மண் சேரும் மழைத்துளி 7

மண் சேரும் மழைத்துளி 7

 மழைத்துளி 7

 

இரவும் நிலாவும் சங்கமித்த பொழுதில், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரியனின் கன்னம்  வெட்கத்தில் சிவந்து விட, தன்னை மறைக்க மேகத்திற்குள் அழகாய் தன் முகத்தை ஒளித்துக் கொள்ள, அந்த அழகிய விளையாட்டை அவள் கண்கள் ரசித்தபடி தியா அமர்ந்திருக்க, அவள் உள்ளம் மட்டும் முழுவதும் அகரன் நினைவுகளில் மூழ்கி இருந்தது. 

 

அகரன் ஃபோனை உளவு பார்த்ததில் தியாவிற்கு உறுதியாக தெரிந்து விட்டது, அகரன் தன்னை காதலிப்பது… அதுவும் அவளின் மூன்று வயதில் அவளை தன் கையில் ஏந்தியவன் இன்று வரை எந்த எதிர்பார்ப்புமின்றி அவளை தன் இதயத்தில் இருந்து இறக்காமல் அன்பாய் சுமந்து கொண்டு இருக்கிறான்… வெறும் அவள் கண்களை மட்டுமே இன்று வரை ஆசையாக காதலிக்கும் அகரனை  யோசித்த தியாவின் மனது லேசாக வலித்தது… 

 

“நா அகரனோட அன்பை, என்னோட சுயநலத்துக்காக யூஸ் பண்றனா? நா செய்றது சரியா? இது அகரனுக்கும் அவன் உண்மையான அன்புக்கு நா செய்ற துரோகம் இல்லயா?” என்று அவளிடம் அவளே கேள்வி கேட்க…

 

‘இல்ல தியா, நீ செய்றது தப்பே இல்ல. நீ ஒன்னும் அகரனை ஏமாத்தப் போறதில்லயே, நீ அவனை கல்யாணம் செஞ்சுக்க தானே நெனைக்குற, அப்றம் என்ன? நீ செய்றது  சரி தான்’ என்று அவள் மனசாட்சி அவளுக்கு பதில் சொல்ல…

 

“இல்ல… இல்ல… நீ சொல்றது தப்பு, நா அகரனை கல்யாணம் செஞ்சுக்க நெனைக்குறேன் தான். ஆனா, அது என்னோட சுயநலத்துக்காக தானே… அகரன் என்னை கல்யாணம் செய்ய சம்மதிச்ச அதுக்கு காரணம் அவருக்கு என் மேல இருக்க அன்பும், காதல் தான். ஆனா, நா என்னோட ஆசைக்காக தானே அவரை மேரேஜ் செய்ய நினைக்கிறேன். அது நா அவருக்கு செய்ற தப்பு தானே?” என்று தியா சொல்ல…

 

‘அப்டியா தியா?? நிஜமாகவே நீ வெறும் உன்னோட ஆசைக்காக தான் அகரனை மேரேஜ் பண்ண நெனைக்குறீய? உன் மனசுல வேற ஒன்னும் இல்லயா? உனக்கு அவனை புடிக்கலயா? என்று அவள் மனசாட்சி எதிர் கேள்வி கேட்க…

 

தியா சற்றும் யோசிக்காமல், “இல்ல… இல்ல… அப்டி இல்ல, எனக்கு அவரை ரொம்ப புடிக்கும். அது கொஞ்சம் முசுடு தான் பட் ரொம்ப நல்ல டைப், ஃபேமிலி மேல செம்ம அட்டச்மெண்ட், பொண்ணுங்களை மதிச்சு நடக்குற நல்ல குவாலிட்டி, என் அப்பா மேல கோவம் இருந்தாலும், நா எப்டி இருப்பேன், என்னோட கேரக்டர் என்ன? எதுன்னு? கூட தெரியாம, இத்தனை வருஷமா என்ன நேசிக்கிற அந்த மனசு, ஆண்ட் விஷ்வா மட்டும் இல்லாம நிலவன், அருள் கூட என்னை நெருக்கம பார்த்த கூட கடுப்புல சிவக்கும் அவனோட அந்த கண்ணும், என்னை இவ்ளோ புடிச்சும் புடிக்காத மாதிரியே தன் கெத்த மெயின்டென் பண்ற அவனோட திமிரு எல்லாமே எனக்கு புடிக்கிது” என்று அவள் ஒரு பெரிய லிஸ்ட் டே வசிக்க…

 

“புடிக்குதுன்னா? அதுக்கு என்ன அர்த்தம் தியா? வெறும் புடிக்கிது மட்டும் தானா?” என்று மனசாட்சி கேட்ட கேள்வியில் தான் தியாவிற்கே உறைத்தது அவள் மனதின் உண்மை நிலை…

