகள் எல்லாம் வருதே!

அதான் நியூஸில் பக்கம் பக்கமாய் போட்டு இருந்தார்களே! எத்தனை மாடல் உடன் கொஞ்சி குலவுகிறான் என்று. அவங்க அத்தனை பேரிடமும் பயன் படுத்திய அதே ட்ரிக் இங்கே என்னிடம். ச்சே!….

இவன் கிட்டே போய் மனதை கொடுக்க இருந்தேனே!…என் புத்தியை எதனால் வேண்டும் என்றாலும் அடித்து கொள்ளலாம்.’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் அஞ்சலி.

சோசியல் மீடியா கெளதம்,  ‘லீலைகள்’ என்று போட்டு இருந்தவைகளை படிக்காமல் இருந்திருந்தால், கீழே அவளிடம் அவன் நடந்து கொண்டது அவனை மீறிய செயல், தன்னிடம் மட்டுமே அப்படி தன் நிலை இழந்திருக்கிறான் என்பதை அஞ்சலி புரிந்து கொண்டிருப்பாளோ என்னவோ!

கெளதம் காதலால் உருகி கொண்டிருக்க, அஞ்சலி அவன் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் தப்பர்த்தம் கற்பித்து கொண்டிருந்தாள்.

அஞ்சலி மனம் போகும் திசை புரியாதவனாய் அவனும் ஜெட் வேகத்தில் சிலவற்றை செய்து அவர்களுக்கு நடுவே இருந்த அகழியை பெரிதாக்கி கொண்டிருந்தான்.

மனம் விட்டு பேசி இருந்தால் ஒருவேளை அஞ்சலியின் அச்சம், குழப்பத்தை புரிந்து இருப்பானோ என்னவோ!

ஆனால் புதிதாய் வந்திருந்த காதல் மயக்கத்தில், நிதானம் இல்லாமல், பித்து பிடித்து இருந்தவன் அஞ்சலி விலகலை கருத்தில் கொள்ளவே இல்லை.

“சோ பேபி!…இந்த ட்ரெஸ்ஸில் அப்படியே கம்பன் காவியம், ரவி வர்மனின் ஓவியம் மாதிரி இருக்கே. டிவைன் பியூட்டி…அழகு காவியம் நீ பேபி…

உன்னை காவ்யா என்று கூப்பிடவா? இல்லை கவி…அப்படியே கவிதை மாதிரி இருக்கே.” என்றவன் அவனே அறியாமல் அவளின் பாதி பேரை சரியாய் சொல்லி இருந்தான்.

“கவி பேபி…உன் முழு பெயரை சொல்லு மா…” என்றான் கெளதம்.

“வொய் ஷுட் ஐ டெல் யு ?” என்றாள் அஞ்சலி.

“உனக்கு தூக்கம் வருமே என்று பார்த்தேன்…ஆனா பாரு விடிய விடிய இந்த மாமன் கூட பேசிட்டே இருக்கணும் என்ற உன் எண்ணம் எனக்கு பிடிச்சி இருக்கு கள்ளி…எனக்கு கூட இது தோணலை பாரேன். இம்புட்டு ஆசையா கண்ணு இந்த மாமன் மேலே?” என்றான் கெளதம்.

“லிப்ட் ரிப்பேர் செய்தால் தானாய் நகரும். கரெண்ட் வந்தாலும் கூட தான்.” என்றாள் அஞ்சலி.

வாய் விட்டு நகைத்தான் கெளதம்.

“பேபி லிப்ட் ரிப்பேர் ஆகியோ, கரெண்ட் போய்விட்டதாலேயோ நிக்கலை கண்ணம்மா… என் ஆர்டர் பேரில் நிறுத்தியிருக்காங்க…யு சீ எத்தனை நாள் ஆனாலும் நான் சொல்லும் வரை லிப்ட் கதவு திறக்காது.

நீ இந்த லிபிட்டிற்குள் இருப்பதே உனக்கு, எனக்கு, மனோஜ்க்கு மட்டும் தான் தெரியும். உன்னை காணோம் என்று தேடும் உன் பாமிலி கூட வெளியே தான் தேடுவாங்க…எனக்கு உன் கூட இப்படியே இருப்பதில் எந்த ப்ரோப்ளேமும் இல்லை.” என்றான் கெளதம்.

