EVA23B

ELS_Cover3-39638d3e

EVA23B

23 (B)

க்ஷண நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஈவா, விஹானின் பேச்சைக்கேட்டு யாரும் உணரும் முன்னே ஆவேசத்துடன் அவன்மேல் பாய்ந்து, 

ஆதனை நோக்கி அவன் நீட்டிக்கொண்டிருந்த விரலைக் கடித்துப் பிய்த்து எடுத்திருந்தது. 

“ஈவா! நோ…” ஆதன் அலறும்போதே, 

“ஹொவ் டேர் யூ! ராபின் உன்னால தான்…” மறுபடி அவன்மேல் பாய்ந்த ஈவாவின் முன்னங்கால்கள் இரண்டும் உருமாறி கத்திபோல் ஒன்று சேர்த்து விஹானின் தொண்டையைக் குறிவைக்க, 

ஆதன் அதைப் பிடித்து இழுக்க, விஹான் விரல் இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டே நடுக்கத்துடன் பின்னே செல்ல, “ஐயோ என்ன பண்றே ஈவா!” சஹானா அலறிக்கொண்டு ஓடி வர, நொடி நேரத்தில் இடமே கலவரமானது. 

ஈவாவை போராடி பிடித்து வைத்த ஆதன், “சஹா ஐஸ் எடுத்துட்டு வா ரன்!” கத்த, 

உடல் நடுங்க அனைத்தையும் பார்த்திருந்த சஹானாவின் கால்கள் வேரோடிப்போயின. 

“போ சஹா! ஐஸ் எடுத்துட்டுவா! விஹான் விரலை அதுல வச்சு ஹாஸ்பிடல் போகணும்.என்ன பாத்துகிட்டே நிக்குற? ஓடு!” ஆதன் உச்ச குரலில் கத்த, 

“விடுங்க பாஸ்! அனாவசியமா உங்களை சேதப்படுத்த வைக்காதீங்க!” ஈவாவின் குரல் இப்பொது மிகவும் இயந்திரத் தனமாகவும் பயங்கரமாகவும் ஒலிக்க, 

“நெவர்! விஹான் என் நண்பன்! என் கண்ணு முன்னாடி நீ அவனை தாக்குறதை நான் அனுமதிக்கவே மாட்டேன்!” என்ற ஆதனால் ஒற்றைக் கையால் ஈவாவை சமாளிக்க முடியவில்லை,

அவன் கையை கடித்துவிட்டு, கட்டு போட்டிருந்த கையை தாக்கி ஒரே பாய்ச்சலாய் விஹான் மீது பாய்ந்தது ஈவா. 

எலும்பு முறிந்த  கையில் ஏற்பட்ட சுறீர் வலியில் துடித்த ஆதன் கண்களை ஒருகணம் மூட, 

ஈவா “ராபின் வாஸ் மை மாஸ்டர்!” என்று விஹான் கழுத்தில் கூறிய முனையை நுழைக்க, 

ஆ!!! என்ற அலறலுடன் சஹானா மயங்கிவிழ, 

சட்டென விஹானின் கழுத்திலிருந்து விலகிய ஈவா சஹானாவிடம் ஓடியது, 

விஹானின் கழுத்தில் மெல்லிய கோடாய் ரத்தம் வழியத் துடித்துச் சுருண்டான் விஹான்!  

சஹானா விழுந்த வேகத்தில் எதிலோ முட்டி அவள் சுயநினைவிழக்க, 

“சஹா! சஹானா!” அவள் இருதயத் துடிப்பை அறிந்த ஈவா, “பாஸ்!” என்று அலறியது. 

நடப்பது எதுவுமே விளங்காத நிலையிலிருந்த ஆதன், நண்பனிடம் ஓடினான். 

விஹானை கை தாங்கலாய் எழுப்பி அவன் காயங்களை ஆராய்ந்தவன், ஆம்புலன்ஸை அழைக்க, 

“சஹானாவை விட அவன் உங்களுக்கு முக்கியமா! விடுங்க பாஸ். அவன்…”

“நிறுத்து ஈவா! இதுக்கா உன்னை நான் காப்பாத்தி…ச்சே உன்னை உருவாக்காமலே இருந்திருக்கலாம்! ராபினோட கனவையே அழிக்க துணிஞ்சுட்டேல நீ! கெட் காஸ்ட்!” என கர்ஜித்த ஆதன் நண்பனின் விரலை ஐஸ் போட்ட பெட்டியில் வைத்து, ஒற்றை கையால் விஹானின் காயத்திலிருந்து வெளியேறும் ரத்த சேதத்தைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தான். 

