Kanavu 26 (fre – final)
Kanavu 26 (fre – final)
கனவு – 26
இவ்வாறே சில மணித்துளிகள் கடந்திருக்க, அவர்கள் மூவரும் ஒருவித வித்தியாசமான அதிர்வுகளை உணர்ந்தனர். அனேகனுக்கு தெரிந்துவிட்டது அர்ஜுன் வந்துவிட்டான் என்று. ஆனால் இதில் பரிட்சையம் இல்லாத திரவியம், தான் படித்த புத்தகங்களில் கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றுபவனாய்,
“யாராவது வந்திருக்கீங்களா?” என்றான்.
அங்கு நடப்பவை அனைத்தையும் ஒருவித திகிலோடுதான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. அங்கு நிலவும் மயான அமைதியும், இருள் சூழ்ந்த அமைப்பும் அவளுக்கு அசவுகரியமான உணர்வை தந்தது. அந்த உணர்வு அவள் மனம் முதல் உடல் வரை ஏதேதோ செய்தது. நாவோடு சேர்ந்து தொண்டையும் வறண்டு போனது. வயிறு பிசைவது போல இருந்தது. கண்களை திறந்துவைக்க முடியாமல் சிரமப்பட்டவளுக்கு ஏனோ தலையும் சுற்றிக்கொண்டு வந்தது.
அப்பொழுது தன் தங்கையை மனதில் நினைத்துக்கொண்டவள், தன்னை தானே நிதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். பெண் அவள் படும் அவஸ்தையை கண்டும் வேறு வழியின்றி வந்த வேலையை நடந்திக் கொண்டிருந்தனர் ஆடவர்கள்.
“யாராவது வந்திருக்கீங்கன்னா எங்களுக்கு உங்க வரவை தெரியப்படுத்துங்க ப்ளீஸ்” என மிகவும் பணிவாக கேட்டான் திரவியம்.
அவன் கேட்ட சில வினாடிகளில் அவர்கள் விரல் வைத்திருக்கும் ஒய்ஜா போர்டில் இருந்த ஸ்ட்ரைக்கர் மெதுவாக நகரத் தொடங்கியது. அதனை கூர்ந்து கவனித்தனர் மூவரும்.
நகர்ந்த அந்த ஸ்ட்ரைக்கர் ‘யஸ்’ என்னும் எழுத்தில் போய் நின்றது. அதை கண்ட ஆஷ்ரிதா தன் நடுங்கும் கைகளை பேப்பரில் வைத்து குறிப்பெடுக்க தயாரானாள்.
ஸ்ட்ரைக்கர் நகர்ந்ததும் எதையோ சாதித்துவிட்ட புன்னகையை வெளிப்படுத்திய திரவியம், திரும்பி அனேகனைப் பார்த்தான். மெல்லிய புன்னகையோடு அனேகன் ஆம் என்பது போல தலையாட்டினான்.
“வந்திருக்கிறது யாரு? உங்க பெயர் என்ன?” என திரவியம் கேட்கவும்,
“வாங்க அர்ஜுன்” என்றான் அனேகன்.
அவனை திடுமென திரும்பிப்பார்த்த திரவியம், ‘தலை இருக்கும்போது வால் ஆடுறது தப்போ? ஒரு ஆர்வத்துல நானே பேசிட்டு இருந்துட்டேன். அவரே பேசட்டும். அவருக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு இதுல’ என நினைத்துக்கொண்டு அமைதிக்காத்தான்.
“அர்ஜுன். உங்களுக்கு எங்க கூட பேச விருப்பமா?” என அனேகன் கேட்க, அவர்கள் கைவைத்திருந்த ஸ்ட்ரைக்கர் மீண்டும் தானே நகர்ந்து ‘யஸ்’ எனும் வார்த்தையில் போய் நின்றது.
அர்ஜுன் தங்கள் மீது கோபத்தில் இருப்பான் என எண்ணியிருந்த ஆஷ்ரிதாவுக்கு, அவன் பேச சம்மதம் தெரிவித்தது ஆச்சரியாமாகவே இருந்தது.
அர்ஜுனுக்கு தன் நன்றியை ஒருமுறை சொல்லிக்கொண்ட அனேகன், “எனக்கு உதவி செய்ய உங்களுக்கு விருப்பமா?” என கேட்டான்.
