ஆட்டம்-40

ஆட்டம்-40

ஆட்டம்-40

“நைன்.. எய்ட்.. செவன்..” எண்ணிக் கொண்டிருந்த உத்ரா மேலேயும் கீழேயும் என்று ஏறி இறங்கிக் கொண்டிருக்க, கடலில் இருந்த கடல் கன்னிகள் கூட கடலுக்கு மேலே வந்து சென்றதில், கண்ணாடிக்கும் தெரிந்த உத்ராவை கண்டு, ‘அம்மாடியோவ் இவளுக்கு தைரியம் தான்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு உள்ளே சென்றன.

இங்கே இவளோ அபிமன்யுவின் வைரம் பாய்ந்த தேகத்தில், அதாவது முதுகின் மேல் சம்மனமிட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க, ‘புஷ் அப்ஸ்(Push ups)’ எடுத்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் உடல் முழுதும் வியர்வையில் ஊறிக் கொண்டிருந்தது.

“ஃபைவ்.. போர்.. த்ரீ.. டூ.. ஒன்..” என்று முழுவதுமாக எண்ணி முடித்தவள், சட்டென அவனின் முதுகில் இருந்து இறங்கி ஓட முயல, தேக்கு மர பலத்துடன் ஒத்த உடலை, கரங்களை ஊன்றி தரையில் இருந்து ஒரே முயற்சியில் எழுந்த அபிமன்யுவின் பலம் வாய்ந்த கரங்கள்,

பெண்ணவளின் பூக்கரங்களை பிடித்து இழுக்க, தன் மென்மையான இரட்டை பங்கஜ மலர்களும் ஆடவனின் மார்பில் மோதி உள்ளுக்குள் அவளுக்கு பேரிடியை கிளப்ப நின்றவள், தலை கவிழ்ந்து கொண்டாள்.

தலை கவிழ்ந்தவளின் முத்துப் பற்கள் தன் கீழ் அதரங்களை, நாணத்தை அடக்கி வைத்து கடித்து நின்றிருக்க, அபிமன்யுவின் கரங்கள் தன் இடையை சுற்றி இறுக்குவதை உணர்ந்தாள்.

மெல்ல மெல்ல அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, விழிகளாலேயே புன்னகைத்துக் கொண்டிருந்தவன் அவளின் வதனத்திற்கு அருகே தன் வதனத்தை கொண்டு வர, மேகப் பொதிகளின் மேல் தள்ளி, கோடி மலர்களை மேலே கொட்டியது போன்று பெண்ணவளின் இதயம் அழகாய் கனிந்தது.

“என்னால தூக்க முடியாது சொன்ன? இப்ப சொன்ன மாதிரியே ஐ டிட் இட் (I did it).. ஸோ நீ சொன்னதை பண்ணிட்டு போகணும்” என்று அதிகாரக் குரலில் கூட காதல் பாஷை வழிந்தோட பேசியவனின் பேச்சில், மேனி சிவந்தவள், “ம்கூம்” என்று சிணுங்க, அவளை விடத் தயாராக இல்லை அவன்.

சும்மா இருந்தவனை சொரிந்து விட்டதே இவள் தான். என்னை மேலே அமர வைத்து புஷ் அப்ஸ் எடுக்க முடியுமா என்று அவனை சீண்டியிருக்க, அவனோ, “செஞ்சுட்டா?” என்று அங்கு இருந்த ஜிம்மின் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே வினவ,

“நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்” என்று இந்த மகாராணி வாயை விட்டிருந்தாள்.

“அது கேட்டுதான் ஆகணும்.. ஆனா, இப்ப கேக்கறது வேற?” என்ற அபிமன்யுவின் வேங்கை விழிகளில் இருந்து விஷமம் வழிய, அதை புரிந்து கொள்ள அவனவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

“என்ன வேணும்?” என்று சற்று தாடையை தூக்கி துணிவாகவே குறும்புடன் விழி சிமிட்டி கேட்டாள் அவள். அவனுடன் மூன்று தினங்கள் இருந்ததிற்கே தைரியம் தானாக வந்திருந்தது. அதுவும் அவனிடமே!

“இந்த த்ரீ டேஸா நான்தான் உத்ரா உன்னை கிஸ் பண்ணிட்டு இருக்கேன்.. ஸோ ஒரு சேன்ஞ்சுக்கு நீ எனக்கு தா” என்றவன் தன் ஆள்காட்டி விரலை எடுத்து தன் அதரங்களின் மேல் வைத்து, “இங்க!!” என்று அழுத்தம் கொடுக்க, பெண்ணவளின் அடி வயிற்றில் ஒரு அழுத்தம்.

அவளவனின் அழுத்தமான வார்த்தைகளில் அவளின் வயிற்றில் உருளத் துவங்கிய பந்து, அவளின் முத்து வயிற்றை அழுத்தி பரிசோதித்தது.

அவனாக இந்த மூன்று தினங்களில் அள்ளி அள்ளி கொடுத்த அமிழ்தான முத்தங்களை மறுக்காமல் திகட்டாது வாங்கியவளுக்கு, இன்று அவனே கேட்கும் போது பெண்மை எனும் உணர்வு தயங்கித் தவித்து துடிக்க வைத்தது.

