உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 08

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 08

மூன்று வருடங்களுக்கு முன்னர்……

சென்னை – செந்தமிழ் இல்லம்

 

கிருஷ்ணா

 

தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ

கூச்சுக்கோ கூச்சுக்கோ கூடவே கூச்சுக்கோ

கண்களிலே தீ கன்னத்திலே பால்

அங்கத்திலே பூ ஆடையிலே தா

அந்தப்புரம் உண்டு ஆலிங்கதம் உண்டு

ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தச்சுக்கோ கோ கோ தச்சுக்கோ கோ கோ தங்கமே மே மே தச்சுக்கோ கோ கோ

கூச்சுக்கோ கோ கோ கூச்சுக்கோ கோ கோ கூடவே கூச்சுக்கோ

 

ஆஹ் ஹா ஹா…

 

கண்ணைப் பார் தக தக தக

அங்கம் பார் பள பள பள

தொட்டு பார் தழ தழ தழ அள்ளவா

வாராயோ வர வர வர

தாராயோ தர தர தர

பேரின்பம் பெற பெற பெற நீயும் வா

சுமை நான் தாங்க தான்

சுகம் நீ வாங்க தான்

சுமை நான் தாங்க தான் நீ வாங்க தான் பொன்னூஞ்சலில் ஆட வா

 

அந்தப்புரம் உண்டு ஆலிங்கதம் உண்டு

ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தச்சுக்கோ கோ கோ தச்சுக்கோ கோ கோ தங்கமே மே மே தச்சுக்கோ கோ கோ

கூச்சுக்கோ கோ கோ கூச்சுக்கோ கோ கோ கூடவே கூச்சுக்கோ

 

கிருஷ்ணா

ஹே கிருஷ்ணா

 

கொலுசெல்லாம் சல சல சல

வளையல்கள் கல கல கல

மஞ்சத்தில் பல பல பல ஆசைகள்

அங்கங்கள் சுட சுட சுட

அங்கங்கே தொட தொட தொட

நெஞ்செங்கும் கட கட கட ஆசைகள்

விண்ணில் ஒற்றை நிலா மண்ணில் கூடல் விழா

விண்ணில் ஒற்றை நிலா கூடல் விழா கொண்டாடும் நாள் இன்று தான்

 

அந்தப்புரம் உண்டு ஆலிங்கதம் உண்டு

ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தச்சுக்கோ கோ கோ தச்சுக்கோ கோ கோ தங்கமே மே மே தச்சுக்கோ கோ கோ

கூச்சுக்கோ கோ கோ கூச்சுக்கோ கோ கோ கூடவே கூச்சுக்கோ

 

கண்களிலே தீ கன்னத்திலே பால்

அங்கத்திலே பூ ஆடையிலே தா

அந்தப்புரம் உண்டு ஆலிங்கதம் உண்டு

ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

 

தச்சுக்கோ

 

செந்தமிழ் இல்லத்தின் தோட்டப் பகுதியில் தேன்மொழி தன் கையில் வைத்துக் கொண்டிருந்த தொலைபேசியிலிருந்து பாடலை ஒலிக்க விட்டு கொண்டிருக்க இழையினி கண்களிலும், முகத்திலும் அபிநயம் மின்ன அந்த பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தாள்.

 

அந்த பாடலில் கிருஷ்ணா என்னும் வார்த்தை வரும் ஒவ்வொரு இடத்திலும் அவள் முகத்தில் அத்தனை பிரகாசம் ஒளிர்ந்து மறைய அந்த இடத்தை சுற்றி நின்ற அவளது அன்னை கலைச்செல்வி, அவளது அத்தை எழிலரசி, தேன்மொழி, மதியழகன், நெடுஞ்செழியன் மற்றும் வளர்மதி உட்பட அந்த வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் கூட அவளது நடனத்தை பார்த்து மெய்மறந்து போய் நின்றனர்.

