UUU–EPI 24

UUU–EPI 24
அத்தியாயம் 24
சாக்லேட் சாப்பிடுவது இருமலை சாந்தப்படுத்தும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆகவே சாக்லேட் கலந்த இருமல் மருந்துகள் வெளிநாடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
சிந்தியா வீட்டுக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருந்தாள். என்னவோ இன்று அவள் மனம் தன் அண்ணாவை ரொம்பவே தேடியது. அவன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டுக் கதற வேண்டும் போல இருந்தது அவளுக்கு. உடலும் மனமும் களைத்துப் போய் ஓய்வுக்கு கெஞ்சியது.
அந்த நேரம் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள் நர்ஸ் நோரா. எப்பொழுதும் மாலை ஆறு மணிக்கே ஆபிசை சாத்தி விட்டுக் கிளம்பி விடுவார்கள் இருவரும். இன்றைக்குப் பார்த்து, நார்மல் டெலிவரி ஒன்று இருந்ததால், அதை முடித்து விட்டு வர மணி ஏழுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது.
“டாக்டர், அடா எமேர்ஜென்சி கேஸ் சத்து! ஆன் தீ வே”
சிந்தியாவின் பேஷன்ட் ஒருத்தி, இப்பொழுது எட்டாவது மாதம். பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட, பனிக்குடம் உடைந்து போயிருந்தது. ஆம்புலன்சில் அவளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதை தான் நோரா இவளிடம் இன்பார்ம் செய்ய வந்திருந்தாள்.
பக்கத்தில் வைத்திருந்த வாசனை வெட் டிஷூவினால் முகத்தை அழுந்தத் துடைத்தவள், ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்ய சொன்னாள். இன்னும் முப்பது நிமிடங்களில் இவள் ரெடியாகி கடமையை ஆற்ற செல்ல வேண்டும்.
“நோரா, கெட் மீ எ ஸ்ட்ரோங் ப்ளாக் காபி ப்ளிஸ்” என கேட்டவள், போனை எடுத்தாள் சைலண்டில் போட.
அந்த நேரம் அது ஒலி எழுப்பியது. ‘ப்ரோ லவ்’ காலிங் என காட்ட, மெல்லிய புன்னகையுடன் பச்சை பட்டனை ஸ்வைப் செய்து காதுக்குக் கொடுத்தாள்.
“எங்கடாம்மா இருக்க?”
“ஹாஸ்பிட்டல்ல”
“எப்ப வருவ?”
“ஏன்?”
“சொல்லும்மா!”
“சொன்னா மட்டும் என்ன செய்யப் போற! ஓடி வந்து என்னை பிக்கப் பண்ண போறியா? இல்ல திகு திகுன்னு பசிக்கற வயித்துக்கு டின்னர் வாங்கிக் குடுக்கப் போறியா?” கடுப்புடன் கேட்டாள்.
“நான் எங்க இருக்கேன்னு சொல்லு பார்ப்போம்?”
“அதான் யூ.எஸ் நம்பர் காட்டுதே! அமெரிக்கால இருக்காம அம்ப்பாங்லயா(அம்ப்பாங்—மலேசியாவில் இருக்கும் ஒரு டவுன்) இருக்கப் போற! கடுப்ப கெளப்பாம போடா அங்கிட்டு” என கத்தினாள்.
“ஹே பாப்பா! நான் ஈப்போ வந்துட்டேன்! போன் ரோமிங்ல இருக்குடா! அதான் இன்னும் யூ.எஸ் நம்பர் காட்டுது! ஹோட்டேல்ல செக் இன் பண்ணிட்டேன்! இனிமே டின்னர் என்ன, சப்பர், ப்ரேக்பெஸ்ட், ப்ரன்ச், லன்ச், ஈவ்னீங் டீ, மறுபடி டின்னர்னு நாலு நாளைக்கு ஜாலியா இருக்கலாம் நாம ரெண்டு பேரும்!”
இவள் முகம் பூவாய் மலர்ந்துப் போனது.
“எனக்கு தெரியும் கண்டிப்பா நீ வருவன்னு! கஸ்டம்னா அண்ணா ஒருத்தன் இருக்கான்னு தானே நான் தைரியமா சுத்திட்டு இருக்கேன்! இப்போ ஒரு எமெர்ஜென்சி கேஸ் இருக்குண்ணா! அட் லீஸ்ட் மூனு மணி நேரமாச்சும் ஆகும் நான் ஆபரேட் பண்ணி முடிக்க! அதுக்கப்புறம் நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு போன் பண்ணறேன்! அப்டர் தெட் யூ கென் பிக் மீ அப். கார் இருக்கா, இல்லை நான் வந்து பிக் அப் பண்ணிக்கவா உன்னை?” என படபடவென திட்டம் போட்டாள் சின்னவள்.
“ஏர்போர்ட்ல கார் ரெண்ட் பண்ணிருக்கேன். ஐ ஷெல் பிக் யூ ஆப் லேட்டர்”
“ண்ணா”
“என்ன குட்டிமா?”
“ஆபரேஷனுக்கு கத்தி எடுக்கனும்ணா! ஆனா மனசு ஒரு நிலையா இல்ல எனக்கு!” குரல் கரகரத்து வந்தது அவளுக்கு.
“பேபிம்மா! அண்ணாகிட்ட என்ன விஷயம்னு இறக்கி வை! தென் யூ வில் பீல் பெட்டர்! எந்த பிரச்சனையா இருந்தாலும் உனக்காக நான் சுமக்கறேன்” என அணுசரனையாய் பேசினான் அண்ணன்காரன்.
அவன் வார்த்தையில் இவ்வளவு நேரம் அழுத்திக் கிடந்த மனபாரம் அனலில் இட்ட பனியாய் உருகி கரைவது போல உணர்ந்தாள் சிந்தியா. தூரம் இருந்தாலும், பேச்சு வார்த்தையின்றி வாழ்ந்தாலும், தனக்கு ஒன்று என்றால் அவன் வந்து நிற்பான் என நன்கு புரிந்து தான் வைத்திருந்தாள் இவள்.
