Dhuruvam13
Dhuruvam13
துருவம் 13
அருங்காட்சியம் வந்ததில் இருந்து, காவ்யஹரிணி கண்கள் அவனை தான் தேடிக் கொண்டு இருந்தது. அவன் அங்கே இருந்தால் தானே, அவளின் கண்ணில் படுவான்.
Faiq, அவள் செல்ல நினைக்கும் இடத்தில் இருக்கும் ஆபத்துகளை பற்றி நன்கு அறிவான். அவன் தன்னுடைய சாகசதிற்காக, ஒரு முறை அங்கு சென்று வந்தவன் அல்லவா.
இப்பொழுது, அவளை அங்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால், முதலில் அதற்கான பாதுக்கப்புகளை செய்ய எல்லா ஏற்பாடும் நண்பன் ரசாக் உதவியுடன் செய்து கொண்டு இருந்தான்.
“டேய்! நீயே போன தடவை உயிர் தப்பிச்சு வந்த, அது உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டான் ரசாக்.
“நல்லா நியாபகம் இருக்கு டா, அதனால தான் இப்போ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம், எடுத்துக்கிட்டு இருக்கேன். சொல்ல போனா, இந்த பயணத்தில் அவ கிட்ட இங்க வந்த நோக்கம் என்னனு, கண்டிப்பா கேட்டு தெரிஞ்சிக்குவேன்” என்றவனை முறைதான் ரசாக்.
“அதை நீ இப்போவே, அந்த பொண்ணு கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ. இதில எவ்வளவு ரிஸ்க் இருக்குனு, கொஞ்சம் சொல்லி புரிய வை” என்றவனை பார்த்து சிரித்தான் faiq.
“கேட்ட உடனே சொல்லிடுவாளா அவ, இன்னும் உணக்கு அவளை பத்தி தெரியல டா. ஒரு தடவை அவ இது தான் அப்படினு முடிவு எடுத்தா, அப்புறம் நாம என்ன சொன்னாலும் அது அவ மண்டைக்குள் எறவே ஏறாது” என்று அவளை பற்றி தெரிந்தவனாக கூறினான்.
ரசாக்கிற்கு ஆச்சரியம், இந்த அளவுக்கு நண்பன் அவளை பற்றி அறிந்து வைத்து இருக்கிறானா! அவளோடு ஒரு வாரம் ஊர் சுற்றியதில், அவளோடு சண்டை பிடித்தது தான் அதிகம் என்று அவனே சொல்லி இருக்கிறான்.
இப்பொழுது அவனை பற்றி தெரிந்து வைத்து இருக்கிறான் என்றால், நிச்சயம் பிடித்தம் இல்லாமல் இந்த அளவு தெரிந்து வைத்து இருக்க முடியாது என்று எண்ணினான்.
“உனக்கு அவளை பிடிச்சு இருக்குன்னு தெரியுது, ஆனா அந்த பிடித்தம் ஒரு தோழியாவா, இல்லை காதலியாவா?” என்று கேட்டான் ரசாக் அவனிடம்.
அதற்கு அவன் பதில் ஒரு புன்னகை மட்டுமே, அதன் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.
இங்கே அவனை காணாமல், காவ்யஹரிணி மனதிற்குள் அவனை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தாள்.
“இவன் மனசுல, என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? என்னை பார்த்தா, எப்படி தெரியுது அவனுக்கு?”.
“இங்க சந்திக்கலாம் சொல்லிட்டு, இப்போ என்னடான்னா சார் ஆளையே காணோம். வரட்டும், பிடிச்சு நல்லா நாலு கேள்வி கேட்குறேன்” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்.
அவனோ, அவளை மாலை 4 மணி வரை காக்க வைத்துவிட்டு, அதன் பின் தான் வந்தான் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு.
“சாரி! போன் பண்ணி சொல்லி இருக்கணும், கொஞ்சம் லேட்டாகும்ன்னு. நாம உங்க வீட்டுக்கு போய் பேசுறது நல்லதுன்னு தோணுது, இப்போவே ஒரு டொயோட்டோ வண்டி ரொம்ப நேரமா இங்க நிக்குது”.
“ஏற்கனவே, மிஸ்டர் அனிருத் உன்னை யாரோ பின் தொடர்ந்து வராங்கன்னு சொன்னார். இங்க வேலை முடிஞ்சதுன்னா, வா சேர்ந்து போகலாம்” என்று அழைத்தான் faiq.
