mm30

mm30

மயங்காதே மனமே 30

எப்போது விடியும் என்று காத்திருந்து, ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார் ஜெயந்தி. மகன் உயிர் பிழைத்ததை, அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. நேற்றைய நாள், அவரை அத்தனை தூரம் பாதித்திருந்தது.

கொஞ்சம் லேட்டா போகலாம் பாட்டி. நான் சீக்கிரமே சமையலை முடிச்சிட்டு, உங்களோட வர்றேன்.” தாமரை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை ஜெயந்தி.

நீ ஆறுதலா சமையலை முடிச்சிட்டு, மித்ரனுக்கும், தாத்தாக்கும் பரிமாறிட்டு வந்தாப் போதும். நான் ட்ரைவர் கூட போய்க்கிறேன்மா.” சொல்லிவிட்டு, ஓடி வந்து விட்டார். மகன் கூடவே இருந்தால் போதும், என்று தோன்றியது

ஒரு ஒன்பது மணி வாக்கில் வந்தாள் தாமரை. மதுராந்தகன் கோயிலுக்குப் போயிருந்தார். மித்ரனுக்கும் அன்று தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால், ஃபாக்டரி வரை போயிருந்தான்

ஆனால், கணவனை ஆயத்தம் பண்ணி அனுப்பும் வரை, போதும் போதுமென்றாகி விட்டது தாமரைக்கு. கதிர் வேறு ஃபோன் பண்ணி லேட் ஆகிறது என்று இம்சை பண்ணிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு நகர மறுத்தவனை, ஏதேதோ அவசரகால வாக்குறுதிகள் அளித்து, கிளப்பி இருந்தாள்.

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது தாமரைக்கு. சின்னப் பையன் போல் அவன் அடிக்கும் கூத்துகள்தனக்கு முன்னால் கெஞ்சிக் கொண்டு நிற்கும் கணவன், ஒரு ஃபாக்டரிக்கு சொந்தக்காரன் என்று நினைக்கும் போது, பெருமையாகவும் இருந்தது

எதிரே வந்த நர்ஸ், அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கவும் தான், நிஜத்திற்கு வந்தாள் பெண். சட்டென்று முக பாவத்தை மாற்றிக் கொண்டவள், ராஜேந்திரன் இருந்த அறையை நோக்கிப் போனாள்.

ராஜேந்திரன் நல்ல உறக்கத்தில் இருந்தார். தாயைப் பார்த்து ஒரு முறை புன்னகைத்ததோடு சரி. அதன் பிறகு கண் விழிக்கவில்லை. தாமரை உள்ளே நுழையவும், அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் ஜெயந்தி.

வா தாமரை. தாத்தாவும், மித்ரனும் கிளம்பிட்டாங்களா?”

ஆமா பாட்டி. தாத்தா, கோயிலுக்கு போய்ட்டு அப்பிடியே இங்க வர்றேன்னு சொன்னாங்க. உங்க பேரனும், முக்கியமான ஒரு மீட்டிங்கை முடிச்சுட்டு இங்கே வர்றாங்களாம். சொல்லச் சொன்னாங்க.”

தாத்தா மாத்திரை சாப்பிட்டாங்களா?”

எல்லாம் சாப்பிட்டாங்க பாட்டி. மத்தியான சமையலையும் முடிச்சுட்டேன். நீங்க வந்து சாப்பிடுங்க.” சொல்லிய படியே பாட்டிக்குக் கொண்டு வந்திருந்த உணவை, அவரிடம் நீட்டினாள் தாமரை.

குடும்மாநீ இல்லைன்னா, இந்த சமயத்துக்கு நான் தவிச்சுப் போயிருப்பேன் தாமரை.” பாட்டியின் பேச்சில் புன்னகைத்தாள் பெண். நேற்று இரவு கணவன் சொன்ன வார்த்தைகள், செவியில் இப்போதும் ஒலித்தன.

ஆட்டம் போட்டு முடித்த பிறகும், அவளை விட்டு விலகாமல், நெடு நேரம் கதை பேசிக் கொண்டிருந்தான் மித்ரன். அவன் ஆசையைக் கெடுக்க மனமில்லாமல், அவளும்ம்கொட்டிக் கொண்டிருந்தாள்.

