En manathu thamari poo 15

En manathu thamari poo 15

15
அந்த  தனியார் மருத்துவ மனையின் ஹாலில் போடப்பட்டிருந்த வரிசையான  சாம்பல் நிறமான பளபளப்பான இரும்பு நாற்காலிகளில் ஒன்றில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ராஜ்கமல்.
உள்ளே  அவசர சிகிச்சைப் பிரிவில் யுவராணி. அதன் அறை வாயிலில் அவனது தாய் துளசி அழுது வீங்கிய கண்களுடன். கண்ணீர் வற்றி விட்டது.  அவனும் இவ்வளவு நேரம் அதே இடத்தில்தான் பதைத்துக் கிடந்தான். “இந்த பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கற மருந்து அர்ஜன்டா வாங்கனும். இப்படியே போய் வலதுபக்கம் திரும்பினா  மெடிக்கல் இருக்கு. நீங்க இந்த ஸ்லிப் காட்டினா போதும். மெடிசின் பில் உங்க ரூம் பில்லோட ஆட் ஆகிரும்” என்ற வெள்ளுடை அணிந்த செவிலிய  சகோதரி ஒருவர் படபக்கவும் வீட்டுத் தலைமகன் தானாய்ப் பொறுப்பை எடுத்துக் கொண்டு தன் மன கிலேசத்தை ஒத்தி வைத்தான்.
யுவராணிக்கு என்ன?
தாமரை செல்வன் ஊருக்குப் போன பின்பு யுவராணி சாதாரணமாகத்தான் இருந்தாள். ராஜ்கமல் “இதுல்லாம் ஒரு வேலை!” என்று தன் தங்கை மீதான கண்காணிப்பை தளர்த்தலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். அவன் வேலைக்குச் சென்ற பொழுதுகளில் துளசி தன் மகள் மீது தனது இரு கண்களையும் வைத்து இருந்தார். எல்லாம் கஜாவிற்கு பயந்துதான். அவர் ராணியை அடித்து கிடித்து விடுவாரோ? என்றுதான். ஆனால் அவர் அவளை கண்டு கொள்ளாமல் இருந்து விடவும் இவர்களுக்குச் சற்று துளிர்விட்டது.
யுவராணிக்குத்தான் மனம் மிகவும் சஞ்சலப்பட்டது. அவள் அப்பா ‘என்னை மீறி எப்படி நீ தாமரை செல்வனை கல்யாணம் பண்ணிக்குவேன்னு பார்;க்கிறேன்’ என்று எதாவது திட்டி அடித்திருந்தால் கூட அவளுக்கு சமாதானமாக இருந்திருக்;கும். இப்போது அவளிடம் அப்பா பாராமுகமாக இருக்கவும் அவள் தாமரை செல்வனைக் கூட மறநது அப்பா எப்போது தன் முகம் பார்த்துப் பேசுவார்? என்று அதே நினைவாகவே சுற்றியதைப் பார்த்து ராஜ்கமல் தலையில் அடித்துக் கொண்டான்.
இன்று காலை அவனுக்கு ஒரு புதிய டென்டர் கிடைக்கவும் உடனடியாக ஒர்க் ஆர்டர் வாங்க உரிய நிறுவனத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. துளசி பக்கத்து வீட்டு பாட்டிக்கு  உடல்நிலை சரியில்லாததால் அதை விசாரித்துவிட்டு வருமாறு கஜா சொல்லியிருக்க “எதை செஞ்சாலும் கத்துவார். செய்யலைன்னாலும் கத்துவார். நாமா போனா இதுல்லாம் ஒரு வேலையாம்பார். என்ன இருந்தாலும் பக்கத்து வீடு. ஒரு வார்த்தை கேட்டு வைக்கறது நல்லதுதான் “ என்று உடனே வருவதாக சொல்லிச் சென்றார். யுவராணி பக்கத்து கோயிலுக்குச் சென்றிருந்தாள்.
