Epi 6

Epi 6

 

மாலைக்  கதிரவன்  ஓய்வு  பெற  நிலவு  மகளோ  இருளுக்கு  ஒளிக் கொடுதுக்கொண்டிருந்த  வேளை, 

 

ஒற்றைக்காலில்  நின்று  நிலவு  மகளுக்கு துணையாக  ஒளி  வீசிக்கொண்டிருந்த  மின்குமிழ்  கம்பங்கள் பாதை  நெடுஞ்சாலைகளோ வாகனங்களால்  நிறைந்து எரும்பென ஊர்ந்து  செல்ல,  

 

தன்  வண்டியை  அதோடு  கலக்கவிட்டிருந்த  ருத்ரா,பொறுமை  இழந்தவனாய்  தன்  அத்தை  சென்ற  ஆம்புலன்ஸ்  வண்டியை  தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தான் ,  

 

வண்டியை  முடிந்திருந்தால்  ஹாஸ்பிடல் உள்ளேயே  செலுத்திருப்பான்  போலும். 

 

அவன் உள்ளே நுழைந்ததும்  கண்டது, அவசர  சிகிச்சைப் பிரிவிற்குள்  மீனாட்சியை  கொண்டு சென்றிருக்க, அதன்  அருகே போடப்பட்டிருந்த  இருக்கையில் அமர்ந்து  கண்களில்  கலக்கத்தை  சுமந்து கைகளை  பிசைந்தவாறு அமர்த்திருந்தவளை… 

 

‘கடவுளே  என்னால  அவங்களுக்கு  ஒன்னும்  ஆகிவிடக்கூடாது…இதுக்குத்தான்  நான்  செய்த முயற்சிகள்  எல்லாம்  தடைப்பட்டது…அவசரப்பட்டுட்டேனா? நான்  யாரிடம்  என்னவென்று  கூறுவேன்’  என்று பலதையும்  யோசித்துக்கொண்டு  அவளோ அமர்ந்திருந்தாள். 

 

சற்று தள்ளி தன்  தந்தையுடன்  பேசிக்கொண்டிருந்த  ருத்ராவிற்கு  இவள்  இருக்கும்  நிலை  பார்த்து  ‘இவள்  எதற்கு  இவ்வளவு  டென்ஷன்ல  இருக்கா? பயந்திருப்பாளாயிருக்கும்’ என நினைத்துக்  கொள்ள,  அவன்  கையில  இருந்த இன்னுமொரு  தொலைபேசியும்  இசைக்க ஆரம்பித்தது.

 

இது யாரது  எனப்  பார்க்க  கயலும்  அதன்  இசைக்கேட்டு அவனைத்தான் பார்த்தாள். அம்புலன்ஸில் ஏறும்  போது  அவனிடம்  பதட்டத்தில்  கொடுத்தது  நினைவில் வர,   

 

இவள்  அதை  வாங்க கை  நீட்ட  அவனும்  அதன்  திரை பார்த்தவன்  ‘ஹனி  காலிங்..’ என அரசுவின்  படம்  சிரித்தபடி  இருக்க அதையும்  அவளையும்  மாரி மாரி பார்த்தவன் அவளிடம்  கொடுத்து விட்டு  தள்ளி  நின்றுக்கொண்டான்.. 

 

“ஹனி…”  என்ற கயலின்  குரல்  அவன்  காதை  வந்தடைய  அதன்  குரல்  அவனை  ஈர்த்தாலும்  ‘ஹனி…’  என்று அவனை  அலைக்கவில்லையே அதனால்  அந்த ஹனி  எனும்  செல்லப்பெயரை  வெறுத்தான்  அந்நொடி… அப்புதுக் காதலன்.. 

  

“ஹேய்  கண்ணம்மா  என்னடா  குரல்  ஒரு மாதிரி  இருக்கு? “என  அரசு கேட்க, இவள் கண்களில்  இருந்த கலக்கம்   இப்போ  குரலில்  கலந்திருக்க கண்டுக்கொண்டார் அரசு. 

 

“கண்ணம்மா என்னடா  வீட்டுக்கு வந்தாச்சா?”எனவும்,  

 

“நான்  இப்போ  ஹாஸ்பிடல்ல  இருக்கேன்  ஹனி”  என்றாள். 

 

” கண்ணம்மா  என்னாச்சு  உடம்புக்கு  என்ன? ஆர்  யு ஓல்  ரைட்? “என பதறியவராக  அரசு கேட்கவும், 

 

“எனக்கு ஒண்ணுமில்ல  ஹனி  மேம்க்கு  

 திடிர்னு உடம்புக்கு  முடியலன்னு  நெஞ்சை  பிடிச்சிகிட்டாங்க.இப்போ அவங்க கூடத்தான்  வந்திருக்கேன்”  என்றவள், “எனக்கு  பயமா  இருக்கு  ஹனி”  என்றும்  கூற, 

 

“அச்சோ  என்னடா  இது  அவங்களுக்கு  ஒன்னுமிருக்காது, என்னாச்சு.. இன்னக்கி  பார்ட்டில  எதாவது  ப்ரோப்லம்  நடந்ததா?” என அரசு  கயலை கேட்க,  

 

” இல்லையே  நல்லாத்தான்  இருந்தது.”

 

“சரிடா  பயப்படும்  படியா  ஒன்னும்  இருக்காது.உனக்கு  அங்க இருக்க  முடியுமா? இருந்துப்பியா? ” எனவும்,  

 

“ஹ்ம்ம்  அவங்களை  ஒருதரம்  பார்த்துட்டே  போயிருவேன்..இல்லன்னா  கஷ்டமா  இருக்கும் ஹனி”  என  கயல்  கூற 

 

 “சரிடா  நானும்  இப்போதான்  ஹாஸ்பிடல்  இருந்து  மேரி  ஆன்ட்டி  வீட்டுக்கு  வந்தேன்” என்றார். 

