EPIPthoshi-full
EPIPthoshi-full
தன் சந்தோஷத்தை உள்ளன்போடு கொண்டாடும் உறவுகளையும் , எச்சூழ்நிலையிலும் துணை நிற்கும் நட்பையும் கொண்டவனை
விட பலமிக்கவன் இவ்வுலகில் எவருமில்லை ….
– தோஷி
அத்தியாயம் 1:
அழகிய பெரும் மலைகளை தன்னிடத்தே கொண்டு, குளிர்ச்சியை தனது அடையாளமாய் தரித்திருக்கும் கொடைக்கானலில் உள்ளது அவ்வூர்… “மன்னவனூர் “.
இன்றும் கிராமங்களின் வாசத்தை தொலைக்காமல் இருக்கும் அவ்வூரில் உள்ள அனைவரும், “தாத்தய்யா” என அழைக்கும் மரியாதைக்குரியவர் கப்பீஸ்வர் (lord of all monkeys) .
அவ்வூரின் மிகப்பெரிய தனக்காரர்களில் ஒருவரான அவர், மற்றவர்களைப் போல் இனம் ,உயர்வு ,தாழ்வு பாராமல் பழகும் விதத்தில் …அவரின் குடும்பத்தாருக்கே அவ்வூராரின் மனதில் அளப்பரிய பாசமதை உருவாக்கியவர் .
கப்பீஸ்வர்க்கு இரண்டு மகன்கள் : பெரியவர் – கோதண்ட நாகா , சிறியவர் – வஜ்ர நாகா.
பெரியவர் தன் தந்தையுடனான சிறு பூசலில் மனைவி மற்றும் மகனுடன் தங்களின் மாளிகை அருகினிலே வேறொரு வீட்டில் கடந்த 18 வருடங்களாக வசித்து வருகிறார் .
ஐயா ….என அழைத்தவாறே வந்தார் வஜ்ரநாகா.
அவரின் குரலில் ஹாலிற்க்கு வந்த கப்பீஸ்வர் , அடேய்… சின்னவனே … எதுக்குல இப்படி குதிச்சுக்கிட்டு வர இளமை திரும்புதுனு நினைப்போ ? ஹாஹாஹா உன் அப்பன மாதிரி ஆக நினைக்காதடா கிழவா என அவரின் காதோர நரைமுடிகளை சுட்டிக்காட்டிபெரியதாய் நகைத்தவரின் முடியோ கருக்கருயென இருந்தது . (டை யின் உபயம் மக்காஸ் ).
வஜ்ரநாகா தந்தையை முறைக்க முடியாமல் உறுத்து விழிக்க …
அதற்கும் அவர் , என்னல ….நான் என்ன உன்ற சம்சாரமா ? இப்படி உத்துப் பாக்குறீரு என மீண்டும் அவ்வீடு அதிர சிரிக்க .
அங்கு வந்த சௌந்தரம்மாள் ( கப்பீஸ்வரின் மனைவி) ,அட எதுக்குல சின்னவனே …. உங்க அப்பாரு இப்டி ஊரே அதிருரமாதிரி சிரிக்கிறாரு என அருகில் இருந்த மகனிடம் கேட்க.
அவரோ தன் தந்தையை எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தார் .
தன் மனைவியின் கேள்விக்கு அமைதியாய் இருந்த மகனை கண்டு தன் கொடுப்புக்குள் சிரிப்பை மறைத்துகொண்டு , ஏட்டி ……நான் சொன்னேன்ல எனக்கு எத்தனை வயசானாலும் இந்த ஊர்ல என்ன அழகுல மிஞ்ச ஒருத்தனும் இல்லன்னு பாரு உன்ற புள்ளகூட என்ன சைட் அடிக்கிறான் என்றார்.
அவரின் பேச்சில் மோவாயை தன் தோளில் இடித்த சௌந்தரம்மாள் , அழகு இருந்து என்ன பண்ண மனுஷருக்கு புத்தி இல்லையே என சத்தமாய் முனங்கி மகனிடம் திரும்பியவர் சின்னவனே என்ன விஷயம் என கேட்டார். (பின்ன கேப் விட்டா நம்ப கப்பிஸ்வர் பேச்சை யார் தாங்குறது ).
வஜ்ரநாகா , ஆத்தா சென்னையிலிருந்து போன் வந்துச்சு , நம்ப பவித்ரா புள்ள குடும்பத்தோட அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக சொல்லுச்சு ஆத்தா .
அவரின் பதிலில் இருவரும் மகிழ…. சௌந்தரம்மாள் , ஏலே சின்னவனே நிஜமாவால சொல்ற ? அந்த புள்ளைய பார்த்து இருபது வருஷம் இருக்குமா ? அந்த சின்ன குட்டிய அஞ்சு வயசுல பார்த்தது , என் கண்ணுக்குள்ளயே இருக்கால அந்த குட்டி என்றவரின் கண்கள் பழைய நினைவில் கசிந்தது .
அத்தனை நேரம் மனைவியின் சந்தோஷ முகத்தில் தானும் மகிழ்ந்திருந்தவர் அவரின் கண்ணீரில் தனது பாசத்தையும் எரிச்சலும் , சலிப்புமாய் .. அடியே , கூறு கெட்டவளே , புள்ள சந்தோஷமான விஷயம் சொன்னா இப்படி மூக்கை சிந்திக்கிட்டு இருக்க . போடி போய் அவங்களுக்கு தேவையானதை எல்லாம் ரெடி பண்ணு என அவரை ஏவினார்.
அவர் உள்ளே சென்ற பின்பே தன் மகனிடம் , ஏம்ல… அந்த புள்ள மூத்தவனோட டவுசரை பிடிச்சுகிட்டே திரியுமே , இப்ப அங்கன தங்குமா இல்ல இங்கனையாடா என கேட்டார்
வஜ்ர நாகா , அந்த புள்ளைக்கு அண்ணன் தனியா இருக்கிறது தெரியாதுலங்ய்யா. அவங்க சென்னை போனதுக்கு அப்புறம்தான அண்ணன் தனியா போச்சு என்றவரின் மனமோ அதன் காரணத்தை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவிக்க முகமோ அதன் பலனாய் கசங்கியது .
தனது மகனின் வாடிய முகத்தை கண்டு அதை மாற்றும் பொருட்டு , ஏம்ல இப்படி கூமுட்டையா இருக்க ….. என்னல முறைக்க…பின்ன, உன் அண்ணனபத்தியும் அந்தப்புள்ளைய பத்தியும் உனக்கு தெரியாதால.
அந்த புள்ள என்னமோ உன்ற அம்மாவோட தங்கச்சி மவதான் .ஆனா உன்ற அண்ணனும் , அந்த புள்ளையும் பாசமலர் படத்தை மிஞ்சிய மாதிரி தானல பழகிட்டு திரிவாங்க . இத்தனை நாளும் பேசாமலா இருந்திருப்பாங்க என்றார்.
மகனது முகம் சற்று தெளிந்ததில் ஆசுவாசமாகி , ஆமா என்னல இன்னுமா பேரன் எழலை , விடியல்ல என்னை பார்க்காம இருக்க மாட்டனே என கேட்டார் .
தனது மகனது நினைவில் வஜ்ரநாகாவின் முகம் மேலும் ஒளிர்ந்தது. இவர்கள் மூவருக்கும் அவனே செல்லப்பிள்ளை .
பக்கத்தூர்ல ஏதோ கலவரமாம் ஐயா. மேலிடத்திலிருந்து நம்ப புத்ராவ போய் பார்க்க சொன்னதுல புள்ள அங்க போயிருக்கு . உங்க எழுப்ப வேணாம்னு சொல்லிட்டு தான் போனாங்ய்யா.
புத்ரா ….பவன்புத்ரா. கப்பீஸ்வர் மீசையை முறுக்கியவாறு , என் பேரன் என சொல்லும் கம்பீரத்திற்கு சொந்தக்கான்.சௌந்தரம்மாளின் பாசத்திற்கு கட்டுப்படுபவன். வஜ்ரநாகாவின் செல்லத்தை மொத்தமாய் குத்தகை எடுத்தவன்.
பவன்புத்ரா பக்கத்துக்கு ஊருக்கு சென்றபொழுது , கலவரம் உச்சத்தை தொட்டிருந்தது . கைகளின் சண்டைகள் போய் ஆயுதங்களின் முகம் எட்டிபார்த்திருந்தது .
தனது கருப்பு நிற புல்லட்டை அவர்களின் முன்பு நிறுத்தி மிக மிக பொறுமையாய் , கலவரத்தை ரசிக்கும் பாவனையுடன் இறங்கினான் பவன்புத்ரா , அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ். ஆறடிக்குக் குறையாத உயரம் , சற்று நீண்ட முகம் , அலை அலையான கேசம், அடர்த்தியான புருவம் மற்றும் மீசை , கூர்மையான கண்கள், கொஞ்சம் நீண்ட நாசி, அழுத்தமான உதடுகள் என அவனை கடக்கும் பெண்கள் அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் படியான தோற்றம் .
*********************************
தன் வீட்டினுள் சந்தோஷமாய் நுழைந்த கோதண்டநாகா , பவுனு பவுனு என அழைக்க அங்கு வந்த தன் மனைவியை (ஜானகி ) கண்டவர் , ஏட்டி பவுனு எங்க என கேட்க…
டேட் …எத்தனை தடவை சொல்றது …என்ன அப்படி கூப்பிடாதீங்கனு கால் மீ பவன் என சொல்லியவாறே வீட்டினுள் நுழைந்தான் பவனஜ்.
முறுக்கேற்றிய உடலுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரம், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், அடர்த்தியான புருவம் மற்றும் மீசை, பெண்களைப் போன்று மென்மையான ரோஜா வண்ண இதழ்கள் , குணத்தில் மாயக் கண்ணனின் குறும்பின் மறு உருவமாக திகழ்ந்தான் .
பவன்புத்ராவை பார்ப்பவர் அவனின் அதிரடியை ரசித்தால் , பவனஜை பார்ப்பவர் அவனின் குறும்புத்தனத்தில் மயங்குவர்.
*******************************
மகனின் பேச்சிற்கு சரி கண்ணா என தலையாட்டிய கோதண்டநாகா , நம்ப பவிகண்ணு குடும்பத்தோட ஊருக்கு வரபோறதா போன் பண்ணுச்சி தம்பி . அவங்க வரும் போது நீ தான் போய் கூட்டிட்டு வரணும் . அவங்க இந்த ஊரவிட்டு போய் ரொம்ப வருஷம் அச்சுல பாப்பாங்க ரெண்டு பெரும் மெட்றாஸ்ல வளர்ந்த புள்ளைங்க யாரையும் தெரியாது இங்கிட்டு .
அவரின் பேசிச்சில் குறுக்கிட்ட பவனஜ் , அப்போ என்னைய மட்டும் எப்படி தெரியும் .நீங்களே அம்மாவ கூட்டிட்டு போய்வங்க பா என்றான்.
பவுனு என்று ஆரம்பிக்கப்போனவர் மகனின் பார்வையில் …அதில்ல கண்ணா இப்போ நான் போனா அவங்கள இங்கிட்டு தான் அழைச்சிட்டு வருவேன். ஐயாறு அங்கன இருக்கையிலே அது மரியாதையை இல்ல கண்ணா.
பவனஜ் ,அப்போ அங்கிட்டே கூட்டிட்டு போகவேண்டிதான என அசால்ட்டாக சொல்லியவன் உள்நோக்கி செல்ல..
என்ன கண்ணா தெரியாத மாதிரி பேசிட்டு இருக்க என உள்சென்ற மகனின் காதில் கேட்பதுபோல் சலித்தவர் அங்கு தங்களை பார்த்தவாறு நின்றிருந்த மனைவியிடம் , ஏட்டி இங்கன என்ன சட்டிபணியாரம் செய்யறோம் வேடிக்கை பாக்குற ….சொல்லுடி புள்ளைகிட்ட என காய்ந்தார் .
மொதல்ல புள்ள சாப்பிடட்டும்ங்க புறவு பேசிக்கிடலாம் என கணவனை சமாளித்து அழைத்து சென்றார் ஜானகி.
உள்ளறையில் சாப்பிட்டு கொண்டிருந்த பவனஜை பார்த்துகொண்டே அவனின் அருகில் அமர்ந்த கணவருக்கு உணவு பரிமாற்ற ஆரம்பித்தார் ஜானகி.
அவரோ உணவில் ஓர் கண்ணும் மகனில் ஓர் கண்ணுமாய் இருக்க தன் தட்டில் கவனமாய் இருப்பதுபோல் இருந்த பவனஜும் தந்தை தன்னை பார்ப்பதை உணர்ந்தே இருந்தான்.
ம்ம்க்கும் என தொண்டையை செறுமியவன் , மா எதுக்கும் நம்ப முருகேசன்ட சொல்லி கொஞ்சம் கல்லு , மண்ணலாம் தயாரா வச்சிக்க சொல்லுங்க.
மகன் திடீரென சொல்லியதில் விளங்காமல் …எதுக்குபா உன் ஜோலிக்கு தேவைப்படுதா என கேட்டவரை பார்த்து வந்த சிரிப்பை முழுங்கியவன் , மா தாத்தா வீட கொஞ்சம் மாத்தணும்மா . மழை வந்தா வாசல் வழியா உள்ள வராத மாதிரி வாசற்படியை கொஞ்சம் தூக்கவேண்டிருக்கு .
ஜானகி மகன் சொல்வதை தீவிரமாய் கேட்டுக்கொண்டிருக்க , கோதண்டநாகாவோ , இங்க ஒருத்தன் என் தங்கச்சிய போய் கூட்டிட்டுவாடானு கேட்டுட்டு கல்லு மாதிரி பக்கத்துலயே உட்கார்ந்துருக்கேன் ….இவன் என்னன்னா தாத்தாக்கு வீடு கட்றதை பத்தி பேசுறான் . எல்லாம் வேணுமுனே பண்றது பின்ன அந்த அவரோட பேரனாச்சே வேற எப்படி இருப்பான் என தனக்குள் பொறுமியவாறு அமர்ந்திருந்தார் .
மா ….நான் அவங்களை கூட்டிட்டு வந்த பின்னால நம்ப வீடு முழுக்க பாசமழையா பொழியுமே , நம்ப வீடுகூட நான் பொறந்து கொஞ்ச வருஷம் அப்றம் கட்டுனது வெள்ளம் வந்தாலும் தாங்கும் . ஆனா தாத்தா வீடு அவங்க தாத்தாக்கு தாத்தா காலத்துல கட்டினதாச்சே . அந்த அத்தை அங்கேயிருந்து பாசமழையா பொழிய பதிலுக்கு இவர் இங்க இருந்தே பொழிய அந்த வீடு தாங்குமா . ஐயகோ என மூச்சை இழுத்து பிடித்து நடிகர் திலகமாய் மாறி பேசிகாமிக்க .
அத்தனைநேரம் அவனை மனதினுள் வறுத்தெடுத்ததை மறந்து , கண்ணு அப்போ அவங்கள கூட்டிட்டு வர உனக்கு சம்மதமா கண்ணு என கண்கள் ஒளிர கேட்டார் கோதண்டநாகா .
அவன் கிண்டல் செய்ததை கூட விட்டு அவன் கூட்டிட்டுவருகிறேன் என சொன்ன ஒற்றை வார்த்தையில் அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சையை பார்த்த தாய் மற்றும் மகன் இருவரின் மனமும் பவித்ராவின் மேலான அவரது அன்பில் ஆச்சர்யப்பட்டது .
**************************************
சென்னை :
மாடியுடன் கீழே மூன்று அறைகளை கொண்டிருந்த அவ்வீடு சென்னை மாநகரத்தின் பரபரப்பில் சிக்கிக்கொள்ளாதவாறு சற்று தள்ளி அமைதியாய் நின்றிருந்தது .
ஏங்க வரும்போது மறக்காம அந்த கடைக்கு போய்ட்டுவரணும்ங்க அண்ணனுக்கு அதிரசம்னா ரொம்ப பிடிக்கும் . அதுக்கு தேவையானதுலாம் வாங்கிட்டுவரனும் . இன்னிக்கு வாங்குனா வேலை முடிச்சி செய்றதுக்கு சரியா இருக்கும் என பவித்ராவின் குரல் ஹாலில் இருந்த அவரின் கணவர் பிரபுவிற்கு கேட்பது போல் உரத்து ஒலித்தது.
சரிமா , ஆனா நீ எப்பவும் இங்க வீட்லயே செஞ்சு விப்பாங்களே அவங்க கிட்ட தான வாங்குவ . இப்போலாம் செய்றதுக்கு தேவையான பொருளும் நம்மளே வாங்கித்தரணுமா என்ன ? என கேட்ட பிரபு நீல முழுகை சட்டை வெள்ளை நிற பேண்ட் கருப்பு பெல்ட் அணிந்து போர்மல் லுக்கில் பார்ப்பவர்கள் 40 வயதை தாண்டி சொல்லாதவாறு இருப்பவரின் உண்மையான வயதோ ஐம்பது .
கணவனின் கேள்வியில் அங்குவந்த பவித்ராவோ சிகப்பு நிற பருத்தி புடவையை மடிப்பு கலையாமல் பாந்தமாய் உடுத்தியிருந்தார் . முடியை மொத்தமாய் அள்ளி கொண்டையாய் போட்டிருக்க அதன் நடுவில் எட்டிப்பார்த்த ஓரிரு நரைமுடிகள் அவரின் வயதை கட்டிக்கொடுக்கவிட்டால் அவருக்கு வயது நாற்பத்திற்கும் மேல் என்பதை எவரும் நம்பமாட்டார்கள் .
என்னங்க , நான் என்ன சொல்லிட்டுஇருக்கேன் நீங்க என்ன பேசுறீங்க . எங்கண்ணனுக்கு அதிரசம்னா பிடிக்கும்னு சொன்னேன்ல . அதுவும் அத என் கையாலே பண்ணா ரொம்ப விரும்பி சாப்பிடுவாரு . ரொம்பநாள் ஆச்சே பதம் வருமான்னு நானே யோசிச்சிட்டு இருக்கேன் .நீங்க என்னனா லூசு மாதிரி கேட்டுட்டு இருக்கீங்க ..
என்ன நான் லூசா…. ம்ம்க்கும் இத்தனை நாளா எவ்ளோ மரியாதையா பேசுவா இப்போ அவங்க அண்ணனை பார்க்கப்போறோம்னு சொன்னதுக்கே நம்ப மரியாதைகாத்துல பறக்குதே இன்னும் நேர்ல பார்த்த பின்னாடி நம்பள கண்டுபாளானே தெரியலயே என மனதில் புலம்பியவர் ….பவி ரொம்ப நாள் இல்லமா ரொம்ப வருஷம் ஏன்னா உன்னை கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல உனக்கு அதிரசம் செய்ய தெரியும்னே எனக்கு இப்போ தான்மா தெரியும் என சொல்லி பாவமாய் முழித்தார் .
– பண்ணிடுவோம்..
—————————————————————————————————————————-
அடித்து கொள்வோம் … பிடித்து கொள்வோம் … இடையில் வருபவரை முறைத்தே கொல்வோம்…….
-அக்கா தங்கை உறவு
அத்தியாயம் 2:
உனக்கு அதிரசம் சுட தெரியுமென்றதே எனக்கு இப்போ தான்மா தெரியும் என அப்பாவியாய் சொல்லிய கணவனை எரித்து விடுவது போல் பார்த்த பவித்ரா ,முதல்ல உங்க செல்ல பொண்ணுங்களுக்கு போன போட்டு எப்ப வராளுங்கனு கேளுங்க . அத விட்டுட்டு வெட்டிபேச்சி பேசிட்டு இருக்கீங்க என அதட்டிவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
இவளாதான ஆரம்பிச்சா நான் சிவனேனு தான இருந்தேன் . ஆனாலும் நம்ம பொண்டாட்டி சரியான கேடி , எப்படி நான் கேட்டது காதுலயே விழாத மாறி பேசிட்டு போறா பாரு என புலம்ப ஆரம்பிக்க என்ன அங்க சத்தம் என்ற மனைவியின் கேள்விக்கு , நம்ப பொண்ணு கிட்ட பேசிட்டி இருக்கேன்மா என சொல்லியவர் அதை உண்மையாக்க போனில் தனது பெரிய மகளின் எண்ணை அழுத்தியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹாலிற்கு வந்த பவித்ரா அங்கு இன்னும் மகளுடன் பேசியவாறு இருந்த கணவனை கண்டு போனை கேட்க அவரோ கவனிக்காததை போல் வேகமாய் பேசி அணைத்தார்.
எதுக்கு இப்போ வேகமா போனை அணைச்சிங்க என ஆரம்பிக்க .
பிரபுவோ , பவி்மா இந்த மாமனையே சந்தேக பட்றியா என அப்பாவியாய் கேட்டார் .
ஓஒ சாருக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்குதோ ஒழுங்கா பேச்சை மாத்தாம உங்க பொண்ணு எதுக்கு உங்களுக்கு இவ்ளோ நேரம் பவுடர் போட்டானு சொல்லுங்க . ( ஏன் சோப்பு தான் போடணுமா நாம பவுடர் போடுவோம் ).
ஹீஹீ அது ஒண்ணுமில்ல பவிமா , நம்ம பரி்குட்டிக்கும் , பிரி்குட்டிக்கும் போன வேலை இன்னும் முடியலையாம்டா. அதனால நாம முதல கிளம்பி போவோம் சரியாடா.
என்ன பேசுறீங்க அவங்க ரெண்டு பேரும் எப்படி தனியா வருவாங்க ?. என்ன இந்த மாதிரி பேச சொல்லி அந்த பெரிய கழுதை சொல்லி குடுத்துச்சா . அவளுங்க இதுக்கு முன்னாடி விவரம் தெரிஞ்சு எப்ப அந்த ஊரை பார்த்திருக்காளுங்க ? அப்பறம் எப்படி தனியா வருவாங்க ? அவ தான் அறிவு கெட்டதனமா சொன்னா .. அப்பாவா நீங்க எடுத்து சொல்ல வேணாமா என மூச்சி கூட விடாமல் பேசினார் .
பதிலுக்கு எதுவும் பேசாமல் பிரபு விறுவிறுவென உள்ளே செல்ல அவரின் செயலில் கோபமா போறாரோ நானும் இன்னிக்கு ரொம்ப பேசிட்டேன் . எப்பவும் கோவமே பட மாட்டாரு இப்போ கோவமா போறாரு எல்லாம் என்னால என தன்னையே திட்டி கொண்டிருந்தவரின் முன்பு சொம்பு தண்ணியை நீட்டினார் பிரபு .
மூச்சவிடமா பேசுனதுல ரொம்ப தாகமா இருக்கும் இந்தா குடி என சொல்லியவரின் முகம் அமைதியாய் இருக்க , விழிகளோ குறும்பில் மிளிர்ந்தது .
கணவரின் செயலில் சிரித்தவர் , அவரை நெருங்கி தோளில் சாய்ந்தவாறு நான் எப்போவோ எந்த ஜென்மத்திலோ பண்ணிய புண்ணியம் தாங்க நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க . ஆனா நான் உங்கள மதிக்கறதே இல்லல, நானும் ஒவ்வொரு முறையும் மாத்திக்கதாங்க நினைக்கிறேன் . ஆனா அது ஏதோ நடிக்கிற மாதிரி இருக்கு என்னை மன்னிச்சிடுங்க என்றவரின் கண்கள் கலங்கிருந்தது.
அவரின் முகத்தை தன் கையில் தாங்கிய பிரபு அடடா என் பவி்மாக்கு இன்னிக்கு என்னவோ ஆயிடுச்சி . ஒருவேளை அண்ணனைப் பார்க்க போறதால செண்டிமெண்ட் மோட்க்கு தாவுறாங்களோ என கிண்டலாய்க் கேட்டு எனக்கு என் பொண்டாட்டி இப்டி இருக்குறது தான்டா பிடிச்சிருக்கு என அவரின் நெற்றியில் காதலாய் முத்திரை இட்டார் .
ச்சு என சிணுங்கியவர் , சரி சரி அதிரசத்துக்கு தேவையானதுலாம் வாங்கிட்டு வாங்க . நாம நாளைக்கு சாயந்தரம் கிளம்புற மாதிரி டிக்கெட்ட மறக்காம போடுங்க என்றார் .
ரெண்டுபேர்க்கா அப்போ பொண்ணுங்க?
அதான் கூடுகளவாணிங்களா மூணு பேரும் சேர்ந்து எதுனா திட்டம் போட்டுஇருப்பீங்களே .
ஹீஹீ ஒண்ணுமில்லமா பாப்பாங்க வேல முடியல அதுமில்லாம கொஞ்சம் பொருள் வாங்க வேண்டி இருக்காம். அவங்க எப்படியும் உங்க ஊர் வழியா தான் வரணும் அதனால அவங்க நேரா அங்கயே வந்திருவாங்க.
எதுக்குங்க இப்போ என்கிட்ட ஒப்பிச்சிட்டு இருக்கீங்க அதான் முன்னடியே எல்லாம் திட்டம் போட்டு பண்றீங்களே .
அதில்லைமா என பிரபு ஆரம்பிக்க .
மூச்…வேலைக்கு போற எண்ணம் இருக்கா இல்லையா. இன்னும் ஒரு மாசம் கிட்ட வரமாட்டோம் அதுனால போய் வேலைய பாருங்க என்ற பவித்ரா தன் வேலையை பார்க்க சென்றார்.
பிரபு வங்கியில் மேலாளராய் பணிபுரிய , பவித்ரா ஆசிரியராய் பணிபுரிகிறார் .பிரபுவின் வேலை காரணமாய் அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு மாறிக்கொண்டிருக்க அங்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் வேலை பார்த்து வந்த பவித்ராவிற்கு தனது ஊருக்கு செல்ல இதுவரை வாய்ப்பே அமையவில்லை.
பிரபு – பவித்ரா தம்பதியர்க்கு இரண்டு மகள்கள் – பரியா , ப்ரியா.
இருவருக்கும் இடையில் இரண்டு வருட வித்யாசம் இருந்தாலும், பார்ப்பவர்கள் இரட்டையர்களோ என எண்ணும் அளவிற்கு உருவிலும் செயலிலும் அவ்வித்தியாசம் சிறிதளவே இருக்கும்.
தைரியத்தின் மறுவுருவாய் இருக்கும் பரியா காவல்துறையில் சேர நினைக்க தாயிடம் இருந்து வந்த ஆட்சயபனையில் அதை சிறிதே மாற்றி மாவட்ட ஆட்சியாளர் ஆவதே குறிக்கோளாய் கொண்டு அதற்க்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறாள் .
பிரியாவோ பத்திரிக்கைதுறையில் நுழைந்திருந்தாள்.
அவளின் வேலைக்காகவே இருவரும் தேனி மாவட்டம் வரை சென்றுள்ளார்கள் .
………………………………………………………………………………………………………………………
அக்கா இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா முகத்தை வச்சிருக்க என கேட்ட பிரியா அன்று மலர்ந்த ரோஜா பூவாய் பூத்திருக்க அவளின் முகத்தில் இருக்கும் பருக்களோ …ரோஜா இதழ்களில் உறவாடும் பனித்துளிகளை நினைவூட்டியது .
பின்ன , அந்த பனிக்கரடி பரத் பண்ண காரியத்துக்கு என்னை ஈஈனு இளிச்சிட்டு வரசொல்றியா என கடுகடுத்த பரியாவோ தன் இருக்கும் இடம் முழுவதும் வாசம் பரப்பி அனைவரின் மனதையும் வசம் செய்யும் மல்லிகை பூவை ஒத்திருக்க , அவளின் வெள்ளை நிறம் தற்போதைய கோபத்தால் சற்றே சிவந்திருந்தது .
