Eedilla Istangal – 20.2

Eedilla Istangal – 20.2

ஏன்? எப்படி? இந்த மாற்றம்…. தேவாவிடம்…

அவளைப் பிடித்திருந்தது. அது அவனே சொல்லியிருந்தான். 

ஆனால் காதல் எப்போது வந்தது? 

காதல், கொஞ்சம் கொஞ்சமாக தேவாவிற்குள் நுழைந்திருந்தது. 

முதலில், தாராவின் காதல்தான் அவனுக்குப் பரிச்சியம் ஆனது. அதன் பின்னரே அவள்! 

எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. பின் ஈர்ப்பு வந்தது! அதுவும் அவளை வேண்டாம் என்று சொன்ன பிறகு!! 

அலைபேசியில் பேசப் பேச, மனம் அவளைப் புரிய ஆரம்பித்தது! 

இடையில் பேசாமல் இருந்தால், மனம் அவளைப் பிரிய மறுத்தது!! 

அதிலும், அந்த மழை நாளில் அவள் பேச்சில்… அவள் காதலில்… அதை வெளிப்படுத்திய விதத்தில்… அதன் ஆழத்தில்…

தேவா விழுந்துவிட்டான். 

தனக்காக கண்ணீர் சிந்தியவளுக்காக மனம் கசிந்து உருகியது.

‘நீ என் முடிவு’ என்று சொன்ன பெண்தான், தன் காதலின் ஆரம்பம் என்று தெரிந்தது. 

‘மறக்கவே முடியாது’ என்று சொல்லியவளைத் தன்னால் மறக்க இயலாது என்று தோன்றியது. 

உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பவளைக் காதலிக்கத் தொடங்கினான். 

அதிலும் அவள் அன்று வந்து நின்றது… தனக்காக எல்லோரிடமும் பேச்சு கேட்பது… தன்னை விடத் தன் கொள்கையைக் காதலிப்பது… 

இவைகள்தான், 

தேவா காதலின் மேல் சாய்ந்து கொள்ள… 

தேவா காதலை தன் கையில் எடுக்க.. 

காரணங்கள்! 

ஆனால், இந்த ஏழு நாட்கள் பிரிவு… அவனுக்கு உணர்த்தியது வேறு! இது எதுவுமே இல்லை என்றாலும் தாராவைப் பிடிக்கும் என்பதுதான் அது!

இந்தப் பிரிவினால், 

மொத்தமாக தேவா காதல் மேல் சரிந்து விழுந்திருந்தான்!

காதலின் கையில் தன்னைக் கொடுத்து விட்டான்!! 

அவன் காதலிக்கிறான். 

காரணங்கள் ஏதுமின்றி தாராவைக் காதலிக்கிறான்! 

அதுதானே காதல்! 

அவனுள் உதயமான காதலால்தான், இந்த அழைப்பு! 

இணையத்தின் சேவை கிடைத்ததும்… தன் இதயத்தின் தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட மகிழ்ச்சியில் இருந்தான் தேவா! 

அழைப்பு முடிந்ததும், காதலி தாராவை நினைத்து… ‘லவ் யூ தாரா’ என்றான் ஆசையாக! 

*****

அடுத்த நாள் 

நாள் நகர்வேனா என்றிருந்தது தாராவிற்கு! 

மதியம் 2 :30 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

கடைசியில், நாள் நகர்ந்ததா? இல்லை அவள் நகர்தினாளோ? சந்திப்பு நேரம் வந்திருந்தது. 

அவன் சொல்லிய காஃபி கேஃபேக்குச் சென்றாள்.

உள்ளே நுழைந்தாள்! 

மேற்கூரையில் முழுவதும் சிறிய வட்ட வடிவ கண்ணாடிகள்! அவை சீரான இடைவெளியில் பதிக்கப்பட்டிருந்தன!

அதன் வழியே விழுகின்ற சூரிய வெளிச்சம்!

தரைத்தளம் முழுதும் செயற்கை பச்சை புற்தரை! அதில் அங்கங்கே சிறு சிறு விளக்குகள்!! 

தரைத்தளத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலிகள்! அதற்கேற்ற உயரத்தில் கண்ணாடி மேசைகள்!!

கேஃபே சுவர் முழுவதும் காதல் வாசகங்கள்! 

