ENE– EPI 27

ENE– EPI 27

அத்தியாயம் 27

 

எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்

டேனியும் விபாவும் கிளம்பி இன்றோடு மூன்று நாட்கள் ஆகி இருந்தன. இருவருமே நலமுடன் தரை இறங்கியதாக மெசேஜ் செய்திருந்தார்கள். ஸ்மைலியை அனுப்பிவிட்டு போனை அடைத்து போட்டு விட்டாள் தானு.

ஆன்லைனில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் வேலையில் கவனத்தை செலுத்தினாள் அவள். இரவில் கபேவிற்கு வேலைக்குச் சென்றாள். பிரபு எவ்வளவு வற்புறுத்தியும் அவனோடு வேலைக்கு செல்ல அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

தொழிலிலும் சரி , சொந்த வாழ்க்கையிலும் சரி எல்லோரையும் அசால்ட்டாக சமாளிக்கும் விபாவே, இவளை தன் வழிக்கு கொண்டு வர விழி பிதுங்கினான்.

‘வேற வழி இல்லை. மேய்ன் சுவிட்சுல கையை வச்சா தான் இவள வழிக்கு கொண்டு வர முடியும்’ என எண்ணியவன் நேரடியாக கற்பகத்துக்கு போன் செய்து பேசினான்.

“வணக்கம்மா. நான் விபா பேசுறேன்”

“சொல்லுப்பா விபா. நல்லா இருக்கியா? ஊருல நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?”

“நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க? இங்க வெயிலும் மழையும் மாறி மாறி வாட்டுது. மத்தபடி நீங்க எல்லாம் பக்கத்துல இல்லைங்கிற குறைய தவிர வாழ்க்கை ஓகேவா தான் போகுது.”

“நான் நல்லா தான் பா இருக்கேன். நம்ப பாப்பா தான்!!!”

“என்னம்மா ஆச்சு அவளுக்கு?” பதட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டு நார்மலாக பேச படாத பாடு பட்டான் விபா.

“உன் கிட்ட சொல்லுறதுக்கு என்னப்பா. ராத்திரி வேலைக்கு போற நேரம் தவிர அந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சி கெடக்குற. நானா வெளிய வாடின்னு கூப்பிட்டாலும், எரிஞ்சி விழறா. இந்த டேனி பையன் போனதுள்ள இருந்து, எங்க மறுபடியும் டிப்ரஷன்ல விழுந்துருவாளோன்னு பயமா இருக்கு. அவ அண்ணன் வேற ஊருல இல்லை. பிரபு கிட்டயும் பேச மாட்டிக்கிறா. இந்த ஒரு பொண்ணை வச்சு நான் சமாளிக்கிறது இருக்கே, போதும் போதும்னு ஆயிருது” கேட்க ஆள் கிடைக்கவும் தன் கவலை எல்லாம் அவனுடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

“அவுங்களுக்கு கவலை இருக்க தான் மா செய்யும். நீங்க தான் அதுல இருந்து அவளை வெளிய கொண்டு வரணும். நானும் உங்க கிட்ட ஒரு உதவி கேட்க தான் போன் செஞ்சேன்”

“சொல்லுப்பா. நம்ம ஊரு பையனா போய்ட்ட. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யுறேன்”

“எனக்கு டெம்ப்ரவரியா கடைக்கு ஒரு நம்பிக்கையான ஆளு தேவை படுதும்மா. ஏற்கனவே கணக்கு வழக்கு பார்க்க வச்சிருந்த ஆளு பணத்தை கையாடிட்டாரு. பிரபு மத்த வேலை எல்லாம் பார்க்கிறதுனால இதையும் அவன் தலையில கட்ட முடியாது. அதனால தான் உங்க மக கொஞ்ச நாளைக்கு ஹேல்ப் பண்ணி குடுப்பாங்களான்னு கேட்க போன் செஞ்சேன்”

“அட பாவமே. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல போ. நான் கேட்டு பார்க்கிறேன் பா. இவ வருவாளான்னு தெரியலையே”

“முழு நேரமா இந்த வேலை செஞ்சாங்கன்னா, கொஞ்சம் டைவர்ஷன் கிடைக்கும்மா. தேவை இல்லாததை நினைச்சுகிட்டு இருக்க மாட்டாங்க. அதோட பிரபு கூடவே போய்ட்டு வந்துரலாம். பாதுகாப்பாகவும் இருக்கும். எனக்கும் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும். உங்க வளர்ப்பாச்சே நம்பி கல்லாபெட்டியயே தூக்கி குடுக்கலாம்.” என பலமாக ஐசை தூக்கி அவர் தலையில் வைத்தான். அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“நீ கவலையை விடுப்பா. நான் பேசி அவளை சம்மதிக்க வைக்கிறேன்.”