அச்சோ அக்கா அதான் அவனை அங்கயே அந்த அடி அடிச்சிட்டல . இப்போ கொஞ்சம் சிறியேன் இல்லனா உன் முகத்தை பாக்க சகிக்கல என்று அவளின் இடையில் சிறுகுழந்தையை போல் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவள் சிரிப்பதை கண்ட பின்பே விட்டவள் , ஆமா அக்கா அந்த பக்கி பரத் பண்ணதுக்காகவா இப்டி அவசர அவசரமா அங்க இருந்து கிளம்புன . சரி கிளம்புனதுதான் கிளம்புன , நம்ப வீட்டுக்கு போறத விட்டுட்டு எதுக்கு இப்போ அம்மாவோட ஊருக்கு கூட்டிட்டு போற.
தங்கையின் கேள்விக்கு இதழ்களில் தோன்றிய கள்ள சிரிப்புடன் , ப்ரி குட்டி இன்னிக்கு வீட்டுக்கு போனா நாளைக்கே திரும்பி இங்க தான எல்லோரும் வரப்போறோம் .எதுக்கு அந்த காவிகாரனுக்கு காச அழணும் .
அக்காவ் …..தயவு பண்ணி உன் திருவாய கொஞ்சம் மூட்ரியா . எதெதுக்குலாம் பேர் வைக்கிறத்துனுயில்ல .
முறைத்த தமக்கையை பார்த்த தங்கையவளோ, எதுக்கு இப்போ அந்த கண்ண போட்டு உருட்ற . பின்ன எந்த லூசாவது ட்ரெயின்க்கு செல்ல பேர் வைக்குமா பக்கி பக்கி அதும் உருப்படியா வச்சிருகியா.
ஏன் நான் வச்ச பேருக்கு என்னடி குறை.
பேரா அது …காவிகாரனாம் . இப்போ நாடு இருக்க நிலைமையில எவனா இத கேட்டு தொலைச்சா என்ன பண்றது என இன்னும் என்னன்னவோ வார்த்தைகளை கோர்த்து அர்ச்சனை செய்தவள் தான் முதலில் கேட்ட கேள்வியை மறந்திருந்தாள்.
இருவரும் சற்று நேரம் முன்பு தான் மன்னவனூரின் அருகில் இருந்த ஊரில் இறங்கிருந்தனர் . அவர்கள் ஏறிய பேருந்து சற்று முரண்ட அந்த ஊரினிலே அவர்கள் இறங்க வேண்டியதாயிற்று .
தங்கையின் வசவு சொற்களை காதில் வாங்காமல் , முதல் முறையாக கிராமத்தின் வாசம் தன் கண்களையும் ,மனதையும் வசம் செய்ய அதை அனுபவித்தபடி வந்துகொண்டிருந்தாள் பரியா .
அந்த அதிகாலை பொழுதில் இவர்கள் நடந்துகொண்டிருந்த இடம் ஒதுக்குபுறமாக இருக்க அருகில் இருந்த தோப்பினுள் இருந்து வந்த சத்தத்தில் முதன்முறையாக கிராம சூழ்நிலைக்கு வந்திருந்தவர்கள் என்ன என்று அறியாமல் முழித்துக்கொண்டு அங்கயே நின்றிருந்தனர் .
சற்றுநேரத்திலயே அது காற்றின் இசையும் , தண்ணீரின் சலசலப்பும் என கண்டு கொண்டவர்கள் முகம் முழுக்கு ஆர்வம் பூச ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வேகமாய் உள்ளே நுழைய , அங்கு இருந்தவர்களை கண்டு சற்றே பின்வாங்கி அருகிலிருந்த மரத்தின் பின் ஒளிந்தனர் .
அக்கா…. இந்த இடத்தோட சொந்தக்காரங்கபோல கா , வந்த முதல் நாளே எதுக்கு வம்பு வா போலாம் என ப்ரியா சொல்ல , தங்கைக்கு இசைவாய் தலையசைத்து பின் செல்ல கால் வைத்தவள் , அவர்கள் பேசியதில் சட்டென்று மீண்டும் அதே இடத்தில் நின்றாள்.
டேய் எருமைங்களா , எவண்டா அவன் பவன்புத்ரா….பெரிய இது மாதிரி போனீங்க இப்போ என்னனா , அவன் வந்துட்டான் அதான் ஒன்னும் பண்ணமுடிலனு வந்து நிக்குறீங்க . அந்த நாய போட்டித்தள்ளிட்டு சொன்னத செய்ஞ்சிருக்கவேணாமா என தன் முன் நின்றிருந்தவர்களை காய்ச்சிக்கொண்டிருந்தார் பத்மகேசன் , உருவத்தில் பெரும் மலை போல் இருப்பவர் … அந்த ஊரில் அரசியல் செல்வாக்கு பெற்றவர்.
பரியா மீண்டும் நின்றதை கண்ட ப்ரியா , சத்தம் வாரா வண்ணம் என்னாச்சி என கேட்க.
பரியாவின் இதழ்களோ “பத்ரா ” என முனங்கியது.
அவளின் முனங்கல் இவளின் காதில் விழாமல் போக , என்னக்கா இன்னும் என்ன என பரியாவின் கைகளை பற்றி இழுத்தாள் .
அப்பொழுது பத்திரிக்கை துறையில் இருப்பதால் இயல்பாய் இருக்கும் எச்சரிக்கை உணர்வில் தங்களின் பின் எவரோ வரும் ஓசை கேட்க …தமக்கையை இழுத்து அருகிலே சற்று பெரியதாய் இருந்த மரத்தின் பின் மறைந்தாள் .
பரியாவோ இதை எதையும் கவனிக்காமல் பத்மகேசன் பேசுவதையே உற்று கவனித்துக்கொண்டிருந்தாள்.
அவளின் செயலில் ஏன் இப்படி என்ற கேள்வி ப்ரியாவிற்கு தோன்றினாலும் …தமக்கையை பின்பற்றி அவளும் நடப்பதை கவனித்தாள்.
அனைவரையும் வார்த்தைகளால் விளாசி கொண்டிருந்த பத்மகேசன் முன் வந்து நின்றான் பரமேஷ் , அவரின் வலது கை .
என்ன அண்ணா எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க என கேட்டான் பரமேஷ்…
என்னடா தெரியாதமாதிரி கேக்க என பதிலுக்கு உறுமினார் பத்மகேசன் .
அவரை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி , மற்ற அனைவரையும் போகச்சொல்லி தலையசைக்க அனைவரும் குனிந்த தலையுடன் கலைந்தனர் .
அனைவரும் வருவதை பார்த்து இன்னும் மரத்தோடு ஒன்றிய சகோதரிகள் இவர்கள் இருவரும் பேசுவதை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர் .
எதேச்சையாக கிடைத்த வாய்ப்பை பத்திரிக்கைகார மூளை விட்டுவிடுமா என்ன என மெதுவாய் கேட்ட ப்ரியா தன் அக்காவை பார்க்க , அவளோ இவள் இருப்பதையே கண்டுகொள்ளாமல் அவர்களையே பார்த்திருந்தாள்.
இவ எதுக்கு இப்போ இப்டி இவங்கள சைட் அடிக்கிற மாதிரி பாத்துட்டிருக்கா என நினைத்துகொண்டே, இவர்கள் பேசுவதை தன் பையில் இருந்த ரெக்கார்டர் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தாள் .
எல்லோரும் சென்ற பின் பரமேஷ் , அண்ணா உனக்கு நட்டு சங்கர தெரியும் தான.
ம்ம்ம்…யார சொல்ற சமயத்துல சம்பந்தமே இல்லாம பாக்குற எல்லோரையும் நட்டு கழன்றவன் மாதிரி போட்டு தள்ளுவானே அந்த சங்கரா ?
ஆமா அண்ணா … அவனே தான் என்றவனின் பேச்சில் குறுக்கிட்ட பத்மகேசன் ,
டேய் அவன மறக்க முடியுமாடா ….அதும் அவன் செத்ததை இன்னுமே நம்ப முடில. இவனே பைத்தியம் மாதிரி பாக்குறவனலாம் மூச்சுவிடறதுக்குள்ள போட்டுத்தள்ளுவான் .அவனயே ஒருத்தன் நடுரோட்டுல கொன்னு போட்டுருந்தானே அப்ப்பப்ப்பா என வியந்து போய் சொன்னவர் , அதை அடுத்து பரமேஷ் சொன்னதில் ஒரு நொடி அவரின் இதயமே நின்றது போல் ஆனார் .
பத்மகேசன் மட்டுமல்லாது அவன் சொன்னதை மறைவாய் நின்று கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகளில் , பரியாவின் உடலும் அதிர்ச்சியில் உறைந்தது .
பத்மகேசன் நட்டு சங்கர் இறந்ததை பற்றி சொல்லிக்கொண்டிருந்த பொழுது இடையில் குறுக்கிட்ட பரமேஷ் , அந்த நட்டு சங்கர போட்டதே இந்த பவன்புத்ரா தான் அண்ணா என சொல்லிருந்தான் .
அவனின் இந்த வார்த்தையிலயே,
அவன் வெறும் போலீஸ் தான என பத்மகேசனும் ,
பத்ராவா …இது எப்படி உண்மையா இருக்கமுடியும் என பரியாவும் அதிர்ந்திருந்தனர் .
சகோதரியுடன் ஒட்டியவாறு நின்றிருந்ததால் அவளின் அதிர்ச்சியை கண்டுகொண்ட ப்ரியா , இவ கண்ணுமுன்னாடி கொலை நடந்தாலே அசால்ட்டா இருப்பா . இப்போ , எவனோ எவனோட சாவுக்கோ காரணம்னு சொன்னதுக்கு எதுக்கு இம்புட்டு ஷாக் ஆகுறா ??
அவர்கள் அதிர்ச்சியாய் நின்றிருந்த வேளையில் இதை யோசித்துக்கொண்டிருந்த ப்ரியா , தற்பொழுது அந்த இருவரையும் கவனிப்பதை விட்டுவிட்டு , அவர்கள் பேசுவதற்கு தன் தமக்கையின் முகம் காட்டும் வர்ணஜாலங்களை ஆராய முற்பட்டவளின் செவிகளை இம்முறை பலமாய் தீண்டியது , பரியாவின் இதழ்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்த “பத்ரா ” என்னும் சொல்.
-பண்ணிடுவோம்.
——————————————————————————————————————————————————
எவன் ஒருவன் சிறுவயதில் …இவன் என் நண்பன் என்று தோள்களில் கைபோட்டு சுற்றினானோ , அவனே இன்று வளர்ந்தபின் அத்தோள்களை அறுக்க பார்க்கிறான் ….ஜாதி என்னும் அருவாள் கொண்டு !!!
அத்தியாயம் 3 :
பரமேஷ் நேற்று அந்த கலவரத்தில் பவன்புத்ராவை பார்த்ததை பற்றி பத்மகேசனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.( வாங்க அங்க என்ன ஆச்சுன்னு நாமளும் பார்ப்போம் ).
கலவரம் நடந்து கொண்டிருந்த இடத்தில் சிறிதும் பதறாமல் , ஏதோ பிடித்த படத்தை ரசித்து பார்ப்பது போலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .
தற்பொழுது அவன் பின்னால் பல போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர்கள் இவனின் அருகில் வரிசையாய் நிற்க, அவனோ இது எதையுமே கவனித்தது போல் இல்லை.
அவ்வூரில் ஜாதி என்பது மிகபிரதானமாய் இருந்தது.
தேர்தல் நெருங்கும் வேளையில் கலவரத்தை உருவாக்கினால் அது ஆளுங்கட்சிக்கு எதிராய் திரும்பும் என்பதற்காக ***** கட்சியை சார்ந்த ஒருவர் பத்மகேசனிடம் பணம் கொடுத்திருந்தார்.
அதன்பெயரிலே அவரது ஆட்கள் இந்த கலவரத்தை உருவாக்கியது.
இதையறியாமல் இத்தனை நாள் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர் .
தொடர்ச்சியான வண்டிகளின் சத்தத்தில் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒரு சிலர் திரும்பிப் பார்த்தனர் .
அதில் நேற்றுவரை ஒன்றாய் சுற்றிக்கொண்டிருந்ததை மறந்து அவன் வேறு ஜாதி என்பதை மட்டுமே கண்களில் கொண்டு ஒருவனை அடித்துக்கொண்டிருந்தவன் திரும்பி பார்த்து , அய்யயோ இவன் எதுக்கு இங்க வந்துருக்கான் என முனங்கினான்.
இத்தனை நேரம் அடிவாங்கியவன் இவனின் முனங்களில் நிமிர , எதிரில் அமைதியாய் வண்டியில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த பவன்புத்ராவை பார்த்தவனின் கண்களில் கலவரம் சூழ்ந்தது . ஆத்தாடி ….இவனா …இவன் எதையாவது வித்தியாசமா பண்ணி தொலைப்பானே என்றவனின் குரலே நடுங்கியது .
இவர்கள் மட்டுமில்லாமல் கூட்டத்திலிருந்த பத்மகேசனின் ஆட்களும் , இவனை பார்த்ததில்லை எனினும் அறிந்திருந்ததால் , அடக்கி வாசிங்க என ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள் .
சிறிது நேரம் ரசித்து பார்த்த பவன்புத்ரா அவர்கள் தன்னை பார்த்துவிட்டபிறகு பின்வாங்குவதை போல் தெரிய , அவனின் இதழ்கள் புன்னகையில் வளைந்தது .
பத்மகேசனின் ஆட்களுக்கோ நேரம் போவது புரிய என்னசெய்வது என முழிக்க ,இவனை பற்றி அறியாமல் ஒருவன் கூட்டத்தினுள் மேலும் கலவரத்தை தூண்டுவதற்க்காய் ***ஜாதியின் தலைவரின் மேல் கல்லை எரிய மீண்டும் அவ்விடம் போர்களமானது .
இவனை பற்றி அறிந்திருந்த மற்ற போலீசார் , இவனின் அடுத்த செயலை ஆவலாய் பார்க்க ஆரம்பித்தனர் .
பவன்புத்ராவோ , போர் அடிப்பது போல் இருக்கே என இரண்டு கைகளையும் மேலாய் தூக்கி சோம்பல் முறித்தான் .
அவனுக்கருகில் இவனை ஒத்ததுபோல் வயதுடைய போலீகாரன் ஒருவன் நின்றிருந்தான்.
அவனிடம் , சார் படம் போரடிக்குதே சூடு ஏற்றலாமா என்றவன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்ட…, அடுத்த நொடி போலீஸ்காரர்கள் நரிகளின் மீது பாயும் சிங்கமாய் மாறி கூட்டத்தின் நடுவே பாய்ந்தனர் .
ஏட்டையா அதோ அந்த நீல சட்டைகாரன கால்ல போடுங்க… முருகேசன் சார் உங்க பின்னாடி ஒருத்தன் பம்முறான் பாருங்க அவனை மண்டைல கவனிங்க என ஒவ்வொருத்தரையும் சுட்டிக்காட்டி சொல்ல , அவர்களும் இத்தனை நாள் கேஸ் எதுவும் வரமால் அளுத்திற்க , கிடைச்சுது சான்ஸுன்னு பிரித்து மேய்ந்தனர் .
இதை அனைத்தையும் மறைவாய் நின்று பார்த்தகொண்டிருந்த பரமேஷ் , என்னடா இவன் !! போலீஸ்காரன்னா எல்லோரையும் அரஸ்ட்டு பண்ணி கூட்டிட்டு போறதவிட்டுட்டு , இங்கேயே எல்லாரோடையும் ப்பூய்ஸையும் பிடிங்கிடுவான் போலயே என இவனின் செயலை கண்டு புலம்பியவனை , களைப்பதுபோல் ஒலித்த விசில் சத்தத்தில் எவன்டா அவன் என பார்க்க அங்கு வாயில் வைத்த விரலை எடுக்காமல் இடைவிடாமல் விசிலடித்து கொண்டிருந்தான் பவன்புத்ரா.
இதற்க்கு முன் இப்படி அடிவாங்கியிறாததால் போலீசாரின் ஸ்பெஷல் கவனிப்பில் வலி தாங்கமுடியாமல் இருந்த பத்மகேசனின் ஆட்களில் சிலர், டேய் என்னடா இவன் ….இங்க நம்ம உசுறு போற மாதிரி அடி வாங்கிட்டு இருக்கோம் .., இவன் என்னவோ முதல் நாள் முதல் ஷோக்கு வந்தவன் மாதிரி விசில் அடிச்சுட்டு இருக்கான் என பொறுமினான்.
டேய் நாதாரி …, வாயமூட்றா. அவன் விசில் அடிச்சா கூட பரவாயில்ல , ஆனா அதுக்கு நடுவுல அவன் மூச்சு விட்ற கேப்ல நம்ப மூச்ச எடுக்க கோர்த்துவிட்றான்டா என்றான் மற்றவன் அழாகுறையாக.
இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த பரமேஷ் , அடேயப்பா … இவன் விரல் கூட இங்க ஒருத்தன் மேல படல…, ஆனா மொத்த பேரையும் இப்படி அலற வைச்சுட்டானே என மனதில் அவனை வியந்த வண்ணம் இருந்தான்.
அவன் எந்த நேரத்துல நினைச்சானோ அதுக்கு ஆப்படிப்பதுபோல் இருந்தது அடுத்ததாய் அவன் செய்தது . அத்தனை நேரம் போலீசார் கலவரம் செய்தவர்களை பிரியாணி போடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் ஒருவன் வேகமாய் அரிவாளை எடுத்து ஒரு போலீஸாரின் பின் வெட்ட வருவதை பார்த்தவன் , அவ்வளவுதான் வேகமாய் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை பட்டென்று எடுத்து பொட்டென்று அவனின் காலில் சுட்டான் .
ஒரு நிமிடம் துப்பாக்கிச் சத்தத்தில் அந்த இடமே அமைதியாகியது. இந்த மாதிரி சூழ்நிலையில் அவ்வூரில் எந்த போலீஸ்காரர்களும் துப்பாக்கியை உபயோகப்படுத்துவதில்லை. சொல்லப்போனால் கலவரத்தின் நடுவே அடிவாங்கிய போலீஸ்காரர்களே அதிகம் . இவனோ அசால்டாய் எடுத்துச் சுட்டுவிட ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்தனர் .
அந்த அதிர்ச்சி மறைவதற்குள்ளாகவே தன் அருகில் முதலில் நின்றிருந்தவனுக்கு பவன்புத்ரா கண்காட்ட…பதிலுக்கு அவன் செய்த சைகையில் அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது.
ஏன்டா நாயே ! போலீஸ்காரனையே வெட்ட வருவியா என்றபடியே குண்டடி பட்டிருந்தவனை தூக்கி மாருதியில் போட்டவன் மறுபக்கம் ஏறி வண்டியை கிளப்பினான் . உணர்வுகளுக்கும் அவனை கண்டால் பயமோ வண்டியை கிளப்பியவனின் முகத்தில் மருந்திற்கும் இவ்வுணர்ச்சிகளும் இல்லை.
அங்கு நின்றிருந்தவர்களின் இச்செயலை எதிர்பார்க்காததால் இப்பொழுது என்ன செய்வது என முழித்திருந்தனர்.
போலீஸ்காரர்களோ இது வாடிக்கை தான் என சிரித்துக் கொண்டு, ம்ம்க்கும் ஒருத்தன் சிக்கிட்டான் . இம்முறை சார் , இவனா என்னவிதமா திரும்ப கொண்டுவரப்போறார் என தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர் .
பரமேஷிற்கோ , இங்கே என்ன நடக்குது என முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.
இதுவரை பரமேஷ் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக கொண்டிருந்த பத்மகேசன், டேய் என்னடா ஆச்சு ! சுட்டவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டானா.
அதற்க்கு பதிலாய் பரமேஷோ , வழக்கமான போலீஸ்னா அப்படித்தான் பண்ணிருக்கணும்..ஆனா இவன் சரியான வில்லங்கம் புடிச்சவனாச்சேணா.
அப்படி என்னதடா பண்ணி தொலைச்சான்.
கலவரம் நடந்த இடத்தையே நாலஞ்சு தடவை சுத்தி சுத்தி வந்தான்ணா . நான் கூட இன்னும் யாரையும் அள்ளிட்டு போபோறானோன்னு பார்த்தா , அவன் ஏற்கனவே தூக்கிட்டுபோனவன குப்பையாக்கி போட இடம் தேடி இருக்கான்ணா.
என்னடா சொல்ற… நாதாரி புரியிற மாதிரி சொல்ல மாட்டியா.
என்னத்தணா சொல்ல சொல்ற . கார்ல தூக்கி போடும்போதாச்சி அவனுக்கு கால்ல மட்டும்தான் காயம் .திரும்பி வெளியே போடும்போது காலு எங்கடா இருக்குனு தேடறாப்புல இருந்தான் ணா.
ஆனா அண்ணா அவனுக்கு நம்ப தான் இந்த கலவரத்துக்கு காரணம்னு தெரியாது .அவன் அவனோட மேல்அதிகாரிங்களுக்கு கூட பயப்படமாட்டானாம்ணா.
பத்மகேசனோ , டேய் ….அவன புகழ்ந்துதள்ளவா இங்கிட்டு வந்த .எவண்டா அவன்***** து அவனுக்குபோய் பயந்துகிட்டு . நம்ப மினிஸ்டர்ட ஒரு வார்த்த சொன்ன அடுத்த நொடி அவன வேற ஊருக்கு மாத்திட்ட போறாரு என போனை எடுத்தார்.
அதை பிடுங்கிய பரமேஷ் ,அய்யோ அண்ணா நீங்க வேற அப்படி ஏதும் பண்ணி தொலைக்காதீங்க. இப்போதான் அவன பத்தி விசாரிச்சுட்டு வாரேன் , அவன் சொந்த ஊர் மன்னவனுர்…..பெரிய தலைக்கட்டோட பேரன். நம்ப மினிஸ்டர் அவங்களுக்கு ரொம்ப நெருக்கம் . போலீஸ்காரனுக்கு கொஞ்சம் பணம் ,பின்புலம் இருந்தாலே துள்ளுவானுங்க , இவனுக்கு கேட்கவா வேணும் என நீளமாய் அவன் பவன்புத்ராவை பற்றி விசாரித்ததை சொல்லினான் .
சிறிது நேரம் யோசித்த பத்மமகேசன் , இப்ப என்னடா பண்றது என அவனையே கேட்டார்.
இவங்கள மாதிரி பெரிய இடத்தை எப்பவும் பகைச்சுக்க கூடாதுனு நீதானணா சொல்லுவ என்று பரமேஷ் பதில் சொல்லும்போதே, அவர்கள் இருந்த எதிர்ப்பக்கத்தில் இருந்து எவரோ அழைப்பது போல் கேட்டதில் பேசியவாறே அங்கிருந்து நகர்ந்தனர்.
அவர்கள் சென்றபின் பரியாவோ , என்ன நடந்திருக்கும்… ஒருவேளை இப்படி இருக்குமோ? இல்ல ஒருவேளை அப்படி இருக்குமோ ?என மனதில் பேசுவதாய் எண்ணி வெளியே பேசிக் கொண்டிருந்தாள்.
அக்கா …அக்கா என ப்ரியா கூப்பிட கூப்பிட பரியா திரும்பாமல் இருக்க , அவளின் காதருகில் சென்று யக்க்க்காவ் என கத்தினாள்.
எரும எரும …கூப்பிட்ட திரும்ப போறேன் அதைவிட்டுட்டு , எதுக்குடி இப்போ காதுஜவ்வு கிழிர மாதிரி கிட்ட வந்து கத்தி தொலைக்குற .
ஹான் ஏன் சொல்லமாட்டா , இங்க ஒருத்தி தொண்டைத்தண்ணி வத்த கத்திட்டுஇருக்கேன் . நீ நல்லா கனவு கண்டுட்டு ,ஏன் கத்துறனா கேக்குற உன்ன என முறைத்தவள் தொடர்ந்து , ஆமா அந்த பவன்புத்ரா கூட டூயட் ஆடி முடிச்சிட்டியா இல்ல நேரம் ஆகுமா ?
ஐயையோ இந்த பக்கிக்கு எப்படி தெரிஞ்சிது என்று குழம்பி
இல்லாத மூளையை கசக்கியவள் , ஹீஹீ குட்டிமா என சமாளிக்கிறேன் பேர்வழிஎன அசடு வழிந்தாள்.
உவ்வேக்…அக்கா தயவு செஞ்சி எக்ஸ்பிரசன மாத்து சகிக்கல என்றவள் தொடர்ந்து, ஏதோ ஸ்ரீ ராமா ஜெயம் சொல்ற மாதிரில பத்ரா பத்ரா னு புலம்பிட்டு இருந்த. மறைக்காம உண்மையை சொல்லுக்கா.
அது ப்ரி மா …வந்து…பத்ரா…ஆங்..
எம்மாடியோவ்…விடாம பேசுற எங்க அக்கவையே வாயில டைப் அடிக்க வச்சிட்டாரே, அந்த பவன்புத்ரா பெரியஆள் தான் போல .
இன்னும் அமைதியா இருந்தா இவ உன்ன ஓட்டி தள்ளிடுவா பரி என உசுப்பிய மனசாட்சியை , எல்லாத்துக்கும் அந்த பத்ரா தான் காரணம் இப்போ யாரு அவனை என் நியாபகத்துல வர சொன்ன என பழியை அவன் மேல் போட்டாள்.( அடி ஆத்தி இது என்னமா புது டிஸைனா இருக்கு …நீயா அவனை நினைச்சிப்புட்டு அந்த புள்ளைய திட்டுற ).
ப்ரிகுட்டி லூசு மாதிரி பேசாத . அந்தமாதிரிலாம் எனக்கு எவனையும் தெரியாது . இப்போ நீ சொல்லி தான் இப்படி ஒரு பேரே கேக்குறேன் என வேகவேகமாய் மூச்சுவாங்க சொல்லிமுடித்தாள் பரியா.
ஹாஹா , அக்கா நான் கூட ஒரு டவுட்லதான் இருந்தேன் , ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு. எப்படி எப்படி பவன்புத்ரா -ற பெயரையே இப்போ நான் சொல்லித்தான் நீ கேட்கிறாயா …..ஹா ஹா ஹா ….
ஏய் என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க.கிளம்பர ஐடியா இருக்கா இல்லையா …வளவளன்னு பேசாம கிளம்பு என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் பரியா.
அச்சிசோ …எங்க அக்காக்கு கோவம் வந்துடுச்சு போல. சரி சரி, நான் எதுவும் சொல்லல என அமைதியான ப்ரியா…, திடீரென ஹா ஹா ஹா என சிரித்தாள் .
பரியா அவளை புரியாமல் பார்க்க, ம்ம்க்கும் அக்கா ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்கட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினாள் .
பரியாவும் சரி என தலையசைக்க , அது எப்படிகா ! காதல் வந்துவிட்டா உடனே எல்லோரும் அவங்க ஆளுக்கு செல்லப்பேர்லாம் வச்சுட்ரீங்க. எப்படி எப்படி பவன்புத்ரா டு பத்ரா வா ஹாஹா எப்படிகா இப்படிலாம்.
திருத்திருக்வென முழித்த பரியா கோபம் போல் முகத்தை வைத்து , இப்போ வாய மூடிட்டு வரப்போறியா இல்லை நான் தனியா போகட்டுமா என அதட்டினாள் .
