வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 17

இன்று

தன் வீட்டில் வந்து அமர்ந்திருந்த இருவரின் அதிர்ச்சியையும் கண்டுக் கொள்ளாமல், ரிஷி கையில் இருந்த காபியை வாங்கி ஷோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்த கீர்த்தி,

இருவரையும் மாறி மாறிபார்த்து ஒவ்வொரு மிடராக காபியை அருந்திக் கொண்டிருந்தாள்.   

‘இங்க என்ன நடக்குது’ என்பதாக ரிஷியின் பார்வை விஷ்ணுவைப் பார்த்திருந்தது.

‘இவன் எதுக்கு இங்க வந்தான்? இங்க என்ன நடந்துட்டு இருக்குது?’ என்பதாய் விஷ்ணு கீர்த்தியைப் பார்த்திருந்தான்.

உங்கள் இருவரின் பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்பதைப் போல் கீர்த்தி இருவரையும் பார்த்திருந்தாள்.

‘ரிஷி, தான் வைத்திருந்த  போட்டோவைப் பார்த்து விட்டானோ?’ என்று எண்ணிக் கொண்டிருந்த கீர்த்திக்கு விஷ்ணுவை நேரில் கண்டதும் அந்த எண்ணமெல்லாம் விலகி ஓடியிருந்தது.

இப்பொழுது அவள் கண் முன் இருப்பது அவளது எதிரி!

அவன் முன் தன் கலக்கத்தைக் காட்டுவதா? நோ… நெவெர்!

அந்த எதிரியின் கோபத்தை கண் முன் காண விரும்பினாள் கீர்த்தி!

“உக்காரு ரிஷி”

‘ரிஷி’ என்ற ஒருமை அழைப்பில் விஷ்ணுவின் புருவம் சுருங்கியது. அவன் முகத்தைப் பார்த்த கீர்த்தி மெதுவாகச் சிரித்துக் கொண்டாள்.

“இல்ல கீர்த்தி… நான் கிளம்புறேன் நீங்க விஷ்ணு கூட பேசிட்டு இருங்க” அவன் கிளம்பப் பார்க்கவே.

“அதுதான் மேடம் சொல்லுறாங்களே நீ உக்காரு மாப்பிள்ளை”

‘மாப்பிள்ளையா?’ என்னடா நடக்குது இங்க? இப்போதான் மாப்பிள்ளை எல்லாம் இவன் கண்ணுக்கு தெரியுதா?’ பல்லைக்கடித்தவன்.

‘இப்போ கொஞ்ச நேரம் முன்ன வரைதான் நீ என் மாப்பிள்ளை இப்போ இல்ல?’ கடுகடுப்புடன் விஷ்ணுவை ஏறிட்டான் ரிஷி.

“அட… உக்காருங்க மாப்பிள்ளை”

ரிஷியின் கையை பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான் விஷ்ணு. இப்பொழுது இவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ரிஷி.

‘கட்டின பொண்டாட்டி கண்ணு முன்னாடி இருக்கிறா? எதுவுமே தெரியாம இவன் எப்படி இப்படி இருக்கிறான்.’ ஆச்சரியம் மேலிட அவனையேப் பார்த்திருந்தான்.

‘அந்த போட்டோவில் இருந்தது விஷ்ணு இல்லையா? எந்த பாதிப்பும் இல்லாம அங்க என் தங்கச்சியை நிச்சயம் பண்ணிட்டு இங்க எப்படி வந்து இருக்கான்?’

அவனால், இவனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. கீர்த்தியை பார்க்கும் பார்வையில் கூட விஷ்ணுவுக்கு குற்ற உணர்ச்சி இல்லை.

“என்னாச்சு?”

 ரிஷியின் இந்த இடைவிடாத பார்வையைக் கண்டு விஷ்ணுதான் கேட்டிருந்தான்.

நத்திங்” என்றவன் எழ,

“என்ன?” என்றாள் கீர்த்தி.

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன் கீர்த்தி. ஆனா முடியவே இல்லை… நாம எப்போ மீட் பண்ணலாம்?” என்றவன் விஷ்ணுவைப் பார்த்துக் கொண்டான்.

அன்றும் பேச வந்த பொழுது விஷ்ணு வந்தான், அதன் பிறகு தங்கையின் நிச்சயம் என்று நாள் கடக்க, இன்று பேசலாம் என்று எண்ணி அவளுக்கு அழைத்தால் அதுவும் முடியாமல் இங்கு வந்தால் இதோ இப்பொழுது இவன் வந்து நிற்கிறான்.

