சமர்ப்பணம் 20

(கற்பழிப்பு குற்றங்களில் 54% பதிவு செய்யப்படவில்லை என்று மடிஹா கார்க் மதிப்பிடுகிறார். 57 நாடுகளில் ஐ.நா நடத்திய ஆய்வில், உலகளவில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 11% மட்டுமே பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.)

(2013, நிர்பாய சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு, “நிர்பய நிதியை” அறிவித்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்காக ஒரு நிறுத்த மையங்களை/one stop centres நிறுவுவதே இந்த நிதியின் நோக்கம்.

 பாலின அடிப்படையிலான வன்முறைகளை நிவர்த்தி செய்வதற்காக, பெண்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குதல், உடல் ரீதியான தாக்குதல் நடந்தால் மருத்துவ பரிசோதனை, குற்றவாளி மற்றும் உளவியல் ஆலோசனை, பாதிக்கப்பட்ட பெண் சட்டரீதியான உதவியை எடுக்க விரும்பினால் சட்ட ஆலோசனை ஆகியவை அடங்கும். ) 

(பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைல் பயன்பாட்டு செயலிகள் “மைசேப்டிபின்/MYSAFETYPIN, ஷேக்2சேப்பிடி, SHAKE TO SAFETY, பிசேப்/BESAFE, ஐவாட்ச்/IWATCH, SOS பார் வுமன்/SOS FOR WOMEN,  ஐகோ சேப்பிலி/I GO SAFELY, பேமிலி லோகேட்டோர்/FAMILY LOCATOR, ரக்ஷா/RAKSHA, ஹிம்மத் பிளஸ்/HIMMAT PLUS, விது பயன்பாடு/VIDHU, லைஃப் 360/LIFE 360, நான் சக்தி ஆப்/I AM SAKTHI, நிர்பயா ஆப்/NIRPAYA, வாட்ச் ஓவர் மீ/WATCH OVER ME ஆப்” போன்றவை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்)

“அம்மா!…” என்று அஞ்சலியும் போனிலிருந்து ராம்மும் அலறினார்கள்.

காதல் என்ற பெயரில்  எவனையோ நம்பி ரூபா ஏமாந்து இருக்கிறாள் என்று தான் அதுவரை இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்க, ஒரு தாயின் வாயால் எதை எல்லாம் கேட்கக் கூடாதோ அதைக் கேட்க நேர்ந்தத்தில் அந்த அண்ணனுக்கும், தங்கைக்கும் இதயம் ஒரு கணம் துடிப்பதையே நிறுத்தித் தான் விட்டது.

அதுவும் ஒன்றிக்கு ரெண்டு டாக்டர் இருக்கும் குடும்பத்தில் இருந்த அஞ்சலிக்குக் கேட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை.

அவளுக்குத் தெரிந்த அஞ்சலியின் இரு அண்ணன்களும் அவர்களின் தோழர்களும் இந்தத் தொழிலை உயிராய் நினைப்பவர்கள்.

ராம்மிற்கு இந்தத் தொழில் உயிர்போல.இதைப் பணம் பெரும் வேலையாகப் பார்க்காமல் உண்மையில் சேவையாகச் செய்பவன் அவனும் விஷ்ணுவும் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் சக டாக்டர்களும்.

தெய்வத்திற்கு சமமாய் கருதப்படுவார்கள், குரு என்று அழைக்கப்படும் ஆசிரிய பெருமக்களும், மருத்துவர்களும் தான்.ரெண்டுமே மிகவும் புனிதமான தொழில்.

அதில்  இப்படி நடக்கிறது என்றால் அவர்களால் தாங்க முடியவில்லை.

“உனக்கு இதைப் பற்றித் தெரியுமா ராம்?” என்றாள் அஞ்சலி நெஞ்சில் ரத்தம் வழிய.

“இல்லைமா  நான் அவ யாரையோ காதலித்து அதனால் கர்ப்பம் என்று தான் நினைத்தேன்…. அதையே தான் அப்பாவிடமும் சொன்னேன். இப்படி நடந்து இருப்பது எனக்குத் தெரியாது.” என்றான் ராம் வேதனையுடன்.

“அந்த மனுஷனும் இதை எல்லாம் தெரிஞ்சுட்டு வாயை மூடி இருந்துட்டு அப்படியே போய்ச் சேர்ந்துட்டாரே.” என்றார் கங்கம்மா.