ம்ம்க்கும் நாங்க சிங்களுனு கொஞ்சநாள்ள நீ மிங்கிள் ஆகபோற தெனாவட்டு பேசுறீங்களோ. நாங்களும் ஒருத்தன கரெக்ட் பண்ணுவோம்…, நாங்களும் செல்லப்பெயர் வெப்போம் …, நாங்களும் செல்லமா கூப்பிட்டு கொஞ்சுவோம் என தங்கள் அன்னை வழக்கமாய் கோபத்தில் நொடிப்பது போல் நொடித்தாள்.
தங்கையின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிய பரியா, முகத்தை சீரியஸாய் மாற்றி… ப்ரிக்குட்டி நாங்க நாங்கனு சொல்றியே மீதிப்பேர் யாருடா குட்டி ? ஒருவேளை எல்லாருமா ஒரே பையனயா என பாதியில் நிறுத்தி கண்ணடித்தாள்.
ஆத்தாடி என்னது என பதறிய ப்ரியா தமக்கையின் கண்களில் தெறித்த கேலியில் , உன்னை என பல்லைக்கடித்து சுற்றுமுற்றும் தேடியவள் கிடைத்த கல்லை தூக்க.
ஐயையோ ப்ரிகுட்டி… நான் உன் ஒரேஒரு அக்காடா….நம்ப அம்மா அப்பாக்கு ஒரே ஒரு மூத்தபொண்ணுடா என கத்தியவாறு ஓட , ப்ரியா அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.
ஓடிக்கொண்டிருந்த இருவரின் முன்பும் வேகமாய் வந்த அந்த இருசக்கர வாகனம் கிரீச்சிட்டு நிற்க , அதிலிருந்து வெள்ளை நிற டீஷர்ட் ப்ளூஜீன் போட்டு கண்களில் போட்டிருந்த கருப்பு கண்ணாடியை கழட்டியவாறு இறங்கினான் அவன்.
திடீரென ஓர் வண்டி முன் வந்ததில் தடுமாறிய பரியா மற்றும் ப்ரியா இருவரும் அந்த வழியில் இருந்த சேற்றில் விழுந்தனர் .
ச்சேய் இடியட் என திட்டிகொண்டே எழுந்தவர்களில் ப்ரியா , ஹலோ அறிவில்லையா இப்படியா திடுதிப்புனு வருவாங்க என கத்த தொடங்கினாள்.
அவளின் கையை பிடித்த பரியா , பத்ரா என சொல்ல….ஒரு நொடி புரியாமல் விழித்த ப்ரியா அவளின் அக்காவையும், அந்த பைக்கில் வந்தவனையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் .
அட இது என்ன இந்த பொண்ணுங்க நடுவுல வந்துட்டு நம்மள ஏசுராங்க என நினைத்து பதிலுக்கு திட்ட போனவன் பக்கத்திலிருந்தவள் ஏதோ சொல்ல திட்டிக்கொண்டிருந்தவள் அமைதியாகியதை கண்டு யார் இவர்கள் என்பதை போல் பார்த்திருந்தான்.
டேய் பவனஜ் ! என்னடா இன்னும் நீ போலையா என கேட்டவாரே வந்த ஒருவன் இவர்களை பார்த்து யார் என பவனஜிடம் கண்களால் கேட்க அவனோ தெரியாது என தோள்களை குலுக்கினான் .
பவனஜா என குழப்பத்துடன் ப்ரியா தன் அக்காவை பார்க்க இப்பொழுது விழிப்பது பரியாவின் முறையாகியது .
– பண்ணிடுவோம் ….
—————————————————————————————————————————————-
பெண்ணே !பெண்ணியம் பேசு…பெண்ணியம் எதுவென அறிந்து பேசு !மாற்றம் வேண்டியது எங்கள் பார்வையில் அல்ல …உங்கள் உடைகளில் என்றால் !நாங்கள் எவ்வாறு இருந்தாலும் உங்கள் பார்வையை மாற்றுங்கள் எனாதே மாற்றிய பின் கேள் , எங்கள் உடைகள் மாறின உங்கள் பார்வைகள் மாறுமா என !நாகமது எதிரில் இருப்பவர் குழந்தையா ? குமரியா ? உடை என்ன என பார்ப்பதில்லை கொத்தமட்டுமே செய்யும் விஷமாய் !கயமையவனின் கண்கள் கண்ணியம் உணராது …என்றும் கயமையை மட்டுமே கக்கும் விஷமாய் !
அத்தியாயம் 4:
தங்கள் முன் நிற்பது பவன்புத்ரா என பரியா சொல்ல அங்கு வந்த மற்றொருவனோ அவனை பவனஜ் என்றழைத்தான் .
அதில் பரியா மற்றும் ப்ரியா இருவரும் விழித்துக்கொண்டிருந்தனர்.
யார் இவங்க …ரெண்டுபேரோட முழியுமே சரியில்லையே என எண்ணிய பவனஜ் சத்தமாய் , ஓய் யாரு நீங்க…இங்கன எங்க சுத்திட்டு கிடைக்கீக .
பதில் சொல்லாமல் மீண்டும் இருவரும் முழித்துக்கொண்டிருக்க , என்னால ரெண்டு பேரும் ஆடு திருடுன கள்ளநாட்டோம் முழிக்கீக என அதட்டினான் .
அவனின் அருகில் நின்றிருந்தவனோ , ஏம்ல… என்னாத்துக்கு அதட்டுற புள்ளைங்க பயபடுது போல என்றான்.
அவனின் பயபடுது என்னும் வார்த்தையில் விழித்தெழுந்த சிங்கமாய் சகஜநிலைக்கு வந்த பரியா , ப்ரியா இருவரும் சேர்ந்து எதிரில் இருந்தவர்களை முறைக்க , அதை பார்த்த பவனஜ் அருகில் இருந்தவனிடம் , ஏலே இவங்கள பார்த்தா பயப்படறாப்ல தெரிலடா வேணும்னா நம்பள பயப்படவச்சிப்புடுவாங்க போல .
என்ன மாப்பு சொல்ற, அப்போ நம்ப இங்க இருக்கிறது சரிகிடையாதே நைசா கழண்டுக்கலாமா …டேய் டேய் பவனஜ் நான் சொல்றது கேக்குதா இல்லையால . என்னதுக்கு அந்த புள்ளையயே குறுகுறுன்னு பாக்குற …வால போவோம் என்று பவனஜை நகர்த்தி அவனின் வண்டியில் ஓட்டுவதற்க்காய் அமர்ந்தான் அந்த மற்றொருவன் .
பவனஜோ நண்பனின் சொல்லிற்கு சரி என தலையசைத்தாலும் கண்களை பரியாவிடம் விட்டுக்கொடுத்துவிட்டான் .
அவனின் பார்வையை சரியாய் மிக தப்பாய் புரிந்துகொண்ட பரியாவோ , பார்க்குறான் பாரு இதுக்கு முன்னாடி பொண்ணுங்களையே பார்த்தத்தில்லாத மாதிரி ..என முனங்கினாள் .
அவளின் முனங்களை கவனித்த பவனஜோ , கண்கள் குறும்பில் பளபளக்க முன் அமர்ந்திருந்தவனின் தோள்களில் கைவைத்து அவனை நிற்க சொல்லியவன் …ஏல பன்ரொட்டி நில்லுடா . பேரு என்னனு விசாரிச்சிபுட்டு போவோம் என அவனிற்குமட்டும் கேட்க்குமாறு முனங்கினான்.
ஏலே…என்னம்ல சொல்லுர ..நீ இப்புடிலாம் பண்ற ஆளு கிடையாதேப்ல. உங்க அப்பாருக்கு தெரிஞ்சிது உன்ன ஒன்னும் செய்ய மாட்டாருல என்ற தோளதான் பிய்ச்சி போடுவாருல.
அட என்ன பன்னு (பன்ரொட்டியின் சுருக்கம் பா ) , பேரு தாம்ல கேக்கலாம் சொன்னேன் . என்னமோ நான் அந்த புள்ளைய காதலிக்க கூப்டாப்ல பேசிட்டு இருக்க.
ஓ….மாப்பு உனக்கு அந்த ஆச வேற இருக்காப்பு என பேச ஆரம்பவித்தவனை கண்டுக்காமல் பவனஜ் பெண்களிடம் திரும்பியவன் , எங்கன இருந்து வாரீக உங்கள இந்த ஊர்ல பார்த்ததில்லையே என்றான்.
அவனின் தோரணையில் அசந்து இருந்த ப்ரியாவோ , அடடா செம்மயா இருக்கானே இருந்த அதிர்ச்சில அவன் மொதல்ல பேசும்போது பதில் சொல்லாம வேற இருந்துட்டோம் அடுத்து பேசுவானா என புலம்பிக்கொண்டிருந்தவள் அவனின் கேள்வியில் , அப்பாடா இப்போவாவது இந்த ஹீரோ கூட பேசிடுவோம் என மனதினுள் குதூகலித்தாள்.
அவசரமாய் பரியா தடுப்பதற்குள் , சென்னை என்றிருந்தாள்.
ஓஒ இங்கன யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க , உங்க பேர் என்ன என ஆரம்பிக்க அவனை முறைத்த பரியா வாயினுள் அவனை திட்டியவாரே தன் தங்கையின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
அடிங்கு ….மாப்பு இவளுங்களுக்கு கொழுப்பை பார்த்தியால . எம்புட்டு பெரிய ஆளு நீரு , பேர் கேட்டதுக்கு என்னமோ அவளுங்க சொத்தை கேட்டப்புல முறைச்சிட்டு போறத பார்த்தியால என பேசிக்கொண்டிருந்த பன்ரொட்டி அடுத்த நொடி ஆஆஆ என அலறினான் .
ஏம்ல பன்ரொட்டி ….அம்புட்டு அதிகமாவால வலிக்குது என சாதுவாய் பவனஜ் கேட்க ,
எதுக்குல இப்போ வாயிலயே அடிச்ச .அடிச்சிப்புட்டு வலிக்குத்தான்னு வேற கேக்குற என அழாக்குறையாய் கேட்டான் பன்ரொட்டி .
மன்னிச்சுடுடா பன்னு …ஆனாலும் நீயும் அப்படி பேசிர்க்கப்படாதுல . அந்த புள்ளைய பொறுத்தவரைக்கும் நான் யாரோ ஒருத்தன் தானல அப்படிருக்காப்ல அந்த புள்ள இப்படி தானலை பண்ணும் . ஒருக்கா நம்மளுக்கு கூட பொறந்த புள்ளையா இருந்தாலும் இப்படி தானல சொல்லி வளர்ப்போம் . அப்றம் நீ அந்த புள்ளைய வைதா எப்படி.
அட மாப்பு என்னால திடுதிப்புனு காரமா பேசுறாப்ல.
இல்ல பன்னு… எனக்கும் மண்டைல இப்பத்தாம்ல உரைக்குது .யாருனு தெரியாதவங்க பொம்பள புள்ளைகிட்ட சும்மா பேரு கேக்குறதுகூட தப்புதாம்ல . அதுவும் இப்போல்லாம் புள்ளைங்க கூடவே இருக்குற சொந்தங்களை கூட நம்ப முடியாம தவிக்குதுங்கல .அதுவும் பொம்பளை புள்ளைய பெத்த அம்மாங்க அதுக்குமேல , மொதலலாம் புள்ளைங்க நேரத்துக்கு வரலைனா தான் வயத்துல நெருப்பை கட்டிட்டு இருக்கனும் … இப்போல்லாம் ஒவ்வொருநிமிஷமும் அப்டிதாம்ல இருக்காங்க .
நீ சொல்றதுலாம் வாஸ்தவம் தான் மாப்பு …ஆனா நீ இதுவரைக்கும் எந்த புள்ளைகிட்டயாவது நின்னு பேசிற்பியா விடு மாப்பு என பவனஜின் பேச்சை ஒத்துக்கொண்டு , அவனை…அவனின் செயலிற்காய் சமாதனப்படுத்தியவாறே வண்டிய வீடுநோக்கி செலுத்தினான் பன்ரொட்டி .
சிறிதுதூரம் சென்றபின் , ஏலே பன்னு ! ஆனாலும் அந்த கூர்மூக்கி பேர் என்னவால இருக்கும்.என்னவே முழிக்க , அதாம்ல ரெண்டுபேர்ல ஒருத்தங்க நம்பள முறைச்சு முறைச்சு பார்த்தங்களே அவங்கள தாம்ல சொல்றேன்.
இம்புட்டு நேரம் இவன் பேசுனது என்ன , இப்போ பேசுறது என்ன என கடுப்பாகிய பன்ரொட்டி ….ஏலே மாப்பு உனக்கு நான் நல்லா இருக்கிறது பிடிக்காட்டி சொல்லு அந்தா இருக்க கிணத்துக்குள்ள குதிச்சிபுடுறேன் .இப்போதான மாப்பு அந்தா தண்டியா பேசுன அதுக்குள்ள இப்டி கேக்குறியே .
ஹீஹீ வுட்றா வுட்றா …அந்த புள்ளைகிட்ட தான கேக்கவேணாம் சொன்னேன் .அந்த புள்ள எவரு வீட்டிக்கு வந்துருக்காப்புலனு பார்த்து விசாரிச்சிபுட்டா போச்சி .
என்னல பன்னு அந்த கண்ணாடி வழியா என்னைய உத்து பாக்குற .
பன்ரொட்டியோ, ஒண்ணுமில்ல மாப்பு எப்டியா நீ இப்படிலாம் பண்ற. ம்க்கும் இத்தனை வருஷமா சேர்ந்தாப்ல தான் சுத்துறோம் எனக்கே நீ என்ன வகைனு தெரில மாப்பு என புலம்பி தள்ளினான் .
அட என்ன பன்னு !இம்புட்டு சலிச்சிக்கிற நம்ப “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா??”
பண்ணுவல நீ பண்ணுவ அடுத்து உங்க குடும்பமே என்னைய வச்சிபண்ணிடும் என சத்தமாய் முனங்கியவனை கண்டுகொள்ளாமல் அவனின் தோளில் சாய்ந்தவாறு வந்தான் பவனஜ்.
**************************************************************
ஏட்டி அங்கிட்டு என்ன செய்யுற சீக்கிரம் எதுனா குடு புள்ளைங்களுக்கு . அம்புட்டு தொலைவுல இருந்து வந்துருக்குங்க ராத்திரி எதுனா சாப்பிடிச்சீங்களோ என்னவோ ?. அய்யோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடலயே என வீட்டினுள்ளும் வெளியேயும் மாற்றி மாற்றி நடந்தார் கோதண்டநாகா.
அங்கிருந்த குட்டை மதில்சுவற்றின் வழியாய் பக்கத்துவீட்டில் நடைநடந்துகொண்டிருக்கும் மகனை பார்த்த கப்பீஸ்வர் , இவன் எதுக்கு திருட்டு பூன கணக்கா திரியுரான் என எண்ணியவர் அங்கு வந்த மனைவியை பார்த்து ஏட்டி சௌ ….உன்ற புள்ள என்னல சமஞ்ச புள்ளைய பெத்தவானாட்டோம் உள்ளுக்கும் வெளிக்கும் நடநடந்துட்டு இருக்குரான் .
உங்களுக்கு அவன ஓரண்டை இழுக்கலனா உறங்கமாட்டீரோ . நம்ப பவித்ரா கண்ணோட புள்ளைங்க வந்துருக்காப்ல அதுதான் நம்ப மவன் தலைகால் விளங்காம திரியுறான் . ஏனுங்க நானும் போய் ஒருக்கா பாத்துப்போட்டு வாறேன் .
ஏட்டி ! அதுதான் கைல கருவாட்டுக்குழம்பு வாசனையோடு தூக்க தூக்கிட்டு வந்துருக்கும் போதே தெரியுதே உன்ற மவன் வூட்டுக்கு போறன்னு . என்னமோ நான் சொன்னாப்றம்தான் போபோறாப்ல கேக்குற.
அடியாத்தி என மோவாயில் இடதுகையை வைத்த சௌந்தரம்மாள் , உன்ற கிட்ட இங்கன யாரு கேட்டாப்ல என நொடித்தவர் , நான் இல்லாத நேரத்துல உள்ளார இருக்க சட்டிக்குள்ள மண்டைய வுட்டுப்புறாதிங்க நான் இந்தா வந்துபுடுவேன் என கருவாட்டுக்குழம்பு தூக்குடன் மகனின் வீட்டிற்கு சென்றார் .
தாத்தய்யா ! நம்ப பெரிய மள்ளிகைக்கடைக்காரரு உங்கள பார்த்துப்போட்டு போலாம்னு வந்துருக்காருங்கய்யா என கணக்கர் சொல்ல கப்பீஸ்வர் அதில் கவனமானார் .
**************************************************
வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த பன்ரொட்டி பின்னாடி அமர்ந்திருந்த பவனஜிடம் , ஏம்ல மாப்பு ! என்னலே காலையிலயே நம்ப சௌந்தர்யா தூக்குவாளியோட சுத்துறாப்ல .
அதற்குள் வண்டியை வீட்டினுள் பன்ரொட்டி நிறுத்திருக்க இறங்கிய பவனஜ் , நம்ப சௌந்தர்யாவ வுடு பன்னு… அங்கன எங்க அப்பார பாரு .என்னாச்சி இந்த மனுஷருக்கு கையும் ஓடல காலும் ஓடல்னு சொல்லிட்டு இருக்காரு.
பின்னடியே இறங்கிய பன்ரொட்டி , ஐய்யயோ மாப்பு என்னால கத பேசிட்டு இருக்க போ மாப்பு போய் அப்பார தூக்கு ஹாஸ்பத்திரிக்கு போவோம் .
இவன் ஒலறியதை கேட்ட சௌந்தரம்மாள் , ஏன்டா எடுப்பட்டமவனே எம்புள்ளையவா ஏளனம் பண்ற என அங்கு கோதண்டநாகா குடித்துவிட்டு வைத்திருந்த இளநி குடுவையை எடுத்து அவனின் மேல் எறிந்தார் .
அடியாத்தி என எகிறி அதிலிருந்து தப்பித்த பன்ரொட்டி , அப்பாடி ஜஸ்ட்டு மிஸ்ஸு என பெருமூச்சிவிட்டவன் பக்கத்தில் ஒரு மார்க்கமாய் பார்த்த பவனஜிடம் , மாப்பு நான் கால தாண்டா சொன்னேன் என அவனோ அப்படியா என்பது போல் பார்த்தான்.
இவன் நம்பமாட்டானே என முனங்கி கொஞ்சநேரம் நம்ப வாய்மூடுவோம் பயபுள்ள வேறபக்கம் திரும்பிடும் என புத்திசாலித்தனமான முடிவு பண்ணி வாயை இருக்க மூடினான் .
சௌந்தரம்மாளோ , நீ வா ராசா ! அந்த வெட்டிப்பய பேச்செல்லாம் நின்னு கேட்டுகிட்டு.
ஹாஹா , அப்பத்தா நீயும் அவன் கூட சரிக்குசரி தான பேசிட்டு கிடக்க. ஆமா வீட்டுக்கு யார் வந்துருக்காப்ல அப்பாரு சும்மா துள்ளிக்கிட்டு கிடக்காரு .
எல்லாம் நம்ப பவித்ரா கண்ணோட புள்ளைங்கதானப்பு . அப்பத்தா கருவாட்டுக்குழம்பு ஊத்தி எடுத்தாந்துருக்கேன் , நீ போய் சாப்டு ராசா களைச்சு போய் தெரியுற.
ஆனாலும் சௌந்தர்யா ! உனக்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது சொல்லிப்புட்டேன் .உன் ரசிகன் நான் இங்க கால்கடுக்க நிக்குதன் என் கால உடைச்சிட்டு , என் பின்னாடி சும்மா உட்காந்துட்டு வந்த அவனை கொஞ்சிட்டு கிடக்க என்றான் பன்ரொட்டி.
ஏண்டா சட்டிதலையா நான் குழம்பூத்தி வச்சிருக்க பாத்திரத்தலாம் களவாண்டிட்டு போனவந்தான நீனு . என்ற புருசனே என்னை பேர் சொல்லி கூப்பிட்டதில்லை நீ என்னலே என அவனை அடிக்க ஏதுவாய் ஏதேனும் இருக்கா என தேடினார் .
அப்பொழுதும் அடங்காத பன்ரொட்டியோ , அதா உன்ற புருஷரு உன்ன செல்லமா கௌ (கௌ ) னு கூப்புட்றாருல அப்றம் ஏன் பொங்குத .
அப்பத்தா கௌ -னா எரும மாடுனு அர்த்தம் அப்பத்தா . அவன் உன்ன எருமைமாடுனு திட்ட தாத்தா பேர சொல்லி ஏமாத்துறான் என்று அத்தனை நேரம் அமைதியாய் இருந்த பவனஜ் வசமாய் நண்பனை தப்பாய் போட்டு கொடுத்தான் .
என்னல சொல்ற இவன் அப்டியா சொன்னான் .ஏத்தா ஜானகி(பவனஜின் அம்மா) ! சுடுதண்ணி போட விறகு பத்தவச்சிருப்பல அத எடுத்தாத்தா இவன் வாயிலயே சுடுவோம் .
ஏம்ல மாப்பு , நீ என்கூட தானல வந்த எப்போல துரோகியா மாறுன.அது சரி கௌ- னா மாடுன்றத்துல இருந்து எரும மாடுனு எப்போல மாத்துன்னாங்க
ஹீஹீ மாப்ள , என்னை என்ன உன்னோட வெறும் நண்பன்னு நினைச்சியா நீ சொல்றத அப்படியே சொல்ல , நான் உன் உயிர் நண்பன்டா. அதாகப்பட்டது மாப்ள ! நான் போய் கருவாட்டுக்குழம்பு சாப்பிடுறேன் நீ அப்பத்தா பஞ்சாயத்தை முடிச்சிட்டு உயிரோட இருந்தா வா சரிதான மாப்ள என அவனை போட்டுக்கொடுத்ததை உயிர்நண்பனின் ரூல்ஸ் என சொல்லாம சொல்லி செல்ல , பதிலுக்கு பன்ரொட்டி கத்த…மற்றோரு பக்கம் அப்பத்தா பேச என அவ்விடமே சத்தமாய் இருந்தது .
அந்த ஊரிலே பெரிய குடும்பம் என்பதால் தேடுவதற்கு சிரமமின்றி பரியா மற்றும் ப்ரியா இருவரும் சுலபமாய் இங்கு வந்திருந்தனர் .இன்று வருவதாய் முன்பே சொல்லாவிடினும் கோதண்டநாகா வீட்டினுள் இவர்களுக்கு தந்த வரவேற்பினால் மகிழ்ந்து, இன்னும் சேற்றுடன் இருப்பதால் உரிமையுடன் தங்களுக்கான அறை கேட்டுசென்றனர்.
சிறிதுநேரம் கழித்து இருவரும் வர , ஏன் ப்ரி ! நம்ப அம்மா அவங்க அண்ணாவ பத்தி சொல்லும்போதுலாம் ஓவரா சொல்றாங்கன்னு கிண்டல் பண்ணுவோமே ஆனா இவர் நம்ப மேலயே இவ்ளோ பாசம் காமிச்சா நம்ப அம்மா மேல எவ்ளோ காமிச்சிர்ப்பாரு என பரியா ஆரம்பித்திருக்க ,
அப்போ இந்த அம்மா குடுத்த பில்டப்லையும் ஒரு அர்த்தம் இருக்குனு சொல்ற என ப்ரியா குறுக்கிட்டு முடித்தாள்.
எப்பப்பாரு என்ன பேசவிடாம நீயே பேசிடு , பத்திரிக்கை கார புத்தி என பரியா தங்கையை பொரிய அதேநேரத்தில் வெளியே சத்தம் அதிகமாகியதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வெளியே வந்தனர் .
-பண்ணிடுவோம்
——————————————————————————————————————————————————-
இரக்கம் என்பதே இல்லாமல் பல உயிர்களை கொன்று …குருதிகடலின் நடுவில் சிம்மாசனமிட்டு வாழ்பவனையும் …
ஒற்றை பார்வையில் அடக்கும் வல்லமை வாய்ந்தது …
காதல் என்னும் மூன்றெழுத்து
உயிர் அச்சாணி …!!!
அத்தியாயம் 5 :
பவனஜ் , அப்பத்தா , பன்ரொட்டி மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச அவ்விடத்தில் சத்தம் அதிகமாகியதில் பரியா மற்றும் ப்ரியா இருவரும் அங்கு வந்தனர் .
கத்திக் கொண்டு இருந்தவர்களை பார்த்த கோதண்டநாகா , கொஞ்சம் எல்லாம் சும்மா இருங்க……ஏன் ஆத்தா அவனுங்கதான் வம்பு இழுக்கானுங்கனா நீயும் அவங்களுக்கு சரிக்குசரியாக மல்லுக்கட்ர. ஏல பன்ரொட்டி உமக்கு என்ற ஆத்தா கூட ஓரண்ட இழுக்கலானா பொழுதுபோகாதோ…கண்ணு நீயும் இவங்க கூட சேர்ந்து இப்படிபண்ணா எப்டி என மூன்று பேரிடமும் கேள்விகள் பறந்தன.
சிறிது நேரம் பின்னும் பதில் வராததால், ஆத்தி நம்ப பேச்சக்கூடவா இம்புட்டு அமைதியா கவனிக்குறாங்க என அவருக்கே சந்தேகம் வந்து நிமிர்ந்து பார்க்க மூவரும் அவருக்குப் பின்னால் பார்த்திருந்தனர்.
அதான பாத்தேன் நம்ப பேச்சலாம் என்னைக்கு இந்த ரொட்டி பையன் காது கொடுத்து கேட்டிருக்கான் என்று அவரும் திரும்பி பார்க்க …அங்கு பரியாவும், ப்ரியாவும் பவனஜை பார்த்து அதிர்ச்சி சிறிதுமின்றி நின்றிருந்தனர் .
பவனஜோ , அட நம்ப ஆளு என சந்தோஷமாய் பரியாவை பார்த்தவன் அவள் இவனை பார்த்ததில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் நின்றிருந்ததில் , இந்த கூர்மூக்கி சரியான திமிர் பிடிச்சவங்க அதனால அவங்க ஷாக் ஆனா கூட ஆகாத மாதிரியே சீன போட்டாலும் போடுவாங்க . ஆனால் பக்கத்துல இருக்க பாப்பா அப்படி பண்ணாதே ?? என யோசித்தவன் , ஒருவேளை இவங்களுக்கு முன்னாடியே நம்பள தெரியுமா என்ன ? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
கோதண்டநாகா , வாங்க பாப்பா என இருவரையும் அருகில் அழைத்தவர் , ஆத்தா இந்த புள்ளைங்க தான் நம்ப தங்கச்சி மவங்க என்றவர் தொடர்ந்து பரியா மற்றும் ப்ரியாவிடம்,
அம்மாடி இவங்க தான்மா என்ற ஆத்தா உங்க பெரிய அம்மாயி. இவன் என்ற மவன் பவுனஜ் , அப்றம் இது அவன் சோக்காலி இவனும் என்ற புள்ளை மாதிரிதா மா .
ம்ம்க்கும் ….அதனால்தான் நானும் கொஞ்சம் சொத்தை எழுதி வைங்கன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்குறீரே…. என்ன சௌந்தர்யா நீயும் ஒன்ற புள்ளைக்கு கொஞ்சம் சொல்லலாம்ல என ஊடாலே அப்பத்தாவையும் வம்பிழுத்து வைத்தான் பன்ரொட்டி .
