OVOV 40

OVOV 40

தசாவதாரம்’ படத்தில் கமல் சொல்லும் ‘chaos theory’ எப்படி ஒரு பட்டாம் பூச்சியின் சிறகடிப்பிற்கும், சுனாமிக்கும் ஒரு தொடர்பை சொல்கிறதோ, அதை போல் அங்கு சங்கிலி தொடர் போன்ற அமைப்பு ஒன்றை ப்ரீத்தியால் காண முடிந்தது.

காலையில் இருந்து நடப்பது ஒவ்வொன்றிற்கும்  இருக்கும் தொடர்பினை மனதிற்குள் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.”Individual events” எப்படி linked என்பதை மற்றவர்கள் உணரவில்லையா இல்லை உணரும் நிலையில் அவர்கள் இல்லாமல் டிஸ்ட்ராக்ட் ஆகி இருந்தார்களா?

அர்ஜுனின் நிற்காத புலம்பல் தன் அன்னையின் உடல் நிலை பற்றிய செய்தி வந்ததில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது.

“போன வாரம் தானே வீட்டில் எல்லோருக்கும் மெடிக்கல் செக் அப் செய்தேன்.யாருக்கும் எதுவும் இல்லை என்று தானே மருத்துவ அறிக்கை வந்தது.”என்ற அர்ஜுன் புலம்பல் வேறு அவள் நெருடலை முதலில் ஆரம்பித்து வைத்தது.

‘யோகா,EXERCISE செய்து ‘ஷில்பா ஷெட்டி’ மாதிரி, அந்த வயதிலும் இன்றைய இளைய தலைமுறையை விட, மிகவும் நன்றாகவே இருப்பவர் அர்ஜுன் அம்மா.அவங்களுக்கு MASSIVE ஹார்ட் அட்டாக், அதுவும் காப்பாற்றவே முடியாத அளவிற்கு….நம்புற  மாதிரி இல்லையே’ என்பது தான் ப்ரீத்தியின் முதல் எண்ணமாக இருந்தது.

அவளும் அவரை பார்த்து தானே இருக்கிறாள். சாப்பிட்டு, சாப்பிட்டு டிவி தொடர்களில் முழுகி, தங்கள் உடல் நலத்தை பற்றிய கவலை இல்லாத பெண்மணி இல்லை ராஷ்மி. தனக்கு என்று “Quality டைம்” ஒதுக்கி அழகு, ஆரோகியத்தை, மூளையை ரிலாக்ஸ் செய்து கொள்ளும் வகை.

‘அவருக்கு இப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது ஒருவேளை அவர் மீது பாசம் வைத்து விட்ட மனதின் நம்பிக்கையோ?’ என்ற எண்ணம் எழுந்த நெருடலை கூட தள்ளி வைக்க சொன்னது.

அடுத்த நெருடல் அங்கு வந்த சரண் முகத்தில் தாயிற்கு ஒன்று என்ற பதட்டம் முற்றிலும் இல்லவே இல்லை.

‘இது என்னடா கால கொடுமையா இருக்கு…. போலீஸ் தங்கள் உணர்வுகளை வெளியே காட்டி கொள்ள கூடாது தான் என்றாலும் அது பொது மக்களின் முன்பும், குற்றவாளிகளின் முன்பும் தானே?

சொந்த தாய்க்கு ஒன்று என்ற பிறகும் கூட ‘டெர்மினேட்டர்/ Terminator’ படங்களில் வரும் ரோபோட்கள் போல் முகத்தில் ஒரு உணர்வினையும் காட்டாமல் இந்த காக்கி சட்டை என்ன இவ்வளவு விறைப்பா நிக்குறார்?ஒருவேளை சிரிக்கவே தெரியாத “RACE GURRAM’ படத்தில் வரும் ‘ஸ்ருதி ஹாசனின்’ ஆண்பால் இந்த சரண்பாலோ?’ என்று மூளை கேள்வி எழுப்பியது.    

முகத்தில் உணர்வு எதுவும் இல்லாமல் “தல்வார்” பத்திரிகை நிருபரான திலீப் உடன் வெகு நேரம் எதையோ சொல்லி கொண்டு இருந்தான்.உடல் மொழி,அங்க அசைவுகள் சரண் ஏதோ திலீப்புக்கு கட்டளை இடுகிறான் என்பதாக தான் ப்ரீத்தியின் கண்களுக்கு தோன்றியது.

எந்த ஹாஸ்பிடலில் ராஷ்மி சேர்க்கப்பட போகிறார் என்ற தகவலை சரண் சொல்லவே இல்லை.அவனுக்கே தெரியவில்லையா, இல்லை சொல்லாமல் மறைக்கிறானா என்ற சந்தேகம் ப்ரீத்திக்கு எழ,

‘வர வர லூசாகிட்டு இருக்கே ப்ரீத்தி செல்லம். அம்மா உயிருக்கு போராடும் போது யாராவது இப்படி செய்வார்களா? சரண் அண்ணாவுக்கே அவங்களை எங்கே கூட்டிட்டு போறாங்க என்று தெரிந்து இருக்காது. பக்கத்தில் இன்னொரு தனியார் மருத்துவமனை ஒன்று இருக்கிறது என்று அர்ஜுன் சொல்லிட்டே தானே இருந்தார்.’ என்று ‘இப்படி எல்லாம் யோசிக்கும் தன் மூளையை என்ன செய்யலாம்?’ என்று அடுத்த யோசனை ஓடியது.

 ஹாஸ்பிடல் கிளம்பி கொண்டு இருந்த அர்ஜுன்,பஞ்சாப் முதலமைச்சர் தர்மாவின் பெயரை காக்க தேங்கி நின்று இருந்தான். ப்ரீத்தி விருது வேண்டாம் என்றதும் அதை பெருந்தன்மையோடு ஏற்று கொண்ட தர்மாவின் அன்பு அவளுக்கும் பிடித்தே தான் இருந்தது.