துளசி வீட்டுக்கு வந்து பார்த்த போது டைனிங் டேபிளின் மீது மயங்கிச் சரிந்திருந்த யுவராணியைத்தான். மகளின் தோற்றம் அலையக் குலைய இருந்ததில் அடி வயிறு கலங்கியது அவருக்கு. ஓடிப்போய் அவளை ஒலுக்கி எழுப்பியவர் அள் முகத்தை நிமிர்த்த  முயன்றார். அவர் கைகளில் இருந்து நழுவி விழுந்த அவர் தலை அவர் உடலை நடுசடுங்கச் செய்தது. “ஏதாவது விளையாடுறாளா?” என்று நப்பாசையுடன் நினைத்தார். ஆனால் உடலின் பாரம் ஏதோ அசம்பாவிதத்தை உணர்த்தியது.
தான் தைரியமாக இருக்க வேண்டிய இரண்டாவது கால கட்டம் என்று ஏனோ நினைத்தார். பதட்டத்தை மீறி அவசரத்துடன் ஒரு வழியாக அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தால் அவள் கண்கள் செருகி இருந்தது. கண்களில் நீர் வழிந்த கறை ஈரமாக இருந்தது. முக்கியமாக அவள் வாயின் ஓரத்தில் சிறிது நுரை இருந்தது!
“அய்யய்யோ ராணிமா!  “என்று அலறியவர் தனக்கு வருவதாகச் சொன்ன மயக்கத்தை முயன்று விரட்டி அடித்தார். கை கால்கள் பரபரக்க மகளை அந்த நாற்hலியிலேயே நன்றாக உட்காக வைக்க முயற்சித்தவர் கையில் இருந்த போனில் உடNனு ராஜ்கமலுக்குப் பேச அவன் பறந்தோடி வந்து விட்டான்.
அவன் வரும் வரை மகளுக்கு ஃபேன் காற்றை அதிகப்படுத்தினார். ஹாலில் ஏ.சி. இல்லை. நாலா பக்கமும் ஜன்னல்கள் இருப்பதால் இயற்கை காற்றுக்காய் ஏ.சி யைத் தவிர்த்து இருந்தான் ராஜ்கமல். காற்று நன்றாகத்தான் வீசியது. கூடுதலாக மின் விசிறியை ஓடவிட்டவர் மகளை மெல்ல தூக்கி பக்கத்து சோபாவில் படுக்க வைத்தார். இரு ஒரு வாக்கியம்தான். ஆனால் அதை செய்வதறகுள் அவர் செத்துப் பிழைத்து இருந்தார்.
எதனால் மகள் சுயநினைவின்றி கிடக்கிறாள் என்று தெரியாத போது அவளை எந்த பக்கத்தில் இருந்து அசைக்கவும் பயமாக இருந்தது. அவர் அசைத்ததால் அவளுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மருந்துகளில் பிரச்சனை வருமோ? என்று பயந்தார். ஏனென்றால் அவர் டாக்டருக்குப் படித்திருக்கவில்லையல்லவா? எனவே எதைச் செய்யவும் பயமாக இருந்தது அவருக்;கு. அத்துடன் கை கால் நடுக்கம் வேறு.
பதட்டத்தில் கத்தியருப்பார் போல. என்ன சத்தம் என்று அந்த பாட்டி வீட்டில் இருந்;து வெளியே விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் வநது பார்த்ததுவிட்டு அதிர்ந்து போய் தன் தாயை அழைக்கச் சென்றுவிட்டான். உடனடியாக வநது பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் நர்ஸ் என்பதால் நைட் ஷிப்டில் இருந்து காலையில்தான் வீடு வந்திருந்த அவள் யுவராணியைப் பார்த்ததும் பதறிவிட்டாள்.
“அக்கா ராணி விஷம் குடிச்சிட்டாளா?”
“என்னது?விஷமா? இல்லியே? நல்லாத்தானே இருந்தா? புரியலியே?” என்று தவித்தார்.
இவரை கேள்வி கேட்பதை விடுத்து அந்த பக்கத்து வீட்டுப் பெண் நளினி காரியத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.
இவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து , ஆம்புலன்ஸ் வரவும் ராஜ்கமல் வந்துவிட்டான்.
வீட்டு வாசலில் ஆம்புலன்சைப் பார்த்தவன் பதட்டம் கூடியது. தன் பைக்கை நிறுத்தவும் தோன்றாமல் அதிலிருந்து இறங்கியவனுக்கு நல்ல வேளையாக பெரிதாக அடி எதுவும் இல்லை. பைக் தரையில் சரிந்து விழுந்தது. அவனுக்கு ஒருசில சிராய்ப்புகள்தான் . ஆனால் அது அவனது புத்தியில் உறைக்கவில்லை.
