Anima- 33

Anima- 33

ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர்… லைன்லதான் இருக்கியா?” என்று ஜெய் எதிர் முனையில் படபடக்கவும், “ம்… சொல்லு ஜெய். கேட்டுட்டுத்தான் இருக்கேன்” என்றாள் மலர்.

நான் எவ்ளோ பெரிய விஷயத்தை பேசிட்டு இருக்கேன்… நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா பதில் சொல்ற…” என அவன் அலுத்துக்கொள்ளவும்,

ப்ச்… அப்படிலாம் இல்ல. உண்மையிலேயே ஷாக் ஆகிட்டேன்” என்ற மலர், “ஜெய் பாவம் ஜெய் அந்த ஆளு! கண்டுபிடிச்சா கூட அவரை ஒண்ணும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சலாக சொல்லவும், “இப்ப இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் மலர்! அதைக் காலம்தான் தீர்மானிக்கும்” என்ற ஜெய்யின் பதிலில் கொஞ்சம் கடுப்பானவள்,

அரசியல் பலம்… பண பலம் எல்லாத்தையும் வெச்சுட்டு பல பேரோட குடும்பங்களை சீரழிக்கறவனை எல்லாம்விட்டுட்டு சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்க.

இவனை மாதிரி யாராவது கிடைச்சா… குற்றவாளியை பிடிச்சிட்டோம்னு பெருமை பேசிட்டுஅவனை வெச்சு செய்வீங்௧!” என்று அங்கலாய்ப்புடன் சொன்னாள் மலர்.

இதையெல்லாம் போனிலேயே பேசி முடிச்சிடலாமா! நான் இதை ஆர்வ கோளாறுல உன்கிட்ட இப்படிச் சொன்னதே தப்பு போல இருக்கே!” என்றான் ஜெய் கோபக்குரலில்.

ப்ச்! நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு கோவம் வருது ஜெய். எதுக்கு டென்சன் ஆகுற?” என மலர் பதிலுக்கு அவனிடம் எகிரவும்,

 “இவ்ளோ டீடைலா  இதெல்லாம் போன்ல பேசக்கூடாதுடீ லூசு! நான் ஈவினிங் உங்க வீட்டுக்கே வரேன். நேரிலேயே பேசிக்கலாம்” என்று சொல்லிபட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.

ஜெய்யிடம் எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டுஈஸ்வரைத் தேடி கீழே வந்தாள் மலர்.

இதற்கிடையில் சுபாவைப் பார்க்கப் பாட்டியின் அறைக்கு வந்த ஈஸ்வர்அவள் உறக்கத்தில் இருக்கவும்மனம் வருந்தியவனாகஅவளது தலையை வருடமெல்லியதாக முளைத்திருந்த அவளது தலை முடி அவனது கையில் குத்தவும்அவனுடைய மனம் வலித்தது.

அவனுடைய ஸ்பரிசம் உணர்ந்துகண் விழித்த சுபாமெல்ல எழுந்து உட்காரவும், “நீ படுத்துக்கோ! நான் சும்மாதான் வந்தேன்” என்றான் ஈஸ்வர்.

அவனுடைய முகத்தில் படர்ந்திருந்த வேதனைஅவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை அவளுக்குப் புரியவைக்க, “மலர் எல்லாத்தையும் சொல்லிட்டாளா?” என்று கேட்டுவிட்டு, “விடு ஜகா! இப்ப இந்த நிமிஷம் நான் நிம்மதியா இருக்கேன்! அதுதான் உண்மை!

நம்ம குடும்பத்தோட இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்குப் பொக்கிஷம்!

இது கிடைச்சதே எனக்கு வரம்! எனக்கு இது போதும்!

என்னை நினைச்சு நீ வருத்தப்படாதே!

இப்போதைக்கு உன்னோட சந்தோஷம்தான் எங்க எல்லாருக்கும் முக்கியம்.

நீ ஒருத்தன் சந்தோஷமா இருந்தால்இந்த குடும்பம் மொத்தமே சந்தோஷமா இருக்கும்!

அதனாலஜீவி கல்யாணம் நடந்ததிலிருந்தே,  மலரை உனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சாஉன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு அடிக்கடி தோணிட்டே இருந்தது.

என் ஆசை புரிஞ்ச மாதிரி,  எப்படியோஉங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு போய்உங்க கல்யாணம் நடந்து முடிஞ்சுது.