பேட்டி கொடுக்க வேண்டும் என்று பேசி அனைவரும் ஒரு மனதாய் ஏற்று கொண்ட பிறகு, திலீப்பின் முதல் கேள்வியே அர்ஜுன் அம்மாவின் உடல் நிலை பற்றியதாக இருக்குமே, இதை அர்ஜுன் எப்படி தாங்க போகிறான் என்ற பயம் ப்ரீத்திக்கு இருந்தது

‘MOTHER SENTIMENT’ என்பது எப்பவுமே ஹயிலி சென்சேஷனல்/ Highly sensational’ சப்ஜெக்ட் அனைவர்க்கும். சோ TRP ரேட்டிங் எகிற நிச்சயம் முதல் கேள்வி திலீப்பிடம் இருந்து ராஷ்மியை பற்றியதாக தானே இருக்கும்.

“யாஷ்வி உயிரை காப்பாற்றிய அர்ஜுனின் அம்மா கவலைக்கிடம். பிழைப்பாரா? இடைவேளைக்கு பிறகு அவர் மகன் அர்ஜுனிடம் இதற்கான பதிலை பெறுவோம்.”என்று பிரேக்கிங் நியூஸ் ஓடும்.கட்டையை தூக்கி திலீப் நடு மண்டையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க கட்டையை தேடும் நிலையில் இருந்தாள் ப்ரீத்தி.

அவளும் தானே பார்த்து கொண்டு இருக்கிறாள் அர்ஜுன் துடிப்பதை. அவன் இப்படி துடிப்பதை காண ப்ரீத்தியால் முடியவில்லை.வேக வேக மூச்சுகள் எடுத்து தன்னை சமாளிக்க அவன் போராடுவதையும், கண்களில் கண்ணீரின் பளபளப்பும், வாய் விட்டு கதறி அழுது விட கூடாதே என்று உதட்டினை அழுந்த மூடி அவன் நின்ற விதம் ப்ரீத்தியை அசைத்து பார்த்தது.

ப்ரீத்தி ஆறுதலாய் அவன் கையை பற்றி கொள்ள,அர்ஜுன் அழுத்தி பிடித்த  அழுத்தத்தில்  ‘புத்தூருக்கு, தான் செல்ல வேண்டி வருமோ?’ என்று ப்ரீத்தி  பயந்து விட்டாள். அடுத்த நொடி அத்தனை பேரின் முன்பும் இழுத்து அவளை மார்போடு அணைத்து இருந்தான்.

நல்லவேளை இது எல்லாம் ஒரு அறைக்குள் அர்ஜுன் குடும்பத்தின் முன் மட்டுமே நடந்தது.வெளியே செய்தியாளர் கூட்டத்தின் முன் நடக்கவில்லை.

‘ஐயோ ஆத்தி….மலைப்பாம்பு கிட்டே சிக்கினால் கூட இந்த அளவிற்கு இறுக்கம் இருக்காது போலிருக்கே.யம்மா மூச்சே விட முடியல டா சாமி….மயக்கமே வந்துடும் போலிருக்கே.’ என்று ப்ரீத்தி அலண்டு போகும் அளவிற்கு இருந்தது அர்ஜுனின் அணைப்பு.

‘இந்த பய புள்ள ‘உன் முதுகை துளைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே’ …என்ற வைரமுத்து வரிகளை நிஜ வாழ்க்கையில் டெமோ செய்து காட்ட முடிவு செய்துட்டானா என்ன?’ என்று ப்ரீத்தி திணறி, “அர்ஜுன்…அர்ஜுன் …ஐ காண்ட் ப்ரீத் …”என்று ஒன்றிற்கு ரெண்டு முறை சொன்னதற்கு பிறகே அர்ஜுன் பிடி தளர்ந்தது.

அவன் மனநிலை ப்ரீத்திக்கும் புரிந்தே தான் இருந்தது.அந்த நேரத்திற்கு அர்ஜுன் என்ற திட மனிதன் மறைந்து தாய்க்கு என்னவோ என்று பதறும் ஒரு மகனாய், சிறுவனாய் தான் ப்ரீத்தியின் கண்களுக்கு தெரிந்தான். அவனை மடி தாங்கும் இன்னொரு அன்னையாய்  அந்த நொடி மாறி அர்ஜுனை  ஏந்தி கொண்டாள் ப்ரீத்தி. 

துக்கம்,துயரம்,ஆபத்து என்று எது வந்த போதும் ப்ரீத்தி அர்ஜுனிடமும், அர்ஜுன் ப்ரீதியிடம் தான் ஆறுதலை தேடி சரணடைந்து கொண்டு இருந்தார்கள்.

‘இப்படி கலங்கி கொண்டு இருப்பவன் எப்படி பேட்டியில் முதல் கேள்வியான தாயின் உடல் நலத்தை பற்றி தாங்குவான்?’ என்று தயங்கியவாறே தான் அந்த பேட்டி அளிக்க சென்றது.

ஆனால் ப்ரீத்தி பயந்த மாதிரி திலீப்பிடம் இருந்து வந்த முதல் கேள்வி ராஷ்மி உடல் நலத்தை பற்றியது இல்லை என்ற உடன் ஒரு கணம் ப்ரீத்திக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘ஒருவேளை இந்த நியூஸ் பற்றி போட கூடாது என்று தான் சரண் அண்ணா சொல்லிட்டு இருந்தார் போலிருக்கு.நாம தான் அவரை சந்தேக பட்டு விட்டோம் …CASHEW …CASHEW …அவசரம்…அவசரம்டீ உனக்கு. பாவம் ஒரு பக்கம் வேலை…இன்னொரு பக்கம் அம்மா என்று அந்த அண்ணாவே ஓடிட்டு இருக்கார்…அவரை போய் …சீ போடீ லூசச்சி.’என்று மனம் தாளித்து கொட்டியது.