கேஃபேவைச் சுற்றிலும் காதலர்கள் வாசனைகள்!! 

ஒருமுறை, அந்த இடம் முழுவதும் அவள் விழிகள் சுற்றி வந்து, அவன் இருக்கும் இடம் தெரிந்ததும் சொக்கி நின்றது.

அவளுக்கு முன்பே வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், ‘நாட் பேட்’ என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி நடந்தாள்.

அருகில் சென்றதும், 

“ஹாய்”

“இவ்வளவு லேட்டா வர்றீங்க?”

“நான் எத்தனை நாளா வெயிட் பண்றேன்? இன்னைக்கு ஒரு நாள்தான நீங்க வெயிட் பண்றீங்க”

“பழிவாங்கிற நேரமா இது” என்றவன், “உட்காருங்க” என்றான் இருக்கையைக் காட்டி! 

அவன் ‘உட்காருங்க’ என்று சொன்னதும், புடவையை லேசாகத் தூக்கி கொண்டு அமர்ந்தாள். 

“ஹவ் வாஸ் தே ட்ரிப் தேவா??”

பதில் சொல்லாமல், மெனக்கெடல் எடுத்து ஒப்பனை செய்திருந்த பாவையைப் பார்த்திருந்தான். 

“ட்ரிப் எப்படி இருந்தது தேவா?” என்றாள் அவன் பார்வையை படித்தபடியே! 

நாவல் பழத்தின் உட்பகுதி நிறத்தில் வேலைப்பாடுகள் ஏதுமில்லா புடவை அணிந்திருந்த மங்கையை, மறுமொழியின்று பார்த்திருந்தான். 

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க?”

“இல்லை, நேத்து ஃபோன்ல கோபமா பேசின பொண்ணுதானா-ன்னு பார்த்தேன்” என்று காதல் பொய் கூறினான். 

“நான் ஸாரி கேட்டேன்ல தேவா”

“ஹே, எனக்கு அது பிடிச்சிருந்தது”

“எதுங்க தேவா? பிரைன் இருக்கான்னு கேட்டதா..??”

மென் முறுவல் புரிந்தான். 

மூளை பற்றிய சந்தேக கேள்விக்கு, முகம் முறுவல் காட்டுகிறதென்றால்… அதெல்லாம் காதலின் முகவரிகள்! 

“என்ன முடிவு எடுத்துருக்கீங்க?”

முடிவு தெரியும் என்றாலும், அவன் வாய் வார்த்தையாக, அதைக் கேட்க வஞ்சிக்கு ஒரு விருப்பம்.

“என் அண்ணிகிட்ட, நீங்க அன்னைக்கு சொன்னதைக் கொஞ்சம் மாத்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்”

“தேவா” என்றாள் எரிச்சலாய்! 

“ஓகே, உங்க வீட்ல அலைன்ஸ் பார்க்க வேண்டாம்னு சொல்லிடுங்க” 

“தேவா” என்றாள் கோபமாக! 

“ஓகே ஓகே… இனிமே யாராவது… ” என்று தொடங்கும் போதே, 

“நீங்க சொல்லவே வேண்டாம்” என்று முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். 

சட்டென, “தாரா, எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்??” என்றான்.

அவன் சொன்ன வேகத்தில், அவள் திரும்பினாள். 

‘நிஜமா?’ என்று ஒரு கேள்வி கேட்டு, அவள் விழிகள், அவன் விழிகள் பார்த்து நின்றது! 

‘நிஜம்தான்’ என்று தலையசைத்தேன், “தாராக்காக தாராவைப் பிடிச்சிருக்கு” என்றான். 

அவன் அப்படி உரைத்ததும், அவள் உறைந்துவிட்டாள்! இதுதானே அவள் காதல் ஆசை!! 

எந்தக் காரணங்களின்றி தன்னை பிடிக்க வேண்டுமென்பது! இதோ பிடித்தாயிற்று! 

கேட்டவள், ஒரு விழியிலிருந்து மட்டும் நீர் வழிந்து, கன்னங்களில் உருண்டோடியது. 

சூழலை ஒருமுறைப் பார்த்தான். பின், தன் கரங்களால் அவள் கண்ணீரைத் துடைத்தான்.

“அழக் கூடாது” என்றான். 