“ரொம்ப நன்றிமா”

“என் பிரச்சனை தீர வழி சொல்லியிருக்க. நான் தான் உனக்கு நன்றி சொல்லனும் விபா”

“சரிம்மா, மத்தது எல்லாம் பிரபு கிட்ட பேசிக்கிங்க. இப்ப அடிச்சனே அது தான் என்னோட நம்பர். சேவ் பண்ணி வச்சிகிங்க. நீங்க எப்ப வேணும்னாலும் என்னை கான்டேக்ட் பண்ணலாம்.”

“சரிப்பா, வச்சிருறேன்”

‘இனிமே என் மாமி எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க. என் குட்டி ராட்சசி இருக்காளே!!! முத வேலையா டாக்டர் அப்பாயிண்ட்மேன்ட் வாங்கி என் ரத்த அழுத்தத்தை சோதிக்கணும். இவ பண்ணுற ஒவ்வொன்னும் பிரஷரை ஏத்துது. அன்னிக்கு கூட ஏர்போர்ட்ல வேணு விபாகர்ன்னு கூப்பிடுறா. வாயிலே ஒன்னு போட்டுருக்கணும்.’ என அவளை செல்லமாக திட்டியவறே, செக்கரட்டரியை அழைத்தான்.

“சிவா! ஒரு காப்பி ஸ்ட்ராங்கா சொல்லுங்க. தலை வலி பின்னி எடுக்குது”

இதுக்கே இப்படியா? இன்னும் அவ பண்ண போறதுக்கெல்லாம் நீ தலையையே ஸ்கேன் செய்ய வேண்டி இருக்கும் என விதி அவனைப் பார்த்து சிரித்தது.

மறுநாள் காலையிலேயே கிளம்பி அவள் வீட்டு நடுவில் இருந்த மதில் மேல் ஏறி உட்கார்ந்திருந்தாள் தான்யா.

“பிரபு! ஓ பிரபூ !” என கத்தி கூப்பிட்டாள்.

“என்னம்மா தானு காலை ஏழு மணிக்கே இவனை கூப்பிட்டு கிட்டு இருக்க?”

“அதான் கற்பு மண்டையை கழுவி என்னை வேலைக்கு வர வச்சிட்டாங்க இல்ல, இவனும் இவன் மச்சானும். இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரிக்க சொல்லுங்க லெச்சும்மா.”

“அவன் ஒன்பது மணிக்கு எழுந்து, பத்து மணிக்கு தான் மா கடைக்கே போவான்.”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. கற்பு பண்ண டாச்சருக்கு எனக்கு தூக்கமே வரல. நான் மட்டும் எழுந்து உக்காந்து இருக்கேன். இந்த மைனருக்கு மட்டும் என்ன தூக்கம். இப்ப எழல, தண்ணி பிடிச்சு மூஞ்சியிலே ஊத்திருவேன். சொல்லுங்க அவன் கிட்ட”

“காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா சண்டைய? இரு போய் எழுப்புறேன். குட்டி, அப்படியே அவன் கிட்ட சொல்லி என்னையும் ப்ரேக்பஸ்ட் கூட்டிகிட்டு போக சொல்லுமா. இன்னிக்கு கிச்சனுக்கு லீவ் விட்டுருக்கேன்”

“அதுக்கென்ன லெச்சும்மா. நான் கற்புவையும் கூப்புடறேன். நாலு பேரும் வெளிய சாப்பிடலாம். அப்புறமா உங்கள இறக்கி விட்டுட்டு நாங்க வேலைக்கு கிளம்புறோம்.”

“என் தானுன்னா தானுதான். இரு எழுப்பிட்டு வரேன்”

சொன்ன மாதிரியே சாப்பிட்டவுடன் அம்மாக்கள் இருவரையும் இறக்கிவிட்டு விட்டு இருவரும் ‘எலேகண்ட்’ கிளம்பினார்கள்.

