வானம் காணா வானவில்-14

வானம் காணா வானவில்-14

அத்தியாயம்-14

வரவேற்பின் அயர்ச்சி மிச்சமிருந்தாலும், பழக்கம் காரணமாக வழமைபோல, விசாலினி ஐந்து மணிக்கு எழுந்திருந்தாள்.
ரெஜிஸ்ட்ரேசன் முடிந்தபின்பு, அரவிந்தன் வீட்டில் அவ்வப்போது வந்து தங்கியிருந்த நாட்களில், காலைப் பயிற்சிகளுக்காக தனது அறையிலேயே, பார்ட்டீசன் மூலம் தனது விருப்பம் போல மாற்றம் செய்து தரக் கேட்டிருந்தாள், விசாலினி.
எழுந்தவள், முந்தைய நாளின் களைப்பினால் அசந்து உறங்கும் அரவிந்தனை கண்களில் நிரப்பியபடியே… தனது அறைக்குச் சென்றாள்.
தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு, பயிற்சியுடன் கண்ணும் கருத்துமாக பயணித்திருந்தாள்.
பயற்சி முடிந்து குளிக்க ஆயத்தம் ஆகும் வேளையின் போது அங்கு வந்த அரவிந்தன்,
“என்ன ஷாலு, அதுக்குள்ள எக்ஸ்ஸசைஸ் முடிச்சிட்டியா?”, என ஏக்கமாகக் கேட்டான்.
“ஆமா”, என சிரித்தபடியே கணவனின் கண் நோக்கியவள், கணவனின் கண்களில் கண்ட மாறுபாட்டை உணர்ந்து
“நீங்க போயி உங்க ரொட்டீன் செட்யூல் கண்டினியூ பண்ணுங்க, நான் குளிக்கப் போறேன்”, என்று அங்கிருந்து அகல எத்தனிக்க, மலர்ந்த மலரின் வாசத்தைப் போல… பரவி தனது மனைவியை ஆவலோடு
நெருங்கியவன், “என்ன அவசரம்! ஒரே ஒரு ஸ்ட்ராங்க் காஃபி குடுத்துட்டு போவேன்!”, என அவளிடம் ஏக்கமாகக் கேட்டான், அவளவன்.
தனது கணவனின் காஃபியில் சுதாரித்தவள், “அதுக்கெல்லாம் நேரங் காலம் இருக்கு! இப்ப அதுக்கு வாய்ப்பில்ல! நீங்க காஃபியோட விடற மாதிரி… உங்கள பாத்தா… இப்போ எனக்குத் தோணல…! அத்தோட எக்ஸசைஸ் செய்ததில உடம்பெல்லாம் ஒரே ஸ்வெட் ஸ்மெல்லா இருக்கு. அப்புறம்…”, என இழுத்தவள், “அத்தம்மா தேடுவாங்க… லேட்டா போனா நல்லாருக்காது! நான் குளிச்சிட்டு சீக்கிரமா கீழ போகணும்!”, என்றவளை… அவள் பேசி முடிக்குமுன்
அலேக்காக தன் இரு கைகளால் தூக்கியவன், தன்னவளின் திமிறி தன்னிடமிருந்து விடுபட செய்யும் முயற்சியை, திறமையாக முறியடித்தான் அரவிந்தன்.
புதிய தாலிக்கயிறு, முந்தைய இரவில் சூடப்பட்டிருந்த மலர்களின் மிச்ச மணம் மற்றும் வியர்வையுடன் கூடிய வாசத்தை தனக்குள் நிரப்பியபடி… விசாலினியை கையில் திமிற முடியாமல் தன்னோடு இறுக அணைத்திருந்தான். தங்களது அறைக்குள் வந்தவன், அறையின் பெரும்பான்மை இடத்தை ஆக்ரமித்திருந்த அவர்களின் படுக்கையில்… தனது மனையாளை விட்டான்.
விசாலினி படுக்கையில் இருந்து எழ முயற்சிக்க, அவள் எழுமுன்… அவளை அணைத்தபடியே தானும் படுக்கைக்கு வந்திருந்தான், அரவிந்தன்.
