NN 16
NN 16
சிவாவின் விபத்தை எண்ணி எண்ணி காயத்ரி உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தாள் . ‘ எனக்குக் கனவு வர்ரதாலதான் எல்லாம் நடக்குது . நான் தூங்கலைன்னா கனவே வராது ! ‘ மனதில் அறிவாளியைப் போல் முடிவெடுத்தவள் உறங்காமல் இருக்க இரவெல்லாம் படிப்பது கல்லூரி ப்ராஜெக்ட் செய்வது என்று பொழுதைக் கழித்தாள்.
சிவா காயங்கள் ஆறும் வரை அலுவலகம் வரவேண்டாம் என்று கௌதம் எவ்வளவு சொல்லியும் அவன் அலுவலகம் செல்ல துவங்கினான்.
இரண்டுநாள் கழித்து ஆவணப்படம் எடுப்பதற்காய் காயத்ரி உதயா மற்றும் நண்பர்கள் மாலைவேளை சென்னை கடற்கரைக்குச் சென்றனர்.
அங்கு மாணவர்கள் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் பொழுது காயத்ரியின் போன் ஒலித்தது. சிவா அழைத்திருந்தான்
“சொல்லுங்க “
“காயு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ! “
“சொல்லுங்க “
“நீ என்னை மறந்திடு நான் உனக்குச் சரியானவன் இல்லை “
“என்ன பேசுறீங்க லூசுமாரி விளையாடாதீங்க சிவா எனக்கு வேலை இருக்கு ! “ காயத்ரிக்கு உலகமே சுற்றியது
“இல்ல காயு நான் நல்லா யோசிச்சுதான் சொல்றேன் ! லெட்ஸ் பிரேக் அப் “ அவன் குரல் உடைந்தது
“ சிவா…..பிரியலாம்னு இவ்ளோ ஈஸியா சொல்ரீங்க ? என்னால முடியாது ! விளையாடாதீங்க ! “ அழ ஆரம்பித்தாள்
“காயு ப்ளீஸ் நீ வேற நல்ல பையன கல்யாணம் பண்ணிக்கோ.” அவன் வார்த்தைகள் முட்டிமோதி வந்தது
“ஸ்டாப் இட் சிவா . உங்களால நான் இல்லாம இருக்க முடியுமா ? “ அழுகையுடன் ஆவேசம் கூடியது
“முடியாதுடி என்னால முடியாது. ஆனா நான் வாழப்போறேன்னு சொல்லல..உன்ன ஒரு தரம் கடைசியா பார்த்துப் போக வந்தேன்.கொஞ்சம் திரும்பு உன் முகத்தை பார்க்கணும் “ கெஞ்சினான்
திரும்பினாள்… தூரத்தில் சிவா அவளைப் பார்த்து கையை உயர்த்தி காட்டியவன் அலைபேசி அழைப்பைத் துண்டித்தான் !
“சிவா ! நில்லுங்க! “ அவனை நோக்கி ஓடினாள் அவனோ கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் .
“சிவா நில்லுங்க ! விளையாடாதீங்க ! ப்ளீஸ் “ முடிந்தமட்டும் கடற்கரை மணலில் ஓடினாள்.
காயத்ரி செல்வதைக் கண்ட லட்சுமி பின்னே ஓடினாள்.
“காயத்ரி நில்லு எங்க போறே ? நில்லு டி ! “ லட்சுமி வேகமெடுத்தான்.
“காயத்ரி ! நில்லு ! காயு ! அந்த பக்கம் தடைசெய்யப்பட்ட பகுதி போகாதே ! “ ஸ்ரீவத்ஸனும் அவன் பின்னே ஓடினான் .
“சிவா போறார் நான் போனும் . சிவா நில்லுங்க ! “ சொல்லிக்கொண்டே நில்லாமல் ஓடினாள்.
“சிவா ! ப்ளீஸ் ! எதுவானாலும் பேசித்தீர்த்துக்கலாம் ! எந்த முடியவும் எடுக்காதீங்க சிவா ! “ துடித்துக் கதறி அவனை நோக்கி ஓடினாள்
திரும்பி நின்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் மெதுவாக பின்னாடி சென்று “ ஐ லவ் யு காயத்ரி ! “ இரு கைகளையும் உயர்த்தி கத்தினான் .
அப்படியே பின்னாலே விழுந்தான் !
“அய்யோ ! சிவா ! “ நொடி தாமதிக்க வில்லை ஓடியவன் மறுநொடி குதித்திருந்தாள் !
