வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 3

இன்று ( சென்னை )

கீர்த்தி பேசி முடித்ததும் போனை மேசை மீது விட்டெறிந்தவனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் ஆத்திரத்தை அடக்கியபடி அடுத்துச் செய்ய வேண்டிய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

இது ஆத்திரப்படும் நேரம் அல்ல. வெற்றி வாய்ப்பை பறிக்கும் தருணம். நிதானமாக யோசிக்க வேண்டிய தருணம்.

ஆனாலும் மனதோ அவளைப் பற்றிய சிந்தனையில் இருந்தது, “எத்தனை தைரியம் இருந்தால் என்னிடமே அப்படி எகிறுவாள். இவளுக்கு அந்தத் தைரியத்தை யார் கொடுத்தது. என்னைப் பற்றி அறிந்தவன் எவனோ இவள் பின்னே இருக்கிறான். யாராக இருக்கும்? என்னை விடப் பெரிய புளியம்கொம்பை பிடித்துவிட்டாளோ? அது தான் ஆணவத்தில் ஆடுகிறாளா?“

அவன் மனதில் பெண்களுக்கான இடம் அது தான். அவனுக்கு அவன் தாய் மட்டுமே நல்லவள். மீதி எல்லாருமே பணத்தைப் பார்த்து. பின்னால் செல்லும் கேவலமானவர்கள். அவன் சந்தித்த பல பெண்களும் அப்படித் தான். அந்த இடத்தில் தான் அவன் கீர்த்தியையும் வைத்தான்.

“பாஸ்“ என்றபடி கதவை தட்டிக் கொண்டு வந்தான் அகில் தேவ்.

“வா. அகில்“ என வலது புருவத்தை வருடி யோசனையில் இருக்க.

“பாஸ்“ எனத் தயக்கமாக அழைத்தான் அகில்.

“ஹான். சொல்லு அகில்“ என்றபடி தனது கூலரை எடுத்து அணிந்து கொண்டான். இப்பொழுது பெரும்பாலும் அவன் கண்ணில் அந்தக் கூலர் இடம் பிடித்திருக்கிறது.

எதிரில் இருப்பவர் தன் கண் காட்டும் பாஷையை அறியாமல் இருக்கவே அவன் கையாண்ட உக்தி இது. பெரிய தொழில் ஜாம்பவான் இல்லையா? அது தான் ஒவ்வொன்றையும் பார்த்து. பார்த்துச் செய்கிறான்.

“பாஸ்… இதுல ஒரு சைன் பண்ணிடுங்க. தென் இது லண்டன் காண்ட்ராக்ட் பைல்ஸ்“ என்றபடி சில பைல்ஸ் கொடுத்து சைன் வாங்க நின்றான்.

அதே நேரம் விஷ்ணு அறைக்கதவை திறந்து கொண்டு வேகநடையுடன் உள்ளே நுழைந்தார் காரிகை. அகிலை பார்த்து கோபத்துடன், “வெளியே போ“ என்னும் விதமாகக் கண்ணசைக்க. விஷ்ணுவிடம் பார்வையால் விடைபெற்றான் அகில்.

அறைக்குள் வந்தவர். அகிலை கண்டதும் கோபம் துளிர்க்க. தான் பேச வந்ததையும் மறந்து, “என்ன விஷ்ணு. நான் அன்னைக்கே சொன்னேன் அகில் கையில் பொறுப்பைக் குடுக்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்னு நீ கேட்டியா? இப்போ பாரு யாரோ ஒருத்தனுக்கு நமது காண்ட்ராக்ட் போயிருக்கு. எப்படி வேற கம்பெனிக்கு போச்சு. நாம அமௌன்ட் ரொம்பக் குறைவா தானே கோட் பண்ணியிருந்தோம் அப்படி இருந்தும் கையை விட்டு போனா என்ன அர்த்தம்“ கோபமாகப் பொரிந்தார் காரிகை.

“மாம். நான் பார்த்துக்கிறேன். தொழில் உங்க உயிர்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால கவலையேப்படாதீங்க தொழிலை நான் நல்லாவே பார்த்துப்பேன். இது இல்லை என்றால் அடுத்ததை நாம் கைபற்றிக் கொள்ளலாம்” அவரிடம் கூறியவன். அவர் வந்த நோக்கம் என்ன என்று அறிய அவர் முகத்தையே பார்த்தான்.

