Jeevan 22(2)

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக கண்விழித்த சுமி, எப்போதும் போல தயாராக நின்றிருந்த காயத்ரியை பார்த்தவள், “ஏய் காயூ! இன்னைக்கி சன்டே. காலேஜ்ல ஈ, காக்கா கூட இருக்காது. நீ என்ன இப்படி ரெடியாகி இருக்க. எங்கையாவது வெளிய போறையா?!” என கேட்க,

ஏற்கனவே, ‘கௌதமை பார்க்க போக கூடாது’ என ஸ்டிரிக்ட்டாக சொல்லியிருப்பதால், அவனின் அலுவலகம் செல்ல முடியாத நிலையில், எப்படியும் இன்று அவனுக்கு விடுமுறை நாளாக தான் இருக்கும், தன்னை காண வர வாய்ப்பு அதிகம் என்பதால் தயாரானவள், அதை சொன்னால் நிச்சயம் தன்னை திட்டுவதோடு, போகவும் கூடாது என தடுக்கவும் வாய்ப்பிருப்பதால்,

“வெளிய போகலை சுமி. நேக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கற வேலை இருக்கு. எப்படியும் லைப்ரரி ஓப்பன்ல தானே இருக்கும். அதான் போலாமேன்னு…. ” என சொல்லி முடிக்க,

“ஓ… அப்படியா அப்ப வெயிட் பண்ணு நானும் வர்றேன். எனக்கும் அங்க கொஞ்சம் வேலை இருக்கு..”  என காயத்ரியின் திட்டத்தில் கூடை மண்னை கொட்ட,

‘அச்சோ! இவா வந்தா, நா அவருக்காக காத்திட்டு இருக்கறது தெரிஞ்சிடுமே!  என்ன செய்ய.. ?!’ என முழித்துக்கொண்டு கையை பிசைந்தவளை கண்ட சுமி,

“ஏய்! ஏன்டீ, நா என்ன உன்ன தூக்கிட்டு போய், தூக்கிட்டு வான்னா சொன்னேன். ஜஸ்ட் கூட வர்றேன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு இப்படி ரியாக்க்ஷன் கொடுக்கற. உண்மைய சொல்லு வேற எதாவது தகிடதத்தம் செய்ய நினச்சியா?!”  என கேட்க,

“சுமி, நேக்கு அப்படியெல்லாம் செய்ய தெரியாது. இப்படி நம்பாம பேசினா எப்படி !” என கேட்கும் போதே, சுமியின் வீட்டிலிருந்து அழைப்பு வர,

” காயூ நீ முன்னாடி போ. நா எப்படியும் பேசி முடுச்சு, ரெடியாக லேட் ஆகிடும். மதியம் வரை தானே ஓப்பன்ல வச்சிருப்பாங்க. முடுஞ்சா வர்றேன்!”  என சொல்லி அழைப்பை ஏற்று பேச ஆரம்பிக்க,

“அப்பாடா.. !!” என பெருமூச்சோடு கல்லூரியை நோக்கி சென்றவளுக்கு,  சுமியையும் துணைக்கு அழைத்து வந்திருக்கலாமோ என்ற எண்ணத்தை உருவாக்கவே காத்திருந்தனர் ஸ்வேதா குழுவினர்.

காயத்ரி மட்டும் தனியாக வெளியே போவதை பார்த்தவர்கள், ஸ்வேதாவிற்கு அழைத்து சொல்ல, தனது திட்டத்தை நிறைவேற்ற சரியான சந்தர்ப்பம் இது தான் என முடிவு செய்தவள்,

“லிசன், நா அன்னைக்கு சொன்னது மாதிரி நீங்க பேசுங்க. அவளா வந்து உங்கிட்ட பேசுவா. அப்போ நா கொடுத்தத அப்படியே காட்டிடுங்க. அதுக்கும் மேல, அந்த தயிர்சாதம் கௌதம் சைடு திரும்ப கூட மாட்டா….”  என தனது திட்டத்தை மீண்டும் தெளிவு படுத்தியவள்,

” நீங்க ஆரம்பிங்க கடைசி நேரத்தில நா வர்றேன். முதல்லையே வந்தா நா ப்ளேன் பண்ணி செஞ்ச மாதிரி அவளுக்கு தோனிடும்”  என சொல்லி விரைவாக கல்லூரியை நோக்கி சென்றாள்…. காயத்ரியையும், கௌதமையும் பிரித்து வைக்க போகும் சந்தோஷ நிகழ்வை அழகாய் துவக்கி வைக்க…