‘அச்சோ  மறந்தே  போய்ட்டேன்’.  அரசு கனடா  போன  காரணமே  இந்நொடி  மறந்திருந்தவள்  நினைவு வந்தவளாக,  “மெதிவ்ஸ் அங்கிள்  இப்போ  எப்டி  இருக்காங்க  ரொம்ப முடியலையா?” என  அங்கே  உள்ள நிலைமைகளை  பற்றி  பேசியவர்கள்  

 

பின்  “ஹனி  நான்  வீட்டுக்கு  போய்  பேசுறேன்’ என்றுவிட்டு  ‘மிஸ்  யு ஹனி, லவ்  யூ … ” எனக்கூறி  அலைபேசியை  வைத்து  விட்டு  நிமிர்ந்து  பார்க்க  இவ்வளவு  நேரமும்  தன்னையே  பார்த்துக்கொண்டிருந்த  ருத்ரா  சட்டெனெ  தன்  பார்வையை  திருப்பிக்கொண்டான். 

 

கண்டுக்கொண்டவளோ ” இவங்க கண்ணுக்கு ஏன்  நான்  தப்பானவளா  தெரியுறேன்.  எதுக்கு என்னை  இப்படி  பார்க்குறாங்க”  என  யோசித்தவள்  மீனாட்சி  உள்ளிருந்த  அறை மீது  பார்வையை  செலுத்தினாள்.

 

அறையை  விட்டு  வெளிவந்த  டாக்டரிடம்  ருத்ரா  என்னவென்று  கேட்க,  

“அவங்களுக்கு மைல்டு  அட்டாக்  ஏற்பட்டிருக்கு  Mr.ருத்ரா.  ரொம்ப  சந்தோஷம்  இல்லன்னா  கஷ்டமான  எதுவோ  நடந்திருக்கும்  போல.

 

இப்போ  இன்ஜெக்ஷன்  ஒன்னு  போட்டிருக்கேன்  ரெண்டு  மணிநேரம்  கழிச்சு  தான்  எந்திருப்பாங்க. சோ  அதுக்கப்புறம்  காலை  வரை  அவங்க  பக்கத்துல  யாரையாவது  வைங்க  என்றவர், 

 

 ” நதிங் டு  வொரி.அவங்க  உடம்புக்கு  வேறெதுவும்  இல்லை… இப்போ  பார்த்ததுல  எல்லாம்  நார்மலா  தான்  இருக்காங்க.நாளைக்கு  காலைல  பார்த்துட்டு  கூட்டிட்டு  போகலாம்”  என்று விட்டு  செல்ல.. 

 

ருத்ரா  மாதவனுக்கு  அழைத்து “மாதவா  அம்மா  எத்தனை  மணிக்கு  வராங்க? ”  எனவும்  அவன்  “அவங்களுக்கு  ஏர்லி  மோனிங்  தான்  பிளைட்  அண்ணா”  என்று  கூற, 

 

“அவங்களிடம்  அங்கேயே  இருக்க சொல்லு. தேவைக்கு  இல்லாதவங்க  எதுக்கு?  என்றவன்  தன்  தந்தையை  மீண்டும்  அழைத்து கத்திவிட”

 

 அவனையே  பார்த்திருக்கும் மிரண்ட  கண்களுடன்   கயலை  கண்டவன்   பட்டென  போனை  கட்  செய்து   அங்கிருந்த  இருக்கையில்  அமர்ந்தான். 

 

ருத்ராவின்  அன்னையும்  ஜனார்தனனும் அவருடைய நண்பரின் அதுவும் இன்றும் அரசியலில்  சிறந்த  முக்கிய நபர்  ஒருவரின்  வீட்டு  விசேஷம்  ஒன்றிற்கு  டெல்லி சென்றிருந்தனர். 

 

ருத்ராவின்  அன்னை  கணவரின்  அரசியலோ தொழிலோ  எதிலும் கலந்துகொள்ள மாட்டார்.இது மிக முக்கியமான நபர் என கணவர் எப்போதும்  இல்லாமல்  அழைத்துருக்க அவருடன்  சென்றார்.

 

அதோடு  இன்று  மீனாட்சிக்கு  உடம்புக்கும்  முடியவில்லை  என  கேள்விப்பட்ட  உடன்  ‘தனியா என்ன பண்ணுவா  அவளைத்  தனியா  விட்டுட்டேனே. என்னாச்சுன்னு  தெரிலயே’  என கணவரிடம் புலம்பி அவசரமாக தன்னை  அங்கு கொண்டு  சேர்க்கவும்  என கணவனை  நச்சரிக்க  விடியலிலேயே  பிளைட்  கிடைத்தது. 

 

ஜனார்தனனுக்கும்  யோசனை  என்னாச்சு  தன்  தங்கைக்கு.. திடமானவளே.மன உறுதி மிக்கவள். அவருக்குமே   இங்கு இருந்து எப்போதடா போவோம்  என்றுதான்  இருந்தார்.  

 

இங்கு ருத்ராவுக்கு  ஏற்கனவே  கம்பனி  நிகழ்வுக்கும்  வராத தந்தை  மீது  கோவத்தில்  இருந்தவன்  தன் அன்னையும்  போனது  இன்னும் கோவத்தை  அதிகரித்ததுடன், அவன் ஆசை  அத்தைக்கு  அருகில்  தங்கவும்  ஒருவரும்  இல்லையே  என நினைத்து  மனம்  வருந்த,  

 

அவன்  முகத்தில்  இருந்த கவலையையும்  கோபத்தையும்  பார்த்தவள்  அவனருகே  வந்து  “நான்  மேம்  கூட  இருக்கேன்..” என்றாள்.. 

