C/O-Kadhali4

                                                                          C/O காதலி 4

 

 மாலை நான்கு மணிக்கு கமல் , சுப்புவிற்கு போன் செய்தான். அவளது கைபேசி எண் அவனிடம் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருந்தது.

“இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு இந்த ரிசார்ட்டோட பின் பக்கம் வந்து நில்லுங்க. நான் கார் எடுத்துட்டு வந்து வெய்ட் பண்றேன். ஓகே வா?” விஷயத்தை மட்டும் கூறினான்.

“ஹே..சூப்பர் .. வி ஆர் வெய்டிங் ..” பரபரப்பானாள் சுப்பு.

தன் உயிர் தோழிகளிடமும் விஷயத்தைக் கூற, “எனக்கு கொஞ்சம் உள்ள பக் பக் ன்னு இருக்கு மச்சான்.” வழக்கம் போல அம்பு தான் அழுதாள்.

“ இப்ப நீ வரலன்னா பரவால்ல.. நாங்க போறோம். “ சிறிது இடைவெளி விட்டவள், “நான் போறேன். ஹே மீன்ஸ் நீ வரியா, இல்ல இவ கூடவே தூங்கறியா?” சற்று எரிச்சலாக பார்த்தாள்.

“நான் எப்பவோ ரெடி மச்சி. பை அம்பு…” அவளுக்கு டாட்டா காட்ட,

தோழிகளோடு செல்லாமல் தவிர்க்கவும் அவளால் முடியவில்லை.

“நானும் வரேன் டி… ஒரு பயத்துனால சொன்னா… அப்படியே விட்டுட்டு போய்டுவீங்களா..பக்கீங்களா..” செல்லமாகக் கடிந்து கொண்டே அவளும் தன் காலனியை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

மூவரும் கிளம்பி கமல் சொன்ன இடத்தில் வந்து நிற்கவும் அங்கே காருடன் அவன் வரவும் சரியாக இருந்தது.

“கெட் இன் ..குயிக்” அவசரப் படுத்தினான். அதற்குள் மூவரும் ஏறிக்கொண்டனர்.

“எங்க போறோம்.?” அம்புவின் கேள்வி அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“என் ப்ரென்டோட வீட்டுக்கு.” காரை ஓட்டிக்கொண்டே பதில் தந்தான்.

வீடு என்றதும் ஏனோ சற்று நிம்மதியாக இருந்தது அவளுக்கு.

“என்னது வீட்டுக்கா..? அங்க அவன் பேரெண்ட்ஸ் எல்லாம் இருக்க மாட்டாங்க தான?” சுப்பு கண்களை விரித்துக் கேட்டதில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“நோ ஒன். என் ப்ரென்ட் கூட இல்ல. அவன் துபாய் போயிருக்கான். அவங்க பேரேன்ட்ஸ கூட்டிட்டு. சோ வீடு என் பொறுப்புல தான் இருக்கு. டோன்ட்வொர்ரி.”

“ஓ! ரொம்ப நல்லது.” நெஞ்சில் கை வைத்து நிம்மதி அடைந்தாள்.

“ஆனா உங்களுக்கு ரொம்ப தைரியம் தான். தனியா ட்ரிப் வந்து, இப்படி தம் அடிக்க கிளம்புன பொண்ணுங்கள நம்ம நாட்டுல நான் பாத்தது இல்ல.” ஒரு கையால் லாவகமாக காரைச் செலுத்தினான்.

“அதான் இப்ப பாக்கறீங்களே..புதுமை பெண்கள்…” மீனு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள,

அம்புவும் சுப்புவும் சிரித்தனர்.

“ ஆமா ஆமா ரொம்ப புதுசு. பாரதியார் இப்படிப் பட்ட பொண்ணுங்கள தான் தேடினாராம். பாவம் அவரு நீங்க இப்போ வந்து பொறந்துடீங்க. இல்லனா அன்னிக்கே அவர் தெரியாம சொல்லிட்டேன்னு கவிதை எழுதறதையே விட்டிருப்பாரு.” தன் பங்கிற்கு வாரிவிட்டு வண்டியை ஒரு காம்பௌண்டுக்குள் நிறுத்தினான்.