அபிமன்யுவின் விழிகள் கேலியும் கிண்டலுமாக தன்னை நோக்குவதை கண்ட உத்ராவின் ஈகோ தூண்டப்பட, உதட்டை இலேசாக கோணி ஒற்றை புருவம் உயர்த்தி அபிமன்யுவை நோக்கியவள், “பர்ஸ்ட் நீங்க என்னை தூக்குங்க.. அப்புறம் பாக்கலாம்” என்றவளை நோக்கி விரலை நீட்டி, ‘இல்லை’ என்பது போல அசைத்தவன்,

“பெட்னா பெட் தான்.. ரெடியா இல்லியா?” என்று வினவ, உள்ளுக்குள் எச்சிலை கூட்டி விழுங்கியவள் அவனை பற்றி தெரிந்திருந்தும், “ஓகே” என்று இப்போது அவனின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

“ம்கூம்” என்று சிணுங்கலுடன் நின்றிருந்தவளை மேலும் இறுக்கி தன் மேல் முழுவதுமாய் படரவிட்டவன்,

“நான் சொன்னதை நான் செஞ்சுட்டேன்.. இனி உன்னோட வேலை தான் மிச்சம்” என்றவனின் கொத்தித் திண்ணும் பார்வை வேட்கையுடன் தன்னவளின் செவ்வாயின் மேல் மந்தகாசமாய் விழ,

“எனக்கு உங்க ஹைட் எட்டாது” என்றாள் சாக்காக.

அவளின் இடையை விட்டவன், தன் கால்களை அவளிடம் காட்டி, “இதுல நின்னுக்கோ.. அப்புறம் நான் பாத்துக்கறேன்” என்றானே பார்க்கலாம்.

விடாக்கண்டன்! பிடிவாதக்காரன்! வீம்புக்காரன்!

விடமாட்டான் என்று தெரிந்துகொண்டாள்!

மெல்ல மெல்ல அவளின் பாதங்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவனின் ஆண்மை உடலெங்கும் வீறுகொண்டு பரவ, தன்னவனின் முரட்டு பாதங்களில் ஏறி நின்ற உத்ரா, அவனை நிமிர்ந்து பார்க்க, அவளின் பார்வையோ நேராக அவனின் உதடுகளில் பதிந்தது.

“இப்படியே நேரா நின்னா எப்படி நான் கிஸ் பண்றது?” என்று மயக்கும் குரலில் கேட்டவளை அவன் இன்னும் தொடக்கூட இல்லை.

“உனக்கு வேணும்னா நீதான் எப்படி குடுக்கனுமோ குடுக்கனும்” என்றிட, அவனின் கழுத்தில் கரங்களை கோர்த்து தன்னை நோக்கி இழுத்தவள், அவனின் இதழ்களில் தன் இதழ்களை சூடு பரவ உரசியபடியே,

“உங்க அளவுக்கு எல்லாம் நான் கிஸ்ஸிங் எக்ஸ்பர்ட் இல்ல..” என்று கூற, அவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்து அவளின் இதழ்களில் உரச, அந்த மெல்லிய உரசல் கூட அவளின் உணர்வுகளை தீப்பிளம்புகளாய் வெடிக்கச் செய்ய, சட்டென அபிமன்யுவின் செதுக்கிய உதடுகளை கவ்விக் கொண்டாள்.

சிறிது நிமிடங்களில் அவளின் இடையை பிடித்து தன்னோடு தூக்கியவன், முத்தங்களை பரிமாறியபடியே அங்கிருந்த ஸ்லாப்பில் அவளை அமர வைக்க, ஜிம் அறைக்குள் உஷ்ணங்களுடன் இரு காதல் கொண்ட நெஞ்சங்கள் சரசம் புரிந்து கொண்டிருக்க, உள்ளுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருந்த சூட்டில், வெளியே ஆவியாகி வியர்வைகள் ஊற்ற, இருவரின் நிலையும் வேறாக இருந்தது.

உத்ராவின் கழுத்தில் புதைந்த அபிமன்யு அவளின் பின் கழுத்தை பற்றி, மேலும் அவளின் கழுத்துகளில் தன் அச்சாரங்களை அம்சமாய் பதிக்க, தன்னவன் தோள்களை உணர்வுகளின் மிகுதியில் பற்றி காயம் உண்டாக்கியவள் மயங்கத்தில் கிறங்கிப் போயிருக்க, அவளின் சங்குக் கழுத்தில் தானும் தடத்தை உருவாக்கியவன், தன் கரங்களை எல்லை மீற விட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆடை பெண்ணவளின் மேனியை ஆதிக்கம் செய்ய, அதில் கூட பொறாமை கொண்டவன், அவள் அணிந்திருந்த ஒற்றை சட்டையையும் விட்டால் எரித்துவிடும் மோகத்திற்கு சென்றிருக்க, பெண்ணவளோ காணாத உணர்வில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க, அபிமன்யுவின் கரங்கள் ஒவ்வொரு இடங்களாய் குறிப்பெடுக்க, இன்பப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் இளம் யுவதி.

நீரில் உருவானவள்! இயற்கையின் விதியை மீறி கடவுளால் படைக்கப்பட்டு இருந்தவள்!

அப்படி இருப்பவளின் பெண்மையை காக்கமலா போய்விடுவான் அவன். அதுவும் சுற்றியும் சமுத்திரத்திற்கு நடுவே அளவு கடந்த நீரினால் சூழ்ந்திருக்கையில் அவளை உருவாக்கிய, அதே நீர் அவள் மானத்தை காக்காது இருந்துவிடுமா!

