C/O-Kadhali 2

                                                      c/o-kadhali 2                                                                                        

 

       அன்று இரவு தங்களின் உணவு பட்டியலை கமலிடம் கொண்டு சென்றாள் சுப்பு. அதை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டவன், பிரிக்காமலேயே தன்னுடைய வெள்ளை நிற கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“சரியா ஒரு மணி நேரம் கழிச்சு டேபிள்ல உங்க ஆர்டர் இருக்கும்.” என அவளை அனுப்பப் பார்த்தான்.

“ஹல்லோ.. என்ன நீங்க ஆடர்ர பிரிச்சுப் பார்க்காமலேயே ஒன் ஹவர்ன்னு டைம் சொல்றீங்க.நாங்க குடுத்த டிஷ்க்கு நீங்க ப்ரிபரேஷன் பண்ண வேண்டாமா? என்னன்னு தெரிஞ்சா தான அத செய்ய முடியும்.” அவனது செயல் வியப்பை அளித்தது.

“ம்ம் ஆமா. பிரிச்சுப் பார்க்கணும். ஆனா இங்க ஓரளவு எல்லா வைகயான உணவுக்கும் ரெடியா பேஸ் ஆயிடம்ஸ் வெச்சிருப்போம். இங்க மொத்தம் பத்து பேர் இருக்காங்க சமைக்க. சோ வர ஆர்டர்ஸ் அவங்களுக்கு ஒன் பை ஒன்னா அனுப்புவேன். நான் அவங்க எல்லாருக்கும் கூட இருந்து ஹெல்ப் பண்ணுவேன். ஃபைனல் டச் என்னோடது தான்.சோ நீங்க வொர்ரி பண்ணாதீங்க.” முன்பு போல் இல்லாமல் சற்று சிரித்த முகத்துடன் பதில் கொடுத்தான்.

“ஒ அப்படியா.. நான் நீங்களே செஞ்சு தன்ருவீங்கன்னு நெனச்சேன்.” சற்று வருத்தம் போலக் கூற,

“அப்கோர்ஸ்.. நான் கூடவே இருந்து பாத்து தான் அவங்க செய்வாங்க. அதுனால நான் பண்ண மாதிரி தான.”

“சரி நாங்க குடுத்த டிஷ் அவங்களுக்கு செய்யத் தெரியலனா..?” அவனோடு பேச்சு வளர்க்க என்ன வேண்டுமோ அதைக் கச்சிதமாகச் செய்தாள்.

“அவங்க உடனே எனக்கு சொல்லிடுவாங்க. சோ வேற யார் பிசியா இல்லையோ அவங்க செய்வாங்க. அவங்களுக்கும் தெரியலன்னா நான் செய்வேன்.” அவன் பேச்சை முடிக்கப் பார்க்க,

“அப்போ உங்களுக்கு மட்டும் செய்யத் தெரிஞ்ச டிஷ் என்னன்னு சொல்லுங்க. அதை நான் ஆர்டர் பண்றேன்.” பட்டென சுப்பு சொல்ல, அவளின் எண்ணம் என்னவென்று தெரிய அதை அவளது முகத்தில் தேடினான்.

அவள் நாக்கை உள்பக்க கன்னச் சதையில் அழுத்திச் சிரிக்க,

“என்ன எதிர்ப்பார்க்கறீங்க? “ நேரடியாக அவன் கேட்க,

“உங்க ப்ரெண்ட்ஷிப்” யோசிக்காமல் பதில் தந்தாள்.

“ஏன்…?” புரியாமல் அவன் பார்க்க,

“இந்த ஊர்ல எங்களுக்கு யாரையும் தெரியாது, உங்க அப்பாவைத் தவிர. அவர டிஸ்டர்ப் பண்ண மனசு வரல, அதான் நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா? ஐ மீன் வெளிய போறதுக்கு எல்லாம்..?”

அவன் பதில் கூறும் முன்பே, அவனது தந்தை குமார் அங்கே வந்துவிட, “ஆமா கமல், நீ ஒரு ரெண்டு நாள் அவங்க கூட இருந்து, சுத்திக் காட்டு. இப்போ தான் அவங்க அப்பா சிவராம் பேசினான். கூட ஒருத்தர் இருக்கறதும் நல்லது தான். யாரையோ அனுப்பறத விட, பொம்பளப் புள்ளைங்கள நாம பாத்துக்கறது தான் நல்லா இருக்கும். நீ போயிட்டு வா கமல். இங்க தான் ஆளுங்க இருக்கங்களே. பாத்துப்பாங்க.

