ஆட்டம்-16

ஆட்டம்-16

ஆட்டம்-16

விழிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள, ஆடவணின் வசீகர விழிகளோ அவன் ஆழ் மனதில் இருந்த விண்ணளவு நேசத்தையும் தாபத்தையும் அவனவளின் விழிகளுக்குள் புகுத்த, பெண்ணவளோ தன் அனலைக் கக்கும் விழிகளால் அவனின் விழிகளில் பொங்கி வழியும் காதலை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தாள்.

பேசவில்லை!

ஆனால், அவளின் விழிகள் அவனின் காதலை ஏற்கவும் இல்லை! மதி மயங்கவும் இல்லை!

மயங்கிக் கிடந்த காலத்தில் நடந்ததை அவளால் மறந்துவிட முடியுமா? மறந்துவிடும் வகையிலா அவன் அவளிடம் நடந்திருந்தான்?

அதனால் விளைந்த ஆத்திரமும், ஆங்காரமும், ஆக்ரோஷமும் அவள் மனதில் எரிமலைக் குழம்பாய் கொப்பளித்து கொதித்துக் கொண்டிருக்க, அவனின் வசியம் செய்யும் காதல் பார்வை அவளை எவ்வகையில் மாற்றிவிட முடியும்.

அவள் கரத்தை இரு பக்கமும் சுவற்றில் சாய்த்து வைத்து பிடித்து, அவன் அருகில் சாய்ந்திருந்த போதும் கூட அவள் அவனிடம் பேசவில்லை. ‘உன் விழியை நேருக்கு நேர் கண்டாலும் நான் அதில் வீழமாட்டேன்’ என்ற பிடிவாதத்துடன் வீம்பாய் அழுத்தத்துடன் நின்றிருந்தாள்.

அவளின் செய்கையில் கீற்றாய் புன்னகைத்தவனின் இதழ்கள், மெல்ல இதழோரங்களில் கேலியை காட்ட, அவளின் ஒரு கரத்தை அவன் எதேச்சையாக பார்க்க, அவளின் தண்டுக் கரத்தை லட்சம் மதிப்புள்ள ப்ரான்டட் ஓமேகா (omega) வாட்ச் சுற்றியிருந்தது. வெறும் லட்சம் அல்ல. அறுபது லட்சம் மதிப்புள்ள ஸ்டைலான கைகடிகாரம் அது.

அதை பரிசளித்ததே விக்ரம் அபிநந்தன் அல்லவா!

அதையே பார்த்திருந்தவனின் விழிகள் அவளுக்கு அதை கொடுத்த தினம் நினைவு வந்தது. அவளின் வெண் கரம் பற்றிருந்தவன் தன் பெருவிரலால் வாட்ச்சை தீண்ட, “ப்ச்” என்று உச் கொட்டினாள் நீரஜாவின் செல்வ(ல) மகள்.

எரிச்சலாய் இருந்தது அவளுக்கு. கத்த முடியாத நிலை. மாமாக்கள், அன்னை என அனைவரும் இருக்க, ஆத்திரத்தில் குருதி கொதித்து, மேனியில் இருந்து வெளிப்படும் அடக்க முடியாத உஷ்ணத்தை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

அக்கடிகாரத்தை தன் பெருவிரலால் வருடிக் கொடுத்தவன் பெண்ணவளின் செவியருகே செல்ல, அவனின் மூச்சுக்காற்று பட்டத்தில், அவளின் மேனி சிலிர்க்க, சந்தனமும் பன்னீர் இதழும் கலந்த அவளின் தோல்களிலோ குட்டி குட்டியாய் அதற்கான அறிகுறிகள் எழ, அதில் கர்வமாய் புன்னகைத்துக் கொண்டவன், “ஜஸ்ட் பீ மைன். ஐ வில் லவ் யூ இன் மில்லியன் வேய்ஸ் (Just be mine. I will love you in million ways)” என்றான்.

என்னுடையவளாக இரு. உன்னை லட்சம் வழிகளில் காதலிக்கிறேன் என்றான். குரலில் அவள் மேலிருந்த ஏக்கம் அவனை மீறியும் வந்துவிட்டது. அதுவும் அவளருகே அவனின் தலையில் சூடியிருந்த அழுத்தம் நிற்க முடியாது அவளுக்காக இறங்கத் தயாராய் இருந்தது.

