சமர்ப்பணம் 17

சமர்ப்பணம் 17

(வியன்னா பிரகடனம் மற்றும் செயல் திட்டம் பாலியல் அடிமைத்தனத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு சர்வதேச முயற்சியைக் கோருகிறது, பாலியல் அடிமைத்தனம் என்பது மனித உரிமைகளை மீறுவதாகும். பாலியல் அடிமைத்தனத்தின் சம்பவங்கள் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் யுனெஸ்கோவால் ஆய்வு செய்யப்பட்டு அட்டவணைப்படுத்த பட்டுள்ளன) 

(நோபல் பரிசு பெற்ற மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் தன்னார்வ தொண்டு நிறுவனம், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகளாவிய மார்ச், பெண்கள் மற்றும் பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கறுப்புப் பணம் 35 பில்லியன் டாலர் என்கிறார், ஆனால் சேதம் பணத்தை விட அதிகம்)

அஞ்சலியின் பேச்சைக் கேட்டவர்கள் திகைத்துத் தான் நின்றார்கள்.

அஞ்சலி சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது.நம் குடும்பங்கள் இன்றைய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத பிரச்சனை.

‘ஜஸ்ட் லைக் தட், ஒன்றும் இல்லை ‘என்று பெற்றோர்கள் சொல்லிவிடும் பிரச்சனை.

காதல் தோல்வி.

உடைந்த போன மனதை சரி படுத்த முயலாமல், இருவரை இல்லறம் என்னும் கடலில் தள்ளி விட்டு, ‘முடிந்தால் நீந்திக் கரை ஏறுங்கள், இல்லை மூழ்கி விடுங்கள்’ என்று சொல்லப் படுவது.

உடல் காயம்போல் இதயத்தின் காயமும் வெளியே தெரியும் ஒன்றாக இருந்திருந்தாலாவது, இந்தக் காயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கும்.

பேச முடியாதவர்களின் உணர்வுகள்போல் இதயத்தின் காயமும் மற்றவர்களுக்குப் புரியாமல் தான் போய் விடுகிறது.

தனுவிற்கு கிடைத்த ஆறுதல், தோழமை, தோள் பல குடும்பங்கள் தருவதில்லை.

அஞ்சலி பேச்சில் இருந்த உண்மை புரிந்தாலும், விஷ்ணுவின் காதல் கொண்ட மனதால் காதலியின், மனைவியின் இந்தப் புறக்கணிப்பை தாங்க முடியவில்லை.

விஷ்ணுவும் எத்தனை காலத்திற்கு தான், ‘ராம்மிற்கு மாற்று’ என்ற நிலையில் இருப்பான்.

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்னரே சொல்லப்பட்டது தான் என்றாலும், நிஜமாய் நடக்கும்போது அந்தப் புறக்கணிப்பு இதயத்தை உயிர் இருக்கும் போதே பிய்த்து எறியும் அளவிற்கு அல்லவா வலியைத் தருகிறது.

உயிர் அற்ற பொருட்களின் பாகங்களைக் கழற்றி ரிப்பேர் செய்வது போல், கரும்பலகையில் எழுதியதை அழித்து விட்டு மீண்டும் எழுதுவது போல், இந்த இதயத்தையும், அதில் பதிந்துள்ள நினைவுகளையும் முழுதாய் அழித்து விட்டுப் புதிதாய் சேர்க்கும் வசதி இருந்திருந்தால் இப்படியெல்லாம் பிரச்சனை வராது தான்.

தனுவின் கண்கள் கண்ணீரை உகுத்து கொண்டிருக்க, அதைக் கண்ட விஷ்ணுவின் இதயம் வலிக்கச் செய்தாலும், தனு ரெண்டில் ஒன்று என்று இனியாவது முடிவு எடுக்க வேண்டும் தானே என்று விஷ்ணு இதயம் கேள்வி கேட்க, புலம்பிய மனதை ஒரு தட்டு தட்ட அது அடங்கி விட்டது.

“நீ எவ்வளவு தான் சொல்லு அஞ்சலி. இவ இன்று செய்ததற்க்கு எந்தச் சமாதானமும் சொல்ல முடியாது… அவள் கழுத்தில் உள்ள திருமாங்கல்யத்தின் உன்னதத்திற்கும் மதிப்பு தரவில்லை, என் காதலையும் உணரவில்லை, வாழ்க்கை எது என்றும், எது நிரந்தரம் என்றும் புரியவில்லை.

‘நீ தேடி போவது கானல் என்று சொல்கிறோம். இல்லை அதைத் தான் தேடுவேன் என்று சொல்கிறாள்’. என்னால் இதை எல்லாம் இனி ஏற்று கொள்ள முடியாது.

இத்தனை வருடம் இவளுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் செய்து விட்டாள். இன்று, நாளை உணர்வாள் என்று நான் காத்து இருந்தது எல்லாம் வீண்.

இதோ பேப்பர் கையெழுத்து போட்டு, நான் கட்டிய தாலியை கோயில் உண்டியில் போட்டு விடட்டும். அவளின் ராம் எங்கு இருக்கிறான் என்று சொல்கிறேன்.” என்று மற்றவர்கள் திக்ப்ரமை பிடித்து நிற்கும் போதே வீட்டை விட்டுச் சென்று விட்டான் சாதனாவுடன்.

கால்கள் வலுவிழக்க, சென்ற விஷ்ணு பின்னல் கூடப் போக முடியாதவளாய் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள் தனு.

அங்கிருந்தவர்களுக்கு தனுவிற்க்கும் சாதனாவிற்கும் அந்த நொடி வித்தியாசம் தெரியவில்லை.சின்னக் குழந்தை ஒன்றின் மனநிலையில் தான் தனு இருக்கிறாள் என்று அவர்களுக்குப் புரிந்து போனது.