பேட்டி ஆரம்பமாகி,ஒவ்வொருத்தரையும் வெவ்வேறு கேள்விகள் கேட்டு கடைசியாய் இவர்களுக்கு தர்மா கொடுக்க போகும் விருதில் வந்து நிற்க,கமிஷ்னர் உடனே

“அது முதலமைச்சர் வீட்டில் ‘பிரைவேட் விழாவாக நடக்கும்.இதை பற்றி வேறு தகவல் கொடுக்க முடியாது.புகைப்படம்,வீடியோ,நியூஸ் கவரேஜ் அனுமதி இல்லை.” என்ற ராஜேஷ் பேச்சை கேட்டு பெரும் சலசலப்பு எழுந்தது.

‘அது எப்படி எங்களுக்கு தெரியாமல் விருது கொடுக்கலாம்?

‘எங்க வீடு பிள்ளைங்க ஆச்சே.’

‘அரசு மிக பெரிய விழாவாக இதை நடத்த வேண்டும்’ என்ற குரல் கூடியிருந்த மக்களிடம் இருந்து எழும்பியது.

அப்பொழுது தான் அது நடந்தது

“அர்ஜுன் உங்க அம்மா MASSIVE ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலுக்கு தான் அழைத்து வந்துட்டு இருக்காங்களாமே… எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய போறாங்க? இப்போ அவங்க உடல் நிலை எப்படி இருக்கு?’ என்று ராஷ்மியை போகஸ் செய்து பறந்தது திலீப் கேள்விகள்.

அவன் கேள்வி எழுந்த உடன் “PINDROP SILENCE” என்று அந்த சுற்றுப்புறமே அமைதியாகி விட்டது.மக்களின் முகத்தில் உட்சபட்ச திகைப்பு.சில கண்களில் கண்ணீர்.

“அர்ஜுன் அம்மா உடல் நிலை காரணமாய் இவர்கள் ஹாஸ்பிடல் போக வேண்டி இருப்பதால் இவர்கள் உடனே போக வேண்டும்.உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.நன்றி.”என்று ராஜேஷ் அந்த பேட்டியினை முடித்து விட, மேலும் கேள்விகளோ, விருது பற்றியோ அதன் பிறகு எந்த கேள்வியும் எழவில்லை.

பஞ்சாபில் பெயர் பெற்ற குடும்பம்.ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், துக்கடா கட்சியாக இருந்தாலும் இவர்களுக்கு மரியாதையை கொடுக்க தவறியதே இல்லை. ‘கிங் மேக்கேர்ஸ்’ என்று கூட அர்ஜுன் குடும்பத்தை சொல்லலாம்.அந்த அளவிற்கு பல தலைமுறையாய் இந்திய அரசியலில்,சுதந்திர போராட்டத்தில், மக்கள் சேவையில் என்று தங்களை ஈடுபடுத்தி கொண்டு இருப்பவர்கள்.

அப்படியொரு அரசியல் செல்வாக்கு,மக்கள் செல்வாக்கு  உள்ள குடும்பம்.பொது மக்களும் இந்த குடும்பத்தை தங்களுள் ஒருவராய் தான் பார்த்தார்கள்.அப்படி ஒரு பாசம்.

‘இந்த நியூஸ் பேட்டி ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடம் முன்பே திலீப்புக்கு தெரிவித்து விட்டார் தானே சரண் அண்ணா…பேட்டியின் முதல் கேள்வியே அதுவாக தானே இருந்திருக்க வேண்டும்.இப்போ சென்சேஷன் நியூஸ் அது தானே? ‘யாஷ்வியை காப்பாற்றிய அர்ஜுன் அம்மா உடல்நிலை கவலைக்கிடம்’- இதை விடவா TRP ஏற்ற முடியும்?

விருது   ‘பிரைவேட் நிகழ்ச்சி போட்டோ எடுக்க அனுமதி இல்லை’ என்றதும் மக்களின், ஊடகங்களின் ரியாக்ஷன் தெரிந்த பிறகு ,திலீப் ராஷ்மியின் உடல் நலத்தை எல்லோருக்கும் தெரியபடுத்தியத்தின் பின்னணி என்ன?

யாரின் கவனத்தை திசை திருப்ப,யாரை ஏமாற்ற இந்த நியூஸ் இந்த நொடி வெளியே சொல்லப்பட்டது?

அந்த நொடி ராஷ்மி உடல் நிலை தெரியப்படுத்தியது, விருது பற்றிய சர்ச்சைகளை, மேலும் போதை மருந்து பற்றிய கேள்விகளை அப்படியே அடக்கி விட்டது.ஒரு கோட்டினை சின்னத்தாக்க  அதை விட பெரிய இன்னொரு கோடு  போடுவது போன்ற  மூலோபாயம்/strategy.

‘ஒரு செய்தியை வெளியிடுகிறோம் என்றால்அதற்கான நேரம்,காலம், அது யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்களின் மனநிலை மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று.அதை மிக சரியாக திலீப் கையாண்டான் என்று சொல்லலாமா?    

