என்றும் என்துணை நீயேதான் 20
அன்று வீரபத்திரன் லட்சுமி அவர்களின் குலசாமி கோவிலில் பொங்கல் வைத்து பூஜை போட கோவிலுக்கு வந்திருந்தனர். கோடியம்மாள் சோனைமுத்துவின் வழி வழியாக கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். இது விருஷாலிக்கு புதிது.. அவர்களின் கோவிலை பார்த்தே வியந்து நின்றாள். விருஷாலி கோவில் போனதே இல்லை, ஜோதி அழைத்தாலும் விருஷாலிக்கு விருப்பம் இருக்காது. ஷாலினி மட்டுமே ஜோதியுடன் கோவில் சென்று வருவாள்.
‘என்ன விசலா கோவிலை பார்த்தே மலைச்சு போய் நிக்குற. அப்போ இன்னும் பார்க்க வேண்டியது எல்லாம் இருக்கெ, நேத்திகடன் வேற நீ செலுத்தனு இதுக்கே இப்படி அதிர்சியான எப்படி விசலா.’ கர்ணன் விருஷாலின் வியப்பை பார்த்து மேலும் அவளை பயப்பட வைத்தான்.
“என்ன நேத்தி கடனா அப்படின என்ன?” திகைப்பு மாறாமல் கர்ணனை பார்க்க.
“எங்க குலசாமி கோவில்ல புதுச திருமணம் ஆனவங்க மொட்டை எடுத்து, தீ சட்டி எடுத்து இந்த கோவில சுற்றி வரனும். அப்போ தான் புதுசா திருமணம் ஆனவங்க வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையா இருப்பாங்களாம்” பாவம் போல் அவன் சொல்லிக்கொண்டிருக்க, விருஷாலியோ அதிர்ச்சியாக கேட்டுகொண்டிருந்தாள்.
“மொட்டை எடுக்கனுமா? தீ சட்டி எடுத்து கோவிலை சுற்றி வரனுமா?” அதிர்ச்சி விலகாமல் மீண்டும் அவள் கேட்க.
“அட ஆமா, விசலா.. வா போகலாம் எல்லாம் ரெடியா இருக்கு.” பலியாடு போல் விருஷாலியை அழைத்துகொண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்க்கு இருவரும் சென்றனர்.
“மருமகளே இங்க வாம்மா.. வந்து சாமிய கும்பிட்டு முதல் அரசிய உலையில போடு உன் கையால.” கோடியம்மாளும், லட்சுமியும் விருஷாலியை அழைத்து போட சொல்ல, அவளும் பயந்துகொண்டே அவர்கள் சொல்வதை செய்தாள்.
”இன்னும் கொஞ்ச நேரத்துல மொட்டை எடுக்க கூப்பிடுவாங்க போகனும்.” அவளை நிமிடத்துக்கு ஒரு முறை கர்ணனை பயமுறுத்திகொண்டிருந்தான்.
”அய்யோ என் முடியெல்லாம் போயிடுமா..? பார்த்து பார்த்து வளர்த்தேனா என் முடியை இப்படி ஒரு நேத்திகடன் இருக்குறது தெரியாதே..?” தன் நீண்ட கூந்தலை வருடிகொண்டே மனதுக்குள்ளே பேசிகொண்டிருந்தை பார்த்து மீண்டும் வந்தான் கர்ணன்.
“ம்ம் நல்லா வருடிகொடுத்துக்கோ இன்னும் கொஞ்சம் நேரம் தான். மொட்டை எடுத்த கையோட தீ சட்டை எடுக்கனும்.” அவளின் பயத்தை அதிகரிக்க செய்தான் கர்ணன்.
“தீ சட்டியா? கையெல்லாம் சுடும்மே.. இதுவரை சுடு தண்ணீர் கையில பட்டாகூட அலறுவேன். இதுல தீ சட்டியா கையில தூக்கனுமா?” அவளின் அலறலை கேட்டு நகுலன் அவளின் அருகில் வந்தான்.
“அண்ணி என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க அப்போ அப்போ வானத்தை பார்த்து கையெடுத்து கும்பிடுறீங்க.” அவளின் செய்கையை பார்த்து நகுலன் கேட்க.
“மொட்டை எடுக்கனுமாமே.. தீ சட்டி எடுக்கனுமாமே நகுலன்.” தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் விருஷாலி தெளிவாக சொல்வதை பார்த்து நகுலன் புரியாமல் விருஷாலியை பார்த்தான்.
“என்ன சொல்லுறீங்க மொட்டை, தீ சட்டி எடுக்கனுமா?”
