ஆட்டம்-23
ஆட்டம்-23
ஆட்டம்-23
Dear Naru,
For you, I’ll always take that one
extra step.
For you, I’ll always make that one
extra time.
For you, I’ll always make that one
extra effort.
For you, For me, For us
I’ll be no longer ego forever.
You’re that special,
And for my heart, the only person is you!
-Vikram Abhinandhan.
தன்னை இறுக்கி அணைத்து, வெறி கொண்டவள் போன்று தன் சட்டை காலர் இரண்டும் கசங்கும் அளவிற்கு பிடித்துக் கொண்டு, தன் நெஞ்சத்தில் முகம் புதைத்துத் தேம்பிக் கொண்டிருந்த மனையாளின் கண்ணீர் விக்ரமின் இதயத்தை வேதனையில் துடிக்கச் செய்ய, நீண்ட நாட்கள் ஆனதாலோ அல்லது அவளை காயப்படுத்தி கதறடித்து விட்டதாலோ என்னவோ அவனால் அவளை சட்டென அணைக்க முடியவில்லை.
குற்ற உணர்வும், தயக்கமும் ஒன்றிணைந்து அவனை மேலும் அடிக்க, தன் வார்த்தைகளின் வீரியம் அவளை எந்தளவிற்கு வலிக்க வலிக்க அடித்திருக்கும் என்று உணர்ந்தவனுக்கு, ‘திரவமாய் வீசியடித்த வார்த்தைகளை திரும்ப அள்ள முடியாது’ என்று புரிய, நறுமுகையின் வலியில் சிதறிய கண்ணீர் மணிகள் ஆடவனின் சட்டையை தாண்டி அவன் நெஞ்சத்தை அக்னியாய் சுட்டது.
“நறு அழுகாதடி.. ப்ளீஸ்..” என்று தலை குனிந்து அவளின் அழும் வதனத்தை பார்த்தபடியே கூறியவனின் குரல், அவளை மேலும் கண்ணீர்த் துளிகளை சிந்திட வைக்க, அதுவரை இருந்த அவனின் தயக்கம் தன் நெஞ்சை அதிர வைத்துக் கொண்டிருப்பவளின் அழுகையில் தகர்ந்து போக, அவளை இறுக அணைத்தவனின் உள்ளம் மொத்தமும் ஏக்கத்தை மட்டுமே சுமந்திருந்தது.
ஏக்கம்! ஆசை!
பழைய நறுமுகையாய் அவள் வேண்டும் அவனுக்கு. இப்படி இறுகிப் போய், அழுது கரையும் மிஸஸ்.நறுமுகை விக்ரம் அபிநந்தனை விட அவனுடைய காதலியாய் தைரியமும், துடுக்குத்தனமும் நிறைந்த நறுமுகை அவனுக்கு வேண்டும்.
அவனின் மார்பில் புதைந்தபடியே விழிகளை மட்டும் உயர்த்தி கணவனை பார்த்தவள், “ஏன் என்னை ஒரு தடவை கூட திரும்ப கூப்பிடல.. என்கிட்ட கூட அவ்வளவு ஈகோவா?” அழுது கரையும் ஹனி ப்ரவுன் விழியும், துடித்துக் கொண்டிருக்கும் அதரங்களுமாக ஏந்திழையவள் கேட்ட நொடியும்,
அவளின் விழிகள் காட்டிய தாங்க முடியாது கொந்தளித்துக் கொண்டிருந்த பெண்ணவளின் பெருவலியும், ஆனானப்பட்ட சாணக்கிய புத்தியை கொண்டு, அமைதியாய் எதிரிகளின் மேல் பாய்ந்து அவர்களின் குரல்வளை நடுங்கச் செய்து, எதற்கும் அசையாத குணத்தோடு பிறந்தவனையே, பெண்ணவளின் தூய காதல், அவளவனின் ஈகோவையே ஏவுகணை வேகத்தினில் வெட்டி வீச வைக்க,
தன் மார்பில் புதைந்திருக்கும் தன்னவளின் கண்ணீர்க் கன்னம் பற்றி நிமிர்த்தியவன், தன் கை பெருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளின் விழிகளை வலி நிறைந்த பார்வை பார்த்தவன், “ஸாரிடி” என்றானே பார்க்கலாம், தன்னவனா, ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை உதிர்த்தது என்று உடலும் உள்ளமும் ஸ்தம்பித்து போக, வாய் பிளந்து பேசாமடந்தையாகி நின்றுவிட்டாள், அவனுக்கு சொந்தமான அவனின் அத்தை மகள்.
அவளின் இதழ்கள் பிளந்து தன்னையே நோக்குவதைக் கண்டவனின் இதழ்கள் இலேசாக புன்னகைக்க, அவளின் இதழில் ரோஜா இதழை ஒத்த மென்மையோடு தன் இதழை ஒற்றி எடுத்தவன், “என்ன?” என்றான் இரு புருவங்களையும் உயர்த்தி.
