C/O-Kadhali 15

C/O-Kadhali 15

                                                                              C/o காதலி 15

 

 விடுமுறை நாட்கள் என்னவோ வெகு சிறப்பாகத் தான் போய்க்கொண்டிருந்தது. அம்புவிற்கு வீட்டில் அவளது அப்பா செல்லம் கொஞ்சினார். இத்தனை நாள் அவர் மகளைப் பிரிந்து இருந்ததே இல்லை. ராதாவும் இருந்ததில்லை ஆனாலும் பெண் பிள்ளைகள் ஒரு நாள் பிரிந்து செல்லவேண்டுமே அதற்கு இது ஒத்திகை என்று மனதை திடப்படுத்தி இருந்தார்.

மீனு அவளது அப்பாவிடம் பேசுவதை தவிர்த்தாள். அவள் மீது நம்பிக்கை இழந்து அவர் செய்தது அவளுக்கு வெகுவாக பாதித்தது. ஆனால் அதை ஈடு செய்வது போல விஜய் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். காதல் மயக்கத்தில் அவள் மற்றதை மறந்திருந்தாள்.

சுப்பு வீட்டில் வெகு ப்ராக்டிகல். மகளை அவளது போக்கில் விட்டு அவளுக்கு துணிவைக் கொடுக்கும் பெற்றோர்கள். அவள் எப்போதும் போல ஜாலியாகவே இருந்தாள் ஆனால் கமல் மெசெஜிற்கு பதில் அளிக்கவில்லை. அவ்வப்போது அவனது எண்ணைத் தேடி அழைக்கலாமா என்று கை போகும் ஆனாலும் மறுபடியும் விட்டுவிடுவாள்.

கமல், அவள் குணம் ஓரளவு அறிந்து தான் இருந்தான். ஆனாலும் அவனுக்கு சுப்புவின் நினைவு வந்து கொண்டிருந்தது. அவனும் நிறைய பெண்களுடன் பழகியவன் தான். ஏனோ சுப்பு அவனுக்குத் தனித்துத் தெரிந்தாள். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அவர்களுக்குள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.

விக்ரம் அன்று அவனது சித்தப்பாவுடன் வரவு செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது கல்லூரியில் செய்த அலங்கார விளக்குகள் என ஒரு மூவாயிரம் போட்டிருக்க, அம்பு என்பவள் நினைவில் வர, ‘அந்தப் பெண்ணை பற்றி யோசித்தாள் அன்று கேண்டீனில் பார்த்த பெண் நினைவிற்கு வந்தாள். இவள் தான் அவளா?’ அவனுக்கு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

அவளுடைய எண் அவனது போனில் இருக்க, வாட்சப்பில் அவளது டிபியைக் காணாலாம் என்று தோன்றிட, உடனே எடுத்துப் பார்த்தான். ஆனால் அவனது துருதர்ஷடம் அவள் இரண்டு நாள் முன்பு தான் ஒரு கடைக்குச் சென்ற போது அங்கு எடுத்த ஒரு தஞ்சாவூர் பெய்ன்டிங்கை டிபியாக மாற்றி இருந்தாள்.

அவன் அங்கும் ஏமாந்து போனான்.

கல்லூரி திறந்ததும் அவளைக் காணவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். விடுமுறையை அவனது சித்தப்பாவிற்கு உதவி செய்வதிலும் கடைசி வருட படிப்பையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டான்.

அம்புவும் சுப்புவும் வழக்கம் போல விடுமுறையில் கூத்தடித்தனர். அவர்களுடன் சில நாட்கள் மட்டுமே வந்தாள் மீனா. சில நாட்கள் விஜையுடன் வெளியே சுற்றினாள். அம்பு அதனை அறிந்தே இருந்தாலும், அவளாகவே சொல்லட்டும் என விட்டிருந்தாள். சுப்பு வுக்கு லேசாக சந்தேகம் எழுந்தது. அம்புவிடம் கேட்க அவள் தனக்குத் தெரியாது என்று மழுப்பிவிட்டாள்.

அன்று அம்புவும் சுப்புவும் ஒரு மாலுக்குச் சென்றிருக்க, மீனா தலைவலி என்று கூறி வராமல் இருந்தாள். ஆனால் விஜையுடன் அதே மாலுக்கு வந்து அவர்கள் கண்ணிலும் பட்டுவிட்டாள்.