கல்மேடையில் அமர்ந்து வாயிலை பார்த்திருந்த காயத்ரியின் செவியில் பேசுவது விழும் தொலைவில் அமர்ந்த ஸ்வேதாவின் குழுவில் ஒருத்தி, “வரவர இந்த பசங்க ஏன் இவ்வளவு சீப்பா நடந்துக்கறாங்கன்னு தெரியல?” என ஆரம்பிக்க,

“ஆமாம் டீ, போன வாரம் ஒருத்திய வண்டியில வச்சிட்டு சுத்திட்டு, இந்த வாரம் வேற ஆள் கூட சுத்தறாங்க” என தொடர,  

“அட நீ வேற, போன வாரம் நம்ம தயிர்சாதத்த கூட்டிட்டு போனானே, அவன நம்ம பப்ல பார்த்திருக்கோம் நியாபகம் இருக்கா…?! தண்ணிய போட்டு, பெண்ணுக்காக  அன்னைக்கு நடந்த அடிதடி என்ன? கலாட்டா என்ன.. ஊம். எப்படி தான் அவனுக்குன்னு வந்து மாட்டுதுங்களோ…?!” என சொன்னதும்,

யாரையோ பற்றியோ, பேசி வம்பு வளர்ப்பவர்களின் பேச்சு நமக்கெதற்கு, என இருந்த காயூ, அவர்களின் தனக்கான பிரத்தியேக அழைப்பில், அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தவள், கௌதம் பப்பில் செய்ததாக சொன்னதை கேட்டு அதிர்ந்தவளை மேலும்,

“அட நீ வேற, அவன மாதிரி கோடீஸ்வரனுக்கு இதெல்லாம் ஒரு விசயமா.. தினமும் ஒரு பொண்ணு, தண்ணி, பப்புன்னு திரியற கேஸ்.. ” என அவனின் நடத்தையை கேவலமாக சித்தரித்து காட்ட,

“அப்ப நம்ம தயிர்சாதத்துகிட்டையும் மேட்டர முடிச்சிருப்பான்னு சொல்றையா?!” என சொன்னதில் அதிர்ந்து, வாய் மீது கை வைத்து, கண்ணில் நீர் கோர்க்க நின்றவள்,


“யார் கண்டா ! அந்த கௌதமுக்கு எங்கையோ மச்சம் இருக்கு.. இல்லாட்டி சக்கரவர்த்தி குழுமத்தோட மொத்த வாரிசு, தட்டி கேட்க பெரியவங்கன்னு யாரும் இல்லாத வாழ்க்கை, நினச்சா கையசச்சதும் விழுற பொண்ணுங்கன்னு ராஜ வாழ்க்கை தான்… ” என சொன்ன நொடி, ‘அவர்கள் பேசுவது, தன் கௌதமை பற்றி தானா?! அல்லது வேறு யாரையா?!’ என அறிந்தே தீர வேண்டும் என்ற உந்துதலில் , அவ்விடம் சென்றவளை, அப்போது தான் பார்ப்பது போல,

“ஏய்! காயத்ரி, எப்ப வந்த.. நாங்க ஏதோ சும்மா… ! நீ தப்பா நினச்சுக்காத… ! கௌதம் சாருக்கு தெரிஞ்சா, எங்க நிலைமையும் மோசமா ஆகிடும். நாங்க மானத்தோட வாழ விரும்பறோம்”  என கௌதமின் கேரக்ட்ரை மேலும் கெடுக்க தகுந்தாற்போல் பேசிட..

“தயவு செஞ்சு அவர பத்தி நேக்கு சொல்லுங்க. அன்னைக்கு என்கூட இருந்தவாளா தான் சொல்றேளா.. ?!” ‘இல்லை என சொல்லி விடுங்களேன்!’ என உயிரை கண்ணில் தேக்கி கேட்டவளை கண்டு, தங்கள் திட்டம் வெற்றி பெற்ற களிப்பை வெளியே காட்டாமல் சாதுர்யமாய் மறைத்தவர்கள்,

“காயத்ரி, நாங்க பொய் சொல்லி அதனால எங்களுக்கு என்ன லாபம் சொல்லு. நீ நம்பலைன்னா பாரு இத” என ஒரு வீடியோவை காட்ட, அதில் அன்று கௌதம் ஆடியதும், அடிதடியில் ஈடுபட்டதும் இருக்க, அடுத்ததாக பல புகைபடங்கள் கௌதம் கையில் பீர் டின்னோடும், அருகே வெவ்வேறு பெண்களுடனும் இருக்க பார்த்த உடனே தன் கண்களை தன்னால் நம்ப இயலாது தவித்தவளை,

“இவனோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவன் உன்ன மாதிரி ஒரு அன்னாடங்காச்சிய லவ் பண்ணுவான்னு நீ எதிர்பார்த்தா நடக்குமா?! அவனுக்கு தேவை உன்கிட்ட இருக்கற அழகா இருக்கலாம். அதை அடஞ்சா அவன் உன் சைடு திரும்பி கூட பார்க்க மாட்டான்… ஒருவேளை ஏற்கனவே மேட்டர் முடிஞ்சிடுச்சா.. அதான் சார் உன்ன பார்க்க வரலையோ?!”  என கேட்டவர்களுக்கு பதில் கூட சொல்ல முடியாமல் விக்கித்து நின்றவளை தூரம் இருந்தே பார்த்த ஸ்வேதா,

‘பரவாயில்லையே, புள்ளைங்க காரியத்த கச்சிதமா முடுச்சிட்டாங்க.. சூப்பர்’ என நினைத்து அவர்கள் இருக்குமிடம் வந்தவள்,

“என்னங்கடீ செய்யறீங்க. மேடம் யார் தெரியுமா?! தி கிரேட் கௌதம் சக்கரவரத்தியோட ஆளு. அவங்ககிட்ட வம்பு செஞ்சா என்ன ஆகுமின்னு தெரியுமா. என்னோட அண்ணனாவது ஆள தான் முடிப்பான். பட், கௌதம் அழகா அவங்களோட மானத்தோட தான் விளையாடுவான்.. அதனால தானே நானே இந்த ஒரு வாரமா மேடம் ரூட்டுக்கே வராம ஒதுங்கி போறேன். நீங்க போங்க மேடம்” என வார்த்தையில் மரியாதையோடும் , பேச்சும் தோரனையில் முழு நக்கலும் தெளிக்க பேசியவளின் பேச்சில் சர்வமும் நடுங்க, நடக்க கூட தெம்பு இல்லாதவளாய் குற்றுயிராக, தனது அறைக்கு வந்தவள் தனது மனதின் துக்கத்தை கண்ணீரால் மட்டுமே கரைக்க முடிந்தது.

*********

ஸ்வேதா தனது திட்டம் வெற்றி பெற்றதை கொண்டாட, தனது குழுவோடு சென்று, அன்றைய நாளை உற்சாகமாக கழித்து, வீட்டிற்கு வர, அங்கோ அனைவரும் ஏதோ ஒரு வித பதட்டத்தோடும், குழப்பத்தோடும் சிந்தனையில் இருக்க,

துஷ்யந்தை நெருங்கி சென்று அமர்ந்தவள், “டேய் அண்ணா!  நா எவ்வளவு ஹேப்பியான நியூசோட வந்திருக்கேன் தெரியுமா? இங்க வந்தா ஏதோ சாவு வீடு மாதிரி எல்லாரும் இருக்கீங்க. என்னடா ஆச்சு?!” என கேட்க,

“ஒன்னுமில்ல குட்டிம்மா, நீ ரூமுக்கு போ. இத நாங்க பார்த்துக்கறோம்” என சொல்லி, அவளை அங்கிருந்து அகற்ற நினைக்க,

“எல்லாமே இவளால வந்தது தானே!” என்ற, தாயின் குரலில், எழுந்து உள்ளே செல்ல போன ஸ்வேதா நின்று திரும்பி பார்த்து தாயை முறைக்க,

“என்னடீ முறைக்கற. நீ ஸ்ரீதேவி ன்னு இவங்க ரெண்டு பேரும் தூக்கி வச்சு கொண்டாடினாங்களே.. இப்ப நீயே அவங்களுக்கு மூதேவியா ஆகிட்ட.. !” என சொல்லிய நொடி, தன் மகளை சொன்னதற்காக மனைவியின் கன்னத்தை பதம் பார்த்தவர்,

“நீ போடாம்மா, பிஸ்னஷ்ன்னு வந்தா நாலும் இருக்கும். இவ பேசறத கேட்டு ஃபீல் பண்ணாத” என சொல்ல,

“டாடி என்ன நடந்துச்சு?!”  என கேட்ட விதமே, பதில் தெரியாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்பதை காட்ட,

