IM-5

IM-5

அத்தியாயம் – 05

SIPCOT அலுவலகத்தில், அவன் அறையில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான் பாஸ்கர் ஆதித்யா.. மணி காலை ஏழு. நேற்று நடந்த நிகழ்வால், தொழிற்சாலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று, முதல் ஷிஃப்ட் தொழிலாளிகள் வந்து, வேலைகளை துவங்கி இருந்தனர். காலை அலுவல்கள் வழக்கம்போல் இயங்க துவங்கி இருந்தன. டீ கொடுக்கும் பையன், சின்னதாய் கதவை தட்டி, காத்திருக்க.. , பாஸ்கருக்கு விழிப்பு வந்தது. “எஸ். கம். இன் ..”, சொல்லி நேராக அமர்ந்தான்.

பையன் டீ பிளாஸ்க்-ஐ, வைத்து விட்டு நகர, இவன் சோம்பல் முறித்து, அறையின் ஜன்னல் திரையை விலக்கி, இளங்காலை சூரியனை உள்விட்டான். ரெஸ்ட் ரூம் சென்று, வந்தவன், ஓரமாய் சுவருள் இருந்த அலமாரியில் இருந்த பீங்கான் கப் எடுத்து, அதில் தேநீரை ஊற்றியவாறே, CCTV திரையை உயிர்ப்பித்தான்..

கப்-பினை கையில் வைத்து …”ம்…ம்…”, தேநீரின் வாசத்தை முகர்ந்து அனுபவித்து, மிடறு விழுங்கினான்.. காலை வேளையில், இதமான தேநீரின் சுவையில் நேற்றைய அலுப்பு தொலைந்து போவது போல் தோன்றியது.. இரவு காவல் துறையை சேர்ந்தவர்கள், தடயவியல் ஆட்கள் என இரண்டு மூன்று முறை வந்து சென்றனர்.

CCTV திரையில், அனைத்து பதிவுகளையும் பார்த்தவன், ஒரு ரிதமாய் பணிகள் நடப்பதாக தெரிய, அப்பொழுது கதுவு தட்டப்பட, நிமிர்ந்தான்.. இவன் “எஸ்” கேட்டு , ஜெனரல் மானேஜர் உள்ளே வந்திருந்தார்.. ” சார், நான் பாத்துக்கிறேன் சார்., நேத்திக்கே சொன்னேன் நீங்க கேக்கல. ஃபர்ஸ்ட் ஷிஃப்ட் ஆரம்பிச்சிடுச்சு .. நீங்க கிளம்புங்க, இனி நான் பாத்துக்கறேன். “, அவர் உறுதியளிக்க, இவனுக்கும் ஒன்றும் வேலை இல்லாததால், வீட்டிற்கு கிளம்பினான்..

+++++++++++++++++++++++++

மருத்துவ மனையில் தியா, சகி, மற்றும் சில மருத்துவர்கள் நிர்மலா-வின் வருகைக்காக காத்திருந்தனர். அவர்கள், ஹைதராபாதில் இருந்து விமானத்தில் வந்திறங்கி, இம்மருத்துவமனை ஆம்புலன்ஸ்-சில் அழைத்து வர ஏற்பாடாகி இருந்தது.

நிர்மலா, 24 வாரங்கள் ஆன ஒரு கருவை, தாங்கும் பெண். இப்பெண்ணுக்கு, பனிக்குட நீர் வெளியேறுவதால், சிசு உயிர்பிழைக்க வாய்ப்பு மிக மிக குறைவு. இதற்கு முன்னும் நிர்மலா அப்பாராவ் தம்பதிக்கு நான்கு முறை இதே போல் நடந்துள்ளது. இனி ஒரு கருவை தாங்கும் வலிமை நிர்மலாவின் கருப்பைக்கு கிடையாது என்று மருத்துவர்கள் கூறியதால், இப்போது, கருவில் இருக்கும் சிசுவே இவர்களின் ஆதாரம்/வாரிசு/எதிர்காலம்.

