NAA-Full
NAA-Full
“நாங்கலாம் அப்பவே அப்படி. 1 ”
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூரு “கெம்பே கவுடா” விமான நிலையம். பலவகையான மனிதர்களை தனக்குள் இருத்தி வைத்திருந்த அந்த பிரமாண்ட கட்டிடத்தில், அடிப்பகுதியில் ஆர்ப்பரித்தாலும் மேற்பகுதியில் தன்னை அமைதியாக காட்டிக்கொள்ளும் ஆழியை போல மனதுக்குள் பல எண்ணங்கள் படையெடுத்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தார் அஞ்சுகம் பாட்டி. பழுத்த பழம் என்பார்களே அதுபோல தோற்றம், வெள்ளிக்கம்பியாய் மினுமினுத்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, தங்க பிரேமிட்ட மூக்கு கண்ணாடி அதற்குள் இருவிழிகள் எவரையும் துல்லியமாக எடைபோட்டு விடும் தீட்சண்யத்தோடு. எளிமையான காஞ்சி பட்டுடுத்தி ஒரு மகாராணியை போல அமர்ந்திருந்தவரை பார்ப்பவர்கள் நின்று அவரிடம் ஒரு சிறு புன்னகையாவது பூத்து செல்வர்.
ஆம் அவர் மகாராணியாகதான் வாழ்ந்தார் சிறு கவலை கூட இல்லாமல் அவர் கணவர் குமாரபூபதி இருக்கும் வரை.
ஐந்தாண்டுகளுக்கு முன் மகன் பிரபாகர் மருமகள் காஞ்சனாவுடன் நெருங்கிய நண்பரின் இல்ல திருமணத்திற்க்கு சென்ற கணவரை எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் துணியில் சுற்றப்பட்டு பொட்டலமாகதான் கொண்டு வந்தனர். மகன் , மருமகள் நிலமையோ இன்னும் மோசம் சுரண்டிதான் கொண்டுவந்தனர்.
இந்த கோர சம்பவத்தை கேள்விபட்ட பின்னும் தடங்கலில்லாமல் துடித்து கொண்டிருக்கு தன் இதயம் கூட அவருக்கு பாரமாகதான் இருத்தது…கிட்டத்தட்ட மரத்து போன நிலை.இவையனைத்தும் தன் பேரனை காணும் வரை மட்டுமே.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில் தன் MBA மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்தவன் இந்த பேரிழப்பை கேட்டதும் விரைந்து வந்திருந்தான். குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருப்பவனாயிற்றே..அவனை கண்டதும்தான் தன் நிலை உணர்ந்து அவனுக்காக தான் செய்ய வேண்டிய கடமையை எண்ணி தன் துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டார்.
இதோ இப்பொழுது இந்த பயணம் கூட அவனுக்காகதான். அவனை நல்ல மனம் கொண்ட மனிதர்களிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
காரணம் இங்கிருக்கும் குள்ளநரிகூட்டம் பற்றி அவர் நன்கறிவார். பேரனின் மேல் நம்பிக்கையில்லாமல் இல்லை. எத்தனுக்கும் எத்தன் அவன், படிப்பை பாதியில் விட்டு வந்தவன் அதன் பிறகு ” “ஏகேபி” நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றான், அதிலிருந்து இதுவரை ஏற்றம்.. ஏற்றம் ..ஏற்றம் மட்டுமே.
எதற்கும் அஞ்சாதவன்தான். ஆனால் நேர்நின்று தாக்கும் எதிரிகள் அல்லவே இவர்கள்… பாசத்தை கொண்டு பாழாக்க நினைக்கும் குள்ளநரி கூட்டம். இவற்றையெல்லாம் தன் மனதில் போட்டு அலட்டிக்கொண்டிருந்தவர் கண்களில் மெல்லிய கலக்கம் , சிறு தேடல் என நுழைவாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.
இன்னும் அரைமணி நேரத்தில் உள்ளே செல்ல அறிவிப்பு வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அட்டகாசமாய் உள்ளே நுழைந்தான் அவன். ஆறடி ஓரங்குல உயர ஆணழகன், புலியின் வேட்டைப் பார்வையை ஒத்த கூர்மையான விழிகள் தன் தேடலை தொடங்க, ஆழ்கடலின் நீல வண்ணத்தில் டீசர்ட் அணிந்திருந்தவன் தன் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வலது கையை நுழைத்தவாறு மாடல் போல அம்சமாய் இருந்தான். பரந்து விரிந்த “ஏகேபி” நிறுவனத்தின் வாரிசு “கௌதம் பிரபாகர்”.
அந்த கோர விபத்திற்க்கு பிறகு எஞ்சியிருக்கும் தன் ஒரே உறவான பாட்டியின் மீது இன்னும் அதிக பாசம் அவனுக்கு.இந்த உலகில் அவன் பணிவது என்றால் அது அவர் ஒருத்தருக்கு மட்டுமே. மற்றபடி அவன் தாத்தாவை போல அனைவருக்கும் சிம்மசொப்பனம்.
இதோ இந்த பயணத்திற்க்கு ஒப்புக்கொண்டு வருவது கூட அவர் வருத்தப்படகூடாது என்ற ஒரே காரணம் தான். அவர் ஊருக்கு அழைத்த போது வரவே முடியாது என மறுத்திருந்தான்.
இன்று காலை பரபரப்பாக தன் வழக்கமான அலுவல் உடை அணிந்து கையில் விலையுயரந்த கைக்கடிகாரத்தை கட்டியவாறே மாடிப்படிகளை தன் வேக நடையுடன் கடந்து வந்துகொண்டிருந்த பேரனை பார்த்த அஞ்சுகம் பாட்டி அவனின் கம்பீரத்தை கண்டு எப்போதும் போல இம்முறையும் ரசித்து பார்த்திருந்தார்.
அவரின் பார்வையை உணர்ந்தவனாக மெல்லிய புன்னகையுடனே இறங்கி வந்தான். அவன் அருகில் வரவும் தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பி விட்டார். இதை அறிந்தவன் இன்னும் அதிகமாக புன்னகைத்தவாறே
” குட் மார்னிங் அஞ்சு டார்லிங்”
அவர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவர் தாடையை பற்றி திருப்பியவன்
“டார்லிங் சாப்டாச்சா”
என சிறு குழந்தையை கொஞ்சுவது போல பேச, அவன் கையை தட்டிவிட்டவர் எழுந்து தன் அறைக்கு செல்ல முயல, அவருக்கு முன் சென்று தடுத்தவாறு நின்றவன்
“டார்லிங் இது சரியில்ல, நீங்கதான் என்னை தனியா விட்டு ஊருக்கு போறீங்க.. நியாயமா பார்த்தா நான்தான் இப்படி கோவிச்சுக்கனும்”
என்று அவரை மாதிரியே முகத்தை உர்ரென்று வைக்க அதை பார்த்த அஞ்சுகம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
அவன் கன்னத்தை பிடித்து இழுத்தவர் “படவா! உன்கிட்ட கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க முடியுதா?” என சலித்து கொண்டவரிடம்.
“ம்ம் .. இப்பதான் என்னோட டார்லிங் மாதிரி இருக்கீங்க. எதுக்கு இந்த கோபம் உங்க அண்ணன் வீட்டுக்கு போறீங்க.. அங்க விசேசத்துல கலந்துகிட்டு பத்து நாள்ள இங்க வரப்போறீங்க அப்பறம் என்ன? முகத்தை அண்டார்டிகா வரை நீட்டி வச்சிருக்கீங்க…”
அதத்தான் நானும் சொல்றேன் கண்ணா நீயும் என்கூட வாடா! இங்க தனியாதான இருப்ப, அங்க தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அம்மு, அரசு இவங்கலாம் இருக்காங்க அவங்களை பார்த்தால் உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.
“நான் அங்க வந்துட்டா இங்க பிஸ்னஸ யாரு பாத்துக்குவாங்க அஞ்சு, சுந்தரேசன் அங்கிள் பாவம் அவரால சமாளிக்க முடியாது.அதுவுமில்லாம நாளைக்கு மறுநாள் முக்கியமான பிஸ்னஸ் டீலிங் இருக்கு..அது மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா பலகோடி ருபாய் லாபம் வரும்…அப்பதான் வொர்க்கர்ஸ்க்கும் போனஸ் கொடுக்க முடியும். அதனால நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்று கூறியவன் ஆபீஸிற்க்கு கிளம்பி விட்டான்.
ஆபீஸிற்க்கு வந்துவிட்டானே ஒழிய அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை…பாட்டியின் சோகமான முகமே ஞாபகம் வந்தது…
தாத்தா இறந்த பின்பு தன் அண்ணன் வீட்டை தவிர எங்கும் சென்றதில்லை… அவருக்கு நேரம் ஒதுக்க தவறுகிறோமோ என்று எண்ணியவனின் மனதில் அவரது கலங்கிய முகமே தெரிய, தன் முடிவை மாற்றி தன் ஜி.எம் சுந்தரேசன் அங்கிளை அழைத்தவன் தான் பத்து நாட்கள் இங்கு இருக்க மாட்டேன் என்றும், கணிணி மூலம் தன் வேலைகளை பார்ப்பதாக கூறி மீதி அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்குமாறு கூறினான்.
தன் பாட்டி செல்லும் விமானத்திலேயே இரண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்தவன் ,
பாட்டிம்மாவிற்க்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிற்க்கு சென்றவன் அவசர அவசரமாக கிளம்பி வந்தான். இங்கு வந்து அவர் எங்கே என தேடியவனின் பார்வை வட்டத்தில் அவர் தென்படவும் இதழ்கடையில் தோன்றிய புன்னகையுடன் தன் பாட்டிம்மாவை நோக்கி வந்தான் கௌதம்.
“ஹாய் அஞ்சு டார்லிங்”
என அவர் அருகில் அமர்ந்தான். அவனை நோக்கி ஒரு அணல் பார்வையை வீசியவர் மீண்டும் வேறு பக்கம் திரும்பி கொண்டார். (கோபமாக இருக்கிறாராம்.)
அதைக் கண்டு முகத்தை பாவமாக வைத்தவன்
“ம்ச்…நானும் உங்ககூட வரலாம்னு நினைச்சேன்…நான் வர்றது புடிக்கல போல…நான் கெளம்பறேன் ”
என்று எழ எத்தனிக்க …அவன் கூறிய செய்தியில் ஆனந்த அதிர்ச்சியடைந்தவர்அவன் கையை பிடித்து
“கௌதம் கண்ணா நீயும் வரியா?”
என ஆர்ப்பரிக்க ..அவரது மகிழ்ச்சியை கண்டு விளையாட்டை கைவிட்டவன்
“ஆமா அஞ்சு டார்லிங்… நானும் வரேன். இப்போ ஹேப்பியா.”
அதில் மகிழ்ந்தவர் அவனை வம்பிழுக்கும் எண்ணத்தோடு, அவனை தான்டி யோசனையாக பார்த்தவர் அவனை மீண்டும் பார்க்க
” இப்ப என்ன?”
“இல்ல உன் ட்ரெஸ் எதுவும் எடுத்து வரலயா? அதான் அங்க வந்து கோவணத்த கட்டிப்பியோன்னு பார்த்தேன்”
” என்ன கோவணமா? அந்த ட்ரெஸ் எங்க கிடைக்கும், அங்க அதான் போட்டுக்கனுமா?”
என பல கேள்விகளை முன்வைக்க அவனை அந்த கோலத்தில் நினைத்து பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.
அவர் சிரிப்பதை வைத்து ஏதோ விவகாரமான விசயம் போல என நினைத்தவன்…வெகு நாளைக்கு பின்னான அவரது புன்னகையில் தானும் மகிழ்ந்தான். அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக தன் பின்னால் வந்த பி.ஏ. ராகேஷ் எங்கே என தேடினான்.
ராகேஷ் இவனின் அந்தரங்க செயலாளர். மூன்று வருடங்களாக அந்த பணியை சீரும், சிறப்புமாக செம்மையான திட்டுகளோடு செய்து வருகிறான். கிட்டத்தட்ட கௌதமின் வயதுதான் அவனுக்கும். அவன் இருக்குமிடம் தானாகவே கலகலப்பாக மாறிவிடும்.
ராகேஷ் எங்கே என தேடிய கௌதமின் கண்களில் வெளிநாட்டு பெண்மனியுடன் கடலை வேகவைத்துக் கொண்டிருந்தவனே பட்டான்.
அதை கண்டு கடுப்பானவன் ஒரு நிமிஷம் அஞ்சு என வேகநடைகளால் அவனிடத்தை நெருங்கியவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் தோள்களில் தட்ட அதை கண்டுகொள்ளாமல் தன் கடலை வறுக்கும் பணியில் மும்முரமாக இருந்தவனை
“ராகேஷ்”
என்ற அழுத்தமான அழைப்பில்
“ஐயோ!! பாஸ்”
என திடுக்கிட்டு திரும்பியவன்.கண்ணில் கொலைவெறியோடு நின்றிருந்த கௌதமை கண்டதும் தன் கடலை வியாபாரத்தை கைவிட்டவனாக,
“பாஸ் இங்க என்ன பண்றீங்க…பாட்டிமா மேடத்தை பாத்துட்டீங்களா? இல்லையா? என்ன பாஸ் இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கீங்க ?
என மூச்சு விடாமல் படபடத்தவனிடம்…அவங்கள பார்த்து அரைமணி நேரமாகுது…. என பல்லைக்கடித்தவன் அவனையும் அங்கிருந்த வெளிநாட்டு பெண்மணியையும் சுட்டிக் காட்டி
“சார் இங்க என்ன பண்றீங்க?”
என கிண்டலாக வினவ சில நொடிகள் திருதிருவென முழித்தவன்
“இன்க்ரெடிபிள் இந்தியா” பாஸ்
“வாட்”
அதான் பாஸ் சுற்றுலாக்கு வர பயணிகளுக்கு நம்மாள முடிந்த உதவிய செய்யனும் …என சுற்றுலாத்துறையை பற்றி ஏதேதோ உளறி கிண்டி கிளறி மூடினான்.
அவன் என்ன கூறினான் என்று அவனை கேட்டால் அவனுக்கே தெரியாது. அவனது பதிலில் பல்லை கடித்துக்கொண்டு
” வாய்ல நல்லா வசந்தமா வருது..பாட்டி இருக்காங்களேன்னு பார்க்கிறேன், இதுக்கும் மேல எதாவது உளறி வச்ச சீட்டு கிழிஞ்சிடும் ஜாக்கிரதை!” என அடிக்குரலில் சீறினான்.அதைக் கேட்டு
” ஐயோ! பாஸ் எனக்கு இருக்கறது ஒரே சீட்டு அதை கிழிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்”
என பின்னால் கையை வைத்து மறைத்தவனை கண்டு கடுப்பானவன்
“டேய் கைய எடுடா முன்ன.. நான் சொன்னது உன் வேலைய.”
“ஸ்ஸப்பா இதுவா” என ஆசுவாசமடைந்தவன்
“அதுக்குதான் நானும் வெய்ட் பண்றேன் வேற எதாவது வேலை கிடைச்சதும் நானே போயிட போறேன், இல்லைனா ராகேஷ் ராகேஷ்னு கத்தியே என் காதை கே காதா மாத்திடுவாறு…” என முணுமுணுத்தவனை கண்டு
“அங்க என்ன சத்தம் ”
“நோ..பாஸ் இனிமே உங்க பேச்சை தட்டாம கேக்கனும்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்” என பல்லை காட்டியவனிடம்..
“சொல்லு ஆனா செஞ்சிடாத… லக்கேஜ் எங்க மேன்”
“இதோ பாஸ்” என்று இழுத்த வேகத்தில் கௌதமின் காலிலேயே இடிக்க
” ஓ.. காட் “என காலை பிடித்தவன் அவனை முறைக்க, அவனது முறைப்பில் பயந்தவன் “பாட்டிமா” என்றவாறு அஞ்சுகம் பாட்டியை நோக்கி சென்றான்.
அஞ்சுகம் பாட்டி ராகேஷை தன் சொந்த பேரனாகவே பாசமாக நடத்துவார். யாருமில்லாத அவனும் இந்த இரு கிளிகளின் கூட்டில் சேர்ந்து கொண்டான்.
அதனால் தான் இந்த பயணத்தில் அவனையும் இனைத்து கொண்டான் கௌதம். இதுவரை அவன் செய்த சேட்டைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர் அவன் அருகில் வரவும்
“வாப்பா ராகேஷ் ..எங்க இப்பலாம் வீட்டு பக்கம் வரவே மாட்டிக்கற” அன நலம் விசாரிக்க
“என்ன பண்றது பாட்டிமா, என் பாஸ் அப்ப்படி..அதான் நான் இப்ப்படி” என சோகமாக கூறியவனின் காதை பிடித்து திருகியவர்
“படவா என் பேரனை பற்றி என்கிட்டயே கிண்டல் பன்றயா!!”
“ஆஆஆ…விடுங்க பாட்டிமா வலிக்குது. ”
என அஞ்சுகம் பாட்டியின் சிரிப்போடும், ராகேஷ் அவரிடம் வம்பிழுத்துக்கொண்டும், கௌதமிடம் திட்டுகளை வாங்கி கொண்டும் அந்த விமான பயணம் இனிதே தொடங்கியது.
நாங்௧லாம் அப்பவே அப்படி 2
இருள் சூழ்ந்த அதிகாலை வேளையில் அந்த அலுமினிய இயந்திர பறவை கோயமுத்தூரை வந்தடைந்தது. முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து மூவரும் வெளியில் வர மேலும் அரைமணி நேரம் கடந்திருந்தது.
அழைத்து செல்ல யார் வந்துள்ளார்கள் என தேடியவரின் விழிகளில் இந்த வயதிலும் மிடுக்கான தோற்றத்துடன் தன் விழிகளை அங்குமிங்கும் அலைபாய விட்டவாறு நின்றிருந்த அண்ணனை கண்டதும் சிறுபிள்ளையென குதூகலித்தவாறு…
“கௌதம் அதோ அண்ணா”
என கூறியவாறு இந்த தள்ளாத வயதிலும் பாய்ந்து சென்ற அவரை
“டார்லிங் மெதுவா”
“அம்மாடி பார்த்துடா”
“அத்தை கவனம்”
என பல குரல்கள் தடுத்தாலும் கவனத்தில் கொள்ளாது சென்றவரை விரைந்து வந்து தாங்கினார் “ரத்ன பாண்டியன்” அஞ்சுகம் பாட்டியின் அண்ணன்.
சிறுவயதில் தாய் தந்தையை இழந்து சிறு குழந்தையாய் இருந்தவரை , தாய்க்கு தாயாய் மடிசாய்த்து, தந்தையாய் தாங்கிய தாயுமானவர்.
“என்னம்மா பார்த்து வரக்கூடாது…இப்படிதான் ஓடி வரதா?”
என வாஞ்சையாய் தலையை தடவியவாறு கடிந்தவரை,
“எனக்கு என்ன அண்ணா கவலை..என்னை தாங்கி பிடிக்கதான் நீங்க இருக்கீங்களே!” என சிரித்தவரை பார்த்து
“அதான உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”
“வாங்க அத்தை பயணம் நல்லபடியா இருந்ததா?” என விசாரித்த அண்ணன் மகன் வீர பாண்டியிடம்…
“நல்லபடியா இருந்தது வீரா, வீட்டில எல்லாரும் நல்லாயிருக்காங்ளா?” என விசாரித்தவரிடம்
“எல்லாரும் நல்லாயிருக்காங்க அத்தை…நாச்சியாதான் உங்கள கேட்டுகிட்டே இருந்தாங்க”.
“நாச்சியார்” அவர்களின் இளவரசி, பெண் குழந்தைகளை தாயைபோல் மரியாதையாக அழைக்கும் பழக்கம் இன்றளவும் அவ்வீட்டில் உண்டு. அனைவருக்கும் நாச்சியார் என்றால் அஞ்சுகம் பாட்டிக்கு மட்டும் அவள் “அம்மு. ”
சுற்றும் முற்றும் தேடிவிட்டு “அம்மு இங்க வரலயா வீரா?” அவருக்கு தெரியும் அவர் எப்போது , எந்த நேரத்தில் வந்தாலும் அம்முதான் அழைத்து செல்ல வருவாள் , அதனால் இன்றும் வந்துள்ளாளா என வினவியவரிடம்
“அத்தை மறந்துட்டீங்களா! இன்று வெள்ளிக்கிழமை ”
“அட ஆமாப்பா நினைவு இல்ல…சரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்.”
அப்போது ராகேஷ், தங்களது பயண பொதிகளை இழுத்து வந்தவாறே கௌதமிடம்
“பாஸ் அங்க நெப்போலியனுக்கு கசின் மாதிரி உயரமா இருக்காரே அவர்தான் உங்க தாத்தாவா?” என கேட்டவனை முறைத்து பார்த்து..
“பெட்டர் இதை நீ அவர்கிட்டயே கேக்கலாம்! என்ன கேக்கலாமா?” என தன் ஒற்றை புருவத்தை தூக்கி வினவியவனிடம்
“ஆஹா சாட்டர்ன் நாக்குல பட்டறைய போடறாறே!!! அவர விரட்டி விடுடா ராக்கேஸூ” என மனதில் நினைத்தவன் கப்சிப் என வாயை மூடிக்கொண்டான் ….
அவர்கள் அருகில் வந்த கௌதம் தன் பாட்டியை முறைக்கவும் தவறவில்லை. தோற்றத்தில் தன் தாத்தாவை போல இருந்த கௌதமை கண்டதும் ரத்ன பாண்டி
“வாப்பா கௌதம் , உன்னை பார்த்து எத்தன வருடங்களாயிடுச்சு, அப்படியே குமரன பார்த்த மாதிரியே இருக்கு ..” எனகூறி அணைத்துக்கொண்டவரை தானும் அணைத்தவன்…
“ஐ ம் ஃபைன் தாத்தா…வயசானாலும் உங்க கம்பீரம் மட்டும் குறையவே இல்ல,அண்ட் மாமா யூ டூ, எப்படி இருக்கீங்க” என அவரை அணைத்தவனை தானும் அணைத்தவர்
“நாங்க நல்லாயிருக்கோம் “அப்புப்பா” நீங்கதான் நெடுநெடுன்னு வளர்ந்து ராஜாவாட்டம் அம்சமா இருக்கீங்க” என பெருமையாய் பார்த்தவரை
“ஆஹா உங்கள விடவா” என அவரிடம் சற்று நேரம் அலவலாவினான்.
ராகேஷும் பாட்டிமாவை முறைத்துக் கொண்டே நிற்க, முறைப்பிற்க்கான காரணம் அறிந்தவர் கண்களால் இறைஞ்சியவாறு… ராகேஷை அருகில் இழுத்தவர்
“அண்ணா இ்வன் ராகேஷ் என்னோட பேரன் ” என அறிமுகப்படுத்த,
அவர் இப்படி அறிமுகப்படுத்துவார் என எண்ணியிராதவன் அவரின் இந்த அன்பில் நெகிழ்ந்தான் என்றால்,
“வாப்பா ராகேஷ் எப்படி இருக்க?” கேட்டவாறே அவனை அணைத்துக் கொண்டார் ரத்ன பாண்டியை கண்கலங்க தானும் அவரை அணைத்துக் கொண்டவன். “தேங்க்ஸ் தாத்தா” என்க.
