அனல் 7.1

அனல் 7.1

அனல் 7.1

ஒரு வழியாக பத்து நாட்கள் ஸ்டடி ஹாலிடே முடிவுக்கு வந்தது.

 

ஸ்டடி ஹாலிடேஸ் இறுதி நாள் இரவு வழக்கம் தவறாமல் தென்றலுக்கு எக்ஸாம் பயத்தினால் காய்ச்சல் வர துவங்கியது.

 

அவள் பயத்தைப் போக்கினாலே காய்ச்சல் தன்னால் அடங்கிவிடும் என்ற நிலையில் இரவு உணவு பண்டங்களை ஆளுக்கு ஒன்றாய் கையில் எடுத்து கொண்டு மாடி ஏறி சென்றனர் தர்மராஜ், தேவகி, அக்ஷா, மித்ரன், விவேகன், தென்றல்.

 

தென்றல் இரண்டு படிகளை சிரமப்பட்டு ஏறியவள் மூன்றாவது படியில் தடுமாறி மீண்டும் முதல் படியிலே வந்து நின்றாள். இவளுக்கு முன்னால் சென்றவர்கள் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நேரம் சரியாக வருகை புரிந்தான் தமிழ்.

 

அனைவரும் தென்றலை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பதை புரியாத பார்வை பார்த்து கொண்டிருந்தவன், அப்போது தான் தென்றலை கவனித்தான்‌.

 

நான்கு நாட்கள் தூங்காமல் இருந்தது போல் சிவந்திருந்த அவள் கண்கள். நாகதாளி பழத்தை எடுத்து பூசியது போல் சிவந்திருந்த அவளின் ஜாப்பனீஸ் மூக்கும் ஆப்பிள் கன்னமும் அவளின் உடல் நிலையை தெளிவாக எடுத்துரைத்தது.

 

அவள் நிக்க முடியாமல் போதை சாமியார் போல தள்ளாடுவதை பார்த்தவன் அவளை கைகளில் ஏந்த நெருங்கும் முன் அவனை தடுத்து நிறுத்தினான் மித்ரன்.

 

மித்ரனை எரிக்கும் பார்வை பார்த்த தமிழைப் பார்த்து சிரித்தவன், “தயவு செய்து லுக்க மாத்துடா சிரிப்பு வருது, நாங்களாம் பல வருஷமா விவேக்கோட டெரர் லுக்க பார்த்தவங்க என்ககிட்ட உன் அமுல் பேபி லுக்க காட்டி சிரிப்பு பன்னாதடா” என கூறி மித்ரன் சிரிக்க.

 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த கேப்பில் தடுமாறியபடி நின்று கொண்டிருந்த தென்றலை அலேக்காக தூக்கிக்கொண்டு மாடி ஏறினான் விவேகன்‌.

 

தென்றலை கைகளில் ஏந்தியபடி செல்லும் விவேகனை பார்க்க பார்க்க தமிழுக்கு மனதில் ஏதோ ஒன்று பிசைவது போன்ற உணர்வு ஏற்பட அவன் கோபத்தை மித்ரனிடம் காட்டினான்.

 

“நான் தான் அவள தூக்க போனேன்ல டா அவ்ளோ நேரம் அவள பார்த்து எல்லாரும் சிரிச்சிட்டு தான இருந்திங்க நான் தூக்க போகும் போது மட்டும் எங்க இருந்து உங்களுக்கு கரிசனம் வந்துச்சாம்” என பொரிந்து கொண்டிருந்தான் தமிழ்.

 

“அட யாருடா இவன் திரும்பத்திரும்ப சிரிப்பு பண்ணிக்கிட்டு யாரு நீ அவளை தூக்க போற, மகனே நான் மட்டும் தடுக்காம இருந்து நீ மட்டும் அவள தூக்கி இருந்தா உன் நிலைமை என்ன தெரியுமா?”

 

“அவள தூக்குன அடுத்த செகென்ட் நாலு பேர் உன்னய தூக்கிட்டு போய் இருந்திருப்பாங்க, இருக்க நாலு எலும்ப வச்சுக்கிட்டு அடக்க ஒடுக்கமாக இருந்துட்டு போவியா அத விட்டுட்டு அதையும் முறிச்சிட்டு போக பிளான் பண்ணிட்டு இருக்க” என அவனை சமாதானப்படுத்திய மித்ரன் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

 

அனைவரும் மாடிக்கு சென்ற பிறகு மித்ரனும் தமிழும் மாடிக்கு சென்று அவரவருக்கு உணவு பரிமாறப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.