வைதேகி…” அந்தக் குரலில், இரண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். ராஜேந்திரன் லேசாகக் கண் விழித்திருந்தார். ஆனால் விழிகள் தாமரையை நோக்கிய வண்ணம் இருந்தன.

தாமரை சட்டென்று பாட்டியைத் திரும்பிப் பார்த்தாள். அவரும் அப்போது, தாமரையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். மனிதருக்கு இன்னும் முழுதாக நினைவு திரும்பவில்லை என்று, இரு பெண்களுக்குமே புரிந்து போனது. தாமரை வடிவில் அவர் காண்பது வைதேகியையா?

வைதேகி…” மீண்டும் அழைத்தார்.

ராஜேந்திரா…” அம்மாவின் குரலை இனங்கண்டு கொண்டவர், திரும்பிப் பார்த்தார்.

அம்மாவைதேகிம்மா. நீ பாத்தது இல்லையில்லை. இதுதான் வைதேகிம்மா. உங்கிட்ட காட்டணும்னு நினைச்சேம்மா…” ராஜேந்திரனின் கண்கள் கலங்கின.

ராஜேந்திராஇது…” பாட்டி ஏதோ சொல்லப் போகவும், அவரைத் தடுத்தாள் தாமரை. அவர் பேசட்டும் என்பது போல, அமைதியாக நின்றிருந்தாள்.

உனக்குத் துரோகம் பண்ணணுங்கிற எண்ணம், எனக்கு கொஞ்சமும் இருக்கலை வைதேகிஎன்னோட நிலைமை அப்பிடி ஆகிப் போச்சு…” இரண்டு பெண்களும் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்

உன்னைப் பத்தி வீட்டுல அம்மா, அப்பாக்கிட்ட பேசினேன். இதோ அம்மா இருக்காங்க இல்லைநீயே கேளு. முதல்ல அவங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனாநான் பிடிவாதமா நின்னேன். உன்னை ஏமாத்தணும்னு நினைச்சிருந்தா, அப்பிடி நின்னிருப்பேனா?”  தாமரை சட்டென்று பாட்டியைத் திரும்பிப் பார்த்தாள். அவர் மேலும், கீழுமாகத் தலையாட்டினார்.

ஆனாஅதுக்கப்புறம் எல்லாம் மாறிப்போச்சு வைதேகி. நான் தப்புப் பண்ணிட்டேன் வைதேகிபெரிய தப்புநான் அசந்திருந்த நேரமாப் பாத்து…” மேலே சொல்லாமல், குலுங்கி அழுதார் ராஜேந்திரன். ஜெயந்தி புடவைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டார்.

நான் என்ன பண்ணுவேன் சொல்லு? நீயா…? சுலோச்சனாவா…? எங்கிற நிலைமை வந்திடுச்சு. உன்னைக் கைவிட்டாஅது வெறும் நம்பிக்கை துரோகம் தான். ஆனாசுலோச்சனா…? எனக்கு வேற வழி தெரியலை. பண்ணின பாவத்துக்கு, பிராயச்சித்தம் தேடிக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு வைதேகிமன்னிச்சிடு…” வாய் தன் பாட்டில் புலம்பிக் கொண்டிருக்க, மீண்டும் கண்மூடினார் ராஜேந்திரன்.

அவர் மனதில் இருந்த பாரம் இறங்கியதோ, என்னவோ? அதன் பிறகு, அமைதியாகத் தூங்கினார். பாட்டியை அழைத்துக்கொண்டு, ரூமை விட்டு வெளியே வந்தாள் தாமரை. அதற்கு மேலும் பொறுக்க முடியாத ஜெயந்தி, வெடித்து அழுதார். இளையவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. மௌனமாகிப் போனாள்.

                                               ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^

காரை பார்க்கிங்கில் நிறுத்தினான் அபி. அந்திமாலைப் பொழுது. அந்த ஹாஸ்பிடல் வளாகமே கொஞ்சம் அமைதியாக இருந்தது

காலையிலேயே கீதாஞ்சலி வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள். மலர்ந்த முகத்தோடு வந்திறங்கிய மகனையும், மருமகளையும் பார்த்த போது, நாராயணனுக்கு அத்தனை மகிழ்ச்சி. மகனின் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தார்.

