EUTV LAST

.

20

அறைக்கதவை திறந்த கணிதன் அங்கு நின்றிருந்த ரேஷ்மாவைப் பார்த்து புருவத்தை சுருக்கியவாறு,

‘இவளை நாம போய் பார்க்க போலாம்னு கிளம்புனா இவ இங்கே வந்திருக்கா…’ என்று நினைத்தவாறு கதவை விரிய திறக்க உள் நுழைந்தாள் ரேஷ்மா.

“ஐ ஆம் சாரி கணி… இந்த கல்யாணத்தை கால் ஆப் பண்ணிரலாம். என்னால உங்களுக்கு துரோகம் பண்ண முடியாது.”என்று கூற கணிதன் என்னடா இது நம்ம டையலாக் எல்லாம் இவ சொல்லுறா என்று பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தான்.

அவளிடம் பேசவே இல்லை. அவளூக்கும் இது தேவைப்படவில்லை போன்று.

“உங்கக்கிட்ட சொல்லியிருந்தேன்ல என் எக்ஸ் லவ்வர் செழியன்.”

ஆமாம் என்பதைப்போன்று கணிதன் தலையசைக்க,

“அவனும் இங்கே வந்திருக்கான். எங்களுக்கு எப்படி ப்ரேக் அப் ஆச்சுன்னு உங்கக்கிட்ட சொல்லி இருக்கேன்ல…”

“ம்ம்… அவனுக்கு வேற ஒரு அப்பேயர் இருந்தனால ப்ரேக் அப் பண்ணிட்டேன்னு சொன்ன…”

“அது உண்மை இல்லை. அவனுக்கு அப்படி எந்த அப்பேயரும் இல்லை. நாங்க எல்லாருமே யூஜி ப்ரெண்ட்ஸ் தான். காலேஜ் டேய்ஸ்ல இருந்தே நாங்க லவ் பண்றோம். என் ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தன் என்னை ஒன்சைடா லவ் பண்ணான். அவன் தான் நாங்க பிரியனும்னு செழியனுக்கு மயக்க மருந்து கொடுத்து ஹோட்டல்ல வைச்சு வேற ஒரு பொண்ணுக்கூட இருக்க மாதிரி போட்டோஸ் அண்ட் வீடியோ எடுத்து ப்ரைவட் நம்பர்ல இருந்து அனுப்பிருக்கான். எனக்கு இந்த மாதிரி தெரிஞ்சவுடனே செழியன் கூட சண்டை எல்லாம் போடாமல் வெறும் ப்ரேக் அப்னு மட்டும் சொல்லிட்டு விலகிட்டேன்.”

“ஓஒ.. இப்ப என் மேரேஜ்னு தெரிஞ்சு டூ வீக் முன்னே நான் காரணம் சொன்ன பின்னாடி தான் அவனுக்கு யாரோ இதுல ப்ளே பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சு அந்த ஹோட்டலுக்கு போய் சிசிடிவி புட்டேஜ் பார்த்து அந்த பையனை கண்டுபிடிச்சு இப்ப தான் எங்கிட்ட ஆதாரத்தோட காட்டுனான். ஐ லவ் ஹிம் அ லாட். ஸாரி கணி… ஐ யம் ரியலி சாரி. ப்ளீஸ் இந்த மேரேஜ் கால் ஆப் பண்ணுங்க. நான் ஒடியெல்லாம் போக மாட்டேன்.”

“எங்க அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவர் இது ஒன்னு தான் சொன்னாரு . கணி இந்த் மேரேஜ் வேணாம்னு சொல்லிட்டா என்னை செழியன் கூட சேர்த்து வைக்கிறேன்னு. இல்லாட்டி என்னால எதுவுமே செய்ய முடியாது. யூ நியூ மை டாடி. ”என்று பெரிய விளக்கத்தை கூறிமுடிக்க கணிதனுக்கு மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது.