எப்படியோ மருத்துவமனை கொண்டு சேர்த்;து மருத்துவரின் முகம் பார்த்தால்…அவரும் இவள் கண் இரப்பைகளைப் பிதுக்கிப் பார்த்துவிட்டு நாடித் துடிப்பையும் செக் செய்துவிட்டு விஷம் குடித்து இருப்பதாகத்தான் சொன்னார்.
“போலீஸ் கேஸாயிடும். முதல்ல எஃப்.ஐ.ஆர் போட்டு வாங்க” என்றவரை கெஞ்சி கூத்தாடி முதலில் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கவும் பின் கண்டிப்பாக எஃப்.ஐ.ஆர் போடுவதாகவும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் பக்கத்து வீட்டு நர்ஸ் பெணமணியும் சில பல செஞ்சல்களை உதிர்த்து விட்டு ‘இனிமே அவங்க பாடு’ என்று வீட்டிற்குப் போய் விட்டார். அவரும் பாவம் பிள்ளைக்குட்டிக்காரி.
“கடைசியா என்ன சாப்பிட்டாங்கனு தெரியுமா?”  அந்த பக்கம் வந்த ஆயாம்மா பிட்டைப் போட்டார்.
“அவ ஏதோ ஸ்வீட் சாப்பிட்டு இருக்கா?”
“. அதுல தான் விஷம் கலந்திருக்கா ? அதுல மீதம் இருந்தா கொண்டு வாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்.”
“மீதம்லாம் இல்ல. ஸ்வீட் பாக்ஸ் முழுசும் காலியாகி இருந்துச்சு”
“பரவாயில்ல. ஒரு சின்ன இணுக்கு இருந்தாலும் போதும்.”
“இல்ல வர்றப்ப அதை ரோட்டோர குப்பையில போட்டுட்டு வந்திட்டோம்;. “ என்றார் துளசி. உண்மையில் அதை அவர் சுக்கலாக கிழித்து பாத்ரும் ஸிங்கில் போட்டு ஃபிளஷ் செய்து விட்டார். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விஷம் குறித்து கோடி காட்டியதும் கஜாவின் மனைவியான அவர் அந்த எவிடென்ஸை அழித்து விட்டார். தப்புதான். ஆனால் அவருக்கு வேறுவழி தெரியவில்லை. வேதாளத்திற்கு வாழ்க்கப்ட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகவேண்டும்?
“ஏன்?”
“அதைப் பார்;கவே பயமா இருந்;தது.. அதான்”
“ஏன் பயம்? நீங்கதான் குடுத்தீங்களா?” என்று அலுங்;காமல் கேள்வி கேட்டார்.
“இல்ல ..வந்து..”
 “அவங்க சாப்பிட்ட சாப்பாட்டில விஷம் கலந்திருக்கு போல .வாய் வழியா டியூப் போட்டு  வெளிய எடுத்திருக்காங்க. ட்ரிப்ஸ் போட்டிருக்கு. மயக்கம்தான். நெனப்பு வந்ததும் நார்மல் வார்டு கூட்டிட்டுப் போயிடலாம்.  என்றார் அங்கே ரொம்ப பழகிவிட்ட அந்த ஆயாம்மா.
“என்ன சாப்பிட்டாங்க?  வீட்ல என்ன பிரச்சனை “என்று ஆரம்பித்த ஆஸ்பத்திரி ஆயாம்மாவை  “தெரியலியே?” என்று அப்பாவியாக துளசி பார்க்கவும் அந்தப் பெண்மணியும்  பொத்தாம் பொதுவாக “ஃபுட் பாய்சானா இருக்கும்னு நினைக்கிறேன். இவங்களைப் பார்த்தா நல்ல மாதிரிதான் தெரியுது “ எனவும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டார். இதையே பிடித்துக் கொண்டவர் தன் மகன் முன் போய் நின்றார்.
“என்னம்மா?”
வந்து ராணிக்கு ஃபுட்பாய்சன்னு சொல்லி இந்த டாக்டரை எப்படியாவது சர்டிபிகேட் தந்திறச் சொல்லு. போலீஸ் கேஸ்லாம் வேண்டாம்பா” என்றார்.
