AnalAval10
AnalAval10
அனல் அவள் 10
இரண்டு இருசக்கர வாகனத்தில் நால்வரும் கடற்கரையை நோக்கி அவர்களின் பயணத்தை துவங்கினர்.
அவர்களின் பயணம் தொடங்கிய நேரம் தமிழின் மனதில் அன்று,
“அவளுக்கு டூ வீலர்ல வர பயம் வண்டில வரும் போது பயப்படுவா கவனமா கூட்டிட்டு வா ன்னு சொன்னான்ல இன்னைக்கு இவன் எப்படி அவள பத்திரமா கூட்டிட்டு வரான்னு நானும் பார்க்கிறேன்” என மனதில் நினைத்து சிரித்துக் கொண்டான்.
அவன் மைண்ட் வாய்ஸ் மித்ரனுக்கு கேட்டதோ என்னவோ அவன் சிரிப்புக்கு மித்ரனும் பதில் சிரிப்பு சிரித்து வைத்தான்.
ஒருவழியாக நால்வரும் கடற்கரைச் சாலையை வந்து சேர்ந்தவர்கள் ஓர் ஓரமான இடமாக பார்த்து வண்டியை பார்க் செய்துவிட்டு கடற்கரை மணலில் இறங்கி நடக்கத் துவங்கினர் கடற்கரையை நோக்கி.
இன்று அவர்கள் வரும் வழியெல்லாம் எதிரில் வந்த வாகனங்களும் வேகமாக வந்தது விவேகனும் சற்று வேகமாக தான் வண்டியை ஓட்டினான் ஆனாலும் தென்றல் நிதானமாக எப்போதும் போல் இருந்தாள் இதனை கண்ட தமிழுக்கு இருந்த குழப்பம் பத்தாது என மேலும் குழப்பம் மேலோங்க.
இதனை தெரிந்து கொள்ளாமல் இன்று நமக்கு தூக்கம் வராது என நினைத்தவன் தென்றலையும் விவேகனையும் முன் நடக்கவிட்டு மித்ரனை இழுத்து அவனோடு இணைத்துக் கொண்டான்.
“ஏன் டா மித்ரா அன்னைக்கி நான் இருவது கிலோமீட்டர் ஸ்பீட்ல வந்ததுக்கே அந்த பயம் பயந்தவ இன்னைக்கு அவன் அவ்வளவு ஸ்பீடா வந்தும் பயம் இல்லாம நார்மலா இருக்கா எப்படிடா இதெல்லாம்” என கேட்க.
மித்ரன் அவன் கேள்வியை கேட்டு சத்தமாக சிரித்தான். பின் தமிழின் தோள்களில் கைபோட்டு அவனை அணைத்தவாறு நடக்க துவங்கியவன், “இப்போ கேட்டபாரு இதுதான் சரியான கேள்வி வா வா வா பேசுவோம் உன்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு” என கூறியவாறு அவன் கேள்விக்கு பதில் வழங்கத் துவங்கினான்.
“நீ வரும்போது கவனிச்சியா விவேகன் தென்றல் கிட்ட பேசிகிட்டே வந்தான்” என தமிழின் முகத்தை உற்று நோக்கியவாறு மித்ரன் கேட்க சிறிது நேரம் யோசித்தவன் ‘ஆம்’ என தலையை அசைத்தான்.
“அதுலதான் டா விஷயமே இருக்கு அவ எதிர்ல வர வண்டி மேல கான்சன்ட்ரேட் பண்ணாம இருந்தாலே போதும், பஸ்ஸில் வரும்போது கூட நாங்க அவ ஜன்னல் வழியா பார்க்காத மாதிரி கதை பேசிட்டே தான் வருவோம்”.
“அப்படியே அவ ஜன்னல் வழியே பார்க்க விரும்பினால் எதிர்ப்பக்கம் வண்டி வரலனா மட்டும் தான் ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்க விடுவோம் இல்லைன்னா அவ எங்க கிட்ட பேசிகிட்டு வம்பு பண்ணிக்கிட்டு வர மாதிரி தான் வெச்சிக்குவோம் அதே டெக்னிக்தான் விவேக் இன்னைக்கும் பண்ணி இருப்பான் ஆதான் மேடம் இவ்ளோ கூலா வந்துட்டு இருக்காங்க” என மித்ரன் கூறவும்.