வீடு சிறிதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. அது ஒரு தனி வீடு. மூன்று அறைகள் மற்றும் ஒரு ஹால் டைனிங் ஹால் வராண்டா அதன் பிறகு சிறிய தோட்டம் என அனைத்து வசதிகளும் கொண்ட வீடு. வீட்டின் பின் புறம் கடலின் கேட்டுக்கொண்டே இருந்தது. காற்றும் நன்றாக வந்தது.

“பியூட்டிபுல் ஹௌஸ்” அம்பு ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருக்க,

“சரி சரி மேட்டர் எங்க?” சுப்பு அவனிடம் கை நீட்டினாள்.

“ஏன் பறக்கற… இங்க பாருங்க.. இது நார்மல் சிகரெட் தான். ரெண்டு தான் தருவேன். அதை நீங்க ஒழுங்க தம் புடிச்சு புகை விட்டா தான் மத்தது… ஓகே வா” கமல் டீல் பேச,

“புகை விட வரலன்னா…” சுப்பு அவனைப் பார்க்க

“ரிசார்ட் போய் சாப்ட்டு தூங்குங்க.”

“ஹ்ம்ம்… மோசம் நீங்க.” அவன் தோளில் இடித்தாள்.

கமல் ஏனோ இம்முறை சாதாரணமாகத் தான் எடுத்துக் கொண்டான். ஆனால் அவள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்கனவே அவனுக்கு வந்துவிட்டிருந்தது. அதை முழுவதும் தப்பான எண்ணம் என்று சொல்ல முடியாது.

“என்ன மோசம்.. டோப் அடிக்க முதல்ல புகை விட தெரியனும். அதுவே வரலன்னா அப்பறம் என்ன இருக்கு. என்ன மீனு சரி தான..?” கமல் சகஜமாக அவளையும் பேச்சில் சேர்க்க,

“எங்கள பத்தி என்ன நெனச்சீங்க.. எதையும் முடிக்காம இருக்க மாட்டோம். கண்டிப்பா ரெண்டு சிகரெட் முடியறதுக்குள்ள புகை விட்டுக் காட்றோம்.” சுப்புவும் அவளும் ஹைபைவ் கொடுத்துக் கொண்டனர்.

“அதுசரி.. படிப்புல எப்படி… ட்வெல்த்ல எவ்வளோ மார்க்…” இவர்கள் எங்கே பாஸ் ஆகப் போகிறார்கள் எண்பது போல் அவன் கேட்க,

“நான் 85 மீனு  84 அம்பு  89.” புருவத்தை உயரத்தினாள் சுப்பு.

“வாவ்… தட்ஸ் குட். சோ எல்லாத்துலையும் பெரிய லெவல்ல இருக்கணும். அப்படித் தான..?”

“அப்கோர்ஸ்.. அது தான் எங்களுக்குப் பிடிக்கும். சரி சரி டைம் ஆகுது. சீக்கிரம் குடுங்க.” அவசரப் படுத்தினாள்.

“அம்பு… இங்க வா.” மீனு அழைத்தாள்.

மூவரும் டேபிளில் ஆறு சிகரெட்களை வைத்துக் கொண்டு சுற்றி அமர்ந்திருக்க, கமல் அவர்களின் எதிரே அமர்ந்திருந்தான்.

“என்ன யோசனை… கமான் .. அடிங்க…”

மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ரெடி கேர்ள்ஸ்..” என ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் சுப்பு.

அம்பு முதலில் தயங்கினாளே தவிர இப்போது ஜோதியில் ஐக்கியமாகி இருந்தாள். முதலில் அவள் தான் சிகரெட்டை பற்ற வைத்தாள்.

மூவரும் ஒரே நேரத்தில் வாயில் வைத்து புகையை உள்ளே இழுக்க முயற்சி செய்தனர். உள் வரை செல்லவில்லை வாயிலேயே புகை நின்றது. சரியாக இழுக்கவும் தெரியவில்லை.

“நான் கரெக்ட்டா தான பண்றேன் கமல். அப்புறம் ஏன் சரியா புகை  வரல…” அவனிடம் அருகில் வந்து கேட்க,

“புத்திசாலி… இங்க பாரு…” அவள் கையில் இருந்த சிகரெட்டைப் வாங்கி அவன் வாயில் வைத்துப் பிடித்துக் காட்டினான். உள் வரை புகையை இழுத்து மீண்டும் அதை வெகு அழகாக வெளியே ஊதினான்.