“என்னது, அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்றான் ராம்.

“ஹ்ம்ம் அந்த நர்ஸ் அவரு தூரத்து சொந்தம்… இவரு கிட்டே தான் இதை முதலில் சொல்லியிருக்கு…. இது மாதிரி நிறைய பெண்ணுகளுக்கு  நடந்து இருக்காம்.

அவங்களும் சந்தேகம் வந்து தான் விசாரித்து இருக்காங்க. அவங்க மேல் திருட்டு பழி சுமத்தி ஹாஸ்பிடல்லை விட்டுத் துரத்தி இருக்காங்க. போலீஸ் கம்பளைண்ட் கொடுத்ததில் அவங்களால் இங்கே வரவே முடியலை…

ரூபா அப்பாவும் ஏதோ கார் நம்பரை அவங்களிடம் விசாரித்து இருக்கார்…” என்றார் கங்கம்மா.

“கார் நம்பரா?” என்று யோசித்த ராம் கண்களில் அவன் கைகளில் உயிர் விடும்போது,

“கார்… பச்சை கார்…567…” என்று திக்கி திணறி சொன்ன அவர் உயிர் பிரிந்தது நினைவுக்கு வந்தது.

“அந்த சமயத்தில் தன்னை இடித்த காரின் நம்பர் சொல்கிறார் என்று நினைத்தேன்… போலீஸ் கிட்டே சொல்லிட்டு அதை அதோடு மறந்துட்டேன்.” என்றான் ராம்.

சற்று நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது. “ஏன் ராம் இப்படி யோசித்து பாரேன்… இந்த ஹாஸ்பிடலில் எவனோ ஒருவன், உடல் நலமில்லை என்று வரும் பெண்களை வேட்டையாடி இருக்கான்.

அதை தெரிந்து கொண்ட நீ விஷயத்தை போலீஸ் வரை கொண்டு போய்யிருக்கே. அதற்காக ஏன் உன்னை டார்கெட் செய்திருக்க கூடாது?.” என்றாள் அஞ்சலி.

“ஏய், எனக்கு இந்த விஷயமே புதுசு… இன்னைக்கு தான் கேள்வி படறேன். அதுவரை ரூபா அந்த சிறு வயதில் யாரையோ லவ்… என்று தான் நினைத்து இருந்தேன் அஞ்சு. சத்தியமாய் இப்படி ஒன்று அங்கே நடப்பது எனக்கு தெரியாது.” என்றான் ராம் பதற்றத்துடன்.

“உனக்கு தெரியாது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா ராம்

நிச்சயம் நீ யாரையோ இங்கே கேள்வி கேட்டு இருக்கே.

அது தவறு செய்பவனாய் இருந்திருக்கணும், உன் கேள்வி அவங்க முகமூடியை கிழித்திருக்க வேண்டும் ராம்” என்றாள் அஞ்சலி.

“ஏய் அது அட்மின் கை மாறும் நேரம்…. உனக்கே தெரியும் தானே அந்த ஹாஸ்பிடலின் சார்ஜ் எடுக்க இருந்தது நான் தான் என்று….  உன்னிடம் மட்டும் தானே சொல்லியிருந்தேன்.

வேறு யாருக்கும் இத்தனை பெரிய ஹாஸ்பிடல் நிர்வாகத்தை எடுத்து நடத்த போவது நான் என்று யாருக்குமே தெரியாது.

தெரிந்த ஒரே நபர் சிவகுருநாதன் அய்யா மட்டும் தான்.என்னை நம்பிய ஒரே ஜீவன் அவர் மட்டும் தானே உனக்கு அடுத்து…அவர் இல்லையென்றால் இந்த ராம் என்பவனே இல்லாமல் தானே போய்யிருப்பான்…

எனக்குத் தான்  இந்த ஹாஸ்பிடல் என்று எழுதி வச்சிட்டு சிவா அய்யா இறைவனடி சேர்ந்தார். அப்போ நான், ‘கேட் வாட்ச்மென் முதல் போர்டு மெம்பெர்ஸ்’ வரை கேள்வி கேட்டுட்டு தான் இருந்தேன்….