 

‘வேணாம்  வேணாம்  இப்போவே  ரொம்ப  லேட்டாச்சு. வீட்டுல  தேடப்போறாங்க  நீங்க  கிளம்புங்க …. ” என்றான். 

 

“இல்ல  எங்க வீட்ல  யாரும் இல்லை இன்னைக்கு,வெளில  போயிருக்காங்க. வீட்டுக்கு போனேன்னா வீட்லயும்  நான்  தனியாத்தான்  இருப்பேன்.சோ நான்  மேம்  கூட  இருக்கேன்” எனவும்,  

 

உள்ளம்  மகிழ்தவனாக  அதை  வெளிக்காட்டாது  “தேங்க்ஸ்” என்றவனிடம்,

 

“மேம்  எந்திரிக்க  ரெண்டு  மணிநேரம்  ஆகுமில்ல.நான்  அதுக்குள்ள  வீட்டுக்கு போய்  டிரஸ்  ச்சேன்ஜ் பன்னிட்டு  வந்துரட்டுமா? ” எனக்  கேட்டாள்.

 

அபோது  தான்  இன்னும்  அதே பார்ட்டி   உடையில் இருவருமே இருப்பது  நினைவு வர ” ஓகே “

என்றுவிட்டு  ‘எப்படி  இந்த நேரம்  தனியாக  போவாள்’  என   யோசித்தவன் 

 

” வெய்ட்  நானும்  வீட்டுக்கு  போகணும்  போய்ட்டு  டூ அவர்ஸ்குள்ள  வந்துரலாம்”  என்றவன், 

 

“கம்  வித்  மீ ” என்று  விட்டு  முன்னே  நடந்தவன் டாக்டரிடம்  கூறிவிட்டு  தன்  வண்டியை  நோக்கி  நடந்தான்… 

 

அவனை  தொடர்ந்து  சென்றவளோ,   

“இவங்க கூட  எதுக்கும் பேசி  நம்மளை பற்றி  கூறலாமா? என்ன சொல்வாங்க? ஏத்துப்பாங்களா? அதுகப்புறம்???   என யோசித்தவள், 

 

‘வேறேதும்  அதுனால  மேம்க்கு  ப்ரோப்லேம்  வந்ததுன்னா???  என  மாறி மாறி மனதில் பேசிக்கொண்டு  வந்தவள் அவன் கதவை  திறந்து விட்டு  அவனுடன்   அருகே  அமர்ந்து பாதி தூரம்  வந்துவிட்டதையும்  உணராது  இருந்தாள்.

 

அவனும்  அவளுடன் ஏதும்  பேசத்தோன்றாது  தன்  அத்தையின்  நினைவில்  வந்தவன்  அவள்  வீட்டின்  முன்  வண்டியை  நிறுத்தி ” நான்  அரைமணி  நேரத்துல  வந்துர்றேன்.நீங்க கிளம்பி  இருங்க”  என்றான்.  

 

வண்டியை  விட்டு இறங்கியவள்  கதவை அடைத்து  விட்டு “வரு… ” என தொண்டை வரை  வந்ததை  விழுங்கி ” சார்…  மேம்க்கும்  ட்ரெஸ்  எடுத்துட்டு  வரணுமே”  எனவும்  

 

“ஓகே  நான் எடுத்துட்டு  வரேன்”  என்றவன், 

 

இவளும்  வீட்டினுள்  சென்று கதைவடைக்கும்  வரை  பார்த்திருந்துவிட்டு  சென்றான். 

 

 

இவனும்  உடைமாற்றிக்கொண்டு  அவனுடன்  மாதவனும்  வர அவனையும்  ஏற்றிக்கொண்டு  கயல்  வீட்டின்  முன்  வந்தவன் வண்டியை  நிறுத்தி  விட்டு  அவளுக்கு  கால்  செய்யவென  அலைபேசியை  எடுக்க  அவளோ  இவன்  வண்டி  சத்தம்  கேட்டு  வெளியே  வந்தாள். 

 

அவளைக்கண்ட மாதவனோ “ஹேய்..  இவங்களா  இந்த வீட்ட  வாங்கிருக்காங்க. செம  வீடில்லண்ணா…”  என்று  கூற  “ஹ்ம்ம்”  என்று  கூறியவன்,  

 

இளஞ்சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ்  டாப், அதற்கு  மேல்  ஓவர்  கோர்ட்  ஒன்றணிந்து அடர் நீல  நிற  முழங்காலுக்கு சற்று கீழான  லெக்கிங்ஸ், போட்டிருக்க  பார்ப்பதற்கு  இன்னும்  சிறு பெண்ணாக அவன் கண்ணுக்கு அழகு  தேவதையாக இருளில்  நிலவென  தெரிந்தாள் … 

 

வீட்டை  பூட்டிக்கொண்டு  வர  வண்டியில்  பின்னிருக்கையில்  அமர்ந்தாள்… 

 

ஹேய்  “நீங்க அப்போ  நம்ம  ஏரியாவா? ” என மாதவன் கேட்க  அவள்  ஆம் என்பதாய் மெலிதாய்  சிரித்தாள். 

 

ஹாஸ்பிடல்  போகும் வரை  அவன் 

அவளுடன்  பேசிக்கொண்டு வர  ‘வீட்ல  யாருமில்லையா சிஸ்டர்? ‘  எனவும்,

 இவள்  ‘இல்ல  வெளில  போய்  இருக்காங்க  டூ  டேஸ்  ஆகும்  வரதுக்கு’  என்றாள்.

