ANIMA-6

மலர் ‘மாமீ’ என்று அழைத்த தோரணையிலேயே… மாமிக்கு நிலைமை புரிந்துவிட… அவசரமாக… தாம்பூலத்தை வாங்கிக்கொண்டு… மாமாவுடன் கிளம்பி… அங்கிருந்து ஓடியே போனார் அவர்…

“எப்படியும்… அங்கே வருவேன் இல்ல… அப்ப இருக்கு மாமி உங்களுக்கு!” என்று மாமிக்கு வாட்ஸாப்பில் தகவல் அனுப்பிய மலர்… சிறிது நேரத்தில்… புடவையிலிருந்து சல்வாருக்கு மாறியிருந்தாள்…

அங்கே செங்கமலம் பாட்டி… சரோஜா பாட்டி இருவரும் உட்கார்ந்து… பேசிக்கொண்டிருக்க… அவர்களை நோக்கி வந்தவள்… “ரோசாம்மா… அம்மா என்னை வீட்டுக்குப் போய்… அண்ணா… அண்ணி ரெண்டு பேரையும் வரவேற்க… ஆரத்தி தட்டு… பால்… பழம்… எல்லாம் ரெடி பண்ண சொன்னாங்க…”

“நான் ஜெய்யுடன் கிளம்பறேன்… அவன் என்னை வீட்டில் விட்டுட்டு… அப்படியே ட்யூட்டிக்கு போறானாம்… உங்க கிட்ட சொல்லச் சொன்னான்… பை” என்றுவிட்டு…

“பை பாட்டி” என்று ஈஸ்வரின் பட்டியிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மலர்…

“பரவாயில்ல… உன் பேத்தி… கொஞ்சம் பொறுப்பாகத்தான் இருக்கா!” என்று ஈஸ்வரின் பாட்டி சொல்லவும்…

“அக்கா… என்ன நினைச்ச மலரை பத்தி… ரொம்….பவே பொறுப்பான பொண்ணு…  அவ… சமையலெல்லாம் ரொம்ப நல்லா செய்வா… ரொம்ப அழகா கோலம் போடுவா… அருமையா பாடுவா! யாராவது அவளிடம் உதவின்னு கேட்டுடா… உயிரையும் கொடுப்பா… மாசம் ஐம்பதியிரம்… சம்பளம் வாங்கறா” என்று சரோஜா பாட்டி அடுக்கிக்கொண்டே போக…

ஜீவிதாவை நினைத்து… கவலை பிடித்துக்கொண்டது செங்கமலம் பாட்டிக்கு… அவள் பெரிதும் வெளி உலகம் அறியாதவள்… BSC நியூட்ரிஷன்… படித்திருந்தாலும்… அவள் வேலைக்கு செல்லவெல்லாம் முற்படவில்லை… அதற்கான அவசியமும் அவளுக்கு ஏற்படவில்லை… அவளை வேலைக்கு அனுப்ப… அவர்களும் விரும்பவில்லை…

கிட்டத்தட்ட… கிணற்றுத் தவளை போல் இருக்கும் ஜீவிதாவிற்கும்… அணையிட முடியாத காட்டாற்று வெள்ளம் போன்ற மலருக்குமான உறவு சுமுகமாக இருக்கவேண்டுமே என்று இருந்தது அவருக்கு…

மண்டபத்தை விட்டு வெளியே வந்த மலர்… அங்கே தன்னுடைய புல்லட்டில்… தாயாராக இருந்த ஜெய்யை நெருங்கி… “ஜெய்! எனக்கு எப்பொழுதாவதுதான்… இந்த சான்ஸ் கிடைக்கும்… நீ நகரு… நான் வண்டியை ரைட் பண்றேன்…” என்க…

“யோவ்! உன் பின்னாடி உட்கார்ந்து வந்தால்… என் இமேஜ் டேமேஜ் ஆயிடும்… ஆளை விடு!” என்று அவன் சொல்லவும்…

“யோவ்! நீதான் ஹெல்மேட் போட்டிருக்க இல்ல! உன் மூஞ்சியை யார் பார்க்கப்போறாங்க…” என்றுவிட்டு…

“அம்மா என்னை பார்க்கறதுக்குள்ள… கிளம்பனும்… ப்ளீஸ்! ப்ளீஸ்! இன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும்!” என அவள் கெஞ்சவும்… மறுக்க மனம் இல்லாமல்… தான் பின்னால் நகர்ந்துகொண்டு… அவளுக்கு வழிவிட்டான் ஜெய்… அடுத்த நொடி அந்த ராயல் என்ஃபீல்ட்… சீறிக்கொண்டு பறந்தது…