காரிகையின் உயிர் தான் அவரது கார்மெண்ட்ஸ் தொழில். அவளின் கணவர் மகேந்திர மூர்த்தி அவளை விட்டு பிரிந்த பிறகு சரிந்து கொண்டிருந்த தொழிலை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவள். அவள் உயிர் வாழ்ந்துக் கொண்டிருப்பதே தொழிலை நன்றாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தான். பல பிரச்சனை வந்தாலும் அதை நல்ல படியாக முடித்து எழுந்து வருபவர் தான் காரிகை.

அவளுக்கு இருக்கும் ஒரே தொழில் எதிரி அவளின் கணவர் ஸ்வேதா கார்மெண்ட்ஸ் தான். ஆனால் இப்பொழுதோ புதிதாக ஏதோ ஓன்று. அதையும் தன் மகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு மலையளவு இருந்தது… ஆனாலும் தன் மகன் இங்கு இல்லாமல் இருந்ததால் தான் ஆர்டர் கையை விட்டு போனதோ என்று சிறு கோபம் வார்த்தையில் தெறித்தது.

“சரி அதை விடு விஷ்ணு. அந்தத் தியாகராஜ்-க்கு என்ன பதில் சொல்றது. அவர் மகளுக்கு உன்னை மூணு வருஷமா கேட்டுட்டு இருக்கார். நீ சரி என்று சொல்லி நானும் அவர்களிடம் சரின்னு சொல்லிவிட்டேன். ஆனால் நீ அதன் பிறகு நீ அதைப் பற்றிப் பேசவே இல்லையே. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கேட்கிறார்” எனத் தான் வந்த விஷயத்தை அவனிடம் கூறினார் காரிகை.

சிறு யோசனைக்குப் பின், “சரி மாம்… சீக்கிரமே நிச்சயதார்த்தத்துக்கு நாள் பாருங்க” என்றுக் கூறியவன் புருவத்தை வருடிக் கொண்டான்.

அவன் பதிலில் ஆச்சரியமான காரிகை. “உண்மையாத்தான் சொல்லுறியா விஷ்ணு” எனச் சந்தோச மிகுதியில் கேட்டார்.

அவரைப் பார்த்து மெதுவாகச் சிரித்தவன், “உண்மைதான் இனி தள்ளி போட வேண்டாம். உங்களுக்காகத் தான் அவளைத் திருமணம் செய்கிறேன். இனி எதற்கு நாளை தள்ளிப் போடவேண்டும். நாம் அவர்களுடன் சம்மந்தம் வைத்துக் கொண்டால். அவரும் நம்முடன் இணைந்துக் கொள்வார்ன்னு தானே சொன்னீங்க. அதுக்காகவே அவளைத் திருமணம் செய்கிறேன். உங்கள் பிள்ளை உங்கள் ஆசையை எப்பொழுதும் நிறைவேற்றுவான்” அவரின் கன்னத்தைக் கிள்ளியவன் மனமோ ‘யார் அந்தத் தியாகராஜ்?’ என்ற யோசனையில் இருந்தது.

காரிகையின் திகைத்த முகத்தைக் கண்டு.

“என்னாச்சு மாம்?”

“டேய்! என்ன சொல்லுற நீ எனக்காகத் தான் அவளைக் கல்யாணம் பண்ணுறியா!”

“எஸ் மாம். இதுல வேற என்ன இருக்கப் போகுது. நமக்குத் தொழில் போட்டி என்று யாரும் இருக்கக் கூடாது. அதுக்குத் தான் இந்தக் கல்யாணம். இது ஒரு தொழில் சம்மந்தம் மட்டும் தான். இதைப் பற்றி அன்றே நாம் பேசிக் கொண்டதாக நியாபகம்“ என அழுத்தம் திருத்தமாகத் தன் பதிலை கூறியவன் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அவனுக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. அதே போல் இந்தத் தியாகராஜ் யார் என்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் லண்டனில் இருக்கும் பொழுது காரிகை. இவரைப் பற்றியும். அவர் மகளுடனான தன் திருமண ஒப்பந்தத்தையும் பற்றிக் கூறியது நினைவில் இருந்ததால் எப்பொழுதும் போல் அவனின் பதிலை கூறினான்.

சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார் காரிகை. அதற்கு மேல் அவன் அவரைப் பார்க்க மாட்டான் என்பதை அவர் அறிந்தது தான்.

மனமோ பல வழிகளில் தவித்துக் கொண்டு இருந்தது. ‘முதலில் திருமணத்தை முடிப்போம். அதன் பிறகு இவனிடம் எடுத்துக் கூறினால் கேட்டுக் கொள்வான்’ எண்ணிய காரிகை தியாகராஜை போனில் தொடர்பு கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

தியாகராஜ் தொழில் வட்டாரத்தில் மிகப் பெரியவர். மனைவியை இழந்த அவர் தன் மகன் ரிஷிபன், மகள் ரிஷிபா மட்டும் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்.

தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் காரிகையைச் சம்மந்தியாக்கிக் கொள்ள ஆசை கொண்டு. காரிகையிடம் பேசி முடிவெடுத்து கொண்டனர்.

தொழில் ராஜ்யத்தின் சிம்ம சொப்பனமாக இருக்கும் விஷ்ணுவை அவளுக்கு மன்னவன் ஆக்க ஆசைக் கொண்டு மகளிடம் கூற. அவளும் சரி என்று கூறி விட்டாள். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை விஷ்ணு அவள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான்.

ஆனால் அவளின் அண்ணன் ரிஷிக்கு விஷ்ணுவை கொஞ்சமும் பிடிக்காது. ரிஷி அறிந்தது வரை அவன் ஒரு அரக்கன். ராட்சசன். பெண்களை மதிக்கத் தெரியாதவன். இப்படிப் பல கூறிக் கொண்டே செல்லலாம். அப்படி ஒரு பிம்பம் தான் விஷ்ணு பிம்பம்.

காரிகையிடம் பேசி முடித்த தியாகராஜ் முகம் புன்னகையில் விரிந்தது. அதே புன்னகையுடன் இருவருடன் டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

“டாட். எனி குட் நியூஸ்“ தியாகராஜின் புன்னகை முகத்தைப் பார்த்து கேட்டான் ரிஷி.

“யா. விஷ்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான். காரிகை இப்போ தான் போன் பண்ணினா” அவர் சந்தோசமாகக் கூற. ரிஷி முகம் அப்பட்டமாகக் கோபத்தைக் காட்டியது.

ரிஷிபா முகமோ சந்தோஷத்தில் திளைத்தது.

“எனக்கு இதுல கொஞ்சமும் இஷ்டம் இல்லைப்பா. அவளுக்கு வேற ஒரு பையனை பார்க்கலாம்“ கடுப்புடன் கூறினான் ரிஷி.

“ஏன்… ஏன்… உனக்கு இஷ்டம் இல்லை. இத்தனை நாள் பேசாம தான இருந்த. இப்போ என்ன ஆச்சு உனக்கு“ கோபமாக அவனிடம் சாட.

“டாட். இது பிசினஸ் இல்ல. திஸ் ஃபார் தட்னு சொல்லுறதுக்கு. லைப். இத்தனை நாள் பேசாம இருந்ததுக்குக் காரணம் அவன் ஓகே சொல்லமாட்டான்னு தான்.

இப்போ கூட அவன் ஓகே சொல்ல காரணம் வேற ஏதாவது தான் இருக்கும். உண்மையா அவனுக்கு அவளைப் பிடித்திருந்தால். எப்பொழுதே அவளைத் தேடி வந்திருப்பான்.