அட செத்த சும்மா இருங்கப்பு ….ஆத்தா பெரிய பாப்பாக்கு போலீசில் சேர ஆசையாம் . பரீட்சை எழுதுறதற்கு நம்ப தம்பிய கொஞ்சம் சொல்லி தர முடியுமான்னு பவிக்கண்ணு கேட்டுச்சி, அதுக்கென்ன அவன் சொல்லித்தந்துடுவானு சொல்லிபுட்டன் சரிதான ஆத்தா, ஐய்யாறு எதுனா சொல்லிபுடுவாரோ.
ஏம்ல உன்ர ஐய்யாரை பத்தி உமக்கு தெரியாதால. அவர் என்னைக்கு நீ செய்யுறத மறுத்திருக்கிரு.
ஆமாஆமா பின்ன எதுக்கு அப்பனும் மவனும் இத்தனை வருஷம் பிரிஞ்சிக்கங்களாம் என பவனஜ் பன்ரொட்டியின் காதில் ஓத அவனோ பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்.
ஏம்ல பன்னு ஏய் …என்னல இப்டி நிக்கிறவ என அவனை உலுக்கினான்.
திருதிருவென விழித்த பன்ரொட்டி , ஏலே மாப்பு உங்க அப்பாரு சொன்னத கேட்டீரா. அந்த புள்ள போலீசாக போகுதாம்ல .
அதுக்கு என்ன மாப்பிள்ளை ! போலீஸ் தானனன என அசட்டையாய் ஆரம்பித்தவன் அதிர்ச்சியில் போலிஸாஆஆ என அலர , அவனுடன் பன்ரொட்டியும் சேர்ந்து அலறினான் ” போலீஸாஸாஸா “.
ப்ரியாவோ எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க அவளை உசுப்பிய பரியா , ஏய் என்னத்தடி இப்படி மண்டைல போட்டு உலுப்பிட்டுருக்க எனக் கேட்டாள் .
சுற்றும் முற்றும் பார்த்தவ ப்ரியா , அதுவா கா என ஹஸ்க்கி வாய்ஸில் கேட்க ,
எதுக்கு இப்போ ஹஸ்க்கி வாய்ஸில பேசி பில்டப் குடுக்கிற .நீ சத்தமாவே சொல்லு.
ம்க்கும் ஒன்னுபண்ண விடமாட்டீயே என சிணுங்கிய ப்ரியா , அது ஒண்ணுமில்லைக்கா நம்ப அம்மா அடிக்கடி அண்ணன் வீட்டுலதான் பொண்ணு கொடுக்கணும்னு சொல்லுவாங்கல. அப்ப பெரியபையன் பவன்புத்ரா உனக்கு, சின்னபையன் பவனஜ் எனக்கு தான. நீ உன் ஆளுக்கு செல்ல பெயர் வச்சிட்ட …நான் என் ஆளுக்கு வைக்கவேணாமா அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன் .
ஏனோ இப்பேச்சை பரியாவால் ரசிக்கமுடியாமல் போக , ஏன்டி உனக்கே இது ஓவரா தெரியல என்றவள் ….ஆமா எப்படி பத்ரா பெரியர் இவர் சின்னவர்னு சொல்ற .
லூசாகா நீ ! பவன்புத்ரா போலீஸ்னு தான சொன்ன… இவர பாரு பார்வையிலயே குறும்ப வச்சுக்கிட்டு ப்ரெண்டு கூட சேர்ந்து வம்புபண்ணிக்கிட்டு் சின்னப்புள்ளத்தனமா திரியுறாரு அதுலயே தெரிலயா இவர்தான் சின்னவருனு .
தெரியும் டி தெரியும் …குறும்பா பார்க்குறானா எனக்கு என்னமோ வில்லங்கமா பாக்குறமாதிரி தான தெரியுது .
அக்க்க்கா…! இன்னும் ஒரு வார்த்தை அவரைப்பற்றி எதுனா சொன்ன அவ்ளோதான் பாத்துக்கோ . பவனஜ் பெரியவர் , பத்ரா சின்னவராவே இருந்துட்டு போகட்டுமே. நீ உன்னோட பத்ராவ தான லவ் பண்ற அப்ப அமைதியா இரு . நான் என் ஆளுக்கு செல்ல பேர் யோசிக்கிகனும்.
ஏனோ இது எதுவும் அவளுக்கு சரியாய் தோன்றாதத்தில் , அதுவும் தன் தங்கை அவன்மேல் ஆசையாய் பேச அவனின் பார்வையோ தன்மேல் படிந்திருந்ததில் , இவனுகுலாம் செல்ல பேரு ஒரு கேடு என நினைத்தவள் , ஏன் ப்ரி பஜ்ஜி னு வேனா வச்சுக்கோயேன் என்றிருந்தாள் .
ப்ரியா , அக்க்க்க்கா என கோபமாய் பற்களை கடிக்க ,
சரியாய் அப்பொழுது பவனஜும் , பன்ரொட்டியும் போலீசா என அலறியிருக்க ,கோதண்ட நாகா பவுனு என அழைத்திருந்தார்.
அவரின் அழைப்பில் குபீரென வந்த சிரிப்பை ப்ரியாவை பார்த்து அடக்கிய பரியா , மாமா என்ன மாமா திடீர்னு பவனு னு சொல்றீங்க .ஏதாவது நகை வாங்கணுமா மாமா மறந்திட்டீங்களா . எத்தனை பவுனு மாமா என சீரியஸாய் கேட்டவளின் கண்களோ சிரிப்பில் குளித்திருந்தது.
அதை கண்டு கொண்ட பவனஜும் ,ப்ரியாவும் அவளை முறைத்தனர் .
மாப்பு என்னாலே இந்த புள்ள உன்னையவே கேலி பன்றாப்ல . ஆனா மாப்பு முகத்தை பார்த்தா தெரியாம பேசுராப்ல தான் தெறி்து என பன்ரொட்டி பவனஜின் காதிற்க்கு மட்டும் கேட்பதுபோல் சொன்னான்.
மருமகளின் கேள்வியில் விழித்த கோதண்டநாதா … அவள் தன்மகனை அழைத்ததை தப்பாய் புரிஞ்து பேசுவதாய் நினைத்து , போச்சி கண்ணனுக்கு இப்டி கூப்ட்டாலே பிடிக்காதே .எல்லாம் என்னை சொல்லணும் சீமைல இல்லாத பேரா தேடித்தேடி கடைசில என்ற வாயில நுழையாத பேரால வச்சுப்புட்டன் .இப்போ இந்த புள்ள வேற இப்டி கேட்டுபுட்டுச்சி மவன் கோபப்படுவானே என நினைத்தார்.
பேச்சைமாற்றும் பொருட்டு , ஏன் ஆத்தா அந்த தூக்க உள்ள எடுத்துட்டு போறது என்றவர் …ஏட்டி ஜானகி ஆத்தா கருவாட்டுக்குழம்பு எடுத்தாந்திருக்கு பாரு .எடுத்துட்டு போய் புள்ளைங்களுக்கு குடு என்றார் .
கருவாட்டுக்குழம்பில் பவனஜை மறந்த ப்ரியா , ஐஐ கருவாட்டுக்குழம்பா எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க உங்க கருவாட்டுக்குழம்புக்குனே தனி ரசிகர் பட்டாளம் இருக்காமே அம்மாயி என சௌந்தரம்மாளிடம் சிரித்தவாறு சொன்னாள்.
அடஅட அய்த்த சரியாத்தம்மனி சொல்லிருக்காங்க .எங்க சௌந்தர்யா வெக்குற கருவாட்டுக்குழம்பு வாசனைக்கே நாக்குல எச்சி ஊரும் என சப்புகொட்டினான் பன்ரொட்டி.
பரியாவோ இன்னும் பவனஜை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க , அவனோ கண்கள் மின்ன அவளை பார்த்திருந்தான் .
கணவரின் அழைப்பில் அங்கு வந்த ஜானகி , குடுங்க அய்த்த என தூக்கை வாங்கியவர் வாங்க கண்ணுங்களா சாப்பிடலாம் என அழைத்தார் .
பவனஜும் அங்கிருப்பதை பார்த்து , அட ராசா நீ எப்போ வந்த …வா வந்து நீயும் சாப்பிடு சீக்கிரம் போகணும்னு சொன்னியே என்றார்.
பன்ரொட்டி , அம்மா தாயே இந்த அடியேனுக்கும் கொஞ்சம் கருவாட்டுக்குழம்பை ஊத்து தாயி என அவர் முன் குனிந்தவாறு சொன்னான்.
ஏத்தா…நேத்து வச்ச பழையசோறு இருந்தா எடுத்தாந்து போடுத்தா. எப்படி பிச்சை கேட்குறாப்ல கேட்குறான் பாரு உள்ளாரா போய் சட்டியோட வாயில போடறதைவிட்டுப்போட்டு சரியான கூறுகெட்டவன் என்ற அப்பத்தா என்ன தான் பன்ரொட்டியிடம் வம்பிழுத்தாலும் மற்றவர் அவனை ஒரு சொல் சொல்ல விடமாட்டார் அவருக்கு அவன் மீது பாசம் அதிகம் தான் அதுதெரிந்துதான் அவனும் அவரிடம் உரிமையாய் வம்பிழுப்பான் .
பன்ரொட்டியின் பேச்சில் அவன் புறம் திரும்பிய ஜானகி , ஏம்ல நீயும் இங்கனதான் இருக்கியால …வால உனக்கு இல்லாததா என்றார்.
அனைவரும் உள்ளே செல்ல பவனஜ் மற்றும் பரியாவின் பார்வைகள் மட்டும் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றாய் கலந்தது போல் சில நொடிகள் தேங்கி பின் பிரிந்தன .
**************************************************
கண்ணுகளா பார்த்த்ங்களா எம்புட்டு அட்டகாசமா இருக்குனு எல்லாம் என்ற மாமனாரோட அப்பாரு காலத்தி் கட்டுனது என சொல்லியவாறு பரியாமற்றும் பிரியாவை கூட்டிவந்தார் சௌந்தரம்மாள்.
ஏட்டி ! யாருகிட்ட இம்புட்டு பெருமையா அளந்துட்டு இருக்காப்ல எனக் கேட்டுக் கொண்டே வந்தார் கப்பீஸ்வர் .
எல்லாம் நம்ம பவித்ரா கண்ணோட புள்ளைங்ககிட்ட தானுங்க என்றவர் அவர்களிடம் ,கண்ணுங்களா இவ்ரதாம்ல என ஆரம்பிக்க …
அம்மாயி அம்மாயி என அவரை தடுத்த பரியாவும் ப்ரியாவும் , நாங்க சொல்ற நாங்க சொல்றோம் என்றார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டவர்களில் முதலில் பரியா , இவர் தான் நம்ப ஊர் கரங்களோட “தாத்தய்யா ” எனவும் ,
ப்ரியாவோ , இவர் தான் இந்த ஊரோட ஆணழகன் அதாவது இவரை மிஞ்ச ஒருத்தரும் இல்லங்குறேன் எனவும் சொல்லி கைகளில் அடித்து கொடுத்துக்கொண்டனர்( ஹிபை ) .
ஹா ஹா ஹா என்று சிரித்த கப்பீஸ்வர் , ஏட்டி பார்த்தியா என்ற பவர … புதுசா வந்த புள்ளைங்க கூட எம்புட்டு சரியா சொல்லுதுங்க பார்த்தியா என்றார்.
ஏன் கண்ணுங்களா… சும்மாவே இந்த மனுஷர சமாளிக்க முடியாது இதுல இது வேறயா என சலிக்க , மற்ற இருவரும் கலகல என சிரித்தனர் .
சிரித்துக் கொண்டிருந்த பரியாவின் கண்களில் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த பவன்புத்ராவின் படம் பட்டது .
காவல் அதிகாரிக்குறிய உடையில் அதற்கு உரிய கம்பீரத்துடன் இருந்தவனை கண்டவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ….நெஞ்சம் முழுக்க இருக்கும் காதலின் விளைவால் கன்னங்கள் செம்மையுற்றது .
என்னமா அப்படி பாக்குற அதுதான்மா என்ற மவன் பவன்புத்ரா என சொல்லியபடி அங்கு வந்தார் வஜ்ரநாகா .
மீசையை முறுக்கிவிட்ட கப்பீஸ்வர் , ஏம்ல மத்ததலாம் யார் சொல்வாப்ல …ஏத்தா என்ற பேரன் போலீஸ் ஆபிசர்த்தா சுத்துப்பட்டில இருக்க மொத்த பயலும் என்ற பேரனோட ஒத்த பார்வைக்கே கட்டுப்படுவானுங்க.
அது என்னவோ சரிதான் அதுதான் எங்க அக்கா பாக்காமலே அவர்கிட்ட கவுந்துட்டாளே என மனதினுள் முனங்கினாள் ப்ரியா.
என்னத்தா அமைதியா இருக்கவ நிசமாதான்தா …ஏலே சொல்லுதே நம்ப புள்ளைய பத்தி என மகனை ஏவினார் கப்பீஷ்வர் .
வஜ்ரநாகவோ யாரும் கேட்கமாலே தன் மகன் புகழ் பாடுபவர் இப்பொழுது சொல்லவா வேணும் , கண்ணுங்களா ! இந்த உத்தியோகத்துக்குலாம் பரிட்சை வைப்பாங்க தெரியும்ல. நிறைய புள்ளைங்க ரெண்டு மூணு தடவ எழுதியும் பாஸாகாம இருக்க என்ற மவன் ஒரே தடவைல போலீசாகிட்டான்த்தா என தொடர்ந்து பவன்புத்ராவின் புகழை பாட தொடங்கினார் .
தன்னவனின் பெருமைகளை காதலாய் கேட்டுக்கொண்டிருந்த பரியாவும் , ஆமா சின்னமாமா நான் கூட போலீஸ் க்கு தான் படிக்குறேன் அதுக்குதான் அவருகிட்ட பரீட்சையை பத்தி தெரிஞ்சிக்கலாமேனு முன்னடியே வந்தோம்.
ப்ரியாவோ , அடிப்பாவி அக்கா இதுக்குதான் சும்மா இருந்த அந்த பரத் கூட சண்டைய போட்டு கிளம்பி வந்தியோ . உன் திருவிளையாடல் தெரியாம நான் வேற அவனை கழுவி கழுவி ஊத்துனனே என தன் அக்காவை முறைத்தவாறு மனதினுள் புலம்பினாள்.
அதை கண்டுகொண்டாள் அது பரியா இல்லையே , அவள் மிக ஆர்வமாய் தன்னவனின் புகழ் கேட்டுக்கொண்டிருந்தாள் .
****************************************************
ஏம்ல மாப்பு என்னலே சுவத்த முறச்சிப்பார்த்து உட்கார்ந்திருக்கீறீரு என பவனஜை கேட்டவாறு அந்த அறையினுள் நுழைந்தான் பன்ரொட்டி .
மாப்ள ! ஏம்ல அந்த கூர்மூக்கி எப்பவும் என்னை முறைச்சே பாக்குறாங்க . மொத பார்த்தப்பவும் பேர் மட்டும்தானால கேட்டேன் அப்றம் என்னல என்ற மேல அவங்களுக்கு கோபம்.
விடு மாப்பு ! அந்த புள்ள முறைச்சா முறச்சிட்டு போவுது . நீ ஏன் மாப்பு அதலாம் யோசிக்கிற .
ம்ம்ம் அதுவும் சரிதான் பன்னு என அமைதியாகியவன் சிறிது நேரம் கழித்து , ஏம் மாப்ள முறைக்குற அந்த கண்ணு என் மேல ஆசையோட காதலா பார்த்தா எம்புட்டு நல்லா இருக்கும்.
ஐய்யயோ மாப்பு ! வாயில அடி ..வாயில அடி என அவன் வாயில் அடிக்க வர..
ஏலே பன்னு ! என்னல பண்ணுற.
பின்ன என்ன மாப்பு ! காதல் அது இதுனு சொல்ற . உன்ர அப்பாரு சொன்னத கேட்டடீரு தான . அந்த புள்ள போலீஸ் ஆகப்போகுதாம்ல .நம்மளுக்கு போலீஸ் உத்தியோகம்லாம் தோதுப்படாதுனு நீ தானம்ல சொல்லுவ.
ஓஓஓ …..அப்படி ஒன்னு இருக்குதோ என யோசித்த பவனஜ் , ஏம்ல அவங்களுக்கு போலீஸ்னா ரொம்ப பிரியமா இருக்குமோ .
இல்லாமையா அந்த உத்தியோகத்துக்கு ஆசைப்படும் .
ம்க்கும்ம்க்கும் ஆசை தான கலச்சிப்புடலாம் …” எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா “என சொல்லிகொண்டு பன்ரொட்டி விழிப்பி்துங்க பார்ப்பதை கண்டுகொள்ளாமலே வெளியே சென்றான் பவனஜ்.
– பண்ணிடுவோம்
————————————————————————————————————————————–
பார்த்த ஒரே நொடியில்..
பழகும் ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் …
இதயத்தில் நுழைந்து …
ஒவ்வொருஅணுவிலும் கலந்து …
ஒருவரை உயிருடன் கொல்லவல்லது …!!!
காதல் என்னும்
உயரழுத்த மின்சாரம் …!!!
அத்தியாயம் 6:
கப்பீஷ்வரின் வீட்டிற்கு பரியா மற்றும் ப்ரியாவை சௌந்தரம்மாள் அழைத்துச் செல்ல, அங்கு இருந்த வஜ்ரநாகா பவன்புத்ராவை தன் மகன் என அறிமுகப்படுத்தி அவனின் புகழ் பாடினார் .
அதன் பின் இருவரையும் அழைத்துச் சென்றவர் ஊர் முழுவதும் சுற்றிக் காட்ட , தங்களுக்கு பழக்கம்இல்லாத அந்த கிராம சூழ்நிலையையும்… அங்கிருந்த கள்ளமில்லா பாசத்துடன் பழகும் மக்களையும் பார்த்துப் பார்த்து இருவரும் பூரித்தனர் .
பரியாவோ ,அவர்களை தன்னவனின் ஊர்மக்கள் என்ற சொந்தத்துடன் பார்க்க… ப்ரியாவோ பத்திரிக்கைக்கார மூளையாக , அங்கு இருப்பவர்களையும் , நடப்பவற்றையும் தன்னுடன் இருந்த சிறு குறிப்பு புத்தகத்திலும் தனது கைபேசியிலும் செய்தியாய் சேகரித்தாள்.
அதை பார்த்த வஜ்ரநாகா , ஏன் பெரிய பாப்பா ! சின்னப் பாப்பாக்கு பரிச்சை எதுனா இருக்குதா புள்ள வெளியே வந்தும் கூட படிக்குது என வெகுளியாய் கேட்டார்.
அவரின் வெகுளித்தனத்தில் , மாமா என பரியா எதையோ சொல்ல ஆரம்பிக்க …அவளின் கையை பிடித்து தடுத்த ப்ரியா , அக்கா இது என் மாமனார்ட்ட தான் எனக்கு பேச சான்ஸ் கொடுக்கல அட்லீஸ்ட் உன் மாமனார்ட்டயாவது பேசி என் ஆள பத்தி தெரிஞ்சிக்குறனே என கிசுகிசுக்க யோசனையோடு சரி என தலை அசைத்தாள்.
மாமா நான் உங்க பெரிய பாப்பா மாதிரி இல்லனாலும் நானும் கொஞ்சம் தைரியசாலிதான் சென்னைல பத்திரிக்கைல வேலை பாக்குறேன் . (உள்ளுக்குள்ள மனமோ பவன்புத்ரா மாதிரி போலீசுக்கு தான் அக்கா மாதிரி தைரியமானவ தேவை நம்ம ஆளுக்கு நாமே போதும் என முணுமுணுத்தது ).
பத்திரிக்கைல இந்த ஊர்ல நடத்துறதெல்லாம் போடலாம்னு தான் இதெல்லாம் படம் பிடிக்கிறேன் மாமா. அப்புறம் மாமா உங்க அண்ணன் வீட்ல எல்லாருக்கும் கருவாட்டு குழம்பு தான் ரொம்ப பிடிக்குமோ எனக்கும் கருவாட்டு குழம்புனா ரொம்ப பிடிக்கும் மாமா நல்லா சமைக்கவும் சமைப்பேன் என வார்த்தைக்கு வார்த்தை மாமா என அழைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் .
பரியாவோ காலையில் நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள்.
காலையில் சாப்பிட அழைத்த ஜானகி அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார் .
அட அட அட சோறுனா இது சோறு கோழிகறிக்குழம்பு கமகமக்க என பன்ரொட்டி ஆரம்பிக்க ,
கருவாட்டுக்குழம்பு மணமனக்க என ப்ரியா தொடர ,
நண்டுவறுவல் நொறுநொறுங்க …
இறா வறுவல் மொறுமொறுக்க …என இருவரும் மாறி மாறி பாடி காலை வேலையை கலகலக்க செய்தனர் .
பரியாவிற்க்கோ எப்பொழுதும் நண்டுவறுவல் என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அதை பிரித்து சாப்பிடமுடியாமல் தடுமாற அப்பொழுதெல்லாம் பிரபு மகளிற்காய் , அதை உடைத்து அழகாய் சதை பகுதியை தனியாய் எடுத்து தருவார் .
தற்பொழுதும் ஆவலாய் நண்டுகளை தட்டில் வைத்தவள் பிறகே தந்தை இல்லாததை உணர்ந்து நாக்கை கடித்தாள்.
அச்சோ அப்பா தான் இங்க இல்லையே என்ன பண்றது எடுத்தத திரும்ப வைக்கவும் கூடாது. சே இந்த ப்ரி எருமையாச்சி பாக்குதா பாரு சோற கண்ணுல காட்டுனா போதும் வேறு எதுவும் தெரியாது என தங்கையை அர்ச்சித்தவள் தானே அதை பிய்த்து சாப்பிட முயற்சித்தாள்.
பரியா அமர்ந்திருக்க அவளின் அருகில் பவனஜ் அமர்ந்திருந்தான் . அவனின் அருகில் அமருவதற்க்காய் சென்ற ப்ரியா அங்கு கோதண்டநாக அமர்ந்ததை கண்டு வேறுவழியில்லாமல் எதிர்புறம் சென்றமர்ந்திருந்தாள்.
இத்தனை நேரம் சாப்பிடுவதாய் பாவனை செய்துகொண்டிருந்த பவனஜின் கண்களோ தன் அருகில் அமர்ந்திருந்தவளின் மேலையே இருந்தது .
அவள் நண்டுகளை தன் தட்டில் அடுக்குவதை கண்டவன் , வுட்டா கடல்ல கிடைக்குற எல்லா நண்டையும் கேப்பா போலயே. டேய் பவன் நல்லா யோசிச்சுக்கோடா அப்றம் இவ நண்டு ஆசைக்காகவே நீ வேலைக்கு போவோனோம் போலையே என மனதில் தன்னவளை பற்றி கிண்டலாய் யோசித்தான் .
அட என்ன இவங்க அம்புட்டு நண்டையும் தட்டுல அடுக்கிட்டு திண்ணாம முழிச்சிட்டு இருக்காங்க என எண்ணியவன் அவள் அதை சாப்பிடமுடியாமல் தவிப்பதை கண்டுகொண்டு , ஹாஹா கூர்மூக்கி என் செல்லம் டி நீ …பாப்பாக்கு சாப்பிட தெரியாதா அதுக்கு ஏன் முழிக்கிறீங்க அத்தான் கிட்ட சொன்னா பிச்சி தாரேன் என மனதினுள் செல்லமாய் பரியாவை கொஞ்சினான் பவனஜ்.
திடீரென தன் தட்டினுள் ஒரு கை வர பரியா திகைத்து பார்க்க அவள் தட்டிலிருந்த நண்டுகளை எடுத்தவன் எவரும் அறியாமல் அதை அழகாய் அவள் உண்பதற்கு ஏதுவாய் பிய்த்து கொடுத்தான் .
ஏனோ அதை மறுக்க தோன்றாமல் போக பரியாவும் அதை அமைதியாய் உண்டிருந்தாள்.( பின்ன சாப்பிட கொடுக்கிறத எப்படி வேணா சொல்றது நம்மளுக்கு நண்டு முக்கியம் அமைச்சரே ).
காலையில் நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டிருந்த பரியா ,நம்ப ஏன் அமைதியா இருந்தோம் வேணாம்னு சொல்லிற்கனும் இல்ல தாங்ஸ் ஆச்சி சொல்லிற்கனும் .
சே அவன் நம்பள பத்தி என்ன நினைச்சிருப்பான் அவ்ளோ நேரம் முறச்சிட்டு இருந்தவ சாப்பிட கொடுக்கும்போது மட்டும் அமைதியா வாங்கி்ட்டானு நம்பள கேவலமா நினைச்சிருப்பான் என யோசித்தவாறு தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டிருந்த (அறுத்துக்கொண்டிருந்த ) ப்ரியாவிடம் இருந்து தப்பிக்கமுடியாமல் வஜ்ரநாகா விழிபிதுங்கினார்.
அங்கு வந்த ஒருவர் ஏதோ வேலையாய் கூப்பிட வஜ்ரநாகாவோ தெய்வம்யா நீரு என்பது போல் பார்த்தவர் , இவளிடம் சிறிது நேரத்தில் வந்துட்றேன் மா இங்கனவே இருங்க என சொல்லி சென்றார்.
ச்சேய் எப்படியாவது இவருக்கிட்ட பவனஜை பத்தி தெரிஞ்சிக்கிட்டு அம்மாகிட்ட பேசலாம்னு பார்த்தா இப்படி எஸ் ஆகிட்டாரே என வாய்விட்டு புலம்பியவள் தன் தமக்கையை நோக்கி சென்றாள்.
அக்கா என அழைக்க அதை அவள் கண்டுகொள்ளாததில் …அவளை உலுக்கியவள் இங்க நான் என் ஆளுகூட எப்படி சேருறதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் இவ என்னனா அவ ஆள் கூட டூயட் பாடிட்டு இருக்கா என புலம்பினாள் ..
தங்கையின் பேச்சில் நிஜத்திற்கு வந்த பரியாவோ தான் இத்தனை நேரம் பவனஜை பற்றி நினைத்துக்கொண்டிருந்ததை எண்ணி தன்னையே மனதினுள் குட்டிக்கொண்டாள் .
அக்கா ….அக்கா கனவுல இருந்து முழிச்சியா இல்லையா கா .
ஏய் என்னடி எப்பப்பாரு கத்திட்டு இருக்க.
என்னது கத்திட்டு இருக்கேனா இங்க ஒருத்தி பீலிங்ஸ்ல இருக்கேன் நீ கனவு கண்டது மட்டுமில்லாம கத்திட்டு இருக்க்கேன்னா சொல்லுறா .
அம்மா சாமி , தெரியாம சொல்லிட்டேன் போதுமா . இப்போ உனக்கு என்ன வேணும்.
எனக்கு என்ன வேணும் அதான் உன்ற மாமனாரு இப்டி என் பேச்சைக்கேக்க முடியாம தெறிச்சு ஓடுறாப்லையே .
ஹாஹா அப்டி என்னடி பேசுன .
என்ன பேசுனவா அவர்தாம் கா உன் ஆள பத்தி பேசி என் காத அறுக்க பாத்தாரு. நான்விடுவேனா பதிலுக்கு நான் பேசுன பேச்சிலே இனிமே அவர் என்பக்கம் வருவாருன்ற.
