IM-8

IM-8

நெருப்பு / முத்தம்

தீண்டியவுடன் மாயமானேன் – நான்…

நீயாக மாறியதால்…

இரட்டுறமொழிதல் – 08

SNP அலுவலகத்தில், அவன் டேபிளில்… இறந்து போன அந்த தொழிலாளியின் மனைவிக்கு வேலை வழங்கும் உத்தரவு, அத்தொழிலாளியின், PF , கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் தொகை-க்கான காசோலை, அமர்ந்திருந்தது…

 அடுத்த பார்வையிடும் கோப்பாக, அத்தொழிலாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்… அதற்கு கீழே.. சாயா & லத்திகா அஸோஸியேட்ஸ்…-ன் புகாருக்கு பதிலளிக்க அறிவுறுத்தப் பட்டிருந்த நீதிமன்ற அறிவிப்பு…

 

+++++++++++++++++++++++++++++++++++++

தியா -வின் அறையில் அவளது பிரத்யேக தொலைபேசி  ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளது மருத்துவ மனையில், நைட் ஷிஃப்ட் வர வேண்டிய மருத்துவர் அவசர விடுப்பு எடுத்ததால், இரண்டு ஷிஃப்ட், தொடர்ச்சியாய் பணி செய்து காலையில் தான் வந்திருந்தாள். அன்னை சாயா-விடம் “மாம்.. வெரி டயர்ட் .. தூங்கப் போறேன் . தொந்தரவு பண்ணாதீங்க “, சொல்லியே அவள் அறைக்கு வந்து, அலைபேசியை சைலென்டில் போட்டு விட்டு உறங்க ஆரம்பித்தாள்.. 

 விடாது கருப்பு என்பது போல அடிக்கும் தொலைபேசியை, படுக்கையில் இருந்தவாறே, கஷ்டப்பட்டு கண்விழித்து பார்த்து, கண் எரிச்சலுடன் எடுத்து காதில் வைத்தாள்.. “ஹலோ… அதிதி ஹியர் “…

“பரிதி பேசறேன்….”, ஒரு விளிப்பும் இன்றி, மொட்டையாய் ஆரம்பித்தது அவன் உரையாடல்..

தூக்கமாவது, எரிச்சலாவது… ??? அத்தனையும் போய், தியா இப்போது முழு அலெட்ர்ட் .. “சொல்லுங்க “, மனஸ் கவுண்டர் கொடுத்தது “இந்த வளந்துகெட்டவனுக்கு ரெண்டு நாள் ஆயிருக்கு எங்கூட பேச”,

“பேசணும் “

“சரி..”

“நேர்ல பேசணும்..”

சுரு சுரு என கோபம் வந்தது தியாவிற்கு…”வார்த்தையை எண்ணி பேசணும்-னு யாராவது சொன்னாங்களா ?”, நக்கலாய் கேட்டாள்.

“என்னது?”, எதிர்முனை ஓட்றகுச்சிக்கு நிஜமாகவே புரியவில்லை…

“இல்ல வார்த்தையை எண்ணி பேசணும்-னு யாராவது சொல்லி இருந்தா.. திங்க் பண்ணி பேசணும்-னு அர்த்தம், கவுண்ட் பண்ணி பேசணும்-னு அர்த்தம் கிடையாது…. “

“உன்னோட செல் எடுத்து பாரு….”, அடக்கப்பட்ட டென்ஷனோடு இடை வெட்டினான்…பரிதி…

பார்த்தால் (ள் ), ஓஹ் மை காட் !!!!!!!!!! .. 23 மிஸ்ட் கால், 3 வாட்ஸ்ப் மெசேஜ், வந்திருக்க.. அனைத்தும் பரிதியுடையது…

“பரிதி… சாரி, ரெண்டு ஷிப்ட் ..”, இவள் ஆரம்பிக்க முன்னரே மீண்டும் தடை போட்டான்..

“ஹால்-ல  இருக்கேன் வா…”

கேட்ட தியா-க்கு ஒன்றும் புரியவில்லை., மைண்ட், அதிரி புதிரியாய் யோசித்தது..

முதலில்… “நான் என் வீட்ல தானே இருக்கேன் ?”

அடுத்து “அய்யோ இங்கயா ?.. வீட்டுக்கே வந்துட்டானா ?”

தொடர்ந்து…” அம்மா அப்பாட்ட இன்னும் இத பத்தி ஒன்னும் சொல்லலியே ?”, 

பதட்டம் வந்திருந்தது.. நிமிடங்களில்…..  குளித்து உடை மாற்றி…. ஹாலுக்கு சென்றாள் ..