“வெளியே போய் ஹோட்டல் ஓனர் கிட்டே இதை எல்லாம் சொன்னால் என்ன ஆகும் தெரியுமா?” என்றாள் அஞ்சலி.

“ஒன்றும் ஆகாது பேபி. என்னை பற்றி என்னிடமே நீ கம்பளைண்ட் கொடுத்தால் நான் என்ன செய்வேன் பேபி?” என்றான் கெளதம்

“வாட்?” என்று அதிர்ந்தாள் அஞ்சலி.

“பேபி!…இந்த ஹோட்டல் என்னுடையது டியர்…இதன் ஓனர் நான் தான்..” என்றான் கெளதம் அலட்டி கொள்ளாமல்.

‘பெயர் சொல்லிட்டு போயிட்டே இருப்பியா அதை விட்டு …’என்று மனம் கடிக்க, “காவ்யாஞ்சலி” என்றாள் .

“வாவ் …பாரேன் அங்கிள்,ஆன்டி கூட என்னை மாதிரியே பீல் செய்து உனக்கு பெயர் வைத்திருக்காங்க.கிரேட் பீப்பிள் திங்க் அலைக்….டிவைன் பியூட்டி… அந்த நிலா மாதிரியே இருக்கு உன் அழகு. மனசை குளிர்விக்குது”. என்றான் கெளதம்.

“ரொம்ப ரொமான்டிக் நாவல் படிப்பீங்களோ மிஸ்டர் கெளதம்? அதில் தான் பெண்ணை மானே, தேனே, மண்ணாங்கட்டியே என்றெல்லாம் வர்ணிப்பார்கள்.

அவங்க வர்ணிப்பது போல் ஒரு பெண் இருந்தால், ‘முதல்வன் படத்தில் அர்ஜுன் அப்பா வரைவது போல் தான்’ பெண் இருக்கும். நிலாவை பார்த்து இருக்கீங்களா? கூகிள் ஆண்டவரிடம் தேடி பாருங்கஜி …

பள்ளம் பள்ளமாய் இருக்கும்…உங்களுக்கு,உங்கள் ஸ்டேட்டஸுக்கு இது எல்லாம் தேவையா சார்? உருப்படியான வேலை பாருங்க..பெயர் சொல்லிட்டேன்.கதவை திறக்க சொல்லுங்க..” என்றாள் அஞ்சலி.

“வாவ் பேபி…லாஜிக்கா போட்டு தாக்கறே…பட் நான் சொல்வது லாஜிக் இல்லை…மாஜிக்.

ஒவ்வொரு இதயத்திலும் ஒரு முறையாவது தாக்கத்தை ஏற்படுத்தும் உணர்வு. அதை கற்பனையிலாவது வாழ்ந்து விடலாமே என்று தானே அத்தனை கோடி ரொமான்டிக் புக்ஸ் எல்லாம் சேல்ஸ் ஆகுது!கதைகளில் வரும் ஹீரோ, ஹீரோயினாக தன்னை கற்பனை செய்து கொண்டு படிப்பவர்கள் தான் ஏராளம்.

இந்த உணர்வு உள்ளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் இன்னும் எழுத்தாளர்கள் எழுதிட்டே இருக்காங்க…அதனால் தானே நீயும் மேடையேறி ரசிச்சி பாடினே!” என்றான் கெளதம்.

‘தேவையா லூசு உனக்கு!… எதையும் யோசிச்சி செய்யாமல் செஞ்ச பிறகு மாட்டிட்டு முழி… நீ ரசிச்சு பாடியதை வைத்தே உன்னை கார்னெர் செய்யறான்.

ஹேமா உன்னை திட்டுவதில் தவறே இல்லை. இதுவே இன்னொரு பெண்ணை இருந்தால் இந்நேரம் அங்கு நடந்ததற்கே இவன் கன்னத்தை பழுக்க வைத்திருப்பாள்.

பித்து பிடிச்சவ மாதிரி நீ ஸ்டேஜ் ஏறி பாடியது, உன்னை லிப்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.’ என்று மூளை அவளை கிழித்து தொங்க விட்டு கொண்டிருந்தது.