ஓஹ்!!!  யாரெல்லாம்  இருக்கீங்க…  என  கேட்க, 

 

அவள் பதில்  கூறும்  முன்  ருத்ரா  “அவங்களும்  அவங்க  ஹனியும்  இருக்காங்க  டா “என்று விட  

 

‘ஓஹ்! அப்டியா? ” என  மாதவன் கேட்டுவிட்டு  பாதையில்  கவனம் செலுத்த ,   கண்ணாடி  வழியே  இவளை  பார்த்தவனுக்கு  அவளது  முகத்தில்  கசந்த ஒரு  புன்முறுவலையேக்  காணக்கிடைத்தது. 

 

கண்டவனின்  அறிவோ  ‘அவனும்  அவளும் பேசுறப்ப  உனக்கெதுக்குடா  வேண்டாத  வேலை.உனக்கு  உன்  வாயாலத்தான் கேடு.அவ வீட்டைப்பத்தி அவ பேசுறப்ப  நீ  யேன்  உள்ளே நுழைஞ்ச, அவளைப்  பற்றி  தெரிந்தவனாட்டம் ..’  என திட்டி தீர்த்தது. 

 

அவள் வண்டி விட்டிறங்கி  மாதவனுடன்  பேசியவாறே  மீனாட்சி  அனுமதித்திருந்த  அறை  அருகே  சென்றிருக்க  வந்தவனோ  டாக்டரிடம்  கேட்டு  விட்டு  அறையினுள்  நுழைந்தான்… 

 

கண் விழித்திருந்தார்  மீனாட்சி. “அத்தம்மா…  என் அவர் கைகளை  பற்றிக்கொண்டவன்  கண்கள் கலங்கியதோ???? 

 

“என்னை  ரொம்ப  பய முறுத்திடீங்க.”  என சிரிக்க முயன்று தோற்றவன்  “என்னாச்சு  அத்தம்மா?  என  கேட்டுவிட்டு  மீண்டும் அவனே  ‘இபோ  பேச  வேணாம்  ரெஸ்ட்  பண்ணுங்க  காலைல  பேசிக்கலாம்” என்றான். 

 

 

தனக்காக  எந்தவொரு  எதிர்  பார்ப்பும்  இன்றி  மொத்த பாசத்தையும்  தரும் தன்  அண்ணன்  மகனின்  நிலை உணர்ந்தவர், 

 

“வரு  எனக்கொன்னும்  இல்லடா.. நானே  ரொம்ப  பயந்துட்டேன் என்றவர்  அவன்  தலைகோதிட  அதில்  தன்  கன்னம் வைத்துக்கொண்டவன், அவரைப்பார்க்க  

 

“கயல்  நம்மகூட  வந்தாளா? “என  மீனாட்சி  கேட்டார். 

 

“ஆமா  அத்தம்மா.உங்க  கூட பக்கத்துல  இருக்கேன்னு  வெளில  வெய்ட்  பண்றா”  எனவும், 

 

“அவளை  வரச்சொல்லேன்”  என மீனாட்சி  கூறவும்  “ஓகே  நீங்க ரெஸ்ட்  பண்ணுங்க”  என கூறியவன்  அறை  விட்டு  வெளியே வரவும்  

 

“மேம்  பேசுறாங்களா? நான்  போய் பார்க்கட்டுமா? ” கயல் அவனிடம் கேட்க 

சரியென  இவன் தலையாட்ட , மகிழ்ந்தவள்  அறையினுள்  நுழைந்தாள். 

 

நுழைந்தவளுக்கு  அவரிடம் செல்லத்தான்  கால்கள்  துணை  வரவில்லை.. மெதுவாக  அவரருகே  செல்ல  அவளை  சிரித்திக்கொண்டே  அருகே அழைத்தவர்,  

 

‘நீ தேனரசன்  பொண்ணா? “என  அவள்  கன்னம் தொட மீனாட்சி   முயற்சிக்க , அவரருகே சற்று குனிந்து  அதற்கு  ஏற்றார் போல  அவர் தலைக்கோதினாள்.  

 

அவள் கன்னத்தில்  கை வைத்துக்கொண்வர், “ரொம்ப  நாளைக்கு  அப்றம்  உங்க  அப்பாவை  அப்றம் என்  பிரென்ட்  கலை  எல்லோரையும்  பார்த்தேனா…  ரொம்ப  சந்தோஷமா  பீல்  பண்ணிட்டேன். 

                    அது கொஞ்சம்  கூடுதலாவே  சந்தோஷப்பட்டுட்டேன்  போல  அதான்  நெஞ்சு  பொறுக்கலையோ  என்னவோ”  என  மீனாட்சிக்  கூற, 

 

” உண்மையா… ” என்பது போல  கயல் அவரை  பார்க்க, “ஆம்”  என்றவர்  அதோட  நீ  அவங்க  பொண்ணுண்டவும் ரொம்ப  ஹாப்பி” என்றார். 

 

அவர் கைகளை  பற்றிக்கொண்டவள்,   “நான்  என்னாலதான்  உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு  ரொம்ப  பயந்துட்டேன்”என்றாள். 

 

“ரொம்ப சந்தோஷமா  இருக்கேன் டா” என  முகமும்  அகமும்  மலர்த்தவராய்  கூறி  “உனக்கு நான்  யாருன்னு முன்னமே   தெரியுமா? ”  எனக்கேட்க, 

 

“உங்களை  பார்க்கத்தான்  நான்  கனடால  இருந்து  இந்தியா  வந்தேன்”  என்றதற்க்கு  

 

அவளை  கூர்ந்து  பார்த்தவர் “அப்போ  எதுக்கு  என்கிட்டே நீ  சொல்லல? என  மீனாட்சி  கேட்கவும், 

 

“நீங்களே  என்னை  பார்த்ததும் கண்டு  பிடிச்சிருவீங்கன்னு நினச்சேன்”  என்றாள்.   