 

விவேகனின் அனுமதியோடு தமிழை அக்ஷா அழைத்திருந்தமையால் தமிழுக்கும் சேர்த்து முன் கூட்டியே உணவு சமைக்க பட்டிருந்தது.

 

உண்டு முடித்த அனைவரும் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வட்டமாக அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்கையில் தென்றலின் உடல்நிலை மோசமாக சென்று கொண்டிருந்தது. அவளை நார்மல் மோடிற்குக் கொண்டுவர அனைவரும் கொண்டாட்டத்தில் இறங்கினர்.

 

அனைவரின் ஈடுபாடுடன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி அங்கு இனிதே நடந்தேரியது.

 

முதலில் இவர்களின் கச்சேரியில் களம் இறங்கியது தர்மராஜ் மற்றும் தேவகி தம்பதியினர்.

 

இவர்களைக் கண்ட ‌தமிழ் அந்த காலத்து பாடல் ஏதேனும் ஒன்றிற்கு நடிப்பார்கள் என நினைத்து கொண்டு இருக்கயில் அவர்கள் தேர்வு செய்த பாட்டிலே தமிழின் முழி‌பிதுங்கி வெளியே வந்து விட்டது அவர்களின் நடனத்தை பார்த்தவன் மயங்கி சரிந்தே விட்டான்.

 

அறுபது ஆகிடுச்சு 

மணிவிழா முடிஞ்சிடுச்சி 

ஆனாலும் லவ் ஜோடி தான்

 

இருபதில் ஆரம்பிச்சோம் 

இன்னமும் முடியலையே 

நம்மோட லவ் ஸ்டோரி தான்…

 

என அவர்கள் ஆடிமுடித்து அமரவும் அங்கு கைதட்டல் சத்தம் நிறைந்தது.

 

அவர்களைத் தொடர்ந்து அக்ஷா, மித்ரன், விவேகன் மூவர் கூட்டணியில் இணைந்து அழகான அண்ணன் தங்கை பாடலுக்கு நடனமாடினர்.

 

அழகான சின்ன தேவதை 

அவள் தானே எங்கள் புன்னகை 

நாள் தோறும் இங்கு பண்டிகை 

நம் வாழ்வில் வான வேடிக்கை…

 

என அவர்களின் நடனம் முடிய தென்றலின் உடல் நிலையில் மாற்றம் தெரியவே அடுத்து அவர்களின் ஆட்டம் ஆரம்பம் ஆனது.

 

மூவர் அணி இணைந்து அனைத்து நண்பர்கள் பாடலுக்கும் ஒரு ஆட்டம் போட பாடலின் இறுதியில்

விவேகன் சென்று தமிழை கைப்பிடித்து அழைத்து வந்து அவர்களின் மூவர் அணியில் இணைத்துக் கொண்டு மூவர் அணியை நால்வர் அணி ஆக்கினான்.

 

ஆடல் பாடல் என அனைத்தும் இனிதே முடிவு பெற அனைவரும் உறங்க சென்று விட்டனர் தென்றலின் உடல் நிலையும் இப்பொழுது சீராகவே இருந்தது.

 

தமிழ் அவனின் வீட்டிற்கு கிளம்ப விவேகன் அவனை வழி அனுப்ப சென்றான்.

 

தென்றலையும் விவேகனையும் பிரிக்க நினைத்த தன்னை அவர்கள் அணியில் விவேகன் இணைத்து கொள்ளவும் தமிழின் மனம் குறுகுறுக்க விவேகனை கட்டி தழுவியவன் அவன் செய்த தவறை மறைத்து மன்னிப்பு வேண்டினான்.

 

விவேகனும் ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை. ஓரளவுக்கு இந்த நிகழ்வை அவன் யூகித்தே வைத்திருந்தான் அவன், அதனால் தமிழின் தோளில் தட்டிக் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

 

பிறகு அனைவரும் மாடியிலேயே உறங்கிவிட மறுநாள் பொழுது கதிரவனின் வருகையோடு அழகாக விடிந்தது.

