VNE 53(1)

VNE 53(1)

காலை வெகு பரபரப்பாக விடிந்தது. மஹா தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அவசர வேலையென்று போனவன் முந்தைய தினம் இரவு தான் திரும்பியிருந்தான். ஜோதியும் நாதனும் ஹைதராபாத் கிளம்பிப் போய் நான்கு நாட்களாகி இருந்தன. போயஸ் கார்டன் வீட்டை இருவருக்குமாக செட் செய்து கொடுத்திருந்தார்கள் பெரியவர்கள் அனைவரும். முன்னரே ஷ்யாம் இன்டீரியர் டிசைனரை வைத்து டிசைன் செய்தது தான்.

அவரவர்களுக்கு தோன்றியதை எல்லாம் வாங்கி குவித்து ஒருவழியாக்கி ஓய்ந்து இருந்தனர். வேண்டாமென்று ஷ்யாம் சொன்னதை எல்லாம் பைரவியோ கார்த்திக்கோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. முருகானந்தம் இருவருமாக வாங்கிக் குவிப்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால் ஜோதி ஒரு பக்கம்.

ரசனையாக தேர்ந்தெடுப்பதில் அவரை அடித்துக் கொள்ளவே முடியாது என்பதை போல இருக்கும் அவரது தேர்வுகள்.

இரு பக்கமும் திருப்தியாகும் வரை வீட்டை நிரப்பி விட்டு போக, மஹா கண்கள் பிதுங்கிப் போயிருந்தாள்.

அவள் மூச்சடைத்து போய் இருப்பதை பார்த்தவன்,

“ஏய் பொண்டாட்டி…” என்று குறும்பாக கத்தி அழைக்க, ஜெர்க்காகி அவனை பார்த்தாள்.

“என்ன?” கண்களை விரித்து அவனை பார்த்து கேட்க,

“ஏன்? நீ என் பொண்டாட்டி தானே?” என்றான் சிரிப்போடு.

“ம்ம்ம்… அதுக்காக எப்பவும் பொண்டாட்டி பொண்டாட்டின்னு கூப்பிடுவியா?” கொஞ்சம் கடுப்பாகத்தான் கேட்டாள்.

வீட்டில் வேலை செய்பவர்கள் சுற்றி இருக்கிறார்கள் என்ற ஸ்மரணையே இல்லாமல் இவன் இப்படி கத்தி வைக்கிறானே என்ற எரிச்சல் தான்!

“பின்ன? பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிடாம வப்பாட்டின்னா கூப்பிட முடியும்? வேணும்னா ட்ரை பண்ணி பார்க்கட்டா?” என்று கண்ணடித்தவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டாள்.

“உஷ்ஷ்ஷ்…” என்று சப்தத்தை அடக்கியவள், “டேய்… கல்யாணம் பண்ணிட்டடா நீயி… எருமை… அப்புறம் ஏன் உனக்கு அங்கேயே நெனப்பு போகுது?” என்று சிறிய குரலில் கேட்க,

“கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கேனே ஏடுகொண்ட்ல வாடா… இப்படி அநியாயம் பண்ணுவன்னு தெரிஞ்சு இருந்தா…” என்று அவன் கிசுகிசுப்பாக இழுக்க,

“ம்ம்ம்… தெரிஞ்சு இருந்தா?” என்று கண்களை உருட்டினாள்.

“ம்ம்ம்… தெரிஞ்சு இருந்தா…” என்று மீண்டும் இழுத்தவன், சற்று தள்ளி நின்று கொண்டு, “எல்பிடபிள்யூ அடிச்சு இருப்பேன்டி பொண்டாட்டி…” என்றவன், இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான். சேஃப் ஜோன்.

“எல்பிடபிள்யூ வா? அப்படீன்னா?” புரியாமல் பார்த்தாள் அவனது மனைவி!

“ஹிஹி… சொன்னா என்னை அடிப்ப…” என்று கிண்டலாக சிரித்தவனை பார்த்து முறைத்தாள் மஹா.

“சொல்லலைன்னாலும் அடிப்பேன்…” என்று அவனை நோக்கி போக,

“இதுக்கு நான் பதில் சொல்லிடுவேன்… ஆனா அது டூ மச் கிரீனிஷ்ஷா இருக்குன்னு ரீடர்ஸ் நெத்திக்கண்ணை திறந்துடுவாங்க…” என்று கண்ணடித்தவன், “எதுவா இருந்தாலும் ஹால் வேண்டாம் டார்லிங்…” என்று சிரிக்க, சுவாமிஜி மலையேறி விட்டார் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

“டேய்… உன்கிட்ட என்னதான் பேசறதுன்னே தெரியல… எல்லாத்துக்கும் இன்னொரு அர்த்தம் வெச்சு இருக்க…” என்று கடுப்படித்தாலும் புன்னகை வழிந்தது.