தனுவின் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் அது பாதிக்கப்பட்ட மனது.

யாரின் மீதாவது தன் கோபத்தை காட்ட வேண்டிய நிலையில் ராம் கிடைக்காததால், அவன் தங்கை அஞ்சலிமீது வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறாள் என்று அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.

பிரிக்கவே முடியாத பந்தம் தான் திருமணம் என்றாலும், மனம் நொறுங்கி இருக்கும் வேளையில் தெளிவாகச் சிந்திக்க, எது முக்கியம் என்று முடிவு எடுக்க, ஒன்று நம்முடன் இல்லாமல் போனால் அதைத் தாங்க முடியுமா என்று யோசிக்க விலகி இருப்பதும் சரி தான்.

விஷ்ணு அப்படியெல்லாம் தனுவை விட்டு விலகி விடமாட்டான் என்று அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.தனு நடக்கும் பாதையைப் பூக்களால் அலங்கரித்து, அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் விஷ்ணு தான் அவளை விவாகரத்து செய்கிறானாம்.

போகும்போது தனுவை மிகப் பாவமாக விஷ்ணு பார்க்க, அதைக் கண்டவர்களுக்குச் சிரிப்பு தான் பொத்து கொண்டு வந்தது.

‘போ எனக்குப் பொம்மை வேண்டாம்.’ என்று கைக்காலை உதைத்து கொண்டு செல்லும் ஒரு குழந்தைபோல் தான் விஷ்ணுவின் செய்கை இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது.

இதை வெளியே சொன்னால் யோசிக்கும் தனு மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவாள் என்பதால் முயன்று முகத்தைச் சரி படுத்தி கொண்டார்கள்.

‘இது மனம் சம்பந்தப்பட்டது. இந்த ஷாக் கூடத் தனுவிற்கு இப்பொழுது தேவை தான். கையில் இருக்கும் பொருளின் அருமை, அருகே இருக்கும் மனதின் உன்னதம், சில சமயம் தெரியாமல் தான் போகும். கொஞ்சம் யோசிக்கட்டும்.’என்று நினைத்துக் கொண்ட அஞ்சலி,

“இங்கே பார் தனு, கட்டி கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த அறிவுரையும் ரொம்ப நாள் வராது என்று பெரியவங்க அப்பவே சொல்லிட்டாங்க. இது உன் வாழ்க்கை. நீயே முடிவெடு.

‘நீ வேண்டாம்’ என்று போய் விட்ட ராமால், உடைந்து போகாமல் நீ நிமிர்ந்து, இன்னொரு வாழ்க்கை வாழத் தொடங்கியது பாராட்டக்கூடிய ஒன்று.

காதலித்து, திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து, தேவைகள் தீர்ந்த பின் விலகுவதும் சட்டத்தின் படி கற்பழிப்பு தான், அங்குப் பெண்ணின் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

இதே கொடுமைகளை அதற்கு மேலும் என்று தினமும், ‘லைப் கேருக்கு’ வந்து சேரும் பெண்களின் நிலையைப் புரிந்து யோசித்து பார். நீயே யோசி.

ராம் என்பவன் முடிந்து போன அத்தியாயம்.

அவன் பக்கங்களை மீண்டும் தொடர போகிறாயா இல்லை ஏற்கனவே உன் கணவன், உன் குழந்தை என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறாயா!

ராம் என்ற மூடிய கதவுக்குப் பின்னால் எத்தனையோ வக்கிரங்கள் இருக்க வாய்ப்புண்டு. இந்தா விஷ்ணு கொடுத்த விடுதலை பத்திரம்.

உனக்கு ராம் தான் வேண்டும் என்றால் இதில் கையெழுத்து போட்டு, விஷ்ணு அண்ணா சொன்னது போல் செய்துடு… அவராவது இன்னொரு பெண்ணுடன் வாழட்டும்.

விஷ்ணுவிற்கு இந்த அளவிற்கு கோபம் வந்து இத்தனை வருடத்தில் நாங்க யாருமே பார்த்ததில்லை.அவனே கோப பட்டுக் கிளம்பி செல்கிறான் என்றால் நீ எந்த அளவிற்கு அவன் மனதை காயபடுத்தி இருக்க வேண்டும் என்று யோசி.

யாருக்கும் கிடைக்காத கணவன் உனக்குக் கிடைத்து இருக்கிறது தனு. என் அண்ணன் என்பதால் சொல்லவில்லை. உனக்கே நான் என்ன சொல்கிறேன் என்பது புரிந்து இருக்கும்.

நீ உன் ராமுடன் சென்று பத்தோடு பதினொன்றாக வாழலாம் அவன் அந்தப்புர அரணங்குகளுடன்.யோசி.” என்றாள் அஞ்சலி.

தனு திக்ப்ரமை பிடித்தவளாய் அப்படியே நிற்க, குழந்தையுடன் வெளியேறிய விஷ்ணுவை, சமாதான படுத்த மற்றவர்கள் அவன் பின்னால் செல்ல, மனபாரம் தாங்க முடியாதவளாய் அந்த மாடியில் இருந்த தோட்டத்தின் ஊஞ்சலில் கண் மூடி அமர்ந்தாள் அஞ்சலி.

கண்கள் மூடியிருக்க மனம் பலவற்றை சிந்தித்து உலைக்களமாய் கொதித்து கொண்டிருந்தது அஞ்சலிக்கு.

ராம் எங்கே, அவனுக்கு என்ன ஆனது என்று என்று அறிந்தவர் வெகுசிலர்.

ராம் உயிரோடு தான் இருக்கிறான்.