தமிழுக்கு அவமானமாக போனது இந்த சின்ன டெக்னிக் கூட தனக்கு தெரியவில்லையே என எண்ணி மிகவும் நொந்து போனான்.
சிறிது நேரம் அவர்களுக்கிடையில் மௌனமே நிலவ அந்த அமைதியை மித்ரனே கலைத்தான்.
“இன்னைக்கு என்கிட்ட கேள்வியா கேட்டு என்ன சாவடிச்சிடுவனு நினைச்சேன் நீ அமைதியா வர கேளு கேளு இன்னும் நிறைய இருக்கணுமே” என யோசிப்பது போல பாவனை செய்ய.
தமிழ் அவனை கண்டு முறைத்தவாறு, “அவளுக்கு நீங்க மட்டும்தான் ஃப்ரண்ட்ஸா? நானும் காலேஜ்ல பார்க்கிறேன் அவ எந்த பொம்பள பசங்க கூடயும் பேச மாட்றா ஸ்கூல்ல கூட அவளுக்கு பொம்பள பிள்ளைங்க ஃப்ரண்டு இல்லையாடா” என தமிழ் கேட்டதும்.
தமிழின் இந்த கேள்வியில் ஜர்க் ஆனான் மித்ரன்,’
‘தென்றல் பொண்ணுங்க கிட்ட பேசலனு இவனுக்கு எப்படி தெரியும், காலேஜ்ல இவன ஒரு நாள் மட்டும் தான் எங்களுக்கு தெரியும் ஆனா இவனுக்கு எங்கள நிறைய தெரிஞ்சிருக்கும் போலயே விசாரிப்போம்’ என நினைத்தவன்,
பிறகு தன்னை நிதானித்து கொண்டு, “காலேஜ்ல யாரும் இல்லடா ஸ்கூல்ல நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க அவளுக்கு ஆனா வந்த பிள்ளைகள் எல்லாம் விவேகன சைட் அடிச்சுதுங்க அதனால அவ கடுப்பாகி அதுக்கப்புறம் எந்த பொண்ணுகிட்டயும் பேசறது இல்ல டா” என்க.
இதனைக் கேட்ட தமிழுக்கு கடுப்பாக இருந்தது, இருந்தும் அவளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள மேலும் மேலும் மித்ரனை போட்டு சீண்டிக்கொண்டே இருந்தான்.
“அப்ப அவளுக்கு கேர்ள்ஸ்ல ஃப்ரண்டே இல்லையாடா ஒருத்தர் கூடவா இல்லை” என சந்தேகமாக கேட்க.
“ஏன் இல்லாம இருந்தா ஒருத்தி இதுக்கு மேல அவள பத்தி எதுவும் கேக்காத ப்ளீஸ்” என முகம் வாடியவாரு கூறவும்,
தமிழ், “சாரிடா அவங்கள பத்தி நான் எதுவும் கேட்க மாட்டேன்”. எனவும்
ஆர்ப்பரிக்கும் கடற்கரையை வந்து சேர்ந்தனர் நாள்வரும்.
கடற்கரை அலைகளை கண்டதும் தென்றல் துள்ளிக்குதித்து அதனுடன் விளையாட ஓடிவிட விவேகன் அவளுக்கு துணையாக அவள் பின்னாடியே சென்று விட்டான்.
சிறிது நேரம் அமைதியாக விவேகனும் தென்றலும் அலையுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரன் கடற்கரை மணலில் அமர்ந்தவாறு தமிழையும் அமர செய்து தமிழின் முகத்தை காண அது கோபத்தில் சிவந்திருந்தது.
அவனின் முகத்தை பார்த்து சிரித்த மித்ரன், “ஏன்டா எப்ப பாத்தாலும் அவங்க ரெண்டு பேரையும் சினிமா வில்லன் மாதிரியே முறைச்சிக்கிட்டே திரியர உனக்கு என்ன தான் வேணும்” என அளுத்துக் கொண்டு கேட்க.
