AnthaMaalaiPozhuthil-13

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 13

கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றவக, ஏன் என்னை கல்யாணம் கட்டிக்கணும்?” என்று அபிநயா கோபமாக கேட்க, ‘கவின் பெயரை சொன்னாலே நான் உணர்ச்சி வசபடுறேன். உணர்ச்சி வசபட்டு நான் என்னத்தை பேசி தொலைச்சிட்டேன்.சட்டென்று தன் நிலைக்கு வந்து சிந்தித்தான் ரகுநந்தன்.

     “நான் பெட்டியை கட்டுறேன். என்னை எங்க வீட்டில் கொண்டு போய் விடுங்க. நான் கிளம்புறேன்.” உறுதியாக கூறினாள் அபிநயா.

   அவள் கூறிய வார்த்தையில் திக் பிரமை பிடித்தார் போல் நின்றான் ரகுநந்தன். ஏதோ அவளை மிரட்டுவது போல், அவன் சொன்ன வார்தைகள் தான். ஆனால் அதை இவள் இப்படி பிடித்து கொள்வாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.

        உஃப்…” என்று பெருமூச்சை வெளியிட்டான் ரகுநந்தன்.

    என்ன, என்னை மிரட்டலாமுன்னு பார்த்தீகளா? நானா அட்ஜஸ்ட் பண்ணுவேன். ஆனால், அதை இப்படி நீங்க மிரட்டலா சொன்னா எல்லாம் நான் கேட்க மாட்டேன்.” அழுத்தமாக கூறினாள் அவள்.

     என்னால், இங்க ஒரு நிமிஷம் இருக்க முடியாது. நான் ஏன் உங்க அக்காவை அட்ஜஸ்ட் பண்ணும். என்னால், முடியாது. எதோ நல்லதுக்கு சொல்ல வந்தா, என்ன திட்டறீக. இது வேலைக்கு ஆகாது.” என்று மடமடவென்று பெட்டியை எடுத்தாள் அபிநயா.

       ரகுநந்தன் தலையில் கைவைத்து கொண்டு, மெத்தையில் அமர்ந்துவிட்டான்.

     இது என்னடா வம்பா போச்சு?’என்று அவன் சோகமாக அமர்ந்திருக்க, அவன் முன் தன் கைகளை இடுப்பில் வைத்து கொண்டு நின்றாள் அபிநயா.

        தன் இடது கையை இடுப்பில் வைத்து கொண்டு, தன் வலது கையை ஆட்டி, “கிளம்புங்க… என்னை எங்க வீட்டில் கொண்டு போய் விடுங்க. உங்களுக்கு இது பிடிக்காத கல்யாணம். நான் வேண்டாத பொண்டாட்டி. நான் என்ன சொன்னாலும், தப்பா தான் தெரியும். நான் கிளம்புறேன்.” அவள் தன் ஆள் காட்டி விரலை ஆட்ட, அவன் கண்கள் அந்த ஆள் காட்டி விரலோடு அசைந்தது.

    அவள் ஆள் காட்டி விரலை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வேகமாக ஓட, ‘வாத்தியரம்மா, நம்மளை கொன்னுடுவாங்க.என்ற எண்ணத்ததோடு அவளை பார்த்தான்.

    கோபமாக, சண்டையிடும் ஜோரில், அவள் அவன் அருகே வந்திருந்தாள்.

        அந்த ஏ.சி அறையில் அவள் நறுமணம் அவனை கவர்ந்தது. அவள் கழுத்தில், அவள் அசைவுக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்த தாலி, அவனை ஈர்த்தது.  அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையை சொல்லாமல் சொல்லியது.

       “இது உங்களுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம்.” அவள் ஏதேதோ பேசி கொண்டிருக்க, அவன் எழுந்தான். அவன் எழுந்ததும் அவர்களுக்குள் இருந்த இடைவெளி இன்னும் குறைந்துவிட்டது.

      அவள் இப்பொழுது அவனை அச்சத்தோடு பார்த்து, ஓர் எட்டு பின்னே வைத்தாள். அவன் ஓர் எட்டு முன்னே வைத்தான்.

            அவள் ஒவ்வொரு எட்டாக பின்னே நடக்க, அவனின் காலடிகள் இப்பொழுது, அழுத்தமாக ஒவ்வொரு அடியாக முன்னேறி கொண்டிருந்தது.

