mtn-full
mtn-full
மாங்கல்யம் தந்து நானே
- வெண்பா
அத்தியாயம் 1
மாலை ஆறு மணி.பெங்களூர்.
அந்த பதினைந்து தள அடுக்குமாடிக் கட்டிடத்தை சுற்றிப் பார்த்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த வயதான தம்பதியர்.அவர்களுடன் அவர்கள் புதல்வன்.
எவ்வளவு ஏக்கர் தோட்டம் இருந்தாலும் தத்தம் தேவைக்கு ஏற்ப வீட்டைக் கட்டிவிட்டு மற்றவற்றை எல்லாம் நஞ்சை புஞ்சை நிலங்களாக மாற்றி விவசாயம் செய்யும் அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கும் குறைந்த இடத்தில் இவ்வளவு வீடுகளைப் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது.
எட்டாம் தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றவர்கள் வடக்கே இருந்த மூன்றாம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஐ கேட்சரின் மூலம் யார் வந்திருகிறார்கள் என்று பார்த்த விசாலாட்சி பின்பு கதவைத் திறந்து “வாங்க அத்தை!வாங்க மாமா!” என்று தன் மாமியார் மாமனாரை இன்முகமாக வரவேற்றார்.
வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க விசாலாட்சி சமையலறைக்குள் செல்ல “தாரிகா எங்க டா?” என்று தன் புதல்வன் பரந்தாமனிடம் கேட்டார் சௌந்தரம்.
“அவளுக்கு இன்னைக்கு காலேஜ் கடைசி நாள் ம்மா..அதனால இன்னும் வரல.பிரிண்ட்ஸ் கூட சேர்ந்து வெளிய போயிருக்கா” என்றவர் சொல்ல “என் தம்பி மணி ஆறு ஆச்சு…ஒரு வயசு புள்ளை இன்னுமா வீடு வராம இருக்கறது?” என்று சௌந்தரம் கோபப்பட
“நல்லா உங்க பையன்கிட்ட கேளுங்க அத்தை.எல்லாம் அவரு கொடுக்குற செல்லம் தான்” என்று தண்ணீர் சொம்பை மாமனார் ராஜுவின் கையில் கொடுத்துவிட்டு தன் மனக்குமுறலை தன் மாமியாரிடம் இறக்கிவைத்தார் விசாலாட்சி.
“வந்த உடனே மாமியாரும் மருமகளும் என் பேத்திய கறுச்சுக்கொட்ட ஆரம்பிச்சுட்டிங்களா?அவள் என்ன இன்னும் சின்ன பொண்ணா..அவளுக்கும் இருபத்திஒன்னு ஆச்சு.நல்லது எது கேட்டது எதுன்னு அவளுக்கு நல்லா தெரியும்” என்ற குடும்பத் தலைவரின் அதட்டலுக்கு பயந்து இரு பெண்மணிகளும் தங்கள் ராஜியமான சமையலறைக்குள் புகுந்தனர்.
விசாலாட்சி நான்கு பேருக்கும் காப்பி போட அங்கிருந்த சாப்பாட்டு மேஜை நாற்காலியை சமையலறைக்குள் போட்ட சௌந்தரம் மருமகளுடன் ஊர்க் கதைகளைப் பேசத் தொடங்கினார்.
தந்தையும் மகனும் பொதுவான விஷயங்களை வரவேற்பு அறையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க அழைப்புமணி ஒலித்தது.”தாரு வந்துட்டா” என்றபடி கதவை பரந்தாமன் திறக்க வந்திருந்ததோ துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டு வந்த வண்ணான்.துணிகளை வாங்கிவிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்தவர் மீண்டும் வந்து இருக்கையில் அமரும்பொழுது காப்பி வந்திருந்தது.
நால்வரும் காப்பி அருந்த விசாலாட்சி தான் ஆரம்பித்தார் ”தாருக்கு தான் படிப்பு முடுஞ்சுருச்சுல இனி ஜாதகத்தை எடுக்கலாம்.மாப்பிள்ளை அமைய யார் யார்க்கு எத்தனை நாள் ஆகும்ன்னு சொல்லமுடியாது”
“ஆமா அத்தை நானும் இதத்தான் இவர்கிட்ட சொன்ன.ஆனா கேட்டா தான?அவள் இன்னும் சின்ன பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொல்லறாரு” என்று மாமியாருடன் கூட்டணியில் இணைந்தார் விசாலாட்சி.
“ம்மா..அவளுக்கு இப்ப தான் ம்மா இருபத்தி ஒரு வயசாகுது.இன்னும் ஒரு வெங்காயம் கூட அறுக்கத் தெரியாது.என் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் நம்மகூட சந்தோசமா இருக்கட்டும்.அப்புறம் இருபத்தி மூணு வயசு ஆனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்’” என்று மகளுக்காக பரந்தாமன் பேச
“ஏன் டா புள்ளைக்கு இருபத்தி ஒரு வயசு ஆச்சு இன்னும் வெங்காயம் கூட அறுக்கத் தெரியாதுன்னு சொன்ன ஊர் உலகம் நம்மளத்தான்டா தப்பாப் பேசும்.நீ செல்லம் கொடுக்கலாம்.ஆனா எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கனும்.இப்படியே அவளுக்கு நீ செல்லம் கொடுத்துட்டே இருந்தன்னா போற எடத்துல அவளுக்கு தான் கஷ்டம்” என்று மகனைக் காய
“முதல்ல ஜாதகம் பாக்கலாம்.அப்புறம் முடிவு எடுக்கலாம்.இப்போதைக்கு நீங்க மூணு பெரும் கொஞ்சம் சும்மா இருங்க”என்று தற்காலிகமாக அவ்வாக்குவாதத்தை முடித்தார் ராஜு.
“பத்து மணிநேரம் பயணம் பண்ணி வந்துருக்கிங்க.கொஞ்ச நேரம் படுங்க” என்று பரந்தாமன் சொல்ல விசாலாட்சி அவர்களை படுக்கை அறைக்கு கூட்டிச் சென்றார்.
முதியோர்கள் ஓய்வெடுக்க விசாலாட்சி சமையலை கவனிக்க சென்றார்.பரந்தாமனுக்கு தன் அண்ணன் பத்மநாபனிடம் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேச ஆரம்பித்தார்.
“ஹலோ அண்ணா..அம்மா அப்பா அஞ்சரை மணிக்கே வந்துட்டாங்க” என்று சொன்னவர் பின்பு குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.அவர் பேசிவிட்டு அலைப்பேசியை வைக்கும் பொழுது அரை மணிநேரம் கடந்திருந்தது.
மணி எட்டு.அப்பொழுதும் தாரிகாவை காணாததால் அவளுக்கு அழைக்க அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் “ஏங்க மணி எட்டு ஆச்சு.இன்னும் இவளைக் காணோம் ஒரு போன் பண்ணி பாருங்க” என்று சொல்ல “இப்ப தான் பண்ண.ஸ்விட்ச் ஆப்ன்னு வருது என்றவர் வ்தத்ஸ் ஆப்பை திறந்தார்.
தன் நண்பர்களுடன் அடுத்த புகைப்படங்களை எல்லாம் அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தவள் அதன் பின்பு ஆன்லைன் வரவே இல்லை.திரும்ப அழைத்துப் பார்க்க அதே பதில் தான் வந்தது.
“நான் அவள் பிரண்ட் கமலிக்கு கூப்பிட்டு பார்க்கிற” என்ற விசாலாட்சி அப்பெண்ணிற்கு தொடர்புகொள்ள அவள் எடுக்கவே இல்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் தொடர்பு எடுக்கப்படவே இல்லை.மணி வேறு எட்டே முக்கால் ஆகிவிட்டுருந்தது.பெற்றோர் இருவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.
தூங்கி எழுந்த முதியோர்களும் வரவேற்பறைக்கு வந்துவிட அவர்கள் கேட்ட கேள்விக்கு பரந்தாமனால் பதில் சொல்ல முடியவில்லை.இப்பொழுது எங்கு சென்று அவளைத் தேடுவது என்றும் பரந்தாமனுக்கு தெரியவில்லை.வெளிய செல்கிறேன் என்று மட்டுமே சொன்னவள் எங்கே செல்கிறேன் என்று சொல்லவில்லை.
பெண் கேட்டவுடன் எதைப் பற்றியும் கேட்காமல் சரி என்று சொன்ன தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டவர் கையைப் பிசைந்து கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.
ஒன்பது மணிக்கு வீட்டின் அழைப்பு மணி ஒளிக்க வெளியே எல்லோரையும் பயப்படுத்திய தாரிகா கூலாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் உள்ளே வந்தவுடன் தான் நால்வருக்கும் உயிரே வந்தது.
உள்ளே நுழைந்தவுடன் அமர்ந்திருந்த தாத்தா பாட்டியைக் கண்டவள் “ஹாய் தாத்தா!எப்படி இருக்கீங்க?” என்று கேட்க “நல்லா இருக்க தாறு.இது தான் வீட்டுக்கு வர்ற நேரமா?” என்று மென்மையாக கேட்க சௌந்தரத்திற்கோ கோபம் தாளமுடியவில்லை.
“ஏன் டி வயசு புள்ள இப்ப ராத்திரி ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வர்றதா?நீ வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு உக்காந்துட்டு இருந்தோம்” என்று கோபமாக திட்ட
“எங்க நெருப்பவே காணோம்?” என்று அவர் மடியில் தேடிய பேத்தியை முறைத்தவர் அப்பொழுது தான் அவள் உடையை கவனித்தார். ஆங்காங்கே கிழிந்து தொங்கும் அடர் நீல நிற ஜீன்ஸ் ஓபன் ஷோல்டர்ஸ் டாப் அணிந்திருந்தாள்.கழுத்தில் எதுவும் போடவில்லை, நெற்றியில் பொட்டில்லை.காதில் ஒரு சிறிய வைரத் தோடு.முடியை விரித்து விட்டுருந்தால்.ஆகமொத்தத்தில் ஒரு நவநாக மங்கை!
அவள் உடையைப் பார்த்து அஷ்டகோணமாக தன் முகத்தை திருப்பியவர் தன் மருமகளிடம் திரும்பி “ஏன் விசா உனக்கு உன் பொண்ண எப்படி வளர்க்கணும்ன்னு தெரியுமா தெரியாதா?இப்படியா உடுத்தி ஒரு வயசுக்கு வந்த பொண்ண வெளிய அனுப்புவ?” என்று கோபமாகக் கேட்க விசாலாட்சியின் முகம் அப்படியே கூம்பிப்போய்விட்டது.கல்யாணம் ஆனது முதல் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாத மாமியார் நறுக்கென்று ஒரு சொல் கேட்கவும் அவரால் தாங்க முடியவில்லை.
அவரும்தான் பாவம் என்ன செய்வர்?அவர் எவ்வளவு சொன்னாலும் இப்பெண் கேட்பதில்லை.பெண்ணை ‘ம்ம்’ என்று சொல்லவதற்கு முன் ‘என்னடி என் பொண்ண திட்டுற?’ என்று சண்டைக்கு வரும் கணவர்.அதனால் அவராலும் பெண்ணை மாற்ற முடியவில்லை.
மருமகளின் முகம் சிறுத்துவிட்டதைப் பார்த்தவர் அதற்குமேல் அவரைத் திட்டாமல் தன் மகனிடம் திரும்பியவர் “ஏன் டா நீ தான் லட்சக்கணக்குள சம்பரிக்கிறையே உன் பொண்ணுக்கு ஒரு நல்ல டிரஸ் வாங்கித் தரக்கூடாது?கழுத்துல ஒரு சங்கிலி கூட இல்லாம இப்படியா மொட்ட கழுத்தா புள்ளைய விடுவ?” என்று கோபப்பட
“ம்மா..இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாம் அப்படித்தான் தான்.இது எல்லாம் இங்க சகஜம்.என்னைக்கு இருந்தாலும் நாம இன்னொரு வீட்டுக்கு கட்டிக் கொடுக்க போறோம்.நம்ம வீட்ல இருக்க வரை அவளுக்கு பிடிச்ச மாதிரி சந்தோசமா இருக்கட்டும்.இன்னைக்கு ஏதோ காலேஜ் கடைசி நாள் அதனால பிரிண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு லேட்டா வந்துட்டா” என்று மகளுக்கு பரிந்து பேச இப்பொழுதும் மகள் செய்த தப்பை அவளுக்கு சுட்டிக்காட்டாமல் அவளுக்கு ஒத்துஊதும் கணவரைக் கண்டு விசாலாட்சிக்கு ஆற்றாமையாக இருந்தது.
“இது தான் இந்த ஊரோட கலாச்சாரம்.இங்க என் பேத்தி இப்படித்தான் வளருவானா அவள் ஒன்னு இங்க இருக்க வேண்டாம்.எங்க கூட ஊருக்கு வந்து இருக்கட்டும்.எந்த ஊர்ல வளந்தாலும் நம்ம கலாச்சாரம் குடும்பம் எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தான வளக்கணும்?” என்று மகனிடம் கோபப்பட
“பாட்டி எதுக்கு இப்ப நீங்க என் அப்பாவ திட்டுறிங்க?இதுதான் பேஷன் .உங்களை மாதிரி இருந்தா எல்லாரும் பட்டிக்காடுன்னு சொல்லிருவாங்க”என்று தாரு தன் பாட்டியிடம் மல்லுகட்ட
“உங்க அப்பாவ சொன்னா மட்டும் அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வருமே?உங்க அப்பன் உன்ன சரியா வளர்த்திருந்தா நான் ஏன் சொல்ல போற?” என்று அவரும் பதிலுக்கு சண்டைப் பிடிக்க அவரை முறைத்தவள் மீண்டும் வாய் திறக்கும் முன் ராஜு தாத்தா குறிக்கிட்டார்.
தந்தை ‘இதற்கு மேல் எதுவும் பேசாதே’ என்பது போல் மகளிடம் கண்களால் பேச அமைதியானால்.
சிறு வயதில் இருந்தே பெங்களூரில் பிறந்து வளர்ந்ததினால் தாரிகவிற்கு இவை எதுவும் தப்பாகத் தெரியவில்லை.’எல்லாரும் இங்க இப்படிதான டிரஸ் பண்ணறாங்க…இதுல என்ன இருக்கு’ என்ற எண்ணம் அவளுக்கு.மேலும் தன் தாத்தா பாட்டியை பிற்போக்கு சிந்தனையாளர்களாகவே கருதினால்.பெரியோர்கள் சொல்வதிலும் ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினால்.காரணம் அவள் வளர்ந்த சூழல்!
“நீங்க இரண்டு பெரும் உள்ள போய் சமையலை பாருங்க” என்று பெண்மணிகளை உள்ளே அனுப்பியவர் மகனின் முகம் பார்த்தார்.தந்தை தன்னைப் பார்க்கவும் புரிந்து கொண்டவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
“நீ இப்ப பண்ணது தப்பு சரின்னு நான் இப்ப சொல்ல வரல சாமி.எங்க எல்லாரையும் விட இந்த காலத்து புள்ள உனக்கு நிறையத் தெரியுமுனு நான் ஒதுக்குற.ஆனாலும் நம்ம குடும்பத்துக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கு.காலம் காலமா நாம அதை பின்பற்றிட்டு வரோம்.அது உன்னால எந்த விதத்துளையும் கெட்டுப் போகக் கூடாது.