மூணு வருஷம்… முழுசா மூணு வருஷம் கழிச்சு இப்போ தான் ஓகே சொல்லிருக்கான்னா அவன் மிகப் பெரிய திட்டம் போட்டிருக்கான். அவனோட தொழிலில் ஒன் ஆப் தி எதிரி நீங்களும் தானே? அவனா உங்களைத் தேடி வந்தால் பாருங்க. இல்லன்னா சொல்லுங்க என்னோட ப்ரெண்ட் சர்வாக்கு இவளை கொடுப்போம். அவனைப் பற்றிதான் உங்களுக்கு தெரியுமே. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அந்த விஷ்ணு மாதிரி கொஞ்சமும் அவன் கிடையாது“

“அது நடக்காத காரியம் ரிஷி. விஷ்ணுவா யாரையும் தேடி போகமாட்டன்“ நிராசையாகக் கூறினார் தியாகராஜ். யாரையும் மதிக்கக் கூடமாட்டான். அவனாக யாரையும் தேடி செல்லமாட்டான். ஆனால் அவனுக்கு ஒருவர் தேவை என்றால் அவர்களைத் தன்னை நோக்கி வரவைக்காமல் விடமாட்டான். அவனுக்கு ஒன்று தேவை என்றால் எந்த எல்லைக்கும் செல்வான். அது யாராக இருந்தாலும் சரி.

“அப்போ விட்டுடுங்க. இதோட எல்லாம் விட்டுடுங்க. நாம யாருக்கும் எதிரியாக வேண்டாம். நம் தொழிலே நமக்குப் போதும். ரிஷிபா என்னோட தங்கச்சி. அவளுக்கு எப்படி ஒரு மணாளனை கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்“ உறுதியாகக் கூறிய மகன் முகத்தைக் கண்ட தியாகராஜ் முகம் சுருங்கியது. அவருக்கு விஷ்ணுவை விட மனதில்லை.

“விஷ்ணு ஒரு பிசினஸ் ஜாம்பவான். தொழிலில் சிங்கம்! தொழில் பீம் பாய்! அவன் ஸ்டைல். அவன் அழகு. அவன் தொழில் உக்தி இப்படி எல்லாம் நிறைந்த முழு ஆண்மகனை உன்னால் என் பொண்ணுக்குக் கொண்டு வர முடியுமா?“ என்றார் தியாகராஜ்.

ரிஷி அமைதியானான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாம் உண்மை தானே! விஷ்ணுவை போல் ஒருவன் தேடினாலும் கிடைக்காது. குளோனிங் செய்தால் மட்டுமே அவனைப் போல் ஒருவனைக் கொண்டு வரமுடியும். இதை ஒரு ஆண் மகனான ரிஷியே ஒத்துக் கொள்வான். ரிஷியின் பார்வை அவனையும் அறியாமல் அவன் தங்கை முகம் நோக்கி திரும்பியது.

எதையும் கருத்தில் கொள்ளாமல் உணவில் கவனமாக இருந்தாள் ரிஷிபா. யார் என்ன கூறினாலும் அவள் முடிவை அவள் மாற்றுவதாக இல்லை. விஷ்ணுவை விடுவதாவும் இல்லை.

“பிசினஸ் வேற வாழ்க்கை வேற. அவனோட ஸ்டைலும். தொழில் உக்தியும் உங்க பொண்ணுக்கு சந்தோசமான வாழ்கையைத் தராது“ ரிஷிபாவை பார்த்துக் கொண்டே கடுப்புடன் கூறினான் ரிஷி.

அவன் கூறுவதில் எரிச்சலான ரிஷிபா, “விஷ்ணு கிட்ட என்ன இல்ல அண்ணா. ஏன் நான் சந்தோசமா இருக்கமாட்டேன். அவன் எனக்குக் கிடைத்தா மட்டும் உன் தங்கை சந்தோஷமா இருப்பா. இதைப் புரிஞ்சுக்காம என்ன பேசுற நீ“ தன் அண்ணனை குழப்பமாகப் பார்த்தாள் அவள்.

‘அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. இப்பொழுது விஷ்ணுக்கும் இவளை பிடித்துத் திருமணத்துக்கு “சரி“ என்று சொல்லிவிட்டான். இதற்கிடையில் அண்ணன் ஏன் இப்படிப் பேசுகிறான்’ அவளுக்குப் புரியவே இல்லை.

இவர்களுக்கிடையில் தியாகராஜ் எதையும் பேசவில்லை. அவருக்குத் தன் மகள் மேல் முழு நம்பிக்கை இருந்தது. ‘அவள் விஷ்ணுவை விடமாட்டாள்’ என்று.

