id-10

id-10

22

கருணை பிறந்தது

கேத்ரீனின் லாக்கரின் ரகசிய எண் பற்றிப் பலரிடம் விசாரித்தும் பயன் அளிக்கவில்லை. கேத்ரீனின் உறவினர்கள் மும்பையில் உள்ள அவளின் நெருங்கிய தோழி மகிளாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறினர். அதன் காரணமாகச் சிவாவும்,வேணுவும் மும்பையில் உள்ள மகிளாவை தொடர்பு கொண்டனர்.

அவளே தனிப்பட்ட முறையில் சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறாள். அதன் சார்பாக உதவி பெற டெல்லி வரை சென்றிருப்பதாகத் தெரியவந்தது. கேத்ரீனின் நட்பு வட்டாரம் ரொம்பவும் குறுகலானது. அப்படிப்பட்ட சிலரை கண்டுபிடிக்க அவளுடன் கல்லூரியில் படித்தவர்களின் பட்டியலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்தக் கேஸ் அவர்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு சேர்த்தது.

விந்தியா உடல் சோர்வினாலும்காலில் ஏற்பட்ட காயத்தினாலும் விடிந்து வெகு நேரம் கழித்தே விழித்துக் கொண்டாள். இரவு நடந்தவை எல்லாம் கனவு போல தோன்றியது. நடந்தவற்றை நினைவுப்படுத்திக் கொண்டபடி மெல்ல எழுந்து கொண்டாள்.

அவள் காலில் ஏற்பட்டிருந்த வலி கிட்டத்தட்ட மாயமாய் மறைந்து போயிருந்தது. அவள் படிக்கட்டில் இறங்க போனதும் சண்முகம் பதறிக் கொண்டு ஓடி வந்து அவளை ஓய்வு எடுக்கச் சொன்னான்.

சந்திரகாந்தும் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்டிப்பாய் சொல்லிவிட்டு கிளம்பியதாகவும்ஆதித்தியாவும் வார்த்தை மாறாமல் அதையே சொல்லிவிட்டு புறப்பட்டாதாகவும் சண்முகம் உரைத்தார்.

விந்தியா தனியே அறையில் தவிர்க்க முடியாத சிந்தனைகளோடு அமர்ந்திருக்கக் கதவை தட்டிக் கொண்டு சுபா உள்ளே வந்தாள். விந்தியாவிற்கு உதவியாக இருக்கும்படி சந்திரகாந்த் தெரிவித்ததாகச் சொன்னாள்.

 சுபா வந்தது விந்தியாவிற்கும் நல்ல துணையாய் அமைந்தது. அவர்கள் இருவரும் ஏதெதோ பேசிக் கொண்டிருக்க விந்தியா ஆதித்தியாவை பற்றி அவள் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள்.

ஏன் சுபா… மாமாவுக்கும் ஆதிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?” என்று விந்தியா தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.

அண்ணன் இப்படி எல்லாம் நடந்துக்க அங்கிளும் ஒரு காரணம்“ என்றாள் சுபா.

என்ன சொல்ற சுபா?”

அண்ணனுக்கு ஐந்து வயசு இருக்கும் போதே அம்மாவை பறிகொடுத்துட்டாரு. அப்போதிலிருந்தே அங்கிளுக்கு எல்லாவற்றிலும் இருந்த பிடிப்பும் விட்டுபோச்சு... அண்ணன் உட்பட.

அம்மாவை இழந்து அப்பாவோட கவனிப்பும் இல்லாம வளர்ந்துட்டாரு. அண்ணன் இப்படி பொறுப்பில்லாதவராய் அவரே தன்னை மாத்திகிட்டாருனு சொன்னா நம்புவீங்களா? அங்கிள் பேரன்ட்ஸ் மீட்டிங்னு கூப்பிட்டா கூட போகமாட்டாரு.

ஆனா அண்ணன் ஏதோ தப்பு செஞ்சிட்டாருனு சொன்னதும் அங்கிள் பதறிட்டு போய் நின்னாராம்… தான் தப்பு செய்தா மட்டும்தான் தன்னோட அப்பாவோட கவனம் நம்மீது இருக்கும்னு அண்ணன் இஷ்டத்துக்கு வேண்டுமென்றே தப்பு செய்வாராம்.

 கடைசியில் அதுவே அவரோட குணம்னு எல்லோருமே நம்பிட்டாங்க… அங்கிள் தன் தப்பை உணரும் போது அண்ணன் அவரை விட்டு ரொம்ப விலகி போயிருந்தார்” என்று சுபா ஆதியின் வரலாற்றையே சொல்லி முடித்தாள்.