இப்பகூட நீ நம்ம ஊர்த் தெருல நடந்து போனினா ‘முத்துசாமி அய்யன் வீட்டு பாப்பா நடந்து போகுதுன்னு’ சொல்லுவாங்களே தவிர தாரிகா நடந்து போறான்னு சொல்லமாட்டாங்கஎல்லாம் புருஞ்சு நடந்துக்கோ” என்றவர் அவள் தலையை தடவிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
தன் நண்பருடன் பேசிவிட்டு வெளியே வந்த பரந்தாமன் “ஏன் தங்கம் இன்னைக்கு இவ்வளவு லேட்?போன் வேற ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு.அப்பா ரொம்ப பயந்துட்டேன் டா” என்று மகளிடம் கேட்க “செல்பி எடுத்து எடுத்து சார்ஜ் போயிருச்சு” என்றவள் சொல்ல “இன்னைக்கு சிக்பெட் போயிருந்திய?” என்று கேட்டதற்கு ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின்பு “ஆமா ப்பா..அம்மா கூப்டற மாதிரி இருக்கு.நான் போய் பார்கிறேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.
மகளின் தடுமாற்றம் அவருக்கு எதையோ உணர்த்த அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.பிறந்ததில் இருந்து எல்லாவற்றையும் தந்தையிடம் பகிர்பவள் இன்று ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றது அவருக்கு எதுவோ தப்பாகப் பட்டது.
அத்தியாயம் 2
தாரிகா கோவில்பாளையம் வந்து இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது.அவள் பரந்தாமனிடம் பதில் பேசாமல் மழுப்பிச் சென்றதால் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
தாரிகவிடம் ஊருக்குப் போய் சிறிது காலம் தங்கிவிட்டு வரலாம் என்று மட்டும் சொன்னவர் மற்றவர்களிடம் அவள் ஜாதகத்தை தங்கள் குடும்ப ஜோசியரிடம் சென்று பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார்.அவரின் மனதில் திருமண யோகம் இப்பொழுது இருந்தால் உடனடியாக திருமணம் முடித்துவிடலாம் என்ற எண்ணம் இருந்தது.
தாரிகா தன் சொந்த ஊருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.பெற்றோர் ஊருக்குச் செல்லும்பொழுது எல்லாம் அவளுக்கு ஏதாவது கல்லூரியில் முக்கியமான வேலைகள் இருந்துகொண்டே
இருந்ததினால் அவளால் ஊருக்குச் செல்லமுடியவில்லை.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து இறங்கியவர்களை கூட்டிச் செல்ல வந்திருந்தான் கார்த்திக்.பத்மநாபன் ருக்மணி தம்பதியரின் புதல்வன்!
தங்கள் உடைமைகளை தள்ளிக்கொண்டு வருபவர்களைக் கண்டவன் விரிந்த புன்னகையுடன் அவர்கள் அருகில் சென்றான்.”வாங்க சித்தப்பா!வாங்க சித்தி!” என்றவன் தாரிகாவைப் பார்த்து “ஒய் வாண்டு!என்ன இவ்வளவு பெருசா வளர்ந்திட்ட?போன வருஷம் கூட குட்டையா தான இருந்த?” என்று அவளின் தலையை செல்லமாக தட்டி வம்பு வளர்க்க
அவன் முதுகில் ஒன்று போட்டவள் “ஏன் டா எரும நீ கூட தான் தடி மாடு மாறி வளர்ந்துருக்க நான் ஏதாச்சும் கேட்டன?” என்று கோபப்பட விசாலாட்சி இடைபுகுந்தி “ஏன் டி கார்த்தி விளையாட்டுக்கு தான சொன்னான்.அதுக்கு போயா இப்படி
சண்டைப் போடுவ?”என்றவளை திட்டினார்.
“சித்தி இது எங்க அண்ணா தங்கச்சிக்குள்ள இருக்க விஷயம்.நாங்க இப்ப சண்டை போடுவோம் அப்புறம் சேர்ந்துப்போம்.இதுல நீங்க தலையிடக்கூடாது” என்று கார்த்திக் சிரித்துக்கொண்டே கூற இருவரும் ஹை-பை(hi-fi)கொடுத்துக் கொண்டனர்.
“நீ இவங்க நடுவுல போகாத விசா.போனா நம்மள தான் கிறுக்கா ஆக்கிருவாங்க” என்ற சௌந்தரம் பாட்டி”ஏன் டா உங்க சித்தப்பா குடும்பத்துகிட்ட மட்டும் தான் பேசுவியா?எங்க ரெண்டு பேரையும்
கண்ணுக்கு தெரியலையா?” என்று பேரனிடம் செல்லமாக கோபித்துக்கொள்ள
“சித்தப்பா வீட்ல போய் ஒரு மாசமாச்சு டேரா போடுவிங்க.இந்த பெருசுங்க தொல்லை இல்லாம நாம கொஞ்சம் சந்தோசமா
இருக்கலாமுன்னு பாத்தா போனவுடனே வந்துட்டிங்க”என்றவன் சோகமாக சொல்ல பரந்தாமன் “ஏன் டா மகனே எங்க அம்மா அப்பா உனக்கு பெருசுங்களா??” என்று காதைப் பிடித்து திருக அனைவரும் சிரித்தனர்.
தாரிகா தான் கோவில்பாளையம் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.ஆனால் பத்மநாபனின் குடும்பம் வருடத்திற்கு ஒரு முறை பெங்களூர் சென்று தன் தம்பி குடும்பத்தாருடன் ஒரு வாரமாவது
இருந்து வருவார்கள்.அதனால் கார்த்திக்கிற்கும் தாரிகவிற்கும் நல்ல உறவு இருந்தது.எவ்வளவு சண்டை வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
தாரிகா பெங்களூரில் தன் நண்பர்களுடன் வெளியே செல்லலாம் என்று நினைத்திருந்தாள்.ஆனால் தந்தை தன் சொல்லைக் கேட்காமல் இங்கே அழைத்து வந்தது கோபம்.எப்பொழுதும் தான் என்ன
சொன்னாலும் அதை செய்து கொடுக்கும் தந்தை இன்று அவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காமல் இங்கு அழைத்து வந்துவிட்டாரே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது.
அதனால் தான் கார்த்திக்கிடம் அப்படி பேசியது.அவனும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான்.அவளின் கோபம் அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் விட்டுவிட்டான்.இனோவாவில் கார்த்திக் ஓட்டுனர் இருக்கையிலும் தாரு அதற்குப் பக்கத்து இருக்கையிலும் அமர்ந்து கொள்ள பெரியவர்கள் பின்னால் அமர்ந்து கொண்டனர்.முன்புறம் அமர்ந்த இருவரும் நாயம் அடித்துக்கொண்டும் இடையிடையே சௌந்தரம் பாட்டியைக் வம்பிழுத்துக்கொண்டும் வந்தனர்.
கார் வந்து வீட்டின் முன்புறம் நின்றதும் “தாரு கண்ணு.எப்படி டா இருக்க?” என்றபடி வந்த பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார்.அவருக்குப் பின் வந்த ருக்மணி தாருவை அணைத்துக்கொண்டார்.பின்பு அனைவரும் வீட்டின் உள்ளே சென்றனர்.
கோவில்பாளையம் வீடு தொட்டிக்கட்டி வீடு.வீட்டைச் சுற்றி தென்னந்தோப்பு.வீட்டிற்கு வெளியே மாட்டுத் தொழுவம்.அதற்குப் பக்கத்தில் ஆட்டுக் கொட்டகை.ஆட்டுக் கொட்டகையின் பக்கத்தில் இரண்டு நாய்க்குட்டிகள். ஆங்காங்கே மேயும் நாட்டுக் கோழிகள்.வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் கிணற்றுடன் பம்பு செட்டு.எப்பொழுதும் பறவைகளின் கீச்…கீச் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
இங்கு வந்ததில் இருந்து தாரிகவிற்கு மிகவும் போர் அடித்தது.பெங்களூரில் எப்பொழுதும் வீட்டில் இருந்தால் பத்து மணிக்கு முன்பாக அவள் எழுந்ததாக சரித்திரமே இல்லை.ஆனால் இங்கு வந்ததில் இருந்து ஏழு மணிக்கு மேல் சௌந்தரம் பாட்டி தூங்கவிடுவதில்லை.ஏழு மணிக்கு எழுவதற்கே “பொட்ட புள்ள சூரியன் வந்ததுக்கு அப்புறமும் தூங்குனா போற எடத்துல என்ன சொல்லுவாங்க?” என்ற அர்ச்சனையை கேட்டுத் தான் தினமும் எழுவாள்.
அவளுக்கு பரிந்து பேச யாரவது வந்தால் அவர்களிடம் “அப்புறம் போற இடத்துல நம்மள தான் தப்பு சொல்லுவாங்க.இன்னும் அவள் என்ன சின்ன பொண்ணா?எல்லாரும் சேர்ந்து செல்லம் கொடுத்து கொடுத்துத் தான் அவளைக் கெடுக்குறிங்க.முக்கியமா அவள் அப்பன்”என்று அவர்களின் வாயை அடைத்து விடுவார்.
தந்தை இப்பொழுது எல்லாம் முன்பு போல் தன்னிடம் பேசுவதில்லை,நடந்துகொள்ளவதில்லை என்ற வருத்தம் அவள் மனதில் இருந்தது. அவரிடம் தனியாகப் பேசும் வாய்ப்பும் இங்கு வந்ததில் இருந்து அவளுக்கு கிடைக்கவில்லை.’ஒரு வேலை உண்மை எல்லாம் தெரிந்ததால் தான் இப்படி இருக்கிறாரா?’ என்ற கேள்வி வேறு அவள் மனதைக் குடைந்துக் கொண்டே இருந்தது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உண்மையை எல்லாம் தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் இருந்தவளுக்கு இந்த அமைதியான வாழ்க்கை ரசிக்கவில்லை.பெங்களூரில்
எப்பொழுதும் மொபைல்,லேப்டாப்,வீடியோ கேம்ஸ்,நண்பர்களுடன் வெளிய சுற்றுதல் என்று இருந்தவளுக்கு கிராமத்து வாழ்க்கை சுத்தமாகப் பிடிக்கவில்லை.
வித விதமான மால்களையும்,உணவகங்களையும் சுற்றிப் பார்த்தவளுக்கு இந்தத் தோட்டங்களையும்,வயல்களையும் சுற்றிப்பார்க்க பிடிக்கவில்லை.
கார்த்திக் இருந்தால் பொழுது நன்றாகக் கழியும்.ஆனால் அவன் வெளியே சென்று விட்டால் தாருவிற்கு மிகவும் போர் அடித்து விடும்.
பத்மநாபன் பஞ்சு தொழிற்சாலை வைத்திருந்தார்.கார்த்திக்கும் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டான்.ஆண்கள் நால்வரும் தொழிற்சாலைக்கு கிளம்பிவிட்டாள் தாரிகவிற்கு பொழுதே போகாது.வாட்ஸ் ஆப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம்,யூ டியுப் என நேரத்தை அரும்பாடு பட்டு தள்ளிக்கொண்டு இருந்தாள்.
.வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு சமையல் வேலை,தோட்டத்தில் வேலை என்று வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் நம் தாரிகாவிற்கு தான் இவையெல்லாம் பிடிக்காதே அதனால் இருபத்தி நான்கு மணி நேரமும் போனும் கையுமாகத் தான் இருந்தாள்.
தினமும் தோட்டத்தில் இருக்கும் பூக்கள்,செடிகள், மாடு கன்றுகளை எல்லாம் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு விடுவாள்.கார்த்திக் கூட கேலி செய்வான் “நீ ஊருக்கு வந்ததுல இருந்து பண்ணற ஒரே உருப்படியான வேலை ஸ்டேட்டஸ் போடுறது தான்” என்று.ஆனால் அவளுக்குத் தான் ஸ்டேடஸ் மிகவும் பிடித்தமான ஒன்றே!அதனால் அவன் சொல்வதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாள்.
இந்த இடைப்பட்ட நாட்களில் ஒரு நாள் ராஜுவும் பரந்தாமனும் ஜோசியரைப் போய் பார்த்துவிட்டு வந்தனர்.அவர் இப்பொழுது நேரம் நன்றாக இருப்பதால் இப்பொழுது வரன் பார்க்க ஆரம்பித்தாள் உடனே அமைந்து விடும் என்றும் சொந்தத்தில் மாப்பிள்ளை அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சொன்னார்.
அன்று அமாவசை என்பதால் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரலாம் என்று முடிவு செய்தவர்கள்.அப்படியே தாரிகவின் ஜாதகத்தையும் அம்மனிடம் வைத்து பூஜை செய்துவிட்டு வந்து ஜாதகம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தனர்.இது தாரிகவைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும்.பரந்தாமன் தான் அவளிடம் இதைப்பற்றி இப்பொழுது சொல்லவேண்டாம் என்று சொல்லி இருந்தார்.
இரவே பெண்கள் மூவரும் சேர்ந்து புளி சாதம்,தயிர் சாதம் செய்து விட்டனர்.அவர்கள் குலதெய்வம் கோவில் காங்கேயத்தில் இருந்ததால் விடியற்காலையிலையே புறப்பட்டனர்.பொங்கல் வைத்து சாமி கும்பிட்டவர்கள் பின்பு அங்கிருந்தவர்களுக்கு பொங்கலை விநியோகித்து விட்டு தாங்கள் கொண்டு வந்ததை சாப்பிட்டனர்.
அம்மனை தரிசித்தி வந்ததில் அனைவரின் மனதும் திருப்தியாக இருந்தது.பரந்தாமன் மனதில் அரித்துக் கொண்டிருந்த கவலை நீங்கி விட்டதைப் போல் உணர்ந்தார்.இனி எல்லாம் அந்த அம்மன் பார்த்துக் கொள்ளவார் என்ற தெம்பு வந்திருந்தது.
அனைவரும் தரிசனம் நன்றாக இருந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்க இவற்றில் எல்லாம் ஒட்டாமல் இருந்தது நம் தாரிகா தான்.காரணம் அவளுக்கு கடவுள் மேல் அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை.வீட்டில் அனைவரும் கோவிலுக்கு வந்ததால் அவளும் வந்தால் அவ்வளவே!
அங்கிருந்த இயற்கை கட்சிகளை எல்லாம் படம்பிடித்து சோசியல் மீடியாக்களில் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டு இருந்தாள்.கோவிலுக்கு வந்ததில் இருந்து அவள் செய்த வேலை அது ஒன்றே!வீட்டில் இருந்து கிளம்பியது முதல் பொங்கல் வைக்க ஆரம்பித்தது,பொங்கல் பொங்கியது,சாமிக்கு படையல் போட்டது,கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தது என அனைத்தையும் ஸ்டேட்டஸ் போட்டு விட்டாள்.எதற்கு எடுத்தாலும் செல்பி என்ன செய்தாலும் செல்பி என அனைவரையும் ஒரு வழி செய்துவிட்டாள்.
குலதெய்வம் கோவில் சென்றுவிட்டு வந்த அடுத்த நாள் பரந்தாமனின் குடும்பம் விசாலாட்சியின் தந்தை வீட்டிற்கு செல்லவதாக முடிவுசெய்திருந்தனர்.விசாலாட்சியின் தந்தை ஊர் கோவில்பாளையம் பக்கதிலுள்ள நீலிபாளையம்.கோவில்பாளையத்திலிருந்து முக்கால் மணி நேரப் பயணம் தான்.
தாரிகா உற்சாகமாக கிளம்பினாள்.காரணம் அங்கு அவள் தான் ராணி அவள் வைத்தது தான் சட்டம்!அவ்வளவு செல்லம்.அங்கு செல்லலாம் என்று தந்தை கூறியவுடன் அவள் மனதில் முதலில் தோன்றியது இதுதான்’அப்பாடா அங்கே இருக்க வரைக்கும் எத்தன மணி வரைக்கும் வேணாலும் தூங்கிக்கலாம்’ என்று.