“அந்த பாட்டு என் அம்மாவுக்கு பிடிக்கும் என்று பாடினேன். அங்கு பார்க்கில் நடந்தது ஒரு ஆக்சிடென்ட். நத்திங் எல்ஸ்…லீவ் இட்…” என்றாள் அஞ்சலி.

“கவிமா, இதை நீ எனக்கு சொல்றியா இல்லை உனக்கே சொல்லி கொள்கிறாயா…? நடந்தது விபத்தாய் இருக்கலாம்…ஆனால் என் கா…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மொபைல் ஒலி எழுப்பியது.

“பிரபா!… சாரி டா… உங்க தாத்தா, அப்பா, அம்மா வந்திருக்காங்கடா….வந்த உடனே நீ இருக்கும் லிப்ட் ஏன் ஒர்க் ஆகலை என்று கேக்கறாங்க.

ரவுண்ட்ஸ் வர போறாங்க. இப்போதைக்கு அவங்களை உன் ரூமில் விட்டிருக்கேன். ரவுண்ட்ஸ் வந்தால் கேமரா ரூமிற்கு தான் முதலில் வருவாங்க.

நீ இருக்கும் லிப்ட், போர்த் பிளோர் கேமரா ஆப் செய்து வைத்திருக்கேன். இதெல்லாம் அவங்க கவனத்தில் படாமல் போகாது.” என்றான் மனோஜ்.

“யா…நாளைக்கு தான் வருவாங்க என்று பார்த்தேன்…இன்றே வந்துட்டாங்களா… ஒகே லிப்ட் அபேரட் செய். நான் சொல்லும் போது கேமரா ஆன் செய்.”என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு,

“கவி டியர்…உன் கிட்டே மனம் விட்டு பேசணும் என்று என்னவெல்லாமோ நினைத்து வந்தேன்…பட் இப்போ முடியாது .மார்னிங் பேசலாம்…” என்றான் கெளதம்.

அதற்குள் அஞ்சலியின் தளம் வந்துவிட, லிஃப்டை விட்டு வெளியேற முயன்ற அஞ்சலியின் கையை பிடித்து மீண்டும் இழுக்க, கெளதம் மேலேயே மோதி நின்றாள் அஞ்சலி.

கை வளைவில் அஞ்சலியை வைத்து கொண்டு லிஃப்டை மீண்டும் மூடியவன் அவள் எதிர்பாராத போது மீண்டும் அவள் இதழுடன் அறிமுகம் ஆனான்.

இதழ் இதழோடு தேடலில் இருக்க, கெளதம் கைகள் அவள் உடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

(சில குறுகிய வினாடிகளில் ,உன் காமத்திற்கு நான் பலியானேன்.

அந்த கணத்திலிருந்து, என் வாழ்க்கை என்னுடையதல்ல

நான் முன்பு அறிந்த எல்லாவற்றையும் திடீரென மாற்றிவிட்டது உன் செயல்

அன்று நான் எப்படி உணர்ந்தேன் என்பது யாருக்கும் புரியாது,

நான் கடந்து வந்த திகில் நிமிடங்களை சொல்லும் என் வற்றாத கண்ணீர்

திடீரென்று உன்னால் பிடிபட்டு, உன் வெறிக்கு பலியானது என் பெண்மை ,

தப்பிக்க எந்த வழியும் இல்லை,

என் கதறலுக்கு செவி சாய்க்க யாரும் இல்லை,

என் மானத்தை காக்க எந்த கண்ணனும் ஓடி வரவில்லை.

நான் பறக்க முயன்றேன், ஆனால் என் இறக்கைகள் உன்னால் உடைக்கப்பட்டன.

என் மனம் பயத்தால் நிறைந்து கிடக்க , உன் கண்கள் காமத்தால் மின்னின.

நேர்த்தியான முத்து போன்ற என் கண்ணீர் உன்னை சுடவில்லை.

என்னுள் இருக்கும் வாழ்க்கையை உறிஞ்சும் வெற்றிடத்தைப் போன்றது உன் தொடுகை .