“என்னம்மா சொல்றீங்க ?” என்று திடுக்கிட்டவன் தன் தாயின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
“நீங்க சொல்றத பார்த்தா உண்மையில… இல்லியே? ராணி தைரியமான பொண்ணாச்சே? ச்சே? இன்னிக்குன்னு நான் வெளிய போய்ட்டேன். இத்தனை நாள் போன்ல தான் வேலை பார்த்துகிட்டு இருந்;தேன்.?”
“நான் சொன்ன மாதிரி பிரச்சனை இல்லாம விசயத்தை முடிக்கப் பாரு” என்றதுடன் துளசி தள்ளிப் போய்விட்டார். அவர் முகம் மட்டும் இறுகிப் போய் இருந்தது.
ஒரு வழியாகப் போராடி ராணி வெளியே வந்தாள். அவள் உயிருக்;கு ஆபத்து இல்லை என்றானதும் மீண்டும் மருத்துவரிடம் கெஞ்சி விஷ விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
அடுத்த பனிரெண்டு மணி நேரத்திற்குள் தாமரை செல்வன் மருத்துவமனையில் ஆஜர் ஆனான்
அவனைப் பார்த்ததும் ஆவேசமான துளசி”டேய்? ஏன்டா இப்டி பண்ண? போறதுதான் போன? வாயை மூடிகிட்டு போக வேண்டியதுதானே? அவங்கப்பனை ஏன் சீண்டி விட்டுட்டுப் போன?” என்று அடிக்குரலில் உறுமினார்.
“என்னக்கா சொல்ற?”
 “அடேய்…” எனறு ஆரம்பித்தவர் குரலைத் தழைத்துக் கொண்டு “அவரோட சின்ன வயசில தெரு நாய்க்குப் பணணதை இப்ப சொந்த மகளுக்குப் பண்ணியிருக்காருடா” என்று உடைந்து அழுதார்.
“என்னக்கா சொல்ற?”
“சொரக்காய்க்கு உப்பில்லன்னு சொல்றேன். சும்மா என்ன நொன்னக்கா சொல்றேன்னுகிட்டு?” என்று கோபத்தில் குரல் நடுங்கினார். பின் அதே நடுக்கத்துடன் அவது நாய் புராணத்தைப் படிக்கவும் தாமரை செல்வன் உறைந்தே போனான்.
இப்படிப்பட்ட  கல்நெஞ்சக்காரனுக்கா தன் அக்கா வாழ்க்கைப்ட்டாள்? இவருடன் தன் அக்கா இத்தனை வருடம்; வாழ்ந்ததே ஒரு சாதனை அல்லவா?
“ஆமாடா. ஆமா..இவர்தான் அவளுக்கு ஸ்வீட்ல பாய்சன் கலந்து குடுத்திருக்கார் என்னை வெளியே அனுப்பிட்டார். இதுக்காக ராஜ்கமலை நேரில் வரச் சொல்ல சொல்லி அந்த கம்பெனியையும இவர்தான்  பிரஷர் பண்ணியிருக்கார்னு நினைக்கறேன” எனவும் ராஜகமல் தன் கோபத்தை அடக்க அரும்பாடுபட்டான்.
“ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில நம்ம வீட்ல அவரோட புத்தியைக் காட்டிட்டாருல்ல. இருக்கட்டும். இவர்தான் ஸ்வீட் குடுத்தாருன்னு ராணிம்மா எந்திரிச்சு சொல்லட்டும்! அப்புறம இருக்கு!
“என்ன செய்வே?”
“ஏன் ? போலீஸ்ல சொல்லிட வேண்டியதுதான்!”
“இல்ல. அதை விட பெரிய தண்டனை ஒன்னு இருக்கு. அதுக்கு நீதான் உதவி பண்ணனும். ஆனா அதை அவர் தண்டனைனு நினைக்க வைக்கிறது கூட கஷ்டம்தான். ஏன்னா உங்க அப்பா சாமானிய ஆள் கிடையாது”
“ஆமா. கொஞ்சம் லூசு” என்றான் எரிச்சலாக.
தாமரை செல்வன் சூழ்நிலையையும் மீறி மெல்ல புன்னகைத்தான்.
“பேஷன்ட் யுவராணியோட கேர் டேக்கர், பேமிலி?…” என்று துழாவியபடி வந்த நர்ஸைப் பார்த்ததும் மூவரும் விறைத்துத் திரும்பினார்கள்.