 

“அப்படின்னா நானும் அந்த ஆங்கிரி பேர்ட் மூஞ்சிய லவ் பண்றேன் தான் போல. நா யாரைப் பத்தியும் இவ்ளோ ஆழமா நெனச்சது இல்ல…  ஆனா, அந்த அகரன் மேல என்னையும் அறியாம எனக்கு  இவ்ளோ இன்டர்ஸ்ட் வந்திருக்கு.! அப்டின்னா நானும் அந்த வளத்து கெட்டவனை லவ் பண்றேன்…!!! யா ஊஊஊஊ” என்று துள்ளி குதித்தவள் கால் தடுமாறி கீழே விழப்போக…

 

“ஏய்! ஏய்! தியா டார்லிங் பாத்து விழுந்திட போற” என்று கத்தியபடியே வந்த நிலவன் அவளை பிடித்து நிறுத்த…

 

காலை அகரன் அவளை தரையையே பாத்து நடக்க மாட்டியா நீ? என்று திட்டியது, அதற்கு இவள் பதில் பேசியதும் ஞாபகம் வர, அவளையும் அறியாமல் அவள் முகம் மலர்ந்தது.

 

“ஏய் தியா! என்ன ஆச்சு உனக்கு? இப்ப எதுக்கு லூசு மாதிரி இளிச்சுட்டு இருக்க நீ, என்ன ஆச்சு உனக்கு? பேய் எதுவும் புடிச்சிருச்சா என்ன? அதுக்கு தான் பாட்டி சொல்லும், கண்ட நேரத்துல இருட்டுல நிக்க கூடாதுன்னு” என்று நிலவன் தியாவை வம்பிழுக்க…

 

“ஓய் என்ன கிண்டலா, நா இப்டி இளிக்க காரணம் பேய்ன அந்த போய் வேற யாரும் இல்ல… உன்ற உடன்பொறப்பு, அந்த ஆங்கிரி பர்ட் அகரன் தான்” என்றவள் காலையில் அகரன் இவளை திட்டியதை சொல்லி மீண்டும் சிரிக்க நிலவன் ஒரு நிமிடம் அவளை ஆழமாக பார்த்தவன். தியா உனக்கு இந்த ஊரு, இந்த வீடு, எங்க எல்லாரையும் புடிச்சிருக்கா?” என்று கேட்க…

 

“புடிச்சிருக்கா வாஆஆ?! ஐ ஜஸ்ட் லவ் திஸ் நிலா… எனக்கு இந்த ஊரு, நம்ம வீடு ரொம்ப புடிச்சிருக்கு, அதை விட உங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு” என்று கத்தி சொன்னவளின் சிரிப்பு நிறைந்து வழிந்த முகம் சடுதியில் வாடிவிட்டது…

 

“என்ன ஆச்சு தியா? ஏன் சட்டுன்னு முகம் மாறிடுச்சு??” என்ற நிலவனை நிமிர்ந்து பார்த்த தியா…

 

“இல்ல நிலா! இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு நெனச்சேன். அதான் ஒரு மாதிரி ஆகிடுச்சு… கல்யாணத்துக்காக தான் எங்களை இன்வைட் பண்ணீங்க, அப்ப கல்யாணம் முடிஞ்சதும் நா இங்க இருந்து போய்டணும் இல்ல… அதான்” என்று கண்கலங்க…

 

“ஹலோ கனடா பைங்கிளி! நாங்க விட்ட தானா நீ போவ… உன்னை யாரு இங்க  விடுறது.‌ வாய்பில்ல ராணி, வாய்ப்பே இல்ல… இனி உன்ட நாடு இந்தியா, உன்ட கரன்சி ருபீஸ்,  உன்ட தேசிய பறவை மயில், உன்ட  ஃப்ரை மினிஸ்டர்” என்று நிறுத்தியவன்., “இப்ப தான் தேர்தல் முடிஞ்சிருக்கு, இந்த கேள்விக்கு மட்டும் பதிலை ரிசல்ட் வந்த அப்றம் உனக்கு சொல்றேன்” என்று சொல்ல தியா கவலை மறந்து சிரித்தவள்.