ஆனால் தனு, கெளதம், இரு குடும்பமும் நினைத்துக் கொண்டு இருப்பது போல்  ராம்சந்தர்   ட்ரக் ஆட்டிக்ட், குடிக்காரனாய், ஸ்திரி லோலானாய் அல்ல அவன் வாழ்ந்து கொண்டு இருப்பது.

அதை இவர்களிடம் சொல்லியும் புரிய வைக்க முடியாது.

ஆனால் அவன் உயிரோடு இல்லை என்று ஒரு மாய திரையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில்அவர்கள் இருந்தார்கள்.

ஏனென்றால், ‘இன்னும் ராம் உயிருக்கு ஆபத்து’ இருக்கிறது.

அதற்குக் காரணம், ‘கெளதம் தான்’ என்ற தகவலும் உண்டு என்றாலும் இந்த எஸ்க்ஸ்ட்ரீமிற்கு எல்லாம் கெளதம் செல்வான் என்பதை நம்ப அஞ்சலி தயாராய் இல்லை.

கெளதம் காரணமாய் இருக்கலாம், ராம்மை கெளதம் வெளுத்து வாங்குவதை நேரிலேயே கண்டு இருந்தாலும், அஞ்சலியால் கெளதம் மேல் சந்தேகம் கொள்ள முடியவில்லை. நிறைய விஷயங்கள் முடிச்சு அவிழ படாமல் அப்படியே நின்றது.

ராம் சென்னையில் இவர்கள் கண்பார்வையில் தான் இருக்கிறான்.

ஆனால் எங்கிருக்கிறான் என்பதை தெரிந்தவர் ஐவர் மட்டுமே.அதில் ஒருத்தர் இப்பொழுது உயிரோடு இல்லை.

ராம்மை அவன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து மறைத்து வைத்தவர், ‘லைப் கேர் நிறுவனர் சிவகுரு நாதன் அய்யா’ தான். சிவசாமி அய்யாவின் அப்பா.

முதல் விஷயம் ராமச்சந்தர் இன்று இந்த நிலையில் இருக்க யார் காரணம்!

கெளதம் பிரபகரா இல்லை வேறு ஒருத்தரா

எந்த நிலை….. அதைச் சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடைக்காது தான்.

ரெண்டாவது எதற்காக ராம்மை கொல்ல தேடி கொண்டிருக்கிறார்கள்?

மூன்றாவது ராம் உயிரோடு இருப்பதே, இந்த ஐவரை தவிர மற்றவர் அறியாதபோது, அஞ்சலி ராம்மோடு தொடர்பில் இருக்கிறாள் என்ற விவரம் கௌதமிற்கு எப்படி தெரிய வந்தது?

நான்காவது ராம் எப்படிப்பட்டவன் என்ற போலி பிம்பம் எதனால், யாரால் உருவாக்கப் பட்டது?

ஏனென்றால் தகுந்த புகைப்பட, வீடியோ ஆதாரத்துடன் கெளதம், ராம்சந்தரை பற்றித் தனுவிடம் கூறியது அனைத்துமே கட்டுக்கதை.

பார்ட்டி, பப் என்று செல்வான். குடி, ஸ்மோக்கிங், ட்ரக்ஸ் உண்டு என்றாலும் பெண்களிடம் அவன் வரம்பு மீறியதே இல்லை என்னும்போது ராம்சந்தரை முற்றிலும் தப்பானவனாய் காட்டுவதால் யாருக்கு என்ன லாபம்?

ஐந்தாவது திருமணம் நிச்சயம் ஆன மூன்று மாதத்தில் ராமிற்கும், தனுவிற்கும் அடிக்கடி சண்டை வரக் காரணமாய் இருந்த போட்டோ, வீடியோ எல்லாம் தனுவிற்கு யார் அனுப்பியது? இவர்களுக்குச் சண்டை வரக் காரணம் என்ன?

ஆறாவது ஒரு மந்திரியின் மகனோடு ஒரு பெண் விஷயத்தில் மிகப் பெரிய சண்டை வந்தது ராம் நண்பன் திலீப்பிற்கு.

tamil side actorsக்கான பட முடிவுகள்

ராம் இன்று இந்த நிலையில் இருக்க காரணமான அந்த நாளில் உடன் இருந்தவன் அந்தத் திலீப்.

இவனை டார்கெட் செய்ய வந்து விட்டு, ஆள் மாற்றி ராம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்களா! திலீப்பிற்கு பதில் ராம் இன்று இந்த நிலையில் இருக்கிறானா!

நிறைய விடை தெரியா கேள்விகள்.

பலபேர் பலவிதமாய் முயன்று விட்டனர். ஆனால் எதற்குமே பதில் தான் இன்றுவரை கிடைக்கவில்லை.

தன் எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவள், ‘இப்படியே அமர்ந்து இருந்தால் வேலைக்கே ஆகாது’ என்று கிளம்ப நினைக்க, அப்பொழுது தான் அந்தப் பேச்சுக் குரல் கேட்டது.

“எப்படி திரும்பவும் இப்படி நடந்தது! அந்த அஞ்சலி ஒரேடியா கௌதமை விட்டு விலகிட்டா, அவனை மணக்கலாம் என்று நாம் போட்ட பிளான் எல்லாம் எப்படி சொதப்பிடுச்சு… ச்சே.” என்றது ஒரு பெண் குரல் – பிங்கியின் குரல்.

“நானும் தான் முதலில் இந்த அஞ்சலியைக் கவர் செய்ய முயன்றேன். அந்தப் பக்கம் தனுவை சுத்தி சுத்தி வந்தேன். முதல் முறை, அந்த ராம் பிசாசு உடன் லிங்க் ஆகிட்டாளே என்று கடுப்பு ஆகி போனேன்.” என்றான் அவன் ரூபேஷ்.