காரில் செல்லும்பொழுது வழியில் இருக்கும் இயற்கை காட்சிகளை எல்லாம் படம் பிடித்தாள்.அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டி விடவே விசாலாட்சி தூங்கிக்கொண்டிருந்ததால்பரந்தாமனிடம் உண்மையைக் கூறி விடலாமா என்று நினைத்தாள்.ஆனால் தீடிரென்று அவர் முழித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தவள் அந்த முடிவைக் கைவிட்டாள்.
முக்கால் மணிநேரப் பயணத்திற்குப் பின்பு அவர்கள் விசாலாட்சியின் தந்தை வீட்டினை அடைந்தனர்.செல்லமுத்து பத்மாவதி தம்பதியரின் இளைய மகள் தான் விசாலாட்சி.விசாலாட்சிக்கு முன்பு ஒரு அண்ணன்.பெயர் முருகானந்தம்.முருகானந்தம் பானுமதி தம்பதியினர்க்கு தாமரை கமலேஷ் என்ற இரு மக்கள். தாமரை திருமணமாகி தன் கணவன் முத்துராகவன் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறாள்.
கமலேஷுக்கும் தாரிகவிற்கும் ஒரே வயது தான்.ஆனால் எப்பொழுதும் எலியையும் பூனையையும் போல் அடித்துக் கொள்வார்கள்.காரணம் தாரிகா இங்கு வாந்தால் எல்லாரும் அவளை மட்டும் கொஞ்சுகிறார்கள் தன்னைக் கொஞ்சுவதில்லை என்று சிறிய வயதில் கமலேஷிற்கு இருந்த பொறாமை.
ஆனால் தாமரையை தாரிகவிற்கு ரொம்பப் பிடிக்கும்.”அக்கா அக்கா “ என்று சின்ன வயதில் எல்லாம் அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருப்பாள்.
வீட்டின் முன்பு கார் சென்று நின்றது.முன் புறம் இருந்த அகலமான வராண்டாவில் மஞ்சளைக் காயப்போட்டு இருந்தனர்.கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வெளியே வந்த கமலேஷ் இவர்களை பாசமாக வரவேற்றான்.”வாங்க அத்தை!வாங்க மாமா!” என்றவன் “ஆத்தா அத்தை மாமா வந்தாச்சு” என்று குரல் கொடுத்தான்.
‘ஆத்தாவாம் ஆத்தா..பாட்டின்னு கூப்பிடாம ஆத்தா அப்பாருன்னு’ என்று மனதுக்குள் நினைக்க அதற்குள் வீட்டினுள் இருந்து அனைவரும் வந்துவிட்டனர்.
.”வா தாரு!எப்படி இருக்க?காலேஜ் எல்லாம் முடுஞ்சுச்சா?” என்று கமலேஷ் இயல்பாகக் கேட்க அவளுக்குத் தான் பேசியது அவனா என்று நம்ப முடியவில்லை.”நல்லா இருக்கேன்” என்றவள் சொல்ல “சின்ன வயசில விவரம் தெரியாம சண்ட போட்டது.அதை எல்லாம் பெருசா எடுத்துக்காத” என்றவன் சொல்ல தாருவும் ஒரு புன்னகையுடன் தலையாட்டினாள்.
“வாங்க மாப்பிள்ளை!வா விசா!” என்று பெண்ணையும் மாப்பிளையையும் வரவேற்ற பத்மாவதி “என் தங்கம்! உள்ள வா..பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.இந்த அம்மிச்சிய பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா?” என்று கேட்டு பேத்தியை உச்சி முகர்ந்து உள்ளே அழைத்துச் சென்றார்.
“இல்லை பாட்டி லீவ் கிடைக்கல அதான் வரல” என்று சொல்ல “பாட்டின்னு கூப்பிடாத அம்மிச்சின்னு கூப்பிடுன்னு உனக்கு எத்தனை டைம் சொல்லறது?” என்று விசாலாட்சி கடிய “அவளுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிட்டும்.இதை எல்லாம் ஏன் பெருசு பண்ணற” என்று பரந்தாமன் தன் மனைவியை அடக்கிவிட்டார்.
வந்தவர்களுக்கு பானுமதி காப்பி பலகாரம் கொண்டு வர அனைவரும் பேசியபடியே உண்டனர்.இப்பொழுது கமலேஷிற்கும் தாருவிற்கும் இருந்த மனக்கசப்பு சரியானதால் இருவரும் தத்தம் கல்லூரியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
“தாமரை அக்கா எப்ப வருவா அத்தை?” என்று தாரு கேட்க “பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.அதனால வரல” என்றவர் சொல்ல அதற்குள் தாருவிற்கு தாமரையிடம் இருந்து போன் வந்திருந்தது.
அத்தியாயம் மூன்று
தாரிகா கோபத்துடன் தன் தந்தையை எதிர்பார்த்து தன் ரூமில் காத்திருந்தாள்.காரணம் இன்று நடந்த நிகழ்வுகள்!
தந்தை உள்ளே நுழைந்தவுடன் தன் முகத்தைத் திருப்பியவள் ஒன்றும் பேசவில்லை.”கோபமா தங்கம்?” என்ற தந்தையின் கேள்விக்கு பதிலில்லை.”அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான பண்ணுவேன்.இவ்வளவு வருசத்துல அப்பா உனக்கு ஏதாச்சும் பிடிக்காதது பண்ணிருக்கேனா?இந்த ஒரு விஷயத்துல அப்பா சொல்லறத கேட்க மாட்டிய?” என்று மிகவும் சோகமான குரலில் கேட்க “ப்பா…” என்று திரும்பியவள்
“நீங்க இப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறதுக்கு காரணம் அந்த சிட்பெட்ல நடந்த விஷயம் நால தான?” என்று கேட்க அவள் கேள்வியில் அவர் சற்று தடுமாறிவிட்டார்.
பரந்தாமனிடமிருந்து பதில் வராததால் தாருவே தொடர்ந்தாள்”அப்ப நீங்க என்ன நம்பல..” என்ற உடைந்த குரலில் கேட்க “அப்படி எல்லாம் இல்லை டா” என்றவர் சொல்லும் முன் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.
“அச்சோ என்ன டா இது?இதுக்கு எல்லாம் போய் அழுதுட்டு?” என்றவர் மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார்.”அப்பாக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை.பட் இந்த உலகத்து மேல தான் நம்பிக்கை இல்லை.நீ அந்த பையன்கிட்ட பிரின்ட்லியா தான் பழகிருப்ப.பட் எல்லாரும் இந்த உலகத்துல நல்லவங்க இல்லை தங்கம்” என்றவர் விளக்க
“உங்களுக்கு என் மேல உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தா என்கிட்ட இதைப்பத்தி டைரக்ட்டா கேட்டுருப்பிங்க.பட் நீங்க இதைபத்தி ஒண்ணுமே என்கிட்ட பேசாம எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டிங்க” என்றவள் தந்தையை குற்றம் சாட்ட
“நீ என்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தா நான் கேட்டப்பவே சொல்லிருப்பே.பட் நீ சொல்லல.சோ அப்பா கிட்ட சொல்ல வேண்டாம் நினைக்கிறியோன்னு நினைச்சுதான் அப்பா இத பத்தி உங்கிட்ட கேட்கல” என்றவர் தன் நிலையை விளக்க
“உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லப் ப்பா…அன்னைக்கு தாத்தா பாட்டி எல்லாம் வந்திருந்தது நால அப்புறம் சொல்லிக்கலாம் நினைச்ச.அப்புறம் நாம ஊருக்கு வந்துட்டோம்…உங்ககிட்ட தனியா பேசுற சான்ஸ் எனக்கு கிடைக்கவேயில்லை” என்றவள் ஆதங்கத்துடன் சொல்ல
அவள் தலையை கோதிவிட்டவர் “பாராவயில்லை விடு.இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க “அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லற” என்றவள் அன்றைய நாளின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“எக்ஸாம் முடுச்சுட்டு நான் பிரிண்ட்ஸ் கூட மூவி போனேன்.அப்புறம் அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஐபாகோ போனோம்.அங்கே ஏற்கனவே விக்னேஷ் இருந்தான்.என் பிரிண்ட்ஸ் ‘அவன் உங்கிட்ட தனியா பேசனும் சொன்னான்” சொன்னங்க
.விக்னேஷ் என்னோட காலேஜ் மேட்.நான் போகமாட்ட சொன்னேன்.பட் அவங்க தான் கம்பெல் பண்ணி அனுப்பினாங்க.அவன் நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னான்.பட் நான் முடியாது சொல்லறதுக்கு முன்னாடி நிறைய டைலாக்ஸ் பேசி நாளைக்கு உன்னோட பதில் சொல்லு சொன்னான்.
நானும் அவன பாக்க ரொம்ப பாவமா இருந்தது நால நாளைக்கு சொல்லறேன் சொன்ன.அடுத்த நாள் எப்படி இருந்தாலும் அவன்கிட்ட நோ தான் சொல்லிருப்ப” என்றவள் சொல்ல தன் பெண்ணை நினைத்து பெருமைப்பட்டார் பரந்தாமன்.
தன் நண்பர் ஒருவர் தங்கள் பெண் ஒரு பையனுடன் தனியாக ஐஸ்கிரீம் பார்லரில் அமர்ந்து அரைமணி நேரமாக பேசிக் கொண்டிருந்தாள் என்று சொல்ல பரந்தாமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.காரணம் தாருவிற்கு ஆண் நண்பர்கள் இல்லை.
அதுவும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல அவருக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.தன் பெண்ணின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இப்படி ஒருவர் சொல்ல ‘அவளோட பிரண்ட்டா இருக்கும்’ என்று அவரிடம் சொல்லிவிட்டார்.
மகளிடம் இதைப் பற்றி கேட்க அவள் மழுப்பிச் சென்றதும் தான் அவருக்கு பயம் எழுந்தது.பிறந்தது முதல் எதையும் மறைக்காத மகள் ஒரு பையனுடன் தனியாக வெளியே இருந்ததைப் பற்றி தான் கேட்டதும் கூட சொல்லவில்லை என்பதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
என்ன தான் மிகவும் செல்லமாக வளர்த்தாலும் திருமண விஷயத்தில் அவர் காட்டும் மாப்பிள்ளையைத் தான் தன் பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதனால் தான் இந்த ஏற்பாடு.
“சரி விடு இதைப்பத்தி இனி பேச வேண்டாம்.மாப்பிள்ளை பிடிச்சுருக்கா இல்லையா? சொல்லு” என்றவர் கேட்க கீழே குனிந்து மௌனமாக தலையசைத்தாள்.”உண்மையாவே மாப்பிளையை பிடிச்சுருக்கா டா?இல்லை அப்பா சொல்றதுக்காக ஓகே சொல்லறியா?”என்று சந்தேகமாகக் கேட்க முகத்தில் வெட்கப்புன்னகையுடன் தலையசைத்தாள்.
நடந்தது இதுதான்!
நீலிபாளையம் சென்றவர்கள் அடுத்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஊர்க் காவல் தெய்வம் மருதகாளியம்மன் கோவிலில் சங்கல்ப்ப பூஜை இருந்ததால் அங்கு சென்றார்கள். ஊர் மொத்தமும் கோவிலில் கூடி இருக்க பூஜை சிறப்பாக நடை பெற்றது.
நம் நாயகிக்கு தான் கடவுள் நம்பிக்கை பெரியதாக இல்லையே.அதனால் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுடன் அவளும் விளையாடிக் கொண்டிருந்தாள்.அதில் ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து அவளை மிகவும் கவர அக்குழந்தையை கையில் எடுத்தவள் அதை மேலே தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் அம்மா சந்தியா தாருவிடம் பேச ஆரம்பித்தார்.”எந்த ஊர் மா?” என்று கேட்க “பெங்களூர் அக்கா” என்றவள் மீண்டும் அவளே தொடர்ந்தாள் “இங்க எங்க பாட்டி வீட்டுக்கு வந்திருக்க” என்றாள்.
“ஓ!உங்க பாட்டி பேரு என்ன?” என்று கேட்டுவிட்டு “ஓ கரட்டு தோட்டத்து வீட்டுப் பொண்ண.உங்க அக்கா தாமரையும் நானும் பிரிண்ட்ஸ்!” என்றவர் பின்பு பொதுப் படியான விஷயங்களை அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை இரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததை இருவரும் அறியவில்லை.பின்பு பூஜை முடிந்தவுடன் எல்லோரும் வெளியே வர தன் குடும்பத்தினரிடம் சந்தியாவை அறிமுகம் செய்து வைத்தாள் தாரு.
சந்தியாவை ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததால் அனைவரும் அவளுடன் பேசிவிட்டு பின்பு பிரசாதம் வாங்கச் சென்றனர்.பிரசாதம் சாப்பிட்டு முடித்தவுடன் சந்தியா தாருவை கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.
சந்தியாவை அழைக்க வந்த அவளின் தம்பி அனைவரிடமும் நலம் விசாரித்துவிட்டுச் சென்றான்.சந்தியாவின் தம்பியை தாருவிற்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது
.ஆறு அடி உயரம்,மாநிறம்,கூர்மையான மூக்கு,நன்றாக மசில்ஸ் பில்ட் பண்ணிய உடம்பு,அடர்த்தியான கருகரு முடி என்று இருந்தவனை நன்றாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள்..அதை விட அவன் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் கன்னத்தில் விழுந்த குழி அவளை மிகவும் கவர்ந்தது.
அவன் அணிந்திருந்த வெள்ளை வேட்டி சாம்பல் நிற சட்டை அவன் கம்பீரத்தை எடுத்துக் காட்டியது..ஆனால் அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பெரியோர்களுடன் பேசியவன் பின்பு தன் அக்காவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
’சாக்லேட் பாய்’ என்று மனதிற்குள் நினைத்தவள் ‘என்ன எல்லாரும் பிரியன் பிரியன்னு கூப்படறாங்க?என்ன பேரா இருக்கும்’என்று மனதில் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அன்று இரவு தூங்கும் முன்பு கூட அவனின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனாள்.அடுத்த நாள் காலை எழும் போதே மனம் மிகவும் உற்சாகமாக இருப்பது போல் இருந்தது.ஏன் என்று யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் விடை கிடைத்தது.
ப்ரியனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்ததால் இரவு தாருவின் கனவில் அவன் வந்தான்.ஆனால் கனவில் நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்து விட அவன் வந்தது மட்டுமே நினைவு இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து,
செல்லமுத்து தாத்தாவிற்கு ஊர்த் தலைவர் முத்துசாமியிடம் இருந்து போன் வர எடுத்துப் பேசியவரின் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.’ஆத்தா என் பேத்திக்கு நல்ல வழி காட்டி’ என்று மருதகாளி அம்மனிடம் வேண்டியவர் பின்பு தன் மனைவி மருமகனிடம் விஷயத்தை சொன்னார்.
முத்துசாமி தன் மகன் கவிப்ரியனுக்கு தாரிகவை பெண் கேட்டிருந்தார்.கவிப்ரியனின் ஜாதகத்தை அவர்களிடம் கொடுப்பதாகவும் ஜோசியரிடம் சென்று பார்த்துவிட்டு பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருந்தார்.
கவிப்ரியனைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.நல்ல அருமையான பையன்.அவர்கள் குடும்பமும் நல்ல பண்பான குடும்பம் என்பதால் இந்த சம்மந்தம் அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர்.மேலும் பேத்தியும் தங்கள் அருகிலையே இருப்பாள் என்ற சந்தோசம் வேறு.