எனக்கு ஒரு விஷயம் புரியல… அன்னைக்கும் சரி… இன்னைக்குப் பேசும் போதும் சரி… நீ ஆதித்தியாவை விட்டுக் கொடுக்காம பேசுற… அப்பாவே புரிஞ்சுக்க முடியாத ஒருவரை உன்னால எப்படி இந்தளவுக்குப் புரிஞ்சுக்க முடியுது

என் வாழ்கையில் நடந்த ஒரு விஷயம்… இதுவரைக்கும் என் கணவரிடமும் என் அப்பாஅம்மாவிடம் கூடச் சொன்னதில்லை… முதல் முறையாய் உங்கக்கிட்ட சொல்லணும்னு தோணுது” என்றாள்.

சுபா இத்தனை பீடிகை போடுமளவிற்கு அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.

நானும் அண்ணணை… அங்கிளும் அப்பாவும் சொல்வது போலதான் நம்பிட்டிருந்தேன். நான் காலேஜில் ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்ணினேன்.

அவன் கூட நான் இருப்பதைப் பாத்துட்டு அண்ணன் என்னைப் பலமுறை அவன் தப்பானவன்னு புரிய வைக்க முயற்சி செய்தாரு… ஆனா நான் அதைக் காதிலேயே வாங்கல… வயசுக் கோளாறு…

 என் நேரம் நல்லாருந்துச்சு… நானே அவனைப் பத்தி புரிஞ்சு விலகி போன போது அவன் என்னைத் துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தான்.

 கடைசியில் அண்ணன்தான் எனக்கு உதவினாரு… இத பத்தி அம்மா அப்பாகிட்ட மூச்சு விடக்கூடாதுனு சொல்லிட்டாரு… அதனால்தான் யாருக்குமே இந்த விஷயம் இப்ப வரைக்கும் நான் சொன்னதில்லை” என்றாள் சுபா.

ஆதித்தியாவை பற்றி கேட்கக்கேட்க அவனின் மீதான வெறுப்பு மறைந்து போனது. அவன் மீது காதல் பிறந்ததோ தெரியாது… ஆனால் விந்தியாவிற்கு அவன் மீது கருணை உருவானது.

நாளடைவில் விந்தியா ஆதியிடம் பழகும் விதம் வேறுவிதமாய் மாறியிருந்தது. விந்தியா வெறுப்பைக் காட்டும் போதே அவளிடம் நாடிய அவன் மனம்இப்பொழுது அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ளத் தவித்தது. இருந்தும் அவளை நெருங்க அவனுக்குக் கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

அவள் மனதை முழுதாய் தெரிந்து கொள்ள அவனுடைய நெருங்கிய தோழி லீனாவின் பர்த்டே பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.

 அங்கே அவன் பெண்களிடம் பழகும் விதம்அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தினால் அது விந்தியாவிற்குத் தன் மீது ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்று ஆதித்தியா ஒரு கணக்கு போட்டான்.

அதற்காக விந்தியாவையும் பிரயத்தனப்பட்டுச் சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றான். அவள் ஒரு வெள்ளை நிற டாப்ஸும் ஜீன்ஸும் அணிந்து கொண்டு தோள் மீது சரிந்த முடியை விலக்கி விட்டபடி காரில் ஏறினாள்.

என்ன ஆதி… எப்பவும் நீங்கதான் டிரைவ் பண்ணுவீங்க… எதுக்கு டீரைவர்?” என்றாள்.

பார்ட்டிக்கு போறோம்… கொஞ்சமா டிரிங்க்ஸ் சாப்பிட்டால்?” என்று அவன் சொன்னவுடன் விந்தியா அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக, என்ன… டிரிங்ஸ் பண்ணக் கூடாதா?” என்றான்.

ஆனால் விந்தியா எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். அவள் ஏதாவது சொல்லுவாளா என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாயிருந்தது. அவள் அவனின் புரிதலுக்கு அப்பாற்பட்டவளாய் இருந்தாள்.

பார்ட்டி ஹாலே இருள் சூழ்ந்தபடி இருக்க வெளிச்சம் மட்டும் வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. லீனா நடுமட்டத்தில் நின்று கொண்டிருக்க எல்லோரும் அவளைத் தேடி வந்து வாழ்த்தினர்.