“என்ன சொன்னீங்க?” மொத்த அழுகையும் அவனின் ஒரு ஸாரியில் ஓடியிருக்க, விழிகளில் சிறிது சிறிதாக புன்னகை எட்ட கேட்டவளிடம்,
“Golden words will not be repeated (பொன்னான வார்த்தைகள் மீண்டும் சொல்லப்படாது)” வசீகரமும் கவர்ச்சியும் கலந்த புன்னகையுடன் கூறியவனை, பொய்யாய் முறைத்தவள் அவனை விட்டு விலகி முறைத்தபடி அறைக்குள் செல்ல எத்தனிக்க, அவளின் கரம் பற்றி அவன் இழுத்ததில், கணவனின் மார்பின் மேலேயே மோதி நின்றவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன்,
“ஸாரி” என்றான்.
அவளோ இறங்கத் தயாராக இல்லை. அதாவது சட்டென்று இறங்கி வந்து அவள் தன் கெத்தை விடத் தயாராக இல்லை.
அவள் முறுக்கிக் கொண்டே நிற்க, அவளின் விழிகளில் முத்தமிட்டவன், “ஸாரி” என்றிட, இரண்டாவது முத்திரைக்கும் அவள் அசைந்தாளில்லை.
எங்கோ பார்த்தபடி உதட்டைச் சுழித்துக் கொண்டு நின்றிருந்தாள். கணவனை மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை தன்னிடம் கொட்ட வைப்பதில் அவளுக்கு அப்படியொரு அற்ப சந்தோஷம். இன்னொரு காரணமும் இருந்தது.
தன்னவள் வேண்டுமென்றே எதற்கு இப்படி நிற்கிறாள் என்று புரிந்து கொண்டவன், இதழுக்கிடையில் விஷமம் விழந்த புன்னகையுடன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “ஸாரி” என்றான்.
தான் ஒவ்வொரு முறையும், ‘ஸாரி’ என்ற வார்த்தையை உதிர்க்கும் பொழுது, பெண்ணவளின் விழிகளில் மின்னி மறையும் கர்வத்தின் பேரழகை கண்டவனுக்கு, அவளுக்காக அவள் விழிகளில் தோன்றி மறையும் மின்னலுக்காக, இன்னும் கோடி முறை கூட மன்னிப்பை கேட்கத் தோன்றியது.
அவளின் இரு பால் கன்னங்களையும் தன் இரு கைகளில் தாங்கியவன், அவள் எதிர்பார்த்த ஒன்றுக்காக அவள் இதழ் நோக்கி குனிய, தன் தாடையை நிமிர்த்தி இதழ் பிரித்து அவனின் இதழொற்றலுக்காக அவள் ஏக்கமும், ஏகாந்தமுமாய் விழி மூடி நிற்க, அவள் அதரத்தோடு தன் அதரம் அனல் போன்று உரச நெருங்கியவன், சட்டென்று, “ஸாரி” அவளின் நுனி நாசியில் முத்தமிட்டு விலக, இதழில் எதிர்பார்த்து நின்றவளுக்கோ அவனின் செய்கை, ஏமாற்றத்தை விளைவிக்க, விழிகளை பட்டென்று திறந்து அவள் கணவனை நோக்க, அவனோ விஷமம் வழிந்த விழிகளுடன் பார்வையில் கள்ளம் புக நின்றிருந்தான்.
மீண்டும் அவளை இழுத்து, தன் நெஞ்சில் தலை சாய வைத்து நிற்க வைத்தவன், “இப்படியே இருடி..” என்றவனின் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டே அவனின் மற்றொரு நெஞ்சில் குத்தியவள்,
“ஈகோயிஸ்டிக்” என்று திட்டி, அவனின் கழுத்தில் கரத்தை மாலையாய் கோர்த்து, நிமிர்ந்து பார்த்தவள், அவனின் முகத்தை தன்னை நோக்கி இழுக்க, இருவரின் இதழுக்கு இடையே விரலை வைத்தவன், வேண்டுமென்றே அவளைக் காக்க வைக்க, மீண்டும் அவள் அவனை இழுக்க, மீண்டும் இரு இதழ்களுக்கும் இடையே விரல் வைத்தவன், விழிகளை சிமிட்டி தன்னவளை தூண்டிவிட,
“இப்ப என்ன?” என்றாள் கோபமாக.
அவளிடம் இருந்து விலகி நின்றவன், “எனக்கு தூக்கம் வருதே.. நீ நல்லா தூங்கி ப்ரெஷா இருக்க.. ஆனா நான்..” என்றிழுத்தவன், “செம டயர்ட்.. இந்த மாதிரி வேலை எல்லாம் செம ப்ரெஷா ஸ்டார்ட் பண்ணனும்.. அப்ப தான் ரொம்ப நேரம் இன்வால்வ் ஆக முடியும்” என்று கண்ணடித்துக் கூற,
“ச்சை.. விளக்கம் வேற இதுக்கு” என்றவளையும் அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றவன், அவளை தன் நெஞ்சின் மேல் போட்டுக் கொண்டு படுக்க, நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியாய் விக்ரமின் விழிகளை தழுவிக் கொண்டாள் நித்திரா தேவி.
கணவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கோ, நிறைய நிறைய கணவனிடம் பேச வேண்டும் என்று இருந்தது. தன் கோபம் அனைத்தையும் ஒன்றுமில்லாது போலாக்கியவனின் நெஞ்சில் நாடியை வைத்தவள், கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, கணவனின் இறுக்கமான அதரத்திலும், வசீகரமான வதனத்திலும் லயித்துப் போனவள், விக்ரமின் தாடையில் விரல்களை வைத்து ரசனை வழிய வருடிக் கொடுத்து, சற்று எம்பி கணவனின் அதரத்தில் தன் அதரங்களை ஒற்றியெடுத்தவள், “லவ் யூ விக்ரம்” என்று கணவனின் சிகையைக் கோதி, அவனின் மார்பிலேயே செவி சாய்த்து, தன்னவனின் ஒவ்வொரு இதயத் துடிப்புகளையும் இசையாய் கேட்டபடி மற்றொரு மார்பின் மேல் வைத்திருந்த விரல்களால் மென்மையாய் தாளம் தப்பிக் கொண்டிருந்தாள் அந்த மென் மனம் கொண்ட இரும்பு பூச்சுக்காரி.
ஐந்து மணி போல தூங்கி எழுந்த விக்ரம், நறுமுகையின் சிரிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்தவன், பார்த்தது என்னவோ அவள் சுப்ரமணியம் வளர்க்கும் முயலை கரத்தில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது தான்.
தன் முகத்துக்கு நேரே முயலின் செவிகளை பிடித்துத் தூக்கி அதன் முகத்தை அருகே வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவள், அது முகத்துடன் தன் கன்னங்களை வைத்துத் அசையாய் தேய்த்து அதன் புஸ்புஸ் மேனியை உணர்ந்தவள், “க்யூட்டா இருக்கு” என்றபடி அதை கீழே இறக்கிவிட, விட்டால் போதுமென்று அது ஓடியே விட்டது.
வீட்டின் கதவின் மேலே சாய்ந்தபடி நின்றிருந்த விக்ரமை கண்ட சகுந்தலா, “அடடே எழுந்துட்டீங்களா.. டீ போடட்டுமா?” என்று கேட்க, மனையாளின் மேலேயே விழிகளை வைத்திருந்தவனின் இதயத் துடிப்பு சீற்றத்துடன் சுனாமியாய் எகிற, உடலெங்கும் அவனுக்கு குறுகுறுக்கத் துவங்கியது.
பாட்டியின் குரலில் திரும்பிய நறுமுகையின் மேலிருந்து விழிகளை அகற்றாதவனின் தாபம் எல்லையைக் கடக்க, “எதுவும் வேணாம் பாட்டி. நாங்க நைட் உள்ள இருக்க மர பந்தலுக்கு போறோம். ஸோ டிபன் சீக்கிரம் செஞ்சிட்டா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புவோம்” என்றவனின் அளப்பரிய ஆவலில், பெண்ணவளின் உள்ளமோ மிரளத் துவங்கியுது.
‘ஐயோ! என்ன இவ்வளவு ஓப்பனா பேசறாங்க’ என்று நாணத்தில் நத்தையாய் சுருண்டு வெட்கிப் போனவள், கூச்சத்தில் செம்பருத்தியாய் சிவந்து போய் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பிக் கொள்ள, சகுந்தலாவோ அவ்வயதைக் கடந்து வந்தவர் அல்லவா!
சிறு சிரிப்புடன் உள்ளே சென்றவர், இருவருக்கும் கடகடவென்று சமையலை செய்யத் துவங்க, உள்ளே வந்த விக்ரம் குளிக்கச் சென்றுவிட்டு வெளியே வர, படுக்கையில் அமர்ந்திருந்த நறுமுகை, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு ஈரத் தலையை கையாலேயே தட்டிக் கொண்டு வந்த கணவனிடம் இருந்து பார்வையை திருப்பவில்லை.
கணவனின் வதனத்தில் துவங்கிய அவளின் ஹனி ப்ரவுன் விழிகள் அவனின் உடலில் பயணிக்கத் துவங்கி, அவனின் முறுக்கேறியிருந்த புஜங்களையும், தட்டையாய் இருந்த வயிற்றில் புடைந்திருந்த சிக்ஸ் பேக்ஸையும் கண்டவளுக்கு, கணவனின் மேல் கொண்ட உணர்ச்சிகள் அதிகமாக , அவனின் அருகே எழுந்து சென்றவள், அவனின் வெற்று மார்பில் கரம் வைக்க, அவனின் மேலிருந்த உடல் குளுமையில் விழிகளை மூடிக் கொண்டது என்னவோ அவள்தான்.