தற்பொழுது அந்த ஸ்ட்ரைக்கர் நகரவில்லை. பதிலுக்காக பொறுமையுடன் மூவரும் காத்திருந்தனர். நேரம் கடந்த பொழுதிலும் ஸ்ட்ரைக்கரில் அசைவேதும் இல்லை என்பதால் திரவியம் அனேகனை நோக்கி,
“இருக்காங்களா ப்ரோ?” என கேட்டான்.
ஆம் என தலையசைத்த அனேகன்,
“என்ன அர்ஜுன் எங்க மேல கோபம் போகலையா?” என கேட்டான்.
அனேகன் இந்த கேள்வியை கேட்ட மூன்றாவது நிமிடம், ஸ்ட்ரைக்கர் நகரத்தொடங்கியது. ஆஷ்ரிதாவின் கண்கள் படபடத்துக் கொண்டிருந்தது. பதிலை நெருங்கிக்கொண்டிருந்த அந்த சில வினாடிகளுக்குள்ளேயே ‘ஆத்மாக்களின் கோபத்தை தாங்கும் தைரியமோ சக்தியோ என்னிடம் இல்லை கடவுளே’ என நினைத்துக்கொண்டே ஸ்ட்ரைக்கருடன் பயணித்தாள். அவள் பெருமூச்சு விடுவதற்காக வழி பிறந்து, ஸ்ட்ரைக்கர் நோ எனும் வாக்கியத்தில் போய் நின்றது.
பயம் தாக்கிய இதயத்தில் வலியை உணர்ந்துக் கொண்டிருந்தாலும், அர்ஜுனுக்கு தங்கள் மீது கோபம் இல்லை என உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு ஒருவித ஆறுதல் கிடைத்தது.
“கோபம் இல்லைனா எங்களுக்கு உதவலாம் இல்லையா? சகியோட நாங்க வாழ ஆசைப்படுறோம். அதுக்காக எங்களுக்கு உன்னோட உதவி வேணும்” என தொடர்ந்தான் அனேகன்.
அப்பொழுதும் அந்த ஸ்ட்ரைக்கர் அசையவில்லை. ஆழ்ந்து ஒரு மூச்சை வெளியே விட்ட அனேகன், “உங்களுக்கு மீடியம் வேணுமா அர்ஜுன்?” என கேட்டான்.
“மீடியமா?? ப்ரோ!!” அதிர்ந்தான் திரவியம்.
“தெர் இஸ் நோ ஆப்ஷன் திரு!” – அனேகன்.
“ப்ரோ! மீடியம் வேணுமான என்ன அர்த்தம்? அர்ஜுன் பேசுறதுக்கு யார் உடம்பாவது வேணுமானு தானே கேட்குறீங்க?” – எப்படியும் அர்ஜுன் சம்மதம் தெரிவித்தால் அனேகன் தன் உடம்பில் தான் ஏற்றுக்கொள்வான். அப்படியானால் தானும் ஆஷ்ரிதாவும் தனியே அர்ஜுனோடு எவ்வாறு பேசுவது என்ற பயத்தோடு கேட்டான் திரவியம்.
“ஆமா திரு. லெட்ஸ் சீ” என்று அனேகன் கூறவும் ஸ்ட்ரைக்கர் நகர்ந்து நோ என காட்டியது.
சற்று சிந்தித்த அனேகன், “என்னோட தனியா பேசிறீங்களா?” என கேட்க, ஸ்ட்ரைக்கரின் உதவியால் ஆம் என்றான் அர்ஜுன்.
அதனை ஏற்று ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் வெளியேறிட, அனேகன் மட்டும் தனித்து விடப்பட்டான் அந்த அறையில்.
“எனக்கு பயமா இருக்கு திரு!” கலங்கிப்போய் கூறினாள் ஆஷ்ரிதா.
“அனேகன் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. கவலப்படாத!” – திரவியம்.
“அனேகன் வெளியில வர்ற வரை எனக்கு நிம்மதி இருக்காது” என்ற கண்களில் கண்ணீர் வடிய பேசிய ஆஷ்ரிதாவை தன் கரம் கொண்டு அனைத்து பாதுகாப்பை உணர்த்த எண்ணியவ திரவியம் அச்சமயம் கையாளாகதவனாய் உணர்ந்தான் தன்னை.