மாம்பழ நிறத்தில்… அரக்கு நிற கரை போட்ட பட்டுப்புடவை… அவளுக்கு அழகாகத்தானே இருந்தது… என் இப்படி சல்வாருக்கு மாறினாள்… என்று எண்ணியவாறு… கண்களில் கனிவுடன்… அவளைப் பின்தொடர்ந்து  வந்த  ஈஸ்வர்… அவள் ஜெய்யுடன் பேசிக்கொண்டிருந்ததை… கேள்வியாய் நோக்கவும்… அங்கே அவனைக் கவனித்துக்கொண்டே வந்த தமிழ்…

“அண்ணா! இந்த பொண்ணுங்கல்லாம்… இப்ப எங்க சிங்கிளா இருக்காங்க… ம்… அன்னைக்கு… நம்ம தேட்டர்ல வச்சு பார்த்தோமே… அந்த பொண்ணுதானே இது!” என்றவன்… அன்று ஜெய்யுடன் மலரைப் பார்த்ததை அப்படியே விவரித்தான்…

மேலும் “அந்த AC! இவளோட மாமா பையந்தானே?” என்று தமிழ் கேட்க…

எதோ யோசனையுடன்… “ம்… அவன் எனக்குத் தம்பி முறையாம்!” என்றவன்… உடனே… “ஆமாம்! இதை பற்றியெல்லாம்… இப்ப என்ன பேச்சு… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு போய் பாரு… போ!” என்று அவனிடம் அதட்டலாகச் சொல்லி… அவனை அங்கிருந்து அனுப்பிய ஈஸ்வர்…

மனதில் எதோ பாரம் ஏறிய உணர்வுடன் அங்கிருந்து சென்றான்…

முறைப்படி… மகன் மற்றும் மருமகளை… வீட்டிற்கு வரவேற்று… ஜீவிதாவை… பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து… மணமக்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து… குறையின்றி… அனைத்தையும் செய்துமுடித்தார் சூடாமணி…

மிகவும் அழகாக… இல்லற வாழ்க்கையை தொடங்கினர்… பிரபாகர் மற்றும் ஜீவிதா…

**********************

திருமணம் முடிந்த இரு தினங்களிலேயே… ஈஸ்வர் படப்பிடிப்புக்கென வெளிநாடு சென்றுவிட…

பிரபா மற்றும் ஜீவிதா… மறுவீடு முடிந்து… தேனிலவுக்கென… சில தினங்கள்… சுவிட்சர்லாந்து… சென்றுவந்தனர்…

சென்னையின் புறநகர் பகுதியில்… காரில் எரிந்த நிலையில்… கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணைப் பற்றிய துப்பு கிடைக்காமல்… அந்த வழக்குடன் சேர்ந்து… இரண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்கிலும்… ஜெய் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்…

காலை ஐந்தரை மணிக்கு… யோகாவில் தொடங்கி… இரவு தாமதமாக வந்து… சூடாமணியிடம் சூடாக அர்ச்சனைகள் வாங்குவது வரை… நாள் முழுவதும் தனது… தினசரி வேலைகளில்… மிகவும் மூழ்கியிருந்தாள் மலர்…

தேனிலவு முடிந்து திரும்பியவுடன்… பிரபாகர்… தொழில் சார்ந்த வேலைகளில்  ஈடுபட…

அமைதியான மாமனார்… சுறுசுறுப்பான மாமியார்… பாட்டி… தாத்தா என… எல்லோருடனும்… ஜீவிதா கொஞ்சம் கொஞ்சமாக… அவர்கள் குடும்பத்தில்…  இயல்பாகவே ஒன்றத் தொடங்கியிருந்தாள்…

அணிமா மலரின் வேலைக் காரணமாக… அவளிடம் மட்டும் நெருங்கிப் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது ஜீவிதாவிற்கு…

அண்ணி மற்றும் நாத்தனார் இருவருக்குள்ளும்… ஒரு… ஹை!  ஒரு பை! என்ற நிலை மட்டுமே தொடர்ந்தது…

******************

அன்று… ஞாயிற்றுக் கிழமை… மலரின் அப்பா… அண்ணன் என அனைவருமே விடுமுறையில் இருக்க… காலைச் சீக்கிரமே எங்கோ… செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் மலர்…

“என்ன மலரு! இன்றைக்கு கூட… அதுவும் இவ்வளவு சீக்கிரமா வெளிய கிளம்பிட்டு இருக்க?