அன்று முழுவதும் ஓய்வெடுத்துக் கொண்டாள் கீதாஞ்சலி. அபியும் எங்கும் போகாமல், அவளைக் கவனித்துக் கொண்டான். அடிக்கடி உறங்கிப் போகும் மனைவியைப் பார்க்கும் போது, பாவமாக இருந்தது.

என்ன பாட்டி? இவ்வளவு டயர்டா இருக்கா?” பேரனின் கவலையில் சிரித்தார் அன்னலக்ஷ்மி.

பின்னே…! பிள்ளை பெத்துக்கிறதுன்னா சும்மாவா அபி. கஷ்டம்தான்பா. நாமதான் அவளை பத்திரமா பாத்துக்கணும். வெளியே எங்கேயாவது கூட்டிட்டுப் போ. வீட்டுக்குள்ளேயே இருந்தா இப்பிடித்தான் இருப்பா.” பாட்டியின் அறிவுரையின் பேரில், அவளை வெளியே அழைத்து வந்திருந்தான்.

அம்மாடிஎங்க போகலாம் சொல்லு?”

அபி…” அவள் சொல்லத் தயங்கவும், அபிக்குப் புரிந்தது

ஹாஸ்பிடல் போகலாமா?” என்றான்.

ம்…” என்றாள். அதைச் சொல்லும்போதே, முகம் மலர்ந்து போனது.

ரிசப்ஷனில் விபரம் கேட்டுக்கொண்டு, இரண்டு பேரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனின் ரூமிற்கு வெளியே நின்றபடி, மித்ரனும், கதிரும் ஏதோ ஃபாக்டரி சம்பந்தமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்

முதுகு காட்டியபடி நின்றிருந்த மித்ரன், பின்னால் வந்தவர்களைக் கவனிக்கவில்லை. கதிரின் வியந்த விழிகளில் கவனம் கலைந்தவன், நின்றபடியே திரும்பிப் பார்த்தான். அபியும், கீதாஞ்சலியும் வந்து கொண்டிருந்தார்கள்.

கதிரின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. சட்டென்று மித்ரனை நோக்கினான். அவன் முகம் உணர்ச்சிகளைத் துடைத்தாற் போல இருந்தது. கதிரின் பார்வையை உணர்ந்தவன், லேசாகத் தலையை ஆட்டினான். கதிருக்கு அவ்வளவும் போதுமானதாக இருந்தது. அவர்களிடம் விரைந்து போனவன்,

அபி சார்எப்பிடி இருக்கீங்க? கீதாம்மாநல்லா இருக்கீங்களா?” என்றான். எப்போதும் போல அபி புன்னகைக்க, கீதாஞ்சலி தான் பதில் சொன்னாள்.

நல்லா இருக்கோம்ணா. நீங்க நல்லா இருக்கீங்களா?” 

எனக்கென்னம்மாநல்லா இருக்கேன்.” அதற்கு மேல் என்ன பேசுவதென்று, இருவருக்குமே புரியவில்லை. கீதாஞ்சலி லேசாகத் தலையாட்டி விட்டு, உள்ளே போனாள். அபியும் தொடர்ந்தான்.

ரூமின் உள்ளே தாத்தாவும், பாட்டியும் இருந்தார்கள். ராஜேந்திரனும் கண் விழித்திருந்தார். இவர்களை அங்கு யாருமே எதிர்பார்க்காததால், சூழ்நிலை கொஞ்சம் கனமாகியது. இருந்தாலும், மதுராந்தகன் சட்டென்று சமாளித்துக் கொண்டார்.

வாப்பாஜெயந்தி யாருன்னு தெரியுதா? நம்ம பாலகிருஷ்ணனோட பேரன்.” கணவன் சொல்லவும், ஜெயந்தி மகிழ்ந்து போனார்.

அப்பிடியா? பாத்து ரொம்பவே நாளாச்சாஎனக்கு அடையாளம் தெரியலை. வாம்மா.” சிரித்த முகமாகப் பேசிய ஜெயந்தியை, கீதாஞ்சலிக்கு மிகவும் பிடித்தது. அபியையும் அழைத்துக்கொண்டு பெரியவர்களிடம் போனவள், சட்டென்று காலில் விழுந்தாள்.

ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா.” இப்படியொரு செய்கையை, அந்த முதியவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போனார்கள்.