கண்ணா லட்டு திண்ண ஆசையா? என்று பிண்ணனியில் ஒலிக்க சிரித்த முகத்துடன் “இந்த மேரேஜை கால் ஆப் பண்ணிரலாம் ரேஷ். அன்ட் நானும் சாரி. எனக்கும் இந்த மேரேஜ் வேணாம்.” என்று கூற ரேஷ்மாவிற்கு ஜாலியோ ஜாலி.

ஏனென்றால் மலர் ஒடிப்போன விசயம் தெரியும் என்பதால, தானும் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டால் கணிதனை நினைத்து ஐயோ என்றிருந்தது.

மிகப்பெரிய பாரம் இறங்கியது போன்று இருக்க சிரிப்புடன் கணிதனை அணைத்து விடுவித்தவள் “காங்கிராட்ஸ் கணி…” என்றவாறு சிரிப்புடன் வெளியேறி தனது தந்தையிடம் கூற விரைந்தாள்.

இதை முதலில் ஆதித்யனிடம் கூறி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அவனின் அறை நோக்கி கணிதன் செல்ல, கணிதனின் அறைக்கு சென்று இதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆதித்யன் செல்ல இருவரும் நடுவில் சந்தித்துக்கொண்டனர்.

“ஹே கணி…”

“ஹே ஆதி…”

 “இந்த நேரத்துல எங்கே போற கணி?” என்று ஆதித்யன் கேட்க, தலை முடியை கோதியவாறு

“உன்னை பார்க்க தான் வந்தேன் ஆதி… நீ?”ஏன்று கணிதன் வினவினான்.

“நானும் உன்னை பார்க்க தான் வந்தேன். உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்.” என்று ஆதித்யன் கூற,

அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை நீருற்றுக்கு அருகிலிருந்த கல் இருக்கையில் அமர்ந்து தாங்கள் ஒருவர் மற்றொருவரிடம் பகிர்ந்துக்கொள்ள வந்த விசயத்தை கூறினர்.

இருவருக்குமே சந்தோஷம். என்னதான் கணிதன் மலர்விழிக்காக பார்த்தாலும் ரேஷ்மாவை நினைத்து ஆதித்யன் மனது உறுத்தலாக தான் இருந்தது. ஆகாஷ் கூறிய விசயத்தில் சிறிது சாதகமாக தோன்றினாலும் அங்கு என்ன சூழ்நிலையோ அந்த ஆடவன் அவளை வற்புறுத்தி கூட முத்தமிட்டிருக்கலாம் என்ற பல யோசனைகளில் இருந்தவனுக்கு கணிதன் சொன்ன விசயம் சூடான தார்சாலையில் செருப்பில்லாமல் நடந்துக்கொண்டிருக்கும் போது வரும் நிழலை போன்று மிக ஆசுவாசமாக இருந்தது.

கணிதனுக்கு என்னவென்றால் மீண்டும் திருமணம் வேண்டாம் எதுவும் மலர்விழி அடம் பிடிப்பாளோ அப்படி அடம் பிடித்தாலும் வற்புறுத்தியாவது திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தது அவனின் மனதை ஏதோ ஒரு விதத்தில் குறுக வைத்திருந்தது. மலர்விழியே வந்து தனக்கு கணிதனுடன் திருமணம் வேண்டும் என்று கூறியது அவன் மனதை சமன்படுத்தியது.

“அப்ப கணி நம்ம பேமிலி அண்ட் ரேஷ்மா பேமிலியை வரச்சொல்லி இப்பயே பேசி முடிச்சிருவோம். மார்னிங்க் வரை நமக்கு டைம் இல்லை. இவங்களை சரிக்கட்டிட்டு இனி வந்த உன் மாமனார் பீரங்கி மூக்கனார் குடும்பத்தை வேற சரிகட்டி இங்கே வரவைக்கனும். மேரேஜ் டேட்டை மறுநாள் கூட மாத்தி வைச்சுக்கலாம். ஆனால் நீ இங்கே இருந்து போறப்ப மேரிடு மேனா தான் டா போனும்…” என்று ஆதித்யன் எப்பொழுதும் போன்று தான் ஒரு சிறந்த தலைவன் என்று திட்டங்களை வகுத்தான்.