வேங்கையின் உள்ளத்தை அடியோடு கவ்வியிருந்தவளின் காதல் அவனை மொத்தமாய் வீழ்த்தியிருக்க, இப்போது அவளுக்காகவே அனுதினமும் துடித்துக் கொண்டிருந்தது அவனின் திமிறும் திமிரும் கொண்ட மனம், அவளின் காதலுக்காக. தன் பின்னால் வந்த நறுமுகையை விட இப்போது அவனை சற்றும் கண்டுகொள்ளாது இருக்கும் நறுமுகை ஒவ்வொரு நாளும் அவனின் காதலை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

அவனின் வார்த்தைகளில், அவனை நேராக பார்த்தவள், “அன்ட் மேக் மீ க்ரை இன் பில்லியன் வேய்ஸ் (And make me cry in billion ways)” என்றாள் அழுத்தமாக. அவனிடம் கற்றுக்கொண்ட அழுத்தம் தான். அன்று அவள் கதறிய போது அழுத்தமாக பார்த்துக் கொண்டு தானே நின்றிருந்தான். அது அவளை இரும்பாக இறுக்கியிருந்தது.

‘என்னை நிகற்புதம்(பில்லியன்) முறையில் அழ வைக்க’ என்று அவள் கூறியதில், அவனிற்கும் சற்று அடங்கி உள்ளே சென்றிருந்த ஈகோ, கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கத் துவங்க, அப்போதும் அவன் புன்னையை தான் பிரதிபலித்தான்.

மீட்டிங் அறையினுள், தன்னவள் மேல் விழுந்த இளம் மஞ்சள் சுடர் விளக்குகளின் மேல் பொறாமை கொண்டவன், அவளை மேலும் நெருங்கி நிற்க, ஆடவணின் அசாத்திய உயரத்தில், பெண்ணவள் மொத்தமாய் அவனின் நிழலில், அவனுக்குள் அடங்கி நின்றிருந்தாள். நிற்க வைத்திருந்தான்.

“அப்ப அழ வச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கா?” அவன் வேண்டுமென்றே கிசுகிசுக்க, அருகே இருந்தவளின் தூய பொன்னில் வார்த்தெடுத்த ஸ்பரிசமும், அவளின் மேல் வந்த அவளுக்கே உண்டான நுறுமுகையின் நறுமணமும், விக்ரமின் மனதை பரபரக்கச் செய்தது, அவளை இப்போதே இறுக அணைக்கத் தோன்ற.

அடங்காத காதல்!

அவனின் கேள்வியில் அவனை முறைத்தவள், தன் தளிர் கரங்களை அவனை தள்ளிவிட அசைக்க முயற்சிக்க, அவளின் முயற்சியில் இதழ் விரித்து அழகாய் புன்னகைத்தவன், “இந்த சிக்ஸ் பீட், எண்பது கிலோவை நகத்திடுவியா டி?” என்றான்.

சிறிய வயதில் இருந்தே விடாத உடற்பயிற்சியின் விளைவாக முறுக்கேறி, வலிமையின் பெயருக்கு பொருத்தமாய் இருந்தவனை தள்ளிவிட இயலுமா?

சிறு விநாடி முயன்றவள், அவனை நிமிர்ந்து பார்க்க, அதில் கலவையாய் தெரித்த கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், இயலாமையையும், அழுத்தத்தையும் கண்டவன் என்ன நினைத்தானோ இருபக்கமும் பிடித்திருந்த கரத்தை காதலுடன் விடுவித்துக் கொள்ள, கரங்களை அவனைப் பார்த்தபடியே மெல்ல கீழே இறக்கியவள், பொறுமையாக அவனை ஒரு விநாடி பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் கதவருகில் செல்லும் வரை அமைதியாக இருந்தவன், அவளை மொத்தமாய் நிலைகுலையச் செய்யும் வகையில் தனது கேள்வியை வீசினான்.

வெளியே இறுக்கமாக இப்போது இருந்தாலும் அவளின் ஆழ்மனம் அவனுக்கு நன்கு பரிச்சயம் அல்லவா! என்ன கேட்டால் அவள் தன்னிடம் பேசுவாள் என்று அவன் நன்கு அறிவான்!