திடீரென ஆக்ரோஷத்துடன் மேலெழுந்த அலைகளை, கண்ணாடி வழியாக அபிமன்யுவின் விழிகளில் விழுந்து அவனின் கவனத்தை சிதறடிக்க, அப்போது தான் ஜிம்மில் இருந்த வேறு பக்க கண்ணாடியை பார்த்தவனுக்கு தான் செய்து கொண்டிருப்பது புரிய, சடாரென தன்னவளை விட்டு விலகினான்.

அவன் விலகியதை கூட உணராது விழிகளை மூடி கருவிழிகளை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டிருந்தவளின் நிலையை கண்டு திடுக்கிட்டுத் தான் போனது அபிமன்யுவின் காதல் கொண்ட மனம்.

அவள் அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையின் பட்டன்களும் மேல் இரண்டு கழன்றிருக்க, பால் மேனியில் இளைமறை காயாக தெரிந்த பெண்ணவளின் இளமை அழகுகள் வெளிப் போந்திருக்க, தலையை அழுந்த கோதி திரும்பி நின்ற அபிமன்யு, குரலை செரும, அதில் மாய லோகத்தில் இருந்து வெளியே வந்தவள் விக்கித்துப் போய்விட்டாள்.

அதுவும் தான் அமர்ந்திருந்த நிலையை உணர்ந்தவளுக்கு சொல்லத் தேவையில்லை.

அதிர்ந்து போய் உடல் வெளிப்படையாக நடுங்க இறங்கியவள், முதுகு காட்டி நின்று இரண்டு பட்டன்களையும் போட, ‘இப்ப இவங்க மட்டும் கன்ட்ரோல் ஆகாம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்’ என்று நினைத்தவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது, தான் இன்று கட்டுப்பாட்டில் இல்லை என்று.

மூன்று தினங்களாக இருந்த வெறும் இதழ் முத்தம், இன்று சேட்டைகளை தூண்டிவிட்டிருக்க, அவளே எப்படி இதற்கு அனுமதித்தால் என்று அவளுக்கே புரியவில்லை. இதயம் திக் திக்கென்று அடித்துக் கொள்ள பட்டனை போட்டுக் கொண்டு அவள் திரும்ப, அபிமன்யு அங்கு இல்லை.

சுற்றும் முற்றும் தேடியவள், ஜிம்மின் பால்கனியில் அவன் பின் கழுத்தை அழுந்த வருடிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு செல்ல, அவள் வருவதை உணர்ந்த அபிமன்யுவின் செவிகள் அசைந்தது.

கடல் காற்று வதனத்தில் பட நின்றிருந்தவன், “உன்னோட ரூமுக்கு போ உத்ரா” என்று, ‘உன்னோட ரூம்’ என்பதை அழுத்திக் கூறியவனின் உணர்வுகள் சுற்றியும் இருந்த கடல் அலைகளை போன்று பெருஞ் சீற்றமாய் எகிறிக் கொண்டிருந்தது.

அவன் முதுகு காட்டி கம்பிகளை இறுக பற்றி நின்றிருந்த விதமும், குரலில் தெரிந்த அதிகாரம் தெறித்த கட்டளையிலும் மேலே பேச நினைத்தவள் அறைக்கு ஓடி வந்துவிட்டாள்.

உத்ரா அகன்றதை உணர்ந்தவன், ‘உப்’ என்று ஊதி தலையை அழுந்தக் கோத, அவனுக்கோ ஒரு மனம் அவளை இப்போதே தன்னவளாக்கிக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், திருமணத்திற்கு முன் அவளின் மானத்தை அவன் எடுக்க விரும்பவில்லை.

அவளை அவளுடையவளாகவே கை பிடிக்க நினைத்தான்.

மோகமும், தாபமும் அனைத்திற்கும் மேல் காமமும் போட்டிபோட, உணர்வுகள் எழுந்தால் என்னென்ன பேயாட்டங்கள் நடக்கும் என்பதை உணர்ந்தவனுக்கு இதயத்தில் ஒரு கர்வம். தன்னவள் கொடுத்த இன்பத்தால்.

தனது அறைக்கு வந்தவன் ஒரு வித மயக்கும் புன்னகையுடன் குளியலறைக்குள் நுழைய, பெண்ணவளும் அதே நிலையில் தான் நீராடிக் கொண்டிருந்தாள்.

கடந்து மூன்று தினங்களாக அபிமன்யுவின் வாசம் தான் பெண்ணவளுக்கு. ஒன்றாக உணவருந்தி, ஒன்றாக உறங்கி, ஒன்றாக சிரித்து என இருந்தவர்களுக்கு அவ்வப்போது குட்டி குட்டி சண்டைகள் எட்டிப் பார்த்தாலும், இறுதியில் உத்ராவின் கெஞ்சல்களும், கொஞ்சலுமான குரலிலேயே அனைத்தும் இருந்த இடம் தெரியாது ஓடிவிடும்.

இந்த மூன்று நாட்களில் இரவு நடுவே எழுந்தால், உத்ராவின் உடை விலகி மேலே ஏறியிருக்கும். அதை பார்த்தாலும் உடையை சரி செய்துவிட்டு போர்த்தி விடுபவன் அவளிடம் எல்லை மீறுவது பற்றி நினைக்கக் கூட இல்லை. முத்தமிடும் போது கூட எல்லை மீறாது அவளை கையாண்டு இருந்தான்.

