dhuruvam 16

துருவம் 16

                மதுரை ஏர்போர்ட் வளாகம் முழுவதும், ஒரே கூட்டம் கூட்டாக நிறைந்து இருந்தது. ஏதோ, அரசியல் கட்சி தலைவர் தான் வருகிறார் என்று, அங்கு உள்ள சிலர் நினைக்க, அவர்கள் நினைப்புக்கு எல்லாம் அப்பால் வந்து இறங்கியவர்களை கண்டு அவர்களுக்கு சப்பென்று ஆனது.

            ஆம், அங்கே வந்தது காவ்யஹரிணியும், faiq உம் தான். தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு இருந்தவள், வெளியே தெரிந்த காட்சியை கண்டு wow என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

            அங்கே இந்த வரவேற்பு எல்லாம் faiqகிற்காக, தன் தாத்தா செய்த ஏற்பாடு என்று புரிந்த நொடி, முகத்தில் பளிச்சென்று புன்னகை.

              அதுவும் அங்கே நின்று இருந்த கரகாட்டகரார்களின் ஆட்டம், அவளை ஈர்த்து அதில் தானும் இணைய ஓடினாள் அங்கே. அவளின் ஓட்டத்தை பார்த்து, என்னமோ ஏதோ என்று அவனும் அவளின் பின்னே ஓடினான்.

              முன்னே, அவள் ஒரு டிராலியை நகர்திக் கொண்டு ஓட, இவனும் பின்னே ஓடினான். வெளியே தெரிந்த கூட்டத்தை பார்த்து அதிர்ந்தான் என்றால், அவள் செய்து கொண்டு இருந்த கூத்தை பார்த்து மேலும் அதிர்ந்தான்.

              அவள் அங்கே ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு, அவர்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டு இருந்தாள். அவனை பொறுத்த வரை, பாடல் என்றால் அது மிகவும் மெலடியாக இருக்க வேண்டும்.

              மிகவும் மெல்லிய, உடல் அசைவுகளை கொண்டு ஆட வேண்டும், அந்த இசையை ரசித்துக் கொண்டு. ஆனால், இவளை பார்த்த நாளில் இருந்து, இப்படியான பாடல்களுக்கு தான் அவள் அதிகம் ஆடி பார்த்து இருக்கிறான்.

           அதிலும் இப்பொழுது அவள், தலையில் கும்பம் வைத்து ஆடிக் கொண்டு இருந்ததை பார்த்து, அவன் அதிராமல் என்ன செய்வான். தலையில் இருப்பது விழாமல், ஆடும் அவளின் திறனை பார்த்து மனதிற்குள் சபாஷ் போட்டான்.

           அதற்குள், ஏற்கனவே அவனுக்கு அறிமுகமாகி இருந்த அவளின் தம்பி மனோகர், faiqகை நெருங்கி இருந்தான்.

             “வாங்க மச்சான்! எங்க மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன். எங்க என் அக்கா? உங்களை விட்டுட்டு எங்க போனா?” என்று அவன் விசாரித்தான்.

              அதற்கு, faiq அவள் இருக்குமிடத்தை கை காட்டவும், அங்கே பார்த்த அவன் கையை கொண்டு தலையில் வைத்து விட்டான்.

         “எங்க அக்கா ஆட ஆரம்பிச்சா, இப்போதைக்கு நிறுத்த மாட்டா. நம்ம அவ கண்ணு முன்னாடி போய் நின்னு, நேரமாச்சு கிளம்பு அப்படின்னு சொன்னா தான் கிலம்புவாஎன்று அவனிடம் கூறிக் கொண்டே, அவனை அழைத்துக் கொண்டு அவள் ஆடும் இடம் நோக்கி சென்றான்.

              காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
         கம்புசோளம் தினைவிதைத்துக்
       காலைமாலை காட்டைக் காக்கத் –         தங்கரத்தினமே
    கண்விழித்திருந்தாளாம் -பொன்னுரத்தினமே. 1

என்ற நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடிக் கொண்டு இருந்தவர்களோடு, அவள் பின்னோடு பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தாள்.