“போச்சு போச்சு… வசமா மாட்டிகிட்டேன்.” மீனா விஜயின் தோளுக்குப் பின்னால் மறைய, அவர்களை நோக்கி சுப்புவும் அம்புவும் வந்து கொண்டிருந்தனர்.

“பாத்தியா இவள… நம்மகிட்ட பொய் சொல்லிட்டு இவன் கூட ஊர் சுத்தறத. இந்த பிராடு நம்ம கிட்ட மறைக்கறா…” சுப்பு அம்புவிடம் சொல்லிக் கொண்டே வந்தாள்.

“சுப்பு, இங்க பாரு.. அவ அவன லவ் பண்ணா அவளோட  பீலிங்க்ஸ ஒரு ப்ரெண்டா நாம மதிக்கணும். அத விட்டுட்டு அவள ஏன் இப்படிப் பண்ணன்னு கேக்கறது நியாமே இல்ல.” சுப்புவின் மனதில் இருந்ததை அறிந்து அவளிடம் அம்பு சொல்ல,

ஒரு நொடி நிதானித்தாள் சுப்பு. தான் ஏன் அவசரப் பட்டோம் என்று மனம் சுருங்கினாள். அவள் இப்படி ஒளியும் அளவிற்கா தன் திமிர் இருக்கிறது என்று தன்னை நினைத்தே நொந்துகொண்டு நடந்தாள்.

“நீ சொல்லறது கரெக்ட் தான் அம்பு. நான் ஏதோ ஒரு கெத்துக்காக நம்ம செட்டுக்கே லவ் செட் ஆகாதுன்னு சும்மா சொல்லிட்டுத் திரிஞ்சேன். ஆனா லவ் மனசு சம்மந்தப் பட்ட விஷயம். அது எப்ப வேணா நடக்கும். அதுக்காக நான் சொன்னத ஸ்டில் பிடிச்சுட்டு அதுக்கு அவள ப்ளேம் பண்ண துணிஞ்சுட்டேனே. ஹவ் பேட் ஐ அம்.” போதி மரத்து ஞானம் போல ஒரு நிமிடத்தில் தன் தவறை உணர்ந்தாள்.

“சரி அவகிட்ட நார்மலா பேசு” என்று அழைத்துப் போனாள்.

“ஹாய் விஜய். என் ப்ரென்ட்ட பாத்தியா? அவ பேரு மீனா.” நக்கலாக விஜயிடம் கேட்க, அவனுக்குப் பின்னால் ஒளிந்திருந்த மீனு வெளியே வர,

“வா மா…” சுப்பு காது வரை இளித்தாள்.

“நக்கலா..” மீனா ஓரப் பார்வையில் கேட்க,

“அத நாங்க கேட்கணும். காலைல தல வலின்னு சொன்ன. இப்ப சரி ஆயிடுச்சா?” வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“ அப்ப தல வலி தான். விஜயும் கூப்ட்டானா சரின்னு ஒரு மாத்திரை போட்டுட்டு கிளம்பிட்டேன். “ வழிந்தாள் மீனா.

“அப்ப ஏன் எங்களுக்கு சொல்லல…” மீண்டும் ஆரம்பிக்க

“ஏ! விடு டி… அவ தான் மாட்டிக்கிட்டா.. அப்பறம் ஏன் நோண்டி நொங்கெடுக்கற..” அம்பு சுப்புவை நிறுத்தினாள்.

மீனாவிற்கு அதற்கு மேல் வழியில்லை என்றானது. எப்படியும் ஒரு நாள் சொல்லிதானே ஆகவேண்டும் , அது இன்றே நடக்கட்டும் என்று முடிவு செய்து, அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு காபிஷாப்பில் அமர்ந்தாள்.

“ஐ லவ் விஜய். இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியல. பட் எனக்கு அவன் தான் லைஃப் பார்ட்னெர்ன்னு என் மனசு சொல்லுச்சு. அதையே அவனும் பீல் பண்ணான். சோ லவ் ப்ரோபோசல்  அக்செப்ட் பண்ணிட்டேன்.” கூறிவிட்டு இருவரையும் மாறி மாறி பார்க்க , அவர்களிடம் அமைதி.

