Anal 2

Anal 2

கேன்டீனில் மதிய உணவை முடித்த நண்பர்கள், அவர்களின் அடுத்த வேளை வகுப்பிற்காக தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

(அவங்க க்ளாஸ்க்கு போறதுக்கு முன்னாடி வாங்க நாம அவங்கள பத்தி சின்னதா ஒரு இன்ட்ரோ பார்த்துட்டு வந்துடலாம்)

முதலில் கதையின் நாயகி தென்றல்.

தர்மராஜ் மற்றும் தேவகி தம்பதியரின் அருமைப் புதல்வி. தர்மராஜ் அவரின் அத்தை மகளாகிய தேவகியைக் காதலித்து மணந்துகொண்டார். அவர்களின் காதல் சின்னமாக பிறந்தவர்கள் தென்றல் மற்றும் அவளின் இளைய சகோதரி அக்ஷ்யா.

தர்மராஜ் சென்னையில் சொந்தமாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர்களின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சற்று மேல்தட்டு நிலையிலுள்ள குடும்பம்.

தென்றல், அவளைப் பற்றி கூற வேண்டுமென்றால் பிரம்மனே பூலோகம் இறங்கி வந்து வடித்த சிலை எனலாம் அப்படி ஒரு அழகு.

இப்படி சொல்லத்தான் எனக்கும் ஆசை ஆனா என்ன பண்ண என் நாயகி அப்படி இல்லையே. நம்ம தென்றல், நாலே முக்கால் அடி உயரத்தில் இருக்கும் 70 கிலோ தாஜ்மஹால்.

கோதுமையும் மைதாவும் கலந்த பொன்னிறம். இடையைத் தாண்டி வளர்ந்த கரு கரு கேசம். பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகவும் மென்மையானவள். சுருக்கமா சொல்லனும்னா, நம்ம தென்றல் ஒரு நெய் குழந்தை.

என்ன கொஞ்சம் அட்வைஸ் பேர்வழி. இவ மட்டும் அட்வைஸ் பண்ணா எப்பேர்பட்ட பொறுக்கியும் புத்தரா மாறிடுவான்! அந்த அளவுக்கு தத்துவ வியாதி சாரி தத்துவவாதி. இவளுக்கு இதுவே போதும்னு நினைக்கிறேன்.

அடுத்து நம்ம சங்கமித்ரன்.

சங்கரன் மற்றும் மித்ராவதி அவர்களின் தவ புதல்வன். இந்த தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலினால் தங்கள் மகனுக்கு அவர்களின் பெயரை இணைத்து சங்கமித்ரன் என பெயரிட்டனர்.

மித்ரனின் சிறு வயதிலேயே அவன் தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வளரும் செல்லப்பிள்ளை. சரியான சேட்ட பிடிச்சவன். ஆறடி உயரம், வெளிர் நிறமும் அடர் தேகத்துடன் மன்மதானாய் வலம்வரும் ஆடவன். இவனும் கொஞ்சம் நம்ம தென்றல் மாதிரி அமுல்பேபி தான். விளையாட்டுத்தனம் எவ்வளவு இருக்கோ அந்த அளவுக்கு பொறுப்பாகவும் நடந்து கொள்பவன்.

அடுத்து நம்ம விவேகன்.

விவேகன் பெயருக்கு ஏற்றார் போல எந்த ஒரு செயலிலும் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும் செயல்படக் கூடியவன். அவன் எப்போ பிறந்தான் யாருக்கு பிறந்தான் என இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாது. பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் பெற்றோர்களால் ஆசிரமத்தின் வாயிலில் கைவிடப்பட்டவன்.

அன்று முதல் அந்த ஆசிரமமும் அதில் உள்ள மற்ற நபர்களும் தான் இவனுக்கு உறவு. சிறுவயதிலேயே தாய் தந்தையின் பாசத்தை இழந்ததாலோ என்னவோ எப்போதுமே அவன் முகத்தில் ஒரு இறுக்கமும் ஏக்கமும் நிறைந்திருக்கும்.

அவன் சிரிச்சா பேரழகன் தான் ஆனா சிரிக்க மாட்டான். இவன ஸ்ட்ரிக்ட் ஆபிசர்னு சொன்னேன்ல, இவனும் ஜாலி டைப் தான். நம்ம தென்றல் கிட்ட மட்டும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் (அது ஏன்னு அப்புறம் சொல்றேன்). ஆறடிக்கும் கூடிய உயரமும் கண்ணனின் கார் மேக நிறத்திலும் உரமேறிய தேகமும் உடையவன். அதுக்கு காரணம் (ஜிம் இல்லப்பா), தென்றல் அப்பா கூட இவனும் மெக்கானிக் ஷாப் சென்று வேலை செய்வான் அதனால் வந்த உடல் கட்டு.

பள்ளிப் பருவம் வரை ஆசிரமத்தில் இருந்தவன், இப்போது மித்ரன் மற்றும் அவன் தாயுடன் மித்ரன் வீட்டில் தங்கி உள்ளான் அவனின் ராட்சசி சொன்னதற்காக மட்டும்.