 

“அதெப்படி முடியும் நிலா. மேரேஜ்  முடிஞ்ச அப்றம் நா இங்க இருந்து போகணும் தானே” என்று மீண்டும் அதையே சொல்ல…

 

“ஆமா டா கண்ணு, நீ ஒரு கல்யாணத்துக்காக தான் இங்க வந்த, அதே மாதிரி ஒரு கல்யாணத்தாலா தான் நீ இங்கேயே இருக்க போற!” என்றவனை ஏக்கமாக பார்த்த தியா, “அதெப்படி முடியும் நிலா?? என்க…

 

“முடியும் தியா… உன் கழுத்துல ஒரு தாலிய கட்டி, இந்த வீட்டு பேத்தியை, இந்த வீட்டு பொண்ண இருக்கு உன்னை. இந்த வீட்டுக்கு,  எங்க அப்பா, அம்மாக்கு மருமகளாக்கி எங்க கூடயே வச்சிக்கிட்டா, புருஷனையும், புகுந்த வீட்டையும் விட்டு போக முடியாம நீயும், உன்னை விட்டு போக முடியாம அரவிந்தன் மாமாவும், தேன்மொழி மாமியும் இங்கயே இருந்திடுவாங்க” என்று சிரித்தவன், “ஒரே ஸ்டோன் டூ மங்காய்ஸ்… எப்டி என்னோட மாஸ்டர் பிளான் சூப்பர் இல்ல?” என்று சட்டை கலரை தூக்கிவிட்டுக் கொள்ள…

 

தியா ஒரு நிமிடம் இமைக்காமல் நிலவனை பார்த்தவள், ” அதெப்படி நடக்கும் நிலா? தாத்தாகும், அகரனுக்கும் தான் என்னை புடிக்கலயே, அப்றம் எப்டி? இன் கேஸ் வீட்டுல உன் கிட்ட என்னை  மேரேஜ் செஞ்சுக்க  சொன்ன, நீ ஒத்துக்குவியா நிலா? என்று வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க…

 

அவள் முகத்தை பார்த்து லேசாக சிரித்த நிலவன், “நா ஒத்துக்க மாட்டேன்னு உனக்கே நல்லா தெரியும் தியா…  இப்ப நீயும் அப்டி ஒரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு எனக்கும் தெரிஞ்சு போச்சு” என்றவன் அர்த்தமாய் தியாவை பார்த்து சிரிக்க…

 

“அதெப்படி நா ஒத்துக்க மட்டேன்னு நீ சொல்ற?? அத விடு உனக்கு தான் என்னை புடிக்குமே… அப்றம் ஏன் என்னை கட்டிக் மாட்டேன்னு சொல்ற‌ நிலா” என்று பதில் அறியும் ஆவலில் அவள் வேண்டுமென்றே அவனுக்கு தூண்டில் போட…

 

“ஏன்னா? என்னோட செல்ல தியா, எனக்கு அண்ணிய, என் அகரன் அண்ணாக்கு பொண்டாட்டிய வரணும்னு நா ஆசப்படுறேன். அகரன் அண்ணாவுக்கு அவரோட தீரா கிடைக்கணும்னு நான் ஆசப்படுறேன்” என்று அவளை பார்த்து கண்ணடிக்க…

 

“ஏய்!!!! ஏய்!! இப்ப நீ என்ன சொன்ன நிலா?? அப்டின்னா அகரன் என்னை லவ் பண்றதை உன் கிட்ட சொல்லிட்டாரா?” என்று கண்கள் மின்ன ஆவலாக  கேட்க…

 

நிலவன் இல்லை என்று தலையாட்டியவன், “இல்ல தியா அவன் என்கிட்ட ஒன்னும் சொல்லல, பட், எனக்கு தெரியும். அண்ணா உன்னை லவ் பண்றான்” என்றவனை தியா குழப்பமாக பார்க்க… 

 

“ஆமா தியா அதுதான் உண்மை. எனக்கு அகரனை நல்லா தெரியும். பிறந்ததில் இருந்து ஸ்கூல், காலேஜ்னு இப்ப வரை நா அவன் கூடவே தான் இருந்திருக்கேன்.  இதுவரை அவன் அரும்பு, சாரு, தாமரை தவிர்த்து எந்த பொண்ணையும் நிமுந்து பார்த்தது கூட இல்ல, அநாவசியமா எந்த பொண்ணுகிட்டயும் பேசினது இல்ல… அப்டிபட்டவன் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல உன்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தது தான் எனக்கு வந்த ஃபர்ஸ்ட் ஷாக், அதுக்கு பிறகு நீ எங்க மாமா பொண்ணு தெரிஞ்ச அன்னைக்கு அவன் முகத்துல தெரிஞ்சுதே ஒரு சந்தோஷம். இத்தன வருஷத்துல நா அவனை அவ்ளோ சந்தோஷம பாத்ததே இல்ல தியா, இந்த சந்திரமுகி படத்துல சலங்கையை பார்த்தும் ஜோதிகா கொடுப்பாங்களே ஒரு எக்ஸ்பிரஷன்!! அப்டி இருந்துச்சு அவன் முகம். அது எனக்கு வந்த செகண்ட் ஷாக்… எல்லாத்துக்கும் மேல, என் மேல உயிரையே வச்சிருக்க, அவன் உன்னோட என்னை பார்க்கும்போது மட்டும் அவன் பார்வை என்னை எதிரி மாதிரி பார்க்கும். அந்த பார்வையில  அவளோ பொறாமை இருக்கும் தியா. அப்பவே தெரிஞ்சு போச்சு அகரன் அண்ணா மனசு பூரா நீ தான் இருக்கண்ணு” என்றவன் சற்று நிறுத்தி, “இப்ப நீயும் அண்ணாவை லவ் பண்றேன்னு தெரிஞ்சு போச்சு” என்றவன் வெட்கத்தில் சிவந்திருந்த அவள் கன்னத்தை செல்லமாக கிள்ள., தியா தலையை மேலும் கீழும் ஆட்டியவள்…