           “அக்கா! அடியே! காவி கலர் போட்ட, காவி இங்க நீ ஓடி வா நீ!”  என்று மனோகர் அவளை சீண்டவும், அதுவரை ஆடிக் கொண்டு இருந்தவள், அருகே கேட்ட அவளின் தம்பியின் கேலிக் குரலில், சிலிர்தெழுந்தாள்.

              “காவின்னு கூப்பிடாத டா எருமை, உன்னால இப்போ அந்தா நிற்கிறான் பாரு, ஒரு வளர்ந்து கெட்டவன், அவனும் சில சமயம் என்னை இப்படி கூப்பிட்டு சீண்டுறான் டா எருமைஎன்று அவனோடு சண்டை பிடிக்க தொடங்கி விட்டாள்.

         “நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம், அங்க பாருங்க அக்கா எவ்வளவு நேரமா, நம்ம மச்சான் வெயிலில் நிற்பார். வாங்க நீங்க அவரை கூட்டிட்டு, தாத்தா அங்க நமக்காக காத்துகிட்டு இருக்காங்கஎன்று எடுத்து சொன்ன பிறகு தான், அவளுக்கு நியபாகம் வந்தது.

           அசடு வழிந்த முகத்துடன், அவனிடம் மன்னிப்பு கூறி அழைத்து சென்றாள். அங்கே இவர்களுக்காக, மனோ டிரைவருடன் காத்து இருந்தான்.

          அங்கே நின்ற புத்தம் புதிய கருப்பு பென்ஸ், இவளை வா என்று அழைத்தது போல் இருக்கவும், டிரைவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு, அவரை மற்றொரு வண்டியில் அனுப்பி வைத்தாள், மனோவுடன்.

            “ஆனா அக்கா நீ பண்ணுறது ஓவர், நான் உங்க கூட பேசலாம் பார்த்தா, நீ என்னை கழட்டி விடுறதில் குறியா இருக்கஎன்று அவளிடம் முறுக்கி கொண்டு மற்றொரு வண்டியில், மனோ சென்றான்.

         Faiq புரிந்து கொண்டான், அவள் தன்னிடம் தனியாக பேச எண்ணுகிறாள் என்று. அவனுக்கும் சில விபரங்கள், அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்ததால், அவளுடன் பயணம் செய்தான்.

          முதல் ஒரு கால் மணி நேரத்திற்கு, இருவரும் ஒன்றும் பேசவில்லை. காவ்யஹரிணி வீடு, அழகர் கோவில் செல்லும் இடத்தில் இருக்கிறது.

          ஏர்போட்டில் இருந்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல எப்படியும் இன்னும் அரை மணி நேரமாகும், என்பதை அவள் அறிவாள். இந்த நேரத்தில், அவள் அவனின் ஆராய்ச்சி பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு, முதலில் அவனுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

              ஆகையால், அவளே அவனிடம் பேச்சை முதலில் தொடங்கி விட்டாள்.

          “உங்க ஆராய்ச்சி பற்றி சொல்லுங்க, எங்க போகனும் நீங்க? அப்புறம் முதல, உங்களோட ஆராய்ச்சி முதலில் முடிச்சிடலாம். என்னோடது, எப்படியும் ரொம்ப நீளும் போல தெரியுது, அதனால் தான் சொல்லுறேன்என்றவளை பார்த்து சிரித்தான்.

        “சரி, நான் கண்டுபிடிச்சு வச்சு இருக்கிற location, உனக்கு வாட்ஸ் ஆப் ஷார் செய்றேன். நீ அது எந்த இடம் மட்டும் கண்டுபிடிச்சு சொல்லு, மிச்சம் எல்லாம் நான் பார்துப்பேன் வனிஎன்று அவன் கூறவும், அவளும் சரி என்றாள்.