ஹாஹா ஏண்டி இப்டி , என்ன சொன்னாரு பத்ராவ பத்தி என பரியா ஆர்வமாய் கேட்க,
பார்ஹா ! உங்க ஆள பத்தி கேட்க எம்புட்டு ஆர்வம் பட் ஐயம் சோ சாரி …நான் அவர் சொன்னதை கேட்டகவே இல்ல என அசால்ட்டாய் சொல்ல , அவளை மொத்த ஆரம்பித்தாள் பரியா.
சிறிதுநேரம் விளையாடி ஓய்ந்தவர்கள் அமைதியாக …சரிகா நீ சொல்லு எப்படி உனக்கு அந்த பவன்புத்ரா மேல லவ் வந்துச்சி . எனக்கு தெரிஞ்சவரைக்கும் நீ அவரை பார்த்திருக்க கூட மாட்டியே சோ உன்காதல் கதை சொல்லு என கேட்டாள் ப்ரியா.
அடிங்கு என் காதல் உனக்கு கதையா ..
பின்ன உன் காதல் உனக்குவேனா காவியமா இருக்கும் எனக்கு கத தான்பா . சரி நீ பேச்ச மாத்தாம சொல்லு பாப்போம்…
செல்லமாய் தன் தங்கையை முறைத்த பரியா தன் காதலை பற்றி சொல்ல ஆரம்பித்தாள் .
நீ சொன்னது சரிதான் ப்ரி குட்டி , நான் என் பத்ராவ இதுவரைக்கும் நேர்ல பார்த்ததில்லை .அப்றம் என்ன கேட்ட காதல் கதையா நான் சொல்ல போறதுல காதல் எங்க இருந்து வந்திச்சின்னு எனக்கே தெரியாது .
உனக்கு நியாபகம் இருக்குமான்னு தெரியல ரொம்ப வருஷம் முன்னாடி நடந்தது . எனக்கே அப்போ 8 வயசு தான் அப்போ தான் முதல் முதலா பத்ரான்ற ஒருத்தன் என் வாழ்க்கைல இருக்கான்றதா அந்த விதி எனக்கு சொல்ல நினைச்ச நாள்னு நினைக்கிறேன் .
சில வருடங்களுக்கு முன் :
ம்ம்ம்ஊஊ….ம்ம்ம்ம்ஊஊ…. என 8 வயது பரியா அழுதுகொண்டிருக்க அவளின் முன் அமர்ந்திருந்த பிரபு அவளை சமாதான படுத்திக்கொண்டிருந்தார் .
அடடா எதுக்கு என் செல்லம் அழுகுறாங்க… என்னாச்சி என் பட்டுக்குட்டிக்கு …என்னடா தங்கம் என்ன என்ன என அவளை தூக்கி கொஞ்ச அவளோ அழுகையை நிறுத்தியபாடில்லை .
ஏய் இப்போ அடிதான் வாங்கப்போறா அதுதான் வாங்கமுடில நாளைக்கு வாங்குதரோம்னு சொல்றேன்ல இன்னும் என்ன அழுக என பவித்ரா அதட்ட அவளின் அழுகையோ மேலும் கூடியது .
அப்பொழுதெல்லாம் பவித்ராவை பார்பதற்க்காய் மூன்று மாதங்களுக்கொருமுறை வருவது கோதண்டநாக , வஜ்ரநாகா இருவருக்கும் பழக்கம் .
நேற்று கோதண்டநாக வரமுடியாததில் வஜ்ரநாகா பவன்புத்ராவை மட்டும் அழைத்துவந்திருக்க , அனைவரும் குழந்தைகளுக்கு உடை மற்றும் நகை வாங்க சென்றிருந்தனர் .
பரியாவிற்க்கு அங்கிருந்த முத்துக்கள் மிகுந்திருந்த கொலுசை கண்டு ஆசை மிக அதை வாங்கித்தருமாறு கேட்டிருந்தாள்.
ஏற்கனவே இவர்கள் வாங்கிய அனைத்திற்கும் வஜ்ரநாகாவே பணம் செலுத்தியிருக்க இதை நாம் மறுநாள் வாங்கலாம் என அண்ணனுக்கு தெரியாமல் மகளை சமாதானப்படுத்தி கூட்டிவந்திருந்தனர் .
ஆனால் காலையில் பக்கத்துவீட்டு குழந்தை அதே போல் அணிந்திருப்பதை கண்டு தனக்கும் வேண்டும் என அழஆரம்பித்தவளை தான் சமாதானப்படுத்த வழியில்லாமல் பிரபு திணற , பவித்ரா அதட்டிக்கொண்டிருந்தார் .
குட்டி தங்கம் எதுக்கு அழுகுறாங்க என கேட்டுகொண்டே வீட்டினுள் நுழைந்தனர் வஜ்ரநாகாவும் , அவர் கைகளை பிடித்தவாறு பவன்புத்ராவும் .
அவ கெடைக்குறா அண்ணா எப்பவும் சொல்றபேச்கேக்குறதில்ல. நல்லவேளை இன்னொருத்தி இன்னும் எழுந்துக்கல இல்ல இவளுக்கு மேல ஆர்ப்பாட்டம் பண்ணிர்ப்பா என பரியாவை முறைத்துகொண்டே சொன்ன பவித்ரா தொடர்ந்து ,
ஆமாணா …நீங்க புள்ளைய கூட்டிட்டு காலையிலயே எங்க போனீங்க என விசாரித்தாள்.
அதான கொஞ்ச நேரம் கூட உன் தொல்லையில் இருந்து யாரும் தப்பிச்சிட கூடாதே – பிரபு மைண்ட்வாய்ஸ் என நினைத்து சத்தமாய் பேசி வைக்க பவித்ராவோ , கணவனை எண்ணெய்ச்சட்டியில் போட்டு வறுப்பதற்கு தயாரானாள் .
அவங்க அண்ணன் இருக்க வரைக்கும் நம்பள ஒன்னும் செய்யமாட்டா . அதுக்குள்ள சமாதானப்படுத்த ஐடியா யோசிச்சிட்டா போச்சி என தன்னைத்தானே சமாதானப்படுத்திய பிரபு அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டார் .
அட நீ பேசாத கண்ணு என்ற வஜ்ரநாகா , நேத்து புள்ள கொலுசு வேணும்னு கேட்ருக்கு நீ என்ட சொல்லாம மறைச்சிபுட்ட . நம்ப பவன் கண்ணா தான் ராத்திரி சொன்னாப்ல .
பாப்பா அதுவேனும்னு அழுதுது பா னு சொல்லி இவன் ஒரே அழுகை.ராத்திரி கடைய மூடியிருப்பானுங்கனு சொல்லி புள்ளைய தூங்கவச்சேன் .
பயபுள்ள காலையில சீக்கிரம் எழுந்ததில்லாம என்னையையும் எழுப்பி விட்டுபோட்டுச்சி .அதான் வெள்ளனவே கிளம்பி கடத்துறந்த உடனே வாங்கிவந்தோம் என நீளமாய் பேசிமுடித்தார் .
கொலுசை பவித்ராவிடம் கொடுத்தவர் , புள்ளைக்கு போட்டு விடுத்தா என்றார்.
கண்களில் கண்ணீர் வழிந்து காய்ந்திருக்க , கொலுசை கண்டதில் வாய் கொள்ளா சிரிப்புடன் அமர்ந்திருந்த பரியா, நேற்று தங்களுடன் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த பவன்புத்ராவை இன்று சிரிப்புடன் பார்த்தாள்.
அவர்கள் பேசியதை சரியாய் புரிந்துகொள்ளும் வயதில்லை என்றாலும் தனக்கு இந்த கொலுசு கிடைக்க அவன் தான் காரணம் என புரிந்ததால் வந்தது அந்த சிரிப்பு .
அதற்க்கு பின் அவளின் ஒவ்வொரு முக்கியமான ஆசையையையும் நிறைவேற ஏதோ ஒருவகையில் அவனே காரணமாய் இருந்தான்.
இவள் தற்பொழுது போலீஸ் உத்தியோகத்திற்கு பரீட்சை எழுத பவித்ரா சம்மதித்ததும் பவன்புத்ராவிடம் பேசிய பின்புதான் .
அவனோ ஒவ்வொருமுறையும் தன் அத்தைகுடும்பம் என ஒவ்வொன்றும் செய்ய பரியாவோ சிறிது சிறிதாய் அவனிடம் தன் இதயம் பறிகொடுத்திருந்தாள்.
பரியா என்றில்லாமல் ப்ரியாவிற்காய் ஏதேனும் கேட்டிருந்தாலும் அவன் செய்திருக்கலாம் எவர் கண்டது ??
இதுவரை அப்படி எதுவும் பரியா அறியாததில் தானாய் ஒரு சொந்தம் அவன் மேல் உருவாகி , அது தற்பொழுது காதலாய் பிறபெடுத்திறுக்கிறது .
அது வளர்வதோ பவன்புத்ராவின் முடிவிலே உள்ளது.
தன் சிறுவயது நினைவில் அமர்ந்திருந்தவளை களைத்த ப்ரியா , யக்காவ் போயும் போயும் ஒரே ஒரு கொலுசுலையாகா கவுந்த என கேலியாய் கேட்க…
பரியா தன் நினைவிலிருந்து களைந்து தங்கையை அடிப்பதற்கு துரத்தினாள்.
– பண்ணிடுவோம் ….
————————————————————————————————————————————-
கடல் மணலில் ஆழ புதைந்த உன் கால்தடத்தை சொந்தம்கொண்டாடி கொண்டுசெல்ல அந்த அலைகள் காத்திருக்கிறது ….
அலை போலே நானும் உன்னை உரிமையாய் கொஞ்சி பேசி …! உன்னையும் உன்னிதயத்தையும் களவாட காத்திருக்கிறேன் …!
அத்தியாயம் 7 :
பவனஜ் பரியாவை காதலிப்பது போல் பேச அதிர்ந்த பன்ரொட்டி ,
மாப்பு ஏலே மாப்பு என் வயித்துல புளிய கரைக்க வைச்சிபோட்டு நீ எங்கல போற . உண்மைய சொல்லுல நீ சும்மா காச்சும் தான அப்படி சொன்ன என அவனை தொடர்ந்தவாறு வந்து கேட்டான்.
வெளியே தங்களைத் தவிர நிறைய பேர் இருப்பதை பிறகே உணர்ந்து அமைதியாகினான்.
அதன்பின் வேலைகள் பல அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்ள அதில் ஒன்றிய இருவருக்கும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது . ஒரு வழியா அனைத்தும் முடிய மாலை ஆக வண்டியை எடுக்க போன பன்ரொட்டியை தடுத்த பவனஜ் ,
மாப்ள வால நடந்து போவோம் .
ஏய் மாப்பு என்னால , என்ன ஆச்சு உனக்கு ? மோகினி பிசாசு எதுனா அடிச்சுபுடிச்சா. இங்கிருந்து எம்புட்டு தொலவு போனும் நடக்கலாம் சொல்ற.
என்னால தூரம் ஒருமணிநேரம் நடந்தா ஊரு வந்துரபோது வால .
அவனின் முகத்தை பற்றி இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பி பார்த்த பன்ரொட்டி , பேய் எதுவும் அடிச்சாப்ல கூட தெரிலயே என்றான்.
பவனஜோ ,சே என்ன மாப்ள நம்ம ஊரு எம்புட்டு அழகா இருக்கு அத ரசிச்சிக்கிட்டே போவோம்னு சொன்னா ஏதோ பேசுற . அங்க பாரேன் அந்த சூரியனை எம்புட்டு அழகா ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கு என
பன்ரொட்டி வானத்தை உத்து பார்க்க சூரியனோ சுட்டெரித்தான் .
பவனஜோ மிக ரசனையாய் , ஏலே மாப்ள அங்கிட்டு பாருல அது நம்பள பார்த்து வெட்கப்பட்டு ஒளியுது .
என்னாது சூரியன் வெக்கப்படுதா ??? அதுவும் நம்பளை பார்த்து ? அவனை ஏற இறங்க பார்த்தவன் ஏல என்னல சொல்லுத என்றான்.
பவனஜோ , போ மாப்ள எனக்கு வெக்கவெக்கமா வருது என நெளிய.
ஐய்யயோ கன்ஃபார்ம் மோகினி பிசாசு தாம்ல அடிச்சுற்க்கு . எப்படி உன்ன அதுகிட்ட இருந்து காப்பாத்த போறன்னு தெரிலயே.
வால சீக்கிரம் வீட்டுக்கு போய் நம்ப சௌந்தர்யாகிட்ட சொல்லி விபுதிய போடுவோம் என வேகமாக வண்டியை எடுக்க செல்ல ,தடுத்து அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் பவனஜ்.
அதன்பின் அவன் ஏதேதோ புலம்புகொண்டிருக்க பவனஜோ உம் கொட்டிவந்தான்.
கடுப்பான பன்ரொட்டியோ அவனை பார்க்க , பவனஜோ ஏதோ இன்று தான் அவ்வூருக்கு முதல்முதலாய் வருவதுபோல அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
எந்த மோகினிப்பிசாசு அடிச்சிதுன்னு தெரிலையே பயபுள்ள பைத்தியம் மாதிரி தெரியுதே . அப்பனே கருப்பசாமி நீதாம்ல என்ற நண்பனை காக்கணும் . என் நண்பன் பழையமாரி ஆனா கப்பு தாத்தா கிட்டசொல்லி உனக்கு படையல் போட சொல்றேன்பா என வேண்டினான்.( நம்ப கப்பீஷ்வரர தாங்க பயபுள்ள அப்டி சொல்லுது .இது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது உனக்கு சங்குதாண்டி ).
அதுவரை அமைதியாய் வந்தவன் திடீரென பன்ரொட்டியிடம் திரும்பி , ஏல மாப்ள ஒருக்கா நீ பொண்ணா பொறந்துருந்தா என்னைய கட்டிகிட ஒத்துக்கிட்டிருப்பியால .
ஏலே மாப்பு என பன்ரொட்டி அலற ,
அடச்சீ ! அதில்ல மாப்ள அது …அது வந்து எனக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள . அந்த பிள்ளைக்கு என்னை பிடிக்குமால.
ஏலே மாப்பு யாருல , உங்க வீட்டுக்கு வந்துருக்கே அந்த புள்ளையால அப்போ நீ நிஜமா தான் சொன்னியால என யோசனையானவன் , உன்னை கட்டிக்கிட யாருக்குல கசக்கும் .
பவனஜோ , ஆனா மாப்ள அந்த புள்ளை போலீஸாவணுமாம்ல டா . அப்போ அது அந்த மாதிரி வீரமான போலீஸ்காரன தான விரும்பும் என சொல்லும்போதே அவன் குரல் இறங்கியது .
அதை கண்டுகொண்ட பன்ரொட்டி அதை மாற்றும் பொருட்டு , அட என்ன மாப்பு நீ இப்டி விவரம் தெரியாம இருக்கீறீரு . மாப்பு இப்போல்லாம் புள்ளைங்களுக்கு சிரிப்பு மூட்ரவனையும் , வெட்டிப்பயலையும் தாம்ல பிடிக்குது . அதுக்காண்டி நீ கவலைப்படாதல என்றான்.
ம்ம்ம் சரி மாப்ள ஆனாலும் நீரு கேடிபயல சந்தடில என்னைய வெட்டிப்பய னு சொல்லிபுட்டல.
அய்யகோ நான் போய் உன்ன அப்டி சொல்லுவேனா மாப்பு என பன்ரொட்டி அலற,
ஓவரா நடிக்காதல என பன்ரொட்டியின் தோள்களில் கைபோட்டு இறுக்கி எகிற , இருவரும் ஹாஹா என சிரித்து கொண்டும் விளையாடிக்கொண்டும் சென்றனர்.
***************************************************
என்னக்கா இன்னும் உன் ஆள காணோம் என கேட்டுகொண்டேய வாசலில் காத்திருந்த பரியாவின் அருகில் அமர்ந்தாள் ப்ரியா.
பின்ன அந்த பவனஜ் மாதிரி பத்ரா வெட்டியாவா இருக்காரு . அவர் போலீஸ் டி நிறைய வேலை இருக்கும் என தேவையில்லாமல் ஊடாலே இழுத்தாள். அவளின் பத்ராவின் நினைவை மறக்க செய்யும் பவனஜை வெறுத்தாள் .
அவளை ஒருமார்கமாய் பார்த்த ப்ரியா , அக்கா நீ பத்ரா பத்ரா னு சொல்றியே அவர் இதுவரைக்கும் உன்கிட்ட நேருக்குநேரா எதாவது பேசிர்காரா என கேட்டாள்.
பரியா யோசனையுடன் இல்லை என தலையாட்ட ,
அக்கா எனக்கு நிறைய விஷயங்கள் ரொம்ப குழப்பமா இருக்கு கா . நீ அவசரப்பட்டு எப்பவோ சின்னவயசுல நடந்தத வச்சி அது இப்போ காதலா மாறிடிச்சினு சொல்ரியோ .நீ யே நல்லா யோசி கா .
என்ன ப்ரி குட்டி நீயே இப்டி சொல்ற என சோகமானவள் , ப்ரி நான் அந்த ஒரு சம்பவத்த மட்டும் சொல்லலைடா . ம்ம்ம் நீ சொல்லு நம்ப அம்மா நான் சொன்ன எதுக்குமே மொதல்ல ஒத்துக்காதவங்க அப்றம் எல்லாத்தையுமே நடத்திக்குடுத்தாங்க எப்படி??
அதான நான் கூட கேப்பனே , இதுக்கு நீங்க மொதல்ல ஒத்துர்க்கிட்டிருக்கலாமேனு , அப்பா கூட சொல்றவங்க சொன்னா தான் மா உங்க அம்மா கேப்பாங்கனு .
அதேதான் ப்ரிகுட்டி , ஒவ்வொருவாட்டியும் அவங்க இங்க பேசுனதுகப்ரும் தான் ஒத்துக்கிட்டிருக்காங்க . இங்க என்னோட படிப்பை பதிலாம் பேசுறதுனா அது பத்ராவா தான இருக்கணும் . அதுவுமில்லாம ஒவ்வொரு வருஷம் என் பிறந்தநாள் அப்பவும் அவங்க எனக்காக துணி எடுத்து அனுப்புவாங்க . அம்மா கூட சொல்லுவாங்களே பவன் கண்ணா எடுத்து அனுப்பிருக்கானு என கண்கள் மின்ன சொன்னாள்.
தங்கையிடம் சொன்னது பாதி தான் இன்னும் நிறைய இவளுக்கே இவளுக்கென்று அவன் அனுப்பிருக்கிறான் . ஒவ்வொரு பரிட்சைக்கு அவனிடமிருந்து வாழ்த்து அட்டை அவளிற்கு வந்துவிடும்.
போனமுறை யுபிஎஸ் க்கு அவனிடமிருந்து வாழ்த்து வரமால் போக அதை பற்றிய நினைவில் அவளால்
சரியாக எழுதமுடியாமல் போக அதில் தேறவில்லை .
ஏனோ மனதால் நெருக்கமாய் இருந்தாலும் , அவன் காவல்துறையில் சேர்ந்தபின் அவனை பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தேடித்தேடி பார்த்தாலும் ஒருமுறை கூட நேரில் பார்க்கமுடியவில்லை .
இந்தமுறை எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று தான் பிரபு நேற்று இரவு கால் செய்ததிலிருந்தே யோசித்திருந்தவள் , அங்கு அவர்களது நண்பன் பரத் செய்த சிறுகுளறுபடியை கிளறி சண்டையிட்டு கிளம்பினாள் .
ஊருக்கு சென்றபின் அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனதினுள் இத்தனை நேரமாய் பேசிக்கொண்டிருந்தவள் ப்ரியாவின் அமைதியில் அவள் புறம் திரும்பினாள் .
என்ன ப்ரிக்குட்டி ! இன்னும் என்ன ? சரி அப்படியே அவர் என்னை விரும்பாலனாலும் இப்போ என்ன ஆகபோது ?.
அப்பா அன்னிக்கு போன்ல சொன்னது நியாபகம் இல்லையா .எப்படியும் அவங்க அண்ணண் பையனுக்கு தான் என்னை கட்டிகுடுப்பாங்கனு சொன்னாருல்ல . அதுமட்டுமில்லை நான் அவங்க அண்ணன் பையன விரும்பறது அப்பாக்கும் தெரியும் சோ டோன்ட் ஒர்ரி .
அச்சோ அக்கா இப்போ என்னோட ஒர்ரியே அந்த அண்ணன் பையன் யாருன்றதுதான் . எனக்கு தெரிஞ்சவரைக்கும் அம்மா எப்பவும் வஜ்ரநாகா மாமாவ விட கோதண்டநாக மாமா பத்திதான் அதிகம் பேசுவாங்க . இப்போ ரெண்டு பேருக்கும் பையன் இருக்க பட்சத்துல உன்னை எப்படி பவன்புத்ராக்கு குடுப்பாங்க .
இதற்க்கு பரியா பதிலை யோசிப்பதற்குள் , கப்பீஷ்வர் பத்ரா என அழைத்து பேசும்குரல் கேட்டது.
அங்கு செல்லும் அவசரத்தில் , அதுக்கென்ன ப்ரிக்குட்டி அதான் நீ அந்த பவனஜை விரும்புரியே சோ ப்ரோப்லேம் சால்வ்ட் என சொல்லி சிட்டாய் பறந்தாள்.
அடியாத்தி நான் விளையாட்டை சொன்னதை இவ உண்மைன்னு நினைச்சிட்டாலோ . அந்த பவனஜ் கண்ணு முழுக்க உன் மேல தான இருக்கு என்ற அக்கா என எண்ணிகொண்டே அவளும் பரியாவின் பின் சென்றாள்.
அங்கு காவலதிகாரி உடையில் பவன்புத்ரா சௌந்தரமாளின் மடியில் தலைவைத்தவாறு கப்பீஷ்வருடன் பேசிக்கொண்டிருந்தான் .
பரியாவோ தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் சிலையாய் நின்றிருந்தாள் . அதுவும் காற்றில் அலைபாயும் அவனின் முடியை சௌந்தரம்மாள் கோதிக்கொண்டிருக்க அவரை எழுப்பி அங்கு அவருக்கு பதில் தான் அவனை மடியேந்த மாட்டோமா என்ற ஏக்கம் மனதில் ப்ரவாகமெடுத்தது .
பலமுறை அவனை புகைப்படங்களில் கண்டதாலோ ஏனோ புதிதாய் பார்ப்பதுபோல் அவளுக்கு தோண்றவே இல்லை.
அப்பொழுது அங்கு வந்த முனியன் , என்ற மவளுக்கு மேலுக்கு முடிலனு என்ற பொஞ்சாதி சொல்லிவுற்றுக்காமா . பெரிய அத்தா ஒருவார்த்தை சொன்னிங்கன்னா இந்தா போய் ஹாஸ்பத்திரில காட்டிட்டு சட்டுனு வந்துபுடுவேன் மா என பணிவாய் கேட்டவாறு நின்றான்.
ஏன் முனியண்ணன் ! பொண்ணுக்கு உடம்பு சரிஇல்லன்ரிங்க மொதல்ல கிளம்புங்க நீங்க .அதுலாம் ஒடனே வரவேணாம் நீங்க கூடவே இருங்க என்ற பவன்புத்ரா உள்ளே சென்று சிறுபணமும் எடுத்துவந்து கொடுத்தான் .
அதில்ல தம்பி ! பெரிய ஆத்தா ஜட தைச்சி தரணும்னு சொல்லிருந்தாங்க என தயங்க , தன் அப்பத்தாவை ஓர் பார்வை பார்த்தவன் ஜட தான அத அப்றம் தைச்சிக்கலாம் நீங்க போய் புள்ளைய பாருங்க என்றான்.
அவர் சென்றபின் சௌந்தரம்மாளின் புறம் திரும்பியவன் , ஏன் அப்பத்தா இந்த வயசுல உனக்கு ஜட கேக்குதா என கண்களை உருட்ட ,
அப்படி கேளுடா பேராண்டி , கிழவிக்கு 16 வயசுன்னு நினைப்பாக்கும் என கப்பீஷ்வரும் இடையில் நுழைந்தார் .
அப்பொழுதுதான் அங்குவந்திருந்த பரியா மற்றும் ப்ரியாவை பார்த்த சௌந்தரம்மாள் , ஏன் கண்ணுங்களா அங்கனவே நிக்குறீக இங்க வாங்க என்றழைத்தவர் ,
ஏம்ல என்னய பார்த்த இந்தவயசுலையும் ஜட வச்சிக்கிட்டு திரியுர மாதிரியால தெரியுது . நம்ப பத்ரா கண்ணு அந்த வசந்தி பொண்ணு வச்சிருந்தத அம்புட்டு ஆசையா பார்த்துது.
அதான் முனியன கூப்டு தச்சுத்தர சொன்னேன் . பரி கண்ணு நான் உனக்கு வேற யார்கிட்டேனா சொல்லி தச்சிதாரேன் கண்ணு என்றார்.
அவரை தடுத்த பரியா , இல்லை அம்மாயி பரவால்ல இருக்கட்டும் என்றவளின் பார்வையோ பவன்புத்ராவிடம்.
அவனும் அவளை தான் பார்த்திருந்தான் .
சிறிதுநேரம் அங்கிருந்தபின் மீண்டும் கோதண்டநாக வின் வீட்டிற்கு வந்தார்கள் பரியாவும், ப்ரியாவும்.
அக்கா ஏன் வேண்டாம்னு சொன்ன ஜட வச்சிகணும்னு அவ்ளோ ஆசையா இருந்த.
ஆமா இப்பவும் ஆசையா தான் இருக்கு வச்சிக்கவும் போறேன் தான்.
ஆனாஅக்கா அம்மாயி கிட்ட வேணாம்னு சொன்னியே.
அம்மாயிகிட்ட தான சொன்னேன் . அங்க தான் என் பத்ரா இருந்தாரே. என்னோட எல்லா ஆசையையும் நிறைவேத்துறவரு இந்த ஆசைய மட்டும் எப்படி விடுவாரு என தங்கை பார்த்து கண்ணடித்தவள் ,
நீ வேனா பாரு ப்ரிக்குட்டி நாளைக்கு காலையில எனக்கு ஜட தயாரா இருக்கும் . சரி நான் போய் கனவுல என் ஆள மீட் பண்ணனும் டாடா என சொல்லி சென்றாள்.
மறுநாள் தன் கதிர்களை உலகம் முழுவதும் பரப்பிகொண்டு மெதுவாய் தன் துயில்களைந்து எழுந்தான் கதிரவன்.
அக்கா அக்கா என ப்ரியா உலுக்க, என்னடி என அழுத்துகொண்டே எழுந்தாள் பரியா.
அங்க பாரு என என ப்ரியா காட்ட அங்கு திரும்பி பார்த்தவளின் கண்கள் விரிய , இதழ்களோ மகிழ்ச்சியில் சிறிதாய் மாதுளை சுளை போல் திறந்திருக்க முகம் விகசித்தது .
அவர்கள் முன் ….. வில்லை வைத்து அதை சுற்றி கனகாம்புறமும் , அதன் கீழ் சிறிது சிறிதாய் மணம் பரப்பும் மல்லியும் என அழகாய் ஒருமாற்றி ஒன்று என தைத்துக்கட்டிருந்த ஜடை அவர்களிடம் என் அழகை பார் என்பது போல் சுவற்றில் மாட்டி இருந்தது.
-பண்ணிடுவோம் .
——————————————————————————————————————————————————-
தன்னை அழுத்தமாய் காட்டிக்கொண்டு ..
முரட்டுதனமாய் சுற்றும் ஆண்களின் உதட்டிலும்.புன்னகையை பூக்க வைக்கும் சக்தி !
மகள்களிடம் மட்டுமே உள்ளது….!!!