அவன் வெகுவாக நெகிழ்ந்திருப்பது தெரிந்து அவனது தோளில் ஆறுதலாக தட்டிய கௌதம் மெல்லமாக அவன் காதருகில்
“டேய் அவரு தாத்தாடா உன் லவ்வர் இல்ல” என கிண்டல் செய்ய தன்னை கட்டுபடுத்தியவன்,
தாத்தாவை விட்டு கௌதமை அணைத்து “அவரை மட்டுமில்ல உங்களையும் கட்டிபிடிப்பேன், இப்படி கிஸ்ஸும் பண்ணுவேன்” என கன்னத்தில் முத்தமிட…
“டேய் … ச்சீ …ச்சீ என்னடா பண்ற” என அவனை மொத்த துவங்க” தாத்தா காப்பாத்துங்க” என அவரின் பின்னால் சென்று ஒளிய இவனும் விடாமல் துரத்தினான்.
இவர்களது விளையாட்டை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
“அடடா போதும் வாங்க கிளம்பலாம்”என்று அழைக்க ஐவரையும் ஏற்றிக்கொண்ட அந்த “இன்னோவா” கார் பூஞ்சோலையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
மற்றவர்கள் சலசலத்தபடி வர கௌதம் அதிகாலை நேர தென்றலை அனுபவித்தபடி அமைதியாய் வந்தான். ஏதோ ஒரு அழுத்தம் நீங்கியது போல, தன் இடத்தில் சேர்ந்தது போல ஒரு ஆசுவாசம் கண்களை மூடி அந்த அனுபவத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
ஒன்றரை மணி நேரத்தில் அந்த “இன்னோவா” கார் ஒரு மாளிகையின் முன் நின்றது…நடுவில் ஶ்ரீ கிருஷ்னரின் சிலை வீற்றிருக்க.. அவர் முன் நீர்த்தடாகம் ஒன்று அதில் அல்லிகளும், தாமரைகளும் அலங்கரிக்க, வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன.
அதன் இருபுறங்களிலும் சாலை , இரண்டும் சேரும் இடம் மாளிகையின் முன்புறம். இதை பார்த்ததும் ராகேஷிற்க்கு “வாவ்” என்றுதான் தோன்றியது….
பெங்களூரூ பங்களாவும் பெரியதுதான், ஆனால் இது “கிளாசிக் பியூட்டி” என்பார்களே அந்த வகையை சார்ந்தது.
“ராகேஷ் இறங்குப்பா” பாட்டியின் குரலில் நினைவு வந்தவன் கீழே இறங்க, “வாம்மா” ” வாங்கப்பா” என ரத்ன பாண்டி உள்ளே அழைக்க,
” அங்கயே நில்லுங்க” எனும் குரல் அவர்களை தடுத்தது. அப்போது ஆரத்தி தட்டுடன் வெளிப்பட்டார் “காமாட்சி” உடன் அவரது மருமகளான தெய்வானையுடன்.
ரத்ன பாண்டி, காமாட்சி தம்பதியரக்கு ஒரு மகன் , ஒரு மகள் . மகன் வீரபாண்டி, அவரது மனைவி தெய்வானை. வீரபாண்டி கரடுமுரடான தோற்றம் என்றால், தெய்வானை அழகிய சாந்த ஸ்வரூபி. அவர்களுக்கு “அழகு நாச்சியார்”என்ற மகளும், “கலையரசன் ” என்ற மகனும் உள்ளனர்.
ரத்ன பாண்டி, காமாட்சி தம்பதியரின் மகள் சகுந்தலாவை உள்ளூரிலேயே கனக வேல் என்பவருக்கு கட்டிக்கொடுத்தனர்.அவர்களும் அவ்வூரில் செல்வாக்கான குடும்பமே. ஆனால் சில பிரச்சனைகளால் இன்றளவும் பேச்சுவார்த்தை இல்லை. கனக வேல், சகுந்தலா தம்பதியினர்க்கு வேலன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர்.
ஆரத்தி தட்டுடன் வந்த காமாட்சி, “வாம்மா அஞ்சு” “வாங்க பேராண்டிகளா” என அன்புடன் அழைத்தவர் “சரி..சரி மூனு பேரும் நில்லுங்க” அவர்கள் நின்றதும் மூவருக்கும் ஆரத்தி எடுத்தார்.
“கோதை இதை கொண்டு போய் வீட்டுக்கு வெளிய ஊத்திட்டு வா” என வேலைக்கார பெண்ணை பனித்தவர்,
“எப்படி இருக்க அஞ்சு” என அவரை அணைத்துக் கொண்டார். “நான் நல்லாயிருக்கேன் அண்ணி” எனவும்.
“முதல்ல உள்ள கூட்டிட்டு போம்மா” என ரத்ன பாண்டி கூற… “சரிங்க” என்றவர், “வாங்க..எல்லாரும் உள்ள வாங்க” என அஞ்சுகத்தின் கைபிடித்து உள்ளே அழைத்து சென்றார்.
“ரங்கா பெட்டியெல்லாம் உள்ள எடுத்து வை” என வேலையாளை ஏவிவிட்டு தந்தை மகன் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
கௌதம் சுற்றிலும் பார்வையை சுழல விட்டவாரே மெதுவாய் உள்ளே நுழைந்தான். உடன் ராகேஷும். அப்போது உள்ளிருந்து ஒரு குரல், தேனை விட தித்திப்பது எதுவென்றால் இந்த குரலை கூறலாம். அவ்வளவு இனிமையான குரல்.
“ஓம் பூர் புவஸ்வக” எனும் காயத்திரி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு இது போன்ற மந்திரங்கள் எல்லாம் தன் தாய் பாடிய ஞாபகம்… அதன் இனிமையை ரசித்தவாறு எங்கிருந்து கேட்கிறது? என பார்வையை சுழல விட்டான்.
அதோ பூஜையரையில்… “யாராக இருக்கும்?” என யோசித்தவாரே கௌதம் நிற்க”என்ன அப்புப்பா நின்னுட்ட? “என வீரா வினவ.. அதுவரை ஒரு மோனநிலையில் இருந்தவன்,
“இந்த மந்திரம்” என நிறுத்த…
“ஓஹோ..மந்திரமா வெள்ளிகிழமையானா நாச்சியார் இப்படித்தான் காலைல பூஜை பண்ணுவாங்க”
“ஓ…பம்ப்கின்னா?”
“என் பொண்ணுப்பா “அழகு நாச்சியார்” சின்ன வயசுல ஒன்னா விளையாடுவீங்க.. மறந்துட்டீங்களா?” என கேள்வியும் கேட்டு பதிலும் அவரே சொல்லிட…
அவன் தன் நினைவடுக்குகளில் சந்து பொந்தெல்லாம் தேட தொடங்கினான்
“கௌ……கௌ…கௌ..”
“ஏய் பம்ப்கின், என்னை அப்படி கூப்பிடாதே?”
“ஏன்? ஏன் அப்படி கூப்பிடகூடாது.. உன் பேர் கௌ ல தானே ஆரம்பிக்குது அப்ப நீ கௌதான்.
“வேனாம் பம்ப்கின்!!”
“போடா..நீ மட்டும் பம்ப்கின் சொல்ற” என சிலிர்த்துக்கொண்டு செல்லும் கொழுகொழுவென்ற சிறுமி அவன் நினைவுகளில் வந்தாள்.
ஆனால் அவள் முகம் ஞாபகம் இல்லை. இப்போது அதை நினைத்தவன் அந்த “பம்ப்கின்னா” … “வாய்ஸ் சுவீட்டா இருக்கே …ஆள் அப்படியேதான் புசுபுசுன்னு இருப்பாளா? என பல கேள்விகள் படையெடுக்க
“ச்சே என்ன நான் அவள் எப்படி இருந்தா என்ன? ஓவர் எக்சைட்மென்ட் ஆகாதுடா கௌதம் கன்ட்ரோல்…கன்ட்ரோல்” என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டிருக்க கண்கள் மட்டும் பூஜை அறையை விட்டு விலகவில்லை.
பூஜை முடிந்து தீபாராதனை தட்டுடன் வெளிவந்த பெண்ணவளை கண்டவன் தன் மூச்சுக்காற்று வெளியேறுவதற்க்கும் சில வினாடிகள் தடை விதித்தான் போலும்..அவை காற்றுப்பைக்குள்ளேயே தஞ்சமடைந்து விட்டன.
குங்குமப்பூ நிறத்தில், பிறை நெற்றி, வில்லென வளைந்த புருவங்கள், அதன் நடுவில் சூரியனை போல செஞ்சாந்து திலகம், அதற்க்கும் கீழ் இரு காந்த விழிகள், கூரான நாசி, வடிவான இதழ்கள், நீண்ட அழகான கார்கூந்தலை தலைகுளித்து ஈரம் சொட்ட, தாவனிப் பாவாடையில் மெல்லிய புன்னகையுடன் என ஐந்தரையடி உயர அழகுப்பாவையாய் அப்பாவை தோன்றிட கௌதம் சுவாசிக்க மறந்தான். விருந்தாளிகளை வரவேற்றவளின் கண்கள் இவனிடம் சிறிது தேங்கியதோ!
ஒவ்வொருவருக்காய் தீபாராதனை காட்டி ஆசிர்வாதம் வாங்க, தெய்வானை யிடம் வாங்கும் போது “ க்கும் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல” என நொடிக்க அவளது முகம் கனநேரம் சுருங்கி மீண்டும் புன்னகையை பூசிக்கொண்டது. மற்றவர்கள் இது எப்போதும் நடப்பதுதானே என கடந்து விட கௌதமிற்க்குதான் தன் அத்தையின் மேல் கோபம் வந்தது.
“என்ன அத்தை இப்படி பேசிட்டீங்க” என தனது ஆதங்கத்தை வெளியிட, அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் அப்பாவை.
“இதெல்லாம் எப்படி பேசினாலும் திருந்தாத கேசு தம்பி, நீங்க குளிச்சிட்டு வாங்க” எனக்கூற அவள் தன்னுணர்வுகளை மறைக்க போராடுவது தெரிந்தது. அனைவரும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தனர். ஒரு பெருமூச்சுடன் அவன் மௌனமாய் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தான்.
இதையெல்லாம் பார்த்த ராகேஷுக்கோ “ரொம்ப கொடுமை பன்ற அம்மாவா இருப்பாங்களோ? ஆனா யாரும் கண்டுகிட்ட மாதிரியும் தெரியலயே? என்னடா நடக்குது இங்க, பாட்டிமா கூட ஒண்ணும் சொல்லல” என யோசித்தவாறே தனது அறைக்கு சென்றான்.
சிறிது நேரத்தில் ஃப்ரெஷ்ஷாகி வந்தவர்களுக்கு சூடான இட்லி, இடியாப்பம், குழிப்பணியாரம், பூரி அதற்க்கு சைடிஷ்ஷாக பூரி கிழங்கு, தேங்காய் பால், விதவிதமான சட்னிகளும் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தது. இனிப்பிற்க்கு கேசரி செய்திருந்தனர்.
பதினொரு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய அந்த டேபிளில் ரத்ன பாண்டி நடுநாயகமாக அமர, ஒருபுறம் காமாட்சியும், மறுபுறம் அஞ்சுகம் பாட்டியும் அவர் அருகில் ராகேஷ் அமர, மறுபுறம் வீர பாண்டியுடன் அமரந்தான் கௌதம்.
ராகேஷிர்க்கு இது மிகவும் புதிதான சூழல், அதுவும் தெய்வானை இவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற என்றும் இல்லாத அளவிற்க்கு மனது நிறைவாய் உணர்ந்தது.
ஆனால் கௌதமிற்க்கோ கையும், வாயும் அதன் வேலையை பார்த்தாலும் பார்வை முழுதும் அங்கு பரிமாறிக்கொண்டிருந்த “நாச்சியாரின்” மேலேயே இருக்க, அவளோ அமைதியாய் பரிமாறிக்கொண்டிருந்தாள்.
சிறு வயதில் அவ்வளவு சுட்டியாய் அவனிடம் வம்பிழுத்தவளா இவள்? என ஆராய்ச்சியாய் அவளை பார்க்க அப்போது அவளும் இவனை ஓரப் பார்வை பார்க்க, இவன் பார்ப்பது அறிந்ததும் டக்கென தலையை குனிந்து கொண்டாள்…
அதை பார்த்து இவனும் மெலியதாய் புன்னகைத்துக் கொண்டே உண்டான். இவர்கள் உணவு அருந்த அப்போதுதான் எழுந்து குளித்து முடித்து வந்தான் “ கலையரசன்” பணிரெண்டாம் வகுப்பு முடித்து விடுமுறையை அனுபவிப்பவன்.
அஞ்சுகம் பாட்டியை கண்டதும் “பாட்டிமா எப்ப வந்தீங்க “ என அவர் தோளில் சலுகையாய் நாடியை வைத்து வினவியவனிடம், “அரசு சாப்பிட விடு, அப்புறம் செல்லம் கொஞ்சலாம்” என
”ம்மா..என்ற சிணுங்கலுடன் அமர போனவன் அப்போதுதான் அங்கிருந்த கௌதமை கண்டதும் “ஹய், அத்தான் நீங்க வரீங்கன்னு பாட்டி சொல்லவே இல்ல” என புகார் படித்தவனை
“ஹேய் நான் வரது கடைசி நிமிஷம் வரை அவங்களுக்கே தெரியாது அரசு … எக்சாம்ஸ் எப்படி பண்ணிருக்க”
“நால்லா பண்ணிருக்கேன் அத்தான்” என்றவன் ராகேஷை கண்டு” இவங்க” என யோசித்தவன் “ ஹான்.. ராகேஷ் அண்ணா… அத்தானோட PA. சாரிண்ணா உங்கள போட்டோலதான் பார்த்திருக்கேன் அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல” எனக் கூற
“ஹேய் அரசு அதனால என்ன மேன் இனி நாம ஃபிரன்ட்ஸ்” “ஓ.கே.” என ரெண்டு பேரும் ஹை-பை அடித்துக்கொண்டனர். இதுதான் கலையரசு அனைவருடனும் எளிதாக பழகிவிடுவான்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலில் அமர “அத்தான் , அண்ணா ரெண்டு பேரும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாளைக்கு நான் உங்கள வெளியில சுத்தி பார்க்க கூட்டிபோறேன், அன்ட் நோ மோர் எக்ஸ்கியூசஸ்” என மிரட்ட பெரியவர்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தநாள் ராகேஷுக்கு அரசுவின் புண்ணியத்திலும், தெய்வானையுடன் அம்மா..அம்மா என நன்றாக ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டும் கழிந்தது.கௌதமிற்கோ கண்கள் தானாக அவள் பக்கம் செல்வதை தடுக்க முடியவில்லை…ஆனால் அவளோ அதற்க்கு மேல் அவனை திரும்பியும் பார்க்கவில்லை… இப்படியே அன்றைய நாள் கண்ணாமூச்சி ஆட்டமாய் கழிய… மறுநாள் விடிந்தது ஆர்ப்பாட்டமாக, கலவரமாக….யாருக்கு ஆர்ப்பாட்டம்? யாருக்கு கலவரம்?
நாங்கலாம் அப்பவே அப்படி 3
“தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க உள்ளாற வந்தா நான் பொல்லாதவேங்க”
என தலைவர் பாடல் காதை பிளக்க அலறியடித்து எழுந்தான் ராகேஷ். மணி எத்தனை என்று பார்க்க அது ஐந்து நாற்பத்தைந்தை காட்டியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டினாலும் போகமாட்டேன் என அது அடம்பிடிக்க வலுக்கட்டாயமாக தண்ணியில் அமுக்கி அதை விரட்டினான்.
“யாருடா அது இந்த வீட்ல இவ்ளோ சத்தமா பாட்டு கேக்கறது. அரசுவா இருக்குமோ? ச்சே..ச்சே இருக்காது..வேற?????
அந்த பொண்ணு ..”டேய்..டேய் அறிவுகெட்டவனே அது அவ்ளோ அமைதியா இருந்துச்சு அந்த பாப்பா அப்படிலாம் பண்ண சான்ஸே இல்ல. “என மனசாட்சி கல்லை கொண்டு அடிக்க…அதுவும் சரிதான் யாரா இருப்பாங்க என்றவாறு தன் அறையை விட்டு வெளியே வர
இந்த சத்தம் தங்களை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல தாத்தா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, காமாட்சி, தெய்வானை இருவரும் சமையலறையில் இருந்தனர்.
சரி அவர்களிடம் விவரம் கேட்போம் என அங்கு சென்றான். “அம்மா…பாட்டி” என மாறிமாறி அழைக்க அவர்களுக்கு கேட்டதை போல தெரியவே இல்லை. அதுசரி இந்த சத்தத்துல எங்க கேக்க போகுது என நினைத்துக்கொண்டவன் தெய்வானையின் தோளை தொட அவரோ பயந்து விருக்கென்று அதிர்ந்து திரும்ப, அங்கு ராகேஷ் இருப்பதை பார்த்ததும் தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தவர்,
” வாப்பா எழுந்துட்டியா? காலைல என்ன சாப்பிடுவ பால், காபி, டீ என்ன வேணும் சொல்லு”
“எனக்கு….”
அவனை நிறுத்துமாறு சைகை செய்தவர் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துவிட்டு
“இப்ப சொல்லுப்பா”
அவரது செயலில் ஆ…வென வாயைப்பிளந்தவன்..
“ஏன்மா இப்படி?” என ஆச்சர்யம் விலகாமல் கேட்க….
“அதை ஏன்பா கேக்கற எல்லாம் நான் பெத்ததுக்காகதான்” அவரது கவலை அவருக்கு…
“யாருமா அரசா?”
“இல்லப்பா அவன் தங்கம் , கலகலப்பா இருப்பானே ஒழிய சூதுவாது இல்லாத புள்ள….நான் பெத்த பெருசுதான் இதுக்கு காரணம்”
“என்ன அவங்களா?” என ஆச்சர்ய மிகுதியில் கத்தியேவிட்டான்.
“அவகளேதான்”
“வெளிய தாத்தா”…. என தடுமாறியவன் “அவர் ஒன்னுமே சொல்லமாட்டாரா?”
“அத அப்பறம் சொல்றேன் ” என சைகை செய்தவர் மீண்டும் என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க, தனது கப்புடன் ஹாலிற்க்கு வந்தான்….
அங்கோ நடுஹாலில் அரசு தூங்கி வழிந்தவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றவன் “அரசு” என தோளில் கைவைக்க “ஐயோ அக்கா ” என கத்தியவனை பார்த்து விருட்டென தானும் இரண்டடி பின்னால் சென்ற ராகேஷ்
“டேய் என்னடா காலங்காத்தால எல்லாரும் இப்படி பயங்காட்டுறீங்க” என அழாத குறையாக புலம்ப..
உடனே தன் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு “ஐயோ! நீங்களா சாரிண்ணா..சாரிண்ணா நான் அக்காவோன்னு நினைச்சேன்.
வாங்க வந்து உட்காருங்க “என தன் பக்கத்தில் இடம் காட்ட இவனோ” குடும்பமே இப்படிதான் சுத்தறாய்ங்களோ? “என எண்ணியவன் ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.
(உஷாராமாம்..ஆனா இவனுக்கு தெரியல சைத்தான் மேல இருந்து மட்டுமில்ல வீட்டுக்கு வெளில இருந்தும் வரும்னு) காபியை ஒரு மிடறு விழுங்கியவன்
“ஆஹா காபின்னா அது தெய்வாம்மா காபிதான் பேஷ்..பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு” என்றவாறே மெதுவாக உறிய தொடங்கினான்.
அப்போது திடீரென்று பாட்டு சத்தம் நிறுத்தப்பட “அண்ணா கவனம் அவங்க வருவாங்க” என அரசு எச்சரிக்கை செய்ய உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில் “ஹா..யாருக்கிட்ட நாங்க சைத்தானயே சைட்ல தூக்கி போடுவோம்…இதெல்லாம் ஜீஜுபி.”
என கெத்தாக சொல்லியவனை ஒரு பாவப்பார்வை பார்த்தான் அரசு.
“இவன் ஏன் நம்மள இப்படி பாவமா பார்க்கறான்..நேத்தும் கூட இப்படிதான் பார்த்து வச்சான் என்னன்னு கேக்கனும்..ஆனா முதல்ல காபிய குடிப்போம்” என வாயில் வைக்க “தல” என திடீரென்று பல குரல்கள் கத்தும் சத்தம் வீட்டினுள் கேட்க குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே வெளியில் துப்பிவிட்டான்.
நல்லவேளை கப்பை கீழே போடவில்லை. இந்த வீட்டுல நிம்மதியா காபி கூட குடிக்க விடமாட்டிங்கறாங்களே என வெளிப்படையாகவே புலம்பியவன் இம்முறை யாரென பார்க்க அங்கே சைஸ் வாரியாக பத்து, எட்டு, ஆறு ,நான்கு வயதுகளில் நான்கு குட்டிகள் இருக்க…இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் மேலே உள்ள அறைக்கு ஓடினர்.
“இந்த அவதார் குட்டிங்க யாருடா?” என மனதில் நினைப்பதாய் வெளியே பேசிவிட்டான்.
அவன் வாயை அவசரமாக பொத்தியவன் அருகில் இருந்த அறைக்கு அவனை இழுத்துச் சென்றான்.
“டேய்..டேய் அரசு என்னடா பன்ற?”
“அட வாங்கண்ணா முதல் நாளே பூஜை வாங்க அவ்வளவு அவசரமா?” அறையினுள் இழுத்துச் சென்றவன் கதவை கொஞ்சமாக திறந்து வைத்தவாறே “இப்ப நடக்கறத வேடிக்கை மட்டும் பாருங்க” “இதென்னடா மந்திர குகை மாதிரியே இப்படி பயங்காட்டுறான்!!! சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு” என்று எண்ணியவாறு அவனும் எட்டிபார்த்திருக்க..
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். கண்களில் கலர் கலராய் சன் கிளாசுடன் அவர்களின் பின்னால் அழகு நாச்சியார் நிற கிளிப்பச்சை நிற பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், ரோஜா நிற தாவணி அணிந்து, தலைவாரி அடியில் குஞ்சம் வைத்து பின்னி தலை நிறைய குண்டுமல்லி பூ வைத்து, அஞ்சனம் பூசிய மைவிழிகளை மறைத்தவாறு கருப்பு நிற சன் கிளாஸ், பின்னலிட்ட ஜடையை முன்னால் விட்டு ஆட்டியவாறு நடந்து வர உள்ளிருந்து ராகேஷ் ஆவென பார்த்திருந்தான்.
நேற்று பார்த்த பெண்ணா இவள்..இன்றைய அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை போல.ஒய்யாரமாக நடந்து வந்தவள், ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் காலிட்டு அமர , மற்ற நால்வரும் அவளின் பின்னால். சுற்றி ஒருமுறை நோட்டம் விட்டவள் முகம் ஒரு கனம் சுருங்கி எதையோ யோசித்து பின் தெளிந்தது.