சிறிது யோசித்தவள், “நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம் ரிஷி. ஒரு மீட்டிங் இருக்கு அது முடிச்சுட்டு உன்னை நான் மீட் பண்ணுறேன். 7 மணிக்கு மெரினால மீட் பண்ணலாம்”

“ஓகே கீர்த்தி… டேக் கேர்” என்றவன், விஷ்ணுவை பார்த்து, “கிளம்புறேன் விஷ்ணு” வேகமாய் வெளியே சென்றான் ரிஷி.

“ஆக, இப்போ இவனை புடிச்சாச்சு? அது எப்படி உன்னால மட்டும் இது முடியுது”

“ஆஹான்”

“அந்த மூர்த்தி என்ன ஆனான்? வயசானவன்னு விட்டுட்ட போல… ரிஷி… ரிஷின்னு ரொம்பதான் உருகுற? அவன் என்னடான்னு பார்த்தா உனக்கு சேவை பண்ணிட்டு இருக்கான். எப்படி அவனை உன் கைக்குள்ள போட்ட எனக்கும் சொல்லேன்.”

“அப்புறம்”

“என்ன அப்புறம்?” பல்லைக் கடித்துக் கொண்டான் விஷ்ணு.

“எதுக்கு வந்த? இதை கேட்கவா? எனக்கு திறமை இருக்கு எத்தனை பேரையும் பிடிப்பேன். ஏன்? உன் திறமையால இப்போ நீ ரிஷிபாவை பிடிக்கலையா? நான் உன்கிட்ட வந்து ஏதாவது கேட்டேனா?”

“அவ எனக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு. நான் உன்னை மாதிரி அலையல?”

“அது என் இஷ்டம் உனக்கு என்ன வந்திச்சு” என்றாள் கோபமாக.

‘விட்டா ரொம்பதான் பேசிட்டு போறான். இவனுக்கு இப்படிதான் பதில் சொல்லணும்’ முறைத்துக் கொண்டாள்.

“அப்படி உருகின? எல்லாம் மறந்து போய்ட்டா என்ன?” என்றவன் இப்பொழுது உல்லாச மனநிலையில் மாறினான்.

அன்று,

அவள், அவனிடம் வேலைப் பார்த்தப் பொழுது,  சிகிச்சை முடிந்து வந்தவனை காதலாகப் பார்த்த கீர்த்தியின் நினைவு மனதில் எழ, ஷோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்திருந்து காலரை தூக்கிக் விட்டுக் கொண்டான். அதில் இரண்டு பட்டனை திறந்து விட்டிருந்த ஷர்ட் கொஞ்சம் மேலே எழுந்தது.

அவனையேப் பார்திருந்தவளின் பார்வை, இப்பொழுது அவனது முகத்தை விட்டு, அவனது நெஞ்சில் பாய்ந்தது.

அதில் தெரிந்த டாட்டுவில் அவள் மனம் தடுமாறியது. மனம் தேவ்வுடன் கழித்த அந்த நாட்களுக்கு சென்றது. அவன் அன்று டாட்டுவையிட்டு வந்ததும், அதில் அவள் மயங்கியதும், அவன் அணைத்ததும் நினைவில் எழ, அவளில் நிழழும் உணர்வை அவளால் தடுக்கயியலவில்லை.

அவன் இத்தனை நேரம் பேசியது, அவன் யார்? இவள் யார்? எல்லாம்… எல்லாம் மறந்துப் போக அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.

அவளின் மச்சானைப் பார்த்தால், அவளில் பொங்கி பெருகும் காதல் உணர்வு இப்பொழுது அவளில் பொங்கியது.

அவனா? இது அவன்தான் அவனே தான்! என இவள் எண்ணிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும், இது அவன் இல்லை என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்துவான் விஷ்ணு.

ஆனால்?

இப்பொழுது, அவனையும் அவன் நெஞ்சில் உள்ள மச்சமும்? அவளுக்கு அவள் மச்சானை நினைவுப் படுத்துகிறதே?

மனதில், தேவ்வை நினைத்து அவள் உருகிக் கொண்டிருக்க, கண்களோ விஷ்ணுவையே பார்த்திருந்தது.

இவன் என் மச்சான். நான் உருகி உருகி காதலித்த என்னுடைய மச்சான்!

அவளது கண்கள் அப்பட்டமான காதலை வழிய விட, அவளையேப் பார்த்திருந்த விஷ்ணு ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.

அவனது கண்கள் தட்டு தடுமாறி, அவளது முகத்தில் நிலைக்க… கொஞ்சம் கொஞ்சமாய் அவள் முகம் முழுவதும் நிலைக்க விட்டான்.

