ENE — epi 16

ENE — epi 16

அத்தியாயம் 16

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை      

டேனியின் பின்னே தான்யா அவன் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“வா டேனி போகலாம். நீ இப்படி வருவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உன்கிட்ட ஒன்னுமே சொல்லி இருக்க மாட்டேன். வா டேனி”

“நீ கீழே போய் பிரபுவோட இரு. நான் இவர் கிட்ட பேசிட்டு வரேன். டோண்ட் வோரி. அடிக்கலாம் மாட்டேன்”

‘பார்டா! இவன் நம்மள அடிக்க போறானா? நம்மாளு என்ன சொல்லி இவனை உசுப்பேத்திருக்கான்னு தெரியலையே. இப்படி துள்ளுறான்.’ அவர்கள் இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் விபா. இருவரையும் பார்க்க சிறு குழந்தைகள் சண்டைக்கு வந்த மாதிரி க்யூட்டாக இருந்தது அவனுக்கு.

“போத் ஓப் யூ கம் இன்.” என மென்னகையுடன் அவர்களை உள்ளே அழைத்தான்.

டேனி உள்ளே நுழைய, அவனது சட்டை துணியை பிடித்து கொண்டு சிறு பிள்ளை போல் தானுவும் உள்ளே நுழைந்தாள்.

கட்டிலை காட்டி,

“உட்காருங்க”

” நாங்க இங்க உட்கார வரல மிஸ்டர் விபா. ”

” அப்போ சரி. நீயாச்சும் உட்காரு தானும்மா. நீ நின்னா எனக்கு கால் வலிக்குது”

“ஹலோ மிஸ்டர் விபா. நான் இருக்கும் போது ஆங்கிலத்துலேயே பேசுங்க. அது என்னா குசு குசுன்னு உங்க லேங்குவெஜ்ல பேசுறது. எனக்கும் தமிழ் தெரியும். பேசவா? டேய் மச்சான், செத்தடா  சோமாறி, கஸ்மாலம் அப்புறம் என்ன வோர்ட் அது டான்யா?”

“வெளக்கமாறு பிஞ்சிரும்”

“யா யா. வெள்குமாற் பின்ச் ரூம். யூ சீ எனக்கும் சம் வோர்ட்ஸ் தெரியும். ஆனா நான் வெளிய காட்டிக்கிறது இல்லை.” என பெருமையாக சொன்னான் டேனி.

விபாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘ குட்டி பிசாசு, இவனுக்கு நல்ல நல்ல செந்தமிழ் வார்த்தையா சொல்லி குடுத்துருக்கா. இதுங்க ரெண்டும் பண்ணுற அட்டகாசம் இருக்கே, முடியலைடா சாமி.’

“டேனி, என்னை மன்னிச்சுரு. நீ இருக்கும் போது நான் கோமன் லேங்குவஜ் தான் யூஸ் பண்ணியிருக்கனும்.என்னோட தப்புதான். சரி இப்ப சொல்லுங்க, எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க?”

“டான்யாக்கு நீங்க இங்க இருக்கறது ரொம்ப டிஸ்டர்பா இருக்காம். யூ சீ மிஸ்டர் விபா, டான்யா பெசிக்கலி ஷை டைப். நீங்க இங்க இருக்கறதனால அவளால ப்ரீயா இருக்க முடியலையாம். அதனால நீங்க ஹோட்டல் பார்த்துகிட்டு போயிருங்க. இல்லை உங்க ஊருக்கே போயிருங்க. பிரபு கிட்ட சொன்னா, என் மச்சான் இங்கதான் இருப்பான்னு டைலோக் விடுறான். அதான் உங்கள நேராகவே பார்க்க வந்தேன். ”

“என்ன டிஸ்டர்பன்ஸ்னு உங்க பிரண்ட் சொன்னாங்களா?” என கேட்டவாறே உல்லாசமாக தான்யாவை நோக்கினான் விபா.