இந்த ஒன்றரை வருடமாக பேசாது இருந்தவள், இன்று தானே அவனிடம் வாயைத் திறந்திருந்தாள், அதுவும் அவளை மீறிய உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் அவளின் விக்ரமின் மேல் இருந்த ஆங்காரத்தில்.

“சப்போஸ் அன்னைக்கு ஏதாவது நடந்து இருந்து.. ப்ரெக்னென்ட் ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்ப?” சர்வசாதாரணமாக அவன் கேட்க, கதவைத் திறக்க அதன் பிடியை பிடித்தவளின் கரங்கள் அப்படியே அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்ததை அவன் கேட்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

விக்ரமின் வதனத்தில் இப்போது கடினமும் கலந்த திமிர்!

அவன் அவளையே தன் வாள் போன்ற கூர் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்க, வதனம் நெருப்பில் காட்டிய இரும்பை போல கோபத்தில் பளபளக்க, விக்ரமைத் திரும்பிப் பார்த்தவள், “பெர்வர்ட் (பொறுக்கி)” என்றுவிட்டு, கதவை படாரென திறந்தவள், கதவை மட்டுமல்ல அவனின் முகத்திலும் அல்லவா அடித்துச் சாத்திவிட்டுச் சென்றாள்.

அவனின் ஆன்மாவையே அவள் ஆட்டம் காண வைத்துக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.

அன்று பேசும் போது இவ்வளவு அழுத்தக்காரி இவள் என்று தெரியாது. அன்றைய பொழுதுகளில் எல்லாம் வெளியே அவள் இப்படி இருந்தாலும், குடும்பத்தில் அப்படி கிடையாது.

இப்போது குடும்பத்திற்குள்ளேயே அவள் இப்படி இருப்பது அவனுக்குத் தெரியும் எதனால் என்று. அதுவும் அவள் வேண்டுமென்றே இப்போது எல்லாம் அபிமன்யுவிடம் சிரித்துப் பேசுவது அவனின் ஆங்காரத்தை அதி வேகத்துடன் பாயும் வேங்கையை போல அதிகரித்துக் கொண்டிருந்தது.

தவறான எண்ணம் அவனுக்குள் இல்லை. ஆனால், அதை ஏற்கும் மனம் அவனுக்கு இல்லை. தன்னைவிட வேறு யாரோடும் அவள் பேசுவது அவனின் சினம் கொண்ட சீற்றங்களை கிளறிக் கொண்டிருக்க, அது கூடிய விரைவில் வெடிக்கும் என்பதை பெண்ணவள் அறியவில்லை.

வெளியே வந்தவளின் வதனத்தை நீரஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அபிமன்யுவின் கழுகு விழிகள், நறுமுகையின் வதனத்தை, ஊடுருவி ஆராய, அதில் உள்ளுக்குள் தடதடக்கும் உள்ளத்தை அடக்கியவள், தங்களது அறைக்குச் செல்ல, நீரஜாவிடம் கவனத்தை செலுத்தியவனுக்கு தூரத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் தந்தையும், சின்ன தந்தையும் விழிகளில் பட்டனர்.

கொஞ்ச வருடங்களுக்கு முன் அனைவரும் அனைத்தையும் மறந்து பேச தொடங்கியவர்கள் தான். ஆனால், மீண்டும் விக்ரமினால் நறுமுகை விடயத்தில் ஒரு சங்கடம் உருவாக, அவர்களால் சாதாரணமாக உரையாட முடிவதில்லை. அதுவும் அபிமன்யு, விக்ரமின் புகைச்சல்களுக்கு தணிவே இல்லை என்று இல்லாது இருக்க, குடும்பப் பெண்கள் அனைவரும் ஆண்கள் இல்லையெனில் ஆட்டம்தான்.

யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் சிம்மவர்ம பூபதி கூட காலத்திற்கு தகுந்தாற் போன்று தன்னை மாற்றிக்கொள்ள, ஆண்கள் எப்போது வருவார்கள் போவார்கள் என்று அங்கு பெண்களுக்கு தகவல் குடுப்பதே அவர்தான்.

இந்த இருவரால் அனைவரும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.

பேசிக் கொண்டால் எதுவும் சொல்லாதவர்கள் அண்ணனும், தம்பியும். ஆனால், இப்போது இரு வீட்டிற்குமே ஆணிவேறாக, தொழிலில் சீறிப் பாயும் வேங்கைகளாக இருக்கும் வாரிசுகள் முகம் கொடுத்துக் கொள்ளாததில் ஒரு அசாத்திய அமைதி உள்ளத்திற்குள்.