“இப்படி உள்ள இழு… உள்ளே போறது உனக்கே ஃபீல் ஆகும். அப்புறம் வெளிய விட வேண்டியது தான்.

“வாவ்.. சூப்பரா விடறீங்க. எவ்ளோ நாளா நீங்க  அடிக்கறீங்க?” அவன் உதட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டாள்.

“நான் ஒன்பதாவது படிக்கறப்ப கத்துகிட்டேன். ஆனா பத்தாவது படிக்கறப்ப தான் ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போய் அடிக்க ஆரம்பிச்சேன்.” அவளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க

அம்பு விற்கு புகை தொண்டைக்குள் சிக்கி இருமலை வரவைத்தது. அவளைக் கண்டத்தில் மீனுவும் பாதியில் இழுப்பதை நிருத்த்த அவளும் இரும ஆரம்பித்தாள்.

“ஸ்லொ… ஸ்லோ.. பொறுமையா …” என அவன் பதறி.. “எனக்கு இது தேவையா…” என தலையில் வேறு அடித்துக் கொண்டான்.

“இங்க பாருங்க கமல்…” சுப்பு அவனை அழைத்து வாய் வழியே புகை விட்டுக் காட்டினாள்.

“ஹே மச்சான்… சூப்பர் டி” மீனு அவள் அருகில் வந்து “எனக்கும் சொல்லிக் குடு” என்க.

“ஈசி மச்சான்… இப்படி உள்ள இழுத்து ..ஸ்ஸ்ஸ்ஸ்…… வெளிய விடு …ஹூஉஉஉ…..”மீண்டும் செய்து காட்ட,

அம்பு அதற்குள் முயன்று கொண்டிருந்தாள். மீனுவும் முயன்றாள்.

முதல் சிகரெட்டை சரியாக உபயோகப் படுத்தாமல் அடுத்ததை எடுத்து முயல, அது வெகு விரைவில் கை கொடுத்தது.

மூவரும் கமலிடம் வந்து நிற்க,

“இப்ப என்ன சொல்றீங்க..” என்றனர்.

“ம்ம்ம்… வெல் அண்ட் குட்.. பொண்ணுங்க எல்லாத்தையும் சீக்கிரம் கத்துப்பீங்க.. சரி அவ்ளோ தான…கிளம்பலாமா?” எதுவும் இல்லை என்பது போலக் கிளம்ப ,

“ஹல்லோ… இப்படி போய்ட்டா எப்படி.. அடுத்தது எப்போ…” சுப்பு கை நீட்டினாள்.

“யம்மாடி இந்த ஸ்பீட்ல போனா ஒரே நாள்ல கேன்சர் வந்துரும் .. பொறுமை வேணும்.” பொறுப்பாக விளக்கினான்.

“ இல்ல கமல் ரெண்டு சிகரெட்ல அடிச்சா டோப்…” சுப்பு முடிக்காமல் இழுக்க..

“உங்க அம்மா அப்பா எல்லாம் உங்கள அத்து விட்டுட்டாங்களா? ஒரே நாள் ல சிகரெட், கஞ்சா, தண்ணி ன்னு இறங்க ரெடியா இருக்க…” நம்மால் கெட்டுப் போகிறார்களே என்று ஒரு சிறு உறுத்தல் அவனுக்குள் இருந்தது போலும்.

“அப்படி எல்லாம் இல்ல. சும்மா ஃபன் பண்ணத் தான். நாங்க ஒன்னும் ரெகுலரா அடிக்கற டைப் இல்ல.” அம்பு பதில் சொல்ல,

“ம்ம்ம்… சரி நான் இதுக்கு மேல என்னத்த சொல்றது… இருங்க என் ப்ரென்ட்கு கால் பண்ணி கொண்டு வர சொல்றேன்.” தன் கைபேசியை எடுத்துக் கொண்டு செல்ல முயல,

“அப்ப உங்க கைல இல்லையா? கொண்டு வரலயா? ம்ம்ம்… “ சுப்பு முகம் தூக்கினாள்.

“ஹே.. என்ன பாத்தா என்ன ட்ரக் சப்ளையர் மாதிரி தெரியுதா?” நாக்கை மடக்கி அவள் தலையில் தட்டினான்.