எவ்வளவு டென்ஷனாக வந்தாலும், இரண்டு நிமிடங்களில் சிரிக்க வைத்து விடுபவனை என்ன சொல்லி கோபித்துக் கொள்வது? அதிலும் யாருக்கும் புரியாமல் இரட்டை அர்த்தங்களில் காதை இவன் கடிக்கும் போதெல்லாம் வெடித்து சிரிப்பதை போலத்தான் இருக்கும். ஆனாலும் சுற்றுபுறத்தை கணக்கில் கொண்டு கட்டுப் படுத்திக் கொள்வாள். ஆனால் அத்தனையும் பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவனை போல அமர்ந்திருப்பான் இந்த சமர்த்தன்.

“பேசவே பேசாதன்னு தான்டி நானும் சொல்றேன்…” என்று அவன் கண்ணடிக்க,

“டேய்… வேண்டாம்…” என்று அடிக்க கையோங்கியவள், “நீ இப்படியேத்தான் பேசிட்டு இருப்ப… எல்பிடபிள்யூவுக்கு முதல்ல விளக்கம் சொல்லு…” என்று அவனை கிடுக்கிப் பிடி போட,

“அடியே அறிவு வாளி பொண்டாட்டி… ஒரு எம்பிபிஎஸ் ஸ்டுடன்ட்டா இருந்துட்டு எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியலைன்னு சொல்ற ஒரே ஆள் நீயாத்தான்டி இருப்ப…” என்று நக்கலாக சிரிக்க, அவள் முகம் சிவந்து பார்த்தாள்.

“ஏன் சிலபஸ்ல இன்க்ளுட் பண்ணி இருக்காங்கன்னு சொல்லேன்…” என்று பல்லைக் கடிக்க, அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“என்னடி சொல்ற? எல்பிடபிள்யூவை சிலபஸ்லையா…?????” என்றவன், அடக்க மாட்டாமல் சிரிக்க, அவனது கிண்டல் சிரிப்பே சொன்னது… அதற்கான அர்த்தம் ஏதோ சில்மிஷமானது என்று!

“பின்ன? கிளாஸ்ல சொல்லி தர்ற மாதிரி சொல்ற? நீ சொல்லும் போதே தெரியுது… ஏதோ கோக்குமாக்காத்தான் இருக்கும்ன்னு…” என்று இவள் சலித்துக் கொள்ள,

“இதையெல்லாம் கிளாஸ்ல சொல்லி வேற தரணுமா?” என்று புருவத்தை உயர்த்தி மீண்டும் சப்தமாக சிரிக்க, அதற்கும் மேல் அவளால் தாள முடியவில்லை. டைனிங் டேபிளின் மேலிருந்த கத்தியை கையிலெடுத்தவள்,

“டேய் பிசாசே… ஒழுங்கா அர்த்தத்தை சொல்லிட்டு சிரி… இல்லன்னா கொன்னுடுவேன் பார்த்துக்க…” என்று அவனை நோக்கி நீட்ட,

“ஏய் பொண்டாட்டி… இப்படியெல்லாம் வயலன்ஸ்ல இறங்க கூடாது… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…” என்றவனின் கழுத்தில் கத்தியை வைத்தவள்,

“மவனே மரியாதையா சொல்றியா? இல்லையா?” என்று வேண்டுமென்றே மிரட்ட,

“அடப்பாவி… நான் உன் புருஷன்டி…”

“அதெல்லாம் எனக்கு தெரியாது… ஓவரா வாயாடாம அர்த்தத்தை சொல்றியா? இல்ல…” என்று வில்லியை போல சொல்ல, அவனால் இன்னமும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஒரு பிடிக்கு தாங்க மாட்டாள். இவள் தன்னை மிரட்டுகிறாளாமா என்று சிரித்தவன்,

“ஓகே சொல்றேன்… கத்தியை கீழ போடு…” என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஷ்யாம் கூற,

“அது…” என்று தன்னுடைய காலர் வைத்த சுடிதாரின் காலரை ஏற்றி விட்டுக் கொண்டாள்.

