இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

images_(5)_(4)-5bec1363

இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

கதவை தாழிட்டு படுக்கையில் வந்து விழுந்தவனுக்கு கோபம் மட்டுப்பட நீண்ட நேரம் எடுத்தது… தியாவை திட்டி இருக்கக்கூடாது என தன் மனம் திரும்ப திரும்ப சொல்ல இப்போதே அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தவனுக்கு அவள் இந்நேரம் தூங்கி இருப்பாள் என்பது புரிய காலையில் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என கண்களை மூடினான்.. ஆனால்  தூக்கம் வந்து அவன் கண்களை தழுவவில்லை.. புரண்டு புரண்டு படுத்தவன் ஒரு பதினொரு மணிக்கு அறைக் கதவை திறந்து கொண்டு தண்ணீர் குடிக்க வெளியே வந்தான்…. 

அங்கே   உணர்வற்ற சிலை போல் அமர்ந்து இருந்தத தியாவைக் கண்டதும் அவன் கண்களில் இருந்து சுருக்கென கண்ணீர் வந்தது…

நம்ம அப்போ கோபமா போனோமே அப்போத்துல இருந்து இவள் இங்கே தான் இருக்காளா??.. அவள் கண்ணில இருந்து கண்ணீரே வராதே… அதுவும் இப்படி சோகமா உட்கார்ந்துலாம் இருந்து பார்த்ததே இல்லையே… என்று நினைத்தவன் வேகமாய் அவளின் அருகில் வந்தான்…

” சாரி தியா.. நான் என் கோபத்தை மத்தவங்க மேலே காமிக்கக்கூடாதுனு இருக்கிறவன்.. ஆனால் இன்னைக்கு உன் மேலேயே அதைக் காட்டிட்டேன்” என சொல்ல அவள் அப்போதும் அப்படியே சிலை போல் அமர்ந்து  இருந்தாள்….

” இல்லை மா.. மதியம் நான் என் கதையை publish பண்றதை பத்தி ஆபிஸ்க்கு  போய் பேசிட்டு இருந்த அப்போ தான் நீ கால் பண்ண.. அதான் என்னாலே எடுக்க முடியல.. என் கதையை பிடிக்கலனு சொல்லிட்டாங்க.. அந்த கடுப்புல வெளியே வரும் போது மறுபடியும் நீ கால் பண்ண.. அவன் மேல இருந்த கோபம் எல்லாத்தையும் உன் மேலே காட்டிட்டேன்.. சாரி மந்தி” என்ற போது அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…

” ஏன் கடுவா.. அதை நீ போன்லயே சொல்லி இருக்கலாம்ல.. நீ ஏன் கோபப்படுறேனு கூட எனக்கு புரியல.. நான் வேற கோபத்துல வாயை விட்டுட்டேன்… நான் பேசுனது தப்புனு உணர்ந்துட்டேன் அதான் வீட்டுக்கு வந்த அப்புறமும் நார்மலா தானே பேசுனேன்.. ஆனால் நீ என்னை மதிக்கக்கூட இல்லை…  ஒரு டி.வி ரிமோட்காகலாம் என் கூட சண்டை போட்டதை என்னால இன்னும் நம்பவே முடியல… நீயா இப்படி மாறிட்டேனு… நான் லவ் பண்றேனு சொன்ன அப்புறம் உனக்கு நான் ரொம்ப இளக்காரமா போயிட்டேன்ல.. ” என்று அவள் ஆற்றாமையில் பேச அவனோ இல்லை என தலையசைத்தான்…

” ஹே மந்தி.. என்ன இப்படி பேசுற… நீ எனக்கு எவ்வளவு preciousனு எனக்கு மட்டும் தான் தெரியும்.. அடுத்த வாட்டி இப்படி பேசாதே… உனக்கே தெரியும் எனக்கு இந்த எமோஷன் அட்டாக்லாம் பிடிக்காதுனு… ஆனால் அதுக்காக உன்னை பிடிக்காதுனு இல்லைடி.. இந்த பிரச்சனை எல்லாம் எதனாலே நீ என் கிட்டே expect பண்ணதாலே மட்டும் தான்டி…”

” ஓஹோ சரி அப்போ நானும் typical girl friend மாதிரி நடந்துக்கிறேனு சொல்றியா??.. என் மேலே இப்போலாம் கோபம் வருதா??… முன்னாடிலாம் நான் உன் லிவ் இன் பார்ட்னரா இருக்க கொடுத்து வெச்சு இருக்கேனு சொல்லுவ… இப்போ அப்படியே வெறுத்து போயிட்டனா??” என அவள் பேசினாள்.. எங்கே கீதா சொன்னது போல் இந்த கடுவனுக்கும் என்னை கொஞ்ச நாளில் பிடிக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில்…