ஆனால், இன்று அவளே வந்து கொடுத்த முதல் முத்தம் ஆடவனை மொத்தமாய் மெய் மறக்க வைத்திருந்தது.

குளித்து முடித்து வந்த அபிமன்யு அன்று டைனிங் அறையிலேயே உத்ராவை சாப்பிட அழைத்திருக்க, அழகிய கண்ணாடிகளிலே அலங்கரிக்கப்பட்ட இடத்திற்குள் உத்ரா நுழைய, அபிமன்யு ஆழமான தீவிர சிந்தனையில் இருந்தது அவளுக்கு புரிந்தது.

அபிமன்யுவின் அருகே சென்று அமர்ந்தவள், அவனை கேள்வியாய் பார்க்க, தன்னருகே அமர்ந்தவளின் கரம் மேல் கரம் வைத்தவன், “நாளைக்கு நாம இங்க இருந்து கிளம்பலாம்” என்றிட பெண்ணவளுக்கோ, ‘ஐயோ வேண்டாம்’ என்று மனம் கூவியது.

“இன்னும் டூ டேஸ் இருக்கலாமே” என்று எழில் கொஞ்சும் விழிகளை சுருக்கி கேட்டவளின் குரலே அவளின் ஏக்கத்தை பிரதிபலிக்க, மதுரம் சொட்டிய புன்னகையை அபிமன்யு பதிலாய் கொடுக்க, தயக்கத்துடன் நாற்காலியை அவன் அருகே நகர்த்திப் போட்டு அமர்ந்தாள் உத்ரா.

“எனக்கு உங்க கூடவே இருந்து, டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருக்கு.. வீட்டுக்கு போயே ஆகணுமா?” என்று தன் தேன் சொட்டும் இதழ்களை அசைத்து தன் ஆசையை வெளிப்படுத்தியவளை இப்போதே அபிமன்யுவிற்கு இறுக அணைத்து அவளின் ஆத்மாவிற்குள் புதைந்துவிட தோன்ற, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சுயநிலை தவறாது அமர்ந்திருந்தவன், “உன்னை தேடுவாங்க உத்ரா!!!” என்றான்.

ஏனெனில் அவனின் முன் இருந்த லேப்டாப்பில் யாருக்கும் தெரியாத அபிமன்யு வைத்திருந்த ஒரு கண்காணிப்பாளன் அனுப்பிய பர்சனல் பெயில் ஒன்று வந்ததை கண்ட அபிமன்யுவின் மனதில், காதல் என்பது மறைந்து விஷம் பரவத் துவங்கியது. உத்ராவின் பெற்றோர் இந்தியா வந்துவிட்டதாகவும், அனைவரும் உத்ராவை தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும் அவன் செய்தி அனுப்பியிருக்க, அபிமன்யுவின் இதழ்கள் இகழ்ச்சியாக புன்னகைத்தது.

‘தேடட்டும்.. என்ன தேடினாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று உள்ளத்தின் வஞ்சம் விழிகளில் மிதக்க எண்ணிக் கொண்டவன், உத்ராவிடம், “உத்ரா! நாம போய் தான் ஆகணும்” என்றான்.

அதைக் கேட்டவுடன் வதனம் வதங்க அமர்ந்திருந்தவளின் கரத்தை தன் கரத்திற்குள் வைத்தவனின், மனதிற்குள் பழி உணர்வின் சாயை படமெடுத்து ஆட,

“உத்ரா! நான் என்ன சொன்னாலும் கேப்பியா?” வினவ, ஒன்றும் அறியாத அந்த பாவையோ ஒன்றும் அறியாது தலையை ஆட்டினாள்.

வஞ்சத்தின் வீரியம் பேரிச்சைலோடு மின்ன, பெண்ணவளின் காதல் சூழ்ந்திருந்த மனமோ எதைப் பற்றியும் அறிய முற்படவில்லை.

“ஷ்யூர்” என்று தலையை ஆட்டிவிட்டாள்.

அவளின் தலையசைப்பில் அபிமன்யுவின் கண்கள் அவளின் பெற்றோரை நினைத்து குரூரமாக திருப்திபட, அதை அறியாத இந்த பெண்ணோ அவனுக்கு எடுத்து வைத்து தானும் அவனுடனே உண்ண, அபிமன்யுவின் மனமோ நாளைய விடியலையே எண்ணிக் கொண்டே நின்றிருந்தது.

அன்றிரவு அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்தவளை அவன் அவளுடைய அறைக்கு செல்ல அதட்ட, “பளீஸ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே இங்க இருப்போம்.. மா.. மா..!!” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமல் படுக்கையில் விழுந்து விழிகளை மூடிக் கொள்ள, அவளருகே படுத்த அபிமன்யு இன்று தான் அவளின் இந்த அருகாமையும், இணைவும் என்று ஆழ் மனதுக்குள் தன்னையறியாது உணர்ந்தானோ என்னவோ!

தன்னை நோக்கி உத்ராவை இழுத்தவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு கண்களை மூட, அவனின் நெஞ்சில் புதைந்தவளுக்கோ காதல் ஊற்றெடுத்து மழை நீராய் சொட்ட, சுகமாய் கண்களை மூடினாள்.