 

இழையினியின் நடனம் முடிந்ததும் அங்கு நின்ற அனைவரும் உற்சாகமாக சந்தோஷத்துடன் கைகளை தட்ட சிறு வெட்கப் புன்னகையுடன் தன் அன்னையின் அருகில் வந்து நின்று கொண்டவள்

“என்ன தேனு ஒழுங்காக பார்த்துகிட்ட இல்லையா? அப்புறம் நாளைக்கு ஸ்டேஜில் போய் நின்று பேந்த பேந்த முழிச்சுட்டு நிற்கப்போற!” தேன்மொழியைப் பார்த்து கொண்டு சிரித்துக் கொண்டே கூறவும்

 

அவர்களிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த மதியழகன்

“இழை! நீ என்ன தான் தலைகீழாக நின்று சொல்லி கொடுத்தாலும் நாளைக்கு அவ ஸ்டேஜில் நின்று கண்டிப்பாக திருதிருவென முழிக்கத் தான் போறா பாரு!” என்று கூற

 

அவனருகில் இருந்த நெடுஞ்செழியனோ

“கரெக்ட் அத்தான்! கண்டிப்பாக அது தான் நடக்கும்” என்றவாறே அவனது கையில் ஹைபை அடித்துக் கொண்டான்.

 

“பாருங்க அத்தை உங்க பையனை! எப்படி கலாய்க்குறாங்க! ஏதோ ஒன்றிரண்டு தடவை ஸ்டேஜில் ஸ்டெப் மறந்து நின்று இருக்கேன் அதை ஞாபகம் வைத்துக்கிட்டு எப்படி பேசுறாங்கன்னு பாருங்க”

 

“அது தானே! மதி ஏன்டா அவளை கிண்டல் பண்ணுற? சின்ன பொண்ணு ஏதோ ஒன்றிரண்டு தடவை அப்படி பண்ணா அதையே சொல்லி காட்டுறதா?” 

 

“நல்லா கேளுங்க அத்தை” தேன்மொழி மதியழகனைப் பார்த்து பழிப்பு காட்டியபடியே கலைச்செல்வியின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொள்ள 

 

அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த இழையினி

“ஆனால் தேனு நீ இது வரைக்கும் கலந்து கொண்ட நிகழ்ச்சி இரண்டே இரண்டு தானே இல்லையா?” தன் கன்னத்தை தட்டி யோசிப்பது போல பாவனை செய்து கொண்டே சிரிப்பை மறைத்தபடி கேட்கவும் அங்கு நின்ற அனைவரும் வயிற்றைப் பிடித்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

 

“இழை! நீயும் உன் அண்ணன் கூட சேர்ந்து என்னை கலாய்க்குறியா? போங்க நான் போறேன்” கோபமாக மூச்சிறைக்க கூறி விட்டு தேன்மொழி அங்கிருந்து வேகமாக நடந்து செல்ல 

 

சிரித்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்து ஓடி வந்து அவள் கைகளை பிடித்து கொண்ட இழையினி

“தேனு பாப்பா! எதற்கு இவ்வளவு கோபம்? நம்ம ஒருத்தரை ஒருத்தர் இப்படி கலாய்க்குறது சகஜம் தானே! அதோட மதிண்ணா நீ பண்ணதை தானே சொன்னாங்க” என்றவாறே மீண்டும் சிரிக்கப் போக அவளோ இவளை கொலைவெறியோடு முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.

 

“சரி சரி ஸாரி டா தேனு! ஓகே வா சிரிடா பாப்பா” இழையினி தேன்மொழியின் கன்னத்தை பிடித்து ஆட்டியபடியே கூறவும் அவளது பார்வையோ தன் முன்னால் நின்றவளின் முதுகைத் துளைத்து கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தது.

 

‘என்ன நம்ம பேச்சுக்கு ரெஸ்பான்ஸே இல்லாமல் நிற்குறா?’ யோசனையுடன் இழையினி தன் பின்னால் இலேசாக திரும்பி பார்க்க அங்கே மதியழகன் தேன்மொழியைப் பார்த்து ஜாடையில் கெஞ்சலாக மன்னிப்பு கேட்டபடி நின்று கொண்டிருந்தான்.