“நான் தான் இங்க வேலைக்கு வர மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் பிரபு அம்மா வரைக்கும் போனீங்க?”

“என் கூட வந்து வேலை செய்ய உனக்கு என்ன பிரச்சனை தானு? விபா தான் இங்க இல்லையே. அப்புறம் என்ன? வீட்டுலயே விட்டத்தைப் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்க போறீயா?”

“ப்ச்ச். எனக்கு பிடிக்கல பிரபு. வேணான்னு தள்ளி போற என்னை ஏன் திரும்ப திரும்ப இந்த உறவுக்குள்ள தள்ளுற?”

“பாப்பா, உன் முடிவை நான் ரெஸ்பேக்ட் பண்ணுறேன். இந்த வேலை செய்யுறப்ப, விபா வேலைய தவிர வேறு எதைப்பத்தியும் உன் கிட்ட பேசாம நான் பார்த்துக்குறேன். பேச்சு வார்த்தை கூட ரொம்ப மினிமலா தான் இருக்கும். மோஸ்ட்லி ஈமேயில்லேயே டீல் பண்ணிக்கிலாம்.என்னை நம்பு”

“உன்னை நம்புனா, என்னை டீல்ல விட்டுற மாட்ட இல்லை?”

“சேச்சே இல்லைடா. நீதான் எனக்கு முக்கியம். உனக்கு பிறகு தான் அவன்”

“என்னைக்கு எனக்கு லீவ் குடுப்ப?”

“இன்னும் வேலையே ஆரம்பிக்கல. அதுகுள்ள லீவ் கேக்குறீயே பாப்பா.”

“ஷப்பா. உன் கிட்ட வேலை செய்யுறத நினைச்சா எனக்கு இப்பவே கண்ணை கட்டுது. ஏழு நாளும் கடை திறக்கறீங்களே, எனக்கு எப்ப லீவ் டேன்னு கேட்டேன்.”

“உனக்கு எப்ப வேணும்னாலும் நீ லீவ் எடுத்துக்கலாம். ஓன் டே தான் அல்லவுட்.”

“ஓகே. இந்த காரை இன்னும் திருப்பி குடுக்கலையா பிரபு?”

“இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு திருப்பி குடுக்க வேணாம்னு சொல்லி இருக்கான்.”

“ஓ! அது என்ன மூனு மாச கணக்கு? நாளைக்கு நான் ஓட்டவா?”

“அது என்ன கணக்கோ. எனக்கு எப்படி தெரியும். தாராளமா ஓட்டு பாப்பா. உனக்கு இல்லாததா?”

“ப்ராமிஸ் பண்ணு நான் கார் ஓட்டுறத வேணுகிட்ட சொல்ல மாட்டேன்னு”

“இதையேல்லாம் போய் சொல்லுவேன்னா பாப்பா? டோன்ட் வோரி”

“இதை சொல்ல மாட்டேன்னா, வேற எதை சொல்லுவ?”

‘போச்சுடா, குடைய ஆரம்பிச்சுட்டா’

“தானு, கடை வந்துருச்சு பாரு. இறங்கிக்க. நான் போய் பார்க் பண்ணிட்டு வரேன்”

‘கிரேட் எஸ்கேப். மூனு மாசம் இவள எப்படி சமாளிக்க போறேனோ. அவன் வேற தானு சாப்புட்டாளா, தூங்குனாளா, இதை செஞ்சாளா அதை செஞ்சாளான்னு டாச்சர் பண்ணுறான். இதுல கொசுறா இந்த டேனி வேற டான்யாவை பாத்துக்க பிரபுன்னு மேசேஜ் அனுப்புறான். இப்படியே போனா என்னை தான் பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல நீங்க எல்லாம் வந்து பாக்கணும்.’

இந்த வேலை தான்யாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. வேறு எதையும் சிந்திக்க முடியாத அளவுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. இன்வொய்ஸ் வந்தால் கீ இன் செய்வது, அக்கவுன்ட் செயலியில் கணக்கு வழக்குகளை பதிவது, வேலை செய்பவர்களின் சம்பள விஷயத்தை கவனிப்பது என்று வேலை சரியாக இருக்கும். வேளை தவறாமல் சாப்பிட, குடிக்க என பிரபு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பான்.