காளையவனுக்கோ தன்னவளின் செய்கைகளில், கர்வங்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் வெடித்துச் சிதற, தொழிலில் பல முடியாத சாதனைகளை முடித்த போது கூட அத்தனை செருக்கு அவனிடம் வந்ததில்லை. மனையாள் தன்னிடம் மயங்கும் ஒவ்வொரு செயலிலும் அவனின் மனம், அவளுடன் சங்கமிக்கக் காத்துக் கிடந்தது.
விழிகளைத் திறந்தவள் தன்னவனின் பார்வையில் கணவனை சுவற்றில் தள்ளி, அவனின் மார்பின் மேல் தன் மேனி சாய நின்று, தன்னவனின் இதழ்களை விழுங்கும் பார்வை பார்க்க, அதில் பாடத பாடு பட்டது என்னவோ ஆடவன் தான்.
அவள் அவனை இழுத்து இதழில் முத்தமிட முயல, மீண்டும் ஒற்றை விரலை நடுவில் வைத்தவன், அவளை சீண்டிக் கொண்டே இருக்க, அவனை முறைத்தவள் வெளியே கோபமாக செல்ல முயல, அவளின் பின் கழுத்தை பிடித்து இழுத்துத் திருப்பியவன், தன் ஈரத் தலையால் அவளின் கழுத்தில் புதைய, கணவனின் செயலில் விநாடிப் பொழுதில் கிறங்கிப் போனாள் பெண்ணவள்.
ஈர முடிகள் பெண்ணவளின் வெம்மை பரவிய கழுத்தில், விளையாட, உணர்ச்சிகள் தூண்டப்பட்டத்தில் காம தேவனின் இம்சைகள் அவளை ஆட்கொள்ள, சட்டென அவளை விட்டு விலகியவன், “போய் ப்ரெஷ் ஆகிட்டு வா.. அன்ட் ட்ரெஸ் மாத்த வேணாம்.. இதுதான் எனக்கு கம்பர்டபிளா இருக்கும்” என்று வெளிப்படையாக அவள் அணிந்திருந்த வெண்மை நிற உடையை சுட்டிக்காட்டிவிட்டுச் செல்ல, செந்தனலாய் கொதிக்கத் துவங்கியது பெண்ணவளின் வெட்கமும், தாபமும், மோகமும், காமமும்.
குளித்து முடித்து வந்தவளை, ஏழு மணிக்கே உண்ண சகுந்தலா அழைத்துவிட, அனைவரும் அமர்ந்து சாப்பிடத் துவங்க, சுப்ரமணியமிடம் விக்ரம் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்க, இவளால் தான் முடியவில்லை.
‘எப்படித்தான் ஒண்ணுமே ஆகாத மாதிரி இருக்க முடியுதோ’ என்று உள்ளுக்குள் அலுத்தவள் ஒரு வழியாய் சாப்பிட்டு முடிக்க, விக்ரமோ வெண்மை நிற சட்டையையும், கீழே ப்ளூ நிறத்தில் முட்டி வரை இருந்த சாட்ஸும் அணிந்து நின்றிருந்தவன்,
“போகலாமா?” என்று கேட்க, ‘ஐயோ என்ன இவ்வளவு ஓப்பனா கேக்கறான்??’ உள்ளுக்குள் சிணுங்கியவள், நாணத்துடன் தலை கவிழ்ந்து தலையாட்டி தன் சம்மத்தை தெரிவிக்க, இருவரிடமும் சொன்னவன் நறுமுகையை அழைத்துக் கொண்டு சென்றான்.
வழியில் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.
மௌனமே ஆட்சி அமைத்திருக்க, காதலே அங்கு முதன்மை கொண்டிருக்க, அவ்வப்போது கள்ளமாய் காமம்!
இருவரிடமும் காமத்துப்பால் சற்று அதிகமாக மிகுந்துவிட்டது என்று எழுதினால் கூட சரிதான்!
சிறு நொடிகளில் அவனே பேச்சைத் தொடங்கினான்.
மனையாளின் கரம் பிடித்தவன், “நறு! உன்கிட்ட நிறைய பேசணும்டி.. ரொம்ப.. நம்ம லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணும் போதே நமக்காக நான் இந்த இடத்தை வாங்கினேன்.. நம்ம பர்சனல் ஸ்பேஸ்காக.. சுத்தியும் முப்பது ஏக்கர் நமக்கு மட்டும் தான்.. நானும் நீயும் மட்டும்தான் இருக்கணும்னு.. அப்பவே அத்தைகிட்ட நீ எந்த ஹாஸ்பிடல்ல பிறந்தேன்னு கேட்டு, அங்க இருந்து உன்னோட டீடெயில்ஸ் எடுத்தேன். அப்பதான் உன் தாத்தா, பாட்டி பத்தி தெரிஞ்சுது. ஒருவேளை அவங்க முன்னாடி வந்து உன்னை அவங்க கூட கூட்டிட்டு போயிருந்தா” என்று தன்னவளின் தாடை பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
“எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன்னு தோணுச்சு. அவங்களை நல்லா பாத்துக்கணும்னு தோணுச்சு.. அதுதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன். நமக்கான இடத்துல அவங்க இருக்கணும்னு தோணுச்சு.. உன் மனசுல ரொம்ப நாளா உன்னை பெத்தவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு நீ உனக்குள்ள யோசிச்சிட்டே இருந்ததும் நாம வெளில போனப்ப எல்லாம் புரிஞ்சுது.. அதுக்காக தான் இதெல்லாம்.