 

“ஆமா….  உன்னை பார்த்த அன்னைக்கே  ரொம்ப அறிமுகமான  முகமா  தான்  இருந்தது.ஆனா தெரில.யேனோ  இவங்க பொண்ணா இருப்பன்னு யோசிக்கவே  இல்லை”  என்றவர்  அவள்  கன்னம்  தடவி, 

 

“உங்கம்மாவுக்கு  நெற்றி  நடுவுல  பெரிய  பொட்டு  வைக்கத்தானே  ரொம்ப பிடிக்கும், சின்னதுல  விளையாடும் போது  பொம்மைக்கே  பொட்டு  பெருசாதான்  வெச்சு  விடுவாள்.

உன்னை எப்படி  இவ்வளவு  சின்னதா  பொட்டு  வெச்சிக்க  விட்டிருக்கா? ” என  தன்  தோழியை  நான்கு அறிந்தவர்   கேட்க,   

 

எங்கப்பாக்கு  நான்  சின்னதா  பொட்டு வச்சாத்தான்  ரொம்ப பிடிக்கும்.அதோட கண்ணுக்கு  நிறைய மை  இட்டுக்கணும்”  என கூறியவள், அவர் முகம் பார்க்க  

 

“ஓஹ்….” என்றவர்  யோசனையாகவே  அவளை  பார்க்க, சிரித்துக்கொண்டே “பேசலாம்  மேம்..நிறைய…..  அதுக்காகத் தான் வந்திருக்கேன்” என்றவள்

 

” இப்போ  கொஞ்சம்   ரெஸ்ட்  பண்ணுங்க. உங்க பையன்  வெளில  வெள்ளம்  வர  அளவுக்கு  அழுந்து  ஹாஸ்பிடலையே  மூழ்கடிச்சிட்டார்.” எனக் m  கூற 

 

ருத்ரா  உள்ளே  வந்தான். வந்தவன்  அவர்  கைகளை  பிடித்துக்கொண்டு சிறித்து பேசும்  கயலை  பார்க்க, 

அவன்  வருவதை  உணர்ந்தவள்  நிமிர்ந்து  அவனுக்கு  இடம்  விட்டு  நகர,  

 

“நீ  வீட்டுக்கு  போ  வரு.காலைல  வந்தா  போதும்டா.இவதான்  என்  பக்கத்துல  இருக்காளே”  என்றவர் 

‘வரு கயல்  யாருன்னு  தெரியுமா? ‘என  கேட்க  யாரென்பதாய்  அவரை கேட்டு   கயலையும்  ஒருமுறை  திரும்பி  பார்க்க, 

 

“என்  பிரெண்டோட  பொண்ணுடா” என  முகம்  மலர  கூறினார்.. அவர் முகத்தில்  இருந்த மகிழ்வை  கண்டுக்கொண்டவன், ‘அப்டியா  அத்தம்மா’ என  அவரிடம்  கேட்டுவிட்டு 

 

“இனி இது வேறயா. என்னை  என்னன்னு தான்  சரி  படுத்திப்பேன்… விட்டு விளக்கலாம்னா… பின்னாலயே என்னை  துரத்திக்கிட்டு வர மாதிரி தோணுதே  என  இவன் மனதுடன்  பேச, 

 

அறிவோ ‘எதுக்கு விலகனும்? தெளிவா  சிலதை  புரிஞ்சிகிட்டண்ணா  விலக  மாட்ட  நீ கெட்டியா  புடிச்சிக்குவ  என்று கூற.. 

இவனோ  யார் சொல்வதை  கேட்க… 

 

புதிதாய்  காதலில்  விழுந்து அல்லாடினான். 

 

கயல் விழிக்கு  மீனாட்சியின்  சந்தோஷமான  முகம்  மகிழ்வை  தந்தாலும்  ‘நான்  வந்த  காரணம்  கூறினால்,   ஏத்துப்பாங்களா? இதே  சந்தோஷம்  அவங்க முகத்துல  இருக்குமா? ‘  என  யோசித்துக்கொண்டு  இருந்தாள்.   

 

“ஓகே  அத்தம்மா.நான்  காலைல  வரேன்” என அவர்  தலைக்கோதி  அவரிடம் விடைப்பெற்ற  ருத்ரா  கயலை பார்க்க  அவளோ  ஏதோ  யோசனையில்  இருக்கவும்  அவளை  பார்த்தவன்  எதுவும் கூறாது  சென்று விட்டான்… 

 

மீனாட்சி  மீண்டும் உறக்கத்திற்கு  சென்றிருக்க  அன்றைய நாளின்  அலைச்சல்  கயலை  ஓய்வுக்கு  கெஞ்ச   கட்டில் அருகே இருந்த  இருக்கையில் அமர்ந்து  கட்டிலில்  தலை சாய்ந்து  இருந்தவள்  அப்படியே உறங்கிப்போனாள். 

 

விடியலில்  காலைக்கதிரவன் ஒளிக்கவும்  அவளின் ஒளியாய் அவன், அவள் அருகே  வரும் வரை  துயில் கொண்டிருந்தாள்  அவன்  மங்கை….. 

 

இருவரும்  நல்ல உறக்கத்தில் இருப்பதை  பார்த்தவன்  கொண்டுவந்திருந்த  தேநீர் மற்றும் சிற்றுணவை  அருகே இருந்த  மேசையில்  வைத்து விட்டு  அவளையே பார்த்திருந்தான். 

 

அவள்  கூந்தல்  ஒற்றை  கிளிப்பில்  அடக்கி  இருக்க  அதனை விட்டு விலகி  வந்த  கற்றை  முடி  அவள்  கன்னம்  வழியே கழைந்திருக்க இரு  கையையும்  ஒன்றின் மேல்  ஒன்று வைத்து  அதில்  தலை  வைத்து  படுத்திருந்தவளை  ரசித்து  பார்த்திருந்தான்…. 

