mu-29

mu-29

சவால்

ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்யஅந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய முடியவில்லை.

இப்போது அவளின் தாரக மந்திரம் கூட தோல்வியுற ஈஷ்வரின் நெருக்கத்தை விரும்பாமல் கண்களை இறுக மூடியபடியே, “ஈஷ்வர் ஒன் மினிட்… நான் சொல்றதைக் கேளு ப்ளீஸ்”என்று கெஞ்சினாள்.

நாட் நவ்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அவளின் இதழைத் தன் வசப்படுத்திக் கொள்ள எண்ணிய அவனின் மனநிலையை உணர முடிந்த அவளால் ஒரு சாதாரணமான பெண்ணாய் அவனிடம் தோற்றுப் போக மனமில்லாமல், “ஃபைன்… கிஸ் மீ… பட் நான் சொல்றதைக் கேட்ட பிறகு” என்றாள்.

ஈஷ்வர் சலிப்போடு, “யூ ஆர் இரிட்டேட்டிங் மீ சூர்யா…” என்றவன் மீண்டுமே எரிச்சல் தொனியில், “ஒகே… சொல்லு… பட் என் மூடை ஸ்பாயில் பண்ணாத மாதிரி சொல்லு” என்றான்.

இப்படி சொல்லிவிட்டு அவன் சற்று விலகி நிற்க அவளுக்குள் அடைப்பட்டிருந்த ஸ்வாசம் அப்போதே வெளிப்பட்டது. அவள் தேகத்தில் ஏற்பட்ட படபடப்பு நீங்கவே சில நொடிகள் தேவைப்பட அவனோ பார்வையாலேயே அவளை மொத்தமாய் ஆராய்ந்தபடி அவளின் தவிப்பை ரசித்திருந்தான்.

அவன் கரத்தை விலக்கிக் கொள்ளாமல் அப்படி நிற்பது நெருப்பிற்கு நடுவே சிக்கிக் கொண்ட உணர்வைத் தோற்றுவிக்க அவளின் மௌனமான இதழ்களைப் பார்த்த ஈஷ்வர், “உனக்கு எதுவும் சொல்வதற்கில்லைனா… லெட் மீ கன்டினியூ” என்று கேட்ட நொடி “நோ… ப்ளீஸ்” என்று அதிர்ச்சியுற்றபடி என்ன சொல்வது என மனதிலேயே ஆராய்ந்தாள்.

ஈஷ்வர் தவிப்போடு, “ம்ம்ம்… அப்போ சீக்கிரம் சொல்லு” என்று துரிதப்படுத்த சூர்யா அவனைக் கூர்மையாய் நோக்கியபடி, “என் விருப்பத்தைப் பத்தி உனக்கு அக்கறையே இல்லையா ஈஷ்வர்?” என்று அவள் தன்னிரக்கமாய் கேட்க,

ஈஷ்வரோ வெறுப்பானப் பார்வையோடு, “என் விருப்பத்தைப் பத்தி மட்டும் நீ கவலைப்பட்டியா என்ன?… என்னையும் என் காதலையும் நீ கொஞ்ச நேரத்திற்கு  முன்னாடி உதாசீனப்படுத்தல…” என்று அவளை நோக்கி அழுத்தமாய் கேள்வி எழுப்பினான்.

“எனக்கு உன் பீஃலிங்ஸ் புரியுது ஈஷ்வர்” என்று அவள்  சாமர்த்தியமாய் பேசஅவனோ அவளை சந்தேகமாய் மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தான்.

“நீ என்னை லவ் பண்றன்னா… நீ என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணனும் ஈஷ்வர்… பட் இது… அதுக்கான வழி இல்ல… ” என்றாள். ஈஷ்வருக்கு அவளின் எண்ணம் இப்போது நன்றாய் விளங்க அவன் விட்டுவிடுவேனா என்பது போல் அவளை விழிகள் இடுங்க ஒரு பார்வை பார்த்தான்.