(இப்படி வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் இவர்கள் எவ்வாறு நண்பர்களாகினர் என்பதை பிறகு வரும் பாகங்களில் கூறுகிறேன்)

மூணு பேரும் ஒரு வழியா க்ளாஸ்க்கு போய் சேர்ந்துட்டாங்க. அடுத்து ஆங்கிலப் பாட பிரிவுக்கான மேடம் டெய்சி வர, தென்றலும் மித்ரனும் தங்களின் ஜொள்ளு விடும் வேலையை தொடரும்போது, மேடம் சொன்ன செய்தி கேட்டு இருவருக்கும் தலையில் தென்றல் கையால் செய்த கேரட் அல்வா வந்து விழுந்தது போலாயிற்று. (தலையில இடி விழுவதும் நம்ம தென்றல் செய்த அல்வா விழுவதும் ஒன்னுதாங்க).

அது என்னன்னா இன்னும் ரெண்டு வாரத்துல செமஸ்டர் எக்ஸாம் அதான் இந்த ஷாக்.

ஒரு வழியா டெய்சி மேம் அவங்க வந்த வேலைய முடிச்சுட்டு கிளம்ப, அடுத்தடுத்து பாட வேலைகளும் நடந்து முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போறதுக்கு மணியும் அடிச்சிட்டாங்க.

டெய்சி மேம் செமஸ்டர் எக்ஸாம்ன்னு சொன்னதும் கவுந்த தென்றல் மற்றும் மித்ரன் கப்பல்கள் இப்போதுதான் நிமிர்ந்தது.

விவேகன் முன் நடக்க, இவனுக்கு பின்னால் நான்கடி வித்தியாசத்தில் மித்ரனும், தென்றலும் ரகசியம் பேசிக் கொண்டே வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

“ஏய் ராட்சசி உன்னால்தானே அவன் உம்முன்னு வரான் போய் பேசி அவனை சிரிக்க வை” என மித்ரன் தென்றலை மிரட்டி விரட்ட,

இவளும் அவனுக்கு பளிப்பு காண்பித்து விட்டு அவர்களுக்கு முன்னால் நடக்கும் விவேகனிடம் ஓடி சென்றாள். (நடந்து போன அவன் வேகத்துக்கு இவளால ஈடுகட்ட முடியாதே)

ஓடி சென்று விவேகனின் இட கையை பிடித்தவள் “விவு (விவு தென்றல் மட்டும் விவேகனை அழைக்கும் செல்லப் பெயர்) ப்ளீஸ் பேசு டா” என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“விவு பேசு டா ப்ளீஸ் இனி அப்படி போக மாட்டேன். போனாலும் உன்னை கூட்டிட்டு போறேன்” என கெஞ்சி கொஞ்ச விவேகனின் கோபமும் தளர்ந்தது.

அவள் பிடித்து இருந்த அவனின் கையை அவளின் கையில் இருந்து உருவியவன் அவளின் தோளில் கைப் போட, புயல் வேகத்தில் ஓடி வந்து மித்ரனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.

சிறிது நேரம் நடந்து சென்ற பிறகு மூவருக்கும் இடையிலான இறுக்கம் தளர்ந்து வழக்கம்போல வானரப் படையின் சேட்டைகளை செய்து கொண்டே நடந்து வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது விவேகன் மித்ரனிடம் திரும்பி,

“அது ஏன்டா நான் ஜாலியா இருக்கும் போது என்னை அடிக்கற, வம்பு இழுக்கிற, கடிக்கிற எல்லாம் பண்ற. நான் கோபமா இருக்கும்போது மட்டும் இவள என்கிட்ட தள்ளி விட்டுட்டு நீ அஞ்சடி பேக் வாங்குற, அது ஏன்” என சிரிப்பு கலந்த பானியில் வினவ,

அதற்கு மித்ரன், “அதில்லடா, நீ கோவமா இருக்கும் போது அவளை தவிர்த்து உன் பக்கத்துல யாரு வந்தாலும் கண்டிப்பா கண்ணம் பழுத்திடும். நான் வேற கொஞ்சம் செக்கச் செவேல்னு இருக்கேனா இன்னும் அதிகமாக பழுத்திடும். அதனாலதான் அவளை தள்ளி விட்டுட்டு நான் தப்பிச்சுக்கறேன்” என்றான் சிரித்துக்கொண்டே.

அவன் பதிலைக் கேட்டு சிரித்த தென்றல், “விவரம் தான்டா நீ. இனி அவன் கோவமா இருக்கும்போது, அவன் பக்கத்தில் போக சொல்லு அப்போ இருக்கு உனக்கு” என ஒழுங்கு காட்டினாள்.