காபே வேலையை விட்டுவிட்டதால் , இரவில் சிறிது நேரம் மருத்துவ சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பாள். தூக்கம் வராமல் மனசுக்கு கஷ்டமாக இருக்கும் போது கீழே இறங்கி, கற்பத்தை கட்டிக் கொண்டு படுத்துக் கொள்வாள்.

மெடிக்கல் படிக்க போவதால், பார்ப்பவர்களுக்கு மரியாதையாக தெரிய வேண்டும் என்று பச்சை டையை கருப்புக்கு மாற்றி முடியையும் வெட்டாமல் விட்டிருந்தாள். புருவத்தில் போட்டிருந்த பியர்சிங்கையும் அகற்றி இருந்தாள்.

காலையிலும் இரவிலும் நாள் தவறாமல் மெசேஜ் வரும் விபாவிடம் இருந்து. இவள் பதில் அனுப்பமாட்டாள். அவனும் பதிலை எதிர்பார்த்தது மாதிரி தெரியவில்லை. டேனி வாரத்துக்கு ஒரு தடவை ஈமேயில் அனுப்புவான். அங்கே தங்கும் இடம் எப்படி இருக்கிறது, உணவு முறைகள், புது நண்பர்கள் இப்படி பொதுவாக இருக்கும்.

ஓரளவு வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்தது தானுவுக்கு. தருணும் தாய்லண்டில் வேலையை முடித்துக் கொண்டு வீடு வந்திருந்தான்.

தானு படபடப்புடன் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது. பல்கலைகழக நுழைவு முடிவுகள் இன்று வெளி வரும் என அறிவிப்புகள் வந்திருந்தன. காலையிலேயே குளித்து முடித்து பாட்டியை வேண்டி கொண்டு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தாள் தானு. வெப்சைட்டில் லோகின் செய்து முடிவுகள் லோடிங் செய்யும் வரை  நெஞ்சம் படபடக்க திரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

முடிவைப் பார்த்து மெல்ல சிரித்து கொண்டவள், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு படி இறங்கி கீழே சென்றாள்.

தருணும் கற்பகமும் அவளுக்காக காத்திருந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு? மெடிக்கல் சீட் கிடைச்சுதா?” என ஆவலாக கேட்டார் கற்பகம்.

“கிடைச்சிருக்குமா. ஆனா மெடிக்கல் இல்லை டென்டிஸ்ட்ரி தான் கிடச்சிருக்கு.” என விரக்தி புன்னகையுடன் சொன்னாள் தானு.

“என்னம்மா இது? நல்ல ரிசால்ட் இருந்தும் நீ மூனாவது ஒப்சனா தேர்ந்தெடுத்த டென்டிஸ்டரி தான் குடுத்துருக்காங்க. அதுவும் சரவாக் மாநிலத்துல. அவ்வளவு தூரம் போகனுமா?” என கவலைப்பட்டான் தருண்.

“இப்ப என்னம்மா செய்யலாம்” என கேட்டார் கற்பகம்.

“இந்த ஒப்சனையே எடுத்துகிறேன்மா. நம்ம பொருளாதார நிலமையில பிரைவட்ல என்னால மெடிக்கல் படிக்கவும் முடியாது. ஆசைபட்டது கிடைக்கலனா, கிடைச்சத ஆசை பட்டு ஏத்துக்க வேண்டியது தான்.” சொல்லும் போதே குரல் கரகரத்தது.

எல்லோருக்குமே தெரியும் அவளுக்கு மருத்துவம் படிக்க எவ்வளவு ஆசை என்று. சின்ன வயதில் இருந்தே அவளை அவ்வாறு உருவேற்றி வளர்த்திருந்தார் வள்ளி. தருண் பேச வாயைத் திறக்கும் முன், அழைப்பு மணி அடித்தது. கற்பகம் யாரென்று பார்ப்பதற்கு வெளியே சென்றார். அவர் திரும்பி வரும் போது பிரபுவும் லெட்சுமியும் கூட வந்தார்கள்.

“இப்பத்தான் அம்மா சொன்னாங்க தானு. கவலையை விடு. இந்தா இந்த லெட்டர பிரிச்சு பாரு” என அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான் பிரபு.