“ஸிஸ்டர்?”
“யுவராணி. ஃபுட்பாய்சன் கேஸ்?” என்று உறுதி படுத்திக் கொண்டு அவளை நார்மல் வார்டுக்கு மாற்ற இருப்பதான  செய்தியை சொல்லிச் சென்றார் நர்ஸ்.
மூவரும் நர்ஸின் பின்னே செல்ல இவர்கள் பின் தொடர யுவராணி நார்மல் வார்டுக்கு மாற்றப்ட்டாள்.
நலிந்த கொடியாக கிடந்த அவளைப் பார்த்த அண்ணனுக்கு மனமே தாளவில்லை.
வழக்கமான ஃபார்மாலிட்டீஸை முடித்துவிட்டு மருத்துவக் குழு அகன்றதும் மகளின் அருகே தலைமாட்டில் அமர்;நத துளசி “… எப்படி ராணிமா ?”  என்றார்
“என்ன? எப்படி?…” என்று முதலில் குழம்பிய ராணி ஒரு வழியாக நினைவிற்கு கொண்டு வந்தாள்.
“அப்பா வரலியாமா? அப்பா குடுத்த ஸ்வீட் சாப்பிட்டதும்தான் ஒரு மாதிரி மயக்கம் வந்திசசு. கெட்டுப் போன ஸ்வீட் போல இருக்கு. ஃபுட்பாய்சனா இருக்குமாம்மா?” என்று அவள் இவர்கள் எதிர்பார்த்த குண்டைத் தூக்கிப் போட்டாள்.
கண்களை சிமிட்டவும் மறந்து துளசியையும் யுவராணியையும் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை செல்வனை அப்போதுதான் கவனித்தாள் யுவராணி.
“வாங்க மாமா. “ என்று சம்பிரதாயமாக சொன்னாள். பின் தன் தாயிடம் திரும்பி “ ரொம்ப நாளா அப்பா என்கிட்ட பேசாம இருந்தாருல்லம்மா. அதுக்கு சாமாதனம் செய்ய ஸ்வீட் வாங்கிட்டு வந்திருந்தாரு. உங்க யாரையும் காணலை. அதனால நீயே சாப்பிடுன்னு அப்பா சொல்லவும் இருந்த நாலு லட்டையும் நானே சாப்பிட்டேன்” என்று கஷ்டப்பட்டு சொன்னாள். வாய் வழியாக டியூப் போட்டு இருந்ததால் தொண்டை ; புண்ணாகி  வலித்தது.
அது கொஞ்சம் சுமாரான ஆஸ்பத்திரி. அவசரமாக வந்ததில் இந்த ஆஸ்பத்திரிதான் முதலில் கண்ணில் பட்டது. அவர்கள் இருந்த பதட்டத்தில் தெய்வம் போல இருந்த அந்த மருத்துவ மனையைப் பற்றி ஆராயவில்லை. ஆனால் டி;ரீட்மென்ட் ஒன்;றும் மோசமில்லை. அதுதான் யுவராணி பிழைத்து விட்டாளே? அது போதாதா? இவ்வளவு சைட் எஃபக்ட்டுமா இருக்காது? என்று நினைத்துக் கொண்டார் துளசி.
“அப்ப..அப்பாதான் உனக்கு அந்த பாய்சன் ஸ்வீட்டைக் குடுத்திருக்கார்?”
“பாய்சனா? என்ன சொல்றே?” என்று பதறினாள் யுவராணி.
“ம். சொரக்காய்க்கு உப்பில்லன்னு சொல்றான்.” என்று துளசியைப் பார்த்து கடுகடுத்தவாறே அவரைப் போலவே சொல்லிக் காட்டினான் தாமரை செல்வன்.
“இன்னிக்கு வேற என்னல்லாம் சாப்பிட்ட?” என்று தாமரை செல்வன் கேட்கவும் “அது டாக்டரும் கேட்டார். இன்னிக்கு முழு விரதம். அதனால் பச்சை தண்ணீர் கூட அதுக்கு முன்னே குடிக்கலை ராணி” என்றார் துளசி. ஆமோதித்தாள் யுவராணி.