அப்பவே கூப்பிட்டு சொல்லியிருப்பேன்டி உன்கிட்ட.. நீயா வந்து நாம நல்லா இருக்கும் போது சொல்லணும்னு விட்டுட்டேன்.. ஆனா, கடைசில நீயா என் ஈகோவான்னு வரும்போது.. அக்ஸப்ட் பண்ணிக்கறேன்டி.. நீதான் வின் பண்ணியிருக்க.. நான் பேசுனதுக்கு அகைன் ஸாரி.. இனி நீ அழுகவே கூடாது.. என்னோட நறுமுகையா,, இந்த விக்ரமோட நறுமுகையா என் கூடவே இரு” என்று அவள் இரு கரங்களையும் எடுத்து தன் அதரங்களால் ஒற்றி எடுத்தவன், அவளை அடர்ந்த மரங்களுக்கு நடுவே அழைத்துச் செல்ல ஏற்கனவே கணவனின் எக்கச்சக்கமான பேச்சுக்களில் வாய் இருந்தும் இல்லாதது போல ஆனவள், இப்போது சிலையாகி நின்றுவிட்டாள்.
சுற்றியும் மரங்கள் சூழ்ந்திருக்க, பௌர்ணமி வானம் நிலவு மகளை பூமிக்கு வரமாய் கொடுத்து, இளம் தென்றலை வீசி இரு இள ரத்தங்களின் உஷ்ணத்தையும் ஏற்றிக் கொண்டிருக்க, சுற்றியும் மரங்களும், புல்வெளிகளும், நடுவே முப்பது அடி உயரத்திற்கு நான்கு பக்கங்கள் எழுப்பப்பட்டு, அதற்கு மேலே மரப் பந்தல் இருந்தது.
விக்ரமை சிவந்த விழிகளுடன் ரசனை சொட்டப் பார்த்தவள், “அழகா இருக்கு மாமா” என்றாள் கிறக்கம் கொஞ்சும் குரலில். குரலிலேயே பெண்ணவளின் அனைத்து உணர்வுகளும் அருவியாய் பொங்கி ஊற்றியது.
‘மாமா’ என்ற தன்னவளின் ஒற்றை அழைப்பே ஆடவனுக்கு அவளின் சம்மதங்களைத் தெரிவித்துவிட, அவளின் கரம் பற்றி அழைத்தவன், மேலே மர வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அருகில் இருந்த மரத்தில் படி அமைக்கப்பட்டு, அதிலிருந்து மர பந்தலுக்கு, பாலம் போன்று அமைத்திருக்க, தன்னவளை அங்கு அழைத்துச் சென்றவன் மனையாளின் வதனத்தையும், அதில் மாறி மாறி வந்து போகும் உணர்வுகளையுமே உள் வாங்கிக் கொண்டிருந்தான்.
மரப் பந்தல் என்றால், பதினாறுக்கு பதினாறு சதுரடியில் மரங்களின் உயரத்தைக் தாண்டி கட்டியிருந்த அமைப்பு. சுற்றியும் சுவர் போன்றெல்லாம் இல்லாது, மரத்திலேயே மூன்றடிகளுக்கு தடுப்பு வைத்து, மேலே பந்தல் போன்றே கட்டம் கட்டமாக வைத்து சதுரங்கள் போன்று வடிவமைக்கப்பட்டு அதில் சிறு சிறு மெல்லிய வெளிச்சம் கொண்ட மஞ்சள் நிற விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்க, மேலிருக்கும் இருக்கும் நிலவினைப் பார்ப்பதைப் போன்ற அமைப்பில் விக்ரம் ரசித்து ரசித்துக் கட்டியிருந்தான்.
அதுவும் கீழே படுப்பதற்கு சிவப்பு நிற பஞ்சு மெத்தைகளும், தலையணைகளும், போர்வைகளும் என அனைத்தும் தயாராக வைத்திருக்க, அதனையெல்லாம் பார்த்திருந்த மனையாளின் முகம் அதே ரத்த நிறத்தில் வெட்கத்தில் மாறிப் போனதை கண்ட விக்ரமின் இதழ்கள் வெற்றிப் புன்னகையில் தாராளமாக விரிந்து கொண்டன.