 

நான்கரை மணியிலிருந்து தென்றலை படிப்பதற்காக எழுப்பிக் கொண்டிருந்தார் தேவகி.

 

விவேகனும் மித்ரனும் எழுந்துகொள்ள தென்றல் மட்டும் பத்து நிமிடம் ஐந்து நிமிடம் இரண்டு நிமிடம் என நிமிடங்களை கூறிக்கொண்டே கண்களை திறக்காமல் துயில் கொண்டிருந்தாள்.

 

நிமிடங்கள் கடந்ததே தவிர அவள் துயில் கலைந்தால் இல்லை வழக்கம்போல மித்ரன் பட்டர் பிஸ்கட் ஐடியாவை பயன்படுத்தி தென்றலை துயில் களைய செய்தான் அதற்காக சில பல பரிசுகளையும் அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

 

விவேகனும் மித்ரனும் சற்று இடைவெளி விட்டவாறு மாடியின் சுற்றுச் சுவரில் சாய்ந்து கால்களை நீட்டியவாறு அமர்ந்து படித்துக்கொண்டிருக்க இருவருக்கும் இடையில் சென்று தென்றலும் அவர்களைப்போலவே அமர்ந்து படிக்கத் துவங்கினாள்.

 

10 நிமிடங்கள் கடந்த நிலையில் அதற்கு மேல் பொறுக்க முடியாத தென்றல் விவேகன் மடியில் தலை வைத்து மித்ரன் மடியில் கால் நீட்டி படுத்துக் கொண்டு நெஞ்சின் மீது நோட்டை வைத்தவாறு படிக்க தொடங்கினாள்.

 

விவேகனின் இடதுபுற மடியில் தென்றல் படுத்திருக்க அவளை தொந்தரவு செய்யாதவாரு அவனின் வலது புறம் புத்தகத்தை வைத்து இடது கையால் தென்றலின் தலையை வருடிக் கொண்டிருந்தான் விவேகன்.

 

மித்ரனின் வலது மடியில் தென்றலின் கால் இருக்க அவனின் இடது புறம் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தான். வலது கையால் தென்றலின் காலை பிடித்து விட்டும் கால் விரல்களில் சொடக்கு உடைத்துக் கொண்டும் இருந்தான்.

 

இந்த இருவரின் பணிவிடையால் தென்றலுக்கு கண்கள் சொக்க தூக்கம் சொர்க்க லோகத்தை நோக்கி அழைத்தது.

 

இவர்கள் படிக்கத் துவங்கிய சிறிது நேரத்தில் துயில் களைந்த இவர்களின் நானா சற்று நேரம் மாடியில் காற்று வாங்கியவாறு நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார்.

 

இப்போது தென்றல் நோட்டு புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்து கொண்டு கண்கள் மூடி படுத்திருந்தாள் இதனை கண்ட அவளின் நானா கண்டுகொள்ளவில்லை.

 

நீண்ட நேரம் அவள் கண்மூடி படுத்திருக்க அவளை எழுப்பியவர் “ம்மா தென்றல் என்னடா பண்ற” என்க.

 

கண்களைத் திறந்தவள் “நான் படிச்சதை எல்லாம் மனசுக்குள்ள சொல்லி பார்த்துகிட்டு இருக்கேன்” என்றவள் மீண்டும் படிக்கத் தொடங்கினாள். அவரும் சரி என்று மீண்டும் நடை பயிற்சியை மேற்கொண்டார்.

 

மீண்டும் தென்றல் அதே போல் கண்களை மூடிக்கொள்ள இந்த முறையும் அவர் கேட்ட போது அதே பதிலே வந்தது.

 

சிறிது நேரம் கழித்து அவர் தென்றலை பார்க்கும் போது அவளின் நெஞ்சின் மீது இருந்த புத்தகம் இப்போது அவளின் முகத்தை மூடி இருந்தது அதனை கண்டு சிரித்தவர் அமைதியாக சென்று அந்த புத்தகத்தை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து விட்டார்.