            இறுதியில் அவள் பெயரை சுருக்கி, மென்மையாக அவன் அழைத்த வனி அவள் நெஞ்சுக்குள் அழகாக அமர்ந்து கொண்டது. அதில், அவள் முகம் செந்நிறம் பூசி, வெட்கத்தை உண்டாக்க அவன் ரசிக்க தொடங்கினான் அவளை.

          அவனின் பார்வை, தன் மீது இருப்பதை உணர்ந்த ரிகா கையில் கார் சற்று தடுமாறியது. அதற்குள், சுதாரித்து சீராக ஒட்ட தொடங்கினாள்.

            “என் கூட படிச்ச பையன் பேர் ஸ்டீஃபன், அவன் தான் ஸ்பாட் கண்டுபிடித்து சொல்லுற ஆல். நீங்க வீட்டுக்கு வாங்க, அங்க அவுட் ஹவுஸ் தான் அவன் தங்கி இருக்கான்”.

              “அவன் கிட்ட நீங்க இதை சொல்லுங்க, சீக்கிரம் கண்டுபிடித்து சொல்லுவான்.  ஹலோ! எதுக்கு இப்போ இந்த சிரிப்பு? நான் என்ன அப்படி சிரிக்கிற மாதிரி சொன்னேன்என்று கோபம் கொண்டாள்.

            “நான் அதுக்கு சிரிக்கல, நீ நாம பிளேன் வரும் பொழுது, ஒரு கேள்வி கேட்ட பாரு, அதை நினைச்சு இன்னும் சிரிப்பு வருதுஎன்றவனை இப்பொழுது கொலைவெறியுடன் ஏறிட்டாள்.

           “சீட் பெல்ட் போட்டு இருக்கீங்களா? இல்லைனா போட்டுகோங்க, இப்போ கொஞ்சம் வேகமா போக போறோம்என்று அவள் கூறிய அடுத்த நொடி வண்டி சீறிக் கொண்டு பாய்ந்தது.

            பழக்க தோஷத்தில், வண்டியில் ஏறிய நொடியே சீட் பெல்ட் அணிந்து இருந்தான். இந்த தாறுமாறான ரோட்டில், அவள் இவ்வளவு வேகமாக ஒட்டி செல்வது அவனுக்கு தான் திகிலாக இருந்தது.

           இப்படி கரடு முரடான ரோடு என்பது, அங்கே துபாயில் கிடையவே கிடையாது. இங்கே எப்பொழுது, நல்ல ரோடு வரும், எப்பொழுது இப்படி தாறுமாறான ரோடு வரும் என்று கணிக்க முடியாமல் தடுமாறி தான் போனான்.

           அழகர் கோவில் செல்லும் வழியில் தான், அவர்களின் மாளிகை(வீடு) அமைந்து இருந்தது. அவன் தன்னை பார்த்து கேலி செய்ததில், சற்று கோபத்தை காட்ட அவள் வண்டியை வேகமாக செலுத்தினாள்.

               அவளின் இந்த கோபத்தை பார்த்தவனுக்கு, சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டான். இந்த ரோட்டில், என்ன தான் அவள் வேகமாக சென்றாலும், வண்டியை லாவகமாக செலுத்தும் வித்தை அவளுக்கு தெரிந்து இருந்ததை கண்டு வியந்தான்.

             அவன் அவளை ரசிக்க, அவளோ மனதிற்குள் அவனை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தாள்.

             “ராஸ்கல்! ஹெலிகாப்டர் வச்சு நேரா அங்க இறங்க வேண்டியதை, இவன் சாகச வித்தைகாக என்னை இப்படி நடக்க விட்டு இருக்கான். அது மட்டுமா, எவ்வளவு கஷ்டப்பட்டு உயிரை கையில் பிடிச்சு வந்து இருக்கேன்”.

                 “ ஏண்டா இப்படி பண்ணின? அப்படின்னு கேட்டா, இந்த அனுபவம் உனக்கு மறக்காது தானே, அதுக்கு தான் அப்படினு கூலா சொல்லுறான், இடியட்”.