“பகல்ல எல்லாம் இது தப்புன்னு… பாட்டி சொன்னாங்க!”, என கிசுகிசுப்பான குரலில் மெதுவாக அரவிந்தனிடம் விசாலினி கூற,
“என் அறிவுப் பெட்டகமே! இது பகலா?”
“பின்ன…?”, அரவிந்தனின் கேள்வியில் குழம்பியவள் கேட்டிருந்தாள்.
“அதிகாலை!”, அருமையான பதிலைக் கூறியிருந்தான் அரவிந்தன்.
“விடிஞ்சிட்டாலே பகல்தான்!”, என விசாலினி முணுமுணுக்க
“மாமா பெத்த ரத்தினமே…! இப்ப இந்த ஆராய்ச்சி நமக்கு தேவ தானா? சொல்லு!”
“என்ன சொல்லு, மெல்லுனு…! பெரியவங்க நம்ம நல்லதுக்கு தான சொல்றாங்க”, என ராகமிழுத்தவளை, இழுத்து இறுக அணைத்திருந்தான்.
“வேற என்னல்லாம் சொன்னாங்க, அந்த அழகி?”, என நக்கலாக கேட்டான், அரவிந்தன்.
“நிறைய சொன்னாங்க”, என முறுக்கிக் கொண்டாள்.
“ஒன் பை ஒன்னா சொல்லு…”, கேட்கும் எண்ணமில்லாத போதும் கூற ஊக்கமளித்தான்.
“பகல்ல சேர்ந்திருக்க கூடாதுனு சொன்னாங்க, அப்புறம் ஒவ்வொரு தமிழ் மாசம் பொறக்கிற அன்னிக்கு, கிரகணம், அமாவாசை, பௌர்ணமி, அன்னிக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கைல இருந்தாலும், குழந்தை ஜனிக்காம சேஃபா இருக்கணும்னு சொன்னாங்க…
எண்ணெய் தேய்ச்சி குளிக்கிற அன்னிக்கு எல்லாம் சேரவே கூடாதுனு சொன்னாங்க!”
“முடியலடீ… இப்ப வர… சேரக்கூடாத கணக்கு தான் விலாவாரியா விபரமா சொல்லுற…! சேருற கணக்க சொல்லவே இல்லயா அந்த அழகி…! இல்ல நீ மறைக்கிறியா?
சொல்லுடி…!”, என தன் இதழால் தன்னவளின் முகத்தில் கதை எழுதியபடியே, “இப்டியே போனா… அந்த அழகிக்கு கொள்ளுப் பேரன் எப்டி கிடைப்பான். இப்ப காலைல நேருல போயி நான் நியாயம் கேக்கப் போறேன்”, என்றவனை
“இன்னும் நிறைய சொன்னாங்க, எங்க நீங்க என்னை சொல்ல விடுறீங்க”, என ஆதங்கப்பட்ட மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்,
“இது வர சொன்னத கேட்ட போதே… எனக்கு கண்ண கட்டிருச்சு, இன்னும் முடியலங்கற…! நாம இன்னொரு நாள் இதப் பத்தி பேசிக்கலாம்டா ஷாலுமா!,
இப்ப நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ணாம… நம்ம நியூ புராஜெக்டுக்கு பூஜை ஆரம்பிக்கலாம்!”, என்றபடி தன்னவளை முன்னிலும் இறுக அணைக்க,
“பாட்டி கேட்டா என்ன சொல்வேன்?”, என விசாலினி அரவிந்தனின் அணைப்பிற்குள் இருந்தபடியே சிணுங்க
“இதப்பத்தியெல்லாம் எதுக்குடீ பாட்டிகிட்ட சொல்ற…!”, என தனது வாயால் கேட்டவன், கேட்டவளின் இதழை தன் இதழ் கொண்டு வசப்படுத்தி முற்றுகை இட்டிருந்தான், அரவிந்தன்.
காஃபியில் துவங்கினான்…! (அரவிந்தனின் காஃபி பற்றி அறிய முந்தைய பதிவுகளை படியுங்கள்)
முழுதாக ஒரு நிமிடங்களை முதல் வாயருந்த ஒதுக்கியவன், தன்னவளின் மூச்சிற்காக இளைப்பாற இடைவெளி தந்திருந்தான்.
