C/O-Kadhali 1
C/O-Kadhali 1
C/O காதலி
அது ஒரு பொன்னான மாலை நேரம். கதிரவன் தன் ஒளிக்கற்றைகளைத் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு உறங்கத் தயாராக இருந்தான். மஞ்சள் வானம் மெல்ல யாரும் அறியாமல் கருநீலப் போர்வையைப் போர்த்திக் கொண்டு இருந்தது.
அந்த சமயத்தில் தான் அந்த மூன்று இளம் பருவப் பெண்களும் தங்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் சொன்னபடி எண்பது சதவிகிதத்திற்குக் குறையாமல் மதிப்பெண் வாங்கியதற்குத் தங்களின் பெற்றோர் பரிசாக அளித்த புத்தம் புது ஸ்கூட்டி பெப் பிளஸில் பறந்து வந்து அந்த பாணி பூரி கடையின் முன் ஆஜராகி இருந்தனர்.
மூவரும் வயதுக்கு மீறிய உயரம். இந்தக் கால மார்டன் பெண்களுக்கே உரித்தான கம்பீரம். எதையும் செய்யத் துணியும் தைரியம். அதற்கும் மேல் வட நாட்டு பாணியில் இருந்த அவர்களது ஸ்டைல். ஒருத்திக்கு ஒருத்தி அழகில் சளைத்தவள் இல்லை.
சைட் அடிக்கும் ஆண்கள் கூட்டம் யாவரும் “செம பீசு” என்று சொல்லாமல் இருந்ததே இல்லை எனலாம்.
நுனி நாக்கு ஆங்கிலம் மூவருக்குமே வழக்கம். படித்தது அமெரிக்கன் கான்வென்ட் என்பதால் அவர்களின் எண்ணமும் செயலும் அதன்படியே இருந்தது.
“ அண்ணா மூணு ப்ளேட் மசாலா பூரி அப்பறமா பாணி பூரி குடுங்க…” வண்டியை விட்டு இறங்காமலே ஆர்டர் கொடுத்து விட்டு பின் தன் சிகப்பு ஸ்கூட்டியை ஸ்டாண்டில் நிற்க வைத்தாள் சுப்பு. சுப்பு என்கிற சுப்புலக்ஷ்மி.
“சரி பாப்பா” என்று வழக்கம் போல சிரித்துக் கொண்டு அவர்களுக்காக ஸ்பெஷல் பூரிகளை சுட சுட தயரிக்கலானார் அந்த கடைக்காரர்.
“நாம சொன்ன மூணு காலேஜ்லையும் நமக்கு சீட் இருக்குனு அப்பா சொன்னாரு. ஆனா நான் கிருஷ்ணா காலேஜ் தான் போகப் போறோம்னு சொல்லிட்டேன்.” மீனு கூற,
மசாலா பூரி ஆவி பறக்க கொண்டு வந்து கொடுத்தார் அந்தக் கடைக்காரர்.
அதை வாங்கி வண்டியில் சாய்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
“ நானும் எங்க அப்பாகிட்ட சொல்லி அங்கிள்ங்க கிட்ட சொல்ல சொன்னேன். அம்பு உங்க அம்மா ராதா தான் ஒத்துக்கமாட்டாங்க. எப்படியாவது சமாளி. கிருஷ்ணா காலேஜ்ல செம ஜாலியா இருக்கும்னு நம்ம ஸ்கூல்ல படிச்ச சீனியர் ஒருத்தி சொன்னா. மேனேஜ்மென்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்ல. வி கேன் ஹவ் எ குட் டைம் தேர்.” அம்புவிற்கு ஊக்கம் தருமாறு இருந்தது சுப்புவின் வார்த்தைகள்.
“எங்க அம்மாவை நான் சமாளிச்சுடுவேன். டோன்ட் வொர்ரி.”
“சரி காலேஜ் ஓபன் பண்ண இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எங்கயாச்சும் டூர் போலாமா? ஐ வான்ட் டு கோ கோவா . நீங்க என்ன சொல்றீங்க?” அம்பு சொல்ல,
“வொய் நாட். ஐ அம் ரெடி” சுப்பு சம்மதித்தாள்.