அதுவும் நான் கேள்வி கேட்டது எல்லாம், ‘பில்லிங் முறைகேடுகள், அங்கே வந்த கர்ப்பிணி பெண் மரணம், தேவையற்ற டெஸ்ட்  எழுதிக் கொடுப்பது, காலாவதியான மாத்திரைகளை உள்ளே கொண்டு வந்துட்டு நல்ல மாத்திரைகளை வெளியே விற்பது’ போன்ற  மெடிக்கல் மாபியா வேலைகளைப் பற்றி தானே விசாரித்துக் கொண்டு இருந்தேன்.   இதில் யாரை என்று சொல்வேன்?” என்றான் ராம்

“ராமு தம்பி நீ விசன படாதே…  நீயும் உன் நண்பர்களும் உங்க வேலை எல்லாம் விட்டுட்டு என்னையும் என் பெண்ணையும் பாதுகாத்ததே பெருசு…நீயும் உன் நண்பர்களும் உங்களால் முடிந்ததை செய்தீர்கள்… இனி சாமி பார்த்துக்கும்.” என்றார் கங்கம்மா இவர்கள் வருந்துவது பொறுக்க முடியாமல்.

“என் நண்பர்களா?” என்றான் ராம் திகைப்புடன்.

“யார் அம்மா சந்தோஷ்சையா சொல்றீங்க…”என்றாள் அஞ்சலி.

“அந்த டாக்டர் தம்பிங்க பேரு எல்லாம் தெரியாது கண்ணு…”என்றார் கங்கம்மா.

“ அதான் உங்களுக்கு டிரீட்மென்ட் கொடுத்தாரே அவரா?” என்றாள் அஞ்சலி திகைப்புடன், அவன் அந்தச் சமயம் இங்கே பொறுப்பில் இல்லையே என்ற குழப்பத்துடன்.

“இந்த டாக்டரு அய்யா இல்லே பாப்பா… அன்னைக்கு வூட்டுக்கு ராம் தம்பி காரில் வரும்போது, அவர் கூடவே வந்த டாக்டர் தம்பியும், இவர்களுக்குப் பின்னால் சென்ற இன்னொரு காரில் இருந்த இன்னொரு டாக்டர் சார் ஒருவரும்.

அந்த டாக்டர் தம்பிங்க ரெண்டு பேரும் இங்கே இப்போ இல்லையாமே…வேறு ஏதோ ஹோச்பிடலில் வேலை பார்ப்பதாக முன்னே ஒரு தடவை வந்து…. ஒரு ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் முன்னாடிகா வந்து விசாரிக்கும்போது சொன்னாங்க.” என்றார் கங்கம்மா.

“யார் திலீப்பா.?” என்று ஒன்றாய் திகைத்தார்கள் அஞ்சலியும், ராம்மும்.

“சந்தோஷ் இங்கே சார்ஜ் எடுத்து நான்கு வருடம் ஆகுது. மொத்தமாய் ஹாஸ்பிடல் முழுவதும் களை பறிக்கும் வேலை செய்தோம்.

உயிரைக் காக்க வேண்டிய உன்னத தொழிலில் இருப்பவர்களே உயிரை எடுக்கும் காலனாய் மாறினால் என்ன ஆகும்….

நிறைய டாக்டர், நர்ஸ், ஹாஸ்பிடல் பணியில் இருந்தவர்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்தோம்.அந்தப் பில்லிங் முறைகேடு, கர்ப்பிணி பெண் மரணத்தில்… அதில் திலீப்பும், இன்னொருவனும் அடக்கம் போலிருக்கு.சந்தோஷ் தான் இதையெல்லாம் சுமித்ரா உதவியுடன் செய்தான்.கமலும் உதவினான். ” என்றான் ராம் திகைப்புடன்.

“ராம் அப்பா சொன்ன கார் நம்பர் என்ன?” என்றாள் அஞ்சலி சட்டென்று.

“பச்சை கார் நம்பர் 567” என்றான் ராம் யோசித்து.

“டேய் அது திலீப் கார்டா… அவங்க அப்பா அவன் பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்தார் என்று உங்க  காலேஜ் கல்ச்சுரல் அன்று அந்தக் காரில் தானே பிலிம் ஓட்டிட்டு இருந்தான்” என்றாள் அஞ்சலி.

“அட ஆமாம் இல்லை… நாம கூட இது என்ன 567ன்னு இருக்குன்னு கிண்டல் செய்துட்டே இருந்தோம் இல்லை” என்றான் ராம் திகைப்புடன்.