“நீ வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து இருந்து… எத்தனை நாளாச்சு தெரியுமா?”

“சனி… ஞாயிறு கூட வீடு தங்குறது இல்ல?”

“என்ன நினைச்சுட்டு இருக்க… உன் மனசுல?”

சூடாமணி கேள்விகளால் துளைக்கவும்…

“அம்…மா! ப்ளீஸ்! எனக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க!” என்கவும்…

“நீயும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ மலரு! காவேரி அத்தை… US லிருந்து நேத்துதான் வந்தாங்களாம்… கல்யாணம் விசாரிக்க… இன்றைக்கு சாயங்காலம் வருவதாக சொல்லியிருக்காங்க… நீ இங்க இல்லைனா… நல்லா இருக்காது…” என்று சூடாமணி முடிக்கவும்…

“அவ்ளோதானே… நான் நாலு மணிக்கே வந்துடறேன்… ஓகேவா… நோ சூடு… ஒன்லி சில்… சூடாம்மா!” என்றுவிட்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிய மலரை…

“மலர்! அத்தை இவ்ளோ சொல்றாங்க இல்ல… இன்றைக்கு ஒரு நாள் வீட்டில் இருக்க முடியாதா?” என்று ஜீவிதா இடைப்புக…

அங்கே உட்கார்ந்திருந்த பிரபாவை… மலர் வினோதமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட…

“இதோ பாரு ஜீவி! மலர் எதாவது செஞ்சா… அது சரியாகத்தான் இருக்கும்… அது அம்மாவுக்கும் தெரியும்! அதனால… அம்மா… பொண்ணு… ரெண்டு பேருக்கும் நடுவுல… நீ போகாத!” என்று சாதாரண குரலில்… பிரபா சொல்ல… என்ன பேசுவது என்று புரியாமல்… அவர்களது அறைக்குள் சென்று புகுந்துகொண்டாள் ஜீவிதா…

சொன்னதுபோலவே… சரியாக நான்குமணிக்கு… மிகவும் களைத்துப்போய்… வீட்டிற்குள் நுழைந்தாள் மலர்…

அவளது ஒன்றுவிட்ட அத்தை… காவேரியின் அலட்டலான குரல்… வீதி வரையிலுமே கேட்டது…

வீட்டிற்குள் வந்த மலர்… அங்கே அந்த அத்தை மற்றும் அவரது மகன் இருவரும் உட்கார்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து… மரியாதை நிமித்தம் “எப்ப வந்தீங்க அத்தை… நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கவும்…

அவளது காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு  அமெரிக்காவின் புகழ்… அங்கே இருக்கும் தனது மகள்… மருமகன் புகழ்… புதிதாகப் பிறந்திருக்கும் பேரன் புகழ்…  அங்கிருந்து விடுமுறையில் வந்திருக்கும் மகனின் புகழோ புகழ் என்று பாடித் தள்ளிவிட்டார் அந்த அத்தை…

ஒருவழியாகத் தப்பித்து… மலர் அடுக்களைக்குள் நுழைய.. “என்னடி… உன் மேல ஹாஸ்பிடல் ஸ்மெல் வருது! பிளட் டொனேட் பண்ணிட்டு வந்திருக்கியா?” என்று கேட்குக்கொண்டே… அவளது அம்மா கொடுத்த சூடான காஃபியை பருகியவாறு…  மலர் “கண்டுபிடிச்சிடீங்க!” என்றுவிட்டு… “சத்தியமா முடியல…  எப்படிம்மா இந்த அத்தையை சமாளிக்கறாங்க…” என்று நக்கலுடன் கேட்க…

“பார்த்து பேசு மலரு… அவங்க பிள்ளைக்கு உன்னைக் கேட்டு வந்திருக்காங்க! உனக்காகத்தான்… காத்துட்டு இருந்தோம்…” என்று சூடாமணி சொல்லவும்…

“சும்மா காமடி பண்ணாத சூடாம்மா” என்று மலர் அலட்சியமாகச் சொல்ல…

“இல்லடி… அந்தப் பையன் உன்னிடம் தனியாக பேசணுமாம்!” என்றார் சூடாமணி…

முதலில் அதிர்ந்தவள்… பின்பு தோளைக் குலுக்கிக்கொண்டு… “நான் ரெப்பிரேஷ் பண்ணிட்டு… ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடறேன்… பிறகு அவனிடம் பேசறேன்!” என்றுவிட்டு… தனது அறைக்குச் சென்று… குளித்து… எளிமையான பலாஸோ… மற்றும் லாங் டாப் அணிந்து திரும்ப வந்தாள்… மலர்