முதலில் விஜய்,வீர்,ரிஷிபனுக்கு அழைப்பெடுத்து தங்களது பெற்றோரையும்  இங்கு வரவழைக்க சொல்லிவிட்டு, ரேஷ்மாக்கு அழைத்து அவள் வீட்டு ஆட்களை வரவழைக்க சொன்னர்.

ஆகாஷையும் மலர்விழியையும் ரேஷ்மாவின் குடும்பம் சென்றபின்பு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். பின்பு ஆதித்யன் தனது மனைவிக்கு அழைத்து அவளை வரச்சொன்னான்.

ஆளுக்கு முதலாக சக்தி தனது குட்டி மகளை கடல்காற்று அண்டாதவாறு போத்தி நெஞ்சோடு அணைத்தவாறு தூக்கிவந்தாள்.

“ஏன் சக்தி குட்டியை இங்கே தூக்கிட்டு வர? குளிரப்போகுது…” என்று வேகமாக தனது அண்ணன் மகளை வாங்கிய கணிதன் நன்றாக அணைத்துக்கொண்டான்.

“இல்லை கணி அத்தான். முழிச்சுட்டா அதான். எப்படி தனியா விட்டுட்டு வரமுடியும் அதான்.” என்று அவனிடம் கூறியவாறு அங்கு கல்மேடையில் அமர்ந்திருந்த தன் கணவனை இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

“அதுக்காக… ஏன்டா குட்டிமா உங்களுக்கு தூக்கம் வரலையா?” என்று சக்தியிடம் ஆரம்பித்து அனீஷா ஸ்ரீ யிடம் முடிக்க அந்த குட்டியோ சித்தப்பனை பார்த்து போக்கை வாய் கொண்டு சிரிக்க அதன் அழகில் சொக்கிப்போய் அவளோடு ஐக்கியமாகி விட்டான்.

“தள்ளி உட்காரு டி… எப்ப பார்த்தாலும் இடிச்சிக்கிட்டே இருக்கனும்…” என்று சக்தியை முறைத்தவாறு இன்னும் நெருங்கி அமர்ந்து பேச்சுக்கும் செயலுக்கும் முரணாக செய்துக்கொண்டிருந்தான் ஆதித்யன்.

“என் புருஷனை இடிக்காமல் பக்கத்துவீட்டுகாரனையா இடிக்க முடியும். இப்ப எதுக்கு நீங்க இடிச்சிக்கிட்டு வரீங்க?” என்று அவர்கள் இருவரும் அங்கு தனியாக படம் ஒட்டிக்கொண்டிருக்கும் போதே ஜோசப் குடும்பம் முழுவதும் பதட்டமாக அங்கே வந்தனர்.

அதிலும் கணிதன் ஆதித்யனின் தாய் விஜயா மிகவும் பதட்டமாக காணப்பட்டார்.

“தம்பி என்னப்பா? என்னாச்சு? எதுவும் பிரச்சினையா பா?”என்று வேகமாக வந்து கணிதனின் முகத்தை தடவியவாறு கேட்டார் விஜயா.

அதிலேயே தன் வாழ்க்கையை நினைத்து எவ்வளவு பயந்திருக்கிறார் என்பது புரிந்தது.

“அச்சோ அதெல்லாம் ஒன்னும் இல்லை மா.. எல்லாமே நல்லது தான்… நீங்க பதட்டப்படாதீங்க…” என்று கணிதன் தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தன் அப்பாத்தாவை பார்த்த அனு குட்டி பொக்கைவாய் சிரிப்புடன் அவரிடம் செல்ல துடிக்க அப்பொழுது தான் குழந்தையைப் பார்த்தவர் உடனே கணிதனின் கையிலிருந்து வாங்கி கொஞ்சிக்கொண்டே மருமகளை பார்த்து முறைத்தார்.