 சமுத்திரனும் அங்கே வந்திருந்தான். ஆனால் இம்முறை வேறொரு நண்பனோடு வந்திருந்தான். அந்த நண்பன் நேரடியாக வந்து லீனாவை கட்டியணைத்து வாழ்த்திவிட்டு, கம்மான்… எல்லோருமே வந்தாச்சு… லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி“ என்றான்.

“வெயிட் மனோஜ்… ஆதி இஸ் ஆன் தி வே… லெட் ஹிம் கம்” என்றாள்.

அவனின் முகம் கடுகடுவென மாறியது. அங்கிருந்து நகர்ந்து கையில் ஒரு கிளாஸை எடுத்து அதிலிருந்த டிரிங்க்ஸை மடமடவென குடித்தபடி அமர்ந்து கொண்டான். அவனின் மனநிலையைப் புரிந்த சமுத்திரன் அவன் தோள்களில் தட்டினான்.

அப்படியே எரிச்சலாய் இருக்கு… வந்து காத்திட்டிருக்கவன் எல்லாம் மனுஷனா தெரியலையா அவளுக்கு

விடு மனோஜ்!

நான் எதுக்கு விடணும்… அவன் என் வழியிலேயே குறுக்கிடுறான்… அவன் எல்லாம் எனக்கு ஒரு போட்டியா? என்னோட ஸ்டேட்டஸுக்கும் எங்க அப்பாவோடு பதவிக்கும் அவன் பக்கத்துல நிக்க முடியுமா?” என்று மனோஜ் ஆதியின் மீதான கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.

கம்மான் மனோஜ்… ஆதி எப்பவுமே உன்கிட்ட போட்டி போட நினைச்சதில்லை” என்றான் சமுத்திரன்.

ஆனா பாக்கிற பொண்ணுங்கல்லாம் அவன் பின்னாடியே போகுதே

அதுக்கு அவன் காரணமில்லை” என்றான் சமுத்திரன்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதித்தியா விந்தியாவுடன் பார்ட்டி ஹாலில் நுழைந்ததை மனோஜும்,சமுத்திரனும் கவனித்தனர். விந்தியாவின் மீது மனோஜின் பார்வை பதிந்தது.

யார் அந்த அரேபிய குதிரை?” என்று மனோஜ் முதல் பார்வையிலேயே விந்தியாவின் கம்பீரமான அழகால் கவரப்பட்டவனாய் சமுத்திரனிடம் கேட்டான்.

வார்த்தைய அளந்து பேசு… அவ ஆதியோட வைஃப்” என்றான் சமுத்திரன்

கிரேட்… இத்தனை நாளா ஆதியால் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நல்ல பதலடி கொடுக்க இன்னைக்குத்தான் நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு… நான் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணமாட்டேன்” என்றான் மனோஜ் கண்களில் வெறியோடு

வேண்டாம் மனோஜ்… நீ ஏதோ தப்பா யோசிக்கிற

கரெக்ட்… தப்பாதான் யோசிக்கிறேன். ஆதிக்கு என்னோட வலியை புரிய வைக்கப் போறேன்” என்றான் விந்தியாவைப் பார்த்தபடி.

மனோஜ்… நீ நினைக்கிற மாதிரியான பொண்ணு அவ இல்லை… ரொம்பவும் திமிரு பிடிச்சவ… பார்க்கிற பார்வையிலேயே எரிச்சிடுவா” என்றான் சமுத்திரன்.

பெரிய கண்ணகியா… அதையும்தான் நான் பார்க்கிறேனே” என்றான் மனோஜ்.

23

அவள் திரௌபதி அல்ல

விந்தியா உள்ளே நுழைந்ததும் அங்கே நடப்பவை அனைத்தும் அவளை முகம் சுழிக்க வைத்தது. ஆதித்தியா நேராக லீனாவை நோக்கி சென்றான். அவன் கைகளை நீட்டி வாழ்த்தியதும்அவள் அவன் கைகளைத் தட்டி விட்டு இழுத்து அணைத்து கொண்டாள்.

 விந்தியா சலனமில்லாமல் ரொம்பவும் இயல்பாகவே நின்று கொண்டிருந்தாள். லீனாவிடம் விந்தியாவைக் காட்டி மனைவி என்று அறிமுகப்படுத்தஅவள் விந்தியாவை ஏறிட்டுப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

லீனா கேக் வெட்டஅங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோரும் ஆண் பெண் வித்தியாசமின்றி ஆட்டம் பாட்டமாய் குதுகலித்தனர்.