அடுத்த நாள் ஜோசியரை சென்று பார்க்க அவர் இவர்கள் இருவருக்கும் ஒன்பது பொருத்தம் இருக்கிறது என்றும் கல்யாணம் செய்து வைத்தால் அமோகமாக வாழ்வார்கள் என்றும் கூற இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் மிகுந்த சந்தோசம்.
அன்றைக்கே தாரிகாவை அழைத்துக் கொண்டு கோவில்பாளையம் சென்றவர்கள் மற்றவர்களிடம் விஷயத்தைக் கூறினர்.காரணம் அடுத்த நாளே நல்ல நாளாக இருந்ததினால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருவதாகக் கூறியிருந்தனர்.தாரிகவை தவிர அனைவருக்கும் விஷயம் தெரிந்ததால் எல்லோரும் உற்சாகமாக இருந்தனர்.
“என்ன எல்லாரோட பேஸுளையும் 1௦௦௦ வாட்ஸ் பல்பு எரியுது?” என்றவள் கேட்க “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” என்று கூறி சமாளித்தவர்கள் பின்பு அவள் முன் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.பெண்கள் மூவரும் பலகாரம் செய்ய தாரிகாவும் கார்த்திக்கும் அதை சாப்பிடும் வேலையை நன்றாகச் செய்து கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே தாரிகவை விசாலாட்சி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று எழுப்ப அவள் எழுந்து கொள்ளாமல் அடம்பிடித்தால்.சௌந்தரம் பாட்டி வந்து ஒரு அதட்டல் போட வேறு வழியில்லாமல் எழுந்தவள் குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவளிடம் “நான் உனக்கு புடவை கட்டி விடற” என்று ருக்குமணி பெரியம்மா சொல்ல அவரிடம் அடம்பிடிக்காமல் புடவை கட்டிக்கொண்டாள்..
தாரிகவிற்கு தன்னை அலங்கரித்துக்கொள்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள்.தங்க நகைகள் தான் அணிய வேண்டும் என்ற பாட்டியின் கட்டளையால் தங்க நகைகளை போட்டுக்கொண்டாள்.
தங்க நிற மாங்காய் போட்ட குங்கும நிறச் சேலைகட்டி கழுத்தில் மாங்காமாலை அணிந்து காதில் அதற்கு ஏற்றார்போல் ஜிமிக்கு அணிந்திருந்தவளின் அழகு பார்ப்போரை கவர்ந்திழுத்தது.கார்த்திக் அவளைப் பார்த்து “இப்ப தான் டி பொண்ணு மாறி பார்க்க லட்சணமா இருக்க” என்று கேலி செய்து அவளிடம் இரண்டு அடிகளை வாங்கிக் கொண்டான்.
ஆறரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட அதுவரை தாருவிற்கு தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றே தெரியாது.தெரிந்தவுடன் தன் தந்தை இப்படி தன்னிடம் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டினரை வரச்செய்தது மனதில் வலியைக் கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டாள்.கோபம்,பதற்றம் எல்லாம் சேர்ந்து அவளை மரத்துப் போகச் செய்திருந்தது.
வந்தவர்களை வரவேற்று அமரச் செயதவர்கள் சிறிது நேரம் தங்கள் குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.சந்தியா “நான் போய் தாருவ பார்க்கட்டுமா?” என்று விசாலாட்சியிடம் கேட்க “இதுக்கு எல்லாம டா கேட்ப அந்த ரூம்ல இருக்க போய் பாரு போ” என்று சொல்ல அவளும் தலையசைத்து விட்டு தாருவைப் பார்க்க உள்ளே சென்றால்.
சந்தியா உள்ளே வந்து “தாரு” என்று அழைக்க சுயநினைவுக்கு வந்தவள் “அக்கா!நீங்க எங்க இங்க?” என்று ஆச்சர்யமாகக் கேட்க “என் தம்பிக்கு பொண்ணு பார்க்க நான் இல்லாமையா?” என்று கண்ணடித்துக் கேட்க தாரு ஆச்சர்யத்தில் கண்ணை விரித்தாள்.
அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அந்த சாக்லேட் பாய் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறானா என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் வெளியே முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டாள்.
“என்ன வெக்கமா?” என்று சந்தியா கேலி செய்ய அதற்குள் சர்மிளா உள்ளே வந்தாள்.முத்துசாமி சரசம்மாள் தம்பதியினர்க்கு மூன்று மக்கட் செல்வங்கள்.சந்தியா,சர்மிளா,கவிப்ரியன்.சர்மிளாவை தாருவிற்கு சந்தியா அறிமுகம் செய்து வைக்க அதற்குள் சௌந்திரம் பாட்டி பெண்ணை அழைத்து வர சொல்கிறார்கள் என்று சொல்ல சந்தியாவும் சர்மிளாவும் தாருவை அழைத்துக் கொண்டு சென்றனர்.
அத்தியாயம் நான்கு
தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் அழைத்து வர குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள்.மனதுக்குள் இனம் புரியாத உணர்வு.அந்த சாக்லேட் பாய் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தவுடன் ஜிவ்வென்ற உணர்வு.
அவளிடம் அனுமதி கேட்காமலேயே வந்து குடியேறிய நாணம்.சந்தோஷம்,நாணம்,படபடப்பு என கலவையான உணர்வுகளின் பிடியினால் ஆட்கொள்ளப்பட்டுருந்தாள்.
பெண் பார்க்க முத்துசாமி சரசம்மாளின் மொத்தக் குடும்பமும் வந்திருந்தது.ஹாலின் நடுவில் இருந்த சோபாவில் கவிப்ரியன் அமர்ந்திருக்க ப்ரியனுக்கு இடப் புறம் சந்தியாவின் கணவன் கௌதமும் வலப்புறம் சர்மிளாவின் கணவன் நரசிம்மனும் அமர்ந்திருந்தார்.
அதற்குப் பக்கத்தில் இருந்த நாற்காலிகளில் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
விசாலாட்சி கொடுத்த காப்பி தட்டை வாங்கியவள் எல்லோருக்கும் கொடுத்தாள்.ஆனால் ஒருவரைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.வெட்கம் அவளை நிமிர்ந்து பார்க்கவிடாமல் தடுத்தது.
தாரிகா குனிந்து இருந்ததால் அவன் முகம் தெரியவில்லை.அவன் அணிந்திருந்த கருப்பு நிறப் பேன்ட் தான் தெரிந்தது.அவனிடம் காப்பியை குனிந்த தலை நிமிராமல் நீட்ட இரு நொடிகள் கழித்து அவன் கை நீண்டு வந்து காப்பியை எடுத்தது.இள நீல நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தவன் முழங்கை வரை அதை மடக்கிவிட்டிருந்தான்.
அனைவருக்கும் காப்பி கொடுத்தவுடன் தாரிகவை விசாலாட்சி உள்ளே அழைத்துச் சென்றார்.சந்தியாவும் சர்மிளாவும் ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டனர்.
உள்ள வந்தவுடன் தான் மனதிற்குள் ‘ச்சே..நிமிர்ந்து முகத்தை பார்த்திருக்கலாம்.அந்த கன்னக்குழி எவ்வளவு அழகா இருக்கும்.மிஸ் பண்ணிட்டோம்’ என்று நினைத்தாள்.
தன் எண்ணப் போக்கில் இருந்தவள் விசாலாட்சி சொல்லிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.அவர் பேசுவதற்கு எல்லாம் மகளிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே அவளை உலுக்கியவர் “மாப்பிள்ளை பிடிச்சுருக்கா?” என்று கேட்க வெட்கத்துடன் தலையை ஆட்டிய மகளைப் பார்க்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘என்னடா இது நான் மேல படிக்கணும்.இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்.இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.அப்பாவ உள்ளே கூப்பிடுன்னு அடம் பிடிப்பான்னு பார்த்தா மாப்பிளையை பார்த்த உடனே ஓகே சொல்லிட்ட.நல்ல வேலை நமக்கு இவளை சம்மதிக்க வைக்குற வேலை மிச்சம்’ என்று மனதிற்குள் நினைத்த விசாலாட்சி ‘இனி தாரு வாழ்கை ரொம்ப நல்லா இருக்கும்’ என்ற சந்தோசத்துடன் வெளியே சென்றார்.
அவர் வெளியே சென்றவுடன் ராஜூ தாத்தா “தாருவ கூப்பிடு மாப்பிள்ளை கூட போய் பேசிட்டு வரட்டும்” என்று சொல்ல கார்த்திக் தான் போய் அவளை அழைத்து வருவதாகக் கூறி உள்ளே சென்றான்.
அவன் உள்ளே நுழைந்ததைக் கூட உணராமல் தாரு தன் எண்ணங்களின் பிடியில் இருந்தாள்.”ஒய் மேடம்” என்றவன் அழைக்க திரும்பிப் பார்த்தவளிடம் “மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க வெட்கப்புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சிரித்துக்கொண்டே அவள் தலையை தடவிக் கொடுத்தவன் “மாப்பிள்ளை கூட தனியா பேச கூப்படறாங்க…வா” என்று சொல்ல “எனக்கு பயமா இருக்கு வேண்டாம்” என்றவள் சொல்ல “லூசு இதுக்கு போய் யாராச்சும் பயப்படுவாங்களா?போய் பேசு” என்றவன் அவள் கையை பிடிக்க இரண்டடி பின்னே சென்றவள் “ப்ளீஸ்..எனக்கு உண்மையாவே ரொம்ப பயமா இருக்கு தனியா பேச.எனக்கு தான் மாப்பிளையை பிடிச்சிருகுல்ல…நீயே போய் அதை அவங்ககிட்ட சொல்லிரு” என்று சொல்ல சிரித்தவன் விடாப்பிடியாக அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.
அப்பொழுதும் முகத்தை நிமிர்த்தாமல் நடந்து வந்தவளைப் பார்த்துச் சிரித்த கார்த்திக் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “இப்படி எல்லாம் நீ குனிஞ்ச தலை நிமிராம வர்றத பார்த்து அவங்க உன்ன ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைச்சுக்க போறாங்க” என்று சொல்ல அவனை முறைக்க தலையை நிமிர்த்த அதற்குள் ஹால் வந்திருந்தது.
“போ தாரு மாப்பிளைக்கு தோப்பை சுத்திக்காட்டு” என்று ராசு தாத்தா சொல்ல கவிப்ரியன் எழுந்துவிட்டான்.அவன் முன்பு செல்ல தாரு அவனைப் பின்தொடர்ந்தாள்.
வீட்டில் இருந்து சற்று தள்ளி தோப்பிற்குள் வந்தவுடன் ப்ரியன் நிற்க அவனைப் பின்தொடர்ந்து வந்தவளும் நின்றாள்.சிறிது நேரம் அவன் ஒன்றும் பேசாமல் நிற்க தாருவிற்குத் தான் அது இன்ப அவஸ்தையாக இருந்தது.
அவன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாததால் தலை குனிந்து நின்று இருந்தாள்.”ம்ம்கும்…” என்றவன் தொண்டையை செரும தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ரொம்ப அமைதியா இருக்க…பேச மாட்டியா?” என்றவன் கேட்க அவளுக்குத் தொண்டையில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.தலை குனிந்தபடியே அமைதியாக இருக்க “என்ன பிடிச்சிருக்கா?” என்றவன் கேட்க அதற்கும் குனிந்தபடியே ஆம் என்பது போல் தலையாட்டினாள்.
அவன் உதடுகளில் சிறிய புன்னகை உதிக்க “அப்புறம் ஏன் என்ன பார்க்க மாட்டேங்கிற?” என்று கேட்க நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.”நான் உன்ன ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்.பட் நீ என்னோட பேஸ் கூட பார்க்க மாட்டேங்கிற?” என்று கேள்வியாய் நிறுத்த உடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“என்ன இதுக்கு முன்னாடி நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று கேட்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு நின்றுகொண்டிருந்தவன் ஆம் என்பதாகத் தலையசைத்தான்.”எங்க?” என்றவள் கண்களை விரித்து கேட்க சிரித்தவன் “கோவில்ல நீ ஒரு தாத்தாகாக கடைக்காரன்கிட்ட பொங்கினியே அப்போ…அப்புறம் சுப்ரியா கூட கொஞ்சி கொஞ்சி விளையாண்டிட்டு இருந்தியே அப்போ” என்றவன் கண்களைச் சிமிட்டிச் சொல்ல வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.
ஒரு முதியவர் 3௦௦ ரூபாய் மதிப்புடைய மாலையை கொஞ்சம் குறைத்துக் கேட்க கடைக்காரன் அவரைக் கொஞ்சம் தரக் குறைவாகப் பேசிவிட்டான்.அதனால் நம் தாருவிற்கு கோபம் வந்துவிட கடைக்காரனிடம் சண்டைப்போட்டுவிட்டாள்.
“என்ன பத்தி என்ன எல்லாம் தெரியும்?” என்று கேட்க அவளுக்கு உள்ளுக்குள் பக் என்றிருந்தது.அவள் பதில் பேசாமல் இருக்க “அப்போ எதுவும் தெரியாதா?” என்றவன் கேட்டதற்கு தலையசைத்தாள்.
“அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க இல்லை என்பதைப் போல் தலையசைத்தாள்.”ரொம்ப நல்லது” என்றவன் சலித்துக்கொள்ள “எனக்கு நீங்க வர்றதப் பத்தி யாருமே சொல்லல..காலைல நீங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் தான் சொன்னங்க” என்று தயங்கித் தயங்கி சொல்ல
“சரி என்ன பத்தி எல்லாம் வீட்ல இருக்கவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு என்கிட்ட சொல்லு…இப்போ நம்ம போலாம்.வந்து பத்து நிமிஷம் ஆச்சு” என்றவன் நடக்கத் தொடங்க
“எப்படி உங்ககிட்ட பேசுறது?” என்றவள் கேட்டுவிட்டு நாக்கைக் கடிக்க “என் நம்பர் சொல்லற நோட் பண்ணிக்கோ” என்றான்.”நான் போன் கொண்டு வரல.என் நம்பர் சொல்லற நீங்க ஒரு மிஸ்ட் கால் கொடுங்க” என்றவள் தன் எண்ணை அவனிடம் கொடுத்தாள்.
இருவரும் உள்ளே செல்லும்பொழுது உறுதி வார்த்தை எப்பொழுது வைக்கலாம் என்பது பற்றி பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.ப்ரியன் பெரியவர்களுடன் அமர்ந்து கொள்ள தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
சந்தியா சர்மிளா உடன் சென்ற தாருவை பின் தொடர்ந்து வந்த சரசம்மாள் “ரொம்ப அழகா இருக்கடா.சுப்ரியா கூட நீ விளையாண்டுட்டு இருந்தது பார்த்தப்பவே எனக்கு உன்னை ரொம்ப புடிச்சு போச்சு” என்று சொல்ல சந்தியா “ஆமா தாரு அம்மாதான் உன்னை ப்ரியனனுக்கு கேட்கலாம்னு அப்பா கிட்ட சொன்னாங்க”என்று சொல்ல தாருவிற்கு தன் மாமியாரை மிகவும் பிடித்து விட்டது.
உறுதி வார்த்தை ஒரு மாதம் கழித்து வைத்து கொள்ளலாம் என்றும் மீண்டும் ஒரு மாத இடைவேளியில் நிச்சயதார்த்தம் வைத்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது.
பேச்சு வார்த்தை முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தாருவையும் வெளியே அழைத்தனர்.அனைவரும் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப ப்ரியன் ஒரு சின்னத் தலையசைப்புடன் அவளிடம் விடைபெற்றான்.ஒரு புன்னகையுடன் அவனுக்கு விடைக் கொடுத்தவள் பின்பு தன்னறைக்கு வந்தாள்.