பெண்ணை தொடுபவன் எல்லாம் ‘ஆண்’என்று மூடத்தனமாய் நினைத்து கொண்டு இருக்கும், 
உன் புத்திக்கு எங்கே எட்ட போகிறது பெண்மையின் மேன்மை.

அதை சிதைக்க துணிந்து, நெருங்கும் நீ அறியவில்லையா
உன்னை பெற்றவளும் ஒரு பெண் தான் என்பதை

உன் காதுகள் அகலமாக திறந்திருந்தன, ஆனால் என் மன்றாடல்கள்  அதில் சேரவேயில்லை.

பல இரவுகள் உறங்கா இரவுகளாய், நரக வேதனையில் கழிந்தது

நான் குற்றமற்றவள்… ஆனால்

உன் குற்றங்களுக்கு தண்டனை தினம் என்னோடு

ஒரு கணம் நீ நிதானித்து இருந்தால்

அந்த இருளில்  ஒரு பொருளாய் உன்னால் சிதைந்து இருக்க மாட்டேன்.)-

கௌதமை பொறுத்தவரை அஞ்சலி அவன் மனைவி. அவன் உயிர், பெட்டெர் ஹாப், அவனுக்காகவே உருவாக்கப்பட்ட அவனின் மறுபாதி. ‘தன்னுடையவள்’ என்று மனம் ஏற்று கொண்ட பிறகு அவளை விலக்க அவனால் முடியவில்லை.

அவனை போலவே பார்த்த சில நொடிகளில் காதல் வயப்பட்டு, ‘அவனாகி’ நின்றவள், மேடையேறி தன் காதலை பிரகடனப்படுத்தியவளின்  தற்போதைய குழப்பமான மனநிலையை கெளதம் அறிந்திருக்கவில்லை.

புதிதாய் பிறந்த காதல், அது தந்த மயக்கம், நள்ளிரவு, தனிமை, கையில் அழகான காதலி, என்று ஒருவித போதையில் கெளதம் தன் வசம் இழந்து கொண்டிருந்தான். அஞ்சலியின் நிலையும் அதுவாக தான் இருந்தது.

முதலில் தன்னிலைக்கு வந்த கெளதம் அவள் கழுத்தின் வளைவில் முகம் பதித்து தன்னை சமாளிக்க முயன்றான்.

“பேபி!…” என்றவனின் குரல் அவனுக்கே கேட்கவில்லை. அதில் அத்தனை ஏக்கம், காதல்.

“ஹ்ம்ம்!’ என்று மட்டும் பதில் வந்தது அவன் கை வளைவில் கண் மூடி நின்ற அஞ்சலியிடம் இருந்து.

“கவி!…ஏண்டீ இவ்வளவு அழகாய் பிறந்தே?…ஏண்டீ என் கண்ணில் பட்டே? இப்படி முழு கன்ட்ரோல் இழக்க வைக்கிறேயேடீ …

உன்னிடம் மட்டும் எப்படி இப்படி எல்லாம் நடப்பது சரியாய் தோன்றுகிறது? நீ இல்லாமல் எப்படி இத்தனை வருடம் உயிர் வாழ்ந்தேன்?

பேபி!… ஐ நீட் யு பாட்லி இன் மை லைப்…..நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது…ஐ ல.. :என்று அவன் மீண்டும் தன் காதலை சொல்வதற்குள் விதி மீண்டும் மனோஜ் மூலமாய் அழைப்பை விடுத்தது.

“ச்சே நீ கிளம்பு கவி…நீ ரூமிற்கு போ…பத்திரமாய் நீ போன உடன் நான் என் அறைக்கு போகிறேன்…” என்றவன் மீண்டும், மீண்டும் அவளை விட, மனம் இல்லாதவனாய் அவளை இழுத்து அணைத்து முத்தம் இட்டான்.

“காட்!… கிளம்பு பேபி…மொத்த கண்ட்ரோல் போகுது….போய்டு…கோ அவே …இல்லையென்றால் உன் அறைக்கே வந்துடுவேன்…போய்டு.” என்றவன் அஞ்சலி தன் அறைக்கு செல்வதை பார்த்த வண்ணம், லிப்ட் கதவை பிடித்து நின்று இருந்தான்.