தீர்க்காயுசா இருங்கப்பா…” ஜெயந்திக்கு நெகிழ்ந்து போனது

ராஜேந்திராயாரு வந்திருக்காங்க பாத்தியா? நாராயணனோட பையன். உன்னைப் பாக்க வந்திருக்கான்.” மதுராந்தகன் சத்தமாகச் சொன்னார். அந்தக் குரலே சொன்னது, அவர் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருந்ததை. ராஜேந்திரன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்

அங்கிள்இப்போ எப்பிடி இருக்கு?” கீதாஞ்சலியின் அந்தக் கேள்வியில் ராஜேந்திரன் ஆடிப் போய்விட்டார். ஸ்டீஃபனின் குரல் அப்போதும் அவர் காதில் ஒலித்தது.

சார், அபி கூட அந்தப் பொண்ணும் கார்ல இருக்கு சார்.”

ஸோ வாட் ஸ்டீஃபன்சொன்ன வேலையை முடி.” தான் அப்படிச் சொல்லி சாவு மணி அடித்த பெண், இப்போது தன்னைக் குசலம் விசாரிக்கின்றதா? இமைக்க மறந்து பார்த்திருந்தார் ராஜேந்திரன்.

அபி அத்தனையையும் அமைதியாகப் பார்த்தபடியே இருந்தான். எதுவும் பேசவில்லை. கீதாஞ்சலியின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், அபியின் முகத்தைப் பார்த்தார் ராஜேந்திரன். கீதாஞ்சலியும் அபியைத் திரும்பிப் பார்த்தாள்

இவ்வளவு தூரம் வந்து விட்டு, இதற்கு மேலும் அமைதியாக இருப்பது, அத்தனை நாகரிகமாகத் தோன்றவில்லை அபிக்கு. ராஜேந்திரன் அருகில் போனவன், அவரின் இடது கையைப் பற்றிக் கொண்டான். வலது கை இயக்கமில்லாமல் இருந்தது. அந்தக் கரத்தில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தவன்,

சீக்கிரமா எல்லாம் சரியாகிடும் அங்கிள். எதையும் போட்டு யோசிச்சு மனசு குழப்பிக்காம தெம்பா இருங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” அபி சொல்லி முடிக்கவும், ராஜேந்திரன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. திகைத்துப்போன கீதாஞ்சலி, சட்டென்று அதைத் துடைத்து விட்டாள்

அபியின் கைகளில் இருந்த தன் கையை விடுவித்துக்கொண்டு, கீதாஞ்சலியின் கையைப் பற்றியவர், அதைத் தன் கண்களில் வைத்துக் கொண்டார்

அபியின் அருகில் வந்த மதுராந்தகன், அவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்.

வயசுல சின்னவனா இருந்தாலும், நீ மனசுல பெரியவன்யா. உன்னைப் பாக்கும் போது, எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கு.” அந்த வார்த்தைகளில் புன்னகைத்தான் அபி

கொஞ்ச நேரம் பொதுப்படையாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, இவர்கள் கிளம்ப எத்தனிக்கும் போது, தாமரை உள்ளே நுழைந்தாள். கீதாஞ்சலியைப் பார்த்ததும், அவள் முகம் மலர்ந்து போனது.

வாங்க கீதாஞ்சலி. எப்பிடி இருக்கீங்க? அபி சார்நல்லா இருக்கீங்களா?”

ம்நல்லா இருக்கோம்மா.” இப்போது அபியே பதில் சொன்னான். அபியும், கீதாஞ்சலியும் இங்கு வந்திருப்பது, ஏதோ நன்மைக்கான ஆரம்பம் என்று தோன்றியது தாமரைக்கு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாள்.

தாத்தாபாட்டிநான் அபி சாரையும், கீதாஞ்சலியையும் நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணட்டுமா?” சட்டென்று கேட்டாள் தாமரை. அந்தக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. ஆனால் மதுராந்தகன் தயங்கவில்லை.

இதுக்கு எதுக்கும்மா எங்களைக் கேக்குற? நீ தாராளமாக் கூப்பிடு.” 

அபி சார்கேட்டீங்க இல்லையா? நீங்களும், கீதாஞ்சலியும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்.”

சரிம்மா.” 