“அம்மா”
“ம்மா”
“மா”
“தாயே தெய்வா” என இடைவிடாது கத்திக்கொண்டிருக்க…
“என்னடி”
“தாயே குரல் மட்டும் வருது உன் திருமுகத்தை ஒருமுகமா காட்டம்மா”
“எனக்கு வேலை நிறைய இருக்கு என்னன்னு சொல்லு” குரல் காரமாகவே வர,
“உன் கையால காபி போட்டு கொடும்மா” “அப்படியே என்னோட தளபதிகளுக்கும் ”
“என்னடா காபி ஓகே வா”
“ஓகே தல”
“அண்ணா இவனுங்க பேர் தெரியுமா?
” என்ன என்பதை போல ராகேஷ் பார்க்க…. அதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி விரைப்பா நிக்கறானே அவன் “நண்டு”
அடுத்து எப்படா காபி வரும்னு சமையலறையையே பார்க்கறானே அவன் “சிண்டு” சரியான தீனிக்கோழி.
அதுக்கடுத்து பச்ச மண்ணு மாதிரி பவ்யமா நிக்கறானே அவன் “சுண்டு” சரியான விவகாரம் புடிச்சவன் அவன்கிட்ட ஜாக்கிரதையாஇருக்கனும்,
அந்த கடைக்குட்டி “வண்டு” இப்பதான் இந்த “கொரில்லா கேங்ல ” சேர்ந்திருக்கு.
அறிமுகத்தை முடித்தவன் வெளியே
நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
“ஆபீஸர் சுண்டு , எனி நியூஸ்?”
“இருக்கு தல, அர்ணால்டுக்கும், டாம் க்ரூஸூக்கும் நேத்து சண்டை”
“ஏன்டா?”
“எல்லாம் இடப்பிரச்சனைதான்.
“என்னாது அர்னால்டு.. டாம் க்ரூஸ்ஸா????”
“அண்ணா அதெல்லாம் தாத்தாங்க, இப்படி ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பேர் வச்சிருக்காங்க”
“ஆஹான்”
“ஓ… ஜாக்குலின்க்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு?” பேசிக்கொண்டிருக்கும் போதே தெய்வானை காபியோடு வர, பேச்சு நின்று ஒரு சிக்னல் செய்தாள் அதை புரிந்து கொண்ட நண்டு அவள் கையில் ஒன்றை வைக்க…
சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த தெய்வானையையும் கையையும் மாறி மாறி பார்த்தவள் அடுத்த நொடி அதை தூக்கி எறிந்திருந்தாள். அது ஒரு பொம்மை பல்லி.
ஏதோ தன்மீது விழுந்த பதற்றத்தில் தெய்வானை காபி கப்புகள் அடங்கிய ட்ரேவை கை நழுவ விட அது பொத்தென கீழே விழுந்து அவர் புடவையெல்லாம் காபி சிந்தியது. அதை பார்த்து
“என்னம்மா தெய்வா பார்த்து வரக்கூடாது” என நக்கலடித்து “எங்களுக்கு காபி வேணாம், நான் போய் அஞ்சு குட்டிய பார்த்துட்டு வரேன்” என்றவள் அவர் முறைப்பதையும் பொருட்படுத்தாது
“டேய் பசங்களா நீங்க சாப்பிட்டு வாங்க அதுக்குள்ள நானும் வந்துடுவேன்” என்று சொல்லி செல்ல அவர்கள் சிட்டாய் பறந்துவிட்டனர்.
இங்கேயே சாப்பிட சொன்னால் கேட்க மாட்டார்கள். தெய்வானையின் முறைப்பிற்க்கு பயந்தே ஓடிவிடுவர். அவருக்கு தெரியாதா தான் நேற்று பேசியதன் எதிரொளி என்று… ஒரு பெருமூச்சுடன் சுத்தம் செய்ய வேலையாளை ஏவிவிட்டு தன் அறைக்கு சென்றார், உடை மாற்றத்தான்.
இதுதான் நாச்சியார் அவளுக்கு எது கிடைக்கிறதோ அதை இருமடங்காக கொடுக்கும் எண்ணம் உடையவள். அவளை போல அரவணைக்கவும் ஆளில்லை, வம்பு செய்யவும் ஆளில்லை. ஆனால் அதெல்லாம் செயலை செய்யும் வரை மட்டுமே. அதற்கு பின் அதையும் மறந்துவிடுவாள். வஞ்சம் வைத்து பழிவாங்கும் நல்ல பாம்பின் ரகமல்ல, ஆனால் தன்னை தீண்டியவரை தீண்டாமல் விடாத தேளின் ரகம்.
ஊருக்கு செல்ல பிள்ளை. பல இடங்களில் இவளே பிரதானம். இவள் சொல்லுக்கு அப்படி ஒரு மரியாதை இந்த வயதிலேயே. வயதுக்கும் மரியாதைக்கும் சம்மந்தம் ஏது , செய்யும் செயலே பேசும். ஆனால் எந்த இடத்திலும் குடும்பத்தை தலைகுனிய விட்டதில்லை. அதிலும் பொது இடங்களில் “நாச்சியாரின் அம்மா வழிவிடுங்கப்பா” என்று கூறும் அளவிற்க்கு ஊருக்குள் பெயர். இத்தனைக்கும் ரத்ன பாண்டிதான் பஞ்சாயத்து தலைவரும் கூட. இந்த வெள்ளிக்கிழமை வனவாசம் கூட குடும்பத்திற்காகதான். ஆம் வனவாசம்தான். வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் அடக்கமாய் வலம் வருவது. இதுவும் அவள் நினைப்பதால் மட்டுமே. இல்லையென்றால் இல்லை மட்டும்தான் அவளிடம். வளையாத இரும்பு ஆனால் பாசம் என்னும் நெருப்பினால் மட்டுமே வளைக்க முடியும் இரும்பு.
அங்கு பாட்டி தனது காதில் பஞ்சை வைத்தவாறு தூங்கிக்கொண்டிருக்க அவர் நெற்றியில் முத்தமிட்டு
“அஞ்சு பேபி” என அவரை அணைத்து கொண்டாள். உறக்கம் கலைந்தவர்
“வாடா அம்மு, நல்லா தூங்கிட்டேன் போல” அவர் எழுவதற்க்கு உதவி செய்தவள்
“அதனால என்ன அஞ்சு பேபி, வாங்க கஞ்சி குடிப்பீங்களாம்”
“தோ , வரேன்டா” அவர் குளித்துவிட்டு வரவும் அவரை அழைத்து சென்று அவருக்கு வேண்டியதை கவனித்தாள். காமாட்சியும் அங்கே இருக்க இருவரும் பேசிக்கொண்டே தங்களது வேலையை கவனித்தனர்.
இந்த ராகேஷ் அண்ணா எங்க? ” என்று எண்ணியவள்
“ராகேஷ் அண்ணா” என்று சத்தமாக அழைக்க அப்போதுதான் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தவன் இவளது குரல் கேட்க,
“இவங்க எதுக்கு இப்ப கூப்பிடறாங்க, நாம எதுவும் செய்யலயே… கடவுளே அப்படியே எதாவது செஞ்சிருந்தாலும் என்னை காப்பாத்தி விட்றுங்க..உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும். ” என்று நிமிடத்தில் வேண்டுதலை வைத்தவன் வேகமாக வெளியே வந்தான்.
“வாங்கண்ணா காபி குடிப்பீங்க”
“இல்லைங்க நான் குடிச்சிட்டேன்” அவன் படபடப்பாய் சொல்ல…அவனை கூர்ந்து பார்த்தவள் பயந்துட்டாரு போல என புருவத்தை நீவியவாறு யோசித்தவள்
“பயப்படாதீங்கன்னா தப்பு பண்ணாதவரை ஒண்ணும் பண்ண மாட்டேன் ” என்று சொன்னாளே பார்க்கலாம்.
“இல்லைங்க நான் இனி தப்புங்கற வார்த்தைய பத்தி கூட யோசிக்க மாட்டேன்.” இன்னும் படபடப்பாய்கூற கண்டவள்,
“அண்ணா!”
“அப்படி கூப்பிடலாம்தானே” அவள் அப்படி கேட்டதில் மகிழ்ந்தவன்
“கூப்பிடுமா தங்கச்சி” என உடனடியாக சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டான்.
“சரிண்ணா அப்ப என்னை நீங்க , வாங்கன்னு கூப்பிடகூடாது, நீ, வா, போன்னுதான் கூப்பிடனும் சரியா” என விகல்பமில்லாமல் சிரித்தவளை கண்டவன் யாருமில்லாமல் இருந்தவனுக்கு இப்படி பாசத்தை கொட்டும் குடும்பம் கிடைக்க வேண்டாம் என்றா சொல்லுவான்.
“சரிம்மா” என்று சந்தோசமாய் தலையாட்டினான்.
“என்ன ராகேஷ் என்ன சொல்றா உன் தங்கச்சி” என்றவாறு கௌதம் அங்கு வந்து சேர்ந்தான். உடன் கலையரசுவும் வந்துவிட்டிருந்தான்.
கௌதமின் பார்வை முழுதும் நாச்சியாரின் மீதே “இவ்வளவு பண்ணுவியா நீ? இன்னும் மாறவேயில்லை” என்பதாய் இருந்தது அவன் பார்வை.
அதிகாலை எப்போதும் போல் ஐந்து பதினைந்துக்கு எழுந்தவன் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே வர, வீராவும் வயலுக்கு செல்ல வேண்டி அப்போதே கிளம்பியிருக்க தெய்வானையும் அவருடன்.
“என்னப்பா கௌதம் அதுக்குள்ள முழிச்சிட்ட?” என்று கேட்க
“நார்மலி இந்நேரத்துக்கே முழிச்சிடுவேன் மாமா அதான், நீங்க இந்நேரத்துக்கே கிளம்பிட்டீங்க?”
“வயல்ல இன்னைக்கு வேலை செய்யஆளுங்க வருவாங்கப்பா இப்ப போனாதான் சரியா இருக்கும்”
“சரி மாமா அப்பநானும்வரேன்” வரேன் அத்தை, என்றவன் அவருடன் கிளம்பி சென்றான். அதிகாலை நேர சுத்தமான காற்றை சுவாசித்தவாறே அவருடன் நடந்து சென்றவனை எதிர்கொண்டவர்கள் அனைவரும் “வாங்க தம்பி” என்று அவனிடம் நலம் விசாரித்து பேசி செல்ல அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டே அவர்களின் வயல் வரை சென்றவன்,
மீண்டும் திரும்பி வரும்போதுதான் நாச்சியார் மாடியிலிருந்து இறங்கிவருவதை பார்த்தான்.நேற்றே அவளின் அழகில் விழுந்துவிட, இன்று அவளது தோற்றத்தில் மேலும் வீழத்தப்பட்டான்.
ஆனால் அதற்கு பிறகு அவளின் லீலைகளை கண்டதும் “இன்னும் இவ மாறவே இல்ல” என்று நினைத்தவன் அவள் பாட்டியின் அறைக்கு சென்றதும் இவனும் உள்ளே சென்று தயாராகி வந்துவிட்டான்.
இவளோ அவன் இன்னும் பார்வையைமாற்றாமல் தன்னை பார்ப்பதை கண்டு படபடப்பாய் வர வேறு பக்கம் திரும்பி கொண்டாள். இந்த தயக்கம் புதிது, எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர்தான் அவளிடத்தில் , ஆனால் இவனோ மயக்கும் பார்வை பார்த்து வைக்கிறான்.
மங்கையின் நிலை ஆடவனுக்கு தெரியவில்லை…
ஆடவனின் பார்வை மங்கைக்கு புரியவில்லை….
இனி இவர்களின் நிலை ????
நாங்கலாம் அப்பவே அப்படி – 4
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. கௌதம் இங்கிருந்தே தன் அலுவல் வேலைகளை கவனித்துக்கொள்ள, ராகேஷோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல ஊரைச்சுற்றுவதிலேயே பொழுதை கழித்தான்.
மற்ற நேரமாய் இருந்தால் கௌதமிடம் வண்டி வண்டியாய் வசவுகள் வாங்கியிருப்பான்தான்! ஆனால் இப்போது அதை செய்ய இயலா நிலையில் கௌதமால் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பதான் முடிந்தது.
ஒரு நேரம் கலையரசனுடன் என்றால், இன்னொரு நேரம் நம் கொரில்லா கேங்குடன் கழிந்தது. ஆம் இப்போது அவனும் கொரில்லா கேங்கில் அடக்கம். ஆனால் அதில் சேர்வதற்க்குள் பல வீரதீர சாகசங்களை செய்ய வேண்டியதாய் போயிற்று.
அதாவது அவர்களுடன் சேர்ந்து ஓணான் பிடிப்பது, மாங்காய் அடிப்பது, வீட்டிற்குள் கௌதம் குளிக்க சென்றால் அவன் வருவதற்குள் உடுத்த வைத்திருக்கும் உடையில் எதாவது குளறுபடி செய்வது, குளிக்கும் போது தண்ணீரை அடைப்பது இது போன்ற சிலபல நல்ல செயல்கள்.
இவர்கள் செய்யும் கலாட்டாவில் மாட்டிக்கொள்வது என்னவோ நாச்சியார்தான். “அம்மாடி கௌதம் ரூம்ல தண்ணி அடைச்சுகிச்சு போல இந்த வாளிதண்ணிய கொண்டு போய் வச்சிடுடா” என தன் பாட்டி கூறும் போது, சரியென தலையாட்டிவிட்டு எடுத்து செல்வாள்.
அவருக்கு தெரியும் விருந்தாளிகளை உபசரிப்பதில் குறும்புதனத்தை கைவிட்டு பொறுப்பாய் நடந்துகொள்வாள் என்று. ஆனால் இன்னொன்று அவருக்கு தெரியாதே அவர் இந்த பக்கம் சென்றதும் அவள் கண்களில் தோன்றும் கள்ள புன்னகை.
கௌதமிற்கு என்றால் அவள் எதுவும் செய்யகூடியவள். எங்கு எப்படி ஆரம்பித்தது என்றால் அது அவளுக்கே தெரியாது.
ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அவளுக்கு பிடித்தம்தான்,அதீத பிடித்தம். சிறு வயதில் சீண்டி விளையாடிய ஞாபகம், அஞ்சுகத்தின் மூலம் கேள்விபட்ட அவன் ஆளுமைகள், தன் பாட்டியின் மேல் அவன் கொண்ட பாசம் அனைத்தும் கலந்துகட்டி அவளுள் விதைத்த நேசம் இது.
ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டாள். அதற்கு வெட்கம் காரணமல்ல, பிடித்தத்தை அவனே முதலில் கூற வேண்டும் என்ற அவா.
நீ என்ன பெரிய அழகியா! பார்த்தவுடன் அவனும் உன்னை விரும்புவான் என்று எதிர்பார்க்கிறாயோ? என்று எதிர் கேள்விகேட்ட மனசாட்சியை சுடுநீர் ஊற்றி அடக்கியவள், அது அவனது விருப்பம் என் பிடித்தம் என்னோடே! யாருக்கும் தெரிய வேண்டாம். நடப்பது நடக்கட்டும்.
பார்க்காத போதுதான் அப்படியென்றால், இப்போது நேரில் இருக்கும் போதோ! பேச்சு வார்த்தைகள் அவ்வளவாக இருப்பதில்லை, பல நேரங்களில் மௌனத்திலேயே கடந்துவிடும். இதுவும் ஒரு வகை நேசமே, மனதினில் இருத்தி நினைப்பில் வாழ்வது.
அனைவரிடமும் படபட பட்டாசாக பொரிபவள் இவனை கண்டால் மட்டும் புஸ்வானமாக அடங்கிவிடுவாள். அவ்வப்போது அவன் பார்த்து வைக்கும் பார்வையில் மூச்சுக்காற்றுக்கே சிரமம் எனும் போது பேச்சு எங்கிருந்து வரும்? திட்டி பார்த்த மனசாட்சி இது திருந்தாது! என்று அடங்கிவிட இவளது கள்ள சைட்டுகள் தாராளமாக நடைபெற்றது.
இவள் இப்படியென்றால் கௌதமின் நிலை வேறு! இவளை பற்றிய சிறுவயது ஞாபகங்கள் இன்றளவும் உண்டு.
ஏனோ! எந்நேரமும் தன்னிடம் வம்பிழுக்கும் பொசுபொசுவென்று இருக்கும் அந்த குட்டி பெண்ணை அவனால் மறக்க இயலவில்லை. இங்கே வரும்போதே இப்போது எப்படி இருப்பாள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆனால் எப்போது அவளை பார்த்தானோ, மாலை நேர கதிரவனின் இளஞ்சிவப்பு ஒளியை போன்ற நிறத்தில், ஐந்தரை அடி உயரத்தில், கொடியிடையுடன் தாவணி பாவாடையில் பாந்தமாக இருந்தவளை கண்டு அவளா இவள்? என்னும் பாவனைதான்.
என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் வசியம் வைத்தது போல கண்களை அவளிடம் இருந்து திருப்ப முடியவில்லை.
கண்களில் காந்தம்தான் வைத்திருக்கிறாளோ? விழிகள் கொஞ்சம் வித்தியாசம்தான் அவளுக்கு. “செங்கண்” என்பார்களே அதுபோல. அதன் உள் புகுந்து விடலாமா? என்று கூட யோசித்தான்.
“ச்சே என்ன இது இப்படி எல்லாம் யோசிக்கிறேன், ம்ஹும் என்னவோ செய்கிறாள் அவளை பார்க்காதே” என்று எச்சரித்தாலும் பார்த்தே ஆவேன் என்னும் கண்களை திரையிட்டு மறைக்கவா முடியும் அதன் போக்கில் விட்டுவிட்டான்.
அடுத்தநாள் அவள் அடித்த லூட்டிகளை பார்த்தவன் இன்னும் மீளமுடியா சுழலுக்குள் அவள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்தான். அவள் மாறவில்லை. இன்னும் சுவாரசியமாய் விரும்பியே தொலையவும் செய்தான்.
கௌதம் ப்ரபாகர் அழகிய கந்தர்வனை போல தோற்றம்.
அதனால் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இளம் பெண்களின் கண்களும், அதைவிட “இவன் நம் மாப்பிள்ளையாக வந்தால்? ” என்று பெண்ணை பெற்றவர்களின் கண்களும் இவனை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டும் காணாமல் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். அதில் சிறு கர்வம் கூட.
அதற்காக பெண் தோழிகள் இல்லாமல் இல்லை அமெரிக்காவில் படித்த போது பழக்கமானவள் ” ஸ்டெல்லா” அமெரிக்க, இந்திய கலவை. ஆனால் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் கொண்ட தோற்றம். இன்னும் இணைப்பில் இருக்கும் நல்ல தோழிப்பெண்.
ஆனால் நாச்சியாரின் பார்வையோ இவனை ஆர்வமாய் தீண்டியதில்லை (அவனறிந்தவரை) தானாக அவளிடம் செல்ல வேண்டுமா என்ற ஈகோ, எனவேதான் விருப்பம் இருந்தாலும் நானாக கூற கூடாது என்ற எண்ணம். இப்படி இருவரும் போட்டி போட, சொல்லாத காதல் சேராது என்று அறியாமல் போனது யார் குற்றம்?
“ப்பா” ஹாலில் அமர்ந்திருந்த வீரபாண்டியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் நாச்சியார். இரவு உணவு முடிந்து தெய்வானை சமைலறையில் இருக்க, கௌதம் பிஸினஸ் விசயமாக பேச மாடிக்கு சென்றுவிட்டான்.மற்ற அனைவரும் அங்குதான் இருந்தனர்.
“என்னம்மா”
” நாளைக்கு காரும், டிரைவரும், வேணும்பா”
“ஆமா ஊருல அடிக்கற லூட்டி பத்தாதுன்னு காரேறி போய் பம்பரம் விட போறாளாம்!! இந்த கொடுமை இங்கதான் நடக்கும்” என தெய்வானை தன்பாட்டிற்க்கு புலம்ப,
“எடுத்துக்கம்மா.. யார் யார் கெளம்பறீங்க?”
” அதுங்கப்பா ராகேஷ் அண்ணனும் இன்னும் இங்க இருக்கற இடம்மெல்லாம் பாத்ததில்லையாம் அதனால அவரு, நண்டு, சிண்டு, சுண்டு, வண்டு, கலை நீயும் வரியா? என தம்பியை வினவ…
“என்னை கலைன்னு கூப்பிடாதீங்கன்னா கேட்க மாட்டிகங்கறீங்க, பொண்ணு பேர் மாதிரி இருக்கு” என அழாத குறையாக கூற,
“ஏன்டா குட்டி நல்லாதான இருக்கு”
அதெல்லாம் தம்பியின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவள்தான், அவனும் அப்படியே! ஆனால் சீண்டல் குறையாது. அடிதடிகள் அலுக்காது. உடன் பிறப்புகளுடன் போராட்டம் இல்லாத சிறுவயது உண்டா என்ன?”
அத விடுடா, அவகளும் வராங்களா கேளு!”
“யாருக்கா?”
அப்பாவின் மடியில் இருந்து எழுந்து கொண்டாள். பேச்சு தடுமாறியது ,
“அதா…ன்டா கௌ…தம்”
வீரா தன் தந்தையுடன் நிலத்தை அறுவடை பற்றி பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. அஞ்சுகம் பாட்டி மட்டுமே பேத்தியின் நிலஅதிர்வு போன்ற ஒரு நிமிட தடுமாற்றத்தை கண்டு கொண்டார். அது அறிவித்த செய்தி அவருக்கு மகிழ்வை வாரி இறைத்தது.
“ஆண்டவா இந்த விசயத்தை நல்லபடியா முடிச்சு கொடுப்பா” என்றுவேண்டுதலும் வைக்கப்பட்டது.
“அட அத்தான கேட்டீங்களா, அதெல்லாம் நான் கூப்டா வருவாங்க” என பெருமையாக சொல்ல இவளுக்கு காந்தியது. எந்நேரமும் அத்தான்,பொத்தான்னு வால புடிச்சுகிட்டே திரிய வேண்டியது.
ஏன் நீயும் திரிய வேண்டியதுதானே! என மனசாட்சியின் கேள்விக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
காலையில் நான் வந்துட்டேன் என்றவாறே வெப்பத்தை வாரி இறைத்தவாறே கதிரவனும் வந்தான். ராகேஷ், அரசு இருவரும் தயாராக இருக்க, நாச்சியார் கடலின் பல வகையான நீல வண்ணங்களை கொண்ட தாவணி பாவாடையில் கடல் கண்ணியை போல் மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.
கௌதமும் அப்போதுதான் மாடியில் தன் அறையில் இருந்து வெளியே வர, அப்படியே நின்றுவிட்டான்.
அப்சரஸ் போல இருந்தவள் இவன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பாதிபடியிலேயே திரும்பி பார்க்க இதயம் ரேஸ் குதிரையை போல தறிகெட்டு ஓட தொடங்கியது. அதை நிறுத்த கடிவாளம்தான் ஏது? தன் நெஞ்சை நீவியபடி தனிக்க முயன்றான், அந்தோ பரிதாபம் மோசமாக தோல்வியை சந்தித்தான்.
இவன் நின்ற நிலையை பார்த்து எதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று எண்ணியவள் மேலே ஏறி வந்தாள். அருகில் வரவர அவள் சுகந்தம் காற்றில் அவளுக்கு முன் இவனை சேர்ந்தது. அதை ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு சற்று ஆசுவாசமடைவதுபோல் தோன்றியது.
