Eedilla Istangal – 25.2

தேவா அலுவலகம் 

ஞாயிற்றுக் கிழமை, இரவு நேரம்… 

மருத்துவமனை பணி முடிந்து, தேவாவை அழைத்துச் செல்ல, தாரா வந்திருந்தாள்.

ஞாயிறுகளில் பணிச்சுமை குறைவாக இருக்கும் என்பதால், அன்று மட்டும் இப்படி! 

மற்ற நாட்களில் இப்படிக் கிடையாது. 

அவன் வரும்வரைக் காத்திருக்கலாம் என்று, அலுவலகக் கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தாள். 

அவனுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், அவனைத்தான் காண வேண்டும் என நினைத்தாள்.

உடனே நினைவில் வந்தது, கல்விச்சுமை பற்றிய நேர்காணல்!

அலைபேசியில், அந்தக் காணொளியை எடுத்து ஓடவிட்டாள். 

அவனைப் பற்றிய அறிமுகப்படலத்துடன், காணொளி தொடங்கியது. 

அதைக் கேட்கையில், தாராவின் முகத்தில் ஒரு பெருமை! 

மதிப்பெண் பற்றிய கேள்வியை முதல் கேள்வியாக நெறியாளர் கேட்டார். 

‘ஸ்டுடென்ட்ஸ் எக்ஸாம்ல எழுதிற விஷயத்துக்காகத்தான் மார்க் இருக்கனுமே தவிர… வாழ்க்கை ஃபுல்லா, அவங்களை எடை போடற ஒரு விஷயமா இருக்கக் கூடாது’ _என்று பதில் சொன்னான். 

அடுத்த கேள்வியை நெறியாளர் ஆரம்பிப்பதற்குள், “தாரா” என்று அழைத்துக் கொண்டு தேவா வந்தான். 

அலைபேசியைப் பைக்குள் வைத்துவிட்டு, அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தாள்.

அவன் புன்னகைக்கவில்லை! மாறாக, அவளைக் கரிசனமாகக் கடிந்து கொள்ள ஆரம்பித்ததான். 

“டேரைக்டா வீட்டுக்குப் போயிருக்கலாம்ல! 

இன்னைக்கு ஒரு நாள்தான ரெஸ்ட் எடுக்க முடியும்? அப்பவும், இப்படி வந்து நின்னா?? 

எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? சொன்னா கேட்கறதேயில்லை!!” என்றான் படபடவென! 

ஓர் மௌனம்… ஒரு நிமிடதிதிற்கு… இருவரிடமும்! 

அதன்பின், “தேவா” என்று அழைத்தாள். 

“ம்ம்ம்” என்றான், அவளைப் பாராமல்! 

“என்னைப் பாருங்க” என்றாள். 

அவள் கண்களைப் பார்த்தான். 

சட்டென, “டசன் டைம்ஸ் ஸாரி” என்று கண் சிமிட்டினாள்! 

சிரித்துவிட்டான். 

அவ்வாறு தாரா மன்னிப்பு கேட்டபின், எவ்வாறு தேவாவின் மனம் கோபம் கொள்ள முடியும்?? ஆகவே சிரித்தான்! 

அவளும் சிரித்து, “வாங்க போகலாம்” என்று சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு, கார் நிற்குமிடம் வந்தாள். 

கார் அருகே வந்தபின், 

கோபியைப் பார்த்து, “கோபி, நீங்க தேவா பைக் எடுத்திட்டு வீட்டுக்குப் போயிடுங்க” என்று சொல்லி, தேவாவின் பைக் சாவியை வாங்கிக் கொடுத்தாள்.

“சரி-க்கா” என்று சொல்லி, சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான். 

இப்பொழுதெல்லாம் கோபிக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ‘தான் கார் ஓட்டுனாரா? இல்லை பைக் ஓட்டுனரா?’ என்பதுதான் அது!

கோபி சென்றதும்,

தாராவும் தேவாவும் காரினுள் ஏறிக் கொண்டார்கள். த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலை ஓட விட்டாள், தாரா. 

ரசித்துக் கேட்க ஆரம்பித்தாள். 

தேவா?? 

பாடல் இன்னும் பிடித்தபாடில்லை! ஆனால், அவனைப் பித்தம் கொள்ள வைக்கும், அவளது முத்தத்திற்காக… நித்தமும், இதைக் கேட்கிறான்! வேறு வழி!! 