மீனாவின் இந்த தெளிவான பேச்சு அம்புவிற்கு மிகவும் பிடித்தது. சுப்புவும் இப்படி அவள் பேசி பார்த்ததில்லை என்பதால் வாயடைத்துப் போனாள்.

ஒரு சில நொடிகள் கழித்தே அவர்கள் ரியாக்ட் செய்தனர். இருவரும் எழுந்தனர். அவர்கள் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. “ஒரு வேளை கோச்சுகிட்டு எழுந்து போகப் போறாளுங்களோ!” மனதிற்குள் எழுந்த சந்தேகம் மீனா கண்களில் தெரிய,  அவர்கள் இருவரும் ஒருசேர அவளைக் கட்டிக் கொண்டனர். அந்த ஆனந்த அதிர்ச்சியில் அவளும் குதித்தாள்.

மனம் லேசானது போன்ற உணர்வு மூவருக்குமே!

“நீங்க என்னை ஒதுக்கிடுவீங்களோன்னு பயந்துட்டேன் டி..” மீனாவின் கண்கள் கரித்தது.

“ச்ச…லூசு.. இதுல என இருக்கு..”அம்பு அவளின் முதுகை வருடித் தேற்றினாள்.

சுப்புவிற்கும் அம்புவிற்கும் மீனா முத்தமிட்டாள்.

“இங்க ஒருத்தன் நிக்கறேன்..” விஜய் அப்பாவியாய் அவளைப் பார்க்க,

“நீங்க தான் லவ் சொல்றதுக்கு முன்னாடி லேந்தே கிஸ்ஸிங் தியரிய கரைச்சு குடிச்சுடீங்களே..அப்பறம் என்ன..” நக்கல் செய்தாள் சுப்பு.

“அது சும்மா ஃபன்..இல்ல மீனு …” அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

“போதும் போதும் நாங்க போனப்பறம் வெச்சுக்கோங்க” அம்பு சிரிக்க,

“எங்க போறீங்க? நாம சேந்தே போலாம்..” மீனா அவர்களைத் தடுத்தாள்.

“ இல்ல மீனு. நீ விஜய் கூட இரு. நாங்க கொஞ்சம் பர்சேஸ் பண்ணிட்டு கெளம்பறோம். அப்பறம் இன்னொரு விஷயம் , உங்க அப்பா கூட பேசு டி. பாவம் அவரு..” அறிவுரை வழங்க..

“பாக்கலாம் அம்பு. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா என்னை நம்பலன்னு நினைக்கறப்ப தான் கொஞ்சம் கோபம் வருது. லெட்ஸ் சீ” மனதில் உள்ளதைக் கூறினாள்.

அதன் பிறகு அவளை வற்புறுத்தாமல் இருவரும் சென்றனர். மீனாவும் தன் அப்பாவிடம் பேசவேண்டும் என்று தான் இருந்தாள் ஆனால் ஏனோ அது தடைபட்டுக் கொண்டே சென்றது. அவரும் மகளிடம் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இருந்தார், ஆனால் பிசினெஸில் சில பிரச்சனைகள் வந்துவிட அதில் மும்மரமாக இருந்துவிட்டார். மீனா மீண்டும் ஹாஸ்டலுக்குச் செல்லும் நாளும் வந்தது.

அந்த சமயம் அவளது தந்தை சுரேந்தர் வந்தார். அவள் ஹாஸ்டலுக்குச் செல்ல தயாராகி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். ஒரு பெண்ணை பெற்று அவளை வெளியே அனுப்புவது அவருக்குமே வலித்தது.

“மீனு இங்க வா” என்றார்.

வீட்டில் இருந்த இத்தனை நாளில் தந்தையின் மேல் இருந்த கோபம் குறைந்தது காரணம் அவர் வீட்டில் இல்லாவிட்டாலும் அவளது அம்மாவிடம் அவளுக்குப் பிடித்ததை சமைக்கச் சொல்லி போன் செய்வார். அவளுக்குப் பிடித்ததை வாங்கி ப்ரிட்ஜில் வைத்திருந்தார். அதற்கும் மேல் அன்று யசோதாவிடம் அன்று அவளை ஹாஸ்டலுக்கு அனுப்பியதற்காக வருந்தியதாக யசோதா அவளிடம் சொல்லி இருந்தார்.