கடிகாரத்தைப் பார்த்தாள் சிந்தியா. ஆபரேஷன் தியேட்டர் போக இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. நாற்காலியில் அமர்ந்தவள், படபடவென மனதில் இருப்பதை போனின் வழி கொட்ட ஆரம்பித்தாள்.
“எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சாம்! அது எனக்கே கூட தெரியுதுடா அண்ணா! ஹேண்ட்சமா யாராயாச்சும் பார்த்தா, ‘வாவ் ஹீ லுக் ஹோட்!’னு தோணுது! மேன்லியா யாரயாச்சும் பார்த்தா ‘வாட் எ மேன்’னு தோணுது! புத்திசாலித்தனமா யாராச்சும் பேசுனா ‘கிரேட் பெர்சனாலிட்டி’னு தோணுது! மெடிக்கலி ஸ்பீக்கிங், இந்த வயசுல இதெல்லாம் தோணலனா தான் தப்புண்ணா”
அந்த பக்கம் வெடித்து சிரித்தான் அண்ணன்காரன்.
“சோ, தாத்தா மாப்பிள்ளை பார்க்கவா செல்லம்மான்னு கேட்டப்போ, வை நோட், பாருங்க தாத்தான்னு சொன்னேன்! இவ்ளோ நாள் வெளியூர்ல தங்கி படிச்சிருக்கேன், எத்தனையோ காய்ஸ் என் வாழ்க்கையில க்ராஸ் பண்ணியிருக்காங்க. பட் நான் யாரையும் காதலிக்கலண்ணா! ஏன்னா..” என சொல்லியவள் அமைதியானாள்.
“ஏன்னா இன்னொரு மூர்த்தி இந்த வீட்டுக்கு வேணாம்னு நெனைச்சிருப்ப! என்னை மாதிரி இன்னொருத்தன் உருவாகக் கூடாதுன்னு நெனைச்சிருப்ப” என சாதாரணமாக சொன்னான் இவன்.
நீண்ட பெருமூச்சு வந்தது அவளிடம்.
“காதல் ஜாதி, மதம், குலம், கோத்திரம் பார்க்காதுண்ணா! அப்படிப்பட்ட காதல் எனக்கு வந்துட்டா, தாத்தா துடிச்சுப் போயிடுவாரு! வீட்டுல பூகம்பம் வெடிக்கும். அவரு துடிக்கற மாதிரி எந்த செயலையும் இந்த சிந்தியா செய்யமாட்டா! பிகாஸ் சிந்தியா லவ் சிவசு சோ மச்!”
“தெரியும்டாம்மா! சரி சொல்லு, உங்க தாத்தா இப்ப என்ன பிரச்சனை பண்ணறாரு?”
“ஏற்கனவே நம்ம ஜாதியிலேயே ஒரு மாப்பிள்ளைப் பார்த்தாருண்ணா! ஹீ ஓவ்ன்ஸ் எ ஐ.டி கம்பேனி! போட்டோ காட்டனாரு! நல்லாத்தான் இருந்தான். மீட் பண்ணோம்! அவன் நேரிடையாவே ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’னு பாடிட்டான். வயலின் வாசிக்காதது மட்டும்தான் பாக்கி.(அவன் யாருன்னு உங்களுக்கும் தெரியும்!) அது என் தப்பாண்ணா? நல்ல பையனை கோட்டை விட்டுட்டேன்னு சிவசு குதி குதின்னு குதிக்கிறாரு! மனசுல இன்னொருத்திய வச்சிருக்கவன் கிட்ட போய் தன்மானத்த விட்டு கெஞ்ச சொல்றியாண்ணா! நோ வே!”
“விடு பேபிமா! உன்னை மாதிரி ஒருத்தி கிடைக்க அவனுக்குக் குடுத்து வைக்கல!”
“ஆமா, சிந்தியா பெரிய உலக அழகி! ஓவர் சீன் போடாதே! நீ! முகம் பார்க்கற மாதிரி இருக்கு, அவ்ளோதான்! மத்தப்படி உன் தங்கச்சி ரொம்பவே சாதாரண பொண்ணு”
‘முகம் மினுமினுப்பாய் அழகா இருந்துட்டா போதுமா? ஆம்பளைங்கள கட்டி வைக்கற அளவுக்கு உனக்கு அசேட்ஸ் இல்ல’ என கிண்டலாய் பேசிய விக்கியை நினைத்து நெஞ்சம் கொதித்தது இவளுக்கு. ஒல்லியாய்தான் இருக்கிறாள். அந்த ஒல்லி தேகத்துக்கு ஏற்ற மாதிரி உடலமைப்பு அவளுக்கு. முன்னாடி குட்டி மாங்காயையும், பின்னாடி குட்டி தேங்காயையும் வரமாய் கொடுத்திருந்த கடவுளிடம் போய் சண்டையா பிடிக்க முடியும்!
“என் தங்கச்சி என் கண்ணுக்கு உலக அழகிதான்”
“ஹ்க்கும்! ரெண்டாவதா விக்னேஷ்வரன்னு ஒருத்தன அறிமுகப்படுத்தனாரு தாத்தா. ஓவர் அழகன் அவன். வீ ஃபோர் யூ(V for U) அப்படின்னு ஒரு க்ளோதிங் லைன் இருக்குல்ல, அது அவனோடதுதான். நம்ம ஜாதியில, அழகான, அதுவும் சக்சஸ்புல் தொழிலதிபர் பையன்னதும் சிவசு மயங்கிப் போய்ட்டாரு! நான் தாத்தா கிட்ட ஸ்ட்ரீக்டா, பேசிப் பழகி பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னேன். பழகிப் பார்த்தேன். எனக்குப் புடிக்கலண்ணா! புடிக்காதவன் கூட எப்படின்னா மிச்ச சொச்ச காலத்தையும் வாழறது? என் கல்யாண விஷயத்துல எந்த பிரச்சனையும் வேணான்னு தானேணா அவரயே மாப்பிள்ளை பார்க்க சொன்னேன். அவர மலை போல நம்பி என் எதிர்கால வாழ்க்கையையே ஒப்படைச்சிருக்கேனே, எனக்குப் புடிச்ச மாதிரி பார்ப்போம்னு தோணனுமா இல்லையா? அவரோட ஜாதி வெறிக்காக என்னோட வாழ்க்கையை பணயம் வைக்கப் பாக்கறது நியாயமா? நான் வேணான்னு சொல்லியும், நல்ல பையன், நல்ல குடும்பம், நல்ல பாரம்பரியம், வீண் பிடிவாதம் பிடிக்காத செல்லம்மான்னு ஒரே அட்வைஸ்! கொஞ்ச நாளா என் கிட்ட பேசாம கோபமா சுத்திட்டு இருந்தாரு! அவர் கோபம் என்னை ஒன்னும் செய்ய முடியலன்னு, கண்ணீர ஆயுதமா எடுத்துக்கிட்டாரு இப்போ! என்னால முடியலண்ணா! எங்க அவரோட கண்ணீருக்காக சரின்னு சொல்லிடுவேனோன்னு பயமா இருக்கு” என சொல்லி முடித்தவள் பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டாள்.