“எங்களுக்குதான் அவரைப் பத்தி தெரியாது. உனக்கு அவரைப் பத்தி நல்லாத் தெரியும் இல்லியா? பின்ன என்ன தைரியத்துல அவளை அந்த வீட்ல விட்டுட்டுப் போனே?” என்று பாய்ந்தான் தாமரை செல்வன்.
“ சும்மா நிறுத்துடா. அவர்கிட்ட சவால் விடறதுக்கு முந்தி அவர் யாரு என்னனு விசாரிக்காதது உன் தப்பு.நாங்களும் சும்மா இல்ல. முடிஞ்ச அளவு அவளை சுத்தி சுத்தி வந்துகிட்டுதான் இருந்;தோம். இவர் அவளை கண்டுக்காம இருக்கவும் மகள்னு பாசத்து இவளை விட்டு வச்சிருக்காருன்னு தப்பா நினைச்சிட்டோம்.
அப்படியும் அவளை வீட்ல விட்டுட்டுப் போகலை. வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு ராவுகாலம். அதுல துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டா பெண் பிள்ளைகளுக்கு நல்லதுன்னு அவ புது ஃபிரன்ட் கூட அனுப்பி வச்சேன். உங்கப்பா இன்னிக்கு காலைல இருந்து வீட்ல ஒண்ணும் வெட்டி முறிக்கலை. ஆனா நல்லா யோசிச்சுப் பாரு. இன்னிக்கு மாதிரி என்னிக்கும் இப்டி வீட்ல விழுந்து கிடந்தது இல்ல.
ஆளுக்கு ஒரு பக்கம் போகவும் நானும் அதை பெரிசா நினைக்கலை. ராணி சீக்கிரம் வீட்டுக்கு வந்ததுல உங்கப்பா கண்ணுல சிக்கிட்டா. இவளுக்கு குடுக்கனும்னு ஏற்கெனவே ரெடியா வச்சிருந்திருப்பாரு போல. சான்ஸ் கிடைச்சதும் காரியத்தை முடிச்சிட்டார்”
“அது யாரு புது பிரண்ட்?”
“யாரோ வந்தனாவாம். ஃபேஸ்புக்ல பிரண்டாம். இதே ஊருங்கவும் நம்ம வீட்டுக்கு வரச சொல்லி இருந்தா. நானும் பொம்பளைப் புள்ளதானனு சரின்னு சொல்லிட்டேன். அது வேற யாரும் இல்ல. நம்ம சுந்தரம் அண்ணாவோட பொண்ணுதான்” என்று முடித்தார்.
அதில் திடுக்கிட்ட ராஜ்கமல் “ அவளுக்கும் இதுக்கும்…” என்று இழுக்க “ச்சே..ச்சே.. அது தங்கமான பொண்ணு.  அந்தப் பொண்ணு என்னையும் கோயிலுக்கு வரச் சொல்லுச்சு. உங்க அப்பா சொன்னாரேன்னு நான் பக்கத்து வீட்டு பாட்டியை விசாரிக்கப் போயிருந்ததால இவ தனியா மாட்டிகிட்டா” என்றவர் , அதுவரை அதிர்ச்சியில் திரு திருவென விழித்துக் கொண்டு இருந்;த யுவராணியைப் பார்த்து “நீ ஏன் சீக்கிரம் வீட்டுக்கு வந்தே?” என்றார்.
அப்பா ஃபோனில் வரச் சொன்னதாக ஆயாசமாக சைகையில் சொன்னவள் களைத்துப் போய் கண்களை மூடிக் கொண்டாள்.
இப்போது அவள் கண்களுக்குள் அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் கொண்டாடிய தகப்பன் முகம் வந்து நின்றது. அந்த முகத்தை அப்படி மட்டுமே பார்க்கும் கொடுப்பினை இல்லாமல போனதே? நினைத்தும் பார்க்க முடியாத பயங்கரமான முகமாக அவரது நிஜ முகம் மாறிப் போன கொடுமையை தன் சொந்த வாழ்வில் அனுபவிக்கும் அவள் விதியை நினைத்து அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
வலியால்தான் அந்தக் கண்ணீர் என்று அங்கிருந்த மூவருமே நினைக்கவில்லை.
தாமரை செல்வன் மனதில்  மனதில் கஜா மீதான வெறுப்பு பொங்குமாக்கடலாக சீறியது.
error: Content is protected !!