“ஹெல்ப் மீ ஈவா!” ஆதன் கட்டளையிட, 

“முடியாது!” என்ற ஈவா விஹானிடம் செல்லாமல் சஹானாவின் அருகிலேயே இருந்தாலும் அவ்வப்போது விஹானாய் ரௌத்திரமாக ஆரஞ்சு கண்களுடன் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குவேன் என்று மிரட்டலுடன் பார்த்திருந்தது. 

அதற்குள் கண்விழித்த சஹானா நடந்ததை உணரும் முன்னே, 

“மரியாதையா வந்து ஹெல்ப் பண்ணு ஈவா. உன்னால ஒரு உயிர் போனாலும் என்னை நீ உயிரோட பாக்கவே முடியாது!”

ஆதனின் எச்சரிக்கையில் பதறிய சஹானா “ஆதன்! ஏன் இப்படி?” சஹானா துவண்ட நடையுடன் அவனருகில் சென்று விஹானுக்கு உதவ, 

மெல்ல கண்கள் இயல்புக்கு மாற மெதுவாக விஹான் அருகில் சென்றது ஈவா. 

அதிர்ச்சியில் முற்றிலுமாக வெளிறி இருந்த விஹான், ஈவாவை கண்டு, “கிட்ட வராதே!” என்று அலற, 

“ஷட் அப்!” மிரட்டிய ஈவா, “தள்ளு சஹா! இப்படி பண்ணா அவன் கையையே எடுக்கணும் அப்புறம்” விஹானின் காயத்தைக் கட்டிவிட்டது. 

“உங்களுக்காக” ஆதனை ஒருமுறை பார்த்து சொன்ன ஈவா, “வா சஹா நாம வேற எங்கயான போகலாம் இங்க இருந்தா இவனை ஏதாவது செஞ்சுடுவேன்!”

விஹானை முறைத்துவிட்டு சஹானாவை அழைக்க, அவளோ ஆதனை கேள்வியாய் பார்க்க, அவனும் கண்களால் ‘போ’ என்றான்.

ஆம்புலன்ஸ் வர, விஹானுடன் துணைக்கு ஆதன் சென்றுவிட, சஹானாவுக்கு உதவியாக ஹாலில் ஆங்காங்கே சிதறி இருந்த ரத்த கறைகளை சுத்தம் செய்யத் துவங்கிய ஈவா,

“பாஸுக்கு அறிவே இல்ல! எப்போ பார்த்தாலும் தன்னை ஏதாவது செஞ்சுப்பேனு மிரட்டி மிரட்டியே என்னை கண்ட்ரோல் பண்றார்!” முணுமுணுத்தபடியே தரையைத் துடைக்க, 

அதிர்ச்சியின் மிச்சம் உடலைத் தாக்க, சோர்வாக ஒரு ஓரமாக அமர்ந்துவிட்ட சஹானா எதுவும் விளங்காமல், 

“என்ன ஈவா நடந்தது? நீ ஏன் விஹானை தாக்கின? நீ நல்ல ரோபோவாச்சே” கண்கள் கலங்கி கேட்க, துடைப்பத்தை நிறுத்திய ஈவா, 

“ராபின் ஆக்சிடெண்டுக்கு காரணம் அவன்னு தெரிஞ்ச அப்புறம் எப்படி விட முடியும்? அவனை அப்படியே….”   

“ஐயோ! சொல்லாத ப்ளீஸ்!” சஹானா காதைப் பொத்திக்கொள்ள, 

“இருப்பேன் பாஸ் குழப்பிட்டார்!”  நிறுத்தாமல் குற்றம் சாட்டிய ஈவா, “பாஸ் வேஸ்ட்! அவன் கை காலை உடைக்காம பேசிகிட்டு இருக்கார்!” என்று கடுகடுக்க, 

“தப்புதான் பேசிகிட்டு இருந்தேன் என் தப்புதான் உன்னை அப்படியே பார்ட் பார்ட்டா பிச்சு போட்டிருக்கணும்!” ஆதனின் ஆக்ரோஷமான குரலில் இருவரும் திரும்ப, சட்டையெங்கும் ரத்த கரைகளுடன் நின்றவன், 

“சஹா போய் ஹீட்டர் போட்டு, மாத்து ட்ரெஸ் எடுத்துவை” சொல்ல, கடகடவெனப் படிகளேறி சஹானா ஓடிய மறுநொடியே, 

“உன்னை எவ்ளோ ஆசை ஆசையா உருவாக்கினேன் இப்படி செஞ்சுட்டியே! அவன் விறல் போச்சே!” உறுமிய ஆதன்  கையில் அகப்பட்டதையெல்லாம் ஈவாவின் மீது எரிய, 

தப்பித்து ஓடாமல் அனைத்தையும் வாங்கிக்கொண்டு நின்ற ஈவா, “ராபின் மேல உங்களுக்கு விசுவாசமே இல்ல!” என்றது நிதானமாக. 