“சிவா ! சிவா ! “ கண்முன்னே அவன் அவளைப் பார்த்தபடி கீழே மூழ்கிக்கொண்டிருக்க “ ஐ லவ் யு சிவா ! “ கண்களை மூடிக்கொண்டாள். உயிர் வதைபடும் வேதனை , அலைகள் அவளைப் புரட்டிப் போட்டது , தன்னுள்ளே அழுத்திக்கொண்டது! சுவாசம் முட்டியது. புலன்கள் அடங்கியது !
நொடியும் தாமதிக்காமல் ஸ்ரீவத்ஸன் அவளைக் காப்பாற்றக் கடலில் குதித்தான்.
பதறியடித்து கௌதமிற்கு போன் செய்து லட்சுமி அவனுக்கு விஷயத்தைச் சொன்னாள்.
உதயாவை தேற்ற யாராலும் முடியவில்லை “ காயத்ரி ஏண்டி இப்படி பண்ணே ! ஏண்டி என்னை விட்டு….” விடாமல் அவள் அழ அருகிலேயே அமர்ந்த லக்ஷ்மியும் அழுது கொண்டுதான் இருந்தாள்.
“அப்போவே சொன்னேன் அவ சாதாரணமா இல்லை ! நீங்க யாரும் அதை பெரிசா எடுத்துக்கலை ! இப்போ பார் என்ன ஆச்சு ? “ ஸ்ரீவட்சன் பெண்கள் இருவரையும் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தான்.
சுப்புவோ “இவங்க என்னடா பண்ணுவாங்க? அவ ஏன் இப்படி அரைலூசு மாதிரி செஞ்சாளோ ? ‘
“ காயத்ரி ! காயத்ரி ! “ வெறிபிடித்து போல் ஓடிவந்தான் சிவா !
மருத்துவமனை வளாகமே அதிரும் படி ஓடிவந்த சிவா மாணவர்களை பார்த்து “ காயத்ரி எங்க ? உதயா அவ எங்க ? “
பின்னாடியே ஓடி வந்த கௌதம் “ ஏண்டி எரும அறிவில்ல ? அவ தண்ணிக்கு போகுறவரை என்னடி பன்னிட்டு இருந்த ? “ பொறுமை இழந்து உதயாவை திட்ட
“ நான் அவளை கவனிக்கலை டா . நாங்க ஷூட்டிங்கில் இருந்தோம் அப்போதான் அவ..” தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“அவளை எங்க… ” சிவாவிற்கு வார்த்தையே வரவில்லை.
ஸ்ரீவத்ஸன் கைகாட்டிய அறையினுள் நுழைந்தவனின் கால் நடுங்கியது. கண்கள் குளமாக கதவருகிலேயே உரைந்தான்.
“காயு ! ” அவனிற்கே கேட்காத வண்ணம் அழைத்தான்.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள் அவள். அவளை நெருங்கிவன் நடுங்கிய கைகளால் அவள் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கைகளை மென்மையாக வருடிக் கொடுத்து
“காயு ஏண்டி இப்படி..?” குரல் தழுதழுக்க தன்னவளை மென்மையாக வருடி கொடுத்தான்.
” எழுந்து வா பிலீஸ் ! என்னால நீ இல்லாம வாழ முடியாதுடீ ! ” அவளை விட்டு பார்வை விலக்காமல் நின்றுருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே இருந்துருப்பானோ தெரியாது.
நர்ஸ் வந்து வெளியே அனுப்பும் வரை சிவா காயத்ரியுடனே இருந்தான்.
மருந்தின் வீரியத்தால் மறுநாள் வரை அவள் கண்விழிக்கவில்லை.
தனியறைக்கு மாற்றப்பட்டவள் கண்விழித்த நேரம் சிவா கௌதம் இருவரும் அவலருகிலேயே இருந்தனர்.
கண்விழித்ததும் அவள் மனம் சுயநினைவை இழக்கும்முன் தன் கண்முன்னே சிவா கடலில் மூழ்கியது காட்சியாய் விரிய அலறிக் கண்களை திறந்தாள்.