நீரஜா, “இங்க இருக்க மாதிரி அங்க இரண்டு சேர்மன் ஹாஸ்பிடலுக்கு இருக்க முடியாது அபி” என்று குறுங்கேலியுடன் அண்ணன் மகனை கலாய்க்க, அதில் இதழ் பிரித்து புன்னகைத்தவன், பிடிவாதக் குரலில்,

“அத்தை காலேஜ் சேர்மன் நீங்கதான். டீனும் நீங்கதான்” என்றிட, அபிமன்யுவின் சொற்களில் கோடி அதிர்வு அவருக்குள்.

அபிமன்யுவுக்கும் அப்போது தானே அவன் நினைத்ததை சாதிக்க முடியும்.

“விக்ரமும், நீயும் தானே அபி ப்ளானை ஸ்டார்ட் பண்ணது?” என்றார். அவருக்கு அபியின் பதில்கள் எப்போதுமே பிடித்தமான ஒன்று. ஒரு வரியில் நறுக்கென்று முடித்துவிடுவான். அவன் தன்மையாக பேசும் பெண்கள் அவனின் அன்னையும், அத்தையும் மட்டும்தான். திலோ, நறுமுகையின் மேல் காட்டிக்கொள்ளாத பாசம் கொட்டிக் கிடந்தாலும் அதை என்றுமே நேரடியாக காட்டியதில்லை அவன்.

“ஹம்.. ப்ளானை இரண்டு வருஷத்திற்கு முன்னாடியே சொன்னது நான்.. எக்ஸிக்யூட் பண்ணது விக்ரம்.. முடிச்சது நான்” என்று கல்லூரி விஷயத்தில் முடிவாக, பிடிவாதத்துடன் கூறினான்.

“வேணாம் அபி..” என்று வந்தது நீரஜாவின் சொற்கள். கடினமான குரலுடன்.

அபிமன்யு பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, அவரிடம் கேள்வி கேட்கவில்லை. ஏனெனில் அவன் உறுதியான முடிவு செய்துவிட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர், “உங்க தாத்தா காசு வேணாம்” என்றார். பழையது சிலதை மறக்க இயலாது அல்லவா. இப்போது தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவமனையாக நீரஜாவின் மருத்துவமனை இருந்தாலும், அவர் என்றும் யாரிடமும் கை நீட்டியதில்லை. தன்னுடைய செலவுகளையும், நறுமுகையின் செலவுகளையும் இத்தனை வருடங்களாக அவர்தான் பார்த்துக் கொண்டார்.

சம்பாதித்த அனைத்தையும் மருத்துவமனைக்கு தான் முதலீடு செய்தார். அதனால் தான் அது இப்படி வளர்ந்து தனித்தன்மையாக நிற்பதற்கு காரணம்.

தனி மனுஷியாக அனைத்தையும் இரும்பு மனதுடன் செய்து கொண்டிருக்கிறார். ‘பொம்பளை தானே’ என எத்தனை பிரச்சினைகள் வந்தது. எத்தனை இடர்கள் வந்தது.

ஆனால், பெண் சிங்கத்திடம் மோதி, வென்றுவிட இயலுமா!

அனைவரும் ஆட்டுமந்தையாய் வேறு வழியில் செல்லும் போது, நீரஜா மட்டும் தனி வழியில் வேறு திசையில் சிங்க மனோபாவத்தில் சென்றவர். தனது திட்டத்திலும், நம்பிக்கையிலும் என்ன நடந்தாலும், எதிரிகளையும், சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருந்து, அனைத்தையும் தன்னந்தனியாக எதிர்த்து நின்று முறியடித்தவர்.

அதுவும் அபிமன்யுவும், விக்ரமும் வளர்ந்து தொழிலில் புகந்த பின் யாரும் நீரஜாவை எதிர்க்கக் கூட நினைக்கவில்லை. நினைத்தால் செதில் செதிலாக்கி விடுவார்கள் வேங்கைகளின் வெறிமிக்க தாக்குதலில்.