பலம் பொருந்திய. தொழில் ஜாம்பவானாகிய விஷ்ணுவை அவருக்கும் விட மனதில்லை. தன் மகளுக்குக் கணவர் என்பதையும் தாண்டி தனக்கு மருமகன் என்று சொல்லவே அவர் விரும்பினார். இது பல பிஸ்னெஸ் ஜாம்பவான்களின் தொழில் உக்தி. விஷ்ணு மாதிரியான பிசினஸ் டைக்கூனை அவர் விட விரும்பவில்லை.

அங்குச் சந்தோசம். காதல் என்பதற்கான பேச்சுக்கே இடம் இல்லை. பணமும் பணமும் பேசும். இல்லை என்றால் தொழிலும் தொழிலும் பேசும் அவ்வளவே! இதையே தான் விஷ்ணுவும். காரிகையிடம் கூறினான்.

“நோ ரிஷிபா. அவன் உன்னோட கல்யாணத்தைப் பிஸ்னெஸ்ஸா பார்க்கிறான். துரும்பை விட்டு இரும்பை பிடிக்கப் பார்கிறான். உன்னை அவன் திருமணம் செய்தால் அவன் தான் நமது தொழில் வட்டாரத்தில் மிகப் பெரியவன். அவனை எதிர்க்க யாரும் இருப்பதில்லை. அவனிடம் திருமணம் பேசியதில் இருந்து நம்ம கம்பெனி அவனுக்கு எதிரா எதுவுமே செய்றதில்லை.

டாட் அவனுக்குச் சாதகமா தான் எதையும் செய்யப் பார்க்கிறார். இப்போ கூட அவன் அதைத் தான் எதிர்பார்த்து சரின்னு சொல்லிருப்பான். காதல். அன்பு இருந்தால் தான் வாழ்கையில் ஜெயிக்க முடியும். அவனுக்கு இதில் எதுவும் கிடையாது.

அவனோட நோக்கத்தை யாராலும் சரியா கணிக்க முடியாது. அவன் ஜெயிக்க எத்தனை குறுக்கு வழி இருந்தாலும் அதன் உள்சென்று வெளியில் வருவான். அவன் பணமும். அதிகாரமும் அவனோட இந்த வழியில் வந்தது. இது எதுவும் உனக்கு வேண்டாம் ரிஷிபா… நீ எப்பவும் நல்லா இருக்கணும்டா“ இத்தனை நாள் மனதில் இருந்ததைக் கொட்டினான் ரிஷி.

இது அத்தனையும் அவள் அறிந்ததே. எல்லாம் அறிந்து அவனின் கம்பீரம். அவனின் சாமர்த்தியம் எல்லாம் பார்த்துக் காதலில் விழுந்தவள் அவள்.

“அண்ணா… உனக்குக் காதல் தானே இப்போ பிரச்னை. அவன் வாயாலையே என்னைக் காதலிக்கிறேன்ன்னு சொல்ல வைக்கிறேன். அதுக்கு பிறகு நீ கல்யாண வேலையைப் பார். இனி அவனைப் பற்றி என் முன்னால் இப்படிப் பேசாதே. ஆனா ஒண்ணு அவனைக் கல்யாணம் பண்ணுனா மட்டும் தான் உன் தங்கச்சி நல்லா இருப்பா அது எப்பவும் உன் மனசுல இருக்கட்டும்“ கோபமாகக் கூறியவள் விருட்டென்று எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

செல்லும் அவளை வேதனையாகப் பார்த்தான் ரிஷிபன். அவனுக்குத் தான் விஷ்ணுவை பற்றி நன்கு தெரியுமே. அவன் யாருக்கும் அடியாமையாக மாட்டான். “அன்பு அடிமையாக்கும்“ என்ற வாசகம் அவன் கூறியது என்று தொழில் வட்டாரத்தில் கூறுவது உண்டு.

‘எத்தனை சொன்னாலும் இவள் கேட்கவே மாட்டாளா?’ முதல் முறையாகத் தங்கை மேல் அவனுக்குக் கோபம் வந்தது. அவளுக்குச் செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டோம் எனக் காலம் கடந்து யோசித்தான்.