இதயத்தின் ஆசை நிறைவேறியதில், இன்னும் இமைகூட அசையாமல், எதிரே இருப்பவனைப் பார்த்தாள். 

மீண்டும் மீண்டும் கண்ணீர்… மீண்டும் மீண்டும் துடைத்தான். 

“தாரா”

“ம்ம்ம்” என்றாள் உயிர் வந்தவளாய்!

விழிகளில் விருப்பங்கள் வைத்துக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.

விலையில்லாத காதலை விழிகளில் ஏந்திக் கொண்டிருப்பவளை, விலகிச் செல்லவே முடியாது என்ற ஒரு உணர்வு, தேவாவிற்கு! 

“ஏதாவது சொல்லுங்க தாரா?” 

“ஹக் பண்ணனும் போல இருக்கு தேவா”

“ம்ம்ம், எனக்கும்தான்”

“நீங்க நேத்தே இதைப்பத்தி சொல்லிருக்கணும்!”

“எதைப் பத்தி?? ஹக் பண்றதைப் பத்தியா?? “

“தேவா” என்று அழுத்திச் சொல்லி எச்சரித்தாள். 

பின், 

மேசையில் இருந்த டிஸ்ஸு பேப்பரை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“blush, மஸ்காரா… அழிஞ்சிடுச்சோ?” என்று கேட்டுக் கொண்டே துடைத்தாள். 

“அதை அழறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்”

“நீங்கதான் அழ வைச்சது”

“வேண்டாம்-னு சொன்னாலும் அழறீங்க… வேணும்-னு சொன்னாலும் அழறீங்க… ஒரு மனுஷன் வேற என்னதான் சொல்ல முடியும்??!”

சிரித்துவிட்டாள். 

“இதுக்கு முன்னாடி நீங்க இப்படிப் பேசி நான் கேட்டதே இல்லை?”

“ப்ரோபோசனலா பேசிக் கேட்ருப்பீங்க. இது பெர்சனல் லைஃப். ஸோ இப்படித்தான் பேசுவேன்”

“நான் உங்க பர்சனலா தேவா??”

“அஃப்கோர்ஸ்”

பின்னே ஒலித்துக் கொண்டிருந்த மேற்கத்திய இசையை ரசிப்பது போல், ஒளிவுமறைவாக ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தனர்! 

“கிஃப்ட் எதுவும் இல்லையா தேவா?” என்றாள் ரசிப்பதை நிறுத்தி! 

“ஓ ஸாரி தாரா! அந்த தாட்டே வரலை” 

“அட்லீஸ்ட் ஒரு சாக்லேட் பார் வாங்கியிருக்கலாம்”

“ஏன்?”

“நம்ம ரெண்டு பேரும், ஒரு செல்ஃபி எடுத்து… கேரிங் ஹார்ட்ஸ் ஷேரிங் சாக்லேட்ஸ்-ன்னு டிவிட்டர்ல போட்ருப்பேன்” 

சிரித்தான். பின், யோசித்தான். 

மேசையில் ஒரு சதுர வடிவ கிண்ணத்தில் sugar sachet வைக்கப்பட்டிருந்து. அதில் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஒரு சின்ன ஸ்வீட்” என்றான். 

அவளும் வாங்கி கொண்டாள். 

சக்கரையாய் காதல்!

சக்கரையே காதல் பரிசு! 

“காஃபி வாங்கிட்டு வர்றேன்” என்று எழப் போனவனை,

“தேவா…”

“ம்ம்ம் சொல்லுங்க?”

மௌனமாக இருந்தாள்.

“எதுனாலும் சொல்லுங்க தாரா. டு யூ மைன்ட்… அதெல்லாம் கேட்கனும்னு அவசியமே இல்லை” 

“பிங்கர் டிப்ல இன்னும் பெயின் இருக்கு தேவா” என்று சொன்னவள், ஒவ்வொரு புருவத்தையும் தனித்தனியே உயர்த்தினாள்! 

“ஓ! சிங்கள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப்” என்று அவளருகே நெருங்கி ரகசியமாகக் கேட்டான். 

“ய்யா ய்யா”

“இருங்க வர்றேன்” என்று எழப் போனவனிடம், 

“எங்க போறீங்க?” என்று கேட்டு நிறுத்தினாள். 