நோயும் அவளே ; மருந்தும் அவளே! மனம் நொடியில் ஒரு ஹைக்கூவை எடுத்து விட உனக்கு முத்திடுச்சுடா! என அவனுக்குள்ளே கூறிக்கொண்டான்.
“என்னாச்சு?”
“ஒன்னுமில்லையே!”
“இல்ல ஏதோ நெஞ்சை புடிச்சிகிட்டு நின்னீங்களே அதான் ..”
“அதான்”
“வலிக்குதோன்னு” கண்களில் சிறு கலவரம், பரபரப்பு. அதை கண்டதும் இவனுக்கு சில்லென்ற உணர்வு.
“ம் ஆமா ஒரு மோகினி அடிச்சிட்டா” மயக்கத்துடன் கூற, அவனது பதிலில் அவனை ஒரு மாதிரி பார்த்தவள் திரும்பி சென்றுவிட,
“அடிப்பாவி ஒன்னும் சொல்லாம போறா! இருடி வைக்கறேன் செக்!”
இவள் சென்றபோதே நான்கு வாண்டுகளும் வந்திருக்க “பார்த்து பத்திரமா போய்ட்டு வரனும்” என்ற அறிவுரையோடு தெய்வானையின் கைவண்ணத்தில் சாப்பாடும் நொறுக்கு தீனிகளும் தயாராக வர காரில் அத்தனையும் ஏற்றினர் அண்ணனும், தம்பியும். அதாங்க ராகேஷும், அரசுவும்.
கௌதம் வந்தவன் கீழே அமர்ந்து விட “என்ன அத்தான் உட்கார்ந்துட்டீங்க? வாங்க போலாம்.” நாச்சியாரை ஒரு பார்வை பார்த்தவன்
“இல்லடா அரசு நான் வரல” உடனே அவளது முகம் சுருங்குவதை கண்டு மனம் ஆனந்தத்தில் துள்ளியது.
“ஏன் பாஸ் வாங்க போலாம்” என ராகேஷும் அழைக்க
“சார்தான் ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதையே மறந்துட்டு உடன்பிறப்புகளோட ஊர்கோலம் போறீங்க, நானும் அப்படி இருக்க முடியுமா ஆபீசர்” என கேட்க இனி அவன் வாயை திறப்பான். இரண்டடுக்கு பாதுகாப்போடு பூட்டிக் கொண்டான்.
பேத்தியின் முகம் வாடியதை பார்த்த அஞ்சுகம் “கௌதம் கண்ணா எந்நேரமும் ஆபீஸ் வேலைதானா போய்ட்டு வாப்பா” என கூற அவரிடமும் ஒருவாறு சமாளித்தவன் சட்டமாக அமர்ந்திருக்க மற்ற இருவரும் வாண்டுகளை அழைத்து சென்று விட்டனர்.
இவள் அழைப்பாளா என அவனும், வந்துவிடேன் என்று அவளும் மனதிற்குள் விண்ணப்பமிட வாயில் வரை சென்றவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து சென்றாள். ஆயிரம் கதைகள் சொன்னது அப்பார்வை. அதன் பொருளை படித்தவன்
” கடவுளே பார்த்தே கொல்றா!ஒன்னும் இல்லாத மாதிரி நடிக்கறா! சீக்கிரமே உன்னை என்கிட்ட வர வைக்கல நான் கௌதம் இல்லடி என் ப்யூட்டி.ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்”
“சரி டார்லிங் இவ்ளோதுரம் நீங்க சொல்றதால நானும் போய்ட்டு வரேன்.”
“பார்த்து போய்ட்டு வா பேராண்டி!”
அதற்குள் ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் ராகேஷ் அமர்ந்திருக்க, அரசுவும, நாச்சியாரும் நடுபகுதியில் அமர்ந்தனர். நான்கு வாண்டுகளும் பின்னால் குதூகலித்தபடி ஏறிக்கொண்டனர்.
கார் கிளம்ப இருந்த சமயம் கௌதம் வந்தான். அவனின் நவீன விலையுயர்ந்த கேமிரா சகிதம். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் காரின் நடுபகுதியில் ஏறி அமர நாச்சியார் ஆனந்தமாய் அதிர்ந்தாள். நொடிக்கும் குறைவான மகிழ்ச்சியை அவள் கண்ணில் கண்டவன் கண்கள் மின்னின.
பாஸ் நீங்க முன்னாடி வாங்க என்று அழைத்தவனிடம் “இல்லை ராகேஷ் இதே கம்ஃபர்டபிளா இருக்கு” என்று மறுத்து விட்டான். அரசுவும், ராகேஷும் பேசியபடி வர, நாச்சியார் வேடிக்கை பார்ப்பதும் சைடில் சைட்டடிப்பதுமாக வர, கௌதம் பின்னால் இருந்த சிறுவர்களிடம் பேச்சு கொடுத்தான்.
“டேய் பசங்களா உங்க பேர் என்ன? ” அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்க தங்களை ஆதி முதல் அந்தம் வரை கூறினர்.
“வீட்ல எப்படி விட்டாங்க உங்கள?”
” ஏன் மாமா அக்காகூடதான வரோம் அதெல்லாம் விட்டுடுவாங்க”
“பார்றா உங்க அக்கா மேல அவ்ளோ நம்பிக்கையா” சைடில் அவளை பார்த்துக் கொண்டே வினவ,
பின்ன எங்க அக்கா யாரு? அவங்க பவரு என்ன? அவங்கள எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா?” இந்த நான்கு வாண்டுகளின் வீடுகளிலும் நாச்சியாருக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது இப்படி அழைத்து செல்வாள்தான். இவள் சமாளித்து விடுவாள் என்பதாலேயே நான்கு வயது வண்டை கூட அவன் அன்னை அனுப்பி விடுவார்.
“டேய் பசங்களா சும்மா இருங்க” அவளுக்கு படபடப்பாய் இருந்தது.
“அவங்கள ஏன் அடக்கற?”
“அதான நம்ம மாமா தானேக்கா”
“அதென்னடா மாமா, ராகேஷ் மட்டும் அண்ணா சொல்றீங்க?”அவன் சாதாரனமாகதான் கேட்டான் இவளுக்குதான் படபடப்பாக வந்தது.
“கௌதமா! நீ அமைதியா வந்தால் தேவல” என எண்ணதான் முடிந்தது. அதற்குள் அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்
“யார்டா உங்களுக்கு சொன்னது என்ன மாமான்னு கூப்பிட சொல்லி?”
“அக்காதான்” உடனே கோரசாக பதில் வந்தது. மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டாள்.
அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான், “ஆனா உங்கக்கா இதுவரை என்னை மாமான்னு கூப்பிட்டதில்லையே!”
“அக்கா ஏன்கா என்ககிட்ட மட்டும் என் மாமான்னு சொன்ன” என்று மாட்டிவிட
“ம்ஹீம் இவனுங்கள அடக்கியே ஆகனும்” வலுக்கட்டாயமாக கோபத்தை பறைசாற்றும் குரலில் “டேய் என்னடா இப்ப, எனக்கு தோன்றப்பதான் கூப்பிட முடியும்! கம்முனு வாங்க இல்லைனா இனி எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேன்” என்றூ கூறி விட அதன்பின் பேசுவார்களா என்ன?
“பாரேன் எப்படி சமாளிக்கறா? எவ்வளவு நாளைக்கு சமாளிப்ப, மாட்டுவ ப்யூட்டி நீ என்கிட்ட வசமா மாட்டுவ அப்ப இருக்கு உனக்கு” என எண்ணி கொண்டவனுக்கு தெரியவில்லை இன்று மாலையே அவளிடம் அரை வாங்குவானென்று!!!!!
நாங்கலாம் அப்பவே அப்படி — 5
“கோயமுத்தூர சுத்தி பார்க்க போறேன்; ஆழியாரில் வீடுகட்ட போறேன். வைதேகி ஃபால்ஸ் வாங்க போறேன். நான் கோவைக்கு ராஜாவாக வாரேன்.”
ராகேஷ் குஷியாக பாடியபடி வர குட்டீஸ் அவனுக்கு கோரஸ் கொடுத்தபடி வந்தனர்.
“ஹா..ஹா.. ஃபால்ஸ் வாங்க போறிங்களா யாரு உங்களுக்கு விக்கறாங்களாம்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்.” என அரசு நக்கலடிக்க,
” போடா இவனே போலி பட்டா ரெடி பண்ணிடலாம்”
“ஹான்..என்று வாயை பிளந்தவன் அப்படியெல்லாம் பண்ண முடியுமா?” அரசு ஆச்சர்யமாய் கேட்க.
“நீ இன்னும் வளரனும் தம்பி, இவ்வளவுஅப்பாவியா இருக்க, பொணத்துக்கே ஆதார் கார்டு அடிக்கறவங்க இருக்க ஊருடா இது. ”
“எப்படிண்ணா இப்படி” அரசு வியந்தபடி வினவ, “முட்டைக்கு முன்னாடி கூ சேர்ந்து” இருக்கவங்க பொறுப்புல இருக்க ஊருல இதெல்லாம் சாத்தியம்தான்.” என்றவாறு நடக்க, நாச்சியார் இவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி வந்தாள்.
கௌதம் தன் புகைப்பட கருவியில் காட்சிகளை பதிவு செய்தபடி பின்னால் மெதுவாக வந்தான். அதில் அனேகம் நாச்சியாரே நிரம்பி இருந்தாள்.
விதவிதமான போஸ்களில் எடுத்து தள்ளியிருந்தான் யாரும் அறியாமல் . காதலித்தால் கள்ளத்தனமும் தானாக வந்துவிடுமோ?
அவர்கள் இப்போது இருப்பது திருமூர்த்தி மலையில். காலை முதல் பரம்பிகுளம் ஆழியாறு அணை சென்று, வருடம் முழுதும் நீர் கொட்டும் வைதேகி நீர்வீழ்ச்சியில் ஆட்டம்போட்டு அங்கேயே மதியம் உண்டுவிட்டு,
ஆனைமலை என பல இடங்களில் சுற்றி விட்டு இப்போது திருமூர்த்தி மலை வந்துள்ளனர். இங்குதான் அனுசுயாதேவி மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றியதாக கூறுவர்.
அங்குள்ள இறைவனை வணங்கிவிட்டு அருவிக்கு வந்தனர். மேலிருந்து கொட்டும் அருவி சிறிது தூரத்தில் பரந்து விரிந்து தேங்கும். கௌதம் அருவியில் நனைய மறுத்து இயற்கைக்கு போட்டியான அழகோடு, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே நீராட்டிக்கொண்டிருந்தவளை வளைத்து வளைத்து படம் எடுத்தான்.
“கௌதமா இது மட்டும் உன் ப்யூட்டிக்கு தெரிஞ்சது நீ காலி மவனே!” என மனம் எக்காளமிட
“அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் குழந்தைங்களதான் எடுத்தேன்னு சமாளிச்சிடுவேனே!”
” இப்படி கவுந்திட்டியேடா” என மனசாட்சி நகைக்க, அதை புறம் தள்ளியவன் காமிரா கண்கள் மூலம் தன்னவளை விழுங்க தொடங்கினான்.
இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு ஒரு ஜோடி கண்கள் நாச்சியாரை வெறித்தபடி பார்த்தன
. அதுவரை குழந்தைகளோடு பாறையில் அமர்ந்து விளையாடியவள், ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி, “இந்த கௌ எங்க” என தேட கௌதம் ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டிருந்தான்.
அது வழுக்கும் பாசிகள் படர்ந்திருக்க மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கீழேயும் கரடுமுரடான பாறைகள் அதிகமாக இருந்தது. விழுந்தால் தலையில் எப்படி அடிபடும் என்று அறுதியிட்டு கூற இயலாது.
அவளுக்கு திக்கென்று இருந்தது “இந்த கௌ ஏன் அங்க போகனும்.”
“அங்க போகாதீங்க அந்த பாறை வழுக்கும்” என இங்கிருந்தவாறு கத்தினாள். அவன் கேட்பதாயில்லை இதோ வந்துவிடுகிறேன் என சைகை செய்தவாறு சென்றான்.
நீருக்கு அடியில் நின்றிருந்த ராகேஷ், அரசு இருவருக்கும் இரைச்சலால் எதுவும் தெரியவில்லை. இவளுக்குதான் படபடப்பாக இருந்தது.சிறுவர்களை போதுமென அழைத்து அவர்களுக்கு தலையை துவட்டியவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தலையை துவட்டி முடித்து உடை மாற்றுமாறு அவர்களை காருக்கு அனுப்பி வைத்து விட்டு ,பிறகு அவனை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.
அவன் ஒரு கட்டத்தில் தடுமாற, இவள் “பார்த்து” என இங்கிருந்தே கத்தினாள்.
அவளை அப்படி பதட்டமாக பார்த்தவனுக்கு சுவாரசியமாக, “இப்பதான் என்னை கண்டுக்கறா, இருடி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்றேன்” என எண்ணி அடுத்த அடி எடுத்து வைத்தவன் பாறை வழுக்கி கீழே நீரில் விழுந்துவிட்டான்.
இவளுக்கு ஒரு நிமிடம் உயிரே உறைந்துவிட்டது. அடுத்த நொடி மின்னலென பாய்ந்திருந்தாள் அவனை நோக்கி.
“கௌதம்” என கத்தியவாறு தலைதெறிக்க ஓடியவளை பார்த்த அரசுவும், ராகேஷும் சத்தத்தில் ஒன்றும் கேட்காமல் என்னவென அறியாமலேயே ஓடி வந்தனர். பிறகுதான் தெரிந்தது கௌதம் விழுந்தது.
“பாஸ்”
“அத்தான்”
என இருவரும் விரைந்து இறங்கி அவனை தூக்கியபடி வெளியே வந்தனர். அவன் உடலில் அசைவுகள் இல்லை.
கீழே அமர்ந்து அவன் தலையை மடிதாங்கியவள் நடுங்கும் விரல்களால் முகத்தை ஆட்டியவாறு “கௌதம், கௌதம்” என அழைக்க பதட்டத்தில் பேச்சே வரவில்லை.
கண்களில் நீர் அருவி போல கொட்டிக்கொண்டே இருந்தது. விழிநீர் அவனை மறைக்க புறங்கையால் கண்ணீரை துடைத்தவாறு முகம் முழுதும் தடவி தடவி பார்த்து “கௌதம், கௌதம் ” என அரற்றிக்கொண்டே இருந்தாள்.
அரசுவும் பதட்டமாகஆராய்ந்தான் எங்கேயும் அடிப்பட்டது போல தெரியவில்லை!
“அக்கா அழாத ஒண்ணுமில்லை தோ எங்கயும் அடிபடலை பாரு”
ராகேஷுக்கும் அதிர்ச்சியே உடன்பிறந்தவனை போல அல்லவா அவன்!
இருப்பினும் விடாமல் அரற்றிக்கொண்டிருந்த இவளை தேற்றும் பொருட்டு “ஆமாம்மா அடி எதுவும் படல, விழுந்த அதிர்ச்சியில மயங்கியிருப்பார்”
ஒரு நிமிடம் ஆசுவாசமடைந்தாலும், அடுத்த நொடி “கடவுளே உள்காயம் மாதிரி பட்டிருந்தா” என மனம் கண்டதையும் தூபம் போட ஆரம்பித்தது.
இவளின் தவிப்புகளை கண்மூடி ரசித்தவன் போதும் விளையாண்டது என கண்களை திறக்க, அவளுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.
“கௌதம் உங்களுக்கு அடிபடலயே ” என பதட்டத்துடன் வினவ மெல்ல எழுந்தவன்
” ஒண்ணுமில்லை”
என தலையை ஆட்ட,
ராகேஷ் “ஊஃப் பாஸ் ஒரு நிமிசம் கொன்னுட்டீங்க” என அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
தானும் அவனை அணைத்துக்கொண்டவன் “டேய் ஒண்ணுமில்லடா” என சமாதானம் செய்ய ஒரு வாறு அவனை விட்டவன்,
பார்த்து இருக்கலாம்ல என்று மீண்டும் தொடங்க ஒருவாறு இவனையும் அரசுவையும் சமாதானப்படுத்தியவன், காமிரா மேலேயே இருக்கிறது அதனை எடுத்துக்கொண்டு, உடைமாற்றி வர சொல்ல, இருவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.
தனிமையில், இன்னும் அவன் மேனியில் எதாவது அடிபட்டிருக்கிறதா என ஆராய்ந்தவளை பார்த்தவன்
“ஹேய் பம்ப்கின் எனக்கு ஒண்ணுமில்லடி” என தன்னை சுற்றி காட்டியவனை பார்த்தவள் தன் கோட்பாடுகளை கலைந்து, அவன் விழுந்ததால் தவிப்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ,
“கௌதம்” என்றவாறு பாய்ந்து அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். முகத்தை பற்றி முகம் முழுதும் முத்தங்களால் அர்ச்சித்தவள், மீண்டும் அணைத்துக்கொண்டு
“எருமமாடே என்னை சாகடிக்கனும்னே இருக்கியா?” என்று சரமாறியாக அவன் முதுகில் மொத்த,
அவனுக்குள் இன்ப அதிர்வு . மெதுவாக மேல் எழும்பிய கை அவளை இறுக்கமாக அணைத்து, காதோரம் மீசை முடிகள் உரச
“ஹேய் பம்ப்கின் என்னடி”
என கிசுகிசுப்பாக வினவ, அவன் நெஞ்சில் மேலும் புதைந்தவாறு, இல்லை என தலையசைக்க அவனுக்கோ கட்டுப்பாடுகளை களையும் உணர்வு. அதை அணைப்பின் இறுக்கத்தில் காட்டினான்.இன்னும் சிறுபிள்ளை போல தேம்பியவளை சமாதானப்படுத்த,
“ஹேய் ப்யூட்டி இங்க பாரு ஒன்னும் ஆகிருக்காதுடி, பாறை இல்லாத நல்ல இடமா பாத்துதான் குதிச்சேன்” என வாயை விட,
அதில் தன் தலையை அவனிலிருந்து பிரித்து புரியாமல் பார்க்க, அவனுக்கு சந்திராஷ்டமம் உச்சத்தில் இருந்ததோ என்னவோ!
“ஆமாண்டி , வேணும்னேதான் குதிச்சேன். அதனாலதான நீ இப்படி இருக்கற” என அவர்களிருக்கும் நிலையை சுட்டிக்காட்ட,
உடனே அவனை விட்டு விலகியவள் கண்ணீரை துடைத்தவாறு “அப்ப வேணும்னேதான் விழுந்தீங்களா?” சீற்றத்தை அடக்கியபடி வினவ,
அவன் “ம்ம்ம்” என்ற நொடி அவள் கை அவன் கன்னத்தில் பதிந்திருந்தது. ஆழமாய் ,அழுத்தமாய் ஐந்து விரல்களின் ரேகை பதியுமளவு.
என்னுடைய பரிதவிப்பு இவனுக்கு விளையாட்டாமா என எண்ணிய நொடி இதனை செய்து விட்டாள்.
அவன் அதிர்ந்தது ஒரு நொடியே, அவனது அகங்காரம் தலைதூக்க அவள் பின்னந்தலைமுடியை வலிக்க பற்றியவன் தன் முகத்திற்க்கு அருகில் கொண்டு வந்து
“என்னடி ஆம்பிளைய கைநீட்டுற பழக்கம்”
வலி இருந்தாலும் அதை காட்டாமல் அவன் கையை தட்டிவிட முயல அதை எளிதாக தடுத்தவன்
“எவ்வளவு தைரியம், என்னை அடிச்ச உன்னை திருப்பி அடிக்க வேணாம்?” எனக் கூறியவன்,
அவள் உணரும் முன் அவள் வயிற்றில் கை வைத்து தள்ளி அருகில் இருந்த பாறையின் மேல் சாய்த்தவன் அவள் இதழ்களை வன்மையாக சிறைபிடித்தான்.
அவள் எதிர்க்க, எதிர்க்க அவள் மேல் தன் மொத்த உடலும் உரச பரவி நின்றவன் அவள் அசையாதவாறு பிடித்திருக்க, இடது கை பின்னந்தலையில் அழுத்தத்தை கூட்டி மேலும் தன் முகத்தோடு அழுத்த, வலது கையோ கொடியிடையை கன்றி போகும் அளவிற்க்கு இறுக்கியது.
முதலில் கோபத்தில் வன்மையை கையிலெடுத்தவன் அவள் மென்மையில் உருகி குழைந்து பின் மென்மையாய் ஒற்றை முத்தத்தில் உயிரை உறிஞ்சும் அரக்கனாய் மாறியிருந்தான்
.
நாங்கலாம் அப்பவே அப்படி– 6
நாளை வெள்ளிக்கிழமை, ரத்னபாண்டி, காமாட்சி தம்பதிகளுக்கு அறுபதாம் ஆண்டு திருமணநாள் விழா . அதற்காக வேண்டிதான் அஞ்சுகம் பாட்டி வந்தது.
மறுநாள் விசேசம் என்பதால் வீடு முழுதும் ஆட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அஞ்சுகம் பாட்டிகூட எதாவது வேலையை மேற்பார்வையிட்டபடி இருந்தார்.
“ஏலேய் முத்தா மண்டபத்துக்கு காய்கறியெல்லாம் போயாச்சா” வீரபாண்டி.
“அதெல்லாம் நம்ம சின்னதம்பி வந்து சரிபார்த்து வாங்கி வச்சுட்டாக அய்யா!”
“யாரு கௌதமா?”
“ஆமாங்கய்யா”
“வாழை மரத்துக்கு சுப்பையாகிட்ட நம்ம தோட்டத்துல வெட்டி வைக்க சொல்லிருக்கேன் அத என்னான்னு பாத்துக்க”
“அய்யா அதையும் சின்னய்யா வெட்டி மண்டபத்துக்கு அனுப்பிட்டாக”
“பொறவு அலங்காரத்துக்கு….”
“அய்யா அதுவும் தான்க, நம்ம சின்ன தம்பி பம்பரமா சொழண்டு எல்லா வேலையும் முடிச்சிபுட்டாக, நீங்க வெசனப்படாதீக”
வீரபாண்டிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஒற்றை ஆளாய் கவனிக்கும் ஆளுமைகாரன். அங்கு அவன் பின்பமே வேறுமாதிரி! ஆனால் இங்கு இவர்களுக்கு இணையாய் இறங்கி வேலை பார்ப்பதில் அவருக்கு அளவில்லா பெருமை, பாருங்கயா இதுதான் எங்க குடும்பம் என்பதாய்.
இவர்களும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல! அங்கே ஏ.சி. அறை என்றால் இங்கே களத்துமேடு; அங்கே நுனிநாக்கு ஆங்கிலம் என்றால், இங்கே மண்மணக்கும் கொங்குதமிழ்; அங்கே ஆடம்பரம் கொண்டு அறியப்படும், இங்கே பாரம்பரியம் கொண்டு அறியப்படும்;
“எல்லா வேலையும் அவகளே பார்த்தா நீங்க என்ன வேலை பார்த்தீங்க?”