எந்த இடத்தில்,எத்தனை மணிக்கு அதை சொன்னால் இம்பாக்ட் அதிகமாய் இருக்குமோ அந்த இடத்தில்,  திலீப் செய்தியை வெளியிட்டான் என்பது தான் ஹைலைட்…அதை கவனிச்சியா? இப்போ மக்கள் கவனம் ராஷ்மி உடல் நிலையின் மேல் திரும்பி விட்டது.’என்று ப்ரீத்தி மூளை எல்லாவற்றையும் அலச ,’எதற்காக இப்படி செய்ய வேண்டும்?’ என்ற பூதாகரமான கேள்வி ப்ரீத்தி மனதில் எழுந்தது.

தவிர அங்கு ஹாஸ்பிடலுக்கு யாரும் அறியாமல் வந்த மத்திய அமைச்சர் குருதேவ்,யாஷ்வியின் பெற்றோரோடு பேசி விட்டு,ஐந்து நிமிடம் மட்டுமே மீடியாவிற்கு பேட்டி கொடுத்து விட்டு  உடனே கிளம்பி விட்டதும் அவளுக்கு சந்தேகத்தை தான் ஏற்படுத்தியது.

‘நீ கமெண்ட் அடிக்கிறியா அடிச்சுக்கோ,வி டோன்ட் கேர்’ என்று நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டே போகும், எதற்குமே ரியாக்ட் ஆகாத அரசியல்வாதி தான் தர்மாவும், குருவும் என்பது ப்ரீத்திக்கு புரிந்தாலும்,இந்த ‘ரஷ் அப்/RUSH UP’  எதற்காக என்று புரியவில்லை.

‘யாஷ்வி’என்ற சிறுமி இப்பொழுது தேர்தலுக்கு எவ்வளவு பெரிய திருப்பு முனை ஏற்படுத்தும் சக்தி என்பது தெரிந்தும்,தங்கள் கட்சியின் மேல் வைக்க பட்ட கரும்புள்ளி அந்த சிறுமியின் தற்கொலை என்று தெரிந்த பிறகும் , ‘பெரிய EXPOSURE’  கிடைக்கும் என்று சுண்டக்காய் அரசியல் கட்சிகள்’ கூட வந்து வந்து கொண்டிருந்தனர் அந்த மருத்துவமனைக்கு.

‘இலவச விளம்பரம் தானே அவர்கள் கட்சிக்கு… இறந்து போன உயிர்களை வைத்து கூட மேடைகளில் தேர்தல் பிரச்சாரம் நடப்பது எல்லா சர்வ சாதாரமான இந்த காலகட்டத்தில்,நிச்சயம் யாஷ்வியை மேட்டரை ஊதி, ஊதி பெருசாக்குவார்கள் என்ற நிலையில் குருதேவ் SPOTLIGHT விட்டு எதற்கு இப்படி விலகி செல்கிறார்?

‘இன்னும் ரெண்டே மாதத்தில் வர போகும் தேர்தலை விட,வேறு எது இவருக்கு அதி முக்கியம் என்று நில்லாமல் ஓடுகிறார்?   

உடன் செல்லும் எஸ்கார்ட் படையின் எண்ணிக்கையும் மிக குறைவாய் இருக்கிறதே’என்று தான் ப்ரீத்திக்கு அடுத்த சந்தேகம் எழுந்தது

‘முன் ஜென்மத்திலே போலீசா இருந்திருப்போமோ…?எல்லாத்தையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பதே நமக்கு வேலையா போச்சே…வருங்கால ‘ஷிவானி சிவாஜி ராய் நாம தானோ?’என்று மூளை  விபரீதமாய் யோசிக்க,

மனமோ ‘ஓவர் பில்ட் அப்’ உடம்புக்கு ஆகாது செல்லம்ஸ் …நீ அத்தனை தடவை ‘மர்தானி’ படம் பார்க்கும் போதே எனக்கு டவுட்.இப்படி தான் கிளம்புவேன்னு…’அறம்’ பார்த்ததும் கலெக்டர்,’மர்தானி’ பார்த்ததும் ACP, ‘பாரத் அனே நேனு’ பார்த்த உடன் முதலமைச்சர் என்று இன்னும் எத்தனை தான் ஆகணும் என்று முடிவு எடுப்பே ….கடைசியில் கீழ்ப்பாக்கத்தில் தான் அட்மிட் ஆக போறே.’ என்று மனம் அவளை வறுத்து எடுத்தது. 

‘அரசியல இதெல்லாம் ஜகஜமப்பா.’என்றது மூளை.

அடுத்த நெருடல் ஹாஸ்பிடலின் முன் புறம் பார்க் செய்ய பட்டு இருந்த அர்ஜுன் கார்,ஹாஸ்பிடலின் பின்புறம் எதற்காக கொண்டு வந்து நிறுத்த பட்டது?

சரண் சொல்லிய,”பிரஸ் இருக்காங்க.அவங்களுக்கு தெரியாமல் வெளியே போய்டணும்”என்ற வாதமும் சுத்தமாய் லாஜிக் என்பதே இல்லாமல் இருப்பதாய் ப்ரீத்திக்கு மட்டும் தோன்றியது.மற்றவர்களின் கவனம் ராஷ்மி என்ற குடும்பத்தின் தூண் மேல் மட்டுமே இருந்தது.

ப்ரீத்தியால் தன் உணர்வுகளை COMPARTMENTALISATION என்று பிரிக்க முடிந்தது.இவர்களை போல் அந்த அளவிற்கு ராஷ்மி ப்ரீத்திக்கு இன்னும் பழக்கம் இல்லை என்பதும் இவள் இந்த அளவிற்கு பதறாமல், துடிக்காமல்,தெளிவாய் யோசிக்க வைத்து கொண்டு இருந்தது.

‘இதை பேட்டி கொடுப்பதற்கு முன் செய்து இருந்தால் சரியாய் இருக்கும். உலகமே பார்க்க பேட்டி கொடுத்து, அதுவும் லைவாக ஒளிபரப்பாகிய பின் எதுக்கு அவங்களுக்கு தெரியாமல் அங்கிருந்து வெளியேற்ற இந்த ஏற்பாடு?