சூர்யாவும் இப்போது தீர்க்கமான எதிர் பார்வையோடு,

 “வலுகட்டாயமா ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துறது ஆம்பளத்தனம் இல்லங்கறது என் அபிப்ராயம்… அதுக்கப்புறம் உன் இஷ்டம்… கன்ட்டினியூ” என்றாள். கடைசி முயற்சியாய் இப்படி சொல்லிவிட்டாலே ஒழிய அவள் மனம் என்ன செய்யப் போகிறானோ என அச்சமுற்றுக்கிடந்தது.

அந்த வார்த்தையை மீறி அவளை நெருங்க முடியாமல் அவன் அவளைப் பார்த்த பார்வை தீஜ்வாலையாய் அனல் வீசியது.

சூர்யாவால் அப்போதைக்கு ஈஷ்வரின் உடல் பலத்தை வென்றுவிட முடியாமல் போனாலும் அவளின் வார்த்தைகள் அவனின் மனோபலத்தைத் தகர்த்திருந்ததை சீற்றமாய் இருந்த அவன் விழிகள் விவரிக்கஇப்போதைக்கு அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தை மட்டுமே அவள் கொண்டிருந்தாள்.

அவனின் எண்ணம் ஈடேற முடியாமல் அவளின் இதழ்களை அழுத்தமான ஏக்கத்தோடுப் பார்த்தவனை நோக்கி, “எனக்குக் கொஞ்சம் டைம் கொடு ஈஷ்வர்… நான் யோசிக்கணும்” என்றாள்.

ஈஷ்வர் அவளின் சாதுர்யமான பேச்சால் தன்னை ஏமாற்றப் பார்க்கிறாளே என்ற கோபத்தோடு, “உன் புத்திசாலித்தனத்தைக் காட்டுறியோ?!… என்னைப் பார்த்தா எப்படிறி தெரியுது உனக்கு?” என்றான்.

நான் புத்திசாலித்தனமா யோசிச்சிருந்தா நீ என்னை மேரி மீன்னு கேட்டதுமே ஒகே சொல்லியிருக்க மாட்டேனா ஈஷ்வர்… எந்தப் புத்திசாலியான பெண்ணும் மிஸஸ்.ஈஷ்வர்தேவ்ங்கற அங்கிகாரத்தை வேணான்னு சொல்வாளா?” என்று அவன் வார்த்தையாலேயே அவனை மடக்க அவன் யோசனைக் குறியோடு அவளை விட்டு விலகி நின்றபடி,

சரி அப்போ உன் முடிவுதான் என்ன? இப்பவே சொல்லு” என்று கேட்டான்.

சூர்யாவிற்கு உள்ளுக்குள் தன் யுக்தி வேலை செய்துவிட்டதை எண்ணி பெருமூச்செறிந்து, “நீ அவசரம் அவசரமா உன் விருப்பத்தை என் மேல திணிக்கப் பார்க்கற ஈஷ்வர்… எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் கொடு… ” என்றாள்.

யோசிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்தப் பார்க்காதே… அபிமன்யுவைத் தூக்கிப் போட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு” என்றான்.

“அபிமன்யுவை விட நீதான் பெட்டர் சாய்ஸ்னு…  எனக்குத் தோனினா… பார்க்கலாமே” என்று தோள்களைக் குலுக்கி அவள் எகத்தாளமாய் சொல்லும் போதே அவனுக்குள் எரிச்சல் ஏற்பட்டது. அப்போதைக்கு அவனைக் கட்டுக்குள் கொண்டு வர அவளுக்கும் வேறு வழியில்லை.

ஈஷ்வர் அலட்சியப் பார்வையோடு, “அந்த அபிமன்யு எல்லாம் ஒரு ஆளா… அவன் போய் எனக்கு ஈக்வலா?” என்றான்.

எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியல ஈஷ்வர்… அபிமன்யுவை ஒரு ஆளாவே மதிக்காத நீ ஏன் பிரான்ஸ்ல இருந்துகிட்டு தமிழ் நாட்டில ஏதோ ஒரு மூலையில் இருக்குற அவனைப் பத்தி விசாரிக்க சொன்ன… நீ மட்டும் அபிமன்யுவைப் பத்தி விசாரிக்க சொல்லலன்னா… நான் கரிசன் சோழாவிற்குப் போயிருக்கவும் மாட்டேன்… அபிமன்யுவை மீட் பண்ணிருக்கவும் மாட்டேன்… ” என்று ஏளனமாய் உரைக்க, ஈஷ்வருக்கு அப்போது உண்மையிலேயே தன் மீதே கோபம் வந்தது. ஆனால் நடந்து முடிந்த நிகழ்வை எண்ணி இப்போது என்ன செய்வது என்ற நிலையில் அவளை நோக்கி,

நீ அபிமன்யுவை மீட் பண்ணாம என்னை மீட் பண்ணியிருந்தன்னா… இப்படி ஒரு கம்பேரிஸனே வந்திருக்காது ரைட்… ஒய் நாட் நீ என் பிரொப்போஸலுக்கு ஒகே கூட சொல்லியிருப்ப” என்றான்.

“நிச்சயமா இல்ல ஈஷ்வர்… உன்னை மாதிரி ஒரு டாமினேட்டிங் பர்ஸனை என்னால… ஃலைப் பாட்னரா நினைச்சுக் கூடப் பார்க்க முடியல” என்றாள்.

சூர்யாவின் கோபத்தை மீறி அவன் பொறுமையோடு, “ஆமாம்… நான் டாமினேட்டிங்தான்… பட் உன்கிட்ட நான் அப்படி நடந்துக்க மாட்டேன் சூர்யா… உன்னை நான் ஒரு பிரின்ஸஸ் லெவலுக்குப் பார்த்துக்கறேன்… பிலீவ் மீ… நீ கனவில கூட அப்படி ஒரு வாழ்க்கையை யோசிச்சுப் பார்த்திருக்க மாட்ட…” என்று தன்னிலையில் இருந்து இறங்கி வர சூர்யா இடைமறித்து,

நிறுத்து… போதும்… காதலும் உனக்கு என்ன பிஸ்னஸ்ஸா… லக்ஸுரியான லைஃப் பார்த்து மயங்குவேன்னு நினைச்சியா… நெவர் எனக்கும் ஆடம்பர கல்யாணம் பண்ணிக்கணும் ஆசை எல்லாம் இருக்கு…  பட் அதுக்காக… மனசு ஏத்துக்காம… நோ…” என்றாள்.

ஈஷ்வர் எரிச்சலோடு, “அந்த அபிமன்யுவை மட்டும் உன் மனசு ஏத்துக்குச்சு… பட் என்னை உனக்குப் பிடிக்கல” என்று கேட்க,

புரிஞ்சுக்கோ… காதல்னா தானவே தோனனும்…  நானாவே இம்பிரஸாகணும் உன்னைப் பார்த்து… பட் அந்த மாதிரி தாட் எனக்கு உன் மேல வரல” என்ற அவளின் பிடிவாதமான பதில் அவனைக் கோபப்படுத்த,

அப்படி என்ன உன்னை அந்த அபிமன்யு  இம்பிரஸ் பண்ணிட்டான்” என்றான்.

நான் இதுவரையில் பார்த்த ஆண்கள்லயே அபி ஒரு யுனிக் பர்ஸ்னாலிட்டி… அபியோட புத்திசாலித்தனமும் கட்ஸும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது” என்றவளைப் பார்த்து ஈஷ்வர் ஒரு அலட்சிய சிரிப்பு சிரித்தான்.

ஏன் ஈஷ்வர் சிரிக்கிற?” என்று அவள் வினவ

இல்ல… அவனோட  புத்திசாலித்தனத்தையும்… தைரியத்தையும் நான் இல்லாம பண்ணி அவனை என் காலடில விழ வைச்சிட்டா” என்று கர்வமாய் கேட்க அவளுக்குக் கோபம் தலைகேறியது.