தலையை சொறிந்தவாறு “அய்யா அவககூட அந்த ராகேசு தம்பி, நம்ப தம்பி அப்பறம் உதவிக்கு மருதும், கண்ணணும் இருக்காங்க”
“சரிசரி நீ எதுக்கும் மண்டபத்துக்கு போய்ட்டு எல்லாம் சரியா இருக்கான்னு இன்னொரு முறை சரிபார்த்துடு, அப்படியே தம்பி ராத்திரிக்கு அங்கனயே தங்கறாங்களாம் அதனால அவகளுக்கு உடுப்பு தரேன் எடுத்துபோய் கொடுத்துடு” என்றவாறு
“ஆத்தா நாச்சியா!”
அதுவரை தந்தை பேசுவதை ஒருவித சலிப்புத்தன்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள்
” என்னங்கப்பா”
“ஆத்தா அப்படியே பசங்க மூனுபேருக்கும் புது உடுப்பு எடுத்து என்ற அறைல இருக்கு அத எடுத்து வந்து கொடாத்தா”
“ம்.. சரிங்கப்பா”
“ஏன் இங்க வரவே மாட்டானாமா? கௌதமா நாளைக்கு உனக்கு இருக்குடா” என கறுவியவாறு எடுத்துவந்து கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்.
“ஏனுங்க அத்தை இந்த குட்டிக்கு என்னாச்சு நாலுநாளா என்னவோபோல இருக்கா!” பூத்தொடுத்துக்கொண்டிருந்த தெய்வானை காமாட்சியிடம் வினவ,
காமாட்சி “ஏமா மருமவளே,உன்ற மவள வையாம பொழுது போகலயா?” என்றார் சிரிப்புடன்.
“ஏனுங்க அத்த நான் வேணும்னா அவள வையறேன்! நாளை இன்னொரு குடும்பத்தில வாக்கப்பட போற பொண்ணு, அடக்கமா இருக்க வேணாம், சிறுவாண்டுக கூட ஊர சுத்திக்கிட்டு எல்லார்கிட்டயும் வம்பிழுத்துக்கிட்டு இருக்கறா. அவ வெளில போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் மனசு ஒரு நிலைல இருக்க மாட்டிங்குது” என தாயாய் அவர் புலம்ப,
“அதுக்கு என்ன ஆத்தா வயசுப்புள்ள அப்படி கலகலப்பா இருந்தாதான் வீடு, வீடா இருக்கும். அவ இந்த வீட்டு மகாலட்சுமி ஆத்தா. அவளால கௌரவமும், பெருமையும்தான் உண்டே ஒழிய நீ தலைகுனியற மாதிரி எந்த வேலையும் செய்ய மாட்டா!” அது என்னவோ உண்மை என்பதால் தெய்வானை அமைதியாகிவிட்டார்.
அங்கு மண்டபத்தில் கௌதம் பரபரப்பாக வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா என கவனித்துக்கொண்டிருந்தான். முன்று நாளாய் சரியான உறக்கம் இல்லை. அதன் விளைவாக கண்கள் சிவந்து காணப்பட்டன.
பூந்தோரணங்களை கட்டுவதற்க்கு உதவி செய்தவாறு இருந்தவனை “பாஸ்.. பாஸ் ..என்ன நீங்க இந்த வேலையெல்லாம் செய்யறீங்க, இங்க வந்து ஆளே மாறிட்டீங்க. அங்க அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பீங்க, இங்க இவ்வளவு ஜாலியா இருக்கீங்க எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யறீங்க இதுல எந்த பாஸ் நிஜம்”
அவன் புன்னகையோடே “அதெல்லாம் கிளைதான் ராகேஷ், ஆனா வேர் இங்கதான். வேர எப்படி விடமுடியும்? வேர் இல்லைனா கிளையும் தங்காது. இது புரிஞ்சாலே போதும்”
இப்போது பிரம்மிப்பாக பார்ப்பது அவன் முறையாயிற்று. எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிதாக கூறிவிட்டான்.
“ஏக்கமா இருக்கு பாஸ்” அதில் இருந்த பாவனையில் திரும்பி அவனை பார்த்தவன்
“எதுக்கு”
சுற்றி அந்த இடத்தை பார்வையிட்டவாறே நெஞ்சை தடவியவன் “இங்க நான் பிறக்காம போனனேன்னு!!!!!!!” கண்கள் கூட சற்று கலங்கியதோ???
ராகேஷ் அனாதை இல்லத்தில் வளர்ந்தாலும் எதற்கும் கலங்கியவன் இல்லை.பள்ளி படிப்பு வரைதான் ஆசிரமம் பார்த்துக் கொண்டது.
அதன் பிறகு தன் கையே தனக்குதவி என்பதை போல சொந்த முயற்சியால் கல்லூரி படிப்பை முடித்தான். யாரும் இல்லாதவன் என்று தன்னை யாரும் இரக்கமாய் பார்க்க கூடாது என்பதற்காகவே தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்வான்.
ஆனால் இங்கு வந்த பின்பே இவர்களின் அன்பெனும் மழையில் நனைந்து மனித மனங்களின் அன்பிற்காக ஏங்க தொடங்கினான்.
அப்போது அங்கு அரசு செல்வதை பார்த்த கௌதம் “டேய் அரசு இங்க வா” “என்ன அத்தான்?”
“ம்..இந்த சார்ர்ருக்கு யாரும் இல்லைனு ரொம்ப பீலிங்கா இருக்காம் என்னான்னு கேளு”
அவனை திரும்பி முறைத்தவன் “இருங்க அக்காகிட்ட போட்டு குடுக்கறேன்” அதில் ஜெர்க்கானவன்
“தம்பி ராசா அந்த உன்னத வேலையை மட்டும் செஞ்சிடாத புண்ணியமா போகும்”
“ஆ…அது இனிஇப்படி பேசுனீங்க …”
மாட்டேன் மாட்டேன்” என்று கையெடுத்து கும்பிடஇருவருக்கும் சிரிப்பு..
“சிரிங்க சிரிங்க என்னைய வச்சு எல்லாரும் காமெடி ஷோ நடத்தறீங்க!! ” என்று போலியாய் சலித்துக்கொள்ள
“நாங்க நடத்துல நீங்களே நடத்திக்கறீங்க..ஹா..ஹா..” என்று சிரித்த அரசு போய்விட,
“பாஸ் நீங்க போய் கொஞ்ச நேரம் தூங்குங்க நான் இதை பார்த்துக்கறேன்.” அவனுக்கும் ஓய்வு தேவைப்பட்டது அதனால் செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் கூறிவிட்டு அங்குள்ள ஒரு அறையில் முடங்கிவிட்டான்.
உறங்க முயன்றானே ஒழிய உறக்கம் வராது போக்கு காட்டிக் கொண்டே இருந்தது.இரு கைகளையும் தலைக்கு கொடுத்தவாறு படித்திருந்தவன் மனதில் அன்று அருவிக் கரையில் முத்தமிட்டது நினைவில் வந்ததும் முகம் தானாக புன்னகையை பூசிக் கொண்டது.
“வெக்கமா இல்ல அந்த புள்ள உன்னை அடிச்சிருக்கு நீ என்னடான்னா பல்ல காட்டற? ” என மனசாட்சி கேலி பேச,
“பதிலுக்கு நானும்தான அடிச்சேன்” என கெத்தாக கூற ,
“ஹான்..என்ன நீ அடிச்சியா? அடிச்சியா? அடிச்சியா? (எதிரொலி அதாவது எக்கோ) எப்ப நானும் அங்கதான இருந்தேன் ”
“எல்லார் கண்ணுக்கும் அது தெரியாது” மயக்கத்தோடு கூற,
“என் கண்ணுக்கு கூடவா?”
“நானே கண்ண மூடிதான் அடிச்சேன், அதான் என்ன நினைக்கறான்னு தெரியாம மண்டை காயறேன்”
“இவன் பேசறதே புரியல எப்ப அடிச்சான் என யோசித்தவாறே மனசாட்சி இடத்தை காலி செய்தது.
அன்று அருவி கரையில் அவள் மொத்த உயிரையும் ஒற்றை அச்சாரத்தில் உறிஞ்சுபவன் போல அவளை மூச்சுக்காற்றுக்கு தவிக்க விட்டவன் மெதுவாக விடுவித்து அவள் கழுத்தில் இறங்கி பயணிக்க, அதுவரை இருந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினான்.
அதை பயன்படுத்திக்கொண்டவள் அவனை தள்ளி விட்டு ஓடிவிட இவன் மீண்டும் நீருக்குள் விழுந்தான். அவன் மீண்டும் எழுந்து பார்க்கையில் அவள் ஓடிவிட்டிருந்தாள்.
“ச்சே” என்றவாறு தலையை கோதியவன் “நானா இப்படி! அதுவும் பொது இடத்தில, என்னமோ வசியம் பண்றா! கடவுளே கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டா” முன்னதை சத்தமாக சொன்னவன் பின்னதை முணுமுணுத்தவாறு மந்தகாச புன்னகையுடன் அவர்களிருக்கும் இடம் வந்தான்.
அவள் முன்பாகவே காரில் ஏறி கலையரசனையும் அவளுடன் நடுவில் இருத்திக்கொண்டாள். அவனையும் பார்க்கவில்லை, அவனை பார்க்க விடவும் இல்லை.
என்ன நினைக்கிறாள் என்றே தெரியாமல் மண்டை காய்ந்தது அந்த பிஸினஸ் புலிக்கு. மற்றவர் முகத்தை பார்த்தே எண்ணங்களை துல்லியமாக அளவிடும் அவனால் அவளை அறிய முடியவில்லை.எங்கே அவள்தான் முகத்தையே காட்டவில்லையே!
வீட்டிற்குசென்றவள் தன் அறையில் சென்று அடைந்து கொண்டாள். வெளியே வரவும் இல்லை. இவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை விடைபெற, இனியும் அவள் தன் கண்முன் வராவிட்டால் கோபத்தில் எதாவது செய்துவிடுவோம் என எண்ணியவன் திருமணத்திற்க்கான வேலையை எடுத்துக் கொண்டான்.
அலுவலக வேலை, திருமண வேலை என சுழல, அவளது நினைவுகள் சற்று மட்டுபட்டது.
கோபம் என்ற ஒன்றை வெளிப்படையாக காட்டினாலாவது மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஒன்றும் கூறாமல் கண்ணாமூச்சி ஆடுபவளை என்ன செய்ய? யோசித்தவாறே உறங்கிவிட்டிருந்தான்.
அடுத்த நாள் காலை மங்கள நாதத்தோடு திருமண சடங்குகள் ஆரம்பித்தன. வரனும், வதுவும் மனையில் அமர்ந்திருக்க, அஞ்சுகம் பாட்டி முதல் வரிசையில் அமர்ந்து அண்ணா, அண்ணியின் அறுபதாம் திருமணத்தை மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்தார்.
வீரபாண்டி, தெய்வானை, இவர்கள் மேடையில் நின்றிருந்தனர். இளவட்டங்களைதான் அங்கே காணவில்லை.
ராகேஷும், அரசுவும் பந்தி பரிமாறும் இடத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என கவனிக்க, கௌதம் ஏதோ வேலையாய் வெளியே சென்றிருந்தவன் அப்போதுதான் வேகமாக உள்ளே வர, வரவேற்பில் நின்றிருந்தவளை பார்த்ததும் அழகாய் புன்னகை பூத்தான்.
சிவப்பு வண்ண பட்டு புடவை அவளை முழுவதும் பாந்தமாய் தழுவியிருக்க, அதற்குரிய நகைகளோடு வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாய் விசேசத்திற்க்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தாள்.
உடல் சிலிர்த்து அடங்க அன்று மாடிப்படியில் நின்றதை போல இன்றும் அதே உணர்வுகள் தாக்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.
“பேசாம இன்னைக்கே கல்யாணத்த முடிச்சிடலாமா?” மனம் தன்போக்கில் தறிகெட்டு திரிய,
“போடா டேய் மூனுநாள் கழிச்சு இன்னைக்குதான் முகத்தையே பார்க்கற அத கெடுத்துக்காத,
“தம்பி நல்லாருக்கீகளா?”
அப்போதுதான் கனவு கலைந்தவன் போல் “நான் நல்லாயிருக்கேன் சித்தப்பா உள்ள வாங்க முகூர்த்தம் நெருங்கிடுச்சு” வார்த்தை அவரிடம் பார்வை இவளிடம். அவரிடம் பேசியவாறே அவளிருக்குமிடம் வந்தான்.
“என்ன மாமா இப்பதான் வரீங்க?”
“ஒரு வேலை ஆத்தா நாச்சியா அதான் தாமதமாயிடுச்சு”
“ஆகட்டுங்க மாமா உள்ள போவீங்களாம்” அவரை உள்ளே அழைத்து செல்லுமாறு அவனிடம் கண்களிலேயே சைகை காட்டினாள்.
சரியென தானாக தலை ஆட மந்திரித்து விட்டவனை போல அவரை அழைத்து சென்றான். அவன் சென்றதும்தான் இவள் இயல்பாக சுவாசித்தாள்.
“ஆனாலும் அநியாயத்துக்கு அழகா இருக்கடா கௌதமா!” என்று மனம் தன் போக்கில் புலம்பியது .
அலைஅலையாய் கேசம் துள்ளிகுதிக்க வேட்டி சட்டையில் இருந்த மோகனனை பார்த்தவர் மயங்காமல் இருப்பரா என்ன?
ஆனா என்ன இப்படி பார்த்து வைக்கிறான். நல்லவேளை மாமாகூட வந்ததால தப்பிச்சேன்” என நினைத்த நேரத்தில் மீண்டும் அவளருகே வந்திருந்தான்.
அவள் அரண்டு சுற்றி பார்க்க அங்கே யாரும் இல்லை. வந்தவன் ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க அவள் வேறுபுறம் பார்வையை படரவிட்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்து அவள் மறுக்க மறுக்க கைபிடித்து மறைவான இடத்திற்க்கு இழுத்து சென்றவன், அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் அணையிட்டவாறு நின்றுகொண்டான்.
அவள் செல்ல பார்க்க “ஷ்.. “என்று உதட்டின் மேலே கைவைத்து “பேசக்கூடாது கொஞ்ச நேரம் பேசிட்டு விட்றுவேன்” என்றவன். சோ ஒருவழியா கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சதா?”
கதைபேசும் கண்கள் படபடப்பை மறைக்க பாடுபட, இவள் அவனை தவிர எல்லா இடங்களையும் பார்த்து வைத்தாள்.
அவள் கன்னத்தை ஒரு கையால் பற்றியவாறு தன்னை பார்க்க செய்தவன் அதன் மென்மையில் கிறங்கி பெருவிரலால் அலைந்து மெதுவாக அவளை பார்த்துக்கொண்டே காதருகே குனிய அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டது.
அதை பார்த்தவன் மெல்லிய புன்னகையுடன், “இது முறையில்லதான் ஆனா தப்பில்ல” என்று கிசுகிசுத்த அதே வேகத்தில் அவள் கன்னத்தில் ஆழப்புதைந்தான்.
மயிர்க்கால் சிலிர்த்து நிற்க , முகமும் செந்நிறத்தை கடன் வாங்கியது போல சிவந்தது. அது மேலும் அவனை கிறங்கடிக்க இருக்கும் இடம் அவன் கைகளை கட்டிபோட்டது.
சுற்றி இன்னொரு முறை பார்வையை படரவிட்டவன் மேலும் நெருங்கி நின்று
“சோ அன்னைக்கும் இப்படிதான் ஃபீல் பண்ணியா பம்ப்கின்?”
அதில் டக்கென்று கண்களை திறந்தவள் அவனை பார்க்க, அது ஆயிரம் கதைகளை அவனுக்கு சொல்லியது.
அதன் ஜாலத்தில் மயங்கியவன் மீண்டும் முகம் நோக்கி குனிய, சுதாரித்தவள் அவனை தள்ளிவிட்டு மண்டபத்தினுள் ஓடிச்சென்றுவிட்டாள்.
இவனும் சிரிப்புடனே அவளை தொடர்ந்து மண்டபத்தினுள் வந்திருந்தான். இதை ஒருவன் கோபத்துடன் பார்த்ததை இருவரும் அறியவில்லை. யார் அவன்?
நாங்கலாம் அப்பவே அப்படி– 7″
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்” மனதுக்குள் மெல்லிய சாரலாய் கீதம் இசைக்க முகம் முழுவதும் விகசித்த புண்ணகையோடு மண்டபத்திற்க்குள் நுழைந்தாள் காரிகை.
சிறுவாண்டுகள் கூட இவளை அழைத்து பார்க்க, இவள் கலையவில்லை. மனம் மொத்தமும் கௌதம் மட்டுமே.
அன்று அருவிக்கரையில் முதலில் முத்தமிட்ட போது அதிர்ச்சிதான், விலக்கவும் முயன்றாள். ஆனால் காதல் கொண்ட மனம் ஒரு கட்டத்திற்க்கு மேல் ரசிக்க தொடங்கியது.
ஆனால் அதை அடுத்த நிலைக்கு கௌதம் எடுத்து செல்ல முயன்ற போது, இவள் சுதாரித்து அவனை தள்ளிவிட்டிருந்தாள். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அவனுக்கு காட்டவும் தவிர்த்தாள்.
அப்போது அவள் மனதில் கோபம், தவிப்பு போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. மனம் வெற்றுத்தாளாய்; அதில் கௌதமனின் எண்ணங்கள் மட்டும் தூரிகையாய் வானவில்லை தீட்ட தொடங்கின.அது சரியோ? தவறோ? மனம் ஒருவித போதையில் மூழ்க தொடங்கியது.
அதிலிருந்து தெளிவு பெறாமல் அவனை பார்க்க முடியாது, எனவேதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். அது இன்று நிறைவுபெற்று விட்டது.
மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருக்க புடவைக்கு போட்டியாய் மின்னும் இவள் முகத்தை கவனிப்பார் யாருமில்லை. மற்றவர் கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ளும் நிலையில் இவளும் இல்லை. அதனால் தன்னை ஒருவன் பின்தொடர்வதையும் கவனிக்க தவறினாள்.
இத்தனை நாள் கேள்விக்கு இன்று கிடைத்த பதிலில் மனம் இறகை போல லேசாக, மயிலிறகால் வருடுவது போல உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, மயக்கும் புன்னகையை சிந்தியவாறே தலையை கோதியபடி கௌதமும் மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.
கண்களால் அவளை தேடி , அவள் மேடைக்கு கீழே இருந்த உறவினர் கூட்டத்தில் இருப்பதை கண்டவன்
“மேடைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாள்” என எண்ணியவாறு கூட்டத்தில் கலந்து அவளை,நோக்கி முன்னேறினான்.
அப்போதுதான் அந்த முகத்தை கண்டான் அவ்வளவு குரோதம் அதனில் , யாரைக் கண்டு? அவனவளை கண்டா! கூர்ந்து கவனித்தான். அவளை நோக்கிதான்.
கையில் எதையோ மறைத்தபடி. கௌதமுக்கும் அவனவளுக்கும் இருக்கும் தூரம் பதினைந்து அடி; நாச்சியாருக்கும் அந்த கோர முகத்துக்காரனுக்கும் இருக்கும் தூரம் ஐந்தே அடிகள். எதுவோ சரியில்லை மனம் அடித்து கூறியது. அவன் கனிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.
அவளிடம் செல்ல உறவினர்களை விலக்கியபடி எட்டிநடைபோட அதற்குள் அவன் அருகில் சென்றுவிட்டிருந்தான்.
மற்ற நாளாய் இருந்தால் சுற்றுபுரத்தை தன் கவனத்தில் வைத்திருப்பாள். இது அவளது வழக்கம். பெண்களுக்கு இந்த கவனம் அவசியம் என நினைப்பவள். ஆனால் இன்று அதைகூட அவள் கவனிக்க வில்லை காரணம் கௌதம்.
கௌதமுக்கு புரிந்தது அது ஆசிட் என்னும் திராவகம். மனம் பதறியது. “ஏய் “என்ற கூவலுடன் கௌதம் செல்வதற்க்கும் அவன் பாட்டிலை திறந்து ஊற்ற வரவும் சரியாக இருந்தது.
கூட்டத்தில் சலசலப்பு. யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை. நாச்சியாருக்கோ அதிர்ச்சி. கௌதம் விரைந்து வந்தவன் நாச்சியாரை இழுத்து தன் பின்னால் இருத்திக் கொண்டான்.
அவளை முழுதும் ஆராய்ந்தான் ஒன்றும் ஆகவில்லை. மனம் இப்போதுதான் அமைதியடைந்தது. எங்கே அவன்? என்று கோபத்தோடு திரும்ப அங்கு ஒரு கரம் அவனை வளைத்து திராவகம் இருந்த கரத்தை பற்றியிருந்தது.
“யார் இவன்? “கௌதம் ஒரு முகச்சுருக்கத்துடன் புதியவனை நோட்டம்விட்டான்.
“கௌதம் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க” அந்த புதியவன் அழைக்க, அதுவரை நாச்சியாரை கைவளைவில் வைத்திருந்தவன் அவளை மெதுவாக விலக்கி அவன் அருகில் வந்தான்.
திராவகம் இருந்த கையை பிடித்த கௌதம் , லாவகமாக அதை அவனிடம் இருந்து பறித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.
கௌதம் “யார்றா நீ? எதுக்கு இப்படி பண்ண?
இருவரின் கைப்பிடியில் இருந்தும் அவன் அடங்கவில்லை. “ஏய் நாச்சியா தப்பிச்சிட்டன்னு நினைக்காத அழிப்பேன்டி உன்ன!!! என்னோட காதல அழிச்ச நீ மட்டும்…….” அதற்கு மேல் அவன் பேசவில்லை. வாயிலேயே ஒரு குத்து விட ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.
அந்த அடிக்கு சொந்தகாரன் கௌதம் அல்ல, அந்த இன்னொருவன். அவன் “வெற்றி வேலன்” வீரபாண்டியின் தங்கை சகுந்தலாவின் மைந்தன். ரத்ன பாண்டி, காமாட்சியின் மகள் வயிற்று பேரன். நெடுநெடுவென்ற உயரத்தில், விவசாயம் செய்து உரமேறிய உடற்கட்டுடன், மாநிறத்தில் இருக்கும் கிராமத்து அழகன்.
அதற்குள் அனைவரும் இவர்கள் அருகில், மணமக்கள் கோலத்தில் இருந்த தம்பதிகளும் வந்துவிட தெய்வானை ஓடி மகள் அருகில் நின்று கொண்டார்.
வீரபாண்டி தங்கையின் மகனை கண்டவர் “வேலா, என்னப்பா இது? ” அவருக்கு அதிர்ச்சி அவரது செல்ல மகளின் மேல் ஒருவன் வஞ்சம் கொண்டு இத்தனை தூரம் செல்வான் என்று நினைக்கமுடியவில்லை.
“மாமா அன்னைக்கு பஞ்சாயத்துல இவன அவமானபடுத்தினதால நம்ம பொண்ண பழிவாங்கனும்னு சுத்தியிருக்கான். எனக்கு தெரிஞ்சு நானும் எச்சரிச்சு விட்டேன். ஆனா அப்பவும் திருந்தாம இந்த வேல பாத்திருக்கான்” என்றவாறு மீண்டும் ஒரு அறை விட்டான்.