” ஐயோ தியா உனக்கு என்ன ஆச்சு… நீ எப்பவும் இப்படி ரியாக்ட் பண்ண மாட்டியே… ஆனால் இன்னைக்கு ஏன் இவ்வளவு சென்சிட்டிவ்வா பிஹேவ் பண்ற.. என்ன இப்போ??? நான் ஏன் ரிமாட்டை எடுத்து அந்த சேனல்ல இருந்து மாத்தினது உன்னாலே நம்ப முடியல அதானே… நான் உன்னை கோபப்படுத்த அப்படி பண்ணல தியா… அந்த ரித்திகா ஷர்மா முகத்தைப் பார்க்க பிடிக்காம தான் அப்படி பண்ணேன்”

” ஏன் ரித்திகா ஷர்மாவை எனக்கு பிடிக்கும்ன்றதால உங்களுக்கு  பிடிக்காம போயிருச்சா… “

” ஏய் நீ எங்க இருந்து டி இப்படி விதண்டாவாதமா பேச கத்துக்கிட்ட..”

” கேட்டதுக்கு பதில்.. எனக்கு பிடிக்காதுன்றதாலே தானே பிடிக்காம போச்சு “

” ஹயோ மந்தி போதும் போதும்… ரித்திகா ஷர்மா என் அம்மா…. அதனாலே தான் எனக்கு பிடிக்காம போச்சு போதுமா?…” என்று கத்தினான் அர்ஜீன்… தியாவின் வாட் என்ற ஒத்தை வார்த்தையில் அவளது மொத்த அதிர்ச்சியும் அப்பட்டமாய் வெளிப்பட்டது….

” உண்மை தான் தியா… அவங்க தான் என் அம்மா… அதுனாலே தான் நான் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டேன்.. அவங்க முகத்தை பார்க்க பிடிக்காம தான் மாத்தினேன்… அவங்களை பிடிக்காம தான்  இந்த கல்யாணம் வேண்டாம்ன்ற முடிவு கூட எடுத்தேன்…. அந்த முடிவுல இருந்து நான் துளியும்  மாறவும் மாட்டேன்” என அவன் சொல்ல தியா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை… அவன் பேசிய  முதல் பாதி தான் அவள் மனதில் பதிந்தது.. இரண்டாவது பாதியை அவள் கேட்கவே இல்லை என்பது தான் அவளது போதாத நேரம்….

” என்னது ஹீரோயின் ரித்திகா ஷர்மா உன்னோட அம்மாவா?” என கேட்க அவன் மீண்டும்  ஆம் என தலையசைத்தான்..

” ஆமாம் தியா அவங்களே தான்… நான் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா தவறிட்டாங்க.. அம்மா நடிக்க போயிட்டாங்க… அவரோட துக்க நாள் அன்னைக்கு மேடையிலே போய் சிரிச்சுக்கிட்டே சிறந்த நடிகை அவார்ட் வாங்குனாங்க… நான் அம்மாவோட பாசத்துக்காக ரொம்ப ஏங்கினேன்… என்னை பாராட்டவோ இல்லை திட்டவோ ஆளே கிடையாது.. முதலிலே என் தனிமையைப் போக்க ஆளை தேடுனேன்.. ஆனால் அவங்க எல்லோரும் என்னை ஏமாத்திட்டாங்க.. ஏதோ ஒரு காரணத்துக்காக தான் என்னோட இருந்தாங்க.. எதுக்கு அவங்களோட மனசால இணைஞ்சு கடைசியில பிரிஞ்சு  எதுக்கு இப்படி ஒரு வலினு யாருகூடேயும் எமோஷனலா அட்டாச் ஆக மாட்டேன்.. அதனாலே நான் எனக்குள்ளேயே ஒரு வளையம் போட்டுக்கிட்டேன்.. அசோக் தவிர யாரும் எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட் இல்லை.. அவன் கூட தான் நான் தங்கி இருந்தேன்.. என் அம்மா சென்னையிலே இருக்கிற இந்த வீட்டுல தங்க சொன்னாங்க.. ஆனால் நான் தான் வேண்டாம்னு அவன் கூட இருந்தேன்.. அப்புறம் அவன் ஃபேமிலி அங்கே வந்துடவும் நான் இங்கேயே வந்துட்டேன்.. அன்னைக்கு காலையிலே பஸ்ல உன்னை பார்க்கும் போது பிடிச்சு போச்சு.. நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.. அதே மாதிரி நல்லாவும் இருந்தது… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மந்தி… உன் மேலே கோபமே பட மாட்டேன்.. ஆனால் இன்னைக்கு எல்லா கோபத்தையும் உன் மேலே காமிச்சுட்டேன்… ரித்திகா ஷர்மாவோட பர்த்டேனு இந்த ஊருக்கே தெரியும் ஆனால் அந்த ரித்திகா ஷர்மாவுக்கு நியாபகம் கூட இருக்காது  இன்னைக்கு தான் அவங்க பையன் பொறந்த நாளுனும்… ஒரு போன் கூட அவங்க பண்ணல.. அவங்கள சொல்லி குத்தம் இல்லை.. நான் அவங்க போன் பண்ற அளவுக்கு வெச்சுக்க மாட்டேன்… அவங்களை பத்தாலே கோபமா வரும்னு கிட்டே கூட சேர்க்க மாட்டேன்… இந்த பிறந்த நாள் அன்னைக்கு கூட  என்னை சுத்தி வெறும் வெறுமை மட்டும்  தான் இருக்கு.. அவங்க மட்டும் சந்தோஷமா கொண்டாடுறாங்க.. அந்த கொண்டாட்டத்தை  நீயும் பார்க்க சொல்ற.. அதான் கோபத்துல கத்திட்டேன் டா.. சாரி” என சொல்ல அவள் தாவிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்..