 

“ஆமா நிலா, நானும் அந்த சிடுமூஞ்சிய‌ லவ் பண்றேன் தான். எனக்கே அது இப்ப தான் தெரிஞ்சுது” என்று முகம் சிவந்தவள்… “ஆமா நீ எப்டி நா அவரை லவ் பண்றேன்னு கண்டு புடிச்ச?” என்று வியப்பாக கேட்க…

 

“ம்ம்ம்ம்ம் பிபிசி நியூஸ்ல சொன்னாங்க… அடப்போம்மா., இத கண்டு புடிக்கிறது பெரிய கம்பசூத்திரம். எப்ப காலையில அகரன் உன்னை கழுவி ஊத்துனத, நீ ஈஈஈ இளிச்சிட்டே சொன்னீயோ… அப்பவே புரிஞ்சு போச்சு, பத்தா கொறக்கு, நீ  என்னை கட்டிக்குவீயனன்னு ஒரு கேவலமா கேள்விய. கேட்ட பாரு” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “மேடம் எங்க கிட்டயே போட்டு வாங்குறீங்களோ?” என்று நிலவன் தியாவை முறைக்க…

 

“ஆமா நா வேற என்ன செய்றது? உங்கொண்ணன் தான் என்னை பார்த்தாளே மொறச்சிட்டு திரியுறாரே. அதான் உனக்கு அவர் என்னை லவ் பண்ற மேட்டர் தெரியுமா, தெரியாதான்னு தெரிஞ்சுக்க சும்மா ஒரு பிட்டு போட்டு பாத்தேன்” என்று சிரித்தவள். இங்க வந்த கொஞ்ச நாள்லயே எனக்கு தெரிஞ்சு போச்சு யாரு மனசுல யாரு, அவங்களுக்கு என்ன பேருன்னு” என்றவள் நிலவனை பார்த்து விஷமமாக கண்ணடிக்க…

 

“ஏய்! ஏய்! போதும், போதும்… இதோட நிறுத்திக்குவோம்” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டவன், அங்கிருந்து ரெண்டாடி எடுத்து வைத்து பின், திரும்பி தியாவை பார்த்தவன், “விஷ்வா யாரு தியா?” என்று கேட்க… அதுவரை காதல் உணர்வில் ஹீலியம் பலூனாய் வானில் பறந்தவள்… காற்று பிடுங்கிய பலூனாக பூமியில் விழுந்தாள்.

 

“அது… அது வந்து நிலா, விஷ்வா என்னோட” என்றவள் வார்த்தையில் தயக்கம் தேங்கி இருக்க. நிலவன் அவள் முகத்திற்கு முன் கையை காட்டி போதும் என்றவன்… “வேணாம் தியா. நீ எதுவும் சொல்ல வேணாம். விஷ்வா யாருன்னு நீ எனக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்ல… ஆனா, உன்னோட லைஃப்ல விஷ்வா யாரு? என்னோட அண்ணா யாருன்னு நீ… தெளிவா இரு. அது போதும். அகரன் ரொம்ப நல்லவன் தியா. சோ எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. குட் நைட்” என்று விட்டு அங்கிருந்து செல்ல…

 

“நா தெளிவா தான் இருக்கேன் நிலா. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட அகரன் கூட மட்டும் தான் நடக்கும்” என்று தனக்குள்ளேயே அவள் சொல்லிக்கொள்ள…

அவர்கள் பேசியதில் பாதியை மட்டு‌மே, படிக்கட்டில் மறைந்திருந்து கேட்ட அரும்பு ஒரு கண்ணில் கோபமும், ஒரு கண்ணில் அழுகையுமாக அங்கிருந்து ஓடி இருந்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!