மலருக்கும் உனக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறாங்கன்னு அவ சொன்ன உடனேரொம்பவே சந்தோஷப்பட்டேன்.

உங்க கல்யாணம் என்னால டிலே ஆகக்கூடாதுன்னு அவகிட்ட ரொம்பவே கெஞ்சினேன் ஜகா!. அவ அதுக்கு சம்மதிக்கவே இல்ல. நான் குணமாகி வந்து உங்க கல்யாணத்துல கலந்துக்கணும்ன்னு சொல்லிட்டா.

பாட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வெச்சிட்டாங்க.

எப்படியோ நான் நினைச்சது… நினைக்காதது என எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சது!!” என்று சொல்லி முடித்தாள் சுபா.

முதலில் உன் மேல் கோபம் இருந்தபோது எனக்கு தோணல! ஆனால் இப்ப இப்படி உன்னைப் பார்க்கும் போது வேதனையா இருக்கு சுபா!

இப்ப ஒரு சகோதரனா நான் உனக்கு என்ன செய்யணும்னு எனக்கு புரியல!

நீயே சொல்லு உனக்கு நான் என்ன செய்யணும்?” என்று ஈஸ்வர் கேட்கவும்அதில் முகம் இறுக, “கண்டிப்பா நான் நேரம் வரும்போது உன்னிடம் ஒண்ணு கேட்பேன்… அப்ப அதை மறுக்காமல் நீ எனக்கு செய்யணும்!” என்று தீவிரமாகச் சுபா சொல்லவும்அவள் முக பாவனையைப் படிக்க முயன்றவாறு, “கட்டாயம் நான் செய்வேன் சுபா! அது என் கடமை!” என்றான் ஈஸ்வர்.

அப்பொழுது“அண்ணி! நார்மல் ஆகிட்டிங்களா?” என்று கேட்டவாறு கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் மலர்.

நீ இருக்கும்போது எனக்கு என்ன குறைச்சல்! நான் நார்மல் ஆகிட்டேன்!” என்றாள் சுபா.

பிறகு இருவரையும் உணவு உண்பதற்காக அழைத்துவிட்டுசுபாவைத் தாங்கி பிடித்தவாறு உணவு மேசையை நோக்கி அழைத்துச் சென்றாள் மலர்.

***

ஜெய்யுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட ஈஸ்வரின் முக மாறுதலுக்கான காரணத்தை அவனிடம் கேட்க, அதன் பிறகு நேரமே அமையவேயில்லை மலருக்கு.

மாலை ஈஸ்வர் அவனுடைய அலுவலக அறையில் தனிமையில் இருப்பதை அறிந்து அவனிடம் அது பற்றிக் கேட்டுவிடலாம் என எண்ணிஅந்த அறை நோக்கிச் சென்றாள் அவள்.

அப்பொழுது முரட்டுத்தனமான ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட்டில்ஆஜானுபாகுவான உயரமும்திரண்ட தோள்களும்ரப்பர் பேண்ட் போட்டு அடக்கியிருந்த தலை முடியும்ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் எனஅனாயாசமாக ஒரு மனிதனை தன் ஒரே கையில் தூக்கிவிடுவான் என்பதை உணர்த்தும்படியானபார்க்கும் பொழுதே பயம் வந்து ஒட்டிக்கொள்ளும் தோற்றத்தில்அங்கேவந்துகொண்டிருந்தான் ஈஸ்வரிடம் வேலை செய்யும் பௌன்சர்களில் ஒருவன்.

ஈஸ்வருடன் பொது இடங்களில் செல்லும் பொழுது அடிக்கடி அவனைச் சந்தித்திருந்த காரணத்தால் அவனை அடையாளம் கண்டுகொண்டவள் ஐயோ! இப்பவும் பேச முடியாது போல இருக்கே!‘ என மனதிற்குள் சலித்தவரே, “வாங்க மாலிக் அண்ணா! எப்படி இருக்கீங்க?” என்று மலர் கேட்கவும்,

அவளிடம் பேசத் தயங்கியவாறேசிறிது வெட்கத்துடன் நன்றாக இருக்கிறேன்!‘ என சொல்வதுபோல் தலையை மட்டும் ஆட்டினான் அந்த மாலிக்.