இறுதியில் நண்பன் என்று உடன் சுற்றி கொண்டு இருந்தவன் தன் பதவியைத் தவறுக்கு பயன்படுத்தி உள்ளான்.

இந்தப் பக்கம் ரூபாவை கண்டுபிடிக்க உதவுவது போல் அழைத்துச் சென்று, ராம் இந்த நிலையில் இருக்க காரணமாய், பின்னால் இருந்தே செயல் பட்டு இருக்கிறான் அந்த வக்கிரம் பிடித்தவன்.

திலீப் தான் தனுவிற்கும் மருத்துவம் பார்த்தது… அங்கே என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறான்.

இவன் ஒருத்தன் என்றால் அந்த இன்னொருவன் யார்?

“போன் செய்து உன் நண்பன் கமல் கிட்டே விசாரி இந்த காரை பற்றி…. இங்கே சென்னையில் தானே ACPயாக சார்ஜ் எடுத்து இருக்கிறார் என்று போன வாரம் சொல்லிட்டு இருந்தே… உன் கேஸ் கூட அவர் தானே வெளியே தெரியாமல் பார்ப்பது” என்றாள் அஞ்சலி.

“திரும்ப கூப்பிடுறேன்.” என்று ராம் அழைப்பை துண்டிக்க ஏதோ யோசனையுடன் ராம் திரும்ப அழைக்க காத்திருந்தாள்.

தன் நினைவுகளில் உழன்று கொண்டிருந்த அஞ்சலி இன்னொரு நபர், அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை.

மறைவிலிருந்து அஞ்சலி, கங்கம்மா, ராம் பேசுவது மொத்தத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த கௌதமிற்கு  உலகமே சுழன்றது.

“ஏய் அந்த வண்டி காணாமல் போச்சுன்னு அப்பா இறக்கும் முன் வழக்கு பதிவாகி இருக்குடீ…. ஹிட் அண்ட் ரன் என்பதால் வழக்கு இன்னும் முடிக்காமல் தான் இருக்காம்.” என்றான் ராம் திரும்ப அழைத்து.

“அந்த திலீப் வீடு அட்ரஸ் இருக்கா…” என்றாள் அஞ்சலி.

“ஹ்ம்ம் கமலையும் அங்கே வர சொல்லிட்டேன்… நான் ஹாஸ்பிடல் வாசலில் தான் இருக்கேன்… வா…” என்றான் ராம் .

“இதோ வரேன்.” என்றவள்,

“அம்மா உங்க மகளை மீண்டும் தேட தான் போறோம்… எதுக்கும் கவலை படாதீங்க.” என்றவள் அந்த அறையை விட்டு வெளியே வரும் போது கெளதம் மேல் மோதி கொண்டாள்.

அங்கே கௌதமை அஞ்சலி எதிர்பார்த்திருக்கவில்லை.

“பார்த்து எங்கே இவ்வளவு அவசரமாய் போறே?” என்றான் கெளதம்.

என்ன சொல்வது செய்வது என்று புரியாமல் பேய் விழி விழித்தவள்,  “அது பாத்ரூம் வருது… அதான்.” என்றால் அஞ்சலி.

“சரி பார்த்து போய்ட்டு வா…” என்றவன் அவள் கிளம்ப, “அஞ்சலி!… மொபைல் மாத்தி எடுத்துட்டு போறே…” என்றவன் அவள் மொபைலை நீட்ட, ஒரு புன்னகையுடன் அதை வாங்கி கொண்டு வாயிலுக்கு ஓடினாள் அஞ்சலி.

தூக்க கலக்கத்தில், கங்கம்மா இருக்கும் நிலை பற்றிய கவலையில் ஒரே மாதிரி இருந்த கெளதம் போன் எடுத்து வந்திருந்தாள் அஞ்சலி.

ராம் நம்பர் தன் மொபைலில் பதித்து ராம் என்று பதித்து வைத்திருக்காமல் வேறொரு பெயரில் பதித்து வைத்திருப்பாள் அஞ்சலி.

அதே பெயரில் கௌதமும்  அந்த பெயரை பதித்து வைத்திருக்க, எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் அஞ்சலி போன் மாறியதை கவனிக்கவில்லை.

அதுவரை அங்கே நின்று அறைக்குள் நடந்த உரையாடலையும், ராம் உடன் அஞ்சலி பேசி கொண்டிருப்பதையும் கேட்டு கொண்டிருந்த கெளதம் ஆழந்த யோசனைக்கு சென்றான்.