“சரி போலாம். ஆனா எவ்வளோ நாள் அங்க இருக்கறது. லாஸ்ட் டைம் போனப்ப நாலு நாள்ல போர் அடிச்சு வந்துட்டோமே.” மீனு அலுத்துக் கொண்டாள்.
“அப்ப நமக்கு அறியாத வயசு. அதுவும் அம்மா அப்பா கூட போனோம். இப்போ பாக்கலாம் வா. உனக்கு போர் அடிக்காம நான் பாத்துகறேன். அப்படி போர் அடிச்சா திரும்பி வருவோம், வந்துட்டு வேற எங்கயாச்சும் ப்ளான் போடலாம் இல்லன்னா லோக்கல்ல சுத்துவோம்.” அம்பு அவளைத் தேற்றினாள்.
“அது சரி, நம்மள தனியா அனுப்புவாங்களா?” மீனுவிற்கு சந்தேகம் வர,
“நாம கேக்கறதுல தான் இருக்கு. அதுவும் இல்லாம நம்ம அப்பாங்களுக்கு தெரிஞ்ச ரெசார்ட்ல தான தங்கப் போறோம். அங்க இருக்கற ஆளுங்க பாத்துப்பாங்கன்னு சொல்லி கேட்கலாம்.” அம்பு அம்சமாக ஐடியா கொடுத்தாள்.
மூவரும் துள்ளலாக தங்களின் வண்டியில் ஏறி ரேஸ் செய்வது போல ஓட்டிக்கொண்டு தங்கள் வீடு சென்றனர்.
மூவரின் தந்தையும் ஒரே கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி, ஒன்றாகவே தொழில் தொடங்கி, இப்போது தங்களின் தண்டர்ஐஸ் என்கிற குளிர்பான நிறுவனத்தை மிகவும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் கம்பனிக்கு மும்மூர்த்திகள் இவர்கள் தான்.
ஊர் முழுவதும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகும். மூவரும் பணக்காரத் தந்தைகள் என்பதை அவர்கள் பிள்ளைகள் வளர்த்த விதமே பறைசாற்றும். இருப்பதிலேயே சிறந்த பொருட்களும் , சிறந்த ஆடைகளும், சிறந்த நகைகளும் என எல்லாவற்றிலும் சிறந்ததாகவே தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தனர். அது தான் அந்தக் குழந்தைகளை எதுவும் செய்யலாம் என்று துணியும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.
இவர்களுக்கு அமைந்த மனைவிகளும் அவர்களுக்கு ஏற்றார் போலவே அமைந்தனர். மூவரும் உற்ற தோழிகள்.
சொல்லி வைத்தார் போல மூவருக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது, அதுவும் ஒன்றே ஒன்று தான். தாய் தந்தை போலவே பிள்ளைகளும் உயிர் தோழிகள்.
அம்புவின் தாய் மட்டும் மகள் விஷயத்தில் சற்று கண்டிப்புடன் இருப்பார். அவரைப் பொறுத்தவரை பெண் என்பவளுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு என்று வாழ்பவர்.அதனாலேயே அம்பு மட்டும் அவர்களது நண்பர்கள் வட்டத்தில் ஒட்டியே இருந்தாலும் சில செயல்கள் செய்யத் தயங்குவாள்.
இருந்தாலும் சுப்புவும் மீனுவும் அவளை விடுவது கடினம். முதலில் அவளையே செய்ய வைத்து விடுவர்.
அம்பு வீட்டிற்குள் வந்ததும், ராதா அவளை நிறுத்தினார்,
“என்ன இன்னிக்கு உங்க மீட்டிங் சீக்கிரம் முடிஞ்சிருச்சு. என்ன ப்ளான் போட்டீங்க?” சரியாகக் கணித்துவிடார்.
“எப்படி மா இப்படி இருக்க.?”