இத்தனை நாளும் அவளை எதிரியைப் போல பார்த்தவன் மனம் முதல் முறையாக அவளை ரசனையாகப் பார்த்து வைத்தது!

அவனது பார்த்து அங்குலம் அங்குலமாக அவளில் நிலைக்க அவள் தவித்துப் போனாள். தேவ் பார்வையும் இப்படிதான் அவள் முகத்தையே அங்குலம் அங்குலமாக ரசிக்கும்!

ரிசப்ஷன் சென்று வந்த அதே புடவையில், முகத்தில் அங்கும் இங்கும் புரண்டுக் கொண்டிருந்த  முடி, அப்பொழுதான் கழுவிய முகம் என்று கலைந்தும் கலையாத தோற்றத்தில் அவனுக்கு பேரழகியாக அவன் கண்களுக்கு காட்சி தந்தாள் கீர்த்தி.

அவன் பார்வை அப்படியே நகர்ந்து அவளின் இதழ் கீழே இருக்கும் மச்சத்தில் ஒரு நொடி தயங்கி நிற்க, கையை நீட்டி அவளது மச்சத்தை தொட்டான் விஷ்ணு.

கொஞ்சம் கொஞ்சமாய் அவனில் கரைந்துக் கொண்டிருந்தவள், அவனது ஒற்றை தொடுதலில் தன் வசம் இழக்க ஆரம்பித்திருந்தாள்.

அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல், ஷோபாவை விட்டு எழ, அவள் பின்னே அவனும் எழுந்துக் கொண்டான்.

“பொம்மு”

அவனறியாமல், அவனில் இருந்து வர, அவனின் அந்த அழைப்பு, அவளின் மச்சானின் அழைப்பு. அவளின் உயிர்வரை சென்று தீண்டியது!

அன்று இதே அழைப்பில்தான், அவளை உயிரோடு கொன்றான், எதுவும் அவளது நினைவுக்கு வரவில்லை. 

பொம்மு என்ற அவனது அழைப்பும், அவனது டாட்டூவும் மொத்தமாய் அவளது நினைவுகளை சுருட்டிக் கொண்டது.

“மச்சான்!” உயிரை குடிக்கும் காதல் அந்த ஒற்றை சொல்லில்!

இவள் அவனை நோக்கி திரும்ப, கண்களில் மயக்கத்தை தாண்டிய ஏதோ ஓன்று அவளை ஈர்க்க அவனை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தாள் கீர்த்தி.

அதற்கு மேல் முடியாமல், அவனையேப் பார்த்து நிற்க, அவளை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்து, அவளை அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

“மச்சான்” அவன் அணைப்பில், முகத்தை அவனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டவள்.

அவனது டாட்டூவில், அன்று போல் இன்றும் தன் முத்திரையைப் பதித்தாள்.

அவளின் இதழ் ஒற்றலில், அன்று போல் இன்றும் அவளது மச்சான் இறங்கிப் போனான்.

“கீர்த்தி” ஒற்றை அழைப்பு,

 “ம்ம்” ஒற்றை சொல்,

“என்னைப் பார்”  சின்ன அதட்டல்,

“ம்ஊம்” சின்ன மறுப்பு,

“நான் உன் மச்சான் தானே?”  கெஞ்சலோ?

“ம்ம்ம்ம்ம்ம்ம்” நீண்ட சொல்,

“நீ என் பொண்டாட்டிதானே?” அவனது குரலில் கிறக்கமோ?

“ம்ம்ம்” மயக்கம் வந்தமர்ந்தது.

“பொம்மு” அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான் விஷ்ணு.

மனம் முழுவதும், அவளது தேவ்வே நிறைத்து இருக்க விஷ்ணுவை அணைத்துக் கொண்டாள் கீர்த்தி. 

அவளது அறைக்கு சென்றவன், அவளை அமரவைத்து அவள் அருகில் அமர்ந்துக் கொண்டவன், அவளது முகத்தை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

பல யுகங்கள் சென்று, இன்றுதான் அவள் முகத்தைப் பார்ப்பதுப் போல் அள்ளி பருகி கொண்டிருந்தான்.

அந்த முகம், அதில் தெரிந்த வசீகரம்… அந்த கண்கள் அதில் தெரிந்த காதல் தட்டு தடுமாறிப் போனான் விஷ்ணு.

இந்த பெண்… இந்த பெண்ணின் காதல்?

எல்லாம் உனக்குத்தான், அவன் மனது அடித்துக் கூறியது!

அந்த நொடி… அந்த நிமிடம்… எல்லாம் மறந்தான் விஷ்ணு.