அடுத்த நாள் காலை எழுந்த உத்ரா படுக்கையை துலாவ அபிமன்யு இல்லை. அருகே அவளுக்கான காலை உணவு இருந்த ட்ராலியும், ஒரு பேப்பரும் இருந்தது.

சிறு புன்னகையை உதட்டில் நெளிய விட்டு எழுந்தவள், அதை எடுத்துப் பார்க்க, “குட் மார்னிங் உத்ரா.. சாப்பிட்டு ரெடியா இரு” என்று எழுதி வைத்துவிட்டு சென்றிருக்க, அவன் கையெழுத்துகளை கூட ரசித்து முத்தமிட்டவள், குஷியுடன் குளியலறைக்குள் புகுந்தாள்.

குளித்து முடித்து வந்தவள், அவனுடைய சட்டையையே அணிந்து கொண்டு வந்து அமர்ந்து, ‘போகும் போது போட்டுட்டு வந்த ட்ரெஸை போட்டுக்கலாம்’ என்று நினைத்தபடியே உண்டு முடித்தாள்.

சாப்பிட்டு முடித்தவள் ட்ராலியை எடுக்க வந்த பெண்மணியிடம், “அவரு எங்க?” என்று வினவ, “ஸார் வெளிய போயிருக்காங்க” என்று சென்றுவிட, உத்ராவிற்கோ போர் அடித்தது.

அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தவள் அப்போது தான் அபிமன்யுவுடைய லேப்டாப்பை கண்டாள். விளையாட்டாய் அதை எடுத்தவள், இரு நாட்களுக்கு முன் அபிமன்யு அவள் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அடித்த பாஸ்வோர்டை திருட்டுத்தனமாக கண்டிருக்க, இன்று அது இவளின் விதியை நிர்ணயிக்க காத்திருந்தது.

மற்ற அனைத்திலும் அவள் சுற்றிக் கொண்டிருக்க வைபையை (Wifi) அபிமன்யு அணைக்காது சென்றிருந்ததால், லேப்டாப்புடன் தானாக கனெக்ட்டாகியது, வந்திருந்த நோட்டிபிகேஷன்ஸை காட்டத் தொடங்கிவிட்டது.

உத்ராவின் கரம் பட்டு மெயிலும் ஓப்பனாகிவிட, ‘ஐயயோ’ உள்ளுக்குள் அவனுக்கு வந்த மெயிலை திறந்துவிட்டதில் சலித்தவள், வெளியே வர எத்தனித்த போதுதான் ஏதோ உறுத்த மெயிலை உற்று கவனித்தாள். அந்த கண்கானிப்பாளனிடம் இருந்து வந்த மெயில் தான்.

“ஸார், நீங்க கேட்ட பேப்பர்ஸை நீங்க சொன்ன ஆளுகிட்ட தந்துவிட்டுட்டேன்.. நீங்க உத்ரா மேம்கிட்ட சைன் வாங்கிட்டா போதும்.. எல்லாமே ஈசியா நான் முடிச்சிடுவேன்.. நீரஜா மேம் சைன் கூட தேவை இல்லாம பாத்துக்கலாம்.. அன்ட் உங்க வீட்டுல எல்லாருக்கும் உத்ரா உங்க கூடதான் இருக்காங்கனு கன்பார்ம் ஆகிடுச்சு.. நீங்க ப்ளான் பண்ண மாதிரி ஐஞ்சு நாளுக்கு முன்னாடியே அவங்க உங்க கார்ல இருக்க சிசிடிவியும் ஹாஸ்பிடல் கேமிரால இருக்கு.. விக்ரம் ஸார் நீங்க சொன்ன மாதிரி அங்கதான் மொதல்ல வருவாருன்னு நினைக்கறேன்..

உத்ரா மேடமோட பேரன்ட்ஸ் வந்த டைம் பாத்து நீங்க இத பண்ணதுனால இங்க பெரிய ப்ராப்ளம் போயிட்டு இருக்கு ஸார்.. விக்ரம் ஸாருக்கும் தெரிஞ்சு அவரும் மேடமும் கிளம்பி வந்திட்டு இருக்காங்கனு நியூஸ்.. ஸோ மொத்தமா உங்க ப்ளான் எல்லாமே பக்காவா போயிட்டு இருக்கு..” என்றவன் அத்தோடு மெயிலை முடித்திருக்க, அதை படித்து முடித்திருந்த உத்ராவின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிப் போயிருந்தது.

அடிபட்ட இதயம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று உள்ளுக்குள் துடிக்க, நாசி கோபத்திலும் ஆற்றாமையிலும் சிவந்து விடைக்க, வதனம் வெளிறி போய் அமர்ந்திருந்தவளின் ஓயாத குமுறல் நிமிடத்திற்கு நிமிடம் எகிற, அதற்கு முன் இருந்த அனைத்து மெயில்களையும் படித்தவளுக்கு புரிந்து போனது தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்று.

அன்றே தெரியும். ஆனால்..

காதலால் அல்ல! வஞ்சத்தினால் என்று!

அதுவும் மொத்த குடும்பமும் தன்னை இப்போது தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனையுடன் நினைக்கும் பொழுதே, ‘அப்ப நான் கான்பரன்ஸ் போனதா அவங்ககிட்ட சொல்லிட்டதா சொன்னது பொய்’ உள்ளுக்குள் நினைத்தவளுக்கு, தான் அபிமன்யுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கை கண்முன் வர, தன் மேலேயே எழுந்த கோபத்தில் லேப்டாப்பை எடுத்து எறிந்தவள், கண்களில் இருந்து அருவியாய் கண்ணீர் பெருக அறையை விட்டு வெளியே வந்தாள்.

