KKN 18

KKN 18

18

கைபேசியின் திரையில் ஜெகதீஷைக் கண்டவுடன், தலையை நீட்டி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டு, பரபரவென நெற்றி முடியை ஒதுக்கி விட்டு, முகத்தை அழுந்தத் துடைத்தவள், ஸ்வைப் செய்து, வீடியோ காலை அட்டென்ட் செய்தாள்.

திரையை அடைத்தபடி, அதே பளீர் சிரிப்புடன், பால் கனியின் கம்பிகளில் சாய்ந்திருந்தவனின், தலைக்கு உயரே மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களும் போகஸ் ஆனது.

“behind, every status there is a secret message to someone..உன் status யாருக்கான மெசேஜ் செல்லம்மா?” அப்பட்டமான, கேலி..கள்ளன்.தெரிந்து கொண்டே சீண்டுபவனிடம் என்ன சொல்வாள்?

“கண்டிப்பா உனக்கில்லை ஜெகதீஷ்..” வெடுக்கென்று சொன்னாள் ஜீவி.

மௌனமாய் ஐந்து நிமிடங்கள் அவளையே ஊன்றி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை வீச்சைத் தாளமாட்டாமல், இமைக்குடைகள் தாழ, கூந்தலை சரி செய்து கொண்டிருந்தாள்.

“ஹே! ஏதாவது சொல்லுடி..இப்படி, எதுவுமே சொல்லாமல் இருந்தால் நான் என்ன நினைக்கறது??பிடிச்சிருக்கு தானே??ம்ம்..”

அலட்சியமாய் பார்த்தவள், “மச்..ப்ரொபோஸ் கூடப் பண்ணத் தெரியலடா உனக்கு..” அசிரத்தையாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜீவி.

‘ஹ்ஹ்’ பொறுமையாய் வரிசைபற்கள் மின்ன, முறுவலித்து  தலையசைத்தான் அவள் காதலன். இவள் மனம் மயங்கி போனது.

‘“சொல்ல தெரியலைடி..”ஐ லவ் யூ’ன்னு சொல்லி ஒரு வார்த்தையில் என் காதலை எக்ஸ்ப்ரஸ் பண்ணிட முடியும்னு தோணல..” முன்னுச்சி முடியை அழுந்தக் கோதி விட்டுகொண்டே, “நீ பக்கத்தில் இருக்கும் போது, எதுவும் தெரியலைடி..நீ விலகிப் போன பிறகு, நிரப்பவே முடியாத ஒரு, வேக்கம் கிரியேட் ஆன மாதிரி பீல்..அப்பவும், அது காதல்னு சொல்லிட முடியாது செல்லம்மா..அன்னைக்கு, பீச்சில் கூட நீ என் பக்கத்தில், இருந்தப்போ, இங்க..இங்க..என்னவோ செய்தடி!!” விரல்களால் இருதயம் இருந்த பகுதியைத் தட்டிக்காட்டினான்.

“உன் கோவம், பிடிவாதம் இதெல்லாம் எனக்கு பிடிக்காது தான்..ஆனாலும், நீ அமைதியா இருக்கறதைப் பாக்க பிடிக்கலடி..உன்னை எப்போதும்..இங்க..என்..நெஞ்சுக்குள்ளேயே, பொத்தி வச்சிக்கணும் போல இருந்துச்சுடி..” ஜெகாவின் பேச்சில் வாயடைத்துப் போனாள் ஜீவி.

“உன்னிடம் பேசாமல் ஒரு நாள் கூட, கடத்த முடியாதுன்னு, தோணுது..நீ என் பார்வை வட்டத்துக்குள்ளேயே இருக்கணும்னு நினைக்கிறேன்..ஏன் இப்படி தோணுதுன்னு, சத்தியமா எனக்கே புரியலைடி..ஹாஹா..என்னை நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்குடி..இப்படி எல்லாம் பேசறது என் கேரக்டர்கே சம்மந்தமில்லாத ஒண்ணு..எனக்கு ப்ரொபோஸ் பண்ண வராது..ட்ரை பண்ணா, சொதப்பிடுவேன்டி..ஆக்வர்டா இருக்கும்..”

