anjali’s Endrum Enthunai Neeyaethan 19

      என்றும் என்துணை நீயேதான் 19

 

கல்லூரியில் தொடர்ந்து தேர்வுகளை கவனித்துகொண்டதால் ஒரு வாரத்திற்க்கு விடுப்பு எடுத்திருந்தாள் விருஷாலி. அந்த ஒரு வாரத்திலும் விருந்துக்கும், உறவினர் வீட்டுக்கும் சென்று வந்தார்கள் இருவரும். இவ்வளவு ஏன் வேதாசலம் வீட்டுக்கு கூட விருஷாலி கர்ணனை அழைத்து சென்று அங்கு நாள் முழுவது இருந்துவிட்டு தன் வந்தார்கள். வேதாசலமும், சந்தோஷமும் விருஷாலி, கர்ணனை நன்றாக கவனித்தார்கள். புறப்படும் போது வேதாசலம்  புது தம்பதிகளுக்கு ஒரு காரையும், விருஷாலியின் பேரில் வீட்டையும் பரிசாக அளித்தார். ஆனால் விருஷாலி, “என்னைக்கு உங்க பொண்ணுன்ற பாசம் மட்டும் எனக்கு போது அங்கில்.” அவரின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் அவரின் பாசத்தில்.

 

தந்தை, தாயை பார்த்துவிட்டு அப்படியே இரு நாட்கள் இருந்துவிட்டு செல்லலாம் என நினைத்து வந்தாள் விருஷாலி. முதல் முதலா வந்திருந்த மகள் மருமகனை வீட்டிர்க்கு வந்தவர்களை ஜெகனும், ஜோதியும் நன்றாக கவனித்தார்கள். அதுவும் மூத்த மருகமகனை தலைமேல் வைத்து கொண்டாடத குறை மட்டுமே  விருஷாலிக்கே பொறாமை வரும் அளவுக்கு கர்ணனை ஜெகனும் ஜோதியும் தாங்கினார்கள். அவர்கள் மட்டுமா, ஷாலினியும், மாமா மாமா என அவனுக்கு தேவையானதை எடுத்துகொடுக்கவும். அவர்களின் சிறுவயது புகைப்படத்தையும் காட்டி அவனுடனே பொழுதை கழித்தாள் ஷாலினி. இதையெல்லா ஒரு பார்வையாளராக மட்டுமே விருஷாலி பார்த்துகொண்டிருந்தாள்.

 

“என்ன மாமானார் மாமியார்கிட்ட நல்ல செல்லம் கொஞ்சிட்டு வந்தீங்களா. பத்தாதுக்கு என் தங்கையோட சேர்ந்து விளையாடிட்டு இருந்தீங்க.” அவள் கேள்வியிலே  பொறாமை தெரிய அதை கண்டு கொண்ட கர்ணன் மேலும் சீண்டினான்.

 

“என் மாமானார், என் மாமியார் என்னை நல்லா உபசரிக்குறாங்க அதுக்கு நீயேன் இவ்வளவு பொறாமை படுற விசலா. உன்கூட விளயாட ஆசை தான் ஆனா நீ தான் எப்போ பாரு உன் ஃப்ர்ண்ட்ஸோட கான்ப்ரன்ஷ் போன்ல பிசியா இருக்க. இல்லையா அந்த லேப்டாப் எடுத்து வச்சு உட்க்காருந்திர. இதுல என்கூட எல்லாம் பேச நேரம் இருக்குமா உனக்கு. கேட்டா விருப்பம் இல்லாம திருமணம் பண்ணிருக்கோனு நாலைஞ்சு பக்கம் டைலாக் பேசுவ.” விருஷாலியை பொறாமை படுத்துவதற்க்கு தான் அவன் ஷாலினியிடம் சிரித்து சிரித்து பேசியது. ஆனால் இப்படி உடனே விருஷாலியிடம் இருந்து ரிசல்ட் வரும் என அவன் நினைக்கவில்லை.