வாங்கி பிரித்துப் பார்த்த தானுவின் உதடு சிரிப்பில் மலர்ந்து மீண்டும் சுருங்கியது.

“நான் போகல பிரபு”

“ஏன்? ஏன் போக மாட்ட? இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது தெரியுமா. அப்படியே கப்புன்னு பிடிச்சுகிட்டு முன்னேற பார்க்கணும். அதை விட்டுட்டு போகலையாம்.” என திட்டினான் பிரபு.

இந்தியாவில் மெடிக்கல் சீட் அப்ளை செய்யும் போது தருணிடமும் சொல்லி இருந்தாள் தானு. மெடிக்கல் படிக்க ஆசியாவிலே நல்ல கல்லூரி இது எனவும் ,சும்மா ட்ரை செய்து பார்ப்பதாகவும் சொல்லி இருந்தாள் அவனிடம்.

அந்த லெட்டரை வாங்கி பார்த்த தருணுக்கும் சந்தோஷம் கலந்த ஆச்சரியம்.

“ஏன்டா குட்டி வேணான்னு சொல்லுற?” என அவனும் கேட்டான்.

இவர்கள் மூவரும் பேசுவதை கேட்ட தாய்மார்கள் இருவரும்,

“என்னடா நடக்குது இங்க? எங்க கிட்டயும் சொல்லிட்டு அப்புறம் பேசுங்கடா” என சத்தம் போட்டனர்.

பிரபு தான் அவர்களுக்கு சென்னையில் மெடிக்கல் படிக்க ப்புல் ஸ்கோலஷிப்புடன் தானுவுக்கு இடம் கிடைத்திருப்பதாக விளக்கினான்.

கற்பகம் ஆரவாரத்துடன் தானுவை கட்டி கொள்ள, லெட்சுமியோ நீயும் என்னை விட்டு போக போறீயா என்கிற ரேஞ்சில் கண்ணீருடன் கட்டி கொண்டார்.

“எல்லோரும் கொஞ்சம் கால்ம் டவுன் ஆகுங்க. நான் இன்னும் போறேன்னு சொல்லவே இல்லை”

“ஏன்டி போக மாட்ட? உன் திறமையைப் பார்த்து ப்ரீயா படிக்க கூப்பிடுறாங்க. அது உனக்கு கசக்குதா?” என சாமியாடி விட்டார் கற்பகம்.

“ஐயோ அம்மா! உங்க எல்லாரையும் விட்டுட்டு தனியா அங்க போய் நாலு வருஷம் எப்படிமா இருப்பேன்?”

தானு போக மாட்டேன் என்றதும் லெட்சுமியின் முகம் பல்ப் போட்டதை போல் மலர்ந்தது.

“ஏன் தானு, படிக்காத அம்மாவே தைரியமா இந்த ஊருக்கு வந்து வாழலியா? நீ அங்க படிக்க தானே போக போற. படிப்பு முடிஞ்சதும் திரும்பி வர போற. பார்க்கணும்னு நினச்சா மூனு அவர்ல ப்ளைட்ட புடிச்சு நாங்க அங்க வந்திருவோம். அப்புறம் என்ன?” என மனனம் செய்ததை ஒப்பிப்பது போல் பேசினான் பிரபு. இருக்காதா பின்னே, விபா தான் தானு எப்படி ஆர்கியூ செய்வாள் அதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும் என வேப்பிலை அடித்து அனுப்பி இருந்தானே.

“அது இல்லை பிரபு. செமெஸ்டர் பீஸ் மட்டும் அவங்க கட்டிருவாங்க. அதுக்கு அப்புறம் வர மத்த செலவு எல்லாம் எப்படி சமாளிக்கிறது? தங்குற இடம், சாப்பாடு, புக்ஸ், இப்படி இன்னும் தொட்டதுக்கேல்லாம் பணம் வேணுமே”

‘பணம் வேணுமே! வேணுமேன்னு நீ சொல்லுற. அதுக்குத்தான் வேணு இருக்கானேன்னு நான் சொன்னா, குடும்பமே சேர்ந்து என்னை மொத்த வருவீங்க. இந்த காலத்துலயும் இப்படி ஒரு குடும்பம்.’ என மனதுக்குள் கவுன்டர் கொடுத்தான் பிரபு.