“அடியே சக்தி எருமை. இந்த கடல் காத்துல எதுக்கு டி பிள்ளையை தூக்கிட்டு வந்த? இங்கே வாடி அடங்காதவளே…” என்று சக்தியை அதட்டி அழைக்க அவரருகே வந்தாள்.

“இல்லை விஜி த்தை… பாப்பா முழிச்சிட்டா.. தனியா எப்படி விட்டுட்டு வரது அதான்…” என்று தன் கணவனிடம் உரசியதை விட அதிகமாக இவரிடம் உரச அவரது கோவம் பதட்டம் எல்லாம் போய் சிரிப்பு வந்தது இவளது செய்கையில்.

“என் பிள்ளையை உரசுறது சரி டி… என்னையும் ஏன் உரசுற…” என்று பேசியவாறே ஆல்ரெடி முகம் மட்டுமே தெரிந்த குழந்தையை இன்னும் தன் முந்தானையை வைத்து பொத்திக்கொண்டார் விஜயா.

“டேய் ரிஷி உனக்கு மேட்டர் என்னனு தெரியுமாடா? உன் ப்ரெண்ட் கிளியால எதுவும் பிரச்சினையா?” என்று வீர் ரிஷிபனை கேட்க, ரிஷிக்கும் அதை நினைத்து தான் பதட்டமாக இருந்தது.

ரிஷி பதில் சொல்வதற்குள் இடைப்புகுந்த விஜய், “எனக்கு  என்னமோ கிளி பிரச்சினை இல்லை. இந்த ரேஷ் பிரச்சினைன்னு நினைக்குறேன்…” என்று தாடையில் இருந்த இரண்டு நாள் தாடியை தடவியவாறு கூற

“என்ன டா சொல்ற?”

“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தூக்கம் வரலைன்னு வெளியே நின்னப்ப கணி ரூம்ல இருந்து ரேஷ் போனாங்க. உடனே கணியும் இந்த பக்கம் வந்தான். அப்புறம் அங்கிட்டு இருந்து ஆதி அண்ணாவும்  வந்தாங்க. அப்புறம் இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் திரும்பி என் ரூம்கே வந்துட்டேன். ”என்று விஜய் கூறிக்கொண்டிருக்கும் போதே ரேஷ்மாவின் குடும்பத்தினர் வந்தனர்.

அவர்களுடன் புதிதாய் ஒரு இளைஞனும் வந்தான். இவர்கள் மூவருக்கும் புரிந்துவிட்டது. அப்ப கணியின் நிலைமை என்று நினைத்தவாறு கணியைப் பார்க்க அவனது முகமோ மகிழ்ச்சியில் பளப்பளத்துக்கொண்டிருந்தது.

ரேஷ்மா பொதுவாக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டியவள் கணிதனிடம் சொன்னதை மீண்டும் எல்லாரிடமும் மறுஒலிப்பரப்பு செய்ய கேட்டுக்கொண்டிருந்த தினகரன், சுதாகரன், பார்வதி, விஜயாவிற்கு ஈரகுலையே நடுங்கியது. மீண்டும் இப்படியா என்று…

முன்பே ஆதித்யன் சொல்லி வைத்திருந்தான். எந்த சண்டையும் போடவேண்டாம் அவர்கள் என்ன சொன்னாலும் சரியென்று மட்டுமே சொல்லி அனுப்பிவிட்டு நாம் பேசலாம் என்றிருந்தான்.

ரேஷ்மாவின் தந்தையும் மன்னிப்பு கேட்க தினகரன் மெல்ல தலையசைத்தார். சரி மீதத்தை நாளைக்கு காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கணிதனும் ஆதித்யனும் அனுப்பி வைத்தனர்.