 

“ம்ம் ஓவரா போகுது உங்க நடவடிக்கை எல்லாம் நாளைக்கு நாம ஊருக்கு போயாகனும் அதை நியாபகம் வச்சுக்கோங்க.” விருஷாலி அவனின் வீட்டை நியாபகம் படுத்த, அங்கு சென்றால் அனைவரும் விருஷாலியை தான் தூக்கி வைத்து பேசுவார்கள். அங்கு விருஷாலியை தான் பாசமாக பார்த்துகொள்வார்கள். அதை பார்த்த கர்ணன் தான் லட்சுமியிடம், “நான் உங்க மகனா, இல்லை அவளா.” என கேட்க.

 

“ஏய்யா, கர்ணா இப்போ தான் பிள்ளைக்கு கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டு பழக்கமாகுது. நீ என்ன இங்கயே தான இருக்க ய்ய உன்னை கவனிக்க தான் மருமகள் வந்துட்டாள. ஆனா விருஷாலியை நம்ம தான கவனிக்கனும்.” லட்சுமியும் கோடியம்மாளும் விருஷலிக்கு பரிந்து பேசியதை பார்த்து, விருஷாலி கர்ணனை நக்கல் பார்வையாக பார்த்து வைத்தாள்.

 

”அதெல்லாம் எனக்கு தெரியும், ஏதோ இங்க வந்து தான் நிம்மதியா இருக்கேன். அது உனக்கு பிடிக்காதா விசாலா அப்படியென்ன உனக்கு பொறாமை.”

 

“ஒரு ஆமையும் இல்லை பேசாம தூங்குங்க.”

 

“உன்கிட்ட ஒன்னு கேட்க்கனும் விசலா..”

 

“என்ன..”

 

“இல்லை ஒயின் நல்லா இருக்குமா? இல்லை விஸ்கி நல்லா இருக்குமா?” விருஷாலி மறந்ததை கர்ணன் நியாபகபடுத்த.

 

“என்னது.. ஒயினா? விஸ்கியா? உளறாம தூங்குங்க.” மனதுக்குள் ஒரு வேளை அவன் கண்டுபிடித்துவிட்டானோ விருஷாலி நினைக்க.

 

“சிலர் ஒயின் ஒரு சிப் தான் அடிப்பாங்களா.” அவன் மீண்டும் தொடங்க.

 

இவன் அடங்கமாட்டான் கண்டுபிடிச்சுட்டான் நம்ம குடிக்குறதை. “ஆமா, சிப் தான் அடிப்பேன் போதுமா?” அவளே ஒத்துகொள்ள.

 

“எப்படி இருந்தது அந்த ஃபீல் இது வரைக்கு நான் அதை தொட்டு என்ன பார்த்தது கூட இல்லை விசலா.” அவன் பாமாக சொல்வதை பார்த்த விருஷாலிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

”ஒரு நாள் நான் உங்களை கூப்பிட்டு போறேன் அப்போ பார்க்குறது என்ன நானே உங்களுக்கு ஊத்தியும் கொடுக்குறேன்.” அவனை பார்த்து சிரித்துகொண்டே நக்கலாக சொன்னாள் விருஷாலி.

 

“நிஜமா..”

 

“சத்தியமா..” அவனின் கைமேல் கை வைத்து சத்தியம் செய்தாள்.

 

”ஆமா, நான் ஒரு சிப் தான் குடிப்பேனு உங்களுக்கு எப்படி தெரியும்.” நியாபகம் வந்தவாள் விருஷாலி கர்ணனிடம் கேட்க.

 

”அன்னைக்கு அன்னைக்கு நீ வாய்விட்டு உளறினதை நான் கேட்டுட்டேன். அன்னைக்கு தான் நாமா..” விருஷாலி உளறியதையும், அதற்கடுத்து அவன் சொல்லவருவதை தடுத்தவள்,

 

“போதும் அதான் சொல்லீட்டிங்களே வாழ்க்கை ஆரம்பிச்சதுனு.” போர்வையை தலைவரை மூடிகொண்டு படுத்தவள் முகம் சிவந்துவிட்டது.