“தானு பணத்தைப் பத்தி நீ கவலை படாதம்மா. உன் அண்ணன் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்.”

“என்னன்ண்ணா இப்படி எல்லாம் பேசுறீங்க?” என கண் கலங்கி விட்டாள் தானு.

“அப்புறம் என்னம்மா, நாங்க சொல்லறத முழுசா கேட்காம முடியாது முடியாதுனா எப்படி? நீங்க சொல்லுங்கம்மா இவகிட்ட, நாம ஒன்னும் பிச்சைக்காரங்க இல்லைன்னு. பண விவகாரத்த இவ கிட்ட பேச வேணாம்னு நீங்க தானெ சொன்னீங்க”

“ஆமாப்பா சொன்னேன்தான். கஸ்டப்பட்டா தான் பணத்தோட அருமை புரியும். அப்பத்தான் நல்லா படிப்பான்னுதான் பாட்டி எழுதி வச்ச சொத்தை பத்தி சொல்ல வேணாம்னு சொன்னேன்.”

“என்னம்மா சொல்லுறீங்க? பாட்டி எனக்கு சொத்து எழுதி வச்சிருக்காங்களா?”

“ஆமாம்மா. ஊருல வீடு இருந்ததுல்ல, அதை வாடகைக்கு தான் விட்டிருந்தாங்க. அவங்க இறக்கறதுக்கு ஒரு வருடம் முன்னுக்கு தான் அந்த வீட்டை வித்தாங்க. காசை இங்க எடுத்து வந்து மாத்துனா எக்ஸ்ஜேஞ் ரேட் குறைவா வருதுன்னு, அங்கயே உன் பேருல பேங்குல போட்டு வச்சிட்டாங்க. உனக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா அங்க போய் அந்த காசுல வேண்டியத வாங்கிக்கலாம்னு என் கிட்ட சொல்லி இருக்காங்க. இப்ப நீ படிக்கிறதுக்கு எடுத்தா கண்டிப்பா அவங்க ஆத்மா சந்தோசப்படும். அதோட இந்த வீட்டையும் உன் பேருக்கு தான் மா எழுதி வச்சிருக்காங்க. என் பேரன் ஆம்பிளை பையன் எப்படி வேணும்னாலும் பொழச்சிக்குவான். என் பேத்தி மட்டும் யாரு கிட்டயும் கை ஏந்தி நிக்க கூடாது அது அவ அண்ணனா இருந்தாலும் சரின்னு சொல்லுவாங்க. அவங்க உன் மேல உயிரையே வச்சிருந்தாங்க தானு” என சொல்லியவாறே கண் கலங்கினார் கற்பகம்.

கற்பகத்தை அணைத்து கொண்ட தானு, தானும் பாட்டியின் நினைவில் கண் கலங்கினாள்.

‘எனக்காக பாட்டி இவ்வளவு யோசிச்சு எல்லாம் செஞ்சிருக்காங்க. அவங்க ஆசை பட்ட மாதிரி நான் எப்பாடு பட்டாவது ஆர்தோபடிக் டாக்டரா ஆகிறனும்’ என மனதில் உறுதி பூண்டாள் தானு.

“நானும் மாசம் மாசம் சம்பளத்துல உன் படிப்புக்காக ஒரு தொகை சேமிச்சி வைச்சிருக்கேன் தானு. அதனால தான் பண விஷயத்துல உன் கிட்ட கொஞ்சம் கண்டிப்பா நடந்து கிட்டேன். இப்ப பாரு, நீ நல்லா பட்ஜேட் போட்டு வாழ கத்துக்கிட்ட” என தருணும் கண்களை துடைத்து கொண்டான். தானு அன்போடு அண்ணனையும் அம்மாவையும் கட்டிக் கொண்டாள்.

“உங்க மூனு பேரையும் பார்த்து ‘ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்வதெற்கே’ன்னு பாட தோணுது. நான் பாடுனா மழை பிச்சு உதறிருமேன்னு சும்மா விடறேன். கண்ணை துடைச்சிகிட்டு மேட்டருக்கு வாங்க” என அவர்களை நக்கல் அடித்தான் பிரபு.

“சரி, நான் இந்தியாவுக்கு படிக்க போக ஒத்துக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷனோட” என நிறுத்தினாள் தானு.

error: Content is protected !!