அவளின் பின்னே சென்று நின்றவன், “நறு!” தன்னவளின் செவியருகே சென்று மதி மயக்கத்துடன் அழைக்க, “ம்ம்” என்றவள் தன் பின் மேனியை அவன் முன் மேனியோடு முழுதாக சாய்த்து, கணவனின் இரு கரங்களையும் எடுத்து ஆவலுடன் தன்னை போட்டு சுற்றிக் கொண்டாள்.
தன்னவளின் செயலில் தன் அதரங்கள் அவளின் செவிகளில் உரச, “நறு! கோபம் போயிடுச்சா டி?” என்று வினவ,
“ம்ம் லைட்டா” என்றாள் விழிகளை சுருக்கி போன போகிறது என்பதுபோல்.
அவளை சுற்றியிருந்த தன் கரங்களை இறுக்கி, தன்னோடு மேலும் சேர்த்து நெருக்கமாக நிற்க வைத்தவன், “உனக்கு ஓகே வா?” என்று மனையாளின் தோளில் துவங்கிய முத்தத்தை கழுத்தை வரை கொண்டு சென்றபடியே கேட்க, தாறுமாறாக தறிகெட்டு ஓடும் உணர்வுகளை மூச்சுக்காற்றாக வெளியிட்டவள்,
“ம்ம்.. மன்னிச்சுட்டேன்” என்றாள் கிறங்கி சொக்கிப் போன குரலில்.
அவளின் கழுத்து வளைவில் வாசம் பிடித்தவன், “என்னடி போட்டிருக்க? செம ஸ்மெல்லா இருக்கு” என்று அவளின் மேனியில் மேலும் அழுத்தம் கூட்டி நெருக்கியபடி கேட்க,
“பாத் பவுடர்” என்றாள் சின்னக் குரலில்.
அடுத்த விநாடி தன்னை நோக்கி தன்னவளைத் திருப்பியவன், “மனசுல என்னன்ன இருக்கோ சொல்லு.. ப்ளீஸ்” என்றிட,
கணவனின் கழுத்தைச் சுற்றி கரத்தைப் போட்டுக் கொண்டு அவனின் மூக்கோடு மூக்கு உரசியவள், “நீங்க சொன்னது என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணுச்சு தான்.. இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. சில சமயம் இதுதான் என்னோடது இல்லையே.. எங்காவது போயிடலாமானு கூட தோணுச்சு.. உங்க மேல ரொம்ப கோவம்.. ஸாரி கூட இரண்டாவது பட்சம்.. ஆனா, ஒரு தடவை கூட வான்னு வந்து கூப்பிடல.. எவ்வளவு நாள் அழுதிருக்கேன் தெரியுமா உங்களை நினைச்சு.. அதுவும் உங்க பி.ஏவை பாத்தா ஏன் தான் எனக்கு பத்தீட்டு வருமோ.. அவளும் அவ ட்ரெஸும்..” என்று பொசசிவ்நஸ்ஸில் புகைந்த தன்னவளின் பொறாமையில் தொலைந்து போனவன்,
“அப்படியா?” என்று கேலியாக கேட்க,
“ஆமா” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவள், “இங்க தாத்தா பாட்டியை பாத்தவுடனே கோபம் கம்மியாச்சு ஆனா, முழுசா போகலை” என்றிட, விக்ரமின் வதனமோ அப்பட்டமாய் வருத்தத்தைக் காட்ட, “ஆனா இப்ப இல்ல.. என்னால நடந்ததை நினைச்சு அழுதுட்டே இருக்க முடியாது மாமா” என்றவள் கணவனின் தோளில் கன்னத்தை வைத்துக் கொள்ள,
“நறு! உன்னை நான் அப்படி சொன்னதுக்கு யாரும் அவ்வளவா என்கிட்ட பர்ஸ்ட் மாதிரி பேசல தெரியுமா? பேசுவாங்க ஆனா முதல் மாதிரி பேசல.. சொல்ல போன அனாதை மாதிரி ஃபீல் ஆச்சுடி இந்த ஒன்றரை வருஷமும்” என்றவரை சலாரென நிமிர்ந்து பார்த்தவள், ‘சொல்லாதீங்க’ என்பது போல தலையாட்டிக் கெஞ்ச, தன்னவளை இறுக அணைத்துக் கொண்டவன்,
“ஐ மிஸ் யூடி” என்ற கணவனின் வார்த்தைகள் அவளின் காயம் கொண்ட உள்ளத்தை முழுவதுமாக ஆற்றியிருக்க, மயில் இறகு கொண்டு யாரோ இதயத்தை மெல்ல வருடி விடுவது போல உணர்ந்தவளுக்கு, கணவன் அணைத்த அணைப்பிலும், அழுத்தத்திலும் அவளின் எலும்புகள் வலியெடுக்க, “மாமா வலிக்குது” என்று திக்கியவளிடம், “ஸாரிடி” என்று அவன் விலக,
“ஒண்ணு முழுதா தள்ளி போறது.. இல்ல எனக்குள்ள போற மாதிரி புடிக்கிறது” என்றவள், அவனை அணைக்க வர, தன்னவளை தடுத்தவன்,
“இப்படியே மாத்தி மாத்தி புடிச்சிட்டு இருக்க போறோமா?” என்று கேட்டவனின் விழிகள் வேட்கையில் சிவந்து போக, வேங்கையின் பார்வை மாற்றத்தில் நாணம் கொண்ட புள்ளி மானோ, நாணத்தில் பின்னே நகர, படுக்கையில் கால் தடுக்கி படுக்கையின் மேலேயே விழுந்தவளின் வெண்மை நிற பாவாடை அவளின் முட்டி வரை சென்றுவிட, மனையாளின் வெண் தந்த கால்களின் அழகில் மயங்கிப் போன ஆறடி காளை, காரிகையவளின் காலருகே மண்டியிட்டு அமர்ந்து, அவளின் ஒற்றை காலை தன் கரத்தில் எடுக்க, அவனின் நெஞ்சில் தன் பாதத்தை வைத்து அழுத்தினாள் அந்த அடாவடிக்காரி.