கால் போன போக்கில் முதுகு குலுங்க அழுது கொண்டே நடந்தவள் எதிரே எதிர்பட்ட மேசையில், யாரோ அலைபேசி இருப்பதை கவனித்தவள், யாரும் பார்க்கும் முன் ஃபோனை எடுத்தாள்.

ஃபோனை எடுத்ல மறுநொடி உத்ரா விக்ரமின் எண்ணை அழுத்தி காதுகளுக்கு கொண்டு செல்ல, அபிமன்யு தூரத்தில் இருந்து ஸ்பீட் போட்டில் கப்பலை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்த்தவள், அலைபேசியை நெஞ்சோடு அணைத்தபடி கீழே ஓடி ஒளிந்துகொண்டு விக்ரமிற்கு அழைக்க, விக்ரமின் எண்ணை அது அடையவே இல்லை.

சிக்னல் இல்லாது இருந்தது!

நீண்ட நேரம் சிக்னலை தேடித் தேடி பதுங்கி பதுங்கி சென்றவளுக்கு ஓர் மூலையில் சிக்னல் கிடைத்துவிட, உடனே விக்ரமின் எண்ணை அழுத்தி செவியில் வைக்கப் போனவளின் மென் கரத்தை, ஏற்கனவே பயத்திலும், கலக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருந்த கரத்தை இறுக பற்றியது அபிமன்யுவின் கரம்.

பிடித்த மாத்திரத்திலேயே யாரென்று அறிந்து கொண்டவளின் இதயம் பயத்தில் சில்லிட்டு போக, உள்ளம் முழுவதும் திகில் சூழ திரும்பியவளின் கரத்தில், இருந்த அலைபேசியில் தெரிந்த விக்ரமின் எண்ணைப் பார்த்த அபிமன்யுவின் விழிகள் ஒருமுறை அழுத்தமாய் சுருங்கி விரிந்ததில், உத்ராவின் ஈரக்குலை அதிர்ந்தது.

இரு விரல்களால் உத்ராவின் கரத்தில் இருந்த அலைபேசியை எடுத்த அபிமன்யு அதை நிதானமாக அருகில் இருந்த சன்னலின் வழியே கடலுக்குள் வீசிவிட்டு, உத்ராவின் கரத்தை பிடித்து இழுத்துச் செல்ல, எதுவும் பேசாது, சுத்தமாய் எதிர்க்காது அவன் பின்னேயே கண்களை துடைத்தபடி அழுது கொண்டு சென்றவளை அபிமன்யுவின் கரம், ஆத்திரத்தில் இறுக்கி பிடித்திருக்க, அந்த வலியை கூட அவள் உணரவில்லை.

நெஞ்சில் வலி இருக்கையில், மற்ற வலி எல்லாம் தெரியவில்லை.

அறைக்குள் அவளை இழுத்து வந்தவன், அங்கு விழுந்து கிடந்த லேப்டாப்பை பார்த்ததுமே புரிந்து கொண்டான் அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று.

அவளுக்கு தெரிந்துவிட்டதே என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. தெரிந்துவிட்டதா, சரி என்று தான் இருந்தது.

கதவை அடைத்துச் சாத்தியவன் உத்ராவை பார்க்க, “நான் போறேன்.. என்னை விட்ருங்க” என்று தரையை பார்த்தபடி கண்ணீர் விட, அடுத்து அவன் கொடுத்த பதில் அவளின் உணர்வுகளை அடித்து உயிரை உறிஞ்சத் துவங்கியது.

“சரி. நான் காட்டுற பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட்டு போ” என்ற அவனின் வார்த்தைகளில் அவளோ சிலையாகிவிட்டாள். என்ன, ஏது என்று ஒரு வார்த்தை கேட்டாமல் தனக்கு ஆக வேண்டிய வேலையை முடித்துவிட்டு கிளம்ப சொல்பவனின் மீதா இந்த ஐந்து நாட்கள், பிரபஞ்சத்தின் அளவான காதலை வளர்த்தேன் என்று நினைத்தவளுக்கு சுரணை உறைக்க, கோபம் துளிர்த்தது.

“அதெல்லாம் போட மாட்டேன்” என்று வெடுக்கென்று அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்து ஈர விழிகளுடன் கூறியவளை, அபிமன்யுவின் வேங்கை விழிகள் பாய்ந்து திண்ண, ஒவ்வொரு அடிகளாய் அவளிடம் முன்னேறினான்.

தன்னை பார்வையாலேயே ஆளுமை செய்து கொண்டு வரும் அபிமன்யுவை உணர்ந்த உத்ராவின் உடல் தூக்கிவாரிப் போட, “இது எல்லாம் உன் பேர்ல இருக்க அத்தையோட அசெட்ஸ்.. சைன் பண்ணு” என்றிட,

அபிமன்யுவின் மேல் இருந்த ஆத்திரத்திலும், தன் ஏமாளித்தனத்தை எண்ணிய அவமானத்திலும், வீம்புடன், “மாட்டேன்.. தாத்தா இதெல்லாம் காரணம் இல்லாம பண்ணியிருக்க மாட்டாங்க.. என்னால சைன் போட முடியாது” என்று குரலை உயர்த்தி கத்த, அபிமன்யு அவளை நிதானமாக பார்த்து வைத்தான்.