“என்ன?” இப்போது கையிலிருந்த அலங்கார வெங்கல சிலை ஓங்கியது ஓங்கியபடி நிற்க,  “விஸ்வாசம்னா என்னனு எனக்கு நீ சொல்றியா? ராபின் நம்பிக்கையை, என் நம்பிக்கையை உடைச்ச நீ சொல்றியா?” அனலெனச் சிவந்திருந்த கண்களுடன அவன் சாட, 

“நான் என் மாஸ்டரோட…”

“ஸ்டாப் இட் ஈவா! பேசாத!” டொம்மென சிலையைக் கீழே போட்ட ஆதன், சோர்வாக சோஃபாவில் அமர்ந்து, 

“எந்த உயிருக்கும் உன்னால எந்த பாதகமும் வரக்கூடாதுன்னு தானே ராபின் நினைச்சார் அதுக்காகத்தான் தன்னையே… சொல்லு அவருக்காக நீ என்ன செஞ்சே? விஹானை கொல்லவே துணிஞ்சிருக்க!” 

“நான் மனுஷன் இல்ல! எனக்கு உணர்வுகள் இல்ல! என் மாஸ்டருக்கு ஆபத்துன்னா நான் இப்படித்தான் செய்வேன்! உங்களுக்கு ஆபத்துனா கூட…”

“உன்னையே அழுச்சுப்பே அதானே?” ஆதன் மிகமிக பொறுமையாகச் சொன்னதில் ஈவா மௌனமாகியது. 

“ஹீட்டர் போட்டுட்டேன்” என்றபடி வந்த சஹானா. தரையெங்கும் உடைந்து சிதறி இருந்த பொருட்களைக் கண்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள் மௌனமாக இருவரையும் பார்க்க, அங்கே கனத்த மௌனம் நிலவியது. 

“ஈவா நீ மீதியை க்ளீன் பண்ணிடறியா? நான் இவருக்கு குளிக்க ஹெல்ப் பண்றேன்” நிலைமையைச் சகஜமாக்க சஹானா கேட்க, பதில் எதுவும் சொல்லாமல் தரையைத் துடைக்கத் துவங்கியது ஈவா. 

உணர்வுகளற்ற பார்வை பார்த்தவன் இயந்திரத்தனமான சஹானாவுடன் நடந்தான். 

அவன் குளித்து உடைமாற்றும் வரை எதுவும் பேசாமல் உதவிய சஹானா,

“கேக்கறேன்னு கோச்சுக்காதீங்க…எனக்கு ஒண்ணுமே புரியல என்ன நடந்தது? செக்ஷன்ல பாதிலேயே ஈவா பீ என்னமோ சிக்னெல் அனுப்புதுன்னு ஓடி வந்தது நானும் எழுந்து வந்துட்டேன். இங்க வந்து பார்த்தா…” மேற்கொண்டு சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். 

நொடிகள் நிமிடங்களாக சிலைபோல் இருந்தவன், “யாருக்குமே கெடுதல் வராம இருக்கணும்னு தானே நினைசேன் அது தப்பா? ஒரு பக்கம் என் பெஸ்ட் பிரென்ட் ஒரு பக்கம் ஈவா நான் என்ன பண்ணுறது சொல்லு?” 

“அவனை அட்லீஸ்ட் அடிச்சு தள்ளி இருக்கலாம்” ஈவா ஒன்று மறியாதது போல மெல்ல நடந்து வந்தது.

“எல்லாத்துக்கும் காரணம் யாருனு தெரிஞ்சும் பொறுமையா பேசிக்கிட்டா இருப்பீங்க?” சஹானாவும் கேட்க அவளை விலங்கியவன், 

“ஏண்டி உனக்கும் அறிவில்ல? அவன் என் ஃபிரெண்டு!” நம்ப முடியாத பார்வையுடன்கடுகடுக்க, 

“அதுக்காக தப்பு செஞ்சா நாலு மிதி மிதிக்க வேண்டாமா? புத்தி வர குறைந்தபட்ஷமா ரெண்டு அரை?” 