தன் அருகிலேயே அமர்ந்திருந்த சிவாவை பார்த்ததும்
“ சிவா ! ஏண்டா என்னை விட்டு போக பார்த்தே ? செத்தாலும் நானும் உன்கூடவே வந்துட்டேன் பாரு ! “ கலங்கிய கண்களுடன் வெற்றுப் புன்னகையை சிந்தி சொல்ல
அவள் வார்த்தைகள் அவன் இதயத்தை முள்ளாய் குத்திக் கிழித்தது . அவ்வலி கண்கள் வழியே நீராய் வெளிப்பட்டது.
நொடி தாமதிக்காமல் அவளை அப்படியே அனைத்துக் கொண்டான்.
“ காயு ! “ வேறு வார்த்தை வரவில்லை. அங்கே அது தேவையும் படவுமில்லை.
மாலையில் மனோநல மருத்துவர் அவளை பரிசோதித்த பின்பு சிவாவையும் கௌதமையும் தனியாய் அழைத்தார்.
அங்கே மருத்துவரின் அறையில்
“நீங்க தானே அவங்க அண்ணன் கௌதம் ? இவர் ? “
“ ஆமா டாக்டர்! இவன் சிவா என் பிரென்ட்! அவளை கல்யாணம் செய்துக்க போகுறவன் ! “
சிவாவை உற்றுநோக்கி கேட்டார் “ ஓஹ் நீங்கதான் அந்த சிவாவா ? ம்ம்ம் “ சிறிது மௌனத்திற்கு பின் “ அவங்களுக்கு என்ன நடந்துருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ? “
சிவாவும் கௌதமும் ஒன்றுசேர தெரியாது என்பது போல் தலையசைக்க.
“நீங்க அங்க வந்தப்போ என்ன சொன்னாங்க மிஸ் காயத்ரியோட நண்பர்கள் ? “
கௌதமோ ஒன்றும் விளங்காமல் தனக்கு தெரிந்தவரை சொல்ல துவங்கினான் “ டாக்டர் நானும் சிவாவும் எங்க ஆஃபிஸில் இருந்தோம். அப்போ லட்சுமி என் பியான்சி போன் செஞ்சு காயத்ரி கடல்ல சிவா சிவான்னு காத்திக்கிட்டு குதிச்சதா சொன்னா! நாங்க ஒடனே ஓடிவந்தோம் ! மத்தபடி…”
சிவா வோ “ நான் அங்க இருக்கும் பொழுது எப்படி?…. காயத்ரி என்னை எப்படி பீச்சில் பார்த்திருக்க முடியும்? தலையே வெடிக்கும் போல இருக்கு ! என் காயுவுக்கு என்னதான் ஆச்சு டாக்டர் ? “ முழுவதுமாய் உடைந்திருந்தான் அவன் குரலே அதற்கு ஆதாரமாய்.
“ அவங்க தூக்க பழக்கம் எப்படி ? “ பொதுவாகவே கேட்டார் மருத்துவர்
“ சில நாள் தவிர நார்மலாதான் தூங்குவா “ சிவா பதிலளித்தான்.
“ உங்களுக்கெப்படி ? “ மருத்துவர் முடிக்கும் முன்.
சிவா “நாங்க எல்லாருமே ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கோம்.”
அவனை தீர்க்கமாய் பார்த்த மருத்துவர் “ம்ம் சரி நான் அவங்கள டெஸ்ட் பண்ணவரை அவங்க கிட்டத்தட்ட 3 நாளுக்கு மேல தூங்காமல் இருந்திருக்குறாங்க ! “
“ வாட் ? “ சிவா கௌதம் இருவருமே அதிர்ந்தனர்.
தொண்டர்ந்த மருத்துவர் “ எஸ் அவங்க தூங்கவே பயப்படுறாங்க ! காரணம் கேட்டா அவங்க சொல்ல தயாரா இல்லை ! நான் தூங்கினா என் குடும்பத்துக்கு ஆபத்துனு சொல்ராங்க வேற ஒன்னுமே சொல்ல மறுக்குறாங்க ! “ என்னனு உங்களுக்கு தெரியுமா ? “
அவள் கனவுகளை பற்றி இவரிடம் சொல்லுவது உச்சிதமாகுமா ஆகாதா அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவே மௌனமாக இருக்க.
“ ம்ம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் மெதுவா பேசிப்பாருங்க ! டிஸ்சார்ஜ் ஆன அப்புறம் அவங்க கிட்ட மெதுவா பேசி அவங்களை கவுன்செலிங் கூட்டிக்கிட்டு வாங்க. ஏன் சொல்றேன்னா“
அவர் ஒருநிறுத்தம் கொடுக்க நண்பர்கள் இருவர் இதயமும் இருமடங்கு துடித்தது.