 

‘ஓஹோ! கதை அப்படி போகுதா?’ மனதிற்குள் சிரித்துக் கொண்டே வேண்டுமென்று மதியழகனை மறைப்பது போல வந்து நின்று கொண்ட இழையினி 

 

“என்ன மேடம் இங்கே நடக்குது?” கைகளை கட்டிக் கொண்டு கேள்வியாக அவளை நோக்க அவளது கேள்வியில் முகம் சிவந்து போன தேன்மொழி சட்டென்று அங்கிருந்து ஓடி வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டாள்.

 

“சரியான கேடிப்பசங்க! வெளியே பார்ப்பதற்கு எலியும் பூனையும் மாதிரி இருந்துட்டு உள்ளுக்குள்ள ரோமியோ ஜூலியட்ன்னு நினைப்பு! இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன்” தன் அண்ணனின் புறமும் ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டவள் அதே சந்தோஷமான மனநிலையுடன் படியேறி தன் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.

 

செந்தமிழ் இல்லத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசுகள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரு வயதுப் பிரிவினரை ஒத்தவர்கள் என்பதனால் அந்த வீட்டில் எப்போதும் இப்படி அடிக்கடி சிறு சிறு சண்டைகளும், கேலிகளும் நடந்து கொண்டே தான் இருக்கும்.

 

அப்படி ஏதாவது ஒரு விடயம் அந்த வீட்டில் ஒரு நாள் நடக்காவிட்டாலும் அந்த வீட்டில் யாருக்குமே அன்றைய பொழுது சிறப்பாக அமையாது. 

 

இழையினி ஒரு மாதத்திற்கு முன்பு தான் தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன் அன்னையும், தந்தையும் பொறுப்பெடுத்து நடக்கும் தன் தாத்தாவின் கம்பெனியில் வேலை செய்வதற்காக இணைந்திருந்தாள்.

 

தேன்மொழி அந்த மாதம் தான் தன் ஒரு வருடக் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இரண்டாம் வருடத்தில் காலெடுத்து வைத்திருந்தாள்.

 

அவர்கள் கல்லூரியில் வருடாவருடம் நடக்கும் கலை நிகழ்ச்சியில் முதன்முதலாக பங்கு பெற்ற இருந்தவளுக்கே இழையினி இப்போது நடனம் சொல்லிக் கொடுத்திருந்தாள்.

 

எப்போதும் போல செல்ல சண்டைகளோடும், விளையாட்டோடும் அன்றைய நாள் விடிந்து இருக்க அவரவர்கள் அவரவர் வேலைகளுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

 

காலை உணவை உண்பதற்காக எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து காத்துக் கொண்டிருக்க தன் அறைக்குள் இருந்து வெளியேறி வளர்மதியுடன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார் அசோகன்.

 

“குட் மார்னிங் தாத்தா!” 

 

“குட் மார்னிங் பசங்களா! எல்லோரையும் ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனா?”

 

“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை தாத்தா ஜஸ்ட் இருபதே இருபது நிமிஷம் தான் இருபது இன்டூ அறுபது ஆயிரத்து இருநூறு செக்கன் தான்” இழையினி தன் முகத்தை வெகு தீவிரமாக வைத்த படி கூற 

 

வாய்விட்டு சிரித்த படியே அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டவர்

“வாலுப் பொண்ணு!” என்றவாறே அவரது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

 

அதன் பிறகு பொதுவான அவர்களது பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருந்த அசோகன் ஏதோ ஞாபகம் வந்தவராக இளமாறன் மற்றும் கலைச்செல்வி அமர்ந்திருந்த புறம் திரும்பி

“மாப்பிள்ளை! செல்வி! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச இருந்தேன் இப்போதான் ஞாபகம் வருது நம்ம மதியழகனுக்கு ஒரு சம்பந்தம் வந்து இருக்கு நம்ம பிசினஸ் பார்ட்னர் மாணிக்கத்தோட பொண்ணை தான் பேசுவதற்கு கேட்க வந்தாங்க என்ன பண்ணலாம் சொல்லுங்க?” கேள்வியாக நோக்க மறுபுறம் சாப்பிட்டு கொண்டிருந்த மூவரின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது.