“ஏலேய் முத்தா! ” “ஐயா!” நம்ம ஆளுங்களை கூப்பிட்டு இந்த பயல நம்ம குடோனுக்கு கொண்டு போங்க, நம்ம பொண்ணு மேல கை வைக்க நினைச்சா என்னாகும்னு தெரியனும்.ம் .. இழுத்துட்டு போங்க” என்று கர்ஜிக்க, தன் முதலாளியிடம் இவ்வளவு கோபத்தை முதன் முறையாக கண்ட தொழிலாளர்களும் அவனை இழுத்துகொண்டு சென்றனர்.
கௌதம் “மாமா ஒரு நிமிஷம்” வேலையாட்களின் பிடியில் இருந்தவனை காட்டி “ஆசிட் அடிக்கற அளவுக்கு என்ன வெறி இவனுக்கு? அப்பறம்” இது யாரு எனக்கு பதில் சொல்லுங்க மாமா?” என வேலனை சுட்டிகாட்டி கூறினான்.
வேலனை காட்டி “இவன் என்ற மருமவன் கௌதம்”
“அப்ப நான் யாரு?” என்ற பாவனையுடன் வேலனை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் அழகாய் புன்னகைத்தான்.
“தங்கச்சி மவன கூட மருமவன்னு கூப்பிடலாம் கௌதம்”
“ஓ.” ஒரு சிறு ஆறுதல்.
“சரி சொல்லுங்க இவனுக்கும் அழகிக்கும் என்ன பிரச்சனை?”
அதற்கு கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் “இந்த பய ஒரு பொண்ண விரும்பினான் தம்பி, அந்த புள்ளையும் இவன விரும்பிச்சு…அந்த புள்ளைக்கு அம்மா மட்டுந்தான், அப்பா அந்த புள்ள கருவுல இருக்கையிலயே தவறிட்டாரு.
இவன் பொண்ணு கேட்க, அந்தம்மா ஊருக்குள்ள பொறுக்கிதனம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான் இவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடுச்சு.
இவன் அந்த பொண்ண ஏவிவிட்டு அம்மா மேல பஞ்சாயத்துல பிராது கொடுக்க வச்சுட்டான் படுபாவி.
பஞ்சாயத்தில் ஊர் மக்கள் கூடியிருக்க (ஆலமரம், சொம்பு இதெல்லாம் மிஸ்ஸிங். ஹா.ஹா..ஏனா இது நவீன பஞ்சாயத்து கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது. )
பஞ்சாயத்து தலைவராக வீரபாண்டி , உடன் கனக வேலுவும்
சில பெரியவர்களும். ஊர் மக்கள் முக்கால்வாசி பேர் அங்கிருக்க தெய்வானை, நாச்சியார் கூட அங்கிருந்தனர்.
“சொல்லுங்கப்பா என்ன பிராது”
“ஐயா இந்த பொண்ணு வான்மதி நாலாவது தெரு கண்ணம்மா பொண்ணுங்க, அது இந்த பையனதான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு சொல்லுதுங்க, ஆனா இந்த பொண்ணோட அம்மா இதுக்கு சம்மதிக்கலன்னு பஞ்சாயத்த கூட்டி நிக்குதுங்க” என்று ஒரு பெருசு வழக்கை சுருக்கமாக உரைக்க விசாரணை ஆரம்பித்தது.
கண்ணம்மா அழுதபடி நிற்க, அவருக்கு சில பெண்கள் ஆறுதல் அளித்தபடி உடன் நின்றிருந்தனர். வீரபாண்டி,
“உங்க தரப்ப சொல்லுங்க கண்ணம்மா.”
அந்த ஊரில்இது ஒருவழக்கம் தன் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை மரியாதையோடு வாங்க , போங்க என்றே அழைப்பர் . சிறிய பெண்ணாக இருந்தாலும் .
“ஐயா! எனக்கிருக்கறது ஒரே மவங்க, அது நல்லபடி கட்டிக் கொடுக்கனும்னு நினைச்சேன், பாவிமக இப்படி பண்ணிட்டாங்க” என்றவாறு அழுதவாறு தன் வாதத்தை முன் வைத்தார்.
வயிற்றில் ஆறுமாத கருவுடன் கணவனை இழந்தவர். அதன்பின் எவ்வளவு பாடுபட்டு மகளை வளர்த்தார் என்பது இந்த ஊருக்கே தெரியும். இப்போது வான்மதியிடம்
“நீங்க சொல்லுங்காத்தா” என்று கூற,
“ஐயா! எனக்கு இவர புடிச்சிருக்குங்க, அதனால இவரதான் கட்டிக்குவேங்க”
“ம்” சிறிது நேரம் யோசித்தவர்
“ஏன்பா நீ மாரி மவன் இளங்கோதான”
“ஆமாங்க”
“வேலைக்கு போறியா”
“இல்லைங்கய்யா”
“பொறவு எப்படி நீ உன்ன நம்பி வர பொண்ண காப்பாத்துவ”
“சூப்பர்!! அப்பா பாய்ண்ட புடிச்சிட்டாரு” ஒருவித குதூகலத்துடன் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு இதெல்லாம் கவனிப்பதில் ஒரு சுவாரசியம்.
“அதெல்லாம் பாத்துக்குவேங்க”
“நீ உலகம் புரியாம பேசறப்பா.. காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கு, நிதர்சனத்த புரிஞ்சிக்கனும்” வீரபாண்டியும் பொறுமையாக எடுத்து சொன்னார்.
“ஏன் அப்படி கஸ்டப்பட்டா அவங்க நிலத்த கொடுக்க சொல்லுங்க அத வச்சு வாழறேன்” இப்போது அங்கிருந்த எல்லோரும் முகத்தை சுழித்தனர்.
நாச்சியார் “என்ன திண்ணக்கம் இவனுக்கு” என்று பல்லை கடித்தாள். வீரபாண்டி ஒரு முடிவுடன்
“நீங்க என்ன சொல்றீங்க கண்ணம்மா”
அவரும் ஒரு முடிவுக்கு வந்தவராய் முந்தானையால் கண்களை துடைத்து இடுப்பில் சொருகிக் கொண்டு “இப்ப சொல்றேங்கய்யா அந்த நிலம் என்னோட சம்பாத்யம், எனக்கு பொறவு என்ற மகளுக்குதேன். இப்பவே எழுதிக்கொடுக்க மாட்டேன்.
அவ வேணா அந்த பையனையே கட்டிக்கட்டும். பின்னால அவ கண்ண கசக்கிட்டு வரக்கூடாதுன்னு குலசாமிய வேண்டிக்கறேன். ஒரு வேளை அப்படி வந்தா அவள வச்சி காப்பாத்த எனக்கு அந்த நிலந்தான் ஆதாரமா இருக்கு.. அவ்வளவுதானுங்க நான் சொல்லிட்டேன் இனி பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுபடறேங்க”
அங்கிருந்த தாய்மார்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது தெய்வானை உட்பட.
“நீங்க என்ன சொல்றீங்க” என்று வான்மதியிடம் கேட்க,
“ஐயா அந்த நிலத்த கொடுத்தாதான் என்னங்க, அவங்களுக்கு அவங்க சந்தோசம்தான் முக்கியமா படுது. நான் காலம் பூரா அவங்கள அண்டிதான் பொழைக்கனும்னு நினைக்கறாங்களா? எனக்கு அந்த நிலம் வேணும் இல்லைனா கேஸ் போட்டு வாங்கி…..” முடிக்ககூட இல்லை சப்பென்று அறைந்திருந்தாள் நாச்சியார்.
(இவளுக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திங்கிங்… ஐ நோ யுவர் மைண்ட் வாய்ஸ்..ஆனா பாருங்க உண்மையா இருக்கறவங்களுக்கு கை கொஞ்சம் நீளமாதான் இருக்கும்… )
அங்கிருந்த எல்லோருக்கும் நாம செய்ய நினைச்சத இந்த பொண்ணு செஞ்சிடுச்சுபா என்ற எண்ணம் தான்.
“கொன்றுவேன் கொன்னு !!! யார பாத்து என்ன கேள்வி கேக்கற? அவங்க சந்தோசம் எதுல இருக்குன்னு உனக்கு தெரியுமா? அவங்க சந்தோசம் முக்கியம்னு நினைச்சிருந்தா கருவுலயே உன்ன கொன்னுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பாங்க, இல்லையா பொறந்ததும் அனாத ஆசிரமத்துலயோ, இல்ல தத்து கொடுத்துட்டோ சந்தோசமா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி கண்ணுல தண்ணி விட்டுட்டு நின்றுக்க மாட்டாங்க.
அதுக்கு பதிலா உன்ன பாராட்டி சீராட்டி வளர்ந்தாங்களே எதுக்கு இத கேக்கவோ? எட்டி நின்னு பாத்த எங்களுக்கே பதறுது, உனக்கு உயிர் போவவேணாம் இந்த கேள்விய கேக்க. நீ என்ன செஞ்சிகிட்டு இருக்கேன்னு தெரியுதா! உங்கம்மாவ எங்க நிறுத்தி வச்சிருக்க… இதப்பார் இத புரிஞ்சிக்க அவங்க பொண்ணா இருக்கனும்னு அவசியமில்ல, நல்ல மனசிருந்தாலே போதும்.”
என்று அவளை போட்டு தாக்கியவள் இவள் பேசபேச இன்னும் அதிகமாக அழுது கொண்டிருந்த கண்ணம்மாவை தோளோடு அணைத்து கண்ணீரை துடைத்தவள்
“அத்த என்னது இது! இவ போய்ட்டா உனக்கு யாரும் இல்லையா.. ஏன் நான் உங்க மவ இல்லையா? ம்.. அந்த கழுதை எக்கேடோ கெட்டு போவுது, நான் இருக்கேன் உன்ன பாத்துக்க…சும்மா சொல்லல இந்த நாச்சியா சொன்ன சொல்ல காப்பாத்துவா!”
“ஐயோ ஆத்தா உன் வாயால அப்படி சொல்லாத கண்ணு அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..இந்த நிலந்தான வேணும் எடுத்துக்கட்டும். அவளே போறேன்றப்ப இத வச்சி நான் என்ன பண்ண போறேன்..நல்லாயிருக்கட்டும் தாயி”
என இவளிடம் இறைஞ்ச…ஒரு துச்சமான பார்வையை வான்மதியை நோக்கி வீசினாள். அது ஆயிரம் சமமாய் இருந்தது.
“மதி நாம ஜெயிச்சுட்டோம் உங்கம்மா நிலத்த தர ஒத்துக்கிட்டாங்க” என இளங்கோ சந்தோசமாய் துள்ள,
நாச்சியார் அடித்த போது கூட அவள் தன் தவறை உணரவில்லை, அதற்கு பின்னான அவள் பேச்சில் முழுதும் மாறியிருந்தாள். இப்போது இளங்கோ பேச்சை கேட்டதும் இருந்த கொஞ்ச தயக்கமும் ஓட,
“அம்மா என்னை மன்னிச்சிடுமா” என்றவாறு காலில் விழுந்திருந்தாள்.
ஒருவாறு இருவரும் சமாதானமாக “அத்த பாத்தியா உன்பொண்ணு வந்ததும் என்ன மறந்துட்ட” என செல்லமாய் கோபித்துக் கொண்டவளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்
“நீ என் சாமி ஆத்தா! நூறு வருஷம் சகல சௌகரியத்தோட நீ நல்லா இருப்ப” இதை கேட்ட வீரபாண்டிக்கும் தெய்வானைக்கும்பிறவி பலனை அடைந்ததுபோல இருந்தது.
ஆனால் வான்மதியும் சென்றுவிட, ஊர் மக்கள் இளங்கோவை கேவலமாக பேச, இதற்கெல்லாம் நாச்சியார்தான் காரணம் என்று வன்மத்தை நெஞ்சில் விதைத்தான். அதை அறுவடை செய்ய இன்றுவரை காத்திருந்தான் .
(அப்படி வந்தவன் நாச்சியாரும் கௌதமும் நெருக்கமாக இருந்ததை கண்டு, என் காதல பிரிச்சிட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்கியா உன்ன விடமாட்டேன்டி” என்று கூட்டத்தோடு கலந்தான்.)
இதை கூறி முடித்ததும் நாச்சியார் கௌதமின் மனதில் இன்னும் ஆழியை போல ஆழப் பதிந்தாள். ராகேஷுக்கோ ஒரு வித மரியாதையே தோன்றியிருந்தது.
இப்போது வீரபாண்டி ” வேலா நம்ம குடும்பம் பிரிஞ்சிருந்தாலும் எதையும் யோசிக்காம எம்மவள காப்பாத்திட்டப்பா.. ரொம்ப நன்றி” என்று கையெடுத்து கும்பிட போனவரை தடுத்தவன்.
” மாமா என்ன பண்றீங்க! பேசலைனா சொந்தம் இல்லைனு ஆயிடுமா இல்ல பாசந்தான் விட்டு போயிடுமா. நம்ம வீட்டு பொண்ணு மாமா அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்” என்று நாச்சியாரை பார்த்தவாறே சொல்லி முடித்தான்.
கௌதமிற்கு உள்ளே திபுதிபுவென்று எரிந்தது “விட்டுட மாட்டானாமா”.
“மருமவனே இந்த வீணாப்போன ரோசத்தால விசேசத்துக்கு கூட உங்கள கூப்படலயேப்பா..ஆனா நீ எதையும் கண்டுக்காம எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க..என்ன நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு”
“தெய்வான கெளம்புமா நாம போய் மாப்பிள்ளையையும், தங்கச்சியையும் அழைச்சிட்டு வரலாம்” என வாயிலை நோக்கி நடக்க, கனக வேலுவும், சகுந்தலாவும் வேகமாக வந்துக் கொண்டிருந்தனர்.
“அண்ணா என்ன ஆச்சு நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமில்லையே!” “மச்சான் எங்க அந்த எடுபட்ட பய…” என்று மீசையை முறுக்கி கொண்டு கேட்க, வீரபாண்டி இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டவர்
“என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ள .. வீம்பால இத்தன நாளா பிரிஞ்சிருந்தோம் இனி அப்படி இருக்க வேணாமே..நானே உங்கள கூப்பிடலாம்னுதான் வந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. பெரிய மனசு பண்ணிவந்து கல்யாணத்துல கலந்துக்குங்க மாப்பிள்ள, சகுந்தலா நீயும் வாம்மா”
“அடஎன்ன மச்சான் இதுக்கு போய் கும்பிட்டுகிட்டு, சொந்த பந்தம்னா சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதுக்குன்னு சொந்தம் இல்லைனு ஆயிடுமா..இந்த மாதிரின்னு தகவல் வந்துது அதான் ஓடியாந்தோம். இந்த கல்யாணத்துல கலந்துக்கறது கொடுப்பினை மச்சான் எங்களுக்கு அது கிடைச்சிருக்கு வாங்க போவோம்”.
அதன்பின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும்தன் மனைவியின் கழுத்தில் மாங்கல்ய நாணை அணிவித்தார் ரத்னபாண்டி. தன் மகள் இல்லையே என்ற சிறு கவலையும் தீர்ந்ததில் இருவருக்கும் அளவில்லா ஆனந்தம்.
வீரபாண்டி- தெய்வானை, கனகவேலு – சகுந்தலா தம்பதிகளாய் ஆசீர்வாதம் வாங்க, பேரன் பேத்திகள் அனைவரும் ஒன்றாக நின்றனர்.
சகுந்தலாவின் மகளை தவிர. அவள் வெளியூரில்,படித்துக் கொண்டிருப்பதால் அவள் மட்டும் இல்லை.
ராகேஷ், அரசு, வெற்றி வேலன், நாச்சியார், கௌதம் வரிசையாய் நின்று காலில் விழ, கௌதம் மட்டும் நாச்சியாரின் கையை யாரும் அறியாதவாறு பிடித்து சற்று காலம் தாழ்த்தி ஜோடியாய் விழுந்தனர்.
இதை கண்டு கொண்ட வேலன் கௌதமை நினைத்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தான். நாச்சியார் முறைத்தபடி நின்றிருந்தாள்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் கௌதம், அஞ்சுகம், ராகேஷ் இவர்களுடன் நாச்சியாரும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர் பெங்களுரை நோக்கி ஏன்? எதற்காக?
நாங்கலாம் அப்பவே அப்படி– 8
திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு வந்து விட்டிருந்தனர். தம்பதியர் இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, வீரபாண்டி , கனக வேலு இருவரும் இத்தனை வருடம் விட்டதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
நாச்சியார் மாடிக்கு சென்றுவிட மற்ற இளவட்டங்கள் கீழேயே தங்கிவிட்டனர். அரசு, வேலன், ராகேஷ் மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கௌதம் தனித்திருந்தான்.
அவனுக்கு வேலனோடு ஒன்ற மனமில்லை. ஏதோ அவனுக்கு போட்டியாய் வந்தது போலவே பாவித்தான். எல்லோரும் அவனையே தாங்கி பேச இவன் அந்நியமாய் உணர தொடங்கினான்.
ஏன் நாச்சியாரும் கூட இவனிடம் பேசவில்லை என்ற சுணக்கம் வேறு. இத்தனை எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் வெளியில் ஒன்றும் காண்பிக்காமல் போனில் ஏதோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
நாச்சியார் மேலே வந்தவளுக்கோ கண்மண் தெரியாத கோபம். ஆசிட் ஊற்ற வந்தவன் மேல் , அவன் கூற வந்து பாதியில் விட்ட காரணத்தின் மேல், அதற்கு காரணமான கௌதம் மேல், அதற்கு துணை போன தன்மேல் என பல கோபங்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.
கொட்டும் நீரில் நின்றாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இளங்கோ என்னகூற வந்தான். “நீ மட்டும் காதலிக்கலாமா என்றா? அப்படியென்றால் கௌதமுடன் நான் நெருக்கமாக இருந்ததை பார்த்திருக்கிறான்.
இதை பொதுவில் கூறியிருந்தால்…நினைக்க, நினைக்க பதறியது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள், பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்த இருந்தேனே! என்று வெகுநேரம் நீரில் நின்றவள் பின் உடைமாற்றி தலையை கூட உலர்த்தாமல் படுத்து உறங்கிவிட்டாள்.
சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்ந தெய்வானை அவளின் நிலையை கண்டு அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.
ஏனெனில் அவளது கோபம் எல்லை மீறும் போது இப்படிதான் செய்து வைப்பாள். சிறிது நேரம் அவளை பார்த்தவர் ஒரு முடிவு எடுத்தவராய் சென்றார்.
அனைவரும் அங்கே ஹாலில் இருக்க, ரத்னபாண்டி, காமாட்சி அருகில் சென்றவர்
“மாமா, அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”
பொதுவாக இப்படியெல்லாம் பொதுவில் இருக்கும் போது ரத்னபாண்டியிடம் முக்கியமானதை தவிர வேறு பேச மாட்டார் என்பதால், ரத்னபாண்டி, காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காமாட்சி “சொல்லுமா”
“அது வந்து … நம்ம நாச்சியாருக்கு கல்யாணம் பண்ணலாங்க அத்தை” அனைவருமே அதிர்ந்தனர். ஆனால் வேறுவேறு காரணங்கள் அவரவர்க்கு.
“ஏன்மா திடீர்னு”
“அவளுக்கும் வயசு 24 ஆகுது, கல்யாணம் பண்ணா அப்பதான் இவளுக்கும் பொறுப்பு வரும் எந்த வம்புக்கும் போகமாட்டா.
இல்லைனா இன்னைக்கு ஆசிட் தூக்கிட்டு வந்த மாதிரி, நாளைக்கு ஒருத்தன் கத்திய தூக்கிட்டு வர மாட்டான்னு என்ன நிச்சயம்” இன்று நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
ஒரு தாயாக அவரது பயம் நியாயமே. ரத்னபாண்டி “அதுக்கென்னமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்கலாம்”
“இல்லைங்க மாமா சீக்கிரமா இது நடக்கனும்” தலை குனிந்தவாறு சொல்ல,
“புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்த முடியாதுமா”
“அது பாம்பா இருந்தா அதுவும் அடிபட்டு பழிவாங்க வந்ததா இருந்தா அப்ப பயந்துதானே ஆகனும்.”
வேலன் “அத்த நாங்கலாம் இருக்கோம் அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. தவிர நம்ம பொண்ணு மேல தப்பில்லையே, நீங்க பெருமைதான் படனும்.”
அவனை நோக்கியவர், “இன்னைக்கும் எல்லாரும் அங்கதானே இருந்தோம், ஏதோ குலசாமி புண்ணியம் காப்பாத்திருச்சு, இல்லைனா எம்மவ நிலமைய நினைச்சு பாருங்க” என்று தழுதழுத்தவர்
“வேணாம்பா அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்” புரிந்தது ஒரு தாயாய் அவரது தவிப்பும் சரியே.
“சரிம்மா அதுக்குன்னு நல்ல இடமா தேட வேணாமா..அதுக்கு நாளாகுமே” ரத்னபாண்டி.
“நம்ம சொந்தத்துலயே பாக்கலாமே, ஏன் நம்ம வேலன் தம்பி கூட இருக்காப்லயே” இதைக் கேட்ட கௌதம் விருட்டென்று எழுந்து விட்டான்.
“ஏன் எங்களை பார்த்தா மாப்பிள்ளையா தெரியலயா?” கோபத்துடன் மேலே அவனது அறைக்கு சென்றன்.
அவனது நடவடிக்கையை இருவர் புன்னகையுடன் பார்த்தனர்.அஞ்சுகம் பாட்டி ஒருவர், அவருக்கு பேரனின் மனம் புரிந்தது அதில் மகிழ்ச்சியே இதைத்தான் அவரும் விரும்பினார். மற்றொருருவர் வேலன்.
நாச்சியாரின் அறையை தாண்டிதான் அவனது அறைக்கு செல்ல வேண்டும். செல்லும்போது அவளது அறை லேசாக திறந்திருப்பதை பார்த்தவன் உள்ளே செல்லலாமா என யோசித்தான்.
என்னோட ப்யூட்டி அறைக்கு போக யார்கிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு, அவள் அருகில் சென்றான்.
தாவணி பாவாடையில் ஈர கூந்தலை மெத்தையில் தோகை போல விரியவிட்டு ஒருபக்கமாய் படுத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.
அந்த ஆசிட் மட்டும் இவள் மேல் பட்டிருந்தால். அந்த கொடுமையான நொடிகளை நினைத்து பார்த்தான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்திய அற்புத நொடிகள் அவை.
பார்த்து ஒரு வாரமே ஆன பெண்ணின் மேல் இவ்வளவு நேசம் தோன்றுமா?
“முட்டாள் அவளின் சிறுவயது ஞாபகங்களைகூட நீ மறக்கவில்லையே, உன்னுள்ளே இருந்தவளை கண்டுபிடிக்கவே இந்த ஒரு வாரம்” என மனம் எடுத்துரைக்க,
அவளை நோக்கி குனிந்தவன் அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். சிறிது அசைந்தவள் மெல்லிய புன்னகையுடன் உறங்கி போனாள்.