கோபமாகத் தியாகராஜை நோக்கி திரும்பியவன் “எல்லாம் உங்களால் தான். அவள் வாழ்கையை அவன் கையில் கொடுத்து. உங்கள் மகளின் வாழ்கையை அழிக்கப் பார்க்குறீங்க” கோபமாக இரைந்தவன் கையை உதறி விட்டு வேகமாக எழுந்து சென்றான்.

‘உன் கோபம் நியாயம் இல்லாதது ரிஷி. உன் தங்கையைப் பற்றி முழுதாகத் தெரியவில்லை உனக்கு. விஷ்ணுவை அவள் விடமாட்டாள். அவன் அவளுக்கு நல்ல வாழ்கையை அளிப்பான்’ எண்ணியபடி அவரும் இடத்தை விட்டு எழுந்து சென்றார்.

@@@@@@@@@@@@@@@

ஆபிஸ் விட்டு கீர்த்தி வெளியில் வர. மகேந்தரமூர்த்தி அவளுக்காகக் காத்திருந்தார். அவளின் அழுத முகத்தைக் கண்ட மூர்த்தி, “என்னாச்சு கீர்த்தி. ஏன் கண்கலங்கி இருக்கு. காண்ட்ராக்ட் கையை விட்டுப் போனதில் விஷ்ணு ரொம்பக் கோபப்பட்டானா?“ தன் மகனை பற்றி அறிந்தும் ஒரு பாசமானவராகக் கேட்டார்.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அங்கிள்“ கூறியவள் அமைதியாக அவர் காரில் ஏறிக் கொண்டாள்.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் எதுவும் பேசாமல் தன் காரை ஓட்டி வந்தார். வழியில், “ஸ்வேதா கார்மெண்ட்ஸ்“ சென்று ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு வந்தார்.

ஸ்வேதா, மகேந்திரமூர்த்தி இருவரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். ஆனால் காரிகை அவர்களின் நட்பை கொச்சை படுத்தி விட்டாள். என்ன தான் தொழில் ராணியாக அவள் இருந்தாலும் காதலிக்கும், நண்பிக்கு அடையாளம் தெரியாமல் மிகப் பெரிய தவறை செய்துவிட்டாள்.

அதே தவறை தன் மகனுக்கும் கற்பித்து அவனை அரக்கனாய். மூர்க்கனாய் மாற்றிவிட்டாள். தன் தாயை தவிர எல்லாப் பெண்களும் மாயகாரிகள் என்ற பிம்பம் அவன் எட்டு வயதிலையே அவன் மனதில் காரிகை அழுந்த பதித்து விட்டாள்.

அவள் ஒரு பெண்ணாக இருந்தும் அதே தவறை செய்தாள். அதனால் தான் கீர்த்தி அவனைச் சந்தித்த அன்றே அவளை மிகவும் கேவலமாக நடத்தினான். எந்த ஒரு பெண்ணும் தன் வாழ்நாளில் கேட்க கூடாத வார்த்தைகள் அவன் வாயில் இருந்து சரளமாக வந்தது.

அதனால் தான் அவள் யார் என்று அவனுக்கு உணர்த்தவே மகேந்திரமூர்த்தியின் நஷ்டத்தில் இருந்த கம்பெனியை தூக்கி நிறுத்தி விட்டாள்.

அன்றே விஷ்ணுவிடம் சவால் விட்டாள் “நான் பத்தினி தாண்டா. ஆனா நீ என் தேவ் இல்ல. அன்று சீதை தீக்குளிச்சி அவளை நிரூபித்தாள். ஆனால் என்னை நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நானே ஒரு தீடா. இந்தத் தீயவே நீ தீண்டிட்ட இதற்கான பதிலை நீ அனுபவிப்பாய்” அன்று ஆக்ரோஷமாகச் சீறிய இந்த வார்த்தைகள் தான் விஷ்ணுவிடம் அவள் பேசிய கடைசி வார்த்தைகள். இனி அவளின் முழு எதிரியே விஷ்ணு காரிகைதான்.