       அவள் சுவரோடு சாய்ந்து நிற்க, அவன் வாகாக தன் கைகளை இரு பக்கமும் ஊன்றி கொண்டான்.

        இம்மி அசைந்தாலும், அவன் முகத்தோடு அவள் முகம் உரசிக்கொள்ளும் அளவுக்கு நின்று கொண்டான்.

       “இப்ப பேசு.” குறுநகையோடு கூறினான் ரகுநந்தன்.

       அவள் மருண்டு விழித்தாள். தன் இருவிழிகளையும் அங்குமிங்கும் சுழலவிட்டாள்.

             அவன் அருகாமையை, அவன் மூச்சு காற்று கூறியது.

   “வாத்தியாரம்மா பேசுங்கன்னு சொன்னேன்.” அவன் அழுத்தம் திருத்தமாக கூறினான்.

       இவுக எனக்கு இவ்வளவு பக்கத்துல இருந்தா எனக்கு பேச்சு வரலையே. அவுகளுக்கு அப்படி எதுவும் இல்லையோ?’ என்ற எண்ணத்தோடு விழுங்கினாள்.

       வாத்தியாரம்மா, பேசுங்கன்னு சொன்னேன். எங்க போகணும்? உங்க வீட்டுக்கா?” கன அக்கறையாக கேட்டான்.

      வீட்டுக்கா? இப்ப இருக்கிற நிலைமையில் இவுக கை இடையிலிருந்து தப்பித்தால் போதும்.என்று தோன்றியது அவளுக்கு.

         எதோ பேச்சுக்கு சொன்னா? என்னையே மிரட்டுற?’ என்று சாவல் விடும் பார்வை பார்த்தான் அவன்.

     இந்த நொடிகளின் இடைவெளியில் தன்னை நிலை நிறுத்தி கொண்டாள் அவள்.

   “உங்களுக்கு இது பிடிக்காத கல்யாணம்.” அவள் கூற, “ம்… அப்புறம்?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

   பதில் கூறினான் ஒழிய, கிஞ்சித்தும் அசையவில்லை.

              இரு கைகளை ஊன்றியபடியே  நின்று கொண்டிருக்க, “நட்பு தான் சொல்லிருக்கீங்க. இவ்வளவு நெருக்கமா  நிற்க கூடாது.” அவள் அதிகாரமாக கூறினாள்.

      நான் உன்னை தொட கூட இல்லை. என் நட்பு எல்லை மீறலை.” அவள் அதிகாரத்துக்கு சிறிதும் இளகாமல் கூறினான் அவன்.

      முதலில் அவனும் வீம்பாக தான் நின்றான். இப்பொழுது ஏனோ, ரகுநந்தனுக்கு விலக மனமில்லை.

                     உங்களுக்கு என்னை பிடிக்காது.” அவள் அசட்டையாக கூறினாள்.

    அப்படி நான் சொல்லலை.” என்று அவன் மறுப்பாக தலை அசைக்க, ‘பிடிக்காதவன் நிக்குற நெருக்கமா?’ என்ற கேள்வியோடு அவன் நின்று கொண்டிருந்த நெருக்கம் அபிநயாவுக்கு சற்று உதறலை கொடுத்தது.

                          நேத்து அப்படி தான் சொன்னீக. இன்னைக்கு காலையிலையும் அப்படி தான் சொன்னீக.” அவள் கூற, “அது நேத்து, இப்ப பிடிச்சிருக்குனு சொல்றேன். நிரூபிக்கட்டுமா?” அவன் ஒற்றை புருவம் உயர்த்தினான்.

       என்னது நிரூபிக்கட்டுமாவா?’ அவள் கண்கள் பெரிதாக விரிந்தது. இவுக நேத்து பேசின பேச்சு என்ன? இப்ப செய்றது என்ன?’ அவள் அவனை அப்பாவியாக பார்த்தாள்.

   “என்னை பிடிச்சிருக்குனா சொல்லலாம். இப்படி எல்லாம் பார்க்க கூடாது.” என்று அவன் சட்டம் பேசினான்.

      அது என்ன இவுக பார்க்க கூடாதுன்னு சட்டம் போடுறது?’ அவள் சிலுப்பிக்கொண்டு, “அது என்ன பார்க்க கூடாதுன்னு நீங்க சொல்றது?” என்று சட்டென்று கேட்டாள்.