லீனா கம்மான் ஆதி… லெட்ஸ் டான்ஸ்” என்று சொல்லி ஆதித்தியாவை கையோடு இழுத்துக் கொண்டு போனாள். அவளைத் தவிர்க்க முடியாமல் விந்தியாவைப் பார்த்தபடியே அவனும் சென்றான்.

விந்தியா அங்கே நடப்பவை எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கிக் கொண்டாள்.

விந்தியாவை அவமானப்படுத்த கிடைத்த சரியான சந்தர்ப்பம் என்று மனோஜ் அவளை நோக்கி முன்னேறிச் சென்றான். சமுத்திரன் மெளனமாய் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான்.

மனோஜ் கையிலிருந்த டிரிங்க்ஸை ரொம்ப பழகியவன் போல விந்தியாவிடம் நீட்டினான்.

ஹேவ் இட்” என்றான். அதைச் சற்றும் எதிர்பாராதவள் அவன் யாரென்று புரியாமல் முகத்தைத் திருப்பியபடி,

நோ… தேங்க்ஸ்” என்றாள்.

இது வெரி நார்மல் டிரிங்க்… அவ்வளவு போதை எல்லாம் இல்லை” என்று மனோஜ் சொன்னதற்குவிந்தியா அவனைக் கோபமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

இட்ஸ் ஒகே… விருப்பமில்லனா பரவாயில்லை” என்று அவள் பார்வையின் பொருள் புரிந்தவனாய் அந்தக் கிளாஸை ஓரமாய் வைத்தான்.

மீண்டும் அவன் கைகளை நீட்டி, “லெட் அஸ் டான்ஸ்” என்றான்.

யார் நீங்க மிஸ்டர்வாட் டு யு வான்ட்?” என்று கேட்டுவிட்டு அவள் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் முன்னே மீண்டும் வந்து நின்று, “யாருனு தெரிஞ்சாதான் ஆடுவியா?”

நிச்சயம் மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளின் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டான்.

அவனின் செயல் விந்தியாவிற்கு எரிச்சலை தர கைகளை உதறி விட்டு ஆதித்தியாவை தேடினாள். ஆனால் அவள் கண்களில் ஆதித்தியா தென்படாமல் போக, விந்தியா மனோஜை தவிர்க்க அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றாள்.

ஆதித்தியா லீனாவை சமாளித்துவிட்டு விந்தியாவைத் தேடிக் கொண்டு வந்தான். தே சமயத்தில் மனோஜ் விந்தியாவை விடுவதாக இல்லை.

அங்கே ஆடிக்கொண்டிருந்த கூட்டத்திற்கு இடையே வந்து அவளை மீண்டும் வழிமறித்துக் கொண்டான். அவனின் செயலால் அருவருப்பு அடைந்தவளாய் விந்தியா அவன் மீது ஏற்பட்ட கோபத்தை அடக்கி கொண்டு விலகிச் செல்ல த்தனித்தாள்.

ஆனால், மனோஜ் அநாகரிகமாய் அவளின் இடுப்பை வளைத்து அணைக்க முயற்சி செய்ய விந்தியாவின் பொறுமை தூள்தூளாய் நொறுங்கிப் போனது. கண்களில் கோபம் கனலாய் எரிய விந்தியா அவனைத் தள்ளிவிட்டு கால்களிலிருந்த செருப்பைக் கொண்டு முகத்தில் அறைந்தாள்.

தன்னிலை மறந்து ஆடிக்கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். விந்தியாவின் செயலை கண்ட ஆதித்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆதி நடந்ததை யூகிப்பதற்குள் விந்தியா அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேறியிருந்தாள்.

விந்தியாவின் செயலால் உறைந்து போயிருந்த மனோஜ்ஆதித்தியா சட்டையை இழுத்து பிடிக்க இன்னும் மிரண்டு போனான்.

ஆதி லிஸன்… நான் ஜஸ்ட் டான்ஸாட கூப்பிட்டேன்… அதுக்கு போய் ஓவரா ரியாக்ட் பண்றா” என்றான் மனோஜ்.

ராஸ்கல்… பொய் சொல்லாதடா “ என்று ஆதி கை ஓங்க லீனா குறுக்கே வந்து நின்றாள்.

ஆதி ஸ்டாப் இட்… இது என்ன நீங்க சண்டை போடற இடமாஉண்மை என்னன்னு தெரியாம மனோஜ் மேல கை ஒங்கிட்டு வர்ற. முதல உன் மனைவிக்குப் போய் நாகரிகம்னா என்னன்னு கத்துக்கொடு” என்றாள்.