அந்த திக் திக் நிமிடங்கள் திரவமாய் விரைந்தோட, கதவை திறந்துக்கொண்டு அனேகன் வெளியே வந்தான். அவனது முகம் ஏதோ செய்தியை உணர்த்த, அதனை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை விடவும், அர்ஜுனிடம் பேச சென்றதுபோல நன்முறையில் அனேகன் வந்துவிட்டானா என்பதையே கேட்க விளைந்தாள் பெண் அவள்.
“அனேகன்! உங்களுக்கு ஒன்னுமில்ல தானே. எதுவும் பிரச்சனை இல்லையே?” – ஆஷ்ரிதா.
“எனக்கு என்ன ஆகப்போகுது அச்சு?” சிரித்தபடியே கேட்டான் அனேகன்.
“அர்ஜுன் என்ன சொன்னான் ப்ரோ?” – திரவியம்.
“ஹாஸ்பிடல் போய் அம்முவ பார்த்துக்க சொன்னான். வாங்க போகலாம்” – அனேகன்.
“அப்படீன்னா, என் அம்முவுக்கு எதுவும் ஆகாது தானே?” – ஆஷ்ரிதா.
“ஆக கூடாது. கம் ஆன். லெட்ஸ் கோ” என்று அனேகன் கூற, மூவரும் மருத்துவமணைக்கு விரைந்தனர்.
டாக்டர் சுந்தரின் அனுமதியை பெற்ற பின்னர், ஐ.சி.யூ. –விற்கு வெளியே ஆஷ்ரிதாவும் திரவியமும் காத்திருக்க, அனேகன் உள்ளே சென்றான். காதலை கண்ணில் நிறைத்து காரிகை அவளை கண்ட நாட்கள் மறைந்து தற்போது அவள் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி, கல்லென இருந்தவனது கண்களிலும் கண்ணீரை சொறியச்செய்தது.
மெல்லமாக அவளை நெருங்கி அவளது கரத்தை பற்றியவன்,
“சகி! ஜென்ம ஜென்மமா உனக்காக காத்துட்டு இருக்கேன். என்ன ஏமாத்திறாத ப்ளீஸ். உன் அக்கா வெளியில உனக்காக துடிச்சிட்டு இருக்கா. உன்ன தக்க வச்சிக்க அவளும் பல போராட்டம் பண்ணிருக்கா. எங்களை விட்டுட்டு போக உனக்கு அனுமதி கிடையாது சகி. எங்க போராட்டத்துக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். எழுந்து வா. என்னோட சகி –யா, அச்சுவோட அம்மு –வா எழுந்து வா! நாங்க காத்துட்டு இருக்கோம் உனக்காக” என்றவன் அவளது கைகளில் முத்தமிட்டு எழுந்துக்கொள்ள, அவளது கைகளின் வழியே ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தான் அனேகன். சட்டென அவள் முகத்தை கூர்ந்து கவனிக்க, முகத்தை சலனமின்றி வைத்திருந்தாள் சிலையானவள்.
“விளையாட்டு காட்டுறியா சகி? எழுந்து வா! இந்த கை –அ இப்ப விடுறேன். ஆனா வாழ்க்க முழுக்க விடமாட்டேன்!” என்று கூறிவிட்டு தன் கண்களின் ஓரம் பூத்திருந்த விழிநீரைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான் அனேகன்.
“விசிட்டர்ஸ் ரூம் –ல போய் தூங்க சொல்லுறேன், கேட்கமாட்டேங்கறா ப்ரோ” – திரவியம் ஆஷ்ரிதாவை குறித்து அனேகனிடம் கூறினான்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடு அச்சு” – அனேகன்.
“அம்மு கண் முழிக்கற வரைக்கும் நான் தூங்க மாட்டேன் அனேகன்” – ஆஷ்ரிதா.
“உங்க ஃபீலிங்க்ஸ் –க்கு மரியாதை கொடுத்துதான் நான் அம்மு விஷயமா செய்யற எல்லா முயர்சியிலையும் உங்கள கூடவே வச்சிருந்தேன். இப்ப தூங்க தானே சொல்லுறேன். விடியறதுக்கு கொஞ்சம் நேரம்தான் இருக்கு. என் வார்த்தைக்கு நீங்க மதிப்புக் கொடுத்து கொஞ்சம் நேரம் தூங்குங்க. அப்பதானே அம்மு முழிச்சதும் நீங்க பேச முடியும்?” – அனேகன்.