“ச்ச ச்ச அப்படி சொல்லல..ஆனா இப்போ எங்களுக்கு நீங்க தான சப்பளை பண்றீங்க..” ஈஈ..என்று பல்லைக் காட்ட,

“உனக்கு கொழுப்பு ஜாஸ்தி…”என்றுவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு அவனது நண்பனுக்கு அழைத்து சிலவற்றைக் கொண்டு வருமாறு கூறினான்.

அந்த நேரம் மீனுவுக்கும் அம்புக்குவுகும் அவர்களது தாயிடமிருந்து அழைப்பு வர, ஆளுக்கு ஒரு அறைக்குள் புகுந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சுப்பு இவனைத் தேடிக் கொண்டு வர, அவன் வெளியே நின்று நண்பனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

இது தான் சமயம் என்று அவன் திரண்ட தோளில் ஒரு கையை மடக்கி வைத்துக் கொண்டு சுப்பு நின்றாள்.

“என்னது இது..!” அவன் ஓரப் பார்வை பார்க்க,

“பிடிக்கலையா? எடுத்துறவா…” கையை எடுத்துவிட்டு சிணுங்கினாள்.

“பிடிக்கலன்னு எவனாச்சும் சொல்வானா…ஆனா கொஞ்சம் ஓவர் ஸ்பீட்டா இருக்கே உன் வயசுக்கு அதான் கேட்டேன்.” மீண்டும் அவளது கையை எடுத்து தன் தோளில் வைத்து கொண்டான்.

“நாங்க படிச்ச எடத்துல பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்ணா தான் பழகுவோம். ப்ரெண்ட்லியா…” என்றாள்.

“இது ப்ரெண்ட்லியா தெரியலையே…” புருவத்தை உயர்த்திக் கேட்க…

“தெரியுதுல்ல..அப்புறம் என்ன…? ஒன்னும் தெரியாத நல்லவன் மாதிரி சீன்…”

“ஓ… அப்போ என்ன லவ் பண்றியா…?” அவன் புரியாமல் கேட்க,

“லவ்ன்னு சொல்ல முடியாது. பட் உங்க சார்ம் ல இம்ப்ரெஸ் ஆயிட்டேன். வேணும்னா ப்ரெண்ட்ஸ் வித் அட்வான்டேஜ் வெச்சுக்கலாம்.” சொல்லிக்கொண்டே அவளது இன்னொரு கையையும் அவனது கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டாள்.

“நான் ஃபாரின் ல படிக்கறப்ப இதெல்லாம் சகஜம். இப்ப இங்கயும் ஆரம்பிச்சுடீங்க.. ஹ்ம்ம்.. ஓபன்னா கேட்கறேன் … எனிவே எனக்கு பெனிபிட் என்ன..?” இனி மறைத்துப் பேசத் தடை என்ன இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு உதித்தது.  

“என்ன பெனிபிட்… புரியல…?” இவன் எதைச் சொல்கிறான் என குழம்பினாள் சுப்பு.

“நமக்குள்ள எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா….?” அவளை நெருங்கி அணைத்தபடி நின்றான்.

இந்த திடீர் அணைப்பு அவளுக்குமே புது உணர்வைத் தர, அதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.

“இதுவும் நல்லா தான் இருக்கு….”அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள்.

அவன் அவளை சுவரோரம் இழுத்து சாய்த்துக் கொண்டு அவளது முகத்தில் முகம் உரசி காது மடலில் மூசுக் காற்று படற, அவளது பிங்க் நிற கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் வைத்தான்.

சுப்புவிற்கு ஜிவ்வென்று எங்கோ பறப்பது போல் இருந்தது.  அவளுக்கும் இது புதிது. அத்துடன் அவளது கண்களுக்கும் மனதிற்கும் அவனைப் பிடித்தும் இருக்கவே அந்த முத்தமும் அணைப்பும் பல மடங்கு இனித்தது.

“ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்.. இது தான் ..” என்றாள்.

“எனக்கும் இது தான் பிடிக்கும். நோ கமிட்மென்ட்ஸ்” என்றான்.

அதற்குள் அவனது நண்பன் கையில் சிறிய பையுடன் அங்கே வர, அதைப் பெற்றுக் கொண்டு அவனை வாசலோடு அனுப்பினான்.

இருவரும் உரசிக் கொண்டு உள்ளே வர மீனுவும் அம்புவும் ,”முடிச்சுட்டா மச்சான்” என ஒருவருக்கொருவர் பார்த்து சொல்லிக் கொண்டனர்.