“ஆமா, புதுசா திருமணம் ஆனாவங்க மொட்டை எடுக்கனும், தீ சட்டி எடுத்து நேத்திகடனை செலுத்தனுமாமே.” இப்போது நகுலனுக்கு புரியும்படியாக விளக்கி கூறினாள் விருஷாலி.
“ஹாஹா.. யார் சொன்னாங்க அண்ணி..”
“உங்க அண்ணா தான் நகுலா.. உண்மையா?”
“அய்யோ அய்யோ அண்ணி, அப்படியெல்லாம் எந்த நேத்திகடனும் இந்த கோவில்ல இல்லை. உங்களை அண்ணே பயமுறுத்திருக்கு அப்படியெல்லாம் இருந்தா அம்மா சொல்லிருப்பாங்க அண்ணி. மொட்டை, தீ சட்டி இதெல்லாம் கோவில் திருவிழாவுக்கு தான் எடுப்பாங்க. உங்களுக்கு இந்த கோவில் புதுசுல அதான் அண்ணா உங்களை நல்லா ஏமாத்திருக்கு.” நகுலன் சிரித்துகொண்டே சென்றான்.
“என்னையே ஒரு நிமிஷம் பயப்பட வச்சுட்டானே இவனை..” கோவத்தை கொஞ்சம் குறைத்து அவனை பின்பு பார்த்துகொள்ளலாம் என லட்சுமியின் அருகில் நின்றுகொண்டாள்.
பொங்கல் பூஜை என்பதால் பாண்டியனும், முல்லையும் வந்திருந்தார்கள். அவர்களின் பேசியபடி இருந்த விருஷாலியை கர்ணன் தான் அப்போ அப்போ பார்த்துகொண்டிருந்தான். முல்லையோ, “ஏம்மா வீடெல்லாம் சவுகரியம்மா இருக்கா சாப்பாடு எல்லாம் ஒத்துக்குதா. கர்ணன் உன்னை நல்லா பார்த்துகிறான்ல இல்லை இன்னும் பழசையே நினைச்சுட்டு இருக்கானா.” முல்லை எந்த வித பொறாமையும் இன்றி தன் பிள்ளை போல் விருஷாலியிடம் பேசிகொண்டிருக்க.
“நல்லா பார்த்துக்கிறாங்க ம்மா.. எல்லாமே எனக்கு சவுகரியம்மா இருக்கு.”
“சரி ம்மா ரொம்ப சந்தோஷம்.. காலேசு லீவ்ல இருக்குறதால நீயும், கர்ணனும் வீட்டு வாங்க ம்மா. விருந்துகொடுக்கனும் முன்னேயே அழைச்சிருப்பேன் ஆனா, அப்போ தான் உங்க வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்தீங்களாமே. பெரிய மாமா, அக்கா எல்லாரும் நல்லா இருக்காங்களா.” விருஷாலி குடும்பத்தை தன் குடும்பம் போல் பாவித்து நலம் விசாரித்தார் முல்லை.
“நான் நம்ம வீட்டுக்கு வரலாம்னு தான் ம்மா சொன்னேன். ஆனா, அத்தை தான் அங்க முதல போயிட்டு வரசொன்னாங்க. நம்ம வீட்டுக்கு ஒரு வாரம் போய் இருக்கலாம் அவர் தான் சொன்னாரு ம்மா.”
“சரி தான் மா முதல உன் வீட்டுக்கு தான் போகனும். சரி அப்புறம் என்ன நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வாங்க கர்ணன்கிட்ட அப்பா சொல்லிடுவாரு. ஒரு வாரம் தங்குற மாதிரி வாங்க ம்மா.”
“சரிங்க ம்மா.”
அறையில் நுழைந்தவனை “என்ன தைரியம் இருந்தா என்னையே பயப்பட வச்சிருப்பீங்க.” நீ சொன்னது பொய் என்று எனக்கு தெரிந்துவிட்டது என விருஷாலி அவனை முறைத்து பார்க்க.
”நகுலன் சொன்னானா.. சரி பொய் சொல்லி உன்னை பயப்பட வைக்கலாம்னு நினைச்சேன். அதே மாதிரி தான நடந்தது.”
“அப்படியென்ன என்னை பயப்பட வைக்குறதுல இவ்வளவு சந்தோஷம். உங்களை…” அவனை அடிக்க துரத்த..
“விசலா வேண்டாம்.. நான் ஓடுற ஒட்டத்துக்கு நீயெல்லா பிடிக்க மாட்ட. தேவையில்லாம கீழே விழுந்து வைக்காத.”