அவன் மேல் செம கடுப்பில் இருந்தவள், அவன் கூறிய விளக்கத்தில் சற்று தளர்ந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து வைத்து இருந்ததால், அங்கே இருக்கும் இவளின் மேல் அதிகாரியிடம் சொல்லிவிட்டு, இவள் அவனோடு காரில் பயணமானாள்.
“ஆமா, உன்னை இவ்வளவு தூரம் துரத்திகிட்டே வராங்க, உனக்கு கொஞ்சம் கூட பயமில்லையா” என்று கேட்டான் faiq.
“அதான் காப்பாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்” என்று கூறி சிரித்தவளை பார்த்து, அவனுக்கும் முகத்தில் புன்னகை.
இவர்கள் பின்னாடி வந்த அந்த டொயோட்டோ வண்டி, இப்பொழுது இவர்களை முந்திக் கொண்டு முன்னே சென்றது.
“இவனுங்க யாரு? எதுக்கு என்னை பின் தொடர்ந்து வராங்கன்னு சாத்தியமா தெரியல, இப்போ இந்த வண்டியை பின் தொடர்ந்து போனா என்ன?” என்று கேட்டவளை பார்த்து முறைத்தான்.
“கொஞ்சம் புத்தியோட இரு, அவன் அப்படி முன்னாடி போரானா, இப்படி நீ அவனை பின் தொடர்ந்து வரனும்ன்னு நினைச்சு தான். ட்ராப் ல மாட்டிக்க கூடாது இப்போ, எப்போ அவன் ட்ராப் ல மாட்டனும்ன்னு நான் சொல்லுறேன்”.
“இப்போ உங்க வீட்டுக்கு போகலாம், அங்க வச்சு எல்லா விபரமும் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு, வண்டியை அவள் வீட்டிற்கு விரட்டினான்.
அந்த அப்பார்ட்மெண்ட் உள்ளே உள்ள பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் லிஃட்டில் ஏறி எட்டாம் மாடியில் இருக்கும் அவள் வீட்டின் முன் காலிங் பெல் அழுத்திவிட்டு நின்றனர்.
பெல் அடித்த பிறகும், யாரும் வராததால் மீண்டும் ஒரு முறை அழுத்தி பார்த்தாள் காவியஹரிணி. அப்பொழுதும் கதவு திறக்காததால், எப்பொழுதும் கையில் வைத்து இருக்கும் ஸ்பார் கீ கொண்டு கதவை திறந்தாள்.
உள்ளே சென்று பார்த்தவளுக்கு, அதிர்ச்சி. வீட்டில் யாரோ நுழைந்து, எல்லாவற்றையும் கலைத்து போட்டு சென்று இருக்கின்றனர்.
காவ்யஹரிணி, உடனே தன் அண்ணி செல்லுக்கு போடவும், அங்கே எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில் அதிர்ச்சியில் போனை நழுவ விட்டு, அவளும் தொப்பென்று தரையில் விழுந்தாள்.
“ஹே வனி! பிலீஸ் இப்போ உடனே எதை நினைச்சும் அப்செட் ஆகாத. எல்லா இடத்திலும், சர்வைலைன்ஸ் கேமரா இருக்கு, என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்” என்று கூறி, அவளை அழைத்துக் கொண்டு கீழே இருக்கும் செக்குரிட்டி அறைக்கு சென்றான் faiq.
அங்கே, தன் ஐடி கார்டு அங்கு உள்ள சீப் செக்குரிட்டியிடம் காட்டி, எட்டாம் மாடியில் இன்று நடந்த சம்பவத்தை கூறி அதன் கிளிப்பிங்ஸ் பார்க்க அனுமதி வேண்டினான்.
அவரும், இப்பொழுது சிறிது நேரத்திற்கு முன்னாடி போலீஸ் ஆட்களுக்கு போட்டு காட்டிய அனைத்தையும் அவனுக்கு போட்டு காட்டினார்.
அதில் ஒன்றும் உருப்படியான தகவல் ஏதும் கிடைக்காததால், அவன் இதுவரை பேசாத மற்றொரு நண்பனின் உதவியை நாட எண்ணி அவனின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
அவனின் அழைப்புக்கு காத்துக் கிடந்தவன் போல், அந்த பக்கம் இவனின் அழைப்பை பார்த்து உடனே அதை ஏற்று அவனின் நலனை விசாரித்தான்.
அதில், அவன் எந்த அளவு தன்னுடைய அழைப்புக்காக காத்துக் கொண்டு இருந்தான் என்பதை அறிந்து, அவன் கண்களில் நீர் வழிந்தது.