“பின்ன பொண்ண பெத்துட்டு அப்படியே இருக்க முடியுமா. அவள பத்தி விரல் நுனில வெச்சிருக்க வேண்டாமா. இந்தக் காலத்துல எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல. பொண்ணுங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.” அடுக்கிக் கொண்டே போக,
“சரி சரி… ஸ்டாப். ஆனா எங்க மூணு பேரையும் பத்தி கவலைப் பட வேண்டாம். நாங்க ரொம்ப உஷாரு..” தன் கிராப் டாப் காலரைத் தூக்கி விட,
அப்போது தான் அவளது உடையை கவனித்தார்.
“ஏய், கையை கொஞ்சம் தூக்கினா இடுப்பு தெரியற மாதிரி டிரஸ் பண்ணாதன்னு சொல்லிருக்கேன். நீ கேக்கற மாதிரி தெரியல. அதுவும் டைட்டா வேற இருக்கு. அசிங்கமா இருக்கு அம்பு.” சற்று குரலில் கண்டிப்பு ஏற
“அம்மா இது தான் இப்ப பேஷன். இது கூட தப்பா. எங்க ஸ்கூல்ல வந்து பாரு. முகத்தை தூக்கிக் கொண்டு சோபாவில் சரிந்தாள்.
“இன்னும் நீ சின்ன பொண்ணு இல்ல. ஸ்கூல் முடிஞ்சிடுச்சு. காலேஜ் போகப் போற. இனிமே தான் வாழ்க்கையே ஆரம்பிக்குது. உங்க ஸ்கூல்ல டோட்டல் பாதுகாப்பு. அமெரிக்கன் கான்வென்ட். அதுவும் இல்லாம எல்லாரும் ஒரே மாதிரி மனநிலைல வளந்த பிள்ளைங்க. இந்த மாதிரி டிரஸ் பண்ணா அங்க ஒன்னும் தப்பா தெரியாது. ஆனா காலேஜ் அப்படி இல்லை. பல இடத்துலேந்து வருவாங்க. கிராமம், நகரம், ஹை கிளாஸ் , லோ கிளாஸ், மிடல் கிளாஸ். அப்போ அவங்க நம்மள பாக்கற விதம் வேற மாதிரி இருக்கும். அத புரிஞ்சு நடந்துக்கோ.” வழக்கம் போல ஆரம்பிக்க,
“அம்மா அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், எனக்கு பெர்மிஷன் வேணும்.” ராதாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவரது தோளைப் பிடித்துவிட்டபடி கேட்டாள்.
“அதான பாத்தேன். எங்க போறதா ப்ளான்?” மறுபக்க தோளையும் தொட்டுக் காட்டி பிடித்துவிடுமாறு ஜாடை காட்டினார்.
“கோவா மா..ஒரு நாலு அஞ்சு நாள் தான். அப்பா ப்ரென்ட்டோட ரெசார்ட்ல கேட்டு புக் பண்ண சொல்லுங்க மா. ப்ளீஸ்..” பிடித்துவிட்டுக் கொண்டே கெஞ்சினாள்.
“நீங்க மட்டும் தனியாவா? நோ வே அம்பு..” மறுத்துவிட்டு எழுந்துகொண்டார்.
கண்ணன் அந்த நேரம் உள்ளே நுழைந்தார்.
“வாங்க. உங்க பொண்ணு என்ன கேக்கறா பாருங்க. தனியா கோவா போறாங்களாம். இதெல்லாம் நீங்க குடுக்கற இடம் தான்.” அவரையும் சேர்ந்து கடிந்துகொண்டார்.
“டாடா, நாங்க என்ன இன்னும் பேபீஸ்ஸா. காலேஜ் போகப் போறோம். ஒரு நாலு நாள் டாடா. ப்ளீஸ் ப்ளீஸ்..உங்க ப்ரென்ட் ரெசார்ட் தான,அவங்க கூடவே இருப்பாங்க. சேஃப் தான… கொஞ்சம் அம்மாக்கு சொல்லுங்க.” அவரைப் பிடித்துக் கொண்டுவிட்டாள்.