“பர்ஸ்ட் ஒன் சிப் ஆஃப் காஃபி! அப்புறம் பிங்கர் டிப். பட் கிஸ் கண்டிப்பா உண்டு” என்று அதே ரகசியக் குரலில் சொல்லிச் சென்றுவிட்டான். 

நடப்பதெல்லாம் கனவா? நனவா? என்பது போல், அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

?காதல் உண்டியல் நிரம்பி விட்டதா? இல்லை, நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஏனெனில் அள்ள அள்ள குறையாதது அல்லவா, அவர்கள் காதல்.! – Finally காதல் உண்டியல் is feeling love with தாரா and தேவா! ?

வாங்கிய காஃபி கோப்பையைக் கொண்டு வந்து, மேசையின் மீது வைத்தான்.   

அவள் புறமாக ஒரு கோப்பையைத் தள்ளியவன், “ஹேவ் இட்” என்றான்.

அவளும் எடுத்துப் பருக ஆரம்பித்தாள்.

ஒரு இரண்டு மூன்று மிடறுகள் விழுங்கிய பின், அவளை நோக்கிக் கரம் நீட்டினான். 

தயக்கங்கள் நிறைந்த காதலுடன் அவனைப் பார்த்தாள். 

‘கரம் கொடுத்திடு’ என்று கண்களால் காதல் பேசினான். 

தயக்கத்தை விட்டுவிட்டு, நீட்டிய அவன் கரத்தின் மேல்… தன் கரம் வைத்தாள். 

முதலில்… தன் உள்ளங்கைக்குள் இருந்த, அவள் கரத்திற்குச் சிறு அழுத்தம் தந்தான். 

பின், மெதுவாக அவளது ஒற்றை விரலை மட்டும் பற்றினான்.

‘ஹே ஆர் யூ கோயிங் டு கிஸ் மீ?” என்று கேள்வி தாரா மூளைக்குள் ஓடியது.

இன்னும் மெதுவாக, அவள் கை விரலைத் தன்னை நோக்கி எடுத்து வந்தான். 

“தேவா வேண்டாம்” என்று சொல்லி, தாரா சுற்றிலும் இருப்போரைப் பார்த்தாள். 

பற்றியிருந்த அவள் விரலைப் பிடித்த வண்ணம், மீண்டும் ஒரு மிடறு தன் கோப்பைக் காஃபியை விழுங்கினான். 

பின்னர், அவள் விரலைக் கொண்டு வந்து, கோப்பையில் அவன் இதழ் பதிந்த இடத்தில் வைத்தான். 

மீண்டுமொரு முறை இப்படியே!

பின், அவள் கரத்தினை விட்டுவிட்டு காஃபியை பருக ஆரம்பித்தான்.

“வலி போயிருச்சா?” 

அமைதியாக இருந்தாள்.

“தாரா, வலி போயிருச்சா?” 

“ம்ம்ம்” என்று தலையை அசைத்தாள். 

“இங்க இவ்வளவுதான் முடியும்” என்றான்.

மௌனமாக அவனை ரசித்துச் சிரித்தாள். 

கோப்பைக் காஃபிக்குள் கோடிக் காதலைக் காண்பித்தான்.

அந்தக் கோடி காதலை, கோப்பைக் காஃபியாய் பருக ஆரம்பித்தாள். 

ஒரு மிடறு காஃபி! 

ஒரு மிடறு காதல்!! 

இப்படித்தான் இருவரும் சற்று நேரம் இருந்தார்கள்!! 

சில நிமிடங்கள் பின், 

“தாரா, சில விஷயம் டிஸ்கஸ் பண்ணனும்”

“ம்ம்ம் சொல்லுங்க”

“ரெஜிஸ்டர் ஆபிஸ்லதான் மேரேஜ். எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க. அக்கா சந்தோசப்படுவா. பாபி… ம்ம்ம் கெஸ் பண்ணிருப்பான். வேற யாரும் இல்லை. உங்க வீட்ல?”

“நான் பேசிக் கன்வின்ஸ் பண்ணிருவேன்”

“ஸோ, கன்வின்ஸ் பண்ண வேண்டிய இடத்தில இருக்கீங்க. நானும் வந்து பேசவா? அது இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்ல?”