கெளதம் பிசினஸ் டீலிங்கை மொபைலில் பேசும் போதெல்லாம் பாதுக்காப்பு காரணங்களுக்காக ஆட்டோமேட்டிக் கால் ரெக்கோர்டிங் ஆவது போல் செட் செய்து இருந்தான்.

அஞ்சலி பேசிய கடைசி அழைப்பின் நம்பர் டிஸ்பிலே கெளதம் இதய துடிப்பை நிறுத்தியது என்றால் அங்கு ரெக்கோர்ட் ஆகியிருந்த பேச்சு அவனை ஸ்தம்பிக்க செய்திருந்தது.

காது கேட்டதை நம்ப முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய, கெளதம் கரம் தானாக ரீடயல் பட்டனை அழுத்தியது.

“ஹலோ…  நான் கொஞ்சம் வேலையாக வெளியே போகிறேன் கெளதம்…. உங்களை பிறகு அழைக்கிறேன்.” என்ற எதிர்முனையில் குரலை அடையாளம் கண்டு கொண்ட கெளதம் திகைத்து நின்றான்.

‘இது எப்படி சாத்தியம்! அப்போ இவ்வளவு நாளாய்… இது தெரிந்தால் தனு வாழ்க்கை பாழாகிடும் என்று தான் அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறினாளா!

அவனும் அதற்காக தானா, தான் யார் என்பதை மறைத்து வாழ்கிறானா!

‘தங்கை வாழ்க்கையை அழித்து விட்டான்’ என்று நினைத்தோமே, காதலுக்காக, காதலிக்கு இன்னொரு வாழ்க்கையையே கொடுத்திருக்கானே!

அவனாவது காதலிக்காக இதை செய்தான், ஆனால் அஞ்சலி உண்மை தெரிந்தால் தனு வாழ்க்கை பாழாகும் என்று மறைந்து வாழந்தாளா!

இது என்ன மாதிரியான காதல்…

இது என்ன மாதிரியான அன்பு…’   என்று திகைத்து நின்றான் கெளதம்.

இது என்ன மாதிரியான அன்பு, பாசம், காதல் புரிந்து கொள்ளமுடியவில்லை அவனால்.

இதுக்கு உவமை என்று கூற எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை.

‘காதலிக்க மறுத்தால் கொலை, ஆசிட் தாக்குதல், நண்பர்களுடன் சேர்ந்து சிதைத்தல்’ என்று வக்கிரம் நிறைந்த உலகில் இப்படியும் ஒரு காதல்.

கால் மடங்கி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த கெளதம் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

புரியாத பல விஷயம் புரிய, அடுத்து என்ன என்று தோன்றாமல் ஸ்தம்பித்து போய் அமர்ந்தான்.

இத்தனை நாள் அவன் யாரை தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ, அவன் இத்தனை நாளாய் கண் எதிரிலேயே தான் இருந்திருக்கிறான்.

அவன் தேடி அலைந்த கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது.

ஆனால் பதிலை தான் அவன் மனதால் ஏற்க முடியவில்லை.

அடுத்த நொடி எழுந்தவன் தன் மொபைலில் லாரன்ஸை அழைத்த படி ஓடினான் தன் காருக்கு.

“லாரன்ஸ் அவங்க எங்கே?” என்றான்.

“சார் அம்பா மால் தாண்டி போய்ட்டு இருக்காங்க சார். பின்னால் நான் போய்ட்டு இருக்கேன் சார்…” என்றான் அவன்.

அஞ்சலி, ராம், சந்தோஷ், சுமித்ரா முன் காரில் செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து லாரன்ஸ் கார் செல்ல, இந்த ரெண்டு காரையும் பின் தொடர்ந்து அசுர வேகத்தில் சென்று கொண்டு இருந்தான் கெளதம்.