ஒரு சிறிய மனஸ்தாபத்திற்காக, இத்தனை வருடங்கள் அவனை ஒதுக்கி வைத்ததை நினைத்து வேதனை அடைந்தான்.
“டேய் faiq! நீ தான டா பேசுறது! எப்படி டா இருக்க?” என்று கேட்டான் அவனின் நண்பன் ஆதில்.
“ம்ம்.. நல்லா இருக்கேன் டா ஆதில். சாரி! அன்னைக்கு உன்னை ரொம்ப திட்டிட்டேன் டா, நீ என்ன சொல்ல வர அப்படினு கூட கேட்காம”.
“எத்தனையோ நாள், நான் உன் கிட்ட பேசணும் நினைப்பேன், ஆனா பேச தான் முடியாம என்னோட ஈகோ தடுத்திடுச்சு. இப்போ கூட ஒரு உதவினு வரும் பொழுது தான், உன்னை கூப்பிட்டு இருக்கேன் டா, இதுலயே நீ தெரிஞ்சிக்கலாம் டா நான் எவ்வளவு பெரிய சுயநலவாதின்னு” என்று வேதனையுடன் கூறினான் faiq.
அவன் பேசும் பொழுது, அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த காவ்யஹரிணிக்கு, வேதனையுடன் உண்மையை ஒத்துக் கொண்டு, நண்பனிடம் உதவி கேட்கும் அவனை இன்னும் இன்னும் பிடித்தது.
அந்த பக்கம் இதை கேட்ட அவனின் நண்பன் ஆதிலுக்கு, அவனை பற்றி தெரியுமாதலால் இதை பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல், அவனின் நலம் பற்றி விசாரித்துவிட்டு, என்ன உதவி என்று கேட்டான்.
அவனின் அந்த செய்கை, faiqகின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது. அவனுக்கு அவனை பற்றி தான் தெரியுமே, தனக்கு வேதனை தர கூடிய எந்த விஷயத்தையும் அண்ட விடாமல் செய்வதில் அவன் வல்லவன் என்று.
இவனோ, அவனை நேரில் வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். அதன் பிறகு, இருவரும் மருத்துவமனை விரைந்தனர்.
மருத்துவமனையின் உள்ளே சென்று, அங்கே காரிடாரில் கையில் சிறு கட்டுடன் அமர்ந்து இருந்தான், அனிருத் கிஷோர். அவன் அருகே, அவன் மனைவி சாரா கவலையுடன் இருந்தாள்.
“அண்ணா! என்ன அண்ணா இது! பேசாம நான் இந்த ஆராய்ச்சி எல்லாம் விட்டுடுறேன் அண்ணா. அண்ணி உங்களுக்கு ஒன்னும் இல்லையே, டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று பதட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தாள் காவ்யஹரிணி.
“ஹரி! இங்க பாரு, எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன காயம் தான், அதுக்கு நீ ஆராய்ச்சி எல்லாம் நிறுத்துறேன் சொல்லி உன்னை நீயே ஏமாதிக்காத”.
“இந்த ஆராய்ச்சி உன் கனவு மட்டும் இல்லை, தாத்தாவோட கனவும் தான். என்னை விட, உனக்கு தான் அது நல்லா தெரியும். இதை பத்தி பேசும் பொழுதே, இப்படி எல்லாம் நடக்கும் தெரிஞ்சு தான இதுல இறங்கின, அப்புறம் என்ன” என்று அனிருத் அதட்டவும், தெளிந்தாள்.
“சரி யாரு அதுன்னு தெரிஞ்சதா, போலீஸ் கிட்ட என்ன சொன்ன?” என்று அடுத்து விசாரித்தாள்.
“தெரியல ஹரி, ஆனா அவங்க டார்கெட் நீ பண்ணுற ஆராய்ச்சியை, ஏதோ ஒரு வகையில் நிறுத்தனும்ன்னு தான். நமக்கு தெரிஞ்சு ஒரே ஒருத்தர் தான், இதுக்கு ஆரம்பத்தில் இருந்து குடைச்சல் கொடுகிறவர்”.
“அவரும், இப்போ நம்ம ஊர் ல தான் தாத்தாக்கு குடைச்சல் கொடுக்கிறார். இங்க அவருக்கு யாரையும் தெரியுமான்னு தெரியல, எதுக்கும் தாத்தா கிட்ட விசாரிக்கலாம்” என்று கூறி அவன் போனை கையில் எடுக்கும் பொழுது, faiq அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தான்.