 

”போயிட்டு வரேன் ப்பா.. வரேன் ம்மா..” தாய் தந்தையிடம் மட்டும் விடைபெற்றவள் விழி தங்கையின் புறம் திரும்பாமல் செல்வதை கண்டு ஷாலினி கலங்கி போனாள். ஆனால் கர்ணன் மூவரிடம் விடைபெற்றுகொண்டு ஷாலினியிடம் தனியாக, “உன் அக்கா உன்கிட்ட பேச வைக்க வேண்டியது என் பொறுப்பு.” அவளுக்கு சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டனர்.

 

சோழவந்தன் வந்து  மூன்று நாள் கடந்தது கர்ணன் விருஷாலிக்கு. நகுலனை தவிர மற்றவர்களிடம் விருஷாலி நன்றாக பேசினாள். இப்படியாக சென்ற அவர்களின் நாட்களில் ஒரு நாள் மருத்துவனையில் இருந்து போன் கால் வந்தது. உடனே விருஷாலியின் உதவி வேண்டும் என அந்த மருத்தவர்கள் அழைக்க அவளும் வீட்டில் லட்சுமி, கோடியம்மாளிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்த மருத்தவமனைக்கு சென்றாள் காரில்.

 

அங்கு சின்ன சிறூபெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அதுவும் கூட்டு பாலியல் வன்முறையால் அவள் மனமும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் விருஷாலி எடுத்து கூறினார்கள். அந்த சிறுபெண்ணின் வயது பனிரெண்டு ஆகும் பள்ளி படிக்கும் சிறு பெண்ணை இப்படி வன்முறை செய்ய கயவனுக்கு தைரியம் வந்தது என விருஷாலிக்கு நினைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் அந்த வலியையும், வேதனையும் அந்த சிறுபெண் எப்படி அனுபவித்திருப்பாள் என்று அவளுக்கு தானே தெரியும்.

 

“எவ்வளவோ ட்ரை பண்ணிட்டோம் ஷாலு அந்த பொண்ணு தப்பான முடிவை எடுக்க தான் பார்த்திருக்க. அந்த பொண்ணோட அம்மா பார்க்கலை இந்த நேரம் இந்த பொண்ணு இறந்திருப்பா. அதான் உன்கிட்ட இந்த கேஸ் கொடுக்கலாம்னு உன்னை அழைச்சேன். இனி இந்த பொண்ணு உன் பொறுப்பு அவளை பழைய நிலைக்கு கொண்டுவர உன்னால மட்டும் தான் முடியும்.” அவளின் சீனியர் மருத்துவர் விருஷாலியிடம் தெளிவாக சொல்லிகொண்டிருக்க. விருஷாலியின் மனம் பதபதைத்து போனது.

 

“ஓகே டாக்டர் இனி இந்த பொண்ணூ என் பொறுப்பு.” அவரிடம் சொல்லிவிட்டு அந்த சிறுமியின் அருகே சென்றாள்.

 

விட்டத்தை வெறித்துகொண்டிருந்த சிறுமியின் தோளில் கை வைத்தவளை, அந்த சிறுமி பயந்து போய், “அய்யோ வேண்டாம், எனக்கு வலிக்குது.. அங்க தொடாதீங்க.” அலறி ஒரு மூலையில் சுருண்டு கொண்டாள். சிறுமியின் அலறலே விருஷாலிக்கு அதிர்சியை கொடுத்தது. இவ்வளவு துன்பத்தை கொடுத்தவம் மட்டும் என் கையில் கிடைத்தான் அவனின் ஆண்மையை பறிக்க கூட தயங்க மாட்டேன். விருஷாலி கோவத்தில் கைகள் புடைக்க கண்களை மூடிகொண்டாள்.

 

நிதானமாக அந்த சிறுமியின் அருகே மண்டியிட்டு, “எனக்கும் யார் தொட்டாலும் பிடிக்காது சந்தியா நீயும் நானும் சேம்ல.” தன்னால் முடிந்த அளவு நார்மலா அந்த சிறுமியிடம் பேச முயற்சித்தாள் விருஷாலி.