“இல்லப்பா, இங்க கைட் பண்ண ஒரு ஆள் வேணும். அதுனால..” அவன் மறுக்கப் பார்க்க,

“போயிட்டு வா கமல். ஒரு டூ டேஸ் நீயும் லீவ் எடுத்த மாதிரி இருக்கும்.” ‘மறுக்காதே’ என்னும் தகவல் அவரது பார்வையில் இருந்தது.

“சரி” என்றதோடு முடித்துக் கொண்டான்.

கமல் அன்று இரவு உணவை அவர்களது டேபிளில் கொண்டு வந்து வைத்துவிட்டு, “நாளைக்கு காலைல நாலு மணிக்கு ரெடியா இருங்க. சன் ரைஸ் பார்க்க போறோம்.” என்றான்.

“நாலு மணிக்கேவா?” மூவரும் கண்களை விழித்துப் பார்க்க,

“எஸ். நான் எப்பவும் நாலு மணிக்கு எந்திரிச்சு சைக்லிங் பண்ணிட்டு வருவேன். சோ உங்களுக்கும் சைக்கிள் ரெடி பண்ணிடறேன். ஒன் ஹவர் சைக்கிள் அப்புறம் சன் ரைஸ் பாத்துட்டு வரலாம். இங்க ரொம்ப நல்லா இருக்கும், ட்ரஸ்ட் மீ.” மெல்லிய புன்னகை யை படற விட, சுப்பு அதிலேயே மயங்கினாள்.

“கண்டிப்பா.” கண்ணடித்துக் கூறினாள் சுப்பு.

அவளின் அந்தச் செய்கை கமலின் புருவங்களை உயர்த்தியது.

“சூடா இருக்கு..” கமல் சொல்ல,

“வாட்..??” மீனு குதர்க்கமாகப் பார்க்க,

“உங்க ஃபுட் சூடா இருக்கு, சாப்பிடுங்க. என்ஜாய் அண்ட் சி யு டுமாரோ” மூவருக்கும் பொதுவாக சொன்னவன், அழகாக தன்னுடைய ஏப்ரான் பாக்கெட்டில் கைவிட்டு தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்த படி சென்றான்.

தோழிகள் மூவருக்கும் இங்கே இருப்புக் கொள்ளவில்லை.

“ஹே மச்சி.. அவன் டபிள் மீனிங்ல பேசிட்டு போறான் டி” மீனு நக்கலடிக்க,

“புரியாமலா இருக்கேன். நாளைக்கு சீக்கிரம் எந்திருக்கணும், சீக்கிரம் சாப்பிடுங்க.” சுப்பு அவசரப்படுத்தினாள்.

“பறக்காத டி. அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கப் போறான். நீ இந்த கோவாலயே கன்னி கழியப் போற..”நமுட்டுச் சிரிப்புடன் அம்பு அவளை வாரினாள்.

“என் தலைல இவன் தான் புள்ளையார்சுழி போடணும்னு இருந்தா அத அந்த புள்ளையார் வந்தாலும் மாத்த முடியாது.” சத்தமாகச் சிரித்தாள் சுப்பு.

“மச்சி, மத்த எல்லாத்துக்கும் ரெடியா அப்போ..? ம்ம்?” மீனு முனுமுத்தாள்.

“ என்ன மத்தது?” அம்பு புரியாமல் விழிக்க,

“இங்க பேச வேண்டாம். வாங்க நம்ம ரூம் போய் பேசிக்கலாம். சீக்கிரம் முடிங்க டி..” சுப்பு துரிதப்படுத்த அனைவரும் பேசாமல் உணவை உள்ளே தள்ளிக் கொண்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

“ இப்ப சொல்லு..” அம்பு விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க,

“ ப்ரிகாஷன் தான் டி சொன்னேன் மத்ததுன்னு.” மீனு விளக்கினாள்.

“அடிப்பாவி, அவன் சன்ரைஸ் போலாம்னு தான் டி சொன்னான். நீ அவள மேட்டருக்கு ரெடி பண்ணிட்டு இருக்க..”அம்பு சற்று நடுங்கிப் போய் அங்கிருந்த கவுச்சில் தன்னை புதைத்தாள்.