போனை எடுத்து அதில் வந்திருந்த நம்பரை சேவ் செய்தவளுக்கு அப்பொழுது தான் தன் தந்தை தன்னிடம் கூறாமல் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் என்ற ஞாபகம் வர
‘ஏன் டி அந்த சாக்லேட் பாய்ய பார்த்தவுடனே எல்லாமே மறந்துட்டியா?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க அதை ஒதுக்கித் தள்ளியவள் தன் தந்தையின் வரவிற்காக ரூமில் கோபத்துடன் காத்திருந்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘யார்கிட்ட நம்ம சாக்லேட் பாய் பத்தி கேட்கிறது?இந்த அம்மா அப்பாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.மாப்பிள்ளை பத்தி ஏதாச்சும் ஒரு டிடைல்ஸ் சொன்னாங்களா?சாக்லேட் பாய் பத்தி டிடைல்ஸ் ஏதாச்சும் தெரிஞ்சா கூட இதை ரீசன்னா வைச்சுட்டு போன் பண்ணி பேசலாம்’ என்று மனதிற்குள் புலம்ப கார்த்திக் வந்து அவளை சாப்பிட அழைத்தான்.
‘பேசாம இவன்கிட்டே கேட்டறலாம்’ என்று நினைத்தவள் “கார்த்தி” என்று அழைக்க “என்ன டி இவ்வளவு பவ்யமா கூப்டற?என்ன விஷயம்?” என்று கேட்க “அது வந்து ப்ரியன்ன பத்தி டிடைல்ஸ் எல்லாம் சொல்லறியா?” என்று கேட்க
“என்னது ப்ரியன்னா? அப்படி எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாது.மரியாதையா கூப்பிடு” என்று சற்று கண்டிப்பான குரலில் கூற தாருவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.
“என்கிட்ட இப்படி பேசுனது பரவாயில்லை.பட் எல்லாத்துகிட்டயும் மாப்பிளையை பத்தி பேசுறப்போ மரியாதையா தான் பேசணும் ஓகே வா?” என்று சொல்ல அவள் சம்மதமாகத் தலையசைத்தாள்.
“சாப்பிட வராம ரெண்டு பேரும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற விசாலாட்சியின் குரலில் இருவரும் டைனிங் ரூமிற்குள் நுழைந்தனர்.சாப்பிடும் பொழுது அனைவரும் கல்யாண வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்க அப்பொழுதாவது அவனைப் பற்றி பேசுவார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருக்க ஏமாற்றமே மிஞ்சியது.
சாப்பிட்டு முடித்தவுடன் பத்மநாபன் கார்த்திக்கிடம் தொழிலைப்பற்றி ஏதோ கேட்க அழைக்க அவன் அவர் அறைக்குச் சென்றுவிட்டான்.அப்பொழுதே மணி ஒன்பது ஆகிவிட அதற்கு மேல் கார்த்திக்கிடம் பேசமுடியாது என்பதை உணர்ந்தவள் தன் அறைக்கு வந்து போனை எடுத்தாள்.
வாட்ஸ் ஆப்பைத் திறந்து அதில் அவன் டிபி பார்க்க பனிகளுக்கு இடையில் நின்று கொண்டிருந்த போட்டோவை வைத்திருந்தான்.’ஓ இவங்க பாரின் எல்லாம் போயிருக்காங்களா?’ என்று நினைத்தவள் அவனுடைய லாஸ்ட் சீன் பார்க்க அது ஆன்லைன் என்று காட்டியது.
‘பேசுவோமோ வேண்டாமா?’ என்றவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே அவன் ஆப்லைன் சென்றிருந்தான்.”ச்ச” என்றவள் போனை கட்டிலின் மேல் போட்டுவிட்டு படுத்துவிட்டாள்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து மெசேஜ் வந்ததற்கான சத்தம் வரவே எடுத்துப் பார்த்தவளின் உதடுகளில் மென்னகை பூத்தது.ப்ரியன் தான் “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.
வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வுடன் அவனுக்கு “ஹாய்” என்று பதில் அனுப்ப “என்னை பத்தி தெரிஞ்சிச்சா?” என்றவன் கேட்க ஒரு சோகமான ஸ்மைலியுடன் இல்லை என்று பதில் அனுப்பினாள்.
ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அவளுக்கு அனுப்பியவன் பின்பு “அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க அதற்கும் இல்லை என்று பதில் அனுப்பினாள்.”நான் எதுவும் சொல்லமாட்ட நீ தான் கண்டுபிடிக்கணும்” என்றவன் சொல்ல “என்கிட்ட யாருமே உங்களைப் பத்தி பேசறது இல்லை.நானே எப்படி போய் கேட்கிறது.உங்களுக்கு என்னப் பத்தி என்ன தெரியும்?சொல்லுங்க பார்க்கலாம்…”என்றவள் கேட்க அவளுக்கு அவனிடமிருந்து கால் வந்தது.
“ஒருவேளை கோவிச்சுக்கிட்டாங்களோ அதனால தான் மெசேஜ்க்கு ரிப்ளே அனுப்புலையோ?பேசாம சாரி கேட்டிடலாமா?”என்றவள் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அவனிடமிருந்து கால் வந்தது.
அத்தியாயம் 5
தாரு போனை எடுத்தவுடன் “எனக்கும் உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாதே…நீயே உன்னை பத்தி சொல்லு” என்றவன் பாவமாக கேட்க “அதெல்லாம் முடியாது.நீங்க எனக்கு சொன்னது தான் உங்களுக்கும்” என்று சிறுபிள்ளைத் தனமாக சொல்ல சிரித்தவன்
“சரி..எனக்கு உன்னோட புல் நேம் தாரிகான்னு தெரியும்.அதனால நீ என்கிட்ட உன்ன பத்தி சொல்லலாம்.நீயும் என் புல் நேம் கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லு நானும் என்ன பத்தி சொல்லற.பட் என் நேம் யார்கிட்டையும் கேட்கக்கூடாது” என்று ஒப்பந்தம் போட
“அதெல்லாம் முடியாது.அ டீல் இஸ் அ டீல்” என்றாள்.
”ஒய் லூசு உங்க வீட்ல தான் உங்கிட்ட என்ன பத்தி யாரும் சொல்லல.பட் என்கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொன்னாங்க” என்க “அப்ப எல்லாம் தெரிஞ்சுட்டு தான் என்ன ஒட்டுனிங்களா?” என்று கோபமாக கேட்க
“பரவாயில்லையே..செம்ம பாஸ்ட்டா கண்டு பிடிச்சிட்ட”என்று அதற்கும் வார “போங்க… போங்க…என்கிட்ட பேசாதிங்க” என்று கோபித்துக்கொண்டாள்.
“நீ சுப்ரியா கூட விளையாடும்போது கூட சின்ன குழந்தை அதனால அவளுக்கு தகுந்த மாதிரி விளையாடுறன்னு நினைச்ச…பட் இப்ப தான தெரியுது நீ உண்மையாவே பாப்பான்னு” என்று கலாய்க்க
“நான் ஒன்னும் பாப்பா இல்லை” என்றவள் சொல்ல “இப்படி கிண்டல் பண்ணறதுக்கு எல்லாம் கோவுச்சுகிட்டா பாப்பான்னு சொல்லாம வேற என்ன சொல்லறது?” என்று கேட்க
“நான் ஒன்னும் கோவுசுக்கல..சும்மா நடிச்ச” என்றவள் நாக்கைக் கடித்துக்கொண்டு சொல்ல “ம்ம்ம்.. ம்ம்ம்…நம்பிட்ட…நம்பிட்ட” என்றவன் மீண்டும் ஓட்ட “ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்” என்றவள் கெஞ்ச “சரி.. சரி…பொழச்சுப் போ” என்றுவிட்டான்.
என்ன பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.ஆனால் விடியக்காலை மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.தாருவுடன் பேசியதில் அவளின் சிறுபிள்ளைத் தனத்தையும் பக்குவப்படாத மனதையும் பற்றி ப்ரியன் நன்றாகப் புரிந்துகொண்டான்.
“மணி மூணு ஆச்சு…தூங்கலாமா?” என்று ப்ரியன் கேட்க அரைமனதாக சம்மதித்தவள் “குட் நைட்” என்று கூறி போனை வைத்தாள்.போனை வைத்ததும் கூட தூங்காமல் ப்ரியனின் முழுப்பெயரைக் கண்டுபிடிப்பதற்காக முகநூலில் நுழைந்தவள் ப்ரியன் என்று டைப் செய்து வந்த எல்லா ப்ரோபைல்களையும் பார்த்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்பு ப்ரியனின் முகம் இருந்த அக்கௌன்ட் அவள் கைகளுக்கு சிக்கியது.அதில் ‘கவிப்ரியன் முத்துசுவாமி’ என்ற பெயர் இருக்க ‘ஒ நம்ம ஆள் பேரு கவிப்ரியனா?நல்லா தான் இருக்கு.டேய் கவி நாளைக்கே உங்கிட்ட பேர சொல்லி அசத்துற பார்’ என்று நினைத்தவள் அவனின் அக்கௌன்ட்டுக்குள் நுழைய ஒரு போட்டோவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
‘பொண்ணு நானே எதையும் பிரைவசி போட்டு வைக்கல.பையன் இவன் ஏன் இப்படி இருக்கான்.நாளைக்கு இதை பத்தியும் கேக்கணும்’ என்று நினைத்தவள் பின்பு அவனுடன் பேசிய தருணங்களை அசைப்போட்டுக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை எழும் பொழுதே உற்சாகமா எழுந்தவள் நேரத்தைப் பார்க்க அது பத்து எனக் காட்டியது.’என்னது மணி பத்து ஆச்சா?இவ்வளவு நேரம் இந்தப் பாட்டி நம்மளை எப்படி தூங்கவிட்டுச்சு?இன்னைக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறோம்” என்று நினைத்தவள் பல் துலக்கிவிட்டு கீழே செல்ல
சௌந்தரம் பாட்டி திட்டாமல் “இப்ப தான் எழுந்தியா தாரு?கல்யாணம் பண்ணிப் போறதுக்குள்ள எல்லா வேலையும் கத்துக்கணும் சரியா?” என்று கேட்க அவளும் சரி என்று தலையை ஆடினாள்.
சமையலறைக்குள் சென்றவள் தன் அன்னையிடம் பால் கேட்க முறைத்தவர் “ஏன் டி இன்னும் நாலு மாசத்துல கல்யாணத்த வெச்சுக்கிட்டு பத்து மணி வரைக்கும் யாராச்சும் தூங்குவாங்களா?” என்க “அட விடு விசா…நம்ம கூட இருக்க வரைக்கும் அவள் இஷ்டப்படி இருக்கட்டும்.பொறுப்பு வந்தா தானா மாறிருவா…” என்று ருக்குமணி அவளுக்கு பரிந்து பேசினார்.
உள்ளே இவர்களின் வாக்குவாதம் கேட்டு சமையலறைக்குள் நுழைந்த பரந்தாமனைப் பார்த்ததும் “குட் மோர்னிங் ப்பா” என்று தாரு சொல்ல “குட் மோர்னிங் தங்கம்” என்றவர் மனைவியிடம் திரும்பி “இங்க என்ன சத்தம்?” என்று கேட்க
“ஆமா பொண்ண ஒன்னு சொல்லிறக் கூடாதே…உடனே வந்துருவாரு” என்று அவருக்கு கேட்குமாறு முனுமுனுக்க “ஏன் மா…அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணறத பாத்து பொறாமை படற?வேணும்னா உன் அப்பாவை போய் கூப்ட்டிட்டு வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொல்லு” என்று தாயை வம்புக்கிளுதாள்.
இப்படி பேசியபடியே காலை உணவினை உண்டு முடித்தவள் தன் ரூமிற்குச் சென்றாள்.ப்ரியனுக்கு அழைக்கலாமா?வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தியவள் பின்பு அம்முடிவை கைவிட்டவளாய் வாட்ஸ் ஆப்பைத் திறந்தாள்.
அதில் அவனிடமிருந்து ஏற்கனவே “குட் மோர்னிங்” என்ற மெசேஜ் வந்திருக்க தாருவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.பதிலுக்கு “குட் மோர்னிங்”என்ற மெசேஜ் அனுப்பியவள் அரை மணி நேரம் ஆகியும் அவன் பார்க்காததால் அவனுக்கு அழைத்தாள்.
அந்த அழைப்பு எடுக்கப்படாமல் போகவே மீண்டும் அழைப்போமா என்ற யோசனையை கைவிட்டவள் அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.
விசாலாட்சி “மணி மூணு ஆச்சு டி.நேரத்துக்கு சாப்பிட்டா தான ஒடம்பு நல்லா இருக்கும்?” என்று எழுப்ப எழுந்தவள் “நீ போ ம்மா..நான் வர்ற” என்றுவிட்டு போனை எடுத்தாள்.”எப்பப் பார்த்தாலும் அந்த போன நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது.அப்படி அதுல என்ன தான் இருக்கோ தெரியலை” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.
போனை எடுத்துப் பார்க்க அதில் ப்ரியனிடம் இருந்து “கொஞ்சம் வேலை.ப்ரீ ஆகிட்டு கூப்பட்ற” என்ற பதில் வந்திருந்தது.அவனிடமிருந்து பேச்சுக்களை எதிர்பார்தவளின் மனம் இந்த பதிலில் கொஞ்சம் சோர்வடைந்தது.மூளை அவனுக்கு வேலை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சாப்பிடச் சென்றவள் ஏதோ கொறித்துவிட்டு மீண்டும் வந்து படுக்கை அறையில் முடங்கினாள்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவனிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றும் வரவில்லை.
.ஆறு மணி வரை அவனிடம் இருந்து மெசேஜ் வராததினால் ‘காலைல இருந்து என்கிட்ட பேச இவங்களுக்கு பத்து நிமிஷம் கூட டைம் இல்லையா?வேலை இருந்தா கூட அப்படியே எனக்கு மெசேஜ் பண்ணிட்டே பார்க்க வேண்டியது தான?’என்ற எண்ணம் அவள் மனதில் வந்தது.
ஹாலில் பரந்தாமன் ராஜு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.ஆனால் மனம் மட்டும் ப்ரியனையே நினைத்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்தவள் பின்பு மீண்டும் அறைக்குள் நுழைந்து போனைப் பார்த்தாள்.அவனிடமிருந்து எந்தவொரு மெசேஜ்ஜும் வரவில்லை.பின்பு தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.
போனை வைத்தவுடன் கார்த்திக் அவள் ரூமிற்குள் நுழைந்தான்.”ஏன் தாரு பேஸ் டல் அடிக்குது?” என்று முகத்தைப் பார்த்துக் கேட்க “இல்லையே நல்லா தான் இருக்க” என்று சமாளித்தவள் முகத்தை நன்றாக வைத்துக் கொண்டாள்.
“நேத்து என்கிட்ட மச்சான் பத்தி டிடைல்ஸ் கேட்ட.பட் அப்பா கிட்ட வேற விஷயம் பேசிட்டு இருந்ததுனால உங்கிட்ட சொல்ல முடில” என்று சொல்ல “என்னது மச்சான்னா?” என்று கேட்டவளிடம்
“ஆமா மச்சான் தான்.தங்கச்சி மாப்பிள்ளை எனக்கு மச்சான் தான?” என்றான்.
“பட் நீ அவங்கள மச்சான்னு கூபிட்டா எனக்கு கேட்க செம்ம காமெடியா இருக்கும்” என்றவள் அவன் குரலிலேயே “ப்ரியன் மச்சான்…ப்ரியன் மச்சான்” என்று பேசிக் காண்பிக்க அவள் தலையில் ஒன்று போட்டவன் “இந்த வாய் இருக்கே வாயி…இது இல்லனா உன்னை எல்லாம் நாய் கூட மதிக்காது” என்று சிரிக்க அவனுடன் அவளும் இணைந்து கொண்டாள்.