 

“ஆனா, என்னை தொட்டு, பேட் டச் பண்ணுவாங்க. அப்போ என் வாயை மூடி..” என அந்த சிறுமியை மனம்விட்டு பேச வைத்தாள் விருஷாலி. கிட்டதட்ட இரண்டு மணி நேரம் சிறுமியிடம் பேசியவள் விழி கலங்கியதை கூட அந்த பெண்ணிடம் காட்டாமல் துடைத்துகொண்டு இருந்தாள்.

 

“நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்.. என் அம்மா, அப்பாகிட்ட சொல்லுங்க. என் வீட்டுக்கு கூட போக பிடிக்கலை அங்க தான் என்னை.. என்னை..” கடைசியாய் அந்த சிறுமி சொல்லி திணற, சிறுமிக்கு மயக்க மருந்தை செலுத்தி உறங்க வைத்தாள். சிறுமியின் தாய், தந்தையை உள்ளே அழைத்த விருஷாலி, தாயின் கன்னத்திலே இரண்டடி கொடுத்தாள். அதை பார்த்த அவளின் கணவன் அதிர்ந்து விருஷாலியின் முகம் பார்க்க,

 

“நீயெல்லாம் அம்மாவா, ம்ம்.. குழந்தை எங்க போகுது, எங்க விளையாடுதுனு கவனிக்காம இப்போ சாகப்போற மனநிலைக்கு கொண்டு வந்த விட்டுருக்க. உன்னையெல்லாம் என் கையால கொல்லை கூட தயங்கமாட்டேன்.”

 

“மேடம் என்னாச்சு ஏன் அடிச்சீங்க.. அப்படி என்ன தவறு நடந்தது.” சிறுமியின் தந்தை கேட்க.

 

“உங்க பொண்ணுக்கு செக்ஸ் டாச்சர் கொடுத்திருக்காங்க. அவள் படிக்குற ஸ்கூல்லையும், உங்க வீட்டு பக்கம் இருக்குற பசங்களும்.”

 

“மேடம்ம்.” அவன் அதிர்ந்து போனான்.

 

“இரண்டு மாசமா உங்கள் பொண்ண இப்படி டாச்சர் பண்ணிருக்காங்கனு கூடவா தெரியாது. அப்படி என்ன குழந்தையை கவனிக்காம வேற எந்த வேலையை கவனிச்சுட்டு இருந்தீங்க இரண்டு பேரும். குழந்தை வெளிய போன குட் டச் பேட் டச் சொல்லிகொடுக்கனும் பேசிக் மேனேர்ஸ் கூடவா உங்களுக்கு தெரியாது. ஸ்கூல் விட்டு வந்தவுடனே குழந்த உடம்புல எதாவது காயம், தழும்பு, இல்லை யாரவது குட் டச் பேட் டச் பண்ணாங்களானு மனசுவிட்டு சொல்ல வைச்சீங்களா? என்ன பேரண்ட்ஸ் நீங்க. போய் பாருங்க ஒவ்வொரு பேரண்ட்ஸையும், பொண் குழந்தங்களை எப்படி பாதுக்காக்குறாங்கனு. ரோட்டுல வாழ்றவன் கூட தன் குழந்தைக்கு பாதுக்காப்பா இரவு முழுது முழிச்சி பார்த்துகிறான் அவனுக்கு இருக்குற அக்கறை கூட உங்களுக்கு இல்லையா.”

 

“மன்னிச்சிருங்க மேடம்.. குழந்தை எதையும் எங்ககிட்ட சொல்லாம விட்டுட்டா. சொன்னா நாங்க திட்டுவோம் அடிப்போம்னு பயந்துட்டான். இப்போ என் பொண்ணோட நிலமை என்னனு சொல்லுங்க மேடம்.” தாயின் கதறலில் கொஞ்சம் நிதானத்திர்க்கு வந்தாள் விருஷாலி.