 

அந்த மூவர் வேறு யாரும் அல்ல அந்த பேச்சின் நாயகன் மதியழகன், தேன்மொழி மற்றும் இழையினி.

 

தன் அன்னையும், தந்தையும் என்ன சொல்ல போகிறார்கள் என்ற அச்சத்துடன் மதியழகன் மற்றும் இழையினி பதட்டத்துடன் அவர்களைப் பார்த்து கொண்டிருக்க தேன்மொழியோ தன் தலையை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

“இதில் நாங்க சொல்ல என்னப்பா இருக்கு? வாழப்போறது அவன் அதனால் அவன் தானே முடிவு பண்ணணும் பசங்க என்ன முடிவு எடுக்குறாங்களோ அது தான் எங்க முடிவும்!” கலைச்செல்வியின் கூற்றில் தன்னை சற்று ஆசுவாசப் படுத்தி கொண்ட இழையினி அடுத்து தன் அண்ணன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலுடன் அவனின் புறம் திரும்பி பார்த்தாள்.

 

“செல்வி சொல்லுவதும் சரி தான்! அழகா நீ சொல்லுப்பா மேற்கொண்டு பேசுவோமா?” அசோகன் மதியழகனைப் பார்த்து கேட்க

 

அவனோ

“அது வந்து தாத்தா…” தட்டில் கையால் கோலம் போட்டபடியே சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டான்.

 

“என்ன அழகா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு இது உன்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் உங்களோட வாழ்க்கை சிறப்பாக அமையணும் அது தான் இந்த தாத்தாவோட ஆசை! உன் மனதில் இப்போ என்ன தோணுதோ சொல்லு

“அது… தாத்தா… வந்து…”

 

“சொல்லுப்பா என்ன விஷயம்?”

 

“என… எனக்கு இப்போ கல்.. கல்யாணம் வேண்டாம் தாத்தா” மதியழகன் தட்டுத்தடுமாறி ஒரு வழியாக தன் மனதிற்குள் இருந்ததைக் கூறி முடிக்க தேன்மொழி பதட்டத்துடன் அவனையும், அசோகனையும் நிமிர்ந்து பார்த்தாள்.

 

“ஏன் வேண்டாம்? ஏதாவது காரணம் இருக்கா?”

 

“ஆ… ஆமா தாத்தா!”

 

“என்ன காரணம்?”

 

“அது… அது வந்து”

 

“உன் மனதில் வேறு யாராவது பொண்ணு இருக்கா?”

 

“…….”

 

“சொல்லு அழகா! இருக்கா?” அசோகன் இம்முறை சற்று அதட்டலாக கேட்க அவனது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

 

அவனையே அத்தனை நேரம் பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்த இழையினி மற்றும் தேன்மொழி மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே அவனது ஆமோதிப்பான தலையசைப்பில் அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தனர்.

 

“மதியழகா! என்ன இது எல்லாம்?” வளர்மதி பதட்டம் நிறைந்த குரலோடு அவனது தோளில் கை வைத்துக் கேட்க

 

அவசரமாக அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்

“அய்யோ! பாட்டி நான் அந்த அர்த்தத்தில் சொல்லல என் மனதிற்குள் இருக்கும் பொண்ணு என்னோட தங்கை இழையினி! அவளுக்கு கல்யாணம் பண்ணாமல் நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ண மாட்டேன் அதைத் தான் சொல்ல வந்தேன்” என்று கூறவுமே சுற்றியிருந்த அனைவருக்கும் நிம்மதியாக மூச்சுக் காற்று வெளியேறியது.

 

‘அடப்பாவி அண்ணா! உன் லவ்வுக்கு டைம் வேணும்னு என்னை கோர்த்து விட்டுட்டியேடா! பாதகா! கிராதகா!’ மனதிற்குள் இன்னும் இன்னும் பலவிதமாக தன் பாசமிகு அண்ணனை திட்டிய படி அமர்ந்திருந்த இழையினி வெளியே தன் முகத்தை வெகு சாதாரணமாக வைத்து கொண்டிருப்பது போல அமர்ந்திருந்தாள்.