    ஓ! அப்ப வாத்தியரம்மா பிடிச்சி தான் பாக்குறீங்களா?” என்று அவன் ரசனையோடு கேட்டான்.

   அவள் கேள்வியில் அவன் கடுப்பாகி, “முதல்ல தள்ளி நில்லுங்க.” என்று அவன் தோள் தொட்டு தள்ளி நிறுத்தினாள்.

       “நான் உன்னை தொடலை.” அவன் அவள் தொட்டுவிட்டதை சுட்டிக்காட்டி நல்லவன் போல் பேச, “நீங்க என்னை எங்க வீட்டுக்கு போக சொன்னீங்க. நான் கிளம்புறேன்.” அவள் கதவருகே செல்ல எத்தனித்தாள்.

          வாத்தியரம்மா, நீங்களா வந்து படுங்க. இல்லைனா, நான் தூக்கிட்டு வந்து கட்டிலில் போட்டு என் கைவளைவுக்குள் வச்சிப்பேன்.” அவன் எகத்தாளமாக கூற, ‘இவன் செய்தாலும் செய்வான்.அலறி அடித்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்தாள் அபிநயா.

    வாத்தியாரம்மாவுக்கு என்னை பார்த்தா ரொம்ப பயமோ?” என்று கூறி அவன் “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான்.

           அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.” அவள் வெடுக்கென்று கூறினாள்.

       ஹா… ஹா….” மீண்டும் அவன் பெருங்குரலில் சிரித்தான். எதுவும் பேசாமல், மெத்தையில் படுத்து கொண்டான்.

    கேலியை விடுத்து, கோபத்தை விடுத்து, “நீங்க என்னை எங்க வீட்டுக்கு போக சொல்லிட்டீங்க.” அவள் மனத்தாங்கலோடு கூறினாள். அவள் குரல் அவனை என்னன்னவோ செய்தது.

      அவள் முகத்தை  கைகளில் ஏந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவா எழுந்தது.

நினைத்ததை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் படக்கென்று எழுந்து அமர, “நான் எங்க வீட்டுக்கு போகணும்.” அவள் முறுக்கி கொள்ள, “இருட்டிருச்சு… நாளைக்கு காலையில் கொண்டு போய் விடுறேன்.” கூறிக்கொண்டு அவனும் படுத்துவிட்டான்.

    இவுக ஒரு மன்னிப்பு கூட கேட்க மாட்டாகளா?’ அவளும் கடுப்பாக வேறு பக்கம் திரும்பி படுத்துக்க கொண்டாள்.

     அபிநயாவுக்கு கோபம் தலைக்கு ஏற, ரகுநந்தனுக்கோ அவளோடான  பேச்சு, நெருக்கம் ஓர் மயக்கத்தையே கொடுத்தது.

           “கவின் இன்னைக்கு இங்க வரலியா?” கடுப்பாக சுவரை பார்த்தபடி கேட்டாள்.

   “எங்க வீட்டு சுவர் பேசாது.” என்று ரகுநந்தன் கூற, “ம்… எங்க வீட்டில் சுவர், கதவு, ஜன்னல் எல்லாம் பேசும். உங்க வீட்டில் மனுசங்க கூட பேசமாட்டாக. பேசினாலும் இடக்கா பேசுவாக.” நொடித்து கொண்டாள் அபிநயா.

   “வேணுமின்னா சொல்லு. கவினை கூட்டிட்டு வரேன்.” அவன் சாவாதீனமாக திரும்பி படுத்துக் கொண்டு கூறினான்.

   அவன் அசைவில், அவளும் திரும்பி படுக்க, “கவினை கூப்பிட்டுட்டு வரட்டுமா?” என்று அவன் புருவம் உயர்த்த, மடக்கென்று திரும்பி படுத்து கொண்டாள் அபிநயா.

     அபிநயா மெளனமாக படுத்திருக்க, தூக்கம் அவள் கண்களை தழுவியது.

    ரகுநந்தன் தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். ரகு என்ன பண்ணிட்டு இருக்க?’ அவன் தனக்கு தானே கேட்டு கொண்டான்.

        ‘கவினை பத்தி ஏதோ சொல்ல வந்தாளே. நான் பொறுமையா கேட்டிருக்கணுமோ? நான் ஏன் வெடுக்கென்று பேசினேன்?’ தன்னை தானே நொந்து கொண்டான் ரகுநந்தன்.