ஆதித்யன் கண்ணை காண்பிக்க கணிதன் மலர்விழியை அழைக்க சென்றான்.

அவன் வருவதற்குள் மலர்விழி தன்னிடம் பேசியது, கணிதனின் எண்ணம் என்று அனைத்தையும் சொல்லியிருந்தான்.

அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு “முன்னாடியே இவனை ஒழுங்கா கல்யாணம் பண்ணிஇருக்கலாம்ல?” என்று சிறிது சுணங்கினாலும் மனம் ஆனந்தமாகவே இருந்தது.

இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க மலர்விழியின் தோளில் கையைப்போட்டு அணைத்தவாறு எதுவோ பேசிக்கொண்டு அழைத்து வந்துக்கொண்டிருந்தான் கணிதன்.

அக்காட்சியை காணவே அவ்வளவு கவித்துவமாக இருந்தது. இரவில் விளக்குகளின் அலங்கார ஒளியில் அவனின் வெள்ளை நிற டீசர்ட்க்கு எதுவாக அவளது வெண்மை நிற மேக்சி அழகாக பொருந்திப் போனது.

கணிதனின் கம்பீரமான தோற்றமும் மலர்விழியின் கியூட் தோற்றமும் குட் ஃபேர் என்று எண்ண வைத்தது.

“எனக்கு பயமா இருக்கு சார்?”

“நான் உனக்கு எந்த பேப்பர் எடுக்கிறேன்?” என்று கணிதன் கேட்க இவன் யாரு டா சம்மந்தம் இல்லாமல் பேசுறான் பைத்தியம் என்பதைப்போன்று பார்த்த மலர்விழி,

“எனக்கு புரியலை சார்…”

“இல்லை இன்னும் என்னை சார்னு கூப்பிடுறீயே அதான் கேட்குறேன்? உனக்கு நான் என்ன பேப்பர் எடுக்கிறேன்?”

“இல்லை உங்களை எப்படி கூப்பிடுறது அப்புறம். இப்படியே பழகிட்டுல…” பலவருட பழக்கம் தான் ஆனாலும் இருவரும் அந்தளவு பேசி பழகியதில்லை. இதுவரை கணிதனை சாரை தவிர வேறு சொல்லி அழைத்ததில்லை. அதற்குள் ஒரு முறை திருமணம் நின்று, பத்து நாள் ஒரே வீட்டில் இருந்து, இரண்டு முறை லிப்லாக்கும் அடித்து, இப்பொழுது மீண்டும் ஒரு முறை திருமண ஏற்பாட்டிற்கு சரியென்று சொல்ல சென்று கொண்டிருக்கிறோம் என்று தன்னையே தானே மனதிற்குள் காறிதுப்பிக்கொண்டாள் மலர்.

அவள் யோசித்து முடிப்பதற்குள் கணிதனின் குடும்பத்தை நெருங்கியிருந்தனர்.

அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. யார் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அனைவருக்கும் சங்கடமாக தான் இருந்தது.

சரிதான் என்று நினைத்த சக்தி, “மலர் நீ வந்து கேட்ட மாதிரி ரேஷ்மாவுக்கும் கணி அத்தானுக்கும் நடக்கவிருந்த கல்யாணத்தை கால் ஆப் பண்ணியாச்சு. அடுத்து என்னன்னா? அதை மாமா சொல்வார்…” என்றவாறு சுதாகரனை பார்க்க ஏற்கனவே பேசி முடிவெடுத்திருப்பதை கூறினார்.

“இங்கே இருந்து என் பையன் கல்யாணம் ஆகாமல் போகக்கூடாது. நாளை மறுநாள் இருந்த வெட்டிங்கை அதற்கு அடுத்த நாள் வைக்கிறோம் உனக்காக. அன்னைக்கே உனக்கும் கணிக்கும் மேரேஜ் ஆகனும். உங்க பேமிலி கிட்ட நீயே பேசி வரவைக்குறதா இருந்தாலும் ஒகே. இல்லை நாங்க பேசி வரவைக்கனும்னாலும் ஒகே. கண்டிப்பா உன் அப்பாவோட சம்மதம் எங்களுக்கு வேணும்.”