அத்தியாயம் 8 :
முந்தின தினம் என் பத்ரா நிச்சயம் என் ஆசையை நிறைவேத்துவாரு என பரியா நம்பிக்கையாய் சொல்லிச்சென்றிருக்க,
மறுநாள் அவள் சொன்னதுபோல் அவள் அறையில் கனகாம்புறமும், மல்லியும் சேர்த்து தைத்திருந்த ஜடை இருந்தது .
யாஹூ !!!! ப்ரிக்குட்டி நான் சொன்னேன்ல பாரு என் பத்ரா என்னோட ஆசைய நிறைவேத்திட்டாரு என சந்தோஷத்தில் எகிறி குதித்தவள் , நான் இப்பவே இத வச்சிக்கபோறேன் என அதை எடுக்க சென்றாள்.
ஏய் ! குளிக்காம அதில கைய வச்சினா கைய உடைச்சிபுடுவேன் என அதட்டலாய் கேட்ட குரலில் சந்தோஷமாய் சகோதரிகள் இருவரும் திரும்ப அங்கு பவித்ரா (அவர்களது அன்னை) நின்றிருந்தார் .
மாம் …….. என கத்திகொண்டே இருவரும் அவரை கட்டிக்கொள்ள , அட என் பொண்ணுங்களா இது இவ்ளோ சீக்கிரம் எழுந்தது என அங்கு வந்தார் பிரபு.
அப்பாபா என மகள்கள் இருவரும் அவரிடம் செல்ல , ம்ம்ம்கும் அப்பா வந்த உடனே அம்மா கண்ணுக்கு தெரியமாட்டனே என நொடித்த பவித்ரா,
சரிசரி கொஞ்சுனது போதும் , போய் குளிங்க ரெண்டுபேரும் . ஏங்க நீங்க மொதல்ல கிளம்புங்க அப்போ தான் அவளுங்க கிளம்புவாளுங்க என அனைவரையும் விரட்டினார் .
நாங்க ஒண்ணா இருந்தா போதும் உடனே பொறாமையில பொசுங்க ஆரம்பிச்சிடுவியே என பிரபு முனங்க வழக்கம்போல் அது பவித்ராவின் காதில் விழிந்து தொலைத்தது .
உங்கள என ஆரம்பிக்க …இதோ இந்தா கிளம்பிட்டேன் மா என வெற்றிகரமாய் பின்வாங்கியவர் ஓடியேவிட்டார் .
பரியாவோ தான் நம்பியது பொய்த்துப்போகவில்லை என சந்தோஷத்தில் இருக்க ,
ப்ரியாவின் பத்திரிக்கை மூளை சும்மாஇல்லத்தில் தன் முக்கிய சந்தேகத்தை அன்னையிடம் கேட்டாள்.
மாம்! எப்ப வந்திங்க ? இந்த ஜடையை நீங்களா வரும்போது வாங்கிட்டு வந்திங்க.
ஏண்டி இங்க வருமுன்ன நல்லா தான இருந்த .இப்போஎன்ன ஆச்சி லூசுத்தனமா கேக்கற .
மா …கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மா
ம்ம்க்கும் இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு .
ஏண்டி நீங்க இங்கதான் இருக்கீங்கன்ற விஷயத்தை உங்க அப்பா என்கிட்டே மூச்சேவிடல . அப்றம் எதுக்குடி நான் வாங்கிட்டு வரப்போறேன் .
அப்போ இது எப்படி இங்க வந்தது என அவள் யோசனையாய் கேட்க,
இது என்ற அண்ணன் மவன் குடுத்தான் டி . நாங்க வரப்போவே புள்ள இத தச்சிட்டு இருந்துச்சி . எம்புட்டு அழகா இருக்குல்ல என அதை தொட போக ,
அது வரை தன்னவனுடனான கனவில் இருந்த பரியா இவர்களின் பேச்சில் நிஜத்திற்கு வந்தாள்.
அவர் ஜடையின் அருகில் செல்வதை பார்த்து அவரின் முன் சென்று தடுத்தவள், மா இது எனக்குனு பண்ணது . நான் தான் முதல்ல தொடுவேன் என சிறுபிள்ளையாய் சிணுங்கினாள் .
தன்னவன் தன் ஆசைக்காய் இதை எப்படியேனும் கொண்டுவருவான் என நினைத்திருந்தாலே தவிர அவனே இதை முழுக்க முழுக்க செய்வான் என எதிர்பார்க்கத்தில் அவளின் மனம் தன் காதலை அடக்க இயலாமல் விம்மியது.
ஏய் ரொம்ப பண்ணாதடி .இத இங்க எடுத்துட்டு வந்து வச்சதே நான் தான்டி .போ போய் குளி முதல்ல என அவளை விரட்டியவர் ,
முழித்துகொண்டிருந்த ப்ரியாவை பார்த்து , நீ என்னடி முழிச்சிட்டு நிக்குற என்றார்.
மாம் ! நான் கேக்றதுக்கு சரியானா பதில் சொல்லுங்க . அண்ணன் மகன்னு நீங்க யாரை சொல்றிங்க என விடாமல் கேட்டவளிர்க்கோ தன் தமக்கையின் காதலில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் எழுந்திருந்தது .
இது என்ன டி கேள்வி , அண்ணன் மகன்னு நா யாரை சொல்ல போறேன் என்று தொடர போனவரை தடுத்தது கீழிருந்து வந்த கோதண்டநாகாவின் குரல்.
சீக்கிரம் கிளம்புங்கடி , நீ போய் உன் ரூம்ல குளிச்சிட்டு வா .அண்ணன் கூப்புட்றாரு நான் போய்ப்பாக்குறேன் என கிளம்ப ,
மா ..மா….சொல்லிட்டு போமா என ப்ரியா கத்த பவித்ராவோ கண்டுகொள்ளாலே சென்றார்.
பரியா குளித்துவிட்டு வந்தபொழுது ப்ரியா குளித்துமுடித்து கிளம்பிருந்தவள் , கட்டிலில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தால் .
ப்ரி இது ரெண்டுல எந்த புடவை நல்லா இருக்குனு சொல்றி என அவளிடம் கேட்க ,
அதுலாம் வேணாம் கண்ணு இந்தா இந்த சேலைய கட்டிக்கோ என ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை தந்த ஜானகி (பவனஜின் அம்மா) அதற்கு தோதான நகைகளும் உடன் தந்தார் .
ப்ரியாவோ அதை பார்த்து முட்டை கண்ணை விரித்து முழிக்க ,
பரியா தான் அவரிடம் ,என்ன அத்த…. இதெல்லாம் எதுக்கு என கேட்டாள்.
பின்ன ஜடை வைக்கணும்னு சொன்னல அதுக்குதான் இது என கொடுத்தவரின் உதடுகளோ கேலிசிரிப்பில் பூத்திருந்தது.
அங்கிருந்த ஜடையை பார்த்த அவரும் , ராசா னா ராசா தான். நேத்து தான் அயித்த சொன்னாங்க ஜட தைக்கமுடிலனு .அதுக்குள்ள ஒரே ராவுல புள்ள எம்புட்டு ஜோரா தைச்சிருக்கு என மோவாயில் கை வைத்து அதிசயத்தார் .
அவளின் முகத்தை வழித்து நெட்டுடைத்தவர் , எம்புட்டு அம்சமா இருக்க உனக்கு அந்த ஜட பொருத்தமா இருக்கும் கண்ணு .என் ராசா ரொம்ப குடுத்துவச்சிக்கணும் என பேசிக்கொண்டே கீழிறங்கி சென்றார்.
யக்காவ் …எனகென்னமோ உனக்கு பெரிய ஆப்பா எதுவோ வைக்கப்போறாங்கனு தோணுது .நா இப்போ இங்க வரும்போது கூட பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் பண்ணிருக்காங்க . தங்கச்சி சொல்றேன் வா இங்க இருந்து எஸ் ஆவோம் .
சும்மா இருடி , எப்பப்பாரு லூசு மாதிரி உளறிட்டு இருக்க என அழுத்த பரியாவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவள் கீழிருந்தவர்களை காட்டி , அங்க பாருக்கா என்றாள்.
என்னடி அங்க ? தாத்தாவும் , வஜ்ரநாகா மாமாவும் தான இருக்காங்க என அசால்டாக கேட்டாள் பெரியவள் .
ஐயோ இந்த தத்தி அக்காவை வச்சிக்கிட்டு நான் இன்னும் என்ன பாடுபடபோறனோ என ப்ரியா புலம்ப பரியா அவளின் தலையில் கொட்டினாள்.
அவ்ச் யக்காவ் எதுக்கு இப்போ கொட்டுன என முறைக்க .
ஏண்டி அவங்க வீட்ல அவங்க இருக்றதுல என்ன இருக்கு ? இத கேட்டா லூசு மாதிரி ஒலர்ற .
அக்கா இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோ நீ லாம் சத்தியமா போலீஸ் ஆவமாட்ட.
முறைச்சா பயந்துருவோமா ,பின்ன என்னக்கா …நம்ப மொதல் நாள் இந்த வீட்டை கண்டுபிடிக்க ஒருத்தர்ட்ட விசாரிச்சப்ப என்ன சொன்னாரு .
என்ன சொன்னாரு என யோசித்தாள் பரியா . இவர்கள் கோதண்டநாக , வஜ்ரநாகா இருவரின் பெயரையும் சொல்லி விசாரிக்க ,
இங்குட்டுல இருந்து நேருக்கா போன கடைசியா ரெண்டு பெரிய வீடு ஒட்டினாப்ல இருக்கும் . ரெண்டுக்கும் நடுவுல மதி சுவர் சின்னுண்டா இருக்கும் பாருங்க .
அதுல வலப்பக்கமா இருக்கிறது தாத்தைய்யா வூடு. அங்கிட்டு தான் வஜ்ரநாகா ஐயா இருப்பாரு .
இடப்பக்கம் இருக்கிறது நம்ப கோதண்டநாக ஐயா வூடுங்க என்றிருந்தார் .
பிறகு இங்குவந்தபின் சௌவுந்தரம்மாளிடம் , விசாரித்த பொழுதுதான் தந்தை மகன் விவாவதத்தில் இப்படி பிரிந்திருப்பது தெரிந்தது . இதுவரை கோதண்டநாக வீட்டீற்க்குள் கப்பீஷ்வர் வந்ததே இல்லை.
அதை எண்ணிப்பார்த்த பரியா ,
இதுவரைக்கும் இங்க நம்ப தாத்தைய்யா வந்ததே இல்லனு தான அம்மாயி சொன்னாங்க என கண்களை உருட்டினாள்.
அதேதான் கா …ஆனாபாரு இப்போ அவரும் வஜ்ராமாமாவும் காலம்காலமா இந்த வீட்லயே இருக்க மாறி உட்காந்து சிரிச்சிட்டே இருக்கிறத. அதான் சொல்றேன் ஏதோ ஆப்பு ரெடி பண்றங்க வா எஸ் ஆகிடுவோம் .
ஏய் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே நம்பளுக்கு தெரியாது .ஏதோ இப்போ சரிஆகிடிச்சிபோல . அதுக்கும் நம்பளுக்கும் என்ன டி சம்மந்தம்.
அப்பொழுது அங்கு வந்த பவித்ரா , மகள்கள் இருவரும் படிகளில் நின்று பேசிகொண்டிப்பதை பார்த்தவர் , இங்க என்னாடி பண்ணுறீங்க ரெண்டுபேரும் . பரி நீ போய் ரெடியாகுமா , ப்ரி நீ அக்காக்கு உதவி பண்ணு ப்ங்க்ஷன் ஆரம்பிக்கிறவரைக்கும் கீழ வர கூடாது ஓடுங்க என விரட்ட ,
மா ப்ங்க்ஷனா ! என்ன ப்ங்க்ஷன் மா என பரியா கேட்க ,
உன் நிச்சயதார்த்தம் தான்டா குட்டி என சொல்லியபடியே அங்கு வந்தார் பிரபு.
சொன்னவரை பவித்ரா முறைக்க , ஏன்மா பொண்ணுகிட்ட சொல்லவேண்டிது நம்ப கடமை இல்லையா என பதிலுக்கு பிரபு கேட்க,
எப்படி பா ? நிச்சயத்துக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னடியா என ப்ரியா கேட்ட விதத்தில் பரியாவே அதிர்ந்து பார்க்க ,
பிரபு என்ன சொல்வதென தெரியாமல் வாயடைத்துப்போனார் .
ஏய் என்னடி பேசுற அவர்ட்ட என ப்ரியாவை திட்டிய பவித்ரா , இதுக்குதான் செல்லம் குடுக்காதிங்க சொன்னேன் கேட்டீங்களா என பிரபுவையும் ஏசினார் .
பிரபுவோ பரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு , அப்பா உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான்டா சொல்லல . நீ பவன் மேல எம்புட்டு ஆச வச்சிருக்கேன்னு எனக்கு தெரியாதா.
காலைல பவன் அந்த ஜடைய கொடுக்கும்போது பெரியஅத்த பேச்சுவாக்கல , எதுக்கு வெறும் ஜட துணிமணியும் எடுத்துகுடு இன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கிடலாம் னு சொன்னாங்கமா . நம்ப சொல்லாமே நம்ப பொண்ணோட ஆசை நிறைவேறுதுன்னு தான்மா நான் சொல்லல என மகள்கள் தன்னை தவறாய் எடுத்துக்கொள்வார்களோ என நீண்டதாய் விளக்கம் கொடுத்தார் .
மனதினுள் பழகுழப்பங்கள் இருந்தாலும் தன் தந்தை வருந்துவது பிடிக்காமல் மகள்கள் அவரை சமாதானபடுத்த ஆரம்பிக்க அங்கு ஒரு பாச அலை உருவாகி அனைவரையும் நனைத்து சென்றது .
*************************************************************************************************
எங்க அக்காகேத்த மாப்பிளை எங்கிருக்கான் பயபுள்ள …எங்க அக்காகேத்த மாப்பிளை எங்கிருக்கான் பயபுள்ள ..
– பாடி கொண்டே தான் அணிந்திருந்த தாவணியின் முந்தானையை சுத்திகொண்டு வந்த ப்ரியா , அதான் அவர் இந்த வீட்ல தான் இருக்காருன்னு தெரிஞ்சிடிச்சே . சரி வேற பாட்டு யோசிப்போம் என எண்ணிகொண்டே வந்தவள் பரியா அதே உடையுடன் இருப்பதை பார்த்து குழம்பினாள் .
அக்கா நீ இன்னும் புடவை கட்டலையா ? சீக்கிரம் கட்டுக்கா நான் உனக்கு மேக்கப் பண்ணிவிடறேன் இல்ல அம்மா வந்து கச்சேரியை ஆரம்பிச்சா நிறுத்தமாட்டாங்க .
அவள் பேசியதற்கு எதுவும் சொல்லாமல் பரியா அமைதியா இருக்க , அக்கா என்னாச்சி கா என அவளை தன்புறம் திருப்பினாள்.
ப்ரிக்குட்டி…அது….நிச்சயம்…எனக்கும்…பவன்….என்று பரியா தடுமாற ,
அக்கா என்னனு சொல்லுக்கா.
ப்ரிக்குட்டி ! இன்னிக்கு எனக்கு நிச்சயதார்த்தம் சரி ஆனா அது யார் கூட ???
என்னக்கா அதான் அப்பா சொன்னாருல்ல நீ விரும்பறது தெரியும்னு ,நீயும் தான அப்பாக்கு தெரியும் னு சொன்ன.
சொன்னான் தான்டி …அன்னிக்கு அப்பாகிட்ட ஒருநாள் முன்னடியே அங்க போறேன்னு சொல்லும்போது ஏன்னு கேட்டவர்கிட்ட உங்க ” பவன் கண்ணா” வ நான் விரும்பறேன். அவனுக்காக போறேன்னு தான் சொன்னேன்.
அதான் சொல்டியேகா அப்றம் என்ன ?
இல்ல ப்ரி , நான் பவன்புத்ரா மட்டும்தான்னு நினைச்சி தான் அப்டி சொன்னேன் . ஆனா இங்க ஒரே மாதிரி கிட்டத்தட்ட ஒரே பேர்ல ரெண்டு பேர் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாதே டி. இப்போ அப்பா ரெண்டுபேர்ல யாரை பவன் கண்ணா னு சொல்றாருனு குழப்பமா இருக்கு ப்ரி.
என்னக்கா நீ , இத அப்பாகிட்டயே கேட்ருக்கலாம்ல இல்ல என்கிட்டே சொல்லிருந்தாலவது நான் கேட்ருப்பேன் என்று இது என்ன புதுகுழப்பம் என்ற எண்ணத்தில் தமைக்கையை கடிந்தாள்.
அடியே எனக்கு முன்னடியே தெரிஞ்சிருந்தா கேட்ருக்கமாட்டேனா ?
மேல வரும்போதுதான் கேட்டேன் ஜானகிஅத்த அந்த பன்ரொட்டி அண்ணாகிட்ட , போய் பவனஜ கூட்டிடுவா ராத்திரி முழுக்க முழிச்சிட்டு இருந்த புள்ள சரியா சாப்டாமகூட போய்ட்டான் . கொஞ்சம் அதான் உறங்குனாதா ப்ங்க்ஷன்ல முகம் பளிச்சுனு இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்கடி . அதுகப்றம் தான் எனக்கே சந்தேகமா இருக்கு.
என்னக்கா இப்டி சொல்ற இப்போ என்ன பண்றது என சிறிது நேரம் என யோசிக்க ,
அதுமட்டுமில்லை ப்ரி அப்பா என்ன சொன்னாரு பவன் ஜடை குடுகும்போது தான் அம்மாயி நிச்சயம் பத்தி பேசுனாங்கனு . ஆனா ஜானகி அத்த சொன்னதை கவனிச்சியா என் ராசா குடுத்து வச்சிருக்குனு சொன்னாங்க . அவங்க யாரை பத்தி சொன்னாங்க .
அச்சோ அக்கா இப்டி வரிசையா சந்தேக பட்டு பேசுனா எப்படி ?
ப்ரி எனக்கு ஒண்ணுமே புரிலடி . நான் இப்பவே பத்ராவ பார்த்து பேசணும் . அவர்கிட்ட பேசுனா இந்த குழப்பத்துக்குலாம் ஒரு முடிவு கிடைக்கும்ல .
ஆனா அக்கா இப்போ உன்ன வெளிய விடமாட்டாங்களே. அதுவும் நான் வரும்போது தான் பெரிய மாமா சின்ன மாமாகிட்ட பவன்புத்ரா ஸ்டேஷன் போய்ர்க்கான் இப்போ வந்துருவான்னு சொல்லிட்டு இருந்தாரு .
அவருக்கும் எனக்கும் தான் நிச்சயதார்த்தம்னா அவரை மட்டும் எப்படி வெளிய விட்ருப்பாங்க . நான் உடனே அவரை பார்க்கணும் டி என ப்ரியாவின் கைகளை பிடித்து ஜன்னலின் புறம் சென்றாள்.
அக்கா…அக்கா …நில்லுக்கா என்னபண்ணப்போற அம்மாக்கு தெரிஞ்சா நம்பளுக்கு சங்கு தான்.
சும்மா இரு ப்ரி அதுலாம் அப்பாகிட்ட மெஸ்ஸேஜ் பண்ணி யாரும் இங்க வராம பார்த்துக்கலாம் . அதுவும் லேட் ஆனா மட்டும் … இப்போ வா போவோம் .
எப்படி கா போவ ? இங்க போறதுக்கு வழியே இல்லையே.
ஆன் என்ற பரியா , இப்படி தான் என ஜன்னல் வழியாய் குதித்து அங்கிருந்த தடுப்பின் மேல் நின்றாள் .
யக்காவ் ! போலீஸ் ஆகப்போறேன்னு நிரூபிக்கிறியோ . சரி சரி நீ சுடிதார் போட்டதுனால சட்டுனு குதிச்சிட்ட நான் எப்படி என புலம்பிய படியே முந்தியை இடுப்பில் சொருகியவள் பாவாடையையும் தூக்கி சொருகியபடி இறங்கிய ” எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ” என்றாள் .
– பண்ணிடுவோம் …
——————————————————————————————————————————————–
ஒற்றை சந்திப்பில் ,ஒரே ஒரு பார்வையில்… தன் ஆயுள் மொத்தத்தையும் ஒருவருக்காய்
அர்ப்பணிக்க தூண்டுகிறது
காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம் …!!
அத்தியாயம் 9 :
ஏல திடிர்னு இந்த அம்மா எதுக்குல வரசொல்லுச்சி என பின் அமர்ந்திருந்த பன்ரொட்டியிடம் கேட்டவாரே வீடை நோக்கி வண்டியை ஓட்டினான் பவனஜ்.
காற்றிற்க்கும் அவனின் மேல் ஆசையோ என்னவோ அவனின் முன்னுச்சிமுடியை செல்லமாய் கலைத்து சென்றது .
மாப்பு மொதல்ல இந்த ஹெல்மெட் அ போடுல . இன்னிக்கு அந்த போலீஸ்க்காரன் கூடவே இருப்பான்ல . யாருக்குதெரியும் இப்பவே நம்ப முன்ன வந்து குதிச்சாலும் குதிப்பான் . நீ இந்த ஹெல்மெட் போடாம ஒட்றதை பார்த்தா ஒரு சொற்பொழிவை ஆத்தாம போமாட்டான்ல
ஆனா மாப்ள என் தம்பிய பத்தி என்கிட்டயே இப்டி பேசுறியே உனக்கு ஏத்தம் கூடிடிச்சில என பன்ரொட்டியை சொன்னாலும் அவனின் கை தானாய் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டியது .
அக்கா ! அங்க பாரு அது பன்ரொட்டி அண்ணா தான ,அப்போ முன்னாடி உட்கார்ந்துட்டு போறது பவனஜ் அத்தான்னு நினைக்கிறேன் என தங்களை கடந்து சென்றவர்களை பார்த்து சொன்னாள் ப்ரியா .
ஏய் என்னடி புதுசா அத்தானுலாம் சொல்ற.
அது ஒண்ணுமில்லை கா …ரெண்டு பேர்ல யார் உனக்குன்னு இன்னும் முடிவாகலயே . அதான் முன்னடியே கூப்ட்டுவைப்போம்னு தான்.
அவளை முறைத்த பரியா , எனக்கு கல்யாணம்னா அது நிச்சயம் பத்ரா கூட தான் நடக்கும் ப்ரி . நீ இந்தமாதிரிலாம் பேசுறதா இருந்தா என் கூட வராத என கோபமாய் முன்னே சென்றாள்.
அக்கா நில்லுகா…..அக்க்க்கா …..சரிசரி நான் எதுவும் சொல்லல என… சிறுது நேரம் அமைதியாய் நகர்ந்தது , மீண்டும் அக்கா என்று ஆரம்பித்தாள் .
பரியா என்ன என்பது போல் பார்க்க,
கேக்றேன்னு கோபப்படாத கா …உன்னோட ஒவ்வொருஆசையா பவன்புத்ரா நிறைவேத்தநிறவேத்த தான் உனக்கு காதல் வந்துச்சின்னு சொல்றல . அது பவன்புத்ரா தான்னு நீ எப்படி சொல்ற .
இவளின் கேள்வியில் பரியா அவளை அடிபட்ட பாவனையுடன் பார்க்க ,
அக்கா ப்ளீஸ் ….நீ பீல் பண்ணணும்னு நான் கேக்கல . சொல்லப்போனா இப்படிலாம் குழப்பம் ஆகும்னு நீ யோசிச்சீர்க்ககூட மாட்ட. யோசிச்சி பாருக்கா அம்மா ஒருவாட்டியாவது பேர் சொல்லிற்பாங்கள ??
இல்ல ப்ரி அம்மா எப்பவும் அண்ணன் மகன்னு தான் சொல்வாங்க , அப்பாவும் பவன் கண்ணானு தான் சொல்வாங்க என தவிப்பாய் சொல்ல ,
ப்ச்சே…இந்த அம்மா இருக்காங்களே …ஆனாவுனா அண்ணா அண்ணா சொல்வாங்க. ஆன எந்த அண்ணனுனு சொல்லமாட்டாங்க என ப்ரியாவின் சொற்கள் குழப்பத்தில் எரிச்சலாய் வெளிவந்தது .
திடீரென ப்ரியாவின் கைகளை பிடித்து , ஏய் ப்ரி குட்டி அம்மா நிச்சயம் என் பத்ராவ தான் சொல்லிர்க்கணும் என சந்தோஷத்தில் குதித்தாள் .
ஆமா ப்ரி , உனக்கு நியாபகம் இருக்கா அம்மா நம்மளுக்கு என் அண்ணன் மகன் போலீஸ் ஆகிட்டான்னு சொல்லி் அன்னிக்கு பிரட்அல்வா லாம் செஞ்சி குடுத்தாங்களே . அப்போ தான் நானே நெட்ல தேடி முழுபெயர் பவன்புத்ரா னு தெரிஞ்சிகிட்டேன் என குதூகலாமாய் சொன்னாள்.
நீ சொல்றதுலாம் சரிகா ஆனா அந்த பவனஜும் உன்ன உத்து உத்து பார்த்து வைக்கிறாரே என சொல்லிமுடிக்க அவர்கள் அந்த காவல்நிலையம் அருகில் வந்திருந்தனர் .
அட ! நீங்க நம்ப தாத்தய்யா வீட்டுக்கு வந்தவங்க தான ,என கேட்டுகொண்டே உள்ளிருந்து வந்தவரும் காவலதிகாரி உடையில் இருந்தார்.
என்னமா பாக்குறீங்க?
என்ன செய்தி ?
பரியா , இல்ல சார் …அது பத்ரா..ம்ம்ம் …அது ஏசிபி சார பாக்கணும் .
ஹாஹா என்னமா சிரிப்பு மூட்றிங்க . நம்ப பவன்புத்ரா சார தான சொல்ரீங்க . தினம் தினம் வீட்லையே பார்க்க கூடியவரை காங்க இத்தனை தொலைவு வந்தீயலா என சிரிப்பாய் கேட்டார்.
ஓஓ அக்கா இவர் காமெடி பண்ணிட்டாராம் சிரிச்சிடு கா இல்லனா புடிச்சி ஜெயில்ல போட்டாலும் போட்றுவாரு என பரியாவினிடம் நக்கலாய் முனங்கினாள் ப்ரியா .
அதே நக்கலுடன் , என்ன சார் ஸ்டேஷன்ல எல்லாம் ஈ ஓட்றாப்ல தெரிது என கேட்க ,
அதையும் காமெடியாக ஏடுத்துக்கொண்டவர் , ஹாஹா ஹாஹா என்று சிரிக்குறேன் பேர்வழி என பயமுறுத்தினார் .
என்னமா பண்றது ….எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பவன்புத்ரா ன்ற பேர கேட்டாலே மிரண்டு ஓடிட்றாங்களே என சலிப்பாய் சொல்வதுபோல் சொன்னாலும் அவரின் குரலில் பெருமையே விஞ்சிருந்தது .
அவரின் பெருமையில் பத்ராவின் இதயமும் தன்னவனிருக்காய் விம்மியது .
அட இந்த அக்கா வந்தவேலைய மறந்து காதல்ல மூழ்கிட்டாங்க போலயே . ஏய் சொட்டமண்ட இப்போ யார்னா உன்கிட்ட அவர் புகழ் பாட சொல்லி கேட்டாங்களா என மனதிற்குல் அவரை அர்ச்சித்த ப்ரியா ,
ஹீஹீ சார் ஏசிபி இருக்காரா இல்லையா என கேட்டாள்.