               “அது என்னமோ வாஸ்தவம் தான், இப்படி திகில் சாகசம் எல்லாம் இனி கண்டிப்பா எடுக்க மாட்டேன். ஆனா, இவனோட இருந்த அந்த நாட்கள் ரொம்ப அழகா இருந்துச்சுஎன்று அங்கு இவர்களுக்குள் நடந்த நிகழ்வுகளை, அசை போட்டுக்  கொண்டே ஒட்டிக் கொண்டு இருந்தவள், நடுவில் எந்த மடையனோ, காரை குறுக்கே நிறுத்தி இருந்ததை பார்த்து கடுப்பாகி, காரை நிறுத்தினாள்.

                  காரை விட்டு வெளியே அவள் இறங்கியவுடன், அந்த காரின் பக்கவாட்டில் இருந்து, எட்டு பேர் கையில் கத்தி, அருவாளுடன் அவர்கள் வழியை மறித்து நின்று இருந்தனர்.

         Faiq, உடனே வண்டியில் இருந்து வேகமாக இறங்கினான், அவளுக்கு உதவும் பொருட்டு.

             “வா மா புது ஆராய்ச்சியாளர்! இந்த இதை எடுத்து செய்ய கூடாது அப்படினு, முன்னாடியே உங்க வீட்டுக்கு எச்சரிக்கை கொடுத்து இருந்தோம். திரும்பவும், நீங்க இப்படி தோண்டனும் அப்படினு வரது சரியில்லை”.

             “நீ கண்டுபிடிச்ச வரை போதும், இதோட நிறுத்தினா நல்லது சொல்லிட்டேன். நிறுத்துறேன் சொன்னா, இப்படியே நாங்க கிளம்பி விடுவோம். இல்லை, எங்க ஆளுங்க போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பாங்க, எப்படி வசதிஎன்று அங்கே வேஷ்டி சட்டையில், முறுக்கு மீசையை திருகிக் கொண்டே, நான் தாதா என்று காட்டிக் கொண்டான்.

            “ஹலோ! தாதா சார்! நாங்க எல்லாம் இந்த மாதிரி மிரட்டல் எல்லாம், நிறைய பார்த்தாச்சு. நீங்க ஏன், புதுசா டிரை பண்ண கூடாது”.

             “பாருங்க! நாங்க நல்ல நேரத்திற்குள் வீட்டுக்கு போகனும், நீங்க இப்படி வழி மறிக்குறது நல்லா இல்லை. அப்புறம், இப்போ நீங்க வழி விடல சேதாரதிற்கு நான் பொறுப்பு இல்லை, இப்போவே சொல்லிட்டேன்என்று அவனை பார்த்து அஞ்சாமல் பதில் பேசியவளை கண்டு, இங்கே faiq வாயை பிளந்து விட்டான்.

         “கண்ணு! வெளிநாட்டில் இருந்து, ஆளை கூட்டிட்டு வந்து இருக்க. அவருக்கு ஒரு விபத்து நடந்தா, நீ தானே பதில் கூறனும் அந்த நாட்டு அரசாங்கத்துக்குஎன்று கூறி வெடி சிரிப்பு சிரித்தான்.

         “ஹா ஹா! செம காமெடி! அப்படியா, முடிஞ்சா அவன் மேல கை வச்சு தான் பாருஎன்று அவனை பார்த்து சவால் விட்டாள்.

           போட்ட பால் அத்தனையும், அவள் சர்வ சாதாரணமாக சிக்ஸர் அடிப்பதை பார்த்து, இனி தானே களத்தில் குதிக்க முடிவு செய்து, கையில் அறிவாள் எடுத்து வேகமாக ஓடி வந்தான், ஃபெயிக்கை குறி பார்த்து.

            Faiq, அவனை எதிர்கொள்ள தயாராக இருக்க, அவன் கிட்டே வரும் பொழுது, வலி பொறுக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தான்.