“அப்ப அம்மு காலையில கண் முழிச்சிருவாளா?” – மலர்ந்த முகமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.
“நீங்க இப்ப தூங்கினாதான் அவ கண் முழிப்பா” – அனேகன்.
“அப்படியா?! அப்ப சரி. நான் போய் தூங்குறேன்” என விசிட்டர்ஸ் அறைக்கு சென்றாள் ஆஷ்ரிதா.
அவள் பிம்பம் மறையும்வரை வெறித்துக்கொண்டிருந்த திரவியத்தை கண்ட அனேகன், அவள் தோளில் கைவைத்து,
“இன்னும் குழந்தையாவே இருக்கா இல்ல?” என கேட்டான்.
“அதனால தான் ப்ரோ நான் அவள் இவ்வளவு லவ் பண்ணுறேன்” – கண்கள் கலங்க கூறினான் திரவியம்.
“சீக்கிரமே உங்கள புரிஞ்சிப்பா திரு. நான் புரிய வைப்பேன். இது என்னோட ப்ராமிஸ். வருத்தப்படாதீங்க!” – அனேகன்.
பொழுது விடிந்தது. ஐ.சி.யூ. வாசலிலேயே காத்துக்கொண்டிருந்த அனேகனும் திரவியமும் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தனர்.
“அந்த பொண்ணு ஷ்யாம் ஷ்யாம் –னு யாரையோ கேட்குது சிஸ்டர். அவங்கள கூட்டிட்டு வந்தவர் பேரு அனேகன். கூட ரெண்டு பேரு இருந்தாங்க. ஒருத்தர் திரவியம் இன்னொருத்தர் அவங்க அக்கானு நினைக்கிறேன். பேரு ஆஷ்ரிதா” என அனேகனது காதுகளில் விழ, திடுக்கிட்டு விழித்தான்.
அவனை தாண்டி இரண்டு நர்ஸ் சென்றுக்கொண்டிருக்க, அவர்களருகே ஓடிச்சென்ற அனேகன்,
“சிஸ்டர் எக்ஸ்க்யூஸ் மீ. என்ன சொன்னீங்க இப்போ? அம்மு கண்ணு முழிச்சிட்டாளா?” என கேட்டான்.
“ஆமா சார்! ஏதோ ஷ்யாம் –னு கேக்குறாங்க. உங்க பேரு அனேகன் தானே? அவங்களுக்கு ஷ்யாம் –னு யாரையாவது தெரியுமா?” என கேட்டார் அந்த நர்ஸ்.
“வாவ். தேங்க் யூ சிஸ்டர். தேங்க் யூ சோ மச். இட்ஸ் மீ. இதோ இப்பவே போய் பார்க்கிறேன்” என மீண்டும் ஐ.சி.யூ. –வை நோக்கி அனேகன் ஓட,
“ஹலோ ஹலோ சார். அப்படியெல்லாம் நீங்க உள்ள போகக்கூடாது. நான் முதல்ல இந்த விஷயத்தை டாக்டர்கிட்ட சொல்லணும். முன்னாடியே உங்ககிட்ட சொன்னது தெரிஞ்சா டாக்டர் திட்டுவாங்க” என அந்த நர்ஸ் அனேகனது பின்னோடு ஓடிக்கொண்டுவர, அதை காதில் வாங்காமல் ஓடிய அனேகன், தூங்கிக்கொண்டிருந்த திரவியத்தின் காலை நன்கு மிதித்துவிட்டு ஐ.சி.யூ. –வினுள் நுழைந்தான்.
கால் மிதிக்கப்பட்ட வலியில் “ஸ்ஸ்ஸ்…ஆஆஆ…” என கண் விழித்த திரவியம், பார்வை தெளிவாய் இல்லாததால் மீண்டும் தன் இமைகளை மூடி கசக்கிக் கொண்டிருக்க, ஓடி வந்த அந்த நர்ஸ் –ன் காலும் இடறப்பட்டது.
“சார். காலை மடக்கி வைக்க மாட்டீங்களா?” என அந்த நர்ஸ் கடிந்துக் கொண்டாள் திரவியத்திடம்.