 

“டேய் டேய்…”  அவன் அறிவு அவனை அவசரமாய் அழைத்து “உறங்கும் பெண்ணை ரசிப்பது மகா  பாவமடா… ” அவனை வசவு பாட… 

 

“டேய்.. டேய்..  அவள் என்  உள்ளம்  கவர்ந்த  மங்கையடா. அவன் அப்படித்தான்  பார்ப்பான்.நீ  உன் வேலையை  பார்”  என  மனம் அறிவுக்கே அறிவுரை  கூற 

 

டேய் ரெண்டு பேரும்  என்னை ஒரு  வழி  பண்ணிருவீங்கடா  என  ருத்ரா புலம்ப  

கண் விழித்தாள்  அவன் மங்கை…. 

 

விழித்ததுமே  அவனை   பார்த்தவள்  சட்டென இருக்கையை  விட்டு எழுந்து  தன்  கூந்தலை காதோரம்  ஒதுக்கியவள், 

 

‘மீனாட்சியை  பார்த்து  கொள்கிறேன்  என்றுவிட்டு  நல்லா  உறங்கி விட்டேனே. கோவிச்சுப்பாங்களோ’ என நினைத்தவள், 

 

“சாரி  சார் கொஞ்சம்  அசந்து  தூங்கிட்டேன்” என்றாள்… 

 

அவளை  நிதானமாக  பார்த்தவன் ‘ குட்  மோனிங்  கயல்விழி’எனவும் 

 

“மோனிங் சார் ” என்று இவள்  பதில்  கூறவும் 

“பிரெஷாகிட்டு காபி  சாப்பிடுங்க  நான்  டாக்டரை  பார்த்துட்டு  வரேன்”  என்று  வெளியில்  செல்ல 

 

அவனையே  பார்த்திருந்தவள்  எண்ணம்  எல்லாம்  “இவ்வளவு  ஆசையா  பார்குறவங்க  ஏன்  என்னை  தப்பா  புரிஜிக்கிட்டாங்க… என்கிட்டே கேட்கலாமே  நான்  யாரு என்னனு… இல்ல  என்னை பத்தி தெரிஞ்சிக்கலாமே…  எதுக்கு இவங்களாவே நான்  தப்பானவன்னு  நினைச்சாங்க… இல்ல எல்லோருடைய  கண்ணுக்குமே  நானும்  ஹனியும்  தப்பா  தான்  தெரியுறோமா…”   என நினைத்தவள்  முகம்  கழுவி வந்து  காபி  அருந்தினாள்… 

 

அவனுக்குமே  அவளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய  கட்டாயம்  ஏற்பட  அவன்  தன்  ப்ராஜெக்ட்  வேலைகளுக்காக  நாடும்  துப்பறியும்  நபர் ஒருவரிடம்  அரசுவின்  முழுவிபரமும்  தெரியப்படுத்துமாறு  கூறி  போனை  அனைத்தவன்  மீனாட்சி அறையினுள்  நுழைய, 

 

 ஜன்னல்  பக்கம்  திரும்பியிருந்தவள்  கை  இரண்டையும் மேல்  நோக்கி  உயர்த்தி  சோம்பல்  முறிக்க  அவள்  அணிந்திருந்த ஓவர்  கோர்ட்டினை  கலட்டி  இருந்ததால்  அவள் சிற்றிடை  அவன் கண்ணுக்கு  விருந்தாய்….. 

 

கை ரெண்டும் மேல்  நோக்கி  உயர்ந்திருக்க  சிற்றிடை  இன்னும்  ஒடுங்கி  உடைந்து விடுமோ  என அதன் அளவையும்  அவன்  கை அளவில்  அளந்து  விட்டான்.. 

இன்னும் முறுக்கினால்  உடைந்து  விடுமோ  என்று  அஞ்சியவன்  “ஹேய்  பார்த்து…”. என  இவன்  கூற.

 

 அவளும்  சட்டென இவன் பக்கம் திரும்பி “என்னை??? ” என்பதாய்  பார்க்க  

 

“இல்ல… ஹிப்ப்.. ” என்று இவன் எதுவோ கூற வர  அவளும் அவளை  குனிந்து  பார்த்தவள்  சட்டென அவள் மேலங்கியை  போட்டுக்கொண்டாள்… 

 

 

 

அந்நேரமே  மீனாட்சி  எழும்பவும், “ஹாய்  குட்  மோனிங்  அத்தம்மா” என்றவன் அவர் அருகே  வர  அவரும் எழுந்து  சாய்ந்தமர்த்தவர்  கூந்தலை  கொண்டையிட்டவாறே  “இபோவா  வந்த  வரு? “எனவும், 

 

” நான்  வந்து  கொஞ்சநேரம்  அத்தம்மா. நீங்க  நல்லா  தூக்கம்  அதான்  எழுப்பல ” என்றான்.

 

“ரொம்ப  நாளைக்கப்புறம்  ஆழமான  உறக்கம்டா…இவ்வளவு  நாளைக்கும்  இப்படி  தூங்கினதில்லை  வரு ” என்றவர், 

 

கயலை  பார்த்து ” என்னால இவளுக்கு  தான்  கஷ்டம். தூங்கினியா  கயல்? ” எனவும் 

 

“ஹ்ம்ம்  நானுமே  நல்லா  தூங்கிட்டேன்  போல. சார்  வந்ததும்  தான்  எந்திரிச்சேன்  மேம்” என்று விட்டு,   ‘போய் பிரெஷாகி வாங்க  டாக்டர்  இப்போ வருவாங்க ” என்றாள்.