 

தென்றல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவளை மெதுவாக எழுப்பியவர் “ம்மா என்னடா கண்ணா பண்ற” எங்க

 

“எத்தனை தடவை நானா சொல்றது படிச்சத மனசுக்குள்ள சொல்லி பாத்துகிட்டு இருக்கேன்” என்றவள் அவளின் மீது இருந்த புத்தகத்தை தேடியவாறு “நோ நோ நோ” எங்க.

 

அவளின் செய்கை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட மித்ரன் “நோ நோ இல்ல எரும நோட் ஏன் இட்டு வராதா” என அவளை வம்பு இழுக்க, அவளின் காலில் இருந்து நாளு மிதிகளை பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

 

பிறகு தேவகியிடம் இருந்து சில வசைமொழிகளை பெற்றுக்கொண்ட மூவரும் கல்லூரிக்கு செல்ல நேரமானதால் அதற்கு புறப்பட சென்று விட்டனர்.

 

நேற்று தென்றலை தொற்றி இருந்த தேர்வை நினைத்த பயம் இப்பொழுது அவளிடம் இல்லை அவள் சாதாரணமாகவே காணப்பட்டாள் மூவரும் கிளம்பி கல்லூரியை வந்தடைந்தவர்கள்.

 

அவர்கள் தேர்வு எழுதும் அறையைத் தேடி கண்டுபிடித்து செல்வதற்குள் தேர்வு துவங்கும் நேரமும் நெருங்கி விட நேராக சென்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

 

தேர்வை எழுதும் நேரம் மூன்று மணி நேரம் ஆனால் இரண்டரை மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்த தென்றல் மித்ரனையும் விவேகனையும் பார்க்க அவர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தனர்.

 

ஒருவழியாக செய்கை செய்து விவேகனை தன்னை காண செய்தவள் தான் கீழே செல்வதாக கூறினாள்.

 

அவனும் ‘நானும் வருகிறேன்’ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவளின் பதில் எழுதியதாளை ஒப்படைத்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டாள்.

 

“சரியான வானரம் சொல் பேச்ச கேக்கவே மாட்டா” என மனதில் தென்றலை அர்ச்சித்தவன் வேகமாக பதிலை எழுத துவங்கினான்.

 

விவேகன் பேச்சை மீறி தேர்வு அறையில் இருந்து வெளியில் வந்த தென்றல் தேர்வு முடிந்த சந்தோஷத்தில் சிறு துள்ளலுடன் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, நேற்று அடித்த காய்ச்சலின் தாக்கத்தால் உடல் சற்று பலகீனமாக இருக்க, கால்கள் சற்று தடுமாற படி இடறி கீழே விழ சென்றவளை இடை வளைத்து இறுக்கி பிடித்தான் தமிழ்.

 

அவனின் தொடுகையில் உடலில் சிறு மின்சார பாய்ச்சலை உணர்ந்த தென்றல் அவனின் கையை தள்ளி விட்டு கீழே விழுந்தாள்.

 

கீழே விழாமல் பிடித்திருந்த அவனின் கையை தள்ளி விட்டு கீழே விழும் இவளை ‘பைத்தியமா நீ’ என்பது போல் முழித்துக் கொண்டிருந்தான் தமிழ்.

 

சிறிது நேரத்திற்கு முன் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து பயம் கொண்ட அவள் உடல்நிலை சரியில்லாததால் ஏற்பட்டிருக்கும் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

 

அவளின் செய்கை கண்டு தலையிலடித்துக் கொண்டவன்  கைகளை நீட்ட மறுப்பாய் தலையசைத்தவள் படி சுவற்றை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி எழுந்து நின்று நொடிப்பொழுதும் நிற்காமல் ஓடியே விட்டாள்.

 

அவள் செய்கையின் அர்த்தம் புரியாத தமிழ் சிறியதோர் தோள் குலுக்களுடன் ஒரு கையை அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே மறுகையால் தலை முடியை கோதிக்கொண்டு விசிலடித்தபடி ஏறி சென்றான்.

 

தென்றல் தேர்வறையில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் தேர்வை எழுதி முடித்த விவேகன் அறையை விட்டு வெளியேற மித்ரனும் “எங்க டா இவள காணும்” என தென்றலை தேடியவாறே வெளியேறினான்.