“அதான எத்தனை ஆக்ஷன் மூவீஸ் பாக்குறீங்க? டேக்வாண்டோ டோர்னமெண்ட்டுக்கெல்லாம் போனீங்களே எல்லாமே வேஸ்ட்!” ஈவா கேலியாக சொல்ல, 

“ஏதாவது சொல்லிடப்போறேன்!” பல்லை கடித்தவன், “ஏர்லேயே பறந்து பறந்து அடிக்க நான் என்ன ஹீரோவா இல்ல அவன் தான் வில்லனா? எனக்கே கை ஒடஞ்சு தொட்டில்ல இருக்கு அவனோ காலை உடைச்சுக்கிட்டு குச்சிவச்சுக்கிட்டு நடக்குறான்.இதுல ப்ரூஸ்லீ ஃபைட் கேக்குதா உங்க ரெண்டு பேருக்கும்? இடியட்ஸ்! கெட் லாஸ்ட்!” கத்திவிட்டான்.  

“நீ வா ஈவா இவருக்கு சொன்னா புத்தி வராது!” முணுமுணுத்து சஹானா ஈவாவை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, 

“விஹானை பார்க்க ஹாஸ்பிடல் போகணும் சீக்கிரம் கிளம்பு!” ஆதன் குரல் தர, 

“அது ஒண்ணுதான் குறைச்சல்” ஈவாவின் காதில் கடுகடுத்த சஹானா, “அங்க வந்து மிச்ச மீதி விரலையும் கடிச்சு வைக்காத” என்று ஒரு குட்டு வைத்தாள். 

“எங்க பாஸ் தான் அன்பால என் கையையும் வாயையும் கட்டிபோட்டுட்டாரே!” ஈவா சினிமாத்தனமாக சொன்னதில் சிரித்துவிட்டாள். 

விஹான் பல ட்ரிப்ஸ் பாட்டில்களை கடந்து, சிறிய அறுவை சிரிச்சையை தாங்கி இப்பொழுது சற்று தேறி இருந்தான். சஹானாவை பார்த்து லேசாகப் புன்னகைத்தவன் அவள் தோள் பையிலிருந்து இறங்கிய ஈவாவை கண்டு ஒரு முறை உடல் நடுங்க, 

“ம்ம்!” ஆதனின் தொண்டை செருமலில், 

ஈவா “சாரி!” என்றது தப்பு செய்துவிட்டு விருப்பமின்றி மன்னிப்பைக் கேட்கும் குழந்தைபோல் வேண்டா வெறுப்பாக. 

பதிலேதும் சொல்லாமல் அதையே பார்த்த விஹான் “யுனிகார்ன்?” என்று தனது சந்தேகத்தை மறுபடி அதன் வாயாலேயே ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள  மெல்லிய குரலில் கேட்க,

“இப்போ ஈவா” என்றது அது எங்கோ பார்த்தபடி. 

கண்களை மூடி சாய்ந்துகொண்டு விஹான், “சாரி மேட்!” என்றான் சோர்வாக.

“டேய் ஏண்டா…நான் தான் சாரி சொல்லணும் என்னால தான் உனக்கு விரல்…” என்று நண்பனின் ஆள்காட்டி விறல் இருந்த இடத்தை குற்ற உணர்ச்சியுடன் பார்த்து, “அது இப்படி செய்யும்னு தெரியாது சாரி டா” என்று வருந்த  

“என்ன தெரியாது? என்னை டிசைன் பண்ணது நீங்க தானே?” என்ற ஈவாவின் குரலில் சடாரெனத் திரும்பியவன், அதை முறைக்க, சிரித்துவிட்டு விஹான், 

“யுனிகார்ன் எப்படி?” என்று கேட்க, நிதானமாக மேலோட்டமாக சொன்ன ஆதன், “கண்டிப்பா உங்கிட்டேந்து மறைக்கணும்னு இல்ல ஆனா ராபினோட நோக்கம் நிரைவேறணும்ன்னு தான் நினைசேன்” அவன் கையை பற்றிக்கொள்ள, 

பெருமூச்சு விட்ட விஹான், “இப்போவும் என் மனசுக்கு நான் சொல்றது தப்பா தெரியல மேட். இன்னிக்கி இல்லைனா என்னிக்காவது ரோபோ aiன்னு மனுஷங்க போருக்கு உருவாக்கத்தான் போறாங்க, நாம முந்திப்போம்னு சொல்றேன் அவ்ளோதான். ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்!” புன்னகைக்க, 