இவனுக்கும் புன்னகை வந்தது, “எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா, இப்ப தூங்கறத பாரு சின்ன புள்ளையாட்டம்,
அங்க உனக்கு கல்யாணம் பேசறாங்க ப்யூட்டி, அப்படியே உன்ன தூக்கிட்டு எங்கயாவது போயிடலாமான்னு தோணுது,
ஆமா நல்லாதான இருந்த அதுக்குள்ள என்னடி கோபம் முகத்த திருப்பிட்டு போற. ஆனா ஒண்ணு உன்ன சமாளிக்க ரொம்ப பாடுபடனும் போல..
நிம்மதியா தூங்குடா இனி எதுவும் உன்ன நெருங்காம பாத்துக்குவேன்” என்று நெற்றியில் மென்முத்தம் பதித்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விட்டான்.
கீழே வேலன் ஒருவாறு பேசிசமாளித்துக்கொண்டிருந்தான். “அத்த இதுக்கு பயந்துலாம் கல்யாணத்த வைக்க வேணாம். ”
“ஏன் தம்பி உங்களுக்கு என் பொண்ண புடிக்கலிங்களா?”
“அத்த என்ன பேசறீங்க, நம்ம பொண்ணு கட்டிக்க யாருக்காவது கசக்குமா! இது அப்படி இல்ல நாச்சியாரோட விருப்பம் முக்கியம்.
வீட்ட விட்டு துரத்தறாங்கன்னு நினைப்பு வந்துடும். நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகும் போது சந்தோசமா போகனும், அதான் சொல்றேன் கொஞ்சநாள் ஆறப்போடுங்க எல்லாம் சரியாகும்”
அவன் பேசியே தெய்வானையை சம்மதிக்க வைத்து விட்டான்.
“தெய்வா, அப்படி உனக்கு மனசு ஆறலைன்னா , நான் அம்முவ பெங்களூருக்கு கூட்டிட்டு போறேன் ”
அனைவருக்கு அது சரியென்றே பட்டது. வீரபாண்டியும் “தெய்வானை அத்தை சொல்றது சரி கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்”
தெய்வானை அரைமனதோடு சம்மதித்தார்.
“அச்சோ என்னால வர முடியாதே, நான் எப்ப பெங்களூரூ வரது” என அரசு புலம்ப,
“இந்த கலவரத்துலயும் உனக்கு குதூகலம் கேக்குதா!! வெசம்..வெசம்” என அவன் தலையை கொட்டியவாறு இழுத்து சென்றான்.
வேலன் நைசாக நழுவி, கௌதமின் அறைக்கு வந்தான்.
“உள்ள வரலாமா”
“யா கம் இன்”
உள்ளே வந்தவனை பார்த்தவன், இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று யோசித்தாலும் அவன் அமர இருக்கையை காட்ட, வேலன் அதில் அமர்ந்து கொண்டான்.
இவனும் கட்டிலில் அமர்ந்து கொண்டு “என்ன பேசனும்”
“ஸ்ஸப்பா என்ன காரம்”
“இன்னைக்கு ஆசிட் உத்த வந்தானே அவன் என்ன சொல்ல வந்தான்னு தெரிஞ்சுதா உங்களுக்கு” என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
கௌதமுக்கு இப்போதுதான் புரிந்தது, இத எப்படி மறந்தேன் அதான் நம்மமேல கோவமா இருக்காளோ! என தலையில் கைவைத்துக் கொண்டான்.
“நான் மட்டும் சுதாரிச்சு அடிக்கலைனா இந்நேரம் உளறி வச்சிருப்பான், அப்ப நாச்சியாரோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா?
ஒரு பொண்ணா எவ்வளவு சங்கடம் ஊரு முன்னாடி, குடும்பத்து முன்னாடி. உங்க நகரத்துல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா இங்க அப்படி இல்ல.
ஆம்பிளைங்க விசயத்துல நாலு பக்கம் யோசிச்சா பொண்ணுங்க விசயத்துல பத்து பக்கமும் யோசிக்கணும். அதுவும் விரும்பற பொண்ணுன்னா ரொம்ப கவனமா இருக்கனும்.
இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல பாத்துக்கோங்க. அப்பறம் நாச்சியார பெங்களூரு கூட்டி போக அத்த சொல்லிட்டாங்க” என்றுகூறியவன் வந்த வேலை முடிந்தது போல கிளம்ப,
“வேலா”
“என்ன என்பதை போல பார்க்க”
“நீ… அப்படி கூப்பிடலாம்ல”
“ம் தாராளமா, ஒரே வயசுதான் ரெண்டு பேருக்கும்”
நீ எப்படி கரெக்டா வந்த”
அவனை கூர்மையாக பார்த்தவன் “எங்க வீட்டு பொண்ணுங்க எங்க இருந்தாலும் என்னோட பாதுகாப்புலதான் இருப்பாங்க” என்று மீசையை முறுக்கியபடி கூற,
“நீ நாச்சியார காதலிச்சியா?” இப்போது நேரடியாக கௌதம் கேட்டான். அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது.
குறும்பு புன்னகையுடன் “மாமன் பொண்ணு தங்கச்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..ஆனா நீங்க சொல்ற மாதிரி இல்ல, எங்க கல்யாணம் நடந்தா குடும்பம் சேரும்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா இப்ப இல்ல”
“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா”
“நாச்சியார், அவங்களோட விருப்பம், புடிக்காத ஆம்பிளைகிட்ட எந்த பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்க, அதுவும் நாச்சியார் நெருப்பு. ”
சற்று திணறியபடி “நீ….நீ எங்க …”
“திருமூர்த்திமலை”
“ஓ…”
கௌதமா அப்படியே அங்க இருக்க பாறைலயே தலைய முட்டிக்க. இப்படியா சுத்தி யார் இருக்கான்னு கூட பாக்காம இருப்ப” என தனக்குள்ளயே முனகிகொண்டிருக்க,
சத்தம் போட்டு சிரித்த வேலன்
“காதல் எதையும் கவனிக்காது. கீழ அவசரமா கல்யாணம் பேசாதீங்க சொன்னேன், அதையே உங்ககிட்ட சொல்ல மாட்டேன் , சீக்கிரமா சமாதானபடுத்தி கல்யாண சாப்பாடு போடுங்க. அப்ப நான் கெளம்பறேன்” என்றவனை
“வேலா”
அருகில் வந்த கௌதம் அணைத்து விடுவித்தவன் ,
“தேங்கஸ்” என உளமாற கூறினான்.
சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் சென்றுவிட்டான்.
கௌதமிற்க்கு இப்படியும் ஒரு மனிதனா என பிரமிப்பாக இருந்தது.
“வாவ் ப்யூட்டி நீயும் வரியா வா..வா அங்க வச்சு உன்ன பாத்துக்கறேன்” என உல்லாச மனநிலையோடு கட்டிலில் விழ விதி அவனை பார்த்து கெக்கபிக்கேவென்று சிரித்தது அவனுக்கு தெரியலயே?????
இப்படியாக அவளை கேட்காமலேயே எல்லாம் நடந்து விட அவளுக்கு மறுக்க அவகாசமே இல்லை.
முகத்தை கடுகடுவென்று வைத்தவாறே பெங்களூரு வந்தடைந்தாள் நச்சியார்.
இவர்களை அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளே நுழைந்த சில நிமிடங்களில்
“கௌதம் எங்க போனீங்க இத்தன நாளா?”என்றவாறு ஒரு நாவநாகரீக யுவதி அவனை கட்டிக்கொள்ள,
பாட்டிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“பாட்டி இந்த அல்டாப்பு எப்படி உடனே வந்துது எதாவது ஸ்பை வச்சிருக்குமோ” ராகேஷ் பாட்டியிடம் வினவினான்.
நாச்சியார் எள்ளும் கொல்லும் வெடிக்கும் அளவு வெப்பத்தை வெளியிட்டவாறு இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் பாவாடை தாவணியில் அவளை பார்த்த அந்த யுவதி ” ஏய் வேலைக்காரி புதுசா வந்திருக்கியா?
போய் கௌதம்க்கு ஒரு ஆப்பிள் ஜீஸ் எடுத்து வா!” என நாச்சிரிடம் கேட்டாளே ஒரு கேள்வி.
பாட்டியின் தோள் மீது கைவைத்தவாறு நின்றிருந்த ராகேஷ் “ஆத்தி” என்றவாறு தடுமாறியவன்
” இந்த பொண்ணு வந்தவுடனே ஆப்பு மேல் ஏறுதே சொல்லுவோமா! ச்சே வேணாண்டா ராகேஷ் எத்தன தடவ உன்ன சர்வென்ட்ன்னு கூப்டிருப்பா அனுபவிக்கட்டும் நீ நடக்கறத வேடிக்கை மட்டும் பாரு”
பாட்டியை பார்க்க அவரும் அதே டோனிலேயே இவனை பார்த்தார் இருவருக்கும் புன்னகை வர
“அப்படிங்கறீங்க”
“ஆமாங்கறேன்”
“அப்ப வாங்க” என வேடிக்கை பார்க்க அங்கேயே சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
“ஏய் நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்ன வேடிக்கை பாக்கற, ஏன் கௌதம் இங்க வேலைக்காரி கிடைக்கலன்னு கிராமத்துக்கு போய் கூட்டிட்டு வந்தீங்களா”
அதுவரை அவள் யாரை கூறுகிறாள் என்று அறியாத கௌதம்
“ஹேய் நிவி அது…”
“என்ன கௌதம் இப்படி மரியாதை தெரியாதவளெல்லாம் ஏன் வேலைக்கு வச்சிருக்கீங்க”
என தோளில் தொங்கிய நிலையிலேயே கிள்ளை மொழியில் மிளற்ற,
“நிவி ஸ்டாப் இட்”
“வெய்ட் கௌதம் இவல்லாம் இப்படி சொன்னா கேக்க மாட்டா, ஏய் நீ வா” என்று நாச்சியாரை சமையலறைக்கு இழுத்து போனாள்.
கௌதம் தலையில் கைவைத்தபடி அமர்ந்தவன், பாட்டியை பார்த்து
“நீங்களாவது சொல்லலாம்ல”
“என்ன சொல்றது பேராண்டி இதுவரைக்கும் நடந்தத நாங்க கம்முனு வேடிக்கை பார்த்தமில்ல இனி நடக்கறத நீ பாரு”
அவனுக்கும் அதை தவிர வேறு வழி இல்லை. வந்தவுடன் இப்படி ஒரு சீனை அவன் எதிர்பார்க்கவில்லை.
இவள் நிவிதா கௌதம் அம்மாவின் அண்ணன் மகள். எப்போதும் இப்படிதான் நடந்து கொள்வாள்.
அப்போதெல்லாம் சிறு பெண் என விட்டுவிட்டான். ஆனால் இப்போதுதான் அது அதிகபடியோ என தோன்றியது.
எல்லையை வகுத்திருக்க வேண்டுமோ? பாட்டி சொன்ன போதெல்லாம் அலட்சியமாய் விட்டதற்கு இது தேவைதான்.
அப்படியே எதாவது சொன்னாலும் உடனே தன் தந்தை கருணாகரனிடம் சொல்லி, அவர் வந்து
“என் தங்கை இருந்தால் இப்படி நடக்குமா?”
என்று காதை ஒட்டு போடும் அளவுக்கு ஓட்டையாக்கி விட்டுதான் போவார். அனைத்தையும் அன்னைக்காக பொறுத்துக்கொள்வான்.
இப்போதும் அதற்குதான் தலையில் கை வைத்தான். மற்றபடி அவன் அழகியை பற்றி கவலையில்லை அவள் எப்படியாயினும் சமாளித்து விடுவாள்.
ஆனால் மாமா வந்து நாச்சியாரை எதாவது கூறினால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இனி பாட்டிக்கு பிறகு இவள்தான் இங்கு எல்லாமே என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
சமையலறையில் இருந்து நிவி முன்னே வர, நாச்சியார் பின்னால் ஜுஸ் கிளாஸ் அடங்கிய ட்ரே வை தூக்கியபடி வந்தாள்.
” ஏய் எல்லாருக்கும் கொடு”
என்று கூறியவள் பாட்டியை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவாறு கௌதமின் அருகில் சென்று அமர்ந்தாள்.
பாட்டியும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தார் அவளை அது அவளுக்கு இப்போது புரியவில்லை , புரிந்தபோதோ??????????
நாங்கலாம் அப்பவே அப்படி– 9
நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,” பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு.” என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.ஆனால் நாச்சியார் அதை
கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.
“பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா”
இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
கௌதம் “இது ரொம்ப முக்கியம் இப்ப”
இதை ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.
மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.
ராகேஷ் “அது..எந்தங்கச்சியா கொக்கா”
“ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! ”
என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.
ஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.
கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. “நிவி யூ ஆர் கோயிங் டூ மச்”
நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.
நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, “வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க” என கீச்சுக்குரலில் கத்த
“ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத” கௌதமுக்கு அத்தனை கோபம்.
அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!
நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.
“யார் இவ”
“ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா” அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.
நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.
கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.
“சரி…யார் இவங்க”
“அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு” அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.
“ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா…ங்களா” என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
கௌதமிற்காக “சாரி” என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.
“என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி” என்று கருவியவள்,
“கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்.” என்றவாறு மாடியேறப் போனவளை
“நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ”. என்று கீழே ஒரு அறையை காட்டினான்.
“ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.
நாச்சியாரை பார்த்தவாறே “இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ” நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன், அவளுக்காக அவமானப்படுத்திவிட்டான்.
எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் இவளையெல்லாம்……” இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.
ராகேஷ் எழுந்தவன் “சரி பாட்டிமா நான் கெளம்பறேன்” என்க.
நாச்சியார் “ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க”
நிவியும் கேட்பாள்தான் “அங்க போய் தனியாதான இருக்கனும்”என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.
“அது… என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா” என தயங்கியவாறு சொல்ல,
“அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்” என்றாள்.
அதில் “நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது.”
இப்போது கௌதம் கோபமாக “டேய் ஒழுங்கா உள்ள போ…என்ன கொலகாரனாக்காத”
அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.
இல்ல பாஸ்..”
“ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா” என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.
“டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க” என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,
“இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்” என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.
நிவி “ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். ” என பொருமிக் கொண்டிருந்தாள்.
அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் “என்னோட ரூம் எங்கயிருக்கு” என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.
“மேல”
“சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க” என்று அவனிடம் கூறியவள்.
நிவியிடம் “இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.
ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்” என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.
“கௌதம் என்ன இது இந்த பொண்ணு இப்படி மிரட்டிட்டு போகுது”
ஹா..ஹா.. மிரட்டினதோட விட்டாளேன்னு சந்தோசப்படு.
தன் வீட்டில் தன்னவள் என்னும் நினைவே சந்தோசத்தை அளித்தது தன் நீண்ட பின்னலாட செல்லும் அவளையே பார்த்திருந்தான்.
“கௌதம்”
என மீண்டும் அவனை உலுக்க “என்ன நிவி இன்னும் கெளம்பலயா, இப்படியேவா நிக்க போற சிக்கிரம் போ”
அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள். பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் பாழாய் போனது.
“இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பட்டிக்காடு” என்று எண்ணியவாறு தன ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் கௌதம் அவனது அறைக்கு மேலே செல்ல, அப்போதுதான் நாச்சியார் அவனறையிலிருந்து வெளியே வந்தாள்.
இவனை கண்டதும் “அது தெரியாம என்னோட ரூம்னு நினைச்சு வந்துட்டேன் சாரி”
“ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு சாரி, இதுவும் உன்னோட ரூம்தான் வா…”
அவளை அப்படியே தள்ளிக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.
“விடுங்க”
என்று அவள் திமிர,
“உங்கிட்ட கொஞ்சம் பேசனும் ”
“இல்ல நான் போறேன்”
“ப்ளீஸ் ப்யூட்டி”
“இதுக்கும் மேல கட்டாயபடுத்தினா இங்க இருந்து போயிடுவேன்”
அவளை விட்டவன்
“சரி போ” அவள் செல்ல
“ஒரு நிமிசம்”
திரும்பி பார்த்தாள்.
“இப்ப உன் விருப்பம், ஆனா எப்பவுமே அப்படி கிடையாது சரியா!”
அவள் அவனை முறைத்துக்கொண்டே சென்று விட்டாள்.
இவன் சிறு சிரிப்புடனே அலுவலகத்துக்கு செல்ல தயாரானான். வழக்கமான ஃபார்மல் உடையில் தயாரானவன், ராகேஷ் என அழைத்தவாறே இறங்கினான்.
அவன் முணகியவாறே வர , “என்ன சார் இன்னும் வெக்கேஷன் முடியலயா! வரீங்களா? இல்லையா?என நக்கலாக வினவ,
“தோ வரேன் பாஸ்” இப்படியாக கௌதம் அலுவலக வேலையில் மூழ்கி விட, பாட்டிக்கு ஓய்வினை கொடுத்துவிட்டு நாச்சியார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டாள்.
சமையல் முதல் தோட்டம் வரை இவளின் எண்ணத்தில் மிளிர்ந்தது. வேலையாட்களும் இவளிடம் அன்பும் மரியாதையுமாக நடந்துகொண்டனர்.
இப்படியாக ஒரு வாரம் சென்றது. இவளும் பேசவில்லை, கௌதமும் பேசவில்லை. தன் வீட்டினர் போன் செய்தால் கூட அவள் பேசுவதில்லை. நிவியும் வரவில்லை.
அன்றே தந்தையுடன் வருவாள் என்று எண்ணிணான். ஆனால் அவர்கள் வரவில்லை. இதுவும் நல்லதுக்கே என கௌதம் எண்ணிக்கொண்டான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் சுவாரஸியம் ஏது?
அன்று அலுவலகத்துக்கு விடுமுறை என்பதால் கௌதம் வீட்டிலேயே லேப்பில் வேலை செய்துகொண்டிருந்தான். ஹாலில் இருந்ததால் வேலையில் ஒரு கண்ணும், தன்னவளின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.
பாட்டி தனது அறையில் ஓய்வெடுக்க, அப்போது ராகேஷும் தனது லேப்புடன் வெளியே வந்து அமர்ந்து கொண்டான்.
ஏதோ சந்தேகம் தோன்ற கௌதமிடம் கேக்கலாம் என நிமிர்ந்தவன் “பாஸ்” “பாஸ்” என அழைத்து பார்க்க அவன் திரும்பவே இல்லை.
என்னாச்சு இவருக்கு அவனை உற்று பார்க்க அவன் கனவுலகில் இருப்பதை போல சிறுசிரிப்புடன் நாச்சியாரையே பார்வையால் தொடர்ந்தபடி இருந்தான்.
அவளும் அவ்வப்போது ஓரப்பார்வை தரிசனம் கண்டாள்.
“ஆஹா இது எப்ப ஆரம்பிச்சது, தெரியவே இல்ல ராகேசு நீ வேஸ்டுடா இப்படி ஒரு ட்ரேக் ஓடறது தெரியாம இருந்திருக்க”
“இவரு சிங்கம்னா, அந்தம்மா புலி ரெண்டுக்கும் எப்படி செட்டாகும். ரெண்டும் மெஜாரிட்டி காட்டற கேஸு வேற. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தா சந்தோசப் படற முதல் ஆள் நான்தான். ” என எண்ணியவாறே அங்கிருந்து நழுவி வெளியே செல்ல வந்தான்.
அப்போது வெள்ளை சட்டையும், வெள்ளையில் பேண்ட்டுமாய் உஜாலா விளம்பர மாடல் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் நிவியும்.
ஆம் நிவியின் அப்பா அவர். இவனை கண்டதும் “என்னப்பா இங்கயே தங்கிட்ட போல” என நக்கலாக வினவ,
ஆமா அன்னைக்கு மவ வாங்கிட்டு போனது பத்தாதுன்னு இன்னைக்கு அப்பாவும் வந்திருக்கார் போல.. என மனதில் நினைத்தவன்.
“ஆமா சார் தங்கச்சிதான் இனி இங்கயே இருங்க அண்ணா சொன்னாங்களா அதான் தட்ட முடியல பாருங்க” என கூறியவன்
“நான் பாட்டிய பாக்க போகனும் நீங்க உள்ள போங்க பாஸ் உள்ள தான் இருக்கார்.” என மீண்டும் உள்ளே திரும்பி பாட்டியின் அறைக்கு சென்றான்.
கௌதமின் அன்னை காஞ்சனாவின் அண்ணன் கருணாகரன். அவரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துபவர்தான். ஆனால் சிறிய நிறுவனம்.
அதனாலேயே தங்கை குடும்பத்தின் மேல் பொறாமை கொண்டவர். தங்கை கணவரான பிரபாகரிடம் தொழில் நஷ்டத்தை அடைந்ததாக கூறி சிலபல கோடிகளை கடனாக பெற்றுள்ளார்.
இதுவரை திருப்பி தரவுமில்லை. சிலமுறை கவனித்த குமார பூபதி மேலும் இது தொடராதவாறு பார்த்துக்கொண்டார்.
பிரபாகர் தந்தையை போல அல்லாமல் மென்மையான குணம் கொண்டவராக இருந்தார், அதனாலேயே குமாரசாமி இருந்தவரை ஜெயக்குமார் குடும்பத்தை நெருங்க விட்டதே இல்லை.
ஆனால் இப்போது அவர்கள் பார்வை பணத்தை விட்டு கௌதமின் மேல் திரும்பியது. அவனை நிவிக்கு திருமணம் செய்ய ஆவல் கொண்டார்.
இவன் பிடிகொடுக்காமல் இருக்க, பத்தாததுக்கு இப்போது மாமன் மகள் ஒருத்தி வந்து அதிகாரம் செலுத்துவாள் என்று கனவா கண்டார்.
அவரை பார்த்த கௌதம் “வாங்க மாமா, வா நிவி” என அழைக்க,
“வரேன் மாப்பிள்ளை”
“உட்காருங்க, அழகி மாமாவுக்கு ப்ளேக் காஃபி அப்பறம் நிவிக்கு ஜுஸ் எடுத்துவா”
“ஐயோ ஜுஸா வேணாம் எனக்கு தண்ணி போதும்”.
அதற்குள் அவள் அவரவர்க்கு வேண்டியதை கொண்டு வந்தாள். அவளை அளவிடுவது போல பார்க்க கௌதமிற்கு அது பிடிக்கவில்லை.
“இந்த பொண்ணுதான் மாமா பொண்ணாபா, பாப்பா சொன்னா”
“ஆமா மாமா”
சிறிது நேரம் மற்ற விசயங்களை பேசியவர் “நானும், அத்தையும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம் மாப்பிள்ள அதனால நிவி கொஞ்ச நாள் இங்க தங்கட்டுமா”
பெட்டியோடு வந்த பின் என்ன சொல்ல
“சரி மாமா இருக்கட்டும்”
“சரிப்பா நான் கெளம்பறேன்.” என்றவர் சென்று விட்டார். கடமைக்கு கூட பாட்டியை பற்றி கேட்கவில்லை.
அன்றிலிருந்து நிவிக்கு கௌதம் கௌதம்தான். அவன் எங்கேயோ இவளும் அங்கேயே.
முன்பிருந்ததற்க்கு இப்போது ராகேஷும் நாச்சியாரும் நன்றாக பாசப்பயிரை வளர்த்தனர்.
அன்றும் அப்படிதான் ராகேஷ் லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அது வரவில்லை.