“எந்த காரணமும் எனக்கு தேவையில்லை. என் டான்யாவுக்கு பிடிக்கலைனா பிடிக்கலைதான். அதனால நீங்க ஊர பார்த்து கிளம்புங்க.”

என் டான்யா என டேனி சொன்னதில் விபாவுக்கு கோபம் வந்துவிட்டது.

“கிளம்பலைன்னா?” என கையை மார்பில் கட்டிக் கொண்டு தெனாவெட்டாக கேட்டான்.

“நீ கிளம்பலைனா என்ன, நாங்க கிளம்புறோம்” என டேனியின் கையை பிடித்து கதவின் வெளியே தள்ளினாள் தான்யா.

“போகலாம் டேனி. அடிச்சிற போறான். நிக்கிற ஸ்டைலே சரி இல்லை.வயசானவங்க கிட்ட, யூத் நமக்கு என்ன பேச்சு?”

‘அடிப்பாவி. என்னை பார்த்து தொண்டு கிழவன் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கிறாளே.’

ரூமை விட்டு வெளியேறும் முன் டேனி அவனை பார்த்து முறைத்துகொண்டே போனான்.

தான்யாவும் விபாவை முறைத்து கொண்டே டேனியின் பின்னால் வெளியேற போனாள். அதற்குள் அவள் கையை பிடித்து உள்ளே இழுத்த விபா காலால் கதவை சாத்தினான்.

“வேணு, என்னடா செய்யுற? கதவை திற”

“தேங்க் யூ சோ மச் தானு என்னை பார்க்க வந்ததுக்கு. இனிமே ஏதாவது பிரச்சனைனா நேரா என் கிட்ட சொல்லு. நமக்குள்ள எதுக்கு தூது, அதுவும் ஒரு வெள்ளை காக்கா?” என கேட்டவாறே அவளை இருக அணைத்தான்.

அவன் அணைப்பிலிருந்து திமிறியவள்,

“விடுடா இடியட். இப்ப கத்துனேன், டேனி வந்து உன் பல்லை பேத்துருவான்.”

“கொஞ்ச நேரம் அமைதியா இரேன் தானும்மா. உன் மேல வர வாசம் என்ன  வாசனை திரவியம்னு ஆராய்ச்சி பண்ணிடுறேன். யப்பா என்ன வாசனை!!” என அவள் கழுத்தோரம் வாசனை பிடித்தான் அவன்.

“மாட்டு சாணி கலந்து புதுசா ஒரு பெர்பியும் வந்துருக்காம். அது தான் இது. உனக்கும் வேணுன்னா ஆர்டர் பண்ணி தரேன். இப்போ என்னை விடுடா” என அவனை பிடித்து தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினாள் தானு.

வெளியே டேனி கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு டான்யா? ஏன் கதவு மூடிகிச்சு?”

“நான் வெளிய வரதுகுள்ள கதவு பூட்டிகிச்சு டேனி. விபா சார் தான் திறந்து விட்டாரு. லெச்சும்மா உன் கிட்ட பேச கீழே வெய்ட் பண்ணுறாங்க. வா” என அவனை கிளப்பி கொண்டு போனாள். திரும்பி விபாவை முறைக்கவும் தவறவில்லை.

முறைத்த தானுவை பார்த்து கண் சிமிட்டி பறக்கும் முத்தத்தையும் கொடுத்தான். பிறகு கீழே நால்வரும் பேசி கொள்வதை கதவை திறந்து வைத்தபடியே கேட்கலானான் விபா.

“டேனி பாய். இப்போதெல்லாம் ஏன்டா என்னை பார்க்க வரது இல்ல” என கோபித்து கொண்டார் லெட்சுமி.

“லெச்சு டார்லிங், உங்க மகன் தான் என்னை எங்க பார்த்தாலும் முறைக்கிறாரு. அப்புறம் எப்படி நான் தைரியமா உள்ளே வரது?” என சொல்லியபடியே அவரின் கன்னத்தில் முத்தமிட்டான் டேனி.