பதுமையாய் மாறிபோயிருந்தாள் ஜீவி..அவன் பேச்சில் கசிந்துருகி போய், அவன் முக பாவங்களையே ரசித்திருந்தவளின் முகம் கனிந்திருந்தது..காலம் காலமாக, காத்திருந்த ஒன்று கை சேர்ந்து விட்டதை போன்ற மகிழ்ச்சி..எதை தொலைத்தோம் எதைத் தேடுகிறோம் என்றே புரியாமல் முடிவிலியாய், அர்த்தமற்ற குழப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருந்த, அவளின் வாழ்விற்கு ஒரு பற்றுக்கோல் கிடைத்து விட்டதைப் போல நிம்மதி விரவியது..தன் மனதை அழகாய் வெளிக்காட்டிவிட்ட, தன்னவனின் காதலில் பூரித்துபோனாள்..மனதில் வர்ணிக்க முடியாத அமைதி குடியேறிவிட்டது அவளுக்கு.

“பேசுடி..அமைதியாவே இருந்து கொல்லாதே!!” ஏக்கமாய் ஒலித்தது அவன் குரல்.

வார்த்தை எழாமல், தொண்டை அடைத்துகொள்ள, “குட் நைட் ஜெகதீஷ்.” என்றாள். அந்த நிமிடத்தில், அவளால் அதை மட்டும் தான் சொல்ல முடிந்தது. இந்த ‘குட் நைட்டை’ கேட்பதற்கா அவன் காத்து கிடக்கிறான்??

வெடுக்கென்று கத்தரிப்பது போல அவள் சொல்லி விடவும், பால்கனியில் சாய்ந்து இருந்தவன், விறைப்புடன் நெஞ்சு விடைக்க, “இந்த உலகத்திலே என்னை டென்ஷன் பண்ணி பாக்குற, ஆள் நீயா மட்டும் தாண்டி இருப்ப..பதில் பேசாமல் நீ ஆப்லைன் போகக்கூடாது..” புருவம் நெறிய, முறைப்புடன், கிட்டத்தட்ட மிரட்டினான் ஜெகதீஷ்.

“குட் நைட்” சுருதி தப்பாமல் அதே பல்லவியை பாடினாள் அவன் காதலி..

சுவருக்கு ஒரு குத்து விட்டவன், “வேண்டாமடி..மறுமுறை, என் கையில் சிக்கினால் செத்தடி நீ..” ஜெகதீஷின், எச்சரிக்கையை லட்சியமே செய்யாமல் ஆப்லைனிற்கு வந்தவள், கைபேசியை தூர வீசி விட்டு மெத்தையில் கவிழ்ந்துகொண்டாள்.

விழியோரம் மெலிதாய் நீர் கசிந்திருக்க, இதழோ மலராய் விரிந்து கிடந்தது..இதயம் வழக்கத்திற்கு மாறாக துள்ளிக் குதித்தது.. மனம் பாரமாக அழுத்தும்போது அவள், உறக்கமின்றி தவித்த நாட்கள் அதிகம்..இன்று மருந்துகளின் தேவை இல்லாமலே, உறக்கம் அவளை தழுவிக்கொண்டு விட்டது..ஆழ் துயிலுக்குச் சென்று விட்ட போதும், அவள் உதடுகள், விரிந்த நிலையிலேயே உறைந்து விட்டிருந்தது. உறக்கத்திலேயே, கை உயர்த்தி வலதுதோளை அழுத்தி தேய்த்து விட்ட போதும், அவன் மீசை ஊட்டிய குறுகுறுப்பின் தடயம், மீதமிருந்து இம்சித்து கொண்டே இருந்தது அவளை.

மறு நாள் காலையிலேயே விழித்தெழுந்தவள், ஆரஞ்சு வர்ண குர்தியும், பல வர்ணங்களில் பூக்கள் தூவப்பட்ட, பட்டியாலா பாட்டமும் அணிந்துகொண்டு, கண்ணாடி முன் நின்றிருந்தாள். முதல் முறை இதே குர்தியை அணிந்துகொண்டு ஜெகதீஷ் முன் நின்றபோது, முகத்தை சுளித்து அவன் கொடுத்த எக்ஸ்ப்ரெஷன்..ஹாஹா..அவள் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. “எங்கிருந்துடி செலக்ட் பண்ற?இந்த கலரில் ட்ரெஸ் பண்ணிட்டு என் முன்னாடி வராதேடி! கேவலமா திட்டிடப் போறேன்.” என்றான் கடுப்போடு.

ஜீவிதாவின் பொலிவும்,மாற்றமும் பெற்றவர்கள், உள்ளத்தை குளிர செய்திருந்தது. மனம் விட்டுப் பேசியிருந்தால், விரிசலே ஏற்பட்டிருக்காது. தொடக்கத்தில் புரிதல் இல்லாமல் உண்டாகிய பள்ளம், வருடங்கள் ஓட, மாறாமல் தேக்கமாகவே நின்று விட்டது.