செல்ல மகளின் விருப்பத்தை எப்போதுமே தட்ட மாட்டார் கண்ணன்.
“ராதா. அவ என்ன சின்ன பொண்ணா? தே ஹவ் டு எக்ஸ்ப்ளோர் தேர் லைப். அப்ப தான் அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும். போயிட்டு வரட்டும். நான் கோவாக்கு போன் பண்ணி பேசறேன். அங்க அவங்களுக்கு பாதுகாப்பா என் ப்ரென்ட் குமார் இருப்பான். டோன்ட் வொர்ரி டியர்.” மனைவியை பேசவிடாமல் அவரே பேசிவிட்டு தன் கைபேசியில் நண்பனுக்கு அழைத்தார்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு தன் நெற்றியையும் கண்களையும் அசதியில் தேய்த்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தார் ராதா. இருந்தாலுன் கண்ணன் கூறியதும் ஒரு வகையில் சரியென்றே பட்டது. அனுபவம் வாழ்வில் மிக முக்கியம் என்பதை அவரும் அறிவார். எத்தனை நாள் கைக்குள்ளேயே வைத்திருக்க முடியும். அனைத்தையும் யோசித்தபடி இருக்க,
அம்மாவின் பேச்சு தோற்றுப் போனாதாக உணர்ந்த மகளுக்கு அவரைக் கஷ்டப்படுத்தி விட்டோம் என்பது உரைக்க,
“அம்மா, சாரி மா. உங்களுக்குப் பிடிக்கலன்னு எனக்குப் புரியுது. நான் வேணா போகல.” முகம் சுருங்க அம்பு கூறியதும்,
“போயிட்டு வா அம்பு. என் கவலை எல்லாம் நீங்க சின்ன பொண்ணுங்கன்னு தான். ஆனா உங்களுக்கும் உலகம் புரியணும், சோ போயிட்டு வாங்க. ஸ்கூல் டூர் போறமாதிரி தான். ஆனா ஃபோன் எப்பவும் ஆன் ல இருக்கணும். குமார் அங்கிள்கு நான் பேசிகிட்டே தான் இருப்பேன். ஜாக்கிரதையா இருங்க. ரெசார்ட் விட்டு ரொம்ப தூரம் எங்கயும் போகாதீங்க. அப்டியே போனாலும் குமார கூட்டிட்டு போங்க. பத்திரமா இரு அம்பு.” கண்களில் பணிவும் குரலில் கண்டிப்புமாக அனுமதி கொடுத்தார்.
மகிழ்ச்சியுடன் தன் அறைக்குச் சென்று தங்களின் வாட்சப் க்ரூப்பில் அந்தச் செய்தியைப் பகிர, சுப்பு அதையே ஆயுதமாகக் கொண்டு தன் தாய் மல்லிகாவிடம் காட்டி “அம்புவோட ஸ்ட்ரிக்ட் அம்மாவே பெர்மிஷன் குடுத்தாச்சு, நீ என்னம்மா யோசிக்கற..” என கேட்க,
“அவ எப்படி ஒத்துகிட்டா..? இரு நான் அவகிட்ட பேசிட்டு வரேன்.” தன் கைபேசியை எடுத்துக் கொண்டு ராதாவிற்கும் மீனுவின் அம்மா யசோதாவிற்கும் அழைத்துப் பேசினார்.
“என்னங்க டி, இதுங்க தனியா போறேன்னு சொல்லுதுக, அனுப்பறதா வேணாமா?” மல்லிகா இழுக்க,
“அம்புவோட அப்பா, அதுங்களுக்கு உலகம் புரியணும் அனுப்புன்னு சொல்றாரு, நானும் சரின்னு சொன்னேன்.” ராதா தான் ஒப்புக்கொண்ட காரணத்தைக் கூறினார்.