“அது ஒன்னும் இல்லடா நீ அத விடு அன்னைக்கு தென்றல் விவேகன் பத்தி சொல்லிட்டு இருக்கும்போது நீ சொன்னல்ல எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு ஆனா அவன் வர வரைக்கும்னு யாருடா அந்த அவன் அதை யோசிச்சு யோசிச்சு என்னால முடியலடா தயவுசெய்து சொல்லி தொலையேன்” என்க.
“அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட ஒன்று மட்டும் சொல்லிக்க விரும்புகிறேன் தமிழ்”, “நீயும் எல்லாரையும் மாதிரி ஆணும் பெண்ணும் ஒன்னா இருந்த அது காதல் மட்டும் தானு தப்பு கணக்கு போடாத”,
“அதை தாண்டியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆழமான அழகான உறவுகள் இருக்கும் தமிழ் அதோ அவங்கள மாதிரி” என மித்ரன் விவேகனையும் தென்றலையும் நோக்கி கை காட்டியவன்,
“அந்த உறவுல, அவங்க உலகத்துல நமக்கும் இடம் கொடுத்து இருக்காங்க. அத நீயே கெடுத்துக்காத தமிழ்” என்றவன் அவ்வளவு தான் என்பது போல் அமைதி ஆகி விட்டான்.
இதனை கேட்ட பிறகு தமிழுக்கு தான் எங்கேயோ தவறி போன உணர்வு, மீண்டும் மித்ரனே தொடர்ந்தான்.
மித்ரனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
“ஸ்கூல் வரைக்கும் எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. விவேகன், தென்றல் நம்ம கூட இருந்தா இப்படி பயந்து தான் இருப்பா அவள தனியா விட்டா தான் அவளும் கொஞ்சம் தைரியமா இருப்பான்னு பிளான் பண்ணி அவளை தனியா கேர்ள்ஸ் கல்லூரியில் சேர்த்து விட்டான்”.
“முதல் ஆறு மாசம் மேடம் எந்த பிரச்சனையுமில்லாம லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ல போறது வரதும் எங்க கூட சேர்ந்து அரட்டை அடிப்பதுனு எல்லாம் நல்லா தான் இருந்துச்சு”.
“கேர்ள்ஸ் காலேஜ்ல கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கத்தானே செய்வார்கள் அப்படி ஒரு நாளு பேரு சேர்ந்தாங்கடா இவ கூட.”
“அதுல ஒருத்தியோட அண்ணன் தான் அந்த அவன் அவனோட பேரு “பாலா” அந்தப் பொண்ணை பிக்கப் டிராப் பண்றதுக்கு அவன் டெய்லி காலேஜுக்கு வருவான் போல,”
“அப்படி வரும்போது ஒருநாள் அவன் தென்றல பார்த்து இருக்கான் அப்படி இப்படினு இவ கிட்ட எப்படி எப்படியோ பேசி போன் நம்பர் வேணும்னு வாங்க ட்ரை பண்ணி இருக்கான்.”
“இவளுக்குத்தான் ஃபோனில்லயே எல்லாமே விவேகன் தான் எங்க மூணு பேர்ல என்கிட்ட மட்டும் தான் போன் இருக்கும் அதுனால இவளும் அவனுக்கு நம்பர் கொடுக்காமல் விட்டு இருக்கா.”
“கொஞ்ச நாள் சாதாரணமா பேசிட்டு இருந்தவன் திடீர்னு லவ் பண்றேன்னு சொல்லி பேச ஆரம்பிச்சிட்டான். அது அவளுக்கு புடிக்கல கொஞ்சம் பயமா கூட இருந்து இருக்கு விவேக் கிட்ட சொன்னா கண்டிப்பா அவனா கொன்னுடுவானு அவளுக்கு தெரியும் அதனால அவன் கிட்டயும் சொல்லல.”
“என்கிட்ட சொன்னா நானும் கண்டிப்பா விவேக் கிட்ட சொல்லிடுவேன். அதனால என்கிட்டயும் சொல்லல்ல எங்கே, எங்க கூட க்ளோசா இருந்தா விவேக் கண்டுபிடிச்சிடுவானு அதுக்கப்புறம் எங்க கிட்ட இருந்து கொஞ்சம் விலக ஆரம்பிச்சா.”