அது நிச்சயம் உன்னால முடியாது ஈஷ்வர்” என்றாள் தீர்க்கமாக.

“நான் செய்யணும்னு நினைச்சுட்டா அதை செஞ்சு முடிச்சிடுவேன்” என்றான் அவன் சவால் தொனியில்.

இதுவரைக்கும் அப்படி நடந்திருக்கலாம்… ஆனா அபியோட தைரியத்தையும் சரி… புத்திசாலித்தனத்தையும் சரி… உன்னால அசைச்சுக் கூடப் பார்க்க முடியாது…” என்றாள்.

ஈஷ்வர் அவளை ஏற இறங்கப் பார்த்தபடி, “அவ்வளவு நம்பிக்கையா உனக்கு அவன் மேல… அப்போ இதை நான் சேலஞ்சா எடுத்துகிட்டு செஞ்சு காட்டுறேன்டி” என்றான்.

சூர்யா திடுக்கிட்டாள். வீணாக அபிமன்யுவை இதில் சிக்க வைத்துவிட்டோமா என யோசனையோடு நின்றவளின் அருகாமையில் வந்து, “ஜம்பமா பேசுன… சேலஞ்சுன்னு சொன்னதும் ஸைலன்ட்டா நிக்கிற” என்று சொன்னவனின் முகத்தைப் பார்த்துத் தயங்கியவள்

அவனை நோக்கி, “நீ சவாலில் ஜெயிக்க உன் பண பலத்தாலையும் பவராலையும் அபிமன்யுவை நீ ஏடாகூடமா லாக் பண்ணிட்டா” என்றாள்.

ஈஷ்வர் பலமான சிரிப்போடு, “லாக் பண்ணா என்ன… அவன்தான் புத்திசாலியாச்சே… தப்பிக்கட்டும்” என்றான்.

சூர்யா அவன் என்னவெல்லாம் செய்வானோ என தவிப்போடு நிற்க ஈஷ்வர் புன்னகையோடு, “உன் அபிமன்யு மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா இப்பவே சொல்லு… சேலஞ்சை வாபஸ் வாங்கிக்கறேன்… ” என்றான்.

எனக்கு உன் மேலதான் நம்பிக்கை இல்லை ஈஷ்வர்… நீ சவாலில் ஜெயிக்க எந்த எக்ஸ்டென்ட்டுக்கும் போவ… நான் இந்த விளையாட்டுக்கு வரல” என்றாள்.

ஆனா நான் இந்த விளையாட்டை விளையாடியே ஆகணும் மை டார்லிங்… உனக்காக நான் எவ்வளவு நாளா காத்திருக்கேன் தெரியுமாடி? உன்னை யாருக்காகவும் எவனுக்காகவும் என்னால விட்டுத் தரமுடியாது…  நீ எனக்கு வேணும்… அதுக்காகவாச்சும் அந்த அபிமன்யுவை என் புத்திசாலித்தனத்துக்கும் பவருக்கும் முன்னாடி நத்திங்னு நான் உன்கிட்ட ப்ரூவ் பண்ணிக் காட்டறேன்” என்றவன் வெறி கொண்டு சாவல் விட அவளுக்குத் தலைக் கிறுகிறுத்தது.

இருப்பினும் தன் தைரியத்தை அவள் விட்டுக் கொடுக்காமல், ம்ம்ம் ப்ரூவ் பண்ணு… பட் ஆன் ஒன் கன்டிஷன்… ” என்று நிறுத்தியவளை அவன் என்னவென்று கேட்க,

“நீ விளையாடுற இந்த விளையாட்டுல அபிமன்யுவோடு உயிருக்கும்… அபி ரிலேட்டிவ்ஸ்ல யாருக்கும் உன்னால எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்றாள்.

ஈஷ்வர் தலையசைத்து, “ம்ம்ம்… ஒகே வராது” என்று   ரொம்பவும் சாதாரணமாய் சம்மதித்தான்.