காஃபீக்கு பிறகு எங்கும் இல்லாத வழக்கம், இங்கு கடைபிடிக்கப்பட்டது.
காஃபீக்கு பிறகு, மட்டன் பிரியாணி!!!
மட்டன் பிரியாணி செய்து, உண்ணும் எண்ணத்தில் இருந்ததால், தயாரானவன்…, தன்னவளையும் தயார் செய்தான்.
மட்டன் பிரியாணிக்கான செய்முறைப் பணியில், தன்னவளுடன் இறங்கியிருந்தான்.
விசாலினி மேலும் முரண்டு… மறுக்க,
“ஸ்…. இந்த மாதிரி நேரத்துல… அப்போஸ் பண்ற மாதிரியான எந்த சத்தமும் இந்த ரூம்ல வரக் கூடாது…! ஷாலுமா…!
இங்க வர சத்தம்… மைல்டா… சந்தோசத்துனாலும், கில்மானாலயும், ஜல்ஜானாலயும்… அப்டியே… ரொமான்டிக்கா… கிக்கா… அது சார்ந்து… எந்த மாதிரினாலும் வரலாம். வேற சத்தம் வந்தா… நமக்கு சீக்கிரமா முடி நரைச்சிருமான்டீ…! பாத்து நடந்துக்க… ஷாலு பேபீ!”, என சிரித்தபடியே கூறியவனின் கூற்றை கேட்டவள், யோசித்திருந்தாள்.
அதற்குமேல், அரவிந்தனின் முறையான பிரியாணி செய்முறையினால், மனதோடு, உடலும், விசாலினிக்கும் நெகிழ…, தனது பருவத்தின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுமாறு, உடல் அவளைக் கெஞ்ச, உணர்வு தந்த உந்துதலால், அதற்குமேல் மறுக்காமல் அமைதியாகியிருந்தாள், பெண்.
படிப்படியான, முறையான செய்முறையாலும், பக்குவமாக நிதானமாக ஒருவரையொருவர் கையாண்டதாலும், நிறைவான ஒருமித்த சந்தோச நிகழ்வாக, அருமையான ருசியான, பிரியாணி பரிமாறப்பட்டு, நிதானமாக, நிறைவாக ரசனையோடு உண்ணப்பட்டது. அவர்களின் முதல் கூடலிலேயே இருவருக்கும், நிறைவான, நிதானமான, உச்சநிலை சாத்தியமாகியிருந்தது.
கூடலின் மகத்துவம் உணரப்பெற்ற உள்ளங்கள் இரண்டும், களைப்பால், நடந்ததை எண்ணியவாறு படுக்கையில் உடல் தளரப் படுத்த நிலையிலேயே இருவரும் களித்திருந்தனர்.
தன்னவளை அணைத்து உச்சி முகர்ந்தவன்,
“தாங்ஸ்டீ பொண்டாட்டீ!”, என்று மெதுவாகக் கூற,
“எதுக்கு தாங்க்ஸ்லாம்!”, என கோபமாக கணவனின் முகம் நோக்கி கேட்டிருந்தாள், விசாலினி.
“வேணானு சொல்லி ஓடுனவள, ஓடவிடாம…! ஓட்டினதுக்கு…!”, எனத் தன்னவளின் காதிற்குள் கூறி மயக்கும் வண்ணம் சிரித்தவன், “என் இஷ்டத்துக்கு உன்னை படுத்தி… எடுத்ததுக்காக மட்டுமே தாங்க் பண்ணேன்!… …. …. … … …. வேற எந்த உள்நோக்கமும் இல்லடீ”, என சிரித்தபடியே கூறினான்.
அதுவரை அரவிந்தனின் அணைப்பிற்குள் இருந்தவள்,
“அதுக்கு தாங்ஸ்லாம் சொல்லுவீங்களா?”, என தனது இருகைகளாலும், அரவிந்தனின் பின்புற தலையில் இருந்த முடியை தன் இருகை கொண்டு வலித்துப் பிடித்தபடியே விசாலினி கேட்க
அவளின் எதிர்பாரா செயலில்… இனிமை கூடி… தன்னை மீட்டினாலும், அவளின் கரம் கொண்டு இழுக்கப்பட்டதால் எழுந்த வலி தாளாமல், “இனி சொல்ல மாட்டேன்டீ… வலிக்குதுடீ… கொஞ்சம் முடிய… விடுவேன்!”, என மனைவியிடம் கெஞ்சியிருந்தான்.