“நான் மட்டும் என்ன தனு மொபைல் போனிற்கு அந்த ராம் பார்ட்டி, டான்ஸ் என்று இருப்பதை, குடித்து விட்டு மட்டையாகி இருப்பவன் அருகில் மிகவும் நெருக்கமாய் இருப்பது போல் எல்லாம் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தேன்.

ஒரு விதத்தில் ராமை மணக்க அந்த போட்டோ, வீடியோ எல்லாம் காட்டி ரகளை செய்து திருமணம் முடிக்க தான் பிளான் போட்டு வைத்திருந்தேன். ஆனால் அது அவனுக்கும், தனுவிற்கும் அடிக்கடி சண்டை வர யூஸ் செய்ய முடிந்தது.

சண்டை பிரிஞ்சி தொலையுங்க என்று பார்த்தால் மணமேடை ஏறிட்டாங்க.” என்ற பிங்கியின் குரலில் அத்தனை வன்மம்.

“அதை விடு நாம எதிர் பார்த்த படியே ராம் எஸ்கேப் ஆகிட்டானே, சரி அடுத்த சான்ஸ் நமக்கு தான் என்று ஹாஸ்பிடலில் காத்து இருந்தா, விஷ்ணு வந்து அவளை தட்டிட்டு போய்ட்டான்.” என்றான் ரூபேஷ்

“அதற்கு தானே அவள் தோழி போல் பழகி, தனுவிற்கு இன்னும் ராம் மேல் வன்மம் இருப்பது போல் பேசி,  அவளை இன்னும் உசுப்பேத்திட்டே இருக்கேன்.

அவளே மறக்கணும் என்று நினைத்தாலும் விட மாட்டோம் இல்லை. இதோ பார்த்தே தானே நாம உள்ளே வரும் போது விஷ்ணு பொட்டி படுக்கையுடன் கிளம்பிட்டான்.

இனி உன் ரூட் கிளியர். நீ தான் நல்லவன், வல்லவன், அந்த ராம் பேச்சை கேட்டு தான் பெண்களிடம் தவறாய் நடந்தே என்றெல்லாம் பேசி எல்லோரையும் நம்ப வைத்தாகி விட்டது.” என்றாள் பிங்கி.

“ஒரே வீட்டில் தனு, அஞ்சலி என்று ரெண்டு பேரையும் இனி கரெக்ட் செய்வது சுலபம். அஞ்சலிக்கு ஏற்கனவே கெளதம் தான், ராம் இந்த நிலைக்கு காரணம் என்று சின்ன சந்தேகம் இருக்கு. அதை ஊதி ஊதி பெருசாக்கிட வேண்டியது தான்

ஏற்கனவே கெளதம், அஞ்சலிக்கு அவள் அண்ணன் இருக்கும் இடம் தெரியும் என்று பொய்யை பரப்பி விட்டது நாம் தானே. திருமண மண்டபத்தில்  நீ பார்க்கவேயில்லையே செம்ம ஸீன்.

ஆனா என்ன கெளதம் வெளியேறி இருந்தால், ‘அஞ்சலிக்கு வாழ்க்கை நான் தரேன்’ என்று நான் போடுவதாய் இருந்த ட்ராமா அஞ்சலி ஓடி போனதால் ஊத்திக்கிச்சி.

சரி சரி… அந்த தனு அங்கே தனியா இருக்கா பாரு போய் அவள் புத்தியை குழப்பி விடு. எத்தனை கோடி சொத்து?” என்று பேசியவாறு அவர்கள் பிரிந்து செல்ல, அஞ்சலி முகம் தீவிர யோசனையில் இருந்தது.

நிறைய குழப்பத்திற்கு இந்த ரெண்டு ஜந்துகள் தான் என்று புரிந்து போனது.

‘ஒரு ரிப்போர்ட் நம்பும் நீங்கள் என்னை நம்பவில்லையா?’ என்று ராம் அன்று கேட்ட கேள்விக்கு விடை இதோ.

அவர்களை அங்கேயே கொல்லும் வெறி வந்தாலும், இவர்கள் ஏற்படுத்தியுள்ள இடியாப்ப சிக்கலை எல்லாம் எப்படி அவிழ்ப்பது,அது தான் இப்போ முக்கியம்…எங்கே போய்ட போறாங்க….’ என்று நினைத்த அஞ்சலி, மனதில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசனை உருவாகியது.

இதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று யோசனை ஓட, தன் அறைக்கு திரும்பியவள் தன் மொபைல் எடுத்து யாருக்கோ அழைத்து பேசி விட்டு தனு அறைக்குள் சென்றாள்.

“என்ன தனு எப்படி சொல்லிட்டு போறாரே என்று யோசிக்காதே… நீ இன்று குனி குறுகி நிற்க காரணம் அந்த ராம் தான்.

அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் விட்டால் எப்படி!1 இப்படி உன் குடும்பத்தின் முன் தலை குனிந்து நீ நிற்க யார் காரணம்? யார் முகத்திலாவது முழிக்க முடிந்ததா உன்னால்?” என்று உறு ஏற்றி கொண்டிருந்தாள் பிங்கி.

பிங்கி தேவநாயகம் செய்த மிக பெரிய தவறுகளில் இவளும் ஒன்று. ஆறடி உயரத்தில், 68 கிலோ எடை.

கூனி, சகுனி, மன்தாரை எல்லாம் இவளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு வஞ்சம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம், அகம்பாவம், திமிர், தான்தோன்றி தனம் என்று மொத்த கேட்டதை நிரந்தர குத்தகை எடுத்து இருக்கும் மனித வடிவில் உள்ள அரக்க ஜென்மம்.