“நீ வீட்டுக்குள்ள வந்ததும் தான் வீடே லைட் போட்ட மாதிரி வெளிச்சமா இருக்கு. பிரபு கிடக்குறான். அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு நீ பயப்படறியா”

‘இவ்வளவு வெள்ளையா இருந்தா வீடு மட்டுமில்ல காடு கூட தான் வெளிச்சமா இருக்கும். என்னை கருப்பா பெத்து போட்டுட்டு, இவங்களுக்கு லொல்ல பாரேன். எந்த வீட்டுலயாவது பெத்த புள்ளயை விட்டுட்டு மத்த புள்ளய கொஞ்சுவாங்களா? என் வீட்டுல மட்டும் தான் இப்படி நடக்கும்.’ லெட்சுமியும் டேனியும் கொஞ்சி கொள்வதை கடுப்புடன் பார்த்திருந்தான் பிரபு.

“டார்லிங், அடுத்த வாரம் நாங்க ட்ரீப் போய்ட்டு வந்தவுடன் நாம மூனு பேரும் சலூன் போகலாம். போன தடவை நீங்க செஞ்ச கேர்ல்ஸ் காணாம போயிருச்சி. இந்த தடவை உங்க முடியை ரீபோன்ட் பண்ணி லைட் ப்ரவுன் கலர் அடிச்சிரலாம். அப்படியே பத்து வயசு இறங்கிரும்.”

“அப்படியா சொல்லுற? இதுக்குதான் டேனி வேணும்கிறது. அப்படியே செஞ்சிரலாம். பிரபுவோட கிரேடிட் கார்ட் என் கிட்ட தான் இருக்கு. இந்த தடவை உனக்கும் சேர்த்து நான் தான் பே பண்ணுவேன்.”

“வாவ், டார்லி. ஆவ்சம். இந்த தடவை முடிக்கு ஊதா கலர் மாத்தலாம்னு இருக்கேன். டான்யா, உனக்கு ஓகேவா? உன் கலர்க்கு ஊதா அப்படியே அள்ளிக்கும்.”

“நீ சொன்னா சரியாதான் இருக்கும் டேனி.”

“அப்போ டீல். அடுத்த வாரம் ஹேர்டூ வாரம். டார்லிதான் நம்ம ஸ்போன்சர்.”

‘ஏன்டா சொல்லமாட்ட. வீட்டு செலவுக்கு பயன்படுத்த கார்ட குடுத்தா, என் தலையிலே மிளகாய் அரைக்கிறீங்களா நீங்க. ஏம்மா இப்படி செலவு செய்றீங்கன்னு கேட்டா, உங்கப்பா இருந்தப்ப என்னை ஒரு கேள்வி கூட கேக்க மாட்டாரு. நீ என்னன்னா பொண்டாட்டி வரதுக்கு முன்னுக்கே இப்படி கேள்வி கேக்குறன்னு கண்ணை கசக்குறது. எல்லாம் இந்த உரிச்சகோழி ஏத்தி விடறது.’ என மனதுக்குள் நினைத்தானே தவிர வாயை திறக்கவில்லை பிரபு.

“தானு குட்டி. இந்த பிறந்த நாளுக்கும் எங்கேயோ போறியாம். உங்கம்மா சொல்லி ரொம்ப வருத்தபட்டா. இந்த பொண்ணு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து எங்க கூட பிறந்த நாள கொண்டாட மாட்டிக்கிறானு.”

“ப்ரெண்ட்ஸ் எல்லாம் வற்புறுத்தி கூப்பிடுறாங்க லெச்சும்மா. நான் என்ன செய்ய.” என பட்டும் படாமல் பதில் தந்தாள் தானு.

“தானு, நான் உனக்கு ஒரு பேர்த்டே பரிசு வச்சிருக்கேன். இரு வரேன்” என உள்ளே சென்றான் பிரபு.