அவன் எப்படி பத்திரம் எழுத வேண்டும் என்று அனுப்பியதை படித்திருந்த உத்ராவிற்கு சிம்மவர்ம பூபதிதான் அவளுக்கு இதை எழுதி வைத்தது என்று தெரிந்து போனது.

பிடிவாதமாய் நிற்கும் உத்ராவையே பார்த்திருந்த அபிமன்யுவின் கோபம் எல்லையை கடந்து கொண்டிருக்க, “நீ சைன் பண்ணாம போக முடியாது.. சைன் போடு” என்று பத்திரத்தை நீட்ட, அதை ஆங்காரத்துடன் தட்டிவிட்ட உத்ரா அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, அவளின் கரத்தைப் பிடித்து இழுத்த அபிமன்யு, தன் இரும்புப் பிடியால் அவளை இன்ச் நகரவிடாது செய்தான்.

“விடுங்க.. நான் போகணும்” என்றவளின் பேச்சை துச்சமாக்கியவன், “ஷ்” என்று விழிகள் பளபளக்க கூறியதில், அவனின் விழிகளில் கொப்பளித்த குரோதத்தில் பெண்ணவளின் குரல் அஞ்சி உள்ளே சென்று ஓடியது.

“இப்ப நீ சைன் பண்ணலைனா லைஃப்ல நான் உனக்கு கிடைக்க மாட்டேன் உத்ரா” என்று மிரட்டியவனை பார்த்து கசப்பான புன்னகையை உதிர்த்தவள்,

“இப்ப மட்டும் லவ் பண்ணி தூக்கிட்டு வந்த மாதிரியா இருக்கு.. உங்க அத்தைக்காகவும், ஆசைக்காகவும் ஏமாத்தி தூக்கிட்டு வந்த மாதிரி தான் இருக்கு” விழிகளில் கண்ணீரும், இதழ்களில் புன்னகையுமாக வலியுடன் கூறியவளிடம், ‘இல்லை’ என்று இந்த கப்பல் வெடித்துச் சிதறும் அளவிற்கு கத்த வேண்டும் என்று தோன்றியது அபிமன்யுவுக்கு.

ஆனால், அவன் காதலை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல என்று நினைத்தான்.

“சரி, சைன் போடு” என்றவனை வெறித்த உத்ரா, “தாத்தா சொல்லட்டும் போடறேன்” என்று நகர பார்க்க, அவன் அவளை விட்டால் தானே.

“என்னை விடுங்க.. நான் போகணும்.. ப்ளீஸ்.. எங்க அம்மா அப்பா என்னை தேடிட்டு இருக்காங்க” என்று அழுகையுடன் கெஞ்ச, அவனோ கல் நெஞசக்காரனாய் தன்னவளின் அழுகையை வேடிக்கை போன்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவன் அப்படியே நிற்பதை பார்த்தவளின் கோபம் மேலும் மேலும் அதிகரிக்க, “உங்க புத்தி எல்லாம் தெரிஞ்சு தான் என்னமோ.. எங்கம்மா அப்பவே சொன்னாங்க போல..” என்று கோபத்தில் கத்த, அவளின் பின்னங்கழுத்தை ஆக்ரோஷம் கொதித்தெழ பற்றி அருகில் இழுத்தவனின் பிடியில் பெண்ணவளுக்கு வலியெடுக்க, கண்ணீர் கன்னங்களில் வழிந்து அவள் கழுத்தில் விழுந்தது.

“என்னை பத்தி சொல்ற அளவுக்கு உங்கம்மா ஒண்ணும் அவ்வளவு பேர் சொல்ற அளவுக்கு இல்ல.. ப்ரண்டோட முதுகுல குத்திட்டு போன ஒரு.. ” என்று பல்லைக் கடிக்க, அவனின் வதனத்தில் ஜொலித்த கோபத்தில் பெண்ணவளின் நா வறல, அவனின் வார்த்தைகளில் யாரோ ஈட்டியை உள்ளே இறக்கியது போன்று இருந்தது.

“போதும் நிறுத்துங்க.. என் அம்மாவ பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.. என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்து..” என்றவளுக்கு மேலே வார்த்தைகள் வராது, அதீத கோபத்தில் அழுகை தான் கரித்துக் கொண்டு வந்தது.

“உன்னை ஒண்ணும் நான் இஷ்டம் இல்லாம தொடல.. சும்மா என்னை ப்ளேம் பண்ணாத.. என்னை விட கான்ஷியஸ் இல்லாம போனது நீதான்.. அத மனசுல வச்சுக்க” என்று வார்த்தைகளை அக்னியாய் அள்ளிக் கொட்டி சிறு பெண்ணவளை வதைத்தவன், “சைன் பண்ண முடியுமா முடியாதா?” என்று எரிமலையில் இருந்து சிதறிய தீப்பிழம்புகளாய் தெறிக்க,

“முடியாது.. முடியாது.. முடியாது..” அந்த அறையே அதிரும் வண்ணம் ஆத்திரமாய் காட்டுக்கத்தல் கத்தியவள்,

“உங்களுக்கு வேணும்னா கேஸ் போட்டுக்கங்க.. பெத்த பொண்ணுக்கே இல்லாம எனக்கு தந்திருந்தா அவங்க என்ன தப்பு பண்ணியிருப்பாங்களோ” என்று அடி வயிற்றில் இருந்து கத்திய உத்ரா, நகரப் போக, ஒரே விநாடியில் அபிமன்யுவின் கோபம் விண்ணைத் தொட்டு அதையும் கடந்து பிய்த்துக் கொண்டு தாண்டியிருந்தது.