முதலில், ‘ராம், ராம்’ என்று அலைந்து கொண்டிருந்தவள் அவன் காணாமல் போன உடன், கௌதமிற்கு பெரிய மனது செய்து வாழ்க்கை தர முன்வந்திருக்கும் வள்ளல்.

பாவம் பிங்கி அறியாத ஒன்று கெளதம் என்பவன் அஞ்சலி என்ற உயிரை கொண்டு வாழ்பவன்.

இவளின் ஆண்பால் இவன் அண்ணன் ரூபேஷ்.

” என்று என் அண்ணி,  குனி குறுகி நின்று இருக்கிறாள் பிங்கி! இவள் தலை குனிய என்றுமே இவள் குடும்பமோ, விஷ்ணுவோ விட்டதே இல்லையே!

யார் முகத்திலும் முழிக்க முடியாத அளவுக்கு தனு என்ன செய்தாள்! மத்தவங்க குடும்பத்தில் இரக்கமே இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தினாளா, இல்லை இன்னொருத்தர் புருசனுக்கு ஆசை பட்டாளா!

இல்லை உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைத்து காய் நகர்த்தினாளா!

அவள், ‘முதல் கணவன் ராம் உடன்’ அவள் வாழ்ந்தாள். இன்று ராம் இறந்து விட்டான். அவனோடு வாழ்ந்தது, ‘கானல் கவிதை’ என்றாலும் தனு உண்மையாக தானே இருந்தாள்.

இன்று அந்த முதல் கணவன் இறந்த உடன் ரெண்டாவது திருமணம் செய்திருக்கிறாள்.

அன்பான கணவனும், ஆசைக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் அவள் தலை குனிய என்ன இருக்கிறது?” என்றாள் அஞ்சலி மிக நிதானமாய்.

அஞ்சலியின் இந்த பேச்சிலே பிங்கி திகைத்தாள் என்றால், “எனக்கு ஒரே புருஷன் தான் அஞ்சலி. அது என் விஷ்ணு மட்டும் தான்.”  என்ற தனுவின் பேச்சை கேட்டு தலை சுற்றி போனது.

தனுவின் அந்தப் பேச்சை அஞ்சலி எதிர்பார்த்திருக்கவில்லை.

தனு யோசிக்க ஆரம்பித்து விட்டாள் என்பது புரிந்து விட, அஞ்சலி தன்னையும் அறியாமல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்.

பிங்கி அதிர்ந்து எழ, “போ பிங்கி, போய் வேலை வெட்டி எதாவது செய். நாளை திருமணம் நடக்க வேண்டிய பெண் நீ.

இப்படி இன்னொருத்தர் வீடே கெதி என்று இருப்பது பார்ப்பவர்களுக்கு உன் மேல் தப்பான எண்ணத்தை கொடுக்கும்.

வேதநாயகம் அய்யாவின் கடுமை எல்லோருக்கும் தெரிந்ததே. உன் அம்மா கவன குறைவால் கார் ஒட்டி ஒரு உயிர் போனதற்கே, அவங்களை உள்ளே தூக்கி போட்டவர். தவறு யார் செய்தாலும் தண்டனை கொடுக்க தயங்காதவர்” என்று இவள் பேசி கொண்டிருக்க,

“என்ன மருமகளே, என் பெயர் அடிபடுது… இப்போ தான் கேள்வி பட்டேன். கடைசியில் எம்மவன் கெளதம் தடாலடியாய் உன்னை திருமணம் செய்து கொண்டானாம்.

இப்போ தான் கேக்க சந்தோசமாய் இருக்கு. ஆமா நீங்க ரெண்டு பேரும் இங்கே என்ன செய்துட்டு இருக்கீங்க?” என்று மகனையும், மகளையும் பார்த்து கேக்க, ஏதோ உளறி விட்டு அவர்கள் அங்கிருந்து ஓடி போனார்கள்.

telugu villain actorsக்கான பட முடிவுகள்

தனுவும், அஞ்சலியும் அவருக்கு பிடித்த உணவுகளை பரிமாற வயிறார உண்ட அவர், “எங்கே ஒருத்தரையும் காணோம்.” என்றார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் தனு பேய் விழி விழிக்க, அஞ்சலி சட்டென்று, “எல்லோரும் விஷ்ணு அண்ணா கூட வெளியே போய் இருக்காங்க. மாலை தான் ரிட்டர்ன் ஆவாங்க அங்கிள்.எல்லோரிடமும் எங்க திருமணத்தைப் பற்றிச் சொல்லிட்டு, ரிசெப்சன் ஏற்பாடுகளைக் கவனிக்க போய் இருக்காங்க.” என்று வாய்க்கு வந்ததை அஞ்சலி அடித்து விட்டாள்.

நாயகம் அவர் பாட்டுக்கு நான் எல்லோரையும் பார்த்து விட்டுச் செல்கிறேன் என்று அமர்ந்து விட்டால், இவர்கள் வீட்டு ராமாயணம் எல்லாம் கடைபரப்ப பட்டு விடுவது மட்டுமில்லாமல், நீதி, நேர்மை, நியாயம் என்று பேசும் அவர் தனு செய்து கொண்டு இருப்பதற்கு டைவோர்ஸ் கொடுத்து விட்டு, இன்னொரு பெண்ணைப் பார்த்து விஷ்ணுவிற்கு திருமணம் செய்து விட்டுத் தான் ஓய்வார்.

அந்த அளவிற்கு எது சரியோ, எது தர்மமோ அதை மட்டுமே செய்பவர் இவர். இல்லையென்றால் மனுநீதி சோழன் மாதிரி, கட்டிய காதல் மனைவி கார் ஏற்றிப் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்று விட்டார் என்று அவரையே ஜெயிலில் தூக்கி போட்டு இருப்பாரா.