அனைத்திற்கும் சரியென்பதைப் போன்று தலையாட்டினாள் மலர்விழி.  

அனைவரும் அவரவர் அறை நோக்கி சென்றனர். மறுநாள் விடியும் வரை காத்திருக்க மனமில்லாமல் தனது தந்தைக்கு அழைத்தாள் மலர்விழி.

அவரும் தூங்காமல் தான் இருந்திருப்பார் போன்று உடனே அழைப்பை ஏற்றிருந்தார் சிவராமன்.

“என்ன டா? என்ன ஆச்சு?”

“பிரச்சினை இல்லை பா… உங்ககூட பேசனும் தான் கூப்பிட்டேன். நீங்க என்ன தூங்காம இருக்கீங்க?”

“தண்ணீர் தாகமா இருந்துச்சு அதான் எந்திரிச்சேன். சொல்லு டா இந்த நேரத்துல என்ன பேசனும்?”

“அப்பா… அது என்னன்னா….” என்று ஆரம்பித்தவள் இங்கு நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள்.

முதலில் கணிதன் திருமணத்துக்கு மலர் சென்றிருக்கிறாள் என்பதை பெரும் அதிர்ச்சியாக இருக்க அடுத்தடுத்து அவள் கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சியாக இருந்தது.

கதை அனைத்தையும் கூறிமுடித்தும் தனது தந்தையிடமிருந்து பதில் வராததால் “அப்பா…அப்பா…” என்று அழைக்க, தனது மகளின் குரலில் சுயநினைவிற்கு வந்தவர்,

“பாப்பா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? எப்ப தான் நீ அடுத்து என்ன நடக்குன்றதை யோசித்து செய்யப்போற? எப்பயுமே எடுத்தோம் கவிழ்த்தோம் அப்படி தானா? எல்லாமே நல்லபடியா முடிஞ்சிருச்சு சரி. இல்லாமல் வேற எதாவது பிரச்சினை வந்துருந்தா என்ன பண்ணிருப்ப? நீ வை போனை…” என்றும் இல்லாத திருநாளாக சிவராமன் திட்டிவிட மலர்விழி பாவமான முகத்தோடு தனது படுக்கையில் விழுந்தாள்.

இங்கு இவளை திட்டிவிட்டு வைத்த சிவராமன் அடுத்து கணிதனுக்கு தான் அழைத்தார். அவனிடம் அன்று கேட்காத மன்னிப்பை இன்று கேட்டுவிட்டு அனைத்தும் தன் மகள் சொன்னபடி தான் நடந்திருக்கிறாதா இல்லை எதுவும் பிரச்சினை வந்ததா என்று தெளிவு படுத்திக்கொண்டவர் சம்பந்தகாரர்களிடம் பேசவேண்டுமே என்பதற்காக பேசிவிட்டு தனது குடும்பத்தாரிடமும் அந்நேரத்திலே பேசி அனைவரையும் அந்தமானுக்கு கிளம்ப கூறி தனது தங்கையின் மகனின் மூலம் விமான டிக்கெட்டை புக் செய்து 24 மணி நேரத்திற்குள் அங்கு சென்று இறங்க ஏற்பாடு செய்தார்.

அடுத்து அங்கு அனைத்துமே துரிதகதியில் நடந்துக்கொண்டிருந்தது.

மலர்விழி படுக்கையை விட்டு எழுந்து வெளியே வரும்போது தோட்டத்தில் இரண்டு மணமேடைகள் போட்டுக்கொண்டிருந்தனர்.