அவளின் முக பாவனையை கண்டு சிரித்த விவேகன், “சரி சொல்லுங்க ஏன் ரெண்டு பேரும் எக்ஸாம்ன்னு சொன்னதும் முகத்தை தொங்க போட்டிங்க” என வினவ,

“உனக்கே தெரியுமில்ல விவு எனக்கு கெமிஸ்ட்ரில பிராக்டிக்கலா அறிவிருக்க அளவு தியரில இருக்காதுனு. மேஜர் பேப்பர்ல மட்டும் அரியர் வெச்சிட்டேன்னா அம்மா அடி பிச்சிடுவாங்க”  என தென்றல் பாவமாய்  கூற,

அவள் கூறியதைக் கேட்டு அவளை முறைத்த மித்ரனும், விவேகனும் கோரசாக “யாரு நீ அரியர் வைத்தால் டார்லிங் உன்ன அடிச்சிடும். நீ அதுக்கு பயந்துடுவ இத நாங்க நம்பனும் அதானே” என நக்கலாக வினவ,

அவர்கள் கேட்ட பாவனையை கண்டு சிரித்தவள், “அடிக்க மாட்டாங்க. ஆனா வருத்தப்படுவாங்கல்ல அது வேணாம்டா அதனால தான். எதுனா பண்ணுடா எனக்கு பயமா இருக்கு. புது காலேஜ் வேற, வந்த முதல ஃபெய்ல் ஆனா மானம் போய்டும்” என புலம்பி தள்ள,

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த விவேகன் சிறிது நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவன்,

“சரி விடுங்க சி.எஸ் டிபார்ட்மெண்ட்ல எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கான். அவன் நமக்கு கெமிஸ்ட்ரி சொல்லித்தரேன்னு சொல்லி இருக்கான். நாளைக்கு அவன பாக்கலாம்.  இப்ப வீட்டுக்கு போகலாம் வாங்க” என கூறி முன் நடக்க,

அவன் பின்னே ஓடியவரே, “அதுயாரு எங்களுக்கு தெரியாம உனக்கு ஃப்ரண்டு? அதுவும் சிஎஸ் டிபார்ட்மெண்ட் பையன் கெமிஸ்ட்ரி சொல்லித் தருவானா!” என தென்றல் அலுத்துக் கொள்ள,

“ஆமா அவன் நல்லா படிக்கிற பையன். டுவல்த்ல அவனும் சையின்ஸ் குரூப் தான படிச்சிருப்பான். அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நம்பி கத்துக்கலாம்” என அவளை இழுத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான் விவேகன்.

இவள் விவேகன் உடன் இவ்வளவு சண்டை முட்டிக் கொண்டிருக்கும் போது, மித்ரன் இவர்களை கண்டு இளித்து கொண்டே வந்தான்.அவனை கூர்ந்து நோக்கிய பின்பு தான் தெரிந்தது, அவன் இளித்துக் கொண்டு வந்தது இவர்களைப் பார்த்து அல்ல இவர்களுக்கு முன் நடக்கும் அழகான பெண்களைப் பார்த்து என.

அவனை தீ பார்வை பார்த்த தென்றல் “ஏண்டா வளர்ந்த தடிமாடு உனக்கும் சேர்த்து தானடா நான் இவன்கிட்ட கத்திக் கூப்பாடு போட்டு இருக்கேன். உனக்கு என்ன அங்க பார்வை வந்து இவன்கிட்ட என்னன்னு கேளு இல்ல ஈவினிங் சாப்பிட பானிபூரி கட்டு” என மிரட்ட, அவனும் பானிபூரி கிடைக்காது என பயந்து கொண்டு அவளுடன் சென்றான்.

“டேய் யாருடா அது புது ஃப்ரண்டு? பேராச்சும் சொல்லிட்டு போயேன்டா. இவ என்ன போட்டு கொலை பண்ணிடுவா போலிருக்கே” என மித்ரனும் தென்றலுக்கு பரிந்து பேச,

விவேகன் இவர்களைப் பார்த்து திரும்பி “அவன் பெயர் தமிழ்” என்றான்.

“தமிழா” என இரண்டு ஜந்துக்களும் கோரசாக யோசிப்பது போல் பாவனை செய்ய,

“ரொம்ப யோசிக்காதீங்க மூளை உருகி மூக்கு வழியாக வந்திடபோகுது” என இவர்களைக் கேலி செய்தவன்,

“ஆமா‌ தமிழ்தான், சி எஸ் டிபார்ட்மென்ட் தமிழ்.”

“முழு பேரே தமிழ் தானா?” என தென்றல் சந்தேகமாக வினவ, (சரியான கேள்விக்கு பொறந்தவ)

‘இல்லை’ என தலையசைத்த விவேகன் அவன் முழு பெயர்…..

“தமிழ் நிலவன்”

என்றான் மென்மையாக சிரித்தவாறு.

அவன் சிரிப்பதை உலகத்தின் எட்டாவது அதிசயமாக பார்த்த இரண்டு ஜந்துக்களும் என்னடா இவனே சிரிக்கிறான் அவன் பேர சொல்லிட்டு, என தலையை சொறிந்தவாறு அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

error: Content is protected !!