 

“ஆமாங்க மதியழகன் சொல்லுறதும் சரிதானே! கல்யாண வயதில் தங்கையை வைத்து கொண்டு அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுறது சரி இல்லையே!” வளர்மதி மதியழகனின் கூற்றுக்கு ஆமோதிப்பாக தன் கருத்தை தெரிவிக்க 

 

சிறிது நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்த அசோகன் இழையினியின் புறம் திரும்பி

“இழையினி நீ என்னம்மா சொல்லுற? உனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” கேள்வியாக அவளை நோக்கினார்.

 

அத்தனை நேரம் அடுத்தவர் என்ன செய்ய போகிறார்கள்? என்ன சொல்லப் போகிறார்கள்? என்று ஆவலுடன் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தவள் இப்போது அனைவரது பார்வையும் தன் மேல் இருப்பதை பார்த்து விட்டு தன் அண்ணனையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு

“எனக்கு கல்யாணம் பண்ணுவதில் எந்த பிரச்சனையும் இல்லை தாத்தா ஆனா இப்போவே…” தயக்கத்துடன் அசோகனைப் பார்க்க

 

 புன்னகையுடன் அவளது தலையை தன் ஒரு கையால் தடவி கொடுத்தவர்

“இப்போ மாப்பிள்ளை பார்க்க தொடங்கினால் தான் ஒரு வருடத்திற்குள்ளாவது நல்ல பையனை கண்டுபிடிக்கலாம் நீ சம்மதம் சொல்லிட்ட தானேடா! அது போதும் என் பேத்திக்கு வசதி, படிப்பு, அந்தஸ்து, குணம், பண்பாடு என்று எல்லாவற்றிலும் நம்ம தரத்துக்கு ஏற்ற பையனை தான் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவேன் அதற்கு எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை” என்று கூற அங்கிருந்த அனைவருமே அதைக் கேட்டு புன்னகைத்து கொண்டனர் அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகளே நாளை மிகப் பெரிய பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடப் போவதை அறியாமல்.

 

அதன் பிறகு வந்த நாட்களில் அசோகனுடன் இணைந்து இளமாறனும், கதிரரசனும் இழையினிக்கு ஏற்ற வரனைத் தேடத் தொடங்கினர்.

 

அசோகன் தங்கள் வசதிக்கேற்ப பையன் அமைய வேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி வரன்களைப் பார்க்க மற்ற இருவருமோ தங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்ள கூடிய குணம் நிறைந்த பையனை கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வரன்களைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதங்கள் தொடர்ந்து சல்லடை போட்டு வரன்களை‌ அலசியதில் இறுதியாக எல்லோருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இழையினிக்கு பொருத்தமாக இருக்கக்கூடும் என்பது போல வந்து அமைந்தான் கௌதம்.

 

ஐந்து தலைமுறைகளாக ஜமீன்தார் வம்சத்தில் இருந்தவர்கள் என்ற ஒரு விடயம் அசோகனிற்குப் போதுமானதாக இருக்கவே அது ஒன்று‌ போதும் என்று நினைத்தவர் அந்த விடயத்தின் இன்றைய‌ நிலையை நன்றாக ஆழ்ந்து கவனிக்காமல் போனது அவரது துரதிர்ஷ்டமோ இல்லை காலத்தின் விளையாட்டோ தெரியவில்லை.

 

பல இடங்களில் விசாரித்து பார்த்தவர் அவர்கள் ஐந்து தலைமுறைகளாக ஜமீன்தார் வம்சத்தில் இருந்தவர்கள் தான் என்று கூறவும் அவர்கள் தங்கள் வசதிக்கேற்றவர்கள் தான் என்று அவர் நினைத்திருக்க அவர் விசாரித்தவர்கள் எல்லோரும் ‘அவர்கள் ஜமீன்தார் வம்சத்தில் இருந்தவர்கள்’ என்று கூறியதை கூர்ந்து கவனிக்க தவறினார்.