“ ஒரு மனுஷன் 36 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரை தூங்காமல் இருந்தால் அவனால் சாதனரமாக செயல் படமுடியாது. 48 மணிநேரம் தூங்காமல் இருந்தால் அவன் உடலில் ரத்த அழுத்தம் , ஹார்மோன் ப்ரொப்லெம்ஸ் ஸ்டார்ட் ஆகும் . “
அவர் சொல்ல சொல்ல இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் புரியத்துவங்கியது ..
மேலும் தொடர்ந்த மருத்துவர் “ 72 மணிநேரம் தூங்காமல் இருந்துருக்காங்க ஓஹ் காட் ! அப்படி ஒரு மனுஷன் இருந்தால் அவனால் சாதாரணமா செயல்பட முடியாது, நடமாடுவதே கஷ்டமாகும்..ஹெலூஸினேஷன் அதாவது மாயத்தோற்றம்ன்னு சொல்வோம். நடக்காத விஷயங்கள் கண்முன்னே நடப்பதுபோல் தோன்றும் ! நிஜமெது கற்பனை எதுன்னு அவர்களால் பிரித்து சொல்ல முடியாது !
அதுதான் நடந்திருக்கு அவங்க கற்பனையில் நீங்க தற்கொலை செஞ்சுக்கிட்டதா நெனச்சு தானும் செத்துவிட நெனச்சு கடலில் குதிச்சு இருக்காங்க! “
சிவாவிற்கு உலகமே நின்றது அவள் தூங்காமல் இருந்த கரணம் ஊர்ஜிதமானது ! ‘ பைத்தியக்காரி ! எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறா ! ‘ மனம் தன்னவளை எண்ணி துடித்தது
“நீங்க கொஞ்சநாள் அவங்க கூடவே இருங்க தூங்கும் பொழுதும் . அவர்கள் நார்மல் மனநிலைக்கு வரும் வரை ! ஒரு வாரம் பொறுத்து வாங்க டிரீட்மென்ட் ஆரம்பிப்போம். இப்போ அவங்க உடலும் மனசும் எந்த ட்ரீட்மென்ட்டையும் தாங்கும் நிலையில் இல்லை.
அவங்களை பத்திரமா பார்த்துக்கோங்க.கூடவே யாராவது இருங்க. எந்த வித ஏமோசின்ஸ்சும் அதிகமாகம பார்த்துக்கோங்க. மகிழ்ச்சியான மனநிலை அவங்களை சீக்கிரம் பழைய படி மற்றும்! “
மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்த நண்பர்கள் மனம் பாரமாகி போக
“ பாவம் டா அவ ! கனவுக்கு பயந்து தூங்காம இருந்திருக்கா ! நான் கூட காலேஜ் வேலை அதான் பேசாம இருக்குறன்னு நெனச்சேன்! “ சிவா அங்கே சுவற்றில் தலை சாய்த்துக்கொண்டான்
“ நானாவது அவகிட்ட பேசி இருக்கனும் ! உனக்கு அடிபட்டதுலிருந்தே அவ சரி இல்லை. சரி ஆகிடுவான்னு விட்டேன் என்தப்பு.இனி அவகூட நாம இருந்துகிட்டே இருக்கனும் ! “ கௌதம் தீர்க்கமாய் சொல்ல
சிவா தலையை அசைத்து “ இனி அவ நம் கண்பார்வையிலேயே இருக்கட்டும்! “
வீட்டிற்கு அவளை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து
வந்தது முதல் முவரும் மாறி மாறி எதோ கரணம் சொல்லி காயத்ரியுடனே இருந்தனர்.
இரவு நேரங்களில் உதயா காயத்ரிக்கு துணையாய் படுத்துக்கொண்டாள். கல்லூரியிலும் நண்பர்கள் அவளை சுற்றியே இருந்தறனர்.
நடந்ததை பற்றி அவளிடம் யாருமே கேட்கவோ விவாதிக்கவோ இல்லை. அவளும் ஓட்டிற்குள் நத்தையை போல் சுருங்கியே இருந்தாள்.