அவனும், அவனிடம் சில விஷயங்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்ததால், அவன் அழைத்ததும் உடனே சென்றான். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே, ஒரு மர நிழலில் ஜீப் ஒன்று நின்று இருந்தது.
அங்கே தான், அனிருத்தை அழைத்து சென்றான் faiq. அங்கே ஆதில், இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
“இவர் மிஸ்டர் ஆதில், கிரைம் ப்ரான்ச் என்னோட நண்பன். இவர் தான் நமக்கு ஹெல்ப் பண்ண போறார், உங்களுக்கு தெரிஞ்சதை இவர் கிட்ட சொல்லலாம்” என்று faiq கூறவும், அனிருத் அங்கே நடந்ததை விவரிக்க தொடங்கினான்.
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, யார் என்று எட்டி பார்த்தான் அனிருத். அங்கே பயத்துடன், எதிர் வீட்டு நண்பர் ஒருவர் நிற்பதை பார்த்து, முதலில் அவருக்கு ஏதோ பிரச்சனை போலும் என்று தான் எண்ணினான்.
ஆனால், அதன் பிறகு அவரின் கண் அங்கும், இங்கும் அலை பாய்ந்ததை கண்டு, தங்களுக்கு தான் பிரச்சனை என்று புரிந்து கொண்டு, மனைவிக்கு அங்கு இருந்தவாறே சைகை செய்து போலீஸ்க்கு தகவல் கொடுக்க கூறினான்.
இதற்கிடையில், மீண்டும் காலிங் பெல் அடிக்கவும், அவன் மனைவியை அருகில் வைத்துக் கொண்டதோடு, இதோ வருகிறேன் என்று கூறி கதவை திறந்தான்.
கதவை திறந்தவுடன், மொது மொதுவென்று முகமூடி கொள்ளையர்கள் போல் ஆட்கள் உள்ளே நுழைந்தனர். நுழைந்ததோடு அல்லாமல், அதில் தலைவன் போல் இருந்தவன், அனிருத்தை மிரட்ட தொடங்கினான்.
“அந்த டாக்குமெண்ட் எங்க? ஒழுங்கா எங்க கிட்ட கொடுத்திடு” என்று ஆங்கிலத்தில் மிரட்டி கொண்டு இருந்தான்.
“எந்த டாக்குமெண்ட்! நீங்க எல்லாம் யாரு? என்ன வேணும் உங்களுக்கு?” என்று அவன் கேட்டான்.
எதுவும் உருப்படியாக கிடைக்காத ஆத்திரத்தில், அனிருத்தை தாக்க தொடங்கினான். அவன் தாக்க வருகிறான், என்று உணர்ந்து அவனிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சண்டையிட தொடங்கினான்.
ஒரு பக்கம் அவனின் மனைவியும், தற்காப்பு கலையில் தேர்ந்தவள் என்பதால், இருவரும் தங்களை தற்காத்துக் கொள்ள, சண்டையிட தொடங்கினர்.
அதற்குள், போலீஸ் வரவும் இவர்கள் அசந்த நேரம் கத்தியால், அனிருத்தை தாக்கி விட்டு தப்பித்து சென்றனர். எதிர்பாராத இந்த தாக்கத்தில், இருவரும் அதிர்ந்து விட்டனர்.
போலீஸ், வந்தவர்கள் உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு எல்லாம் முடிந்த பிறகு இவளின் அழைப்பில் தான் இங்கு வரும்படி கூறினார்கள்.
இதை எல்லாம் கேட்ட ஆதில், அவனிடம் சில கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
அவன் சென்ற பிறகு, அனிருத் faiqகிடம் சில விபரங்கள் கூறி காவ்யஹரிணியை பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். அதை கேட்ட faiq, அவனிடம் தான் நன்றாக பார்த்துக் கொள்ளுவேன், கவலை வேண்டாம் என்று கூறி வாக்கு கொடுத்தான்.
அதன் பின், மறுநாள் அனிருத்தையும், அவனின் மனைவி சாராவையும் ஆதில் பொறுப்பில் விட்டுவிட்டு, இவர்கள் அந்த இடம் நோக்கி பயணம் செய்ய தொடங்கினர்.
அவர்களின் suv கார், ஷார்ஜா தாண்டி அந்த பாலைவனம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் தங்கள் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, அந்த மணலில் நடக்க தொடங்கினர்.