அதை பார்த்த மலர்விழியின் மகிழ்ச்சியை கூறவும் வேண்டுமா? ‘In the blue moon!’ என்ற ஆங்கில பதத்திற்கேற்ப மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

அவள் சந்தோஷத்திற்கு இன்னும் ஒளி சேர்ப்பது போன்று அவளின் தோளில் கரங்களை போட்டவாறு வந்து நின்றான் கணிதன்.

தன் தோளில் விழுந்த கரங்களை வைத்தே கணிதன் என்று அறிந்துக்கொண்டவள் அவனை அண்ணாந்து பார்க்க அவனது முகமும் விகசித்துக்கொண்டிருந்தது.

“தங்க்யூ! அண்ட் சாரி!”என்று கண்களில் கண்ணீர் பொங்க மலர்விழி கூற,

இல்லை என்பது போன்று தனது தலையை ஆட்டியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டு,

“நான் தான் சாரி சொல்லனும் மை பெர்ரி… எல்லாமே என்னோட அவசரத்தால ஆம்பளை ஈகோவால வந்தது. டோண்ட் பீ சாரி. தாங்க்யூ சோ மச் ஃபார் பீயிங்க் மை வைப். யூ தாட் மீ லவ். லவ் யூ சோ மச் பெர்ரி… ஐ ஹோப் ஐ ஆல்வேய்ஸ் மேக் யூ ஹாப்பி… அண்ட் ரெக்ஸ்பட் யூவர் டிசிஷன்…” அவளது முன்னுச்சியில் முத்தமிட்டவன் குரல் கரகரத்து ஒலித்தது.

“லவ் யூ டூ சார்…”என்று அவனது இதயத்தில் முத்தமிட்டாள்.

எபிலாக்…

“நான் நம்ம லவ் லைப்பையும் என்ஜாய் பண்ண முடியலை. இப்ப மேரேஜ் லைப்பையும் என்ஜாய் பண்ண முடியலை. படிச்சு படிச்சு சொன்னேன் ஒன் இயர்க்கு பேபி வேணாம் நம்ம லவ்வை பீல் பண்ணலாம்னு… கேட்டியா டி?” என்று ஒரே மாதத்தில் தன்னை கணவன் போஸ்டில் இருந்து தந்தை போஸ்ட்க்கு பதவியர்வு கொடுத்தவளை விசயத்தை சொன்னபோது கொண்டாடி தீர்த்துவிட்டு ஆறாம் மாதத்தின் தொடக்கத்தில் பெரிய வயிறை தள்ளியவாறு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவள் வீட்டிலிருந்து வந்திருந்தவள் மீண்டும் அப்பா ஞாபகம் வந்துவிட்டது போக வேண்டும் என்று நிற்பவளை முறைத்துக்கொண்டு கூறினான் கணிதன்.

அவனுடைய எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பதிலளிக்காமல் தனது மாமியாரிடம் அனுமதி வாங்கிவிட்ட மிதப்பில் பையில் துணிகளை அடுக்கி கொண்டிருந்தாள் மலர்விழி.

“உங்கிட்ட தானே டி பேசிக்கிட்டு இருக்கேன் பதில் சொல்லு டி?”

“என்ன பதில் சொல்லனும். நீ தானே ரெடி பண்ண? நான் மட்டுமா பண்ணேன்? அப்படியே என்னை  எங்க வீட்டில நிம்மதியா இருக்க விடுற மாதிரி தான். நான் போன ஒரு மணிநேரத்தில பின்னாடியே வந்து அங்கேயே இருந்துறீங்க. ” என்று அவளும் பொரிய கணிதன் அமைதியாகி தன்னுடைய உடையையும் அந்த பையில் திணிக்க ஆரம்பித்திருந்தான்.

அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாமே நாம் செலுத்துபவர்களின் மீது மெல்லிய திரையாக தான் படிய வேண்டுமே தவிர வெளியே வரமுடியாத இரும்பு திரையாக ஆக்கிரமிக்க கூடாது…!

எல்லைகள் அறிந்து அன்பு செய்வோம்!!!!

முற்றும்…!