“சாரி. சாரி. சாரி சிஸ்டர். தூங்கிட்டு இருந்தேன்” என எழுந்து நின்றான் திரவியம்.
இதற்குள் டாக்டர் சுந்தர் அங்கே வந்துவிட, “வாட் ஹேப்பன்ட்? வய் ஆர் யூ ஷெளட்டிங் அட் ஹிம்?” என கேட்டார் டாக்டர் சுந்தர்.
“டாக்டர். அந்த பேஷண்ட் முழிச்சிட்டாங்க. யாரோ ஷ்யாம் –னு கேட்டாங்க. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ண வந்தேன். அதுக்குள்ள இவரோட ஃப்ரெண்ட் சொல்ல சொல்ல கேட்காம உள்ள போய்ட்டாரு” என பயத்தில் வத்தி வைத்தாள் அந்த நர்ஸ்.
“என்ன அம்மு முழிச்சிட்டாளா?” என சந்தோஷமாய் கேட்ட திரவியம், ஆஷ்ரிதாவை அழைத்துவர விரைந்தான்.
“நோ இஸ்யூஸ்” என்ற டாக்டர் சுந்தர் ஐ.சி.யூ. –விற்குள் நுழைந்தார்.
“என்ன டி நடக்குது இங்க? இந்த டாக்டர் திட்டுவாருனு பார்த்தா ஒன்னுமே சொல்லல? அந்த ஆளு பேரு அனேகன் தானே? அப்பறம் என்ன ஷ்யாம் நான்தான்னு சொல்லுறான்? அந்த பொண்ண நேத்து அட்மிட் பண்ணிட்டு, ஈவ்னிங் ஒருத்தர் கூட இல்லாம கிளம்பிப் போய்ட்டாங்க, தீடீர்னு நடுச்சாமத்துல மூனு பேரும் வர்றாங்க. என்னதான் நடக்குதோ?” என அந்த நர்ஸ் தன் அருகில் இருந்த இன்னொரு நர்ஸிடம் கூற,
“ஆமா டி. நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். ஆனா டாக்டர் –க்கு க்ளோஸ் –னு நினைக்குறேன். அட்மிட் பண்ணும்போது நான் ஐ.சி.யூ. –க்கு உள்ள அவர விடல. டாக்டர் வந்ததும் உள்ள கூட்டிட்டு வந்துட்டாரு. சைக்கியார்ட்டிஸ்ட்டாம்” என்றார் இன்னொரு நர்ஸ்.
“நமக்கு என்ன! நாம திட்டுவாங்கல! அதுவரை நல்லது. வா உள்ளே போகலாம்” என இரண்டு நர்ஸும் ஐ.சி.யூ. –விற்குள் சென்றனர்.
அந்த நர்ஸ்கள் பேசி முடித்து உள்ளே செல்லவும் திரவியம் ஆஷ்ரிதாவை அழைத்து வரவும் நேரம் சரியாக இருந்தது. தன் தங்கை கண் விழித்துக்கொண்டாள் எனும் சந்தோஷத்தில் ஓடோடிவந்தாள் ஆஷ்ரிதா. அங்கே,
“சகி! ஷ்யாம்… ஷ்யாம் வந்திருக்கேன் சகி. என்னை தெரியுதா?” என அம்ரிதாவின் கைப்பற்றி அனேகன் கேட்டுக்கொண்டிருக்க, தன் விழிகள் திறக்காமல் கண்ணின் ஓரமாய் கண்ணீர் வடிய உதட்டில் சிரிப்பை நிறைத்திருந்தாள் அம்ரிதா.
அதை கண்ட அனேகனின் இன்பத்தை அளவிட இயலாது. டாக்டர் சுந்தரை நோக்கி,
“டாக்டர், சகி சிரிக்கிறா! சிரிக்கிறா டாக்டர்” என்றான்.
அத்தனை நேரம் இவன் அனேகனா ஷ்யாமா எனும் சந்தேகத்தில் இருந்த இரண்டு நர்ஸ்களும் அவன் அம்ரிதாவை சகி என்று அழைப்பதில் குழம்பிப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பாவம் அவர்களது சந்தேகத்தை தீர்க்கும் ஆளோ நேரமோ இருக்கவில்லை.