“இன்னும் எவ்வளவு தூரம், இப்படி நடக்கணும்? ஏன் அன்னைக்கு சபாரி போன மாதிரி, கார் ல போக முடியாதா?” என்று கேள்வி கேட்டாள்.
“தூரம் கூட இப்போ நாம போக போறது, அவ்வளவு தூரம் போக வண்டி தாங்காது. ஒவ்வொரு தடவையும், டயரை தான் பார்த்துகிட்டு இருக்கணும்”.
“போற இடம் இப்போ, கொஞ்சம் ஆபத்து நிறைந்தது சொன்னேனே. எந்த மாதிரி ஆபத்துன்னு, நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ” என்று கூறிவிட்டு முன்னே நடந்தான்.
“என்னை நடக்க வைக்க, எப்படி எல்லாம் கதை கட்டுறான். இரு டா, உன்னை வச்சு செய்றேன் இன்னைக்கு” என்று கருவிக் கொண்டே, அவன் பின் நடந்து வந்தாள்.
மதிய வேளை, அந்த பாலைவனத்தில் வெயில் அதிகரிக்க, அதிகரிக்க தண்ணீர் தாகம் அதிகம் எடுத்தது. தண்ணீர் இப்பொழுது எடுத்து குடித்தால், அதன் பிறகு அங்கு செல்லும் பொழுது நமக்கு இருக்காது என்று கூறி, அவளை குடிக்க விடாமல் அழைத்து சென்று கொண்டு இருந்தான்.
“பாவி! பாவி! எத்தனை நாளா என்னை பழி வாங்க நினைச்சான் தெரியல, இப்படி இவன் என்னை வச்சு செய்றானே ஆண்டவா” என்று புலம்பிக் கொண்டு அவனுடன் சென்றாள்.
இவர்கள் அங்கே ஒரு குறிப்பிட்ட இடம் கடக்கும் பொழுது, அங்கே வரிசையாக இருந்த மனித எலும்பு கூண்டுகளை பார்த்து, மனதிற்குள் அலறி விட்டாள்.
“ஆத்தி! இது நிஜமாவே ஆபத்தான பகுதி போலயே, இவன் ஏதோ பழி வாங்குறான் ல நினைச்சிட்டோம். ரிகா! நீ வாயை திறக்காத, இல்லை இங்கேயே விட்டுட்டு போயிடுவான் அவன்” என்று பயத்தில், புலம்பிவிட்டு அவனுடன் சென்றாள்.
சிறிது தூரத்திற்கு எல்லாம், அவளால் முடியவில்லை. மயக்கம் வரும் போல் இருக்கவும், அவன் மேலே சரிந்து விட்டாள்.
அவளை தூக்கிக் கொண்டு நடந்து, சிறிது தூரத்தில் தெரிந்த ஒரு சமவெளி பாதையில் உள்ள மர நிழலில் அவளை கிடத்தினான். தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, சிறிது வாய் அருகே கொண்டு சென்று புகட்டினான்.
அதில் மயக்கம் சற்று தெளிந்தவள், முதலில் பார்த்தது அவனின் வேதனையான முகத்தை தான். அவனின் வேதனையை போக்க, அவள் உடனே தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு, அவனிடம் இன்னும் செல்ல வேண்டுமா என்று வினவினாள்.
“ம்ம்.. இன்னும் போகணும், ஒரு அஞ்சு கிலோமீட்டர் ல ஒரு சின்ன ஊர் வரும், அங்க தான் ஸ்டே இன்னைக்கு” என்று கூறிவிட்டு, அவளால் முடியுமா என்று கேட்டான்.
அவனின் வேதனை படிந்த முகத்தை பார்த்த பிறகு, அவளால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அவனின் வேதனையை போக்குவது ஒன்றே, தனது வாழ்நாள் லட்சியம் என்று எண்ணினாள் போலும், அதனால் அவனிடம் தன்னால் முடியும் என்று கூறி அவனுடன் பயணம் செய்தாள்.
ஆனால் சிறிது நேரத்தில், ஒரு மண் குழியில் அவள் கால் உள்ளே இழுக்க தொடங்கவும், சாக போகிறோம் என்று எண்ணி, அவனிடம் அந்த ஆராய்ச்சியை பற்றி கூறிவிட்டு, அவனை மனமார விரும்புவதையும் அந்த தருணத்தில் கூறி உள்ளே சென்று கொண்டு இருந்தாள்.
தொடரும்…