இன்று கீர்த்தியை தங்கள் வீட்டுக்கு அழைப்பதால் கையேடு ஸ்வேதாவையும் அழைத்து வந்தார் மகேந்திரமூர்த்தி.

அவர்கள் வீட்டுக்கு வரவே. கீர்த்திப் போன் அழைக்க. எடுத்து பேசியவள் கண்கள் தானாகக் கண்ணீரை பொழிந்தது. அவளின் கிராமத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

“அண்ணி எப்படி இருக்கீங்க” என்றாள் அந்தப் பக்கம் இருந்து தேஷிகா.

“நான் நல்ல இருக்கேன் தேஷி. நீ எப்படி இருக்க. அப்பத்தா எப்படி இருக்காங்க“ என மெதுவாக ஊரை பற்றி விசாரிக்க.

“எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணி. நீங்க வீட்டுக்கு வந்து ஆறு மாசம் மேல ஆகுது. எதுக்கு அண்ணி இன்னும் வீட்டுக்கு வரல. உங்களுக்கும் என்னைப் பிடிக்காமல் போயிட்டா“ கண்ணீர் குரலில் தேஷி கேட்க.

“லூசு மாதிரி பேசாத. உன்னை யாருக்காவது பிடிக்காமல் போகுமாடி. சீக்கிரம் வாறேன் தேஷி. இங்க முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. அதை  முடிச்சுட்டு சீக்கிரம் வாரேன்“ கூறியவள் முகம் விஷ்ணுவை எண்ணி கோபத்தில் ஜொலித்தது.

“அ. அண்ணி“ எனத் தேஷி மெதுவாக இழுக்க.

“சொல்லு தேஷி. என்ன இழுக்கிற“

“இ.இல்ல அண்ணி. அவ… அவரைப் பார்த்தீங்களா?“

“உனக்கு எத்தனை நேரம் சொன்னாலும் புரியாதா? இங்க பார் அவனை இனி நினைக்காதே. உன் வாழ்கையை அழித்தவனையே நினைச்சுட்டு இருக்கியா. உன் வாழ்க்கை அவனோடு இல்லை. அப்பாத்தா கிட்ட பேசி உனக்கு ஒரு வழி பண்ணுறேன்“

“அண்ணி அவர் ஒன்னும் என் வாழ்கையை அழிக்கலை”  கீர்த்தியிடம் கோபமாகப் பாய்ந்தாள் அவள்.

“இங்க பார் தேஷி. எல்லாம் உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும் இனி இப்படி ஒரு நேரம் என்கிட்ட பேசாதே“ என்றபடி ஊரில் நடக்கும் சிலவற்றைக் கேட்டுக் கொண்டவள் அழைப்பை நிறுத்தி திரும்ப.

அவள் அருகில் வந்த ஸ்வேதா, “எப்படி இருக்க. கீர்த்தி“ அவளை அணைத்துக் கொண்டார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி“ என்றவள். அவர்களிடம் மெதுவாக விஷ்ணுவிடம் நடந்த பேச்சுவார்த்தையைக் கூறியவள் யோசனையாக ஸ்வேதா முகத்தைப் பார்த்தாள்.

“நீ எதுக்கும் கவலைப்படாதே கீர்த்தி. அவன் சீக்கிரம் உன் வழிக்கு வருவான். எல்லாம் நல்லபடியாக நடக்கும். நீ ஆசைப்பட்ட படி எல்லாம் நடக்கும்“ கூறியவர் மெதுவாக அவள் தலையில் கைவைத்து அழுத்தினார்.

அவரின் முகம் வேதனையைக் காட்ட ஆறுதலாக அவர் கையைப் பிடித்துக் கொண்டாள் கீர்த்தி. இருவரின் கவலை முகத்தைப் பார்த்த மகேந்திரமூர்த்தித் தன் அறைக்கு எழுந்து சென்றார். கடவுள் மூர்த்தி வாழ்வில் மிகவும் பயங்கரமாக விளையாடிவிட்டார்.