காரைக் கிளப்பும் முன்பு, “தாரா, சீட் பெல்ட்” என்றான் தேவா. 

தாரா, தன் சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்ளப் போகிறாளா?? இல்லை! இல்லவே இல்லை!! 

தேவாவின் சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு… அவன் கன்னத்தில், தாரா முத்தம் வைத்தாள். 

ஆதுபோல, தாராவின் சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு… அவள் கன்னத்தில், தேவா முத்தம் வைத்தான்.

அதன் பின்னரே கார் கிளம்பியது! 

?இவர்களுக்கு, இது வாடிக்கை! இம்மியளவு நேரச் செலவிடல்கள் இருந்தாலும், இதயத்தின் காதலை இமாலய அளவிற்குக் கொண்டாடும் விதமாகவே இருக்கும். – காதல் உண்டியல் is feeling festive with Tara and Deva?

தாரா-தேவா வீடு

நாட்காட்டியின் தாள்கள் ஓரு இரண்டு மாதங்கள் ஓடியிருந்தன… 

அன்று… இரவு 10:30.

தாரா வருவதற்கு முன்பே, தேவா வீட்டிற்கு வந்திருந்தான். 

வந்தவன், முதலில் தன்னை இளைப்பாற்றிக் கொண்டான். 

பின், அவர்கள் அறையின் மெத்தை மேல் அமர்ந்து கொண்டு, புத்தகம் படிக்க ஆரம்பித்தான். 

சற்று நேரத்திற்குப் பின், தாரா வீட்டிற்கு வந்தாள். நேராகச் சென்று, அதிபனின் புகைப்படம் முன் ஒரு சில நொடிகள் நின்றாள். 

பின்னரே, அவர்கள் அறைக்குள் சென்றாள். 

அவள் நுழைந்ததும், “சாப்பிட்டியா தாரா??” என்றான். 

“ம்ம்ம்” என்றவள், ஒரு வண்ணத்தாள் சுற்றப்பட்டப் பரிசுப் பொருளை நீட்டினாள்.

“எத்தனை கிஃப்ட் தாரா?” என்று அலுத்துக் கொண்டான். இருந்தும் வாங்கிக் கொண்டான். 

ஆம்! அடிக்கடி பரிசுப் பொருட்கள்! அளவில்லா பாசங்கள்! அதுதான் தாரா!! 

“ரெஃப்பிரஷ் பண்ணிட்டு வர்றேன். ஓபன் பண்ணிப் பாருங்க” என்று நகர்ந்தாள்.

அவள் சென்றதும், 

அவன் பிரித்துப் பார்த்தான். உள்ளே ஒரு கடிகாரம் இருந்தது.

பழைய காலத்து மேசைக் கடிகாரத்தின் மாதிரியில் இருந்தது. 

வெளிப்புறம் முழுதும் பித்தளையின் நிறம்! 

உள்ளே முழுவதும் வெள்ளை நிறம். ஆனால், இலக்கங்கள் ஏதுமில்லை! 

அதே பித்தளை நிறத்தில் கடிகார முட்களும்! 

ஒருமுறை பார்த்தான். பின், மெத்தை மேல் வைத்துவிட்டு, மீண்டும் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். 

சற்று நேரத்தில், தாரா முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு வந்தாள். 

அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு, அவனருகே வந்தமர்ந்தாள் 

“தாரா, புக் படிச்சிட்டு இருக்கேன்” என்று சொல்லிப் பார்த்தான். 

அதைக் கண்டு கொள்ளாமல், “கிஃப்ட் பார்த்தாச்சா??” எனக் கேட்டு, இரவு விளக்கை மட்டும் ஒளிரச் செய்தாள். 

“ம்ம்ம், கிளாக்-தான??” என்று அசட்டையாகச் சொன்னவன், “ஒவ்வொரு செகன்டும் உன்னை நினைக்கனுமா?” என்று வேறு கேட்டான். 

“அதெல்லாம் நான் நினைச்சிக்கிறேன். நீங்க, கிளாக்ல பேட்டரி போட்டுப் பாருங்க” 

“தாரா” என்றான் அசதியாய்! 

“தேவா” என்றாள் அன்பாய்! 

‘சம்மதம்’ என்பது போல் அவனும் பேட்டரி போட்டுவிட்டுப் பார்த்தான். 