 

அங்கே ஹாஃப் வொயிட் டீ ஷர்ட் அண்ட் ப்ளாக் நேரோ ஜீன்ஸ் – ல், த்ரீ சீட்டர் ஸோஃபாவில், நடு நாயகமாய் அமர்ந்து, மிக ரிலாக்ஸ்-ஆக….., அருகில் அமர்ந்திருந்த SNP யுடன் மிக சகஜமாய் பேசிக்கொண்டிருந்தான்.. இளம்பரிதி…

“அய்யோ ..கொல்றானே “, செல்லமாய் கொஞ்சி … ஒரு மைக்ரோ நொடி.. அவன் அழகில் ஜொள்ளினாலும்.. 

“சொல்லாம கொள்ளாம வந்திருக்கானே ? 

அப்பாகிட்ட என்ன பேசிட்டு இருக்கான்?”, நினைக்க … நினைக்க …. ஸ்டதஸ்கோப் உதவியின்றி, அவளது இதயத்தின் வேகமான லப் டப், காதுகளில் கேட்டது.. அருகில் இருந்தால், நமக்கும் கேட்டிருக்கும்.. கால்கள் பின்ன.. நேரே ஹாலுக்கு வந்து…. நின்றாள்..

பரிதி,  SNP-யிடம் கேட்டுத்தான் அவளது தனியறையில் இருந்த லேண்ட்லைன் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான். ஏனெனில், தியா கொடுத்தது அவளது அலைபேசி எண்ணை மட்டும்தான், அவளது லேண்ட் லைன் நம்பரை தரவில்லை … தவிர, காலை எழுந்ததில்  இருந்து மனம் தியாவை தவிர வேறு எதையும் நினைக்க மறுத்தது.. எதற்காகவும் அதிதிசந்த்யா-வை விட முடியாது என்பதில் தீர்மானமாய் இருந்தான்…SNP யம், சரண்-னும் பார்க்கும்போதேதான் தியா -வை அழைத்தான்.

கால்கள் பின்ன.. நேரே ஹாலுக்கு வந்து, பரிதியை பார்த்து, வா என்பதாய் தலையசைத்து, SNP இடம் அவனை அறிமுகப்படுத்த திரும்பினாள்.

SNP பரிதியிடம் பேசினாலும், பார்வை மகளின் மீதே.. பரிதி அழைத்ததும், அவள் கிளம்பி வந்த வேகம், தோற்றத்தில்.. ஆடையில் அவளின் ஸ்பெஷல் கேர்… ஹாலுக்கு வரும் வரை இருந்த பதட்டம், பரிதியை கண்டதும் திகைத்து பின் உரிமையோடு வந்த மயக்கம், தன்னிடம் அறிமுகப்படுத்த துவங்கும்போது, அவள் கண்களில் தெரிந்த உறுதி… ஓகே.. தியா முடிவெடுத்து விட்டாள் என்பதை பறைசாற்றியது. 

சரண்யு சாயா, வின் முகத்திலும் அத்தனையும் புரிந்த பாவம்.. இன்னும் பாஸ்கர் & அவன் கொடுக்கும் செய்திகள்… அவற்றையும்  வைத்து, முடிவெடுக்க எண்ணி இருந்தான்…SNP ..

“ஏண்டா நிக்கற?.. உக்காரு”… சொன்னது SNP பெண்ணைப் பார்த்து…

 “அப்பா.. இவர்.. “

 “சொன்னார்மா, உங்கூட ஸ்கூல்-ல படிச்சவராமே?, அதுதான் என்ன பண்றார், ஏது -ன்னு கேட்டுட்டு இருக்கேன்..” இவ்வாறு SNP சொன்னதும்தான், தியா-க்கு , தான் அவனைப்பற்றிய விபரங்கள் எதையும் தெரிந்து வைத்து கொள்ளவில்லை என்பது, உரைத்தது…

இப்போதும் திரும்பி ஒரு அனல் பார்வையை பரிதியின் மீது வீசினாள். “பக்கி , என்னோட பேசிட்டு தான வீட்டுக்கு வரணும்?.. இப்போ அப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்றது?”, நினைத்த தியா, அறியாதது, இவளால் தான் பரிதி நேரே அவள் வீட்டிற்கே வந்தான் என்பது…

பரிதி அவள் பார்வையை நிராகரித்தான், தியாவின் கோபத்தைவிட, SNP -யின் நன்மதிப்பு இப்போது அவனுக்கு முக்கியம். 