காவேரி… மலரை அவர் மகனுடன் தனியாக பேசச் சொல்லவும்… கொஞ்சமும் தயங்காமல்… மலர் “எது பேசணும்னாலும்… பெரியவங்க முன்னிலையிலேயே பேசலாம்… தனியாகப் பேச எதுவும் இல்லை” என்றுவிட… அத்தையின் முகம் சிறுத்துப் போனது…

பின்பு பேசத்தொடங்கிய அத்தை மகன்… தனது படிப்பு… வேலை என அனைத்தையும் சொன்னவன்… அவளது படிப்பும் வேலையும்… அவனுக்கு தகுந்ததாக இருப்பதாகவும்… அதனால்  அவர்கள் திருமணம் செய்துகொண்டால்… மேற்கொண்டு அமெரிக்காவிலேயே குடியேற… வசதியாக இருக்கும் என்றும்…  விளக்கமாகச் சொல்லி முடிக்க…

அதற்குச் சிரித்துக்கொண்டே மலர்… “ஐயோ! நீங்க இப்படி கேட்பிங்கனு தெரியாம…  நான் அல்ரெடி எங்க கம்பெனில பேப்பர் போட்டுட்டேனே… நான் கல்யாணத்துக்கு பிறகு… வீட்டில்தான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்… உங்களுக்கு ஓகே வா… இல்லைனா… நீங்க வேற பெண்ணைத்தான் பார்க்கணும்” என்று நீளமாகச் சொல்லி முடிக்க… அவனுடைய முகம் மாறிப்போனது…

“ஏன்மா… நீ வேலையை அங்கேயே மேற்கொண்டு தொடர முடியுமா பாரேன்… நாங்க வேறு… பையன் லீவு முடிஞ்சு திரும்ப அமெரிக்கா போவதற்குள்… கல்யாணத்தை முடிக்கணும்னு பார்க்கிறோம்” என்று காவேரி அத்தை சொல்ல…

“அத்தை… கல்யாணத்துக்கு பிறகு… என்னால் வேலைக்கெல்லாம் போக முடியாது… அதுவும்… எனக்கு என்னோட அம்மா… அப்பா… தாத்தா… பாட்டி… அண்ணன்… அண்ணின்னு எல்லாரையும் விட்டுட்டு… வெளிநாட்டுக்கெல்லாம் போகவே முடியாது… நீங்க தவறாக நினைக்காதீங்க…” என்று மலர் திட்டவட்டமாக சொல்லி முடிக்கவும்…

வெங்கடேசனைப் பார்த்தவர்… “தம்பி… நீயாவது… உன் பொண்ணுகிட்ட சொல்லிப் புரிய வைக்கக் கூடாதா?” என்று காவேரி கேட்க…

“அக்கா… எனக்கு எதற்கும் கொஞ்சம் டைம் கொடுங்க… நான் மலரிடம் பேசிட்டு சொல்றேன்” என்று தள்ளிப்போடும் விதத்தில் அவர் பதில் சொல்ல…

“நீ என்னத்த பேசப்போற… பெரியவங்க இருக்கும்போதே… உன் பொண்ணு இவ்ளோ தெனாவெட்டா பேசறா”

மலரின் தாத்தா… பாட்டி இருவரையும் சுட்டிக்காட்டி… “நீங்க எல்லாரும் சேர்ந்து… நல்லா இடம் கொடுத்து வஞ்சிருக்கீங்க இல்ல… அந்த திமிறுதான்…”

“இல்லனா இப்படி வேலையை விடுவாளா?”