அப்பொழுது அவனுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போன்று அறையை விட்டு வெளியே வந்த ஈஸ்வர், “நீ உள்ள வா!” என அவனை அழைத்துவிட்டு மலரை நோக்கி, “நீ வசந்திம்மா கிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் காஃபீ அனுப்பு” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்லமாலிக்கும் அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.

அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் போய் அமர்ந்த ஈஸ்வர்எதிர் புறம் இருந்த இருக்கையை கை காட்டி, “உட்கார்!” என்று அவனிடம் கட்டளையாகச் சொல்லவும், “பரவாலேது அண்ணையா!” என்று அவன் சங்கடமாய் நெளிய,

நீ முதல்ல உட்காருஉன்கிட்ட முக்கியமா பேசணும்!” என்று ஈஸ்வர் சொல்லவும்அந்த இருக்கையின் நுனியில் தயக்கத்துடன் உட்கார்ந்தவன் ஈஸ்வருடைய முகத்தைப் பார்க்கஅதில் தெரிந்த கடினத்தில் பயந்துபோய், “க்ஷமிஞ்சண்டி அண்ணையா! எந்துக்கு கோபம் புரிலோ! சொல்லுங்கோபணிலோநேனு என்னா தப்பு செஞ்சனா?!” என்று உள்ளே சென்ற குரலில் அவன் கேட்கவும்,

நீ வேலையில எந்த தப்பும் செய்யல மல்லிக்! ஆனா என்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சுட்டியே!

எத்தனை வருஷமா உனக்கு என்னைத் தெரியும்?

அதுவும் நாலு அஞ்சு மாசமா என் கூடவே தானே இருக்க?

இருந்தாலும் என் மேல உனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை வரல… அப்படித்தானே?” என ஈஸ்வர் ஆதங்கத்துடன் கேட்கவும்,

தேவுடா! அட்டனெ செப்ப குடுது அண்ணையா! சாலா பாத பட்துந்தி!” என அவன் கண்கள் கலங்க சொல்லவும்,

அப்படியாஉண்மையிலேயே நீ அவ்வளவு வருத்தப்படுறியா?” என்று கேட்டுவிட்டுஅவனை ஆழமாக பார்த்தவரே, “என் மேல உனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தால் டிப்பு காணாமல் போனதை என் கிட்ட இருந்து மறைச்சிருப்பியா மல்லிக்?

முக்கியமாஎன்கிட்ட வேலை செய்யாத நேரத்துல நீ என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியாமல் இருக்குமா?” என ஈஸ்வர் கேட்கவும்ஈஸ்வருக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்பது புரியவும், அதில் மல்லிக் உடையஅவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகத்தொடங்கியது.

அப்பொழுது வசந்தி காஃபியை கொண்டுவந்து அங்கே வைத்துவிட்டுச் செல்லவும்முகத்தைத் துடைத்துக்கொண்டுஈஸ்வருடைய வற்புறுத்தலின் அதை எடுத்துப் பருகியவன், “டிப்பு காணாமே போயீ ஒரு வருஷம்மு மேலே ஆச்சு அண்ணைய்யா!” எனச் சொல்லவும்,

இல்ல! இதெல்லாம் எனக்குத் தெரியும்! உங்க அண்ணி இப்ப எப்படி இருகாங்கஅதை முதல்ல சொல்லு!” என்று ஈஸ்வர் கேட்க,

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “பாகா உன்னாரு! நிப்புலோ பெட்டுன (நெருப்பில் ஏற்பட்ட) காயம் சரியாடிச்சு! கானி மச்சாலு அணி… தளும்பு எக்கச்சக்கம் இருக்கு! பாபம் ஒதினா… பைட்ட அதான் வெளியிலோ வருதே இல்ல…” என்று வருத்தம் கலந்த குரலில் சொன்னான் மல்லிக்.

தொடர்ந்து “இப்ப சோமண்ணாவும்உங்க அண்ணியும் எங்க இருக்காங்க?’ என்று ஈஸ்வர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்கவும்அவனிடம் மறைக்க மனமின்றி, “ஒதினா மாம்பலம்வாளதோப்பு ஹவுசிங் போர்டுலோ ஒக்க இண்டிலோ உன்னாரண்டி!

அண்ணைய்யா பிச்சிஅணி பைத்தியம் புடிச்சுடிப்புவோ தேடி ஊரெல்லா சுத்துறாங்கோ!