“நீ நினைக்கிற அளவுக்கு உன்னால இதெல்லாம் செய்ய முடித்து விஹான். ராபினோட ஆக்ஸிடெண்டுக்கு  அப்புறம் அவரையும் லின்ஸியையும் நினைச்சு நீ பீடிஎஸ்டில (PTSD – Post-traumatic stress டிசார்டர் -அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல்) கஷ்ட படறேனு எனக்கு தெரியும். அதுக்காக மாத்திரை மாத்திரையா முழுங்குறேன்னும் தெரியும்.

உன்னால தெரியாத்தனமா ரெண்டு உயிர் சேதமானத்துக்கே இவ்ளோ  தவிக்கிற நீ தெரிஞ்சேவா பல உயிர்களை பணையம் வைக்கிற ஆயுதத்தை தயாரிக்க போற? போடா போய் உடம்பையும் மனசையும் தேதியிட்டு உன் திறமையை நல்ல விதமா செயல்படுத்து” 

விஹானின் சிகையை கலைத்துவிட்டு ஆதன் சிரிக்க, 

“மிஸ்ட் யூ மேட்!” அவனை அணைக்க முயற்சித்து விஹான் துவள, ஒற்றை கையால் அவனை அணைக்க ஆதன் முயல, கண்கள் லேசாகக் கலங்க அதை மறைக்கத் திரும்பிக்கொண்ட சஹானா,

“நீங்க பேசிகிட்டு இருங்க நான் விஹானோட டிஸ்சாஜ் பத்தி கேட்டுட்டு வரேன்” என்று அவசரமாக ஈவாவுடன் வெளியேறினாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்த விஹான், “மேட், சஹானா முன்ன மாதிரி இல்லை போல இருக்கே. இம்ப்ரூவ் ஆகி இருக்கா” ஆச்சரியப்பட, 

“எஸ் நல்ல சேஞ்சஸ் இருக்கு ஆனா இன்னும் ஆறேழு மாசம் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுக்கணுமாம்” என்ற ஆதன் விஹானின் காயத்தையே பார்த்திருந்தான்.  

“மனசு ஹீல் ஆக தெரப்பி மட்டும் போதாது லவ் வேணும். கொஞ்சம் யூனிகார்ன…ஐ மீன் ஈவாவ விட்டுட்டு சஹானாவை கவனி. அதுலயே சீக்கிரமா அவ நார்மல் ஆயிடுவா” 

“எஸ் சார்!” சல்யூட் வைத்த ஆதன், “நான் சொன்னதை நீயும் யோசி. முடிஞ்சா ஃபால் இன் லவ், கெட் மேரீட். நீ நல்லவன் டா உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்டா. கல்யாணம் நிஜமாவே வாழ்க்கையை அழகா ஆக்கும்டா. பாதி அமெரிக்கென்னாலும் பாதி இந்தியன் தானே நீ…ப்ளீஸ்” ஆதன் புன்னகையுடன் தனது ஆதங்கத்தை சொல்ல, 

“ஹாஹா! பார்ப்போம்!” என்ற விஹான் “நீ சொன்னவுடனே என் மனசோ லட்சியமோ மாறாது மேட். ஏஐ வெப்பனைஸ் பண்றது என் லட்ஷயம். அதுக்காக நான் உழைக்க போறேன். ஆதியிலிருந்து துவங்கனும் டைம் ஆகும் பட் நான் ரெடி”

நண்பனை நேராகப் பார்த்த ஆதன், “அதுக்கு எதிரா எப்போவும் நிக்க நானும் ரெடி!” என்றான் தீர்க்கமாக. 

***

வாரங்கள் உருண்டோட கைக்கட்டு பிரிக்கப்பட்டு ஓரளவுக்கு தன் வேலைகளைச் செய்யத் துவங்கி இருந்தான் ஆதன். ஆதிராவின் திருமணம் மீனக்ஷியின் விருப்பப்படி மிக மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

திருமணம் மற்றும் ரிசெப்ஷன் போதெல்லாம், முழுவதுமாக இல்லாவிடினும் ஓரளவிற்கு அனைவருடனும் பேசி உபசரித்து சமாளித்தாள் சஹானா.