மூவரும் பழைய விஷயத்தை நினைத்து கூடப் பார்க்க விரும்பவில்லை என்பதை அவர்கள் முகமே காட்ட. அவரிடம் விடை பெற்றவள் தன் அப்பார்ட்மெண்ட் நோக்கி சென்றாள்.

தனது அப்பார்ட்மென்ட் வந்தவளுக்கு எப்பொழுதும் போல் அந்தத் தனிமை வெறுக்கத் தனக்கு விதிக்கபட்டிருக்கும் விதியை எண்ணி நொந்துக் கொண்டாள்.

எப்பொழுதும் கலகலவென இருக்கும் அவளின் கிராமம் நினைவுக்கு வந்து அவளின் கண்கள் கலங்க மனமோ அவர்களைக் காண ஏங்கியது.

இன்னொரு மனதோ “என்னை ஏன் தனியாக விட்டு சென்றாய். அந்தக் கால மக்கள் வாழ்ந்தது போல் கணவன் இறந்த பின் மனைவியும் அவர்கள் பின்னே செல்ல வேண்டும் என்று இருந்திருந்தால். நானும் அன்றே உன்னுடனே வந்திருப்பேனே? ஏன் அவனை என் கண்ணில் காட்டி விளையாடுகிறாய். அவன் நீ இல்லை என்று அறிந்த பின்னும். அவனைக் காணும் நேரம் எல்லாம் நீ தான் வந்துவிட்டாயோ? என்று எண்ண வைக்கிறாய்” அவளால் அந்த வலியை தாங்கமுடியவில்லை.

விஷ்ணுவை காணும் நேரம் எல்லாம் அவளின் தேவேந்தரன் நினைவு வருவதை அவள் என்ன தான் செய்வது. இது தான் அவளுக்கு விதிக்கப் பட்டிருக்கும் விதியா?

*************************

கீர்த்திப் பற்றிய நினைவில் இருந்த விஷ்ணு நினைவு வந்தவனாக “அகில்“ என வேகமாக அழைத்தான்.

அவன் அருகிலையே தன் இருக்கையைப் போட்டு இருப்பவன் “சொல்லுங்க பாஸ்“ அடுத்த நிமிடம் அவன் முன் வந்து நின்றான் அகில்தேவ்.

“ஆறு மாசம் முன்னாடி உள்ள ஸ்டாப்ஸ் பைல்ஸ் எடுத்துட்டு வா“ அவனைப் பாராமல் விஷ்ணு கட்டளையிட விஷ்ணுவை யோசனையாகப் பார்த்துக் கொண்டு வெளியில் சென்றவன்.

அடுத்தச் சிறிது நேரத்தில் பெரிய கட்டு கோப்புகளை எடுத்துக் கொண்டு விஷ்ணு டேபிள் மேல் வைத்தவன். அவன் அருகில் நிற்க.

அவனைப் பாராமலே, “கோ“ என்றபடி வேக வேகமாக அவற்றைப் பார்வையிட ஆரம்பித்தான் விஷ்ணு. அவன் முகம் பல உணர்வுகளால் குவிந்து கிடந்தது. எல்லாவற்றையும் விட. அவன் முகத்தில் கோபமே அதிகமாக இருந்தது. “ஒரு பெண் முன்னால் தோற்றுவிட்டேனே“ என்ற வாசகமே அவன் மனம் முழுவதும் நிறைந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.

வேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை ஒரு இடத்தில் அப்படியே நிலைகுத்தி நின்றது.

அருகில் இருந்த பேனாவை எடுத்தவன், “மனோகீர்த்தித் தேவேந்திரன்” என்ற பெயரில் இருந்த “தேவேந்திரன்” என்ற பெயரை வெறிபிடித்தவன் போல் வெட்ட ஆரம்பித்தான் “தி கிரேட் விஷ்ணுகாரிகை”

கொ(வெ)ல்வாள்.

அம்பது ரூபா லஞ்சம் கேட்டா சிறையில் போட்டோம்

ஆனா அம்பதுக்கோடி அடிச்சவனுக்கு ஓட்டுப்போட்டோம்

பொறந்து வளரும்வரைக்கும் பசங்க அம்மாச்செல்லம்

அட செறகு மொளைச்சா அவள

அனுப்பும் முதியோர் இல்லம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!