இளம்பரிதி, தியாவின் பள்ளித் தோழன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட போதே, விஷயத்தை ஒருவாறு ஊகித்திருந்தான் சூர்ய நாராயண பிரகாஷ். மகள் மனதினை சலனப்படுத்திய முகத்துக்கு சொந்தக்காரன் இவன்தான் என்பதை….

அலுவலகத்திற்கு செல்ல தயாரான பாஸ்கர் ஆதித்யா-விடம், “செக் டீடைல்ஸ், ஒன் ஹார் “, என்று குறுஞ்செய்தி அனுப்ப…. தன்னறையில் இருந்து வெளிவந்த பாஸ்கர், “யாரைப்பத்தின விஷயம் பா ஒரு மணி நேரத்துல வேணும்?”, என்று கேட்க நினைத்ததை விழுங்கினான். ஹாலில் மூன்றாம் மனிதன் ஒருவன் இருக்கிறானே?..” யார்ரா இவன்?, எங்கப்பா முன்னாடியே தோரணையா உக்காந்திட்டு இருக்கான் ?”, புத்தி யோசித்தாலும்… பரிதி அமர்ந்திருந்த கம்பீரத்தில், மெச்சுதலான பார்வை-யை அவனுக்கு தந்து .. தந்தையை பார்த்தான்..

ஒரு சிறு தலையசைப்பு.., புரிந்தது பாஸ்கருக்கு.. சிறிது நேரம் SNP , இளம்பரிதி பேசிக்கொண்டு இருந்ததை நின்று கேட்டதில், பரிதியின் பெயர், வேலை, ஊர் தெரிந்து கொண்டவன், பத்து நிமிடத்தில் அலுவலகத்திற்கு செல்வது போல் வெளியேறினான். வீட்டின் CCTV பதிவில் இருந்து, இளம்பரிதியின் புகைப்படத்தினை எடுத்து, இவனுக்கு தெரிந்த தகவல்களையும் , இவர்கள் தொடர்பு கொள்ளும் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுக்க…அடுத்த அரை மணியில், இளம்பரிதியின் உடலில் உள்ள மச்சங்கள் தவிர்த்து, அனைத்தும் தெரிவிக்கப் பட்டது, பாஸ்கருக்கு ..

அரைமணியில் எல்லா இடத்திலும் விசாரணை செய்தனர் , பணம் இருந்தால் இவையனைத்தும் இலகுவானவையே போலும் ?…அவன் சொந்த ஊரில், வேலை செய்யும் காவல் துறை சரகத்தில், ஒரு சில திருடர்கள் மற்றும் நிழலுக தாதாக்கள் வரை அனைவரும் கூறியது.. இளம்பரிதி = ISO 2001 முத்திரை பதித்த நேர்மை & திறமை …. என்பதைத்தான்…

ஆனால், இப்பொழுது இளம்பரிதி சஸ்பெண்ஷனில் இருந்தான்.. இரண்டு வார சஸ்பென்ஷனின் காரணம் கூட… ECR ரோட்டில், பைக் ரேஸில் சென்ற ஒரு அரசியல் புள்ளியின் மகனை, நட்ட நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்ததற்கான பரிசுதான்…

தகவல்களை அப்பா SNP-க்கு பார்வேர்ட் செய்து, பாஸ்கர் பரிதியின் ரிபோர்ட்டினை, மீண்டும் ஒருமுறை படித்து உள்வாங்கி அவனின் போட்டோ-வை பார்த்திருந்தான்.. [ஏண்டா..? நீ லவ் பண்ண போறீயா? ]. அக்கா-க்கு செம மேட்ச்.. மனதோடு பாராட்டு மைத்துனனுக்கு…

இவர்கள் இந்த வேலையை செய்யும்போது… வரவேற்பறையில் அமர்ந்திருந்த, SNP , சரண்யுசாயா, மற்றும் திக் திக் மனதுடன் தியா.. அனைவரும் பொதுவான உரையாடல்களில், முக்கியமாய் பரிதியை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்..

பரிதியின் அலைபேசி அதிர, “ஒரு நிமிஷம்” இவர்களை பார்த்து கூறி , பேசியில் …

“சொல்லு சுதா…”,

“டேய் .. என்னடா உன்மேல என்குயரி வச்சிட்டாங்களா ?, ஏதாவது தெரியுமா?”, மறுமுனையில் சுதாகர் பதற…

“ஏண்டா?, என்ன விஷயம் ? “

“இல்லடா.. இங்க ரெண்டு மூணு பேரு வளைச்சு வளைச்சு உன்ன பத்தி கேக்கறாங்க, என்கிட்டே மட்டும் இல்ல.. அல்மோஸ்ட் தனித்தனியா எல்லார்கிட்டயும்.. உங்க ஊர்லேர்ந்து மாமா இங்க ஸ்டேஷனுக்கு கூப்பிட்டார்.. அங்கேயும் உன்னை பத்தி விசாரணை போகுதாம்.. என்ன நடக்குதுன்னே தெரில-ன்னு புலம்பறார்…என்னடா சொல்லட்டும்?”