லீனா… போதும்… விந்தியா பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்லை அன் யு… நீ என் கையில மட்டும் சிக்கின… அதுக்கப்புறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது மனோஜ்” என்று லீனாவின் பின்னோடு ஒளிந்து கொண்டிருக்கும் மனோஜை பார்த்து மிரட்டிவிட்டு வேகமாய் வெளியேறினான்.

லீனா மனோஜின் பக்கம் திரும்பி, “கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்றாள் கோபமாக.

சமுத்திரன் மட்டும் அங்கே நடந்த எவற்றிலும் கலந்து கொள்ளாமல் பார்வையாளனாகவே வேடிக்கை பார்த்தான்.

ஆதித்தியா வெளியெ வந்தான். விந்தியா காரில் ஏறாமல் விறுவிறுவென சென்றுவிட்டதாக டிரைவர் சொன்னதும்,கவலையுற்றவனாக அந்த நடுநிசி இரவில் எப்படித் தனியாகச் சென்றிருப்பாள் என அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தான்.

பின்னர் விந்தியா வீட்டிற்கு சென்றிருப்பாளோ என்ற எண்ணத்தோடு வீட்டை வந்தடைந்தான். அவன் எண்ணமிட்டபடி அவள் அறையில் கைகளைப் பின்னிக்கொண்டு தலையைக் குனிந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

ஆதி விந்தியாவின் முன் நின்று கோபமாக, அறிவில்லை உனக்கு? இந்த ராத்திரியில் உன்னைச் சுற்றி சுற்றி தேட வைச்சிட்ட இல்ல… பைத்தியக்காரன் மாதிரி ரோடெல்லாம் ஓட வைச்சிட்ட. இவ்வளவு திமிரும் தெனாவெட்டும் ஒரு பொண்ணுக்கு நல்லதில்லை.

 ஆம்பிளைங்க எல்லாம் உன் காலில விழணும்னு நினைச்சிட்டிருக்கியா? அடிமட்ட நாகரிகம் கூடத் தெரியாதாடி உனக்கு?

 நீயெல்லாம் இந்த ஊர் எல்லைய தாண்டி போயிருந்தாதானே… காட்டு கத்துக் கத்திட்டிருக்கேன்… காதிலேயே வாங்காம உட்காந்திட்டிருக்க” என்று சொல்லியபடி மேஜை மேலிருந்த பூஜாடியை உடைக்கத் தூக்கினான்.

ஸ்டாப் இட் ஆதி…” என்று கத்தியபடி அந்த ஜாடியை பிடுங்கி மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்தாள்.

எல்லாத்தையும் ஈஸியா தூக்கி போட்டு உடைச்சிடலாம்… அதை மாதிரி ஒன்றை உருவாக்குறதுதான் கஷ்டம்” என்றாள்.

நான் வெறும் ஜாடியைதான் உடைக்க நினைச்சேன்… ஆனா நீ உணர்வுகளையே சுலபமாய் தூக்கிப் போட்டு உடைக்கிறஎன்று விந்தியாவின் மீது கடுமையான வார்த்தைகளைக் கொண்டு தாக்கிவிட்டு அமைதியானான்.

ஏன் நிறுத்திட்டீங்க? அறிவில்லாதவ… நாகரிகம் தெரியாதவ… திமிரு பிடிச்சவ… உணர்வுகளை மதிக்கத் தெரியாதவ… இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? கம்மான் ஆதி… முழுசா சொல்லி முடிச்சிடுங்க” என்று சொல்லி விந்தியா ஆதித்தியாவை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் சிவந்து போயிருந்தது.

அந்தப் பார்வையே அவளுடைய வேதனையைப் புலப்படுத்தியது.

என்ன பிரச்சனை உனக்கு… நானும் அங்கதானே இருந்தேன்…

அதுதான் எனக்கும் தெரியணும்… நீங்க எங்கதான் இருந்தீங்க?”

என்னதான் இருந்தாலும் நீ நடந்துக்கிட்டது ரொம்ப ஓவர்… இடம் பொருள் ஏவல் தெரியாம

ரொம்ப ஓவர்தான். நாகரிகம் தெரியாம நடந்துக்கிட்டேன்… ஆமாம்… எனக்கு உங்க நாகரிகம் தெரியாது… தெரிஞ்சுக்கவும் விருப்பப்படல…

இந்த ஊர் எல்லை தாண்டி போய் இருப்பேனானு கேட்டீங்க இல்ல… ஆஸ்டிரேலியா… அட்லான்டா… பேரீஸ்னு பல இடங்களில் வேலை பாத்திருக்கேன். எத்தனை மைல் கடந்து போனாலும் என்னோட நாகரிகத்தையும் என் நாட்டோட கலாச்சாரத்தையும் விட்டு கொடுத்ததில்லை… எதுவும் தெரியாம பேசாதீங்க!