கூடுமானவரை அவளை விட்டு தள்ளி நின்று கொண்டவன்,

“எல்பிடபிள்யூன்னா லவ் மேக்கிங் பிஃபோர் வெட்டிங்… அதாவது கல்யாணத்துக்கு முன்னாடியே மேட்டரை முடிச்சு இருக்கனும்ன்னு சொன்னேன்டி அறிவு வாளி…” என்றவனை இரண்டு நொடிகள் புரியாமல் பார்த்தவள், முகம் சிவந்து, கண்களை உருட்டி, பல்லைக் கடித்துக் கொண்டு அவனது கழுத்தை நெரிக்க, “அடேய்ய்யி…” என்றபடி அவனை நோக்கிப் போக, அவளது அந்த அவதாரத்தை பார்த்து சிரித்தவன்,

அவளிடம் சிக்காமல், “ரா ரா… சரசுக்கு ரா ரா…” என்று பாட, அவளது கொலைவெறியை அந்த பாடல் இன்னமும் ஏற்றி விட, அவனை எப்படியாவது பிடித்தேயாக வேண்டும் என்ற வெறியில் அவனை துரத்தினாள்.

“ஏய் பொண்டாட்டி தலகுப்பால ஸ்லிப்பான என்னோட ஹார்ட் இப்ப ஜம்ப் ஆகுதுடி…” என்றவனை புரியாமல் பார்த்தவளை, கண்ணடித்து, “ரன் பேபி ரன்… ரன் மிர்ச்சி ரன்…” என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கவும் தான் அவனது சில்மிஷம் புரிய, அது அவளது வெறியை இன்னமும் ஏற்றி விட்டது.

அவளிடமிருந்து தப்பி, போக்கு காட்டிவிட்டு மாடியை நோக்கி சிரித்துக் கொண்டே வம்பிழுத்தபடி ஓடினான் ஷ்யாம்.

“எல்பிடபிள்யூவ சிலபஸ்ல இன்க்ளுட் பண்ணா…” என்று பெரும் சிரிப்பாக சிரித்தவன், “நினைச்சு பாரு…” என்று மீண்டும் சிரிக்க, அவனது சிரிப்பை கண்டவள், பல்லைக் கடித்துக் கொண்டு,

“டேய்… வேண்டாம்…” என்று கொதிக்க,

“அதை வேற இவங்களுக்கு கிளாஸ்ல லெக்சர் எடுக்கணுமாம்…” என்று சிரித்தவன், “கிளாஸ்ல சமையல் மந்திரம் ப்ரோக்ராமை ஓட்டி பார்க்கனும்ன்னு நினைக்கற அளவுக்கு இருக்க நீ…” என்று மனைவியை வார, அவள் முகம் சிவந்து,

“அடேய் எருமை… அர்த்தம் புரியாம சொல்லிட்டேன்… வேண்டாம்… ரொம்ப கலாய்க்கற…” என்று அவனை விடாமல் துரத்த, அவளுக்கு போக்கு காட்டி விட்டு அவர்களது அறைக்குள் நுழைந்தான் ஷ்யாம்.

துரத்தியதில் அவன் அவர்களது அறைக்குள் நுழைந்ததையே அவள் உணரவில்லை.

மூச்சு வாங்கியபடி அவன் படுக்கையில் விழ, அவனது கழுத்தை நெரிக்க வந்தவளின் காலை அவனே அறியாமல் தட்டி விட, அவன் மேலேயே விழுந்தாள் மஹா.

“ஐயோ… நான் சட்னி…” வேண்டுமென்றே ஷ்யாம் கத்த,

“கத்தி தொலைக்காதடா…” என்று அவனது வாயை மூடினாள் மஹா, கதவை பார்த்தபடி.

ஆட்டோமேடிக் லாக், சமர்த்தாக லாக் ஆகி இருந்தது.

“ஷப்பா…” என்று பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டவள், அவனது வாயிலிருந்து தன்னுடைய கையை எடுத்து விட்டு,

“இப்ப கத்தி தொலை…” என்று கூற, அவன் எதுவும் பேசாமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இத்தனை நேரம் அவளை வம்பிழுத்து, கலாய்த்து, அவளை அழ வைத்து, சிரிக்க வைத்து, ஓட வைத்து, கிண்டல் செய்து அவளை ஒரு வழியாக்கியவன், இப்போது ஏன் மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்க, அவனது பார்வை அவளை துளைத்தது. ஊடுருவியது. அவளது உயிரை தொட்டது. என்னவென்று புரியாமல் இவள் பார்க்க,

“சும்மா மெத்து மெத்துன்னு டன்லப் மெத்தை மாதிரி இருக்கடி… ஆனா என்ன? கொஞ்சம் பெரிய சைஸ் மெத்தை…” என்று சொல்லி கண்ணடிக்க, அப்போதுதான் உணர்ந்தாள், அவன் மேல் தான் படுத்துக் கொண்டிருப்பதை.