பரியாவும் அந்த கேள்வியையே விழிகளில் தாங்கியவாரு பார்க்க ,.
பவன்புத்ரா சாரும் , பிரதாப் சாரும் இப்போ தான்மா கிளம்புனாங்க . கொஞ்ச நேரம் முன்னாடி வந்தா பார்த்துர்க்கலாம் என உச்ச்சு கொட்ட ,
இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடினா நாங்க வீட்லையே பார்த்துருப்போமே என மனதினுள் கவுண்டர் கொடுத்த இருவரும் ஏமாற்றமாய் திரும்பி சென்றனர் .
ச்சே என்னக்கா இது ? இதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம் . ம்ம்ம் வரும்போதாவது அந்த வழியா வந்த வண்டில தொத்திட்டு வந்தாச்சு . இப்போ எப்படி போறது யாரையும் காணோமே என புலம்பிகொண்டே வந்தாள் ப்ரியா.
ஏய் ப்ரி அது அந்த பவனும் , பன்ரொடியும் தான இன்னும் இங்கயே இருக்காங்க என பரியா சொல்ல , அவர்களை பார்த்த ப்ரியாவும் என்ன யாருக்கோ பயந்து போய் உட்கார்ந்துருக்க மாதிரி உட்கார்ந்துருக்காங்க . வா கா போய் கேட்போம் .
அருகில் செல்ல செல்ல ஹெல்மெட்டுடன் இருந்த பவனஜின் கண்கள் மட்டுமே பரியாவிற்கு தெரிய அது ஆழிப்பேரலையாய் மாறி தன்னை உள்ளிழுப்பதாய் உணர்ந்தாள் . அந்த உணர்வில் தோன்றிய எரிச்சலில் ,
என்ன ப்ரி பவுனு எதையோ பார்த்து பதுங்கிற்கு போல என நக்கலாய் கேட்க அவர்கள் அருகில் வந்திருந்ததால் அது பவனஜ் மற்றும் பன்ரொட்டியுன் காதுகளிலும் விழுந்தது .
எங்கையோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுத்தான்ற மாதிரி அவன் பாக்காம இருந்தாலும் வேணுகா வம்புக்கு நிக்குறாங்களே . இந்த புள்ளைக்கு நம்ப மாப்பு தான்னு எழுதிர்க்கு போல என எண்ணினான் பன்ரொட்டி.
ப்ரியாவோ களைப்பாய் இருக்க இளநீர் எதுவும் இங்கு இருக்குமா என பன்ரொட்டியிடம் விசாரித்தாள் .
பவனஜோ ,திடீரென தன் முன் வந்து நின்றவளை நம்பமுடியாமல் பார்த்தவன் பார்வையாலே அவளை முழுங்க உதடுகளோ , அவளிற்கு நிகரான நக்கலுடன் உன்ர பேர் என்னங்கோ என்றது .
ஏனோ அவன் தன் பெயர் கூட தெரியாமல் இருக்கிறான் என்ற ஆதங்கம் தன்னையுமறியாமல் தோன்ற பற்களை கடித்தவாறு பரியா என்றாள்.
கடைசி வார்த்தையை மட்டும் கேட்ட பன்ரொட்டி ,எம்மாடி என்னமா நானும் பாரத்துட்டே இருக்கேன் என்ற மாப்புக்கு மறுவாதயே குடுக்காம பேசிக்கிட்டிருக்க என கோபமாய் கேட்க ,
அவளோ இவர் எதற்கு இப்போ கோபப்படறாரு என திருதிருவென முழிக்க ,
என்ன …என்ன… முழிச்சா ஆச்சா . இளநீர் வேணும்னு இப்போ தான இந்த புள்ள கேட்டுச்சு உனக்கும் வேணும்னா பறிச்சிக்குடுங்கனு சொல்லு . மாப்பு ரெண்டு என்ன நாலு கூட பறிச்சித்தருவாப்ல. அதவுட்டுப்புட்டு மறுவாத இல்லாம பறி(ரி) யா -ன்ற என முறைக்க ,
அவளிடம் பவனஜ் பேர் கேட்டது அவனிற்கு கேட்காமல் இளநீர்காய் சொல்வதாய் நினைத்து திட்ட , பவனஜோ கண்களில் நீர் முட்ட சிரித்தான் .
ஏம்ல பன்னு ! உமக்கு என் மேல இம்புட்டு பாசமால என சிரிப்பை நிறுத்தி கேட்டாலும் அவனின் கண்கள்
பரியாவை பார்த்து கேலியாய் சிரித்தது .
இவர் எதுக்கு இப்டி சிரிக்குறாரு அக்கா ஏன் முறைக்குது என புரியாமல் போக ப்ரியா , அத்தான் என்னாச்சி எதுக்கு சிரிக்கிறீங்க என கேட்டாள் .
ஹாஹா ஒண்ணுமில்லமா , ஆமா உன் பேர் என்ன ?
ப்ரியா அத்தான் .
பரியா கோபப்படுகையில் அவளிடம் அவன் ரசிக்கும் அந்த கூர்மூக்கு இன்னும் சிவந்து அழகுற அதை மேலும் ரசிப்பதற்காய் அவளின் கோபத்தை அதிகரிப்பது போல் ,
ஓஒ…பரியாக்கு ப்ரி (free ) இந்த ப்ரி ஆ (ப்ரியா) என நக்கலடித்தான் .
அவர்கள் ஒரே மாதிரி இருப்பதால் பள்ளி , கல்லூரிகளில் இதே போல் பலர் சொல்லிருக்க ப்ரியா அவனின் கிண்டலை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு சிரித்தாள்.
பரியாவோ கோபத்தில் அங்கிருந்து செல்ல போக அவசரமாய் தடுத்த பவனஜ் , ஏய் அங்கிட்டு போவாத .நில்லு சித்தப்புவ வண்டி கொண்டாரா சொல்லிருக்கேன் என்றான்.
பார்வையில் ஏன் என்ற கேள்வி தூக்கியவாறு அவனை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க அவனோ அவ்வேற்ற இறக்கத்தில் அவளுள் சொக்கித்தான் போனான்.
அதை கவனித்த ப்ரியா அதை கலைப்ப , எதுக்கு அத்தான் வண்டி அதுவும் நாங்க வந்தது வேற யாருக்குமே தெரியாது .பேசாம நாங்எ நடந்தே போறோம் என சத்தமாய் சொன்னாள்.
இல்ல ப்ரியா அங்கிட்டு பங்காளிங்களுக்குள்ள வரப்பு தகராராகி அடிச்சிக்கிட்டு இருக்கானுவுக .அதான் நாங்களே இங்கன நிக்கோம் என பவனஜ் சொல்ல ,
பன்ரொட்டியும் , ஆமா அங்கிட்டு போவதிக .எவன் யார் மண்டை உடைபானுகனு தெரியாது என்றான்.
இதெல்லாம் ஒரு விஷயமா என ப்ரியா கேட்டுமுடிக்க அங்கு ஒரு அருவாள் பறந்து வந்து விழுந்தது .
வரப்பு தகராறு பெரிதாகி கைகளில் அடித்தது போய் ஆயுதம் எடுத்திருக்க அங்கு போவோர் வருபவரையுமே தாக்க ஆரம்பித்திருந்தனர் .
டேய் பன்னு , சீக்கிரம் சித்தபுக்கு போன போடுடா என்றவன் , ரெண்டு பேரும் வாங்க கொஞ்சம் தள்ளி போலாம் என பரியா மற்றும் ப்ரியாவை அழைத்தான் .
அவனை மேலிருந்து கிழ்வரை பார்த்த பரியா , அதற்குள் தங்களின் புறம் ஒருவன் அடிக்க வர அசால்ட்டாக அவனின் கைகளை முறித்து உடைத்தாள்.
போனை எடுத்த பன்ரொட்டியும் , பவனஜும் ஆவென வாயை பிளக்க ப்ரியாவோ இது வழமை என்பது அமைதியாயிருந்தாள் .
***************************************************
நீ இன்னும் கிளம்பலையா கண்ணா . சீக்கிரம் கிளம்பு பா என பவித்ரா சொல்லி செல்ல சரி சரி மண்டையை உருட்டிக்கொண்டிருந்தான் பவனஜ் .
மாப்பு! இனிமே நான் இந்த வீட்டுப்பக்கமே வரமாட்டான்ல . எதுவா இருந்தாலும் இன்னியோட முடிச்சிப்போம் என பன்ரொட்டி சொல்ல,
பவனஜ் , ஏம்ல
ஏனா , நீ பார்ததானல அது முறுக்கா? கையால? ஏதோ முறுக்கு புழிறாப்ள புழிறாங்க . அதுகூட பரவலால அடுத்து வந்தவனுக்கு அடிவயதுலயே ஒன்னு விட்டாங்க பாரு… அவன் என்ன ஆனானு தெரில மாப்பு ஆனா எனக்கு வயிறு கலங்கிடிச்சில என அழாகுறையாய் புலம்பி கொண்டிருந்தான் .
மேலே அறையில், இவர்களுக்கு நேர்மாறாய் பரியாவோ கோபத்தில் ப்ரியாவிடம் இவர்களை பொரிந்துகொண்டிருந்தாள்.
சே அந்த இடத்துல மட்டும் என் பத்ரா இருந்திருந்தா எல்லாரையும் ஓட ஓட அடிச்சிருப்பாரு . அவர் பேர கேட்டாலே எல்லோரும் அலறுவாங்க . இவன் என்னனா சண்டைநடக்குதுனு ஒளிய இடம் தேடுவான் போல என பவனஜை வறுத்தெடுத்தாள்.
ப்ரியா ஏதோ பதில் சொல்லப்போக அங்கு ஜானகி வருவதை பார்த்தவள் வாயை மூடி கொண்டாள் .
கண்ணுங்களா இன்னும் கிளம்பளையாடா , பரியா கண்ணு போய் சீலை மாத்திட்டு வா கண்ணு ,அய்த்த உனக்கு ஜட வச்சி தலைய ஜோடிச்சிவிடறேன் . நிச்சயத்துக்கு நேரமாவுத்துல என சொல்ல ,
இருவரும் பவனஜை மறந்து நிச்சயதார்த்த பரபரப்பில் மூழ்கினர் .
***************************************************************************
வீடுமுழுக்க அலங்காரத்தில் ஜொலிஜொலிக்க , கப்பீஷ்வர் கம்பீரமாய் மீசையை முறுக்கியவாறு சோபாவில் அமர்ந்திருக்க அவரின் இருபுறமும் ,அவரின் கம்பீரத்திற்கு சிறிதும் குறைவில்லாதவாறு கோதண்டநாகாவும் , வஜ்ரநாகாவும் அமர்ந்திருந்தனர் .
வஜ்ரநாகா நீண்ட நாள் பிறகு முழு சந்தோஷத்துடன் அமர்ந்திருக்க , கோதண்டநாகா பவித்ராவை தன்பக்கம் அழைத்து அனைவரிடமும் பேச வைத்துக்கொண்டிருந்தார் .
சௌந்தரம்மாள் இவர்கள் நால்வரையும் கண்களில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் அருகில் வந்த பிரபுவும் ஜானகியும் அவர்களை பார்த்து புன்சிரிப்புடன் நிற்க , ஜானகியை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டார் சௌந்தரம்மாள் .
அய்யா நல்ல நேரம் வந்துடிச்சி பொண்ணு , மாப்பிளையை அழைச்சிட்டு வந்தா நிச்சய தாம்பூலம் வாசிச்சிபுடலாம் என ஒருவர் சொல்ல ,
ப்ரியா பரியாவை அழைத்துக்கொண்டு வர , ஆரஞ்சு வண்ண பட்டுபுடவையில் அதற்க்கு தோதான நகைகளுடன் வானுலக மங்கையோ என என்னும் பேரழகுடன் வந்தவள் அழகிற்க்கு அழகு சேர்பதற்க்காய் தன்னவன் தனக்காய் செய்த ஜடையை வைத்துக்கொண்டு அது கொடுத்த காதல் உணர்வில் முகம் பூரிக்க வந்தாள்.
அவளின் எதிரே பட்டுவேஷ்டி சட்டை அணிந்து ஆண்மையின் முழுவுருவமாய் நின்ருந்தவனின் முன்னுச்சி முடிகளோ சிங்கத்தின் முடிகளாய் , மன்னனின் கிரீடமாய் வீற்றிருந்து ஒரு வித அலட்சியத்துடன் சிலும்பிக்கொண்டிருந்தது .
பரியா அவனை ரசித்து கொண்டிருக்க , பரியா அக்கா நல்லா பார்த்துக்கோ இது உன்னோட பத்ரா தான என அவளின் காதை கடித்தாள் .
இத்தனை நேரம் இருந்த மாயவலை அறுபட குரலில் நடுக்கத்துடன் , ப்ரி என…எனக்கு …தெரிலடி . எனக்கு நேத்து அம்மாயி மடில அவர் படுத்திட்டிருந்தத பார்த்த போ என்ன மாதிரியான உணர்வுகள் தோணுச்சோ அதே தான் இப்பவும் தோணுது என சொல்ல ,
அப்றம் என்னக்கா ?
ஆனா ப்ரி , இதே உணர்வுகள் தான் இங்க நம்ப வந்த காலைல பவனஜ பார்க்கும் போதும் தோணுச்சு . அப்டினா என்னோட காதல் பொய்யாடி ?? ரெண்டுபேருக்கும் என்னால வித்தியாசமே கண்டுபிடிக்க முடிலயே என்றவள் குரலோ அழுகையிலும் , பயத்திலும் நடுங்க கண்களோ தன் காதல் வழுவற்றதோ என்னும் எண்ணத்தில் கலங்கியது .
நேரமோ இவர்களை கவனிக்க மறக்க , இவர்களின் குழப்பத்துடனே நிச்சய பத்திரிக்கையும் வாசிக்கபட்டது .
அதைகேட்ட பின் பரியா மற்றும் ப்ரியா இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் இறுக்கமாய் பற்றிக்கொண்டு வார்த்தை வராமல் போக எதிரில் நின்றுந்தவனை வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்தனர் .
நிச்சயபத்திரிகை :
சென்னையை சேர்ந்த கண்ணன் மற்றும் பாரதியின் பேத்தியும் , பிரபு மற்றும் பவித்ரா ஆகியோரின் மூத்த குமாரத்தியுமான ” பரியா ” – விற்கும்
மன்னவனுரை சேர்ந்த கப்பீஷ்வர் மற்றும் சௌந்தரம்மாளின் பேரனும் , கோதண்டநாகா மற்றும் ஜானகி அவர்களின் குமாரனுமாகிய ” பவனஜ் என்கிற பவன்புத்ரா ” – விற்கும் பெரியோர்களால் நிச்சயிக்கபடுகிறது .
– பண்ணிடுவோம் …
————————————————————————————————————————————————
அறியாவயதிலே …
ஒற்றை தருணத்திலே ..
உன் விழியோர கண்ணீரோடான சிரிப்பினிலே …
உன்னையும் உன் மேலான அன்பையும் ..
என் இதயத்தினுள் சிறைவைத்தேன் …!!!
யாரும் அறியா வண்ணம் …!!!
நானும் உணராவண்ணம் …!!!
அத்தியாயம் 10 :
ஏய் என்ன பண்ற …வேணாம் டி வலிக்குது என கத்திகொண்டே அவ்வறை முழுவதும் பவனஜ் (பவன்புத்ரா ) ஓட கையில் தலையணையுடன் அவனை துரத்திக்கொண்டிருந்தாள் பரியா .
ஏய் கூர்மூக்கி எதுக்கு டி அடிக்கிற , என்ற அம்மா கூட என்ன அடிச்சதில்லை டி கூர்மூக்கி என கத்தியவாறு ஓட ,
யூ யூ இடியட் முதல் தடவ பார்த்தப்பவே சொல்லிருக்கலாம்ல , எவ்ளோ குழப்பம் பண்ணிர்க்க ஒழுங்கா நில்லுடா என துரத்தியவள் ,
சட்டென்று பவனஜ் நின்று திரும்ப அதை அவள் எதிர்பார்க்கத்தில் அவனின் மேல் மோத பிடிப்பில்லாமல் இருந்த பவனஜும் அவளை அணைத்தவாறு விழுந்தான் .
நல்லவேலை அங்கு கட்டில் இருந்ததில் அடிபடாமல் போக , பரியாவோ அவனை அருகில் கண்ட தவிப்பில் இருக்க ,
பவனஜோ , அப்பாடி கட்டில் இருந்ததுனால தப்பிச்சோம் . நீ என்ன இன்னும் என்னையவே பார்த்துட்டு இருக்க எழுத்துரு . நிச்சயம்னு கவுச்சி சாப்பிட கூடாதுனு சொல்ட்டாங்க அப்பத்தா தான் யாருக்கும் தெரியாம கருவாட்டு குழம்பு ஊத்தியாரேன் சொல்லிற்கு . போய் சாப்பிடுவோம் வா என்றான்.
அட மாங்கமடையா ! சரியான சோத்து சட்டியா இருப்ப போல என சத்தமாய் திட்டியவள் , அவன் மேலையே மொத்தமா சாஞ்சிருக்கேன் அப்போ கூட கருவாட்டுக்குழம்பை தேடி புத்தி போது பார் என மனதினுள் திட்டினாள் .
என்னால என்னைய மனசுக்குள்ளாறவே திட்றாப்ல இருக்கு .
நீ பண்ண வேலைக்கு உன் கண்லயே அந்த கருவாட்டுக்குழம்பை காட்டக்கூடாது என பொறும,
ஏட்டி நானும் பார்த்துட்டே இருக்கேன் அப்போல இருந்து நான் ஏதோ உன்ன குழப்புனேன் சொல்ற , நா இங்க உன்கிட்ட பேசுனதே ரெண்டோ மூணோ வாட்டிதானால என கேட்டான் .
அப்பொழுது அவ்வறையில் பன்ரொட்டியும் , ப்ரியாவும் நுழைந்தனர்.
அத்தான் நீங்க எதுவும் குழப்ல எல்லாம் உங்க பெயர் செஞ்ச வேல என ,
என்னபுள்ள சொல்ற மாப்பு பேருக்கு என்ன குறைச்சல் என கேட்டான் பன்ரொட்டி .
தாங்கள் இங்கு வந்த பொழுது கேட்ட பவன்புத்ராவின் புகழில் ஆரம்பித்து , பன்ரொட்டி அவனை பவனஜ் என்றதில் முழித்து , அவனின் பரியாவின் மேலான காதல் பார்வையில் கடுப்பாகி , இரண்டு மாமன்மார்களும் என் மகன் என சொன்னதில் வேறு வேறு ஆள் என எண்ணி கடைசியாய் நிச்சயம் யாருடன் என குழம்பியதுவரை பரியாவும் , ப்ரியாவும் மாற்றி மாற்றி சொல்லி முடித்தனர் .
ஒருத்தரோட பேராலையா இம்புட்டு குழப்பம் என பன்ரொட்டி வாய் பிளக்க , பவனஜோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான் .
சிரிப்பின் நடுவே , அதுக்காண்டி தான் என்ன பார்த்தப்பலாம் புசுபுசுனு கோபமா மூச்சு வுட்டுட்டு நின்னியா . நான் கூட அன்னிக்கு தாத்தைய்யா வீட்ல இருக்கும் போது நினைச்சேன் , என்ன எப்பவும் முறைப்பாவ இன்னிக்கு இப்டி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாங்களேன்னு என மறுபடியும் சிரிக்க, பன்ரொட்டியும் உடன் சேர்ந்து சிரித்தான் .
எங்க தவிப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா என பரியா , ப்ரியா இருவரும் அவர்களை மொத்த ஆரம்பித்தனர் .
இருவரையும் அடித்ததில் இவர்களுக்கு கை வலிக்க ஆமா உங்களுக்கு எதுக்கு ரெண்டு பேர் ?.
இத்தன நாளா பேசாம இருந்த தாத்தய்யாவும் ,பெரியமாமாவும் எப்படி சேர்ந்தாங்க ? என பரியாவும் , ப்ரியாவும் கேட்க பவனஜ் தன் குடும்பக்கதையை சொல்ல ஆரம்பித்தான் .
சில வருடங்களுக்கு முன்பு :
கப்பீஷ்வரின் தந்தை பத்ரதேவ் – விற்கு கடவுள் ஆஞ்சநேயர் மீது பக்தியும் , பிரியமும் அதிகம் . அதன் காரணமாகவே தன் மகனிற்கு கப்பீஷ்வர் என்னும் பெயர் சூட்டினார் . பெயர் வைத்துவிட்டாரே தவிர அவரின் பெயரை சொல்லி மகனை கூப்பிட தயங்கி கண்ணா என்றழைத்து வந்தார்.
கப்பீஷ்வரோ , தன் பேருக்கு பொருத்தமன்றி தன் தந்தை தன்னை கூப்பிடும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்ந்தார் .
அவரின் செயலில் தந்தைக்கும் மகனிற்கும் சிறு சிறு பூசல்கள் வந்த வண்ணம் இருந்தது .
மகனின் திருமணம் தன் தங்கை மகளுடன் நடக்கவேண்டும் என பத்ரதேவ் விரும்ப , கப்பீஷ்வரோ தன் நண்பனின் தங்கையான சௌந்தரம்மாளை காதலித்து பலத்த எதிர்ப்பின் பின் கரம்பிடித்தார்.
ஏற்கனவே இருந்த பூசல்கள் மொத்தமாய் வெடித்தது . எத்தனை சண்டை வந்தாலும் மகனை வெளியே அனுப்பாமல் இருந்தார் பத்ரதேவ் .
கப்பீஷ்வர் – சௌந்தரம்மாளிருக்கு கோதண்டநாகா பிறந்த பின்னும் அவரது கோபம் மறையவில்லை . இரண்டு வருடங்களுக்கு பிறகு வஜ்ரநாகா பிறந்தார் .
அந்த நேரத்தில் பத்ரதேவ் தன் மனைவியை இழந்து , மகனிடமும் வீம்பை விட்டு பேசமுடியாமல் தனிமையில் வாட , அப்பொழுது பிறந்த வஜ்ரநாகாவை அந்த ஆஞ்சநேயரே இவரின் தனிமையை போக்குவதற்காய் பிறந்தாய் எண்ணி அக்குழந்தைக்கு “வஜ்ரநாகா ” என பெயர் வைத்து கொண்டாடினார் .
கோதண்டநாகா கப்பீஷ்வரின் வளர்ப்பாய் அந்த வயதிற்கேற்ப வளர ,
வஜ்ரநாகாவோ தன் தாத்தாவின் வழிகாட்டலில் அச்சிறுவயதிலே பத்ரதேவுடன் கோவில் , பக்திப்பாடல்கள் என சென்று அவ்வயதிற்குரிய குறும்புத்தனமோ , சேட்டைகளோ ஏதுமின்றி ஆஞ்சநேயர் ஒருவரை மட்டுமே சிந்தையில் வைத்து வளர்ந்தார் .
கோதண்டநாகா வும் , வஜ்ரநாகாவும் உடன் சேர்ந்து அதிகமாய் இருந்ததில்லை என்றாலும் இருவரின் மனதிலும் மற்றவர்கான பாசம் அளப்பரியது .
பல சமயங்களில் வஜ்ரநாகா தன் தாத்தாவுடன் சென்றுவிட விளையாட்டு துணைக்கு ஆளில்லாமல் கோதண்டநாகா வருந்தும் தருணங்களில் அவரிற்கு துணையாய் வந்து சேர்ந்தவள் தான் பவித்ரா .
கோதண்டநாகா வின் சிறுவயது முழுவதும் பவித்ராவுடனே கழிய அவர்களுக்கு இருவருக்கும் நடுவே அழகாய் ஓர் பாசஊற்று உருவாகியது .
நாட்கள் மாதங்களாய் மாற , மாதங்களும் வேகமாய் வருடங்களாக உருண்டோடியது .
கோதண்டநாகாவிற்கு ஜானகியை பார்த்து கப்பீஷ்வரும் – சௌந்தரம்மாளும் மணமுடித்து வைக்க ,
அத்திருமணத்திற்கு உறவுக்காரனாய் வந்த பிரபு , பவித்ராவை விரும்ப ஆரம்பிக்க கோதண்டநாகாவின் தலையீட்டில் அடுத்த சில மாதங்களில் பிரபு – பவித்ராவின் திருமணம் நடைபெற்றது .
அப்பொழுது பிரபு சேலத்தில் வேலை செய்ய அவர்கள் அங்கு தங்களின் வாழ்வை ஆரம்பித்தனர் .
இறுதிருமணங்களையும் மகிழ்வாய் பார்த்த பத்ரதேவ் அடுத்த வருடம் தன் அத்தியாயத்தை இவ்வுலக புத்தகத்தில் முடித்துக்கொண்டார் .
அவர் காலமான இரண்டு மாதங்களுக்கு பிறகு கோதண்டநாகா- ஜானகிக்கு ஆண்குழந்தை பிறந்தது .
என்னதான் பத்ரதேவ் மற்றும் கப்பீஷ்வர் இருவருக்கும் நெருக்கம் அதிகமில்லை என்றாலும் தன் தந்தையின் மேல் இயல்பான பாசம் கப்பீஷ்வருக்கு அதிகம் உண்டு . தன் தந்தையை உரித்து வைத்து பிறந்த தன் பேரனுக்கு தன் தந்தையின் பாதிப்பெயரையும் , அவரின் விருப்ப கடவுளான ஆஞ்சநேயரின் பெயரும் வருமாறு ” பவன்புத்ரா ” என பெயரிட்டார் .
அதற்கடுத்து தான் ஆரம்பித்தது பிரச்சனை.
தான் திருமணம் முடித்து குழந்தையும் பெற்றிருக்க தன் தம்பி இன்னும் திருமண எண்ணம் இல்லாததுபோல் இருந்ததில் தந்தையிடம் வஜ்ரநாகாவிற்கு பெண்பார்க்கும்படி சொன்னார் .
அவரும் வஜ்ரநாகாவிடம் சம்மதம் கேட்க வஜ்ரநாகாவோ திருமணத்தில் ஈடுபாடில்லை என சொல்லிவிட்டார் .
கப்பீஷ்வர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , பின்னாளில் தனிமை துயர் தாக்கக்கூடும் என அறிவுறுத்தியும் எனக்கு அண்ணன் மகன் இருக்கிறான், அவனை என் மகனாய் வளர்ப்பேன் என சொல்லிவிட்டார் .
கூடிய சீக்கிரமே உறவுகளை துறந்து அனுமாரின் பக்தியில் தன்னை திளைத்துக்கொள்ளப்போவதாய் தான் எடுத்திருந்த முடிவை பற்றி அவர் தந்தையிடம் மறைத்திருந்தார் .
கோதண்டநாகாவோ அதை அறிந்து தான் இருக்கும் எண்ணத்திலே அவர் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக எண்ணி , பொய்யாய் தன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிவந்தவர் , பெற்றோர்களை பார்ப்பதர்காவாது வஜ்ரநாகா தன் முடிவை மாற்றிக்கொள்வார் என நினைத்தார் .
அவர் நினைத்ததுபோலவே வஜ்ரநாகா , தன் பெற்றோர்களை தனியாய் விடமுடியாமல் , தன் அண்ணனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த பூசலுக்கு தானே காரணம் என்றெண்ணி அவர்களுடனே இருந்தார் .