பேட்டி முடிந்ததும் பஞ்சாபின் முக்கிய டிவி சேனல், பத்திரிகை ரிப்போர்ட்டர் எல்லாம் கிளம்பி விட்டார்கள். யாஷ்வி ஆபத்தில் இருந்து காப்பாற்ற பட்ட பின், தினம் போடும்  நூற்றுக்கணக்கான நியூசில் அவளும் ஒருத்தி அவ்வளவு தான்.

மீடியாவிற்கு கவர் செய்ய அந்த மாநிலத்தின் வர போகும் தேர்தல் ஒன்றே போதுமே. தவிர யாஷ்விக்கு நடந்தை வைத்து  ஒரு வாரத்திற்கு ‘டிபேட்’ என்று கழுத்தை அறுத்து விட மாட்டார்கள்?

பேட்டியும் கொடுத்தாகி விட்ட பிறகு எதற்காக ஹாஸ்பிடல் பின் வழியாக கிளம்ப வேண்டும்?

‘ராஷ்மியை எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்காங்க என்பது தெரிய கூடாது என்று நினைக்கிறார்கள் என்றாலும் இது வரை எந்த ஹாஸ்பிடல் என்ற தகவல் வரவேயில்லை தானே ….என்னங்கடா நடக்குது இங்கே?’ என்று ப்ரீத்தி குழம்பி போனாள்.

‘சரி எதுக்கோ இப்படி  அழைத்துட்டு போறாங்க.கூடவே போவோம்.’என்ற எண்ணத்துடன் காரில் ஏற போன ப்ரீத்தியின் கண்களில் சிக்கியது காரின் நம்பர் போர்டு.

அர்ஜுன் கார் நம்பர் 3838.அது அர்ஜுன் கார் தான் என்பதில் ப்ரீத்திக்கு துளியும் சந்தேகம் இல்லை. டாஷ்போர்டில் சிறிய பொற்கோயில் டிஸ்பிலே ஒன்று இருக்கும்.அந்த பொற்கோயில் மாடல் காரில் இருந்தது.

ஆனால் 3838 என்ற கார் நம்பர் தான் 8383 என்று மாறி இருந்தது.அதாவது 3 என்ற எண் 8டாகவும் ,8 என்ற எண் 3 என்றும் பிளாக் மார்க்கர் வைத்து மாற்ற பட்டு இருக்கிறது.

அருகில் சென்று பார்த்தாலொழிய இந்த மாற்றம் அந்த நம்பர் பிளேட்டில் இருப்பதை பார்க்க முடியாது.     

ரஞ்சித் ஓட்ட போகும்  கார் அர்ஜுனுடையது தான்.ஆனால் அது அர்ஜுனுக்கே சொந்தம் இல்லை என்ற மொமெண்ட்.     

தவிர எந்த காரிலும் ‘உள்ளே இருப்பவரை மறைக்க கூடாது’ என்று ‘சன் shade’ ஓட்டுவதை அரசாங்கம் தடை செய்து இருக்க, இவர்கள் காரில் ஓட்ட பட்டு இருந்தது. உள்ளே இருப்பவர் யார் எவர் என்று மற்றவர்கள் அறிய கூடாது என்று முடிந்த அளவிற்கு இவர்களை மறைக்கும் முயற்சி.அது தான் எதற்கு?   

பேட்டி ஆரம்பிக்கும் முன்பே சரண் மீண்டும் மாயமாய் மறைந்து இருந்தான்.பேட்டி முடிந்ததும் கிளம்பிய இவர்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள் சரண் அனுப்பிய ஐந்து போலீஸ்.

“சரண் சார்…ஹாஸ்பிடல் பின் வாசலில் இருக்கார்.உங்களை அழைத்து வர சொன்னார்.”என்ற பதிலோடு.    

 சரண் ஆட்கள்  இவர்களை வழிக்காட்டியவாறு   ஹாஸ்பிடல் பின்புறமாய்  அழைத்து வர,மற்றவர்கள் பேசி கொண்டே மெதுவாய் மெதுவாய் நடந்து வந்து கொண்டு இருந்தனர்.பதட்டம் இருந்தாலும்,ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி கொண்டு பேசி சுவாரஸ்யத்தில் அவர்கள் நடை மெதுவாக தான் இருந்தது.

தவிர நடு நடுவே இவர்களுக்கு தெரிந்த நட்பு,உறவு,சுற்றம் எல்லாம் இவர்களை சூழ்ந்து தங்கள் ஆறுதலை சொல்லி கொண்டு இருக்க,அதில் அர்ஜுன் குடும்பம் மிகவும் பின் தங்கி தான் வந்து கொண்டு இருந்தது.   

உடன் பாதுகாப்பு படை போல் உடன் வந்த அவர்களும் மப்டியில் யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் இவர்கள் கூடவே ஒரு FORMATION அமைத்து நடந்து வந்தனர்.  அவர்களை ‘வேகமாய் நடங்க’ என்றும் சொல்லவில்லை.    

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த ‘எஸ்கார்ட் அமைப்பு’ போல் முன்னால் ஒருவர் செல்ல,நான்கு புறமும் நான்கு பேர் அரணாய் வந்த பொசிஷன் தெரிய வாய்ப்பில்லை.

எதையோ சொல்ல திரும்பிய ப்ரீத்தியின் கண்களுக்கு இந்த அமைப்பு மிக தெளிவாக தெரிந்தது.