“அப்பறம் என்ன கண்ணன் அண்ணா சொன்னா, சுரேன் சரின்னு தான் சொல்லுவாரு. சிவராம் அண்ணாவும் ஓகே சொல்லிடுவாரு மல்லி. அதான் அங்க அந்த குமார் அங்க இருக்காரே. பாத்துக்குவாரு.” யசோதா உள்ளதைச் சொல்ல, வழக்கம் போல ஆரம்பித்து தங்கள் கதைகளுக்கு அவர்களின் பேச்சு திசை திரும்பியது.
“அப்பாடா!” என திட்டம் நிறைவேறிய குஷியில் சுப்பு தனது பெட்டியை அடுக்கலானாள்.
சுப்புவின் தந்தை சிவராம் , மூவருக்கும் ப்ளைட் டிக்கெட் எடுத்து வந்தார்.
“சுப்பு, இந்தா டிக்கெட். மூணு பேர்ல நீ தான் கொஞ்சம் துடுக்குத் தனமா எதாவது செய்வ. பாத்து கவனமா இருக்கணும். தெரிஞ்ச ரெசார்ட்டா இருந்தாலும், அவங்க இருபத்திநாலு மணி நேரமும் உங்கள பாத்துட்டு இருக்க முடியாது. சோ பாத்து நடந்துக்கோ. இந்த ட்ரிப்ப வெச்சு தான் இனிமே உங்கள தனியா அனுப்பறதா வேணாமான்னு டிசைட் பண்ணுவோம்.” கொஞ்சம் கண்டிப்பும் இருந்தது அவர் வார்த்தைகளில்.
“என்னப்பா, என்னை கல்ப்ரிட் ஆக்குறீங்க. அவங்க எல்லாம் ஒன்னும் தெரியாத பாப்பா வா, நான் மட்டும் தான் எதாவது செய்வேனா?” அவளுக்கு கோபம் வர,
“அப்படி இல்ல மா, நீ கொஞ்சம் யோசிக்காம பட்டுன்னு செஞ்சிடுவ அதுக்கு சொன்னேன். என்ஜாய் பண்ணிட்டு வாங்க. இந்தா இந்த கார்ட் யூஸ் பண்ணு. லிமிட் இருக்கு அந்த கார்ட்ல. அதையும் மீறி செலவாச்சுன்னா சொல்லு அனுப்பறேன். அம்மா கிட்ட கேஷ் இருக்கு. அதுவும் கொஞ்சம் வாங்கிக்கோ.” அவளை சமாதானம் செய்தார்.
மீனு வீட்டில் அதே நிலை தான். முதல் முறை தனியாக போவதால், கொஞ்சம் அட்வைஸ் செய்ய,
“எதுக்கு இப்போ பயபட்றீங்க.” மீனு இடுப்பில் கை வைத்து முறைக்க,
“பயம் உங்கள நெனச்சு இல்ல, மத்தவங்களுக்கு நீங்க என்ன தொல்லை குடுப்பீங்கன்னு நெனச்சு தான் கவலை.” யசோதா அவள் வாயை அடைத்தார்.
“அம்மா…வெரி ஃபன்னி..அப்பா.. அம்மா கிட்ட பத்திரமா இருங்க நான் வர வரைக்கும்.” தந்தையிடம் கேலியாகக் கூறிவிட்டு கிளம்பினாள்.
மூவரையும் ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பிட்டு வந்தனர் அவர்களின் பெற்றோர்.
“என்ன என்ன செய்யப் போகுதுங்களோ, கடவுளே மத்தவங்கள இதுங்க கிட்ட இருந்து காப்பாத்து..” யசோதா சத்தமாக வேண்டுதல் வைக்க அனைவரும் சிரித்தபடி கிளம்பினர்.
கோவா… மாலையில் வெயிலோடும் தென்றல் காற்றோடும் , கடலின் அலை ஒலியிலும் சங்கமித்து ரம்யமாக வாழ்ந்து கொண்டிருந்தது.
ஏர்போர்ட்டுக்கே சென்று குமார் அவர்களை அழைத்து வந்தார். அவர்களுக்கான ஒரு பிரத்தேய அறையை ஏற்பாடு செய்திருந்தார். சூட் ரூம் கொடுக்குமாறு ஏற்கனவே கண்ணன் கேட்டிருந்தார்.