‘தப்புனா தப்பு தான்….’ என்று நெற்றி கண்ணைத் திறப்பவர் என்பதால் இவர் என்றாலே தனுவிற்கு பயம் தான்.

” ஓஹ்…அப்படியா மா… அப்போ நான் போனில் அவர்களிடம் பேசி கொள்கிறேன்.எனக்கு இப்போ மீட்டிங் ஒன்று இருக்கு.சாரி கண்ணா தப்பாய் நினைச்சுக்காதே. சரிம்மா கிளம்பறேன். வீட்டில் வந்தால் சொல்லிடு… நீயும் கௌதமும் பிரீ ஆனதும் சொல்லுங்க. ஒரு சின்ன பார்ட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறேன். வரேன்மா.” என்றவர் கிளம்ப,

“ஒரு நிமிடம் அங்கிள். நீங்க காரில் வெயிட் செய்யுங்க. என்ற அஞ்சலி யாருக்கோ மீண்டும் அழைத்தாள்.

அந்த பக்கம் இருந்து பதில் வர, தனுவிடம் சொல்லி விட்டு வேதநாயகம் உடன் எங்கோ சென்றாள்.

தனு அப்படி அஞ்சலி சட்டென்று தன்னை மட்டும் தனியாக விட்டுச் செல்வாள் என்று அதுவரை எண்ணியிருக்கவில்லை.

ஒரு காலத்தில் கல்லூரி நாட்களில் தோழிகளாய் வலம் வந்தவர்கள் தான் என்றாலும், இன்று தான் செய்த செயல்கள் தனுவை தனியே இருக்க பயமாய் இருப்பதாகச் சொல்லவிடவில்லை.

கிளம்பும் அவர்கள் இருவரையே கையைப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதை தவிர தனுவால் அப்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

“தனு எதைப் பற்றியும் யோசித்து குழப்பி கொள்ளாதே…. எல்லாம் நல்லதாவே தான் நடக்கும்.விஷ்ணு, உன் மகள் சாதனா பற்றி மட்டும் யோசி.அவங்க தான் உன் உயிர். அவங்க தான் முக்கியம்.” என்ற அஞ்சலி, தனு கன்னத்தை அழுத்தி விட்டு நாயகத்துடன் கிளம்பினாள்.

இவர்கள் கார் கெளதம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கும், அய்யா சிவசாமி அவரின் கார் உள்ளே நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

தன் அறைக்கு செல்ல மாடி ஏறி கொண்டிருந்த தனு, கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, அந்த காரில் இருந்து தடியூன்றி படி ஏறி கொண்டிருந்த  அய்யாவை கண்டு வாயிலுக்கே ஓடி வந்தாள்

“அய்யா, எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… வெளிநாடு போயிருக்கீங்க என்று அங்கே இல்லத்தில் சொன்னார்கள். என்ன சாப்பிடுறீங்க?” என்று உபசரித்தவளை வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தார் அய்யா.

“இல்லத்திற்கு டொனேஷன் விஷயமாய், அங்கே அந்த நாட்டில் சில பெண்கள் வேலைக்கு என்று அழைத்து சென்று பாலியல் தொழில் அடிமைகளாய் வைத்திருந்தார்கள்.

அவர்களை மீட்டு வரவும் சென்றேன். எனக்கு எதுவும் வேண்டாம். இங்கே உட்கார்… என்ன காரியம் செய்து வைத்திருக்கிறாய் ஸ்ரீ?” என்றார் அய்யா.

“அய்யா!…” என்று கண்கள் கலங்கி தலை குனிந்த தனுவின், தலையை ஆதுரமாய் தடவி கொடுத்தவர்,

” வேண்டாம் கண்ணா.போதும் நீ அழுதது எல்லாம் போதும்…  இங்கே பாருமா… உன்னை போல் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை எல்லாம் நேரில் இத்தனை வருடமாய் பார்த்து, அவர்களுடன் பேசி, பழகி அவர்களின் வலி,வேதனை, அவமானம் எல்லாம் அறிந்தவள் தானே மா நீ….

அவர்கள் யாருக்கும் உனக்கு கிடைத்தது போன்ற மீட்சி, ஒரு நல் வாழ்க்கை, காதல் மட்டும் கொடுக்கும் விஷ்ணு போல் கணவன் கிடைக்க தான் தவம் இருக்கிறார்கள்.

உன்னை விட மிக மோசமான நிலையில் இருக்கும் பெண்களை பார்த்த பிறகும், குற்றமே செய்யாத அவர்களில் பலரை  அனாதைகளாக அவர்கள் குடும்பமே வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறது.

ஆனால் உன்னை உன் குடும்பம் தங்க தட்டில் வைத்து தாங்கி கொண்டு இருக்கிறார்கள். இத்தனை நடந்த பிறகும் கூட ‘உன் மேல் குற்றம்’ என்று அவர்கள் கையை தூக்கி குற்றம் சாட்டவேயில்லை. உனக்கு நேர்ந்ததை கண்டு உன்னை விட அவர்கள் தான் துடித்தார்கள்.

அதிலும், ‘விஷ்ணு மாதிரி ஒரு ஆண் துணை கிடைக்காதா’ என்று ஒவ்வொரு பெண்ணும் ஏங்கும் வண்ணம் அமைந்திருக்கிறது உன் வாழ்க்கை. ஒருமுறை வாழ்வு அழிந்த பிறகும் மீண்டும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அதை புதிதாய் செதுக்கி கொடுத்துள்ளார்கள்.

அதை ஏன்மா கெடுத்து கொள்கிறாய்! ராம் என்பது உன் கடந்த காலம். விஷ்ணுவும், சாதனாவும் தான் உன் நிகழ்காலம்.” என்றவர் பேசி கொண்டே இருக்க, அழுது கொண்டு இருந்த தனு மயங்கி சரிந்தாள்.