‘அட்டாக் எதையோ எதிர்பார்ப்பது போல் எதுக்கு இந்த காவல் அமைப்பு?முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தானே இந்த மாதிரி முன்னும்,பின்னும் காவலர்கள் வருவார்கள் DIAMOND FORMATION என்று சொல்வார்கள்.

‘இப்போ எதுக்கு இந்த காவல் படை?இங்கேயே பிறந்து வளர்ந்து,பல முறை இங்கே வந்து இருக்கும் அர்ஜுன் குடும்பபம் அறியாதா  என்ன ஹாஸ்பிடலின் பின்புற வழியை.இதுக்கு வழிகாட்ட என்று இத்தனை போலீஸ் தேவை தானா?

இது கைட்/GUIDE  குழுவா இல்லை இவர்களை காக்க வந்திருக்கும் படையா?காக்க என்றால் எதற்க்கு,யாரிடம் இருந்து அர்ஜுன் குடும்பத்தை காக்க இந்த ஏற்பாடு?’என்று ப்ரீத்தியின் மூளை இது எல்லாவற்றையும் மணிகள் கோர்ப்பது போல் ஒவ்வொன்றாய் கோர்த்து கொண்டிருந்தது.  

எப்பொழுதும் வேகமாய் எட்டு எடுத்து வைக்கும் ப்ரீத்தி இவர்களுக்கு முன்னே பின் பக்கம் வந்து விட்டு இருந்தாள்.   மற்றவர்கள் அங்கே வருவதற்குள் முன்னே வந்து விட்ட ப்ரீத்தியின் கண்களில் கை விலங்கோடு ஒருவன் ‘அமரர் ஊர்தியில்’ ஏற்றப்படுவதையும்,கூடவே கனமான ஐந்து பைகள் ஏற்றப்படுவதையும் பார்த்து விட்டது.

அங்கு பத்து பேருக்கும் குறையாமல் போர்மேல் உடையில் இருந்தார்கள் என்றாலும், என்ன தான் மப்டியில் இருந்தாலும் போலீசுக்கே உரித்தான அந்த விறைப்புத்தன்மை,மனேரிசம் எல்லாம் சொல்லாமல் சொல்லியது அவர்கள் ரஞ்சித் ஆட்கள் என்று.                                               

எப்படி யாஷ்வி ஆபத்தில் இருப்பதை அவள் முகம் பார்த்தே கண்டு பிடித்த ப்ரீத்தி, இது எல்லவற்றையும் இணைத்து பார்த்து அலசி கொண்டு இருந்தாள்.

தவிர ரஞ்சித், சரண் இருவரின் பேச்சும் இவள் காதில் விழுந்து தான் இருந்தது. ரஞ்சித்தும்,சரணும் பஞ்சாபி,ஆங்கிலம் மொழிகளில் மாற்றி மாற்றி பேசி கொண்டு இருந்தனர்.  

பஞ்சாபி மொழி ப்ரீத்திக்கு தெரியாது என்றாலும்,ட்ரக்ஸ்,TERROR FINANCING,HUMAN SMUGGLING,நார்க்கோடிக்ஸ்,ஐந்து பாம், புரோனோகிராஃபி, சைபர் கிரைம், மெக்ஸிகோ, மேஜர் அர்ஜான் என்று நிறைய ஆங்கில உச்சரிப்புகள் முழுதாய் ப்ரீத்தியின் காதில் விழுந்தது.        

தண்ணீரில் இருந்தே பாலை எடுக்கும் ப்ரீத்திக்கு,அலசி ஆராய பல விஷயம் சிக்கியது என்னவோ உண்மை.

‘ ஹாஸ்பிடல் பின் பக்கம் எதற்காக வார்டு பாய் ஒருவன் கை விலங்கோடு அர்ரெஸ்ட் செய்ய பட வேண்டும்? யாஷ்வி  தற்கொலைக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? எந்த சம்பந்தமும் இல்லையென்றால் எதற்கு அவனை கைது செய்ய வேண்டும்?அமரர் ஊர்தியில் யாருக்கும் தெரியாத வண்ணம் எதற்கு ஏற்ற வேண்டும்?

இவர்கள் ஏற்றும் பைகளில் தான் இவர்கள் சொன்ன அந்த ஐந்து பாம் இருக்கிறதா?அப்படியென்றால் இந்த ஹாஸ்பிடலை தகர்க்க யார் முயன்றது?விலங்கோடு ஏறுபவன் எல்லாம் இதை செய்தான் என்று நம்பவே முடியாது.எதற்காக,யார் டார்கெட்?

எல்லா தீவிரவாத தாக்குதலும் நிஜத்தில் தீவிரவாத தாக்குதலாக இருந்ததில்லை.இவர்களின் டார்கெட் யாரென்று யாருக்குமே தெரிய கூடாது என்று கூட ஒரு 50-100 பேரை ‘COLLATERAL DAMAGE’ என்று போட்டு தள்ளுவது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

யார் டார்கெட்டோ அவரை மற்றும் கொன்றால் அது கொலை.அவர் பின்னணி என்ன என்பது எல்லாம் சரியாய் சொல்லி விட முடியும். ஆனால் இப்படி செய்யும் போது அது ‘தீவிரவாதிகளின் தாக்குதல்’ என்று திசை மாறி  விடும். இங்கு அதை தான் செய்ய முயன்றார்களா?போதை மருந்துக்கும் தீவிரவாதிகளுக்கும் எப்படி தொடர்பு?’ என்ற எண்ணம் தான் எழுந்தது ப்ரீத்திக்கு.                 

 அடுத்த நெருடல் ரஞ்சித்தை பார்த்ததும் ப்ரீத்திக்கு எழுந்தது.அவள் நண்பன் முழு சூட் கோட்டில் இருந்தான்.அது ஒன்றே அவள் சந்தேகத்தை அதிகரிக்க போதுமானதாய் இருந்தது.     