 

“சரிடா..” என  கட்டிலை விட்டு இறங்க மீனாட்சி அருகே  இருவரும்  இருபக்கம் வந்து தாங்கி பிடித்தவாறு  இறக்கி விடப்பார்க்க, 

 

இருவரையும் பார்த்தவர்  ”  டேய்  எனக்கு  ஒன்னுமில்லை  டா. வயசானவங்களை  தூக்கி  விடறது  போல  ரெண்டு பேருமா  ரெண்டு பக்கம்  வந்து தூக்கிவிட  பாக்குறீங்க  இதெல்லாம்  ரொம்ப  டூ மச்  சொல்லிட்டேன் என்றவர் இருவரின்  கையையும்  தட்டி விட்டு  டாக்டர்  வந்து பார்த்ததும்  எனக்கிப்போ  வீட்டுக்கு  போகணும்.டாக்டர்கிட்ட  சொல்லிரு”   என்றவர்  பாத்ரூம்  சென்று   வந்து  உணவுண்டு  முடிய  டாக்டர்  வரவும் சரியாக  இருந்தது. 

 

அத்தை  உடம்புக்கு  இப்போ  ஒன்னும் இல்லையா  டாக்டர்? ”  என்றவன், இன்னும் எதாவது  டெஸ்டிங், ஸ்கேன்  இருக்கா எதுன்னாலும்  பார்த்துட்டுடுங்க.

 

மீனாட்சியின்  முறைப்பையும்  பார்க்காது வேறொன்னும்  இல்லையே   அத்தைக்கு என பல முறை  டாக்டரிடம்  கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு  தான்  அவரை  திரும்பி பார்த்தான்.    

 

 

டாக்டர்  பேசிவிட்டு செல்ல  ருத்ராவின்  பெற்றோர்  அறையினுள்  நுழைந்தனர். 

 

 “மீனாட்சி…’ என அவரருகே  வந்த பார்வதி  

என்னாச்சு  திடீர்னு, நேரத்துக்கு  நானும்  இல்லாம  போய்ட்டேன்”  என  கண்  கலங்க  கூறி  அவர் கைகளை  பற்றிக்கொண்டார்.. 

 

“அச்சோ அண்ணி  ஒன்னுமில்லை.வரு சும்மா பயந்து  எல்லோரையும்  பயமுறுத்திட்டான்… என, 

 

‘ஆமா.. ஆமா.. நான்  தான்  பய முறுத்திட்டேன்.. ‘ என ருத்ரா முறுக்கிக்கொள்ள 

 

“நேற்று  போன்லேயே  நம்மலை பேசின  பேச்சுக்கு  அவன்  எண்ண நிலைமைல இருப்பான்னு  புரிஞ்சிக்கிட்டேன். 

 

உன்கூடவே  இருக்கவனுக்கு  உன்னை  பற்றி  தெரியாதா? அவன்  நமக்கு  பிள்ளையா  பிறந்ததுக்கு  உனக்கு  மகனாத்தான்  வளர்த்திருக்கான்.. அப்போ  பயப்புடாம எண்ண பண்ணுவான்..  

 

உன்னால  தினமும்  நான்  படர  கஷ்டம்  போதும்  மீனாட்சி.. திடமா  நீ இருக்கத பார்த்து தான்  மனச  கொஞ்சமாச்சும்  சரிபடுத்திக்கிறேன். இப்போ  உடம்புக்கும்  முடியலைன்னா, என்னால இதுக்கு  மேல கஷ்டம்மா”  என்று   குரலும் தளர்ந்தவாறே கூறி, உடலும் தளர்ந்தவராய்  அருகே இருந்த  இருக்கையில்  அமர்ந்தார் ஜனார்த்தனன் …    

 

“என்னண்ணா இங்க  பாரு…   எனக்கொன்னும்  இல்லை.ஜஸ்ட்  கொஞ்சமா  தான்  முடியல. இப்போ  எனக்கொன்னுமே  இல்லை.இப்போ  தான்  டாக்டர்  வந்து  பேசிட்டு  போறாங்க.. டேய்! வரு   சொல்லேண்டா..”  என அவனையும் துணைக்கு  அழைத்தவர்  அண்ணனின்  கை பற்றிக்கொண்டு  கூறி ..

 

‘என்னால  இதுக்கு  மேல  இங்கதான்  இருக்க  முடியல. முதல்ல  வீட்டுக்கு  கிளம்பலாம்’ என்றவர்  அப்போதுதான்  கயலை  கவனித்தவர்,

 

 “கயல்  இங்க  வா” என அவளை  அருகே  அழைத்தவர், “அண்ணா  இது  யாருன்னு  தெரியுதா? “எனவும் 

 

அவரும் அவளை  பார்க்க,  ”  என்  பிரென்ட்   கலை  பொண்ணுண்ணா.. என்கிட்ட  ஆறுமாசம்  வேலைல  இருக்கா. ஆனா   நேத்தைக்கு  தான்  தெரியும்” என அவளை  அறிமுகப்படுத்தி  வைக்க 

 

” அம்மா முகம்  அப்படியே  இருக்கே” அவர் கூறவும், கயலும்  இன்முகத்துடன்  அவர்களை  பார்த்தாள்… 

 

“ஆமாண்ணா. ஆனா  பாரேன் தெரிஞ்ச  முகமா இருக்கேனு  தோணிருக்குதான்  பட்  என்னால கண்டு பிடிக்க முடில, நீ பார்த்ததுமே சொல்லிட்ட.” 

 

மீனாட்சியின்  முகத்தில்  இருந்த மலர்ச்சியும், கயலையும்  பார்த்தவருக்கு  இவ உடம்புக்கு  முடியாம  போக இதுதான்  காரணமோ  என சரியாக  புரிந்துக்கொண்டார்.. 

 

அவரது  யோசனையான  முகத்தை  பார்த்த கயலுக்கு  அவர் ஏதும்  பேசும்  முன்னமே  சென்றுவிடலாம்  என்றெண்ணியவள், 

 

“மேம் நான்  கிளம்பட்டுமா? எனக்கு  வெளில  கொஞ்சம்  வேலையும்  இருக்கு, நீங்க  வீட்டுக்கு போனதும்  பேசுறேன் என்று  அவர்களிடமும்  கூறிக்கொண்டு   அறை  விட்டு  வெளியில்  வந்தாள்.. 