உங்க வீட்டுக்கு எங்களைக் கூப்பிட மாட்டீங்களா?” தாமரை கேட்ட தோரணையில் அபியும், கீதாஞ்சலியும் சிரித்தார்கள்.

கண்டிப்பா நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும்.” கீதாஞ்சலி சொல்லவும், எல்லோரும் கல கலவென்று சிரித்தார்கள். ராஜேந்திரனும் லேசாகப் புன்னகைத்தார். சூழ்நிலை பார்ப்பதற்கு அத்தனை இதமாக இருந்தது

கீதாஞ்சலிகொஞ்சம் டல்லா தெரியுறீங்க? என்னாச்சு? உடம்புக்கு முடியலையா?” தாமரையின் கேள்வியில், கீதாஞ்சலிக்கு முகம் சிவந்து போனது. வெட்கத்தோடு தலை குனிந்த பெண்ணைப் பார்த்த ஜெயந்தி பலமாகச் சிரித்தார்.

தாமரைபுதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு, உடம்புக்கு முடியாம நிக்குதுன்னா எல்லாம் நல்ல சமாச்சாரமாத் தான் இருக்கும். அதான் கீதாஞ்சலி முகத்துலேயே எழுதி ஒட்டியிருக்கே, புரியலையா உனக்கு?” 

அப்பிடியா…? உண்மையா கீதாஞ்சலி?” பெண்கள் இருவரும் அதன் பிறகு தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். கிளு கிளுவென்று சிரித்தார்கள்

பாலகிருஷ்ணன் பாக்கியசாலி அபி. கொள்ளுப்பேரனும் பாக்கப் போறான். நான் கால் பண்ணுறேன்னு சொல்லுப்பா. பேசி ரொம்பவே நாளாச்சு.”

சரி தாத்தா.” அத்தோடு விடை பெற்றுக் கொண்டார்கள் அபியும், கீதாஞ்சலியும். கதிரும், மித்ரனும் அப்போதும் ரூமிற்கு வெளியிலேயே நின்றிருந்தார்கள். கதிர் கார் வரை கூட நடக்க, தாமரை மித்ரனுக்கு அருகில் வந்தாள்.

அத்தான்…!”

என்ன பேபி?”

ஐயோ அத்தான்! எல்லாருக்கும் முன்னாடி அப்பிடி கூப்பிடாதீங்க.”

ஏன் பேபி?”

ஐயோ!”

சரிகூப்பிடல்லை. நீ சொல்லுடா?”

அபி சார் கூட பேசி இருக்கலாம் இல்லை…” தயங்கிய படியே கேட்டாள் மனைவி. மித்ரன் இதழ்க்கடை ஓரம் லேசாகச் சிரித்தான்

வேணாம் பேபிஅந்த ஆசையை மட்டும் விட்டுரு. அது நடக்காதுடா.”

ஏன் அத்தான்?” அவள் குரல் நலிந்து போனது.

காரணம் எல்லாம் எதுவும் கிடையாது. இப்பிடியே பழகிப் போச்சு. இனி அதை மாத்த முடியும்னு தோனலை.”

அத்தான்நான்அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டேன்…”

தாராளமா கூப்பிடு பேபி. அது உன்னோட வீடு. நீ உனக்குப் பிடிச்சவங்களைத் தாராளமா கூப்பிடலாம். அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

அத்தான்…?”

இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்னை வற்புறுத்தாத பேபி. நீ சொல்லி என்னால செய்யாம இருக்க முடியாது. அந்தக் கஷ்டத்தை எனக்குக் குடுக்காதடா.” கணவனின் பேச்சில் வருத்தப்பட்டாலும், சட்டென்று குறும்பாகச் சிரித்தவள், சுற்று முற்றும் பார்த்தாள்.

என்னடா?” கணவன் கேட்கவும், அவன் காதுக்குள் ஏதோ ரகசியம் பேசினாள் மனைவி. அவள் சொல்லி முடிக்கவும், அது ஹாஸ்பிடல் என்றும் பாராமல் வாய் விட்டுச் சிரித்தான் மித்ரன்.

வாய் ரொம்பவே நீளுது பேபிஉனக்கு இருக்குடி கச்சேரி…” என்றான். அவன் பேச்சில் சிரித்தவள், அதற்கு மேலும் அங்கு நிற்காமல் நகர்ந்து விட்டாள்.