சரியாய் அப்போது ஒலித்தது, அந்த இல்லத்தின் மத்தியில் வீற்றிருந்த தொலைபேசி. அதை எடுத்த துஷ்யந்த் அடுத்த நொடி, அதில் வந்த கட்டளைப்படி ஸ்பீக்கரை ஆன் செய்ய,

“என்ன ஸ்வேதா மேடம், எப்படி இருக்கு கன்னம். சரியாகிடுச்சா?! என கேட்ட குரலில் தெரிந்தது அது யாரென…

‘இவன் எதற்காக இப்போது போனில் வந்து நலம் விசாரிக்கிறான்?!’ என எண்ணி முடிக்கும் முன்பு, “என்னாடா இவன், ஒரு வாரத்துக்கு முன்னாடி அடுச்சதுக்கு இப்ப வந்து விசாரிக்கறான்னு யோசிக்கறையா கண்ணு…! என்ன செய்ய நா கொடுத்ததுக்கு திரும்பி, எனக்கு கொடுத்திருந்தா நா சும்மா இருந்திருப்பேனோ, என்னவோ! ஆனா தொட்டது என்னோட ஆரன… ச்சும்மா விட நா என்ன பொ…… ?! ” என்றவன்,

“உங்க அண்ணா விசயத்த சொன்னானா. சொல்லலைன்னா அந்த ஹேப்பி நியூஸ்ஸ நானே சொல்றேன் கேளு. உங்க அப்பாவுக்கு சொந்தமான, உங்க சொத்துல பாதிக்கும் மேல மதிப்பு இருக்கற மால்டி காம்பிளக்ஸ், டிப்பர்மெண்ட் ஸ்டோர்ஸ் எல்லாமே ப்ராப்பர் டாக்குமெண்ட்ஸ் இல்லாம கட்டுனதாமே….! ரூல்ஸ் ன்னு ஒன்னு அதுல பாலோ பண்ணவே இல்லங்கறதால,

நாளைக்கி காலைல அத இடிக்க சொல்லி உத்தரவு போட்டாச்சு. அதோட நீங்க விக்கற சரக்குல புல்லா கலப்படம், எடை குறைவு, தரமில்லாவைன்னு தரக்கட்டுப்பாட்டு சைடுல இருந்து லைசன்ஸ் கேன்சல் பண்ணிட்டாங்காளாம்!” என சொல்லி….

“ச்சூ.. ! ச்சூ..!  பாவம் ஒரே நேரத்தில இப்படி வந்தா எப்படி சமாளிக்க போறீங்க… எலெக்ஷன் டைம் வேற. அரசியல்வாதிங்க சைடு நா கொடுத்த டோனேஷக்காக உங்க அப்பாவ கழட்டி விட்டாச்சாம்.. !” என சொல்லி நிறுத்த, ‘உண்மையா ?!’  என தந்தையை பார்க்க,

‘ஆமாம்..!’  என தலையசைத்தவரை பார்த்தவள்,

“டேய் கௌதம் வேணாம் .. !” என கத்த,

“அடிங்க.. யார பாத்து டேய்ங்கற… ஆரன் மேல கை வச்சது, நீங்களா இருக்குமின்னு டவுட் வந்ததுக்கு தான் இது… இதுவே கண்பார்ம் ஆகி இருந்தா மொத்த குடும்பத்தையும் நடுரோட்டுல நிறுத்திட்டு தான் அடுத்த வேலையே பார்த்திருப்பேன். ஜாக்கிரதை… இதோட உன் ஆட்டத்த நிறுத்திக்கோ… என்னை சார்ந்தவங்கள தொடனுமின்னா அது என்ன தாண்டி தான் முடியும். ஒரு முறை ஏமாந்திட்டேன். இனி தில்லிருந்தா மோதி பாக்க சொல்லு உன்னோட அப்பங்கிட்டையும், நெண்ணங்கிட்டையும்… என்ஜாய் யூவர் ஹேப்பி டே… ஹா…ஹா…ஹா.. ” என சிரிப்போடு காலை கட் செய்தவனின் வார்த்தையில் இருந்த மிரட்டல் புரிந்த மொத்த குடும்பமும் அதிர்ந்து போய் நின்றது அவனின் ஆளுமையில்…..

இது நடந்த இரு நாளில் காயத்ரி கல்லூரியிலிருந்து மாயமாகி இருந்தாள்…. யாரும் அறியாமல்….. !!!!