“எது உண்மையோ அதை சொல்ல சொல்லு போதும், நோ ப்ராப்ளம்.. அப்பறம் டோன்ட் வொர்ரி”

“சரி வைக்கிறேன், சும்மா இல்லாம கண்டவன் கையை உடைக்க வேண் …. “, சுதாகரின் புலம்பலை தொடர்ந்து கேட்கவியலாமல், பரிதி பேசியை அனைத்திருந்தான்..

மூளை வேகமாய் சிந்தித்து, அந்த அரசியல்வாதி இதை செய்ய இத்தனை நாள் காத்திருக்க மாட்டான், என்று கணக்கு போட்டு , இது SNP & பாஸ்கரின் வேலை என்பதை தெளிவாக்கியது.. முகம் புன்முறுவலை பூசி .. புரிந்ததான பாவனையுடன், கை மீசையை நீவி, SNP -யை பார்க்க.. அந்த ஒரு நொடியில், இளம்பரிதி , SNP மனதில் மருமகனாய் அமர்ந்தான்..

SNP நிமிர்ந்து, சரண்-னை பார்க்க, இவன் மனதை அவள் பார்வையில் சம்மதமாய் கண்டான்.. இப்போது , அன்னை தந்தை இருவரும், அதிதி சந்த்யா- வை அர்த்தத்துடன் பார்த்தனர்.

அவளோ, கைகளை பிசைந்து, ரேகையை அழித்து கொண்டிருந்தாள்.. அத்தனை டென்சன் மனதுள்.. “அப்பா வேணாம்-னு சொல்லிடுவாரோ?, அந்தஸ்து காசு பணம் பத்தி பேசிடுவாங்களோ?”, மகள் சிந்தனை புரிய…”தியா.. மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காமிக்கலையா?”, ஒற்றை வாக்கியத்தில்.. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான் SNP .

அதிதி சந்தியாவின் முகம் சூர்ய காந்தியாய் மலர்ந்தது.. இந்த ஒப்புதலுக்காக காத்திருந்த, பரிதியோ.. , பளிச் புன்னகையுடன் எழுந்து , SNP க்கு கை கொடுத்து, “தேங்க்ஸ் மாமா”, என்று முடித்தான் முத்தாய்ப்பாய்..

தியாவின் அருகில் வந்து, கை கொடுக்க.., முகமெல்லாம் அந்தி வானமாய் சிவந்தது.. சரண்யு சாயாவோ, “ஆஹா.. SNP முன்னால அவர் பொண்ணுக்கு கை கொடுக்கற? .. தைரியம்தான் …”, சந்தோஷமாய் வியக்க .. பார்த்த SNP புன்னகையுடன் தியாவை நோக்கி தலையசைக்க, தியா & பரிதியின் காதல் திருமணத்திற்கு க்ரீன் சிக்னல்..

மனம் துள்ள …. ஒன்றுமே தோன்றாமல், நேராய் அவள் அறைக்கு அவனை கூட்டி சென்றவள். திரும்பி பரிதியை பார்க்……..,” தடங்கலுக்கு வருந்துகிறோம் மன்னிக்கவும்” போர்டு போட்டு .. அவள் சிந்தனையை தடா..வில் தடை செய்து … இறுக்கி கட்டிஇருந்தான் பரிதி…

+++++++++++++++++++++++

கல்பலதிகா, சற்றே கோபமாய் இருந்தாள் , யாருடா இந்த வாய்தா-ன்னு ஒன்னை கண்டுபிடிச்சது என்று ஒரு மாதிரி வெறுப்பில் இருந்தாள் , காரணம், இவர்கள் SIPCOT -ன் மீது தொடர்ந்த வழக்கில் … நீதிமன்றம், மூன்று மாத…  “காலஅவகாச நீட்டிப்பு”  செய்து அறிவித்து இருந்தது…

விதி … “மக்களே.. இப்போவே கோர்ட்டுக்கு போய் இருந்தா…. ஊசி பட்டாசா ஆகி இருக்கும்-.. அதை நியூக்ளியர் வெப்பன் ஆக்கத்தான் இந்த மூணு மாசம் தள்ளி போட்டிருக்கேன்…. WAIT & SEE “, வில்லனாய் சிரித்தது….

மொழிவோம் …

error: Content is protected !!