விக்கி மாதிரி ஒருத்தனுடன் ஊன் உயிரை பகிர்ந்து வாழ்வதை நினைத்தாலே சர்வமும் நடுங்கியது சிந்தியாவுக்கு. இன்னும் எதுவும் முடிவாக தெரியாத போதே, கண்ட நேரத்தில் எல்லாம் போன் செய்து எங்கே இருக்கிறாய், என்ன செய்கிறாய், யாரோடு இருக்கிறாய் என ஆயிரத்தெட்டு கேள்விகள். அவனைப் போல சொந்த பிஸ்னசா நடத்துகிறாள், வெட்டியாய் பேசிக் கொண்டிருக்க! போனை எடுக்கா விட்டால், வாட்சாப், மெசெஞ்சேர் வழி இவள் ரிப்ளை செய்யும் வரை மெசேஜ்களை தட்டி விட்டுக் கொண்டே இருப்பான். நேரில் சந்தித்தால் அவளது நடை உடை பாவனைகளை கிரிட்டிசைஸ் செய்தான். மூன்றாவது டேட்டிங்கின் போது, பெரிய கும்பிடாகப் போட்டு விட்டாள் சிந்தியா.
“தோ பாரு விக்கி! எல்லோருடைய வாழ்க்கையையும் பிபோர் மேரேஜ், அப்டர் மேரேஜ்னு ரெண்டு வகையா பிரிக்கலாம். பிபோர் மேரேஜ் என்னை பொம்மையா வச்சி என் பேமிலி மெம்பர்ஸ் விளையாடி தீர்த்துட்டாங்க! அப்டர் மேரேஜாச்சும் கொஞ்சமே கொஞ்சமா எனக்காக வாழனும்னு நினைக்கறேன். கல்யாணம்னா கணவன் பிள்ளைன்னு பெரிய கமிட்மேண்ட் இருக்கும். என் மொத்தத்தயும் என் அன்பானவங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டி இருக்கும். அந்த அர்ப்பணிப்ப பாசத்தோட, காதலோட, அன்போட செய்யனும்னு நான் நினைக்கறேன்! உன்னை கல்யாணம் செஞ்சு அத கடனேன்னு செய்ய வச்சிடாதே! உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது! நாம ப்ரேண்டா கூட இனி சந்திச்சிக்க வேண்டாம்” என படபடவென கொட்டிவிட்டாள்.
பணத்திமிர், படித்தத்திமிர் என அவன் ஆரம்பித்த வசவு மொழிகளை, தனது சில செய்கையில் நிறுத்தி விட்டு கெத்தாக கிளம்பி வந்தாள் சிந்தியா! என்ன செய்கை அது? அவனை சுட்டிக் காட்டி, தன் வாயில் ஒரு கை வைத்து, பின்னால் பிருட்டத்தில் ஒரு கை வைத்து, மூடிக் கொண்டு கிளம்பு என்பது போல கையாட்டி விட்டு கிளம்பிவிட்டாள். அவள் செய்கையால் பேச்சில்லாமல் திகைத்து நின்றவனை நினைத்து நினைத்து அடிக்கடி சிரித்துக் கொண்டாள் சிந்தியா. அவள் சந்தோஷமாய் இருந்ததெல்லாம் நிச்சய திகதியைத் தாத்தா அறிவிக்கும் வரைதான்! அப்படி அவமானப்படுத்தியும் அந்த விக்கி, இவளை கொக்கியாய் விடாமல் பிடித்துப் போடப் பார்த்தான். மசாலா சாம்ராஜ்யத்தின் மன்னி என்றால் சும்மாவா!
பாசத்தைக் காட்டி தன்னை எப்படியும் மடக்கி விடலாம் என சிவசு நினைத்தது இவளுக்கு அவ்வளவு கோபத்தைக் கொடுத்தது. அண்ணனுக்கு போன் செய்தவள், அவன் வந்ததும் இந்த வீட்டை விட்டு அவனுடன் வெளியேற முடிவெடுத்திருந்தாள். வீட்டில் இருந்தால் தானே இமோஷனல் ப்ளேக்மெயில் செய்வார் சிவசு! நான் யாரென்று காட்டுகிறேன் எனவெல்லாம் மனதில் சூளுரைத்தாலும், இதயம் சுக்கு நூறாக வெடித்து சிதறத்தான் செய்தது. தன் விருப்பம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லையா என மனது கிடந்து தவித்தது.
இதையெல்லாம் அண்ணாவிடம் சொல்ல முடியவில்லை அவளால். கண்ணில் நீர் முட்டியது.
“ண்ணா! இந்த அன்பு விலங்குல இருந்து என்னைக் காப்பாத்துண்ணா!” என சொல்லியவள் போனிலேயே அழுதாள்.
இங்கே அண்ணன்காரனுக்கு சிவசுவின் மேல் கட்டுக்கடாங்காமல் கோபம் வந்தது.