பணி இல்லாதோ சமயம்,   நானு தேடி போயிபுடிச்சு இண்ட்லோ வுட்டாஒக்க ரோசு மாத்திரமே அக்கட இருப்பாங்கோஅடுத்த நாளுமலரம்மா போவாங்கோ இல்ல அந்த பிளாட் கிட்டோ பிளாட்பார்ம்லோ போயி படுத்துகிடப்பாங்கோ!” என்றான் மல்லிக் சலிப்புடன்.

அதைக் கேட்ட நொடி ஈஸ்வரின் உடல் அதிர்ந்தது. கிட்டத்தட்ட சோமய்யாவை அவன் சந்தித்து ஏழு வருடங்கள் ஆகியிருந்தது.

உருவத்தில் மல்லிக்கை ஒற்று இருப்பவன்உருக் குலைந்துபோய்தற்பொழுது இருக்கும் இந்த தோற்றத்தில்அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை ஈஸ்வரால்.

ஆனால் அன்று சுபாவின் பொருட்களை எடுத்துவர ஈஸ்வர் அங்கே சென்ற தினம்அவனை நம்பிக்கையுடன் சோமய்யா பார்த்த பார்வையின் பொருள் அவனுக்கு விளங்ககுற்ற உணர்ச்சியில் துடித்துப்போனான் ஈஸ்வர்.

அவன் முதன் முதலாகஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஆந்திராவில் உள்ள ஸ்ரீபுரம் என்ற கிராமத்திற்குச் சென்றபொழுதுஅங்கேதான் மல்லிகார்ஜுனுடைய அறிமுகம் கிடைத்தது அவனுக்கு.

மல்லிக் கொஞ்சம் புரியும்படியாக தமிழ் பேசவும்அவனுடன் ஒரு நல்ல நட்பும் ஏற்பட்டது.

சென்னைமும்பை எனப் பல பகுதிகள் முழுவதிலும்இந்த வேலைதான் என்பது இல்லாமல்கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டுஅவன் சம்பாதிக்கும் தொகையை குடும்பத்திற்குக் கொடுத்துவிடுவான் மல்லிக் என்பது தெரிந்தது ஈஸ்வருக்கு.

கல்வியறிவு இல்லாமல் இருந்தாலும்… தமிழ்ஒரியாஹிந்தி எனப் பல மொழிகளை அவன் அறிந்து வைத்திருப்பது கண்டு வியப்பாக இருந்தது அவனுக்கு.

ஸ்ரீபுரம்அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சிறிய குக்கிராமம். அங்கேயே தங்கிஅந்த படத்தைத் தயாரித்தனர்.

அங்கே அவனுக்கு அளிக்கப்படும் உணவு காரம் மிகுந்து இருந்ததால்அது அவனுக்கு ஒவ்வாமல்செரிமான கோளாறுகளை ஏற்படுத்தவும்மிகவும் அவதிப்பட்டான் ஈஸ்வர்.

அதை உணர்ந்துஅங்கே இருக்கும் வரை தான் வீட்டிலேயே சாப்பிடுமாறு அவனை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தான் மல்லிக்.

அதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்ற சமயம்தான்அவனுடைய அண்ணன்அண்ணி அவர்களுடைய ஆறு வயது மகன் டிப்பு என அனைவரையும் சந்தித்தான் ஈஸ்வர்.

மல்லிக்குடைய ஆதாரமே அவனுடைய அந்த சிறிய குடும்பம்தான் என்பது நன்றாக விளங்கியது அவனுக்கு.

மல்லிக்கிடம் இருப்பதுபோலவேஈஸ்வரிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டான் டிப்பு.

ஈஸ்வர் சுத்த சைவம் என்பதினால்புதிதாக மண் பாத்திரங்கள் வாங்கிவந்துதனிப்பட்ட முறையில்காரம் சேர்க்காமல்பக்குவமாகச் சமையல் செய்து கவனித்துக்கொண்டாள் சக்ரேஸ்வரி.

அவர்கள் கட்டிய சுயநலமற்ற அன்பாலும்கரிசனமான நடவடிக்கைகளாலும்சோமய்யாவின் குடும்பத்துடன் ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு உருவானது ஈஸ்வருக்கு.