“பாரேன் தானு. இந்த வருஷமும் போன் கவர் தான் வாங்கி தர போறான்” என மகனை கிண்டல் செய்தார் லெட்சுமி.

“எதுவா இருந்தா என்ன லெச்சும்மா. பாசத்தோட குடுக்குறான். அதுவே எனக்கு போதும்”

“டொட்டடொய்ங்” என சொல்லியவாறே பெரிய பார்சல் ஒன்றை அவளிடம் நீட்டினான் பிரபு.

தானு பார்சலை பிரிக்கும்வரை அவளை ஒட்டியபடி டேனியும் லெட்சுமியும் நின்று கொண்டார்கள். உள்ளே ரோஜா வண்ணத்தில் ஐபோன் 7 ப்ளஸ் அவர்களை பார்த்து சிரித்தது. லெட்சுமி வாயை பிளந்து விட்டார்.

“அம்மா! வாயை கொஞ்சம் மூடுங்க. ஈ புகுந்தறபோது” என அம்மாவை கிண்டல் அடித்தான் பிரபு.

யோசனையாக பிரபுவை பார்த்தாள் தான்யா.

“பிரபு. இவ்வளவு விலை அதிகமான பரிசெல்லாம் வேணாம். எப்பவும் குடுக்குற மாதிரி போன் கவரே குடு.”

“அதுவும் உள்ளே இருக்கு தானு. உனக்கு புடிச்ச ஹேலோ கிட்டி கவர்”

“வேணாம் பிரபு. இதை நீயே பயன்படுத்திக்க. எனக்காக நீ இவ்வளவு செலவு செய்ய வேணாம். கில்ட்டியா இருக்கு.”

“சரி குடு. நானே எடுத்துக்கிறேன்”

மேலே கேட்டுகொண்டிருந்த விபாவுக்கு பக்கென்று இருந்தது. ‘என்னடா இது, இவன் ஆட்டைய போட பார்க்குறான்’

“உனக்கு எப்பவுமே வெறும் வாய்தான் அண்ணன் அண்ணன்னு. இதே தருண் குடுத்தா இப்படி வேணாம்னு சொல்லுவியா?” என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டான் பிரபு.

“எடுத்துக்கோ டான்யா. பாரு பிரபு அழுவ ரெடியா ஆகிட்டான். வெள்ளம் வரதுக்குள்ள வாங்கிக்க” என தானுவை ஊக்கினான் டேனி.

பிரபுவின் அன்புக்கு கட்டுபட்டு போனை வாங்கி கொண்டாள் தான்யா. அப்பொழுதே புது போனில் சிம்மை பொருத்தி கொடுத்தான் டேனி. கீழே தான்யாவின் சிம் ஆக்டிவேட் ஆனவுடன், மேலே விபாவுக்கு மெசேஜ் வந்தது. ‘இனிமே உன்னோட குட்டி உலகமே என் கையில தான் தானும்மா’ என புன்னகைத்தபடியே படுக்க ஆயத்தமானான் விபாகர். இனி தான்யா யாருக்கு போன் செய்கிறாள், மெசெஜ் அனுப்புகிறாள், என அந்த போனை பயன்படுத்தி செய்யும் அனைத்தும் விபாவுக்கு செய்தியாக அனுப்பப்படும். நவீன ஒட்டறிதலை நாட்டு போருக்கு மட்டும் அல்ல காதல் போருக்கும் பயன்படுத்தலாம் என முடிவெடுத்தான் விபாகர். அந்த முடிவு அவனுக்கு சாதகமாக அமையுமா இல்லை பாதகமாக அமையுமா என காலம் தான் பதில் தரும். இந்த உள்குத்தை, பாவம் பிரபு அறியவில்லை.

இரவு ஒரு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த தான்யா தருணை ஹாலில் எதிர்பார்க்கவில்லை.

“மணி எத்தனை தெரியுமா தானு?”

“சோரிண்ணா. லெச்சும்மா வீட்டுல தான் இருந்தேன்”

“டேனி வீட்டுக்கு போய்ட்டானா?”