ஆம்புலன்ஸ் உள்ளே நுழையும்போதே, அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த அரைமணியில், டாக்டர் சுந்தரின், கன்சல்டிங் ரூம்-ல், தியா உட்பட , மருத்துவர்கள் குழுமி இருந்தனர்.

அப்பெண், நேரடியாக ICU எனப்படும் இன்டென்சிவ் கேர் யூனிட் -க்கு அழைத்து செல்லப்பட்டாள். அங்கே….

டாக்டர் சுந்தர் மற்றும், நிர்மலா & அப்பாராவ்…

“வெல்கம், நிர்மலா.. பிரயாணம் கஷ்டமா இருந்ததா?”

“ஹலோ டாக்டர்”, குரல் சோபையாய் இருந்தது , “இல்லை அவ்ளோ ஒன்னும் கஷ்டமா இல்லை.., நீங்க தான்.. என் பேபிய ….?”, என்ன சொல்லி முடிக்க என அப்பெண்ணுக்கு தெரியவில்லை..

“எஸ் மா… நான்-ன்னா, நான் மட்டும் இல்ல, எங்க டாக்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து, உங்க பாப்பா -வை உங்களுக்கு தர்றோம்.. கவலைப்படாதீங்க.. “, என்றவர்..

பஸ்ஸரை அமுக்கி, “கம் இன் ப்ளீஸ் “, என்றவுடன், அவரின் அறையில் இருந்த மருத்துவ குழு, நேரே ICU -விற்கு விரைந்தது.

“இங்க ஒரு ஒரு பிரான்ச் -கும் தனி தனி டாக்டர் இருக்கோம். இப்போலேர்ந்து உங்களை நாங்க ஒவ்வொரு செகண்டும் பாத்துட்டே இருப்போம்.”.[you will be under complete observation -ku எனக்கு தெரிந்த தமிழாக்கம் ]

“இவங்க டாக்டர் ப்ரியசகி , கைனகாலஜிஸ்ட், இப்போ உங்களை செக் பண்ணுவாங்க.”, நிர்மலாவிடம் சொன்னவர், சக மருத்துவர்களுடன் வெளியேறி, அவர் அறைக்கு சென்றவாறே “எனக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ரிப்போர்ட் பண்ணுங்க, இசிஜி ,பல்ஸ் ரேட், ஹார்ட் பீட், மானிட்டர் பண்ணுங்க.. பேபி மூவ்மெண்ட், அண்ட் ப்ளூயிட் அமௌன்ட் ரிப்போர்ட் பண்ணுங்க.., கொஞ்சம் மாற்றம் இருந்தாலும், எனி டைம் யு கேன் கால் மீ ” , அடுக்கடுக்காய் உத்தரவுகள் அனைவர்க்கும்..

ஒரு உயிரை மண்ணில் நிலை நிறுத்த, எத்தனை முன்னேற்பாடுகள் ?

நிர்மலாவை பரிசோதித்து விட்டு வந்த சகி, நேராய் டாக்டர் சுந்தரின் அறைக்கே வந்தாள்.. “எக்ஸ்கியூஸ் மீ, டாக்டர், அவங்க யூட்ரஸ் ஓபன் ஆகி இருக்கு… தோராயமா ஒரு ஆறு சென்டிமீட்டர் க்கு விரிஞ்சிருக்கு. இப்போ விட்டோம்னா, இன்னும் அதிக பட்சமா ரெண்டு மணி நேரத்துல பேபி டெலிவரி ஆகிடும்..”