“நல்லா ஆம்பள மாதிரி பெண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க…  இவளைப் பத்தி தெரிஞ்ச… எவனாவது இவளைக் காட்டுவானா?” என்று கண்டபடி பேசவும்…

“அத்தை… எங்க வீட்டுக்கே வந்து… எங்க பெண்ணை கண்டபடி பேசுவது ரொம்பவும் தப்பு. நீங்க இதைப்பற்றி முன்னாடியே முறையா சொல்லியிருந்தால்… அவள் இப்படிப் பேச வேண்டிய நிலையே வந்திருக்காது…” என்ற பிரபா…

அன்னையை நோக்கி… “அம்மா… அத்தைக்குத் தாம்பூலம் கொடுங்க… கிளம்பட்டும்” என்கவும்… மேற்கொண்டு எதுவும் பேசாமல்… தாம்பூலத்தை வாங்கிக்கொண்டு… அங்கிருந்து சென்றனர்… அத்தையும் அவரது மகனும்…

அவர்கள் அங்கிருந்து சென்றதும்… சூடாமணி… “என்ன மலரு… நீ அவங்களுக்காக… சும்மாதானே… பேப்பர் போட்டதா சொன்ன…” என்று தீவிரக்குரலில் கேட்க…

“இல்லமா… நிஜமாகத்தான் சொன்னேன்” என்று மலர் உணர்வற்ற குரலில் சொல்லவும்…

அதில் கோபம் அதிகமாகி… சூடாமணிக்கு அழுகை வந்துவிட… “ஏண்டி… அந்தக் காவேரி சொன்ன மாதிரி… உன்னை நாங்க சரியா வளக்கல… ரொம்பவே செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம்…”

“இல்லனா… இப்படி சொல்லாமல் கொள்ளாமல்… வேலையை விட்டுட்டு வருவியா?” என்று அவர் வெடிக்கவும்…

“அம்மா… ஆன் சைட் போகச் சொல்லி… கம்பெனில ரொம்பவே ப்ரெஷர் போட தொடங்கிட்டாங்க… போன தடவ மாதிரி இல்லை… இப்ப போனா… குறைஞ்சது ரெண்டு மூணு வருஷத்துக்கு இங்க வர முடியாது…”

“அதனால… நேத்து எனக்கு என்னோட டீம் லீடர் கூட ரொம்பவே சண்டை ஆகிப்போச்சு…”

“ஏற்கனவே… எனக்கு இந்த வேலையே பிடிக்கல… அதனாலதான்… கொஞ்சம் கூட யோசிக்காமல் பேப்பர் போட்டுட்டேன்…”

“நேத்து வீட்டுக்கு வந்தவுடனே… ராசாவிடமும்… அப்பாவிடமும்… சொல்லிட்டேன்”

“உங்ககிட்ட எப்படி சொல்ரதுன்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்று தனது நிலையை விளக்கிய மலர்…

“நம்மால் இனி எதுவுமே முடியாது… வாழ்க்கையே முடிஞ்சு போச்சு… என்ற எண்ணம் வந்தால் மட்டுமே… அழுகை வரணும்…”

“நீங்க… இப்படி அழுதது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல” என்று சொல்லிவிட்டு… விறுவிறுவென்று… அவர்கள் வீட்டு மாடி தோட்டத்திற்குச் சென்றவள்… படிகளுக்குப் பக்கவாட்டில் இருக்கும் சுவரில் சாய்ந்துகொண்டு… கால்களை நீட்டியவாறு… கண்களை மூடி உட்கார்ந்துகொண்டாள்…

லேசாக இருள் பரவத்தொடங்கியிருந்து…

சில நிமிடங்களில்… அவளது பக்கத்தில்… அவளை இடித்தவாறு… வந்து உட்கார்ந்த ஜெய்… அவளது காரத்தைப் பிடித்து… காஃபி கோப்பையைத் திணித்துவிட்டு… “இப்ப சொல்லு… என்ன மூட் அவுட்” என்று மலரிடம் கேட்க…

“ஏன்… உன் அருமை அத்தையம்மா… எதுவும் சொல்லலியா?” என்ற மலரின் கேள்விக்கு…

“சொன்னாங்களே… என் பொண்ணு ரொம்ப டயர்டா இருக்கா… இந்த காஃபியை அவளிடம் கொடுத்துடுன்னு சொன்னாங்களே”

“ஒரு IPS ஆஃபிசரை உங்கம்மா… அட்டண்டர் மாதிரி வேலை வாங்கறாங்க… இது கொஞ்சமும் சரியில்லை…” என்று அவன் கிண்டலாகச் சொல்ல… அதை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லாததால்… பேசாமல் இருந்தாள் மலர்…

பின்பு தீவிரமாக அவன் அவளிடம் பிரச்சினையைப் பற்றி கேட்கவும்… அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்…

“அம்மாவை அழவெச்சுட்டேன் ஜெய்… என்னால அதைத்தான் தாங்கிக்க முடியல”

“ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால… நாங்க பைனான்ஷியலி கஷ்டப்பட்டுட்டு இருந்த சமயத்துல… இவங்களெல்லாம் எங்க இருந்தாங்கன்னே எனக்குத் தெரியாது…”