இன்று ருக்மணி இருவரையும் சாப்பிட அழைக்க “சாப்டுட்டு வந்து பேசலாம்” என்றவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மீண்டும் போனை எடுத்துப் பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் சாப்பிடச் சென்றாள்.
சாப்பிட்டு முடித்தவுடன் “உறுதி வார்த்தைக்கு போய் சேரி நாளைக்கு எடுத்துட்டு வந்தறலாம்.அப்போ தான் ப்ளோவுஸ் எல்லாம் தைக்க கொடுத்து வாங்க முடியும்” என்று ருக்குமணி சொல்ல தலையாட்டியவள் தன் தந்தையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்கிற்கு தன் நண்பன் அழைத்திருக்க போனில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.பத்து நிமிடம் வரை பொறுத்துப் பார்த்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சரியாக பத்து மணிக்கு “கால் பண்ணட்டா?” என்ற மெசேஜ் ப்ரியனிடம் இருந்து வர “ஹ்ம்ம்” என்று தான் கோபமாக இருப்பதைக் காட்ட அனுப்பினாள்.
“ஹலோ” என்றவன் சொல்ல சிறிது நேரம் தாரு ஒன்றும் பேசவில்லை.அவன் “ஹலோ… ஹலோ… “என்று அதற்குள் மூன்று முறை சொல்லிவிட “ஹலோ” என்றாள்.
“என்ன தூக்கமா?வாய்ஸ் ஒரு மாறி இருக்கு” என்று கேட்க கோபத்தில் “ஆமா நல்லா தூங்கிட்டு இருந்த” என்று கடுப்பாகக் கூற “என்ன ஆச்சு கோபமா?” என்றான்.
அவள் ஒன்றும் பேசாமல் இருக்க “சொல்லு …கோபமா?நீ சொன்னாதான எனக்குத் தெரியும்” என்று கேட்க “காலைல இருந்து ஒரு பை மினுட்ஸ் கூட என்கிட்ட பேச உங்களுக்கு டைம் கிடைக்கலையா?” என்றதற்கு
“ஓ…அதுக்குத் தான் மேடமுக்கு கோபமா?” என்றுவிட்டு சிரித்தவன் “ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்ட?” என்று கேட்க ‘என்ன சமாதானம் பண்ணாம இவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க’ என்று நினைத்தவள் “ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.
“நம்ம சிறு தானியம் எல்லாம் இங்க இருந்து பாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ணறோம்.பட் ஜெர்மனிக்கு எக்ஸ்போர்ட் பண்ணறதுல மட்டும் இவ்வளவு நாள் கொஞ்சம் ப்ரோப்ளம் இருந்துச்சு.இன்னைக்கு அது சால்வ் ஆகிடுச்சு.எல்லாம் நீ வீட்டுக்கு வரப் போற நல்ல நேரம் தான்னு அம்மா சொன்னாங்க” என்றவன் சொல்ல தன் கோபத்தை மறந்தவள்
“அத்தை செம்ம ஸ்வீட்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உண்மையாக.”அவங்க பையன பிடிச்சிருக்கா?” என்றவன் குறும்பாகக் கேட்க “ம்ம்ம்…” என்று சிறிது நேரம் யோசனை செய்தவள் சிரித்துக்கொண்டே “இல்லை” என்றாள்.
“அடிப்பாவி” என்றவன் சொல்ல “எனக்கு இன்னும் உங்க மேல இருக்க கோபம் போல” என்று சொல்ல “உண்மையாவே நீ பாப்பா தான் டி.உன்ன எல்லாம் வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்” என்றவன் பெருமூச்சுவிட
“ஓ…அப்படியா?அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்கூட பேச வேண்டாம்” என்றவள் உடனே போனை வைத்துவிட்டாள்.ப்ரியன் விளையாட்டுக்கு சொன்னதை இவள் மிக சீரியஸ்சாக எடுத்துக் கொண்டாள்.கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.
போனைத் தூக்கிப் போட்டவள் ‘காலைல இருந்து எப்ப பேசுவான்…எப்ப பேசுவான்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.ஆனா இவன் என்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம் சொல்லறான்’ என்று நினைத்தவள் குப்புறப்படுத்து விட்டாள்.
அத்தியாயம் 6
அவள் போனை வைத்ததும் ப்ரியனுக்குத் தோன்றியது “என்ன டா விளையாட்டுக்கு சொன்னதைக் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறா” என்றுதான்.
மீண்டும் இரண்டு முறை அவளுக்கு அழைக்க போனை எடுத்துக் கட் பண்ணியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.
இம்முறை அவனிடமிருந்து “கால் எடு ப்ளீஸ்” என்ற மெசேஜ் வர அதைப் பார்த்தும் அவன் காலை மீண்டும் எடுக்கவில்லை.
“இப்ப நீ கால் எடுக்கலேன்னா நான் மாமாக்கு கால் பண்ணி உங்கிட்ட குடுக்க சொல்லுவ” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் அவன் காலை எடுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க
“ஓய் மேடம்!என்ன பேச மாட்டிங்களா?” என்று கேட்க “நீங்க தான என்ன வெச்சுட்டு கஷ்டம் சொன்னீங்க” என்று கோபக் குரலில் சொல்ல
“ம்ம்ம் ஆமா கஷ்டம் தான்.அன்னைக்கு கோவில்ல செம்ம கியூட்டா உங்க அப்பா நல்ல ஐஸ்கிரீம் வாங்கித் தரன்னு சொன்னதைக் கேட்காம எனக்கு ரோட்ல விற்கிற ஐஸ்கிரீம் தான் வேணும்முன்னு அடம்பிடிச்சியே அப்ப நினைச்சேன்
உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் உன்னை வெச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட போறான்னு.அப்புறம் அந்த மாங்கோ ஐஸ்கிரீம் ஸ்டிக்ல இருந்து கிழ ஒழுக அப்டியே மூஞ்சி எல்லாம் அப்பிட்டு சாப்டியே அப்ப நினைச்சேன் உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்னு.
அப்புறம் பொண்ணு பார்க்க வந்தப்ப என் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காம காபி நீட்டினியே அப்ப நினைச்ச உன்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்ன்னு”என்றவன் விலகிக் கொண்டிருக்க
நம் தாருவின் முகத்தில் மென்னகை குடிகொண்டது.அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு வெட்கத்துடன் கீழே குனிய “என்ன மேடம் வெட்கப் படுறிங்களா?” என்றவன் கேட்க அவள் ஒன்றும் பதில் பேசாமல் இருக்க போன் கட் ஆகிவிட்டது.
‘என்ன ஆச்சு?டவர் இல்லையா?’ என்றவள் போனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனிடமிருந்து வீடியோ கால் வர ஒருவித பூரிப்புடன் அட்டென்ட் செய்தாள்.
முகத்தில் வெட்கம் குடிகொண்டிருக்க சிறிய கருப்பு நிறப் பொட்டுடன் கண்ணை தாழ்த்தி இருந்தவளின் முகம் பார்த்தவன் “ஒய்” என்றழைக்க “ம்ம்” என்றாள் மென்மையாக.
“என்ன எப்பப் பார்த்தாலும் வெட்கம் தானா?” என்று கேட்க பதிலில்லை.”என்ன பாரு” என்றவன் இரண்டு முறை சொன்னவுடன் அவன் முகம் பார்த்தாள்.
“இன்னைக்கு காலைல இருந்து மீட்டிங் ஜெர்மனில இருந்து வந்திருந்தவங்க கூட.லஞ்ச் எல்லாம் கூட அவங்க கூட தான்.அவங்க என்கூட இருக்கப்ப நான் உங்கிட்ட பேசிட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்குமா? சொல்லு…
அப்பா வேற என்கூட தான் இருந்தாங்க.அதான் டா பேசல.எனக்கும் உன்கூட பேசணும் தான் ஆசை” என்று தன்னிலை விளக்கம் அளிக்க அவள் முகம் இன்னும் பிரகாசமானது.
“உங்களுக்கும் என்கூட பேசணும் ஆசை இருந்துச்சா?நான் காலைல இருந்து நீங்க எப்ப மெசேஜ் பண்ணுவிங்க கால் பண்ணுவிங்கன்னு டென் மினிட்ஸ் ஒன்ஸ் மொபைல் எடுத்து பார்த்துட்டு இருந்த தெரியுமா?பட் உங்களுக்கு என்கிட்ட பேச தோணவே இல்லைன்னு தான் கோபம்” என்றாள்.
“எனக்கும் உங்கிட்ட பேசணும்னு நிறைய தோனுச்சு.பட் டைம் பெர்மிட் பண்ணல டா.சாரி” என்றான் உணர்ந்து.
“சாரி எல்லாம் சொல்லாதிங்க.நமக்குள்ளே நோ தேங்க்ஸ் அண்ட் சாரி ஓகே?எனக்கே நான் பண்ணறது கொஞ்சம் ஓவரா தான் தெரியுது.பட் ஐ ரியல்லி டோன்ட் நோ வை ஐ அம் பிஹேவிங் லைக் திஸ்.உங்களை எனக்கு நேத்து பார்த்தது மாதிரியே இல்லை.வித்தின் அ சிங்கள் டே ஐ ரியல்லி பீல் க்ளோஸ் டூ யூ” என்று மனதில் இருந்ததை எல்லாம் சொன்னாள்.
“அம்மு!என்னால டெய்லியும் டே டைம்ல பேச முடியுமா தெரியலை.பிகாஸ் என் வொர்க் அப்படி.பட் நைட் கண்டிப்பா நமக்கான டைம் ஓகே.இனி இதுக்கு எல்லாம் கோபப்படக் கூடாது.சண்டை போடக்கூடாது.நம்ம கல்யாணம் அப்புறம் கூட இப்படி தான் இருக்கும்.நான் மோர்னிங் 9 க்கு போன சாயந்திரம் வரதுக்கு ஏழு மணி மேல ஆகலாம்.சினிமா மாறி எல்லாம் ரியல் லைப்ல நடக்காது டா” என்றவன் பொறுமையாக தன் நடைமுறையை சொன்னான்.
“ம்ம்ம் சரி” என்று உள்ளே போன குரலில் சொன்னவள் தன் மனதிற்குள் அவன் அம்மு என்று சொன்னதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.
“இன்னைக்கு நீங்க காலைல பண்ண குட் மோர்னிங் மெசேஜ் பார்த்து நான் எவ்வளவு ஹாப்பியா பீல் பண்ணினேன் தெரியுமா?” என்றவள் சொல்ல அவள் குரலில் இருந்த உற்சாகம் அவன் முகத்தில் தாவிக் கொண்டது.
“அடிப்பாவி அப்ப காலைல பதினோரு மணிக்கு தான் எழுந்தியா?” என்றவன் கேட்க “இல்லையே பத்து மணிக்கே எழுந்திட்டேன்” என்று பெருமையாக சொன்னவளை ஒரு வித ஆச்சர்யம் கலந்த பார்வையுடன் பார்த்தவன்
“உங்க வீட்ல லேட்டா எழுந்ததுக்கு ஒன்னும் சொல்லலியா?” என்றவன் கேட்க “பாட்டி இங்க வந்ததுக்கு அப்புறம் ஏழு மணி மேல தூங்கவே விடமாட்டங்க.பட் இன்னைக்கு பத்து மணி வரைக்கும் தூங்குனதுக்கு ஒண்ணுமே சொல்லல.எனக்கே செம்ம ஆச்சர்யம்” என்றவள் வியக்க
“அடிப்பாவி ஏழு மணி வரை தான் தூங்கவிடுவாங்கனு சொல்லற?” என்றதற்கு “பாருங்க எங்க பாட்டி எப்படி என்னை கொடுமை பண்ணறாங்கன்னு.யாருமே பாட்டிகிட்ட அவள் தூங்கட்டும் சொல்லல.பெங்களூர்ல எல்லாம் நான் காலேஜ் இல்லனா லஞ்ச்க்கு தான் பெட் விட்டு எழுந்திருப்பேன்” என்று சொல்ல அவனுக்கு உள்ளே பக் என்றிருந்தது.
“அடியே!ஏழு மணி வரை உங்க வீட்ல உன்ன தூங்க விடுறதே பெரிய விஷயம்.என்ன எல்லாம் ஐந்தரை மணிக்கு மேல அம்மா இங்க தூங்க விடமாட்டாங்க “ என்று சொல்ல “அச்சோ!ரொம்ப பாவம் நீங்க”என்றாள்.
“நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீயும் நேரத்துல தான் எழுந்துக்கணும்.நம்ம வீட்ல எல்லாம் நேரத்துல எழுந்துப்பாங்க” என்று சிறு கண்டிப்புடன் சொல்ல அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது.
“அம்மு!இவ்வளவு நாள் நீ சிங்கள் டா.பட் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உனக்கு நிறைய ரெஸ்பான்ஸுபிலிடிஸ் வரும்.நான் உனக்கு கண்டிப்பா அதுல ஹெல்ப் பண்ணுவேன்.பட் எல்லாத்துலையும் பண்ண முடியாது டா.
நம்ம குடும்பத்துல உங்கிட்ட நிறைய இல்லைனாலும் கொஞ்சம் எதிர்பார்பாங்க ஓகே.நீ பொறுப்பா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்” என்று சொல்ல தாருவிற்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.
அவள் தலையாட்டிய முறையிலேயே அவளுக்குப் புரியவில்லை என்று கண்டுபிடித்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“என்ன புரியலையா?” என்று கேட்க தலையை ஆம் என்று ஆட்டினாள்.”நான் சொல்லறது எல்லாம் கேளு.அது போதும்” என்று சொல்ல அதற்கும் தலையாட்டினாள்.
“என்ன தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்டிட்டு இருக்க?’ என்று கேட்க “போ டா” என்று ஒரு ப்ளோவில் சொல்லிவிட்டவள் பின்பு தன் நாக்கை கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவன் கோபமாக இவளை முறைத்துக்கொண்டு இருக்க “ஏதோ ஒரு பிலோல டா வந்துருச்சு.பட் என்னால எப்பவும் உங்களை வாங்க போங்க எல்லாம் கூப்பிட முடியாது”என்று அவனைப் போலவே முறைத்துக் கொண்டே சொல்ல ப்ரியன் சிரித்துவிட்டான்.
“சும்மா நான் முறைச்சா என்ன பண்ணுற பாக்கலாம்னு முறைச்சேன்.எப்படி தோணுதோ கூப்டுக்கோ.பட் தனிய இருக்கப்ப மட்டும்.எல்லாரும் இருந்தா வாங்க போங்க தான்” என்று சொல்ல தலையாட்டினாள்.
“மாமா கூட கூப்பிடலாம்” என்று அவன் கேலியாக கூற “என்னது மாமாவா அப்படி எல்லாம் நான் கூப்பிட மாட்டேன்.போ டா” என்றுவிட்டாள்.
“சரி அப்ப நாளைல இருந்து காலைல நேரத்துல எழுந்திருக்கிற.அப்புறம் வாசல் கூட்டி கோலம் போடுற” என்று சொல்ல “என்னது கோலமா?” என்று அதிர்ந்தவள் “அது எல்லாம் எனக்கு போடத் தெரியாது” என்றாள்.
“தெரியாதுன்னா கத்துக்கோ டி.லைப் இஸ் டூ லேர்ன்” என்றதற்கு அவள் “சரி” என்று சொல்ல “அப்புறம் பொட்டு ஏன் இவ்வளவு சின்னதா கண்ணுக்கே தெரியாத மாதிரி வைச்சிருக்க?” என்றான் “நான் பொட்டே வைக்க மாட்டேன்.பட் இங்க வந்து பாட்டிக்கு பயந்து தான் வைக்கிறேன்” என்றாள் சின்ன சலிப்புடன்.