“அது!”, என்றபடியே தனது பிடியை விட்டவள், தன்னவனிடம் இருந்து விலகி, தனது ஆடைகளைச் சரி செய்துவிட்டு, எழுந்தாள்.
“இப்ப தாண்டி ஆறரை மணியாகுது, அதுக்குள்ள குளிச்சி என்ன செய்யப்போற?”, என குளிக்க கிளம்பிய மனைவியை வம்பிற்கு இழுத்தான், அரவிந்தன்.
“எதுக்குள்ள போனேன்…!!!”, என தன்னவனை நக்கலடிக்க
“ஏண்டி இந்தக் கொசுக்கடியா இருக்குற…! இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு… அப்புறம் குளிக்கப் போவியாம்!”, என தனது ஐடியாவை எடுத்துவிட
“ஐயா… ராசா… இதுக்கு மேல நான் இங்க இருந்தா என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். இப்ப நான் குளிச்சிட்டு வந்தாதான், அடுத்தடுத்து என்னோட வேலயெல்லாம் பாக்க முடியும்!”, என்றபடி விசாலினி நகர
“ஒரு நிமிசம் ஷாலுமா!”, என்றவன் படுக்கையில் இருந்து எழுந்து வந்தான். விசாலினியின் அருகே சென்று, அவளின் முகத்தை தன் கைகளால் ஏந்தி… அவளின் கண்களுக்குள் பார்த்தான்.
அதில் கூடலின் மிச்சமான வெக்கமும், அவன் அருகாமை தந்த புத்துணர்வும் தெரிய, பெருமூச்சுடன் அவளை இறுக அணைத்தவன்,
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா, ஷாலுமா!”, என அணைத்தபடியே கேட்டிருந்தான்.
“ஏன்… இப்டியெல்லாம் கேக்குறீங்க… என்னாச்சு!”, என்றபடியே தனது கணவனின் அணைப்பில் இருந்து வெளிவந்து அரவிந்தனின் முகம் பார்த்து கேட்டிருந்தாள், விசாலினி.
“இல்ல நீ வேணாணு சொல்லி நான் ஃபோர்ஸ் பண்ணதால… உனக்கு எதுவும் சங்கடமானு கேட்டேன்”
“எங்க கேட்டிங்க?, முதல்ல கண்ணுக்குள்ள பாத்திங்க…!”, என தனது பங்கிற்கு குறைப்பட்டுக் கொண்டாள், விசாலினி.
“ம்… அண்ட் தென்… ரொம்ப ரூடா உன்னை ஹேண்டில் பண்ணி நீ டிஸ்டர்ப்டா இருக்கியோனு தான் கண்ணுக்குள்ள பாத்தேன்”, என அரவிந்தன் கூற,
“என்ன தெரிஞ்சது கண்ணுக்குள்ள!”, என விடாமல் கேட்டாள், விசாலினி.
“சொன்னா திட்டுவ!”, பயந்தவன் போல நடித்திருந்தான்.
“என் திட்ட பாத்து நீங்க ரொம்ப பயப்படுறீங்கனு நம்பிட்டேன். சொல்லுங்க…!”
“வெக்கம் பிளஸ் ரெஃப்ரெஷ்”, என்றபடியே சிரித்தவன்,
“அப்டி எல்லாம்… ஒண்ணும் இல்ல!”, என்றபடியே ஆனால், ‘பயபுள்ள எப்டி இப்டி கரிக்கிட்டா சொல்லுதுனு தெரியலயே’ என யோசித்தபடியே அரவிந்தனை சட்டை செய்யாமல் அங்கிருந்து அகன்றிருந்தாள், விசாலினி.
—————————
பத்திற்கு எட்டு அளவில், சுமார் 22 வயது மதிக்கத்தக்க ஒருவரின் புகைப்படம், கிளாஸ் பிரேமில் லேமினேட் செய்யப்பட்டு, திருமணப் பரிசாக அளிக்கப்பட்டு இருந்தது.