 

மித்ரனை வேற்று கிரகவாசியை பார்ப்பது போல பார்த்த விவேகன். தன் சட்டை கைகளை மடக்கி விட்டவாறே,

“அப்போ நீ அவ வெளிய போனதயே கவனிக்கல, அவ்ளோ படிச்சி இருக்க, எக்ஸாம் வேற நல்லா எழுதி இருக்க போலயே!” என அவன் புருவ கணைகளை உயர்த்தி கேட்க.

 

விவேகனின்‌ கைகளை இறுக‌ பற்றி கொண்ட மித்ரன், விவேகன் மடக்கி விட்ட அவன் சட்டை கையை பிரித்து விட்டவாறே, “செத்து  போன எங்க ஆயா மேல சத்தியமா எக்ஸாம் சுமாரா தான் டா எழுதி இருக்கேன் ஸ்லோவா எழுதுனேன் அதான் டா முடிக்க லேட்” என பரிதாபமாக பார்த்தான்.

 

அவன் பயந்தவாறு பதில் கூறிய விதத்தில் விவேகனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை பல் இடுக்கில் மறைத்து கொண்டவன்.

 

“ஆமா இப்போ சத்தியம் பண்ணியே ஒரு ஆயா அவங்க எப்புடி டா செத்து போனாங்க” என மிகவும் சீரியஸாக கேட்க.

 

அவன் கேட்ட கேள்விக்கான பதிலை நினைத்த மித்ரனிற்கு கோபம் வர விவேகனை அடிக்க துரத்தி கொண்டு ஓடினான்.

 

கோபம் வராதா பின்ன இதே போல் ஒரு முறை இவன் பாட்டி மீது பொய் சத்தியம் செய்ததினால் தான் அவர் இறந்தார் என்று இன்று வரையிலும் மித்ரனைப் போட்டு படுத்தி எடுத்து விடுவார்கள் விவேகனும் தென்றலும்.

 

ஒருவரை ஒருவர் அடித்து கொண்டும் விளையாடி கொண்டும் தென்றல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் அவள் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து,

அவள் அருகில் சென்று அமர்ந்தால் தென்றலின் பருத்தி உடையையும் தாண்டி அவள் உடலின் அனலை இருவராலும் உணர முடிந்தது.

 

நேற்று விட்டிருந்த காய்ச்சல் மீண்டும் வந்திருக்கும் என நினைத்த இருவரும் அவளை ஏதேனும் சாப்பிட வைத்து வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கேன்டீனிர்கு கை தாங்களாக அழைத்து செல்ல முயன்றவர்களால் முடியாமல் போக.

 

விவேகன் அவளை ஒற்றை கையால் அவள் இடையில்  கைக் கோர்த்து தூக்கி செல்ல, தென்றலின் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை தென்றலின் மனம் தேவை இல்லாமல் குறித்துக் கொண்டது.

 

தன் தந்தையிடம் அவள் உணரும் பாதுகாப்பை மட்டுமே அவன் தொடுகையில் உணர முடிந்தது.

 

அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் விவேகன் அவள் கையில் பால் கிளாஸை திணிக்க எதும் பேசாமல் அவள் அதை வாங்கி பருக ஆரம்பித்தாள்.

 

அதனை பார்த்த விவேகனுக்கு அதிர்ச்சி என்றால் மித்ரனுக்கு நெஞ்சி வலியே வந்து விட்டது.

 

‘என்ன நடக்குது இங்க. நாம கனவு ஏதும் காணுறோமா! இவ டீ காஃபியே பட்டர் பிஸ்கெட் இல்லாமல் குடிக்க மாட்டா.’

 

‘பால்ன பிஸ்கெட் இருந்தா கூட தொட்டுப் பாக்கவே அவ்ளோ அலப்பர பண்ணுவா, அதுலயும் இவ குடிக்கிற டீயோ காஃபியோ அதுல ஈ விழுந்தாளும் அதுவே எழுந்து இவ மூஞ்சில காரி துப்பிட்டு போகும் அவ்ளோ ஒரு மானங்கெட்ட சூடுல தான் குடிப்பா, இன்னைக்கு இவளுக்கு என்ன ஆச்சி வெறும் காய்ச்சல் தான இல்ல உச்சி வெயில்ல பேய் எதும் புடிச்சி இருக்குமோ’ என சிந்தித்தவன்.