தன் நெஞ்சில் காலை ஊன்றி வைத்தவளின் திமிரை வசீகரம் கொண்டு ரசித்தவன், அவளின் மலர் பாதங்களை மென்மையாய் கரத்தில் எடுத்து முத்தங்களை துவங்க, உதட்டில் புன்னகை நெளிய விழிகள் தாமாக மூடிக் கொள்ள படுத்திருந்தவள், அடுத்து கணவன் ஒவ்வொரு விரலாய் முத்தமிட, ஒவ்வொரு அணுவிலும் அவளுக்கு சிலிர்க்கத் துவங்க, அவளின் மென்னுடல் சின்ன சின்னதாய் அதிர்ந்து தூக்கிவாரி போட்டது.
மெல்ல மெல்லமாய் முத்தமிட்டுக் கொண்டே அவளருகே சென்று குனிந்தவனின் சட்டையை இறுக்கி பிடித்தவள், “கிஸ் மீ (Kiss me)” என்று தன் அதரங்களை குவித்து கொஞ்சலுடன் கெஞ்ச, திருமணமாகியும் பிரம்மச்சாரியாக இருந்த வேங்கையின் வெறி கொண்ட பசியை கேட்கவா வேண்டும்.
இரு இதழ்களுக்கிடையே எண்ணிலடங்கா போராட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, முத்தத்தில் அவனுடன் போட்டியிட்ட நறுமுகையின் முத்தங்களில் இருந்து விக்ரமால் தான் மீள முடியவில்லை. இத்தனை நாட்களாய் இருந்த தாகத்தை கணவனிடம் தணித்துக் கொண்டிருந்தாள்.
மூச்சிற்காகத் தவித்து இருவரும் பிரிந்த வேலை, “என்னடி இவ்வளவு பாஸ்ட்டா (Fast) இருக்க?” ஆடவன் தன்னவளை கலாய்க்க,
அதில் அவனின் சட்டையை பிடித்து மேலும் அருகில் இழுத்தவள், “புருஷன் ஸ்லோ அன்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்னு (Slow and steady wins the race) இருக்காரு.. ஆனா, எனக்கு இப்ப பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் (Fast and furious) தான் வொர்க் ஆகும்” என்றவள் பேசிக்கொண்டே அவனின் சட்டை பட்டன்களை கழற்றத் துவங்க, விக்ரமிற்கு மனையாளின் பேச்சு மெச்ச வைக்க, அவளின் மேலாடைக்குள் கரம் விட்டவன், அவளின் இடையில் ஸ்வரம் மீட்ட, அவன் நெஞ்சில் புதைந்தவள், கணவனுக்கு குட்டி குட்டி முத்தங்களை அங்கு வாரி வழங்கினாள்.
தனது சட்டையை மொத்தமாய் கழற்றியவனை இரு கரம் நீட்டி அழைத்தவள் அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, “மாமா சுத்தியும் ஓப்பனா இருக்கு” என்றாள் சற்று பயத்துடன்.
அவளோடு சரிந்து அவளின் கழுத்தில் புதைந்தவனோ, “இருக்கட்டும்” என்றான் சாதாரணமாக.
“ஐயோ! பயமா இருக்கு” என்றவளின் சிணுங்கலில் அவள் முகம் பார்த்தவன்,
“சுத்தியும் தோட்டம், காடு நறு.. வர்ற வழில தூங்குனதுனால நீ பாக்கல.. நூறு பேர் மேல செக்யூரிட்டிஸ் இருக்காங்க அதுக்கும் மேல தரைல இருந்து முப்பது அடிக்கு மேல இருக்கோம்” என்றவன் கிறக்கமான குரலில் காமம் சொட்ட, “இப்படி ஓப்பன்ல பண்ணனும்னு சின்ன வயசுல இருந்து ஆசைடி..” என்றவனின் பேச்சில் திகைத்தவள்,
“எது சின்ன வயசுல இருந்தா..என்ன வயசுல?” அவள் பேச்சைக் கூட்டியபடியே கேட்க, அவனுக்கோ கேள்வி கேட்டுக் கொண்டே இருந்த மனையாளின் மீது கோபம் தான் வந்தது.