ஆதிரா தேனிலவுக்காகக் கிளம்பிவிட, ஈவாவின் முதுகைத் தடவி கொடுத்துக் கொண்டிருந்த சஹானா,  

“முந்தா நேத்து கல்யாணம் ஆன ஆதிரா கூட ஹனிமூன் கிளம்பிட்டா. எங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ மாசமாச்சு எங்கயான கூட்டிட்டு போனாரா உங்க பாஸ்?” என்று புகார் வாசிக்க, 

“என் முதுகை தேச்சு தேச்சே பள்ளமாக்கிடுவே போல இருக்கே. ஹனிமூன் போகனும்னா அவர் கிட்ட கேளேன்”

“கேட்டுட்டாலும்…”  உதட்டைப் பதுக்க, 

“நீ பேசினத பாஸுக்கு அனுப்பிட்டேன் டோன்ட் வொரி. எனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்கு” என்று அவள் மடியிலிருந்து எழுந்து செல்ல, 

எதிரே வந்த ஆதன்,”என்ன தூது விடுறே?” கிண்டல் புன்னகையுடன் கேட்க

“அது எதோ ஈவா… ” 

அவளை மவுனமாக இருக்கும்படி அவள் உதட்டில் விரல் வைத்தவன்,

“சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சேன். ஆனா நீயே கேட்டுட்டே!” அவளை அணைத்து கொன்டவன் “உன் ட்ரீட்மெண்ட் முடியட்டுமேன்னு காத்திருந்தேன். நீயும் தைரியமா ஊர் சுத்தி பாப்பேல?” 

“சாரி… என்னமோ ஆசையா இருந்துது…” சஹானா அவன் மார்பில் சாய்ந்தது கொள்ள, 

“சாரி எல்லாம் வேண்டாம்… ” குழைவாக இழுத்தவன் விஷமமாகப் பார்க்க, 

“வேற என்ன வேணுமாம்?” மெல்லிய சிணுங்கலுடன் அவன் சட்டை பட்டனை உருட்டியபடி அவளும் குழைய, 

“ஒன்னோ ரெண்டோ… “

“அதுகுள்ள பாப்பாவா?” அவள் கண்கள் விரிய, 

“கம்பெல் பண்ணல டா. தோணுது கேட்டேன். உனக்கும் எப்போ ஓகேவோ அப்போ பார்த்துக்கலாம்…” பேசிக்கொண்டிருந்தவன் ஈவாவின் “பாஸ்!” என்ற அலறலில் சஹானாவிடமிருந்து சட்டென விலகி 

“என்ன ஈவா?” என்று கேட்க

“மெசேஜ் வந்திருக்கு பாஸ்” என்றது ஆர்வமாக. 

“அதுக்கா அலறிஅடிச்சு ஓடி வந்த?” அதை முறைத்தான். 

“எந்த கிரகத்திலிருந்துன்னு கேளுங்க!” ஈவா சொல்ல, 

“என்ன உளர்றே?” சஹானா ஆதனையும் ஈவாவையும் மாறி மாறி பார்க்க, 

“கெப்ளர் 52b!” என்ற ஈவா  “பாஸ் ஹனிமூனுக்கு பக்கத்து பால் வீதிக்கே போகலாம் என்ன சொல்றீங்க?” என்று சிரிக்க, 

ஆதன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் “என்ன சொல்ற ஈவா? வேற பிளானெட்? என்ன கேட்காம நீ எப்போ…” 

“இந்த சின்ன விஷயத்திற்கு எதுக்கு உங்களை தொந்தரவு பண்ணனும்மனு தான் நானே…” 

“காட்! ” ஆதன் கண்கள் விரிய, 

“இதுக்கே இப்படி சொல்றீங்களே… ” இரண்டு அடி பின்னாடி சென்ற ஈவா “அவங்களை நான் நம்ம பூமி சார்பா வர சொல்லி இன்வைட் பண்ணேனே அதுக்கு என்ன சொல்வீங்க”

“என்ன?” ஆதன் கோவமாக அதை நெருங்க, 

“அவங்களும் வரேன்னு சொன்னாங்களே… நானும் நம்ம வீட்டு லொகேஷன அனுப்பினேன்னு சொன்னா என்ன செய்வீங்க பாஸ்?”  அப்பாவியாகக் கேட்க, 

ஆதன் சஹானா இருவருமாக “ஈவா!” என்று அதை அடிக்கத் துரத்த, 

“கூல்! கூல்!” ஈவாவும் ஓட, 

ஈவாவின் ரகளைகள் தொடரும்! 

சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!