பரிசு கொடுத்தவரின் பெயர் எதுவும் பரிசு வழங்கப் பயன்படுத்திய ரேப்பரின் மேல் இல்லாததால், காவல்துறையின் சந்தேகக் கண்காணிப்பு வளையத்திற்குள் அப்பரிசு வந்திருந்தது.
அடுத்ததாக, கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை மதன்தாராவிடம் இருந்து வந்த திருமண வாழ்த்துடன் கூடிய பரிசு.
மதன்தாராவுடனான நட்பு மணமக்களில் யாருக்கு எனும் கேள்வியோடு, வரவேற்பிற்கு நேரில் வர முடியாத நடிகை, யார் மூலம் தனது பரிசை அனுப்பியிருந்தார், என்ற விபரம் அறிய முற்பட்டிருந்தது, காவல்துறை.
சந்திரபோஸிடம் விடயத்தைத் தெரிவித்த காவல்துறையினர், அப்புகைப்படத்தில் இருப்பவனை அடையாளம் காட்ட வருமாறு கேட்டிருந்தனர்.
வரவேற்பு நடந்த மகாலில் கண்காணிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த சந்திரபோஸ், லேமினேட்டட் புகைப்படத்தில் இருப்பவனைத் தெரியாது எனக் கூறியிருந்தார்.
கிருபாகரனுக்கு, விடயம் பகிரப்பட்டு வரவழைக்கப்பட்டார்.
கிருபாகரனுடன், கருணாகரனும் வந்திருக்க,
புகைப்படத்தில் இருந்தவனை அங்கு எதிர்பாராததால், தன் முன் நீட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்தவனின் நினைவுகள் மேலெழ… கிருபாகரன் முகத்தில் தன்னை கட்டுப்படுத்தியும் சற்றே அதிர்ச்சி வாங்கியிருந்தார்.
அதைக் கவனித்த காவல்துறை அதிகாரி,
“எதையும் மறைக்காம எங்ககிட்ட சொன்னாதான், எங்களால் மேற்கொண்டு பாதுகாப்பு தரமுடியும். இல்லைனா வரக்கூடிய எதிர்பாரா சங்கடங்களை எங்களால தடுக்க முடியாம கூட போயிரும்!”, காவல்
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர், தன்னை ஆசவாசப்படுத்திக் கொண்டு, “சொல்றேன் சார்!”, என மெலிந்த குரலில் பகிர ஆயத்தமாகியிருந்தார், கிருபாகரன்.
விடயத்தைப் பகிர தன்னை தயார் நிலைக்கு கொண்டு வந்தவர், திடமான, குரலில் கூற ஆரம்பித்து இருந்தார்.
அப்படி என்ன பெரிய விடயம் என கருணாகரனும், சந்திரபோஸூம் ஆராய்ச்சி பார்வையுடன் கிருபாவைக் கவனித்து இருக்க, கிருபாகரன் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய அந்நிகழ்வை வருத்தத்துடன் கூற விழைந்தார்.
———————–
பரிசு வழங்கியவரைக் கண்டுபிடிக்க, திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட வீடியோவினை உடனடியாக தந்து உதவ, உரிய வீடியோவிற்கு தொடர்பு கொண்டிருந்தனர்.
மேலும், சென்னையில் உள்ள சொற்பமான கிளாஸ் பிரேமில் புகைப்படங்களை லேமினேட் செய்து தரும் தொழில்நுட்ப நபர்களிடம், அப்புகைப்படம் காட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலும், லேமினேட் செய்யப்படும் இடங்களில் அவர்களின் பெயர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சிறியதாக வருமாறு அச்சிட்டு இருப்பர் அல்லது லேமினேட் படத்திற்குப் பின்னால் அவர்களது ஸ்டிக்கரை ஒட்டியே பெரும்பாலும் கொடுப்பார்கள் எனவும், இதில் குறிப்பாக அச்சிடாமல் தவிர்க்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்திருந்தது.
—————–
விசாரணை தொடரும்…!

error: Content is protected !!