“அங்கிள் ரொம்ப தேங்க்ஸ்.” சுப்பு சிரித்தபடி நன்றியுரைத்தாள்.
“பரவால்ல மா. உங்களுக்கு என்ன வேணும்னாலும் என்னைக் கேளுங்க. வேளாவேளைக்கு சாப்பாடு நீங்க ஆர்டர் பண்ணீங்கன்னா உடனே வந்துடும். ஸ்பெஷல்லா எதாவது வேணும்னா என்கிட்ட சொல்லுங்க நான் செஞ்சு தர சொல்றேன்.” அறையில் அவர்களின் பெட்டிகளை கொண்டு வந்து வைக்கச் செய்தார்.
“அங்கிள் இங்க செஃப் தாத்தா ரொம்ப நல்லா சமைபாங்கன்னு அப்பா சொன்னாரு.” அம்பு சொல்ல,
“அந்த தாத்தா இப்ப இல்லம்மா, ஆனா புது செஃப் உங்களுக்கு தேவையானதை செஞ்சு தருவான். என் பையன் தான் இப்ப செஃப் இங்க. உங்கள பத்தி சொல்லி வைக்கறேன். வரேன் மா.” புன்னகைத்துச் சென்றார்.
அவர் சென்றதும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“ஹே அங்கிளே ஸ்மார்ட்டா இருக்காரே அவர் பையன் எப்படி இருப்பான். வாங்க குளிச்சு ரெடி ஆயிட்டு போய் சாப்டற சாக்குல பாத்து ஒரு இன்ட்ரோ பண்ணிட்டு வருவோம்.” சுப்பு துள்ளிக் குதித்து முதலில் குளிக்கச் சென்றாள்.
“ஆரம்பிச்சுட்டியா, பாரு ஆளு செம மொக்கையா இருக்கப் போறான். ஓவர் எச்பெக்டேஷன் உடம்புக்கு ஆகாது மச்சி.” அம்பு கூறிவிட்டு ராதாவிற்கு ஃபோன் செய்ய நகர்ந்தாள்.
“நாம நாலு நாள் தான் இங்க இருக்கப் போறோம். பாத்துக்க சுப்பு..” மீனு அங்கிருந்த டிவியை இயக்கிக் கொண்டு சுப்புவிடம் சொல்ல,
“நிம்மதியா குளிக்க விடுங்க டி.. இன்னும் ஆளையே பாக்கயாலாம், ஒரு வார்த்தை சொன்னதுக்கு ஒம்பது விளக்கம். வீட்டு அட்மாஸ்பியர் கிளப்பாதீங்க டி அட்வைஸ போட்டு. என்ஜாய் ..ஃபன் அண்ட் ஒன்லி ஹப்பிநெசஸ்..இது தான் இந்த கோவா ட்ரிப் புரியுதா மக்காஸ்.. ஹே ஜலபுல ஜங்கு , தக் லைஃப்ல கிங்கு ..டான் செட்டிங்கு “ பாடிக் கொண்டே தன் உடையிலிருந்து டவலுக்கு மாறி டான்ஸ் ஆடினாள்.
“மச்சி ஃப்ரீ ஷோ பண்ணாத, எவனாது ரூம் சர்வீஸ் வரப் போறான்..” மீனு சிரித்தாள்.
“வந்தா வரட்டும்… வெச்சு செஞ்சுடுவோம்..”
ஃபோன் பேசிவிட்டு வந்த அம்பு, “நீ இப்படியே சொல்லிக்கிட்டு இரு.. வாய் தான் உனக்கு.”
“மச்சி… சான்ஸ் கிடைக்கலையே.. பிஃகரு செட் ஆகலையே..” சுப்பு வருத்தினாள்.
“கெடச்சுட்டாலும்… நீங்க அப்படியே அறுத்துதள்ளிட்டு தான் மறுவேலை… போடி” மீனு அவளைப் பிடித்து பாத்ரூமிற்கு உள்ளே தள்ளினாள்.