அதிலும் தன்னை அவன் பெரிய சைஸ் மெத்தை என்று வேறு கூறிவிட, ரோஷமாக எழுந்து கொள்ள முயல, அவளால் முடியவில்லை. விழுந்ததில் முடி அவளது டி ஷர்ட்டின் பட்டனில் சிக்கியிருக்க,

“ஸ்ஸ்ஸ்…” என்றபடி முகத்தை சுளித்தாள்.

முடியை பியைத்து எடுக்க முடியாமல், எப்படியாவது அவனிடமிருந்து விடுபட முயல,

அவளை பார்த்து சிரித்தவன், “காதலுக்கு மரியாதை விஜய் ஷாலினி ஞாபகம் வரலையா குல்ஃபி உனக்கு?” என்று கண்ணடிக்க, அவனை பார்த்து முறைத்தாள்.

அத்தனை நெருக்கமாக அவன் மேல் படுத்திருப்பது வேறு அவஸ்தையாக இருக்க, அவனோ விடாமல் அவளை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

“ஹீரோ ஹீரோயினுக்கு இப்படி சீன வெச்சா அடுத்த செக்கன்ட் அவங்களுக்குள்ள லவ் மூட் ஸ்டார்ட் ஆகணும்டி… எதிக்ஸ்சே தெரியல உனக்கு…” என்று சிரிக்க,

“டேய் இப்ப வாயை மூடறியா? இல்ல நான் கடிச்சு வைக்கட்டா?” எரிச்சலில் அவள் வாயை விட்டுவிட, அவனது முகம் பிரகாசமானது.

“ஏய்… செக்கன்ட் ஆப்ஷன் சூப்பர்டி பொண்டாட்டி… ஐ ஆம் ரெடி…” மீண்டுமாய் அவன் சிரித்தபடி அவளை கிண்டலடிப்பதில் எரிச்சலானவள்,

“அதையெல்லாம் அந்த சௌஜன்யா கிட்டத்தான் நீ கேக்கணும்…” என்றவளுக்கு முடி இப்போது விடுபட, அவள் தன்னை விடுவித்துக் கொண்டு எழ முயன்றாள்.

அவளை அப்படியே கவிழ்த்தவன், அவள் மேல் படர்ந்து கொண்டு,

“அவ கிட்ட நான் எதுக்குடி கேக்கணும்? நீதான என் பொண்டாட்டி?” என்று கேட்டவனுக்கு சுர்ரென்று கோபம் வந்திருந்தது. எப்படி இவள் சௌஜன்யாவை ஒப்புமைப் படுத்தலாம் என்ற எரிச்சல். அவனது எல்லைக் கோட்டை மீற வைத்து இருந்தாள் மஹா.

ஒரு வார்த்தை… ஒரே வார்த்தை… அத்தனையையும் புரட்டிப் போட மஹாவால் மட்டுமே முடியும் என்பதை மீண்டும் மீண்டுமாய் உறுதி செய்து கொண்டிருந்தாள்.

இது ஆணுடைய ஈகோவை தட்டி எழுப்பும் இடம். கடந்த காலங்களில் இருந்த உறவுகளை எல்லாம் யாருமே நினைத்துக் கொண்டிருக்க போவதில்லை. அதிலும் பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள் என்றால், ஆண்கள் மிகவும் பிராக்டிகலாக சிந்திக்கக் கூடியவர்கள். அதிலும் ஷ்யாம் ரொம்பவுமே ப்ராக்டிகல். அவன் சொன்னது ஒன்றே ஒன்று தான். ‘உனக்கு முன்பாக எனக்கு நிறைய உறவுகள் இருந்து இருக்கின்றன தான். இப்போது அவை எனக்கு ஒன்றுமே இல்லை. உன் மீதான நேசம் உண்மை. காதல் உண்மை. அதை மட்டும் பார். உனக்கு முன்பான உறவுகளின் தன்மையை இப்போது நினைத்தும் பார்க்கவில்லை நான்’ என்பதுதான் அவனது நிலை.

 

Leave a Reply

error: Content is protected !!