        இன்னைக்கு சாமாளிச்சிச்சாச்சு. ஆனால், வாத்தியாரம்மா கோபமா தான் இருக்காங்க. இந்திரா வேற இடைஞ்சல் கொடுப்பாளோ? வாத்தியாரம்மா எப்படி எடுத்துப்பாங்க?’ என்று சிந்திக்க ஆரம்பித்து தூக்கத்தில் ஆழுந்து விட்டான் ரகுநந்தன்.

    மறுநாள் காலையில் அவன் விழிக்கையில், அபிநயா அருகில் இல்லை.

                அவன் ஷாட்ஸ், டீஷர்ட் அணிந்து கொண்டு ஜாக்கிங் செல்வதற்கு தயாராக வந்தான். அபிநயா, வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தாள்.

            வாவ்! சூப்பர்.” என்று அவன் கூற, அவள் தலையை திருப்பிக் கொண்டாள்.

       திருநெல்வேலி பக்கம், வாவ் சூப்பர்ன்னு சொன்னா, தேங்க்ஸ் சொல்லுவோம். இல்லை நன்றின்னு சொல்லுவோம்.” அவன் கேலி பேச, “பெட்டி தயாரா இருக்கு. விடிஞ்சிருச்சு. என்னை எங்க வீட்டில் கொண்டு போய் விடுங்க.” அவள் பட்டென்று கூறினாள்.

     ஹா… ஹா… இன்னைக்கு நாள் நல்லா இல்லை? நல்ல நாள் பார்த்து போவோமா?” என்று அவன் குறும்பாக கேட்டான்.

      அவள் முறைக்க, “புது புருஷன் வந்திருக்கேன். எனக்கு ஒரு காபி, டீ எதுவும் கிடையாதா?” என்று அவன் பாவமாக முகத்தை சுழிக்க, “அது என்ன புது புருஷன், நான் புது பொண்டாட்டி தான் கேள்வி பட்டிருக்கேன்.” என்று அவள் கோலமாவை எடுத்து வைத்தபடி கேட்டாள்.

     “இது என்ன அநியாயமா இருக்கு? புது பொண்டாட்டி அப்படி சொல்றதுக்கு பொண்ணுகளுக்கு உரிமை இருக்குன்னா? புது புருஷன் அப்படி சொல்லுற உரிமை பாவம் பசங்களுக்கு கிடையாதா?” என்று அவன் கேள்வியாக நிறுத்தினான்.

   “பாருங்க வாத்தியரம்மா. உங்களுக்கு சாதகமா பேசினா பெண்ணியம். எங்களுக்கு சாதகமா பேசினா என்னனு கூட எங்களுக்கு தெரியாது. நாங்க அவ்வளவு அப்பாவியா வாழுறோம்.” என்று அவன் கண்சிமிட்டினான்.

அவன் கண்சிமிட்டலில், அவள் சற்று அசந்து, அவனை பார்த்தாள்.

    ‘இது என்ன உடை?’ என்ற கேள்வி அவளுக்கு வந்தது. அபிநயா. அப்பா, அத்தான் யாரும் இப்படி உடுத்த மாட்டாகளே?’ என்று அவள் எண்ணம் ஓடியது.

 ரோட்டில் போற எல்லாரும் இவுகளை தான் பார்ப்பாக போல்.என்று அவள் எண்ணி கொண்டிருக்கையில், ‘ஆம்!என்பது போல் ரகுநந்தனை ரசனையோடு பார்த்தபடி அங்கு வந்து நின்றாள் இந்திரா.

       ‘ஐயய்யோ! நேத்தையே பிரச்சனையே இன்னும் முடியலை. அதுக்குள்ள இவ ஏன் இங்க வந்திருக்கா?’ என்று அவளை யோசனையாக பார்த்தான் ரகுநந்தன்.

     இது யாரு? இப்படி காலங்காத்தால? அதுவும் இவ்வளவு மேக்கப் போட்டுக்கிட்டு? இப்படி மேக்கப் போட்டா ஸ்கின் அலர்ஜி வந்திராதா?’ என்ற கேள்வியோடு அவளை பார்த்தாள் அபிநயா.

பொழுதுகள் விடியும்…