ஒருவாரம் கழித்து சிவாவிற்கு தாரிக்கா போன் செய்தாள் ” சாரி டார்லிங் ! நான் அவசரமா அமேரிக்கா போக வேண்டி இருந்துது. நேத்துதான் வந்தேன் .நம்ம எங்கேஜ்மென்ட் தேதி பிக்ஸ் ஆனதா அப்பா சொன்னார். ஐ ஆம் சோ ஹாப்பி ! இன்னிக்கி மீட் பண்ணுவோமா? ” என்று பரபரக்க
” சாரி தாரிகா ! உதயா கல்யாணத்துக்காக இன்னிக்கி நாங்க எல்லாரும் புடவை துணிமணி வாங்க போறோம். ” என்று சிவா சமாளிக்க
” சூப்பர் நானும் வரேன் , நம்ம என்கேஜ்மெண்டுக்கும் ஷாப்பிங் பண்லாம் ” என்று அவள் பரபரக்க
சிறிது நேரம் மௌனமாய் இருந்த சிவா ” சரி வா. மதியம் 1 மணிக்கு இங்க வந்துரு எல்லாரும் சேர்ந்து போகலாம்” என்று சொல்லி போனை வைத்தவன் முகமெல்ல விஷம புன்னகையுடன் கௌதமை நோக்கி
” மச்சி ! தானே வந்து சிக்குறா டா. அப்பனுக்கும் பொண்ணுக்கும் இதே வேலை நாம தேடி போகவே வேண்டாம் தானா வந்து சிக்குதுங்க “ என்று சிரித்த சிவா மேலும் “ இன்னிக்கி மைதாமாவு நம்ம கூட ஷாப்பிங் வராளாம். காயுவும் மூடவுட்ல இருக்கா இத யூஸ் பண்ணி கொஞ்சம் அவளை பழையபடி ஆக்குவோமா ?” என்றான் கௌதமிடம் குதூகலமாக
” பேஷா செஞ்சுடுவோம் ! ” என்று அவனும் சேர்ந்து கொண்டான்
தாரிக்காவோ ஆர்வ கோளாறில் 12 மணிக்கே அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டாள் . உதயாவையும் காயத்ரியையும் அங்கு கண்டவுடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவர்களை முறைத்த படியே சோபாவில் உக்கார்ந்து இருந்தாள் தாரிகா.
காஃபி எடுத்து வரோம்ன்னு சொல்லி சமையல் அறைக்குள் புகுந்த பெண்களோ
” என்னடி காயு இவ இப்படி டிரஸ் பன்னிட்டு வந்துருக்கா ? நான் கூட மொதல்ல பேண்ட் போட மறந்துட்டான்னு நெனச்சேன் அப்புறம் பார்த்தா அவ ட்ரெஸ்ஸே அந்த நீளம்தான்னு , திநகர் போக இந்த அலபாரை அவசியமா ? எதோ பார்ட்டிக்கு போற மாதிரி வந்துருக்கா ! தெருல இருக்குற நாயெல்லாம் இவளையே துரத்த போகுது பாரு. ” என்று சொல்லி உதயா சிரிக்க
” ஹே ஏண்டி ? அவ முன்னாடி ரொம்ப வெறுப்பை காட்டிக்காம இருக்கணும்னு நெனைக்கிறேன் நீவேற ” என்று காயத்ரி சொல்லி கொண்டே தாரிக்காவிற்கு காபி போட
தன்னுடைய மொக்கை ஜோகிற்கெல்லாம் சிரிக்கும் தோழி இப்படி எதோ போல் இருக்க உதயாவால் தாங்க முடியவில்லை. எப்படியாவது அவள் மனதை மாற்ற திட்டம் தீட்டியவள்
” காயு ! இரு ! அவளுக்கு புது டிகாக்க்ஷன் ஒரு கேடா? நான் அவளுக்கு காபி போடறேன் ” என்று சொல்லி. கீழே கொட்ட வைத்திருந்த பழைய டிகாக்க்ஷனை எடுத்து காபி போட்டாள் உதயா .
” ஐயோ கேவலமா இருக்கும் டி ! ” என்று காயத்ரி வாயெடுக்கும் முன்பே ” அவளுக்கு இது போதும். பிரெஷ் டிகாக்ஷின்ல எனக்கும் கௌதமுக்கும் சூப்பர் காபி போடுவியாம் . நான் இத அந்த பேடா கிட்ட கொடுத்திட்டு வரேன் ” என்று உதய காஃபி கோப்பையை நுரை வரும் படி ஆத்த
” பேடா? ” என்று காயத்ரி புருவம் உயர்த்த
“ஆமா ஏற்கனவே பயமுடுதுற மாதிரி வெள்ளை. இதுல நாலு இஞ்சுக்கு மேக்கப். அதுக்குள்ள அவ முகத்தை தேடணும்னா பள்ளம் தோண்டி பார்த்தாதான் உண்டு. அதான் பெயிண்ட் டப்பான்னு பெருவச்சுருக்கேன்! சுருக்கமா பேடா. ” என்று சொல்லி கண்ணடித்து கொண்டே உதயா காபியுடன் ஹாலிற்கு சென்றாள்.