“பேபி, பேபி! ப்ளிஸ் ஸ்டாப் க்ரை! இன்னியோட எல்லாத்துக்கும் இந்த அண்ணா ஒரு முடிவு கட்டறேன்! யூ டோண்ட் க்ரை! கண்ண தொடை!” என பாசமாய் ஆரம்பித்து மிரட்டலில் முடித்தான்.
“நான் இருக்கேன் உனக்கு! அண்ணானு நான் ஒருத்தன் இருக்கேன்! யார் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும், நான் உனக்கு அண்ணாதான்! சோ, பிலீவ் இன் மீ! கண்ண தொடச்சிட்டு, டாக்டர் சிந்தியாவா போய் ஆபரேஷன முடிச்சிட்டு வா! அப்புறமா வீட்டுல பார்க்கலாம்” என அவளை தேற்றினான்.
“லவ் யூ டாண்ணா”
“மீ டூ! லவ் யூ சோ மச் பேபிமா” என மெலிதாய் புன்னகைத்தான் அவன்.
சின்ன வயதில் தாத்தா அவளைப் பாடாய் படுத்திய போது, இவனுமே சிறியவன். என்ன, ஏது, என புரியாத வயது. அழுபவளுக்கு அன்பை மட்டும் காட்டினான். வளர்ந்து, சுற்றம் புரிந்த போது, அவளுமே டாக்டராக வேண்டும் எனும் லட்சியத்தில் இருந்ததால் இவனும் விட்டுவிட்டான். ஆனால் திருமணம் என்பது அவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமல்லவா! காலம் முழுவதும் மனதுக்கு ஒப்பாதவனோடு, ஜாதி பொருத்தத்தை மட்டும் வைத்து வாழ்ந்து முடித்து விட முடியுமா! தங்கைக்காக ரத்தம் கொதித்தது அவனுக்கு! இப்படியே அங்கே போனால், பெரிய சண்டையே வந்துவிடும் என அஞ்சியவன், ஒரு மணி நேரம் ஹோட்டல் இருந்த வீதியில் நடைப்பயின்றான். அதன் பிறகே காரை எடுத்தான் அவன்.
இத்தனை வருடங்கள் கால் பதித்திராத வீட்டுக்கு தங்கைக்காக போனான். வீட்டுக்குள் நுழைந்தவனை முதலில் கண்டது சிவசுதான். சிறு வயது மூர்த்தியை நினைவுக்கு கொண்டு வந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தார். பின் மெதுவாக முகம் இறுகியது. ராஜா போல தனது ஒற்றை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவர் வெறுப்பாக அவனைப் பார்த்தார்.
நேராகப் போய் அவர் முன்னே நின்றான் அவன்.
நிமிர்ந்து அவனை முறைத்த சிவசு,
“இது என்ன தர்ம சத்திரமா கண்ட நாயும் சவடாலா உள்ள நுழைய?” என சத்தமிட்டார்.
அவர் சத்தம் கேட்டு, எல்லோரும் ஓடி வந்தார்கள். ஹாலுக்கு வந்தவர்கள், அவனைப் பார்த்து திகைத்து விழித்தார்கள். தில்லும்மா ஓடி வந்து அவனின் கையைப் பற்றிக் கொண்டார்.
“ஐயா! எப்ப சாமி வந்த?” என வாஞ்சையாக கேட்டார் பாட்டி.
சிவசு சொன்ன நாயில் கொதித்துப் போனவன், பாட்டியின் சாமியில் அப்படியே குளிர்ந்துப் போனான். மூர்த்தி வேகமாய் வந்து அவன் அருகே நின்றுக் கொண்டார்.
“வரேன்னு சொல்லவே இல்லையேடா!” என கேட்டார் அவர்.
“என்ன ஆளாளுக்கு கொஞ்சியாகுது? இவன் வீட்டை விட்டு ஒழிஞ்சதும் பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருந்தேன்! மறுபடி எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு என் வீட்டு வாசப்படிய மிதிக்கிறான் இவன்?”
“உங்க யாருக்காகவும் நான் வரல! என் தங்கச்சிக்காக வந்தேன்!” என அமைதியாகத்தான் சொன்னான்.
“யார்டா உனக்கு தங்கச்சி! என் சிந்தியா உனக்கு தங்கச்சியா? வாய கிழிச்சுப்புடுவேன்! கண்ட கீழ் சாதி ஜென்மத்துக்கு பொறந்தவன்லாம் என் பேத்திய சொந்தம் கொண்டாடுனாங்க, நான் கொலைகாரனா மாறிடுவேன்! அவ சிவசு பேத்திடா! என் வீட்டு மகாராணி! தங்கச்சி, தொங்கச்சின்னு பொய்யா பாசம் காட்டி அவ பேர்ல இருக்கற சொத்த அடிச்சுட்டுப் போகறது தானே உன் ப்ளானு! அது நான் உசுரோட இருக்கற வரைக்கும் நடக்காதுடா! சீச்சீ! வெளியே போ!” என ஆவேசமாக கத்தினார் சிவசு.
பட்டென மூர்த்தியின் புறம் திரும்பியவன், அவரது சட்டைக் காலரைப் பற்றி உலுக்கினான்!
“ஏன்ப்பா எங்கம்மாவ காதலிச்சீங்க? ஏன் கல்யாணம் செஞ்சீங்க? சொல்லுங்க ஏன் செஞ்சீங்க? அதுக்கு சாட்சியா என்னை ஏன் பெத்தீங்க? சரி பெத்துட்டீங்க, எங்கம்மா செத்ததும் என்னை ஏன் உசுரோட விட்டீங்க? அப்படியே கழுத்த திருகி கொன்னுருக்கலாமேப்பா! ஏன்பா கொல்லல? ஏன் கொல்லல? இந்த கீழ் ஜாதி பையனை ஏன்ப்பா கொல்லாம விட்டீங்க? இப்படி எல்லாரும் வார்த்தையால கொஞ்சம் கொஞ்சமா கொல்லட்டும்னு உசுரோட விட்டீங்களா? சொல்லுங்கப்பா சொல்லுங்க?” என ஆவேசமாகக் கத்தினான்.