“இந்த வேலைக்கு பேசாம வேற எங்கயாவது கழுதை மேய்க்க போகலாம். மண்டை காயுது” என புலம்பி கொண்டிருந்தான்.
அவனுக்கு வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும். ஆனால் கௌதம் வேலை வேலை என பெண்டெடுப்பான்.
அதான் அவ்வப்போது வேற வேலைக்கு செல்லலாமா என கிறுக்குதனமான யோசனை வரும். ஆனால் அதெல்லாம் இதுவரை யோசனை அளவிலேயே.
அப்போது அங்கு வந்தாள் நாச்சியார் “என்னண்ணா வேற வேலை வேணுமா!” அவன் இப்படி புலம்புவதை சில முறை கண்டிருக்கிறாள்.
அவன் நல்லமூடில் இருந்திருந்தால் இவள் டோனை வைத்தே இவள் விளையாடுகிறாள் என கண்டிருப்பான். ஆனால் இவன் குழப்பத்தில் இருந்ததால் தெரியவில்லை.
ஆனால் கௌதம் கண்டுகொண்டான். அப்போதுதான் வந்தவன் இவர்கள் பேசுவதை கேட்டதும் அங்கேயே நின்றுவிட்டான். இவள் என்ன கூறுவாள் என்பத அறியும் ஆவல்.
“நான் உங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணட்டா”
“உன்னால முடியுமா”
“ம்.. ஆனா வேலை முதுமலைல யானைகள் சரணாலயத்துல உங்களுக்கு யானைனா பயமில்லையா”
யானை கிட்டயா எச்சில் விழுங்கியவன் பரவால்ல நல்ல வேலையா இருந்தா என மனதில் நினைத்தவன்
“இல்லையே சொல்லபோனா ஐ லவ் யானை” ஒருவித ராகத்தோடு கைகளை அகல விரித்து கூறினான்.
“ஓ…அப்ப சரி”
“சரி என்ன வேலைனு இன்னும் சொல்லவே இல்ல”
“அதுவா..ஒண்ணுமில்ல யானை இருக்குமா! அத கட்டிபோட்டு உப்பு பேப்பர் வச்சி தேய்ச்சு ..”
“தேய்ச்சு”
“அப்பறமா அதுக்கு கருப்பு பெய்ண்ட் அடிக்கனும் அவ்வளவேதான்”
என்ன வேலையோ என ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தவன் முகம் அஷ்டகோணலாய் மாறியது.
அப்போதுதான் அவள் தன்னை கலாய்க்கிறாள் என தெரிந்தது.
“ஏன் இப்படி” என பாவப்பார்வை பார்க்க,
“ஏன் இந்த வேலைக்கு என்ன குறைச்சல் சும்மா வேற வேலைக்கு போறேன்னு சொல்லுறீங்க! இனி அப்படி சொல்லுவீங்க” என மிரட்ட,
“தெய்வமே இனி சாகற வரைக்கும் இந்த வேலைய விடலாங்கற எண்ணமே எனக்கு வராது போதுமா!”
உனக்கு இது தேவையா இனி வேற வேலைக்கு போறேன்னு சொல்லுவியா..சொல்லுவியான்னு மாறிமாறி கன்னத்திலேயே அடித்துக்கொண்டான்.
அட அந்த வேலை வேண்டான்னா “வரிக்குதிரைக்கு கோடு போடற வேலை, புலிக்கு புள்ளி வைக்கற வேலை இந்த மாதிரி நிறைய இருக்கு”
“என்னாது சரியான கொலகார குடும்பம்யா..நான் இடத்த காலி பன்றேன் என்றவாறு எழுந்து ஓடிவிட்டான்.
அவனை பார்த்து கலகலத்து சிரித்தவாறே திரும்ப கௌதம் புன்னகையோடு நின்றிருந்தான்.
நாங்கலாம் அப்பவே அப்படி– 10 final
ராகேஷிடம் வம்பளந்துவிட்டு திரும்புகையில் கௌதம் அங்கே இருப்பான் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் நின்றவள் பின் அவனை கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு செல்ல திரும்பினாள்.
“நாச்சியார்” என விளித்தான். முதல் முறை அவள் பேர் சொல்லி அழைக்கிறான். என்ன என்பதை போல பார்க்க
“உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”
அவள் ஏதோ சொல்ல வர “நோ சொல்லாத இன்னைக்கு பேசியே ஆகனும்.” விடாப்பிடியாய் நின்றான். அமைதியாக தோட்டத்திற்க்கு சென்றவளை இவன் பின்தொடர அவர்களை நிவி தொடர்ந்தாள்.
நிவியும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். இந்த வீட்டில் நாச்சியாருக்கு இருக்கும் செல்வாக்கை. நான் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய இடமது, இந்த பட்டிகாட்டிற்க்கு என்ன தெரியும். மேலும் நெருப்பை மூட்டுவது போல் கௌதமின் பார்வை இவளையே சுற்றி சுற்றி வருகிறது.
அது உணர்த்தும் செய்திதான் அவ்வளவு உவப்பானதாக இல்லை. கருணாகரன் வேறு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கௌதமின் மனதில் இடம் பிடிக்குமாறு கூறிதான் விட்டு சென்றார்.
ஆனால் எங்கே இவன் மீனாக நழுவி விடுகிறானே. முதலில் இவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும். அதுவும் அவளே தலைதெறிக்க ஓட வேண்டும்.
என்ன செய்யலாம் என பலவாறு யோசிக்கிறாள் ஆனால் ஒரு வழியும் கிடைக்கவில்லை. அதைவிட மாட்டிக்கொண்டால் தன்னுடைய கதி அதோகதிதான்.
அதனால் பொறுமையாக சந்தர்ப்பத்திர்க்காக காத்திருக்கிறாள். மறைவான ஒரு இடத்தில நின்று நடப்பதை கவனித்தாள்.
நாச்சியாரின் கைவண்ணத்தில் தோட்டம் இன்னும் மிளிர்ந்தது. பல வகையான மலர் செடிகள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.
தேவலோகத்தை போல எங்கும் பூக்களின் வாசம். ஆழ்ந்து சுவாசித்தபடி, “தோட்டம் அழகா இருக்கு, அம்மா இருந்தப்ப கூட இந்த மாதிரி இல்ல” அவன் அம்மாவை பற்றி பேசவும் வருந்துகிறானோ என பார்த்தாள். இல்லை அவன் இயல்பாகவே இருந்தான்.
இன்னும் சற்று தள்ளி இருந்த வேப்ப மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டார்கள். இன்று இவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் கௌதம் வந்திருந்தான்.
எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஒருவாறு பேச ஆரம்பித்தான்.
“சாரி அன்னைக்கு ..” என தடுமாறியவன் தலையை கோதியவாறே
“அது அந்த இடத்துல…நான் வேணுன்னு பண்ணல..ஆனா தப்புன்னு இப்ப புரியுது. ”
அவள் புருவத்தை சுருக்கி யோசிக்க,
“அன்னைக்கு மண்டபத்துல நடந்தது, அப்பறம் அருவிக்கரையில் நடந்தது, தப்புதான் ஆனா உன்னை பார்த்தா என்னையே மறந்துடறேன். என்னையே மறக்கறப்ப சுத்தி என்ன இருக்குன்னு எப்படி தெரியும்”
அவனை ஒரு பார்வை பார்த்தவள் “இதத்தான் சொல்ல வந்தீங்கன்னா நான் கெளம்பறேன்” என செல்ல பார்க்க,
அவள் கையை,பிடித்து நிறுத்தினான் “ப்ச் என்ன உன் பிரச்சனை , அதான் சாரி கேக்கறேன்ல”
“நீங்க சாரி கேட்டா சரியாயிடுமா அன்னைக்கு மண்டபத்துல அவன் உளறி வச்சிருந்தா என்னோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா! என் குடும்பத்த, ஊர் ஜனங்கள எந்த முகத்த வச்சி பார்ப்பேன்.
நீங்க ஆம்பிள உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவன் ஆசிட் ஊத்த வந்தது கூட பெருசா தெரியல, ஆனா இத சொல்ல வரும்போது வேலன் அத்தான் மட்டும் அடிக்கலைன்னா!” என இத்தனைநாள் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்ல திரும்பியவளை,
“ஆனா உனக்கு பிடிக்காத மாதிரியும் தெரியலயே”
இப்போது மானசீகமாக தலையில் அடித்துக் கொள்வது அவளது முறையாயிற்று, வெக்கம் கெட்ட மனசு, சொன்ன பேச்ச கேட்டிருந்தா இன்னைக்கு இந்த அவமானம் இல்லையா.
அவனது பேச்சால் சிவந்த முகத்தை எங்காவது புதைத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.
“என்ன பேச முடியலயா! ஏன்னு நான் சொல்லட்டா”
என அவளை நெருங்கியவன் காதோரமாய்
“நீ என்னை விரும்பற ”
என ஒவ்வொரு வார்த்தையாய் கூற அவன் மூச்சுக் காற்று பட்டதில் கழுத்து முடிகள் சிலிர்த்து கொண்டு நின்றது.
நடுங்கிய கைகள் அதன் போக்கில் தாவணியை திருகி கொண்டிருந்தது. மேலும் நெருங்கி இடுப்போடு சேர்த்தனைத்தவன்
“என்ன சரியா சொன்னனா பம்ப்கின்” அவனது கிண்டலான அழைப்பில் கலைந்தவள்
“இ…ல்ல நீ..ங்க தப்..பு தப்பா பேசறீங்க, செய்யறீங்க”
அவனது கைகளை விலக்க பார்க்க
” எது முத்தம் கொடுத்தத சொல்றியா, அது தப்பில்லடா அது நான் உனக்கு கொடுக்கற பாசம்”
அவனை நோக்கி திரும்பியவள் “அய்ய போதுமே உங்க பாசம் என்ன விடுங்க, இல்ல…”
இப்போது அவன் கையணைப்பிலேயே சரளமாக பேச வந்தது.
“இல்ல…இல்லைனா என்ன பண்ணுவ பாட்டிய கூப்பிடுவியா?” இவனும் பதிலுக்கு சீண்ட
“நான் ஏன் பாட்டிய கூப்பிட போறேன் அதோ அங்க மறைஞ்சு நின்னு பாக்கறாளே உங்க மாமா பெத்த மரவள்ளி கிழங்கு அவள கூப்பிடறேன்”
“என்ன? ” என்று அதிர்ச்சியாகி டக்கென்று கைகளை விலக்கியவன்
“ஏன்டி உன்னை எங்கயாவது தனியா தீவுக்குதான் தள்ளிட்டு போகனும் போல, எந்நேரமும் யாராவது ஒருத்தர் பார்த்துட்டே இருக்காங்க,
“எங்க அவ”
என்று நிவியை தேட,
“ஹலோ அவ என்னை தேடி வரல, நீங்க என் பின்னாடி வரத பார்த்து அவ உங்க பின்னாடி வேவு பாக்க வந்திருப்பா” என சரியாக கணித்தாள்.
“ஆனா எனக்கு அந்த மரவள்ளி கிழங்கவிட இந்த சக்கரவள்ளி கிழங்கதானே புடிச்சிருக்கு”
நாச்சியாருக்கு கோபமெல்லால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இப்போது இருந்ததெல்லாம் காதல் காதல் காதல் மட்டுமே.
அவன் கண்களிலே நங்கூரத்தை பாய்ச்சி ,அவன் காதலின் ஆழத்தை அறிய முயன்றாள். இருவரின் பார்வைகளும் பின்னி பினைந்து சதிராட்டம் போட, அதன் தாக்கத்தை தாள முடியாமல் நங்கையவளே முதலில் பார்வையை விலக்கினாள்.
ஏற்கனவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மங்கையின் நிறம் இப்போது இன்னும் அடர்ந்த நிறத்தில் வர்ணஜாலம் காட்டியது.
“ஹேய் என்னடி இப்படி கலர் மோட் மாத்தற” என வியந்து அவள் கன்னத்தை தடவியவாறு கேட்டான்.
அவன் கையை தட்டி விட்டவள் “ஒண்ணுமில்ல என்று முனகியவாறு கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள்”
அவள் செய்யும் செயல்களை ரசனையாக பார்த்தவாறு நின்றிருந்தான்.
இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிவியின் மனதில் எரிமலையே வெடித்தது… இவ்வளவு நெருக்கத்தை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. சொத்தாசை இருந்த இடத்தை இப்போது போட்டி பிடித்துக் கொண்டது.
பார்க்கலாம் நீயா? நானா? என்று மனதில் நினைத்தவள் அவ்விடம் விட்டு அகன்றாள். அது அறியாமல் காதல் பறவைகள் தங்களது உலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மேலே பறந்து சென்ற பறவை ஒன்று கவ்வி சென்ற பழம் நழுவி இவர்கள் அருகில் விழ நினைவு கலைந்து கௌதம் அவள் கையை பிடிக்க வர,
“கிட்ட வந்தா கொன்றுவேன் கௌ” என்று விலக
“கொன்னுடு, இந்த அவஸ்தை என்னால முடியல பக்கத்துல நீயிருந்தும் உன்னை கட்டாம கைகட்டி நிக்கற இந்த நிலமைய நான் அடியோடு வெறுக்கறேன்.”
“அய்ய என்ன இப்படி ஆய்ட்டீங்க, நான் இந்த ஆட்டத்துக்கு வரல, நான் கெளம்பறேன் பா ” என்றவள் ஓடிவிட்டாள்.
அவளறைக்கு சென்று புகுந்து கொள்ள அவளின் பின் வந்தவன் அவளறை கதவை தட்ட நினைத்து பின் வேண்டாம் என அவனது அறைக்கு சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் நாச்சியாரின் அறை கதவு தட்டபட, யாரென்று கதவை திறந்தால் அங்கே நிவி நின்று கொண்டிருந்தாள். இவளென்ன இங்கே என நினைத்தாலும் “என்ன வேணும்” என வாய் கேட்டது.
“அது ஒரு சின்ன ஹெல்ப்”
“என்ன”
“அது என்னோட செய்ன் அங்க ஸ்விம்மிங் பூல்ல விழுந்துடுச்சு அத எடுக்கனும்”
“அதுக்கு நான் என்ன பண்ணணும்”
“என்னால இந்த ட்ரெஸ் போட்டு எடுக்க முடியல, அதான் நீ வந்து எடுத்து தரியா”
முட்டிக்கால் வரையான சிவப்பு நிற இறுக்கமான உடை அது. “நம்மாள நல்லா நடக்க கூட முடியாது எப்படிதான் போட்டிருக்காளோ “ என நினைத்தாலும்,
“ஏன் வேற யாரும் இல்லயா”
“இல்ல ராகேஷ் காணோம், கௌதம ஏன் டிஸ்டர்ப் பண்ணணும் நீ வாயேன்”
யோசித்தாலும் “சரி வா” என்றவாறு முன்னே நடக்க பின்னால் மர்ம புன்னகையுடன் பின் தொடர்ந்தாள் நிவி.
நாச்சியாரை எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வெறி பிடித்தவள் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கண்டுபிடித்ததுதான் இந்த வழி.
ஒரு முறை தனக்கு நீச்சல் தெரியாது என்றும் தனக்கு பயம் என்றும் ராகேஷிடம் நாச்சியார் பேசிக் கொண்டிருந்ததை நிவி கேட்டிருந்தாள்.
அதனால் அவளை அதை வைத்து சிறிது மிரட்டி வீட்டை விட்டும் கௌதமை விட்டும் துரத்தலாம் என எண்ணியே இப்போது நாச்சியாரை அழைத்து செல்கிறாள். நீச்சல் குளம் அருகே வந்திருந்தனர்.
“எங்க இருக்கு உன்னோட செய்ன்”
“அதுவா தோ அங்கதான் இருக்கு பாரு”
“எங்க எனக்கு தெரியலயே”
“குனிஞ்சு பாரு, ஒன்றரை லட்சம் பிளாட்டினம் செய்ன் ”
அவள் சொன்னதை நம்பி இன்னும் நன்றாக குனிந்து பார்க்க சுற்றும் முற்றும் பார்த்தவள் தண்ணீரில் தள்ளி விட்டிருந்தாள்.
அவள் இப்படி தள்ளுவாள் என எதிர்பார்க்காத நாச்சியார் தண்ணீரில் விழுந்து உள்ளே போய் போய் வந்து கொண்டிருந்தாள்.
அவள் உயரத்திற்க்கு அது ஒன்றும் அவ்வளவு ஆழம் இல்லைதான், ஆனால் பயம் அவள் புத்தியை மறைத்து விட்டது.
அவளை ஒரு குரூர திருப்தியுடன் பார்த்த நிவி “இனி கௌதம நினைப்ப அதுக்குதான் இந்த தண்டனை” என கூறிக்கொண்டிருக்க
“ஹேய் ப்யூட்டி”
என கத்தியவாறு கௌதம் வந்து சேர்ந்தான்.
அவனறை பால்கனியில் அமர்ந்திருந்தவன் நாச்சியாரின் பேச்சுக்குரல் கேட்டு அவளை காண எழுந்து நின்று பார்த்திருந்தான். உடன் நிவியை பார்த்து நெற்றி சுருக்கியவன் அவர்களையே பார்த்திருக்க நீச்சல் குளம் அருகில் சென்றவள் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
எதை தேடுகிறாள் என நினைக்கும்போதே நிவி நாச்சாயாரை பின்னிருந்து தள்ளியதை பார்த்து ஓடி வந்திருந்தான். வந்தவன் விரைந்து நீரில் குதித்து அவளை மேலே இழுத்து வந்தான்.
அப்படி ஒன்றும் மோசமாகவில்லை, கொஞ்சம் பயந்து நடுங்கி கொண்டிருந்தாள். நிவியோ கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்.
ச்சே இவன் கரெக்டா வந்துட்டானே.நாம தள்ளினத பார்த்திருப்பானோ? ச்சே இருக்காது எதுக்கும் நூல் விட்டு பாப்போம்.
“அது நான் வேணாண்ணுதான் கௌதம் சொன்னேன் ஆனா இவதா……” பளீரென்று அறைந்த அறையில் நிவி நீச்சள் குளத்தில் விழுந்திருந்தாள்.
ஒரு விரலை நீட்டி எச்சரித்தவன் “நடிக்கற ராஸ்கல் பொண்ணா நீ ஒழுங்கா இப்பவே ஓடிப்போயிரு இல்ல நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவன் இருமிக் கொண்டிருந்த நாச்சியாரை தூக்கி சென்றிருந்தான்.
அவளறைக்கு சென்றவன் அவளை துணி மாற்றி கொள்ளுமாறு கூறி, பால்கனிக்கு சென்றுவிட்டான். அவள் மாற்றியவுடன் உள்ளே வந்தவன் இறுக்கமாக அணைத்து கொண்டான்.
“ஏன்டி அவகூட போன ”
“அவதான் செய்ன் எடுக்க கூப்டா”
அவ கூப்டா நீயும் போய்டுவியா லூசு கொஞ்ச நேரத்துல கொண்ணுட்டடி” என இறுக்க இவளும் பாந்தமாக அவனுள் அடங்கினாள்.
ஒரு மாதம் கழித்து இன்னும் ஒரு வாரத்தில் கௌதமிற்கும் ,நாச்சியார்க்கும் திருமணம் ஊரில் வைத்து.
கௌதம் தான் பாட்டியிடம் சொல்லி அவசரமாக திருமணத்தை வைக்க பணித்திருந்தான். நாச்சியாரின் வீட்டிலும் அனைவருக்கும் மகிழ்ச்சி. திருமண வேலைகள் மடமடவென்று நிகழ்ந்து கொண்டிருந்தன.
இதுவரை இவன் அவளை ஊருக்கு அனுப்பவில்லை. ஏன் என்று கேட்டவர்களை ஒருவாறு சமாளித்திருந்தான். இதோ இன்று நீச்சல் குளத்தில் வைத்து நாச்சியார் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
கையில் இவளுக்கான நீச்சல்உடையுடன் நின்று கொண்டிருந்தான்.
“ப்ளிஸ் கௌதம் மாமா வேணாமே”
“மாமா கூப்டா மயங்கிடுவோமா! நோ நீ இத செஞ்சிதான் ஆகனும். ”
அவள் பிடிவாதமாய் நிற்க
“சரி பரவால்ல இந்த ட்ரெஸ்ஸ விட தாவணி பாவாடைதான் எனக்கு வசதி நீ அப்படியே வா” என கையை பிடித்து இழுக்க
“விடு நானே வரேன்” என நீச்சல் உடை மாற்றி நெளிந்தபடி வந்தாள்.
அவளை நீரினுள் இறக்கி “ஒழுங்கா கத்துக்கற புரியுதா” என கர்மசிரத்தையாக சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான்.
அவள் தான் இவன் விரல்களின் ஸ்பரிசத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.
அன்று நிவியால் ஆபத்து ஏற்பட்டாலும் நீச்சல் தெரிந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது என எண்ணி அவளுக்கு வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
இதற்கு குடும்பத்தில் இருந்து ஏகோபத்த வரவேற்பு.பின்னே சிறுவயதில் நீச்சல் பழக்க கிணற்றில் குடுவையை கட்டி விட ,இவள் பயந்து போய் நீந்திக் கொண்டிருந்த கௌதமின் கழுத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவனுக்கோ குடுவை இல்லை.
எப்படியோ தினறி அவளை கீழே தள்ளி விட்டாருந்தான். உயிர் போய் உயிர் வந்த நிலமை அவனுக்கு.
அதிலிருந்து அவள் நீச்சல் பக்கம் சென்றதேயில்லை. இன்று அதை நினைத்துக்கொண்டவள்,
“கௌதமா இரு வரேன் என்கிட்டயேவா! ” என கூறிக்கொண்டவள் நொடியில் அவனை இழுத்து அவன் மேலே ஏறியிருந்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை.
“ஏய் பம்ப்கின் இறங்குடி. என்ன பன்ற நீ..திருந்தவே மாட்டியா! என்று அவளை கீழே இறக்கினான்.
“இதுக்குதான் சொன்னேன் கேட்டியா நீ” என நக்கலாக சிறித்தபடி கேட்க,
“இவ்வளவு வயிசாயிடுச்சு இன்னும் சின்ன புள்ளையாட்டம் அடம் பண்ற, ஏன்டி இத்தன வில்லத்தனம் பன்ற” என சுகமாய் சலித்துக் கொண்டான்.
” நாங்கலாம் அப்பவே அப்படி” இருந்தோம், இப்ப இருக்க மாட்டோமா! போயா..போயா போய் வேற வேலைய பாரு வந்துட்டாரு நீச்சல் கத்துக் கொடுக்க.”
அவளை ரசனையாய் பார்த்தவாறே “சரி கொஞ்ச நாள் நல்ல பையனா இருக்கலான்னு பார்த்தா விடமாட்டியே என்றவன் அவள் சுதாரித்து விலகும் முன் அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டு நீருக்குள் மூழ்கியிருந்தான்” (ஸ்ஸப்பா இந்த தடவ யாரும் பாக்கல)
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நாச்சியார் தன் இதழை தொட்டுப்பார்த்தவாறே “கெட்ட பய சார் இந்த கௌதம்” என அவன் நெஞ்சிலேயே அடைக்கலமானாள். இத்துடன் நாமும் விடைபெறுவோம்.