பல நாட்களுக்குப் பிறகு முகத்தில் மெல்லிய புன்னகையோடு வேலையைத் தொடர்ந்தாள் காயத்ரி.
சிவாவும் கௌதமும் தயாராகக் கீழே வந்து சேர , தாரிகாவை பார்த்த கௌதமோ , விஜய் சேதுபதி ஸ்டைலில் ” ப்ப்பாஆ யார்ரா இந்த பொண்ணு ” என்பது போலச் சிவா காதில் சொல்ல , சிவாவோ சிரித்துக் கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான்
” என்ன சிவா ஒரே சிரிப்பு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல ? ” என்று தாரிக்கா கேட்க
” ஒன்றும் இல்லை ரொம்ப நாள் அப்புறமா உங்களைப் பார்க்கிறான் அதான் ஒரே சந்தோஷம் சாருக்கு” என்று கௌதம் சொல்ல தாரிகாவிற்கு இருப்புக் கொள்ள வில்லை.
உதயா கொடுத்த காபியை ஒரு சிப் குடித்தவளின் முகம் அஷ்ட கோணலாகிப் போக ‘ பழைய டிகாக்க்ஷன் சக்கரையும் போடவில்லை என்ஜாய் பேடா ‘ என்று மனதில் சொல்லிக்கொண்டாள் உதயா ,
” என்ன காப்பி சூப்பரா இருக்கா ? இது அண்ணா வெளி நாட்டிலிருந்து வரவழிச்ச காஃபி பொடி. அவருக்கு எப்படிப் பிடிக்குமே அதே மாதிரி போட்டு இருக்கேன் ” என்று சொல்லி சிவாவை சில்மிஷமாய் பார்க்க.
” நான் காஃபியே குடிக்கமாட்டேன் ” என்று உளறிய சிவா. கௌதம் உதயா இருவரின் முறைப்பையும் வாங்கிக்கட்டிக் கொண்டான்.
டக்கென்று சுதாரித்துக் கொண்டு ” நான் நம்ம ஊரு காஃபி குடிக்க மாட்டேன் ஒன்லி இம்போர்ட்டட் , அதுலயும் இதான் எனக்குப் பிடித்த வகை ” என்று சொல்லி உப்ப்ப என்று மூச்சு விட்டான்.’ அப்பாடா சமாளித்தோம் ! ‘ மனதில் தன்னைத்தானே மெச்சிக்கொண்டான்.
குடிக்க முடியாமல் விழி பிதுங்கிய தாரிகாவோ சிவா சொன்னதைக் கேட்டு கொமட்டிய பொழுதும் அந்த காபியை விழுங்கி ” எஸ் சூப்பர் ! நம்மூர் காஃபி எல்லாம் ஒரு காப்பியா? உங்களுக்கு நல்ல ரசனை டார்லிங்! ” என்று அவள் சொல்லி முடிக்க
“தேங்க்ஸ் டார்லிங்” என்று சிவா சொல்ல . கிச்சனில் பாத்திரம் உருண்டது.
கோவமாக காபியைக் கொண்டுவந்து கௌதமிற்கும் உதயாவிற்கும் கொடுத்துவிட்டு சோபாவில் உதயாவின் அருகில் அமர்ந்தாள் காயத்ரி.
“ காயு எனக்குக் குடிக்க ? ” என்று சிவா பாவமாகக் கேட்க.
அவளோ முறைத்துக்கொண்டு ” ம்ம் பால் தீந்து போச்சு ! ” என்று சொல்லி தோளை குலுக்கிக்கொண்டு திரும்பினாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் சிவா பாவமாய் கௌதமை பார்க்க , நிலைமையைச் சமாளிக்கும் வண்ணம் “சரி நேரம் ஆச்சு கிளம்புவோம் ! “என்று அனைவரையும் கௌதம் கிளப்ப . விட்டால் போதும் என்று விறுவிறுவென வண்டியை எடுக்கப் புறப்பட்டான் சிவா.