அவனது உலுக்கலில் தடுமாறிப் போனார் மூர்த்தி. தில்லும்மா கண்ணீர் விட, சிவராமன் ஓடி வந்து தம்பியைக் காப்பாற்றினார்.
மகனின் கேள்விகளில் மூர்த்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இத்தனை வருடங்களாய் குற்ற உணர்வில் தவிப்பவராயிற்றே! அவன் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் நெஞ்சைக் குத்தீட்டியாய் குத்திக் கிழித்தன.
தகப்பனின் கண்ணீர் முகத்தைப் பார்த்ததும் தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான் அவன். நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவன், தாத்தனைத் திரும்பிப் பார்த்தான். அவரோ முகம் முழுக்க திமிர் தெரிய அலட்சியமாய் அமர்ந்திருந்தார்.
“சிந்தியாவுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல” அமைதியாய் சொன்னான் அவரிடம்.
“என் பேத்திக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியும். நல்ல பாரம்பரியமான குடும்பம் அது! உங்காத்தா மாதிரி கேடுகெட்ட குடும்பம் இல்ல அது!”
“அப்பா! வேணாப்பா” என குரலை உயர்த்தினார் மூர்த்தி.
“என்னடா, என்ன வேணா? எல்லாம் உன்னாலதான்டா! நம்ம குலப்பெருமைய குலைச்சவண்டா நீ! பெத்த பாசத்துக்கு உன்னை உள்ள சேர்த்துக்கிட்டதே தப்புடா! அப்படியே விரட்டி விட்டிருக்கனும்! அப்படி செஞ்சிருந்தா கண்ட கழிசடைங்களோட புள்ளைங்களாம் என் முன்னுக்கு இப்படி நின்னு தைரியமா பேசாம போயிருக்கும்” என ஆத்திரமாய் கத்தினார் சிவசு.
“தாத்தா!” என ரௌத்திரமாய் சினந்தான் இவன்.
“அடி செருப்பால! யாருக்கு யாருடா தாத்தா? ஈனப்பயலே! இன்னொரு தடவை தாத்தா, பூத்தான்னு உன் சாக்கடை வாயால கூப்பிட்ட, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்! ராஸ்கல்”
“அப்பா, சின்னப்பையன்பா! விடுங்க” என சமாதானமாகப் பேசினார் சிவராமன்.
வாணியும், மேகலாவும், சியாமும் கலக்கத்துடன் இவர்களை எல்லாம் பார்த்தப்படி நின்றனர்.
“டேய் சிவராமா! என் பேத்தி வாழ்க்கையில குறுக்கிட இவன் யாருடா! அவள நல்லா படிக்க வச்சு டாக்டராக்கன எனக்கு, நல்ல இடத்துல பார்த்து கட்டிக் குடுத்து ஷேமமா வாழ வைக்கத் தெரியும்டா! என் பேத்திடா அவ! இந்த சிவசு பேத்தி!”
நல்ல மரியாதையான குடும்பம், பணம் படைத்தவர்கள், பையனும் அழகனாய் மரியாதைத் தெரிந்தவனாய் இருக்கிறான்! பேத்தி அவனை மணந்தால், சந்தோஷமாய் வாழ்வாள் என எண்ணினார் சிவசு. அவர் செய்வதும் பேத்தியின் நன்மையைக் கருதிதான். ஆனாலும் அவளுக்கும் மனமென்று ஒன்று இருக்கிறது என உணராமல் போனார் அவர்.
“இவ்வளவு நாள் அவ உங்க எல்லாருக்காகவும் வாழ்ந்து அனுபவிச்சது எல்லாம் போதும்! அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தின்னு இத்தனை பேர் இருந்தும், அவளோட மனச நீங்க யாருமே புரிஞ்சுக்கல! கல்யாணம் செஞ்சு வாழப் போறவ அவ! அவ விருப்பத்த இங்க யாரும் மதிக்கல! போதும், அவ இங்க இருந்ததும் போதும்! வயசுக்கு மீறி வாழ்ந்ததும் போதும்! இனி சிந்தியா தனக்காக வாழப் போறா! நான் வாழ வைப்பேன்! இங்க வேலைய விட சொல்லிட்டு, என் கூடவே கூட்டிட்டுப் போகப் போறேன் என் தங்கச்சிய” என இரைந்து கத்தினான் அவன்.
தன் பேத்தியைத் தன்னிடம் இருந்து பிரித்து அழைத்துப் போவேன் என சொன்னதில் கொதித்துப் போனார் சிவசு. வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து வந்தவர், விட்டார் அவனை ஓர் அறை. பளீர் என விழுந்த அந்த அறையில், உதட்டின் ஓரம் ரத்தம் ஒழுகியது அவனுக்கு.
“யோ! நிறுத்துய்யா! நீயெல்லாம் ஒரு மனுஷனா? தோளுக்கு மேல வளந்தப் பையனை கை நீட்டி அடிக்கறீயே, இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்!” என கதறினார் தில்லும்மா.
கண்ணீர் வழிய பேரனை இறுக அணைத்துக் கொண்டார் அவர்.
“ஐயோ ராசா! போய்டுயா! இந்த ஆளு மூஞ்சுல முழிக்கவே வேணாம் நீ. நானும் உன் கூடவே வந்துடறேன்! என்னையும் கூப்டுக்க சாமி! போதும், இந்தாளுக்கூட நான் வாழ்ந்து கிழிச்சது எல்லாம் போதும்! இனி என் பேரன் பேத்தி சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!” என அழுதார் அவர்.
“போடி போ! யார் வேணும்னாலும் வெளிய போங்க! எனக்கு என் பேத்தி மட்டும் போதும்” என கத்தினார் சிவசு.
தன் தாத்தாவை நேருக்கு நேர் முறைத்தான் பேரன்.