சூர்யா சந்தேகமாய் பார்க்க ஈஷ்வர் புன்னகை ததும்ப, “நான் உன்னை மாதிரி எல்லாம் கிடையாது… சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவேன்” என்று சொன்ன மறுகணம் அவள் இறுக்கமான பார்வையோடு, “தென் ஒகே… நீ முயற்சி பண்ணிப் பாரு… நான் இப்போ கிளம்பறேன்” என்று புறப்பட  எத்தனித்தவளை,

ஈஷ்வர், “வெயிட் அ மினிட்… நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல” என்று சொல்லித் தடுத்தான்.

 அப்படியே வெளியேறாமல் எரிச்சலோடு திரும்பி நின்றவளின் பின்னோடு வந்து நின்றவன்,

 “இந்த சாவலில் நான் ஜெயிச்சிட்டா… யூ ஆர் மைன்… வலுகட்டாயமா இல்லடி… உன் விருப்பத்தோடு” என்று அவன் அவள் காதோரம் நெருங்கிக் கிசுகிசுப்பாய் சொல்லியதோடு அல்லாமல் மெல்ல அவள் கன்னத்தை  தன் கன்னங்களால் உரசிவிட அவள் அருவருப்பாய்,

 “இடியட்” என்று கத்திவிட்டு விலகி வந்தாள்.

 “நான் ஒண்ணுமே பண்ணல… அதுக்குள்ள ஏன்டி இப்படி கத்தற?” என்றான் கேலியாய் முறுவலித்தபடி.

கொன்றுவன்… இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்கிட்டேனா?” என்றவள் ஆக்ரோஷமாய் கத்த,

உன்கிட்ட நடந்துக்காம பின்ன வேற யாருகிட்ட” என்று அவன் அலட்சியமாய் பதிலுரைத்தான்.

ஊர் உலகத்துல உனக்கு வேற பொண்ணுங்களே கிடைக்கலயா?”

ஏன் கிடைக்காம… நான் நினைச்சேன்னா … ஒரு நாளைக்கு ஒருத்தியை வைச்சுக்க முடியும்… பட் ஐம் நாட் இன்ட்ரஸ்டட்… எனக்கு நீ மட்டும்தான் வேணும்… நான் எப்படி உன் கன்டிஷனுக்கு ஜென்யூனா ஒத்துக்கிட்டேனோ… அப்படி நீயும் ஒத்துக்கோ” என்றான்.

முடியவே முடியாது… இது கொஞ்சம் கூட நியாயமே இல்லை”

நீ கேள்விப்பட்டதில்ல… காதலிலும் போரிலும் நியாயம் அநியாயம்னு எதுவும் இல்ல… ஜெயிக்கணும்னா எதையும் செய்யலாம்” என்றான். இவன் இப்போதைக்குத் தன்னை விடாமாட்டான் போலிருக்கிறது என்று எண்ணி மௌனமாய் நின்றவளிடம்,

அந்த சித்த வைத்தியன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டு எள்ளிநகையாட அவளுக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.

சில நொடிகள் மௌனமாய் தரையைப் பார்த்தவள் தன் அழுகையை உள்வாங்கிக் கொண்டு,  ஓகே… எனக்கு என் காதல் மேலயும் என் அபிமன்யு மேலயும் நிறைய நம்பிக்கை இருக்கு… நீ நினைச்சது எப்பவும் நடக்காது” என்றாள் அவனைத் தீர்க்கமாய் நிமிர்ந்து பார்த்து.

எனக்குமே நிறைய நம்பிக்கை இருக்கு…  கூடிய சீக்கிரத்தில நீ என் காலடில வந்து விழுவேன்னு…” என்று சொல்ல சூர்யா, “பார்க்கலாம்” என்று அங்கிருந்து வேகமாய் போகிறப் போக்கில் சொல்லிவிட்டு மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்தையும் அவளை மீறிக் கொண்டு வழிந்த கண்ணீரையும் காட்டிக் கொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