 

டாக்டர்  அறையிலிருந்து  வெளி  வந்த  ருத்ராவைக்  கண்டவள்  ‘நான்  கிளம்புறேன்  சார்.. ‘ என்றவள்  முகம்  வாடியிருந்தது… 

 

‘என்னாச்சு  இவளுக்கு.நேற்றிலிருந்து  திடீர் திடீர்னு  இப்படி  முகத்தை  வச்சிக்குறா ‘ என்று  பார்த்தவன்  அவள்  வெளி நோக்கி  செல்லவும்  “தேங்ஸ் கயல்விழி…  “என்றான்… 

 

அவனை திரும்பி  பார்த்தவள்  எதற்க்காக  சொல்கிறான்  என்பதை  உணர்ந்தவள்  அதை  ஏற்றேன்  என்பதாய்  சிறு  இதழ்  பிரியா  புன்னகையை  வழங்கி  சென்றாள். 

 

அவள்  செல்வதையே  பார்த்திருந்தவன்   தன்  அத்தையையும் அதன் பின்   வீட்டிற்கு  அழைத்து  சென்றான்..

 

 

கட்டிலில்  படுத்திருந்தவள்  எண்ணம்  எல்லாம்  ஒன்றுடன்  ஒன்று   பிணைத்து  பார்த்து தன்னையே  வருத்திக்கொண்டு  தலையணையை அணைத்தபடி  இருந்தாள். 

 

நேற்று காலை  ஹாஸ்பிடலில்  இருந்து  வந்தவள்   இன்று  மதியம்  மூன்றாகியும்  கட்டிலே  கதியென்று  இருந்தாள்.. 

 

வளர்ந்தது  வெளிநாட்டில்.. அங்கு உறவுகளுக்கு முன்னுரிமை  இல்லை..  பாசப்பிணைப்புகள்  இல்லை…  

 

இதுவரை  எதையுமே  உணராதவள்  வேலை  சேர்ந்த  நாள்  முதல்  அன்னை  இருந்தால்  இப்படித்தான்  இருப்பாரோ, இதையும் விட  அன்பாக இருந்திருப்பாரோ  எனும் எண்ணம்  அவ்வப்போது  மனதில்  எழ  ஆரம்பித்திருந்தது. 

 

இந்த இரண்டு நாட்களாய் அண்ணன். அத்தை, என்ற உறவுகளை  பார்த்தவள் ‘குடும்பம்  இருந்திருந்தால்…..’  எனும்  எண்ணம்  மனதில்  எழ, ‘ எதுக்கு  எனக்கு மட்டும்  யாருமே  இல்லை..’என ஏங்க  ஆரம்பித்திருந்தாள்  

 

இதுவரை  எந்த ஒரு உறவையும்  நினைத்து  ஏங்கும்  நிலையை  கயலுக்கு  அரசு  தந்திருக்கவில்லை.

 

தானே எல்லாமுமாக  அவளுக்காக வாழ்த்துக்கொண்டிருப்பவர்.. இருபத்தி மூன்று  வயதிலேயே  இரண்டு  வயது  குழந்தைக்கு தந்தையாகி  தாயுமாகியவர், இன்று அவளுக்கு  எல்லாமுமாக… 

 

‘நான் இருந்திருக்கா  விட்டால்  அவருக்கென்று ஓர்  வாழ்க்கையை  அமைத்து  கொண்டிருப்பாரோ ‘கடந்த  ஐந்து  வருடங்களாகவே  அவள்  தினமும்  நினைப்பது தான். 

 

அதற்கு  முன்  அவளுக்கு  அவள்  வாழ்ந்த  சூழலில்  தந்தையின்  நிலை  பற்றி  யோசிக்கும், ஆராயும்  பக்குவம்  இருக்கவில்லை எனலாம். 

 

தனக்காக  வாழ்ந்தவரின்  வயதை  எண்ணினால்   அவள் வாழ்ந்த  நாட்டில்  திருமண  வயதுதான்… அதை  முன்னிட்டே   அவள் இந்தியா  வந்திறங்கியமைக்கு காரணம்…

 

நாட்பதின்  ஆரம்பம்  தான்  ஆணின்  பக்குவநிலை எனலாம். கும்பஸ்தனாக  இருபத்தி ஐந்து வயதிலேயே  மாறினாலும்  அவன் பக்குவப்படுவதென்னவோ  இவ்வயதில்  தான்.. 

  

தனக்காக  வாழ்தவருக்கு  தனக்கு  பின்னால்   இருக்கும் நிலை  உணர்ந்தவள்  அவருக்காக  துணிந்து  வந்துவிட்டாள்… 

 

 

எதுவானாலும்  முகம்  கொடுக்கலாம். முதலில் மீனாட்சியிடம்  தன்   உள்ளம் திறப்பதாய்  முடிவெடுத்தவள் கட்டிலை  விட்டெழுந்து  குளித்து  வர, மீனாட்சியே அவளுக்கு  அழைத்தார்… 

 

இவளை  பார்க்க வேண்டும்  எனக் கூறவும், இவளே அவர் இல்லம்  வருவதாய்  கூறி  கிளம்பினாள்..  

 

பார்க்கலாம்  அவள்  எண்ணம்  ஈடேறுமா, அவளுக்கு  துணையாய்  கதிரவன்  ஒளி தருவானா அல்லது  அவ்வொளிக்கொண்டு   மாயம் செய்வானா…. 

 

அடுத்த அத்தியாயதில் அவள் இந்தியா  வந்ததன்  நோக்கம்  அறியலாம்….. 

 

Keep reading lovliessssss…