கண்ணாமூச்சி ஆட்டம்
வாழ்க்கை கண்ணாமூச்சி ஆட்டம்
கண்ணை மூடிப் பார்த்தால்
கனவில் ஒன்றை காணோம்
இரவும் பகலும்
தினம் உழைத்து உழைத்து
நீயும் சேர்த்த பணம் 
இன்று என்னாச்சு
குருவி கூட்டில் வந்து குண்டு
வைத்துவிட்டு போகும்
உலகம் இது சீச்சீ சீ
இனிமேல் என்ன செய்வாயோ
விதியை நீயும் வெல்வாயோ
சொல் நண்பா
உள்ளத்தின் ஓரத்தில்
ஏதேதோ எண்ணங்கள்
உன் பாதை எங்கெங்கும் 
யாரோ செய்த பள்ளங்கள் 
மாளிகை கட்டிட ஆசை பட்டாய்
நாழிகையில்  இன்று என்னாச்சு
தூரிகை மேலேயே
ஒட்டடை வந்து
ஓவியம் இன்று
வீண் ஆச்சு
வனவில்லையே ஊஞ்சல் ஆக்கிட
விரும்பிச் சென்றது
என்னாச்சு
வெயில் அடித்ததா
மழை அடித்ததா
வண்ணங்கள் எல்லாம் கரைஞ்சாச்சு

கெளதம் காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் எவ்வளவு உண்மையான வரிகள்
இவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டி கொண்டு இருக்க, கெளதம் கண்கள் கலங்கியது.

இந்தப் பாடலை நேற்றிலிருந்து அஞ்சலி கேட்டுக் கொண்டிருந்ததன் அர்த்தம் இன்று விளங்கியது.

நாற்பது நிமிடம் கழித்து, “சார் அவங்க அடையார் கான்செர் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்காங்க சார்.” என்றான் லாரன்ஸ்.

“கூட ராம் இருக்கானா?” என்றான் கெளதம்.

“ஆமா சார்… கூடவே சுமித்ரா மேடம், சந்தோஷ் சார் இருக்காங்க…  ACP கமல் மப்பிடியில் வந்திருக்கார் சார்.” என்றான் லாரன்ஸ் .

” நான் வந்துட்டே இருக்கேன் லாரன்ஸ்.   யாரை பார்க்க போறாங்க என்று தெரியணும்.”  என்றான் கெளதம்.

அஞ்சலி, ராம், சுமித்ரா, சந்தோஷ், அவர்களின் நண்பன் ACP கமல் கார்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் வந்து நின்றது.

ADAYAR CANCER HOSPITALக்கான பட முடிவுகள்

சென்னை புற்றுநோய் நிறுவனம் (WIA), 50 ஆண்டுகளுக்கு முன்னர் மகளிர் இந்திய சங்க புற்றுநோய் நிவாரண நிதியத்தால் டாக்டர் முத்துலட்சி ரெட்டியின் தலைமையில் நிறுவப்பட்டது.

புற்றுநோய் நிறுவனத்தின் (WIA) நெறிமுறைகள் சமூக அல்லது பொருளாதார வகுப்பைப் பொருட்படுத்தாமல் “அனைவருக்கும் சேவை” ஆகும்.

‘தன்னலமற்ற சேவை தனக்கே உரிய ஆத்ம சக்தி கொண்டு வலுவாகும்’ என்ற நம்பிக்கையில், மருத்துவம் என்பது நான்கு சுவர்களுக்குள் அடங்கி விடாமல் நாட்டின் எல்லா மூலைகளும் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை கொண்டது.

‘கைப்பற்றுவதற்கான மனிதனின் நித்திய தேடலின் அடையாளமாகவும், மனிதகுலத்தை உயர்த்தும்  ஒரு உத்வேகமாகவும்’ விளங்கி கொண்டிருக்கிறது.

530 படுக்கை அறைகள் கொண்டு இருக்கும் ஹோச்பிடலின் உள் நோயாளிகள் பிரிவில் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி ஒரு அறைக்குள் சென்றார்கள்.

ADAYAR CANCER HOSPITALக்கான பட முடிவுகள்

முகத்தில் மாஸ்க், கையில் கையுறை, காலுறை அணிந்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இவர்கள் பார்க்க சொல்ல நபர் கான்செர் நோய் முற்றிய நிலையில் அவரின் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்திருக்க, இன்பெக்ஷன் ஆக கூடாதென்று இந்த ஏற்பாடு.

“சாரி சார்… ஹி இஸ் இன் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்… எலும்பு புற்றுநோய் (ஆஸ்டியோசர்கோமா/OSTEOSARCOMA) மிகவும் முற்றிய நிலை. எப்போ வேண்டும் என்றாலும் அவர் மரணம் நிகழலாம்.” என்று எச்சரிக்கை விடுத்த பிறகே இவர்களை திலீப் அறைக்கு அனுப்பி இருந்தார்கள்.