              என்ன நடந்தது? என்று திரும்பி பார்த்தவனுக்கு, அங்கே அவனின் வனி கையில் சிலம்பை வைத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக அதை சுழற்றிக் கொண்டு இருந்தாள்.

           அவனின் அடியாட்கள், அதற்குள் மொத்தமாக இவர்களை தாக்க ஓடி வரவும், சட்டென்று அவர்கள் முன்னே, அவள் பத்ரகாளியாக மாறி, அவர்களை அடித்து பின்னி எடுத்து விட்டாள்.

          திறந்த வாய் மூடாமல், பார்த்து கொண்டு இருந்த faiq, அவளின் உதவிக்கு விரைந்து சென்று, தானும் களத்தில் குதித்து சண்டையிட்டான்.

         அதிலும், இவளிடம் முதலில் பேசியவன் அவளிடம் வாங்கிய அடி சொல்லி மாளாது. Faiq, வந்து அவளை தடுக்கவில்லை என்றால், நிச்சயம் அவன் மரணித்து இருப்பான்.

          அவன் சண்டையிடும் பொழுது, அவன் பேசிய பேச்சு அப்படி. அதற்கான அடி தான், அவனுக்கு அவள் கொடுத்தது.

            அவள் முகமே ரத்த நிறம் கொண்டு இருந்தது, கோபத்தில். இப்படி ஒரு கோபத்தை, இதுவரை அவளிடத்தில் அவன் கண்டது இல்லை. எது அவளை, இப்படி ஒரு கோபத்தை உண்டாக்கியது என்று யோசித்தான்.

       அதற்குள், அவள் விறுவிறுவென்று வண்டியில் ஏறி அமரவும், அவனும் உடனே வண்டியில் ஏறினான்.

            வண்டி நேராக, அவளின் வீட்டிற்குள் சென்று நின்றது. வீட்டை பார்த்தவன், அதிர்ந்து போய் அவளை திரும்பி பார்த்தான்.

        அவளோ, அவனை பாராமல் விடுவிடுவென்று உள்ளே செல்ல எத்தனித்தாள். ஆனால், அதற்குள் அவளின் பாட்டி, அவளை நிறுத்தி வைத்தார்.

          “என்ன கோபம் இருந்தாலும், அப்புறம் ரூம் போய் பேசிக்கலாம். இப்போ நீ அந்த தம்பியை கூட்டிட்டு வா, ஆரத்தி எடுக்கணும்என்றவரை பார்த்து எதற்கு என்று கண்களால் கேட்டாள்.

        “எதுக்கா! நம்ம கலாச்சாரம் தெரியப்படுத்த தான். மசமசன்னு இங்க நிற்காம, போய் கூட்டிட்டு வந்து இங்க நில்லுஎன்று சொன்னதை செய் என்பது போல், கட்டளை குரலில் கூறினார்.

           அதை எப்பொழுதும் மீறியது இல்லை அவள், ஆகையால் அவனை அழைத்து வந்து வாசல் முன் நிறுத்தினாள்.

          அவளின் அன்னையும், பெரிய அன்னையும் சேர்ந்து ஆரத்தி இருவருக்கும் சேர்த்து எடுத்து முடித்து, உள்ளே செல்லுமாறு கூறினர்.

          உள்ளே நுழைந்தவுடன், அங்கே அமர்ந்து இருந்தவரை பார்த்து குறைந்து இருந்த கோபம், மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறி, அவளை விறுவிறுவென்று மாடி ஏற வைத்தது.

          ஃபெயிக்கிற்கு, தலையை பிச்சிக் கொள்ளலாம் போல் இருந்தது. என்ன நடக்கின்றது இங்கே, என்று அவன் மிகவும் குழம்பி போனான்

           ஆனால், அவனின் குழப்பத்திற்கு விடை அடுத்த நாள் தெரிந்தவுடன், கண்களில் சிவப்பு ஏற அவன், அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 

தொடரும்..