“இப்ப திடீர்னு வந்து பொண்ணு கேக்கறாங்க”

“அதுவும் அவனை மாதிரி ஒருத்தனை… என்னால கொஞ்சம் கூட சகிச்சுக்க முடியது ஜெய்… அதனாலதான் நான் அப்படி நாசூக்காய் சொன்னது”

“கல்யாணம் என்பது… எவ்வளவு பெரிய கமிட்மென்ட்…”

“யோசிக்காம கல்யாணம் பண்ணிட்டு… ஒத்து வரலைனா… கோர்ட் வாசல்ல போய் நிற்க… நான் தயாரா இல்லை ஜெய்!”

“அவங்க சொன்ன மாதிரி… என்னைப் பற்றி தெரிஞ்ச யாருக்கும் என்னைப் பிடிக்காது…”

“அதனால… நான் இப்படியே இருந்துடறேன்” என்று மலர் தீவிரமாய் சொல்லிக்கொண்டிருக்க…

“நீ ரொம்ப பீல் பண்ணாத மலரு… எனக்கு என்ன சேதாரம் ஆனாலும் பரவாயில்லை…  நான் வேணா உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன்…” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு… ஜெய் சொல்லவும்… அவன் முதுகில் இரண்டு அடிகளைப் போட்டவள்…

“மங்கீ… டாங்கீ… சீச்சீ… வாயை கழுவு… கருமம்… உவேக்!” என்று சொல்லி அவள் சிரிக்க…

“அடிப்பாவி… என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு உனக்கு/” என்று ஜெய் கேட்க…

“உன்னை பார்த்தால்… வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிச்சு வந்த மங்கீ மாதிரியே இருக்கு” என்று சொல்லும் அளவிற்கு மலர் தன் வருத்தத்திலிருந்து மீண்டிருந்தாள்…

“ஜோக்ஸ் அபார்ட்… மலர்… நீ விரும்பற மாதிரி… உன்னைச் சரியாக புரிஞ்சு… பிடிச்சு… உன்னை உள்ளங்கையில் வெச்சு தாங்குற ஒருத்தன் உன்னைத்தேடி கண்டிப்பா வருவான்… அதை பிறகு பார்க்கலாம்”

“நான் இங்க வந்ததே… உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசத்தான்” என்றவன்… அடுத்த நொடி போலீஸ்காரனாக மாறியிருந்தான்…

தனது கைப்பேசியில்… பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தின் படத்தை மலரிடம் காண்பித்த ஜெய்… “இவளை உனக்கு அடையாளம் தெரியுதா?” என்று கேட்க… உதடுகளைப் பிதுக்கியவள்… “ப்ச்… இல்லையே” என்றுவிட்டு…

“கொஞ்ச நாளைக்கு முன்னால… டிவியில் பார்த்துருக்கேன்” என்றாள் மலர்…

“இல்லைம்மா! இன்றைக்குக் காலையில்… இந்தப் பெண்ணின் பிணம் கிடைத்த இடத்தில சோதனை செய்யும்போது… பக்கத்துல இருந்த புதரில்… ஒரு ஹாண்ட் பாக் கிடைத்தது”

“அதில்… ஒரு ஸ்லிப்ல… உன்னோட பேர்… மொபைல் நம்பர்… மாம்பலம் பிளாட் அட்ரஸ்… எல்லாம் எழுதியிருந்தது… அதனாலதான் கேட்டேன்” என்று ஜெய் சொல்ல… அதிர்ந்தாள் மலர்…

“என்ன சொல்ற ஜெய்… எனக்கு ஒண்ணுமே புரியலையே… ” என்று அதிர்ச்சி விலகாமல் அவள் சொல்லவும்…

“நோ ஒற்றீஸ்…  உனக்கு… ஏதாவது ஞாபகம் வந்தால் என்னிடம் சொல்லு…”

“கீழே எல்லாரும் கவலையா இருக்காங்க… நீ வந்து நார்மலா பேசினால்தான்… எல்லாருக்கும் நிம்மதி… வா போகலாம்” என்றவாறு எழுந்துநின்று… அவளது கையைப்பிடித்து… அணிமா மலரைத் தூக்கி நிறுத்தினான் ஜெய்…

அதே நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டே… படிகளில் ஏறி அங்கே வந்துகொண்டிருந்தான்… ஜெகதீஸ்வரன்…

 

error: Content is protected !!