சில மாதங்களுக்கு முன் தன் கண்களில் காதலை ஏந்தி, இவனைப் பார்த்து நின்ற கீர்த்தி மட்டும்தான் அவனது கண்களுக்கு தெரிந்தாள்.

அதே காதலை சற்றும் குறையாமல், இன்றும் அவளது கண்களில் கண்டான் விஷ்ணு.

எல்லாம் அவளாகிப் போக, அவளுக்கு எல்லாம் அவனாக மாற எண்ணினான்.

காரிகை, அவளது தொழில், மூர்த்தி  எல்லாம் அவனுக்கு  மறந்துப் போக, கீர்த்தி மட்டுமே கண்களுக்கு தெரிந்தாள்.

அவள் தன் மேல் மலையளவு வஞ்சம் வைத்திருக்கிறாள்? ஆனால், இப்பொழுதோ அந்த கண்களில் காதலைக் கண்டதும் தடுமாறிப் போனான் அவன்.

அதற்கு மேல் எதையும் சிந்திக்காமல், தன் இதழ்களை அவள் இதழில் புதைத்துக் கொண்டான்.

ஒரு இதழொற்றலோடு விலகிட எண்ணிய அவனது உணர்வுகள், அவளில் மூழ்கிப் போக அவனைத் தூண்டியது.

அவளது கன்னம், கண்கள், நெற்றி என்று தன் முத்திரையை பதித்த அவனது இதழை,

‘என்னைக் கொஞ்சம் பாரேன்’ என்று சீண்டியது அவளது இதழ் மேல் ஒய்யாரமாய் இருந்த ஒற்றை மச்சம்.

சும்மாவே கிறங்கிப் போனவன், அதன் சீண்டலில் மீண்டும் அவனது இதழ் பயணம் கீழ் நோக்கி பயணித்து, அந்த மச்சத்தோடு ஒட்டிக் கொண்டது.

அவன் கரங்கள், அவளில் தட்டு தடுமாறி பயணிக்க, அவளில் மெல்லிய நடுக்கம்…

 “பொம்மு” அவன் இதழ் பிதற்ற, அவனில் மூழ்க ஆரம்பித்த தருணம், அவள் மயக்கம் மெல்லமாய் விடுபட,

“வே… வேண்…” மேலும் தொடராமல் அவள் இதழ்களை, தன் இதழோடு பொருத்திக் கொண்டான்.

   அவன் குனிந்து, அவள் இதழில் முத்தமிட, அவளது முகத்தை மறைத்து விழுந்த அவனது முடி, அவள் முகத்தோடு உரச, ‘இவன் அவனில்லை’ தன்னை மயக்கத்தில் இருந்து முற்றிலும் மீட்டுக் கொண்டாள் கீர்த்தி.

“விஷ்ணு” அவள், அவனை தள்ளப் பார்க்க,

“உன் விஷ்ணுதான்” அவளை மேலும் தன்னில் புதைத்துக் கொண்டான்.

அவன் ஒவ்வொரு கட்டமாய் அவளில் முன்னேற, அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளப் பார்க்க, அவனை கொஞ்சமும் நகர்த்த முடியவில்லை. மிகவும் தவித்துப் போனாள்.

‘இது தப்பு… இது முறையல்ல… உன் மச்சானை நீ ஏமாத்துற?’ அவள் மனம் விடாமல் புலம்ப, அவள் உடல் அவளை அறியாமல் நடுங்க தொடங்கியது.

இதை எதையும் உணராத விஷ்ணு, அவளை கொள்ளக் கொள்வதில் ஆர்வமானான்.

அவளது நடுக்கம், தவிப்பு, விலகல் எதுவும் அவனை பாதிக்கவில்லை. அவன், அவளை விட்டு விலகவும் இல்லை. 

 ஒரு எல்லைக்கு மேல் அவனிடம் போராட முடியாமல் தோய்ந்து சரிந்தாள் கீர்த்தி. வலுவிழந்தவளின் மீது வலிமையான அவனது கரங்கள் பரவிப் படர்ந்து அவளை தன் சொந்தமாக்கிக் கொண்டது.

கலைந்து, களைத்து கிடந்தவளின் தலைக் கோதி, அவள் நெற்றியில் முத்தமிட்ட பொழுது அவன் கைகளிலே மயங்கி சரிந்திருந்தாள்.

 அவள் மேல் இருந்த தன் மயக்கம் தெளிந்தவனுக்கு தான் செய்த செயலின் வீரியம் புரிய, “மடையா” தன் தலையிலே ஓங்கி அறைந்துக் கொண்டான்.