அஞ்சலி தன் அறை கதவை திறந்து விட்டு பின்னால் திரும்பி பார்க்க, கெளதம் லிஃப்டை விட்டு வெளியே கால் எடுத்து வைக்க, சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டு கொண்டாள்.

“ராட்சசி!…மோகினி பேய்!…. யப்பா!… கண்ணா அது…. வேண்டாம் கெளதம் வேண்டாம்… தண்ணீர் பஞ்சம் இருக்கும் சென்னையில் அவளை நினைத்து கொண்டே இருந்தே உனக்கு அடிக்கடி கோல்டு ஷவர் தேவைப்படும்… வேண்டாம் ” என்றவன் மீண்டும் அழைப்பு வர.

“யா… யா… நான் என் ரூமிற்கு வந்துட்டேன்…லிப்ட், கேமரா ஆன் செய்.” என்றவன் தன் அறையில் காத்திருந்த குடும்பத்தை காண சென்றான்.

“ஹாய்! என்னமா இவ்வளவு சீக்கிரம் வந்துடீங்க? ஆமா அந்த வாலு தனு எங்கே?’ என்றான்.

“ஏதோ காலேஜ் டூர் என்று கோவா போய் இருக்கா. மூன்று நாளில் வந்திடுவா.” என்றார் அவன் அன்னை.

“என் கிட்டே சொல்லாம போக மாட்டாளே!.” என்று யோசித்தான் கெளதம்.

அது இன்னும் பலமாய் இருந்திருந்தால், தன் தங்கை இன்னும் குழந்தை இல்லையென்பதை புரிந்து கொண்டு, கவனித்து இருந்தால் பல விபரீதம் நடப்பதை தடுத்து இருக்கலாம்.

தங்கை கோவா டூர் போகவில்லை, அதே சென்னையில் தான் மூன்று நாளும் இருந்திருக்கிறாள் என்பதை காலம் அவனுக்கு உணர்த்தும் போது எல்லாம் அவன் கையை மீறி போய் இருந்தது.

இதயம் சமர்ப்பிக்கப்படும்.

 

 

 

 

 

 

 

 

Written by

அன்புள்ள சகோதர/ சகோதரி, உங்கள் நட்பு கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள். என் பெயர் அனிதா ராஜ்குமார்.கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழ் கதாசிரியராக இருக்கிறேன். அமேசான் கிண்டல், sm tamilnovels தளத்தில் என் எழுத்துக்களை நீங்கள் படிக்கலாம். எனக்குத் திருமணம் ஆகி விட்டது.கணவர் MR. B. ARUN KUMAR BALAKRISHNAN superintendent, INTELLIGENCE WING, MINISTRY OF FINANCE/ uniformed officer ஆக மத்திய சர்காரில் பணி புரிகிறார். அதங்கோ மத்திய அரசாங்கத்தின் காவல் துறை என்று கூடச் சொல்லலாம். சொந்த ஊர் காஞ்சிபுரம். என் முதல் நாவல் 'என்ன தவம் செய்தேன் ' ஹியூமன் டிராபிக் பற்றியது, என் நான்காவது நாவல், ஆசிட் அட்டாக் victim பற்றியது 'சமர்ப்பணம்' ரெண்டிற்கும் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியர் என்ற விருதாய், துருவ நட்சத்திரம் என்ற விருது ஆன்லைன்னில் வழங்கப் பட்டது. இது வரை ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன். 1.என்ன தவம் செய்தேன் 2. காஞ்சி தலைவன் 3.ஊரு விட்டு ஊரு வந்து 4.சமர்ப்பணம் 5.உயிரோடு விளையாடு -முத்த பாகம் 6.உயிரோடு சதிராடு - விரைவில் ஆரம்பிக்கப் படும். இதுவரை அமேசானில் 3 நாவல் ebook வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மூன்று நாவல் விரைவில் வெளியிடப்படும். நீங்கள் நீட்டிய நட்புக்கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதர/ சகோதரி. https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1634620509&sr=8-1 அன்புடன் உங்கள் சகோதரி Mrs.அனிதா ராஜ்குமார். (tamil novelist-amazon kindle and smtamilnovels.com)

error: Content is protected !!