“அதை ஓடிட்டே சொல்லுறீங்க எங்க நின்னு சொல்லுங்க பார்ப்போம்.” அவனை மடக்க, அவனும் நின்று திருப்பினான் அவளின் புறம்.
திடிரென அவன் நிற்ப்பான் என தெரியாதவள் அவன் மேல மோதி, அவனும், அவளும், மெத்தையில் உருண்டனர்.
“சொல்லு, இப்போ நான் செய்யட்டும் விசலா.” அவளின் காதில் மெதுவாக பேச. அவளோ அவன் மீது இப்படி விழுந்து வைப்போம் என தெரியாமல் அதிர்ந்து இருந்தாள்.
“தெரியலை..” அவள் விழிக்க
”எதுக்கு என் முடிய அன்னைக்கு கலைச்சுவிட்ட.” அன்று நடந்ததை அவன் நினைவூட்ட.
“நான் தான உங்க மனைவி, ஆன வேறொருத்தி உங்களை அழகுனு சொல்லி வர்ணிக்குறா அதான் முடியை கலைச்சுவிட்டேன்.” அந்த பெண் சொல்லியது போது இருந்த கோவம் இன்று அவனிடம் சொல்லும் போதும் இருந்தது “நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன் என்று” சொல்லாமல் சொல்லியது அவளின் மனது.
“அப்போவும், இப்போவும் நான் உன் கணவனா இல்லையே விசலா. விருப்பம் இல்லாம தான் நமக்கு திருமணம் நடந்தது.” அவள் சொல்லியதை இன்று இவன் நினைவூட்டினான் விருஷாலிக்கு.
“விருப்பம் இல்லாமல் இருந்தாலும், கணவன் வந்துட்டா எல்லாம் பொண்ணுக்குமே ஏற்படுற உணர்வு தான் எனக்கும் வந்துச்சு. திருமணம் என் தங்கைக்காக செய்திருந்தாலும், வாழுற வாழ்க்கை நமக்கானது தான அப்போ நாம வாழ்ந்து தானே ஆகனும்.”
“பிடிச்சா?, பிடிக்காமையா?”
அவனின் மேல் இருந்து எழுந்து நின்றவள், பால்கனியின் பக்கமாய் திரும்பி நின்றுகொண்டாள். விருஷாலி எழுந்ததும் கர்ணன் புரியாமல் பார்த்தான். அவள் அருகில் அவன் சென்று தோளில் கை வைக்க, “எனக்கு எப்படி வாழ்க்கையை ஆரம்பிக்குறதுனு தெரியலை. ஒரு பொண்ணு திருமணத்துகடுத்து ஆரம்பிக்குற தாம்பத்திய வாழ்க்கை கூட என்னால அன்னைக்கு உணர முடியாம போச்சு.” கண்ணீர் வடிய விருஷாலி அன்று கர்ணன் நமக்குள் “அது” நடந்துவிட்டது என சொல்லியதில் இருந்து தான் விருஷாலியின் மனம் வெறுமையாக இருந்தது. தாம்பத்தையை உணரகூட என்னால் முடியலையா. என அவள் மூளையில் ஓடிகொண்டிருந்தது.
“ஹே விசலா நீ இப்படி கவலைப்படுவேனு தெரிந்தா நான் உன்கிட்ட உண்மையே சொல்லிருப்பேன். நமக்குள்ள ”எதுவும்” நடக்கலை விசலா.” கர்ணன் காரில் அவள் மடை திறந்த வெள்ளம் போல் பேசியதையும், அவளின் உடையை கண் மூடி மாற்றியதை மறைக்காமல் கூறினான்.
“மன்னிச்சுரு விசலா நீ இப்படி கவலைப்படுவேனு தெரிந்தா நான் அன்னைக்கே சொல்லிருப்பேன் என்னால தான் உன் மனசு இவ்வளவு கவலை சுமந்துட்டு இருக்கு.” அவன் மனம் உருகி மன்னிப்பு கேட்க.
இருவருமே அந்த நேரத்தில் மௌனமாக மட்டுமே இருந்தனர். இனி என்ன அடுத்து பேசுவது என தெரியாமல் அவனும் இருக்க, எப்படி பேசுவது என அவளும் நின்றாள்.
அவள் தோள் தொட்டு திருப்பியவன் , “வாழ்க்கை என்னைக்குமே நமக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கும். நாம அதுக்கு பிடிச்சமாதிரி இருக்க கூடாது. நாளைக்கு என் மாமா வீட்டுக்கு விருந்துக்கு போகனும் நியாபகம் இருக்கா. வா அதுக்கான பொருள், ட்ரெஸ் எடுத்து வைக்கலாம்.” அவளின் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயன்றான்.