“ஏன் டி அவள பயமுறுத்தற..அம்பு அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. இன்கேஸ் அப்டியே கன்டினியூ ஆச்சுன்னா…?” சுப்பு இழுக்க,

“ஆச்சுனா… ஓகே வா உனக்கு..?” அம்பு விழித்தாள்.

“நானும் எத்தனை நாள் தான் விர்ஜினா இருக்கறது.. போர் அடிக்குது.. அதுவும் கமல் செம்ம கட்ட.. எனக்கு அவன் ஆர்ம்ஸ்ல தெரியற நரம்ப பாத்தாலே ..ம்ம்ம்ம்” கண் மூடி அவனை ரசித்தாள் சுப்பு.

“ நடத்து டி.. நாம கொஞ்சம் நல்ல பொண்ணுங்களா இருந்தோம், இந்த ட்ரிப்போட அதுவும் அத்துக்கிட்டு போகப்போகுதா..” அம்பு அலுத்துக் கொண்டாள்.

“ நல்ல பொண்ணுன்னு செர்டிபிகேட் வாங்கி என்ன பண்ண போற, உன் வருகாலப் புருஷன் கிட்ட ஆஸ்கார் அவார்ட் வாங்கப் போறியா.. அதுக்கு முதல்ல அவன் ஒழுங்கா இருக்கணும். இந்தக் காலத்துல பத்தாவது படிக்கற பையன் விர்ஜின்னா இருந்தா பெரிய விஷயம். லைஃப் இஸ் ஷார்ட் .. என்ஜாய் இட் அம்பு.” அட்வைஸ் வழங்க,

அம்பு கை எடுத்துக் கும்பிட்டு, ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தாள்.

“சரி வாங்க எல்லாரும் குளிச்சுட்டு படுங்க. அப்போ தான் மார்னிங் கொஞ்சம் ஃபிரஷ்ஷா இருப்போம்.” மீனு தன் துணிகளில் நாளை போடுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தாள்.

“இப்பயேவா.. எனக்குத் தூக்கம் வருது டி..காலைல குளிச்சுட்டு போலாம்.” அம்பு போர்வைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.

“நாலு மணிக்கு போகணும்னா நாம மூணு மணிக்கு எந்திரிச்சு குளிக்கணும். நோ வே… இப்ப குளிக்கறது தான் பெட்டெர்.” சுப்புவும் மீனுவுடன் சேர்ந்து கொண்டாள்.

“ஒவ்வொருத்தாரா குளிச்சுட்டு வாங்க. நான் கடைசியா குளிக்கறேன்.” மீண்டும் அம்பு குரல் மட்டும் வர,

“ஒவ்வொருத்தரா குளிச்சா டைம் ஆகும்..”

“அதுக்கு…?” பதறி எழுந்தாள் அம்பு.

“க்ரூப் பாத்.. வோவோஒ…” சுப்பு தான் போட்டிருந்த டீஷர்ட்டை கழட்டி சுழற்றினாள்.

“தெய்வமே..! நோ நோ …” அம்பு அறைக்குள்ளேயே  ஓட மற்ற இருவரும் அவளைப் பிடிக்க ஓடினர். அவர்கள் இருந்த அரை ஒரு சூட் ரூம் என்பதால் இவை சாத்தியம்.

இது இவர்களுக்கு சிறு வயதில் ஒரு விளையாட்டு. மூவரும் ஒன்றாக ஷவரின் கீழ் விளையாடிக் கொண்டே குளிப்பர்.

“சின்ன வயசுல இதெல்லாம் ஓகே.. இப்பயுமா..வேணாம் மச்சீஸ்..விஷ பரிட்சை.” சோபாவின் பின் புறம் நின்று கொண்டு அம்பு சொல்ல,

“அதெல்லாம் முடியாது. நாம எப்பயுமே ஒளிவு மறைவு இல்லாத ஃப்ரெண்ட்ஸ்.. கம்மான் பேபி..” மீனு அவளை மடக்க ஓரத்தில் வாகாக நின்றாள்.

மறு புறம் சுப்புவும் வந்து அவளை ரவுண்ட் கட்ட மாட்டிக்கொண்டாள் அம்பு .

“சரி சரி.. என்னோட டவல் எடுத்துட்டு வரேன்.” என சமாதானத்திற்கு வந்தாள்.