“இந்த கீழ் ஜாதி பையனை என்ன உரிமையில கை நீட்டி அடிச்சீங்க நீங்க? என்னை தொட்டதுல தீட்டு எதும் பட்டிடலயே மிஸ்டர் சிவசு?” என கேட்டவன், தன் ரத்தத்தை விரலால் தொட்டுக்காட்டி,
“உங்க உடம்புல ஓடற மாதிரி தான் என் உடம்புலயும் சிவப்பு கலர்ல ரத்தம் ஓடுது! கீழ் ஜாதி அம்மாவுக்கு பொறந்தேன்னு மட்டும் குத்திக் காட்டறீங்களே, என்னைப் பெத்த அப்பா உங்க ஜாதிதான்னு மறந்து போயிருச்சா? அப்படிப் பார்த்தா என் உடம்புலயும் பாதிக்கும் பாதி உங்களோட திமிர் பிடிச்ச, ஆணவம் பிடிச்ச ரத்தம் தான் ஓடுது! அந்தத் திமிர்ல சொல்றேன், என் தங்கச்சிக்கு பிடிக்காத இந்த கல்யாணம் நடக்காது! நடக்க விடமாட்டேன்!” என தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று ஆக்ரோஷமாய் பேசினான் அவன்.
“அட்ரா சக்கை! பாதி ரத்தம் ஓடுதாம்ல பாதி ரத்தம்! பெத்தவ வந்து சொன்னாதான்டா அப்பன் யாருன்னு கொழந்தைக்குத் தெரியும்! உனக்கு அப்பன் யாருன்னு சொல்ற முன்னுக்கேத்தான் அந்த கேடு கெட்ட குப்பை செத்துப் போயிட்டாளே! நீயும் செத்துத் தொலஞ்சி அவ கிட்டயே போய் கேளு உன் அப்பன் யாருன்னு!” என ஆங்காரத்தில் அவன் பிறப்பையே கேள்விக்குறி ஆக்கினார் சிவசு.
“அப்பா!”
“என்னங்க!”
“மாமா!” என பல கண்டனக் குரல்கள் எழும்ப, தாத்தனை அடிக்கக் கையை ஓங்கி விட்டான் பேரன்.
“ண்ணா!” எனும் அழுத குரல் அவன் கையை அப்படியே அந்தரத்தில் நிறுத்தியது!
சட்டென வாசலைத் திரும்பிப் பார்த்தான் அவன். கண்கள் கலங்க, வேண்டாமென தலையை இடமும் வலமும் ஆட்டினாள், அப்பொழுதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்த சிந்தியா.
கையை இறக்கியவன், யாரையும் பார்க்காமல் விடு விடுவென நடந்து வெளியே போய் விட்டான்.
பேத்தியைப் பார்த்து,
“சிந்திம்மா!” என ஒரு எட்டு எடுத்து வைத்தார் சிவசு.
“அங்கயே நில்லுங்க! உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும், தாத்தா தாத்தான்னு உயிரை விட்டதுக்கு, நல்லாவே பாடம் கத்துக் குடுத்துட்டீங்க! ஜாதி ஜாதின்னு குதிக்கறீங்கல்ல, இனி அந்த ஜாதியையே பேத்தி பேத்தின்னு செல்லம் கொஞ்சிக்குங்க! சிந்தியாவுக்கு இனி சிவசு வேணா! வேணவே வேணா! ஐ ஹேட் யூ தாத்தா! ஹேட் யூ சோ மச்!” என அழுகையோடே கத்தியவள், அண்ணன் பின்னாலேயே ஓடினாள்.
அவன் கோபத்தோடு காரின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர, அவன் பக்கத்தில் ஓடி வந்து ஏறிக்கொண்டாள் சிந்தியா. அவன் கையில் கார் சீறிப் பறந்தது. இவளோ தேம்பியபடியே வந்தாள்.
“சாரிண்ணா, சாரி! ரொம்ப சாரிண்ணா! இனிமே எனக்கு அவங்க யாரும் வேணா! நீ மட்டும் போதும்ணா! எனக்கு நீ, உனக்கு நான்! போதும்ணா!” என தேம்பியபடியே சொன்னாள் அவள்.
அவன் முகம் மிக இறுக்கமாய் இருந்தது. கண்கள் சிவந்துப் போய் முகம் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது.
“நீ பிரசவம் பார்க்கற டாக்டர் தானே? யார் அம்மா யார் அப்பான்னு தேர்தெடுக்கற சாய்ஸ் நமக்கு இருக்காடா பேபி?” என கோபக் குரலிலேயே கேட்டான்.
இல்லை என்பது போல தலையாட்டினாள் சிந்தியா.
“அப்போ கீழ் ஜாதி அம்மாவுக்கும், மேல் ஜாதி அப்பாவுக்கும் பிறந்தது என் தப்பா? நானா இந்த வீட்டுல வந்து பொறக்கனும்னு கேட்டேன்? ஏன்டா என்னை இப்படி கேவலப்படுத்துறாங்க? பாவம்டா என் அம்மா! உண்மையா ஒருத்தர காதலிச்சத தவிர வேற என்ன தப்பு பண்ணாங்க அவங்க? இத்தனை வருஷத்துல அவங்க ஆத்மா கூட வேற பொறப்பு எடுத்துருக்கும். ஆனா இன்னும் உங்க தாத்தா வாயில விழுந்து எழுந்துட்டு இருக்காங்க! பொறந்ததுல இருந்து அனுபவிக்கிற இந்த வேதனைய என்னால தாங்கவே முடியல பேபிமா! அப்படியே செத்துப் போயிடலாம்னு இருக்கு! உனக்காகவும் தில்லும்மாவுக்காகவும் தான் இன்னும் இந்த உசுரு உடம்புல ஒட்டிட்டு இருக்கு! மயிர் போனா உயிர் போயிடுமாம் கவரிமானுக்கு! இன்னைக்கு எனக்கு வந்த கோபத்துக்கு அவர கொன்னுப் போட்டுருப்பேன்! உன்னோட ஒத்த தலையசைப்புல வாய மூடிக்கிட்டு வந்துட்டேன்! உசிரா நினக்க வேண்டிய மான மரியாதைய உனக்காக மட்டும்தான் மசிரா மதிச்சி உள்ளுக்குள்ள செத்துக்கிட்டு இருக்கேன் பேபிமா!” என கண் கலங்க சொன்னான் அண்ணன்காரன்.