“இதனால விவேகனுக்கு சந்தேகம் வந்து அவளுக்கு தெரியாமலே அவளை ஃபாலோ பண்ணி அதுல பிரச்சனை அந்த பையன் தானு விவேக் க்கு தெரிஞ்சு போச்சு.”
“அந்தப் பையனை தனியா கூப்பிட்டு பொறுமைய சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணி இருக்கான். அவன் விவேக் சொன்னது எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு அடுத்த நாள் போய் தென்றல் கிட்ட பயங்கரமா பிரச்சனை பண்ணி வச்சிருக்கான்”.
“நாங்க அன்னைக்கு காலேஜ்ல இருந்தோம் திடீர்னு ஒரு புது நம்பரில் இருந்து போன் வந்துச்சு, பேசினா இந்த மாதிரி உங்க ஃப்ரெண்ட் தென்றல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க அப்படின்னு.”
“ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சு ஓடிப்போய் ஹாஸ்பிடல்ல பார்த்தா அவ மயங்கி இருந்தா”
“அப்புறம் அவ ஃப்ரெண்ட புடிச்சு விசாரிச்சதுலதான் தெரிந்தது,”
“அந்த பையன் அவள பஸ்ல போகும் போது பிடித்து இழுத்து வந்து பாதி வழியில் இறக்கி, தப்புத்தப்பாக நடுரோட்டிலேயே வச்சு தொட்டு தொட்டு ரொம்ப ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டான்னு,”
“விவேக் அன்னைக்கு அந்த பையன பார்த்து அடிச்ச அடியில அந்த பையன் செத்தே போய் இருக்க வேண்டும், கண்டிப்பா செத்துப் போய் இருப்பானு தான் நினைக்கிறேன்.போலீஸ் கேஸ் ஆகாம நானா தான் எல்லாத்தையும் பார்த்து கிட்டது.”
“அதுக்கப்புறம் அந்த பையன் வரவே இல்லை. தென்றலும் காலேஜுக்கு போகமாட்டேன்னு மூணு மாசம் ரூமிலேயே அடைந்து கிடந்தாள்.”
“சரியா சாப்பிடக் கூட மாட்டா அவ வாயிலிருந்து ஒரு ரெண்டு வார்த்தை வாங்குறதுக்குள்ள எங்க உயிரே போயிடும்,”
“விவேக் தான் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டான் அந்த டைம்ல அப்புறம் எப்படி எப்படியோ பேசி அவன் தான் அவளை சமாதானப்படுத்தி இந்த காலெஜ்ல சேர்த்துவிட்டது எல்லாம்.”
“இந்த சம்பவத்துக்கு அப்புறமாதான் தென்றல் எந்த கேர்ள்ஸ் கிட்டயும் பேசுரத விட்டுட்டா, அதே மாதிரி எங்க ரெண்டுபேர் தவிர்த்து எந்த பசங்ககிட்டயும் பேசமாட்டா பழகமாட்டா எல்லாமே நாங்க மட்டும் தாண்டா அவளுக்கு.”
“இப்போ கொஞ்ச நாளா தான் எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு இதுக்கு அப்புறமும் போகும்னு நம்புவோம்” என பெரும் மூச்சி விட்டு தன் உரையை முடித்தான் மித்ரன்.
ஏனோ மித்ரன் பேசியதைக் கேட்ட தமிழுக்கு மனதில் குற்ற குறுகுறுப்பு ‘எத்தகைய உறவை தான் கொச்சைப் படுத்த எண்ணிணோம்’ என தமிழ் மித்ரனை சங்கடமாக பார்க்க அவனைப் பார்த்து ஆறுதலாக சிரித்தான் மித்ரன்.
இவர்கள் பேசி முடிக்கவும் விவேகனும், தென்றலும் விளையாடி களைத்து போய் அவர்கள் அருகில் வந்து அமரவும் சரியாக இருந்தது.
பிறகு மித்ரன் தென்றலிடம், “உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப கேக்கறேன் ஒழுங்கா பொய் சொல்லாம சொல்லு நேத்து விவேக் தனியா போ தனியாக வானு சொன்ன உடனேயே சரின்னு சொன்னா எப்படி அதுல ஏதோ உள்குத்து இருக்கும்னு என் பக்ஷி சொல்லி கிட்டே இருக்கு உண்மைய சொல்லு” என்க.