ஜீவிதாவைப் புரிந்து கொள்ளாமல், அவள் முடிவுகளை தனிச்சையாக எடுக்க விடாமல் தடுத்ததும், கலைந்து விட்ட அவள் கனவும் இன்றளவும் உறுத்திக்கொண்டிருக்கிறது.

ஆனாலும், ‘பெற்றவர்களை வருத்திவிட்டோம், தன்னை பற்றிய கனவுகள் அவர்களுக்கும் இருப்பது நியாயம் தானே!’ என்கிற குற்றஉணர்ச்சியில் ஜீவிதாவும், பெண்ணை புரிந்துகொள்ளாமல், அவள் ஆசைகளை சிதைத்து விட்டோம், இனியும் அவளை வருத்தக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் இரு தரப்பும் அமைதியாகவே செயல்பட்டனரே தவிர, இடையில் முளைத்திருந்த பள்ளத்தை சீர்படுத்தும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை.

அன்று ஒரு நாள், ஹர்ஷு தன் வீட்டில் கிட்செனில் செய்த அமர்களத்தை, சாரதா செல்லமாய் கடிந்து கொண்டதை பார்த்தபோது, ஜெகாவின் இல்லத்தில், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட போது ஜீவிக்கும் ஏக்கம். உரிமை எடுத்துக்கொள்ளாமல் விலகி இருப்பது அவளைப் பெற்றவர்களா? இல்லை நெருங்க விடாமல் தடுப்பது என் குணமா?

எதுவாயினும், பழைய நிலைக்கு அனைத்தையும் திருப்புவதற்கான முதல் அடியை ஜீவிதாவே எடுத்து வைத்தாள்.டைனிங் ஹாலுக்கு சென்றவள், தானும் ஒரு பிளேட்டை எடுத்துக்கொண்டு, பெற்றவர்களுடன் அமர்ந்தவள், மேலே பட்டு தெறித்த, அவர்களின் ஆச்சரிய பார்வையை கண்டுகொள்ளாதது, போலவே உண்ணத் தொடங்கினாள்.

இத்தனை நாட்களும் சிறு சிறு மாறுதல்கள் ஜீவிதாவிடம் தென்பட்டாலும், இந்த மாற்றம், அவர்கள் அளவில் பெரிய மகிழ்ச்சியே!! பெண் மனதளவில், தங்களை நெருங்க எண்ணுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களும் சின்ன சின்ன செய்கைகளில், தங்கள் நெருக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.

அன்பு, ஆதிக்கமாக மாறும்போது பிரச்சனை எழுகிறது..சில நேரங்களில், வெளிகாட்டிக்கொள்ளாத அன்பும் புரிந்துகொள்ளப்படாமல் வீணாகி விடுகிறது.

அன்று மாலை, வரையும் ஜெகதீஷை தேடிச் செல்லவில்லை ஜீவி..சாட் செய்ததுடன் சரி..சாட்டிலும், அவனை டென்ஷன்படுத்தும் பணியை செவ்வனே செய்து, ஜெகதீஷே தன்னைத் தேடி வரும்படி செய்திருந்தாள்.

“என்னடி உன் பிரச்சனை? நீ தானே சொன்ன, நேத்து யு.எஸ் போகிறேன் என்று..இன்று முடியாது என்றால் என்ன அர்த்தம்?” அடிக்குரலில் முழங்கினான். குரல் கொஞ்சம் உயர்ந்தாலும், ஹாலில் இருந்து அத்தையும், மாமாவும் டைனிங் ஹாலை பின்னே தலை சாய்த்து எட்டி பார்க்கிறார்கள். ஏதோ அவர்கள் பெண்ணை கடித்து விழுங்கி விடுவதை போல!!

“அது நேத்து..இப்போ முடிவை மாத்திக்கிட்டேன்.” கையில் பிடித்திருந்த டாபிள் உன்னிப்பாய், எதையோ பார்த்துக்கொண்டே, இவனுக்கு பதில் தந்தாள் ஜீவி..டேபை பிடுங்கி, அதில் பார்வையை ஓட்டியவன் காண்டானான்.

“ஷின்..சேன்..” அவளை நோக்கி, காண்டாக மொழிந்த ஜெகதீஷின், பிரவுன் நிற விழிகள் சுருங்கி, புருவம் நெறிந்தது.

“என்னடி வயசு உனக்கு?? oh my god!!”

“கார்டூன் பார்த்தால், மூளையின் ஐ.க்யு லெவல் அதிகமாகும் என்று ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி சைண்டிஸ்ட் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க..” என்றாள் தீவிரமாக, கண்களை விரித்து.