மீண்டும் தனு கண் விழித்த போது விஷ்ணு உட்பட அவள் குடும்பம் மொத்தமும், அங்கே என்னவோ ஏதோ என்று பதறி நின்று இருந்தார்கள்.

“அய்யா!…” என்று சிவசாமி மடியில் தலை வைத்து தான் படுத்திருப்பதையும், விஷ்ணு தன் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு கொண்டிருப்பதையும் கண்டவள் ஒன்றும் புரியாமல் விழிக்க,

“வாழ்த்துக்கள் ஸ்ரீ…. நீ மீண்டும் தாயாகி இருக்கே… வாழ்க்கையில் மீண்டும் வென்று விட்டாய்… இதோ உன் வாழ்வு.” என்று அவர் கை காட்ட விஷ்ணுவும், சாதனவும் பாய்ந்து தனுவை கட்டி கொண்டார்கள்.

உண்மை தான் விஷ்ணுவும் சாதானாவும் இனி பிறக்க போகும் குழந்தையும் தான் இனி அவள் வாழ்வு, உயிர் எல்லாம்.

“ஐ லவ் யு விஷ்ணு.”என்று தனு சொல்ல, விஷ்ணுவின் கண்கள் கலங்கின.

இந்த வார்த்தையை கேட்க தான் அவன் தவம் இருந்தது.அவன் தவத்திற்கு பலனாய் இதோ அவன் காதல் தேவதையே அவன் கை சேர்ந்து விட்டாள்.

ganesh venkatram poonam kaurக்கான பட முடிவுகள்

தனுவையும், மகளையும் அணைத்து கொண்டான் உலகத்தையே வேண்டு விட்ட அந்த காதலன், கணவன்.

தனு தன்னை மீட்டு கொண்டதை கண்ட ரெண்டு குடும்பமும் கண் கலங்க நின்றார்கள்.

அவர்கள் கை தானாக சிவசாமி அய்யாவை நோக்கி கூப்பியது.

“நன்றிங்க அய்யா… உங்களால் தான் என் மக மீண்டும் வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.நீங்க மட்டும் இல்லையென்றால்…” என்று ரேணுகா கண் கலங்கினார்.

“கடவுள் அருள் அம்மா… ஏதோ மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் என்னை வைத்து இருக்கிறார்.நான் எதுவும் செய்யவில்லை.ஏற்கனவே தனுவின் மனதில் இருந்ததை அவளுக்கு எடுத்து சொன்னேன் அவ்வளவு தான்.  உத்தரவு வாங்கிக்கிறேன்.” என்று சொல்லி விட்டு அவர் கிளம்ப, அதே சமயம் வேதநாயகத்துடன் வீட்டு வாயிலில் வந்து இறங்கினாள் அஞ்சலி.

“நான் பார்த்து கொள்கிறேன் அஞ்சலி. இதை இத்தனை வருடம் என்னிடம் மறைத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை தான்…. சில பல வருடமாகவே உள்ளுக்குள் ஏதோ உறுத்தி கொண்டு தான் இருந்தது.

இனி என் பிள்ளைகளால் உனக்கோ இந்த குடும்பத்திற்கோ எந்த தொந்தரவும் வராது.” என்ற வேதநாயகத்தின் குரலில் அப்படி ஒரு எக்கு தன்மை.

அவர் காரை விட்டு இறங்கிய அஞ்சலி உள்ளே நுழைய,  “அஞ்சு…. எப்படி இருக்கேம்மா… புது பொண்ணு! ஓடிட்டே இருந்தே… எங்க கெளதம் பார்த்தியா, எப்படி அதிரடி மன்னனாய் செயல் பட்டான் என்று. இனிமேலாவது அவனுடன் ஒழுங்காய் வாழு.

வேதநாயகத்தை கூட விடவில்லையா நீ….? இப்போ தான் திருமணம் ஆகி இருக்கு. உன், ‘ஜேம்ஸ் பாண்ட்’ வேலை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டி வச்சிட்டு உன் புருஷன் கூட வாழும் வழியை பாரு.

ராம் இனி உங்கள் இருவருக்கும் நடுவே வரவே கூடாது… இந்த வீட்டில் இனி ராம் பேச்சு இருக்காது… என்ன அப்படி முழிக்கறே!

உன் அண்ணி ரெண்டாவது முறையாய் அம்மாவாகி இருக்கிறாள். பாரு கோவிச்சுக்கிட்டு போனவன் விஷ்ணு என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.ஜாடிக்கேத்த மூடி தான்.பாரேன் அவன் செய்யும் அலம்பலை…இனி குழந்தை பிறக்கும் வரை தனுவை கீழே நடக்க கூட விட மாட்டான்.”என்றார் அவர் வீட்டினுள் பார்த்து சிரித்தவராய்.

அவரின் புன்னகை, உள்ளே நடக்கும் கூத்தை கண்டதும் அஞ்சலிக்கும் புன்னகை எழுந்தது.

தனுவை இரு கைகளால் தூக்கி கொண்டு விஷ்ணு மாடி ஏறி கொண்டு இருந்தான். ஒரு கையில் ஜுஸ் கிளாஸ் எடுத்து கொண்டு ரேணுகா மாடியேற, ஸ்வீட் எடுத்து கொண்டு பின்னல் சென்று கொண்டு இருந்தார் ஹேமா.

சாதனாவை தூக்கி கொண்டு கெளதம் பின்னால் செல்ல, பேரனா பேத்தியா என்று விவாதம் செய்து கொண்டு மடியேறி கொண்டு இருந்தார்கள் தந்தைகள் இருவர்.