இருவரின் மனமும் விருப்பம் இல்லாமல் திருமண பந்த்தில் நுழைந்தாலும், கர்ணனின் அரவணைப்பில் நான் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் விருஷாலியின் மனம் வாழ்க்கையை “ஆரம்ப்பிப்பதில்” தடையாக இருந்தது அவளது பழைய நினைவு. விருஷாலியின் சீனியர் மருத்துவர் சொன்னது சரி தான் அவள் ட்ரீமெண்ட் பார்க்கும் குழந்தைக்கும், விருஷாலியின் மனமும் ஒன்று போல் தான் இருக்கிறது. அந்த குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க விருஷாலி இருக்கின்றாள், குழந்தை குணமாகிவிடும். ஆனால் குணமாக மாட்டேன் என அடம்பிடிக்கும் விருஷாலியின் மனதை கர்ணன் குணமாக்குவானா?
“ஆமா, நகுலன்கிட்ட தான் நீ பேச மாட்டீய எப்படி அவன்கிட்ட நீ சாதாரணமா பேசுன.” விருஷாலி இருவரின் உடைகளை எடுத்துகொடுக்க அதை பெட்டியில் அடுக்கிய படி நினைவு வந்து கேட்டான் கர்ணன்.
“ஒரே வீட்டுல இருந்துட்டு எப்படி பேசாம இருக்க முடியும். இவ்வுளவுக்கும் அவரா தன் வழிய வந்து பேசுனாங்க அதுவும் பெரியவங்க முன்னாடி. எப்படி பேசாம இருக்கமுடியும் அதான் பேசிட்டேன். அத்தை வேற ஷாலினி குணம் எப்படினு என்கிட்ட விசாரிச்சுட்டு இருந்தாங்க. ஒரு வேளை அவங்களுக்கு நகுலன், ஷாலினி காதல் தெரிந்துவிட்டதோ.” விருஷாலி கர்ணனிடம் சந்தேகமாக கேட்க.
“அவங்களுக்கு மட்டுமில்ல என் ஊருக்கே தெரிந்துவிட்டது நகுலன் காதலிப்பது உன் தங்கை தான் என்று.” அசால்ட்டாக சொன்னான் கர்ணன்.
“இது எப்போ நடந்தது.” விருஷாலி அதிர்ந்து போய் கேட்க.
”அதை அப்புறமா சொல்லுறேன்.. ஒரு வீட்டுக்குள்ள இருக்குற என் தம்பிகிட்ட பேசாம இருந்தா நல்லா இருக்காதுனு உனக்கு தெரியுதுல அப்புறம் ஏன் பிறந்தது முதல் உன்கூடவே இருந்த ஷாலினிகிட்ட பேச உன்னால முடியலை.” கர்ணன் விருஷாலிக்கு செக் வைக்க, விருஷாலி அமைதியாக அவளது இரவு உடைகளை எடுத்து வைத்தாள்.
“ஆமா, எப்படி உனக்கு இப்படியெல்லாம் நைட் ட்ரெஸ் போட தோனுது. என்னால முடியலை இதை நீ போட்டு என் பக்கத்துல தூங்கனா எனக்கு அப்படியே..” கர்ணன் ஏதோ எண்ணத்தில் உளற வர அவன் உளறுவதை பார்த்து என்ன என்பது போல் கேட்க.
“அதெல்லாம் சொன்னா, இன்னைக்கு நைட் நான் தூங்குன மாதிரி தான்.” இரவு நேரத்தில் அவள் தூங்கிவிடுவாள், ஆனால் கர்ணன் தான் நடு இரவில் முழித்தால் விருஷாலியின் இரவு உடை அவளின் அழகு வதனத்தை குறையாக காட்டும் ஆனால் அதிலே அவன் மனம் அவளின் பக்கம் சாயத்துவங்குவதை அவள் அறியவில்லை.
அவளின் அமைதியிலே விருஷாலியின் மனம் இன்னும் கோவத்தில் தான் இருக்கிறது என புரிந்துகொண்டு வேறு பேச்சை மாற்றி பேசினான். அவனின் பேச்சின் மாற்றத்தையும் புரிந்துகொண்ட விருஷாலி இரவு உடையை பற்றி அவன் கூறியதும் தான் அவளுக்கு வெட்க்கமாக வந்தது.
தொடரும்……..