அவன் அங்கிருந்து திரும்பிய பிறகுமறுபடி அவர்களைச் சந்திக்க இயலவில்லை என்றாலும்சென்னையில் தங்கி இருக்கும் சமயம்அவ்வப்பொழுது அவனைத் தொடர்புகொள்வான் மல்லிக்.

அவனது நிலை மேலே போன பிறகுஅந்த தொடர்பும் இல்லாமலே போகசில மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரைத் தேடி வந்தான் மல்லிக்.

அவசரமாக வேலை ஒன்று தேவைப் படுவதால்அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அவன் கேட்கவும்அவனை தன்னுடனேயே இருந்துவிடுமாறு சொன்ன ஈஸ்வர்பௌன்சர் எனப்படும் பாதுகாவலனாகப் பிரத்தியேகமாக அவனை வைத்துக்கொண்டான்.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பூங்காவனம் என்பவருடைய அறையிலேயே அவன் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்தான்.

ஜெய் அனுப்பிய அந்த ஒலிப்பதிவில்அவனுடைய குரலைக் கேட்ட சமயம் கூடமல்லிக்கை போலவே ஒருவன் பேசுகிறான் என வியந்தானே தவிரமனிதநேயம் மிக்க மல்லிகார்ஜுனை அப்படி ஒரு கொலைகாரனாக எண்ணிப்  பார்க்க ஈஸ்வருடைய மனம் இடம் கொடுக்க வில்லை.

ஜெய் மூலமாக டிப்பு காணாமல் போனதை அறிந்து மிகவும் மனம் வருந்தினான் ஈஸ்வர்.

நடக்கும் கொலைகளுக்குப் பின்னால் மல்லிக்தான் இருக்கிறான் என்பது புரியவும்அவனுடைய பெயர் வெளியில் வந்து, அவன் மேற்கொண்டு எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற எண்ணத்தில்அவசரம் அவசரமாக அவனுடைய படிப்பிப்பை முடித்துக்கொண்டுசென்னை திரும்பியவன்,  தன்னை வந்து சந்திக்குமாறு மல்லிக்கிற்கு தகவல் அனுப்பினான்.

அதற்குள் ஜெய் மல்லிக்குடைய பெயரைக் குறிப்பிடவும்நிலைமை கை மீறிச் சென்றுகொண்டிருப்பது புரிந்தது ஈஸ்வருக்கு.

அப்பொழுது ஜெய் அங்கே வரக்கூடும் என்ற எண்ணம் தோன்றவும், திடுக்கிட்டு தன் எண்ணப்போக்கிலிருந்து கலைந்தவனாகஎந்த சலனமும் இன்றி தான் எதிரில் அமர்ந்திருக்கும் மல்லிக்கை நோக்கி, “உன்னைப் பற்றி போலீசுக்கு தெரிஞ்சுபோச்சுதெரியுமா உனக்குஎப்ப வேணாலும் உன்னைத் தேடி போலீஸ் வரும் தெரியுமா?” என்று தீவிரமாக ஈஸ்வர் கேட்கவும்,

கொஞ்சமும் அதிராமல், “போலீசு! என்ன பெரிய போலீசு! டிப்புவை கடத்திட்டு போன குக்காவைஉட்டுட்டுஎன்னை புடிப்பாங்கோநானும் பாக்கறேன்?” என்றான் மல்லிக் கடுமையான குரலில்.

அவனுடைய பதிலில் எரிச்சல் உண்டாகமேற்கொண்டு அவனிடம் ஏதும் பேசும் மனநிலையில் இல்லாதவனாக, “நீ இப்ப கிளம்பு! நாளைக்கு உங்க அண்ணி இருகாங்க இல்லஅந்த வீட்டுக்கு வரேன்! மத்ததெல்லாம் அங்கே பேசிக்கலாம்” என்று ஈஸ்வர் சொல்லவும் மறுத்துப் பேசாமல்அங்கிருந்து கிளம்பினான் அவன்.

கதவைத் திறந்துகொண்டு அவன் வெளியில் வரவும்சரியாக அதே நேரம் அந்த அறையை நோக்கிவேகமாக வந்துகொண்டிருந்த ஜெய்யின்மேல் எதிர்பாராமல் மோதி நின்றான் மல்லிக்.

சாரி!” என்று உரைத்துவிட்டுஅவனை எடைபோடுவது போல் ஒரு பார்வை பார்த்துக்கொண்டேஉள்ளே சென்றான் ஜெய்.

error: Content is protected !!