அவன் கையில் கார் பறந்துக் கொண்டிருந்தது அந்த பழைய ரோட்டில். பழைய ரோடு என அழைக்கப்படுவது, போவதற்கு ஒரு லேனும் வருவதற்கு ஒரு லேனும் என நடுவில் டிவைடர் எதுவும் இல்லாமல் இருக்கும் சாலை. ஹைவே வராத முன்பு இந்த சாலைகளைத்தான் மேய்ன் ரோடாக பயன்படுத்துவார்கள். இருட்டாய், வளைந்து வளைந்து இருக்கும் இந்த சாலைகளில் மிக கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும்.
அவ்வளவு துக்கத்திலும், தங்கை களைத்திருப்பதைக் கண்டுக் கொண்டான் இவன். அதோடு போன் போட்ட போது திகுதிகுவென பசிக்கிறது என்று வேறு சொன்னாளே! அதனால்தான் சீக்கிரம் போய்விடலாம் டவுனுக்கு என பழைய ரோட்டில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
“ண்ணா! சித்திய, தாத்தா இப்படிலாம் பேசனது ரொம்ப தப்புண்ணா! எனக்கு வர வெறிக்கு இனிமே நம்ம ஜாதில யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன் பாரேன்! வேற ஜாதி பையனைத்தான் கட்டிப்பேன்! நெறையா புள்ள குட்டி பெத்துப்பேன்! இந்த சிவசு, என் பிள்ளைங்கள தூக்கி கொஞ்ச முடியலையேன்னு தவிக்கனும்! அத நான் பார்த்து ரசிக்கனும்” என வில்லத்தனமாக நம்பியார் போல கையைப் பிசைந்துக் கொண்டே சொன்னாள் சிந்தியா.
தங்கையின் செயலில் இறுக்கம் போய் சிரிப்பு வந்தது இவனுக்கும். ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்தப்படி மறுகையால் அவளின் தாடையைப் பிடித்து ஆட்டி,
“என் தங்கச்சிக்கு ஏன் இந்தக் கொலைவெறி” என சிரிப்புடன் சொன்னவன், பார்வையைத் திரும்ப சாலையில் வைத்தப் போது பதறிப் போனான்.
தனது லேனை விட்டு இவர்களின் லேனில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து வந்துக் கொண்டிருந்தது. நேருக்கு நேராக வந்த காரைப் பார்த்து அதிர்ந்தவன்,
“பாப்பா, சீட் பெல்ட்ட கலட்டிட்டு கதவைத் திற! சீக்கிரம்!” என கத்தினான்.
இவளும் பதட்டத்தில் அவன் சொன்னதை அப்படியே செய்தாள். இவன் அவசரமாக அவள் புறம் சாய்ந்து அவளை வெளியே தள்ளவும், நேராக வந்த கார் இவர்கள் காரை மோதி பல சுற்று சுற்றி நிற்கவும் சரியாக இருந்தது. இவர்களின் காரும் பல சுற்று சுற்றி ஒரு மரத்தில் மோதி நின்றது.
கீழே தலைக்குப்புற விழுந்த சிந்தியாவுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. மெல்ல எழுந்து நின்றவளுக்கு, வலது காலிலும், தாடையிலும் சரியான அடி. அதோடு கை கால் எல்லாம் சிராய்த்து தோல் வழண்டிருந்தது. விபத்து என மூளை உணர்ந்து கொள்ள, அடிப்பட்ட கால் ஒத்துழைத்த அளவுக்கு தங்கள் கார் அருகே ஓடினாள். கார் மரத்தில் மோதி நின்றதால், முன் பாகமும், ஓட்டுனர் சைட்டும் நசுங்கிப் போய் கிடந்தது. இதயம் படபடவென அடிக்க,
“ஆண்டவா! எங்கண்ணாக்கு ஒன்னும் ஆகிருக்கக் கூடாது! ப்ளீஸ், ப்ளீஸ்” என முனகியப்படியே உடைந்த கண்ணாடி வழி உள்ளே எட்டிப் பார்த்தாள். ஏர்பேக் ஆக்டிவேட் ஆகி இருக்க, அண்ணன்காரன் முகமெல்லாம் ரத்தம் வழிய சீட்டில் கண் மூடிக் கிடந்தான்.
வேக வேகமாக கார் கதவை திறக்க முயல, முடியவில்லை அவளால். நசுங்கியதால் திறக்க சிரமமாக இருந்தது. பாதி உடைந்திருந்த கண்ணாடிகளை தன் கையாலே, இன்னும் உடைத்து விட்டவள், தலையை உள்ளே விட்டு அண்ணனின் கன்னத்தைத் தட்டினாள்.
மெல்ல கண் திறந்தவன்,
“பாப்பா! ஆர் யூ ஆல்ரைட்?” எனதான் முதலில் கேட்டான்.
“ஐம் குட்ணா! என்னால கதவை உடைக்க முடியல! வேற எங்க அடிப்பட்டுருக்கு உனக்கு?” என கையை உள்ளே விட முடிந்த அளவுக்கு விட்டு, தடவிப் பார்த்தாள் அவன் உடம்பை.
“கால் எங்கயோ நல்லா மாட்டிக்கிச்சுடா! மத்தப்படி ஓகேதான்னு நினைக்கறேன்! நம்மள மோதன அந்தக் கார்ல உள்ளவங்க என்ன ஆனாங்கன்னு பாருடா” என முகமெல்லாம் ரத்தம் ஒழுக மூச்சு வாங்கியபடி பேசினான் அவன்.
“நீ நெஜமா ஓகேவாண்ணா?” தாடையில் வழிந்த ரத்தத்தைத் தோளில் துடைத்தப்படியே கேட்டாள் இவள். அதிர்ச்சியில் மூச்சு தாறுமாறாக வாங்கியது இவளுக்கு.