ஈஷ்வரின் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான். அவளின் நிராகரிப்பும் அபிமன்யு மீது கொண்ட காதலும் அவன் மனதைக் கனக்க செய்திருந்தது. அவளைத் தான் முதலில் சந்திக்க முடியாமல் போனதும் அபிமன்யுவை சூர்யா சந்திக்க தானே ஏதோ ஒரு விதத்தில் காரணமாகிவிட்டோமோ என்ற கோபத்தில் அந்த அறையில் கைக்குக் கிடைத்தப் பொருள்களை எல்லாம் சிதில் சிதிலாய் நொறுக்கிக் கொண்டிருந்தான்.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத அவனின் கோபத்தில் அழகே ரூபமாய் இருந்த அந்த அறை அலங்கோலமாய் மாறியிருந்தது. கடைசியாய் அவன் மனம் தேடும் அந்த அமைதியை எதுவுமே தர முடியாமல் போகயாருக்காகவோ ஓடிக் கொண்டிருந்த அந்த தொலைக்காட்சி பெட்டியில் ஒலித்த ஒரு பாடல் அவன் உள்ளத்தின் வேதனையை அப்பட்டமாய் உரைத்தது.

அந்த நொடி  நிம்மதி கிடைக்க பெறாவிட்டாலும் மனம் ஒருவாறு அமைதியடைய முயற்சி செய்தது.

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச

அடி தேக்கு மரக்காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

அடி தேக்கு மரக்காடு பெருசுதான்

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி

கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுது உசுரே போகுது

உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

… மாமன் தவிக்கிறேன்

மடி பிச்ச கேக்குறேன்

மனசைத் தாடி என் மணிக் குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு கேக்கல

தவியா (ஹோ ஹோ…)

தவிச்சு (ஹோ ஹோ…)

உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ…)

தையிலாங் குருவி (ஹோ ஹோ…)

என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ…)

இந்த மம்முத கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்திக் கெடக்குதே

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள

விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா

ஒரு பாகுபாடு தெரியலையே

பாம்பா இருந்தும்

நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்திக் கெடக்குதே”

கடைசியாய் அவன் மனதில் ஒரு வரி மட்டும் பதிவாக அதைத் தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணில உன் முகம் போகுமா‘ மரணத்தின் போதும் மறப்பேனா என்ற எண்ணத்தோடு அந்த வரியை சிலமுறைகள் சொல்லி விழிகள் மூடிக் கொள்ள அவள் முகமே மீண்டும் மீண்டும் தோன்றி அவனை உறங்கவிடாமல் செய்தது.

இருள் சூழ்ந்த அந்த இரவில் யாருடைய துணையுமின்றி எப்படியோ சூர்யா தன் வீட்டை அடைந்துவிட்டாள். வீட்டில் மூவருமே சந்தோஷமான மனநிலையில் இருக்க, அதைத் தான் வந்து குலைப்பானேன் என யாரிடமும் தன் வேதனையை அவள் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.

 வேலை இருப்பதாக சொல்லி எப்போதும் போல் தனிமையின் துணையோடே அவள் வலிகளைத் தாங்கிக் கொண்டாள்.  ஈஷ்வரை விட்டு விலகி வந்தபோதும் அவனின் நடவடிக்கைகளால் உண்டான பாதிப்பு  அவளுக்குள் கனலாகவே எரிந்து கொண்டிருந்தது.     

 கடைசியாய் அவன் சவாலுக்கு பணயமாய் கேட்டது  தன்னையே என்பதை இந்த நொடியும் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.  யாருக்காகவும் எதற்காகவும் தன் ஆசைகளையும் கனவுகளையும் கூட விட்டுக் கொடுக்காத தன் பிடிவாதம் முதல்முறையாய் அந்த ஈஷ்வரிடம் பொய்த்துப் போய்விடுமோ என்ற எண்ணமே பதற வைக்க முதல்முறையாய் அந்தத் தனிமையை அவள் வெறுத்தாள்.

 அபிமன்யுவிடம் மட்டுமே தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் கைப்பேசியில் பலமுறை விடுத்த அழைப்புகள் பயனற்றதாய் போனது.