சரி… நான் எதுவும் தெரியாம பேசிட்டதாகவே இருக்கட்டும்… ஆனா நீ கோபத்தைக் காட்டின விதம் சரியா?” என்றான்

தப்புதான்… நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. என்கிட்ட அநாகரிகமாய் நடந்துக்கிட்டவனை… என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்ய நினைச்சவனை நான் செருப்பால அடிச்சிருக்கக் கூடாது.

வேறெப்படி நடந்துக்கணும்… திரௌபதியை சபையில் அவமானப்படுத்திய பொழுது, அஞ்சு புருஷனில் ஒருவனாவது காப்பாத்துவான்னு எதிர்பார்த்து நின்னுட்டிருந்தாளே… அப்படியாஇல்ல கடவுளே காப்பாத்துனு கை தூக்கிட்டு நிக்கணுமா?” என்று சொல்லிவிட்டு விந்தியா ஆதித்தியாவை பார்த்த பார்வையில் அவன் பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்றான்.

ஆதித்தியா பிரச்சனை இத்தனை தீவிரமாய் இருக்கும் எனத் தெரிந்து கொள்ளாமலேவிந்தியாவிடம் வார்த்தைகளை விட்டுவிட்டதை எண்ணி வேதனையுற்றான்.

சாரி… விந்தியா… நான் என்ன நடந்ததுனு கேட்காமலே… ஐம் ரியலி சாரி” என்றான்.

இந்த நிதானமும் பொறுமையும் வார்த்தைகளை அள்ளி கொட்டுறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும். இட்ஸ் டூ லேட்… இந்த நொடி வரைக்கும் ஏதாவது ஒரு சின்னப் புள்ளியில் நமக்குள்ள ஒத்துப்போகும்னு முட்டாள்தனமா நினைச்சிட்டிருந்தேன்…

பட் நெவர்… நீங்களும் நானும் இரண்டு துருவங்கள் மாதிரி… அது ஒன்றாகச் சேரவே முடியாது” என்று சொல்லிவிட்டுச் சோபாவில் தலையணை போட்டு சாய்ந்து கொண்டாள்.

ஆதி விந்தியாவை சமாதானப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை இழந்தவனாய் பால்கனியில் நின்று கொண்டான்.

கல்யாணம் செஞ்சு ஒரு நாள் கூட நிம்மதி இல்லை… வேண்டாம்னு தூக்கி போடவும் முடியல… நீதான்டி வேணும்னு உரிமையோட சொல்லவும் முடியல…

மனசில இருக்கிறதை சொல்லலாம்னு நினைக்கும் போதுதான் ஏதாவது பிரச்சனை வருது… பிரச்சனை தானா வருதா இல்ல இவளா உருவாக்கிறாளா தெரியல’ என்று மனதிற்குள் புலம்பியபடி சிகரெட்டை வாயில் வைத்தான்.

 எதிர்பாராமல் விந்தியாவை அவன் பார்க்க… அவள் புருவத்தை சுருக்கிக் கொண்டு பார்த்த பார்வையில் அந்த சிகரெட்டை அவனை அறியாமலே தூக்கி வீசினான். அவன் மனம் அவளின் பார்வையை மீறி கூடச் செயல்பட மறுத்தது.

மனோஜ் கன்னங்கள் வீங்க நடந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் குடிபோதையில் மூழ்கினான். சமுத்திரனின் அறிவுரை எதுவும் அவன் காதில் விழவில்லை.

மனோஜின் நினைப்பு முழுக்க விந்தியாவை வேதனைபடுத்த வேண்டும்... அவளைத் தனிமைப்படுத்திக் கதற வைக்க வேண்டும்... அவனிடம் வந்து அவள் மண்டியிட வேண்டும்... இப்படியாக அவன் தீவரமாய் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இராவணன் சீதையை சந்தித்த நொடி இருவரில் யாருக்கான பிரச்சனையைத் தீர்மானித்தது என்ற பதில் சொல்ல முடியாத கேள்வியாக விந்தியா மனோஜின் சந்திப்பு அமைந்தது. 

error: Content is protected !!