 

அவள் வலது கையைப் பார்க்க அம்மன் கோயிலில் மந்திரித்து கட்டிய கயிறு இருந்தது அதை பார்த்தவன் நிம்மதி பெறும் மூச்சை வெளியிட பிறகு மூவரும் கிளம்பி வீடு வந்து சேருவதற்குள் இருவரின் உயிரையும் பாதி கரைத்தே விட்டாள் தென்றல்.

 

பிறகு ஒரு வழியாக அவளை அதட்டி மிரட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

 

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், 

 

“எதையோ பார்த்து பயந்து இருக்காங்க அதையே திருப்பி திருப்பி யோசிக்கிறனால ஃபீவர் அதிகமா இருக்கு  டாப்லெட்ஸ் தரேன். கஞ்சி இட்லி இடியாப்பம் இது மாதிரி எதுனா சாப்பிட கொடுத்து  தூங்க வைங்க. மூன்று நாளைக்கு அப்புறம் சரியா போகலன்னா பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடலாம்” என கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

 

மீண்டும் வீடு வந்து சேர்ந்தார்கள் தென்றலுக்கு இட்லியை மித்ரன் ஊட்டி விட, அவளுக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து விவேகன் தூங்கவைத்தான். விவேகனின் தோளில் அவளை சாய்த்து கொண்டு தட்டி கொடுக்க மருந்தின் வீரியத்தால் உறக்கம் கொண்டாள்.

 

அவள் தூங்கியவுடன் அவளை தலையணையில் படுக்க வைத்தவன் வெளியில் சென்று படுத்துக் கொள்ள.

 

தாயின் உடல் உஷ்ணத்தை காண வில்லை எனில் குழந்தை அழுவதுபோல விவேகனின் உடல் உஷ்ணத்தை காணாமல் தென்றல் விழித்துக் கொண்டாள்.

 

எழுந்தவள் அவனை தேடி செல்லவும் மனம் இல்லாமல் படுத்த இடத்திலேயே இன்று நடந்தவைகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

‘விவேகனும்  மித்தரனும் தன்னை எத்தனையோ முறை தூக்கி தட்டாமாலை சுற்றிய போதும் ஏற்படாதா அந்த உணர்வு சில நொடிகளே தொட்ட அதுவும் தன்னை விழாமல் பாதுகாப்பதற்காக தொட்ட தமிழின் தொடுகையில் ஏன் அந்த உணர்ச்சி’ என தென்றல் மீண்டும் மீண்டும் அதனை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.

 

அதே குழப்பத்தில் இருந்த அவளின் மனதில் திடீரென மாவீரன் படம் நினைவுக்கு வர, அத்திரைப்படத்தில் இரண்டாம் ஜென்மம் எடுத்த நாயகன் மற்றும் நாயகியின் கைகள் உரசிக் கொள்ளும் போது ஏற்படும் அதே மின்சாரப் பாய்ச்சல் தனக்குள்ளும் இன்று தமிழின் தொடுகையில் ஏற்பட்டது. அப்போது தனக்கான நாயகன் தமிழ்  தானோ என யோசித்துக் கொண்டிருந்தவள்.

 

சிறிது நேரத்திலேயே, தன் சிந்தனையை மாற்றி கொண்டாள்.

 

‘இல்லை இல்லை அப்படி இருக்காது அந்த படத்தில் வில்லனும் கூட அடுத்த ஜென்மத்துல வருவானே, தமிழ் கண்டிப்பாக நாயகனா இருக்க முடியாது. அப்போ அவன் என்னை கொல்ல வந்த வில்லனா? போன ஜென்மத்துல அவனுக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன் இப்போ என்ன கொலை பண்ண அடுத்த ஜென்மம் எடுத்து வந்து இருக்கான்’. என மேலும் மேலும் தமிழை நினைத்து அவளுக்கு பயம் ஏற்பட்டது.

 

அடுத்து அடுத்து வந்த நாட்களில் தென்றலின் காய்ச்சல் குறைந்து விட, அவளின் பயம் மட்டும் அகலாமல் அப்படியே இருந்தது நன்முறையில் தேர்வுகள் நடந்து முடிய,

 

தமிழும் இவர்களும் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு தேர்வு முடியும் வரை கிடைக்கவில்லை இது தென்றலுக்கு வசதியாக போனது.