“அத்தை இதுல முழுக்க முழுக்க இன்வஸ்ட் ஆக போறது உங்க ஷேர், என்னோட ஷேர், விக்ரமோட ஷேர்” என்றவன் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பதுபோல தனது திறம் வாய்ந்த திட்டத்தை அவரின் மூலமாக தொடங்கினான்.

சதுரங்க ஆட்டத்தில் வியூகத்தை அமைத்துவிட்டான். செயல்படுத்த மட்டும் தான் அவனுக்கு காய்கள் தேவைப்பட்டது.

“அத்தை! அந்த பிடிஎஸ் முடிச்ச ஸ்டூடன்ட்ஸ் மட்டும் நம்ம ஹாஸ்பிடல்ல அடுத்த வாரத்துல இருந்து ப்ராக்டிஸ் ஆரம்பிக்கட்டும். நான் ஈஸ்வர மூர்த்திகிட்ட பேசி ப்ராசஸை முடிச்சிடறேன். டை அப்பை முடிச்சிட்டா மத்தது எல்லாம் ஈசி” என்றவன் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு, அறைக்குள் நுழைய, லேப்டாப்பில் இருந்த நறுமுகையின் பிஞ்சு விரல்கள் அவன் தடாலென்று உள்ளே வந்ததில் நடுங்கியது.

அவள் பக்கவாட்டாக அமர்ந்திருக்க, தனது சுழற் நாற்காலியில் வந்து ராஜ தோரணையில், ஆஜானுபாகுவாக அமர்ந்தவன் அடுத்து என்ன கேட்கப் போகிறானோ என்று விரலில் தொடங்கிய நடுக்கங்கள், இதயத்தை அடைய, படபடப்புடன் அமரந்திருந்தவளையே கன்னத்தில் விரல் கொடுத்து, சிறிதாய் தலை சாய்த்து அபிமன்யு பார்த்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு நொடியும் இதயம் தொண்டைக் குழிக்கு வந்து செல்வது போல உணர்ந்தவள், அவனை பாவமாக பார்க்க, அவனின் பார்வையோ மாறவே இல்லை.

“எ.. என்ன மாமா?” என்றாள் பயத்தில் வார்த்தகைள் அடிக்க.

அவனின் பார்வையே கேள்வியை வீச, “நான் என்ன பண்ணேன்.. நீங்க இரண்டு பேரும் சேந்து ஏன் தலையை உருட்டறீங்க?” என்று கோபமும், விட்டால் அழுதுவிடுவேன் என்ற தோரணையுடன் பெண்ணவள் கேட்க, அவனின் பார்வை அப்போதும் மாறவில்லை.

அழுத்தம்!

“நான் என்னதான் பண்ணனும்னு சொல்றீங்க?” அவளே கேட்க,

“அவன் என்னை டச் பண்ண வரலைன்னு எனக்குத் தெரியும்” என்றான் ஒற்றை வரியில். அதில் பலநூறு கேள்விகள்.

“நான் உங்க பின்னாடி தான் நின்னேன்” என்றாள் லேப்டாப்பில் விழிகளை திருப்பியபடி.

அவளின் செயலில் சினம் துளிர்க்க, “லுக் அட் மீ?” என்றவனின் கர்ஜனையில், நெஞ்சுக் கூடு படபடக்க, அவனைப் பார்த்தவள், “நான் என்ன பண்ண முடியும்” என்றாள்.

சுழற்நாற்காலியில் இடமும் வலமும் அசைந்தபடியே கைகளை அப்படியே வைத்திருந்து, நகராது அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “இரண்டு பேரும் பார்ன்ல (Barn) மீட் பண்ணியிருக்கீங்க. விக்ரம் உன் கார்ல ஏறியிருக்கான்” என்று சொன்னது தான் தாமதம், நறுமுகையின் இதயக் கூட்டில், அச்சம் ஆட்கொள்ள, அவளின் இரும்பு இதயமே ஒரு விநாடி அபிமன்யுவின் மனதை தொட்டுப் பார்க்கும் குரலில் ஆடிப் போய்விட்டது.

அவள் பதில் கூறாது தலையைத் தாழ்த்தியபடி அமர்ந்திருக்க, “உனக்கு மாப்பிள்ளை பாக்கலாம்னு இருக்கேன்” அபிமன்யு தனது கணினியை திறந்தபடி கூற, உள்ளத்தில் மத்தளங்கள் கொட்ட, பழைய நினைவுகள் அவளுக்குள்.