திரும்பத் திரும்ப, “நாட் ரீச்சபிள்” என்ற வார்த்தையைக் கேட்டு அலுப்பு உண்டாக அவளின் மனதின் தைரியமும் மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டே வந்தது. சூர்யா பல நேரங்களில் தனிமையையே விரும்புபவள் என்பதால் அவளின் இந்தத் தனிமை யாரின் பார்வைக்கும் வித்தியாசமாய் தோன்றவில்லை.

ரம்யா மட்டும் சூர்யாவை என்ன ஏதென்று வினவிவிட்டு  அவளின் சமாளிப்பை நம்பியும் விட்டாள். உறங்குவதற்காக உடலோ மனமோ முயற்சி செய்யாத போது அந்த இரவு அவளைப் பெரும்பாடுபடுத்தியது.

*****

சூரியனின் ஆதிக்கத்தில் பூமியின் ஜீவராசிகள் எல்லாம் அந்த விடியலை வரவேற்க அவளுக்கு மட்டும் அந்த நொடியும் சூன்யமாகவேத் தோன்றியது.  அப்போதுதான் ரம்யா சூர்யாவிடம், “உன்கிட்ட சொல்லவே மறந்துட்டேன்… அர்ஜுன் அம்மா உன்கிட்ட பேசணுமாம்…” என்றாள்.

ஏன்?” என்று சூர்யா புரியாமல் கேட்க,

ஏன்னு நீயே கேளேன்?” என்று சொல்லித் தன் பேசியில் சுகந்திக்கு அழைத்தாள். சூர்யா அவரிடம் பேச அவளைக் கோவிலுக்கு வந்து சந்திக்கச் சொன்னார். அவர் ஏதோ முக்கியமாகப் பேச அழைக்கிறார் என அவளும் தன் மனவேதனைகளை ஒதுக்கி வைத்து விட்டுப் புறப்பட்டாள்.

கடவுளைப் பக்திகரமாய் பிரார்தித்த சுகந்தி ஆர்வமாய் அவளுக்கும் குங்குமம் இட்டுவிட அபிமன்யுவின் நினைவு அவளை அலைக்கழித்தது. இருவரும் அமர்ந்து கொள்ள சூர்யா என்னவென்று காரணம் அறிந்து கொள்ள எண்ணி, “சொல்லுங்க ஆன்ட்டி… என்ன விஷயம்?” என்றாள்.

அது வந்து சூர்யா” என்று வெகு நேரம் தயங்கி யோசனையில் ஆழ்ந்தார்.

சூர்யா மெலிதானப் புன்னகையோடு, “என்கிட்ட ஏன் தயங்கறீங்க? உங்களுக்கு ஒரு மகள் இருந்தா எப்படி உரிமையோட பேசுவீங்களோ அப்படிப் பேசுங்க” என்றாள்.

சுகந்திக்குக் கண்கள் கலங்கிவிட தவிப்போடு “ஆமாம் மருமகளாக்கிக்கதான் எனக்கு கொடுப்பனை இல்லை… அட்லீஸ்ட் மகள்னு ஒரு உரிமை இருந்தா சந்தோஷம்தான்” என்றார்.

சூர்யா புருவங்கள் முடிச்சிட, “என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல?” என்றார்.

சுகந்தி கொஞ்சம் தெளிவு பெற்றபடி “அர்ஜுன் நீயும் அபியும் விரும்புறீங்கன்னு சொன்னான்… அது உண்மையா?” என்று வினவினார்.

சூர்யாவிற்கு அந்தக் கேள்வி ஈஷ்வரால் ஏற்பட்ட அனுபவங்களை நினைவுப்படுத்த அந்த உண்மையை சொன்னதால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணியவள் பதிலுக்காக காத்திருக்கும் சுகந்தியைப் பார்த்து,

உண்மைதான்…” என்று ஒப்புக் கொண்டாள்.