” ஐ யம் ரியலி சாரி கடுவா…. உன் மனசுல இவ்வளவு வலி இருக்கும்னு எனக்கு தெரியாது.. அவங்களை விடு… நான் இருக்கேன் அர்ஜீன் உனக்காக.. ஐ லவ் யூ டா ” என அவள் இறுக்கி அணைத்துக் கொண்டாள்..

அந்த இரண்டு நிமிட இறுகிய அணைப்பிற்கு பின்பு அவளை விடுவித்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டான் அர்ஜீன்…

” சாரி மா.. நான் இவ்வளவு எமோஷன் ஆக மாட்டேன்.. ஆனால் இன்னைக்கு ரொம்ப ஆகிட்டேன்.. ரியலி சாரி ” என சொல்ல

” சீ கடுவா.. இதுக்கு போய் சாரி சொல்லுவியா?” என்றவள் வேகமாக சமையலறைக்குள் சென்றாள்.. யூ டியூபை பார்த்து ஏதேதோ செய்தாள்.. பின்பு அவனை டைனிங் டேபிளில் உட்காரவைத்துவிட்டு சாப்பாடு பரிமாற போக ” ஏன் டி பிறந்த நாள் அதுவும் என்னை சாவடிக்க பார்க்குற” என சொல்ல பளாரென அறைந்தாள்..

” நானே கொன்னுடுவேன்.. அடுத்த வாட்டி இப்படி சாவுனு பேசுனானா.. பொறந்த நாள் அதுவுமா என்ன வார்த்தை பேசுவடா.. லூசு” என கத்த அவன் கோபப்படுவதற்கு பதிலாய் சிரித்துக் கொண்டு இருந்தான்..

” ஹே மந்தி என்னடி இப்படி மாறிட்ட இதுக்குலாம் கலங்குற ஆளா நீ… சும்மா கண்ணு மாதிரி இருப்ப.. வார்த்தையா தானே சொன்னேன்” என அவன் சொல்ல கோபமாய் இவள் ஒரு பார்வை பார்த்துவிட்டு  பரிமாற ஆரம்பித்தாள்…  முதலில் கொலை பயத்துடன் உண்டவன் அடுத்தடுத்த வாய்களில் ரசித்து உண்ண ஆரம்பித்தான்..

” ஹே உண்மையா செமயா செஞ்சு இருக்கேடி .. மாஸ் பண்ணிட்ட போ” என்றபடி நன்றாக உண்டான்..

பிறகு அவன் கையை கழுவிக் கொண்டு வந்து ஹாலில் உட்கார இவள் அவன் மேல் அமர்ந்தாள்..  தன் மேல் அமர்ந்த பூக்குவியலை மெதுவாக கைவளைவில் கொண்டு வந்தவன் அவள் காதோர முடியைக் கோதிவிட்டு உதடுகளில் அழுத்தமான முத்திரையை பதித்து விடுவிக்க அவள் இன்னும் மயக்கம் தெளியாமல் இருந்தாள்..

அவள் முடியை மெதுவாகக் கோதியபடி “என்ன தியா மா” என அவன் கேட்க “எனக்கு இது மட்டும் பத்தாது கடுவா” என்றாள்..

அவன் ஆனந்த அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க அவள் கண்கள் மையலுடன் அவனை நோக்கியது.. அவ்வளவு தான் வேகமாக தியாவை கையில் ஏந்தியவன் அவளிடம் முதன் முதலில் தன் காதலை சொன்ன அறைக்கு கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினான்.. அதற்கு பின்பு உடைகள் விலக காமம் அகல அவளது பெண்மையும் இவனது ஆண்மையும் சமமாய் சங்கமிக்க தொடங்கியது..

இருவருக்கும் பெரு மூச்சு எழ விலகி மூச்சு எடுத்து கொண்டனர்.. அவளை கையணைப்பில் கொண்டு வந்தவன் ” என் பிறந்த நாளுக்கு உன்னையே பரிசா கொடுத்திட்ட தியா மா” என சொல்ல அவன் கண்டுபிடித்துவிட்டானே என இவள் உதட்டைக் கடிக்க ” ஹே இனி அது எனக்கு சொந்தமான இடம்டி ” என மீண்டும் அவளது இதழை சிறை செய்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!