அவன் கேட்டதை நினைத்து சத்தமாக சிரித்த தென்றல்,
“அட லூசு பசங்களா இன்னுமாடா உங்களுக்கு அது தெரியல பத்து நாளைக்கு காலேஜ் லீவு அதுக்கப்புறம் எக்ஸாம், எக்ஸாம் டைம்ல எல்லாம் நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்ல தானடா இருப்பீங்க நான் உங்க கூட தான் வந்தாக வேண்டும்.”
“அந்த தைரியத்துலதான் சரி இப்போத்திக்கு விவு டென்ஷன குறைக்கலாம்னு என்று சரின்னு சொல்லி வச்சேன் நீங்க கண்டுபிடிச்சு இருப்பிடங்கனு நினைச்சேன் இன்னும் கண்டுபிடிக்கலயா போட லூசுப்பயலே” என மித்ரன் தலையிலே ஒரு தட்டு தட்டினாள்.
அதன் பிறகு அங்கு சிரிப்பொலியே நிறைந்து இருந்தது.
அப்போது கடலில் இருந்து சில படகுகளில் மீனவர்கள் அவர்கள் பிடித்த மீனுடன் வலையை கையில் பிடித்தவாறு இறங்கிவர அதனை கண்ட தென்றல் அவர்கள் மீனை பிரித்து எடுத்துக் கொண்டு இருக்கும் இடத்திற்கு ஓடி சென்றாள்.
விவேகனும் அவள் தங்களின் கண்பார்வை படும் இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவர்களுக்கு தேவையான தின்பண்டம் வாங்கிவர சென்று விட்டான்.
தின்பண்டங்களை வாங்கி விட்டு 10 நிமிடம் கழித்து வந்த விவேகன் தென்றல் இருந்த இடத்தை நோக்க அங்கே தென்றலை காணவில்லை சற்று அதிர்ந்தவன். அவன் கண் பார்வையை கூறாக்கி அங்கு உள்ள மக்களிடையே சல்லடை போட்டு தேடியும் அவளை காணவில்லை.
பிறகு மித்ரன் தமிழிடம், “எங்கடா அவளக்காணோம் அவளை நீங்க பார்த்துக்குவீங்கனு தானடா நான் உங்களுக்கு சாப்பிட வாங்கிட்டு வர போனேன் எங்கடா போன அவ” என்க.
உடனே மித்ரன், “எங்ககிட்ட கேட்டால் எங்களுக்கு என்னடா தெரியும் அவ போனதும் நீயும் போன சரி அவ கூடத்தான் நீ போறேன்னு நாங்க அவ போன இடத்தில கவனிக்கவே இல்லையே டா” என்றதும் சிறிது நேரத்தில் அங்கு பதற்றம் நிலவியது.
மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் சென்று தேடியும் அவளை காணவில்லை. அவளின் புகைப்படத்தை அங்குள்ளவர்களிடம் காட்டியும் எவரும் தெரியவில்லை எனவே கூறவும் விவேகன் மிகவும் உடைந்து போய் மண்ணில் சரிந்து விழுந்து கண்கலங்க தொடங்கிவிட்டான்..
விவேகன் சரிந்து விழுவதை கண்ட மித்ரனும் தமிழிலும் பதறிக் கொண்டு அவன் அருகில் ஓடிவந்து,
“நீயே உடைஞ்சு போய்ட்டா எப்படிடா, கஷ்டப்படாத அவளை கண்டு பிடிச்சிடலாம் இங்க தான் எங்கனா பஞ்சுமிட்டாய் காரனா ஃபாலோ பண்ணிட்டு போயிருக்கும் பன்னி, வாடா போய் தேடலாம்” என எவ்வளவு கூறியும் விவேகன் சமாதானம் ஆவதாக தெரியவில்லை.
“அவளா தாண்டா எங்கனா போயிருப்பா அவள கடத்திட்டு போற அளவுக்கு அவளுக்கு யாருடா விரோதி இருக்காங்க நீ கவலை படாதடா கண்டுபிடித்துவிடலாம்” என தமிழ் கூறிய அடுத்த நொடி.
மூவரின் உதடுகளும் சேர்ந்து உச்சரித்தன அவனின் பெயரை
பாலா என….
(தொடரும்)