                                              ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^

அன்று வானில் அழகான பிறை நிலா. அபி மாடித் தோட்டத்தில் நின்று கொண்டு, அதை ரசித்துக் கொண்டிருந்தான். கணவனைத் தேடிய படியே வந்த கீதாஞ்சலி, அவன் தோட்டத்தில் நிற்கவும் அங்கு போனாள்.

என்ன அபி? அந்தப் பொண்ணு திரும்பவும் நிலாக்கதை சொல்லுறாளா?” குரலில் கேலி இருந்தது. ஆனால் அபி புன்னகைத்தான்.

இத்தனை நாளும் கதை சொன்னாஆனா இனி கவிதை சொல்லப் போறா அம்மாடி…” சொல்லியபடியே அவளை அருகழைத்து அணைத்துக் கொண்டான். வலது கை அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.

கவிதையோட தலைப்பு என்ன தெரியுமா? ‘பிறை நிலாஅதோ தெரியுதேஅது மாதிரி…” கணவனின் ரசனையான பேச்சை ரசித்தாள் மனைவி.

கவிதை சொல்லப் போறாளேஅப்போ அவ யாரு அபி?” அந்தச் சிணுங்கலில் சிரித்தான் அபிமன்யு. எப்போதுமே தன்னிடத்தில் அவள் தான் முதன்மையாக இருக்கவேண்டும், என்ற அவள் எண்ணம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவள், என் நிலாப்பெண் அம்மாடி.” என்றான்.

சரி கவிஞரே…” என்று போலியாகப் பணிவு காட்டினாள். இருவரும் மனம்விட்டுச் சிரித்தார்கள்.

அபி…”

ம்…”

இன்னைக்கு மித்ரன் சார் கூட பேசி இருக்கலாமே?” அந்தக் கேள்விக்கு அபி அத்தனை சீக்கிரத்தில் பதில் சொல்லவில்லை.

அம்மாடிஅது சாத்தியமான்னு எனக்குத் தோனலைடா. பிஸினஸ்ன்னு இறங்கின காலத்துல இருந்தேபகைதான். இப்பப் போயி அதை எல்லாம் மறந்திட்டு பேசுறதுன்னாகஷ்டம்டா…”

ம்புரியுது அபி. விட்டுடுங்க. ஆனாஇன்னைக்கு ஹாஸ்பிடல்ல…”

அம்மாடிஉண்மையைச் சொல்லட்டா. நீ கூப்பிடுறயேன்னு தான் ஹாஸ்பிடல் வந்தேன். ஆனாஅங்க போனப்புறம் தான் தெரிஞ்சுது. நான் எவ்வளவு பெரிய நல்ல காரியம் பண்ணி இருக்கேன்னு.”

அபி…” கீதாஞ்சலி மகிழ்ந்து போனாள்.

ஆமாண்டா. பகையை வளக்குறதுல என்ன பிரயோஜனம் சொல்லு? நம்மளை அங்க யாருமே எதிர்பாக்கலை. நான் பேசினதும், அந்த ராஜேந்திரன் சட்டுன்னு அழுதார் பாருஎனக்கு, ஒரு மாதிரியாப் போச்சு.”

ம்எனக்கும் தான்.”

நீ சொன்னது ரொம்ப கரெக்ட். மன்னிப்பு எவ்வளவு பெரிய தண்டனை. அந்தப் பெரியவங்க முகத்துல எவ்வளவு சந்தோஷம். அம்மாடிஉனக்கு அழகான மனசுடா. ‘பகைவருக்கும் அருளும் குணம்னு நான் படிச்சிருக்கேன். ஆனா இப்போதான் அதைப் பாக்குறேன்டா.”

அபி…” நெகிழ்ந்தவள், கணவனை அப்படியே கட்டிக் கொண்டாள்.

அம்மாடிஎனக்கு ரொம்பவே முக்கியமான ஒரு வேலை இருக்கு.”

என்ன அபி?”

லாப்டாப்ல கொஞ்சம் பேபி நேம்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அதுல நல்லதா ஒன்னை செலக்ட் பண்ணனும்.”

அப்பிடியா?”

ம்எல்லாம் கேர்ள்ஸ் பெயர்தான்.”