கடிகாரத்தின் சின்ன முள்ளில் அவள் பெயரும், பெரிய முள்ளில் அவன் பெயரும் சிறு ஒளியுடன் மிளிர்ந்தது.

“ஓ! நம்ம பேரோடவா?” என்று கேட்டு, அவளைப் பார்த்தான்.

அவளோ, ‘இன்னும் நன்றாகப் பார்’ என்பது போல் பார்த்தாள்.

‘வேற என்ன இருக்கிறது?’ என்று கடிகாரத்தை உற்றுப் பார்க்கும் பொழுது, நொடி முள்ளில் ‘boy/girl’ என்ற எழுத்துகள் ஒளிர்ந்தன. 

ஓர் அமைதி, தேவாவிடம்! அது, அப்பாவான ஆனந்தம் தந்த அமைதி!! 

எப்படி அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த என்று தெரியாத அமைதி!! 

அவன் அமைதியைப் பார்த்தவள், “ஐ திங்க் யூ காட் இட்” என்றாள். 

மெல்ல தலையசைத்தான். 

“எவரி செகன்ட், பாய் ஆர் கேர்ளா-ன்னு நினைச்சிக்கிட்டே இருங்க” என்று சொல்லி, நகரப் போனவளைக் கைப் பிடித்து நிறுத்தினான். 

பின், தன் கைவளைக்குள் கொண்டு வந்து இருத்தினான்! இதமான ஓர் இறுக்கம் தந்தான்!!

அந்த விசாலமான அறை முழுவதும் இருள் வியாபித்திருந்தது. 

முழுதும் கருப்பு வர்ண டைல்ஸ்ஸில், முல்லைப் பூ வெள்ளை நிறத்தில் கட்டில்!! 

இரவு விளக்கின் ஒளி வெள்ளம், கட்டிலைச் சுற்றிப் போடப்பட்டிருந்த கார்பெட்டை நனைத்திருந்தது. 

கட்டிலின் மேல், தேவாவின் ஒரு கைவளைக்குள் தாரா! மறு கரத்தின் உள்ளங்கையில் கடிகாரம்! நொடிமுள் boy/girl என்று கேட்டபடியே ஓடிக் கொண்டிருந்தது!!

வெகு நேரம், இருவரிடமும் அமைதி நிலவியது!

“தாரா” 

“ம்ம்ம் சொல்லுங்க” 

“நத்திங்” என்றான்! ஆனால், நிறைய முத்தங்கள் தந்தான். 

அகவாளனின் அக்களிப்பை உணர்ந்து, அவனை ஆருயிரென அணைத்துக் கொண்டாள். 

மீண்டும் சில நொடிகள் அமைதி! 

“தேவா, என்ன ஒன்னுமே சொல்ல மாட்டிக்கீங்க?”

“என்ன சொல்லணும்?” 

“ஏதாவது?” 

“டாக்டர்கிட்ட செக் பண்ணியா?” என்றான் அக்கறையாக! 

சட்டென அவனிடமிருந்து விலகி, “ஹலோ! நானே ஒரு gynecologist” என்றாள் அவசரமாக! 

“அது தெரியும். பட், நீ வாங்கிற பீஸ் எனக்கு கட்டுபிடியாகாதே” என்று சொல்லி, மீண்டும் தன் மார்பினுள் மனவாட்டியை மாட்டிக் கொண்டான். 

“இன்னும் நீங்க இதை மறக்கலையா?” என்று கேட்டு, அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, சன்னமாகச் சிரித்தாள், தாரா! 

இதயத்திலிருந்து சிரிப்பவளை இன்முகத்துடன் பார்த்துக் கொண்டே, “லவ் யூ தாரா” என்றான் இஷ்டப்பட்டு!

“லவ் யூ மை ஹார்ட் பீட்

லவ் யூ மை ஹேன்ஸ்ஸம்

லவ் யூ மை வேலன்டைன்

லவ் யூ மை ட்ரீம் போட் 

லவ் யூ மை சன்ஷைன் 

லவ் யூ மை எவரித்திங்

லவ் யூ மை ஒன் அன்ட் ஒன்லி 

.

.

.

” என்று தாரா… அடைமழை போல் இடைவிடாமல் அடுக்கிக் கொண்டே போனாள், தேவாவின் மீதான ஈடில்லா இஷ்டத்தை!!