மூவரும் தங்களின் உடலை டவலால்  சுற்றிக் கொண்டு வந்தனர். மீனு சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடலைத் தன் கைபேசியில் இருந்து அங்கிருந்த ப்ளேயரில் ஓடவிட்டாள். சிறு வயதில் ஒன்றாகக் குளிக்கும் போது இந்தப் பாடல் தான் அவர்களுக்கு சிச்சுவேஷன் சாங். அதையே இப்போதும் ஓடவிட்டாள்.

ஆளுக்கு கையில் ஒரு துண்டும், தங்களை சுற்றியபடி ஒரு துண்டுமாக ஆடத் தயாரானார்கள்.

‘மல மல மல..மருத மலே..மலே மருதமலே..

சிலே சிலே சிலே வெண்கலச் சிலே ..சிலே வெண்கலச் சிலே …’

ஆட்டம் ஆரம்பமாகி களை கட்டத் தொடங்கியது.

கட்டிலின் மேல் நின்று சுப்பு ஆட, சோபாவின் மேல் அம்புவும் கீழே நின்று மீனுவும் குத்தாட்டம் போட்டனர்.

‘புள்ளி வைக்குறா
பொடியன் சொக்குறான்
புள்ளி வைக்குறா
பொடியன் சொக்குறான்’ அம்பு கமலு சொக்குறான் என்று பாட,

‘மச்சான் பொல்லாதவன்
கையில் இல்லாதவன்
ரெண்டு போட்டாலுமே
வெளியே சொல்லாதவன்’ சுப்பு பதிலுக்குப் பாடினாள்.

இப்படி மாறி மாறி கட்டிக் கொண்டு ஆடி பாடி ஒரு வழியாக பாத்ரூமிற்குச் சென்று அங்கே சிறிது நேரம் ஆட்டம் போட்டு, பின் ஒவ்வொருவராக தனியே குளித்து வந்து படுத்தனர்.

“மீனு அலாரம் வை டி.. டயர்ட் ல தூங்குனாலும் தூங்கிடுவேன்..” சுப்பு சொல்லும் போதே அம்பு தூங்கிவிட்டிருந்தாள். மீனு அலாரம் வைத்துவிட்டு பின் தூங்கப் போனாள்.

இங்கே நிலைமை இப்படி இருக்க, அங்கே கமல் தன் நண்பனுக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

“மாப்ள என்னை நல்லவனாவே இருக்க விடமாட்டாளுங்க போலிருக்கு டா.”இப்படி ஆரம்பிக்க,

“என்ன டா, உன்னை சீண்டுனது யாரு. எப்ப கச்சேரி?” அவனது நண்பன் பதில் அளித்தான்.

“என் அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் பொண்ணுங்க.”மொட்டையாக நிறுத்த,

“பொண்ணுங்க வா.. டேய் ஒன் டு ஒன் மேட்ச்சே நீ நின்னு ஆடுவ, இதுல ரெண்டா மூனா..?” ஆர்வமானான்.

“மூணு பொண்ணுங்க டா. ஆனா என் மேல ஓவரா இன்ட்ரஸ்ட் காட்றது ஒருத்தி தான். நானும் அடக்கமா இருக்கலாம்னா விட்ராளுங்களா பாரு. ஃபுல் மேட்ச் வரைக்கும் எல்லாம் போகாது மாப்ள..ஜஸ்ட்  இன்டர்வல் வரைக்கும் போகும்னு தோணுது.” கமல் தன் யூகத்தை சொல்ல,

“உனக்கு மச்சம் டா. படிக்கறப்பவும் டிமாண்ட்ல இருந்த, இப்பயும் ஜாக்பாட் தான். என்ஜாய் மாமா.” இதற்கு வாழ்த்துக் கூறி வரவேற்றான் அவனது நண்பன்.

“பாப்போம் டா. ஆனா ஆளு செம பிகர். படம் காட்றாளுங்க. அல்வா தான். எங்க அப்பாக்கு நேரா நான் வேற ரொம்ப நல்லவனா இருப்பேன். அவரே பொண்ணுங்கள கூட்டிட்டுப் போ ன்னு என் மேல இருக்கற நம்பிக்கைல சொல்லிடாரு. என்ன நடந்தாலும் என் கைல எதுவும் இல்ல. சரி மாப்ள ரெண்டு நாள் பிசி, எதாவது வேணும்னா கூப்டறேன்.” வைத்துவிட்டான்.