கடுப்புடன், “பதினாறு வயசு போதுமா.. பேசாம இருடி.. நீதான் சும்மா இருக்க.. என்னையாவது ஏதாவது பண்ணவிடுடி” என்றவன் அவளது கழுத்திற்கு கீழ் இறங்க அப்போது தான் ஞாபகம் வந்தவனாக, “தாலி எங்க?” என்றான் தாபத்துடன் கோபமும் சேர்ந்து அவளைத் தேளாய் கொட்ட.
கணவனின் கேள்வியில் குற்ற உணர்வில் துடித்தவள், “மாமா..” என்று தயங்க, எழுந்து அமர்ந்தவனோடு அவளும் எழுந்து அமர, தனது பாக்கெட்டில் இருந்த, அவள் கோபத்தில் கழற்றி கொடுத்த தாலியை எடுத்தவன், அவள் கண்முன் அதைக் காட்ட, அதைப் பார்த்தவளின் விழிகள் இருவரின் பிரிவினை நினைத்து கலங்க,
“எல்லாமே ரெடியா தான் வந்தீங்களா?” கண்ணீர் முத்தாய் விழிகளில் தேங்கி நிற்க, சிறு கோபமும் மீதி கேலியுமாக கேட்டவளின் இதழ் மேல் ஒற்றை விரல் வைத்து, “ஷ்ஷ்! இனி அழவே கூடாது” என்று அதட்ட, தலையை, ‘சரி’ என்பது போல ஆட்டியவளின் சங்குக் கழுத்தில் இரண்டாவது முறை தங்கத்தில் கோர்க்கப்பட்டிருந்த மாங்கல்யத்தை அணிவித்தான் அவளின் விக்ரம்.
“இப்ப எடுத்து கண்ணுல வச்சு அணைக்கனுமா மாமா?” அவள் சிறு பிள்ளை போல வேண்டுமென்றே நக்கல் சீறிப்பாயக் கேட்க, அவளை முறைத்தவன்,
“அதெல்லாம் வேணா.. என்னை அணைச்சா போதும்” என்றவன், அவளோடு மொத்தமாக படுக்கையில் பாய்ந்துவிட்டான்.
மங்கையவளின் சங்குக் கழுத்தில் முத்தங்களால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தவனுக்கு, அவளின் மார்பின் மேல் இருந்த தாலி மேலும் மோகத்தைக் கூட்டி ‘வா’வென அழைக்க, கழுத்திற்கு கீழ் விக்ரம் இறங்க இறங்க, “மாமா” என்று முனகலிட்டு சிலிர்த்து அடங்கியவளின் உணர்ச்சிகளிலும், தன்னவளின் ‘மாமா’ என்ற மயக்க உச்சரிப்பிலும், விக்ரமின் கரங்கள் நறுமுகையின் உடையில் கை வைக்க, நாணத்தால் தடுத்தவள், கணவனின் பிடிவாதத்தில் குழந்தையாகி தோற்றுப் போக, முதல்முறை கண்ட தன்னவளின் பொக்கிஷங்களில், திருடனாக முடிவெடுத்தவன், அனைத்தையும் அள்ளிக் கொள்ள,
கணவனின் உதடுகளும், கரங்களும் இழுத்த இழுப்பிற்கு சென்றவள், கணவனை உணர்ச்சிப் பெருக்கில் தன்னுடன் இறுக்கிக் கொள்ள, மனைவியுள் புதைந்தவன், அவளுள் மேலும் மேலும் மூழ்கி இன்பங்களை சுரண்ட, “மாமா!!!” என்றவளின் சின்னஞ்சிறு கூச்சல், ஆடவனின் அபரிதமான ஆண்மையை கடலளவு தூண்ட, நறுமுகையின் நகங்கள் விக்ரமின் முதுகில் குட்டி குட்டி காயங்களை கொடுத்து, பதிலாய் பற்தடயங்களை கணவனிடம் வாங்க, பௌர்ணமி, தனிமை, இரவு, குளிர்காற்று, ஈருடல் ஓருயிராக, என்று சங்கிமத்த இருவரின் உணர்ச்சிகள் பீறிட்டுக் கொண்டு வெளியே, மதி மயங்கி கணவனுக்குள் சுருண்டேவிட்டாள் விக்ரமின் நறுமுகை.
அதுவும் இன்று முழுவதுமாக அவனின் நறுமுகையாய்!
அவனும் இன்றும் மொத்தமாய் தன்னை தன்னவளுக்கு கொடுத்துவிட்டான்!