கண்ணாடி தடுப்பிற்குள் இருந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் இருந்தான் இவர்கள் பார்க்க வந்த டாக்டர் திலீப்.

தலை முற்றிலும் சவரம் செய்யப்பட்டு, மூக்கில், வாயில், கையில் என்று பல டியூப் சொருகப்பட்டு, படுக்கையை விட்டு அங்குலம் கூட அசைய முடியாமல் இழுத்து கொண்டிருந்தது அவனுக்கு.

‘இதுக்கு இறந்தே போயிடலாம்’ என்று கதறி கொண்டிருந்தான் அவன்.

உடலில் உள்ள எலும்புகளை அரித்து கொண்டிருக்கும், உலகில் மிக அதிக வலி கொடுக்கக்கூடிய கான்சரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நொடிகளை   எண்ணி கொண்டிருந்தான்.

“திலீப்!.” என்று இவர்கள் குரல் கொடுக்க, மெல்ல கண் விழித்தவன், இவர்களை அடையாளம் கண்டு கொண்டான்.

அருகே இருந்த நர்ஸின் எச்சரிக்கையையும் மீறி தன் வாயில் சொருகப்பட்டு இருந்த உணவு குழாயினை எடுத்து எடுத்து விட்டான்.

பலத்த மூச்சிரைப்புக்கு இடையே பேச ஆரம்பித்தான் அவன்.

“ராம்… ராம்… ராம் என்னை மன்னிச்சுடு ராம்.. உன் இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ராம். உனக்கு நான் செய்த கொடுமைக்கு தான் எனக்கு இன்னைக்கு இந்த நிலை.

நீ கதறி துடித்தது இன்னும் என் காதில் கேட்குது ராம்… உன்னை ஏமாற்றி பொய் சொல்லி, சித்தூர்க்கு அழைத்து போனது எல்லாமே அவன் பிளான்.

எல்லாம் சொல்லிடறேன் ராம்… சாகும் போதாவது நான் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கட்டும்.” என்றவன் கையெடுத்து கும்பிட்டு அவர்கள் செய்திருந்த கொடூரங்களை பட்டியல் இட ஆரம்பித்தான்.

“எதுக்கு என் அண்ணாவை இந்த கதிக்கு ஆளாக்கினீர்கள்? அவன் உங்களை என்ன செய்தான்?” என்றாள் அஞ்சலி கோபத்துடன்.

“தனுஸ்ரீ, ரூபா தான் காரணம்… தனு விஷயத்தில் உன்னை அவனுக்கு பிடிக்காது ராம். கோடிகணக்கான சொத்துக்கு வாரிசு அவ.

அவ இப்படி என்று புரளி கிளப்பி விட்டால் அவளை யாரும் மணக்க மாட்டாங்க என்று பிளான் போட்டு இருந்தான்.

தனுவை அடைய அவளுக்கு ட்ரக்ஸ் கொடுத்து மயங்கி கிடந்தவளை தான் ராம் நீ காப்பாற்றி அழைத்து போனே. அதில் உங்கள் இருவருக்கும் காதல் வந்து விட்டது.” என்றான் அவன்.

“ஹாஸ்பிடலில் என்ன செய்தீங்க?” என்றான் ராம் கோபத்தை உள்ளடக்கிய குரலில்.    .

“காசுக்கு ஆசை பட்டு ஒன்றும் இல்லாதததிற்கு எல்லாம் ஆபரேஷன் செய்து  காசு பார்த்தோம்.

தேவையே இல்லாத வீரியம் மிக்க மாத்திரை, ஊசி, ஸ்கேன், லேப் டெஸ்ட் எல்லாம் எழுதி கொடுத்தோம்.

தரமான மருந்துகளை ஹாஸ்பிடலில் இருந்து திருடி அதற்கு பதில் அதே போல் தயாராகி வந்த போலிகளை, தேதி முடிந்த மருந்துகளை எல்லாம் நோயாளிகளுக்கு கொடுத்தோம்.

நார்மல் டெலிவரி ஆகி இருக்க வேண்டிய பெண்ணை ஆபரேஷன் செய்ய என்று அழைத்து போய் பிரசவத்தில் காம்ப்ளிகேட் ஆகி செத்துப்போச்சு.

அதை விசாரிக்கவும், அட்மின் மாற்றவும் தான் உன்னை உள்ளே கொண்டு வந்தாங்க.