“யஸ் அனேகன். யஸ்” என நிதானமாக அனேகனது தோளை தடவிக் கூறிய டாக்டர் சுந்தர் அம்ரிதாவின் அருகே வந்து அவளது உடல் நிலையை பரிசோதித்தார்.
“ஷீ இஸ் கெட்டிங் வெல் அனேகன். நோ வரீஸ். நர்ஸ், இவங்கள நார்மல் வார்ட் –க்கு ஷிப்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க” என கூறினார்.
“ஓகே டாக்டர்” என்ற இரண்டு நர்ஸ்களும் அங்கிருந்து வெளியேற யத்தனிக்கும் பொழுது உள்ளே நிற்கும் திரவியத்தையும் ஆஷ்ரிதாவையும் கண்டனர்.
“சார். என்ன இது? இப்படியெல்லாம் உள்ள வரக்கூடாது. அவங்கள இன்னும் கொஞ்சம் நேரத்துல ஷிப்ட் பண்ணிருவோம். அப்பறமா பாருங்க. இப்ப வெளியில வாங்க” என கூறி கையோடு இருவரையும் வெளியே அழைத்துவந்தனர்.
வெளியே வந்த ஆஷ்ரிதா திரவியத்திடம்,
“திரு! அம்மு எப்போ எழுந்தா? என்ன சொன்னா திரு? என்ன கேட்டாலா? நம்ம எல்லாரையும் அவளுக்கு தெரியுதுல? எதுவும் பிரச்சனை இல்லையே? வலிக்குதுனு சொன்னாளா எதுவும்?” என கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனாள் ஆஷ்ரிதா.
“சில் அச்சு. சில். தெரியல. நானும் அம்முவ பார்க்கல. அந்த நர்ஸ் சொன்னத கேட்டதும் உன்ன கூட்டிட்டு போக வந்துட்டேன். அம்மு கண்ணு முழிச்சிட்டா. அவளுக்கு இனி ஒன்னும் ஆகாது. பயப்படாம இரு” – திரவியம்.
“ஆமா அவளுக்கு ஒன்னும் ஆகாது. என்ன விட்டுட்டு எப்படி அவ போவா? அதெல்லாம் போமாட்டா. நான் தூங்கமாட்டேன் –னு சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க, அவ கண்ணு முழிக்கறப்ப என்னால அவ கூட இருக்க முடியாம போய்டுச்சு” என சிறு பிள்ளை போல கடிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.
“நீ முழிச்சிருந்தாலும் உன்ன உள்ள அலோ பண்ணியிருக்க மாட்டாங்க அச்சு. இன்னும் கொஞ்சம் நேரத்துல நார்மல் வார்ட் –க்கு வந்துடுவா. கொஞ்சம் பொறுமையா இரு” – திரவியம்.
“சரி சரி. நார்மல் வார்ட் –க்கு அவ வந்த்தும் சாப்பிட எதாவது கொடுக்கலாமா? பாவம் பசிக்கும்ல. நான் எதாவது வாங்கிட்டு வரட்டுமா? என்ன வாங்குறது?” கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு கேட்டாள் ஆஷ்ரிதா.
“இரு அச்சு. முதல்ல வார்ட் சேன்ஜ் பண்ணட்டும். டாக்டர்ஸ் சொல்லுவாங்க. க்கூல் மா” என அவளை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான் திரவியம்.
ஐ.சி.யூ.-வின் உள்ளே,
“டேக் கேர் அனேகன்” என கூறிவிட்டு டாக்டர் சுந்தர் வெளியேற, அம்ரிதாவின் தலையை வருடியபடி “என்னை பாரு சகி!” என்றான்.
காற்றில் மிதக்கும் பூவிதழ் போல அம்ரிதாவின் இமைகள் மெதுவாக ஆடி ஆடி திறந்தது. அனேகனது கண்ணீர் அவன் கன்னம் கடந்து அம்ரிதாவின் கன்னத்தில் வழியும் அவளது கண்ணீரில் விழுந்து சங்கமித்தது.
சங்கமித்தது அவர்களது கண்ணீர் மட்டுமல்ல. அவர்களது கண்களில் கலந்துள்ள இப்பிறவியின் காதலும், ஆழ்மனதில் நிறைந்துள்ள பூர்வ ஜென்ம பந்தமும் தான்.
(களவாடுவான்)