கோட் என்றாலே,’அடி போடீ அதை போட்டால் சோலைகொல்லை பொம்மை பீல் தான் வருது’ என்பவன் ரஞ்சித்.

இத்தனை வருடத்தில் ரஞ்சித்தை கோட் சூட்டில் ப்ரீத்தி பார்த்ததே இல்லை என்று கூட சொல்லலாம்.அவன் அண்ணன் விஜய கருணாகரன் திருமணத்தில் கூட, சில தம்பிமார் கோட் சூட்டுடன் திருமணங்களில் அனலில் நொந்து நூடுல்ஸ் ஆவதை போல் அணியாமல் இருந்தவன்.

அவனே   கோட் அணிந்து இருக்கிறான் என்றதும் ப்ரீத்தியின் மூளை ‘டென்த் கியர்’ அளவிற்கு போட்டு ஒவ்வொன்றையும் தொடர்பு படுத்தி பார்த்து கொண்டு இருந்தது. 

கார் கதவை திறந்து ப்ரீதிக்காக திறந்து விட்டு அவள் ஏறும் போது அவளை வெறுப்பேற்ற என்றே கையை தூக்கி ரஞ்சித் சலூட் அடிக்க,அதில் அவன் கோட் விலக,அங்கு மறைத்து வைக்கபட்டிருந்த FN Five-seveN, என்ற 21 புல்லட் இருந்த துப்பாக்கி ப்ரீத்தி கண்ணில் பட்டது. அந்த துப்பாக்கி இன்னொரு புறமும் இருக்கிறது என்பதை கோட்டின் வடிவமே சொல்லி விட்டது.

மற்றவர்கள் பின்புறம் ஏறி இருக்க,ப்ரீத்தி ரஞ்சித்தின் டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.ப்ரீத்தி பக்க கதவை மூடி விட்டு காரை சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில்  ரஞ்சித் அமர வந்த போது அவன் முதுகிலும் ஒரு துப்பாக்கி இருப்பதை ப்ரீத்தியால் யூகிக்க முடிந்தது.

கார் வைத்து உள்ளே அவன் ஏறும் போது,மேலேறிய பேண்ட்,காலில் ஒரு ஸ்ட்ராப் அதில் ஒரு துப்பாக்கி இருப்பதை ப்ரீத்திக்கு சொன்னது.தவிர டாஷ்போர்டு திறந்து அதில் மிக பெரிய கைக்குட்டை ஒன்றை ரஞ்சித் வைக்க அதிலும் துப்பாக்கி,எக்ஸ்ட்ரா புல்லெட் இருக்க வேண்டும் என்றே தோன்றியது.

கோட்டின் இரு பக்கமும் ஹோல்டரில்  இரு துப்பாக்கி, இடுப்பின் அருகே இன்னொரு துப்பாக்கி,ரெண்டு கால்களிலும் சாக்ஸ் மறைத்து இருந்த இன்னும் இரு துப்பாக்கி என்று ‘கமாண்டோ/commando’ படம் Arnold Schwarzenegger மாதிரி ஓவர் பில்ட் அப் கொடுத்து  இருந்தான் அவள் நண்பன்.

‘டேய் சிங்கம்… கையில் bazukaவோ,ராக்கெட் லாஞ்சர் ஒன்று தான் இல்லை. ஆர்னோல்டே இந்த அளவிற்கு அலப்பறை செய்து இருக்க மாட்டார் போல் இருக்கே….சிங்கம் இப்படி எல்லாமா காமெடி செய்வது?’  என்று மனதிற்குள் நண்பனின் கெட் அப்பை பார்த்து உள்ளுக்குள் கமெண்ட்  அடித்தாலும் ‘அந்த கோட்டல் மறைக்க முடியாத அளவிற்கு கைகளின் இரு புறமும் பிஸ்டல் துருத்தி கொண்டு இருக்கிறது? இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்?தங்களை சுற்றி என்ன நடக்கிறது?’ என்ற ஆராய்ச்சியில் ப்ரீத்தி இறங்கி விட்டாள்.

ரஞ்சித் சாவிக்கு கை நீட்டும் போதே பின் காரில் “பைலட் கார்கள் “என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கார்கள் ரெண்டு முன்,பின்னாக இவர்கள் காருக்கு அரணாய் நின்றதை ப்ரீத்தி கவனித்தே இருந்தாள்.

மற்றவர்கள் ரஞ்சித் மொபைல் இருந்த பையை சரண் இடம் கொடுக்கும் வரை அவன் பின் வருவதையே காரில் இருந்தவர்கள்  கவனிக்கவில்லை.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது எல்லாமே ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் இல்லாத INDIVIDUAL ஈவென்ட்ஸ்.ஆனால் இது ஒவ்வொன்றிலும் அடி ஆழத்தில் இருந்த லிங்க் ப்ரீத்திக்கு தெளிவாக விளங்கியது. 

மற்ற யாருக்கும் இதை பற்றி எல்லாம் சந்தேகம் வரவில்லையா,இல்லை பார்த்த ஒவ்வொன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது என்று அவர்கள் மூளை அலசி ஆராயவில்லையா,இல்லை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தருக்கு ‘உயிர் ஊசல்’ என்ற நிலையில் இதை எல்லாம்  ஆராய்ச்சி கண்ணோடு பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் ப்ரீத்திக்கு சுற்றுப்புறத்தை அலசி,காரண காரியத்துடன் ஆராயும் திறன் அதிகமாய் இருந்தது.