 

“இனி என்ன செய்ய வாரத்துக்கு மூனு நாள் கவுன்சிலிங்க் வாங்க இங்க. குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து பழைய நிலைக்கு கொண்டு வரலாம். ஆனா முதல உங்க வீட்டையும், உங்க பொண்ணு படிக்குற ஸ்கூலையும் மாத்துங்க. மனசுவிட்டு பேசுங்க குழந்தைங்ககிட்ட, சொந்தகாரான இருந்தாலும் குழந்தையை தொட்டு பேச அனுமதிக்காதீங்க. வெளியாட்களோட பழகவிட்டாதீங்க. முக்கியமா குழந்தை விளையாட போட கூட நீங்க யாரவது துணைக்கு போங்க பாதுகாப்பா இருங்க குழந்தைக்கு. இன்னும் கொஞ்ச நாளுக்கு குழந்தையை தனியா விடாதீங்க கூடவே இருங்க.” அவர்களுக்கு புரியும் படி சொல்லிவிட்டு அந்த பெண்ணை விருஷாலி தோளில் போட்டு தூக்கி வந்து தாயிடம் கொடுத்தாள்.

 

”என்னாச்சு விருஷாலி குழந்தை என்ன சொல்லுச்சு.” அவளிடம் விசாரிக்க,  விருஷாலி நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்தாள். அதை கேட்டவர் நொருங்கி போனார், அவருக்கும் இரு பெண் குழந்தைகள் இருக்கிறதே அதனால் தான் தாய் பாசம் இப்படி கவலையடைய வைக்குறது.

 

“உன்னால தான் அந்த குழந்தை பழைய நிலைக்கு வரனும் ஷாலு.” அவர் கேட்டுக்கொள்ள விருஷாலி புன்னகைத்தாள்.

 

“அப்புறம் திருமண வாழ்க்கை எப்படி போகுது ஷலு நான் வேற உனக்கான நேரத்தை தொந்திரவு செய்துட்டேன் சாரி ஷாலு.” அவளின் மண வாழ்வை பற்றி விசாரித்து இடைஞ்சல் செய்ததாக மன்னிப்பு கேட்க.

 

“சாரி எல்லாம் எதுக்கு மேம்.. நான் போகலைனா தான் கோவம் படுவாங்க. திருமண வாழ்க்கை நல்லா போகுது மேம். ஆனா, என்னால் அதை முழுமையா வாழ் முடியுமானு தான் தெரியலை.”

 

“ஷாலு இன்னும் பழைய நினைவில் இருந்து வெளிய வரலையா. அதுல இருந்து உன்னை நீயே மீட்க தானே இந்த மருத்தவத்தை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம். என்கிட்ட நீ சொன்னது எல்லாம் மறந்திட்டயா, அந்த குழந்தை மாதிரி இனி எந்த குழந்தையும் பாதிக்கபடக்கூடாதுனு தான மனநல மருத்துவர் படிப்பை தேர்ந்தெடுத்த ஆனால் இப்போ அதுவே உன் வாழ்க்கைக்கு பாதிப்பாகுதே.” விருஷாலியின் மேல் அக்கறை கொண்டவராக அவளின் கடந்த வந்த பாதையை நினைவுப்படுத்தினார்.

 

”இப்போ அந்த குழந்தைக்கு உனக்கு என்ன வித்தியாசம்  நீயும் அந்த குழந்தை மாதிரி தானே பிகேவ் பண்ணுற. மாத்திக்கோ ஷாலு உனக்கு புது வாழ்க்கை இப்போ இருக்கு அதுல உன் கவனத்தை செலுத்து. வேணா, அந்த குழந்தைக்கு நானே ட்ரீட்மெண்ட் பார்க்குறேன் நீ வரவேண்டாம்.” அவளின் அமைதியை கலைக்க அந்த குழந்தையின் பேச்சை எடுத்தார்.

 

“நோ மேம் அந்த குழந்தைக்கு நான் ட்ரீட்மெண்ட் பண்ணுறேன். நான் என் வாழ்க்கையை வாழ பழகுறேன் நீங்க சொல்லுறதை நான் கேட்க்குறேன் மேம்.” அவள் பதறிகொண்டு பேச, அவருக்கு தான் வேதனையாக இருந்தது.