“ச்சை… போயும் போயும் இந்த அணில் கடித்த பழத்தின் மீதா என் உணர்ச்சிகளை கொட்டினேன்”

அவனை நினைத்தே அவனுக்கு, அருவருப்பாக இருந்தது.

“என்னடா பண்ணி வச்சிருக்க நீ… சும்மாவே பொண்டாட்டி… பொண்டாட்டின்னு சொல்லுவா. இப்போ நல்ல வாய்ப்பை குடுத்திருக்க. அம்மா சொல்லுறது சரிதான் நீ வேஸ்ட்” தன்னை தானே தலையில் அறைந்துக் கொண்டான்.

அவள் அருகில் அமர்ந்திருந்து அவளையேப் பார்த்திருந்தவன்.

அவளது நெஞ்சில் தலையை வைத்துப் பார்த்தான், இதயம் துடிப்பதை உணர்ந்துக் கொண்டவன். ஆசுவாசம் அடைந்தவன் அவள் மேல் போர்வையை போர்த்தி விட்டான்.

“ஏண்டி, என் கோபத்தை அதிகப்படுத்துற… இப்போ நான் நடந்துகிட்ட முறை எனக்கு தப்பாவே தோணல, அதுக்கு காரணமே நீதான். நீ மட்டும்தான்…  

நான் எப்பொழுதும் நான்தான்… என்னை சீண்டிப் பார்க்காத. மேலும் அனுபவிக்க போறது நீதான்.”

அந்த நேரம் போன் அழைக்கவே, சுற்றும் முற்றும் பார்க்க, கீர்த்தி போன் ஒலித்துக் கொண்டிருந்தது.

கை நீட்டி அருகில் இருந்த மேஜை மேல் இருந்த போனை எடுத்துப் பார்க்க, ‘ரிஷி காலிங்’ என்று வரவே, பல்லை நறநறவென கடித்துக் கொண்டான்.

“எல்லாம் இவனால வந்தது” போனை கட்டிலில் எறிந்தவன், தனது உடையை எடுத்து அணிந்துக் கொண்டான்.

மீண்டும் அறையை சுற்றும் முற்றும் பார்க்க, அவள் போன் இருந்த மேஜை மேல் ஒரு டைரி இருக்க, அதை திறந்தவன்,

“எனக்கு இன்னைக்கு தந்ததுப் போலதான… நாளைக்கு ரிஷிக்கும் குடுக்க போற. இனி சந்தோசமா போ.” எழுதி அதை அப்படியே விரித்து வைத்து அதன் மேல் அவளது போனை வைத்து அறையை விட்டு வெளியே சென்றான்.

விடாமல், ‘ரிஷி காலிங்’ என்று அவளது போன் அழைத்துக் கொண்டிருந்தது.

‘நீ பண்ணுறது சரியா?’ காரில் சென்றுக் கொண்டிருந்த விஷ்ணு மனம் விடாமல் வாதாடிக் கொண்டிருந்தது.

‘சரியோ? தப்போ? நடந்ததுக்கு நான் மட்டும் பொறுப்பு இல்லை அவளும்தான். ஏன் இப்படி செய்தன்னு, அவ வந்து கேட்கட்டும் நான் பதில் சொல்கிறேன்’

மனதை அடைக்கியவன் பல சிந்தனையுடன் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான்.

அவள் எழுந்திருந்திருப்பாளா?

ரிஷி வந்திருப்பானோ?

‘இல்ல அவன் வரக்கூடாது… வரவேக் கூடாது?’ காரை மீண்டும் கீர்த்தி வீட்டை நோக்கி திருப்பினான்.

அவளது அப்பார்ட்மெண்டில் காரை நிறுத்தியன் அப்படியே அங்கயே காரில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

காரை விட்டு இறங்கவெல்லாம் இல்லை. காரிலே அமர்ந்திருந்து அவளது பிளாட் நோக்கி பார்த்திருந்தான்.

‘இப்படி நினைக்கிறவன், ஏன் அவளை விட்டு வரணுமாம்?’

‘…’ அவனிடம் பதில் இல்லை. அவள் எழும் போது அவன் அங்கு இருந்தால், என்ன நடக்கும் என்பது அவனுக்கு தெரியாதா என்ன?

அவன் இன்னும் கீர்த்தியை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையோ?

கொல்வாள்.

எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்?

இத்தவணை என்னை ஆட்கொள்வாயா?

சூடிய வாடலை சூடியவா

களவாடிய சிந்தினையை திரும்பத்தா

பூதனையாக பணித்திடுவாயா?

பாவை விரகம் பருகிடுவாயா?