“போ அஞ்சலி உன் கெளதம் உனக்காக காத்திருக்கிறான். இனிமேலும் அவனை காக்க வைக்காதே. மற்ற எல்லாம் காத்திருக்கட்டும்.போ…” என்றவர் கிளம்ப மகிழ்ச்சியுடன் தன் வீட்டிக்கு சென்றாள் அஞ்சலி.

இனி தனு நிஜமாய் வாழ்ந்து விடுவாள்.

எது உண்மையான காதல், எது உண்மையான வாழ்க்கை என்று புரிந்து கொண்டாள் தனுஸ்ரீ.

தனு மனதில் இருந்த ராம் என்ற கசடு முற்றிலும் நீங்கி அங்கு விஷ்ணு நிலைபெற்று விட்டான்.

நண்பனாய், பாதுகாவலனாய் இருந்தவன் இன்று உண்மையில் காதலனாய், மன்னனாய் ஏற்று கொண்டு வாழ்வை செப்பனிட்டு கொண்டாள் தனு.

அன்பிற்கு எதையும் வெல்லும் ஆற்றல் இருக்கிறது. அந்த அன்பு என்னும் ஆயுதம் கொண்டு, விஷ்ணு தனுவின் மனதில் தேங்கி இருந்த வேண்டாத கசடுகளை தகர்த்தெறிய, அவன் காதல் அவன் கை சேர்ந்தது.

விட்டில் பூச்சிகள் விளக்கினை நெருங்கி வாழ்க்கை கருகி போகலாம். ஆனால் மீள தேவை ஒரு தோள், அன்பான வார்த்தை, மன உறுதி மட்டுமே.

எல்லோரும் மீண்டும் இணைந்து இருக்க, அங்கு தான் கௌதமிற்கு மிக பெரிய பிரச்சனை ஸ்டார்ட் ஆனது.

‘யோவ் இப்போ தான்யா ஒரு பிரச்சனை முடித்தோம்.அதற்கு இன்னொன்றா. அடபோங்கயா.’என்று நொந்து நூடுல்ஸ் ஆகி, அந்து அவலாகி இருந்தான் கெளதம்.

மறுநாள் காலை சுமங்கலி பூஜையும், மாலை வரவேற்பும் வைக்க ஏற்பாடு ஆக, பூஜை முடியும் வரை அஞ்சலி அருகில் வர தடா போடப்பட்டது கௌதமிற்கு.

இது தான் அவன் பிரச்சனை.

ஆறு வருடம் கழித்து சந்தித்த காதலியை, மனைவி ஆகி விட்டவளின் அருகே செல்ல தடை.

“அடேய், இதுக்காடா நான் திருமணம் செய்தேன்!” என்று தலையில் கை வைத்து அவன் உட்கார்ந்து விட்டான்.

அஞ்சலியும் மாமியார் பேச்சை தட்டாத மருமகளாய் அவருடன் படுக்க சென்று விட,  இவன் கூட படுக்க வந்த தந்தையை முறைத்தான் கெளதம்.

“யு சீ மகனே!… சொல்லும் போதே அதுக்கு தான் திருமணம் செய்யணும் என்பது. திருமணம் செய்துட்டு, பொண்டாட்டியை லவ் செய்யுடா என்றால், லவ் செய்துட்டு தான் திருமணம் செய்வேன் என்று இருந்தால் இப்படி தான் எல்லாம் எக்குத்தப்பாய் நடக்கும்…” என்று அவர் கலாய்க்க, கெளதம் நொந்து போனான்.

“டேய் மச்சான்… பாய்டா… கொஞ்சம் என் மகளை உன் கூட படுக்க வைத்துக்கோ” என்றவன் சாதனவை அவர்கள் அறையில் படுக்க வைத்து விட்டு, கௌதமிற்கு ஒரு சலூட் வைத்து கண்ணடித்து,

“இன்னைக்கு எனக்கும் என் ஸ்வீட்டிக்கும்… ‘கபி, கபி மேரா தில் மே…. ரூப்பு தேரா மஸ்தானா…” என்று பாடி, ஆடிக் கொண்டு விஷ்ணு  தன் அறைக்கு செல்ல,

‘இவரு தான் பொட்டியை தூக்கிட்டு கோச்சிட்டு போனார்…. செகண்ட் இன்னிங்ஸ் வந்ததும் இவனுக்கு, ‘ரூப் தேரா மஸ்தானா’ கேக்குது.

டேய் எங்கிருந்துடா வரீங்க எல்லோரும்!… என் பேபியை கட்டி பிடிக்க வேண்டிய என்னை, இந்த தலையணையை கட்டி பிடிக்க வச்சிட்டாங்களே மை லார்ட்

தீர்ப்பை மாத்தி சொல்ல விஜய்குமார், சரத்குமார் யாராவது நாட்டாமை  வாங்கையா…’ தலையணையை மொத்திவிட்டு கடுப்புடன் படுத்தான்.

மனதில் நிறைவு இருந்ததாலோ என்னவோ, படுத்ததும் உறங்கி விட்டான்.

நள்ளிரவு, குளிர் காலம், பேய்களும், நாய்களும் கூட உறங்கி கொண்டிருக்கும் பொழுது, மெல்ல அந்த உருவம் சத்தம் ஏற்படுத்தாமல் மாடி ஏறி கொண்டு இருந்தது.

வாயில் காவலன், சிசிடிவி கடந்து யாரும் பார்க்காமல் இந்த உருவம் எப்படி உள்ளே வந்தது.

அதன் கையில் கத்தியொன்று பளபளத்து கொண்டு இருந்தது.

தலை முதல் கால் வரை ஒரு போர்வையால் மூடி இருந்தது.

யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, கெளதம் அறையை குறி வைத்து ஏறியது.

இதயம் சமர்ப்பிக்கப்படும்…

 

 

 

 

 

 

error: Content is protected !!