பவன்புத்ரா மட்டும் இருவீட்டிற்கும் சென்று வர அவனும் தன் சித்தப்பாவின் வழியில் ஆஞ்சநேயரை தன் மனதில் நிறுத்த , கோதண்டநாகா தன் தம்பியை முறைத்தவாரே அவனின் பெயர் பவன்புத்ரா இல்ல இனிமே நான் என் புள்ளைக்கு புது பேர் வச்சிக்கிறேன் என்றவர்,
சண்டையிட்டு பிரிந்திருப்பதாய் வெளியில் காட்டிக்கொண்டாலும் , மகனும் தந்தையின் உறவு அதே பாசத்துடன் இருந்ததில் முதலில் பெயர் வைகப்பீஷ்வரிடம் கேட்க , அவரோ தன் தந்தை பெயரே வருவதுபோல் இந்த காலத்திற்கு ஏற்ப ” பவனஜ் ” என்று வைக்க சொல்ல அதுவே வீட்டில் அழைக்கும் பெயரானது .
தேடிதேடி பெயர் வைத்தவர்கள் அதன் பொருளும் அஞ்சனை மைந்தனே என அறியாது போக , அதை அறிந்திருந்த வஜ்ரநாகாவோ இன்னும் இன்னுமாய் பவன்புத்ராவின் மேல் பாசம் கொண்டார் .
***************************************************
ஏய் என்னங்கல இன்னும் மேலயவே பார்த்துட்டு இருக்கீங்க அதுலாம் பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சில என பவன்புத்ரா சொல்ல , பரியா , ப்ரியா , பன்ரொட்டி மூவரும் தலை இறக்கி அவனை பார்த்தனர் .
ஏன் மாப்பு ! இதுலாம் ஒரு மேட்டர்னு இத்தனை வருஷம் பேசாம இருக்காங்களாயா என பன்ரொட்டி கேட்க ,
இடையிட்ட ப்ரியா , அண்ணா நீங்க கடைசியா கவனிக்கலையா அதுலாம் பேசமாலாம் இல்லனா . நம்ப அரசியல்வாதிங்க பத்தி தெரியும்ல . வெளிய ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிட்டு தெரிஞ்சாலும் எல்லாம் ஒன்னாதான் இருப்பாங்க . அதே பாலிசி தான் இங்கையும் என சொல்ல ,
ஹாஹா சரியா சொன்னமா அதே தான் . இதுவே எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சிது என அவளுடன் ஹைபை அடித்துக்கொண்டான் .
பரியாவோ இவர்கள் பேச்சினுள் கலக்காமல் யோசனையை இருக்க , அவளின் காதோரம் குனிந்த பவனஜ் ,
ஏட்டி கூர்மூக்கி ! இந்த குட்டி மூளைக்குள்ள இன்னும் என்னத்த போட்டு உருட்டராவ என கேட்டான் .
ப்ரியாவும் , பன்ரொட்டியும் இவர்களின் புறம் திரும்ப ,
பரியா , நீங்க தான் பவன்புத்ரானா காலைல ஏன் அங்க தகராறு நடக்கும்போது தட்டிகேக்கமா பயந்துபோய் விலகினிங்க ?? நீங்க போலீஸ் தான நீங்க பன்ரொட்டி அண்ணாகூட தான இருந்திங்க , ஆனா உங்க கூட வேல பாக்குற ஒருத்தர் நீங்க பிரதாப் னு ஒருத்தரோட போனதா ஏன் சொல்லணும் ?? என கேள்விகளை அடுக்கினாள் .
ப்ரியாவும் அதானே என்பதுபோல் இருவரையும் பார்க்க ,
டேய் மாப்பு என பற்களை கடித்தான் பன்ரொட்டி .
அண்ணா நீங்க எதுக்கு கோபப்படரீங்க , பிரதாப் சார் யாரு அவரும் இன்ஸ்பெக்டர் தான என பரியா கேட்க ,
ஹாஹா அவன் கிட்டயே அவன் யாருனு கேட்டா எப்படி . அதுவும் அவன்ட இப்டி கேக்குறதுல நீ 10,001- வது ஆள் .
என்ன நீங்களும் போலீசா என ப்ரியா அதிர்ச்சியாய் கேட்க ,
மாப்ள சின்னபிள்ளைகூட உன்ன போலிஸ்னு நம்பமாட்டீங்குது டா என சொல்லி சொல்லி சிரித்தான் பவனஜ் .
ஹலோ அவரை நக்கலடிக்றது இருக்கட்டும் , மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ? அப்றம் எப்பவும் எனக்கு என்னென்ன தேவைனு ஒவ்வொரு பரிட்சைக்கு அனுப்புறவரு , நான் யூபிஎஸ்சிக்கு எழுதுறப்போ எனக்கு எதுவுமே அனுப்பல …வாழ்த்து கூட சொல்லல ஏன் என கேட்டாள் .
பன்ரொட்டி என்கிற பிரதாப்பும் , பவனஜ் என்கிற பவன்புத்ராவும் திருதிருவென முழிக்க இப்போ சொல்ல போறிங்களா இல்லையா என கத்தினாள் .
அதுஒண்ணுமில்லை பரிமா , முதல்முதலா எனக்கு உன்ன எப்போ பிடிக்கும்னுலாம் தெரில . அப்போ உனக்கு எட்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் கொலுசு வேணும்னு நீ அழுத ஆனா அப்போ அத்த உனக்கு அத வாங்கிதரல . எனக்கு நீ அழுத்ததே திரும்ப திரும்ப நியாபகம் வந்து கஷ்டமா இருந்ததா அதான் சித்தப்பு கிட்ட சொல்லி காலையிலயே போய் வாங்கிட்ந்தோம் .
அப்போ நீ கண்ணுல இன்னும் கண்ணீர் இருக்க என்ன பார்த்து ஏதோ ரோஜா மொட்டு மெதுவா மலறுறா்ல சிரிச்சா . அப்போ எனக்கு தோணுச்சு இந்த பாப்பா எப்பவும் இப்டி சிரிச்சிட்டே இருந்தா நல்லா இருக்கும்னு .
அதுக்கப்றம் நாங்க ஊருக்கு வந்துட்டோம் , உன்ன பார்க்கிறதுக்கு வாய்ப்பே கிடைக்கல ஆனா அத்த தினமும் போன் பண்ணி பேசுவாங்க . அப்டி நீ இது கேக்ற அது கேக்ற , சேட்டை பண்றனு நிறைய சொல்லுவாங்க.
அவங்க எதுனா உனக்கு வாங்கித்தர முடிலனா அப்பாகிட்ட அன்னிக்கு முழுக்க புலம்புவாங்க , நான் உடனே அலுதுபுரண்டு அப்பாவை வாங்கித்தர சொல்லிடுவேன் என அவளை பார்த்து கண்ணடித்தான் .
அதில் சே, எங்க அம்மா நல்லா என்மானத்த வாங்கிட்டாங்கனு சொல்றிங்க என சிரிக்க ,
ஹாஹா ஆனாலும் கொஞ்ச நாள் ல அத்த அதையெல்லாம் நிறுத்திட்டாங்க . அப்றம் நானே துருவித்துருவி கேட்டுத்தான் உன்னோட ஒவ்வொரு ஆசையா நிறவேத்துவன் என சிரித்துகொண்டே சொன்னவன் ,
ஆனா நீ அன்னிக்கு போலீஸ்காக பரிட்சை எழுதுரத்துக்கு முன்னாடி தான் நான் அர்ரெஸ்ட் பண்ண ஒருத்தன் லாரி வச்சி தூக்குனதுல அடிபட்டு ஹாஸ்ப்பிட்டல்ல கிடந்தேன் .
அது சித்தப்புக்கு மட்டும் தான் தெரியும் வீட்ல எல்லோருக்கும் வேலை விஷயமா வெளிய போயிக்கேன் சொல்லிருந்தோம் .
அப்போ தான் விஷயம் கேள்விப்பட்ட அப்பா இனிமே இந்தமாறிலாம் நடக்கக்கூடாது வேலைய விட்றுனு சொன்னாரு . சொல்லப்போன இந்த போலீஸ் வேலையே எனக்கு செட் ஆகாது அவரோட ஆசைக்காகத்தான் இத படிச்சேன் , அவரே வேணாம் சொல்லினப்போ அம்புட்டு சந்தோஷம்.
எனக்கும் தான் மாப்பு ! சும்மா காதுல தேன் வந்து பாயுறாப்ல இருந்தது .
ப்ரியா அவனை விசித்திரமாய் பார்க்க , பரியாவோ தன்னவநிற்கு இப்பொழுது தான் அடிபட்டது போல் அவனை தலை முதல் கால் வரை கண்களால் ஆராய்ந்தாள்.
பவனஜ் அவளின் பார்வையின் பொருளுணர்ந்து தற்பொழுது ஒன்றுமில்லை என விழிமொழி பேசினான்.
பன்ரொட்டி ப்ரியா பார்ப்பதை உணர்ந்து , என்ன புள்ள அப்டி பாக்குற ? இவன் மட்டும் அந்த ஜோலில சேர்ந்ததுமில்லாம என்னையும்ல கூட இஸ்துன்னு போய் சேர்த்து விட்டான் . மாப்பு அவங்க அப்பருக்காக அந்த வேலையே பார்த்தா நான் மாப்புக்காக பார்த்தேன் என்றான் .
இந்த களேபரத்துல நீயும் அந்த பரிட்சையில் தேறாம போக அத்தை அந்த வேல உனக்கும் வேணாம் சொல்லிட்டாங்க .
அப்றம் நான் தான் நீ எவ்ளோ ஆசப்பட்டேனு நினைச்சி அவங்கள பேசி பேசியே ஒதுக்கவச்சு , அவங்கள சமாளிக்க நானும் வேலைய விடாம நான் சொல்லித்தரேனு சொல்லி உங்கள இந்த ஊருக்கு கூட்டியார சொன்னேன் .
அப்டி நான் துருவி துருவி கேட்டதுல தான் அத்த இப்டி வந்த அன்னிக்கே நம்ப நிச்சயத்தை வச்சிட்டாங்க நினைக்கிறேன் என சொல்லி சிரித்தான் .
ப்ரியாவும் , பரியாவும் அதை கேட்டு அப்போ நாங்க ஊருக்கு வரதே உங்க பிளான் தானா ?? அப்றம் எப்டி தெரியாத மாதிரியே நடிச்சீங்க என வியக்க ,
இதுக்கு பதில் சொல்லலாம் மாப்புக்கு நேரம் இல்லமா . மாப்பு நீ போ . அந்த வயசுல இருந்தே இந்த புள்ளைய கட்டிக்கிட தான இம்புட்டு பிளானையும் போட்டிருக்கீரு . போய் கல்யாணம் அடுத்த வாரத்துலையே வைக்கவும் எதுனா பண்ணு என நக்கலடித்தான்
பவனஜோ அதற்க்கு பதிலாய் ” எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ” மாப்ள என சொல்லி சிரித்தான் .
– பண்ணிடுவோம் …
————————————————————————————————————————————————
உன் ஓரவிழி பார்வை ஒன்றுபோதும் …
என் உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்க்க…!!!
உன் இதழ் பூ பூக்கும் ஒற்றை புன்னகை போகும் …
என்னை முழுதாய் உன்னுள் சுருட்டிகொள்ள …!!!
அத்தியாயம் 11 :
“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”
– என
திருமாங்கல்யத்தை தன் கைகளில் வாங்கிய நொடி திருமண மந்திரத்தை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் தன் கம்பீர குரலை காதலில் குழைத்து பரியாவிடம் சொல்லிய பவனஜ் , மூன்று முடிச்சுகளில்
முதல் முடிச்சியிடும் பொழுது அவள் கண்களை பார்த்தவாரே ,
என் உடல் , பொருள் , ஆவி அனைத்தும் உனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்குமடி என்றவன் .
இரண்டாம் முடிச்சில் , என் அத்தனை உரிமைகளும் உணர்வுகளும் உன் உரிமையடி என உறுதி அளித்து .
என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன் ஓவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்றிகொண்டே இருப்பேனடி என பொறுமையாய் ஒவ்வொரு முடிச்சிருக்கும் ஒரு வாக்குறுதி என அவளின் கண்களை பார்த்தாரே மூன்றாம் முடிச்சையும் போட்டான் .
பரியாவோ தன்னவனின் செயலில் , வார்த்தைகளில் கண்கள் கலங்க அதையும் முந்திக்கொண்டு அவனின் காதலை கண்டு அவளின் காதலும் பெருக்கெடுக்க , பவனஜ் என்கிற பவன்புத்ராவை அவளிடம் விழவைத்த விழியோர கண்ணீர்துளிகளுடனான அவளது அச்சிரிப்பை உதிர்த்தாள் .
அன்று அதில் சந்தோசம் கொண்டவனோ இன்று காதல் பெருக்கெடுக்க சுற்றியிருந்தோரை கண்டுகொள்ளாமல் அவளின் சிரிக்கும் இதழ்களை தன் இதழ்களில் புதைத்து கொண்டான் .( அடப்பாவி…இம்புட்டு நாள் நல்லாதானயா இருந்த ) .
நல்லவேளை இவன் செய்த சேட்டையை எவரும்பார்க்க வாய்ப்பின்றி , அருகில் நடக்கும் இன்னொரு திருமணத்திற்க்காய் திரும்பியிருந்தனர் .
( யாருக்கா நீங்களே பாருங்க ).
ரோஜாவண்ண கூரைபுடவையில் ரோஜாவாய் மலர்ந்திருந்த ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கள்யம் அணிவித்து அந்த ரோஜாப்பூவாய் தன் உரிமையாக்கினான் பவின் .
பவின் வஜ்ரநாகாவின் வளர்ப்பு மகன் , பவன்புத்ராவின் சேட்டைக்கார தம்பி , பன்ரொட்டி( பிரதாப் )யின் அடாவடி ரூல்ஸ் போலீஸ்காரன் . ஆமாங்கோ இவனும் போலீஸ் தான் . ( அவன் அவன் எக்ஸாம்ல பாஸாகாம திரிய இவனுங்க மட்டும் எப்படி பாஸானானுங்க ?? )
தன் அண்ணணை போலவே , முதல் பார்வையிலே… தன்னுயிரில் கலந்தவளின் காதோரமாய் …
” உன் ப்ரியா என்னும் பெயருக்குறிய பொருளான பிரியங்கள் அனைத்தையும் என்னுடன் கொண்டு என் பெயரின் அர்த்தமாய் என்னை மொத்தமாய் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன் ” என சொல்லியவாரே அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் .
[ பவின் – அர்ப்பணிப்பு ,
ப்ரியா – ப்ரியம் ]
அன்று பவன்புத்ராவிற்கும் – பரியாவிற்கும் நிச்சயம் நடந்த தினம் முழுக்க , அம்மாக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க . ஒருத்தரோட புள்ள உனக்கு , ஒருத்தர் புள்ள எனக்குன்னு கனவுலாம் கண்டது வீணா போச்சே என விளையாட்டை அழுதவாறு ப்ரியா ப்ரியாவிடம் புலம்ப ,
ஹாஹா ஹாஹா என்ன சொன்ன ரெண்டுப்பையன்ல ஒருத்தன் அவளுக்கு , ஒருத்தன் உனக்கா என கேட்டு பவனஜ் மீண்டும் சிரிக்க ,
ம்ம்ம் …இந்த புள்ள தலையெழுத்தை இனி யாராலயும் மாத்தமுடியாது என முனங்கிய பன்ரொட்டி , ஏல மாப்பு இன்னும் என்ன இங்கனவே நிக்குறவ. கையோட கையா அதையும் முடிச்சிவிடப்பு என சொன்னான் .
சரிதான் பன்னு , மச்சினிச்சி வருத்தப்பட்டா எந்த மாமனுக்காச்சி பொறுக்குமா என விளையாட்டாய் கண்சிமிட்ட ,
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் பரியா முழிக்க ,
நம்மளே நம்பளுக்கான ஆப்பு எதையாவது தேடிக்கிட்டோமா என ப்ரியா யோசித்துக்கொண்டிருந்தாள் .
அப்பொழுது அண்ணா என கத்திகொண்டே ஒருவன் கதவை திறக்க , அவன் திறந்த வேகத்தில் அதன் மேல் சாய்ந்திருந்த ப்ரியா விழப்போக அவளை விழாமல் தாங்கிப்பிடிக்க அங்கு ஓர் காதல் உலகின் வாசல் திறந்தது .அதற்க்கு பின் சிறுசிறு குறும்புகளுடன் அவர்களது காதல் உலகத்தில் மகிழ்வாய் உலவினர் .
பவன்புத்ரா – பரியாவிற்கு திருமண தேதி குறிக்கும் நேரத்தில் பவின்-ப்ரியாவின் விஷயம் பவன்புத்ராவால் பெரியவர்களிடம் சென்றது .
பவித்ரா தன் அண்ணண் மகன்களுக்கு தான் தன் பெண்கள் என அவர்களின் சிறுவயது முதலே எண்ணியிருந்ததால் மகிழ்ச்சியாய் தலையசைத்தார் .
பிரபுவோ , மனைவியின் ஆசை புரிந்திருந்தும் தன் மகள்களின் மனத்திற்க்கே முதலிடம் கொடுத்திருக்க , அவரும் ப்ரியாவின் விருப்பம் அறிந்து சரி என்றிருந்தார் .
பவித்ராவின் ஆசைப்படி , பவன்புத்ரா – பரியா மற்றும் பவின் – ப்ரியா இருவரின் திருமணமும் இன்று ஒரே மேடையில் அடுத்தடுத்து நடக்கிறது .
********************************************************
நான்கு வருடங்களுக்கு பின் :
வயதானவர் என்றும் பார்க்காமல் அவரின் நிலத்திற்காய் அவரை கொன்ற மருதன் என்றவனை கைது செய்ய ஏசிபி பவன்புத்ரா தன் படையுடன் வந்திருந்தான் .
மருதன் சிறு சிறு திருட்டு , வழிப்பறி என ஆரம்பித்து கொலைகளையும் அசால்ட்டாக செய்ய இப்பொழுது அவன் பெயர் போலீசின் என்கவுண்டர் லிஸ்ட்டில் உள்ளது .
அவனும் அவனின் ஆட்களையும் போலீஸ் வளைத்திருக்க , தப்பிக்கும் முயற்சியில் அங்கு ஒரு சிறு போர் நடந்தது .
வழக்கம்போல் சிறிதும் பதறாமல் , தன் பாணியானா பிடித்த படத்தை ரசித்து பார்பதுபோலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .
அவ்வூரிற்கு வேறொரு பஞ்சாயத்திற்காய் வந்திருந்த பரமேஷ் இதனை கண்டு , ” ஆத்தாடி இவனா ” என்ற கேள்வியுடன் அன்று போல் இன்றும் மறைந்திருந்து பார்த்தான் .
அவனுடன் வந்திருந்த கைத்தடி ஒருவன் , யாருன்னா இவன் என சத்தமாய் கேட்க ,
அவனின் வாயை மூடியவன் , மெதுவா பேசுடா அவனுக்கு கேற்ற போது என பயத்தில் தந்தியடிக்கும் பற்களை கடித்து , அவன் இருக்கான் பாரு அவனோட நிழல் கூட ஒருத்தன் மேல படாது ஆனா அம்புட்டு பேரையும் அப்படியே போட்ருக்க துணிலயே ***போக வச்சிருவான்டா .
பவன்புத்ரா அன்று போல் இன்றும் தன் அருகில் நின்ருந்தவனிடம் ( பிரதாப் அதுதாங்க நம்ப பன்ரொட்டி ) , ரொம்ப இழுக்குதோ முடிச்சிவிட்ரலாமா என ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்டினான் .
பன்ரொட்டி (எ) பிரதாப் தன் பின் சைகை செய்ய ,அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது .
அய்யயோ வந்திடிச்சிடா எமனோடே வாகனம் என அலறிய பரமேஷ் அதற்குமேல் அங்கிருக்காமல் தன் கைத்தடியுடன் மெதுவாய் ஓட , பவனஜ் (எ) பவன்புத்ரா மருதனை தூக்கி வண்டியில் போட்டு கிளப்ப மறுபக்கம் பன்ரொட்டி ஏறிக்கொண்டான் .
சிறிதுநேரம்கழித்து மருதனின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்க வெறும் சடலமாக அவ்வூரின் முடிவில் எறியப்பட்டது .
*********************************************************************************************
“கொடூரமான குற்றவாளியாய் அறிவிக்கப்பட்டு போலிஸாரால் தீவிரமாய் தேடப்பட்ட ரௌடி மருதனை என்கவுண்டர் செய்தார் ஏசிபி பவன்புத்ரா ”
– என மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது .
அப்பா …அப்பா என பவன்புத்ராவின் புகைப்படம் பத்திரிக்கையில் வந்திருப்பதை தட்டிf தட்டி பவன்புத்ரா – பரியாவின் இரண்டு வயது மகன் ருத்ரபவன் சிரிக்க ,
அவனின் அருகில் சௌந்தரமாளின் மடியில் இருந்த ஒரு வயது கவினும் எதர்கென்றே தெரியாமல் தன் அண்ணனுடன் சேர்ந்து சிரித்தான் .
அடஅட என்ற மவன் எம்புட்டு அழகா சிரிக்கிறாப்ல என பவன்புத்ரா , ருத்ரபவனை தூக்க அவனோ தந்தையின் அருகிலிருந்த பன்ரொட்டியிடம் தாவினான் .
ஹாஹா என்ற மாப்பு போலவே , சின்ன மாப்புக்கும் என்ற மேல தான் பிரியம் ஜாஸ்த்தி . நீ ஒன்னும் கவலை படாத சௌந்தர்யா, உன்னோட ரசிகர் கூட்டத்துல எப்படி ஆள் சேக்குறன் பார்த்தில என அமைதியாய் இருந்த அப்பத்தாவை வம்பிழுக்க ,
எவண்டா அவன் என்ற சௌ – வ ஓரண்ட இழுக்கிறது என கேட்டுகொண்டே கப்பீஷ்வர் மேசையை நீவியபடி அங்கு வர ,
மாப்பு ! மீசை வந்துடுச்சுடோய் நான் இப்டியே எஸ் ஆவுறன் என்றவன் , அருகில் நின்றிருந்த பரியாவிடம் , ஏந்தாயி ராவுக்கு கருவாட்டுக்குழம்பா வாசம் தூக்குது , பின்பக்கமா வாரேன் கொஞ்ச ஊத்திதாத்தா என்றான் .
அவனை வெளியே செல்லவிடாமல் அவன் முன் வந்த கோதண்டநாகா , அவனையும் பவன்புத்ராவையும் சந்தேகமாய் பார்த்தார் .
அப்பொழுது அங்கு வந்த ப்ரியா , அக்கா….நியூஸ் பாத்தியா நான் தான் எங்க பேப்பர்ல அத்தான பத்திதான் முதல் பக்கத்துல போடணும்னு சொன்னேன் என மகிழ்வாய் அவளை கட்டிக்கொண்டவள் ,
தன் பின் வந்த பவினை பார்த்து , இங்க பாரு கா எப்டியோ நீ பாஸாகி போலீசாகிட்ட . நம்ப அத்தான் மாதிரி அட்டகாசமான போலீசா இருக்கனும் , பவின் மாறி காமெடி போலீசா இருக்க கூடாது என வழக்கமாய் அவனை வம்பிழுக்க சொல்வதை சொல்லி ஓடத்துடங்க , பவின் அவளை விரட்டிக்கொண்டு சென்றான் .
எப்படியும் குறும்பாய் ஆரம்பித்த அவ்விளையாட்டை காதலாய் முடிப்பது பவினிற்க்கு கை வந்த கலை.
கோதண்டநாகா இன்னும் சந்தேகமாய் மகனை பார்த்து பவுனு என்றழைக்க அங்கு
அண்ணா என அழைத்துகொண்டே வந்தார் வஜ்ரநாகா .
தம்பியின் கண்ணசைவில் என்ன கண்டுகொண்டாரோ அதன் பின் ஜானகி என தன் மனைவியை அழைத்தவாறு அங்கிருந்து சென்றார் .
அன்று பவன்புத்ராவிற்கு அடிப்பட்டதில் தனக்கு பிடித்தமான அவனது வேலையையே விடவேண்டும் என கோதண்டநாகா சொல்ல , வஜ்ரநாகா தான் பார்த்துக்கொள்வதாய் சொன்னவர் , பதிலிற்கு இனிமே அதை பற்றி அவர் பேசவோ கேட்கவோ கூடாதென்ற வாக்கை வாங்கியிருந்தார்.
அதை எண்ணியே தற்பொழுது கோதண்டநாகா அமைதியாய் செல்ல , பன்ரொட்டியிடம் இருந்த தன் மகவை வாங்கிக்கொண்டு பரியாவும் , கவினை தூக்கி கொண்டு சௌந்தரம்மாளும்அவரவர் வேலையை பார்க்க சென்றனர் .
இப்பொழுது அங்கு பவன்புத்ரா , பன்ரொட்டி மற்றும் வஜ்ரநாகா மட்டுமே இருக்க
பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் ” சித்தப்புஉஉஉஉ ” என கத்திகொண்டே வஜ்ரநாகாவை கட்டிக்கொண்டனர் .
அவர்கள் மூவரின் எண்ணங்களும் ஒரே கோட்டில் சென்றது …
அந்த மாருதி வேனில் மருதனை தூக்கிப்போட்டு பவன்புத்ரா வண்டியை எடுக்க, பின்புறம் இருந்த தடியன்கள் நால்வரும் மருதனின் மேல் பாய , முன் அமர்ந்திருந்த பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் ,
மாப்ள நம்பளுக்கு இந்த போலீஸ், அதிரடிலாம் சுத்தமா செட்டாவாதுல. இந்தா ஹெட்செட்டே புடி அந்த கும்கி படத்தை போடுல பாப்போம் என்று பவன்புத்ரா சொல்ல ,
மாப்பு ! போன தடவ தான அது பார்த்தோம் இப்போ ராஜாராணி பார்ப்போம் மாப்பு என்றான்.( டேய் நீங்க ரெண்டு பேரும் ***டிவி ரசிகர்களா டா ) .
அன்றைய நியாபகத்தில் , அந்த ஐடியா கொடுத்த வஜ்ரநாகாவை கட்டிக்கொண்ட இருவரும் அவரின் இருகன்னத்திலும் முத்தமிட்டனர் .
அட விடுங்கப்பு …விடுங்க என இருவரையும் விலக்க ,
அங்கு திரும்ப வந்த கப்பீஷ்வர் இதை கண்டு , ஏலே என்ற மவன என்னல பண்றீங்க என கேட்டுகொண்டே இருவரின் முதுகிலும் தட்டினார் .
ஏன் பவன்புத்ரா கண்ணு , நம்ப பவினுக்கும் நீ செய்றாப்ல இந்த போலீஸ் ஜோலிய செய்ய காதுகுடுக்கண்ணு என அவனை பற்றி அறியாமல் மீசையை நீவியவாறு சொன்னார்.
பன்ரொட்டி , அட மீசை ! அவன் ஒருத்தன் தாம்யா ஒழுங்கா வேலைய பாக்குறவன் . அவனையும் எங்க கூட்டுல சேர்க்கணுமா . இந்த போலீஸ் வேல இவங்க குடும்பத்துல மாட்டிகிட்டு பட்றபாடு இருக்கே ஐயையோ என மனதினுள் நக்கலடித்தான் .
பவனஜ் தாத்தையா சொன்னதை கேட்டு- மாப்ள என்றழைக்க,
பதிலுக்கு பன்ரொட்டி மாப்பு என்றழைக்க ,
இருவரும் வஜ்ரநாகாவின் கையணைப்பில் இருந்தவாறு கோரஸாய் கப்பீஷ்வரிடம் , ” எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ” என்றனர் .
– சுபம் .