நீ அப்படி எல்லாம் எதுவும் இல்லன்னு சொல்லி இருந்தா… எனக்கு நிம்மதியா இருந்திருக்கும்… உண்மைன்னு சொல்லி இப்படி என்னை சங்கடத்துக்குள்ளாக்குறியே ம்மா” என்று உரைக்க சூர்யா மௌனமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள்.

மேலும் சுகந்தியே வருத்தமான பாவனையோடு, “நான் உன் நல்லதுக்காக சொல்றேன்… அபிமன்யுவை மறந்திரு… நீங்க இரண்டு பேரும் தேவையில்லாத ஆசையை மனசுல வளர்த்துக்காதீங்க… அது வேண்டாம்” என்றார்.

சூர்யா அதிர்ந்தபடி, “ஏன் இப்படிச் சொல்றீங்க ஆன்ட்டி… நான் ஏதாச்சும் உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி” என்று கேட்க.

சேச்சே அப்படி எல்லாம் இல்ல…” என்றார்.

அப்புறம்”  என்று சூர்யா கூர்மையாய் தன் பார்வையை வீச சுகந்தி ஒருவாறு காரணத்தை உரைத்தாள்.

அபிமன்யுவுக்கும் உனக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லைன்னு”

சூர்யா கலங்காமல், “மனப்பொருத்தத்தை விட ஜாதகப் பொருத்தம் பெருசா” என்று கேட்க,

அப்படி இல்ல சூர்யா… பொருத்தம் இல்லன்னு சொன்னா கூட பரவாயில்லை… பொருந்தவே முடியாத… சேரவே கூடாத ஜாதகம் உங்க இரண்டு பேருதும்னு சொல்லும் போது” என்று வார்த்தைகளை முடிக்க இயலாமல் சுகந்தி நிறுத்திவிட,

சூர்யா தீர்க்கமானப் பார்வையோடு, “நான் இதை ஏத்துக்க மாட்டேன்… இதில எல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை… ” என்றாள்.

சுகந்தி அழுத்தமாய் “அபிமன்யுவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணா  அவனோட உயிருக்கு ஆபத்து வரும்னு சொன்னாலும்… உனக்குப் பரவாயில்ல… அதைப் பத்தி நீ கவலைப்படமாட்ட” என்றார். சூர்யா அடுத்த வார்த்தை பேசவே முடியாமல் சிலையெனவே அமர்ந்திருக்க,

அப்படி எதுவும் நடக்கக் கூடாது… நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாதான் இரண்டு பேரும் நல்லா இருக்க முடியும்…” என்றார்.

சூர்யா வேதனையான பார்வையோடு “பிரிஞ்சு இருக்கணும் ஒகே… ஆனா நல்லா எப்படி இருக்க முடியும்… அதுக்கு வாய்ப்பே இல்லை” என்றாள்.

“….. ” சுகந்தி வாயடைத்துப் போயிருக்க,

சூர்யா ஒரு தாயின் மனநிலையை உணர்ந்து அவர் கைகளைப் பிடித்தபடி, “அபி என்னைக் கல்யாணம் பண்ணிக்காம நீண்டாயுளோட இருப்பார்னா… இருக்கட்டுமே… எனக்கு அதுல சந்தோஷம்தான்… நிச்சயமா… நான் அந்த உத்திரவாதத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும்… ஆனா உங்க பிள்ளையோட சந்தோஷத்துக்கான உத்திரவாதத்தை என்னால கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டவள் புறப்படுவதாக சொல்லி சுகந்தியிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

சுகந்தி மௌனமாய் தலையசைக்க சூர்யா வெளியேறிவிட… அவர்  வந்த காரியம் முடிந்துவிட்ட போதும் அவர் மனம் பாரமாய் அழுத்தியது.

இப்படியே வரிசையாய் சூர்யாவைத் தாக்கிக் கொண்டிருந்த அதிர்ச்சிகள் போதாதென வீட்டிற்கு சென்றதும் அடுத்தப் பிரச்சனை அவளுக்காக ஆயத்தமாயிருந்தது.

error: Content is protected !!