“எனக்கு பெரிய போட்டு வைச்சா ரொம்ப பிடிக்கும்” என்று சொல்ல தாரு ஒன்றும் சொல்லாமல் பேச்சை மாற்றிவிட்டாள்.
“நான் இன்னைக்கு காலைல இருந்து உங்ககிட்ட ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேசணும் நினைச்சேன்.பட் டாபிக் எங்கயோ மாறிருச்சு.உன்னோட பேரு கண்டுபிடிச்சுட்ட!” என்றாள்.
அவன் புருவம் உயர்த்தி சொல்லு என்பதைப் போல் பார்க்க அவனிடம் விளையாட நினைத்தவள் “ப்ரியதர்ஷன்” என்றாள்.
“சூப்பர் டி.கரெக்டா கண்டுபிடிச்சுட்ட”என்றவன் கைதட்ட அவளுக்கு மிகவும் குழப்பம் ஆகிவிட்டது.”டேய் லூசு!உன் பேரு கவிப்ரியன் தான?” என்று நகத்தைக் கடித்துக்கொண்டு கேட்க சிரித்தவன் “பார்டா!என்னவே இந்த பேபி ஓட்ட நினைக்குது” என்று அவள் முகத்தை குத்துவதைப் போல் செய்து காண்பித்தான்.
நாக்கை கடித்தவள் “சரி…சரி…ஓட்டாத” என்று சொல்ல “என்ன பழக்கம் டி இது?ஒன்னா நாக்கை கடிக்குறது.இல்லனா நேகத்தை கடிக்குறது” என்று கேட்க “டேய்! உனக்கு சௌந்தரம் பாட்டியே 1௦௦௦ டைம்ஸ் பெட்டெர் டா” என்று கை எடுத்து கும்பிட்டாள்
.”சரியான பஞ்சாங்கம்”என்று அவளுக்குள் முணுமுணுத்துக்கொள்ள அவனுக்கு அது நன்றாக கேட்டது.
“இந்த பழைய பஞ்சாங்கம் கூட தான் அம்மிணி நீங்க இனி வாழ்கை புல்லா வாழனும்” என்றவன் கண்ணடிக்க “இந்த பெட்டெர் மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று தன் பெருவிரலை தன்னைத் தானே நோக்கிக் கேட்டுக்கொண்டவளைப் பார்த்துச் சிரித்தவன்
“சரி சொல்லு பேர் எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க “நம்ம மார்க் தான் சொன்னாரு”என்றவள் கெத்தாக சொல்ல “அட நம்ம மார்க் பையன் பார்த்த வேலையா இது?” என்று சிரித்தவன் “பரவாயில்லை டி.உனக்கு கூட கொஞ்சம் அறிவு இருக்கு”என்றான் கேலியாக.
அவனை முறைத்தவள் “உங்க அளவுக்கு இல்லைனாலும் நாங்களும் கொஞ்சம் அறிவாளி தான் பாஸ்”என்றவள் சொல்ல “நீ என் அறிவுவுவு வாளி டி” என்று ஓட்ட “போ டா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன் தெரியுமா உன் பேரு?”என்று கேட்க
“சரி சரி சும்மா சொன்னேன்.நீயே கண்டுபிடிச்சது ரொம்ப சந்தோசம்.என்ன வேணும் உனக்கு?” என்று கேட்க “நீங்க பர்ஸ்ட் உங்களைப்பற்றி சொல்லுங்க.அப்புறம் நான் என்ன வேணும் சொல்லற” என்றாள்.
“என்ன பத்தி…ம்ம்ம்..என்ன சொல்லறது?பி.டெக் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பி.எஸ்.ஜில படிச்சேன்.அப்புறம் எம்.பி.ஏ யூ.எஸ்ல பண்ணின.இப்ப அப்பா ஓட சேர்ந்து ரைஸ் மில் பார்த்துக்குற.அப்புறம் மில்லேட்ஸ் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணற பிசினஸ்” என்று தன்னைப் பற்றி சொன்னான்.
“இதுக்கு முன்னாடி நீங்க ஏதாச்சும் ரிலேசன்ஷிப்ல இருந்துருக்கிங்களா?”
“இல்லை.ஜஸ்ட் சைட் சீயிங் மட்டும் தான்”
“தேங்க் காட்!நானும் இதுக்கு முன்னாடி எந்த ரிலேசன்ஷிப்லையும் இருந்தது இல்லை.பட் லவ் பண்ணனும் ஆசை எல்லாம் இருந்துச்சு.”
“ஏன் பண்ணிருக்க வேண்டியதுதான?”
“அப்பாக்கு பிடிக்காது.நான் என்ன சொன்னாலும் அப்பா செய்வார்.பட் லவ் மட்டும் பிடிக்காது”என்றவள் விக்னேஷ் பற்றியும் சொல்லிவிட்டாள்.
“எனக்கு காலைல பொண்ணு பார்க்க வந்துருக்கிங்க தெரிஞ்ச உடனே செம்ம கோவம்.பட் சந்தியா அக்கா பார்த்ததும் தான் நீங்க மாப்பிளை தெரிஞ்சுச்சு.அப்ப செம்ம ஹாப்பி.அன்னைக்கு கோவில்ல நான் உங்களை செம்மையா சைட் அடிச்சேன்.பட் நீங்க தான் என்ன திரும்பி கூட பார்க்கல”என்றாள் சோகம் இழைந்தோடும் குரலில்.
சிரித்தவன் “யாரு உன்ன பார்க்கல?அந்த பிங்க் கலர் குர்த்தால எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?நீ சுப்ரியா கூட விளையாண்டப்ப என் கண்ணு புல்லா உன் மேல தான்.உன்னோட ஆக்ஷன்ஸ் எல்லாமே எனக்கு சின்னப் பிள்ளைத் தனமா தான் தெரிஞ்சுச்சு.
அப்புறம் பார்த்தா உங்க அப்பா கூட அவ்வளவு சண்டை போடுற ஐஸ்கிரீமுக்காக.எனக்கு செம்ம சிரிப்பு” என்றவன் சிரிக்க “எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு” என்று தாரு சொல்ல
“இது ஒன்னும் சந்தோஷ் சுப்ரமணியம் படம் இல்லை மா…நடு ராத்திரியில போய் ஐஸ்கிரீம் சாப்பிடுறதுக்கு” என்றவன் சிரிக்க “போ டா.வேஸ்ட் பெல்லோ”என்று அவள் திட்ட அவன் அவளை வார என்று நேரம் போனது.
இன்றும் இருவரும் நன்றாக கடலை வறுத்துவிட்டு தூங்க மூன்று மணி மேல் ஆகிவிட்டது.
அத்தியாயம் 7
அடுத்த நாள் காலை தாரு வைத்திருந்த அலாரம் ஐந்தாரை மணிக்கு அடிக்க கஷ்டப்பட்டு கண் விழித்தவள் அதை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.மனது எழுந்து கொள் எழுந்து கொள் என்று சொல்ல அவளால் கண்ணையே திறக்க முடியவில்லை.
மிகவும் சிரமப்பட்டு ஆறு மணிக்கு எழுந்தவள் ஹாலிற்கு செல்ல மொத்த குடும்பமும் இவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது.
“நான் கோலம் போடுற.எனக்கு சொல்லிக் கொடு”என்று தன் அம்மாவிடம் கேட்க “நீ தானா டி இது?” என்றவர் வாய்மேல் விரல் வைத்துக் கேட்க முறைத்தவள் “சொல்லி கொடுன்னா சொல்லிக் கொடு”என்று பல்லைக் கடிக்க அவர் அவளுக்கு சொல்லிக் கொடுக்க சுமாராக கோலத்தை போட்டு முடித்தாள்.
ப்ரியனிடம் இருந்து குட் மோர்னிங் என்ற மெசேஜ் வந்திருக்க அவளுக்கு உற்சாகமாகிவிட்டது.அதே உற்சாகத்துடன் புடவை எடுக்க கிளம்பிச் சென்றாள்.
அன்று அவனிடமிருந்து சிறு சிறு மெசேஜ்ஜஸ் வர பெருமகிழ்ச்சி அடைந்தாள்.குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இன்று தாருவிற்கு உறுதிவார்தைக்கு புடவை எடுக்கச் சென்றனர்.
தாருவிற்கு ஷாப்பிங் செய்வதில் அலாதிப் ப்ரியம் இருந்ததால் மிகவும் ஆர்வமாக புடவைகளை தேர்வு செய்தாள்.புடவை இதுவரை பெரியதாக அணிந்து பழக்கமில்லாததால் கொஞ்சம் செலெக்ட் செய்ய சிரமப்பட்டாள்.
ஒரு வழியாக மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு மூன்று புடவைகளை தேர்வு செய்திருந்தாள்.ஆனால் அதில் எதை எடுப்பது என்று தெரியாமல் இருக்க வீட்டினர் அனைவரும் உன் இஷ்டம் என்று விட்டனர்.
ப்ரியனிடம் கேட்கலாமா என்று யோசித்தவள் பின்பு ‘பிஸியா இருந்தா என்ன பண்ணறது?’என்று நினைத்தவள் அவளே தேர்ந்தெடுக்க நினைத்தாள்.ஆனால் முடியாமல் முழிக்க பரந்தாமன் “மூணுமே ரொம்ப அழகா இருக்கு தங்கம்.மூணையுமே எடுத்துக்கோ”என்று விட்டார்.
இரவு சரியாக தூங்காதது மற்றும் பகல் முழுவதும் அலைந்தது அவளை மிகவும் சோர்வடையச் செய்ய மாலை வீட்டிற்கு வந்ததும் போய் படுத்துவிட்டாள்.
இரவு ஒன்பது மணிக்கு ருக்குமணி வந்து சாப்பிட அழைக்கவும் தான் எழுந்தவள் முகம் கழுவிவிட்டு சாப்பிடச் சென்றால்.
“நாளைக்கு போய் டைலர் கிட்ட ப்ளெவுஸ் தைக்க கொடுத்துட்டு வந்தரலாம்.எந்த சாரீனு டிசைட் பண்ணிக்கோ தாரு.அதை கொஞ்சம் கிராண்டா தெச்சுக்கலாம்”என்று விசாலாட்சி சொல்ல சரி என்றாள்.
இரவு பத்து மணிக்கு ப்ரியன் அழைக்க நடந்த எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.”நான் செலெக்ட் பண்ண உங்ககிட்ட கேக்கலாம் நினைச்ச.பட் பிஸியா இருப்பிங்க நினைச்சு கால் பண்ணல” என்று சொல்ல “ஏதாச்சும் இம்பார்டன்ட் விஷயம்னா நீ எனக்கு தாராலமா கால் பண்ணலாம் அம்மு.உன்ன விட எனக்கு இம்பார்டன்ட் எதுவுமில்லை.புரிஞ்சுதா?” என்று கேட்க அவள் மனதில் சந்தோசத்தின் சாரல்கள்.
தாரு புடவைகளை போட்டோ எடுத்து அனுப்ப ப்ரியன் அதிலிருந்த ஊதா நிற புடவையை செலெக்ட் செய்தான்.
இன்றும் அவர்கள் பேச்சு விடியற்காலை வரை நீண்டது.இருவரின் விருப்பு வெறுப்பு தொடங்கி அன்றாடம் நடைமுறைகள் பற்றியும் கூடப் பேசத் தொடங்கி இருந்தனர்.
தாருவிற்கு ப்ரியன் தான் உலகமாக மாறிப்போனான்.இவ்வளவு வருடங்களில் விசாலாட்சி சொல்லிக் கேட்காததைக் கூட ப்ரியன் சொன்னவுடன் கேட்டுக் கொண்டாள்.காதல் அவளை மாற்றி இருந்தது.
இப்பொழுது சமையலும் கொஞ்சம் கற்றுக் கொண்டு வருகிறாள்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது “அம்மா ரொம்ப சூப்பர்ரா சமைப்பாங்க.அதுவும் எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு வைப்பாங்க பாரு..அவ்வளவு டேஸ்டா இருக்கும்” என்று சொல்லி இருந்தான் ப்ரியன்.
அன்றிலிருந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட முறை செய்துவிட்டாள் அக்குழம்பை.ஆனால் தாருவிற்கு நன்றாக வரவேயில்லை.
அன்று மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தவள் சமையலறைக்கு சென்றாள்.அவள் செல்வதைப் பார்த்த கார்த்திக் “இன்னைக்கு எவ்வளவு பேர் உயிர் போகப் போகுதோ?முதல்ல நாம எஸ்கேப் ஆகிறனும் டா சாமி” என்று சத்தமாக சொல்ல உள்ளே சென்றவள் மீண்டும் ஹாலிற்கு வந்து அவன் முதுகில் ஒன்று போட்டால்.
“ஆ!அம்மா!வலிக்குது டீ எரும”என்றவன் அலற “நல்ல அடி தங்கம் அவன…வாய் ரொம்பத் தான் பேசுறான்” என்றார் சௌந்தரம் பட்டி.
இப்பொழுது சௌந்தரம் பாட்டிக்கும் தாருவிற்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.பேத்தி பொறுப்பாக மாறிவிட்டாள் என்பது அவருக்கு மிகுந்த சந்தோசத்தையும் மனநிம்மதியையும் கொடுத்திருந்தது.
வீட்டிலிருந்த அனைவருக்குமே தாரு இவ்வளவு பொறுப்பாக மாறியது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது.தாருவின் மாற்றங்களுக்கு காரணமாய் இருந்த மாப்பிள்ளை ப்ரியனின் மேல் அனைவருக்கும் மரியாதை கூடியது.
‘வீட்டின் செல்ல இளவரசியாக வளம்வந்தவள் மருமகளாக செல்லும் இடத்தில் இவளின் சிறுபிள்ளைத் தனத்தினால் பிரச்சனை வந்துவிடுமோ?’என்று பயந்த விசாலாட்சியின் மனதுக்கு இப்பொழுது தான் ஆறுதலாக இருந்தது.
அன்றும் மிகவும் சிரமப்பட்டு யாருடைய துணையும் இல்லாமல் இரண்டு மணி நேரத்தில் மதிய சமையல் அனைத்தையும் சமைத்துவிட்டு வெளியே தாரு வர “வாங்க மாப்பிள்ளை”என்று ப்ரியனை பரந்தாமனும் பத்மநாபனும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
ப்ரியன் இன்று இங்கு வரப்போவதைப் பற்றி ஒன்றும் சொல்லாததால் தாரு இன்ப அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.”வந்தவர வாங்கன்னு கூப்பிடு தாரு”என்ற தந்தையின் குரலில் தன்னுணர்வு பெற்றவள் “வாங்க” என்று அவனை வரவேற்று அவனுக்கு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால்.
அதற்குள் வெளியே சென்றிருந்த பெண்கள் மற்றும் கார்த்திக் வந்துவிட மற்றுமொரு வரவேற்புப் படலம் நடைப்பெற்றது.
ப்ரியனின் மனம் இன்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.காரணம் தாரு வைத்திருந்த பொட்டு.அவன் அன்று சொன்னதைப் போல் பெரிய போட்டு வைத்திருந்தாள்.அது அவளின் அழகை மேலும் எடுத்துக் காட்டியது.
அவனிடம் தண்ணீர் சொம்பை நீட்ட அவள் கையை அழுந்தப் பற்றியபடி வாங்கினான்.தாருவிற்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.வெட்கத்தில் முகம் குனிந்து கொண்டாள்.
தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அதே போல் சொம்பைக் கொடுக்க அவளுக்கு வெட்கத்தில் முகம் செந்தணலாக சிவந்திருந்தது.
பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ப்ரியனின் கண்கள் அவ்வப்பொழுது தாருவை தொட்டு மீண்டன.ப்ரியனை ராஜு தாத்தா சாப்பிட அழைக்க “இன்னைக்கு நீங்க செம்மையா மாட்டுனிங்க.சமையல் செஞ்சது தாரு”என்று கார்த்திக் சொல்ல “இனி வாழ்க்கை புல்லா அதை தான் சாப்பிடனும்னு தலைல எழுதிருக்கே” என்றான் சிரித்துக்கொண்டு கவிப்ரியன்.
அவன் சொன்னதைக் கேட்டு முறைதுவிட்டுப் போன தாரு சாப்பாடு பரிமாறும் பொழுது இவன் பக்கம் வரவே இல்லை.”இன்னைக்கும் எண்ணை கத்திரிக்காய்யா?இவள் சமைக்க பழகுறன்னு சொல்லி வாரத்துல நாலு நாள் இதை செஞ்சு என்ன வெச்சு செய்யற” என்று புலம்பிய கார்த்திகைப் பார்த்து ப்ரியன் வாய்விட்டு சிரித்தான்.
ஆனால் அவன் மனதில் அவ்வளவு சந்தோசம்.தனக்காகத் தான் அவள் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாள் என்று.அன்று எண்ணை கத்திரிக்காய் மிகவும் அருமையாக வந்திருக்க எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட ப்ரியன் அன்று அதிகமாக சாப்பிட்டான்.
அவன் சாபிட்டு முடிக்கும் வரை அவனை ரசித்தவள் விசாலாட்சி “மாப்பிளைக்கு துண்டு எடுத்துக் கொடு” என்று சொல்ல அதை எடுக்கச் சென்றால்.அவன் கை கழுவியதும் அதைக் கொடுக்க வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் என்ன என்பதைப் போல் பார்க்க “மாமன் கை தொடைக்க சேலை கட்டலைன்னா கூட பரவாயில்லை…கடைசிக்கு ஒரு ஷால் ஆச்சு போடக் கூடதா டி?” என்று கேட்க சிரித்தவள் அவன் கையில் துண்டைக் கொடுக்க “ஏன் துடைச்சு விடமாட்டியா?” என்று அவளது இடையில் கை கொடுத்து கேட்க கூச்சத்தில் நெளிந்தவள் “விடு டா…யாராச்சும் வந்திற போறாங்க” என்று சொல்ல “கை தொடச்சு விடு..விடுற”என்றவன் சொல்ல வேறு வழி இல்லாமல் துடைத்துவிட்டாள்.
மீண்டும் ஏதோ ப்ரியன் சொல்லவர அதற்குள் கார்த்திக்கின் குரல் கேட்கவே இருவரும் விலகினார்.மீண்டும் பெரியவர்களுடன் அமர்ந்து பேசியவன் சிறிது நேரம் கழித்து தாருவுடன் பேச வேண்டும் என்று சொல்ல இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.
சிறிது தூரம் உள்ளே சென்றவுடன் தாருவை ப்ரியன் இறுக அணைத்துக் கொண்டான்.அவளும் அவனுடன் ஒன்றிவிட்டாள்.சிறிது நேரம் கழித்து இருவரும் விலக அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் “இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?” என்று கேட்க அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
“என்ன பாரு டி”என்றவன் சொல்ல அவனைப் பார்த்தால் “வீட்டுக்குள்ள வர்றப்ப உன் கோலம்.சூப்பரா போட்டிருக்க.அப்புறம் எனக்கு பிடிச்ச இந்த பெரிய பொட்டு.எல்லாத்தையும் விட சூப்பர் உன்னோட எண்ணை கத்திரிக்காய் குழம்பு” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இப்படியே நாட்கள் அழகாய் சென்றன.இருவருக்கும் முரண்பட்ட கருத்துகள் வந்தாலும் ஒன்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டனர் அல்லது மற்றவருக்கு அதைப் புரியவைத்து மாற்றிவிட்டனர்.
“வாங்க… போங்க…” என்ற அழைப்பு மாறி இப்பொழுது “வா டா..போ டா..”என்ற அழைப்பு தான் தாருவிற்கு இப்பொழுது வருகிறது.ப்ரியனும் அவளை “அம்மு”என்று அழைப்பான்.
கிராமத்து வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி தாரு அவள் நடைமுறைகளை கொஞ்சம் மாற்றிக் கொண்டாள்.சிரமப்பட்டாலும் ப்ரியனின் மேல் இருந்த அன்பு அவளை இதைச் செய்ய வைத்தது.
ப்ரியனுடம் பேசுவது மட்டுமல்லாது இப்பொழுது தன் மாமியார் நாத்தனார் உடனும் போன் பேசும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.
ஒரு அளவிற்கு பொறுப்புகளை எல்லாம் கற்றுக்கொண்டாள்.அவள் உடை விஷயம் கூட சற்று மாறி இருந்தது.சில மாற்றங்கள் ப்ரியனால் நிகழ்ந்தன சில மாற்றங்கள் அவனுக்காக அவளாகவே அவளை மாற்றிக்கொண்டாள்.
ப்ரியனும் தாருவிற்காக தன் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தான்.தன் உடை விஷயங்களை அவளுக்குப் பிடித்தது போல் மாற்றிக்கொண்டான்.
இருவரும் சேர்ந்து இருமுறை கோவைக்கு தனியாக வந்திருந்தனர்.அவள் முதல் முதலாக கேட்ட ஐஸ்கிரீமை இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான் நம் ப்ரியன்.
உறுதிவார்த்தை நிச்சயதார்த்தத்தின் பொழுது புகுந்த வீட்டினருடனும் கொஞ்சம் நன்றாகப் பழகிக் கொண்டாள் தாரு.
உறுதிவார்தையும்,நிச்சயதார்த்தமும் நல்ல படியாக முடிந்திருக்க நாளைக் காலை இருவருக்கும் திருமணம்.இன்றைய இரவு ரிசப்சனிலேயே இருவரும் நின்று நின்று கலைத்துப் போய் இருந்தாலும் தூங்காமல் போன் பேசிக் கொண்டிருந்தனர்.
பன்னிரண்டு மணி ஆனதும் “போதும் போய் தூங்கு டி.காலைல நேரத்துல எந்திருக்கணும்”என்று ப்ரியன் சொல்ல “ஏன் டா இவ்வளவு நாள்ல ஒரு நாள் ஆச்சு என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருக்கியா?” என்று தன் நெடு நாள் வருத்தத்தை அவனிடம் கேட்க சிரித்தவன் “போய் தூங்கு டி.நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றான்.
அவள் ஒன்றும் பேசாமல் காலை கட் செய்யாமல் இருக்க “ஒய் மேடம்!என்ன கோபமா?” என்றான் அவளை சரியாய் புரிந்து கொண்டு.இப்பொழுதும் அவள் ஒன்றும் பேசாமல் இருக்க அவன் போனை வைத்துவிட்டான்.
அவளுக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக இப்பொழுது அவளைப் பார்க்க வருவான் என்று.மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து சில பூக்களை எடுத்தவன் அங்கிருந்த ரிப்பனைக் கொண்டு அதை அழகாய் கட்டி அவள் அறைக்கு எடுத்துச் சென்றான்.
அவளுடன் இருந்தவர்கள் பாகத்து அறையில் தூங்கி இருக்க இவள் மட்டுமே இங்கே இருந்தாள்.உள்ளே வந்தவனைப் பார்த்ததும் சிரித்தவள் புருவம் உயர்த்தினால்.
அவள் முன் மண்டி இட்டவன் “ஐ லவ் யூ” என்று சொல்ல “போ டா உனக்கு ப்ரொபோஸ் கூட பண்ணத் தெரியல” என்று தாரு சலித்துக்கொள்ள “நீ கூபிட்ட உடனே வந்தன்ல என்ன சொல்லணும்.நீங்க நினைக்கிற மாதிரி ட்ரீம் ப்ரோபோசல்ஸ் எல்லாம் சினிமால தான் மா நடக்கும்” என்று சொல்ல
“போ டா!நான் எப்ப எது கேட்டாலும் இதே சொல்லு” என்றாள்.மேலும் அவளைப் பேச விடாமல் இறுக அணைத்தவன் தன் அதரங்களை அவள் நெற்றியில் பதித்துவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலை முப்பது முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்க கவிப்ரியன் தாரிகாவின் கழுத்தில் மங்கள நானையிட்டான்.
கழுத்தில் தாலி ஏறியதும் தாரு சிரித்த முகமாக ப்ரியனைப் பார்க்க அவன் கண்ணில் இரு சொட்டுக் கண்ணீர்.கண்ணைச் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
பரந்தாமன் விசாலாட்சி இருவரின் கண்ணிலும் கண்ணீர்ப்படலம்.விசாலாட்சி கூட தன்னை சமாளித்துக் கொண்டார்.ஆனால் பரந்தாமனால் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
ப்ரியனின் பெற்றோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள் இவர்களிடம் வர கண்ணைத் துடைத்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்தனர் பெற்றோர்.
அத்தியாயம் எட்டு
அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு ப்ரியனுடன் தாரு தாரிகா கவிப்ரியன்னாக அவர்கள் வீடு செல்லும் நேரம் இது!
பிறந்த வீட்டினர் அனைவரும் கண்கலங்க தாருகாவும் தன் தந்தையை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.என்னதான் அவள் தன் நாயகன் உடன் அவன் வீடு சென்றாலும் அவள் முதல் நாயகன் என்றும் அப்பா தானே!
ப்ரியனிற்கே இச்சூழல் கொஞ்சம் கனமானதாகத் தான் இருந்தது.இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகியும் இருவரும் அழுது கொண்டே இருக்க சௌந்தரம் பாட்டி தான் இருவரையும் சமாதானப்படுத்தி தாருவை ப்ரியனின் கையில் பிடித்துக் கொடுத்தார்.
அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க சந்தியா அவளை தோல் தாங்கினாள்.பரந்தாமனின் முகம் தெளிவில்லாமல் மகளையே பார்த்துக் கொண்டிருக்க மாமனாருடன் தனியாகப் பேசச் சென்றான் மருமகன்!
அவர் கையைப் பிடித்தவன் “உங்களோட அளவுக்கு அவளை என்னால நல்லா பார்த்துக்க முடியுமா தெரியலை.பட் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்” என்று உறுதி கொடுக்க மருமகனை அணைத்துக்கொண்டவர் கண்கள் இப்பொழுது ஆனந்தத்தில் கலங்கின.
இப்பொழுது அவர் முகம் சற்று தெளிவடைந்து இருக்க மகளை சிரித்த முகமாகவே வழி அனுப்பினார்.ஆனால் தாருவின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.
காரில் ஏறி அமர்ந்ததும் ப்ரியனின் தோளில் சாய்ந்து கண் முடியவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வர அதைத் துடைத்தவன் ஆறுதலாக தலையை தடவிக் கொடுத்தான்.
அப்படியே அவன் தோளில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தவள் வீடு வந்ததும் ப்ரியன் எழுப்பியதும் தான் எழுந்தாள்.தூங்கி எழுந்ததில் மனம் சற்று தெளிவடைந்து இருக்க ப்ரியனைப் பார்த்துச் சிரித்தவள் கிழே இறங்கினாள்.
சந்தியாவும் சர்மிளாவும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.முதலில் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டவள் பின்பு சமையலறையில் உப்பு,புலி,பருப்பு,சர்க்கரை,தண்ணீர் எல்லாம் தொட்டுக் கும்பிட்டாள்.
ப்ரியனின் பாட்டி பால் பழம் கொடுக்க ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டு சாப்பிட்டனர்.தாருவிற்கு பழம் பிடிக்காத காரணத்தினால் தாருவிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு முழுவதையும் அவன் சாப்பிட்டுவிட்டான்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளவயதினர் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.பின்பு குடத்தில் தண்ணீர் விட்டு மோதிரம் எடுக்கும் விளையாட்டு ஆரம்பமானது.
இருவரும் தண்ணீருக்குள் கை விட ப்ரியன் சிறிது நேரம் தாருவின் கையைப் பிடித்து சீண்ட அவனை எல்லோர் முன்பு முறைக்கவும் முடியாமல் அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து விட தாருவின் கையில் தங்க மோதிரம் வந்துவிட்டது.இப்படியாக பொழுது இனிமையாக கழிந்தது.
முதலிரவு!
படபடக்கும் நெஞ்சோடு தாரு உள்ளே நுழைய ப்ரியனை அவளால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.”ஹலோ மேடம் ஜி!இந்த சீன்ல நீங்க என்னோட கால்ல விழனும்”என்றவன் சொல்ல தாருவிற்குள் இருந்த வெட்கம் இப்பொழுது காணாமல் போயிருந்தது.
அவனை இரண்டடி போட்டவள் “போ டா”என்று சொல்ல அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன் அவள் அதரங்களில் விளையாடத் தொடங்கினான்.
@@@@@@@@@@@@@@@@@@@
நான்கு ஆண்டுகள் கழித்து,
“தாரு!தாரு!”என்ற மழலையின் குரல் வீடு முழுவதும் நிறைந்திருந்தது.”என்ன டா தங்கம்?” என்ற தகப்பனிடம் “தாரு என்னோட சாக்லேட்ட மறைச்சு வெச்சுட்ட.டேபிள் மேல இருந்தத காணோம்” என்றாள் கவிரிகா!கவிப்ரியன் தாரிகாவின் தவப்புதல்வி!மூன்று வயதே ஆன சின்னச்சிட்டு!
ஜாடையில் அப்படியே தந்தையை உரித்து வைத்திருந்தாள்.ஆனால் குணம் அப்படியே தாரிகவைப் போல்.விசாலாட்சியை தாரிகா ஆட்டி வைத்தது போல் இப்பொழுது நம் தாரிகவை ஆட்டி வைக்கிறாள் கவிரிகா!
மகளின் சத்தத்தில் ரூமிற்குள் வந்தவள் “என்ன டி?” என்று கேட்க “என்னோட சாக்லேட் எங்கே?” என்றாள் அவளை முறைத்து இடுப்பில் கைவைத்தவாரு.
“காலைல தான ரெண்டு சாக்லேட் சாப்பிட.நாளைக்கு சாப்பிடலாம்.எல்லாம் உங்க அப்பாவே சொல்லணும்.என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தந்தறது”என்று சொல்ல
“இதை போய் முதல்ல உங்க தாத்தா கிட்ட உங்க அம்மாவ சொல்ல சொல்லு டா செல்லம்”என்று மகளைத் தூக்கிக் கொஞ்சியபடியே ப்ரியன் சொல்ல அவன் முதுகில் ஒன்று போட்டவள் சமையல் அறைக்குச் சென்றாள்.
இப்படியாக நாள் ஒரு மேனியுமாக பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வாழ்க்கை நன்றாகச் சென்றது.
இப்பொழுது தாரு ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்டாள்!”ரொம்ப நல்ல பொறுப்பான பொண்ணு”என்று எல்லோரும் அவளைப் புகழ்ந்தனர்.
ஆனால் சில நேரங்களில் அந்த சிறுபிள்ளைத் தனம் தழைத்தொங்கும் பொழுது ப்ரியனால் ஒன்றும் சொல்ல முடியாது.அவள் கேட்டதை செய்து கொடுத்துவிடுவான்.
சில நேரங்களில் இவன் அவளுக்கு விட்டுக் கொடுப்பதும் அவள் இவனுக்கு விட்டுக்கொடுப்பதும் என இவர்கள் வாழ்க்கை மிக நன்றாகச் சென்றது.
முற்றும்.