“குட்டச்சி..டென்ஷன் பண்ணாதடி..” என கடிந்தவன், “உனக்கென்று ஐடென்டிடி வேண்டாமா செல்லம்மா? வெறும் யுஜி மட்டும், வைத்துக்கொண்டு, உன் கெரியரை பெஸ்ட்டா அமைச்சிக்க முடியாது..” என்றான் புரிய வைக்கும் நோக்கத்தில்.

“தெரியும் ஜெகதீஷ்..ஆனால், நான் எம்.எஸ் முடிக்க வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் ஆசை..எனக்கு அதில் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை. அவர்களை, திருப்திபடுத்த நினைத்து தான் அப்படிக் கேட்டேன்..நேத்து பேசும் போது, நீ தானே சொன்ன..உனக்குப் பிடிச்சதை செய் என்று..அதை தான் செய்கிறேன்..” என்றாள் தெளிவான சிந்தையோடு.

“எங்க காலேஜில் MBA ஜாயின் செய்வது ‘நாட் தட் மச் வொர்த்’ செல்லம்மா..” அவனுக்கு மனமேயில்லை..அவளைப் பிரிவது கடினமாக இருந்தாலும், அவள் கெரியர் சிறப்பாக அமைய வேண்டும் என்று அவனுக்குமே ஆசை உண்டு.

“MBA ஜாயின் செய்வது கூட என் கான்பிடன்ஸ்க்கு தான் ஜெகதீஷ்..வெறும் யுஜின்னு சொல்லிக்கொள்வதை விட இது பெஸ்ட்..மத்தபடி, நான் அப்பாவுடன் சேர்ந்து பிசினெசை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணிருக்கேன் ஜெ!! ஓகே தானே??” முடிவு செய்து விட்டிருந்தாலும் அது சரிதானா என்ற குழப்பம் இருந்தது ஜீவிக்கு.

“நீ பிசினெசை பார்த்துக்கொள்..அதில் பிரச்சனை இல்லை..யு.எஸ் போவதை பற்றி கன்சிடர் கண்ணு..” என்றான் தயக்கமாக.

“இப்போ தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..மேரேஜ் பண்ணிட்டு, வீடியோ சாட்டிலும், வாய்ஸ் சாட்டிலும் வாழ முடியாது..புரிஞ்சிதா?” எரிச்சலாகவே கேட்டாள் ஜீவி.

திகைத்து விட்டான்..ஒரு வார்த்தையில், அவன் மனநிலையை மொத்தமும் மாற்றிவிட்டாள்..இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அவள் அருகில் உட்கார்ந்தான்.

“தப்பா சொல்ற..நான் மட்டும் தான் லவ் பண்றேன்..நீ சரியான ரோபோடி..” ஆதங்கமும் கிண்டலுமாய் சொன்னான்.

முகத்தில் எதையுமே காட்டிக்கொள்ளாமல், ஜெகதீஷிடமிருந்து, டேபை பிடுங்கி டேபிளில் நகர்த்தி விட்டு, அவள் அம்மா செய்து கொடுத்த பாதாம் அல்வாவை எடுத்துச் சுவைத்தாள்.

அவன் இம்மியும் நகராமல் அங்கேயே இருக்கவும், “பேசி முடிச்சாச்சு தானே?? இன்னும் என்ன கேட்கணும்??” என்றாள், அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

“ஒரு டைட் ஹக், அப்புறம் டீப் கிஸ் வேணும்..அவ்வளவு தான்..” என்றான் தாராளமாய்..ஹஸ்கி வாய்சில் சீண்டல் மீதுற கேட்டதும், விழி விரித்து விக்கித்துப் போனாள்.

ஜீவியிடமிருந்து, கப்பைப் பிடுங்கி இனிப்பை, இவன் சுவைக்க தொடங்கினான். விழிகளோ, அவள் செவ்விதழையே மொய்த்தது.

“மச்..அது எச்சில்..” என்றாள் சன்னமாய்.

“தெரியும்..” ரசனையாய் ஸ்பூனை வாய்க்குள் விட்டு நிதானமாய் இழுத்து, சுவைத்தான்.

ஜீவிதா நழுவிச் செல்லப் பார்க்க, “கேட்டதைக் கொடுக்காமல் போறியே செல்லம்மா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ரோபோவிற்க்கு அது மாதிரி எதுவும், ப்ரொக்ரேம் செய்யலை இன்னும்..” முன்னை விட வேகமாய் அங்கிருந்து அகன்றாள்.

ஹாஹாஹா..கடகடவென சிரித்தவனின் குரல் பின்னே துரத்த, ‘கள்ளன்!!’ முனகியவளின், கன்னக்கதுப்புகள் லேசாய் சிவந்து விட்டது.

error: Content is protected !!