“யெஸ்! உன் போன குடு! ஐ வில் கால் தி ஆம்புலன்ஸ்!” என வலியை மறைத்தப்படி சொல்லியவன் அவள் போனை வாங்கிக் கொண்டான்.
வேகமாக தங்களை இடித்த காருக்கு ஓடினாள் சிந்தியா! ட்ரைவர் சீட்டில் மட்டும் ஒரு ஆள் இருப்பதைக் கவனித்தவள், கதவை திறக்க முயன்றாள். அந்த மெல்லிய மேனி கொண்டவளால் பல முயற்சிக்குக் பிறகே நெளிந்துக் கிடந்த அந்தக் கதவைத் திறக்க முடிந்தது. என்ன காரணமோ அந்தக் காரின் ஏர்பேக் வேலை செய்திருக்கவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்தான் உள்ளே இருந்தவன். கைகள் இற்று விடும் போல வலித்தாலும், முக்கி முயன்று அம்மனிதனை வெளியே இழுத்துப் போட்டாள் சிந்தியா!
நிலா வெளிச்சத்தில், மூச்சு ஏறி இறங்குவது நன்றாக தெரிந்தது. அவன் கன்னத்தைத் தட்டி,
“சார், சார்!” என அழைத்தாள் சிந்தியா.
மெல்லக் கண் திறந்தான் அந்த மனிதன்.
“ஐம் சாரி” திக்கித் திணறி சொன்னான் அவன்.
தங்களை மோதியதற்காக மன்னிப்பு கேட்கிறான் என புரிந்துக் கொண்டவள், சரி என்பது போல தலையை ஆட்டினாள். அவள் கவனித்த வரையில் உடம்பில் அடிகள் அவ்வளவு இல்லை என்றாலும், தலை பின்னாடி இருந்து ரத்தம் வந்துக் கொண்டே இருந்தது. காதில் இருந்தும் ரத்தம் வழிவதைக் கண்டுக் கொண்டவளுக்கு கண்ணில் நீர் முட்டியது.
“ஒன்னும் இல்ல சார்! கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வந்துடும்! ஹாஸ்பிட்டல் போனதும், எல்லாம் சரியாகிடும்!” என அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவனது பல்ஸ் ரேட்டை தன் விரல்களால் செக் செய்தாள். அதுவோ மெல்ல குறைந்துக் கொண்டிருந்தது. தன் கையைப் பற்றி இருந்தவள், கரங்களை இறுக பற்றிக் கொண்டான் அவன்.
“சிஸ்டர்” மெல்லிய குரலில் அழைத்தான்.
இவள் குனிந்து என்ன சொல்கிறான் என உற்றுக் கேட்டாள்.
“என் ரதி… என் ரதிய.. பார்…” என என்னவோ சொல்ல வந்தவன், அதை முடிக்காமல் மூச்சை நிறுத்திக் கொண்டான். கண்கள் திறந்த வாக்கிலேயே அவன் ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தது! இறக்கும் போது கண்கள் திறந்திருந்தால், யாரையோ பார்க்கத் துடிக்கிறார்கள் என அர்த்தமாமே! அந்த ஜீவனும் தன் காதல் ரதியைப் பார்க்கத் துடித்ததோ!!!!
அவனது அமைதியில் பல்ஸ் ரேட்டைப் பார்த்தவள், அது இல்லை எனத் தெரியவும், நெஞ்சை அமுக்கி முதலுதவி செய்ய முயன்றாள். நான்கு அமுக்கு அமுக்கி விட்டு மீண்டும் நெஞ்சில் காதை வைத்துக் கேட்டாள். சத்தமே இல்லை. மீண்டும் அமுக்கினாள். அவன் மூக்கைப் பொத்தி, சீபீஆர் செய்தாள்! மீண்டும் மீண்டும் முயற்சித்தாள் சிந்தியா. டாக்டர் மூளைக்கு உயிர் போய்விட்டது என புரிந்தது! சிஸ்டர் என அவன் அழைத்திருக்க, தங்கையாய் உணர்ந்த இதயத்துக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல முறை முயன்றவள், பின் கதறி அழ ஆரம்பித்தாள்.
இறந்தவன் யாரோ எவரோ என இவளுக்குத் தெரியாது! ஆனால் ஓர் உயிர் இப்படி அகாலமாய் போய் விட்டதே என கதறி அழுதாள் சிந்தியா! தன் கையைப் பற்றியிருந்த அவன் கைகளில் இன்னும் கூட சூடு இருந்தது. உயிர் விட்ட அந்த ஜீவனுக்காக கதறி தீர்த்தவள், கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு வர தட்டென தலை பூமியில் மோத மயங்கி சரிந்தாள். தங்கையின் ஓலம் கேட்டும் நகர முடியாத தன் நிலையை எண்ணி கலங்கி கண்ணீர் விட்ட அந்தப் பாசக்கார அண்ணனும் உணர்விழந்துப் போனான்! அவன் சிவநேசன்!
‘இறந்துப் போனான் ரவிபாரதி
கால் இழந்துப் போனான் சிவநேசன்
வானந்தொட்டுப் போனான் ஒருவன்
ஊனப்பட்டுப் போனான் ஒருவன்..
(உருகுவான்…)
(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி! ப்ளேஷ்பெக் முடிஞ்சது! உங்களோட கேள்விக்கு எல்லாம் பதில் தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன்! இன்னும் சில பல விஷயங்கள் அடுத்த எபில தெளிவாகிடும்! ஏன், ஏன் இப்படி ஆச்சுன்னு அடுத்த எபில பார்க்கலாம். இந்த கதையில யாருமே நல்லவங்க கெட்டவங்கன்னு இல்ல! அந்தந்த கேரக்டர அவங்க அவங்க குணநலனோட அப்படியே குடுத்துருக்கேன்! நெறைய பேரு என்ன நடந்துருக்கும்னு கெஸ் பண்ணிட்டீங்க! சரியா கெஸ் பண்ணவங்க, உங்கள நீங்களே தட்டிக் குடுத்துக்குங்க! இதோட அடுத்த எபில பார்க்கலாம்! குட் நைட் அண்ட் லவ் யூ ஆல்)