அது ஏன்?”

அது அப்பிடித்தான்கேர்ள் தான். அதுவும் இந்த முட்டைக் கண்ணோட.”

முட்டைக் கண்ணா…!”

ம்அந்தக் கண்ணுல தானேடி விழுந்தேன். இந்த வாய் அப்போ எங்கிட்ட பொய் தானே பேசிச்சு. இந்தக் கண்ணு தான், உள்ள இருக்கிறதை அப்பிடியே ஒளிக்காம சொல்லிச்சு.” அபியின் பேச்சில், லேசாகப் புன்னகைத்தாள் கீதாஞ்சலி. நாணத்தோடு தன் மார்பில் சரண் புகுந்த மனைவியை அணைத்துக் கொண்டான். வானில் மின்னிய பிள்ளை நிலா, அனைத்தையும் பார்த்திருந்தது. காலம் அவர்களுக்கு வசந்தத்தையும் வைத்துக் காத்திருந்தது.

                                         ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^   ^^

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. மித்ரனும், தாமரையும் கிராமத்துக்கு வந்திருந்தார்கள். அன்றைக்கு ஆரம்பித்த பயணம், தட்டுப் பட்டுப் போனதால் இன்று பிடிவாதமாக அழைத்து வந்திருந்தான்.

ராஜேந்திரன் இப்போது இருக்கும் நிலைமையில் இது தேவைதானா, என்று தாமரை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுலோச்சனாவிற்கு ஃபோனைப் போட்டு,

தாத்தா வீட்டுல டேராப் போட்டது போதும். வந்து உங்க புருஷனைக் கவனியுங்க.” என்று நன்றாக நாலு போடு போட்டதோடு, அவர் வந்திருந்தார். ராஜேந்திரனை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

ஊருக்கெல்லாம் சேவை பண்ணுறீங்க. புருஷன் இந்த நிலைமையில இருக்காரேஅவரைப் பத்தி யோசிச்சீங்களா?”

இல்லை மித்ராமில்லை…”

அதை நாங்க பாத்துக்கிறோம்நீங்க முதல்ல உங்க புருஷனை கவனியுங்க. மில் இல்லைன்னா நாம ஒன்னும் செத்துப் போகப் போறதில்லை.” மகனின் பேச்சில் ராஜேந்திரன் வாய் பிளந்து பார்த்திருந்தார். தான் செய்யத் தவறியது எதுவென்று அப்போது புரிந்தது.

எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு இன்று காலையிலேயே வந்துவிட்டான். அன்று முழுவதும் வயல், காடு, கழனி என்று சுற்றிப் பார்த்தார்கள். சாப்பாடெல்லாம் ஏற்கனவே ஜெயந்தி சொன்னதின் பேரில் தயாராக இருந்தது

உண்ட களைப்பில், வீட்டுக்குப் பின்னாலிருந்த தென்னந்தோப்பில் காற்றாட உட்கார்ந்திருந்தார்கள் கணவனும், மனைவியும்.

ஜெயந்தி நான்கு வருடங்களுக்கு முன்பு தான் அந்தத் தோப்பை உருவாக்கி இருந்தார். அதனால் ஒவ்வொரு மரமும் மித்ரனின் உயரம் தான் இருந்தது. வானில் சின்னதாக ஒரு பிறை இருந்தால் சுற்றிவர அத்தனை வெளிச்சம் இருக்கவில்லை. அவர்களின் ஏகாந்தம் அழகாக இருந்தது.

அத்தான்.”

ம்…”

மனசுக்கு நிறைவா இருக்கு.” மனைவியின் வார்த்தைகளில் அவளைக் குனிந்து பார்த்தான் மித்ரன். தென்னை மரத்தில் சாய்ந்திருந்தவனின் மார்பில், சுகமாகக் கண்மூடி அமர்ந்திருந்தாள்

அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமற் போகவும், அண்ணாந்து பார்த்தாள் தாமரை. அவளையே பார்த்திருந்தான் மித்ரன்.

என்ன அத்தான், அப்பிடிப் பாக்குறீங்க?”

நீ சந்தோஷமா இருக்கியா பேபி?”

இது என்ன கேள்வி அத்தான்?”