மூவரும் குளித்து முடித்து அழகாக உடுத்தி, சாப்பிட வந்தனர்.
குமார் அங்கே இல்லாததால், அங்கிருந்த சிப்பந்தியிடம், “குமார் அங்கிள் இல்லையா.” என்க,
“கிச்சன்ல இருப்பாரு , இந்தப் பக்கம் போங்க” என கை காட்ட,
அங்கே ‘கிட்சன்’ என்ற பலகையைத் தாங்கி ஒரு கதவு தெரிய, அதைத் திறந்து கொண்டு சென்றனர்.
குமார் அவர்கள் கண்ணில் பட, “ஹல்லோ அங்கிள்” சுப்பு தான் முந்திக் கொண்டாள். மற்ற இருவரும் புன்னகைத்தப்படி இருந்தனர்.
“வாங்க மா. கமல் இங்க வா..” தன் மகனை அழைத்தார்.
அட்டகாசமாக ஒருவன் வந்தான். எலுமிச்சை நிறம். நல்ல உயரம், உடலில் திண்மை, அந்த செப் உடை கூட அவனை வசீகரமாய்க் காட்டியது.
“கமல் இவங்க தான் என் ப்ரெண்ட்ஸ் டாடர்ஸ். இவன் தான் என் மகன் கமல்.” அவர்களை அறிமுகப் படுத்தி வைக்க,
சுப்புவிற்கு கண்களில் பல்ப் எரிந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனாலும்,
“ஹாய் நான் சுப்பு, இவ அம்பு , மீனா “ என அனைவரின் பெயரையும் சுப்புவே கூற, மற்றவர்கள் சிநேகப் புன்னகையோடு நிறுத்திக் கொண்டனர்.
அவனோ சின்ன சிரிப்பைக் கூட உதிர்க்காமல் நின்றான்.
“சரி மா. நீங்க என்ன வேணும்னு அவனுக்கு சொல்லுங்க. செஞ்சு குடு கமல். எனக்கு முன்னாடி ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.. நான் வரேன்.” அங்கிருந்து கிளம்பினார்.
கமல் அங்கேயே நில்லாமல் தான் செய்து கொண்டிருந்த ஜாங்கிரியை ஜீராவில் ஒவ்வொன்றாக ஊற வைத்தான்.
சுப்பு தன் தோழிகளிடம் என்ன செய்யலாம் என புருவத்தை உயர்த்தி ஜாடையாகக் கேட்க, அவர்களும் ஜாடையாக பேசு என கண்ணசைக்க,
“மிஸ்டர் கமல், இப்போ என்ன டிஷ் எங்களுக்கு ரெடியா இருக்கோ அது குடுங்க, நைட்டுக்கு நாங்க மெனு சொல்றோம்.” என பேச்சைத் துவக்கினாள்.
“ஓகே..நீங்க வெளிய உக்காருங்க, நான் கொண்டு வரேன்.” அவளைப் பார்க்காமலே பதில் கூற,
“தேங்க்ஸ்.” என கை நீட்டினாள்.
அவனோ ,” ரெண்டு கையும் பிசி” என அவளை கத்தரித்து அனுப்பினான்.
‘இரு டா உன்ன வெச்சுகறேன்.’ மனதில் கூறிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
“என்ன மச்சி அவன் கண்டுக்கவே இல்ல..ஆனா ஆளு செம ஸ்மார்ட். நான் கூட என்னவோனு நெனச்சேன். நல்ல உயரம், கைல நரன்பு எல்லாம் தெரிய செம ஹாட் ஃபிகரு. சுப்பு நம்ம ஸ்கூல் பசங்க மாதிரி காஷுவலா கூட பேச மாட்டேங்கறான். என்ன பண்ண போற..” மீனு அவளை ஏற்றிவிட,
“அவன கரெக்ட் பண்ணி காட்றேன் மீனு. செலேஞ்…” என சுப்பு சபதம் செய்ய,
“பாக்கலாம்… சேலேஞ்” அம்புவும் சேர்ந்தாள்.
தொடரும் …