 ‘தனி ஒருவன்’ படத்தில் ‘ACP மித்ரன்’ சொல்வது போல் ,”முதல் பக்கத்தில் தக்காளி விலை உயர்வு என்று இருந்தால்,ஆறாம் பக்கத்தில் லார்ரி ஸ்ட்ரைக் என்ற நியூஸ் கண்ணில் பட்டது.எப்படி முதல் பக்கத்திற்கும் ஆறாம் பக்கத்திற்கும் உள்ள தொடர்பு புரிய ஆரம்பித்தது”என்ற நடக்கும் ஒவ்வொன்றையும் தொடர்பு படுத்தி பார்க்கும் திறன்,தெளிவு அவளிடம் இருந்தது.

ஆக மொத்தம் யாருக்கும் தெரியாமல் நம்ம சிங்கம் எல்லோரையும் துப்பாக்கி முனையில் கடத்தறான் போல் இருக்கே….என்ன மேட்டரா இருக்கும்?சிங்கம் எதையும் காரணம் இல்லாமல் செய்யாதே…கண்ணில் கூலர்ஸ் வேறு போட்டு இருக்கான்….’என்று ப்ரீத்தி தனக்குள் பேசி கொண்டு வர,மற்றவர்கள் ரஞ்சித்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒன்றிற்கும் பதில் சொல்லாமல் அவன் மழுப்ப தலையை பாறையில் மோதி கொள்ளலாமா என்ற நிலையில் இருந்தனர் அர்ஜுன் குடும்பத்தினர்.

அர்ஜுனுக்கு சொந்தமான ‘tulip inn’ ஹோட்டலுக்கு வர நேர் வழி இருந்தாலும்,அதை ஹாஸ்பிடலில் இருந்து 20 நிமிடத்தில் அடைந்து விட முடியும் என்றாலும்,ரஞ்சித் ‘டேக் டைவேர்சென்’எடுத்து எடுத்து 35 நிமிடம் கழித்தே அந்த ஹோட்டலின் பின் புறமாய் வந்து ‘அண்டர்கிரவுண்ட்’ பார்க்கிங்கில் வந்து வண்டியை நிறுத்தினான்.

அவன் வண்டியோடு மேலும் மூன்று வண்டி வந்து நிற்க,பார்க்கிங் கேட் மூடப்பட்டது.

“இங்கே எதுக்கு வந்திருக்கோம்? ஹாஸ்பிடல் போகணும் ரஞ்சித்.அம்மாவுக்கு சீரியஸ்.”என்று மற்றவர்கள் மாற்றி மாற்றி சொல்லி பார்த்தும் அவர்களை அங்கு இருந்த லிப்ட் வழியாக அந்த ஹோட்டலின் மேல்தளத்தில் அமைந்து  இருந்த ‘executive floorக்கு அழைத்து வந்தான்.

மேல் மாடியில் லிஃப்ட் ஓபன் ஆகி இவர்கள் வெளியே வர அங்கு ஏற்கனவே அங்கு போட பட்டு இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த இருவர் வெகு சீரியஸ் சாக பேப்பர் படிப்பது போல் தலையை குனிந்து இருந்தனர்.

‘சிங்கம் இவங்களுக்கு ட்ரெஸ் மாற்றிய நீ மண்டை மேல் இருக்கும் கொண்டையை விட்டுட்டியே ராசா …அதான் ஹேர் கட்,பேப்பர் படிப்பதாய் அதுவும் தலைகீழாக வைத்து படிப்பதாய் செய்யும் பாவ்லா.

உன் கோட் மாதிரியே துருத்தி கொண்டு இருக்கும் பிஸ்டல் என்று இவங்க உன் ஆட்கள்,யார் இந்த தளத்திற்கு வருகிறார்கள் என்று வேவு பார்க்க,தேவை பட்டால் சுட்டு தள்ள அமர்ந்து இருக்கிறார்கள் என்று தான் எழுதி ஒட்டி வைத்து இருக்கே’ என்று மனதிற்குள் கவுண்டர் விட்ட படியே முன்னால் சென்று கொண்டு இருக்கும் இவர்களை பின் தொடர்ந்து சென்றவளின் கண்களில் பட்டது இரு பக்க அறையில் இருந்து வெளியேற இருவர்.

பதிண்டா ரயில் நிலையத்தில் குண்டடி பட்ட ரஞ்சித் சக அதிகாரிகளான அந்த ஆணும்,பெண்ணும்.

‘அடேய் …என்னடா இது…ராஜாவின் கோட்டையை விட இத்தனை பாதுக்காப்பு எதுக்கு?’என்று ப்ரீத்தி தனக்கு தானே கேட்க,ரஞ்சித் தன் கையில் இருந்த எலக்ட்ரானிக் கீ கார்டு மூலம் அந்த தளத்தில் இருந்த ஒரு அறையை திறந்து உள்ளே செல்ல மற்றவர்களும் உள்ளே வந்தனர்.

“எனப் ரஞ்சித் …என்ன நடக்குது இங்கே…ஹாஸ்பிடல் போகமா என் ஹோட்டலை எனக்கே ஏன் காட்டிட்டு இருக்கே?”என்றான் அர்ஜுன் கடுப்புடன்.

“யு ஆர்  ராங் அர்ஜுன்.தப்பான கேள்வி கேட்கறீங்க…நீங்க கேட்டிருக்க வேண்டியது எதுக்கு எங்களை இந்த ஹோட்டலில் ஹவுஸ் அர்ரெஸ்ட்டில் வைக்கறீங்க?” என்பதாய் தான் இருந்திருக்க வேண்டும்.தப்பான கேள்வி இப்படி கேட்டால்…?”என்றால் ப்ரீத்தி அங்கிருந்த சோபாவில் சாவகாசமாய் அமர்ந்து.

பயணம் தொடரும்…

error: Content is protected !!