அது எங்களுக்கு பிடிக்கலை…. அட்மின் நீ என்று தெரிந்ததும் ஷாக்…

அங்கே வரும் பெண்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் அட்மிட் செய்து, மயங்க வைத்து… அப்படி எங்களிடம் சிக்கியவள் தான் ஸ்வாதிரூபா…

அதை நீ கண்டுபிடிச்சுட்டே… அந்த பெண்ணின் அப்பாவும் கேள்வி மேல் கேள்வி கேட்டதும் அந்த ஆளையும் கொன்னுட்டோம்.

போலீஸ் என்று போனது, உனக்கு தனுவோடு திருமணம் நடக்க கூடாது, இந்த ஹாஸ்பிடலில் நாங்க செய்வதை கண்டுபிடிக்கும் நீ இருக்க கூடாது என்று தான்… உன்னை அன்று தாக்க ஏற்பாடு செய்தோம்.” என்றான் அவன்.

“அப்போ கெளதம்?” என்றாள் அஞ்சலி.

“தனு அண்ணா தானே? அவர் ராம் கையை உடைக்க தான் ஆள் அனுப்பினார்.

அதை தெரிந்து கொண்டு தான் அவன், உன்னை சித்தூருக்கு வரவழைத்து உடனே மருத்துவம் கூட கிடைக்காத ஒரு குக்கிராமத்தில் வைத்து உன்னை அட்டாக் செய்தான்.

கை, கால் உடைப்பான், இல்லை கத்தியால் உன்னை குத்துவான் என்று தான் நினைத்தேன்.

ஆனால் அவனுக்குள் இப்படி ஒரு கொடூரம் இருக்கும் என்று சத்தியமாய் தெரியாது.

பழி கெளதம் மேல் வருவது போல் தான் பார்த்து கொண்டோம்.

ஆனால் அதே சமயம் அவர் மத்திய தொழில் துறை மந்திரியுடன் இருந்ததால், ராம் பற்றிய விவரம் இத்தனை வருடமாய் கிடைக்காமல் போக, கெளதம் மேல் பழி வரவேயில்லை.

அவரும் ஜெயிலுக்கு போய் இருந்தார் என்றால் ஒட்டுமொத்த சொத்துக்கும் தனு ஒருத்தி தான்.” என்றான் அவன்.

எதையோ யோசித்த அஞ்சலி, “அப்போ தனு குழந்தையை கொல்ல சொல்லியும் கெளதம் சொல்லலை அப்படி தானே?” என்றாள்.

“ஆமா… அவருக்கோ, அவங்க குடும்பத்திற்கோ தனு ப்ரெக்னென்ட் என்பதே தெரியாது. ரொம்ப ஸ்ட்ரெஸ், மனசிதைவில் இருந்தது அந்த பொண்ணு. உணர்ச்சி எல்லாம் மரத்து போய் நடைபிணமாய் தான் இருந்தது.

அதை பயன்படுத்தி யார் கிட்டேயும் தனு கர்ப்பம் என்று சொல்லவேயில்லை. எங்க கிட்டே தானே டிரீட்மென்ட்டுக்கு கொண்டு வந்தாங்க. அப்போ கருவை கலைச்சிடலாம் என்று பிளான் போட்டு இருந்தோம்.

விஷ்ணு வெளிநாட்டில் இருந்து வந்ததால், தனு வீடே கதி என்று இருக்க, அவன் பிளான் எல்லாம் சொதப்ப ஆரம்பித்தது. அவனுக்கு உடனே தனுவை கட்டி கொள்ளணும் என்று வெறியே வந்தது.

கடைசி முறை டெஸ்ட்டுக்கு வந்த போது. நாங்க கொடுத்த மருந்தை ரொம்ப குறைவாய் தனு எடுத்து கொண்டதால், இங்கே தான் கூட்டி வந்தாங்க.

‘குழந்தை செத்து போச்சுன்னு’   சொல்லி அதை குப்பை தொட்டியில் போட்டுட்டாங்க. டூட்டியில் நாங்க தானே இருந்தோம்.பெரிய டாக்டர் வருவதற்குள் எல்லாத்தையும் முடிச்சிட்டோம்…” என்றவன் அவர்கள் நடத்திய கோரங்களை சொல்ல, அங்கே இருந்தவர்கள் திகைத்து நின்றார்கள்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்