மனது சரியில்லாமல் அவளின் கார் நேராக ஆசிரமம் சென்றது. ஆனால் அவளுக்கு முன்னே அங்கு வந்திருந்தான் கர்ணன். 

 

“என்ன புது பொண்ணு இந்த பக்கம் வந்திருக்கீங்க எங்க உங்க வீட்டுக்கார்.” மேகலா விருஷாலியை வாழ்த்தி, பேசிகொண்டிருந்தாள்.

 

“அவர் பிசியா இருக்காரு… எங்க ஜோ.”

 

“ஆஃபீஸ் ரூம்ல முக்கியமான ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருக்காரு வா.” விருஷாலியை அழைத்துகொண்டு  சென்றார்.

 

”உங்க மனைவியையும் கூப்பிட்டு வந்திருக்கலாமே, கர்ணன். நீங்க மட்டும் தான் வந்துட்டு இருக்கீங்க ஏன் உங்க

மனைவிக்கு இந்த இடம் எல்லாம் பிடிக்காதா.” ஜோ கர்ணனிடம் பேசிகொண்டிருந்த போது உள்ளே மேகலாவும், விருஷாலியும் வந்தார்கள்.

 

“ஹே புது பொண்ணு வா.. வா.. நான் சொல்லிருந்தேன்ல இங்க இருக்குற குழந்தைகளுக்கு கார்டியன் இவ தான் என் ஃப்ர்ண்ட் விருஷாலி.” கர்ணனிடம் சொல்லி அவனை திரும்பி பார்க்க சொன்னான் ஜோ.

 

ஜோவின் முன்னால் ஒருவன் அமர்ந்திருப்பான் என்பதையும், அவன் தன் கணவன் என்றும் தெரியாமல் ஜோவின் பேச்சில் கவனமாக இருந்தவள், திரும்பி தன்னை பார்த்தவுடன் தான் விருஷாலிக்கு தெரியவந்தது ஜோவின் முன்னால் அமர்ந்திருப்பவன் கர்ணன் என்று.

 

இருவருக்குமே அதிர்ச்சி தான் ஆனால் கர்ணன் விருஷாலியை பற்றி ஜோவிடம் கேட்டுருந்தான். அதனால் அவன் முகம் மகிழ்ச்சியில் தான் இருந்தது.

 

“என் மனைவிக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும் என் மனைவியை பார்க்கனும் சொன்னீங்கள அவங்க தான் இவங்க. மிசஸ். விருஷாலி கர்ணண்.” சொல்ல ஜோசப், மேகலா இனிமையாய் அதிர்ந்தார்கள்.

 

“ஏய் ஷாலு சொல்லவேயில்லை சார் தான் உன் வீட்டுகார்னு.” இருவரையும் அமர வைத்து பேச ஆரம்பித்தனர்.

 

“ம்ம் ஆமா.. இவர் தான் என் கணவர்.”

 

“எப்படியோ இரண்டு நல்ல சேவை உள்ளம் எதிர்கால வாழ்க்கையிலும் சேர்ந்தீங்களே அதுவே ரொம்ப சந்தோஷம்.” ஜோவும், மேகலாவும், அவர்களிடம் பேசிகொண்டிருந்தனர்.

 

அவர்களிடம் இருந்து விடைபெற்று வெளிய வந்த விருஷாலியை பார்த்த கர்ணன், “ ரொம்ப நல்ல மனசு உனக்கு, ஆனா ஏன் இதையெல்லாம் மற்றவங்களுக்கு தெரியாம செய்யிற.”  அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் முன்னே நடந்து சென்றாள்.

 

இன்னும் அவள் மனதில் கேள்விகள் நிறைய இருக்கின்றனர். அதற்கான விடையை அவள் மட்டுமே அறிவாள். அவை கர்ணனுக்கு தெரிய வந்தால் அவன் அவளை முழுதாக ஏற்றுகொள்வானா?

 

                                          தொடரும்………………………….