“ஆமா. இப்பத்தான் கிளம்பினான். நீங்க இன்னும் தூங்கலையா?”

“உன் கிட்ட பேசத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன். ப்ரைம் மினிஸ்டர் கிட்ட கூட பேசிடலாம் போல. உன்னைய புடிக்க முடியலை”

“என்ன விஷயம் தருண்ணா?

“அம்மா ரொம்ப வருத்தபடுறாங்க”

“அதுக்கு நான் என்ன செய்யுறது? நான் பிறந்ததே எனக்கு பிடிக்கல. அப்புறம் எதுக்கு இந்த செலேபேரேஷன் எல்லாம். இங்க இருந்தா ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்கன்னு தான், நான் அந்த டைம்ல ட்ரீப் போயிருறேன். உங்களுக்கு கூடவா என் பீலீங் புரியல?”

“சரி தானு. உடனே குரலை உயர்த்தாதே. அம்மா தூங்குறாங்க. நான் அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறேன். நீ கேட்ட பணம் அம்மா கிட்ட குடுத்துருக்கேன். வாங்கிக்கோ. சந்தோஷமா போயிட்டு வா. வேலை விஷயமா நாளைக்கு நான் தாய்லண்ட் போகனும். அதனால வெள்ளி நீ கிளம்பறப்போ நான் இருக்க மாட்டேன். பத்திரமா நடந்துக்கோ”

“தேங்க்ஸ் தருண்ணா. டேனி இருக்கான். மத்த ப்ரேன்ஸ் எல்லாம் இருக்காங்க. பயம் இல்லை.”

“அம்மா மனசு நோகாம, நல்லபடி சமாதானமா போ. புரியுதா? நமக்கு இருக்கறது அவங்க மட்டும் தான்.”

“சரிண்ணா”

“அப்புறம் தானு, இன்னொரு விஷயம்.”

“சொல்லுங்கண்ணா”

“லெச்சும்மா வீட்டுல தங்கியிருக்குற அந்த ஆள் கிளம்பற வரைக்கும் அடிக்கடி அங்க போகாதே.”

“ஏன்ண்ணா இப்படி சொல்லுற? யாரை பத்தியும் நீ இப்படி பேச மாட்டியே”

“என்னமோ அவனை பார்க்கும் போது என்னமோ நடக்க போற மாதிரி பீலீங் வருது. எனக்கு நல்லதா படல. எதுக்கு வம்பு. நீ ஒதுங்கியே இரு. சரியா?”

“ஹ்ம்ம் சரிண்ணா.” என தயங்கியபடியே சொல்லியவள் படியேறினாள் படுக்க செல்ல.

“குட் நைட் தானு”

“குட் நைட் அண்ணா”

உடம்பு கழுவி படுத்தவள், இன்று நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டாள். ஒரு நாளிலே தன் உலகம் தலைகீழாக மாறி விட்டது போல் இருந்தது. அதுவும் அந்த அணைப்பு. இன்னும் விபாவின் வாசம் அவளை சுற்றியே இருப்பதைபோல் ஓர் உணர்வு. கண்களை மூடி அந்த வாசத்தை சுவாசித்தாள். எழுந்து நின்று, சுவரை தடவி பார்த்தாள். இந்த சுவருக்கு அப்பால்தான் விபா இருக்கிறான் என நினைக்கும்போதே ஒரு வகை ஆனந்தம் நெஞ்சில் வந்தமர்ந்தது. விபாவும் அந்த நேரம் அதே சுவர் மேல்தான் கண் மூடி சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

தொலைபேசியை கையிலெடுத்த தானு தனது தம்ப்ளர் அக்கவுனில் ஒரு  கவிதையை பதிவேற்றம் செய்தாள்.

“உன்னை மறக்க முடியாது

ஆனால் மறுக்க முடியும்”

 

 

எட்டி நில்லு…

 

error: Content is protected !!