“இல்லை, நான் பார்த்துக்கிறேன்”

“இவ்வளவு சிம்பிள் மேரேஜ் ஒத்துப்பாங்களா?”

“நான் பேசுறேன் தேவா”

“எல்லாரும் சம்மதிக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லைன்னா, நான் வந்து பேசுறேன்”

“இல்லை… ஐ வில் மேனேஜ்”

“ஓகே நீங்க பேசுங்க. மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்”

“ம்ம்ம்” என்றாள்.

அவன் படபடவென்று பேசி முடித்த பின், அவள் முகம் கொஞ்சம் சுணங்கித் தெரிந்தது. 

“இவ்வளவு நேரம் நல்லா இருந்தீங்க. வீடுன்னு சொன்னதும் இப்படி இருக்கிறீங்க?”

ஓர் புன்னகை தாராவிடம்! 

“சரி, வேற ஏதாவது பேசுங்க. என்கிட்ட உங்களுக்கு ஏதாவது எக்ஸ்பெக்டேஷன்??”

“ம்ம்ம் இருக்கு”

“சொல்லுங்க”

“மேரேஜ் முடிஞ்சது நான் உங்களை ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன். எந்த கொஸ்டினும் கேட்காம அங்க வரணும். அங்க வச்சி நிறைய உங்ககிட்ட பேசணும்”

“எப்பவும் பேசணும்னு சொல்வீங்களே, அதுவா?”

“ம்ம்ம்”

“ரொம்ப சிம்பிளா இருக்கு தாரா” 

“இதுவே போதும். வேற எதுவும் உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன்”

“தாரா மாதிரி பொண்ணு என் லைஃப்ல… ம்ம்ம், சிம்ப்ளி ஐ அம் லக்கி” என்று சிலாகித்துச் சொன்னான். 

“நானும் லக்கி… டு ஹேவ் யூ இன் மை லைஃப்” 

நிறைய பேசினார்கள். 

காதல் பேசினார்கள்! 

காதலாய் பேசினார்கள்! 

காதலுக்காக பேசினார்கள்! 

காதலைப் பேசினார்கள்! 

காதலர்கள் பேசினார்கள்!! 

சற்று நேரம் கழித்து… 

“கிளம்பலாம் தேவா. ஈவினிங் விசிட்டிங் டைம்-க்கு லேட்டாகுது”

“ம்ம்ம்” என்று சொல்லி இருவரும் வெளியே வந்தனர்.

அவள் கார் நிற்கும் இடத்திற்கு வந்து, அவளை வழியனுப்பினான்.

*****

ராஜசேகர் வீடு

வீட்டிற்கு வந்து இரவு உணவை முடித்தவள், அனைவரிடமும் பேச வேண்டும் எனச் சொன்னாள்.

வரவேற்பறையில் அமர்ந்தனர். திருமணம் பற்றிய முடிவைக் கூறினாள்.

அனைவரிடமும் அமைதி. 

யார் யார் என்ன சொல்லப் போகிறார்களோ? என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்டிப்பாக அம்மா மறுப்பார். அம்மா மறுத்தால், சரத்தும் மறுப்பான். ஜெகனுக்கு தேவா ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’ என்பதில் உடன்பாடு இல்லை என்று தெரியும்.

ராஜசேகர்?? 

அவள் கருத்திலும், கவனத்திலும் என்றுமே அவர் வந்ததில்லை.

*******

Out of story 

Mr and Mrs Baskar characters பத்தி.. 

Mrs Baskar  ஒரு டயலாக் சொல்வாங்க… அந்த டயலாக் அடுத்த எபில தேவா ரிபீட் பண்ணுவாங்க. 

For example… 

Last episode-ல தேவா தாராவை லவ் பண்றான்னு சொல்லியிருப்பாங்க… 

அதைப் பத்தி, தாரா இந்த episode starting ல question மாதிரி  தனக்குள்ள கேட்பாங்க… End of  episode deva will answer to the question. 

After Tara’s love proposal எல்லா episode ம் இப்படித்தான் frame பண்ணியிருப்பேன்

So deva decision about Tara’s love one episode முன்னதாகவே தெரிஞ்சிருக்கும்

சின்ன ரீஸன்தான்! இப்படித் தோணுச்சு வைக்கணும்னு… 

Hope I explained clearly 

?

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!