சுந்தர் சட்டென டாக்டர் தீபக்-கையும், அதிதி சந்த்யா-வையும் அழைத்தார். “ரெண்டு பெரும் போய் பேபி வைட்டல்ஸ் பாருங்க.. அல்ட்ரா சௌண்ட் & சோனோகிராம்-ல அதோட வெயிட்,  பொசிஷன், ஸ்டாட்…”

இருவரும் பறந்திருந்தனர்.. பதினைந்து நிமிடத்தில் திரும்பிய இருவரின் முகமே கூறியது… அக்கருக்குழந்தையின் பிரச்சனை பெரியது என்று..

” பேபிக்கு, மதர் கிட்ட இருந்து பிளட் ப்ளோ, குறையுது [தொப்புள் கொடி இருக்கத்தினால் குழந்தைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடை படுதல்], பேபி வெய்ட் 350 கிராம் தான் இருக்கும். பேபி ஹைட் .. 18 லேர்ந்து 20 சென்டி மீட்டர் தான் இருக்கும்…”

“ஓஹ் …”

“350 க்ராம்ஸ் ????”

“20 சி.எம்ஸ்.., என் கையோட சைஸ் தானா ??”

“உஷ்…”…. அனைவரையும் அடக்கியவர்.. “கய்ஸ் . பிளானிங் பார் சி செக்ஷன், தென் நியோ-நாட் டிபார்ட்மென்ட் , குழந்தைக்கு என்னென்ன தேவையோ, எல்லாம் ரெடி பண்ணி வைங்க..

டாக்டர் சுந்தருக்கு தெரிந்தது, இது முடிவெடுக்கும் தருணம் என… , அப்பாராவை அழைத்து விபரம் சொன்னவர்.. , “இனி லேட் பண்ற ஒரு ஒரு நிமிஷமும் ரிஸ்க் அதிகப்படுத்தும்.. , நாங்க எங்களாலான முயற்சியை செய்யறோம்.. யூ ப்ரே டு காட்.” என்றவர்.. நர்ஸ் – களை நோக்கி ..”ஓ.டீ. ரெடி பண்ணுங்க”, இரு உயிர்களை காக்கும் பொறுப்பை கையில் எடுத்தார்..டாக்டர் சுந்தர்.

பத்து நிமிடங்களில் அனைத்தும் தயார்..

அப்பாராவ் , நிர்மலாவின் கையை பிடித்து, “இந்த தடவ..நாம நம்ம பேபிய வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்.. கண்டிப்பா எனக்கு தெரியும், பயப்படாத….” என்றவர்.. நிர்மலாவின் வயிற்றின் அருகே குனிந்து…. “ஸ்ரத் …. நீங்க அம்மாகிட்ட இருந்து வெளில வர போறீங்க…, அப்பா வெயிட்டிங்… you are going to be a wonderful kid, and we, the blissful parent… I love you kid.”…, கண்களில் நீர் திரையிட … மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினார்… யார் கூறியது தந்தைக்கு குழந்தை பெரிவதின் வலி கிடையாது என ? நம்நாட்டில் இவரைப்போல் தாயுமானவர் நிறைய ……

நான் தாயுமானவன் தந்தையானவன்

அன்பு சேவகன் அருமை நாயகன்

நானே உனது உயிர்காப்பு

இன்று நானே இடுவேன் வளைகாப்பு

+++++++++++++++++++++++++++++++++++++++++

அதே நேரத்தில், SNP அலுவலகத்தில், “URGENT “, என்று தலைப்பிட்டு வந்த ஒரு கொரியரை, அதில் உள்ள விபரீதம் தெரியாமல், கையெழுத்துடன், சீலும் இட்டு, வாங்கினார் அந்த செக்யூரிட்டி. நேராய் அந்த கவர், “இயக்குனர்கள் பார்வைக்கு”, என்று போடப்பட்டிருந்த ட்ரே-யில் அடுக்கப்பட்டது. அனுப்புனரின் பெயரில் சாயா & லதிகா லீகல் அஸோஸியேட்ஸ், என்று பெயரிடப்பட்டு இருந்தது…

மொழிவோம்…..

error: Content is protected !!