 

அன்று மாலை அனைவரும் தென்றலின் வீட்டு மாடியில் அமர்ந்து தேர்வு விடுமுறையில் எங்கு செல்லலாம் என பேசிக் கொண்டிருக்க அழையா விருந்தாளியாக வருகை புரிந்தான் தமிழ்.

 

அவனை கண்டவுடன் சிறிது நாள் தென்றலின் மனதில் மறைந்து இருந்த பயம் தலைதூக்கத் தொடங்கியது.

 

விவேகனின்  கையை இறுகப் பற்றிக் கொண்டவள் அவன் தோள் மறைவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். தமிழின் முகத்தை காண்பதை முழுவதும் தவிர்த்தாள்.

 

விவேகன்‌ இதனை கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

தென்றலின் பாராமுகம் தமிழின் மனதில் ஈட்டியை இறக்குவதை போன்ற வலியை ஏற்படுத்தியது.

 

‘அன்று தான் ஒன்றும் ஆசையாக சென்று அவளை அணைக்க வில்லையே, கீழே விழ சென்றவளை அடிபடாமல் தாங்கி நின்றது ஒரு குத்தமா? மகராசி முகத்தை கூட காட்ட மாட்டேங்குறா’ என மைண்ட் வாய்ஸில் தன் கவலைகளை நினைத்துக் கொண்டிருந்தவன் மித்ரனின் அழைப்பில் நிகழ்காலம் வந்தான்.

 

“சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க தமிழ். இந்த லீவுக்கு நான் தென்றல் விவேகன் மூணு பேரு மட்டும் எங்கனா  வெளியே போலாம் என்று பிளான் பண்ணி இருக்கோம்,  நீ எங்க கூட வரியா?”என்க,

 

ஓசியில் தேன் கிடைத்தால் சுவைக்க கூலியா வேண்டும் தமிழும் சற்றும் யோசிக்காமல் தலையை பூம்பூம்மாடு கணக்காக ஆட்டி வைத்தான்.

 

பிறகு எங்கு செல்லலாம் என விவாதம் நடைபெற, தமிழ் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் “தஞ்சாவூர் போலாமாடா?”

 

அங்கு தனக்கு உறவினர்கள் இருப்பதாகவும் தங்கும் இடம் உணவு அப்புறம் நம்ம பாதுகாப்புக்கும் எந்த சிக்கலும் இருக்காது ஊரும் சுத்தி‌ பார்க்க நல்லா இருக்கும் எனவும் கூறினான்.

 

விவேகன் முதலில் “போகலாம்” என ஆனந்தமாக கூறி விட்டு பிறகு தென்றலிடம் கேட்க அவன் ஆனந்தத்தை கலைக்க மனமில்லாமல் தானும் வருவதாக ஒப்புக் கொண்டாள்.

 

அவர்கள் முடிவு செய்ததிலிருந்து மூன்றாவது நாள் அனைவரும் தஞ்சாவூர் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

 

தென்றல் உடனான இந்த பயணத்தை மிகவும் ஆனந்தத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான் தமிழ்.

 

இன்றும் தன் அன்னையை விட்டு நீண்ட நாள் பிரியாமல் இருந்த மித்ரன் இப்பொழுது பிரிவதை எண்ணி சிறிது மனம் கவலை கொண்டாலும், தன் அன்னையை தென்றலின் தாய் தந்தையர் கவனித்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையில் இவர்களுடன் செல்லும் அந்த பயணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.

 

தென்றலுக்கு ஏனோ தமிழுடனான இந்த பயணம் பயத்தை ஏற்படுத்தினாலும் விவேகனும் மித்ரனும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்  அந்த பயணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.

 

இந்த பயணம் முடிவு செய்யப் பட்டதில் இருந்து ஏனோ விவேகனின் மனதில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதாக உறுத்திக்கொண்டே இருந்தது. எதுவாக இருந்தாலும் தான் இருக்கும் வரை தென்றலையும் மித்ரனையும் தமிழையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தன்னுடைய கடமை என மனதில் உறுதி பூண்டு கொண்டான்.

 

மூன்று நாட்களும் கடந்த நிலையில் நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை அறியாத நால்வரும் ஆனந்தமாக தஞ்சாவூரை நோக்கி பேருந்தில் பயணமாகினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!