இவை அனைத்தும் சேர்த்து அவளுக்குள் இருந்த கோவத்தைக் குறைத்தது. அதற்கும் மேல் அவர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தது அவளுக்குப் பாவமாகிப் போனது. அவர் அழைத்ததும் அருகில் சென்றாள்.

“ஹாஸ்டல் போக வேண்டாம் டா. நான் பேசிக்கறேன் காலேஜ்ல. சாரி மா.” என்றார் களைத்துப் போனக் குரலில்.

“இல்லப்பா, ஹாஸ்டல் நல்லா தான் இருக்கு. ப்ரெண்ட்ஸ் கூட சேந்து படிக்கவும் முடியுது அதே சமயம் என்ஜாய் பண்ணவும் முடியுது. அதுனால நான் ஹாஸ்ட்டலயே படிக்கறேன்.” சாந்தமாகவே பதிலளித்தால்.

“இல்ல டா.. நீ அப்பா மேல இருக்கற கோவத்துல சொல்றியா?” அவளது தலையை அவர் வருட

“இல்லப்பா.. கோபம் எல்லாம் போய்டுச்சு.நான் நிஜமா தான் சொல்றேன். அங்க நல்லா ஜாலியா தான் இருக்கேன். சோ நீங்க வருத்தபடாதீங்க.” மெல்ல முகம் மலர்ந்தாள்.

சரியென சுரேந்தரும் அவளை ஹாஸ்டலில் சென்று இறக்கி விட்டார்.

கல்லூரிக் காலம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. ஆரம்பித்தது தான் தெரியும். நாட்கள் படு வேகமாக ஓடியது. இரண்டாம் வருடம் அவர்களுக்கு. ஆட்டம் பாட்டம் கும்மாளம் என சகலமும் நிரம்பி வழிந்தது. சீனியர் என்ற பட்டம் வேறு அவர்களுக்கு வழங்கப்பட அது ஜனாதிபதி பட்டத்தை விட அதிக சக்தி வாய்ந்ததாக தெரிந்தது.

எதை செய்கிறார்களோ இல்லையோ , நாடு ராத்திரியில் சுவர் ஏறி செல்லும் பழக்கம் மட்டும் தொடர்ந்து நடந்தது. மாதம் ஒரு முறையாவது சென்று வந்தனர்.  முதலில் பப் எண்பது அவர்களுக்குப் புதிதாகத் தெரிய காலப் போக்கில் அது அவர்களின் சொந்த இடம் போல ஆனது.

அங்கு வரும் மற்ற ஆண்கள் கூட்டம் கூட இவர்கள் மேல் கண் வைத்திருந்தனர். ஒரு நாள் கூட ஆடியவன், மறு முறை மேலே கை வைத்து ஆட, அம்பு தான் தவித்துப் போனாள். இது சரியான பாதையல்ல என்பது அவள் ஏற்கனவே உணர்ந்தாலும் அந்த தொடுகை அவளை பயம் கொள்ளச் செய்தது.

ஆனால் சுப்பு வழக்கம் போல் இருந்தாள்.

“டான்ஸ்ல இதெல்லாம் சகஜம். இதுக்கு போய் பயப்படுவியா ..சில்லி…” என கிண்டல் செய்ய, கூட வந்தப் பெண்களும் சேர்ந்து சிரித்தனர். அது அவளின் ஈகோவைத் தொட்டது.

“நான் ஒன்னும் பயப்படல. அவனுக்கு என்னைத் தொட தகுதியில்லை.” என தன்னை உயர்த்திக் கொள்ள அந்த ஆடவனை மட்டம் தட்டிவிட்டாள்.

அதை அவனது நண்பர் கூட்டத்தில் ஒருவன் கேட்டுவிட்டு அவனிடம் சொல்ல, அவன் காண்டானான்.

“என்ன டி சொன்ன?” என அவன் அந்தக் கூட்டத்தில் அவளைத் தேடிச் செல்ல, அம்புவின் அதிர்ஷ்டம் அவள் அங்கிருந்து நண்பர்களுடன் சென்றிருந்தாள்.

ஆனால் அவளது அதிர்ஷ்டம் நீண்ட நாள் துணை வரவில்லை. அவளுக்காக அவன் ஒரு திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!