 

வீட்டில் இருந்த அனைவருக்கும் அந்த வரன் பிடித்து போய் விட்டது தானே என்ற ஒரு எண்ணம் அவர் மனதிற்குள் ஆழமாக பதிந்ததால் என்னவோ இந்த விடயம் அவர் செவி வரை மட்டுமே சென்று திரும்பியது.

 

கடவுள் ஒரு விளையாட்டை நடத்த நினைத்துக் விட்டால் சாதாரண மானிடர்களால் என்ன தான் செய்து விட முடியும்?

 

வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லோரும் பையனது குணம், பழக்கவழக்கங்கள் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தங்களுக்கு திருப்தி என்று வந்த பின்பே இழையினியிடம் மேற்கொண்டு அந்த விடயத்தை சொல்ல ஆரம்பித்தனர்.

 

அன்று வழக்கம் போல தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய இழையினியை வாசலிலேயே வைத்து பிடித்து கொண்டார் அவளது பாட்டி வளர்மதி.

 

“பாட்டி! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு உள்ளே போக விடுங்க” தலையை பிடித்து கொண்டு சோர்வுடன் கூறியவளின் கையில் ஒரு கவரை வைத்தவர்

 

“இந்த கவரைப் பிரித்து பாரு உன் சோர்வு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்” என்று விட்டு அவளது முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டு நின்றார்.

 

“அய்யோ! பாட்டி!” சலித்து கொண்டே அந்த கவரைத் திறந்து பார்த்தவள் அதில் அழுத்தமான பார்வை, அலை அலையாக கேசம், மாநிறத்தை ஒத்த நிறத்தோடு நீல நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு கண்களிலும் முகத்திலும் புன்னகை தவழ நின்றவனை பார்த்து ஒரு கணம் தன்னை மறந்து மெய் மறந்து போய் நின்றாள்.

 

இழையினியின் முக மாற்றத்தை வைத்தே அவளது மனதை படித்துக் கொண்ட வளர்மதி

“பையன் பேரு கௌதம் இங்கே சென்னையில் தான் சாஃப்ட் வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறான் பையனோட சொந்த ஊர் தஞ்சாவூர் ஆனா இப்போ சென்னையில் தான் இருக்காங்க அம்மா பேரு விஜயதேவி அப்பா பேரு நாராயணன் வீட்டுக்கு ஒரே பையன் அப்புறம்…” பாதியிலேயே தான் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளோ குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“அப்புறம் என்ன பாட்டி?”

 

“யாரோ டயர்டா இருக்குன்னு சொன்னாங்க அவங்களை நீ பார்த்தியா இழைம்மா?”

 

“பாட்டி!” வெட்கமும், கூச்சமும் போட்டி போட சிணுங்கியவளை பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டவர்

 

“நாளைக்கு எங்க வீட்டு இளவரசி இழையினியை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று கூறவும்

 

அவளோ

“நாளைக்கா?” ஆச்சரியமும், ஆவலும் ஒன்று சேர அவரைப் பார்த்து வினவினாள்.

 

“ஏன்? நாளைக்கு வேண்டாமா? அப்போ நான் போய் தாத்தா கிட்ட நாளைக்கு பொண்ணு பார்க்க வர வேண்டாம்ன்னு இழை சொன்னான்னு சொல்லிடுறேன்” 

 

“அய்யோ! பாட்டி! நான் அப்படி சொன்னேனா?”

 

“அப்போ வேறு எப்படி?”

 

“போங்க பாட்டி” வெட்கத்தோடு புன்னகைத்த படியே இழையினி படியேறி சென்று தன்னறைக்குள் நுழைந்து கொள்ள வளர்மதி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அவள் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றார்.

 

“கடவுளே! இந்த சந்தோஷம் எப்போதும் என் பேத்தி கூடவே இருக்கணும்” மனதார கடவுளை வேண்டிய படியே வளர்மதி தன் வேலைகளை கவனிக்க சென்று விட மறுபுறம் இழையினி தன் கனவுகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கப் போவதை அறியாமல் கண்களில் கனவு மின்ன தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்து இதழில் மந்தகாசப் புன்னகை தவழ அமர்ந்திருந்தாள் ……

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!