பதில் சொல்லு? நான் உன்னை சந்தோஷமா வெச்சிருக்கேனா?”

கண்டிப்பா அத்தான். ஏன் திடீர்னு இப்பிடிக் கேக்குறீங்க?”

எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்காத பேபி. நான் வீட்டுல இல்லாத சமயம், அம்மா உங்கிட்ட சும்மா சும்மா வம்பு வளக்குறாங்களாமே? பாட்டி சொன்னாங்க.”

அதுஅதெல்லாம்…”

நீ சொல்லமாட்டேஎனக்கு அது நல்லாவே தெரியும். அதனாலதான் பாட்டிக்கிட்ட எல்லாம் விசாரிக்குறேன். என்னால முடிஞ்ச அளவு உனக்குக் கஷ்டம் வராம நான் பாத்துக்கிறேன்டா

ஐயோ அத்தான்! அவங்க ஏதோ கோபத்துல பேசுறாங்க. அதை விடுங்க. இப்போ எதுக்கு அந்தப் பேச்சு?”

அதானேநமக்கு எவ்வளவோஇருக்கு பேச.” அந்தஎவ்வளவோ அழுத்திச் சொன்னான் மித்ரன்.

அன்னைக்கு ஹாஸ்பிடல்ல என் காதுல என்னடி சொன்ன?”கணவன் கேட்கவும் திரு திருவென்று முழித்தாள் மனைவி. இந்தத் திடீர்த் தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை

அத்தான்இது நியாயமில்லை. அன்னைக்குப் பேச்சு, அது அன்னையோட முடிஞ்சு போச்சுஇன்னைக்கு அது செல்லுபடி ஆகாது.”

…! நீ நேரத்துக்குத் தக்கப் பேசுவியோ! அது எப்பிடி? கீதாஞ்சலி ப்ரெக்னன்ட்டா இருக்காங்களா…” 

ஆமாநான் உண்மையைத் தானே சொன்னேன்?”

அந்த உண்மைக்கு அப்புறமா என்னடி சொன்னே?”

நான் ஒன்னும் சொல்லலையே…”

அடிங்…! பொய்யா சொல்லுற நீ…? ஆக்சிடென்ட் ஆன அபியே தீயா வேலை செஞ்சிருக்காருநீங்களும் இருக்கீங்களேன்னா சொன்னே…? உனக்குஇன்னைக்கு தீயா நான் வேலை செஞ்சு காமிக்கிறேன்டி.” சூளுரைத்த மித்ரனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள் தாமரை.

அத்தான்யாராவதுபாக்கப் போறாங்க…” அவள் கெஞ்சல்கள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை. அவன் நினைத்ததைச் சாதித்து முடித்த பிறகே, அவளை விடுவித்தான்

ஏன் அத்தான்? உங்களுக்கு கட்டாந்தரைதான் ராசியா? அன்னைக்கு மொட்டை மாடிஇன்னைக்கு…” முடிக்காமல் சட்டென்று விலகி, உள்ளே நடந்தாள்

வாய் தான்டி உன்னை வாழ வைக்குதுசொல்ல வந்ததை சொல்லி முடி.” அவன் சத்தமாகச் சொல்லவும், நடந்து போனவள் நின்று திரும்பிப் பார்த்தாள். ஒற்றைக் கையால் தலையைக் கோதியபடி அவளையே பார்த்திருந்தான் மித்ரன். முகத்தில் புன்னகை இருந்தது.

முன்னால் இருந்த பின்னலைத் தூக்கிப் பின்னால் வீசியவள், அவனைப் பார்த்து அழகு காட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள். மித்ரன் சிரித்துக் கொண்டான். அவள் சொன்னது போல மனம் நிறைந்திருந்தது. அதையும் தாண்டி மயங்கி நின்றது.

இந்தப் பெண் கடவுள் தனக்குக் கொடுத்த வரம் என்று தான் தோன்றியது. தான் யாருக்கோ, எங்கேயோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்குக் கடவுள் தன் மேல் கருணை காட்டியிருக்கிறார். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான். உள்ளே தாமரை ஏதோ சமைக்கும் வாசனை காற்றில் வந்தது. அவனும் எழுந்து உள்ளே போனான். வசந்தம்அங்கேயும் கொலு வீற்றிருந்தது.

error: Content is protected !!