அபிமன்யு அத்தை மகளின் முக மாற்றங்களை கவனிக்கத் திரும்ப, அவளின் முகத்தைக் கண்டவன் நளினமாய் புன்னகையை உதிர்த்து, “ஸாரி உனக்கு ஏத்த பொண்ணு பாக்கணும்” என்றிட, அப்போது தான் உள்ளுக்குள் சுர்ரென்று எகிறிக் கொண்டிருந்த, இரத்த அழுத்தங்கள் சர்ரென்று இறங்க, அவனின் கேலியில் கோபமடைந்தாள்.

அபிமன்யுவுடனே சிறு வயதில் இருந்து வளர்ந்ததாலோ என்னவோ, அவளுக்கு பழக்கவழக்கங்கள் எல்லாம் சில சமயங்களில் பையன்களைப் போல இருந்துவிடும். அதிலும் குதிரையேற்றம், பள்ளியில் கராட்டே என்று போனவளை விளக்க அவசியமில்லை.

அதை வைத்து எப்போதாவது அபிமன்யு நறுமுகையை கேலி செய்வதுண்டு. இப்போதும் அதற்கு தான் அவ்வாறு கூறினான்.

“போங்க.. உங்களுக்கு கல்யாணமே ஆகாது” என்று சாபம்விட, தலைகணம் தலையில் கிரீடமாய் அமரந்திருக்க அவளைப் பார்த்தவன், விரல்களை அவள் வதனத்தின் முன் சொடக்கிட்டு,

“நான் இப்படி சொடக்குனா போதும். எனக்கு லைன்ல நிப்பாங்க” என்றான் திமிராக. அதற்கு உதட்டைச் சுளித்தவள் வேலையில் மூழ்க அவளை அவ்வப்போது கவனித்தான் அபிமன்யு.

மெய்யாலுமே அவளின் திருமணத்தைப் பற்றி யோசிக்கத் துவங்கினான். நறுமுகையிடம் அவன் இதழ்களில் நகை அரும்ப பேசினாலும், அது அவன் தன் மனதிற்கு உணர்த்தவில்லை. யோசித்தான். வேலையில் மூழ்கியபடியே யோசித்தான். நறுமுகை என்பதைத் தாண்டி, நீரஜாவின் நிம்மதி அவனுக்கு முன்னே தெரிந்தது. நறுமுகையின் வாழ்க்கை எவ்வாறு அமையுமோ அப்படித்தானே அனைவரின் நிம்மதியும் அமையும் குடும்பத்தில்.

அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, மனதிற்கு எட்டவில்லை போல தன் எதிர்காலத்தை பற்றியும் அவனின் துணைவியை பற்றியும்.

அப்போது அவனுக்குத் தெரியவில்லை, தான் இப்போது சொடக்கிட்டு கூறியதற்கு எதிர்மாறாக, ஒருத்தி தன்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்து, தனது நுண்ணுணர்வுகளை கூட காதல் என்னும் கடலலையாய் ஆட்கொண்டு, அவனை பார்க்க பலர் காத்திருக்க, தன்னை மதம் பிடித்தது போல காத்திருக்க வைக்க ஒரு ரவிவர்மனின் ஓவியம் கண்டம் விட்டு கண்டம் வந்திருப்பதை உத்ராவின் அபிமன்யு அப்போது அறியவில்லை.

ஆனால், விதி அனைத்தையும் அறிந்து அனைத்தையும் விரைவில் செய்யக் காத்திருந்தது.

அடுத்த பத்து நாட்களுக்கு பிறகு, அந்த புகழ்பெற்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த சேர்மனின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள் உத்ரா.

அவள் நீராஜாவை எதிர்நோக்கத் தன்னை உள்ளுக்குள் தயார் படுத்திக் கொண்டிருக்க, உள்ளே இருந்தது என்னவோ சித்தார்த் அபிமன்யு.

‘கடவுளே இங்கையே கிடைக்கணும். அப்பதான் விக்ரம் மாமா அனுப்புவாரு’ என்று வேண்டிக் கொண்டிருக்க, அவளின் விதியை எழுதிய ஆண்டவனோ, அவளின் மும்முரமான வேண்டுதலில் பிரம்மையின் உச்சத்தை அடைந்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!