தன் பேச்சை மதிக்கவில்லை என்ற ஆங்காரம்! தன்னை தூக்கி வளர்த்த அத்தையை அவள் திட்டிவிட்ட ஆத்திரம்!

ஆத்திரம் கண்ணை மறைத்தது!

மனித மனம் அபரிதமான செயல் உடையது. பிடித்தால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளும்! பிடிக்கவில்லை என்றால் குதறிவிடும்!

“Arrogance and ignorance are two sides of same coins” என்ற வார்த்தைகளுக்கு நூலளவே வித்தியாசம்.

அதை ஏற்றவன் சிகரத்தை அடைவான். ஏற்காதவன் பாதாளத்தில் விழுவான்.

அப்படித்தான் அபிமன்யு தன் காதலை அதலபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருந்தான்.

நீரஜாவை பேசிய உத்ரா அவனைத் தாண்டி கதவை தொடப் போக, “யூ ஆர் ட்ராப்ட் (You are trapped)” என்று முரட்டுத்தனமாய் அவன் அவளை பிடித்து இழுக்க, அபிமன்யு பிடித்து இழுத்ததில், அவள் அணிந்திருந்த அபிமன்யுவின் சட்டை பொத்தான்கள் வரிசையாக கழன்று போக, விவரிக்க முடியாத விபரீதம் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்த உத்ரா தன்னை காக்க முயல்வதற்குள் மொத்த சட்டையும் கிழிந்து விழுந்திருக்க, மயான அமைதி!

இதை அவள் எதிர்பார்க்கவில்லை! அவனும்!

அச்சம் அவளின் உள்ளத்தை மொத்தமாய் சூரையாட, சட்டென மேனி மூடி தரையில் மடங்கி அமர்ந்தவளின், உதடுகள் வெட்கத்தில் துடிக்க, அவமானத்தில் முகம் கன்ற, மேனி பூகம்பம் வந்த போன்று நடுங்க, விக்கி விக்கி அழத் தொடங்கியவளை கண்ட அபிமன்யு அவளின் அருகே பேப்பரையும் பேனாவையும் போட்டுவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது வெளிய சென்றுவிட, வெடித்துச் சிதறினாள் பெண்ணவள்.

வெளியே வந்து நின்ற அபிமன்யுவின் செவிகளிலும் அவளின் அழுகை விழ, அவனின் மனதின் ஓரத்தில் எழுந்த வலி அவனின் உடல் முழுவதும் பரவ, கிரேக்க சிலையாய் நின்றிருந்தவனின் தோற்றம் அடித்தால் கூட உடையாத பாறையாய் இறுகிவிட்டது.

உள்ளே இருந்தவள் கனவில் கூட தான் இத்தகைய சூழ்நிலையில் சிக்கித் தவிப்போம் என்று நினைத்துப் பார்த்ததில்லை. வெளியே அமர்ந்திருந்தவன் இடது விரலால் தன் வலது புருவத்தை நீவியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

ஆங்காரத்துடன் பேனாவை எடுத்த உத்ரா, பேப்பரில் கையெழுத்திட்டுவிட்டு எழுந்து அங்கிருந்த கப்போர்டை திறந்தவள், தான் வந்திருந்த போது அணிந்திருந்த உடையை இப்போது அணிந்துகொண்டு, முகம் கழுவி வெளியே வந்தாள்.

கூடவே பேப்பர்ஸுடன்.

வெளியே வந்தவள் அபிமன்யுவின் முன் வந்து நிற்க, நெற்றியில் கை வைத்து யோசனையில் இருந்தவன், விழிகளை மட்டும் உயர்த்தி அவளை பார்த்து வைக்க அழுத்தமாக, “உங்களுக்கு தேவையானது..” என்று பத்திரத்தை வைத்தவள், “நான் போகணும்” என்றாள் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு.

எதுவும் பேசாது பேப்பர்ஸை எடுத்து வைத்த அபிமன்யு, கேப்டனை அழைத்து போர்ட்டிற்கு செல்லச் சொல்ல, உத்ரா பேசவே இல்லை. ஏன் அபிமன்யுவின் பக்கம் கூட திரும்பவில்லை. போர்ட்டில் வந்து நிறுத்தியவுடன் தனக்காக நின்றிருந்த அபிமன்யுவின் வீட்டு காரை கடந்து சென்றவள், ஒரு ஆட்டோவில் ஏறிக் கொள்ள, அபிமன்யு தோளை குலுக்கிக் கொண்டான்.

எங்கே போய்விடுவாள் என்ற ஆண் திமிர்!

அதன் பிறகு தான் அவள் கடத்தப்பட்டது தொடங்கி அனைத்தும் நடந்தது!

மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தவளின் புத்தியில் நடந்தது அனைத்தும் வந்து அடிக்க, முதல் இரவிற்காக அபிமன்யுவின் அறைக்குள் புகுந்த பெண்ணவளின் மனம் சமாதானம் எனும் வார்த்தையையே வெறுத்து, ஆங்காரத்தை பெற்றெடுத்தது.

error: Content is protected !!